'வானொலி' என்ற சொல் பழக்கத்தில் தோன்றியது ஒரு சுவையான வரலாறு!
மைசூர் ராஜ்ய ரேடியோ ' ஆகாஷ்வாணி' என்ற சொல்லையே பயன்படுத்தி வந்த காலம் அது!
சென்னையில் மைய அரசின் ரேடியோ புதிதாகத் தொடங்கியது! அப்போது சென்னை
நிலையத்திலிருந்து
தமிழிலே நிகழ்ச்சிப் பத்திரிகை ஒன்று வெளியிட வேண்டும் என முடிவு செய்து,
அதன் ஆசிரியராகத்
தெ.சி. தீத்தாரப்பன் (தீபன்) நியமிக்கப் பட்டார்கள். பத்திரிகையின்
ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு,
தீபன் முதல் இதழுக்கான வேலைகளை மும்முரமாகச் செய்து கொண்டிருந்தார்.
பத்திரிகைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று அப்போது சென்னை நிலையத்தின்
தலைவராக இருந்த விக்டர் பரஞ்சோதியும் மற்ற அதிகாரிகளும் தீபனோடு பலமாக
ஆலோசனை நடத்தினார்கள்.
தமிழ்நாடு தனியாகப் பிரியாத நாள் அது. சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரி
என்று அழைக்கப்பட்ட
முதல் அமைச்சர் பதவியிலே, ராஜாஜி இருந்தார்.
தீபனுக்கு ராஜாஜியைச் சந்தித்து அவரிடம் யோசனை கேட்க வேண்டும் என்ற ஆசை.
ஆனால் அந்தச்
சமயத்தில் ராஜாஜிக்கு ஏகப்பட்ட வேலை. வீட்டுக்கு வந்து சாப்பிடுவதற்குக்
கூட நேரம் கிடையாது.
எனவே அவரைச் சந்திக்க முடியவில்லை! தீப்ன் என்ன செய்தார்?
ஒரு சிறு கடிதத்திலே தமது கோரிக்கையை எழுதி, இந்தப் பத்திரிகைக்கு ஒரு
நல்ல தமிழ்ப் பெயர் சொல்லும்
படியாகக் கேட்டுக் கொண்டு, கடிதத்தை உறையிலே போட்டு ஒட்டி, "பெர்சனல்"
எனக் குறிப்பிட்டுக்
கோட்டையிலே பிரதம மந்திரிக்கு அனுப்பி விட்டார்!
மறுநாள் காலையில் தீபன் ரேடியோ நிலையத்துக்கு வந்த போது, அவருடைய
மேஜையின் மீது பிரதம
மந்திரி அலுவலகத்தின் முத்திரையோடு ஓர் உறை இருந்தது! அவசரம் அவசரமாக அதை
உடைத்துப்
பார்த்தார் தீபன்!
" உங்கள் பத்திரிகைக்கு 'வானொலி' என்று பெயரிடலாம். ரேடியோவுக்குமே
உங்கள் அறிவிப்புக்களில்
'வானொலி' என்பதையும் சேர்த்துப் பயன்படுத்தலாம். மேலதிகாரிகளைக் கலந்து
முடிவு செய்யுங்கள்! "
இவ்வாறு பொருள்பட எழுதியிருந்தார், சென்னை மாகாணத்தின் அன்றையப் பிரதம
மந்திரி ராஜாஜி!
============================
பசுபதி
14-1-09
Then, later on, when I was visiting Chennai in 84, I realized that 'vAnoli'
will disappear soon. So in a hurry I bought one or two issues and preserved
a few sheets from them.
In this and the next few mails, I'll share a few of those pages.
'vaNoli' used to have good articles .Here's an example of that , along with the
a view of the 'first' page. ( you can see that a few ads appear there.)
Pasupathy
15-1-09
Here are some notations ( scanned from handwritten sheets ) , typical of those
that appeared in 'vAnoli' . Many persons used to collect them. I remember many
famous musicians teaching 'isai marabu'...
I was sure that the 'students' had learnt those songs earlier... !
Pasupathy
15-1-09
Of course, last but not the least, the program details were the main reasons
for subscribing to 'vAnoli' in the first place.
Here are two such pages as examples.
Pasupathy
15-1-09