இனம் கண்டு கொள் தமிழா!

3 views
Skip to first unread message

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Mar 18, 2023, 5:46:38 AM3/18/23
to " கல் தோன்றி....."
இனம் கண்டு கொள் தமிழா!
_______________________________________
பொற்கைப் பாண்டியன்.



சட்டம் ஒழுங்கென்று
சத்தம் போடுகிறார்.
தமிழ் சரித்திரம்
கொள்ளை போக‌
கூட்டு சேர்ந்தவர்
கும்மாளம் போடுகிறார்.
அண்ணா எனும்
நெருப்பேந்தி
கொடியேந்தி
வந்து அவர்
கொளுத்தியதெல்லாம்
பொய்ச்சூட‌
சாம்பிராணி
புகை மூட்ட‌
வேடங்கள் தான்.
கோடி கோடி
கோடி என்று
மூட்டைகள்
சேர்த்ததனால்
திராவிடம் கூட‌
ஆரிய சூழ்ச்சிக்குள்
சிறைப்பட்டு
போயிற்று.
சில்லறைக்கூச்சல்
தினமும் போடுகிறார்.
தெருமுனைப்
பொம்மலாட்ட‌
கூத்துகள் நடத்துகின்றார்.
உழக்கிலே
கிழக்கு தேடும்
உதிரிப்பட்டாளமாய்
விடியவில்லை
விடியவில்லை
என்று
அட்டைசேவல் போல்
கூவித்திரிகின்றார்.
சகுனிகள் கட்டிவைத்த‌
அரக்கு மாளிகையா
அந்த பாராளுமன்றம்?
ஆரிய ராஷ்டிரம்
அமைத்திடவா அந்த‌
சனாதனத்து நந்தனம்?
எச்சரிக்கை தமிழா!
எரிமலைத்தமிழா !
என்று உணர் தமிழா!
இனம் கண்டு கொள்
தமிழா! தமிழா! நீ.
தமிழ் வாழ்க வாழ்க!
நீடூழி வாழ்கவே!

______________________________________________



Reply all
Reply to author
Forward
0 new messages