தகடூர் தட்டச்சு மொழி மாற்றி 3.2 வெளியீடு

159 views
Skip to first unread message

Gopalakrishnan (Gopi)

unread,
Jul 27, 2011, 3:48:24 AM7/27/11
to freetamil...@googlegroups.com

தமிழா! கட்டற்ற தமிழ்க்கணிமை குழுவுக்கு,

வணக்கம்.

தகடூர் தமிழ் மாற்றி மற்றும் இதர மொழி மாற்றிகளின் நிர‌லில் சில‌ மாற்ற‌ங்க‌ள் செய்து இந்த மாற்றிகளின் அடுத்த பதிப்பான 3.2  வெளியிடப்படுகிறது.

இந்த வெளியீட்டில் உள்ள புதிய‌ வ‌ச‌திகள்

  • பாமினி த‌ட்ட‌ச்சு ப‌ல‌கை - தமிழக அரசு அலுவலகங்களிலும் புலம்பெயர் தமிழர்களாலும் பெரிதும் பயன்படுத்தப்படும் பாமினி த‌ட்ட‌ச்சு அறிந்தோர் எளிதில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ வ‌ச‌தியாக‌ இந்த‌ பாமினி தட்டச்சுப் பலகையை தெரிவு செய்து கொள்ள‌லாம்.
  • வானவில் த‌ட்ட‌ச்சு ப‌ல‌கை - தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட வானவில் த‌ட்ட‌ச்சு அறிந்தோர் எளிதில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ வ‌ச‌தியாக‌ இந்த‌ வானவில் தட்டச்சுப் பலகையை தெரிவு செய்து கொள்ள‌லாம்.
  • தமிழ் மாடுலார் த‌ட்ட‌ச்சு ப‌ல‌கை - சில அச்சு ஊடக அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் தமிழ் மாடுலார் த‌ட்ட‌ச்சு அறிந்தோர் எளிதில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ வ‌ச‌தியாக‌ இந்த‌ தமிழ் மாடுலார் தட்டச்சுப் பலகையை தெரிவு செய்து கொள்ள‌லாம்.

மொழி மாற்றிகளின் சுட்டி:
நிறை/குறை/யோசனைகள் வரவேற்கப்படுகின்றன

இனிமையுடன்,

கோபி

Selva Murali

unread,
Jul 27, 2011, 4:01:52 AM7/27/11
to freetamil...@googlegroups.com
மிக நன்றி கோபி அண்ணா

எல்லா அச்சு ஊடகங்களிலும் மாடுலர் முறைதான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஏனெனில் modular infotech நிறுவனத்தின் மென்பொருளைத்தான் பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

இதை அப்படியே ஆண்டிராய் மென்பொருளுக்கு ஏற்றவாறு தமிழ்விசையில் மாற்றிக்கொடுத்தால் இன்னமும் நலம்

நன்றி!


2011/7/27 Gopalakrishnan (Gopi) <hig...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To post to this group, send an email to freetamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to freetamilcomput...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/freetamilcomputing?hl=en-GB.



--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------

Gopalakrishnan (Gopi)

unread,
Jul 27, 2011, 5:11:28 AM7/27/11
to freetamil...@googlegroups.com
செல்வ முரளி,

ஆண்ட்ராய்டு தமிழ்விசையை உருவாக்கிப் பராமரித்துவரும் குரு ஜெகதீசன் அவர்களுடன் மாடுலார் விசைப்பலகையை பகிர்ந்து மேலதிக தகவல்களை அளியுங்கள்.

இனிமையுடன்,

கோபி

2011/7/27 Selva Murali <mural...@gmail.com>

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Jul 27, 2011, 3:37:23 PM7/27/11
to freetamil...@googlegroups.com
2011/7/27 Gopalakrishnan (Gopi) <hig...@gmail.com>:

> தமிழா! கட்டற்ற தமிழ்க்கணிமை குழுவுக்கு,
>
> வணக்கம்.
>
> தகடூர் தமிழ் மாற்றி மற்றும் இதர மொழி மாற்றிகளின் நிர‌லில் சில‌ மாற்ற‌ங்க‌ள்
> செய்து இந்த மாற்றிகளின் அடுத்த பதிப்பான 3.2  வெளியிடப்படுகிறது.
>

அன்புள்ள கோபி

புதிய முயற்சிகளுக்குப் பாராட்டடுகள்.

பாமினி மற்றும் புதிய தட்டெழுதி ஆகியன சோதிக்கையில் ஔகாரம் மற்றும்
கொம்புகள் முதலில் வரும் இடங்களில் வழுக்கள் கண்டறிந்தேன்.

{ } அடைப்புக்குள் உள்ளிடும் ஆங்கில விசைச் சரங்களும் வரும் தவறாக வரும்
மாற்றங்களும் அவற்றிற்குத் திருத்தங்களும் வருமாறு :

{xs} --> ஒள (U+0B92 U+0BB3) தவறு | --> ஔ (U+0B94) சரி

{nf} --> ெக (U+0BC6 U+0B95) தவறு | --> கெ (U+0B95 U+0BC6 ) சரி

{Nf} --> ேக (U+0BC7 U+0B95) தவறு | --> கே (U+0B95 U+0BC7) சரி

{if} --> ைக (U+0BC8 U+0B95) தவறு | --> கை (U+0B95 U+0BC8 ) சரி

{nfh} --> ெகா (U+0BC6 U+0B95 U+0BBE) தவறு | --> கொ (U+0B95 U+0BCA ) சரி

{Nfh} --> ேகா (U+0BC7 U+0B95 U+0BBE) தவறு | --> கோ (U+0B95 U+0BCB) சரி

{nfs} --> ெகள (U+0BC6 U+0B95 U+0BB3) தவறு | --> கௌ (U+0B95 U+0BCC ) சரி

நான் ககரத்தின் உயிர்மெய்களுக்குக் காட்டியவாறு மற்ற எல்லா
மெய்களினதற்கும் அதே வழுக்கள் காணலாம்.

~சேது.

Gopalakrishnan (Gopi)

unread,
Jul 28, 2011, 2:03:55 AM7/28/11
to freetamil...@googlegroups.com
அன்பின் சேது,

புதிய வெளியீட்டை பயன்படுத்திப் பார்த்து பாமினி தட்டச்சு முறையில் ஏற்படும் வழுக்களை உடன் தெரிவித்தமைக்கு நன்றி. இவ்வழுக்களை முடிந்த வரை விரைவில் களைந்து மறு மடல் இடுகிறேன்.


இனிமையுடன்,

கோபி

2011/7/28 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Jul 29, 2011, 5:32:46 AM7/29/11
to freetamil...@googlegroups.com
2011/7/28 Gopalakrishnan (Gopi) <hig...@gmail.com>:

> அன்பின் சேது,
>
> புதிய வெளியீட்டை பயன்படுத்திப் பார்த்து பாமினி தட்டச்சு முறையில் ஏற்படும்
> வழுக்களை உடன் தெரிவித்தமைக்கு நன்றி. இவ்வழுக்களை முடிந்த வரை விரைவில்
> களைந்து மறு மடல் இடுகிறேன்.
>

நன்றி கோபி.

அவ் வழுக்கள் பாமினியில் மட்டுமல்ல தங்கள் மொழி மாற்றியின் Tamil
Typewriter யிலும் (அது பழைய - ரெமிங்டன் ஆயினும் புதிய தட்டெழுதி
ஆயினும்) உள்ளன.

(மேலும் அவ்வழுக்கள் பற்றிய எனது குறிபப்புகளில் பாமினிக்கும் அத் தமிழ்
தட்டெழுதிக்கும் உள்ள நான் சுட்டிக்காட்டாத வேறுபாடுகள் : ெ , ே களுக்கான
விசைகள் - பாமினி n -> typewriter b ; பாமினி N -> typewriter n )


அடுத்து தாங்கள் மொழிமாற்றியில் Tamil Typewriter எனக் குறிப்பது
மொசில்லா தமிழ் விசை நீட்சியில் உள்ள 'புதிய தட்டச்சு' எனப்படுவதை எனத்
தெரிகிறது. ஆனால் தமிழ்நாடு அரசின் "தமிழ் தட்டச்சு (Tamil Typewriter)"
நியமமானது மொசில்லா தமிழ் விசையில் உள்ள பழைய தட்டச்சு (அதாவது
ரெமிங்கடன்) போல மெய், உகர மெய் மற்றும் ஊகார மெய்களுக்கு உயிரொலிக்
குறிகளை முன்முடுக்கலாக இடும் சரங்கள் கொண்டது.

எனவே மொழி மாற்றியில் Tamil Typewriter எனப் பெயரிட்டுள்ள மாற்றியை
'புதிய தட்டச்சு' எனவும் இன்னொன்றை தமிழக அரசு நியமப்படி ஆக்கி "தமிழ்
தட்டச்சு" / "Tamil Typewriter" எனவும் பெயரிடின் குழப்பங்கள் ஏற்படா
எனக் கருதுகிறேன்.

அடுத்து தாங்கள் முதலில் இட்ட மடலில் குறிப்பிட்டது;

// வானவில் த‌ட்ட‌ச்சு ப‌ல‌கை - தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட வானவில்


த‌ட்ட‌ச்சு அறிந்தோர் எளிதில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ வ‌ச‌தியாக‌ இந்த‌

வானவில் தட்டச்சுப் பலகையை தெரிவு செய்து கொள்ள‌லாம். //

சென்ற வருடம் ஒருங்குறிக்காவும் TACE க்கு ஆகவும் தமிழக அரசு அறிவித்த
சீர்தரங்கள் மற்றும் Tender கோரல் ஆகியனவற்றில் விரிவாக்கப்பட்ட தமிழ்99
மற்றும் விரிவாக்கப்பட்ட தமிழ் தட்டச்சு (Tamil Typewriter) ஆகியனவைதான்
அரச அங்கீகாரம் பெற்ற விசைமுகப்புகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. வானவில்
தட்டச்சுப் பலகை எப்போது தமிழக அரசின் அங்கீகாரம் பெற்றது? அதன்
தளக்கோலம் மற்றும் விசைச்சரங்கள் ஆகியனவற்றிற்குக்கான நியமங்கள் எங்கு
காணலாம்?

அன்புடன்

~சேது

Gopalakrishnan (Gopi)

unread,
Jul 29, 2011, 5:58:40 AM7/29/11
to freetamil...@googlegroups.com
அன்பின் சேது,

இவ்வழுக்கள் ஏற்படும் பாமினி மற்றும் தமிழ் தட்டச்சு முறைகளில் சரி செய்து விடுகிறேன்.

//அடுத்து தாங்கள் மொழிமாற்றியில் Tamil Typewriter எனக் குறிப்பது

மொசில்லா தமிழ் விசை நீட்சியில் உள்ள 'புதிய தட்டச்சு' எனப்படுவதை எனத்
தெரிகிறது. ஆனால் தமிழ்நாடு அரசின் "தமிழ் தட்டச்சு (Tamil Typewriter)"
நியமமானது மொசில்லா தமிழ் விசையில் உள்ள பழைய தட்டச்சு (அதாவது
ரெமிங்கடன்) போல மெய், உகர மெய் மற்றும் ஊகார மெய்களுக்கு உயிரொலிக்
குறிகளை முன்முடுக்கலாக இடும் சரங்கள் கொண்டது.

எனவே மொழி மாற்றியில் Tamil Typewriter எனப் பெயரிட்டுள்ள மாற்றியை
'புதிய தட்டச்சு' எனவும் இன்னொன்றை தமிழக அரசு நியமப்படி ஆக்கி "தமிழ்
தட்டச்சு" / "Tamil Typewriter" எனவும் பெயரிடின் குழப்பங்கள் ஏற்படா
எனக் கருதுகிறேன்.//

தமிழ்விசை நீட்சியிலுள்ள புதிய தட்டச்சு, பழைய தட்டச்சு ஆகியவற்றுக்கும், தகடூரில் உள்ள "Tamil Type Writer","Vaanavil", மற்றும் "Modular" ஆகியவற்றுக்கும் இடையே சிறு சிறு விசை வேறுபாடுகள் உள்ளன. இந்த பெயர்க் குழப்பங்கள் குறித்து நாம் இன்னும் விரிவாக பேசி முடிவு செய்ய வேண்டும்.

//அரச அங்கீகாரம் பெற்ற விசைமுகப்புகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. வானவில்

தட்டச்சுப் பலகை எப்போது தமிழக அரசின் அங்கீகாரம் பெற்றது? அதன்
தளக்கோலம் மற்றும் விசைச்சரங்கள் ஆகியனவற்றிற்குக்கான நியமங்கள் எங்கு
காணலாம்?//

வானவில் தட்டச்சு முறை நெடுங்காலத்துக்கு முன்பே தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு தமிழக அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒன்று. இந்த தட்டச்சு முறை, ஏறகுறைய தமிழ்விசை நீட்சியில் உள்ள "புதிய தட்டச்சு" முறையை ஒட்டியது. இதற்கான நியமங்கள் குறித்த மேலதிக தகவல் என்னிடம் இல்லை. வானவில் நிறுவனம் பயனர்களுக்கு அளித்த விசைப்பலகையின் படத்தினை இங்கே இணைத்திருக்கிறேன்.


இனிமையுடன்,

கோபி

2011/7/29 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>

--
VANAVIL Typewriter - Keyboard Layout.jpg

Gopalakrishnan (Gopi)

unread,
Aug 1, 2011, 5:58:43 AM8/1/11
to freetamil...@googlegroups.com
அன்பின் சேது,

நீங்கள் தெரிவித்த  "ெ ே ை ொ ோ ௌ" ஆகியவற்றின் தட்டச்சு வரிசையை (அதாவது ஒற்றினை முதலில் தட்டச்சிட்டு பின்னர் மெய்யெழுத்தை தட்டச்சிடுதல்) பாமினி தட்டச்சு முறையில் மட்டும் சரி செய்திருக்கிறேன்.

தகடூர் மாற்றியின் "Tamil Typewriter" முறையை முதல் வெளியீட்டிலிருந்து பயன்படுத்திவரும் பயனர் ஒருவர் "ெ ே ை ொ ோ ௌ" ஆகியவற்றின் தட்டச்சு வரிசை இப்போதுள்ளதே (அதாவது மெய்யெழுத்தை முதலில் தட்டச்சிட்டு பின்னர் ஒற்றினை தட்டச்சிடுதல்) சரி என்கிறார். இன்னும் சில பயனர்களிடம் கேட்டுவிட்டு வரிசையை மாற்ற வேண்டும் எனில் மாற்றிவிடலாம்.

வானவில் முறையில் "ெ ே ை ொ ோ ௌ" ஆகியவற்றின் தட்டச்சு வரிசை இப்போதுள்ளது (அதாவது மெய்யெழுத்தை முதலில் தட்டச்சிட்டு பின்னர் ஒற்றினை தட்டச்சிடுதல்) சரியா அல்லது மாற்ற வேண்டுமா என்பதை பயனர்களிடம் உறுதி செய்துவிட்டு பின்னர் தேவையெனில் மாற்றிவிடலாம் .

மாடுலார் முறையில் "ெ ே ை ொ ோ ௌ" ஆகியவற்றின் தட்டச்சு வரிசை இப்போதுள்ளதே (அதாவது மெய்யெழுத்தை முதலில் தட்டச்சிட்டு பின்னர் ஒற்றினை தட்டச்சிடுதல்) சரி என்பதை பயனர்களிடம் உறுதி செய்து விட்டேன்

மேலுள்ள அனைத்து முறைகளிலும் Canonical Fix வழுவை சரி செய்திருக்கிறேன்.

பயன்படுத்திப் பார்த்து உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.


இனிமையுடன்,

கோபி

2011/7/29 Gopalakrishnan (Gopi) <hig...@gmail.com>

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Aug 4, 2011, 9:33:46 PM8/4/11
to freetamil...@googlegroups.com
2011/8/1 Gopalakrishnan (Gopi) <hig...@gmail.com>:

> அன்பின் சேது,
>
> நீங்கள் தெரிவித்த  "ெ ே ை ொ ோ ௌ" ஆகியவற்றின் தட்டச்சு வரிசையை (அதாவது
> ஒற்றினை முதலில் தட்டச்சிட்டு பின்னர் மெய்யெழுத்தை தட்டச்சிடுதல்) பாமினி
> தட்டச்சு முறையில் மட்டும் சரி செய்திருக்கிறேன்.
>
> தகடூர் மாற்றியின் "Tamil Typewriter" முறையை முதல் வெளியீட்டிலிருந்து
> பயன்படுத்திவரும் பயனர் ஒருவர் "ெ ே ை ொ ோ ௌ" ஆகியவற்றின் தட்டச்சு வரிசை
> இப்போதுள்ளதே (அதாவது மெய்யெழுத்தை முதலில் தட்டச்சிட்டு பின்னர் ஒற்றினை
> தட்டச்சிடுதல்) சரி என்கிறார். இன்னும் சில பயனர்களிடம் கேட்டுவிட்டு வரிசையை
> மாற்ற வேண்டும் எனில் மாற்றிவிடலாம்.
>

அன்பிற்குரிய கோபி,

"அதாவது மெய்யெழுத்தை முதலில் தட்டச்சிட்டு பின்னர் ஒற்றினை

தட்டச்சிடுதல்" எனத் தாங்கள் குறிப்பிடுவதில் "மெய்யெழுத்தை" எனவுள்ளதை
"அகர-உயிர்மெய்யெழுத்தை" எனவும் "ஒற்றினை" எனவுள்ளதை "உயிரொலிக் குறியை"
எனவும் (அல்லது "கீற்று" எனக்கூட) திருத்த வேண்டும் எனக் கருதுகிறேன்.
(உயிரொலி அல்லது உயிரொலிக்குறி = dependent vowel signs. ஒற்று
எனப்படுவது புள்ளியை மட்டும் தானே? )

பாமினியைத் தாங்கள் திருத்திய பின் மீண்டும் சோதிப்பேன்.

அடுத்து "ெ ே ை ொ ோ ௌ", அத்துடன் மெய்யொற்று மற்றும் ஆகார, இகர, ஈகார,
உகர மற்றும் ஊகார உயிரொலிகளுக்கும் சேர்த்து எல்லாவற்றிற்கும் அவ்வாறே
முதலில் அகர-உயிர்மெய் விசை அதன் பின் உயிரொலிக்குறி விசை என ஒருங்குறிக்
குறிப்புள்ளிகளின் சரவரிசைப் படியே விசைகளையும் உள்ளிடும் முறைகளை
தட்டச்சு (Typewriter) எனக் குறிப்பிடுவது பொருத்தமல்ல. அவற்றை
"ஒருங்குறி எழுதி" எனலாம் - லினக்சில் உள்ள Tamil Unicode, லினக்ஸ் xkb
க்கும் விண்டோசின் முன்னிருப்புக்கும் உள்ள இன்சுகிரிப்ட் ஆகியன
அவ்வாறனவை. முறையே தட்டச்சு அல்லது எளிய இன்சுகிரிப்ட் தளக்கோலங்களைக்
கொண்ட அவற்றில் மெய்யொற்று மற்றும் உயிர்மெய் அசைகளைப் பெற உள்ளிடும்
விசைச் சரங்கள் மெய்யின் பின் உயிரொலிக்குறி எனவாறு இருப்பதால்,
"ஒற்றைக்கு ஒற்றை" மாற்றம் (one-to-one mapping) என குறிப்பிடப்படும்
எளிய விசைப்பலகை மாற்றி (Keyboard Mapping) மட்டும் அவற்றிற்கு
மோதுமானவை. அத்தகைய விசைப்பலகை மாற்றியில் ஔகாரம் உயிர், மற்றும் ஒகர,
ஓகார ,ஔகார உயிர்மெய் எழுத்துக்கள் உள்ளிடில் ஒவ்வொன்றுக்கும் தனி விசை
இருப்பது கட்டாயத் தேவை!

ஆனால் தட்டச்சு (typewriter) வகை எனில் பற்பல உயிர்மெய் எழுத்துகளுக்கு
ஒருங்குறி சர வரிசைக்கு மாறான வரிசைப்படி உள்ளிடுவாதல், ஓர் உள்ளிடல்
முறைமைப் பொறி (IME) வழியாக விசைகள் மாற்றத்துக்கு மேலதிகமான சரங்களை
(Keymap-sequences mapping) விசைமுகப்பு ( keymap) தரவுக் கோப்பின்
வழியாக நிறைவேற்றுகிறோம். மொசில்லாவிற்கான தமிழ்விசை, எ-கலப்பை, NHM
எழுதி மற்றும் பல என எல்லாவற்றிலும் பழைய மற்றும் புதிய தட்டச்சு முறைகள்
அவ்வாறு கொம்புகள் (ெ, ே, ை) உள்ளிடும் இடங்களில் முதலில் தொடர்பான
கொம்புக்கான விசை அடுத்து அகர-உயிர்மெய் எனவும் ஒகர, ஓகார மற்றும் ஔகார
எனில் மேலதிகமாக காலோ ளகரமோ இட்டு சரியான குறிப்புள்ளிகள் சரத்துக்கு
மாற்றத்தை விசைமுகப்புத் தரவில் இருந்து எடுப்பதுதான் சரியான வழிகளே.

பயனர்கள் தவறாக புரிந்திருப்பின் அதற்கு மூலகாரணம் தவறாக மாற்றியை ஒருவர்
இயற்றி இதுவும் தட்டச்சு முறைமைதான் என வெளியிடுவதனாலேயே. அவ்வாறான
ஒருங்குறி சரவரிசைப் படியான விசைமுகப்பு ஒன்றின் பெயரில் "தட்டச்சு"
எனவும் குறிக்கப்படாவிடின் இவ் எழுவினா எழாது.

தமிழக அரசினர் ஒருங்குறி மற்றும் TACE குறியேற்ற முறைகளுக்காக தமிழ்
தட்டச்சுக்கான (Tamil Typewriter எனவேக் குறிப்பிட்டு) தளக்கோலத்தை
சென்ற வருடம் G.O.M (s) 29 (23-June-2010) வழியாக
http://tamilvu.org/coresite/download/Tamil_Unicode_G.O.zip கோப்பில்
வெளியிட்டு பின்னர் அதற்கான விசைச்சரங்கள் யாவற்றையும் September 2010
இல் Tender Call
http://tamilvu.org/coresite/download/Teder_Document_for_Tamil_fonts_and_kbd_driver.pdf
இல் வெளியிட்டனர்.

மேலும் கடந்த சில தினங்களுக்குள் தமிழக அரசினர் தமது விரிவாக்கப்பட்ட
தமிழ்99 மற்றும் தமிழ் தட்டச்சு, அத்துடன் ஒருங்குறி மற்றும் TACE
க்கான TAU, TAC எழுத்துருக்கள் ஆகியனவற்றின் சோதனைப் பதிப்புகளை
வெளியிட்டு கருத்துக் கோரல் முன் வைத்துள்ளனர்.
http://tamilvu.org/tkbd/index.htm. (அவற்றில் லினக்சுக்கான விசைப்பலகை
நிறுவுவதில் ஏதோ சார்பான பொதியின்மையால் நிறுவ இயலாமலும் விண்டோ
விசிட்டாவில் நிறுவினாலும் பயனபாடு இயங்காமலும் இருக்கும் வழுக்களை
நேற்று சோதிக்கையில் கண்டுள்ளேன். ஆனால் விண்டோசு XP ] இல் சரியாக
இயங்குகிறது. தற்போது அதில் உள்ள தமிழ்99 தான் பயன்படுத்தி இம் மடலை
எழுதுகிறேன்).

மேற்குறிப்பிட்ட Tender க்கான pdf ஆவணம் அல்லது
http://tamilvu.org/tkbd/index.htm லினக்ஸ் நிறுவலுக்கான உதவி ஆவணம்
அல்லது விண்டோவில் நிறுவியபின் பட்டியிலிருந்து தொடக்கக்கூடிய உதவி ஆவணம்
என்பனவைகளில் தமிழ் தட்டச்சுக்கான உயிர்மெய்களுக்கான உள்ளிடல் சரங்களைப்
பாருங்கள். தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ள நியமத்தில் மெய்யொற்று மற்றும்
உயிர்மெய்களுக்கான உள்ளிடல் விசைத்தொடர்கள் தங்களுக்குத் தெளிவாகும்.

தமிழக அரசினர் சோதனைப் பதிப்புகளுக்கு
(http://tamilvu.org/tkbd/index.htm) விடுத்துள்ள கருத்துக் கோரலில்
பங்குபற்றுமாறு தங்களுக்கும் ஆர்வமுள்ள ஏனைய சக தமிழா உறுப்பினர்களுக்கு
பரிந்துரைக்கிறேன்.

~சேது

Gopalakrishnan (Gopi)

unread,
Aug 5, 2011, 12:18:51 AM8/5/11
to freetamil...@googlegroups.com
அன்பின் சேது,

தகடூர் மாற்றியில் பாமினி முறையில் சரியான படி ஏற்கனவே மாற்றிவிட்டேன்... மற்ற தட்டச்சு முறைகளிலும் நீங்கள் கூறியுள்ள ஆவணங்களை படித்த பின் சரியான வகையில் மாற்றி விடுகிறேன்.

சோதித்துப் பார்த்து மேலதிக வழுக்கள் ஏதும் இருப்பின் தெரிவியுங்கள்.

தமிழக அரசினர் சோதனைப் பதிப்புகளை பயன்படுத்திப் பார்த்து கருத்துக் கோரலில் பின்னர் பங்கேற்கிறேன்.


இனிமையுடன்,

கோபி

2011/8/5 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>

~சேது

Reply all
Reply to author
Forward
0 new messages