Fwd: இன்றைய லட்சியம் நாளைய மாற்றம் //// இன்றைய (அ)லட்சியம் நாளைய (ஏ)மாற்றம்

24 views
Skip to first unread message

K Kumaraswamy

unread,
Nov 8, 2011, 1:05:22 AM11/8/11
to kspti...@gmail.com, shivanic...@gmail.com


   இன்றைய லட்சியம்     நாளைய  மாற்றம்

 

                                இன்றைய ()லட்சியம்   நாளைய   ()மாற்றம்

 

cid:1.1263822613@web137302.mail.in.yahoo.com

 

 

cid:1.940961533@web137313.mail.in.yahoo.com

 

எனக்குப்பிடித்த பாடல்

 

காளமேகப்புலவர் சிலேடைப்பாடல்கள் பாடுவதில் வல்லவர். இந்த பாட்டில் மக்கள் பயன்படுத்திவந்த எண் அளவைகளைவைத்து அவர் ஆடியிருக்கும் சொற்சிலம்பம் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

நம் பழந்தமிழர் உபயோகித்த பல அளவைகள் இப்போது வழக்கத்தில் இல்லை. அந்த அளவைக்குறிக்கும் சொற்களும் இப்போது வழக்கொழிந்துவிட்டன். அதனால்தான் அளவைகளை அமைத்து காளமேகப்புலவர் பாடிய இந்த பாடலை கீழே தந்திருக்கின்றேன்.

 

 

முக்காலுக்கு ஏகாமுன் முன்னரையில் வீழாமுன்

அக்கா லரைக்கால்கண்டு அஞ்சாமுன் --விக்கி

இருமாமுன் மாகாணிக்கு ஏகாமுன் கச்சி

ஒருமாவின் கீழரைஇன்று ஓது.


முக்காலுக் கேகாமுன் = முக்காலுக்கு ஏகா முன் = பிறவியில் தோன்றிய இரண்டு கால்கள் வலுவிழந்து, இடுப்பும் பலமற்று, முதுகும் கூனிப்போய்
                                 இரண்டுகால்களுக்குத் துணையாக மூன்றாவதுகாலாகக் கோல் ஒன்றை ஊன்றும்வண்ணம் முதுமை ஏற்படுவதற்குமுன்னர்

முன்னரையில் வீழாமுன் = அதற்கு முன் நரை ஏற்படுமுன்பாக

அக்காலரைக்கால்கண்டஞ்சாமுன்= அந்தக் காலர்களாகிய எமதூதுவரைக்கண்டு அஞ்சி கால்கள் நடுநடுங்குமுன்பாக

விக்கி இருமாமுன் = உயிர் பிரியுமுன்னர் விக்கிக்கொண்டு இருமல் ஏற்படுமுன்னர்

மாகாணிக் கேகாமுன்= சுடுகாட்டுக்கு ஏகாமுன்

கச்சி = காஞ்சிபுரத்தில் உள்ள

ஒரு மாவின் = தல விருட்சமாகிய ஒரு மாமரத்தின்

கீழரை = கீழ் இருக்ககூடியவரை

இன்று ஓது = இன்றைக்கே துதி செய்

இதில் வரக்கூடிய சொற்கள், பின்னங்களைப்(fractions) போல் தோன்றும் சொற்கள். அவை எந்த பின்னங்களைக் குறிக்கின்றன என்பதை, இப்போது நினைவில் இருப்பதை வைத்துச்சொல்ல முயல்கிறேன்.

முக்கால் = 3/4
முன்-னரை = 1/2
அக்-காலரைக்கால் = 3/8
இருமா = 1/10
மாகாணி = 1/16; வீசம் என்று சொல்வார்கள்
ஒரு மா = 1/20
கீழரை = 'கீழ்வாய் இலக்கம்' என்றொருபிரிவு பின்ன வரிசையில் இருக்கிறது.
மேலரை என்பது 1/2 ; கீழரை என்பது கீழ்வாயிலக்க வரிசையில் வரும்.
இன்னும் மிகச்சிறியது. அதனுடைய மதிப்பு

 



Confidentiality note:
The information in this email and any attachment may contain confidential and proprietary information of Heidelberger Druckmaschinen AG and/or its affiliates and may be privileged or otherwise protected from disclosure. If you are not the intended recipient, you are hereby notified that any review, reliance or distribution by others or forwarding without express permission is strictly prohibited and may cause liability. In case you have received this message due to an error in transmission, we kindly ask you to notify the sender immediately and to delete this email and any attachment from your system.

image002.jpg
image001.gif
who is hindering growth.pps
Reply all
Reply to author
Forward
0 new messages