Fwd: Register now: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) *தமிழ் கூறும் தலைமுறை

3 views
Skip to first unread message

Wisconsin Tamil Sangam

unread,
Mar 25, 2022, 5:16:02 PM3/25/22
to wits-g...@googlegroups.com, wits-...@googlegroups.com
அன்புடையீர் வணக்கம்
கீழுள்ள மின்னஞ்சல் உங்கள் கவனத்திற்கு..

நன்றியுடன்
விஸ்கான்சின் தமிழ்ச்சங்கம் 

---------- Forwarded message ---------
From: FeTNA Secretary <secr...@fetna.org>
Date: Wed, Mar 9, 2022 at 10:25 AM
Subject: Register now: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) *தமிழ் கூறும் தலைமுறை
To: Kingsly S <kingsly...@gmail.com>


அன்புடையீர் ,


நமது தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கும், தமிழ்ப்பள்ளி  ஆசிரியர்களுக்கும்  நன்றி கலந்த வணக்கங்களோடு இந்த மடலை அனுப்புகிறோம்.


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) *தமிழ் கூறும் தலைமுறை நிகழ்ச்சிக்காகச் சிறந்த பேச்சாளர்களை* இந்த மாபெரும் போட்டியில் பங்கு பெற அன்புடன் வரவேற்கிறோம்.


அமெரிக்க அளவில் தமிழ் பேச்சில் சிறந்து விளங்குபவர்கள் உலக அரங்கில் நிறுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். இதற்காகத் தமிழ்ச்சங்க அளவில், வட்டார அளவில், நாடு தழுவிய பேச்சுப் போட்டிகளைச் சென்ற வருடம் முதல் முறையாக  நடத்தியதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


 தமிழ் கூறும் தலைமுறை சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு  பயிற்சிப் பட்டறைகளில் நம் மாணவர்கள் மெருகேற்றப்பட்டார்கள்.


கடந்த வருட வெற்றியின் உற்சாகம்  குறையுமுன்பே  இந்த வருடப் போட்டிகளிலும் பயிற்சிகளிலும் உங்கள் ஆதரவுடன் இறங்குகிறோம்.


இதற்காக உங்கள் அமைப்புகளில் போட்டிகள் நடத்தி அல்லது உரிய முறையைப் பின்பற்றித் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்களைக் கீழ்க்கண்ட படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பவும். 


பேச்சாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறையை இங்கே காணலாம்:

https://docs.google.com/document/d/1VdF5tdphj1-Il02L7xzC-9Bakj5Uo0huHbj95EpUaMI/edit?usp=sharing


இந்த போட்டியின் முக்கியத்துவத்தை உணர்த்தக் குறைந்த கட்டணமாக உறுப்பினர் சங்கங்கள்/ATA/ITA பள்ளி குழந்தைகளுக்கு 10 வெள்ளிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். சங்கம்/பள்ளி அல்லாது பொது நுழைவு (Open Category) குழந்தைகளுக்கு கட்டணம் 30 வெள்ளிகளாகும். மற்ற விதிகளில் மாற்றம்  இல்லை.


தமிழ்ச் சங்கம்/பள்ளி சார்பாக *சிறுவர்கள் (Junior) இரண்டு பேச்சாளர்களையும் இளைஞர்களில் (Senior) இரண்டு பேச்சாளர்களையும்* தேர்ந்தெடுக்க வேண்டுகிறோம்.

*சங்கம்/பள்ளி அல்லாது பொது நுழைவு (Open Category)* மூலம் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி படிவத்தை நிரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்


Junior: 

10 வயது நிரம்பியவர்கள் முதல் - 14  வயது நடப்பில் உள்ளவர் வரை (2021 ஜனவரி 1 அன்று )

பிறந்த தேதி:  1 ஜனவரி 2007 முதல் 31 டிசம்பர் 2010 வரை பிறந்தவர்கள் 


Senior: 

14 வயது நிரம்பியவர்கள் முதல் - 21  வயது நடப்பில் உள்ளவர்  வரை (2021 ஜனவரி 1 அன்று )

பிறந்த தேதி:  1 ஜனவரி 2000 முதல் 31 டிசம்பர் 2006 வரை பிறந்தவர்கள் 


Registration Link: tinyurl.com/tkt2022


*படிவத்தை அனுப்ப இறுதி நாள்: மார்ச் மாதம் 31-ம் 11:59 PM EST (கூடிய விரைவில் அனுப்பவும்)*


உங்கள் ஆதரவுடன் நமது வெற்றி பயணம் அமெரிக்க மண்ணில் தொடரும்.


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு !

 

அன்புடன்,

பேரவை தமிழ் கூறும் தலைமுறை அணியினர்

தலைமை: கிங்ஸ்லி சாமுவேல்

துணைத் தலைமை: மீனா சுந்தரபாண்டியன்’

https://fetna.org/tamil-kurum-thalaimurai/

https://youtu.be/r498IoSBb9c

=====

If you have any questions, please direct it to one of the following:

meenasund...@gmail.com

kingsl...@gmail.com

tamil_th...@fetna.org


நட்புடன்,
பாலா சுவாமிநாதன் ,
செயலாளர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.
உங்கள் நெருக்கடி சூழலில் உடனடி உதவிக்குப் பேரவையின் "உதவும் இதயங்கள்" 24x7 தொலைபேசி: 1-866-FETNAHH

For instance support during your crisis situations - FeTNA's HELPING HEARTS  24x7 Hotline: 1-866-FETNAHH


Reply all
Reply to author
Forward
0 new messages