என்ன நடக்குது இங்கே ?
=====================================ருத்ரா
என்ன நடக்குது இங்கே ?
மூலை முடுக்கெல்லாம்
கேள்விகள் தான்.
வெங்காயத்தின் விலை
இமயத்துக்கு ஏறி விட்டது.
இவர்களது
சப்ளை அண்ட் டிமாண்ட் தியரி
என்ன ஆச்சு?
பக்கடாத் தொழில் வளர்த்து
ஏழு சதவீத வளர்ச்சிக்கு
எகிப்து வெங்காயம் தானே
இந்தியாவுக்குள் "அகதி"களாய்
வந்திருக்கின்றன.
இதைத்தடுக்க இன்னொரு
மசாலா
சாரி..மசாலா அல்ல
மசோதா
நிறைவேற்றியாக வேண்டுமே.
சாணக்கியர்கள் முக்காடு போட்டுக்கொண்டு
திட்டம் தீட்டட்டும்.
அப்புறம்
ராமர் கோயிலை
விண்ணை இடிக்கும் அளவுக்கு
கட்டவேண்டும்.
அங்கிருந்தே
தலை குப்புற கவிழ்ந்து கிடக்கும்
நம் "விக்ரமை"
நிமிர்த்தியாகவேண்டும்.
பசுக்களுக்கு கம்பளி கொடுப்பவர்களுக்கு
"சொர்க்கம்" நிச்சயம் செய்து
கொடுக்கவேண்டும்.
அதற்கு நம் இஸ்ரோக்காரர்களிடம் சொல்லி
விண்வெளியில்
ஒரு சொர்க்கலோகத்தை
நிர்மாணம் செய்ய
ஒரு பத்தாயிரம் லட்சம் கோடியை
கொஞ்சம் கை மாத்தாக
ரிசர்வ் வங்கியிடம் கேட்கவேண்டும்.
இனி
உபநயனம் செய்து
புனித நூல் தரிப்பவர்கள்
எல்லோரும்
கங்கைக்கரையில் வந்து
அந்த வைபவத்தை நடத்தவேண்டும்.
கங்கையை தூய்மைப்படுத்தும்
திட்டம் இது.
அவர்கள் எல்லோருக்கும்
வருடாந்திர மான்யம்
பத்து லட்சம் ரூபாய் கொடுக்கப்படும்.
கோத்திரம் மூலம்
புனித நூல் தரிக்கும் தகுதியே
இந்த நாட்டில் வாழும் உரிமையைத்தரும்.
மற்றாவர்களுக்கு
தாற்காலிக முகாம்கள் தயார்.
கொஞ்ச காலத்திற்கு பிறகு
முகாம்களும் இருக்காது.
மற்றவர்களும் இருக்க மாட்டார்கள்.
விமானங்கள் மூலம்
இந்தியாவில் அவர்கள் இருந்த
இடத்தில் கங்கா ஜலம் தெளிக்கப்பட்டு
பாரத பூமி
"புண்"ணிய பூமி ஆக்கப்படும்.
================================================