ThamiZha's Android TamilVisai 0.1 Released.

1 view
Skip to first unread message

Muguntharaj Subramanian

unread,
Jan 15, 2011, 4:31:33 AM1/15/11
to freetamil...@googlegroups.com, InfittGB, infitt_tami...@googlegroups.com
Thamizha Team is happy to release TamilVisai 0.1 for Android on this Tamil New year & Pongal day. Android TamilVisai is an opensource Tamil keyboard manager which can be used to type tamil text in Android OS. 

After about months of development by our team member Jegadeesan, TamilVisai 0.1 is ready for public use. This is available in Android Market from this Tamil New year day. Its developed as a free software under GPL V3 license.
Here are the main features supported in this version:
- It can input tamil in any of the Android applications.
- Supports all Android versions.
- Supports Phonetic keyboard.
- Shows live preview to see the text typed in tamil.

It should be noted that, Android OS still dont have tamil unicode support. To view tamil we recommend Opera browser which renders tamil script in server and sends as bitmap. And use Tamilvisai to type text.

Android Tamilvisa can be downloaded in the following URL also:
http://www.appbrain.com/app/tamil-visai/com.tamil.visai

If you are a developer and like to contribute to development you can check this page:
http://code.google.com/p/android-tamilkey/

If you like to discuss about development and new features you can either use the following:
Google group: http://groups.google.com/group/freetamilcomputing
Disussion forum: http://thamizha.com/forum

I thank Jegadesan & all other members of thamizha.com team who have contributed to this project.

-Mugunth
on behalf of Thamizha Team.

--
Blog: http://mugunth.blogspot.com
Follow me @ http://twitter.com/mugunth

தங்கமணி அருண்

unread,
Jan 15, 2011, 6:04:02 AM1/15/11
to freetamil...@googlegroups.com
Dear FTC Memebers !!

எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் தை பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

I would like to extend this effort to have support for Tamil Language from OS level.



2011/1/15 Muguntharaj Subramanian <mug...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "Free Tamil Computing(FTC)" group.
To post to this group, send an email to freetamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to freetamilcomput...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/freetamilcomputing?hl=en-GB.



--
அன்புடன்
அருண்
|| நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம் ||
------------------------------
உபுண்டு தமிழ் : http://ubuntu-tam.org
தருமபுரி லினக்ஸ் பயனர் குழு : http://box434.bluehost.com/mailman/listinfo/thahadoorlug_yavarkkum.org
உபுண்டு தமிழ் பயனர் குழு : http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------

Muguntharaj Subramanian

unread,
Jan 15, 2011, 8:31:47 AM1/15/11
to freetamil...@googlegroups.com
வணக்கம் அருண்,

இயங்குதள அளவில் தமிழ் ஆதரவை கொடுக்க உங்களால் ஆன முயற்சியை மேற்கொள்ளவும்.  அது பற்றி தொழில் நுட்ப ரீதியான உரையாடல்களை தொடங்கவும்.

அன்புடன்,
முகுந்த்

2011/1/15 தங்கமணி அருண் <thanga...@gmail.com>

Dear FTC Memebers !!

எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் தை பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

I would like to extend this effort to have support for Tamil Language from OS level.

Gopalakrishnan (Gopi)

unread,
Jan 16, 2011, 2:21:05 AM1/16/11
to freetamil...@googlegroups.com
தமிழா! ஆண்ட்ராய்டு தமிழ்விசை மென்பொருள், ஆண்ட்ராய்டு வரலாற்றிலேயே முதல்முறையாக வெளிவரும் புதுமையான தமிழ் தட்டச்சு மென்பொருள். இம் மென்பொருளை நாம் கட்டாயமாக தமிழக அரசு "கணியன் பூங்குன்றனார்" விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரம் http://dhaksnaa.blogspot.com/2008/05/1.html

இனிமையுடன்,

கோபி

2011/1/15 Muguntharaj Subramanian <mug...@gmail.com>
--

Jegadeesan

unread,
Jan 16, 2011, 6:47:09 AM1/16/11
to freetamil...@googlegroups.com
நன்றி கோபி!

ஆனால் ஆண்ட்ராய்டு தமிழ்விசை இன்னும் விருதுக்கு விண்ணப்பிக்கும் அளவுக்கு முதிர்ச்சி அடையவில்லை / தகுதியானதாக இல்லை என நினைக்கிறேன்..

வேண்டுமானால் சில மேம்படுத்தல்களுக்குப்பின் அடுத்த ஆண்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதை பஸ் விவாதத்திலேயே சொல்லலாம் என நினைத்தேன். ஆனால் விவாதம் அங்கு வேறு திசையில் சென்றுவிட்டதால் சொல்லக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

நன்றி!

அன்புடன்,
ஜெகதீசன்



2011/1/16 Gopalakrishnan (Gopi) <hig...@gmail.com>

Gopalakrishnan (Gopi)

unread,
Jan 16, 2011, 10:46:10 PM1/16/11
to freetamil...@googlegroups.com
ஜெகதீசன்,

ஆண்ட்ராய்டு தமிழ்விசை இன்று நுட்பரீதியில் முதிர்ச்சி அடையாமல் இருக்கலாம், ஆனாலும் ஆண்ட்ராய்டில் தமிழ் என்பதே இயலாத ஒன்றாக இருக்கும் இந்த கால கட்டத்தில் ஆண்ட்ராய்டுக்கு தமிழ் தட்டச்சு என்பதே புதிய ஒன்று. அதிலும் நீங்கள் தமிழ் எழுத்துக்களை ஆண்ட்ராய்டில் காண்பிக்கும் தீர்வு (patent செய்யக் கூடிய அளவு) மிகப் புதுமையான ஒன்று. ஆண்ட்ராய்டில் ஒருங்குறித் தமிழுக்கான முழுமையான ஆதரவு (3.1ல் கூட தமிழ் கூட்டெழுத்துக்களுக்கான ஆதரவு வருமா என்று தெரியவில்லை) வழங்கப்படும் வரை இந்தத் தீர்வை இயங்கு தள அளவில் செய்து எல்லா செயலியிலும் தமிழ் தெரியச் செய்வது கூட இயலாத ஒன்றல்ல.

"ஆண்ட்ராய்டு தமிழ்விசை" மென்பொருள் வளர்ச்சித் திட்டத்தின் முதிர்ச்சியையும் "தமிழ் வளர உதவும் மென்பொருள்களுக்கான கணியன் பூங்குன்றனார்" விருதுக்கு விண்ணப்பம் செய்வதையும் தயை கூர்ந்து குழப்பிக் கொள்ளாதீர்கள்.

"முதிர்ச்சி" என்று பார்த்தால் இன்று நாம் பயன்படுத்தும் எந்த மென்பொருளுமே பயன்பாட்டளவில் முழுமை பெறவில்லை. அடிப்படை வசதிகள் செயல்பாட்டுக்கு வந்த பிறகு கூட கூடுதல் வசதியை கருத்தில் கொண்டு எல்லா மென்பொருள்களுமே மேம்படுத்தப்பட்டு கொண்டே இருக்கின்றன.

அரசு விருதுகள் விண்ணப்பிப்பதற்கும் ஆய்வுக் கூட்டத்தில் செயல்படுத்திக் காட்டவும் பின்னர் விருது வழங்கப் படுவதற்கும் இடையே உள்ள கால அளவு மிக மிக நீண்டது. எனவே ஆண்ட்ராய்டு தமிழ்விசை மென்பொருளை நாம் "கணியன் பூங்குன்றனார்" விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

ஆம். பஸ் விவாதத்தில் "நுட்பத் தேவைகளின்" அடிப்படையில் பேசுவோருடன் தனிநபர் உணர்வுகள், தாம் சார்ந்த அரசியல்/வணிக அமைப்பு போன்ற முன்முடிவுகளின் அடிப்படையில் பேசியோரும் உண்டு என்பதால் விவாதம் வேறு திசையில் தான் சென்றுவிட்டது. "நுட்பம் எனது எல்லை" என்று நிற்போரைக் கூட ஏதாவது ஒரு அரசியல் நிலைப்பாட்டுக்குள் இழுத்து வைத்து பதாகை குத்த நினைக்கும் குழு மனப்பான்மை கொண்ட சிலரிடம் "நுட்பத் தேவைகளின்" அடிப்படையில் பேசுவோர் சொல் எடுபடாது. எனவே அங்கே நீங்கள் பதில் சொல்லாதது என்னை பொறுத்தவரை நல்லதே.


இனிமையுடன்,

கோபி

2011/1/16 Jegadeesan <gurujeg...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages