ஐயா கல்பட்டார் அவர்களே

1 view
Skip to first unread message

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Sep 18, 2017, 5:59:40 AM9/18/17
to " கல் தோன்றி....."
ஐயா கல்பட்டார் அவர்களே


துள்ளல் நடையில்
எள்ளல் தொனிக்க‌
எத்தனை கவிதைகள்?
புகைப்படங்கள் தானே
உங்கள் இயக்கம்
காமிரா தானே
உங்கள் இதயம்.

சிறுபுல்லும்
ஊசிக்குருவியும்
உங்கள்
ஆத்மா ஆனது.
இளைஞனிடமும்
இல்லாத‌
எழில்மிகு காதல்
உங்கள் சொற்களின்
விளிம்பில் ததும்பக்கண்டோம்.

இந்த வாழ்க்கையே
உங்கள் காதலி.
இந்தக் காதலி மீதா
அந்த எருமைவில்லன்
பாய்ந்துவிட்டான்?

உங்கள் இழப்பு
எங்கள் துன்பம்.
எழுத்தின் பிரமனே!
அந்த பிரமனுக்கு
உன் எழுத்ததிகாரம்
சொல்லிக்கொடு.
மரணம் கொண்டு
உன் எழுத்துக்கு
முற்றுப்புள்ளி இடலாம்
எனும்
அவன் மடமையை
அவனுக்கு சொல்லிவிடு.

மின்மடல் உலகில்
என்றும் வலம் வருவீர்.

மனம் கசிதல்களுடன்
ருத்ரா

===================================================
kalpattu thiru Natarajan died in 11 july 2017 at his age 88 





Reply all
Reply to author
Forward
0 new messages