யாழ்வலைத்தளம் - 2012

6 views
Skip to first unread message

smayoorans

unread,
Jun 12, 2012, 5:23:58 AM6/12/12
to yarlw...@googlegroups.com

வட மாகண கல்வி திணைக்களத்தின் அனுசரனையுடன் யாழ் பல்கலைக்கழக கணனிச்சங்கம் நடாத்தும் யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வலைத்தள உருவாக்கல் போட்டி -2012

போட்டிவழிமுறைகள் 

·         முதலில் போட்டிக்கான தயார்ப்படுத்தல் கருத்தரங்கு நடத்துவதற்கு வட மாகாண கல்வி திணைக்களத்தின் அனுமதி பெறல். 

·         கருத்தரங்குக்கு வருகை தர எதிர்ப்பார்க்கும் மாணவர்களின் எண்ணிக்கையை மாகாண கல்விதிணைக்களத்தினூடாக பெற்றுக்கொண்டு அதற்கேற்ப கருத்தரங்கு நடத்துவதற்கு உகந்த பாடசாலையை தெரிவு செய்தல். 

·         தயார்ப்படுத்தல் கருத்தரங்கு நடத்துவதற்கு பயிற்றுவிப்பாளர்களை தயார்ப்படுத்தல். 

·         போட்டிக்கான தயார்ப்படுத்தல் கருத்தரங்கு நடத்தும் பொருட்டு மாகாண கல்வி திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் அந்தந்த வலயங்களைச் சேர்ந்த மாணவர்களை பொருத்தமான ஒரு பாடசாலையில் ஒன்றுதிரட்டல். 

·         எமது பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு அம்மாணவர்களுக்கு போட்டி பற்றிய ஒரு விழிப்புணர்வை வழங்குவதோடு போட்டிக்கான விதி முறைகளையும் வழங்குதல். 

·         பின்னர் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வமுடைய மாணவர்களிடம் இருந்து போட்டிக்கான விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளல். 

·         விண்ணப்பப்படிவங்களை அந்தந்த பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தலுடன் பெற்றுக்கொள்ளப்படும். 

·         பின்னர் பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பபடிவங்கள் கணனிச்சங்கத்தால் பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பப்படிவங்களுக்குரிய அணிகள் பயிற்சிப்பட்டறைக்குவருமாறு அழைப்புவிடுக்கப்படும். 

·         ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பபடிவங்களுக்கு ஏற்ப பயிற்சிப்பட்டறைக்கு உரிய இடம்தெரிவு செய்யப்படும்.

மேலதிக விபரங்களை எதிர்பார்க்கின்றேன்.


மயூரன்


Reply all
Reply to author
Forward
0 new messages