Jugaad

68 views
Skip to first unread message

thaamarai chelvan

unread,
Feb 17, 2017, 11:19:23 AM2/17/17
to thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil_a...@googlegroups.com, tamil...@googlegroups.com, theyva-...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com
http://www.thehindu.com/opinion/lead/Jugaad-jurisprudence-the-Tamil-Nadu-way/article17314028.ece
.
ஜுகாத் என்ற இந்தி/உருதுச்சொல்லுக்கு தமிழில் என்ன?
.
https://en.wikipedia.org/wiki/Jugaad
.
சென்னைத் தமிழில் "கூதல்" என்ற சொல்வழக்கு உள்ளது. இது கிட்டத்தட்ட
இந்தப்பொருளிலும் (சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி ஏமாற்றல்)
பயன்படுத்தப்படுகிறது.
.
காட்டு: விளையாடிக்கொண்டிருக்கும்போது, ஒருவர் மற்றறெருவரை ஒரு
நுணுக்கத்துடன் இலகுவாக ஏமாற்றிவிட்டாரென்றால், அந்த மற்றொருவர்: "இது
கூதலாட்டம்!! இது கூதலாட்டம்!! இதை ஏத்துக்கமுடடியாது" என
கடிந்துகொள்வார்.
.
கூதல், தமிழா? இல்லையென்றால் கூதலின் வேரென்ன?
.
#jugaad
#ஜுகாத்
#கூதல்

நன்றி
தாசெ

N. Ganesan

unread,
Feb 17, 2017, 9:32:28 PM2/17/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Friday, February 17, 2017 at 8:19:25 AM UTC-8, தாமரைச்செல்வன் wrote:

கூதல், தமிழா? இல்லையென்றால் கூதலின் வேரென்ன?
.

 சென்னைத் தமிழில் உள்ள  கூதல் (guudhal) தமிழ் இல்லை என நினைக்கிறேன்.
என்ன மொழி என்று பார்க்கவேண்டும்.


----------

தமிழில் கூதல் < கூதிர் = குளிர் எனப் பொருள். இரண்டும் வேறுபாடு உடைய சொற்கள்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 17, 2017, 10:14:43 PM2/17/17
to வல்லமை, mint...@googlegroups.com

On Friday, February 17, 2017 at 8:19:25 AM UTC-8, தாமரைச்செல்வன் wrote:
http://www.thehindu.com/opinion/lead/Jugaad-jurisprudence-the-Tamil-Nadu-way/article17314028.ece 

ஜுகாத் என்ற இந்தி/உருதுச்சொல்லுக்கு தமிழில் என்ன? 

https://en.wikipedia.org/wiki/Jugaad 

விரிவாகச் சொல்லலாம்.    jugāṛa  

கொந்தரிவாள் kontarivāḷ , n. < கொந்து- +. Sickle, long-handled bill-hook, as for clearing prickly-pear; முட்செடிகளை அழித்து நீக்க உதவும் அரிவாள்வகை. Loc.
கொந்து¹-தல் kontu-  5 v. tr. 1. To peck, pick, mince; கொத்துதல். 2. To injure fruits by pecking, gnawing; பழமுதலியவற்றை அலகாற் குதறுதல்.

கொந்தல்/கந்தல் . கந்தலாடை: பல துணிகளையும் சேர்ந்த ஆடைக்கும் வரும்.

கொந்தல்வண்டி - hacked vehicle. கொந்துதல்/கொத்துதல் - to hack. 
கொந்தலாடை/கந்தலாடை - hacked dress, கொந்தல்/கந்தல் புரோகிராம் - hacked code ....

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 17, 2017, 10:38:46 PM2/17/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
கொந்தல்/கந்தல் = கந்தை > கந்தா என சம்ஸ்கிருதத்தில் வழங்கும்.
hacked (=patched) dress, எனவே, ஜுகாடம் - கொந்தல்/கந்தல் வண்டி எனலாம்.

kanthā कन्था Definition: कन्था 1 A patched garment, wallet (worn by ascetics); जीर्णा कन्था ततः किम् Bh.3.74,19,86; Śānti. 4.4,19. -2 A wall. -3 A town. -Comp. -धारणम् wearing a patched garment, as practised by some Yogins. -धारिन् m. a religious mendicant, Yogin; क्वचित् कन्थाधारी क्वचिदपि च दिव्याम्बरधरः Bh. (Apte dictionary)

kaupīnaṃ śatakhanḍajarjarataraṃ kanthā punastādṛśī
naiścintyaṃ nirapekṣabhaikṣam-aśanaṃ nidrā śmaśāne vane |
 svātantryeṇa niraṅkuśaṃ viharaṇaṃ svāntaṃ praśāntaṃ sadā
sthairyaṃ yogamahotsave.api ca yadi trailokya-rājyena kim || ||
- vairāgyaśatakam 91

Translation:

Wearing a loin cloth, worn out and torn in a hundred ways, with a patched up garment again in the same condition, free from anxiety, eating food got from begging without any expectation, sleeping in a cremation ground or in a forest, wandering freely in an unfettered manner, always with a tranquil mind, well established in the festivity of union with the Lord – what value does even the kingship over the three worlds has for such a one!

http://www.narayanashramatapovanam.org/verses-for-introspection/901-shloka-56


 

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 20, 2017, 8:17:26 PM2/20/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Friday, February 17, 2017 at 6:32:27 PM UTC-8, N. Ganesan wrote:


On Friday, February 17, 2017 at 8:19:25 AM UTC-8, தாமரைச்செல்வன் wrote:

கூதல், தமிழா? இல்லையென்றால் கூதலின் வேரென்ன?
.

 சென்னைத் தமிழில் உள்ள  கூதல் (guudhal) தமிழ் இல்லை என நினைக்கிறேன்.
என்ன மொழி என்று பார்க்கவேண்டும்.


Guudhal - trckery, fraud,

குதறு குதல்+து எனப் பிரியும்.

குதறு- என்பதற்கு ஒருபொருள்: To deviate from the right course, to go astray, to miss the way; நெறிதவறுதல். (திவ். திருவாய். 10, 1, 6, அரும்.)  (MTL)

குதல் என்பது கூதல் என சென்னையில் நீட்டி வழங்குகிறது போலும்.

NG

N. Ganesan

unread,
Feb 20, 2017, 8:29:05 PM2/20/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Friday, February 17, 2017 at 8:19:25 AM UTC-8, தாமரைச்செல்வன் wrote:

ஜுகாத் என்ற இந்தி/உருதுச்சொல்லுக்கு தமிழில் என்ன?
.
https://en.wikipedia.org/wiki/Jugaad
.

மக்காச் சோளத்தை தணலில் வாட்ட ஒரு ஜுகாட்:

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Feb 21, 2017, 2:40:19 AM2/21/17
to மின்தமிழ், vall...@googlegroups.com
கவிஞர் ஹரிகி கூதல் என்னும் சென்னை வார்த்தைக்கு சரியான விளக்கம் சந்தவசந்தத்தில் தந்துள்ளார். படிக்கவும்.

On Monday, February 20, 2017 at 11:35:03 PM UTC-8, Hari Krishnan wrote:

2017-02-21 12:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
Guudhal - trckery, fraud,

குதறு குதல்+து எனப் பிரியும்.

குதறு- என்பதற்கு ஒருபொருள்: To deviate from the right course, to go astray, to miss the way; நெறிதவறுதல். (திவ். திருவாய். 10, 1, 6, அரும்.)  (MTL)

குதல் என்பது கூதல் என சென்னையில் நீட்டி வழங்குகிறது போலும்.

கன்னடச் சொல்.  கன்னடத்தில் கூதலு என்றால், 'தலையினிழிந்த ***அனையர்' என்று வள்ளுவர் எதைக் குறிப்பிட்டாரோ அது.

மயிர்.  :-)

சென்னைத் தமிழில் ஒரே கூதலாக்கி வச்சிருக்கான் அப்படின்னா, குழப்படி செய்திருக்கிறான் என்று பொருள்.  Its all floccinaucinihilipilification, you see!  

நன்றி. நாம் கூந்தல் என்று சொல்வதா?

நா. கணேசன்
 

-- 
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Innamburan S.Soundararajan

unread,
Feb 21, 2017, 6:26:17 PM2/21/17
to vall...@googlegroups.com, மின்தமிழ்
சென்னைத் தமிழில் ஒரே கூதலாக்கி வச்சிருக்கான் அப்படின்னா, குழப்படி செய்திருக்கிறான் என்று பொருள்.  Its all floccinaucinihilipilification, you see!  
~ ஆங்கிலத்தில் நீண்ட சொல் என்பதை தவிர அது இங்கே எப்டி பொருந்துகிறது.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Feb 22, 2017, 9:02:10 AM2/22/17
to மின்தமிழ், vallamai


On Tuesday, February 21, 2017 at 9:29:03 PM UTC-8, இசையினியன் wrote:
கூதல் என்ற சொல்லின் பொருள் குளிர் ஆகும். இதன் வேர் கூதிர் ஆக இருக்கலாம்.

மார்கழி மாதத்தில் இச்சொல் பிரபலம்.

குளிர் அதிகமாக இருக்கும் பட்சத்தில், இன்னைக்கு ரொம்ப கூதல் அடிக்குதல்ல? என்பது பேச்சுத் தமிழ்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை பகுதியில் பிரபலம். தேனி, பழனி,  பொள்ளாச்சி போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இவ்வார்த்தை கூதிர், மழைக் காலங்களில் உபயோகம் செய்யப்படுவது தேற்றம்.

சென்னையில் பேசப்படுவதை தமிழெனக் கொண்ட அறிஞரின் பெருந்தன்மை பாராட்டுக் குறியது.


 சென்னை தமிழிலும் சிறப்புகள் உள்ளன, பிச்சைமுத்து ஐயா, 

உ-ம்: Voicing: புல்லுதல், சுவரைப் புல்லும் புல்லி (Proto-Dravidian) > பல்லி (பல்லி) ஆனால், தெலுங்கிலும், சென்னையிலும் balli.
இதுபோல் வாய்ஸிங் தான் பொலி/பலி (சங்கச் சொல்) - பொலி பொலி என்று சொல்லி பண்டாரம் கிடாய் வெட்டுப் பார்த்திருப்பீர்கள்.
தமிழின் பழைய அந்தணர்கள் செய்யும் சடங்கு பொலிச் சடங்கு - சென்னைப் பேரகராதி: மங்கல அந்தணர் செய்வது,
Exclamation by a barber on the third day of a funeral, as he pours milk at the foot of a green tree after throwing the bones of the deceased in water, a custom among the Koṅgu Vēḷāḷas; நாவிதன் 
கொங்குவேளாளரில் இறந்தவரெலும்பை மூன்றா நாள் நீரிலிட்டுப் பசுமரத்திற் பால்வார்க்கும்போது வழங்கும் நற்செயல். (G. Tp. D. I, 105.) ”
அம்பட்டனார், அம்பணவனார், அந்தணனார், ... இவர்களும் அணங்குக் கோட்பாடும் சங்க காலம் (கிமு 300 - கிபி 300), அதர்கு முன்பும் இருந்தது.
சங்க காலத்தில் சம்ஸ்கிருதத்தால் மாறும் நிலையையும் காண்கிறோம் (Transititional Stage).

இந்தப் பொலி/பலி சென்னை, தெலுங்கு, சம்ஸ்கிருதத்தில் ’வாய்ஸிங்’ பெற்று bali என்றாகிறது.
இந்த வாய்ஸிங் மாற்றத்துக்கு Goodhal நல்ல உதாரணம். கூந்தல்/கூதல் தொடர்புடைய சொற்கள். கன்னடத்தில் Koodhal தான்.
சென்னையில் Goodhal என மாறுகிறது. Ref. DED

Bali என்ற சொற்பிறப்பு (தெலுகு, சம்ஸ்கிருதம், ...) Koodhal Goodhal ஆதலை ஒப்பிடுக.

NG

On Tuesday, February 21, 2017 at 10:06:29 PM UTC-8, Hari wrote:

2017-02-22 10:59 GMT+05:30 இசையினியன் <pitchaim...@gmail.com>:
கூதல் என்ற சொல்லின் பொருள் குளிர் ஆகும். இதன் வேர் கூதிர் ஆக இருக்கலாம்.

மார்கழி மாதத்தில் இச்சொல் பிரபலம்.

அறிவோம்.  மார்கழி மாதத்தில் மட்டுமல்லாமல் எல்லா மாதங்களிலும் இந்தச் சொல் பிரபலந்தான்.
 

குளிர் அதிகமாக இருக்கும் பட்சத்தில், இன்னைக்கு ரொம்ப கூதல் அடிக்குதல்ல? என்பது பேச்சுத் தமிழ்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை பகுதியில் பிரபலம். தேனி, பழனி,  பொள்ளாச்சி போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இவ்வார்த்தை கூதிர், மழைக் காலங்களில் உபயோகம் செய்யப்படுவது தேற்றம்.

குன்று குளிர்பன்ன கூதிர்ப் பானாள் என்ற நெடுநல்வாடையையும் வாசித்திருக்கிறோம்.  ஊதற்காற்று, கூதலடிக்கிறது என்பனவெல்லாம் எம் இளம்பிராயத்தில் வழக்காற்றிலிருந்த சொற்றொடர்கள்.  பேச்சுத் தமிழில் மட்டுமல்லாமல் இலக்கிய ஆட்சியிலும் 'குளிர்' என்ற பொருளில் கூதல் என்ற பயன்பாடுண்டு.

கூதலாய்ப் பொழிகின்ற மாரியாகி குவலயங்கள் முழுதுமாய் கொண்ட லாகி 

என்றும்

கூதல் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம்

என்றும்

தேவாரத்தில் பயில்வதூஉமறிவோம்.


சென்னையில் பேசப்படுவதை தமிழெனக் கொண்ட அறிஞரின் பெருந்தன்மை பாராட்டுக் குறியது.

நெல்லையிலும் கோவையிலும் இன்ன பிற மாவட்டங்களிலும் பேசப்படுவதைப் போலவே சென்னையில் பேசப்படுவதும் வட்டார வழக்குதான்.  தென்னாற்காடு வட்டார வழக்கு.   இதை யாரும் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.  மக்கள் பேசுவதெல்லாம் மொழிதான் என்று மதிக்கும் மனப்பான்மை இருந்தால் போதும்.

நினைத்தால் சென்னைத் தமிழைத் தூ தூ என்று துப்புவதும் சென்னைத் தமிழில் இசைக் கலைஞர்கள் பாடினால் கொண்டாடுவதும் அறிஞர்களுடைய போக்காக இருக்கிறதை அறிவோம்.  யாம் பிறந்து வளர்ந்து விளையாடியது சென்னை எல்லிஸ்புர சேரிப் புழுதியில்.  ஆகவே அஃதுமெமக்குவப்பானதே.

இடம் பொருளேவலுக்கேற்ப சொன்ன பொருளேயல்லாமல் அறியாமையாற் சொன்னதன்று.   யாம் நுவன்றதும் சந்தவசந்தம் என்ற மெய்யறிஞர் குழுவில்.  இக்குழுவுக்கு முற்செலுத்தப்பட்டிருக்கிறது.  இவ்வாறு நடந்திருப்பதையும் இப்போழ்துதான் தற்செயலாக அறிய நேர்ந்தது.   அனுப்பியது எம் தவறன்று.  இக் குழுவைவிட்டு எட்டியிருக்கவே விரும்புகின்றாம்.
Reply all
Reply to author
Forward
0 new messages