கவிதா மண்டலம்.
ஜூன் 2001. ஆம், எட்டு வருடங்களுக்கு முன். நான் சென்னையில் விடுமுறைக்குச் சென்றிருந்தேன். பாரதி சுராஜ் "திரு மெய்கண்டார் சென்னையிலிருந்து 'கவிதாமண்டலம்' என்ற பத்திரிகை (மீண்டும்)தொடங்கி உள்ளார்" என்று சொன்னார். ஜூலை இதழில் ஈற்றடி கொடுத்து வெண்பா கேட்டிருந்தனர். நான் சென்னையிலிருந்து வருவதற்கு முன் ஒரு முயற்சியை அவர்களுக்கு அனுப்பினேன். நண்பர் வேதம் என் வெண்பா ஆகஸ்ட் இதழில் வந்ததாகத் தெரிவித்தார்.
(அப்போது மன்றமையத்தில் நாங்கள் எழுதிக் கொண்டிருந்த காலம்.)
அந்த வெண்பா:
பாட்டிசை மாமுனிகள் பாரதியும் தாசனும்
மூட்டிய பாநெருப்பில் மூழ்கியதோர் -- காட்டினிலே
தண்டமிழ்ப் பாமலர்கள் தாங்கிவரும் நற்கவிதா
மண்டலத்தில் வீசும் மணம்.