எழு தரு மதியம் கடற் கண்(டு) ஆங்கு .....

4 views
Skip to first unread message

ருத்ரா

unread,
Jan 20, 2017, 12:01:33 AM1/20/17
to தமிழ் மன்றம், panbudan, tamizhsiragugal, Thendral Magazine, editor, zo...@googlegroups.com

Advertisement


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மூன்றாவது நாளாக இரவில் செல்போன் ஒளி போராட்டம்


நன்றி "தினமலர் " நாளிதழ்


Advertisement


பதிவு செய்த நாள்

19 ஜன
2017
20:53

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மூன்றாவது நாளாக இரவில் செல்போன் .........















எழு தரு மதியம் கடற் கண்(டு) ஆங்கு .....

=============================================ருத்ரா இ பரமசிவன்


நிலவுப்பிஞ்சுகளாய்

கல்லூரி வானில்

குறுந்தொகையும்

கூடவே

கணினித் தமிழும்

கரை கண்ட

தமிழ்ப்புயல் கீற்றுகளே!

மெரீனாக்கடற்கரையோரம்

அமைதியான ..ஆனால்

அழுத்தமான

"வார்தா"வை அல்லவா

பதியம் இட்டுக்கொண்டிருக்கிறீர்கள்!

உலகத்தமிழின் பேரெழுச்சியின்

"போன்சாய்"மரங்களாய்

நம் பட்டி தொட்டிகளிலும்

தமிழ் மாண்பு காக்க

அலை விரிக்கிறீர்கள்.!

பதவி என்றால் கொம்பு முளைத்தது என்று

பாதக அரசியல் செய்யும்

பதர்கள்கள் எல்லாம் தூசிகளாய் பறக்க

வீரத்தின் கொம்பு முளைத்த

புறநாநூற்றுப்புயலாய்

ஆனால் பச்சைப்பல்விரிப்பாய்

பண்பு காட்டி போரிடும்

உங்கள் புரட்சி

வரலாற்று ஏடுகளில் காண இயலாதது.

அண்ணல் காந்தியின் "அஹிம்சை"என்றால்

என்ன என்று

இந்த இற்றுப்போன இம்சை வர்க்கத்துக்கு

தெளிவாய் காட்டினீர்கள்.

அடங்கிப்போகும் ஆட்டுக்குட்டிகள் அல்ல

நீங்கள்.!

நீங்கள் ஒவ்வொருவரும்

தஞ்சைப்பெருங்கோயிலின்

அந்த "சீற்றம் கொண்ட"காளையே  தான்!

ஜல்லிக்கட்டு

வெறும் கொம்பும் திமிலும் அல்ல.

அதனுள்

நம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு

முன்னமேயே

"டவுன் லோடு"செய்யப்பட்டு விட்டது.

தன்னுயிரை காளைஉயிரில்

காணும்

வள்ளலாரின் தண் தமிழ் தத்துவமே

அதில் உண்டு.

டாலர்களில் புரண்டுகொண்டிருக்கும்

போலித்தனம் கொண்ட

பீட்டாவுக்கு

தமிழன் இதயம் எப்படிப்புரியும்?

தமிழன் கப்பல் ஓட்டி

"வளியிரு முந்நீர்"என்னும்

கடல்களையே

தனக்கு வேலியாகக்கொண்டவன்.

அன்று

பெயரில் தான் "ரோஜாப்புயல்".

இன்று கண்முன்னே

ஆயிரம் ஆயிரமாய் வீரப்பெண்களின்

ரோஜாக்கள் சிலிர்த்து சிலிர்த்து

சித்திரம் ஆனது.

உங்கள் "எழு தரு மதியம் கடல் கண்டு"

தன மடியில்

ஒரு சுனாமியை சுருட்டி வைத்திருக்கிறது.

தமிழ் வாழ்க!

தமிழ் இனம் எழுக!

எழுக! எழுக !எழுகவே !


===============================================================

Reply all
Reply to author
Forward
0 new messages