”இணையத்தளம் 2012” இணையத்தள வடிவமைப்புப் போட்டி
யாழ் பல்கலைக்கழக கணினிச்சங்கமும் வடமாகாண கல்வித் திணைக்களமும் இணைந்து யாழ் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ”இணையத்தளம் 2012” என்ற தலைப்பில் இணையத்தள வடிவமைப்பு போட்டி ஒன்றினை நடாத்தவுள்ளனர்.
அதன் முதற்கட்டமாக பாடசாலை மாணவர்களுக்கு இணையத்தளங்கள் பற்றிய ஓர் அறிமுகத்தையும் , இணையத்தளங்களை வடிவமைத்தல் சம்பந்தமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு வலய ரீதியாக ஒவ்வொரு வலயத்திலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் அறிமுக கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றனர். அந்த வகையில் யாழ்ப்பாணம், வலிகாமம், வடமராட்சி மற்றும் தீவகம் ஆகிய வலயங்களில் கருத்தரங்குகளை நடாத்தி முடித்துள்ளனர். எதிர்வரும் செவ்வாய்கிழமை (10.07.2012) அன்று தென்மராட்சி வலயத்தில் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.
போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் தங்களுடைய பாடசாலை பொறுப்பாசிரியர்கள் ஊடாகவோ அல்லது பாடசாலை அதிபர் ஊடாகவோ விண்ணப்பப் படிவங்களை பெற்று அதனைப் பூர்த்தி செய்து 12.07.2012(வியாழக்கிழமை) இற்கு முன்னர் எமக்கு கிடைக்கக்கூடியதாக கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
”இணையத்தளம் 2012” வடிவமைப்புப் போட்டி,
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அலகு,
மாகாணக்கல்வித் திணைக்களம்,
வடமாகாணம்,
மருதனார்மடம்,
சுன்னாகம்.
அனுப்பப்பட்ட விண்ணப்பப்படிவங்களுக்கேற்ப பிறிதொரு தினத்தில் செய்முறை பயிற்சிப்பட்டறை நடைபெறும். அதன் பின்னர் மாணவர்கள் தங்களுடைய இணையத்தளங்களை தயாரித்து அனுப்புவார்கள். பின்னர் வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும்.