போட்டிக்கான வரையறை
1. விருப்பமான எந்த தலைப்பிலும் இணையத்தளம் உருவாக்கப்படலாம். ஆயினும் ஒரே பாடசாலையில் இருந்து பங்குபற்றும் ஒவ்வொரு அணியும் தெரிவு செய்யும் தலைப்புக்கள் தனித் தன்மையுடையதாக இருக்க வேண்டும்.
உதாரணமாக பாடசாலைகள், கிராமங்கள், பொது நிறுவனங்கள், சமய வழிபாட்டு தலங்கள், விளையட்டுக்கழகங்கள். கல்வி நிறுவனங்கள் போன்றவற்றினை உங்கள் இணையத்தளத்தின் கருப்பொருளாக கொள்ளலாம்.
2. உருவாக்கப்படும் இணையத்தளம் விரும்பிய மொழியை கொண்டு உருவாக்கப்படலாம்.
உதாரணமாக தமிழ், ஆங்கிலம், சிங்களம்.
3. இணையத்தளமானது அந்த அணி மாணவர்களினால் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும். வேறு எந்த நபர்களின் தலையீடு இருத்தல் கூடாது. வேறு முதல்களில் இருந்து பிரதி செய்யப்பட்டுள்ளது என அறியப்பட்டால் அவ் இணையத்தளம் போட்டியிலிருந்து நீக்கப்படும்.
4. இணையத்தளத்தின் அனைத்து உள்ளடக்கங்களும் கணனித்திரையின் 1024*768 தெளிவுத்திறன்(Resolution) அளவுடைய திரையில் தெரியக் கூடியதாக இருக்க வேண்டும்.
5. உருவாக்கப்படும் இணையத்தளம் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உலாவிகளில்(Browser) பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
உதாரணமாக:- Internet Explorer, Mozilla firebox, Google Chrome , etc…
மதிப்பீட்டு முறைமை.
1. மதிப்பீட்டு நடுவர்கள் கணனிச்சங்த்தினால் தெரிவு செய்யப்படுவார்கள்.
2. புள்ளிகள் வழங்கப்படும் வரையறை
a. உள்ளடக்கம்.
i. தலைப்பிற்கு பொருத்தமான உள்ளடக்கம்.ii. உள்ளடக்கத்தின் அளவுiii. உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மை
iv. சரியான எழுத்து உச்சரிப்பு மற்றும் இலக்கண பிரயோகம்
b. பார்வை
i. உள்ளடக்கத்தில் உள்ள தரவுகளை இலகுவாகவும் விரைவாகவும் வாசித்து விளங்கிக் கொள்ளும் பொருட்டு உள்ளடக்கத்தின்
அமைப்பு மற்றும் பாகுபாடு.
ii. இணையத்தளத்தின் வடிவமைப்பு (color, layout, design, font, contrast)
iii. பல் ஊடகங்களின் பொருத்தத்தன்மை ( images, links, videos, animation, etc)
c. இணையத்தள தொழில்நுட்பம்
i. இணையத்தள தொழில்நுட்பத்தின் தெரிவு மற்றும் பாவனை.
d. காட்சியளிப்பு
i. இறுதி சுற்றில் தாங்கள் உருவாக்கிய இணையத்தளத்தை நடுவர்கள் பரிசீலிக்கும் போது மூன்று நிமிட நேரம்
வாய்மொழிமூலமாக விளங்கப்படுத்தல்.
இன்னும் சேர்க்கப்பட வேண்டிய விடயங்களை குறிப்பிடுக.