Sunday July 30, 2000 கருமை பசுபதி
அன்புள்ள ஆங்கிலேயா! அறிந்திடுவாய் உண்மைசில. ஆப்பிரிக்கன் நான் அறைகின்றேன் கேள்!
கறுப்பாய்ப் பிறந்தேன் நான்; கறுப்பாய் வளர்ந்தேன் நான்;
கோடையில் நான் கறுப்பு; குளிரிலும் நான் கறுப்பு; பயத்திலும் கறுப்பு; நோய்ப் படுக்கையில் கறுப்பு; மரணப் பாடையிலும் கறுப்பு.
வெள்ளையனே! வெள்ளையனே! வேடிக்கை கேள்!
பிறவியில் நீ ரோஜா நிறம்; பெரியவனாய் வெண்மைநிறம்;
வெயிலில் சிவப்பு நீ; வெங்குளிரில் நீலம் நீ; வியாதியில் பச்சை நீ;
அஞ்சும்போது மஞ்சள் நிறம்; நீ துஞ்சும்போது சாம்பல் நிறம்.
ஆனால் நீ என்னைக் கூப்பிடுகிறாய் 'நிறமுள்ளவன் ' என்று! நிறையக் கொழுப்படா உனக்கு!
( ஓர் அநாமதேய ஆப்பிரிக்கக் கவிஞரின் ஆங்கிலக் கவிதையின் மொழியாக்கம்) From :
|
Sunday July 23, 2000 மையல் பசுபதி
விடியும் காலை வேளை -- உன்னை . . . விரைந்து வாரி எடுப்பேன் கடிதில் காப்பி குடித்து -- உடனே . . . கையில் தூக்கிக் கொள்வேன் இடியும் புயலும் துச்சம் -- விரியும் . . . இணையம் எந்தன் சொர்க்கம் மடியில் அமருங் கணினி -- உன்மேல் . . . மைய லாகி நின்றேன். (3) From: |
Sunday November 12, 2000 இழுபறியாய் ஆன இழுக்கு பசுபதி
From:
|
Sunday November 26, 2000 பூவா ? தலையா ? பசுபதி
நன்றி நவிலுகின்ற நாளில் அமெரிக்கர் குன்றிக் குமுறிக் குழம்புவதேன் ? -- மன்றத்தில் தர்க்கமிட்டும் 'பூவா தலையா ' வழக்கதனில் வெற்றி விளிம்புக்கே என்று.
மன்றம்= ( நீதி ) மன்றம் விளிம்பு = (coin) edge From :
|
Sunday February 11, 2001 காதல் பசுபதி
பாரிலே பழசான நோவு -- பாட்டில் அகமென்னும் திணையினை ஆய்ந்து -- காமன் கரையிலும் தரையிலும் காதல் -- மீசை வள்ளிமேல் முருகனுக்கு நாட்டம் -- இன்றும் பாங்கான பெயருள்ள நோவு -- இன்று அம்பிகா பதியின் தவிப்பு -- பின்பு கண்மணி தேனென்று பேசல் -- பின்பு உள்ளங் குலுக்கிடும் வேட்டல் -- ஒன்று ** From:
|
Sunday March 11, 2001 எலிப் பந்தயம் பசுபதி
வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா! -- உன்றன்
எரிச்சலுடன் எழுந்திருந்து காபி குடித்து -- மனையை
காலையிதழ் வாரவிதழ் தேடிப் பிடித்தே -- அதில்
சந்தையிலே பங்குகளின் புள்ளி விவரம் -- போன்ற
நள்ளிரவில் கண்விழித்துக் கணினி வழியாய்த் -- தொலை
சாலையோரம் தள்ளிநின்று வாழ்வைச் சுவைப்பாய் ! -- உன்றன் From :
|
Sunday May 13, 2001 புலவி நுணுக்கம் பசுபதி
From:
|
Saturday June 2, 2001 சொல்லேர் உழவர்
பசுபதி
மண்நேய நல்லுரத்தில் மார்க்ஸீய செம்புனல்பாய் பண்ணைப் பயிர்பெற்ற பாராட்டைக் காணீர்! தொராந்தோ இயல்விருது சொல்லேர் உழவர் சுராவின் எழுத்துக்கோர் ஷொட்டு.
[ பிரபல எழுத்தாளர் திரு சுந்தர ராமசாமி (சு.ரா) க்குக் கனடாவில் உள்ள டொரான்டோ பல்கலைக் கழகத்தின் தென் ஆசியப் பிரிவும், 'தமிழ் இலக்கியத் தோட்ட 'மும் இணைந்து மே 25, 2001 -அன்று 'இயல் விருது ' வழங்கிய நிகழ்ச்சி கண்டு எழுதியது.]
From :
|
Monday June 18, 2001 முத்தமிடு! பசுபதி
From :
|
Saturday July 7, 2001 நாட்டு நடப்பு பசுபதி
|
Sunday September 2, 2001 அன்னையும் தந்தையும் பசுபதி
அன்னை பூமி இந்தி யாவின் . . அழகு மயிலை ஊரடா! தந்தை நாடு என்றன் வாழ்வில் . . தண்மை சூழும் கானடா!
பெற்ற மக்கள் பளுவில் விழிகள் . . பிதுங்கும் அன்னை நாடடா! கற்ற குடிகள் ஏற்றம் செய்து . . கைகள் நீட்டும் கானடா!
மணலில் தமிழை எழுதி அறிவை . . மலர வைத்த தாயடா! கணினி மூலம் கவிதை யாக்கும் . . கல்வி தந்த கானடா!
தொன்மை யான சங்கம் ஈன்ற . . சொன்ன அன்னை நாடடா! என்றும் புதுமை மதுவை ஊட்டி . . இன்பம் சேர்க்கும் கானடா!
ஆன்ம ஞானம் ஒளிர வைக்க . . அன்னை வேண்டு மேயடா! மேன்மை தாழ்வு பார்த்தி டாது . . மெச்சும் தந்தை கானடா!
வேலை யின்பம் கான டாவில் . . வெல்ல மென்றி னிக்குதே! மாலை தன்னில் பாழும் நாசி . . வாச மல்லி தேடுதே!
கயிலை என்று கீரன் கண்ணில் . . காட்சி தந்த காளத்தி; மயிலை என்று கான டாவும் . . மாலை வேளை மாறுமோ ?
அன்னை மடியில் பாதி வாழ்வு; . . தந்தை முதுகில் மீதியோ ? இன்னும் ஈசன் தந்த மிச்சம் . . எந்த நாட்டில் தீருமோ ?
From: |
Monday September 10, 2001 மூன்று குறும்பாக்கள் பசுபதி
|
Monday September 17, 2001 கருப்புச் செவ்வாய் பசுபதி
From:
|
Monday September 24, 2001 பலகாரம் பல ஆகாரம் ! பசுபதி
From:
|
Monday October 1, 2001 குழப்பக் கோட்பாடு பசுபதி
|
Sunday October 7, 2001 பின் லேடன் பசுபதி
From:
|
Monday October 22, 2001 பயராத்திரி பசுபதி
From:
|
Sunday November 11, 2001 இலையுதிர் காலம் பசுபதி
|
Sunday November 18, 2001 இன்னும் கொஞ்சம் பசுபதி
|
Sunday November 25, 2001 இந்த மண் பயனுற வேண்டும் பசுபதி
From :
|
Sunday December 2, 2001 உதிர்ந்த இசைமலர் பசுபதி
From:
|
Monday December 10, 2001 குரல்வளம் பசுபதி
From:
|
Saturday December 15, 2001 வலைதந்த வரம் பசுபதி
|
Saturday December 29, 2001 தேவன் அவதாரம் பசுபதி
|
Sunday January 13, 2002 கன்னிகைத் தைக்கோர் கண்ணூறு! பசுபதி
|
Sunday January 20, 2002 கண்ணகி பசுபதி
|
Sunday February 3, 2002 வழித்துணை பசுபதி
|
Sunday February 10, 2002 விளையாட்டுப் பொம்மை பசுபதி
|
Sunday March 10, 2002 பகைவன் பசுபதி
From:
|
Saturday March 30, 2002 சொன்னால் விரோதம் பசுபதி
From:
|
Sunday April 21, 2002 அந்த நாளும் அண்டாதோ ? பசுபதி
From:
|
Sunday May 12, 2002 மறைந்த உருது கவிஞர் கைஃபி ஆஸ்மி - கவிஞரும் கவிதையும் பசுபதி
கைஃபி ஆஸ்மி அவர்களது கவிதை ஷராரா (பொறி) -யின் மொழிபெயர்ப்பு ** பொறி பசுபதி விழியோடு விழிகலந்தால் விளைவென்ன ? கேட்காதே! எழுந்ததுஓர் காதற்பொறி இருவர்விழி மோதலினால். பறக்குமுன் ஓர்தயக்கம்; பார்வையிலே சிறுநாணம்; சிறப்பு,மென்மை கபடமின்மை; கிறங்கும்ஓர் சைகைஉரு. விரைந்ததுகண் பார்வைவிட்டு வியர்த்திடும் நெற்றிக்கு உருஇதழாய், எழில்மலராய், உயர்கெம்பாய், விண்மீனாய். குதித்ததுநெற் றிக்குப்பின் கோலமலர்க் கன்னம்மேல் அதிருசித்தேன் போலல்ல, அதைவிடவும் விலைஅதிகம்! கன்னமலர் விட்டுதடின் வன்னத்தில் சுருங்கியது பண்ணலைபோல் மட்டுமல்ல பளிச்சிடும்மின் கொடிபோல. செவ்விதழின் வர்ணம்விட்டுச் சென்றதுமென் கரம்நோக்கி அவ்விடத்தில் இளைப்பாறி அடைந்ததுபின் இதயத்தை. அருளிரக்கம் மரியாதை அன்புகாதல் உருவினிலே இருதயத்தில் இறங்கினபின் நாளம்வழி சிந்தியது. கண்பார்வைச் சாரமாகிக் கண்காட்சிச் சாரமாகி இன்னிதயச் சாரமாகி எழிலுடலை விட்டேஎன் இளங்காமம் தணித்திடவே எனைநோக்கிப் பறந்ததுகாண். புலன்வேட்டை ஆடாமல் பொறிஉணர்வு தந்தெனக்குப் புலன்கட்டுப் பாட்டினையே புரியவைத்த பொறிஅதுவே. துயர்எனவே தோன்றிடினும் மகிழ்வமைதிக் காரணம்காண். பயிர்அதனைக் காய்ச்சினும் உயிரைவிட உயர்ந்ததுகாண். வந்தமறு கணமேஎன் வாழ்வதனைக் கவ்வியது தொலைந்தஎன் உள்ளுயிர்க்கோர் துணைதரும்ஆ தாரமது. கன்னத்தில், அவளிதழில் காதல்பொறி தவழ்கிறது கைஃபி! என் கனல்கக்கும் கண்ணிகளில் மறைந்துளது! (மூலம்: Kaifi Azmi 's Urdu Poem) 2. SHARARA DO NIGAHOn KA ACHANAK WO TASADUM MAT POOCHH THESLAGTEY HI UDA ISHQ SHARARA BAN KAR UD KE PAHLEY INHI JHEnPI HUI NAZROn MEIn RUKA NARM, MAASOOM, HASEEn, MAST ISHARA BAN KAR PHIR NIGAH SE ARAQ AALOOD JABEEn PAR JHALKA PAnKHDI, PHOOL, GUHAR, LAAL SITARA BAN KAR DHAL KE MAATHEY PE UTAR AAYAA GUL-E-AARIZ MEIn RAnG RAS SHAHD NAHIEn UN SE BHI PYARA BAN KAR GUL-E-AARIZ SE SIMAT AAYAA LAB-E-RAnGEEn MEIn RAAG HAI LAHR NAHIEn BARQ KA DHARA BAN KAR LAB GUL RAnG SE PHIR RENG GAYAA BAAHOn MEIn BAS KE BAAHOn KI GUDAZI SE CHALA DIL KI TARAF CHAH, ALTAF, KARAM, PYAR, MADAARA BAN KAR DIL MEIn DOOBA THA KE BAS PHOOT PADA RAG RAG SE JAAN-E-DIL, JAAN-E-NAZAR, JAAN-E-NAZAARA BAN KAR PAIKAR-E-HUSN SE PHIR UD KE CHALA MERI TARAF EK BAD-MAST JAWANI KA UTAARA BAN KAR RAHZAN-E-HOSH MAGAR HOSH KA PAIGHAM LIYE DUSHMAN-E-ZABT MAGAR ZABT KA YAARA LE KAR DARD HI DARD MAGAR WAJAHE SUKOOn, WAJHE TARAB SOZ HI SOZ MAGAR JAAN SE PYARA BAN KAR AATEY HI CHAA GAYAA KHOI HUI HASTI PE MIRI MERI KHOI HUI HASTI KA SAHARA BAN KAR AB SHARARA WOHI USKEY LAB-O-RUKHSAR MEIn HAI AUR KAIFI MEREY TAPTEY HUYE ASH 'AAR MEIn HAI TOP 2. SPARK Don 't ask [what happened] when the two eyesights instantly confronted each other The moment [they 're] knocked off, the spark of love flew Having taken the flight first it paused in the bashful visions In the form of a tender, innocent, exquisite [and] tipsy gesture Then, from vision it trekked to the perspiring forehead Having taken the forms of petal, flower, ruby [and] star From the forehead it landed on the flower of the cheek Not just like luscious honey but more precious than that From the flower of the cheek it got compressed in the colour of lips Not merely as a surge of tune but as a chain of lightening From the colour of lips it crawled towards the arms It rested in the softness of the arms [for awhile and then] moved towards the heart In the guise of longing, kindness, favour, love [and] courtesy The moment it sank in the heart it spilled out from the veins In the form of essence of the heart, essence of the sight [and] essence of the spectacle From the body of the beauty it flew towards me To exorcise the lust of the youth [Though] it appeared like the raider of the sense, it brought [me] to senses [Though] it came like the adversary of restraint, it helped [me] control myself [Though] it surfaced like pain, it ended up as the cause of calmness and bliss [Though] it cropped up like scorch, it became dearer than life The moment it arrived it took control my being Like the sustenance of my lost being Now, the same spark is apparent in her lips and cheeks And O Kaifi! It is also concealed in my fiery couplets ** கைஃபி ஆஸ்மி பற்றிய திண்ணைக்குழு குறிப்புகள் உலகப்புகழ் பெற்ற கவிஞரான கைஃபி ஆஸ்மி அவர்கள் லக்னவி உருதுவை பிரபலப்படுத்தியவர். ஏராளமான சினிமாப்பாடல்களில் கவிநயத்தை தோய்த்தவர். 'அர்த் ', 'காகஜ் கி ஃபூல் ', பகிசா, கோரா, ஹக்கீக்கத் ஆகிய படங்களின் கவிதைகளை எழுதியவர். கைஃபி ஆஸ்மி அசாம்கார் மாவட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் நிஸ்வான் ஊரில் பிறந்தவர். ஹ்யூசேன் ரிஸ்வி என்ற பெரும் ஜமீன்தாரின் மகனாகப்பிறந்தாலும் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர். தெரு ஓரங்களில் உட்கார்ந்து கொண்டு தொழிலாளர்களுடனும் தினக்கூலிகளுடனும் உட்கார்ந்து தேநீர் அருந்திக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதை பழங்கால லக்னவ் ஆட்கள் அறிவார்கள். இவரது உறவினர்கள் எல்லோரும் பாகிஸ்தானுக்கு சென்றபோது இவர் மட்டும் கம்யூனிஸ்ட் என்ற காரணத்தினால் ஒளிந்து கொண்டிருந்ததால் இவர் மட்டும் செல்லமுடியாமல் போனது இறுதி வரை செல்லமுடியாமல் போயிற்று. பிறகு அவர் அவர்களை சென்று சந்தித்தாலும் இந்தியக்குடியுரிமையை விடவில்லை. இளம் வயதில் சுல்தான்-இ-மதாரி என்ற ஷியா பள்ளிக்கூடத்தில் மதக்கல்வி பெற்றாலும், மத விஷயங்களில் நாட்டம் இல்லாமலும், அதன் மீது எதிர்ப்பு உணர்வுடனும் வளர்ந்தவர் இவர். தன் நண்பர்களுடன் இணைந்து இஸ்லாமிய மதகுருக்களை பகிரங்கமாக எதிர்த்ததால், பள்ளிக்கூடத்திலிருந்து துரத்தப்பட்டவர். அவர் லக்னவ் நகரில் இருந்தாலும் மும்பாய் நகரில் இருந்தாலும், குருட்டுத்தனமான மதக்கருத்துக்களை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்துவந்தவர். மத அடிப்படை வாதத்தையும், தீவிரவாதத்தையும் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கைஃபி ஆஸ்மி, எந்த மதத்தின் தீவிரவாதத்தையும் எதிர்க்கத் தயங்கியதில்லை. பாபரி மசூதி உடைக்கப்பட்டதும், அவர் எழுதிய 'ராம்ஜி கி வன்வாஸ் ' ராமரின் வனவாசம் என்ற கவிதை பலராலும் பாராட்டப்பட்டது. ஹிந்தி-உருது சாகித்ய பரிசு கமிட்டியின் சேர்மனாக 1968இல் நியமிக்கப்பட்டார் கைஃபி ஆஸ்மி. ஹீரா பஞ்சா என்ற கவித்துவமான கவிதைப்படத்தையும் இவரே எழுதினார். உருது மொழி உத்தரபிரதேசத்தில் அழிகிறது என்று கவலைப்பட்டார். மற்ற பிரதேசங்களிலிருந்து லக்னவுக்கு வருபவர்களால் சுத்தமான லக்னவ் உருது அசுத்தமாகிறது என்றும் இவர் கவலைப்பட்டார். இவரது மகள் புகழ்பெற்ற நடிகை ஷபனா ஆஸ்மி. *** From:
|
Monday June 10, 2002 என்று கற்பேனோ ? பசுபதி
From:
|
Monday July 22, 2002 தென்றல் பசுபதி
'அலர்கள் பறித்தால் அபராதம் ' என்ற பலகையைப் பூங்காவில் பார்த்தும் --மலர்க ளிறைத்துப் படம்வரைந்த(து) எங்கும், படிக்க அறியாத தென்றல்வந்(து) அங்கு. (ஓர் ஆங்கிலக் கவிதையின் தழுவல்.) From: |
Sunday July 28, 2002 துப்பறியும் சாம்பு பசுபதி
காகம் அமர்ந்த கணத்தில் மரம்விட்டு வாகாய் விழுங்கனியை வைத்துப்பின் -- ஆகமது நோகாமல் துப்பு நொடியில் துலக்கிடுவான் சாகா வரம்பெற்ற சாம்பு. ஆகம்=உடம்பு From: |
Monday August 12, 2002 தீ, திருடன், சிறுத்தை பசுபதி
பஞ்சென்பான் ஆலாய்ப்ப றந்தான், பரவசமாய்ப் பாவைபக்கம் வந்தான் ! . . . மஞ்சத்தில் ராசாத்-தீ ! . . . வாட்டியது காமத்-தீ ! வஞ்சியுடல் தொட்டபஞ்சு வெந்தான் ! ***** கன்னமிட்டான் காரிருளில் நம்பி தந்திரமாய் ஜன்னல்கம்பி நெம்பி ! . . . குடியிருந்தவன் போலீசு ! . . . தடியெடுத்தவன் 'விளாசு ' ! இiன்றுநம்பி எண்ணுகிறான் கம்பி ! ***** சிரித்தபடி செல்கின்றாள் வீரி சிறுத்தையதன் முதுகில்ச வாரி ! . . . திரும்பிவந்தனர் சேரி , . . . சிறுத்தைவயிற்றில் நாரி ; விரிந்தபுலி முகத்தில்நகை மாரி ! ***** (மூலம்: ஆங்கில லிமெரிக்; நன்றி: எஸ்.பொன்னுத்துரை) From:
|
Monday August 19, 2002 பூமகளே! மன்னித்துவிடு! பசுபதி
|
Monday September 2, 2002 கானம், கனவு, கல்யாணம் பசுபதி
~*~o0o~*~ From:
|
Tuesday September 24, 2002 மனிதமறை பசுபதி
|
Sunday October 13, 2002 முறையாய் முப்பால் குடி! பசுபதி
From:
|
Sunday October 27, 2002 எனக்குள் ஒருவன் பசுபதி
|
Sunday November 24, 2002 கனவு நாடு பசுபதி
From:
|
Saturday December 7, 2002 அவிரோதம் பசுபதி
|
Saturday December 21, 2002 வல்லூறு பசுபதி
|
Monday December 30, 2002 கொள்ளையின்பம் பசுபதி
|
நன்றி
பசுபதி
பண்டிகையில் பொங்கல்நாள் பரிதிக்கோர் நன்றி
. . பல்வேறு வழிபாடு பரமனுக்கோர் நன்றி
வண்டிசையோ மகரந்தத் தேனுக்கோர் நன்றி
. . வணக்கங்கள் கைகுலுக்கல் நண்பர்செய் நன்றி
பண்ணிசைத்தல் பழந்தமிழர் மரபுக்கோர் நன்றி
. . படுக்கையறைக் கிசுகிசுப்புக் காதலுக்கோர் நன்றி
மண்ணிலெழு வாசனையோ பெய்மழைக்கோர் நன்றி
. . மன்பதையில் அன்புவழி சான்றோர்க்கு நன்றி
வசந்தத்தில் விரிதோகை மயில்காட்டும் நன்றி
. . வானோக்கி நீளலைகள் வாரிதிசொல் நன்றி
புசித்தார்பின் விடுமேப்பம் பசித்தவனின் நன்றி
. . பூங்காற்றில் பொழிகானம் குயில்நவிலும் நன்றி
விசையோங்கும் சீழ்க்கையொலி ரசிகர்சொல் நன்றி
. . வேர்ப்புநிறை நெற்றிநல்ல விருந்துக்கோர் நன்றி
எசமான்முன் வாலாட்டல் நாய்காட்டும் நன்றி
. . இனியதமிழ்க் கவிபுனைதல் தாய்மொழிக்கோர் நன்றி
From:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30301199&format=html
பைமடந்தை
பசுபதி
கனடாவின் தைமாதம் கருணையின்றிப் பிறந்தது.
இனம்புரியா வெறுப்பொன்று என்னுள்ளே கரித்தது.
'பொங்கலைத் துய்த்திடவே போனானோ சென்னைக்கு ? '
செங்கதிரோன் தெரியவில்லை; சீற்றமென்னுள் பொங்கியது.
மேலும்,
அடையவியல் முன்னிரவு; அநுமபிதா சிரிவயிறு;
கடைநகைகள் கைக்கெட்டாக் கடுங்கோபச் சமையலறை .
காபிஇட்லி கிடைக்காத கடுப்புடனே வெளிச்சென்றேன்;
சாபங்கள் இருமொழியில் சரளமாக உமிழ்ந்ததென்வாய்.
பழவினைக் குன்றமெனப் பனிமுண்டப் பிசாசொன்று
அழுத்தியென்றன் 'கார் 'மூடி அமர்ந்துபல் காட்டியது.
கடவுளர் எனக்கீந்த கனடாவை நொந்தபடி
நடந்தேன் பணிபுரிய; நாடினேன் ரயில்நிலையம்.
அங்கே,
தள்ளுவண்டி பக்கத்தில்; தள்ளாடும் பைமடந்தை#
அள்ளியொவ்வோர் குப்பையையும் ஆராய்தல் கண்டுநின்றேன்.
அழுகினஅக் கழிவிடையே அணுவளவு உணவிருந்தால்
ஒழுகும்தன் சளிதுடைப்பாள் ; உணவெச்சம் உட்கொள்வாள் .
அதிர்ந்தேன்,
கனத்தது என்இதயம் ; கரித்தனவே என்கண்கள்.
பனித்திரை விலகியது; பகலவனின் நகைகண்டேன்.
நின்றிருந்த அவள்கையை நிறைத்துவிட்டேன் பலகாசால்.
'நன்றி 'என்றேன்; மீண்டுமொரு 'நன்றி 'சொல்லி நகர்ந்தேன்நான்.
#பைமடந்தை= baglady
From:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=303020211&format=html
நல்ல வார்த்தைக் கிளி
பசுபதி
கிளிவாயால் கெட்டசொல்^ கேட்குமொரு நாடு.
கிளிவாய் அநுபூதி கேட்டதொரு நாடு;
கலைக்கண் சுவைக்கும் கசப்பும் களிப்பும்.
மலைநடுவில் உண்டு மலம்.
*****
தெய்வக் குறமகளின் -- கையமர்
சின்னஞ் சிறுகிளியே!
செய்யோன் அருளடைய -- ஒருசொல்
செவியில் பகர்வாயோ ? (1)
உன்னை 'அருணகிரி ' -- என்றே
உலகோர் கூப்பிடுவர்!
உன்னிடம் ஓர்கணம்நான் -- அமர
யுக்தி உரைப்பாயோ ? (2)
பத்தித் திருப்புகழை --ஓதிடப்
பாத்திரன் ஆக்குவையோ ?
அத்தி மணவாளன் -- எனக்கு
அருளைத் தருவானோ ? (3)
'முத்தைத் தரு 'வென்றே -- உனக்கு
முருகன் தந்தஅடி
'தத்தத் தன 'ச் சந்தம் -- அதனால்
'தத்தை ' உருவமிதோ ? (4)
குகனின் உள்புகுந்தே -- இஇன்பக்
கொள்ளை புரிந்துவிட்டாய்!
சுகத்தில் சொக்கினதால் -- வந்ததோ
'சுகமெ ' னும்பெயரும் ? (5)
சும்மா இருப்பதற்கோர் -- மந்திரம்
சொல்லிக் கொடுத்தெனையே
ஐம்புல வேட்டுவர்கள் -- எய்திடும்
அம்பிடம் கா கிளியே! (6)
'தனந்தந் தன ' மென்றே -- புகழில்
தாளக் களிநடனம்;
'தனம்தந் தன 'மென்றே -- மெய்யருள்
தனமெ னக்கருளாய்! (7)
உள்ளமாம் கூண்டினிலே -- கிளியே!
உன்னைச் சிறைபிடிப்பேன்!
உள்ளொளி காட்டிடுவாய் ! -- என்றும்
ஓமெனப் பாடிடுவாய்! (8)
கந்தர் அனுபூதி -- பெற்றுக்
கந்தர் அனுபூதி
சொன்ன 'அருணகிளி ' ! -- காப்பாய்
'ஸோஹம் ' நிலையருளி! (9)
கிள்ளை கடித்தகனி -- சுவையில்
கொள்ளை இஇனிப்பென்பர் ;
கிள்ளிக் கொடுத்திடுவாய்! -- பூதியைக்
கேட்டே கதிபெறுவேன்! (10)
^ கெட்ட வார்த்தைக் கிளி (உரை வெண்பா)
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்
from:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=303020210&format=html
====================
From:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30302098&format=html
காதலர் தினக் கும்மி
பசுபதி
காதலர் நாளும்பி றந்ததடி -- நம்
. . கண்ணியம் பண்பாடி றந்ததடி!
மேதினி போகுமிவ் வேதனையை -- பார்த்து
. . வெட்கியே வானம் சிவக்குமடி! (1)
ஆண்டுக்கோர் நாள்தானோ காதலுக்கு --அது
. . அன்றாட வாழ்விலோர் அங்கமடி!
வேண்டாப் பொருள்களை அங்காடிகள் -- சேர்ந்து
. . விற்கவே செய்திடும் சூழ்ச்சியடி! (2)
காதல் கடைச்சரக் கானதடி ! -- பணங்
. . காசெனும் மீன்பிடி தூண்டிலடி!
காதலே ஓர்பரி சென்றிடுவார் ! -- அந்தக்
. . காதல் பரிசால் கிடைத்திடுமோ ? (3)
பண்டையில் காம தகனம்;இன்றோ -- பரிசுப்
. . பண்டத்தில் காசை எரித்திடுவர் !
வண்ண மலர்க்கொத்து வாங்குகிறார் -- தினம்
. . மாலையில் மல்லிக்க தீடாமோ ? (4)
பாதி உடையிலே ஈசுகிறார் -- நடைப்
. . பாதை, கடற்கரை, வண்டியிலே !
காதலின் உச்சமோ 'பச்சை 'யடி! -- அதைக்
. . கட்டிலொன் றேகாண வேண்டுமடி! (5)
நேர்மை இலாதது காதலன்று -- வெறும்
. . நேரம் கழிப்பது காதலன்று !
ஈர்க்கும் உடையும், உடற்பசியும் -- பருவ
. . ஏக்க விளைவுகள் காதலன்று ! (6)
கொச்சைப் படுத்துதல் காதலன்று -- பூங்காக்
. . கொட்டம் அடிப்பது காதலன்று !
இச்சை உணர்வு புனிதமெய்தி -- பின்
. . ஈருயிர்ச் சங்கமம் காதலடி ! (7)
~*~o0o~*~
From:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=303022311&format=html
பைங்கணித எண் பை
பசுபதி
மூவரில் முன்னவன் நான்முகனே* பைங்கணிதப்
பாவை அழகுகண்டு 'பை 'யென்று சொன்னானோ ?
வட்டத்தின் சுற்றளவை விட்டம் வகுத்திடின்
பட்டென்று பம்பிடுவாள் பை.
மார்ச் 14 (3/14) கணித எண் 'பை 'யின் தினம்.
* முதல் மூன்று சீர்கள் பையின் தோராய மதிப்பாம் 3.14-ஐக் குறிக்கிறது.
http://www.winternet.com/~mchristi/piday.html
From :
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30303174&format=html
இன்னும் கொஞ்சம் தூங்கவிடு!
பசுபதி
இன்னும் கொஞ்சம் என்னைத் தூங்கவிடு! --ஈசா!
இரவுக் கனவின் இறுதி பார்க்கவிடு!
பைநிறைய சுவடிகளைச் சுமந்து நின்றார் --முனிவர்
. . பக்கத்தில் வாசுகியும் பைய வந்தாள்;
ஜைனரோ ?பின் சைவரோ ?நீர் என்று கேட்டேன் -- நகைத்து,
. . சைகைசெய்து கூப்பிட்டார்; அருகில் சென்றேன். (1) (இன்னும்)
ஆரணியார்^ வடுவூரின்^ கூட்டு நாவல் -- ஆகா!
. . ஆழ்வார்#தன் கடைக்குள்ளே உண்டு, என்றார்!
'பாரெங்கும் துப்பறியச் செல்வோன் நாமம் -- அதனில்
. . பசுபதியே ' என்றுசொல்லித் தேடச் சென்றார். (2) (இன்னும்)
வந்தியத் தேவனுடன் காதற் போட்டி -- கடும்
. . வாட்போரில் சரிநிகராய்ப் பொருதி நின்றேன்.
குந்தவை கண்களிலோர் குழப்பம் கண்டேன் -- கையில்
. . கோலமலர் மாலையுடன் கிட்டே வந்தாள். (3) (இன்னும்)
பண்டொருநாள் பள்ளியிலே வெண்பாப் போட்டி -ஈற்றடி
. . 'பசுபதியோர் சின்னப்ப யலெ 'ன்றார் ஆசான்;
முண்டாசு நண்பனொரு நகையு திர்த்தான் -- 'பாண்டியா!
. . முழிக்காமல் எழுதெ 'ன்று வாய்தி றந்தான்! (4) (இன்னும்)
இனியதமிழ் அறிவோங்க மருந்து வேண்டி-- நான்
. . ஏங்கிநிற்கும் போதிலொரு சிறுவன் வந்தான்.
'குனிந்துன்றன் நாநீட்டு ! தருவேன் ' என்றான் -- ஒரு
. . கூர்வேலும் அவன்கையில் மின்னக் கண்டேன். (5) (இன்னும் )
அன்றொருநாள் இணையத்தில் மேயும் போது -- ஒரு
. . யமலோகச் சோதிடரின் சுட்டி கண்டேன்.
என்பெயரின் கீழ்ஆயுள் தேடும் போது -- பாவி
. . எருமையொன்று, அலறிடவே கண்வி ழித்தேன் ! (6)
இன்னும் கொஞ்சம் இம்மை நீட்டிவிடு! --ஈசா!
இறுதிக் கனவைத் தள்ளிப் போட்டுவிடு!
=======
^ஆரணி= ஆரணி குப்புசாமி முதலியார்)(1867-1925);
வடுவூர்= வடுவூர் துரைசாமி ஐயங்கார்(1880-1940); தமிழில் துப்பறியும்
கதைகள் எழுதிய முன்னோடிகள்.
#ஆழ்வார் கடை= சென்னையில் இருக்கும் பிரபல பழைய புத்தகக்கடை .
~*~o0o~*~
From:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30303172&format=html
வஞ்சம்
பசுபதி
கண்ணிழந்த வெஞ்சினத்தார் கண்பறிக்க முற்பட்டால்
மண்ணில் குருடரன்றோ வாழ்ந்திடுவர் ? -- விண்டறிவாய்
பாமரனே! வஞ்சப் பயணம் தொடங்குமுன்னே
ஈமத் தழல்இரண்(டு) ஏற்று.
சின்ன நியாயமெனும் தென்றலாய்த் தோன்றிடும்;
பின்னர் பெருந்தவறாய்ப் பேய்ச்சூறைக் காற்றாகும்.
நெஞ்சகத்தில் உட்புகுந்து துஞ்சுநற்கு ணத்தைவிஞ்சும்
வஞ்சமென்னும் நஞ்சையுண்ண அஞ்சு.
~*~o0o~*~
From:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30303238&format=html
சிலந்தி
பசுபதி
தினமும் தியானம் தனியறையில் -- ஒரு
. . சீடன் செய்யத் தொடங்கியதும்
மனதிற் கச்சம் தருமுறையில் -- ஒரு
. . மர்மப் பூச்சி தோன்றியது. (1)
கரிய உருவில் சிலந்தியொன்று -- அவன்
. . கண்முன் தொங்கும் உணர்வடைந்தான்.
சிறிய தென்று தோன்றிடினும் -- அதன்
. . தேகம் தினமும் பெருத்ததுவே. (2)
இடிதன் தலைமேல் விழுந்ததென -- குரு
. . எதிரில் சீடன் போய்ப்பகர்ந்தான்:
'மடியில் கத்தி மறைத்திருந்து -- சிலந்தி
. . வந்தால் வெட்டி வதைத்திடுவேன். ' (3)
'இந்தா ' என்று சாக்கட்டி -- குரு
. . எடுத்துக் கொடுத்தார் சீடனிடம்.
வந்தால் வெட்டிக் கொல்லாமல் -- அதன்மேல்
. . வட்டக் குறியை இடச்சொன்னார். (4)
நிட்டை குலைத்த பூச்சியின்மேல் -- என்றும்
. . நிலைக்கும் படிசாக் கட்டியினால்
வட்டக் குறியை வயிற்றிலிட்டு -- சீடன்
. . மறுநாள் குருவைப் போய்ப்பார்த்தான். (5)
சட்டை கழற்றக் குருசொல்ல -- சீடன்
. . தயக்கம் இன்றி அடிபணிந்தான்.
வட்ட வெள்ளைக் குறியொன்று -- சீடன்
. . வயிற்றின் நடுவில் மின்னியது ! (6)
[ ஆதாரம்: ஒரு திபேத்தியக் கதை.]
~*~o0o~*~
From:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=303042710&format=html
Sunday May 4, 2003 செந்தமிழ்ப் பாட்டன் பசுபதி
From :
|
Thursday June 26, 2003 என்னவளுக்கு பசுபதி
காலைக் கதிரோன்போல் கண்ணால் எனைஉயிர்க்க வாலையவள் போலுண்டோ மண்ணுலகில் ? -- கோலவிழி என்றன்று கொஞ்சவில்லை; எண்ணுகிறேன் அவ்வுவமை, என்னவள் இல்லாத இன்று. (ஆதாரம்: Leonard Cohen 's 'For Anne ') ~*~o0o~*~ From:
|
Thursday July 3, 2003 கணையும் கானமும் பசுபதி
விண்ணில் எய்தேன் அம்பொன்றை --மண்ணில் . வீழ்ந்த தெங்கோ; தெரியவில்லை கண்பின் தொடர முடியாத -- கடிய . கதியில் கணையும் பறந்ததுவே. விண்ணில் உயிர்த்தேன் பாடலொன்றை -- மண்ணில் . வீழ்ந்த தெங்கோ; தெரியவில்லை. கண்வலு நுட்பம் எவர்க்குண்டு -- பறந்த . கானப் பயணம் தொடர்வதற்கு ? கண்டேன் பலநாள் கழிந்தபின்னர் -- உடையாக் . கணையை ஆல மரமொன்றில் கண்டேன் மீண்டும் முழுப்பாடல் -- என்றன் . நண்பன் ஒருவன் இதயத்தில் . [மூலம்: Longfellow 's ' The Arrow and the Song '] From: |
Thursday July 17, 2003 கற்பனை பசுபதி
From:
|
Thursday July 24, 2003 சார்புநிலைக் கோட்பாடு பசுபதி
From:
|
Friday October 10, 2003 இணையத்துக்கு இல்லை இணை ! பசுபதி
From:
|
Thursday November 27, 2003 சரிவில் ஒரு சிகரம் பசுபதி
From:
|
Thursday December 18, 2003 திரை அரங்கில் பசுபதி
From:
|
Thursday January 15, 2004 கால ரதம் பசுபதி
கால ரதம்வேண்டும் -- இறைவா! கால ரதம்வேண்டும் ! சோலைக் கிளிமொழியாள்-- உடலெரி . . சூட்டில் சிடுசிடுத்தாள் -- அணியக் கோல நகைபலவும் -- கொடுத்தால் . . கோபம் குறையுமென்றாள்! -- இன்றைய ஞால வலம்வந்தேன் -- அணிகலன் . . நல்ல வைகிட்டவில்லை -- அதனால் காலைக் கதிர்வேகம் -- கொண்டுபழங் . . காலம் பயணிக்க (கால) வங்கக் கடலலைபோல் -- செல்வங்கள் . . பொங்கு பழங்காலம் -- நாட்டில் தங்கம் மணிகுவிந்த -- கடைகளைத் . . தாண்டி நடந்திடுவேன் -- மெய்யொளி மங்கும் நவமணிகள் -- அவற்றை . . வாங்க மனமில்லை -- என்றன் நங்கைக் குயர்நகைகள் -- எக்காலம் . . நாடி அடைந்திடுவேன் (கால) ஆடிப் பதினெட்டில் -- மற்றும் . . ஆடும் சுவாலைகளில் -- புலவர் சாடும் சுவடிகளை -- மின்னெனத் . . தாவிப் பலமீட்பேன்-- அந்தச் சூடா மணிகளையே -- என்றன் . . சொர்ணத் தமிழ்க்குமரி -- மகிழ்வுடன் சூடிச் சினங்குறைவாள் -- தமிங்கிலச் . . சூட்டைத் தணித்திடுவேன் . (கால) ~*~*~o0O0o~*~*~ From:
|
Thursday January 22, 2004 காதலன் பசுபதி
வாலையின் கண்ணிமை மென்மையைப் போல, . மங்கையின் முத்துப்பல் வெண்மையைப் போலக் காலை உதித்திடக் கட்டளை இட்டவன் . கட்டாயம் அவனொரு காதலன் தானய்யா! (1) குறைகளும் குற்றமும் கொண்டவோர் அன்பன்மேல் . கோபமுறு காதலி கொட்டிடும் கண்ணீர்போல், திரைகடல் நீரில் கரிக்கும் வெறுப்பைச் . சேர்த்தவன் உறுதியாய்க் காதலன் தானய்யா! (2) பொங்கிடும் காதலின் பித்துடன் தன்னுயிர்ப் . பூவை இசைக்கையில் புவனம் படைத்தவன், மங்கையின் ஆத்மாவை வசந்தச் சிரிப்பினில் . வைத்தவன் நிச்சயமோர் காதலன் தானய்யா! (3) மடந்தை ஒருத்தியின் மந்திரக் கட்டினில் . மயங்கியே போனவன்; மங்காத் துயரமும், அடங்காத தாகமுள்ள அணங்காய்க் கோடையை . ஆக்கியவன் ஐயமின்றிக் காதலன் தானய்யா! (4) சோலையில் சுனைகளைச் சூழ்ந்திடும் மரங்களைச் . சுந்தர மங்கையர் உருவினில் ஆக்கியே கோல இலைகளில் கூந்தலின் காந்தியைக் . கொணர்ந்தவன் உண்மையில் காதலன் தானய்யா! (5) வனப்புடை மலர்களின் வளர்ச்சியில் அறியலாம்; . வாலையின் கண்களை வனசத்தில் பார்க்கலாம் இனிப்பிதழ் செம்மையை ரோஜாவில் சுட்டலாம்; . இவற்றைப் படைத்தவனோர் காதலன் தானய்யா! (6) [ஷா நீல்ஸனின் ஓர் ஆங்கிலக் கவிதையின் தழுவல்] ~*~o0O0o~*~ From:
|
Thursday February 5, 2004 நானோ பசுபதி
From:
|
Thursday February 19, 2004 காலத்தின் கணமொன்றில் பசுபதி
|
Thursday April 29, 2004 தாலாட்டு பசுபதி
From:
|
Thursday May 6, 2004 எழிற்கொள்ளை பசுபதி
|
Thursday May 13, 2004 சொல்லின் செல்வன் பசுபதி
|