விவாதமன்றம்: தீக்குளிப்பது அரசியல் தீர்வாகுமா?

6 views
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
Mar 10, 2013, 3:39:55 AM3/10/13
to தமிழ்நண்பர்கள், அரசியல், chennaiitguys, தெய்வத்தமிழ், தமிழ் அமுதம், உலகத்தமிழ்
விவாதமன்றம்: தீக்குளிப்பது அரசியல் தீர்வாகுமா?

தமிழீழ பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் பலர் தீக்குளிப்பது வாடிக்கையாக நடந்துவருகிறது. 

இதை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?

தீக்குளிப்பதால் தமிழீழ பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கிடைத்துவிடுமா? தீக்குளித்த பலரது கடிதங்களை பார்க்கும் போது அவர்கள் ஏதோ ஆவேச மனநிலையில் திடீரென தீக்குளிக்கவில்லை எனவும் நிதானமாக யோசித்து முடிவெடுத்திருக்கிறார்கள் என்பதும் புரிகிறது.  

தற்கொலை கோழைத்தனம் என்பது பொதுவான முற்போக்கு கருத்தாக இருந்தாலும் இப்பிரச்சனையில் தீக்குளித்தவர்களை வீரர்களாக பார்ப்பதே தொடர்கிறது. இதனாலேயே ஒருவரை பார்த்து மற்றவர்களும் தீக்குளிக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. 

பலர் தமிழகத்தில் தான் இவ்வாறு நடக்கிறது பிரச்சனைக்குரிய தமிழீழத்திலேயே இவ்வாறு எவரும் செய்யவில்லை என்பதை குறிப்பிடுகிறார்கள். வேறு பலரோ தலைவர்களின் ஆவேச கருத்துகளில் மதிமயங்கி தீகுளிக்கும் இவர்கள் எந்த தலைவராவது தீக்குளிக்க முன்வருவார்களா என்பதை யோசிக்க மறந்துவிடுகிறார்கள் என்றும் தங்கள் கருத்தை கூறுகிறார்கள். 

எவ்வாறு இருந்தாலும் உயிர் என்பது விலை மதிக்க இயலாதது. வாழ்க்கை என்பது கிடைத்தற்கரிய பொக்கிஷம். அதில் சிறந்த வழியில் போராடி பிரச்சனை்க்கு தீர்வு காணாமல் தீக்குளிப்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எத்தனை நபர்கள் தீக்குளித்தாலும் நமது முடிவு எடுக்க வேண்டிய தலைவர்கள் பிரச்சனையை அரசியலுக்காக பயன்படுத்த செய்வார்கள் எனும் போது தீக்குளிப்பதால் அரசியல் தீர்வு கிடைக்குமா?

 விவாதிக்கலாம் வாங்க http://tamilnanbargal.com/node/49677


--
வினோத் கன்னியாகுமரி
tamilnanbargal.com/friends/vinoth

கேட்டுக்கோங்க: எதிலும் குறை காண ஆரம்பித்தால் குறை மட்டுமே கண்ணுக்கு தெரியும்.
(கேட்டிச்சி)

Reply all
Reply to author
Forward
0 new messages