கோணங்கள் - குறு நாவல்.

85 views
Skip to first unread message

Swathi Swamy

unread,
Mar 24, 2009, 2:02:17 PM3/24/09
to தமிழ் பிரவாகம், முத்தமிழ், தமிழ் அமுதம், உலகத்தமிழ்

 

 இந்த குறு நாவல் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டுமலருக்காக எழுதப்பட்டது.  தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்திருந்துவிட்டு தாயகத்துக்கு விருந்தினராக வரும் ஒருவருடைய பார்வைக் கோணமும் , தாயகத்திலேயே அத்தனை இடர்களுக்குள்ளும் , இன்னல்களுக்குள்ளும் வேதனைகளையும், வன்முறைகளையும் எதிர் கொண்டு அனுபவித்து வாழுபவர்களின் பார்வைக் கோணங்களையும் வைத்து எழுத முயற்சி செய்த ஒரு பதிவு இது.  ஈழத்தில் அன்றாடம் நடந்துவரும்  நிகழ்வுகளில் எனது மண்ணில் வாழும் மனங்களின் முடிவுகளும் எதிர்பார்ப்புகளும் போக்குகளும் எப்படியிருக்குமென்ற ஒரு விபரிப்பாக இதை இங்கு தருகிறேன்... ( இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் கற்பனையாக இருக்கலாம். ஆனால் சம்பவங்கள் நிஜமானவை என்று தைரியமாகச் சொல்வேன்.)   :(:( 


வாரம் ஒரு பாகமாக தரலாம் என்று நினைக்கிறேன்.

       எப்படிப்பட்ட பின்னூட்டங்களையும் நீங்கள் தரலாம், மொக்கை உட்பட. 

அன்புடன்
சுவாதி.

*************

கோணங்கள்
(குறு நாவல்)
1


காலம் எவ்வளவு வேகமாய் ஓடுகிறது என்பது அறிவுக்கு எப்போதுமே தெரிந்தே இருந்தாலும் ஒரு சில தருணங்களில் தான் அது சிலுவையில் அறையப்படும் ஆணியின் வலியாய் நெஞ்சில் உறைக்கிறது. தன்னைவிடப் பத்துப் பதினைந்து வயது குறைந்த பெடியன்கள் தங்கள் திருமண அழைப்பிதழை கையில் கொண்டு வந்து நீட்டும் பொழுதோ தனது நண்பர்கள் தங்கள் பிள்ளைகளின் பிறந்த நாளுக்கும், சாமத்திய வீடுகளுக்கும் அழைக்கும் போதோ , தன் வயதொத்தவன் திடீரென்று மாரடைப்பு வந்து மரணிக்கும் போதோ தான் காலத்தின் வேகம் தன்னை பார்த்து நகைப்பது உறைக்கும். அதே போல் தான் இன்றைக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருபத்தி இரண்டு வருசங்களுக்குப் பிறகு வந்து இறங்கின போதும் அவனை அந்த உணர்வு தாக்கியது. மனதுக்குள் எதையோ இழந்த உணர்வு மெல்லிசாக பரவியது... ஊருக்குப் போய் அம்மா, சகோதரங்களை இத்தனை நாளைக்கு பிறகு பார்க்கப் போகிறோமென்ற சந்தோஷம் இருந்தாலும் இலேசான இயலாமையும் இழையோடியதை தவிர்க்க முடியவில்லை.

என்னவோ நேத்து மாதிரி இருக்கு இதே விமான நிலையத்தில் கள்ளப் பாஸ் போர்ட்டும், கீறின விசாவுமாய் அவனும் மாட்டுக்கார மணியனின் தம்பி சந்திரனும் நடுங்கினபடி விமானம் ஏறியது.அதற்குள் இருபத்திரண்டு வருசங்கள் ஓடிவிட்டது. இத்தனை காலத்தில் வாழ்கையில் ஏதாவது திருப்தியாய் செய்திருக்கிறோமா என்று நினைத்துப் பார்த்தால் ஊரில் அக்காவின் கலியாணமும், தங்கச்சியின் சாமத்தியத்தையும் தவிர வேற என்னத்தை உருப்படியா செய்திட்டன் என்ற வெறுப்பு வருகிறது.. எனக்கென்று எதையாவது திருப்தியாய் அனுபவித்திருக்கிறேனா என்று நினைத்துப் பார்த்தால் ப்ச் என்று உதட்டைப் பிதுக்கத் தான் முடிந்தது,

வெளிநாட்டுக்கு வந்து பழகின பிரண்டியும் , பியரும், அப்பப்ப வந்து போகும் சமந்தாவையும் தவிர வாழ்கையில் எதையும் தனக்கென்று புதியவையாகவோ, இனிமையானதோ, அல்லது அர்த்தமுள்ளதாயோ தென்படுகிறதா என்ற தேடலில் சூனியமான தொலைவில் ஒரு கேள்விக்குறி மட்டும் மங்கலாக.............
நான் சாகிறதுக்கிடையில உன்னை ஒருக்காலெண்டாலும் பாத்திடவேணும் ராசா என்று அவ்வப்போது அம்மா போனில் அழும் போது கவலையாத் தான் இருக்கும். அவளின் அழுகைக்காவது ஒருக்கா ஊருக்குப் போய்ட்டு தான் வர வேணும் என்பதைத் தவிர அவனுக்கு அவ்வளாய் நாட்டமில்லை நாட்டுக்குப் போக...
அம்மாவை நினைக்கும் போதும், அவன் விமானம் ஏறேக்கிலை அம்மாவின் வயிற்றிலிருந்த தங்கச்சி இப்ப எப்பிடி இருப்பாள் என்ரு நினைக்கேக்கிலையும் தான் அவனுக்கு ஊருக்குப் போக வேண்டுமென்ற சுரணை எப்போதாவது வரும்...
அவன் வெளிநாட்டுக்கு வந்த 6 வருசத்திலேயே அப்பா மோசம் போனார். அவர் செத்துப் போன செய்தி அவனுக்கு வந்து சேர ஒரு மாசத்துக்குமேலே எடுத்தது. பெத்த அப்பா செத்தது கூட தெரியாமல் அவன் இருந்த தருணத்திலிருந்தே அவனுக்கு ஊரிலிருந்த கொஞ்ச நஞ்ச பற்றும் விட்டுப் போய்விட்டது.

அந்த தொய்வு இழுப்போடு உயிரைக் குடுத்து வயலில் குளிர், வெயிலெண்டு பாராமல் உழைச்சு உழைச்சு ஓடாய்ப் போன அப்பா! பிள்ளையளுக்கு ஒரு குறையும் வரக் கூடாதெண்டு பார்த்துப் பார்த்து வளர்த்த அப்பா! முதல் நாள் பள்ளிக்கூடத்தில கொண்டு போய் விடேக்கிலை புத்தி மதி சொன்ன மாதிரி அவன் வெளிநாட்டுக்குக் கிளம்பின அண்டும் நிறைய அறிவுரை சொல்லி தளு தளுத்தழுத்து அழுத அப்பா! அண்டைக்கு அப்பா அவனிட்டை குடிக்கக் கூடாதுதெண்டும், சிகரட் குடிக்க பழகக்கூடாதெண்டும் வாங்கின ரெண்டு சத்தியத்தையும் காலப்போக்கில் அவன் மறந்ததும் மீறினதும் வேற கதை.. ஆனால் அந்த அன்பான அப்பாவை வாழ்கையில் அவனால் இலேசில் மறந்துவிட முடியாது. அப்படிப்பட்ட அப்பாவின் முகத்தை கடைசியாகப் பார்க்க முடியாமல் போனதில் அவனுக்கு விதியை நொந்து கொள்ள மனம் வரவில்லை. நோய் நொடியில் கிடந்து அழுந்தி செத்துப் போயிருந்தால் போற காலம் வந்து போய்ட்டார் என்று தாங்கிக் கொள்ளலாம். ஆனால் அப்பாவின் மரணம் அப்படி சாதரணமாய் இருக்கவில்லை.
எத்தினையோ உழைச்சு காசு காசா ஊருக்கு அனுப்பினாலும் அப்பாவுக்கு உருப்படியா எதுவும் செய்த திருப்தி அவனுக்கு கடைசி வரை கிடைக்கவில்லை. இன்று வரை அது ஒரு பெரிய குறையாகவே மனதினடியில் அடைந்துவிட்டது. அப்பாவின் சாவு கூடத் தெரியாமல் இருந்த காலத்தின் கட்டாயத்தையும் சூழ்நிலையையும் அவனால் இன்று வரை சகித்துக் கொள்ள முடியவில்லை. அப்பா செத்துப் போன அந்த நாள் அவன் இங்க பெடியளோட பார்பகியூ பார்ட்டியில் கும்மாளமடித்துக் கொண்டிருக்க அங்க அப்பா அனாதையா செல்லடியில் சிதறிப் போயிருக்கிறார் என்ற நினைவே அவனுக்கு ஆயுசுக்கும் போதுமாய் இருந்தது நினைத்து நினைத்து மருகவும் கொதிப்படையவும்.
செல்லடி கனத்த நேரத்தில் எல்லாருமே தின்னவேலியை விட்டு இடம் பெயர்ந்து வேற வேற இடங்களுக்கு போய் கொண்டிருந்த நேரம் அது...! பெரியமாமா குடும்பத்துடன் அவனுடைய குடும்பமும் இடம் பெயர்ந்து போன போதும் அப்பா மட்டும் வீட்டையும் தோட்டந் துறவையும் விட்டிட்டு போக மனமில்லாமல் அங்கேயே இருந்ததில் வந்த வினை தான் அப்பாவின் முடிவு. ... அண்டைக்கு தின்னவேலியை சுத்தி ஒரே குண்டு மழையும் செல்லடியுமாய் சிதறிக் கொண்டிருந்ததாம். அம்மாவையும் , மற்றவையையும் பெரிய மாமா குடும்பத்தோடு அனுப்பிவிட்டு "எனக்கென்ன நடக்கப் போகுது...நீங்கள் போங்கோ.. நான் ரெண்டு மூண்டு நாளைக்குப் பிறகு வாறன் எல்லாத்தையும் சரிப் பண்ணிட்டு" எண்டு வழியனுப்பினவராம். அண்டைக்கு இரவு நடந்த வான் தாக்குதலில் அந்த அயலே செல்லடியில் செல்லரித்துப் போனதாம். ரெண்டு நாளா அந்தப் பக்கம் ஓயாமல் குண்டு மழை. அதால என்ன நடந்தது என்ற சேதியே யாருக்கும் தெரியாமல் போக.... நாலைஞ்சு நாளைக்குப் பிறகு பெரியமாமா வேற ஆட்களோட வந்து பார்த்தால் வீடு தரைமட்டமாய் கிடந்ததாம். அப்பா துண்டு துண்டாய் உடல் சிதறி அடையாளம் தெரியாமல் ...அவர் தான் ராசையா எண்டு அடையாளம் காட்டினதே அவரிண்ட விரலில இருந்த அவன் அவருக்கு மணி அக்காவிடம் கொடுத்தனுப்பின அந்த மோதிரம் தானாம். சிதறிக்கிடந்த அப்பாவை குப்பையோட குப்பையா அயலில கிடந்த மற்ற உடல் துண்டங்களோடை சேர்த்து எரிச்சுப் போட்டு போனவராம் பெரியமாமா... அந்த சூழ்நிலையில அதை தவிர வேற வழியில்லை.. இப்படி ஒரு சாவு அப்பாவுக்கு யார் எழுதினது? ஏன் இப்படி ஒரு விதி அவருக்கு வர வேணும்? இந்த எண்ணமே அவன் மனதில் புற்றாய் அரிக்கத் தொடங்கி நாட்டையும், நாட்டின் நடப்பையும் வெறுக்க முக்கிய காரணமாய் ஆகிவிட்டது.

“கண்டறியாத விடுதலை வாங்கினமாம் விடுதலை..." அவன் தன்னுடைய கோணத்திலிருந்த பார்வைப் புள்ளியை சற்றும் நகர்த்த தயாராக இருக்கவில்லை....

அப்பா இல்லாத நாட்டுக்கு போக வேண்டுமா என்ற நினைவே அவனுக்குள் வேரோடிப் போய் கிடந்தது. மூளியாய் போன அம்மா முகத்தை என்னெண்டு பாக்கிறது? என்ற நினைப்பு புரையேறிப் போய் அவனை எரித்தது. அதிலேயே அவன் ஊர் பயணத்தை இதுவரை போர் நிறுத்தங்கள் நாட்டுக்கு பல வந்தாலும் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான். இந்தப் பயணம் கூட கிளம்பியிருக்க மாட்டான்.... ஆனால் அம்மா போன மாதம் திடீரெண்டு நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த யோசனையாலும், அம்மா அவனை தான் சாகிறதுக்கிடையில பார்க்க வேணுமெண்டு அழுததாலயும் , இப்ப கடைசியாய் நடந்த சண்டை நிறுத்தத்தில பெரிசா ஒரு அத்துமீறலும் இல்லாதது போல் இருந்ததாலும் , அதனால் நிறைய ஈழத்து சனங்கள் ஊருக்குப் போய்ட்டு வந்து கொண்டிருந்ததாலயும் ஒரு மாதிரி மனசு வந்து கிளம்பினான்.

" இந்த நேரத்தில ஊருக்குப் போய் வந்தால் சரி..இல்லாட்டில் உவன்கள் எப்பெப்ப என்னத்தை துடக்குவாங்கள் எண்டு சொல்லேலாது... அதுக்கு பிறகு அம்மாவுக்கொண்டு நடந்தாலும் அப்பா மாதிரி சாவு செய்தி கூட தெரியாமல் இருந்திடும்..அதை விட ஒருக்கா போய் அம்மாவை பார்த்திட்டு வாறது அம்மாவுக்கும் நிம்மதி எனக்கும் ஆறுதலாயிருக்கும் " என்று வெளிக்கிட்ட பயணம் தான் இது. ஆனாலும் அவ்வப்போது சில பல அசம்பாவிதங்களையும் கேள்விப்படுவதால் நிறையப் பயத்தோடையும், கொஞ்சம் ஆர்வத்தோடையும் தான் வந்து இறங்கினான்.

வழியெல்லாம் ஒவ்வொரு இராணுவ முகாம்களிலும் பாதுகாப்பரண்களும் பச்சைத் தொப்பிகளுமாய் கையில் கனரக ஆயுதங்களுடன், விரோதமாய் முறைத்த இராணுவத்தினர்களைப் பார்க்க மனதுக்குள் பீதியும், கிலியுமாக இருந்தது அவனுக்கு. ஏன் தான் வந்தோமோ என்று சினமாக ஒரு புறமும் , திரும்பி உருப்படியா அமெரிக்கா போய் சேருவோமா என்ற பயம் மறுபுறமும் ஆட்டிப்படைத்தது.

"கொழும்புக்கு வாங்கோ அல்லது இந்தியாவுக்கு வாங்கோ எல்லாரையும் வந்து பார்க்கலாம்" என்று சொன்னால் கேட்டார்களா என்று குடும்பத்தினர் மேல் ஆத்திரம் வந்தது.

என்னவோ மூன்று மாசத்துக்கு முன்னமே அனுமதி வாங்க வேணுமாமே யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே போவதென்றால்...அதுவும் குடும்பத்தில் எல்லாருக்கும் குடுக்கமாட்டாங்களாம்.. என்ன சீரழிவோ என்று அலுத்துக் கொண்டான். யாரிடம் அனுமதி வாங்க வேண்டுமென்று அவன் கேட்கவில்லை. ஒன்று பெடியளிட்டயாய் இருக்கும் இல்லாட்டில் இராணுவத்திடமாயிருக்கும். இரண்டும் சேர்ந்து தானே ஊரை இந்தப் பாடு படுத்துதுகள்..மனதுக்குள் வெறுப்பாக இருந்தது.

ஊர் எப்படியிருக்கும்? வீடு எப்படியிருக்கும்? தம்பி தங்கச்சி நல்லா வளர்ந்திருப்பார்கள்.. அக்காவும் அத்தான் பிள்ளைகள் என்று குடும்பமாயிட்டா. அம்மாவுக்கு வயதும் போச்சு..இந்த 22 வருஷத்தில எல்லாமும் மாறிப்போயிருக்கும்...பஸ்ஸில் ஊர் வந்து சேரும்வரை ஒரே படபடப்பு....உயிரோடு வீடு போய் சேருவோமா என்ர சந்தேகத்துடன் தான் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் இறங்கும் போதும் தனக்குள் கேட்டுக் கொண்டான். நடுவழியில் பஸ்ஸை நிப்பாட்டி காடையர் கூட்டம் வந்து வெட்டிப் போட்டாங்களென்றால் என்ன கதி? வீட்டாருக்கு தெரியவருமா..நான் இந்த பஸ்ஸில தான் வந்தனானெண்டு? என்று பலவிதமான கிலியுடன் தான் பிரயாணப்பட்டான். கடைசி சோதனைச் சாவடி ஆனையிறாவோ அல்லது அதுக்கு அங்காலயும் ஏதாகிலும் இருக்குமோ என்று யோசித்தான். என்ன கிலுசுகெட்ட வாழ்கை இந்த நாட்டில? சீ... எப்பிடியாவது என்ர குடும்பத்தை அங்க எடுப்பிச்சிட வேணும்..இங்க கிடந்து நக்கரையாமல் அங்க வந்து நிம்மதியா இருக்கட்டும்..இந்த முறை திரும்பி அமெரிக்கா போனதும் தம்பியையும் தங்கச்சியையும் எப்பிடியாவது கனடாவுக்குள் எடுத்து விட வேணும்.. என்று நினைத்துக் கொண்டான்.

யாழ்ப்பாணத்தின் மிகச் சாதாரண குடும்பம் அவனுடையது. ஆசைகள் நிறையவும் அவற்றை நிறைவேற்ற வழியில்லாத பொருளாதரமும் கொண்ட வழக்கமான ஏழ்மையின் அடையாளங்கள் கொண்ட குடும்பம். வயது, வாழ்கைத் தரம் பற்றிய சிந்திக்கத் தெரியாத அப்பாவும் அம்மாவும் குழந்தை பெறுவதை கடவுள் தந்த கொடையாக நினைக்கப்பழகிக் கொண்டதில் அவன் 19 வயதில் விமானம் ஏறும் போது அம்மா நிறைமாதக் கர்பிணி. இன்றைக்கு அவன் வீடு நோக்கிய பயணத்தில் அம்மாவின் வயிற்றுக்குள் இருந்த தங்கச்சி இருபத்திரெண்டு வயது இளம் பெண்ணாய் வளர்ந்துவிட்டாள். அவளையும், அக்காவின் பிள்ளைகளையும், அத்தானையும் புதிதாகப் பார்க்கப் போகிறான் என்பது ஒருவிதத்தில் சந்தோஷம் கலந்த சங்கடம்.

ஊருக்குக் கிளம்பும் முன் கனடாவிலிருக்கும் பெரிய மாமி சொன்ன மாப்பிள்ளை வீட்டோடு கதைத்துவிட்டு தான் வந்தான். தங்கச்சியின் படம் அவர்களுக்கு திருப்தியாம். சீதனம் , கலியாணச் செலவு எண்டு ஒரு பட்டியல் அவனிடம் சொன்னார்கள். கொஞ்சம் யோசனையாகத் தான் இருந்தது. ரெஸ்ரோரண்டில் வேலை பார்க்கிற மாப்பிள்ளைக்கு இவ்வளவு சீதனமா எண்டும் யோசித்தான். ஆனால் இங்க வந்து இறாங்கின பிறகு ரெஸ்ரோரண்டோ என்ன இழவோ பரவாயில்லை..முதலில் அவளுக்கு கல்யாணம் செய்து அதன் மூலமா அவளை கனடாவுக்குள் கூப்பிட்டு விட வேண்டியது தான் என்று தீர்மானித்தான். இப்பிடி தினம் தினம் செத்து செத்து பிழைக்கிற வாழ்கை வாழுறதை விட அங்கனேக்கில வந்து கிடந்தால் வெல்பேயர் காசு கிடைக்கும்; இலவசமா படிக்கலாம்; மருத்துவ செலவு இலவசம்...எண்டு வசதியா அவள் இருக்கலாமே.... அப்படியே ஏஜன்ஸிக்கார மகேந்திரனிடமும் தம்பிக்காக கதைக்க வேணும். கொஞ்சம் கூட காசு தான் அவனிடம்..ஆனால் கனடாவுக்குள் ஆட்களை கூட்டி வருவதில் அவன் ஒருவன் தான் இப்போதைக்கு நம்பகமான ஏஜன்ஸிக்காரன். வேற வழியில்லை; முடிஞ்சால் அக்கா, அத்தான், பிள்ளைகளை இந்தியாவுக்குள் எடுத்துவிட்டுவிட வேணும். அவையோடை அம்மாவும் இருக்கலாம்.. மனதுக்குள் ஏகப்பட்ட திட்டம்.....எதிர்காலம் பயமுறுத்தியது ..நாட்டில் காலடி எடுத்து வைத்த நிமிடத்திலிருந்து உடம்பெல்லாம் குளிர்ந்து போய் ரத்தம் சில்லிட்ட மாதிரி ஒரு உணர்வு. அது பயமா அல்லது இருபத்தி இரண்டு வருடம் கழிச்சு ஊருக்கு வரும் அதிகப்படியான மன உணர்ச்சியின் வேகமா பதட்டமா என்று அறுதியிட்டு சொல்ல முடியவில்லை.. ஆனால் ஒரு வெட வெடப்பு எல்லாவற்றையும் மீறி உடம்பைக் உலுக்கிக்கொண்டிருந்தது.

அவனுக்கு தின்ன வேலிக்கு போக வேணுமெண்ட ஆசை தான் மனதில் இருந்தாலும் முழுக் குடும்பமும் அப்பா செத்ததில் இருந்தே இங்கே மட்டுவிலில் புலம் பெயர்ந்து இருக்கிறதால நேரே இங்கேயே வந்து நுணாவில் சந்தியில் இறங்கிவிட்டான். இங்க புலம் பெயர்ந்த பிறகு அக்காவுக்கும் இந்த ஊரில் தான் மாப்பிள்ளை பார்த்து கட்டி வைச்சது. மணியகாரர் வளவு வேலுப்பிள்ளை வாத்தியாரின்ண்டை பேரனை தான் அக்காவுக்கு கலியாணம் செய்தது. இப்ப எல்லாரும் அங்க தான் இருக்கினம். அத்தான் இங்க ஒரு பள்ளியில் ஆசிரியராம். இப்ப தங்கச்சியும் அந்தப் பள்ளியில தான் படிப்பிக்கிறாளாம்.

எல்லோரையும் பார்க்கப் போகிறோம் என்பது மனதுக்குள் என்னவோ சந்தோஷமாயும் பரபரப்பாயும் தான் இருந்தது. ஆனாலும் ஊர் மண்ணில் காலடி வைத்ததும் அந்நியமாய் உணர்ந்தான். மனம் பக் பக் என்று அடித்துக் கொண்டது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவுமே பசுமையாகத் தெரியவில்லை. மொட்டைப் பனைகளும், குழி விழுந்த தெரு வீதிகளும், இடிபாடுகளும், புதர் மண்டிய வளவுகளும், நெஞ்சைப் பிசைந்தன. முன்பெல்லாம் சுடலைகள் கூட இதை விட அழகாய் இருந்தது போல் ஒரு நினைவு. மயானங்களில் கூட அரளி பூ மரங்களும், கொன்றைப் பூக்களும் கொஞ்சம் தள்ளி சுடலை வைரவர் கோவிலுமாய் எவ்வளவு நல்லா இருக்கும்? ஊரைவிட்டுப் போன போது தேக்கிவைத்திருந்த அன்றைய ஊரின் வடிவை மறக்கமுடியாதவனாய் வந்தவனுக்கு ஏதோ உழி கொண்டு போன மாதிரி கருகிப் போயிருந்த இந்த ஊரின் நிலையை வைத்து தன் சொந்த ஊரும் இப்படித் தான் இப்ப இருக்குமோ என்று ஒப்பீடு செய்து பார்த்தான். ஞாபகத்தில் இப்பவுமிருந்த பனை வடலியையும், வைரவர் கோவிலையும், அவனுடைய பள்ளிக்கூடத்தையும் ஏக்கத்தோடு நினைத்துப் பார்த்தான்...

"பிரண்டு போவாங்கள் எல்லாத்தையும் மண்ணோட மண்ணாக்கிப் போட்டிருப்பாங்கள்" என்று நினைத்துக் கொண்டான்.

"சீ என்ன சாபக்கேடடா இந்த மண்ணுக்கு?" என்று கவலையாக இருந்தது அவனுக்கு, இப்ப கூட அப்பா தான் நினைவுக்கு வந்தார். எந்த பருவ காலத்திலும் தோட்டத்தையும் சரி வீட்டு வளவையும் சரி பச்சைப் பசேலென்று வைத்திருப்பதில் அப்படி ஒரு வெறி பிடித்த அக்கறை அப்பாவுக்கு.

வீட்டு முற்றத்தில் எத்தினை வகையான ரோசாப் பூ செடியளை நட்டு வைச்சிருந்தார்? எப்படியும் ஒரு பத்துப் பன்னிரண்டு செடியாவது நிண்டிருக்கும். அக்கம் பக்கத்து வீட்டுப் பொம்பிளையள் கலியாணவீடுகளுக்கும், திருவிழாக்களுக்கும் அலங்கரிச்சுக் கொண்டு போறதெண்டால் ஒரு ரோசாப் பூ தாரியளே கொண்டைக்கு வைக்க என்று கேட்டு வருவது இண்டைக்கும் பசுமையா நினைவில இருக்கு அவனுக்கு.

முற்றத்தை வளைச்சுப் போட்ட மாதிரி பென்னம் பெரிய மல்லிகைப் பந்தல்... என்ன விலாட் மாமரம் என்ன? வீட்டு பின் வளவில நிண்ட செம்பாட்டான் மாமாரமும் , செவ்விள நீர் தென்னை மரமும். பச்சை மிளகாய், தக்காளி, எண்டு மரக்கறி செடிகளுமாய் எப்பிடி ஒரு வடிவான வீடும் வளவுமாய் ..தின்ன வேலியில் அநேகமானவர்களின் வீட்டு வளவுகள் இப்படித் தான். தின்னவேலி மண்ணுக்கு அப்படி ஒரு செழுமை. தின்ன வேலி குடி தண்ணீர் என்றால் அந்தக் காலத்தில் வாயூறும் சனங்களுக்கு...யாழ்ப்பாணத்தின் பசுமையான, செழுமையான பிரதேசங்களில் தின்னவேலி தானே பேர் போன இடம்..? வீடெல்லாம் பூவும் காயுமாய் குலுங்கின காலமெல்லாம் இனிமேல் அங்கு வாழ்ந்த மனிதர்களின் ஞாபகங்களில் மட்டும் வாழ்ந்து அவர்களுடனேயே மறையப் போகும் வரலாறு தான்...

அப்பாவோட போய்ட்டுது தின்னவேலி வாழ்கை. ஆனாலும் அம்மாவுக்கு இப்பவும் ஆசை தின்னவேலி வளவிலை ஒரு கொட்டிலை போட்டுக் கொண்டாவது இருக்க வேணும். கடைசி மூச்சை அப்பா செத்த அந்த வளவுக்குள்ளேயே விட வேணுமாம்... ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஆசை. அம்மாவுக்கு இப்படி ஒரு ஆசை. அவனுக்கோ எப்படியாவது தன் குடும்பத்தினரை இந்த மண்ணை விட்டு கொண்டோடி போயிட வேணும் எண்ட ஆசை. அம்மாவும் ஒருத்தரிண்ட சொல்லையும் கேட்காமல் கொஞ்ச நாள் தின்னவேலி வளவில கொட்டிலை போட்டுக் கொண்டு தான் இருந்தவ. ஆனால் பழையபடி அறுவான்கள் குண்டு போட்டு எல்லாம் தரைமட்டமாக்கிப் போட்டான்கள். அம்மா உயிர் தப்பினது அருந்தப்பு. அண்டையிலேருந்து இப்ப வரை அம்மாவும் இங்க மட்டுவிலில் தான் அக்கா குடும்பத்தோட இருக்கிறா.

என்ன அரசியல் சகுனித் தனமோ , போராட்ட இளைப்பாறலோ நாட்டில் போர் நிறுத்தமெண்டு நோர்வேக்காரன் பேச்சுவார்த்தையில் இறங்கி கொஞ்சநாளா சண்டையெல்லாம் குறைஞ்சு ஓய்ஞ்சு போயிருக்கு ரெண்டு மூண்டு வருஷமாய்.. ஏனோ இப்ப தான் அவனுக்கும் மனம் வந்துது ஒருக்கா ஊருக்குப் போய்ட்டு வருவமெண்டு. ஒருவகையில் மனசளவில் மட்டுமில்லை, இத்தனை வருஷமாய் இங்க குளிருக்குள்ளயும், பனிக்குள்ளயும் , நகம் வெடிக்க வெடிக்க உழைச்சு உழைச்சு ஊரில வாங்கின கடனையும், அக்காவிண்ட கலியானம், தங்கச்சின்ர சாமத்தியம், தங்கச்சி , தம்பின்ர படிப்பு எண்டும், மாசா மாசாம் வீட்டுச் செலவுக்கும் வைத்தியச் செலவுக்குமாய் அம்மாவுக்கும் , இடைக்கிடை அக்கா குடும்பத்துக்கும் அனுப்புவதுமாய் போய்க் கொண்டிருந்ததே தவிர சேமிப்பு எண்டு எதுவும் பெரிசா கையிருப்பில் இருக்கவில்லை

ஊருக்குப் போறதெண்டால் வழிச்செலவு, சாமான் சக்கட்டு எண்டு எப்பிடியும் அஞ்சு அல்லது ஆறாயிரம் டொலர் செலவாகும். அந்தக் காசை எல்லாம் சேர்த்து அம்மாவுக்கு அனுப்பினால் ஒரு வருஷத்துக்கு அம்மா கஷ்டமில்லாமல் இருக்கலாமே என்று கணக்குப் பார்ப்பான்.

வெளிநாட்டு வாழ்கை எண்டால் மட்டும் என்ன சும்மாவா?தர்மசத்திரத்தில படுத்துக் கிடந்து ஆரும் போடுற அன்னதானத்திலா வயிறு வளர்க்கிறான்? கனடாவில் என்றால் அகதிக் காசு வரும். களவாய் வேலை செய்யலாம்; அகதி என்ற தகுதிக்கு நிறைய உதவிகளும், இலவச சேவைகளும் அங்க கிடைக்கும். ஆனால் இங்க அமெரிக்காவில் அகதி எண்டாலும் வேலை செய்தாக வேணும். உழைச்சால் தான் காசு. காசு இருந்தால் தான் வாழ்கை.

ஏதேதோ நினைத்துக் கொண்டு நுணாவில் வாசிகசாலையடியில் வந்து நின்றான். இங்க இருந்து கொஞ்ச தூரம் உள்ள நடந்து போனால் மணியகாரர் வளவு வருமெண்டு மணி அக்கா சொன்னவ. ஏதோ ஒரு நினைப்பில் கிளம்பிட்டான். வாற தேதியும், நேரமும் வீட்டுக்கு அறிவிக்க முடியேலை. வந்திறங்கின அண்டே பஸ் ஏறிட்டான் ஊருக்கு வர. அதனால் வீட்டாருடன் எந்த தொடர்பும் கொள்ள முடியவில்லை. கொஞ்ச நாளாவே தங்கச்சிண்ட ஹாண்ட் போனும் வேலை செய்யேலை... அதனால் புது ஊரில் அவனுக்கு வழி தேடுவது சிரமமாகவும் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது,

என்னெண்டு மணியகாரர் வளவைக் கண்டு பிடிக்கிறதெண்டு குழப்பத்தோடு நின்றவன் போற வாற யாரிடமாவது தான் வழி கேட்க வேண்டுமென்று தீர்மானித்தான். வழியில் போன யாருக்கும் அவனை கவனிக்க வேண்டுமென்ற சுரணை தென்படவில்லை. முன்பெண்டால் வெளிநாட்டிலிருந்து ஆராவது வந்தால் வேலிக்கு மேலால் முகங்கள் முளைக்கும். சின்னப் பெடியங்கள் பின்னால ஓடி வருவான்கள்.. ஒருகாலத்தில் அவனும் லண்டனிலிருந்து குமணன் அண்ணை வந்த போது அதிசயமாய் அவனுக்குப் பின்னால் ஓடியிருக்கிறான். குமணன் அண்ணையின் உருவ மாற்றமும், பெல்பாட்டம் லோங்ஸும்..வெட்லுக் சேட்டும் அப்ப அவனுக்கு அத்தனை ஆசையாய் இருக்கும்...தானும் வெளி நாடு போக வேணுமெண்டு அப்பவே அவனுக்குள் கனவை வளர்க்க காரணமாய் இருந்தவர் குமணன் அண்ணை தான். அவரும் இப்ப எங்க எண்டு தெரியாது. தன்ர தாய் தகப்பன் எண்டு குடும்பம் முழுதையும் லண்டனுக்கு எடுப்பிச்சிட்டார் எண்டு கேள்விப்பட்டது தான்.

உணர்சிகளற்ற வெளிறிய முகங்களுடன் அங்கங்கு சனங்கள் மிரட்சியோடு இரண்டு பக்கமும் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார்கள். எந்தக் கணத்திலும் சாவு வரலாம் என்ற திகில் சேர்ந்த எதிர்பார்ப்புடன் நடமாடும் அவர்களுக்கு இவனை விடுப்பு பார்க்க நேரமில்லை என்பது உறைக்க அவனுக்குள்ளும் லேசான பயம் ஊடுருவத் தொடங்கியது.

"என்னடாது... போர் நிறுத்தமெண்டாங்கள்.அமைதிப் பேச்சு நடத்தினமெண்டு பசப்பினாங்கள்.இங்க ஒவ்வொருத்தரிண்டை முஞ்சையிலயும் பிரேதக் களையெல்லோ தெரியுது? ஊரே பெரிய சுடலைமாதிரி கிடக்கு..."

"இத்தனை நாள் அங்க கிடந்தது போல் பேசாமல் அங்க அமெரிக்காவிலயே கிடந்திருக்கலாமோ. செலவழிச்ச காசும் மிச்சமாயிருந்திருக்கும். உயிருக்கும் பயமில்லாமல் இருந்திருக்கலாம். இங்க வந்து ஏதும் ஒண்டு நடந்திதெண்டால் யார் பாக்கிறது எதிர்காலத்தையும் குடும்பத்தையும்?" என்று யோசித்தான்.
உயிருக்கான பயத்துக்கு முன் உறவுகளுடனான சந்திப்பு இரண்டாம் பட்சமே,

வழியில் போன மனிதர் ஒருவரை வில்லங்கமாய் வழிமறித்து " அவன் போக வேண்டிய மணியகாரர் வளவுக்கு வழி கேட்க அவர் அவனை அதிசயம் கலந்த அதிர்ச்சியுடன் பார்ப்பது போல் அவனுக்குபட்டது. ஆனாலும் அவர் எதுவும் விபரம் விசாரிக்காமல் அவனுக்கு வழி சொல்லிவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினார். அவருடைய பார்வையின் தாக்கம் அவனுக்குள் என்னமோ செய்தது.

அவர் காட்டின பாதையில் போனாலும் மேலும் ரெண்டு மூன்று பேரிடமும் வழி கேட்டு கொண்டு போனான், அவர்களும் அவனை ஒரு மாதிரியாகப் பார்பது போலவே தோன்றியது அவனுக்கு, அதனாலோ அல்லது கன காலத்துக்குப் பிறகு குடும்பத்தினரைப் பார்க்கப் போகிறோமென்ற மகிழ்சியினாலோ அல்லது அப்பா போன பிறகு அம்மாவை முதன் முதலாக பார்க்கப் போகும் அந்த கொடுமையான தருணத்தைக் கற்பனை செய்ததாலோ எதென்று அறுதியிட்டு இனம் காண முடியாமல் இதயம் படபடவென்று அடிக்கத் தொடங்கியது. உடம்பில் ஓடும் மொத்த இரத்தமும் சில்லிட்டுப் போன மாதிரி இருந்தது.

வழிசொன்னவர்கள் சொன்ன அடையாளப்படி பெரிய பாசிபடிஞ்ச பழைய கால மதில் சுவரும், அந்த மதில் சுவரில் உடைஞ்சு போய் இருந்த பெரிய தொந்தி மட்டும் உடைய முன்னம் தான் ஒரு பிள்ளையார் சிலை எண்டதையும் . உது தான் மணியகாரர் வளவெண்டும் அவனுக்கு உணர்த்தியது. மதிலோடு தொங்கிக் கிடந்த படலையைத் தாண்டி சென்ற பார்வையில் பாதை நீளமாயும், தொங்கலில் பெரிய அந்தக் கால நாற்சார வீடும் தெரிந்தது.

பென்னம் பெரிய அந்த வளவின் விஸ்தாரத்தையும், வீட்டின் பிரமாண்டத்தையும் கவனம் செலுத்த முடியாமல் வீட்டுக்கு முன்னால் நின்ற சனக்கூட்டமும், வீட்டிலிருந்து வந்த ஒப்பாரியும் அவனைக் கலவரத்துக்குள்ளாக்கியது. வீட்டுக்குள்ளிருந்து வந்த அழுகையின் தீனமும், வீட்டுக்கு வந்து கொண்டிருந்த சனங்களும் அவனுடைய வீட்டில் யாரோ ஒருவரின் மரணத்தின் அடையாளத்தை தெள்ளத் தெளிவாக அவனுக்கு உணர்த்த ஏனோ ஒரு கணம் அம்மா தான் மனதுக்குள் வந்தா. சாகிறதுக்கு முன்னம் ஒருக்கா உன்னைப் பாக்க வேணும் ராசா எண்டு அம்மா கடைசியா போனில் கேட்டது தான் இப்ப நினைவுக்கு வந்தது. அடுத்த கணம் சரியான வீட்டுக்கு தான் வந்திருக்கிறோமோ என்ற எண்ணமும் வர "கடவுளே இந்த வீடா இருக்கக் கூடாது" என்று சின்னப் பிள்ளை தனமாய் மனம் வேண்டியது. வந்த அன்றே ஒரு செத்தவீட்டு நிகழ்சியை அவன் எதிர்கொள்ள மனதளவில் தயாராக இருக்கவில்லை. உள்ளிருந்து வரும் அழுகுரலின் தீனம் மண்டைக்குள் என்னவோ செய்ததாலும், அந்த அழுகை யாருக்காக என்று நேரில் பார்க்கும் திராணியில்லாததாலும் மேலே போக கால்கள் ஏவாமல் வழியிலேயே உறைந்து போய் நின்றான்.

அவனையும் அவனுடைய தயக்கத்தையும் கவனித்த ஒருவர் அவனுக்கு கிட்ட வந்தார்.
" ஆர் வேணும் தம்பி? நீர் ஆர்?"

"மணியகாரர் வளவெண்டு...."

'இதான் தம்பி ..நீர்...?" என்று கேள்வியை இழுத்தபடி அவனை ஏற இறங்கப் பார்த்தார் அவர்...

"நான் ...நான்...வேலுப்பிள்ளை வாத்தியாரிண்ட பேரன் கலியாணம் செய்த வசந்தியெண்டு... அவவுக்கு தம்பி..அமெரிக்காவில இருந்து வாரன்..."

"ஓஓ?வசந்திண்ட தம்பியே...அட ஞான வைரவரே.. என்னைய்யா உம்மட கூத்து...? " என்று வானத்தை நோக்கி கை கூப்பி கும்பிட்டுவிட்டு "ம்ம் என்னத்தைச் சொல்லுறது...வாரும்...உம்மடை அக்காவிண்ட வீடு தான் உது... உள்ள போம்... "என்று இவனிடம் சொல்லிவிட்டு பக்கத்தில் நின்ற ஒரு இளைஞனைக் கூப்பிட்டு "தம்பியை உள்ள கூட்டிக் கொண்டு போ... இவர் வசந்திண்ட தம்பியாம். அமெரிக்காவில இருந்து வந்திருக்கிறார்." என்று சொல்ல அவன் இவனுடைய கைகளில் இருந்த 2 சூட்கேஸுகளையும் வாங்கிக் கொண்டான்.. "வாங்கோ" என்று ஒரு வார்த்தையுடன் உள்ள நடக்கத் தொடங்கினான் அந்த இளைஞன்.

அவனுக்கோ கால்களுக்கு அடியில் நிலம் சரிஞ்சு போறமாதிரி இருந்தது. யாராவது தன்னை தாங்கிப் பிடிச்சால் நல்லதெண்டு யோசிச்சான். உள்ளே ஓடிப் போக வேணும் போல கால்களை மனம் ஏவினாலும் கால்கள் நகர மறுத்தன. இதயம் பக் பக் என்று தாறுமாறாக அடிக்கத் தொடங்கியது. இவ்வளவு மனத் தைரியமின்மை தன்னிடம் இருக்கெண்டு இப்ப தான் அவனுக்கு கூட விளங்கினது. அவனால் நடக்க முடியவில்லை என்று உணர்ந்த அந்த மனிதர் மெல்ல அவனுடைய கைகளை ஆதரவாக பிடித்துக் கொண்டார். கொஞ்சம் பலமாக அவனை இழுக்குமாப் போல் கூட்டிக் கொண்டு போனார். கூடத்தில் வெள்ளைத்துணியால் போர்த்தப்பட்ட உடலை அருகில் போய் பார்த்த போது தான் தெரிந்தது அது அம்மா இல்லையெண்டு. மனதுக்குள் நிம்மதியாக ஒரு கணம் உணர்ந்தாலும் ... ஆனால் செத்தவீடு அவனுக்குரிய ஒருவருடையது என்று மட்டும் உணர்த்தியது.

அப்ப ..அப்ப...உது யார்? என்ன இப்பிடி இருக்கு... தலைப்பக்கம் ஏதோ வெள்ளையாய் வழிவது போல்...என்ன அது ? அவனால் ஒரு கணம் கூட அங்கே கிடத்தப்பட்ட மனிதனை பார்க்க முடியாமல் இருந்தது. பிரேதமாகக் கிடந்தவனின் தலையில் கட்டுப் போட்டிருந்தாலும் வெள்ளையாய் எதோ ஒன்று வெளியில் வருவது தெரிந்தது. இரத்தம் ஊறி கட்டப்பட்டிருந்த துணியில் கறையாய் தெரிந்தது. "ஐயோ என்ன கருமம் இது?" என்றிருந்தது அவனுக்கு. அந்த இடத்தைவிட்டு ஓடிப் போக வேணும் போல இருந்தது, சோர்ந்து போய் பிணத்துக்குக் கிட்டவாய் அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு கிடந்தாள் ஒரு வயதான பெண்மணி. அம்மா தானோ என்று யோசித்தான்...

"தங்கச்சி...இஞ்சை பாரும்...யார் வந்திருக்கிறார் எண்டு...." அந்த மனிதரின் குரலில் பிரேதத்தை கிடத்தியிருந்த வாங்கில் தலை கவிழ்ந்திருந்த பெண் தலையை நிமிர்த்திப் பார்க்க அவன் அதிர்ந்து போனான்..அது அவனுடைய அக்கா வசந்தி. அழுதழுது முகம் கண்ணெல்லாம் வீங்கிப் போயிருந்த அக்காவும் மற்றவர்களும் அவனை அடையாளம் கண்டு சில நொடிகளிலேயே ஐயோ என்று அலறிக் கொண்டு வந்து அவனைக் கட்டி இழுத்து ஒப்பாரி வைச்சு அழத் தொடங்கினார்கள். சுருண்டு கிடந்த அந்த பெண்மணி அவன் நினைத்தது போல் அம்மா தான்.. அவனைப் பார்த்ததும் நெஞ்சிலும் தலையிலும் மாறி மாறி மாரடித்து அழத் தொடங்கினாள். அவன் சிலையாக செத்துக்கிடந்த அந்த மனிதனையே பார்த்துக் கொண்டு நின்றான். உள் உணர்வுக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது செத்துக் கிடக்கிறது அத்தான் தான் எண்டு. அவன் உழைச்சு குடும்பத்துக்கு செய்த முதல் சந்தோஷமான காரியத்தின் கதாநாயகனை பிணமாகத் தான் அவன் முதன் முதலா பார்க்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட இருபதினாயிரம் டொலர் சிலவழிச்சு அக்காவுக்கு அவனால் கொடுக்கப்பட்ட வாழ்கை இன்று பிரேதமாக அவனுக்கு முன்னால் கிடந்ததை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவனுக்கு தெரியவில்லை. அக்காவின் எதிர்காலம், அக்காவிண்ட மூண்டு பிள்ளையளிண்டை வாழ்கை இனி எப்பிடி இருக்குமெண்டு நினைச்சுப் பார்க்க நெஞ்சுக்குள் ஏதோ அடைத்துக் கொண்டது மாதிரி இருந்தது. அம்மா, அக்கா இருவரும் சிலையாக நின்ற அவனுடைய காலைப் பிடித்துக் கொண்டு களைக்க களைக்க அழுது கொண்டிருக்க அவர்களை தேற்ற வேண்டுமென்ற சுரணையே இல்லாமல் இடிந்து போய் நின்றான் அவன். ஓரத்தில் அக்காவின் பிள்ளைகள் மூன்றும் அப்பா அப்பா என்று அரற்றியபடி சுருண்டு கிடந்ததை அவனால் சகிக்க முடியவில்லை. இதைப் பாக்கிறதுக்காகவா இவ்வளவு நாள் கழிச்சு இத்தனை தூரம் வந்தேன் என்று தன் மீதே கோபம் வந்தது. ஏன் இந்த சாவு? என்ன நடந்தது? எப்பிடி வந்தது இந்த சாவு..? சாகிற வயசா அவருக்கு?அவனுக்குள் ஆயிரம் கேள்விகளாக நிறையத் தொடங்க இருட்டான புலத்தில் தெரியாத விடைகளை தேட முயன்று கொண்டிருந்தான்.

"அக்காவிண்ட கலியாணத்துக்கு வாராம அத்தானிண்டை சாவுக்கா வந்தனீ? அக்கா கூறைச்சீலை கட்டின சீரைப் பார்க்காமல் வெள்ளைச் சீலை கட்டுறதை பாக்க வந்தனீயே ராசா?"

"இனி என்னையும் என்ர பிள்ளையளையும் யார் பார்க்கப் போகினம்? என்னையும் பிள்ளையளையும் அனாதையளா விட்டிட்டு போட்டாரே...பாரடா தம்பி?"

"என்ர ராசாவை கொண்டிட்டாங்களே அறுவாங்கள்.. பாடைல போறவங்கள்..."

"உனக்கொரு கலியாணம் பேசி கட்டி வைக்க வேணுமெண்டு சொல்லிட்டு அவர் ஊர்கோலம் போறாரே.."

வரிசையாக அம்மாவும் அக்காவும் ஒப்பாரி சொல்லி சொல்லி அழ அவன் அந்த மரணத்திற்கான காரணத்தை சரியாக கணிக்க முயன்றுகொண்டிருந்தான்..
வந்த பயணக்களைப்பையும் மீறி அதிர்சி அவனை அடித்துப் போட்டது போல் பிரமை பிடிச்சுப் போயிருந்தான் அவன்.

மனசாலும் உடம்பாலும் மிகுதியான களைப்பில் அம்மாவுக்கும் அக்காவுக்கும் பக்கத்திலேயே குந்தினான். அவன் தோளில் சாய்ந்து விம்மிக் கொண்டிருந்த அக்காவை மெல்ல ஆதரவா அணைத்துக் கொள்ளத் தான் முடிந்ததே தவிர... வார்த்தை எதுவும் வரவில்லை அவனுக்கு.

கொஞ்ச நேரத்தில் கூட்டமாய் பள்ளிச் சீருடையுடன் பிள்ளைகள் வந்து அத்தானுக்கு இறுதி மரியாதை செய்தார்கள்.

"மாஸ்டரைப் பார்க்க வந்திருக்கிறியளே? பாருங்கோ... உங்கட மாஸ்டரை எப்படி கொண்டு போட்டிருக்கிறாங்கள் எண்டு பாருங்கோ.. ஐயோ..என்ர கண்ணுக்கு முன்னாலேயே என்ர ராசாவை சுட்டுப் போட்டாங்களே...என்னால ஒண்டும் செய்யேலாமல் போச்சே.. என்னையும் சாக்காட்டியிருக்கலாமே..அறுவாங்கள்.. பிரண்டு போவாங்கள்" அக்காவின் வார்த்தைகள் அவனுக்கு புரியவைத்தது... அத்தானை சுட்டு சாக்காட்டியிருக்கிறாங்கள் எண்டு. யார் சுட்டது? ஆர்மியா? போர் நிறுத்தமெண்டு சொன்னாங்களே பாவியள்...சமாதான பேச்சு வார்த்தைக் காலத்திலும் சனங்களை சுட்டுக் கொல்லுறாங்களெண்டால் போர் நிறுத்தமெண்டதுக்கு என்ன அர்த்தம்? அவனுக்கு புரியவில்லை.

எல்லாரையும் பார்க்க முடிஞ்சுது. தங்கச்சியை காணேலேயே என்று யோசித்தான். தம்பியும் கண்ணில் படவில்லை. ரெண்டுபேரும் எங்க என்று மனம் தேடினாலும் யாரிடம் கேட்கிறது இந்த நேரத்தில் என்று பேசாமல் இருந்தான். அவனுக்கு யாரும் எதுவும் விபரமாக நடந்த சம்பவத்தை சொல்லும் நிலையிலும் இருக்கவில்லை. அத்தானின் சாவு அவனுக்குள் பயத்தை உக்கிரமாகக் கொட்டிவிட்டிருந்தது. இந்த வாழ்கைக்கும் அவனுக்கும் சரிப்பட்டு வராது. எப்பவும் சாவு வருமெண்ட விதியின் கைகளைப் பற்றிய சித்தாந்தத்தையெல்லாம் அவனால் சிந்த்தித்துப் பார்க்க முடியவில்லை. இப்படி சாக வேண்டுமெண்டு யார் எழுதினது? ஏன் இப்பிடி சாக வேணும்? அண்டைக்கெண்டால் அப்பா..இண்டைக்கு அத்தான்.. எண்டு அவனுடைய குடும்பத்திலேயே ரெண்டு காவு வாங்கின நாட்டின் போர் என்ற பலியெடுப்பு நிகழ்வு இனியும் வராதெண்டு எந்த உத்திரவாதமும் இல்லாத நிலையில் இஞ்சை ஏன் இருக்க வேணும் ?
கனநேரம் வைச்சிருக்க முடியாது... தலை பிரிஞ்சு மூளை வெளில வர தொடங்கிடும்... இப்பிடித்தான் ராசரத்தினத்தின்ர மகள் லீலாவுக்கும் நடந்தது..அதால கெதியில பிரேதத்தை எடுக்கிறது { நல்லது..

{ நன்றி :ஓவியம் -http://www.tamilnation.orgart/strugglero.htm}


பிரேதமாயிட்டீங்களே? நேத்துவரை சிறிதரன் மாஸ்டர் சிறிதரன் மாஸ்டர் எண்டு சொன்ன என்ர ராசா இப்ப பிரேதமாயிட்டாரே.... அக்கா பைத்தியம் பிடித்தவள் மாதிரி தலை தலையாய் அடித்து கதற அதை பார்க்க முடியாமல் அவன் எழும்பி வேற பக்கம் போய் நின்று கொண்டான். மனதுக்குள் தாங்கவியலாத துக்கமும், இயலாமையும் குமைய குமைய கையாலாகாதவனாய் வீட்டுச் சுவரில் தன் முஷ்டியால் ஓங்கி குத்தினான். அங்கே அரற்றிக் கொண்டிருக்கும் பொம்பிளையளைப் போல் அவனால் கத்தி அழ முடியவில்லை. ஆனாலும் ஐயோ என்று கதறினால் நல்லா இருக்கும் போல் தோன்றியது அவனுக்கு.

முதலில் அவனை அழைத்து வந்த அந்த மனிதர் தான் திரும்பவும் அவனுக்கு பக்கத்தில் வந்தார். " தம்பி... உம்மட அத்தானுக்கு ஆருமில்லை...கொள்ளி போட... சின்ன மகனுக்கு மூண்டு வயசு. அவனிட கையால தான் கொள்ளி வைக்க வேணும். ஆனாலும் நீரும் ஒருக்கா போய் குளிச்சிட்டு வேட்டியைக் கட்டிக் கொண்டு வந்திட்டீரெண்டால்...காரியத்தை பார்க்கலாமெல்லே...ஏதோ கடவுளாப் பாத்து தான் உம்மை இண்டைக்கு இங்க அனுப்பி வைச்சிருக்கிறார். இல்லாட்டில் உம்மட தம்பி கிடக்கிற நிலமைல.... அவர் முடிக்கும் முன்னே

தம்பிக்கு என்ன? அவனுக்கு என்ன நடந்தது? என்று அவசரமாய் கேட்டான்.

"என்னத்தை சொல்லுறது.... நேத்து இந்த அயலை வளைச்சு வீடு வீடா சோதனையெண்டு வந்தாங்கள் பாவியள். அதுல ...தான்... "என்று மேலே எப்படி விபரிப்பது என்று தெரியாமல் பாதியில் நிறுத்தினார் அவர்...

"சரி வாரும் வீட்டுக்குள்ளை போய் கதைப்பம்..". என்று அவனை உள்ளே அழைத்துப் போனார் அவர்.

வீட்டுக்குள் நின்ற ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியை அவனிடம் " இவ என்ர மனுசி" என்று அறிமுகப்படுத்தினார். அந்த பெண்ணிடம் " உள்ளை கூட்டிக் கொண்டு போய் தம்பிக்கு ஏதும் குடிக்க கொடும். " என்றார்.

இல்லை இல்லை எனக்கொண்டும் வேண்டாம்... என்றான் இவன்.

தம்பி எங்க?

"இஞ்சேரும் இவரை அறைக்குள்ள கூட்டிக் கொண்டு போம். என்ரு மனைவியிடம் சொல்லிவிட்டு இவனிடம் "அவவோட போங்கோ" என்றார்.

அந்த பெண் வீட்டின் கடைசி அறைக்கு அவனை கூட்டிப் போனார். " அறுவாங்கள் சீரழிச்சுப் போட்டாங்கள் ராசா உம்மட குடும்பத்தையே" என்ரு சொன்னபடி கதவைத் தி/ரந்துவிட அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. "இன்னும் என்ன அதிர்சி இருக்கோ?" என்ற பயம் கவ்வ அறைக்குள் பார்த்தான். அங்கு ஒரு பாயில் தம்பியும். மூலைக்குள் ஒரு பெண்ணும் முடங்கிக் கிடந்தார்கள்.

"நேற்று அயலட்டை எல்லாம் வீடு வீடா சோதனை போட்டுக் கொண்டு வந்தாங்கள்.. வீட்டில உம்மட அத்தானும், தங்கச்சியும், தம்பியும் இருந்தவை. வந்தவங்கள் தங்கச்சியை சீரழிச்சுப் போட்டாங்கள். தடுக்கப் போன தம்பியை அடிச்சு வளர்த்திப் போட்டு அத்தானை சுட்டுப் போட்டு போய்ட்டாங்கள்.." அந்தப் பெண் சொல்லிக் கொண்டு போனது எதுவும் காதில் விழவில்லை தங்கச்சியை சீரழிச்சுப் போட்டாங்கள் என்று கேட்ட பின்..... கருகிப் போன குருத்தோலை மாதிரி கிடந்த தங்கச்சியையும், சவத்துக்கும் அவனுக்கும் மூச்சு ஒன்று வித்தியாசம் காட்ட கிடந்த தம்பியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றான் அவன்.

(தொடரும்)

Thenu

unread,
Mar 25, 2009, 6:11:10 AM3/25/09
to tamila...@googlegroups.com, தமிழ் பிரவாகம், முத்தமிழ், உலகத்தமிழ்
கதை நிஜத்தை அப்படியே சொல்லுது அக்கா

2009/3/24 Swathi Swamy <

Thenu

unread,
Mar 25, 2009, 6:12:10 AM3/25/09
to Pira...@googlegroups.com, mutht...@googlegroups.com, தமிழ் அமுதம், உலகத்தமிழ்
இது நாங்கள் வாங்கி வந்த வரம் அக்கா

2009/3/25 விஜி சுதன் <vselva...@gmail.com>

வாசித்ததும் சில கணங்கள் சிலையாகிப்போனேன். கால நினைவுகள் இறந்த காலம். அது இறப்புக்களை எண்ணிக்கையை காட்டி நின்ற கோலத்தையே கைகாட்டி நின்றது.

ஒரு இனமே இப்படி பிஞ்சும், குஞ்சுமாய் கசங்கிப்போய் கிடக்கின்றது. என்ன சொல்வது? 'கற்பனை செய்தும் கூட பார்க்கமுடியாத அவலங்களைச்சுமந்தபடியல்லவா எங்கள் வாழ்க்கை நடைபயிலுகின்றது?

'மாமி,மகள் செத்துப்போச்சினம், மாமா உயிரோடு இருக்கின்றாரா? என்பது கேள்வியாய் இன்னும் தொக்கி நிற்கின்றது. இன்று இன்னொரு நண்பர்களின் குடும்பம். ஷெல்லடியில் சிதறிப்போய் விட்டது. இன்னும் எத்தனை இறப்புக்களை அதன் நிகழ்வுகளைக்குறிப்பெடுக்கப்போகின்றோம் என்பதை எண்ணிப்பார்க்க முடியவும் இல்லை. விரும்பவும் இல்லை.

மனசு கனக்கிறது. தொடர்ந்து படிக்கும் சக்தியெனக்கு உண்டோ என்பதும் தெரியவில்லை.

'நிகழ்வுகளோடு பயணிப்பதால்.......மனசின் வெப்ப மூச்சே வெளியேறுகின்றது. வேறு எதுவும் சொல்லத்தோன்றவில்லை சுவாதி.


Swathi Swamy

unread,
Mar 25, 2009, 5:55:23 PM3/25/09
to tamila...@googlegroups.com, தமிழ் பிரவாகம், முத்தமிழ், உலகத்தமிழ்


2009 மார்ச் 24 14:22 அன்று, bala murali <nagaisba...@gmail.com> எழுதியது:


On 3/24/09, Swathi Swamy <mswat...@gmail.com> wrote:

 

 இந்த குறு நாவல் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டுமலருக்காக எழுதப்பட்டது.  தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்திருந்துவிட்டு தாயகத்துக்கு விருந்தினராக வரும் ஒருவருடைய பார்வைக் கோணமும் , தாயகத்திலேயே அத்தனை இடர்களுக்குள்ளும் , இன்னல்களுக்குள்ளும் வேதனைகளையும், வன்முறைகளையும் எதிர் கொண்டு அனுபவித்து வாழுபவர்களின் பார்வைக் கோணங்களையும் வைத்து எழுத முயற்சி செய்த ஒரு பதிவு இது.  ஈழத்தில் அன்றாடம் நடந்துவரும்  நிகழ்வுகளில் எனது மண்ணில் வாழும் மனங்களின் முடிவுகளும் எதிர்பார்ப்புகளும் போக்குகளும் எப்படியிருக்குமென்ற ஒரு விபரிப்பாக இதை இங்கு தருகிறேன்... ( இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் கற்பனையாக இருக்கலாம். ஆனால் சம்பவங்கள் நிஜமானவை என்று தைரியமாகச் சொல்வேன்.)   :(:( 


வாரம் ஒரு பாகமாக தரலாம் என்று நினைக்கிறேன்.

       எப்படிப்பட்ட பின்னூட்டங்களையும் நீங்கள் தரலாம், மொக்கை உட்பட.  
 
அருமையான பதிவு! தொடருங்கள் சகோதரி..

மிக்க நன்றி சகோதரர் பால முரளி!
உங்கள் ஊக்கம் எனக்கு பலம் தருகிறது.
--
அன்புடன் பாலமுரளி
துணிவு மட்டும் இருக்குமென்றால்... எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
http://vetrinadai.blogspot.com/
http://groups.google.com/group/tamilamutham?hl=ta




--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

Swathi Swamy

unread,
Apr 4, 2009, 7:36:42 PM4/4/09
to தமிழ் பிரவாகம், முத்தமிழ், தமிழ் அமுதம், உலகத்தமிழ், eelatami...@googlegroups.com
இது வரை வந்தது....

இனி.........
கோணங்கள்
(குறு நாவல்)


2

செத்தவீடெல்லாம் முடிஞ்சு வீடு ஓய்ஞ்சு போய் கிடந்தது. அக்கா மட்டும் விசும்பலாக தனது ஆற்றாமையை தீர்க்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அக்காவின் மூன்று பிள்ளைகளும் தமது அம்மா அழுவதைப் பார்த்துக் கொண்டு அவளுக்குப் பக்கத்திலேயே முடங்கிப் போய்க் கிடந்தனர். பக்கத்து அறையில் யாருடனும் பேசும் திராணியில்லாமல் தலைக்கு கையை வைத்துக் கொண்டு வெறும் சீமெந்து நிலத்தில் படுத்துக்கிடந்தான் அவன். தூங்க வேணும் என்று தோன்றவில்லை...வெறுமனே கண்ணை மூடிக் கொண்டு , சகல ஓசைகளையும் துரத்திவிட்டு எதைப் பற்றியும் சிந்திக்காமல் கிடக்க முயற்சித்து தோற்றுப் போய்க் கொண்டிருந்தான். திரும்ப திரும்ப அக்காவின் பிள்ளைகளின் அழுத முகம் தான் கண்ணுக்குள் வந்து நின்றது. இந்த வினாடி அந்த பிஞ்சு மனங்களில் என்னென்ன யோசனையள் ஓடிக் கொண்டிருக்கோ எண்டு அவன் கற்பனை செய்து பார்க்க விரும்பாமல் அந்த எண்ணத்தை புறந் தள்ளப் பார்த்தான். முடியவில்லை. திரும்ப திரும்ப அவர்களின் அப்பா அப்பா என்ற அவலமான அழுகை தான் காதுக்குள் ஓலமிட்டுக் கொண்டிருந்தது.


தங்கச்சி அடிக்கடி மயங்கிப் போவதும், எழும்பியிருந்து சத்தமாக அழுவதுமாக இருந்தாள். திரும்பக் கிடைக்காத இழப்புகளுடன் அவனுடைய இரு சகோதரிகளையும் அவனால் ஏறிட்டுப் பார்கமுடியவில்லை.


பணம் பணமா உழைச்சு அவர்களுக்கு தேவையான எல்லாத்தையும் கொடுத்ததாக சந்தோஷப்பட்ட அவனால் "இப்ப அதுகள் இழந்ததை திரும்ப எங்கே போய் வாங்கிக் கொடுக்க முடியும்? இலட்சம் இலட்சமாய் விலை கொடுத்தாலும் கிடைக்கக்கூடியதையா இழந்து போட்டு இருக்குதுகள்? ஐயோ நான் என்ன செய்வன்? ஏன் இந்தக் குடும்பத்துக்கு இப்படி ஒரு தலைவிதி? என்ன வரம் வாங்கிக் கொண்டு வந்ததுகள்? ஏன் இப்படி ஒரு இழிவான நிலை? இந்த நாட்டு கலவரத்தில அப்பாவை பலி குடுத்து , அத்தானை பலிகுடுத்து, தங்கச்சின்ர கற்பு, மானம் எல்லாத்தையும் பறி கொடுத்து...இனி என்ன இருக்கு...நாட்டுக்கு சுதந்திரம் வந்தால் என்ர குடும்பத்தில இழந்த இத்தனையும் எனக்கு திரும்ப கிடைக்கவா போகுது? என்ர குடும்பத்தின்ர நிம்மதியும், சந்தோஷமும் திரும்ப வரவா போகுது? என்ர அப்பாவும் அத்தானும் உயிரோட வரவா போகினம்? போராட்டமாம் போராட்டம்.. கண்டறியாத போராட்டம் நடத்தினம்... சனங்களை பலிகிடாக்களாக்கி.... சனங்களை பாதுகாக்க முடியாதவைக்கு போராட்டம் எதுக்கு? "  என்று இதயம் ஓலமிட்டது.

இழப்புகளின் பெறுமதிகள் ஒப்பிடப்படும் போது பொதுவான விடுதலையை விட தனக்கு மட்டுமான தேவைகளும் பாதுகாப்பும் மட்டுமே சாதாரண மனிதனுக்கு முக்கியமானதாக இருக்கும். அவனுக்கும் அப்படி தான். நான் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. என் குடும்பமும் நானும் ஏன் அல்லல்பட வேண்டுமென்ற நியாயப்படுத்தல் மட்டுமே அவனிடம் தேங்கியிருக்கும். தன்னையும் தன்னைச் சுற்றிய சுய வாழ்கையின் நலனையும் கடந்து சமூகத்தின் மற்றவர்களுக்காகவும் சிந்திக்கவும், இழப்புகளை சகிக்கவும் சாதாரண ஒரு மனிதனுக்கு அதிகப்படியான விழிப்புணர்வும், சமூகப்பற்றும் வேண்டும். அந்த அதிகப்படியான சமூக விழிப்புணர்வு பெரும்பாலானவர்களிடம் இருக்காது. அது அவர்களின் தவறுமல்ல. தன்னையும் தன்னைச் சார்ந்த வட்டத்தையும் மட்டுமே அக்கறைப்படுவது தான் மனித இயல்பு. சமூகப்பற்று போதனையாலோ வற்புறுத்தலினாலோ வர வேண்டியதில்லை. சுய சிந்தனையாலும், தானாக உணரப்படும் மேலான உணர்வினாலும் மாத்திரம் வரவேண்டியது. துரதிஷ்டவசமாக பெரும்பாலானோர் தனிப்பட்ட முறையில் பாதிப்புக்குள்ளான பின்னால் மட்டுமே இந்த உணர்வு வரப்பெறுகிறார்கள். ஒருவகையில் பழிக்குப் பழி வாங்குவது போல். வேறு பலர் தமது இழப்புகளை தாங்கிக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ இயலாமல் பாதிப்புகளுக்கு பழி போட காரணங்களை தேடுகிறார்கள். அவன் இந்த ரகத்தைச் சார்ந்தவன்.

பார்த்து பார்த்து ஒவ்வொருவருக்கும் வாங்கிக் கொண்டு வந்த சாமான்களுடன் சூட்கேஸ் இரண்டும் வைச்சது வைச்சபடியே கிடந்தது. அந்தப் பெட்டி நிறையக் கிடந்தது வெறும் சாமான்களா? அவனுடைய உழைப்பு; அவனுடைய அக்கறை;அவனுடைய பொறுப்பு; அவனுடைய அன்பு; அவனுடைய பாசம்;அவனுடைய ஆவல்;அவனுடைய ஆசை; ஆனால்... எதுக்குமே பிரியோசனமில்லாமல் போனது போல்...வெறுப்பாக இருந்தது.


இந்தக் குடும்பத்தையும் அவனுடைய சொந்தங்களையும் அவன் இனி எதை வைத்து திரும்ப சீர் செய்யப்போகிறான் என்று யோசித்த போது திகிலாக இருந்தது. ஆனால் அவன் சீர் செய்து தானாக வேண்டும். இப்படியே எப்படி விட முடியும்? ல்லாம் இழந்தாச்சு எண்டு குடும்பத்தோடு நஞ்சு குடிச்சா சாகமுடியும்? சாகிற அளவுக்கு அவனும் அவன் குடும்பத்தாரும் என்ன பாவம் செய்தார்கள்? அவனைப் பொறுத்தவரை வாழ வேண்டும். முழுசா இருபத்திரண்டு வருசங்கள்.... அவனுடைய வாழ்கையில் இந்தக் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமெண்டு அவன் பட்ட பாட்டுக்கு என்ன பலன்?அவனுடைய வாழ்கையின் இளமைகாலத்தில் முக்கால்வாசி ஆயுசு வீணாய்ப் போனதாய் இருக்கக் கூடாது. அந்த பனிபிரதேசத்தில் நகக்கணுக்கள் வெடிக்க வெடிக்க , உடல் மரத்துப் போன உழைப்பில், மனதின் ஏக்கங்கள் மட்டும் உடம்பின் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் சபலங்களுக்குமாய் அலைந்து கொண்டிருக்க , வெளியில் மிகவும் சாதாரண மனுசனாய்..ஒரு குடும்பத்தின் பொறுப்புமிக்கவனாய் சொந்த மண்ணில் சொந்தங்களைப் பார்க்க வந்ததுக்கு.....இழப்புகளும் பேரிடிகளுமாய் தாக்கப்பட்டு வீழ்ந்து சுக்கலாகிப் போக வேணுமா என்ன?


முடியாது. இதை எப்படியாவது அவன் சரிப்பண்ணியே ஆக வேணும்.. ஆனால் என்னெண்டு சரிப்பண்ணப் போறான் என்ற கேள்விக்கான விடை மட்டும் இருளில் மூழ்கிப் போய் எங்கோ கிடந்தது...


இந்த அசம்பாவிதம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும்? அவனுடைய வருகை எத்தனை சந்தோஷமயமாய் இருந்திருக்கும் வீட்டாருக்கு? கை நிறைய ஒவ்வொருவரும் அவன் கொண்டு வந்த பொருட்களை வைத்து எவ்வளவு பூரிப்படைந்திருப்பார்கள்? அவனை எப்படி தாங்கியிருப்பார்கள்? சிரிப்பும் கும்மாளமுமாய் வீடே களை கட்டியிருந்திருக்கும். தங்கச்சியின் கல்யாணத்தைப் பற்றி கதைத்திருக்கலாம். அவளுடைய வெட்கத்தை பார்த்து பழிச்சு விளையாடி இருக்கலாம். அத்தானுடன் அரசியல், போராட்டம், அமெரிக்கா வாழ்கை என்று கதைச்சிருக்கலாம். அவனுடைய கலியாணத்தைப் பற்றியும் கதை நடந்திருக்கும்.......... ஆனல் எதுவுமே இல்லாமல் வீடே இருளில்லும் கவலையிலும் அழுகையோடு முயங்கிப் போய் கிடந்தது.


தம்பி வலியில் அரற்றுவது கேட்டது. பக்கத்தில் இருக்கும் ஒரு வயதான கட்டுப்பரியாரி தான் அவனுக்கு வந்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார். முழங்கால் எலும்பும் , கையும் முறிந்திருக்கு என்று சொல்லியிருந்தார். முதுகெலும்பிலும் நல்லா அடிச்சிருக்கிறான்கள். தம்பியின் முகம் வெடிச்சு , இரத்தம் கண்டிப் போய் பார்க்க சகிக்க முடியாமல் இருந்தான். கண்ணைத் திறந்து அவனால் பார்க்க முடியவில்லை. மூக்கு, சொண்டு என்று எல்லா இடமும் அடிபட்டு வீங்கி வெடிச்சுப் போயிருக்க குருதி வாசனையில் அவனை ஈ மொய்த்துக் கொண்டிருந்தன.


அவன் வந்து முழுசா மூன்று நாட்களாகிவிட்டது. வீட்டில் யாருடனும் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை; பேச மனமும் இல்லை; என்ன பேச இருக்கு? ஏன் நடந்தது? எப்பிடி நடந்தது எண்டு விலாவாரியா விடுப்பு கேட்க இதென்ன பிறத்தியார் வீட்டு சங்கதியா? அவரவர் மூலைக்கு மூலை அழுது கொண்டு கிடந்தார்களே தவிர யாருக்கும் எதுவும் தோன்றவில்லை. அம்மாவின் மடியில் தலை வைச்சு படுக்க வேணும் போல இருந்தது. ஆனால் அம்மாவுக்கு கிட்ட போனால் எங்கே உடைந்து போய்விடுவானோ என்ற பயம் அவனுக்கு.


இரண்டு நாளா யாருமே சாப்பிடவில்லை ..யாருக்கும் சாப்பிடவோ எழும்பி நடமாடவோ மனமில்லாமல் அப்படி அப்படியே கிடந்தார்கள். பட்டினிப் பண்டங்கள் பக்கத்து அயல் வீடுகளிலிருந்து வந்தாலும் செத்த வீட்டுக்காக வந்திருந்த சொந்தக்காரர் தான் சாப்பிட்டார்கள். இவர்களை சாப்பிடச் சொல்லிப் பார்த்து அவர்களும் களைத்துப் போனார்கள்.


"பவளம் அக்கா.. இப்பிடியே கிடக்கிறதால என்ன நடக்கப் போகுது...? நடந்தது என்னவோ தாங்க முடியாத கொடுமை தான்..ஆனால் உப்பிடியே பட்டினி கிடந்து , அழுது கொண்டிருந்தால் போனதெல்லாம் திரும்பியா வரப் போகுது? அங்க பாருங்கோ...பச்சைக் குழந்தையள் அதுகள்...மூண்டும்.. அதுகளை கவனிக்காமல் கிடக்கிறியளே...பாவங்களெல்லே அதுகள்...? அவன் பாவி வெளிநாட்டில இருந்து எல்லாரையும் பாக்க வந்து..அங்க பாருங்கோ.. ரெண்டு நாளா சாப்பிடாமல் கிடக்கிறான். அவனை எழுப்பி எதுவும் சாப்பிடவாவது குடுங்களேன்.."


கூடத்தில் பக்கத்து வீட்டுக்காரர் பட்டினிச் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை வெளியிலிருந்து வந்த பேச்சுச் சத்தத்தில் தெரிந்தது. சாப்பாடு கொண்டு வந்தவர்கள் யாரோ அம்மாவையும் அக்காவையும் சாப்பிட வைக்க எத்தனிப்பது உணர்வில் விளங்கியது. அக்காவைப் பார்த்தால் பச்சைத் தண்ணி கூட வாயில படாமல் இந்த இரண்டு மூண்டு நாளா கிடக்கிறாள் போல் தெரிந்தது, அக்காவும் பிள்ளையளும் சாப்பிடாமல் அம்மாவும் சாப்பிட்டிருக்க மாட்டா. அவனுக்கே சாப்பிட வேணுமெண்டு உணர்வில்லாமல் இருந்தது என்றால் அக்காவுக்கு எப்பிடி மனம் வரும் சாப்பிட என்று நினைத்துக் கொண்டான் தனக்குள்.


அம்மா தீனமான குரலில் ஏதேதோ சொல்லி அழுவது தெரிகிறது.. அவளுடைய குரலில் தான் எத்தனை பலஹீனம்..? எத்தினை துக்கத்தை தான் அவளும் பார்க்கிறது? ஒரே நாளில் இப்படி பலதரப்பட்ட இடியும், பூகம்பமும், எரிமலையுமாய் பொசுக்கிப் போட்டால் வயதான அவளால் எதையெண்டு தான் தாங்கிக் கொள்ளுறது? அவனாலேயே முடியேலையே...


"சரி..சரி.. இனி என்ன ஆகப் போகுது உதுகளை கதைச்சு...எல்லாம் விதி...இப்படி ஒரு முடிவு வர வேணுமெண்டு எழுதி வைச்சதை எங்களால மாத்தமுடியாது..விடுங்கோ.. இனி மிஞ்சியிருக்கிற வாழ்கையை வாழ வேண்டாமே...?அதுக்கு தெம்பு வேண்டாமே? ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருக்கப் பாருங்கோ..எழும்புங்கோ முதல்ல...போய் அந்தக் குழந்தையளுக்கும், உவன் பெடியனுக்கும் சாப்பிடக் கொடுங்கோ..நீங்களும் சாப்பிடுங்கோ... இந்தக் குடும்பத்தில இனி எல்லாருக்கும் நீங்கள் தான் ஒரு பிடிப்பா இருக்க வேணும்...எழும்புங்கோ சொல்லுறன்..." அந்த யாரோ ஒருத்தரின் வற்புறுத்தலில் அம்மா எழும்பி இருக்கிறாள். அழுகை மட்டும் நிக்கேலை.


" " ஐயோ...என்ர கண்ணால இந்தக் கொடுமையளை எல்லாம் பாக்க வைச்சிட்டு மகராசனா அவர் போய்ட்டார். இன்னும் என்னென்னத்தை யெல்லாம் இந்தப் பாவி பார்க்க வேணும் எண்டு எழுதியிருக்கிறானோ இந்த நாசமாப் போன கடவுள்... நான் யாருக்கு என்ன பாவம் செய்தனான்? இல்லை எண்ட பிள்ளையள் தான் யாரிண்ட வாழ்கையில மண் அள்ளிப் போட்டதுகள் ? ஏன் இப்படி எங்கட வாழ்கையில கொள்ளி போட்டிட்டான் இந்தக் கடவுள்? " அம்மா அரற்றுவதைக் கேட்கமுடியாமல் காது ரெண்டும் செவிடானால் நல்லது போல் இருந்தது அவனுக்கு,


" என்னக்கா செய்யிறது? உங்களுக்கு மட்டுமா இப்படி விதி? இங்க எங்கட மண்ணில அநேகமா எல்லாருக்கும் இப்பிடித் தானே விதி எழுதி வைச்சிருக்கு ? யாரை நொந்து என்ன பிரியோசனம் சொல்லுங்கோ? இண்டைக்கு உங்களுக்கு நடந்தது போல நாளைக்கு எங்களுக்கும் நடக்கலாம். என்ன செய்ய முடியும் சொல்லுங்கோ பார்ப்பம்? என்ன நடக்கும் எது வரும் எண்டு தெரியாத இருட்டு வாழ்கை தான் தமிழனுக்கெண்டாகிப் போச்சு... விடிவு வாற வரைக்கும் தாங்கிக் கொண்டு வாழ வேண்டியது தான்,.,, வேற வழியில்லை,, "

அம்மா மௌனமாக அழுது கொண்டிருந்தாள்.


மோனை..வசந்தி... எழும்பாச்சி... புருசன் செத்திட்டால் வாழ்கை முடிஞ்சு தெண்டு இடிஞ்சு போயிடாதை ராசாத்தி.. அவன் ஸ்ரீதரன் எத்தினை கனவுகளோடை இந்தக் குஞ்சுகளை வளர்த்தவனெண்டு எங்களை விட உனக்குத் தானே தெரிய வேணும்? அவன் இல்லாத இடத்தில இனி நீதானே பிள்ளை இதுகள் மூண்டுக்கும் அம்மாவாயும் அப்பாவாயும் இருந்து வளக்க வேணும்,,? நீ இப்பிடிக் கிடந்தால் என்னாச்சி நடக்கப் போகுது? போனவன் திரும்பி வரப் போறதுமில்லை; உங்களுக்கு நடந்த அநியாயங்களுக்கு தீர்வு கிடைக்கப் போறதுமில்லை. உங்களை நீங்கள் தான் எழுப்பி நிப்பாட்ட வேணும். இதுகளை சகிச்சுத் தானாக வேண்டும், எழும்பாச்சி.. நீ எழும்பினால் தான் உன்ர கொம்மாவும் சாப்பிடுவா.. பாவம் மனுசி வயசு போன நேரத்தில சாப்பாடும் இல்லாமல் பட்டினி கிடந்தால் அவவுக்கு இருக்கிற வருத்தத்தில ...எப்ப என்ன நடக்குமெண்டு சொல்லேலாது,, இன்னொரு துக்க காரியத்தை இப்போதைக்கு உங்களாலயும் தாங்க முடியாது... அதான் சொல்லுறன்.. எழும்பி உன்ர கொம்மாவுக்கும் பிள்ளையளுக்குமாவது சாப்பிடு... எழும்பாச்சி...


அக்காவுக்கு தேறுதல் சொல்லிய பெண்ணே திரும்பவும் அம்மாவிடம்.

" அவன் பாவி உங்கள் எல்லாரையும் பாக்கவெண்டு இவ்வளவு தூரத்தில இருந்து வந்திருக்கிறான், அவனும் உங்களோட சேந்து பட்டினியா கிடக்கிறான். அவனுக்காண்டியாவது எல்லாரும் எழும்பி சாப்பிடுங்கோ பாப்பம்.. அந்தப் பெடியையும் போய் கூட்டியாங்கோ பவளம் அக்கா... பாவமெல்லே அவன்... உங்களுக்காண்டியும் இந்தக் குடும்பத்துக் காண்டியும் ஒரு கலியாணம் காட்சி யெண்டில்லாமல் ஒடா தேய்ஞ்சு போனவனுக்கு கொஞ்சமாவது நிம்மதி வர வேண்டாமே? நீங்கள் சுதாகரிக்கப் பழகினால் தானே அவனுக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்? அவனும் என்ன செய்வான்,,, இந்தக் குடும்பத்தில யாருக்கெண்டு அவன் அழுகிறது சொல்லுங்னோ பாப்பம்..."


இப்போது அம்மாவின் அழுகையும் அக்காவின் விசும்பலும் இன்னும் அதிகரித்தது. அவர்களைத் தேற்றிய அந்த பக்கத்து வீட்டுப் பெண்மணியும் இவர்களுடன் சேர்ந்து அழுதாள். அவளுடைய கணவரும் வந்திருக்கிறார் போல் இருந்தது. ...அவருடைய குரலும் கேட்டது..


"ம்ம்ம்..இனி நீயும் துடங்கிட்டியே... அழுது கொண்டு கிடக்கிறவைக்கு ஆறுதல் சொல்லி அவையளை எழுப்பி சாப்பிடக் குடுப்பாய் எண்டு உன்னைக் கூட்டிட்டு வந்தால் நீயும் அவையளோட சேர்ந்து அழ தொடங்கிட்டியே..."


"என்னால முடியேலையப்பா. .தாயா பிள்ளையா பழகினதுகளுக்கு இப்பிடி ஒண்டு நடந்திருக்கு..எத்தினை நேரத்துக்கு காட்டிக் கொள்ளாமல் வெறுமையா பொய்யுக்கு ஆறுதல் சொல்ல சொல்லுறியள் என்னை? கண்ணுக்குள்ள நிக்கிறான் ஸ்ரீதரன்... அவன் பிறந்து முப்பத்தொண்டு கழிய முன்னமே தாய் செத்துப் போனாள்.. சின்ன வயசில இருந்து என்ர மடிக்கில வளந்தவன்... அவனை பாடைல அனுப்பிட்டு இருக்கிறமே... வயசான எங்களுக்கு வரப்படாதே இந்த சாவு... அவனுக்கா வர வேணும்? உந்தா..உந்தப் பெட்டைக்கும் அவனுக்கும் கலியாணம் நடந்த நாள் இண்டைக்கும் கண்ணுக்குள்ள நிக்குது.. என்ன மாதிரி உந்த நாட்டுப் பிரச்சினைக்குள்ளும் ஊரை வளைச்சுப் போட்டு நடந்த கலியாணம் அது..? ஐயோ அவள் அகலியாவை பாருங்கோ... மான் குட்டி மாதிரியெல்லே துள்ளிக் கொண்டு திரிஞ்சவள்..? ஒருத்தரை பார்த்து ஒரு சுடு சொல் பேச தெரியுமே அவளுக்கு? அவளை இப்பிடியா நான் பாக்க வேணும்? எனக்கே இப்பிடியெண்டா...இந்த மனுசி என்னெண்டு இதுகளையெல்லாம் தாங்கும்..?"


கொஞ்ச நேரம் கூடத்தில் பழய நினைவுகளிலேயே ஒப்பாரி கேட்டுக் கொண்டிருந்தது. யாரோ இதயத்தைப் பிழிஞ்சு உள்ளுக்குள இருக்கிற ஒவ்வொரு சொட்டு இரத்தத்தையும் வடிச்சு எடுக்கிற மாதிரி வலித்தது அவனுக்கு அந்த ஒப்பாரியின் வார்த்தைகள் .சுத்தி சுத்தி அந்த ஒப்பாரி அவனுடைய உழைப்பையும், அவனுடைய வாழ்கையையும் வெறும் சூனியமாக, ஒண்டுக்கும் பிரியோசனமில்லாததாய் உணர்த்திக் கொண்டிருந்தது போல் அவனுக்குத் தோன்றியது..


அழுகையும் , ஒப்பாரியும் அடங்கிய கொஞ்ச நேரத்தில்..அவன் படுத்துக் கிடந்த அறைக் கதவைத் திறந்து யாரோ வரும் அரவம் கேட்டது. யார் என்று பார்க்கும் ஆர்வமில்லாமல் கிடந்தான் இவன். வந்தது அம்மா தான்..


"அப்பு... ராசா.." இந்த வார்த்தைகளுக்காகத் தானே அவன் இத்தனை தூரம் ஓடி வந்தவன்? அம்மாவின் குரலில் அவனுக்குள் அடக்கி வைத்திருந்த கடினமான ஏதோ ஒன்று மெல்ல இளகுவது போல் ஒரு உணர்வு. அவனையறியாமலேயே கண்ணீ காதோரமாய் மெல்ல வழியத் தொடங்கியது.


அம்மா அவனுக்கருகில் குந்தினாள். அவன் அழுவதைப் பார்த்து அவளும் ஓவென்று அழத் தொடங்கினாள். இப்போது தான் அவனுடன் அம்மா மனம் விட்டு அழுகிறாள் என்பது மனதுக்குள் துருத்தியது. அப்பாவின் சாவுக்கும் சேர்த்து தன்னோடு அழுகிறாள் என்பது புரிந்தது. அவனும் உடம்பு குலுங்க வெட்கம் விட்டு அழுதான் சுதந்திரமாக. இத்தனை நேரமும் அவனைக் கட்டியிருந்த ஏதோவொன்று அவிழ்ந்து மனசு லேசாகும் வரை அவன் அழுதான். அம்மாவின் விரல்கள் அவனுடைய தலையை ஆதரவாக வருடிக் கொடுக்க கொடுக்க அவனுடைய நெஞ்சடைத்த துக்கமெல்லாம் வெளியேறிப் போன ஆத்ம திருப்தியில் அவன் குழந்தை போல அழுதான்.


"ஏனம்மா எங்களுக்கு மட்டும் இப்பிடி? அக்காவையும் குடும்பத்தையும் இந்தியாவில போய் இருக்கச் சொல்லலாமெண்டு நினைச்சு வந்தன். தங்கச்சிக்கு கலியாணம் பேசி மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு வந்தன். தம்பியை கனடாவுக்குள்ள எடுப்பிக்க ஏஜன்ஸிக்காரனிட்டை பேசி வைச்சிட்டு வந்தன்...ஆனால் அதுக்குள்ள எல்லாம் தலைகீழா போயிருக்கே...ஏனம்மா? அப்பிடி யாருக்கம்மா நாங்கள் பாவம் செய்தம்? " அவனுடைய கேள்விகளுக்கெல்லாம் அம்மாவிடம் பதில் இல்லை. எல்லாம் விதி என்று சொல்ல அவளுக்கும் பிடிக்கவில்லை.


இந்த மண்ணில் நடக்கும் இந்த நாசங்களும் நீசங்களும், கொலைகளையும், வன்புணர்தலும் சிங்களவன் எழுதின விதி. கடவுள் எழுதியது அல்ல. சிங்கள அரசாங்கம் எழுதின விதியை அவளால் மட்டுமில்லை இந்த மண்ணில் யாராலுமே ஒப்புக் கொள்ள முடியாது.


அம்மா அழுது கொண்டே இருந்தாள். ஏதேதோ சொல்லி அழுதாள்; அரற்றினாள். இருவருக்குமே அந்த அழுகை தேவைப்பட்டது. ஏதோ ஒருவிதத்தில் ஒரு வடிகால் கிடைத்தது போல்...."யார் சொன்னது ஆம்பிள்ளையள் அழக் கூடாது எண்டு?"


மனதில் இருக்கிறதையெல்லாம் அம்மாவிடம் சொல்லி அவனும் அவளைப் போல் வாய் விட்டு குளறி அழுதான்.அழுத களைப்பும் சோர்வும் தீர அம்மாவின் மடியில் படுத்திருந்தான். எவ்வளவோ நிம்மதியாய் இருந்தது. அமெரிக்காவில் வாங்கிப் போட்ட அந்த சிலீப்பி மெத்தை யின் மென்மையில் கிடைக்காத நிம்மதியை அவளுடைய மடி கொடுத்தது... இத்தனை வருடத்தில் அவனுக்கு கிடைக்காத மனச்சாந்தி இப்ப கிடைச்ச மாதிரி இருந்தது. செத்தவீட்டு துக்கமும் , தங்கச்சி சீரழிஞ்ச அதிர்ச்சியையும் கூட கொஞ்சம் அமைதியாக்கின மாதிரி இருந்தது அம்மாவின் மடி. நிம்மதியாக கண்ணிலிருந்து கண்ணீர் கன நேரமாய் வழிந்து கொண்டிருந்தது.. மனதுக்குள் நினைத்துக் கொண்டான் " இன்னொரு தரம் எல்லாத்தையும் சரி செய்வன்"


எல்லாம் சகசமாகி விடுமா என்று ஒரு ஏக்கம் மனதில் இல்லாமல் இல்லை. அக்கா பழையபடி சிரிச்சுக் கதைப்பாளா என்று யோசித்தான். தங்கச்சிக்கு எதிர்காலம் என்று ஒன்று இனி இருக்கா என்று பயந்தான். தம்பியை என்ன செய்யிறது என்று தெரியேலை... எல்லாம் சரியாகி தலை நிமிர இன்னும் எத்தினை காலம் எடுக்குமோ என்று திகிலாக இருந்தது. இந்த மூன்று பிள்ளையளையும் வைச்சு கொண்டு அக்கா எப்பிடி வளர்க்கப் போறாள்? எப்பிடி இந்த நாட்டில வாழப் போறாள் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது. இந்த மண்ணில் இனியும் இவர்கள் இருந்தால் இன்னும் என்னென்ன இழப்புகளை அவன் சந்திக்க வேண்டி வருமோ என்று நினைச்சுப் பாக்க அவனுக்கு நெஞ்சு வலித்தது. இன்னொரு இழப்பை அவனால் தாங்க முடியாது.


{நன்றி : ஓவியம்,.tamilnation.org/art/struggle/tro.htm}

(தொடரும்)

Swathi Swamy

unread,
Apr 4, 2009, 7:40:17 PM4/4/09
to தமிழ் பிரவாகம், முத்தமிழ், தமிழ் அமுதம், உலகத்தமிழ், eelatami...@googlegroups.com

கோணங்கள்
(குறு நாவல்)


2

செத்தவீடெல்லாம் முடிஞ்சு வீடு ஓய்ஞ்சு போய் கிடந்தது. அக்கா மட்டும் விசும்பலாக தனது ஆற்றாமையை தீர்க்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அக்காவின் மூன்று பிள்ளைகளும் தமது அம்மா அழுவதைப் பார்த்துக் கொண்டு அவளுக்குப் பக்கத்திலேயே முடங்கிப் போய்க் கிடந்தனர். பக்கத்து அறையில் யாருடனும் பேசும் திராணியில்லாமல் தலைக்கு கையை வைத்துக் கொண்டு வெறும் சீமெந்து நிலத்தில் படுத்துக்கிடந்தான் அவன். தூங்க வேணும் என்று தோன்றவில்லை...வெறுமனே கண்ணை மூடிக் கொண்டு , சகல ஓசைகளையும் துரத்திவிட்டு எதைப் பற்றியும் சிந்திக்காமல் கிடக்க முயற்சித்து தோற்றுப் போய்க் கொண்டிருந்தான். திரும்ப திரும்ப அக்காவின் பிள்ளைகளின் அழுத முகம் தான் கண்ணுக்குள் வந்து நின்றது. இந்த வினாடி அந்த பிஞ்சு மனங்களில் என்னென்ன யோசனையள் ஓடிக் கொண்டிருக்கோ எண்டு அவன் கற்பனை செய்து பார்க்க விரும்பாமல் அந்த எண்ணத்தை புறந் தள்ளப் பார்த்தான். முடியவில்லை. திரும்ப திரும்ப அவர்களின் அப்பா அப்பா என்ற அவலமான அழுகை தான் காதுக்குள் ஓலமிட்டுக் கொண்டிருந்தது.


தங்கச்சி அடிக்கடி மயங்கிப் போவதும், எழும்பியிருந்து சத்தமாக அழுவதுமாக இருந்தாள். திரும்பக் கிடைக்காத இழப்புகளுடன் அவனுடைய இரு சகோதரிகளையும் அவனால் ஏறிட்டுப் பார்கமுடியவில்லை.


பணம் பணமா உழைச்சு அவர்களுக்கு தேவையான எல்லாத்தையும் கொடுத்ததாக சந்தோஷப்பட்ட அவனால் "இப்ப அதுகள் இழந்ததை திரும்ப எங்கே போய் வாங்கிக் கொடுக்க முடியும்? இலட்சம் இலட்சமாய் விலை கொடுத்தாலும் கிடைக்கக்கூடியதையா இழந்து போட்டு இருக்குதுகள்? ஐயோ நான் என்ன செய்வன்? ஏன் இந்தக் குடும்பத்துக்கு இப்படி ஒரு தலைவிதி? என்ன வரம் வாங்கிக் கொண்டு வந்ததுகள்? ஏன் இப்படி ஒரு இழிவான நிலை? இந்த நாட்டு கலவரத்தில அப்பாவை பலி குடுத்து , அத்தானை பலிகுடுத்து, தங்கச்சின்ர கற்பு, மானம் எல்லாத்தையும் பறி கொடுத்து...இனி என்ன இருக்கு...நாட்டுக்கு சுதந்திரம் வந்தால் என்ர குடும்பத்தில இழந்த இத்தனையும் எனக்கு திரும்ப கிடைக்கவா போகுது? என்ர குடும்பத்தின்ர நிம்மதியும், சந்தோஷமும் திரும்ப வரவா போகுது? என்ர அப்பாவும் அத்தானும் உயிரோட வரவா போகினம்? போராட்டமாம் போராட்டம்.. கண்டறியாத போராட்டம் நடத்தினம்... சனங்களை பலிகிடாக்களாக்கி.... சனங்களை பாதுகாக்க முடியாதவைக்கு போராட்டம் எதுக்கு? "  என்று இதயம் ஓலமிட்டது.

இழப்புகளின் பெறுமதிகள் ஒப்பிடப்படும் போது பொதுவான விடுதலையை விட தனக்கு மட்டுமான தேவைகளும் பாதுகாப்பும் மட்டுமே சாதாரண மனிதனுக்கு முக்கியமானதாக இருக்கும். அவனுக்கும் அப்படி தான். நான் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. என் குடும்பமும் நானும் ஏன் அல்லல்பட வேண்டுமென்ற நியாயப்படுத்தல் மட்டுமே அவனிடம் தேங்கியிருக்கும். தன்னையும் தன்னைச் சுற்றிய சுய வாழ்கையின் நலனையும் கடந்து சமூகத்தின் மற்றவர்களுக்காகவும் சிந்திக்கவும், இழப்புகளை சகிக்கவும் சாதாரண ஒரு மனிதனுக்கு அதிகப்படியான விழிப்புணர்வும், சமூகப்பற்றும் வேண்டும். அந்த அதிகப்படியான சமூக விழிப்புணர்வு பெரும்பாலானவர்களிடம் இருக்காது. அது அவர்களின் தவறுமல்ல. தன்னையும் தன்னைச் சார்ந்த வட்டத்தையும் மட்டுமே அக்கறைப்படுவது தான் மனித இயல்பு. சமூகப்பற்று போதனையாலோ வற்புறுத்தலினாலோ வர வேண்டியதில்லை. சுய சிந்தனையாலும், தானாக உணரப்படும் மேலான உணர்வினாலும் மாத்திரம் வரவேண்டியது. துரதிஷ்டவசமாக பெரும்பாலானோர் தனிப்பட்ட முறையில் பாதிப்புக்குள்ளான பின்னால் மட்டுமே இந்த உணர்வு வரப்பெறுகிறார்கள். ஒருவகையில் பழிக்குப் பழி வாங்குவது போல். வேறு பலர் தமது இழப்புகளை தாங்கிக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ இயலாமல் பாதிப்புகளுக்கு பழி போட காரணங்களை தேடுகிறார்கள். அவன் இந்த ரகத்தைச் சார்ந்தவன்.

பார்த்து பார்த்து ஒவ்வொருவருக்கும் வாங்கிக் கொண்டு வந்த சாமான்களுடன் சூட்கேஸ் இரண்டும் வைச்சது வைச்சபடியே கிடந்தது. அந்தப் பெட்டி நிறையக் கிடந்தது வெறும் சாமான்களா? அவனுடைய உழைப்பு; அவனுடைய அக்கறை;அவனுடைய பொறுப்பு; அவனுடைய அன்பு; அவனுடைய பாசம்;அவனுடைய ஆவல்;அவனுடைய ஆசை; ஆனால்... எதுக்குமே பிரியோசனமில்லாமல் போனது போல்...வெறுப்பாக இருந்தது.


இந்தக் குடும்பத்தையும் அவனுடைய சொந்தங்களையும் அவன் இனி எதை வைத்து திரும்ப சீர் செய்யப்போகிறான் என்று யோசித்த போது திகிலாக இருந்தது. ஆனால் அவன் சீர் செய்து தானாக வேண்டும். இப்படியே எப்படி விட முடியும்? ல்லாம் இழந்தாச்சு எண்டு குடும்பத்தோடு நஞ்சு குடிச்சா சாகமுடியும்? சாகிற அளவுக்கு அவனும் அவன் குடும்பத்தாரும் என்ன பாவம் செய்தார்கள்? அவனைப் பொறுத்தவரை வாழ வேண்டும். முழுசா இருபத்திரண்டு வருசங்கள்.... அவனுடைய வாழ்கையில் இந்தக் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமெண்டு அவன் பட்ட பாட்டுக்கு என்ன பலன்?அவனுடைய வாழ்கையின் இளமைகாலத்தில் முக்கால்வாசி ஆயுசு வீணாய்ப் போனதாய் இருக்கக் கூடாது. அந்த பனிபிரதேசத்தில் நகக்கணுக்கள் வெடிக்க வெடிக்க , உடல் மரத்துப் போன உழைப்பில், மனதின் ஏக்கங்கள் மட்டும் உடம்பின் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் சபலங்களுக்குமாய் அலைந்து கொண்டிருக்க , வெளியில் மிகவும் சாதாரண மனுசனாய்..ஒரு குடும்பத்தின் பொறுப்புமிக்கவனாய் சொந்த மண்ணில் சொந்தங்களைப் பார்க்க வந்ததுக்கு.....இழப்புகளும் பேரிடிகளுமாய் தாக்கப்பட்டு வீழ்ந்து சுக்கலாகிப் போக வேணுமா என்ன?


முடியாது. இதை எப்படியாவது அவன் சரிப்பண்ணியே ஆக வேணும்.. ஆனால் என்னெண்டு சரிப்பண்ணப் போறான் என்ற கேள்விக்கான விடை மட்டும் இருளில் மூழ்கிப் போய் எங்கோ கிடந்தது...


இந்த அசம்பாவிதம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும்? அவனுடைய வருகை எத்தனை சந்தோஷமயமாய் இருந்திருக்கும் வீட்டாருக்கு? கை நிறைய ஒவ்வொருவரும் அவன் கொண்டு வந்த பொருட்களை வைத்து எவ்வளவு பூரிப்படைந்திருப்பார்கள்? அவனை எப்படி தாங்கியிருப்பார்கள்? சிரிப்பும் கும்மாளமுமாய் வீடே களை கட்டியிருந்திருக்கும். தங்கச்சியின் கல்யாணத்தைப் பற்றி கதைத்திருக்கலாம். அவளுடைய வெட்கத்தை பார்த்து பழிச்சு விளையாடி இருக்கலாம். அத்தானுடன் அரசியல், போராட்டம், அமெரிக்கா வாழ்கை என்று கதைச்சிருக்கலாம். அவனுடைய கலியாணத்தைப் பற்றியும் கதை நடந்திருக்கும்.......... ஆனல் எதுவுமே இல்லாமல் வீடே இருளில்லும் கவலையிலும் அழுகையோடு முயங்கிப் போய் கிடந்தது.
 

தம்பி வலியில் அரற்றுவது கேட்டது. பக்கத்தில் இருக்கும் ஒரு வயதான கட்டுப்பரியாரி தான் அவனுக்கு வந்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார். முழங்கால் எலும்பும் , கையும் முறிந்திருக்கு என்று சொல்லியிருந்தார். முதுகெலும்பிலும் நல்லா அடிச்சிருக்கிறான்கள். தம்பியின் முகம் வெடிச்சு , இரத்தம் கண்டிப் போய் பார்க்க சகிக்க முடியாமல் இருந்தான். கண்ணைத் திறந்து அவனால் பார்க்க முடியவில்லை. மூக்கு, சொண்டு என்று எல்லா இடமும் அடிபட்டு வீங்கி வெடிச்சுப் போயிருக்க குருதி வாசனையில் அவனை ஈ மொய்த்துக் கொண்டிருந்தன.

அவன் வந்து முழுசா மூன்று நாட்களாகிவிட்டது. வீட்டில் யாருடனும் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை; பேச மனமும் இல்லை; என்ன பேச இருக்கு? ஏன் நடந்தது? எப்பிடி நடந்தது எண்டு விலாவாரியா விடுப்பு கேட்க இதென்ன பிறத்தியார் வீட்டு சங்கதியா? அவரவர் மூலைக்கு மூலை அழுது கொண்டு கிடந்தார்களே தவிர யாருக்கும் எதுவும் தோன்றவில்லை. அம்மாவின் மடியில் தலை வைச்சு படுக்க வேணும் போல இருந்தது. ஆனால் அம்மாவுக்கு கிட்ட போனால் எங்கே உடைந்து போய்விடுவானோ என்ற பயம் அவனுக்கு.

இரண்டு நாளா யாருமே சாப்பிடவில்லை ..யாருக்கும் சாப்பிடவோ எழும்பி நடமாடவோ மனமில்லாமல் அப்படி அப்படியே கிடந்தார்கள். பட்டினிப் பண்டங்கள் பக்கத்து அயல் வீடுகளிலிருந்து வந்தாலும் செத்த வீட்டுக்காக வந்திருந்த சொந்தக்காரர் தான் சாப்பிட்டார்கள். இவர்களை சாப்பிடச் சொல்லிப் பார்த்து அவர்களும் களைத்துப் போனார்கள்.

"பவளம் அக்கா.. இப்பிடியே கிடக்கிறதால என்ன நடக்கப் போகுது...? நடந்தது என்னவோ தாங்க முடியாத கொடுமை தான்..ஆனால் உப்பிடியே பட்டினி கிடந்து , அழுது கொண்டிருந்தால் போனதெல்லாம் திரும்பியா வரப் போகுது? அங்க பாருங்கோ...பச்சைக் குழந்தையள் அதுகள்...மூண்டும்..அதுகளை கவனிக்காமல் கிடக்கிறியளே...பாவங்களெல்லே அதுகள்...? அவன் பாவி வெளிநாட்டில இருந்து எல்லாரையும் பாக்க வந்து..அங்க பாருங்கோ..ரெண்டு நாளா சாப்பிடாமல் கிடக்கிறான். அவனை எழுப்பி எதுவும் சாப்பிடவாவது குடுங்களேன்.."

கூடத்தில் பக்கத்து வீட்டுக்காரர் பட்டினிச் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை வெளியிலிருந்து வந்த பேச்சுச் சத்தத்தில் தெரிந்தது. சாப்பாடு கொண்டு வந்தவர்கள் யாரோ அம்மாவையும் அக்காவையும் சாப்பிட வைக்க எத்தனிப்பது உணர்வில் விளங்கியது. அக்காவைப் பார்த்தால் பச்சைத் தண்ணி கூட வாயில படாமல் இந்த இரண்டு மூண்டு நாளா கிடக்கிறாள் போல் தெரிந்தது, அக்காவும் பிள்ளையளும் சாப்பிடாமல் அம்மாவும் சாப்பிட்டிருக்க மாட்டா. அவனுக்கே சாப்பிட வேணுமெண்டு உணர்வில்லாமல் இருந்தது என்றால் அக்காவுக்கு எப்பிடி மனம் வரும் சாப்பிட என்று நினைத்துக் கொண்டான் தனக்குள்.

அம்மா தீனமான குரலில் ஏதேதோ சொல்லி அழுவது தெரிகிறது.. அவளுடைய குரலில் தான் எத்தனை பலஹீனம்.. எத்தினை துக்கத்தை தான் அவளும் பார்க்கிறது? ஒரே நாளில் இப்படி பலதரப்பட்ட இடியும், பூகம்பமும், எரிமலையுமாய் பொசுக்கிப் போட்டால் வயதான் அவளால் எதையெண்டு தான் தாங்கிக் கொள்ளுறது? அவனாலேயே முடியேலையே...

"சரி..சரி.. இனி என்ன ஆகப் போகுது உதுகளை கதைச்சு...எல்லாம் விதி...இப்படி ஒரு முடிவு வர வேணுமெண்டு எழுதி வைச்சதை எங்களால மாத்தமுடியாது..விடுங்கோ.. இனி மிஞ்சியிருக்கிற வாழ்கையை வாழ வேண்டாமே...?அதுக்கு தெம்பு வேண்டாமே? ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருக்கப் பாருங்கோ..எழும்புங்கோ முதல்ல...போய் அந்தக் குழந்தையளுக்கும், உவன் பெடியனுக்கும் சாப்பிடக் கொடுங்கோ..நீங்களும் சாப்பிடுங்கோ... இந்தக் குடும்பத்தில இனி எல்லாருக்கும் நீங்கள் தான் ஒரு பிடிப்பா இருக்க வேணும்...எழும்புங்கோ சொல்லுறன்..." அந்த யாரோ ஒருத்தரின் வற்புறுத்தலில் அம்மா எழும்பி இருக்கிறாள். அழுகை மட்டும் நிக்கேலை.

" " ஐயோ...என்ர கண்ணால இந்தக் கொடுமையளை எல்லாம் பாக்க வைச்சிட்டு மகராசனா அவர் போய்ட்டார். இன்னும் என்னென்னத்தையெல்லாம் இந்தப் பாவி பார்க்க வேணும் எண்டு எழுதியிருக்கிறானோ இந்த நாசமாப் போன கடவுள்... நான் யாருக்கு என்ன பாவம் செய்தனான்? இல்லை எண்ட பிள்ளையள் தான் யாரிண்ட வாழ்கையில் மண் அள்ளிப் போட்டதுகள் ? ஏன் இப்படி எங்கட வாழ்கையில கொள்ளி போட்டிட்டான் இந்தக் கடவுள்? " அம்மா அரற்றுவதைக் கேட்கமுடியாமல் காது ரெண்டும் செவிடானால் நல்லது போல் இருந்தது அவனுக்கு,

" என்னக்கா செய்யிறது? உங்களுக்கு மட்டுமா இப்படி விதி? இங்க எங்கட மண்ணில அநேகமா எல்லாருக்கும் இப்பிடித் தானே விதி எழுதி வைச்சிருக்கு ? யாரை நொந்து என்ன பிரியோசனம் சொல்லுங்கோ? இண்டைக்கு உங்களுக்கு நடந்தது போல நாளைக்கு எங்களுக்கும் நடக்கலாம். என்ன செய்ய முடியும் சொல்லுங்கோ பார்ப்பம்? என்ன நடக்கும் எது வரும் எண்டு தெரியாத இருட்டு வாழ்கை தான் தமிழனுக்கெண்டாகிப் போச்சு... விடிவு வாற வரைக்கும் தாங்கிக் கொண்டு வாழ வேண்டியது தான்,.,, வேற வழியில்லை,, "

அம்மா மௌனமாக அழுது கொண்டிருந்தாள்.

மோனை..வசந்தி... எழும்பாச்சி... புருசன் செத்திட்டால் வாழ்கை முடிஞ்சு தெண்டு இடிஞ்சு போயிடாதை ராசாத்தி.. அவன் ஸ்ரீதரன் எத்தினை கனவுகளோடை இந்தக் குஞ்சுகளை வளர்த்தவனெண்டு எங்களை விட உனக்குத் தானே தெரிய வேணும்? அவன் இல்லாத இடத்தில இனி நீதானே பிள்ளை இதுகள் மூண்டுக்கும் அம்மாவாயும் அப்பாவாயும் இருந்து வளக்க வேணும்,,? நீ இப்பிடிக் கிடந்தால் என்னாச்சி நடக்கப் போகுது? போனவன் திரும்பி வரப் போறதுமில்லை; உங்களுக்கு நடந்த அநியாயங்களுக்கு தீர்வு கிடைக்கப் போறதுமில்லை. உங்களை நீங்கள் தான் எழுப்பி நிப்பாட்ட வேணும். இதுகளை சகிச்சுத் தானாக வேண்டும், எழும்பாச்சி.. நீ எழும்பினால் தான் உன்ர கொம்மாவும் சாப்பிடுவா.. பாவம் மனுசி வயசு போன நேரத்தில சாப்பாடும் இல்லாமல் பட்டினி கிடந்தால் அவவுக்கு இருக்கிற வருத்தத்தில ...எப்ப என்ன நடக்குமெண்டு சொல்லேலாது,, இன்னொரு துக்க காரியத்தை இப்போதைக்கு உங்களாலயும் தாங்க முடியாது... அதான் சொல்லுறன்.. எழும்பி உன்ர கொம்மாவுக்கும் பிள்ளையளுக்குமாவது சாப்பிடு... எழும்பாச்சி...


அக்காவுக்கு தேறுதல் சொல்லிய பெண்ணே திரும்பவும் அம்மாவிடம்.

" அவன் பாவி உங்கள் எல்லாரையும் பாக்கவெண்டு இவ்வளவு தூரத்தில இருந்து வந்திருக்கிறான், அவனும் உங்களோட சேந்து பட்டினியா கிடக்கிறான். அவனுக்காண்டியாவது எல்லாரும் எழும்பி சாப்பிடுங்கோ பாப்பம்.. அந்தப் பெடியையும் போய் கூட்டியாங்கோ பவளம் அக்கா... பாவமெல்லே அவன்... உங்களுக்காண்டியும் இந்தக் குடும்பத்துக் காண்டியும் ஒரு கலியாணம் காட்சி யெண்டில்லாமல் ஒடா தேய்ஞ்சு போனவனுக்கு கொஞ்சமாவது நிம்மதி வர வேண்டாமே? நீங்கள் சுதாகரிக்கப் பழகினால் தானே அவனுக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்? அவனும் என்ன செய்வான்,,, இந்தக் குடும்பத்தில யாருக்கெண்டு அவன் அழுகிறது சொல்லுங்னோ பாப்பம்..."

இப்போது அம்மாவின் அழுகையும் அக்காவின் விசும்பலும் இன்னும் அதிகரித்தது. அவர்களைத் தேற்றிய அந்த பக்கத்து வீட்டுப் பெண்மணியும் இவர்களுடன் சேர்ந்து அழுதாள். அவளுடைய கணவரும் வந்திருக்கிறார் போல் இருந்தது. ...அவருடைய குரலும் கேட்டது.. "ம்ம்ம்..இனி நீயும் துடங்கிட்டியே... அழுது கொண்டு கிடக்கிறவைக்கு ஆறுதல் சொல்லி அவையளை எழுப்பி சாப்பிடக் குடுப்பாய் எண்டு உன்னைக் கூட்டிட்டு வந்தால் நீயும் அவையளோட சேர்ந்து அழ தொடங்கிட்டியே..."

"என்னால முடியேலையப்பா. .தாயா பிள்ளையா பழகினதுகளுக்கு இப்பிடி ஒண்டு நடந்திருக்கு..எத்தினை நேரத்துக்கு காட்டிக் கொள்ளாமல் வெறுமையா பொய்யுக்கு ஆறுதல் சொல்ல சொல்லுறியள் என்னை? கண்ணுக்குள்ள நிக்கிறான் ஸ்ரீதரன்... அவன் பிறந்து முப்பத்தொண்டு கழிய முன்னமே தாய செத்துப் போனாள்.. சின்ன வயசில இருந்து என்ர மடிக்கில வளந்தவன்... அவனை பாடைல அனுப்பிட்டு இருக்கிறமே... வயசான எங்களுக்கு வரப்படாதே இந்த சாவு... அவனுக்கா வர வேணும்? உந்தா..உந்தப் பெட்டைக்கும் அவனுக்கும் கலியாணம் நடந்த நாள் இண்டைக்கும் கண்ணுக்குள்ள நிக்குது.. என்ன மாதிரி உந்த நாட்டுப் பிரச்சினைக்குள்ளும் ஊரை வளைச்சுப் போட்டு நடந்த கலியாணம் அது..? ஐயோ அவள் அகலியாவை பாருங்கோ... மான் குட்டி மாதிரியெல்லே துள்ளிக் கொண்டு திரிஞ்சவள்..? ஒருத்தரை பார்த்து ஒரு சுடு சொல் பேச தெரியுமே அவளுக்கு? அவளை இப்பிடியா நான் பாக்க வேணும்? எனக்கே இப்பிடியெண்டா...இந்த மனுசி என்னெண்டு இதுகளையெல்லாம் தாங்கும்..?"

கொஞ்ச நேரம் கூடத்தில் பழய நினைவுகளிலேயே ஒப்பாரி கேட்டுக் கொண்டிருந்தது. யாரோ இதயத்தைப் பிழிஞ்சு உள்ளுக்குள இருக்கிற ஒவ்வொரு சொட்டு இரத்தத்தையும் வடிச்சு எடுக்கிற மாதிரி வலித்தது அவனுக்கு அந்த ஒப்பாரியின் வார்த்தைகள் .சுத்தி சுத்தி அந்த ஒப்பாரி அவனுடைய உழைப்பையும், அவனுடைய வாழ்கையையும் வெறும் சூனியமாக, ஒண்டுக்கும் பிரியோசனமில்லாததாய் உணர்த்திக் கொண்டிருந்தது போல் அவனுக்குத் தோன்றியது..

அழுகையும் , ஒப்பாரியும் அடங்கிய கொஞ்ச நேரத்தில்..அவன் படுத்துக் கிடந்த அறைக் கதவைத் திறந்து யாரோ வரும் அரவம் கேட்டது. யார் என்று பார்க்கும் ஆர்வமில்லாமல் கிடந்தான் இவன். வந்தது அம்மா தான்..

"அப்பு... ராசா.." இந்த வார்த்தைகளுக்காகத் தானே அவன் இத்தனை தூரம் ஓடி வந்தவன்? அம்மாவின் குரலில் அவனுக்குள் அடக்கி வைத்திருந்த கடினமான ஏதோ ஒன்று மெல்ல இளகுவது போல் ஒரு உணர்வு. அவனையறியாமலேயே கண்ணீ காதோரமாய் மெல்ல வழியத் தொடங்கியது.

அம்மா அவனுக்கருகில் குந்தினாள். அவன் அழுவதைப் பார்த்து அவளும் ஓவென்று அழத் தொடங்கினாள். இப்போது தான் அவனுடன் அம்மா மனம் விட்டு அழுகிறாள் என்பது மனதுக்குள் துருத்தியது. அப்பாவின் சாவுக்கும் சேர்த்து தன்னோடு அழுகிறாள் என்பது புரிந்தது. அவனும் உடம்பு குலுங்க வெட்கம் விட்டு அழுதான் சுதந்திரமாக. இத்தனை நேரமும் அவனைக் கட்டியிருந்த ஏதோவொன்று அவிழ்ந்து மனசு லேசாகும் வரை அவன் அழுதான். அம்மாவின் விரல்கள் அவனுடைய தலையை ஆதரவாக வருடிக் கொடுக்க கொடுக்க அவனுடைய நெஞ்சடைத்த துக்கமெல்லாம் வெளியேறிப் போன ஆத்ம திருப்தியில் அவன் குழந்தை போல அழுதான்.

"ஏனம்மா எங்களுக்கு மட்டும் இப்பிடி? அக்காவையும் குடும்பத்தையும் இந்தியாவில போய் இருக்கச் சொல்லலாமெண்டு நினைச்சு வந்தன். தங்கச்சிக்கு கலியாணம் பேசி மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு வந்தன். தம்பியை கனடாவுக்குள்ள எடுப்பிக்க ஏஜன்ஸிக்காரனிட்டை பேசி வைச்சிட்டு வந்தன்...ஆனால் அதுக்குள்ள எல்லாம் தலைகீழா போயிருக்கே...ஏனம்மா? அப்பிடி யாருக்கம்மா நாங்கள் பாவம் செய்தம்? " அவனுடைய கேள்விகளுக்கெல்லாம் அம்மாவிடம் பதில் இல்லை. எல்லாம் விதி என்று சொல்ல அவளுக்கும் பிடிக்கவில்லை.

இந்த மண்ணில் நடக்கும் இந்த நாசங்களும் நீசங்களும், கொலைகளையும், வன்புணர்தலும் சிங்களவன் எழுதின விதி. கடவுள் எழுதியது அல்ல. சிங்கள அரசாங்கம் எழுதின விதியை அவளால் மட்டுமில்லை இந்த மண்ணில் யாராலுமே ஒப்புக் கொள்ள முடியாது.

அம்மா அழுது கொண்டே இருந்தாள். ஏதேதோ சொல்லி அழுதாள்; அரற்றினாள். இருவருக்குமே அந்த அழுகை தேவைப்பட்டது. ஏதோ ஒருவிதத்தில் ஒரு வடிகால் கிடைத்தது போல்...."யார் சொன்னது ஆம்பிள்ளையள் அழக் கூடாது எண்டு?"

மனதில் இருக்கிறதையெல்லாம் அம்மாவிடம் சொல்லி அவனும் அவளைப் போல் வாய் விட்டு குளறி அழுதான்.அழுத களைப்பும் சோர்வும் தீர அம்மாவின் மடியில் படுத்திருந்தான். எவ்வளவோ நிம்மதியாய் இருந்தது. அமெரிக்காவில் வாங்கிப் போட்ட அந்த சிலீப்பி மெத்தை யின் மென்மையில் கிடைக்காத நிம்மதியை அவளுடைய மடி கொடுத்தது... இத்தனை வருடத்தில் அவனுக்கு கிடைக்காத மனச்சாந்தி இப்ப கிடைச்ச மாதிரி இருந்தது. செத்தவீட்டு துக்கமும் , தங்கச்சி சீரழிஞ்ச அதிர்ச்சியையும் கூட கொஞ்சம் அமைதியாக்கின மாதிரி இருந்தது அம்மாவின் மடி. நிம்மதியாக கண்ணிலிருந்து கண்ணீர் கன நேரமாய் வழிந்து கொண்டிருந்தது.. மனதுக்குள் நினைத்துக் கொண்டான் " இன்னொரு தரம் எல்லாத்தையும் சரி செய்வன்"

எல்லாம் சகசமாகி விடுமா என்று ஒரு ஏக்கம் மனதில் இல்லாமல் இல்லை. அக்கா பழையபடி சிரிச்சுக் கதைப்பாளா என்று யோசித்தான். தங்கச்சிக்கு எதிர்காலம் என்று ஒன்று இனி இருக்கா என்று பயந்தான். தம்பியை என்ன செய்யிறது என்று தெரியேலை... எல்லாம் சரியாகி தலை நிமிர இன்னும் எத்தினை காலம் எடுக்குமோ என்று திகிலாக இருந்தது. இந்த மூன்று பிள்ளையளையும் வைச்சு கொண்டு அக்கா எப்பிடி வளர்க்கப் போறாள்? எப்பிடி இந்த நாட்டில வாழப் போறாள் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது. இந்த மண்ணில் இனியும் இவர்கள் இருந்தால் இன்னும் என்னென்ன இழப்புகளை அவன் சந்திக்க வேண்டி வருமோ என்று நினைச்சுப் பாக்க அவனுக்கு நெஞ்சு வலித்தது. இன்னொரு இழப்பை அவனால் தாங்க முடியாது.


{நன்றி : ஓவியம்,.tamilnation.org/art/struggle/tro.htm}

Swathi Swamy

unread,
Apr 29, 2009, 5:53:37 PM4/29/09
to தமிழ் பிரவாகம், முத்தமிழ், தமிழ் அமுதம், உலகத்தமிழ், eelatami...@googlegroups.com, elanth...@googlegroups.com
இது வரை வந்தது:
கோணங்கள்
(குறு நாவல்)
"நேற்று அயலட்டை எல்லாம் வீடு வீடா சோதனை போட்டுக் கொண்டு வந்தாங்கள்.. வீட்டில உம்மட அத்தானும், தங்கச்சியும், தம்பியும் இருந்தவை. வந்தவங்கள் தங்கச்சியை சீரழிச்சுப் போட்டாங்கள். தடுக்கப் போன தம்பியை அடிச்சு வளர்த்திப் போட்டு அத்தானை சுட்டுப் போட்டு போய்ட்டாங்கள்.." அந்தப் பெண் சொல்லிக் கொண்டு போனது எதுவும் காதில் விழவில்லை தங்கச்சியை சீரழிச்சுப் போட்டாங்கள் என்று கேட்ட பின்..... கருகிப் போன குருத்தோலை மாதிரி கிடந்த தங்கச்சியையும், சவத்துக்கும் அவனுக்கும் மூச்சு ஒன்று வித்தியாசம் காட்ட கிடந்த தம்பியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றான் அவன்.

Swathi Swamy

unread,
Apr 29, 2009, 5:58:37 PM4/29/09
to தமிழ் பிரவாகம், முத்தமிழ், தமிழ் அமுதம், உலகத்தமிழ், eelatami...@googlegroups.com, elanth...@googlegroups.com

மன்னிக்கவும் சென்ற மடலில் முழுவதுமாக அனுப்ப முடியவில்லை. அதனால் இரண்டாம் பாகத்தை தனியாகத் தந்திருக்கிறேன்.


அன்புடன்
சுவாதி
:

Swathi Swamy

unread,
Apr 29, 2009, 6:21:31 PM4/29/09
to தமிழ் பிரவாகம், முத்தமிழ், தமிழ் அமுதம், உலகத்தமிழ், eelatami...@googlegroups.com, elanth...@googlegroups.com
கோணங்கள்
(குறு நாவல்)


3

இந்த ரெண்டு நாளாகத் தான் அக்கா எழும்பி நடமாடுகிறாள். ஆனாலும் அவனால் அவளின் முகத்தை சரியாக நிமிர்ந்து பார்க்கும் திராணி இருக்கவில்லை. பார்த்தால் எங்கே தான் மறுபடியும் உடைந்து போய்விடுவேனோ என்ற உணர்வில் அவன் அமுங்கிப் போய் அக்காவை தவிர்த்தான். பொழுதுகளின் முக்கால்வாசி நேரமும் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். வெளியில் எங்கும் போகப் பிடிக்கவில்லை என்பதை விட போக பயமாய் இருந்தது என்பது தான் சரி. எங்க எங்க நிண்டு சுடுவாங்களோ எண்ட பயம்.

இந்த ஊரும் புதுசு அவனுக்கு. தின்னவேலி என்றால் பரவாயில்லை.. தெரிஞ்ச இடம்.. கொஞ்சம் வெளில மன ஆறுதலுக்காவது போய் காலாற நடந்து வரலாம். ஆனால் இப்பத்தைய நிலமையில் அங்க இதைவிட மோசமாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். மனதுக்குள் புழுங்கிப் போனவனுக்கு வெளியில் காற்று வாங்கி என்னவாகப் போகிறது என்றிருந்தது.

அப்போது தான் மத்தியானச் சாப்பாடு என்ற பெயரில் சாப்பாட்டைக் கிளறிவிட்டு வந்திருந்தான். முன்பக்க விறாந்தையில் ஒரு பெரிய பழைய கால பிரம்புச் சாய்வு நாற்காலி இருந்தது. அவனுடைய அப்போதைய மன ஆறுதலுக்கும், உடல் சோர்வுக்கும் அந்த சாய்வு நாற்காலி தேவைப்பட்டது. அதில் சாய்ந்து கண்ணைம் மூடிக் கொண்டிருந்தால் மனது மட்டும் ஒரு நிலையில் இல்லாமல் பத்தையும் பலதையும் யோசித்துக் கொண்டிருந்தது.

திடீரென்று சர சர வென்ற காலடி ஓசையில் சட்டென்று கண்விழித்துக் கொண்டான். ஒரு பெண் படபட வென வீட்டிற்குள் நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் மௌனமாக "வாங்கோ" என்று தலையை ஆட்டி வரவேற்றார் பக்கத்து வீட்டுப் பெண்மணி.. அந்த பெண்மணியும் அவரது குடும்பத்தினரும் தான் ஒட்டுறவாய் ஒத்தாசையாய் இத்தனை நாளும் கூடப் பிறந்த சகோதரங்கள் மாதிரி உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.

வந்த இளம் பெண் " அகல்யா எங்க?" என்று கேட்டுக் கொண்டு வந்தாள். அவளுடைய குரலில் ஏதோ இனம் தெரியாத அதிர்வு அவனை கட்டிப் போட்டது போல் இருந்தது. ஊதிவிட்டால் விழுந்துவிடும் தோரணையில் மெல்லிய அந்த தேகத்தில் அவளுடைய குரலின் கம்பீரம் பொருத்தமில்லாமல் இருந்தாலும் எதிராளியை பணிய வைக்கும் தோரணை தெரிந்தது. வெயிலில் கறுத்து போன தோட்டத்து வேலையில் இருக்கும் பெண்களைப் போல் அவளுடைய நிறம். இறுக்கிப் பின்னின தலைமுடியை மடித்துக் கட்டியிருந்தாள். ஒரு கணம் அவனைத் திரும்பிப் பார்த்த அவளுடைய பார்வையில் தெரிந்த தீட்சண்யம் அவனை என்னவோ செய்தது.

"எந்த அறைக்கில கிடக்கிறாள்?" திரும்பவும் அந்த அயல்வீட்டுப் பெண்ணிடம் அகல்யாவைப் பற்றிக் கேட்டாள்.

அந்தப் பெண்மணி தங்கச்சி முடங்கிக் கிடந்த அறையைச் சுட்டிக் காட்ட பட பட வென்று உள்ளே போன அந்த யுவதி திரும்பி 'வெளில அடுப்பு மூட்டினபடி கிடக்கே?" என்று கேட்க அந்த அயல்வீட்டும் பெண்மணி "ஓம்" என்றாள்.

" அப்ப கிடாரத்தில கொஞ்சம் தண்ணியை கொதிக்க வையுங்கோ. வாரன்" என்று கட்டளை போட்டுவிட்டு திரும்பி அகல்யா இருந்த அறைக்குள் போனாள்.

"யாரிது? என்று கேட்டான் இவன்.

"இது.. போராளி கமலினி. உங்கட குடும்பத்துக்கு தெரிஞ்ச பிள்ளை"

"இங்க ஏன் வந்திருக்கிறா?"

"அகல்யாவிண்ட நிலமையைக் கேள்விப்பட்டிருக்கிறா போல..அதான் வந்திருக்கிறா பாக்க.."

அவனுக்குள் சொல்ல முடியாத ஆத்திரம் வந்தது.

"இவளவையோட என்ன தொடர்பு எங்கட வீட்டாக்களுக்கு? அதால தான் ஆமிக்காரன் இங்க வந்து நாசம் செய்திட்டு போனவனே?"

"அப்பிடி இல்லை தம்பி... இவையோட தொடர்பு இருந்தாலும் சரி இல்லையெண்டாலும் சரி இங்க அவங்கள் எந்த நேரத்திலயும் யாரிண்ட வீட்டுக்குள்ளயும் புகுந்து அட்டகாசம் செய்வாங்கள்..

"என்ன கதைக்கிறியள்..? இப்பவே இவ்வளவு நாசம் நடத்தியிருக்கிறவங்கள்... இந்த வீட்டுக்கு போராளியள் வந்து போகினமெண்டால் சும்மா விடுவாங்களே?" என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

அந்தப் பெண் மௌனமாக நின்றாள்.

"உந்தப் பெடியனுக்கு சொல்லி விளங்கப்படுத்தவேலாது" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

அவனுடைய தரப்பின் முக்கியத்துவம் நாட்டை விட தன் குடும்பத்துக்கு மட்டுமே. நாட்டு விடுதலைக்காக போராளிகள் உயிரிழப்பது போரின் சகசமான விசயம். ஆனால் பொதுமக்கள் ஏன் சாக வேணும் என்பது தான் அவனுடைய வாதம். பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத பட்சத்தில் போர் தேவையா என்பது அவனுடைய கேள்வி... இத்தனையையும் விட மேலான காரணங்கள் மறு தரப்பில் இருந்தாலும் அதையெல்லாம் அவன் தன்னுடைய சொந்த இழப்புகளுக்கு ஈடாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அப்படியொரு மனநிலையிலும், போராட்டத்தைப் பற்றிய புரிதலோ, பக்குவமோ, இழப்புகளை சகிக்கும் வல்லமையோ இல்லாத , மனதளவில் வெகு பலஹீனமான பெரும்பான்மையான மக்களில் ஒருவனான அவனால் ஒரு போராளி தன் வீட்டுக்குள் சர்வ சாதாரணமாய் நடந்து போவதை ஜீரணிக்க முடியவில்லை. போராளிகளை விட அவன் இராணுவத்தினருக்கே பயந்தான். போராளிகளுக்கு ஆதரவாய் இருந்தால் நாம் அழிக்கப்பட்டுவிடுவோம் என்ற உணர்தல் மட்டுமே மூளையில் துருத்திக் கொண்டு நின்றது. சடாரென்று எழுந்து ஆவேசமாக உள்ளே போராளி கமலினியை தொடர்ந்தான்.

அவன் அவளை அணுகுவதற்குள் கமலினி அகல்யா இருந்த அறைக்குள் நுழைந்திருந்தாள். அவனுக்கு உள்ளே போக மனமில்லாமல் தயங்கி வெளியேயே நின்றிருந்தான். எப்படி வசந்தியின் முகத்தை விதவை என்ற நினைவுடன் ஏறிட்டுப் பார்க்க முடியவில்லையோ அதே போல் கற்பழிக்கப்பட்ட தங்கச்சி அகல்யாவையும் அவனால் நேரிடையாக பார்க்க முடியவில்லை,
அகல்யா அம்மாவின் வயிற்றிலிருக்கும் போதே அவன் வெளிநாடு போய்விட்டான். தங்கையின் முகத்தைப் பார்க்காமலேயே தங்கையைப் படத்திலேயே ஒவ்வொரு பருவத்திலும் பார்த்து பார்த்து வந்திருந்தான். அவளுடைய பிறந்தநாள்களுக்கெல்லாம் அவளுக்கு பணம் பிறம்பாக அனுப்பி வைப்பான். அவளுடைய சாமத்திய வீட்டை அந்த அயலிலேயே பெரிசா செய்வித்தான். வீடியோ, படம் என்று தடல் புடலாக எடுப்பிச்சான். தங்கச்சியை விதம் விதமா அரை தாவணி, முழுச் சீலை, சுடிதார் என்று அலங்கரிச்சு படம் எடுத்து அனுப்பியிருந்தாள் அம்மா.
அப்படி மனதுக்குள் தன்னுடைய குழந்தையாகவே வளர்ந்த பெண்ணை- தன்ர தங்கச்சியை அவனால் கற்பிழந்த பெண்ணாய் முகம் எடுதுப் பார்க்க முடியவில்லை. அவள் ஒரு பாவமும் செய்யாதவள். அவளுக்கு ஏன் இந்த நிலை வர வேணும் என்று நினைத்து நினைத்துப் புளுங்கிப் போயிருந்த அவனுக்கு அறைக்குள் சட்டென்று நுழைந்துவிட மனம் வரவில்லை. தங்கச்சின்ர முகத்தை எப்பிடி பாக்கிறது ?" என்ற வேதனையுடன் கதவருகிலேயே தயங்கி போய் நின்றான்.

"அகல்யா...ஏய் அகல்யா! எழும்படி...எழும்பு பார்ப்பம்..." உள்ளே கமலினி சருகு போல் கருகி கசங்கிக் கிடந்த அகல்யாவை அதட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள்.

"என்னது ..இவள் இப்பிடி அதட்டுறாள்? அவள் கிடக்கிற கிடையைப் பார்த்து ஒரு கரிசனமோ பரிதாபமோ இல்லாமல் ஏன் இப்படி சத்தம் போடுறாள்?" என்று மனதுக்குள் எரிச்சலாக இருந்தது வெளியில் நின்ற அவனுக்கு.

"அகல்யா ..எழும்படி...நான் கமலினி வந்திருக்கிறன்...எழும்பு..இஞ்சை பார்..என்னைப் பார் ஒருக்கா.. எழும்படியப்பா...எத்தினை நாளைக்கு இப்படியே கிடக்கப் போறாய்..எழும்பியிரு..."

வெளியில் நின்ற அவனுக்கு கமலினி மீது ஏனோ கோபம் கோபமாய் வந்தது. தங்கச்சியின் இழப்பும் , நோவும், வருத்தமும் இவளுக்கு தெரியேலையா? என்ன பொம்பிளை இவள்? வாறவை போறவை எல்லாம் தங்கச்சியைப் பார்த்து கவலைப்பட்டுக் கொண்டு போகினம்...இவள் என்னடாவெண்டால்.... என்று நினைத்துக் கொண்டான். உள்ளே தங்கையின் விசும்பல் ஒலி துல்லியமாகக் கேட்ட போது மனதைப் பிசைந்தது இவனுக்கு.

உள்ளே அறையில் கமலினி அகல்யாவை கைத் தாங்கலாய் எழும்பி உட்கார வைத்தாள். அகல்யாவின் துறு துறுப்பெல்லாம் அறிந்தவள் கமலினி. முந்தி தின்னவேலியில பக்கத்து பக்கத்து வீட்டில இருந்தபோது அவளோடு வளர்ந்த சிநேகம் கமலினியோடது. அகல்யா நல்ல அழகு. துரு துருவென்ற கண்ணும், துடியாட்டமுமாய் எப்பவும் வண்டு மாதிரி சுழண்டு கொண்டு தானிருப்பாள்.அவளை இப்ப இந்தக் கோலத்தில் பாக்க கமலினியால் பொறுக்கமுடியவில்லை.
அநியாயமாய் ஒரு அழகான பூவை கசக்கி போட்ட காட்டுமிராண்டிகளை கண்ட துண்டமாய் வெட்டி காக்கைக்கும் நரியளுக்கும் போட வேணும் போல் கமலினிக்குள் ஒரு வெறி ஏறிக் கொண்டிருந்தது. ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாத இறுகிய முகமும் மனமுமாய் போயிருந்தது அவளுடைய சுபாவம்..

அவளுக்கு இப்போதெல்லாம் அழுகையே வருவதில்லை. அவள் அனுபவிச்ச வேதனைகளாலும், இழப்புகளாலும் கண்ணீர் வற்றிப்போய் மனம் பாலைவனமாகி வரண்டு போய்ட்டுது. கமலினி ஒரு தனி தீவு மாதிரி.அவளுடைய குடும்பமே இந்திய அமைதிப்படையினரால் அழிந்த போது, அவள் கற்பழிக்கப்பட்ட போது அவளுக்கு வெறும் பத்து வயது தான் . கெடுக்கப்பட்டது தெரியாமல் தன்னை ஆமிக்காரன் என்னவோ கொடுமை செய்யிறான் என்று நினைச்சு துடிச்சுக் கொண்டு கிடந்த அந்த நாள் இண்டை வரைக்கும் அச்சுப் பிசகாத கொடூரமான உணர்வாய் மிஞ்சிக்கிடக்கிறது.. அந்தப் பயமும், இயலாமையும் இப்ப கோபமாயும், வெறியாயும் மாறியிருந்ததே தவிர அந்த சம்பவத்தின் தாக்கம் கடுகளவு கூட குறையாமல் இன்று வரை இருக்கிறது.

அனாதையாய் அவள் நின்ற நேரத்தில் அகல்யாவின் அப்பா தான் அவளைக் காப்பாற்றி தன் குடும்பத்தாரோடு இங்க சாவச்சேரிக்கு அனுப்பி வைச்சவர். இவர்களோடேயே அவள் இருந்து வந்தாலும் அவளால் அவள் பட்ட கஷ்டங்களை, இழப்புகளை , வலிகளை மறக்க முடியாமல் ஒரு நாள் இரவு கிளம்பிப் போனவள் தான்... அப்பப்ப வருவாள் ..அவளுக்கென்று இவையளை விட்டால் யார் இருக்கினம். இப்ப அவையளுக்கே இவளுடைய ஆறுதல் தேவைப்பட்டிருக்கிற சந்தர்ப்ப சூழ்நிலையாப் போட்டுது. ஆனால் இதெல்லாம் வெளிநாட்டில் இருந்து வந்த இவனுக்கு என்ன தெரியும் பாவம்...

கமலினிக்கும் இதே கொடுமை தான் நடந்துது. ஆனால் அவள் அப்ப சின்னப்பிள்ளை. வயசுக்குக் கூட வரேலை. ஆனால் வலியும் வேதனையும் இருந்தது. எல்லாரும் குடும்பத்தில செத்துப் போட்டினமே... எனக்கு மட்டும் ஏன் சா வரேலை? ஏன் அவங்கள் என்னையும் என்ர குடும்பத்தோட சேர்த்து சுட்டுப்போட்டுப் போயிருக்கலாமே என்று பலநாள் நினைத்து நினைத்து அழுதிருக்கிறாள் அந்த நேரங்களில்.

அம்மாவும் அப்பாவும் இல்லாமல் தான் அனாதையாய் பக்கத்துவீட்டுக்காரரோடு இருக்கிறமே என்று நினைத்து நினைத்து வெதும்பியிருக்கிறாள். செத்தவீடு செய்யமுடியாமல் ரெண்டு சாக்குக்குள்ளே அப்பாவையும் அம்மாவையும் திணிச்சு, சின்னத் தம்பியையும் அம்மாவின்ர சாக்குக்குள்ளேயே போட்டுக் கொண்டு போனதை இன்னும் அவளால் மறக்க முடியவில்லை. எங்க கொண்டு போய் எரிச்சினம் , எப்பிடி எரிச்சினம் என்று அவள் கேட்கேலை. கேட்க விரும்பேலை.

எத்தினையோ நாள் அந்த சாக்கு மூட்டையள் கனவில வர, கத்திக் கொண்டும் பினாத்திக் கொண்டும் அழுதிருக்கிறாள். அதன் பின் ஒரு ஆறு வருசம் இப்பிடியே அகல்யாவின் குடும்பத்தோடு இருந்து ஒரு நாள் திடீரென்று காணாமல் போனாள். போராளியாய் இரண்டு கள யுத்தம் கண்டுவிட்டாள். அவள் கையால் ஒவ்வொரு இராணுவத்தினனும் சாகும் போது சொல்லிக் கொள்வாள் "இது என்னை நீங்கள் உயிரோட விட்டிட்டுப் போன முட்டாள்தனத்திற்காகவும் இன்னொரு கமலினி உருவாகாமல் இருக்கவும்" என்று. ஆனால் நாட்டில் கமலினிகள் நிறையப் பேர் உருவாகிக் கொண்டு தானிருந்தார்கள்.

இப்ப அகல்யாவும் கிட்டத் தட்ட அவளைப் போலவே .... கற்பையும் இழந்து..அதுவும் கல்யாணம் கட்டுற ஆசையளும் கனவுகளுமாய் இருந்த நேரத்தில இப்பிடி நாயள் வந்து மேய்ஞ்சு போட்டு போயிருக்குதுகளே..இனி இவளை எப்படி ஆறுதல் படுத்த முடியும் என்று உள்ளுக்குள் மலைப்பாய் இருந்தது கமலினிக்கு.. ஆனால் அகல்யாவை எப்படியாவது தேற்றி, ஆசுவாசப்படுத்த வேண்டும். இப்படியே அவளை துவண்டு போக விட்டால் அவள் நாளைக்கு ஒண்டு கிடக்க ஒண்டு செய்து போடுவாள் என்று கமலினி நிச்சயமாய் நம்பினாள்.

"என்னடி அழுது கொண்டிருக்கிறாய். .சீ...நிப்பாட்டு இந்த அழுகையை...எதுக்கு நீ அழ வேணும்...? இப்ப என்ன நடந்திட்டுது எண்டு அழுகிறாய்? "

ஒரு இக்கட்டான சூழலில் மனதால் காயப்பட்டு துவண்டு போயிருக்கும் ஒருவரை ஆறுதல் சொல்லி, புத்தி மதி சொல்லி தேற்றுபவர்களும் இருக்கிறார்கள். சிலர் திட்டியோ அல்லது திசை திருப்பியோ துயரப்பட்ட்வர்களின் கவனத்தை திசை திருப்புபவர்களும் இருக்கிறார்கள். கமலினியைப் பொறுத்தவரை அவள் இரண்டாவது ரகம் தான். ஆனால் அவனோ வெளியில் ஆவேசமானான்.

"இன்னும் என்ன இருக்காம் இவளுக்கு நடக்கிறதுக்கு?யாரிவள்...என்ர தங்கச்சியை வந்து உலுப்பிக் கொண்டிருக்கிறாள்..அவளை நிம்மதியா இருக்கவிடாமல் ...."

இவனுடைய ஆவேசத்தை அதிகமாக்குவது போல் கமலினி உரத்த சத்தத்தில் அகல்யாவை ஏசிக்கொண்டிருந்தாள்

"ஏய் அகல்யா....எதுக்கடி இப்ப அழுகிறாய்? என்ன நடந்திட்டுது எண்டு அழுகிறாய்? நீ இப்படியே வாழ்நாள் பூரா அழுதுகொண்டே இருக்கப் போறாய்? "

"ஏனடி நான் இன்னும் சாகாமல் இருக்கிறன்?"

"எதுக்கடி நீ சாக வேணும். உன்னைச் சீரழிச்சவன்களை தான் சாகடிக்க வேணும். தமிழச்சியளில கை வைச்சால் உயிரோட இருக்கேலாது எண்டு தெரிய வேணும் அவங்களுக்கு.. அதை விட்டிட்டு சாக வேணும் எண்டு சொல்லுறியே.. வெட்காயில்லை உனக்கு?"

"அவங்களை சாகடிக்கிறதால நான் இழந்தது எனக்கு திருப்ப வரவா போகுது...? என்ர வாழ்கையே நாசமாப் போச்சே..."

"சீ..வாயை மூடு... எதடி வாழ்கை? உன்ர மூத்திர வாசலில இருக்கிற கன்னித் திரையா வாழ்கை? ஏண்டி முட்டாளா நீ? வம்பில பிறந்த நாயள் ஏதோ வீரத்தனம் காட்டினமாதிரி பொம்பிளையளிட்ட தங்கட கைவரிசையை காட்டிட்டு போய்ட்டான்கள் எண்டதுக்காக கால காலத்துக்கும் அழுது கொண்டு இந்த இருட்டு மூலைக்கிள கிடந்து அழுது கண்ணீர் வடிச்சுக் கொண்டிருக்கப் போறீயே...அதுக்கா பிறந்தனீ...? எழும்பி உடம்பு நோ போக நல்ல சுடு தண்ணில ஒட்டின சகதியை கழுவுற மாதிரி கழுவிட்டு தலைக்கு குளிச்சிட்டு வா. அந்தக் குளியலோட அண்டைக்கு நடந்த கசடும் கழுவுப்பட்டுட்டுது எண்டு நாளையில இருந்து புதுசா வாழப் பழகு....எழும்பி இரு.."

வெளியில் நின்ற அவனுக்கு கொஞ்சம் திகைப்பாய் இருந்தது. இந்த பொம்பிளையள் இப்ப எப்பிடியெல்லாம் யோசிக்குதுகள்? எத்தனை சாதாரணமா எடுக்கச் சொல்லுறாள் இவள்...ஊத்தையை கழுவிப் போடுற மாதிரி நடந்த கொடூரத்தை தலை முழுகலோட மறக்கச் சொல்லுறாளே...இது சாத்தியமாகுமா? அவளுக்கென்ன ...நல்ல வசனமா சொல்லிட்டுப் போவாள்..எல்லாம் அவளவைக்கு வந்திருந்தால் தெரியும்...

பொறுக்க முடியாமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போக திரும்பி அவனை முறைத்தாள் கமலினி... நாங்கள் கதைச்சுக் கொண்டிருக்கிறது கண்ணுக்கு தெரியேலையோ எண்ட மாதிரி இருந்தது அவளுடைய பார்வை. அவன் உள்ளே போன போது கமலினியின் தாங்கலில் எழும்ப முயன்று கொண்டிருந்தாள் அகல்யா. அவளால் முடியவில்லை. தொடைகள் இரண்டிலும் பயங்கர வலி. இடுப்புக்கு கீழே பச்சை இறைச்சியாய் வலித்தது... கால்கள் இரண்டும் மரத்துப் போனது போல் அவளால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை. ஆனால் கமலினி அவளை எழுப்பி நிற்க வைக்க பிரயத்தனப்பட்டது அவனுக்குப் பிடிக்கவில்லை.

"ஏன் அவளை கரைச்சல் குடுக்கிறியள்... வந்தால் பார்த்திட்டு போறது தானே?" என்றான் வெறுப்பாக...

"அதைச் சொல்ல நீர் ஆர்?" நெருப்புத் துண்டங்களாய் வார்த்தைகள் அவனை நோக்கி வர அவனுக்கு சினமெடுத்தது.

"நான் அவளிண்ட கூடப் பிறந்த அண்ணன்"

அகல்யாவைப் பார்த்து அவளுக்கு நடந்த கொடுமையைப் பார்த்து இருவருமே கொதித்துப் போயிருந்தனர்; இருவருக்குமே எதுவும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையின் உச்சக்கட்ட கோபமும் வெறுப்பும் மண்டிய மனப்பான்மையிலிருந்தனர். இருவருமே வெவேறு கோணங்களில் அகல்யாவுக்காக மனதார கஷ்டப்பட்டார்கள். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் மனப்பான்மையில் இருக்கவில்லை.

"ஓ..நீர் தானே வெளிநாட்டில இருந்து வந்த அண்ணன்...?" அவளுடைய ஏளனம் இன்னும் அவனுக்குள் சினத்தை மூட்டியது. வெளிநாடு என்றால் என்ன ஏளனம் இவளுக்கு?

"சரி இப்ப என்னத்துக்கு இங்க வந்து கத்துறீர்.....நான் இப்ப என்ன அவளுக்குக் கரைச்சல் குடுத்தன் எண்டு இங்க வந்து நிக்கிறீர்? இல்லை தெரியாமல் கேட்கிறன்... அவளை சீரழிச்சுப் போட்டிட்டுப் போய் ஒரு கிழமையாகப் போகுது ..ஒருத்தருக்கு தன்னும் அவளை எழுப்பிக் கிழுப்பி இருத்தி வைப்பம் எண்டு எண்ணமில்லை...சரி செத்தவீட்டுக் கவலையில அம்மாவும் அக்காவும் இருப்பினம் எண்டால் இந்த வீட்டில இத்தினை பேர் சொந்தக்காரர் எண்டும் அயலட்டையெண்டும் வந்து நிக்கினம் போகினம்..அதில ஒரு பொம்பிளையளுக்கும் இவளுக்கு ஏதாவது செய்ய வேணுமெண்டு தெரியேலையே.. ஆ.?? எல்லாரையும் போல என்னையும் இவளை வந்து எட்டி விடுப்புப் பார்த்திட்டு உச்சுக் கொட்டிட்டுப் போகச் சொல்லுறீரே...?அப்பிடியெல்லாம் போறதுக்கு நான் ஒண்டும் மனச்சாட்சி இல்லாதவளில்லை....இஞ்சை என்ன அவளை வைச்சு பொருட்காட்சியே நடத்துறீங்கள் ? வந்து பார்த்திட்டு போ எண்டுறீர்"

கமலினியின் வார்த்தைகளில் நொருங்கிப் போனவனாய் அவன் அகல்யாவைப் பார்த்தான். அவனுக்கு அங்கு அனுப்பி வைத்த அவளுடைய படங்களில் அவன் பார்த்த தங்கச்சிக்கும் இப்ப இங்க இருக்கிற தங்கச்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எண்ட மாதிரி ..வாடிப் போய் இருந்தாள் .. என்ன மாதிரி பௌர்ணமி நிலவாய் பளீரென்று பிரகாசமாய் சிரிச்சபடி படங்களில இருந்தவள்..இப்ப என்னமாதிரி ..முகமெல்லாம் கண்டி கருத்துப் போய் .. அறுவான்கள் அடிச்சிருப்பாங்களோ இவளை...கண்ணுக்கடியிலும் முகவாய்கட்டையிலும் வீங்கி கருப்பா ரத்தம் கண்டிபோயிருந்தது. என்ன மாதிரியெல்லாம் துடிச்சாளோ என்று நினைத்துப் பார்த்து அனுமானிக்க முடியாமல் , அனுமானிக்க விரும்பாமல் தலையைச் சிலுப்பிக் கொண்டான்.

ஒரு வகையில் கமலினி சொல்வதும் சரி தான் என்று தோன்றியது. இத்தினை நாளும் வாறவை போறவை எல்லாம் வந்து அறைக்குள் இவளை எட்டி எட்டிப் பார்த்திட்டு ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டு தான் போயினம். அகல்யாவுக்கு முன்னாலேயே "இனி என்ன செய்யிறது அவளின்ர விதி இது தான் எண்டாகிப் போச்சு...யாரால என்ன செய்ய முடியும்..என்ன பாவம் செய்து பிறந்தவளோ இவள்?" எண்ட மாதிரி கதையள். சிலர் உண்மையாவே கவலைப்பட்டாலும் இந்த மாதிரி வார்த்தைகளில் நொருங்கிப் போவது என்னவோ அகல்யாவும், அம்மாவும் தானே....?

"மனச்சாட்சியும் மண்ணாங் கட்டியும்.. ஏன் இந்த நிலை எங்களுக்கு வர வேணும்...கண்டறியாத போராட்ட மெண்டு நீங்கள் ஆடுறதால தானே சும்மா இருக்கிற நாங்களெல்லாம் அநியாயமாய் செத்துக் கொண்டிருக்கிறோம்." அடக்கி வைத்திருந்த அவனுடைய முழு ஆத்திரத்தையும் கொட்டிவிட கமலினி வாகாக மாட்டிக்கொண்டாள். ஆனால் அவனுக்கு கமலினியின் குணம் தெரியாமல் வாயைக் கொடுத்துவிட்டான் என்று அந்தக் கஷ்டமான மனநிலை யிலும் அகல்யா நினைத்துக் கொண்டாள்.

"கதைக்கிறதை கொஞ்சம் யோசிச்சுக் கதையுங்கோ.. ஏதோ செத்தவீட்டுக் கவலையிலயும், இவள் அகல்யாவாலயும் கவலைல இருக்கிறியள் எண்டதால தான் உங்கட கதைக்கு நான் ஏதும் சொல்லி வார்த்தை வளக்க விரும்பேலை... ஆனால் ஒண்டு..எங்கட போராட்டத்தைப் பற்றி குற்றம் சொல்லவோ விமர்சனம் செய்யவோ வெளிநாட்டுக்காரருக்கும் சரி , வெளிநாட்டில இருந்து கொண்டு இங்க விடுப்புப் பாக்கிற எங்கட ஆட்களுக்கும் சரி எந்த உரிமையும் இல்லை கண்டியளோ?" முகத்திலடித்தாற் போல் வார்த்தைகளால் விளாசின அந்த மெல்லிய பெண்ணை ஒரு கணம் வாயடைத்துப் போய் பார்த்தான்.

"உரிமையில்லையோ...ஏன் உரிமையில்லை... இந்தப் போராட்டத்தில எந்த சம்மந்தமுமில்லாத என்ர குடும்பத்தில அப்பாவை சாககொடுத்தாச்சு; என்ர அக்காவை விதவையாக்கியாயாச்சு; என்ர தம்பியை அடிச்சு முடமாக்கி யாயாச்சு..;என்ர தங்கச்சியை.... என்ர தங்கச்சியை ..உயிரோடையே சாக்காட்டியாச்சு...இத்தனை இழப்பும் எங்களுக்கேன் வர வேணும்? இதுக்கு மேலே என்ன உரிமை வேணும் கதைக்க...? எனக்கு கேக்க உரிமையிருக்கு. நிண்டு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உங்கட ஆட்களுக்கு இருக்கு.. "

"அதே கட்டாயம் உங்கட குடும்பத்தை சீரழிச்ச சிங்களவனுக்கும் இருக்கு தானே? ஏன் இதே ஆவேசத்தை உங்களால சிங்கள இராணுவத்திட்ட காட்ட முடியேலை? ஒரு சிங்கள இராணுவ வீரனை வழி மறிச்சு கேள்வி கேளுக்கோவன் ஆம்பிள்ளயள் எண்டால்.. அவனிட்ட கேட்க முடியாததை என்ன தைரியத்தில எங்களைப் பாத்துக் கேட்கிறியள்? அவங்களைப் போல நாங்களும் ஆயுதங்களோட தானே திரியிறம்.. ஆனால் உங்களால பயமில்லாமல் எங்களை கேள்வி கேட்க முடியுது...தானே? எப்பிடி? ஏன் எண்டால் நாங்கள் தேவையில்லாமல் எந்த உயிரிலையும் கை வைக்க மாட்டம் எண்டு உங்களுக்கு தெரியும். அந்த தைரியம் .. நாங்கள் களத்தில மட்டும் தான் ஆயுதத்தில கை வைப்பமெண்ட நிதர்சனம் உங்களிட்ட இருக்கு. கேள்வி கேட்கிறவைக்கு நியாயமான பதில் சொல்ல எங்களால முடியும் எண்ட தைரியம் எங்களிட்டை இருக்கு.. அவங்களிட்ட கேள்வி கேட்டால் அவன் உங்களோட கதைக்கமாட்டான். அவனிட்ட துவக்கு கதைக்கும். அடியும் உதையும் வாங்கி முடமாகி வருவியள் அல்லது பிணமாகப் போவீயள்...அந்தப் பயம் தான் உங்களால அவங்களிட்ட போய் நியாயம் கேட்க முடியேலை. .எங்களிட்டை காட்டுறியளோ உங்கட இயலாமையை?"

“உதென்ன நினைப்பு உங்கட இழப்புகளை நாங்கள் என்னமோ அக்கறைப்படாத மாதிரியும், அலட்சியப்படுத்திற மாதிரியும் ?. ஒவ்வொரு மரணிப்பும், இழப்பும் எத்தினை பெரிய கொடுரமெண்டது எங்களை விட வேற யாருக்கும் தெரிஞ்சிருக்க நியாயமில்லை. இழப்பும், மரணிப்பும் உங்கட குடும்பத்தில மட்டும் தான் எண்டில்லை... ஈழத்தில இருக்கிற ஒவ்வொரு தமிழ் குடும்பமும் ஏதோ ஒரு வகையில பாதிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கு. ஏன் இந்த பாதிப்பு நடக்குது எண்டு நினைக்கிறியளே தவிர இந்த பாதிப்பு ஏன் நடக்க துவங்கினது எண்ட ஆரம்பத்தை மறந்திட்டியள்."

"நான் ஏன் அதையெல்லாம் யோசிக்க வேணும். ? என்ர குடும்பத்தைப் பற்றி தான் எனக்கு கவலை,"

“'உங்கட குடும்பம் மட்டும் தான் ஈழத்தில இருக்கிற குடும்பம் எண்டில்லை. இங்க இருக்கிற ஒவ்வொரு ஈழத் தமிழனும் அவனிட்டை வருங்கால சந்ததியும் தனக்கெண்ட ஒரு சொந்த பூமியில வாழ வேணும். இன்னொரு வனிண்ட இரவல் நிலத்தில அகதியா புகலிடம் தேடி ஓடுறதுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேணும். அதுக்காக நடக்கிற போராட்டம் இது. இதைப்பத்தி காசு சேக்கிற ஒரே ஒரு நோக்கத்தில வெளிநாடு போய் இங்க நடக்கிற போரை சாக்கா வைச்சு அதில பாதிக்கப்பட்டனான் என்று கதை சொல்லி அகதி எண்டு முத்திரை குத்தி வெளிநாட்டுக்காரனிட்ட ஓசில காசு வாங்கி வாழுற வாழ்கைக்காக போனவை கதைக்கிறதுக்கு நியாயமில்ல. ஒரு வகையில் அவையெல்லாம் பிச்சைக்காரருக்கு சமன் எண்டு நான் சொன்னால் உம்மால என்ன பதில் சொல்ல முடியும்?”

“உம்ம போல ஓடிப் போனவையளுக்காக நாங்கள் போராடேலை. இது தான் என்ர தேசம்; இந்த மண்ணில தான் நான் வாழ வேணும்; என்ர பரம்பரை வாழ வேணும், நான் செத்தாலும் இந்த மண்ணில தான் சாக வேணுமெண்டு இஞ்சை இத்தனை பயங்கர போர் நடந்தாலும் மண்ணை விட்டிட்டுப் போக மனமில்லாமல் இருக்குதுகளே...இந்த சனங்கள்..! அந்த சனங்களுக்காகவும் அதுகளின்ர சந்ததிகளுக்காகவும் தான் போராடுறம். நாளைக்கு வரப் போற சந்ததி தலை நிமிர்ந்து சொந்த நாட்டில் பிறக்கும் சுதந்திர தமிழ் பிள்ளையாய் இருக்க வேணுமெண்ட காரணத்திற்காக போராடுறம்"

அவனுக்கு ஆத்திரமும் ரோஷமும் பொத்துக் கொண்டு வந்தது. இத்தனை கஷ்டப்பட்டு அங்க பனிக்கிளயும், குளிருக்குள்ளேயும் நகம் வெடிக்க வெடிக்க வேலை செய்து சம்பாதிக்கிறன்..இவள் என்னடாவென்றால் என்னை அகதிக்காசு எடுக்கிற பிச்சைக்காரன் எண்டு ஏளனம் செய்யிறாளே என்று வெகுண்டான்.

"நான் இருக்கிறது அமெரிக்காவில . கனடா , ஜேர்மனில தான் அகதிக் காசு . அமெரிக்காவில அப்பிடியில்லை தெரிஞ்சுதே.. அகதி யெண்டாலும் சரி, அமெரிக்கன் எண்டாலும் சரி அங்க உழைச்சாத் தான் காசு..பனிக்கிளயும், குளிருக்குள்ளயும் தோல் வெடிக்க கஷ்டப்பட்டு என்ர குடும்பத்துக்காக சம்பாதிக்கிற என்னைப் பார்த்து பிச்சைக்காரன் எண்டு எப்பிடி சொல்லுவீர்?"

"நீர் அமெரிக்காவில இருக்கிறதால உழைக்கிறீர். ஆனால் அமெரிக்காவுக்கு எப்பிடிப் போனீர்? அங்க அந்த நாட்டில இருக்கிற உரிமை எப்பிடிக் கிடைச்சுது? அகதியெண்டு தானே ?? வெளிநாட்டில இருக்கிற அத்தனை தமிழனும் போரிண்ட பாதிப்பில ஓடிப் போனவையோ அல்லது உழைப்புக்காண்டியும், காசு சேர்க்கிறதுக்காண்டியும் போனவையோ? உண்மையான அகதியள் எண்டால் இங்க செஞ்சோலை எண்டு ஒரு இடம் இருக்கு.. போய் பாரும்..அங்க இருக்கிற சீவன்கள் அகதியள் மட்டுமில்லை. .அனாதையளும் கூட. இல்லாட்டில் இந்தியாவில இராமேஸ்வரம் மண்டபம் அகதி முகாமில போய் பாரும்.. அங்க இருக்கிறவை தான் உண்மையான அகதியள்..கண்டியளோ? ஏஜன்ஸிக்காரனுக்கு இலட்சம் இலட்சமாக காசு கட்டி வெளிநாட்டுக்கு போறவை அகதி மாதிரி நடிக்கிறவை. அவை இந்த போரை சாக்கா வைச்சு காசு சம்பாதிக்கிறவை. அவையளுக்கு கூட ஒரு வகையில எங்கட போராட்டம் தேவைப்படுது. இங்க போர் நிண்டா அங்க இருந்து அவன் உங்களையெல்லாம் அனுப்பினால் நீங்கள் எங்க போவியள்? உங்களுக்கு போக்கிடம் வேற எது? "

அவன் மௌனமானான். உண்மை தான் அவன் அங்க பத்து வருசத்துக்கும் மேல அகதி எண்ட பெயரில தானே இருந்தவன். இந்த குடியுரிமை அந்தஸ்து இப்ப தானே கிடைச்சுது? இல்லாட்டில் நாட்டில போர் முற்றா முடிஞ்சுது எண்டு தீர்மானம் வந்திருந்தால் அவனுக்கு ஏது அகதி அந்தஸ்து? இப்ப அவன் அகதில இருந்து அமெரிக்க குடிமகனாக மாறியது நல்லதாப் போச்சுது என்றுபட்டது அவனுக்கு.

"இந்தப் போர் உயிரை அழிச்சு நடத்துற வேள்வி; இதில வியாபாரம் இல்லை; இலாபம் இல்லை; வருமானம் இல்லை எங்களுக்கு; காட்டுக்குள்ளயும், காவலரண்களிலயும் நித்திரையில்லாமல் நடத்திற போராட்டம். எங்கட உழைப்பும் சரி , கனவும் சரி தனி நாடு மட்டும் தான்.”
“எங்களைப் பொறுத்தவரை எங்களிட்டை இருக்கிற ஒரே ஒரு இலக்கு இழந்த இழப்புகளுக்கு ஈடு செய்ய சொந்த மண்ணை மீட்டு எடுக்கிறது மட்டும் தான். போராட்டம் தொடங்கேக்கிலை என்ன காரணத்துக்காக தொடக்கப்பட்டதோ அதே காரணத்தை சாதித்துக் காட்டி தமிழனுக் கென்று ஒரு தனிநாட்டை கட்டியெழுப்பிக் காட்டுவம். அதுவரைக்கும் உங்களைப் போல ஆட்கள் இப்படியே கதைச்சுக் கொண்டு தானிருக்கப் போகினம். தாராளமா கதைச்சுக் கொண்டிருங்கோ. .உங்கட இந்த மாதிரியான விசர்தனமான விமர்சனங்களால் போராட்டத்தின் அத்திவாரத்தை சாய்க்க முடியாது கண்டியளோ?"

"கிழிச்சியள்..கடைசி தமிழன் சாகிறவரைக்கும் தான் உங்கட போராட்டம். .எல்லாரையும் சாக்காட்டின பிறது தமிழ் ஈழம் எண்டு ஒண்டு எதுக்கு?"

கமலினிக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. அகல்யாவிடம் திரும்பி "உன்ர கொண்ணனுக்கு என்ன விசரே? ... உந்த மாதிரி விசர் கதயளுக்கு எல்லாம் பதில் சொல்ல நான் இஞ்சை வரேலை சரியே...முதல்ல நீ எழும்பி வா..வந்து குளி, உடுப்பை மாத்து.. வெளில வந்து காத்தாட இரு" என்று சொன்னபடி அகல்யா எழுந்திருக்க கை கொடுத்து தூக்கினாள்.

போகிற போக்கில் "குடும்பத்தை நேசிக்கிறது பிழையில்லை. ஆனால் இந்தக் குடும்பத்தை மாதிரி தான் உங்கட மண்ணும். அதையும் கொஞ்சம் மதிக்க வேணுமெண்டு உணர்வு இருக்கிறவைக்கு மட்டும் தான் தன்ர தேசத்துக்கும் இனத்துக்கும் விடுதலை எத்தினை முக்கியமெண்டு விளங்கும். உங்கள மாதிரி ஆட்களுக்கு அந்த உணர்வு கடைசி வரை வரவே வராது." என்று அவனைப் பார்த்து சொல்லிக் கொண்டு அகல்யாவை கைத் தாங்கலாக அழைத்துக் கொண்டு போனாள் கமலினி. அவளுக்கு பதில் சொல்ல வாயெடுத்தவன் அவள் தன்னை அலட்சியப்படுத்திக் கடந்து போவதை ஆத்திரமுடன் பார்த்துக் கொண்டு மௌனமாகினான்.

(தொடரும்)

Swathi Swamy

unread,
Apr 29, 2009, 6:27:06 PM4/29/09
to தமிழ் பிரவாகம், முத்தமிழ், தமிழ் அமுதம், உலகத்தமிழ், eelatami...@googlegroups.com, elanth...@googlegroups.com
கோணங்கள் குறுநாவலின் 3ம் பாகத்தின் தொடர்ச்சி:

திரும்பவும் அந்த சாய்மனைக் கதிரையில் போய் சாய்ந்து படுத்தான். கண்களை மூடி நிம்மதியாக வேறு எதையாவது யோசிக்க முயன்று தோற்றுப் போனான். திரும்ப திரும்ப கமலினி சொன்ன அந்த வார்த்தைகள் தான் மூளைக்குள் சுற்றிக் கொண்டு நின்றன. தன்ர குடும்பத்தை நேசிக்கிற மாதிரி தன்னால வேற எதையும் நேசிக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்தான். அவனுக்கு என்னவோ அது சாத்தியமான விசயமாகத் தெரியவில்லை. இண்டைக்கு ஒருத்தியை கலியாணம் கட்டினான் எண்டாலும் அவளைக் கூட அவனால் தன்னுடைய அம்மா, அக்கா, தங்கச்சியை நேசிக்கிற மாதிரி நேசிக்கவோ அன்பு காட்டவோ முடியும் என்று தோன்றவில்லை. கலியாணம் பத்தின கனவுகள் அவனுக்கு இப்ப எல்லாம் வருவதில்லை. முகமே தெரியாத ஒரு பெண்ணை மனைவியாக உருவகப்படுத்தி, கற்பனையில் புணர்ந்து, கனவில் குடும்பம் நடத்தி சீ என்று போய்விட்டது அவனுக்கு, அங்க அமெரிக்காவில் இரவு பகல் பாராமல் ஒண்டுக்கு ரெண்டு வேலை செய்திட்டு அறைக்கு திரும்பினால் உடம்பில் இருக்கிற ஒவ்வொரு தசை திசுவும் பச்சை இறைச்சியாய் நோகும். அந்த நோ போக கொஞ்சம் டீவாஸ் உள்ள போட்டுவிட்டு , எதையாவது சாப்பாடு எண்ட பேரில் கொறிச்சுப் போட்டு அப்படியே குப்பிற விழுந்தால் அடுத்த நிமிசம் நித்திரைக்குள் போக தான் சரியா இருக்கும். அதையும் மீறி அப்பப்ப தலையை நீட்டுற அவனுடைய உடம்பு தேவையை சமந்தா வந்தாளெண்டால் போதும் ..இப்படி அப்பப்ப தீர்த்துக் கொள்ளும் காமத்தில் தன்னுடைய உடல் தேவையையும், இளமையையும் திருப்திப் படுத்திக் கொள்வதில் கல்யாணத்துக்கு இருந்த முக்கியத்துவம் இல்லாமல் அடிபட்டுப் போனது அவனுக்கு.... இந்த காமதுக்காக மட்டும் தானே ஒரு கலியாணம் வேணும்? அந்த கலியாணத்தால தானே பிள்ளையள் , குட்டியள் எண்டு பெருகி அதுக்கு குடும்பமெண்டு பேரும் வைக்க வேணும்?.... அவனை உருவாக்கின குடும்பத்துக்கான முக்கியத்துவம் போய் அவன் உருவாக்கின குடும்பத்திண்ட முக்கியத்துவம் முன்னுக்கு வர...இரண்டுக்கும் சேர்த்து உழைச்சுக் கொண்டே அவன் வாழ்கை போய்க் கொண்டிருக்கும்...இது தான் இப்ப வெளிநாடுகளில உழைக்கிறதுக்கெண்டு வந்த ஒவ்வொரு தமிழனின் வாழ்கை மரபா போச்சு... குடும்பம் எண்டது அன்பான உறவுகளின் பங்கேற்பு என்பது என்னவோ அவனுடைய அப்பா, அம்மா, சகோதரங்களோட மட்டுப்படுத்தப்பட்டதாகி விட்டது அவனுக்கு. அது சுய நலமாக தெரிந்தாலும் அந்த சுய நலத்தில் அவன் யாரையும் நஷ்டப்படுத்தவில்லை. ... .யாருடைய குடியையும் கெடுக்கேலை என்பது அவனுடைய வாதம்.

கமலினி சொன்ன ஒரு வசனம் கூர்மையாக மனதில் ஆணி அடித்த மாதிரி இருந்தது. வலித்தாலும் கூட ஒரு வகையில் அவன் அந்த வலியை ஏற்றுக் கொள்ளத் தயாராகத் தான் இருந்தான்..

"உன்ர வாழ்கை என்ன உன்ர மூத்திர வாசலிலயே இருக்கு?"

என்ன ஒரு ஆணித்தரமான கேள்வி? ஒரு பொம்பிளப் பிள்ளையின்ர வாயில வரக் கூடிய வார்த்தைகளா எண்டு யோசிச்சுப் பார்த்தான். கொஞ்சம் அருவருப்பாயும் இருந்தது..ஆனால் அப்படி சொல்லவும் ஒரு துணிவு வேணுமெண்டும் தோன்றியது. அந்தக் கேள்வியில் என்ன பிழை என்று யோசிக்க வைத்தது. அகல்யாவுக்கு நடந்தது ஒரு கொடுமை; அவளுக்கெதிராக நடந்த ஒரு வன்முறை அது; அவளின்ர விருப்பத்துக்கு மாறா நடந்த ஒரு பலாத்காரத்துக்கு அவள் எப்பிடி பொறுப்பாக முடியும் ? வன்புணர்தலால் அவளுக்கு என்ன நடந்துவிட்டது? ஒரு விபத்து நடந்தால் கிடைக்கிற வலியும் நோவுமாய் ஏன் நினைக்கக் கூடாது. விபத்தில ஒரு காலோ , கையோ போனாலும் பரவாயில்லை உயிர் தப்பினால் போது மெண்டு நினைக்கிறதில்லையா..அது மாதிரி இங்க பறிபோனதையும் ஒரு ஊனமாக எடுத்தால் தான் என்ன? ஊனத்தோட மனுசர் வாழுறதில்லையா என்ன? காலப் போக்கில் இந்த ஊனத்தை மறந்தால் தான் என்ன? அல்லது இதை ஊனமாக தான் ஏன் நினைக்க வேணும்? கமலினி சொன்ன மாதிரி இப்ப அங்க அவள் தலைக்கு ஊற்றிக் குளிக்கிறதோடேயே கழுவிப் போற ஊத்தையாவே போகட்டுமேன்....? ஒரு நாள் நிகழ்வில முழு வாழ்கையையும் தொலைக்க வேணுமா என்ன? இப்படி பலதரப்பட்ட கேள்விகளின் குடைச்சலுடன் கண்ணை மூடிக் கொண்டிருந்தான் அவன்.

கொஞ்ச நேரத்தில் அகல்யாவை குளிக்க வார்த்து கூட்டிக் கொண்டு வந்தாள் கமலினி. இப்ப கமலினியின் துணை இல்லாமல் மெதுவாக அகல்யாவே நொண்டிக் கொண்டு நடந்து வந்தாள். சுடு தண்ணில குளிச்சது கொஞ்சம் உடல் நோ போன மாதிரி இருந்தது. எதோ உடம்பு முழுக்க ஒட்டியிருந்த கசடும், வலியும் கழுவிவிட்ட மாதிரி அகல்யாவின் முகம் வெளிச்சமாய் இருந்தது போல் அவனுக்கு தெரிந்தது. அறை வாசலில் சாஞ்சு கொண்டிருந்த அம்மாவை பார்த்து கமலினி " அம்மா ..கொஞ்சம் சூடா தேத்தண்ணி ஏதும் குடிக்க குடுங்கோ இவளுக்கு.." என்றாள்.

அம்மா மௌனமாக எழும்பி சமையலறைக்குள் போனாள். திரும்பவும் தனது இருட்டு அறைக்குள் போக எத்தனித்த அகல்யாவை "ஏய்..எங்க போறாய் அங்க? இஞ்சை வந்து இங்க இரு...காத்துப்படுற மாதிரி... " என்று அதட்டினாள் கமலினி.

"என்னை விடடி ..நான் போய் படுக்கப் போறன்..எனக்கு இங்க இருக்க மனம் வரேலை..என்னவோ மாதிரி இருக்கு"

"விசர் கதை கதைக்காமல் ..இஞ்ச வந்து உதில இரு....என்னத்துக்கு பயப்பிடுறாய்? ஊர் சனம் விடுப்பு பார்ப்பினை எண்டா? பாத்தா பாத்திட்டு போகட்டுமேன்...அவை என்னத்தை தான் விடுப்புப் பாக்கேலை சொல்லு...?உனக்கென்ன..? நீ ஏன் கவலைப்படுறாய்? உன்னில என்ன பிழையெண்டு நீ பயப்பிடுறாய்..? வந்திரு"

அவனுக்கு அகல்யாவைப் பார்க்க கவலையாக இருந்தது.. வெறும் இருபத்தி ஒரு வயதுப் பெட்டைக்கு இப்பிடி நடந்து போச்சே..ஒரு கலியாணம் கட்டி , குடும்பம், பிள்ளை குட்டி எண்டு இவளால இனி வாழ முடியுமா? தனி மனுச விசயமாக வாழ்கை இருந்தால் பரவாயில்லை. ஆனால் கலியாணம் எண்டது ரெண்டு பேர் சம்மந்தப்பட்டதாச்சே... கெடுக்கப்பட்டவள் எண்டு தெரிஞ்சு எவன் வந்து கட்டுவான் இவளை? எப்பிடி இவளை நான் கரையேத்தப் போறன்?

அம்மா கொடுத்த தேத்தண்னியை அகல்யா குடித்துக் கொண்டிருக்க அவளுடைய தலை முடியை துவாயால் தட்டி காயப் பண்ணுவதிலும் , ஒரு கிழமையாய் சீவாமல் இழுக்காமல் கிடந்து பொச்சு மட்டை மாதிரி சிக்கிப் போயிருந்த அவள் தலைமுடியிலிருந்து சிக்கு எடுத்து தலை பின்னிவிடவும்  முயற்சித்துக் கொண்டிருந்தாள் கமலினி. கமலினியின் உரிமையை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. எப்பிடி இவளோட அவனுடைய குடும்பத்தாருக்கு பழக்கம் வந்துது என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை...

"வா..உள்ள போவம்" என்று அகல்யா கமலினியைக் கேட்டாள்.

"ஏன்? அந்த இருட்டு அறைக்கிள கிடந்து புளுங்காமல்..வெளில இரு.. நீ பயப்பிடுற அளவுக்கு ஒண்டும் நடக்கேலை...சரியே..? முதலில உன்ர பயத்தை துரத்து ...மற்றைவையப் நினைச்சு பயப்பிடுறதையும் வெட்கப்படுறதையும் முதலில நிப்பாட்டு... வாழ்கையை ஒரே சொர்கமா நினைச்சு வாழ முடியாதடி..அதுவும் எங்கட மண்ணில..இருக்கிற பொம்பிளையளால முடியவே முடியாது. இஞ்ச பார்.. இந்த தலைல இருக்கிற சிக்கெடுக்கவே எத்தினை கரைச்சலா இருக்கெண்டு... அப்ப வாழ்கையெண்டால்..என்ன சும்மாவே...?" எண்டு அதட்டினாள் கமலினி.

"உங்களுக்கென்ன? நீங்கள் நல்லாத் தான் வசனம் பேசுறியள்...இது மாதிரி அனுபவிச்சுப் பார்த்தால் தான் தெரியும் உங்களுக்கு அந்த வலியிம், வேதனையும்.... ஆனா... அனுபவிக்கிறது நாங்கள் தானே?.." அவனுடைய குமுறலை முறைத்துப் பார்த்தாள் கமலினி. அவளுடைய பார்வை பலவிதமான இழைகளைக் கொண்ட மொத்த குவியலாய் உணர்ந்தான். தன்னை அவள் ஒரு கேவலமான ஒரு பலஹீனனாக கணக்கிடுவதாக நினைத்துக் கொண்டான். அதனாலேயே அவளுக்கு தமது நிலையை உணர முடியவில்லை என்று உள்ளுக்குள் சீற்றமாக இருந்தது.

"இது வசனமில்லை... அனுபவம். நீங்கள் போராளியளைப் பத்தி என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறியள் எண்டு தெரியேலை. எனக்கும் சரி என்னைப் போல போராடுற மத்தவையும் சரி..எல்லாரும் யார்? உங்களையும் உங்கட சகோதரங்களையும் போல இளம் சந்ததியினர் தான்.நாங்களும் உங்களை மாதிரி ஒரு தாய் தேப்பனுக்கு பிறந்த பிள்ளையள் தான்.. எங்களுக்கும் உங்களைப் போல தான் சதையும் ரத்தமும் எலும்பும் தோலுமிருக்கு. உங்களுக்குள்ள இருக்கிற அத்தனை உணர்சியும் எங்களுக்கும் இருக்கு..நாங்களொண்டும் மரக்கட்டையளோ இயந்திரங்களோ இல்லை...நாங்களும் மனிசர் தான்.. நீங்கள் இப்பிடி சீரழிய நாங்கள் என்ன சொகுசா அரண்மனையில இருந்து கொண்டு வேளா வேளைக்கு விருந்து சாப்பிட்டுக், குடிச்சுக் கும்மாளம் போட்டுக் கொண்டிகிருக்கிறமே?களத்தில நிண்டு அனாதை மாதிரி எரிஞ்சு பொசுங்கி செத்துப் போனவங்கள் எல்லாம் நினைச்சால் உங்கள மாதிரி வெளிநாட்டுக்குப் போய் அகதியெண்டு பதிஞ்சு காசெடுத்து ஊருக்கு அனுப்பி தானும் வாழத் தெரியாத மடையன்களே? அவங்களுக்கு காதல் வரப்படாதே? கலியாண ஆசை இருக்கக் கூடாதே? குழந்தை , குடும்பமெண்டு கனவு காண முடியாதே?அதுகள் எல்லாத்தையும் விட்டிட்டு காட்டுக்குள்ள வாழ்ந்து களத்துல சாக வேணுமெண்டு ஒரு போராளியா போக வேணுமெண்டு ஒரு தமிழ் பெடியனோ பெட்டையோ இயக்கத்துக்கு போறதுகள் எண்டால் அந்த ஆசையளையும் கனவுகளையும் விட பெரிசா இந்த மண்ணுக்கு சுதந்திரம் வேணுமெண்ட உணர்வில போகுதுகள்..தெரியுதே...? அந்த சுதந்திரம் கிடைக்கிறதுக்கு தங்கட பங்களிப்பை செய்ய வேணுமெண்டு போகுதுகள்.

"என்ன கேட்டனீயள்... உங்கட வலியும் வேதனையும் எங்களுக்கு தெரியாதோ? போராட்டத்தில தமிழனுக்கு எண்டு தனி நாடு வேணுமெண்டு குரல் குடுக்கிற ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஒருவிதத்தில உங்களை போல வலியும் வேதனையும் அனுபவிச்சவன் தான். என்ன வித்தியாசம் நாங்கள் அனுபவிச்ச வலியும் வேதனையும் எங்கட சந்ததிக்கு வரக் கூடாதெண்டு பொது நல நோக்கில   போராட இயக்கத்துக்குப் போனம். நீங்கள் உங்கட வட்டத்துக்குள்ள மட்டும் நிண்டு கொண்டு சுயநலமா மற்றவைய குற்றம் சாட்டுறீங்கள்..." என்று சொன்னவள் சடாரென்று குனிந்து தனது கால்சட்டையின் கீழ் பாகத்தை சுருட்டி மேலே இழுத்து தனது காலைத் திருப்பி அவனிடம் காட்டினாள்..

"இதைப் பாருங்கோ... "

காலில் பெரிய வெட்டு அடையாளம் பிளந்து போய் ஒட்டுப் பட்டது போல் கருப்பாய் வடுவாய் தெரிந்தது. அந்த புண் காய்ந்து போனதாயிருந்தாலும் கூட அவனுக்கு பார்க்க சகிக்க முடியாமல் இருந்தது.

"இது ஒரு உதாரணம். ...இதுக்கு மேலயும் தனிப்பட்ட முறையில நான் எவ்வளவோ அனுபவிச்சிருக்கிறன்.. .ஆனால்..அதெல்லாம் சொல்லி நியாயப்படுத்தவோ , அடையாளம் காட்டவோ வேணுமெண்ட அவசியம் எந்தப் போராளிக்கும் இல்லை. அவனுடைய போராட்ட உணர்வுக்கு பலமான காரணங்கள் அத்திவாரமா இருக்கு. அந்த உணர்வுகளை யாரும் விமர்சனம் செய்யலாம் லேசா... ஏனெண்டால் நீங்கள் சொன்ன மாதிரி அவையவை அந்தந்த இடத்தில இருந்தால் தான் தெரியும்... நீங்கள் உங்கட இடத்தில இருந்து கொண்டு எங்களைப் பத்தி ஊகிக்கக் கூடாது. கொஞ்சம் உங்கட உணர்வுகளை நகர்த்தி மற்றவைன்ர இடத்திலயும் இருந்து பார்க்கத் துடங்குங்கோ.... உங்கட உணர்வு வித்தியாசமா இருக்கும் அப்ப... முதலில இவள் அகலியாவிண்ட நிலையில இருந்து பார்க்கத் துடங்குங்கோ...."
என்றவள் கொஞ்ச நேரம் அமைதியா இருந்துவிட்டு... தொடர்ந்தாள்...."ஒரு பொம்பிளையை அவளின்ர சம்மதமில்லாமல் கொஞ்சப் பேர் வந்து வன்முறையா அவளை நாசமாக்கிட்டாங்கள் எண்டால்... அதோட அவளிண்ட வாழ்கை முடிஞ்சுது எண்டு மற்றவை மாதிரி நீரும் நினைச்சா அது முட்டாள் தனம். உண்மையாவே அவளுக்கு நல்லது நடக்க வேணுமெண்டு நினைச்சால் அவளை பழைய மாதிரி மாத்துற வழியைப் பாரும், எதிர்காலம் எண்ட ஒண்டு அவளுக்கும் மத்தவைய போல இருக்கு எண்டு நீர் தான் அவளுக்கு தைரியம் குடுக்க வேணும். இன்னொரு பக்கத்தை குற்றம் சாட்டிறதால வாழ்கைல உமக்கான பக்கத்தின் கடமையும் முடியப் போறதில்லை.. எந்த நல்ல தீர்வும் கிடைக்கப் போறதில்லை.. இனி என்ன செய்யலாமெண்டு தான் நினைக்க வேணும். எந்த சகதிக்குள்ள இருந்தாலும் வெளில வரத் தான் வேணுமே தவிர அதுக்குள்ளயே கிடந்து தாண்டு போக நினைக்கிறது முட்டாள்தனம். அவ்வளவு தான் சொல்ல தெரியும் எனக்கு.."

அவன் மௌனமாக இருந்தான். பதில் பேச வேண்டும் போல் தோன்றவில்லை, அவள் சொல்வது அத்தனையும் சரியாகவே பட்டது, அகல்யாவை வாழ வைக்க வேணும்.என்ர தங்கச்சியை இழந்து விடக் கூடாது. எங்கேயாவது கூட்டிக் கொண்டு போய் அவளை வாழ வைச்சே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

"சரி நான் வந்து கன நேரமாப் போச்சுது.. நான் வாறன் அகல்யா..அம்மா இருங்கோ வாறன் என்ன...அக்காவிட்ட சொல்லுங்கோ" என்றவள் கடகடவென அவனைக் கடந்து நடந்து முன்னால் பாதையை விட்டு மறைந்தும் போனாள்...

அவன் பிரமைபிடித்தவனாய் அவள் போன பாதையை பார்த்துக் கொண்டிருந்தான்... அவளுக்கிருக்கும் பார்வைக் கோணத்துடன் தன்னுடையது எத்தனை மாறுபாடானது என ஒப்பிட்டுப் பார்த்தான். ஆனால் அவளைப் போல் தன்னால் மாறமுடியாது என்பது மட்டும் திட்டவட்டமாக அவனுக்கு புரிந்தது. அதே சமயம் அவளையோ அவளைப் போன்றோரையோ விமர்சனம் செய்ய தன்னுடைய நிலைப்பாடு தகுதியானதா என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"பாவம் அது... அனாதை யாக்கிட்டாங்கள் அவளையும்.. ஆனால் அது எங்களைத் தான் தன்ர குடும்பமா நினைச்சு வந்து போகுது" என்று அம்மா சொல்ல மனதுக்குள் சுரீரென்றது..

"அனாதையா? " அவனுடைய ஒற்றைக் கேள்வியில் கமலினியின் வாழ்கைக் கதை முழுவதையும் சொல்லி முடிக்க வேண்டிய நிலையில் அம்மா இருந்தாள்.

"ஓம் ராசா....அங்க தின்ன வேலியில எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருந்த பொருக்கர் குடும்பத்தை மறந்திட்டியே. . அதுகளின்ர பிள்ளையடா இது.."

"யாரு...நளாயினியா..? அந்தப் பிள்ளையா இது...? அப்ப ஏன் அவளிண்ட பெயரை கமலினி எண்டு இந்த அன்ரி சொன்னா ?என்னம்மா சொல்லுறீங்கள். .அனாதையெண்டு... அப்ப பொருக்கர் குடும்பம்...?"

"ம்ம் நளாயினி தான்... கமலினி இயக்கப் பெயர்..உன்ர கொப்பா செத்த மூட்டம் தான் பொருக்கர் குடும்பம் முழுதையும் சாக்காட்டிட்டாங்கள்... பச்சைக் குழந்தை இவளின்ர தம்பி...4 வயசிருக்கும்..அதைக் கூட சுட்டுச் சாக்காட்டினவங்கள். இந்தப் பெட்டைக்கு அப்ப என்ன பத்து வயசு தான்... சின்னப் பிள்ளை; சாமத்தியப் படக் கூட இல்லை.. அவளைப் போய் கெடுத்துப் போட்டு குற்றியுரும் குலையுயிருமா விட்டிட்டுப் போனாங்கள் பாவியள்..”
“.அந்த நேரம் ஊர் முழுக்க ஒரே செல்லடி... வெளில போய் சவபெட்டி கூட வாங்க முடியாத நிலை... ஊரே பிண நாத்தமடிக்கும்...செத்துப் போனதுகளைத் தூக்கி போட்டு எரிக்கக் கூட ஆளில்லாமல் இருந்த குடும்பங்கள்.. குடும்பத்தோட செத்துப் போனதுகள்; கலியாண வீட்டில புதுசா கலியாணம் கட்டினதுகள் எண்டு செத்த வீடுகளா கிடந்திச்சு ஊர்...பொருக்கர் குடும்பமெண்டால் என்னமாதிரி பணக்காரரெண்டு தெரியும் தானே? ஆனா கடைசில அதுகளை தூக்கிப் போடக் கூட நாதியில்லாமல் பெட்டி இல்லாமல் சாக்குக்குள்ள போட்டுக் கொண்டு போய் எரிச்சதெண்டால் யோசிச்சுப் பார் அந்த நேரம் நாங்கள் என்ன பாடெல்லாம் பட்டிருப்பமெண்டு... இந்தப் பெட்டையை உங்கட கொப்பா தான் வீட்டுக்கு தூக்கிக் கொண்டு வந்து எங்களோடை இங்க அனுப்பி வைச்சிட்டு ரெண்டு மூண்டு நாளில எல்லாத்தையும் சரி பண்ணிக் கொண்டு வாரன் எண்டு சொன்னவர்... ம்ம்ம்.. அது தான் நாங்கள் அவரைக் கடைசியா பாத்தது...அப்பவும் இது தான்..இப்பவும் அதே நிலை தான்..அப்ப அவள்....இப்ப உன்ர தங்கச்சி;;அப்ப உன்ர கொப்பர் இப்ப உன்ர கொத்தார்...இது தான் இங்க..என்ன வித்தியாசம்..அப்ப இந்தியா இராணுவம்..இப்ப சிங்கள இராணுவம்..அது தான் மாறிப் போயிருக்கு..எங்கட நிலமை இன்னும் அப்பிடியே தான் இருக்கு"

"உந்தப் பெட்டையும் எங்களோட குடும்பத்தில ஒருத்தியா ஆறேழு வருசமா இங்க தான் இருந்தாள். அடிக்கடி கனவில அழுது கொண்டும் கத்திக் கொண்டும் எழும்பி இருப்பாள். அவளால அண்டைக்கு நடந்ததை அவ்வளவு லேசில மறக்க முடியுமே? அந்த பிஞ்சு வயசில பார்க்கக் கூடியதையா அவள் பார்த்தவள் , அனுபவிச்சவள்..? தம்பிக்காரனில அந்த மாதிரியெல்லே பாசமா இருந்தவள்...? தாயையும் தம்பியையும் ஒரு சாக்குக்குள்ள போட்டுக் கட்டேக்கில அந்த நிலையிலயும் அவள் கதறினதை எண்டைக்கும் என்னால மறக்க முடியாது ராசா...அனுபவிச்ச அவளுக்கு எப்பிடி இருக்கும்....சொல்லு...திடீரெண்டு ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் போய்ட்டாள்... ஊர் முழுக்க தேடித் திரிஞ்சம். யாரும் ஆமிக்காரங்கள் கொண்டு போயிட்டாங்களோ அல்லது இங்க எங்கட நாயளுக்குள்ளயே காட்டிக் குடுக்கிறதுகளும், கூலிப்படையளும், சிங்களவனுக்கு கோவணம் தோய்க்கிற கழிசடையளும் இருக்குதுகளே...அவங்கள் தான் தூக்கிக் கொண்டு போய்டாங்களோ எண்டு நெஞ்சிடிச்சுக் கொண்டு இருந்தன்.. எங்கயாவது அடையாளம் தெரியாத பெட்டையள் செத்துக் கிடக்குதுகள் எண்டு கேள்விப்பட்டால் ஓடிப் போய் பார்ப்பன்... பிறகு தான் தெரிஞ்சுது ...இயக்கத்துக்குப் போட்டாளெண்டு....." அம்மா சொல்லிக் கொண்டே போக அவன் விக்கித்துப் போய் இருந்தான். எத்தனை சாதாரணமாய் அவளை விமர்சனம் செய்த்திருக்கிறேன் என்று நினைத்து வெட்கிப் போனான் தனக்குள். உனக்கு என்ன தெரியும் என்னுடைய வலியும் வேதனையுமெண்டு எத்தினை இளக்காரமா கேட்டான்..
அவள் அனுபவித்த வேதனையை விடவா தன்னுடையது இருக்கும் என்று ஒப்பீடு செய்யக் கூட இப்போது கூசிப் போயிருந்தான்.

(தொடரும்)

Swathi Swamy

unread,
Apr 29, 2009, 6:47:08 PM4/29/09
to தமிழ் பிரவாகம், முத்தமிழ், தமிழ் அமுதம், உலகத்தமிழ், eelatami...@googlegroups.com, elanth...@googlegroups.com
கோணங்கள்
(குறுநாவல்)

4


வீட்டு நிலமை கொஞ்சம் இலேசான மாதிரி இருந்தாலும் இறுகிப் போன சோகத்தின் சுவடுகள் முற்றாக மறையவில்லை. அக்காவின் பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சமாய் அவனுடன் வந்து அணையத் தொடங்கின. அவன் அவர்களுக்காக கொண்டு வந்திருந்த உடுப்புகளையும், விளையாட்டுச் சாமான்களையும் அவர்களுக்குக் கொடுத்த போது ஏக்கத்துடன் அவனை பார்த்தார்கள். விளையாடும் மனமில்லாவிட்டாலும் விளையாட்டுச் சாமான்களை அணைத்துக் கொண்டு போய் தாயின் மடிக்குள் சுருண்டு படுத்துக் கொண்டார்கள். வில்லங்கத்துக்கு அவர்களைக் கூட்டிக் கொண்டு பின் வளவுக்குள் போய் விளையாட வைத்தான். மனமில்லாமல் விளையாடினாலும் கூட அந்த நேரத்து சோகத்தை மறக்கடிக்க முயன்றார்கள் என்பது உண்மை.

"இவர்களை இப்பிடி விடக் கூடாது. எப்பிடியாவது ஏதாவது செய்து என்ர குடும்பத்தை ஒப்பேத்திவிட வேணும் என்ற வெறி மெருகேறத் தொடங்கியது... கெதியெண்டு கொழும்புக்கு கூட்டிக் கொண்டு போய்ட்டால் போதுமெண்டு தோன்றியது. பிறகு அங்கேருந்து இந்தியாவுக்கு போய் பிள்ளையளை பள்ளியில சேர்த்துவிடலாம். தங்கச்சிக்கு மட்டுமில்லை குடும்பத்தில எல்லாருக்கும் ஒரு மாறுதலான வாழ்கை கிடைக்கும்... இந்தியாவில எண்டால் இந்த மாதிரி பிரச்சினை எதுவும் இருக்காது. அங்கயும் தமிழர் தானே? கோயில், குளமெண்டு போய் வரலாம். படம் , கடை எண்டு அங்கத்தைய வாழ்கை கொஞ்சம் கொஞ்சமாய் இந்த கசடுகளை மறக்கடிக்காட்டியும், தாக்கத்தை குறைக்கலாம்...இந்த செல்லடி யளையும், குண்டுச் சத்தங்களையும் விட்டு விலகி இருந்தாலே போதும்...நிம்மதியா இருக்கலாம்... மாசா மாசம் காசனுப்பினால் போதும்..இந்தியாவில சாப்பாட்டுச் சாமனுகளும் மலிவெண்டு மணியக்கா சொன்னவ..வாடை தான் சிலோன்காரர் எண்டால் கூட கேப்பினமாம்..எதுக்கும் முதலில் இதுகள் எல்லாரையும் கூட்டிக் கொண்டு கொழும்புக்கு போய்ச் சேருவம் " மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டான்....

அண்டைக்கு மத்தியானம் அம்மா விடமும் தனது முடிவைச் சொன்னான்.
"என்ன ராசா சொல்லுறாய்? இந்தியாவுக்கோ? நாங்களோ? இடம் வலம் தெரியாத தேசத்தில போய் இருக்கச் சொல்லிறியா ..?" என்று தயங்கினாள்.

"என்னம்மா இடம் வலம் தெரிஞ்சா தின்ன வேலில இருந்து இங்க வந்தனீங்கள்? அது மாதிரி இதையும் யோசியுங்கோ..அங்கயும் தமிழர் தான். அங்க இந்த குண்டுச் சத்தமும் துவக்குச் சூடும் இல்லாமல் நிம்மதியா இருக்கலாம். அக்காவிண்ட பிள்ளையளுக்கும் நல்ல சூழலில படிக்கிறதுக்கு வழி கிடைக்கும். அக்காவுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும். இங்க இருந்தால் அத்தாண்ட நினைவில தான் இருப்பா"

"“அகலியாவுக்கும் ஏதாவது நல்லது நடக்க வேணுமெண்டால் இங்க இருந்தால் அது கஷ்டம்.. எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சுது அவளுக்கு நடந்தது.. யாரும் அவளைக் கட்ட வரமாட்டினம். நான் அங்க ஒரு மாப்பிள்ளை பார்த்திட்டு தான் வந்தனான். அவனுக்கு அகலியாவை படத்தில பார்த்து பிடிச்சுப் போச்சு எண்டு சொன்னவன். அவனை தான் முடிச்சு வைக்கிற யோசனையோட வந்தனான்.. ஆனால் இப்ப அவனுக்கு நடந்ததைச் சொல்லுறதா அல்லது சொல்லாமல் செய்யிறதா எண்டு குழப்பமா இருக்கு.. "

".சொல்லாமல் செய்யிறதா இருந்தால் இங்க வைச்சு செய்ய முடியாது. அதோட இனி இந்த நாட்டுப் பிரச்சினைக்குள்ள அவனை வரப் பண்ணி கலியாணம் செய்யிறதும் கஷ்டம்.. இந்தியாவில எண்டால் பிரச்சினை இல்லை.. இங்க கட்ட வாறவனுக்கும் கல்லுக் குத்த சனங்கள் இருப்பினம். அங்க எங்களை யாருக்கு தெரியப் போவுது? பேசாமல் ஒருத்தன்ர கையில அவளை ஒப்படைச்சு அவளுக்கு ஒரு புது வாழ்க்கை குடுத்திட்டால் போதும். என்னம்மா சொல்லுறாய்?"

அவளுக்கு மகனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது, பாவம் எத்தினை பேரை பத்தி தான் அவன் யோசிப்பான்? தனக்கெண்டு எதையும் யோசிக்காமல் சகோதரங்களைப் பத்தியே யோசிச்சுக் கொண்டிருக்கிறானே எண்டு கவலையா இருந்தது.

"பாவம் அவனுக்கும் வயசு போய்க் கொண்டிருக்கு.. அவனுக்கு ஒரு பொம்பிளையைப் பார்த்து கலியாணத்தை செய்து வைச்சிட வேணும்..."என்று யோசிச்சாள்...

"என்னம்மா யோசிக்கிறாய்?"

"ஒண்டுமில்லை ராசா... நீ யோசிக்கிறது எனக்கு விளங்காமல் இல்லை.. தின்ன வேலியைப் பார்க்கிலும் இந்த ஊர் எனக்கு வேற தான்..ஆனால் எங்கட நாட்டுக்குள்ள இருக்கப்பு.. இதுவும் என்ர மண் தான். ஆனால் .என்ன தான் தமிழ், கோயில் , குளமெண்டாலும் நாங்கள் எத்தினை நாளைக்கு தான் அங்க அன்னியமாய் இருந்து காலத்தைக் கழிக்கிறது சொல்லு? பெத்த தாயிண்ட மடியில படுத்திருக்கிறதும், சின்னம்மாவோட வாழுறதும் ஒண்டா ராசா? அந்த நாட்டில நாங்கள் வந்தேறு குடியளாதான் இருக்க முடியுமே தவிர, சொந்த மண் எண்டு உரிமை கொண்டாட முடியுமே சொல்லப்பு? நான் இழக்கக் கூடாததுகள் எல்லாத்தையும் இழந்திட்டன் தான்.  எந்த நாட்டுக்கு போனாலும் மனுசனுக்கு சாவு எண்டது நிச்சயம்..அந்த சாவு எனக்கு இங்க என்ர சொந்த மண்ணில வரட்டும். இன்னொரு இரவல் தேசத்தில அகதியா, நான் சாக வேணுமே...சொல்லு?"

" உன்ர சகோதரங்கள் ஓமெண்டு சொன்னால் அவையளைக் கூட்டிக் கொண்டு போய் அங்க விடு..நான் மறிக்கேலை.. வேணுமெண்டால் உன்ர மனச் சாந்திக்காக கொஞ்ச நாள் அங்க வந்திட்டு வாறன்... இன்னும் நான் இங்க என்ன ஆசையோட இருக்கிறன்..என்ர மனுசன் தன்ர கையால செடி செடியா வைச்சு பூத்துக் குலுங்க வச்ச அந்த வளவுக்குள்ள போய் ஒரு கொட்டிலாவது போட்டுக் கொண்டு அங்க தான் என்ர கடைசி மூச்சுப் போக வேணும்...அங்க எனக்கு மேல செல் விழுந்தாலும் சரி.. குண்டு வந்து கொட்டினாலும் சரி... அந்த வளவுக்குள்ள உக்கி மண்ணாய் போனால் போதும்..."

அவனுக்கு என்ன பேசுவது என்று தோன்றவில்லை. அம்மாவிடம் இருந்து இப்பிடியொரு பதிலை அவன் எதிர்பார்க்க ல்லை, . இந்த முதியவளின் மனதுக்குள் இப்படி ஒரு ஆவேசமும் உணர்வும் இருக்குமெண்டு அவனுக்கு தோன்றியதே இல்லை.

அக்காவோ..."எங்க இருந்தால் என்ன? என்னால என்ர புருசனை மறக்கவா முடியும்? இங்க இருந்தால் தான் என்ர பிள்ளையளுக்கு அதுகளின்ர அப்பா எப்பிடி இருந்தார், ஏன் செத்தார் எண்ட உணர்வு மாறாமல் இருக்கும்.. இட மாத்தம் எல்லாம் மனசை மாத்திடாது தம்பி.. அவர் செத்த பிறகு தான் இனி மேலயும் இந்த மண்ணை விட்டு வேற எங்கயும் போகக் கூடாது எண்ட எண்ணம் வந்திருக்கு எனக்கு.."

"இந்த வீட்டையும் வளவையும் விட்டுப் போனால் அவரை விட்டுப் போனது போல இருக்கும். அவர் இல்லாட்டிலும் அவர் திரிஞ்ச இந்த வீடும், வளவும், இந்த தெருவும் அவரிண்டை நினைவுகளை தந்து கொண்டிருக்கும். அந்த நினைவோடயே நான் என்ர பிள்ளையளை அவர் விரும்பினமாதிரி படிப்பிச்சு வளர்ப்பன்..என்ர பிள்ளையளுக்கு தாங்கள் யாரெண்ட அடையாளத்தை இந்த மண்ணால தான் குடுக்க முடியும். அதுகள் வெளி நாடுகளுக்கு போய் இங்கிலிஷ் படிக்கிறதைப் பார்க்கிலும் இங்க இருந்து தமிழ் பிள்ளையாய் வளர வேணும்.. எனக்கு அது தான் வேணும்... நான் இந்த ஊரை விட்டு எங்கயும் போக மாட்டன்... இந்த மண்ணை விட்டு என்ர பிரேதம் கூடப் போகாது. எனக்காண்டி யாரும் கவலைப்பட வேண்டாம் ராசா... நீ சொல்லுற மாதிரி அகல்யாவிண்ட வாழ்கை தான் இப்ப முக்கியம் அப்பு... அவளை கரை சேர்த்தால் போதும்.."

அவனுக்கு இந்த மக்களை நினைக்க நினைக்க அதிசயமாக இருந்தது, அவனும் இங்க இந்த தமிழ் மண்ணில தான் பிறந்து வளர்ந்தவன். ஆனால் போராட்டக் காலத்தின் உக்கிரத்தை அனுபவிக்காமல் வெளிநாட்டுக்கு போய் தப்பிவிட்டான். அதனாலும் , வெளிநாட்டில் மாறுதலான வாழ்கையினாலும் இந்த மண்ணின் மக்களுடைய நிலையில் அவனால் இருந்து பார்க்க முடியவில்லை. உணர்வுபூர்வமா சிந்திக்க நேரமில்லாமல் வெறும் பணத்துக்காக தன் பொழுதை செலவழித்தது இப்போது தான் உணர்ந்தான். எல்லாரும் போராட்டமெண்டு களத்தில் ஆயுதம் எடுக்க வேண்டும் எண்டில்லை..என்னுடைய மண்ணை விட்டு நான் வர மாட்டேன் என்ற உணர்வுள்ள ஒவ்வொருவனும் போராளி தான் என்று தோன்றியது . அவர்களிடம் இருக்கும் தன்னிடம் இல்லாத என்ர மண் என்ற உணர்வு தான் அவனையும் இவர்களையும் வித்தியாசப்படுத்துகிறது என்பது குத்திய போது வெட்கமாய் இருந்தது.

அமெரிக்க குடிமகன் என்று ஒரு நாள் யாரோ ஒரு வெள்ளைக்கார நீதிபதிக்கு முன்னால அமெரிக்காவை பற்றிய கேள்வி களுக்கு பாடமாக்கி வைச்சதை எல்லாம் ஒப்பிச்சுப் போட்டு அமெரிக்காவின் குடிமகனாய் வாழுவேன் எண்டு சத்தியப் பிரமாணம் செய்து வாங்கின அந்த பத்திரத்தின் பெறுமதி வெகுவாக மலிவாக தெரிந்தது இப்போது... ஆனாலும் வேறு வழியில்லை... இது தான் இனி அவனுடைய நிலைப்பாடு. என்ன கொஞ்சம் தமிழ் மண்ணின் உணர்வு ஏறிப் போயிருந்தாலும் கூட பெரிதாக எதுவும் மாறப் போவதில்லை... பழைய படி இரவு பகல் வேலையும், கிழமையில ஒரு நாள் டீவாஸ் தண்ணிப் போத்தலும் சமந்தாவும் தொடரத் தான் போகுது...அவனுடைய அமெரிக்க உழைப்பு இங்க ரூபாவை மாறி சாப்பாடு மட்டும் தான் அவனுடைய குடும்பத்தாருக்கு தரப் போகுதே தவிர வேற எதையும் அதால சாதிக்க முடியாது என்று தெரிந்தது,

அன்றிரவு முழுவதும் அவனுக்கு தன்னுடைய வாழ்கையில் என்ன சாதித்து விட்டேன் என்று மட்டும் தான் யோசிக்க வைத்தது..நாட்டுக்காக போராடாமல் வீட்டுக்காக உழைச்சது பிழையா? ஏன் அவனுக்கு மட்டும் நாட்டைப் பத்தின உணர்வு வராமல் இருந்தது என்று யோசித்தான்? வெளிநாடும், வாழ்கையின் முக்கால் வாசிப் பொழுதுகளும் டாலர் சம்பாதிப்பது எப்படி என்று இரவு பகலா உழைப்பிலேயே கழிந்து போய்விட்டிருப்பது இப்போது மிக நுணுக்கமாக மனதில் குத்தியது. போராளிகளெண்டு பிறம்பாய் ஆயுதங்களோட களத்தில யுத்தம் செய்யிறவை மட்டுமில்லை..களத்தில இறங்காட்டிக் கூட நாட்டை விட்டுக் கொடுக்காமல் இந்த மண் தன்னுடைய இனத்துக்குரியது எண்டு உணர்வு பூர்வமாய் நினைக்கும் ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் தமிழ் இனத்தை ஒடுக்கவும் அழிக்கவும் கங்கணம் கட்டும் எந்தவொரு சக்திக்கும் எதிரான போராளியள் தான் என்று அவனுக்கு விளங்கியது...

எப்ப நித்திரை கொண்டானெண்டு அவனுக்கே தெரியவில்லை.. ஏதோ ஆளரவம் கேட்டு திடுக்கிட்டு எழும்பின போது யாரோ தன்னை கடந்து நடந்து போற மாதிரி இருந்துது... யார் அது எண்டு அவன் சுதாகரிக்கும் முன் அந்த உருவம் அவன் அறையை விட்டு வெளியேறி கூடத்துக்குள் போய் விட்டது...

அம்மாவாக்கும் என்று நினைத்துக் கொண்டு புரண்டு படுத்தான்... தண்ணி குடிக்க வேணும் போல இருந்தது. திரும்பி தலை மாட்டுப் பக்கமாய் வைத்திருந்த புட்டுவத்தில் இருந்த செம்பையும் தண்ணியையும் எடுக்க எத்தனித்த போது தான் கவனித்தான் செம்புக்கு கீழ கடிதம் மாதிரி தெரிஞ்சுது... குறைச்சு வைச்சிருந்த அரிக்கன் லாம்பை தூண்டி விட்டு வடிவாகப் பார்த்தான்... அது கடிதம் தான்... அதுவும் அவனுக்கு எழுதிய கடிதம்...ஏதோ உறைக்க சடாரென்று எழும்பி கடிதத்தை உருவி பிரித்து வாசிக்க தொடங்கினான்...

அன்புள்ள அண்ணா ...எண்டு...கடிதம் தொடங்க யார் அகலியாவா எழுதியிருக்கிறாள் என்று  யோசிக்க ஏன் கடிதம் எழுதி வைச்சிருக்கிறாள்...ஒரு வேளை ..ஒரு வேளை..ஏதும் விசர் தனமா தற்கொலை கிற்கொலை என்று செய்யப் போறாளோ..என்று பதறியபடி படிக்கத் தொடங்கினான்..

அன்புள்ள அண்ணா!

அண்டைக்கு எனக்கு நடந்தது விபத்தும் இல்லை; விரும்பி நடந்ததுமில்லை; வன்முறையால நான்  சீரழிக்கப்பட்டிருக்கிறேன்....அந்த நொடி அவங்கட கேலியும், வெறிச் சிரிப்பும் , அவங்கள் தொட்ட இடங்களும், அதுல நான் இன்னமும் புளுங்கி புளுங்கி செத்துக் கொண்டிருக்கிறதையும் என்னால் உங்களுக்கு விரிவா எழுத தெரியேலை. அது விளக்கப்படுத்த முடியாத வலி. அருவெருப்பு. மரணிப்பதை விட இந்த வலியும் வேதனையும் பெரிசா இருக்கு. வாழ்நாள் முழுவதும் இந்த அசூசையை நான் சுமந்து கொண்டு தான் திரியப் போகிறேன் என்ற உணர்வு உறுத்துகிற ஒவ்வொரு வினாடியும் என்னை என்னால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கு.

இப்ப தான் எனக்கு கமலினி அண்டைக்கு என்ன பாடு பட்டிருப்பாள் எண்டு விளங்குது. ஆனால் கமலினி சொன்ன மாதிரி என்ர கற்பை யாராலயும் அழிக்க முடியாது. அது என்ர மனசிலயும் நடத்தையிலயும் எப்பவும் இருக்கும்...அவங்கள் சின்னண்ணையை அடிச்சு சித்திரவதைப்படுத்தி வளர்த்தினதை விட என்னை அதிகமா சித்திரவதை படுத்தினதா தான் நான் அந்த நிகழ்வை எடுக்கப் போறன்.

எனக்கு ஒரு காலத்தில் கலியாணம் பத்தின கனவுகள் இருந்தது என்னவோ உண்மை தான்.. ஆனால் இப்ப இந்த நிமிசம் அதுகளை விட வேற எதிர்பார்ப்பு இந்த மூண்டு கிழமையில எனக்குள்ள வேரோடிப் போச்சுது. இன்னொரு கமலினியோ இன்னொரு அகலியாவோ இராணுவத்தால இனப்பிரச்சினைக்கு எதிரான நடவடிக்கை எண்ட பெயரில் உருவாக்கப்படக் கூடாது. அப்படி உருவாகாமல் எங்கட பெண்கள் தலை நிமிர்ந்து வாழ வேணுமெண்டால் முதலில் என்ர மண்ணுக்கு சுதந்திரம் வேணும்.

நீங்கள் நினைக்கிற மாதிரி நானும் ஒரு கல்யாணம் பண்னி குடும்பம் நடத்தலாம் தான்.. அது என்னால முடியும்; எனக்கு அதில எந்த குற்ற உணர்வும் வராது ; காரணம் நடந்து போன நிகழ்வுக்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பில்லை ; என்னுடைய ஒத்துழைப்பில்லாமல் நடந்த ஒரு பலாத்காரத்துக்கு , வன்புணர்தலுக்கு ஏன் குற்றவாளியாயோ பாவப்பட்டவளாயோ என்னை நானே நினைக்க வேணும்?

ஆனால் என்னை களங்கமில்லாதவள் என்று சொல்லி ஒப்பேத்த உங்களுக்கே தயக்கமாய் இருக்கு. பாக்கிற மாப்பிள்ளைக்கு என்ர நிலையை சொல்லுறதா வேண்டாமா எண்டு உங்களுக்குள்ளேயே ஒரு போராட்டம் நடத்துறீங்கள்...
ஒரு கற்பிழந்த பெண்ணை வாழ்கையில மனைவியா ஏத்துக் கொள்ளுற மனப்பக்குவமுள்ள ஆண்கள் இன்னமும் எங்கட சமூகத்தில வெகு குறைவு தான். ஒரு வேகத்தில ஓமெண்டு கலியாணம் முடிச்சாலும் கூட நாள் போக போக அவர்களுடைய மனப் போக்கு மாறிப் போச்சுதெண்டால் , ஒரு நாள் மாதிரி ஒரு நாள் இல்லாமல் வார்த்தையால் தன்னும் ஏதாவது சொல்லிட்டால்...அது அண்டைக்கு சீரழிந்த நேரத்தில் பட்ட வலியை விட மோசமானதாய் போயிடும்.

அதே நேரம் பொய் சொல்லி வாழவும் நான் தயாரா இல்லை..நான் சொன்ன பொய் எப்ப தெரிய வருமோ எண்டு பயந்து கொண்டே தன்ர புருசனோட ஒரு மனைவி வாழுற வாழ்கையை விட நரகம் வேற எதுவும் இருக்க முடியாது. அதனால எனக்கு அந்த மாதிரி வாழ்கை வேண்டாம்.

நானும் இன்னொரு கமலினி தான் இனி..எல்லா விதத்திலயும்; கமலினி சொல்லாமல் போனாள்; நான் சொல்லிட்டு போறன்; சிங்கள இராணுவத்தால பாலியல் வன்முறையால சீரழிக்கப்பட்ட கடைசி ஈழத்து தமிழச்சியா இந்த அகல்யா இருக்க வேணும். இனி எந்த ஒருவனும் எந்தப் பொம்பிளயளிலயும் கை வைக்க கனவில கூட நினைக்கக் கூடாது. அப்பிடி ஒரு நிலையை நாங்கள் உருவாக்க வேணும்; அது போராட்டத்தால தான் முடியும். நான் அந்தப் பாதையில தான் போக விருப்பப்படுறன்.

அம்மாவை நீங்கள் தான் சமாதானப்படுத்த வேணும்; என்னை பிரிஞ்ச துக்கம் தான் அவவுக்கு கஷ்டமாய் இருக்குமே தவிர நான் தேர்வு செய்த பாதை அவவுக்கு கட்டாயம் சரியாய் தான் படும். இப்ப நான் போற பாதையில போராட்டம் தான் இருக்கும்; ஆனால் எனக்கு மனநிறைவு கிடைக்கும். என்னுடைய மண்ணுக்கு விடிவு காலம் வரும் நேரத்தில் நானும் ஒரு அத்தியாயமாயோ அல்லது அதற்கு ஒரு அத்தாட்சியாவோ இருப்பேன், அது என்னையும் என்னுடைய வாழ்கைக்கான அர்த்தத்தையும் பூரணப்படுத்தும் எண்டு நிச்சயமாய் நம்புறன்.

என்னவோ உங்களிட்ட தான் சொல்லிட்டு போக வேணும் போல இருந்துது... நினைவு தெரிஞ்ச நாளில இருந்து என்ர வாழ்கையில நீங்கள் தான் எனக்கான எல்லாத்தையும் முடிவு செஞ்சீங்கள்; இப்ப நான் முதன் முதலா தனிய முடிவு எடுத்திருக்கிறன். அதை உங்களிட்ட சொல்லிட்டு போறது தான் முறை. நான் போட்டு வாறன் அண்ணா.

இப்படிக்கு
உங்கள் அன்புத் தங்கச்சி
அகல்யா.

வாசலுக்கு ஓடிப் போய் படலையடியைப் பார்த்தான். அகலியா இருட்டில் கரைந்து போய் கன நேரமாகிப் போயிருந்தது. திரும்பி அறையை நோக்கி வரும் போது நினைத்துக் கொண்டான்... " அம்மாவிடம் எப்பிடி சொல்லுறது? ...எப்பிடியும் இரண்டு நாளில நான் வெளிக்கிட வேண்டியது தான்...இனியும் என்ர குடும்பத்துக்கு நான் தான் உழைக்க வேணும்...?அக்காவையும் , பிள்ளையளையும் நான் தான் பார்க்க வேணும்...அவை உயிரோட இருக்கிறவரை அல்லது என்ர உயிர் இருக்கிறவரை என்ர உழைப்பு அவையளுக்கு வேணும்"

அகலியாவை தேடிப் போக வேண்டிய அவசியம் இருப்பதாய் அவனுக்கு தோன்றவில்லை...

பொழுது விடியலை நோக்கி நொடிகளாக கடந்து கொண்டிருந்தது....

ம்ம்ம் கெதியா விடியப் போகுது..!

(முற்றும் , ஆனால் ஈழத்தில் மிகுதி தொடரும்.)

சோழியான்

unread,
Apr 29, 2009, 7:40:59 PM4/29/09
to mutht...@googlegroups.com, தமிழ் பிரவாகம், தமிழ் அமுதம், உலகத்தமிழ், eelatami...@googlegroups.com, elanth...@googlegroups.com
அம்மாடீயோவ்.. இவ்வ்ளவு பெரிசா.. ஆறுதலாக எனது கருத்தைப்பதிகிறேன். :)

2009/4/30 Swathi Swamy <mswat...@gmail.com>



--
புகலிடத் தமிழர் வாழ்வின் நிகழ்வுகளின் தரிசனம் http://www.tamilamutham.net

Swathi Swamy

unread,
Apr 30, 2009, 1:07:27 AM4/30/09
to mutht...@googlegroups.com, தமிழ் பிரவாகம், தமிழ் அமுதம், உலகத்தமிழ், eelatami...@googlegroups.com, elanth...@googlegroups.com


29 ஏப்ரல், 2009 6:40 pm அன்று, சோழியான் <tamila...@gmail.com> எழுதியது:

அம்மாடீயோவ்.. இவ்வ்ளவு பெரிசா.. ஆறுதலாக எனது கருத்தைப்பதிகிறேன். :)

பெரியது தானே எங்கள் துயரமும்???  :(:(

நாவலாக எழுதத் தான் இருந்தேன்...ஆனால்  சென்ற வருட ஆண்டுவிழா மலரில் பிரசுரிக்க வேண்டியிருந்ததால் குறுநாவலாக்கினேன். இவ்வளவு தான்..இனி வராது..பயப்பட வேண்டாம் அண்ணா!  :):)

அன்புடன்
சுவாதி
Reply all
Reply to author
Forward
0 new messages