Beano Comics; பீ`னோ காமிக்ஸ்

23 views
Skip to first unread message

Pas Pasupathy

unread,
Sep 29, 2011, 1:59:59 PM9/29/11
to yAppulagam / யாப்புலகம்

அண்மையில் ‘அகத்தியர்’ யாஹூ குழுவில் டாக்டர் ஜேபி சிறுவயதில், தான் படித்த (Beano) பீ’னோ காமிக்ஸ்


http://en.wikipedia.org/wiki/The_Beano

 போன்ற பல ஆங்கிலச் சிறுவர் காமிக்ஸ் இதழ்களைப் பற்றி எழுதியிருந்தார்.

 http://groups.yahoo.com/group/agathiyar/message/51915

 

 நானும் அவற்றைப் படித்தவன் என்பதால், என் நினைவுகளையும் அம்மடல்  கிளறிவிட்டது.

50/60-களில் சென்னையில் எல்லா இடங்களிலும் Beano கிடைக்காது. மௌண்ட் ரோடில், பழைய ந்யூ எலிபின்ஸ்டோன் தியேட்டர் அருகே இருந்த  ஒரு சிறு புத்தகக் கடையில் அதை  நான் வாடிக்கையாக வாங்குவேன்! பிறகு மூர் மார்கெட்டில் தேடல்! இப்படி நூற்றுக் கணக்கில் பீ’னோக்களைச் சேர்த்திருந்தேன். ( யாரோ ஒரு புண்ணியவான் அவற்றை எல்லாம் எடுத்துச் சென்று, திரும்பித் தர ‘மறந்து விட்டான்” என்று என் குடும்பத்தார் சொல்கின்றனர்:-((

 பீ’னோவில் வந்த பாத்திரங்கள் யாவரும் மிக அலாதி! ஒவ்வொருவரையும் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையே எழுதலாம்.

 எடுத்துக் காட்டாக, டெ’ன்னிஸ் ( Dennis the Menace)  என்ற வாண்டுப் பயல்  . பீ’னோ பாத்திரங்களில் மிகப் பிரபலமானவன் இவன். பின்னர் அதே பெயரில் அமெரிக்காவிலும்  டென்னிஸ் காமிக்ஸ் வரத் தொடங்கியது.


http://en.wikipedia.org/wiki/Dennis_the_Menace_(U.S.)

  ஒரு திரைப்படம் கூட 1993-இல் வந்தது.

http://www.imdb.com/title/tt0106701/

 ஆனால்,  பீ’னோவின் டெ’ன்னிஸ் தான் ’நிஜம்’; அவனுடைய  விஷமத்திற்குமுன்  அமெரிக்க டெ’ன்னிஸ் வெறும் நிழல் தான்!  இப்போது மணி விழா கொண்டாடும் டெ’ன்னிஸுக்கு இதோ ஒரு வாழ்த்துப் பா!


 அறுபதாண் டைக்கடந்த அடங்காப் பிடாரியவன்
துறுதுறு குறும்புசெயத் துடிதுடிக்கும் அவதாரம்
பரட்டைமுடி யன்துணைக்கோ ‘பைரவராய்’ நாயொன்று.
சிரிப்பிதழ் Beano-வின் Dennis-ஐ மறப்பேனோ?


மாதிரிக்கு ஒரு பீ’னோ இதழின் முதல் பகுதியின்  பிடிஎஃப் கோப்பை இணைத்திருக்கிறேன். பார்த்து மகிழுங்கள். அடுத்த மடலில்

இரண்டாம் பகுதியைப் பார்க்கலாம்.


-

Beano2378__13_2_88_1_small.pdf

Pas Pasupathy

unread,
Sep 29, 2011, 2:52:00 PM9/29/11
to yAppulagam / யாப்புலகம்

1988-ஆம் ஆண்டு 13- பிப்ரவரி பீ’னோ இதழின்  இரண்டாம்

பகுதியின் பிடிஎஃப் கோப்பை இத்துடன் இணைத்திருக்கிறேன்.


--


 


Beano2378__13_2_88_2_small.pdf

Pas Pasupathy

unread,
Sep 29, 2011, 2:53:21 PM9/29/11
to yAppulagam / யாப்புலகம்

1988-ஆம் ஆண்டு 13- பிப்ரவரி பீ’னோ இதழின்  மூன்றாம்

Beano2378__13_2_88_3_small.pdf

Pas Pasupathy

unread,
Sep 30, 2011, 7:04:10 AM9/30/11
to yAppulagam / யாப்புலகம்
[ பீனோ ( Beano), டென்னிஸ் (Dennis)  காமிக்ஸ்  பற்றி டாக்டர் ஜெயபாரதி எழுதியது. ]
 
Nostalgia. நாஸ்டால்ஜியா
 
 
  
 by  டாக்டர் ஜெயபாரதி
[ நன்றி: அகத்தியர் குழுமம் ]


இந்த Nostalgia எனப்படுகிற விஷயம் இருக்கிறதே......
அது ஒரு தனி அலாதியான சமாச்சாரம்.
முப்பது நாற்பது வயது ஆசாமிகளுக்குக்கூட இந்த நாஸ்டால்ஜியா என்னும் ஏக்கநிலை இருப்பதை நான் கண்டிருக்கிறேன். அப்படியிருக்கும்போது அறுபது மேற்பட்டவர்களுக்கு எப்படி எந்த அளவுக்கு இருக்கும்!

இது ஒரு மனோநிலை.
இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், நாம் எந்த இடத்தைப் பற்றி, எந்த காலகட்டத்தைப் பற்றி நினைத்துப் பெருமூச்சு விடுகிறோமோ, அது சம்பந்தமான இனிய நினைவுகளே
நாஸ்டால்ஜியாவில் தோன்றும்.
அதான்.....
இந்த Beano, Dandy.....

பாருங்கள்.... Dennis The Menace என்னும் காமிக்ஸ் நாயகன்...... அவன் பெயருக்கு ஏற்ப ஒரு Menaceதான்.
அவனை நாயகனாகக் கொண்ட இன்னொரு காமிக்ஸ் ஸ்ட்ரிப்கூட இருக்கிறது. Walter Mathau-வை வைத்து ஒரு சினிமாகூட வந்துவிட்டது. அந்த ஆசாமி தாம் போட்டுக்கொள்ளவேண்டிய மாத்திரையை மறந்துவிடுவார். ஆகவே அவருக்கு உதவும் வண்ணம், அவர் வாயைத் திறந்துகொண்டு குறட்டை விட்டுத் தூங்கும்போது,
டென்னிஸ் மாத்திரையைத் தன்னுடைய கேட்டப்பல்ட்டில் வைத்து இழுத்துக் குறிபார்த்து வால்ட்டரின் உள்நாக்கைப் பார்த்து அடிப்பான், பாருங்கள். இதற்கே வால்ட்டருக்கு ஓர் ஆஸ்க்கார் கொடுக்கலாம். ஆனால் இதில் வரும் டென்னிஸ¤க்கு அந்த Menacing Look கிடையாது. நியூஸன்ஸாக
இருக்கிறானே ஒழிய வேறு இல்லை.

ஆனால் Beanoவின் நாயக டென்னிஸ், தன்னுடைய உருவத்தில் பார்வையில் நடவடிக்கையில் Menace என்பதன் உருவகமாகவே தோன்றுவான். அந்த கறுப்புக் குறுக்குப் பட்டை போட்ட சிவப்பு டீ ஷர்ட். கலைந்த அடங்காத பரட்டைத்தலை. மாறாத scowling முறைப்பு.
இடுப்புவரை படத்தை எடுத்து தேமுதீக-வின் சின்னமாகக்கூட வைத்துக்கொள்ளலாம். கேப்டனுக்குக்கூட அந்த Look இருக்கத்தான் செய்கிறது. கொஞ்சம் இமேஜின் பண்ணிப் பாருங்கள். சரியாக இருக்கும்.

விஷயத்துக்கு வருவோம். அப்பேற்பட்ட டென்னிஸை ஒரு பாட்டுடைத் தலைவனாக மாற்றக்கூடிய தன்மையும் வன்மையும் படைத்தது....?

நாஸ்ட்டால்ஜியா!

அன்புடன்

ஜெயபாரதி



Reply all
Reply to author
Forward
0 new messages