Re: [MinTamil] Re: தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா ?- 1 - வேதியியல்

89 views
Skip to first unread message

S. Jayabarathan

unread,
Jun 13, 2018, 7:49:42 AM6/13/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Raju Rajendran, Asan Buhari, Anne Josephine, kanmani tamil, Anna Kannan, தேமொழி, Elangovan N, N. Ganesan
அணுவியல், அண்டவியல், மற்றும் பொறியியல் விஞ்ஞானத்தைத் தமிழில் 50 ஆண்டுகளுக்கு மேலாய் ஆயிரம் கட்டுரைகள் வலைத் தமிழில் மூலமாக எழுதிவருகிறேன்.  அவற்றில் இரசாயன / மருத்துவச் சமன்பாடுகள், கணிதக் கோட்பாடுகள் ஆங்கிலத்தில்தான் எழுதி வருகிறேன்.  காரணம் அவற்றின் பயன்பாடுகளைத் தமிழில் எழுதினால் பிழையாகிக் குழப்பம் உண்டாக்கி உயிர் பாதிப்புகள் நேரலாம்.  

மூலக அணி அட்டவணைத் தமிழில் எழுதிக் கொலுவில் வைத்துக் கொள்ளலாம்.  அந்த இரசாயனப் பைபிள் ஆங்கிலத்தில் இருப்பதை மாற்றினால் இரசாயன / மருத்துவ விஞ்ஞானம் முறிந்துவிடும்.  

image.png

image.png

image.png


On Wed, Jun 13, 2018 at 12:53 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:


2018-06-13 4:05 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நான் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பள்ளியில் படித்தவள்தான்.  
ஆங்கிலம் - 1, ஆங்கிலம் - 2  ஆகிய பாடங்கள் மட்டுமே இரண்டாம் மொழியாகப் படித்தேன்.
பிறகு கல்லூரியில் அறிவியல்  பயிலத் தொடங்கிய பிறகு முற்றிலும் ஆங்கிலம்.
ஆனால் நீங்கள் குறிப்பிடும் எந்த ஒரு  சிக்கலையும் நான் எதிர்கொண்டதில்லை. 
ஒரு குறியீடு என்றால்; அது எதற்காக,  எதனால், எந்த அடிப்படையில் அந்தக் குறியீட்டை பெறுகிறது என்ற புரிதலுடன் படித்தால், குழப்பம் ஏற்பட வழியில்லை.

உண்மையில் உங்கள் கட்டுரையில் காணும் மீத்தேனின் கட்டமைப்பைப் படித்துவிட்டு மேல்நிலை கல்வி பயிலச் சென்றால்தான் உண்மையில் சிக்கலே துவங்கும் என்பது எனது கருத்து.
எப்படி ஜனவரி பிப்ரவரி மார்ச் என்பதைத் தமிழ்ப்படுத்துவதில்லையோ 
மீட்டர், கிலோ என்பதைத் தமிழ்ப்படுத்துவதில்லையோ அது போல விட்டுவிடுங்கள்.
இவையெல்லாம் பிராண்ட் நேம், பெயர்ச்சொற்கள் போல கையாண்டால்  போதுமானது 
இல்லாவிட்டால் ஆறுமுகம் = sixface,   அண்ணாமலை = brother mountain என்ற மொழிபெயர்ப்பு போன்ற  நிலையில் கொண்டுவிடும். 

வினைச்சொற்களை மட்டும் தமிழாக்கினால் போதும்.
தொலைக்காட்சியில் வரும் மிக்ஸ் பண்ணுங்க, பாயில் பண்ணுங்க,ஹீட் பண்ணுங்க, கூல் பண்ணுங்க போல இல்லாமல் 
கலக்குங்கள், கொதிக்க வையுங்கள், சுட வையுங்கள், ஆற வையுங்கள் என்பது போல தமிழ்ப்படுத்தினால் போதுமானது. 

நீங்கள் அறிவியலைக் கையில் எடுத்திருப்பது கலக்கத்தைத் தருகிறது. 

😱


..... தேமொழி

கலங்காதீர்கள், எல்லாம் நன்மைக்கே. :))

என்னுடைய கட்டுரையில் நான் எந்தவொரு தனிமத்தின் பெயரையும் மாற்றவில்லை தங்கம், இரும்பு, வெள்ளி உட்பட.

மாறாக, தனிமங்களின் குறியீடுகளை மட்டுமே தமிழில் எழுதச் சொல்கிறேன். அதைக்கூடச் செய்யாமல் வாழைப்பழச் சோம்பேறிகளாய் இன்னும் எத்தனை ஆண்டுகளை நாம் ஓட்டப் போகிறோம்?

ஆங்கிலத்தின் உதவியின்றி நாம் தனித்தமிழில் ஒருநூல் கூட இயற்ற முடியாவிட்டால் நாமெல்லாம் தமிழர் என்று பெருமைப்பட்டுக் கொண்டு என்ன பயன்?.

11 ம் வகுப்பு வேதியியல் பாடம் தமிழில் எழுதப்பட்டுள்ள அரசுநூலைப் பார்த்தேன். ஒரு பக்கத்துக்குக் குறைந்தது 20 ஆங்கிலச் சொற்கள் / எழுத்துக்கள் இருக்கும். இப்படி எழுதுவதற்குப் பெயர் தமிழ்நூலா?. அதற்குப் பதிலாக அனைத்தையும் ஆங்கிலத்திலேயே அச்சடித்துவிட்டுப் போயிருந்தால் செலவும் நேரமும் மிச்சமாயிருக்கும். !

1992 ல் வேதியியலில் 195 மதிப்பெண்கள் எடுத்தவன் நான். இது எனக்கான கட்டுரை அல்ல. நான் இந்தக் கட்டுரையை எழுதியிருப்பது சராசரி மாணவர்களின் நிலைமையைக் கருதி.

அம் மாணவர்களின் நெஞ்சில் ஆங்கிலம் தான் எல்லாம், அதன் உதவியின்றி எதையும் செய்ய இயலாது என்ற விதையை மிக ஆழமாக பள்ளிப் பருவத்தில் இருந்தே இப்படிப் பல நூல்களின் மூலம் ஊன்றி விடுகிறோம். அப்புறம் அவர்கள் எப்படி நமது தாய்மொழியை மதிப்பார்கள்?. அதனால்தான் தமிழ்ப் பாடத்தில் பல மாணவர்கள் தொடர்ந்து தோல்வியுறுகின்றனர். இது வெட்கக்கேடு இல்லையா?. யார் ஒருவர் தாய்மொழியில் ஆழமான பயிற்சி உடையவரோ அவரால் ஏனைப் பாடங்களையும் நன்கு கற்றுத் தேர முடியும். இதற்கு நானே ஒரு சான்று என்று கூறிக்கொள்வேன். இதுதான் உண்மையும் கூட.

கீழே ஒரு சான்று தந்துள்ளேன், ஆங்கிலத்திலும் தமிழிலும்

3 HCl + Al(OH)3 >>> AlCl3 + 3 H2O

அலு(கை`ஆ)3 + 3 கை`.கு >>> அலு.கு3 + 3 கை`2.ஆ

இந்த இரண்டையும் படிக்கச் சொல்லுங்கள் தமிழ்வழியில் பயிலும் மாணவனிடம்.

எது எளிமையாகவும் புரியும்படியும் இருக்கிறது என்று கேளுங்கள்.

உறுதியாகத் தமிழ்ச்சமன்பாட்டைத் தான் அவன் தேர்ந்தெடுப்பான். ஏனென்றால் அதுதான் புரியும்படியாய் இருக்கிறது.

ஏதோ என்னால் முடிந்தவரை விளக்கிவிட்டேன். அப்புறம் உங்கள் விருப்பம்.

அன்புடன்,

தி.பொ.ச.
 






On Tuesday, June 12, 2018 at 7:01:55 AM UTC-7, திருத்தம் பொன். சரவணன் wrote:

தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா ?- 1 - வேதியியல்

முன்னுரை:

தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா?. என்ற தலைப்பில் பன்னெடுங்காலமாகவே கருத்தரங்கங்களும் பயிலரங்கங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன. ஆனால், இவற்றின் விளைவுதான் என்ன?. ஒன்றுமில்லை.!. ஏன்?. ஏனென்றால், இந்த அரங்குகள் எல்லாம் தமிழில் அறிவியல் நூல்களைச் சமைப்பதில் இருக்கும் பல்வேறு சிக்கல்களை மட்டுமே முன்வைக்கின்றன. இச்சிக்கல்களுக்கான தீர்வுகளை வரையறுத்து முன்வைக்கவோ அவற்றை அலசி ஆராய்ந்து முடிவெடுத்து நடைமுறைப் படுத்தவோ முன்வராதது வருத்தத்திற்குரியது. தமிழில் அறிவியல் நூல்களை இயற்ற முடியவே முடியாது என்று கூறும் தமிழரே பலரிருக்க, அப்படியே இயற்றினாலும் ஆங்கில மொழியின் துணையின்றி முழுமையாகத் தமிழில் இயற்ற இயலாது என்பாரும் உளர். இவர்கள் எல்லோருமே ஒன்றை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள். தமிழ் தனித்தே இயங்கவல்ல ஒரு வளம்மிக்க மொழி. இம்மொழிக்கு வேறு எந்தவொரு மொழியின் உதவியும் தேவையில்லை. தமிழில் உள்ள எழுத்து மற்றும் சொற்களைக் கொண்டே ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கான அறிவியல் நூல்களை இயற்ற முடியும். முதலில், தமிழில் வேதியியல் நூல்களை இயற்றும் முறை பற்றி இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

தாய்மொழியில் கல்வியின் பயன்:

அறிவியல் நூல்கள் தான் ஏற்கெனவே ஆங்கில மொழியில் உள்ளனவே, ஏன் தமிழ்மொழியில் புதிதாக அறிவியல் நூல்களை அரும்பாடுபட்டுச் செய்யவேண்டும்?. என்று பலர் கேட்கின்றனர். இவர்கள் தாய்மொழிக் கல்வியின் பயனையோ சிறப்பினையோ அறியாதவர்கள். ஒரு கருத்தினைத் தாய்மொழியில் கற்பதற்கும் அதேகருத்தினை வேற்றுமொழியில் கற்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. தாய்மொழிக்கல்வி என்பது சமைத்த சோற்றினை உண்பதைப் போல நேரடியாக ஏற்றுக்கொள்ள / புரிந்துகொள்ள எளிமையானது. வேற்றுமொழிக்கல்வி என்பது அரிசியைக் கொடுத்து உண்ணச்சொல்வதைப் போன்றது. அரிசியைச் சோறாகச் சமைத்தபின்னரே உண்ண முடிவதைப் போல வேற்றுமொழியில் இருக்கும் கருத்தினைத் தாய்மொழியில் மாற்றிய பின்னரே புரிந்துகொள்ள முடியும். இப்படி மொழிமாற்றம் செய்யும்போது ஏற்படும் சில நடைமுறைச் சிக்கல்களால் பிறமொழியில் கல்வி கற்கும் பலரும் கருத்துக்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். இவ்வாறு புரிதல் தடைபட்டுப் போவதால் வேற்றுமொழிக் கருத்துக்களைப் பலரும் அப்படியே மனப்பாடம் செய்து தேர்வுகளில் அப்படியே அதை எழுதி வருகின்றனர். தேர்வு முடிந்த சில நாட்களிலேயே தாம் கற்ற அனைத்தையும் மறந்து விடுகின்றனர். வேற்றுமொழிக் கல்விமுறையின் மிக மோசமான பின்விளைவு இதுதான்.

தாய்மொழியில் கல்வி கற்கும்போது கருத்துக்கள் நேரடியாக உள்வாங்கப் படுகின்றன. அப்போது அவற்றில் ஏதேனும் தெளிவின்மை ஏற்படின், அவை உடனுக்குடன் ஆசிரியர்களால் தெளிவாக்கப் படுகின்றன. இதைத்தான் ஐயன் வள்ளுவன் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கீழ்க்காணும் குறளில் தெளிவாக எழுதிச் சென்றுவிட்டார்.

கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.


கற்கும்போதே ஐயமின்றித் தெளிவாகக் கற்கவேண்டும். கற்றபின்னால், கற்றவற்றின் நினைவு அகத்தில் இருக்கவேண்டும் என்கிறார் வள்ளுவர். கல்விகற்கும் முறை பற்றி வள்ளுவர் கூறியிருக்கும் இக் கருத்து மிக இன்றியமையாதது ஆகும். இதைப்பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ள http://thiruththam.blogspot.com/2017/12/blog-post_23.html என்ற ஆய்வுக் கட்டுரையைப் படிக்கலாம். வள்ளுவர் கூறுவதைப் போல ஐயமின்றித் தெளிவாகக் கற்கவேண்டும் என்றால் தாய்மொழியில் கற்றால்தான் இது சாத்தியமாகும். ஏனென்றால் ஒருவருக்கு அவரது தாய்மொழி என்பது வெறும் மொழி மட்டுமன்று; அவரது எண்ணங்களும் உணர்வுகளும் ஊடாடும் களம் அது. தூங்கும்போதுகூட ஒருவரது மூளை அவரது தாய்மொழியில்தான் சிந்தித்துக் கொண்டிருக்கும். ஒருவர் விரும்பினால் அவரது எண்ணங்களை வேற்றுமொழியில் வெளிப்படுத்த முடியும். ஆனால் அவரது உணர்வுகளை அவரது தாய்மொழியில்தான் வெளிப்படுத்த முடியும். திடீரென கல்தடுக்கி விழுந்தாலோ அவரை யாராவது எதிர்பாராமல் தாக்கினாலோ அதன் விளைவாக வெளிப்படும் மொழி அவரது தாய்மொழியாகத்தான் இருக்க முடியும். சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒருவரது ஆழ்மனதில் பதிந்துள்ள மொழி அவரது தாய்மொழியே ஆகும். ஒருவரது பிறப்புமுதல் இறப்புவரை அவருடன் கூடவே வருவதான தாய்மொழியில் கல்வி கற்றால் அவர் கற்ற அக் கல்வியும் அவரது இறுதிவரையிலும் அவருடன் நிற்கும் என்பது வெள்ளிடைமலை. இதுதான் தாய்மொழியில் கல்வி கற்பதால் ஏற்படும் ஆகச்சிறந்த பயனாகும்.

வேதியியல் நூல்களில் உள்ள சிக்கல்கள்:

தமிழ் மாணவர்கள் வேதியியல் நூல்களைக் கற்பதில் உள்ள சிக்கல்களைப் பற்றி முதலில் காண்லாம். எல்லா அறிவியல் நூல்களிலும் இருப்பதைப் போலவே வேதியியல் நூல்களிலும் காணப்படுவதான முதல் சிக்கல் ஒலிப்புச் சிக்கலாகும். அதாவது தமிழில் க,ச,ட,த,ப ஆகிய வல்லின ஒலிப்புக்கள் வகைக்கு ஒன்று மட்டுமே இருக்க, வேதியியலில் வரும் தனிமங்கள், மூலக்கூறுகள், கூட்டுப்பொருட்கள், கண்டுபிடிப்பாளர்கள் போன்றவற்றின் பெயர்கள் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட வல்லின ஒலிப்புக்களை உடையனவாய் இருக்கின்றன. சான்றாக,

COBALT, ZIRCONIUM, ZINC, GALLIUM, BORON, ARGON, CADMIUM, RUBIDIUM, BENZENE, GLUCOSE....

போன்ற பல பொருட்களின் பெயர்களைச் சரியாக ஒலிக்கும் எழுத்துக்கள் தமிழில் இல்லை என்பது ஒரு குறையாகவே கூறப்பட்டு வருகிறது. இதனால் பொருட்களின் பெயர்களைச் சரியாக ஒலிக்கும் முறையினை மாணவர்கள் அறிந்துகொள்ள இயலாமல் போவதுடன் பிறருடன் கலந்துரையாடும்போது இவர்களது ஒலிப்பினைப் பிறர் புரிந்துகொள்ள இயலாமலோ தவறாகப் புரிந்துகொள்ளவோ வாய்ப்பு அமைகின்றது.

மேற்காணும் ஒலிப்புச்சிக்கலானது அனைத்து அறிவியல் துறைகளுக்கும் பொதுவானதாக இருக்க, வேதியியல் துறையில் இருக்கும் இன்னொரு இன்றியமையாத சிக்கல் சமன்பாட்டுச் சிக்கலாகும். வேதிவினைச் சமன்பாடுகளின் மிக இன்றியமையாத கூறாக விளங்கும் தனிமங்களின் குறியீடுகளும் வாய்ப்பாடுகளும் ஆங்கிலமொழியைச் சார்ந்தவையாக உள்ளன. இதனால் வேதிச்சமன்பாடுகளைத் தமிழ் மாணவர்கள் புரிந்துகொள்வதில் சிக்கல்கள் எழுகின்றன. அவற்றைக் கீழே சான்றுகளுடன் விரிவாகக் காணலாம்.

2 AgI + Na2S → Ag2S + 2 NaI

மேற்காணும் சமன்பாட்டில் வரும் Ag என்னும் குறியீடு சி`ல்வர் என்ற வெள்ளியையும் Na என்னும் குறியீடு சோ`டி`யத்தையும் குறிக்கும். இந்த எடுத்துக்காட்டில் வரும் பொருட்களின் பெயர்களையும் (சி`ல்வர் , சோ`டி`யம்) அவற்றின் குறியீடுகளையும் (Ag, Na) பார்த்தால் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் இருப்பதை அறிய முடியும். இதைப்போல பல தனிமங்களின் பெயருக்கும் அவற்றின் குறியீட்டிற்கும் இடையில் தொடர்பே இல்லாமல் இருப்பது சமன்பாடுகளைப் புரிந்துகொள்வதில் ஒரு தடைக்கல்லாக அமைகின்றது. அதுமட்டுமின்றி, மேற்காணும் எடுத்துக்காட்டில் வரும் S என்ற குறியீடு ச`ல்பரைக் குறிக்குமா சி`ல்வரைக் குறிக்குமா என்ற தடுமாற்றமும் பலருக்குண்டு. இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் பலரும் வேதிச்சமன்பாடுகளைப் புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்து அப்படியே தேர்வில் எழுதிக் கொட்டுகின்றனர். வேதியியல் அறிவில் ஏற்படும் குறைபாட்டினால் புதிய கண்டுபிடிப்புக்களுக்கும் வழியில்லாமல் போய்விடுகிறது.

சிக்கல்களுக்கான தீர்வுகள்:

வேதியியல் நூல்களைத் தமிழ் மாணவர்கள் புரிந்து கற்பதில் உள்ள பல்வேறு சிக்கல்களை இதுவரை கண்டோம். இனி இச்சிக்கல்களுக்கான தீர்வுகளைப் பற்றி விளக்கமாகக் காணலாம். சிக்கல்களில் முதலாவதாகக் கூறப்பட்ட ஒலிப்புச்சிக்கலை ஆறுரூபாய் முறையைப் பின்பற்றி எளிதில் தீர்த்துவிடலாம். ஆறுரூபாய் முறை பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள http://thiruththam.blogspot.com/2018/04/blog-post_26.html என்ற ஆய்வுக் கட்டுரையைப் படிக்கலாம். இந்த ஆறுரூபாய் முறையைப் பயன்படுத்தி, வேதியியலில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களையும் எவ்வாறு ஆங்கில ஒலிப்புமுறை மாறாமல் எழுதுவது என்பதனைக் கீழ்க்காணும் அட்டவணை எண் 1 ல் காணலாம்.

தமிழில் தனிமப்பெயர்களும் குறியீடுகளும்: (அட்டவணை 1)

அணு    தனிமப்பெயர்    தனிமப்பெயர்    குறியீடு   
எண்        (ஆங்கிலம்)              (தமிழ்)            (தமிழ்)    


1    Hydrogen    கை`ட்`ரச^ன்    கை`   
2    Helium    கீ`லியம்    கீ`   
3    Lithium    லித்தியம்    லித்   
4    Beryllium    பெ`ரிலியம்    பெ`   
5    Boron    போ`ரான்    போ`   
6    Carbon    கார்ப`ன்    கா   
7    Nitrogen    நைட்ரச^ன்    நை   
8    Oxygen    ஆக்சி`ச^ன்    ஆ   
9    Fluorine    ஃபுளூரின்    பு   
10    Neon    நியான்    நியா   
11    Sodium    சோ`டி`யம்    சோ`   
12    Magnesium    மெக்~னீசி`யம்    மெக்~   
13    Aluminium    அலுமினியம்    அலு   
14    Silicon    சி`லிகான்    சி`லி   
15    Phosphorus    பாச்`பரச்`    பா   
16    Sulfur    ச`ல்ஃபர்    ச`   
17    Chlorine    குளோரின்    கு   
18    Argon    ஆர்கா~ன்    ஆகா~   
19    Potassium    பொட்டாசி`யம்    பொ   
20    Calcium    கால்சி`யம்    கால்   
21    Scandium    ச்`காண்டி`யம்    ச்`கா   
22    Titanium    டைடானியம்    டை   
23    Vanadium    வனடி`யம்    வ   
24    Chromium    குரோமியம்    குர்   
25    Manganese    மேங்க~னீச்`    மே   
26    Iron    அயர்ன்    அய   
27    Cobalt    கோபா`ல்ட்    கோ   
28    Nickel    நிக்கல்    நிக்   
29    Copper    காப்பர்    காப்   
30    Zinc    சி^`ங்க்    சி^`   
31    Gallium    கே~லியம்    கே~   
32    Germanium    செ^ர்மானியம்    செ^ர்   
33    Arsenic    ஆர்செ`னிக்    ஆசெ`   
34    Selenium    செ`லினியம்    செ`   
35    Bromine    பு`ரோமின்    பு`   
36    Krypton    க்ரிப்டான்    க்ரி   
37    Rubidium    ருபி`டி`யம்    ருபி`   
38    Strontium    ச்`ட்ரான்சி`யம்    ச்`ட்   
39    Yttrium    யிட்டிரியம்    யிடி   
40    Zirconium    சி^`ர்கோனியம்    சி^`ர்   
41    Niobium    நியோபி`யம்    நிபி`   
42    Molybdenum    மாலிப்`டெ`னம்    மாலி   
43    Technetium    டெக்னீசி`யம்    டெக்   
44    Ruthenium    ருதேனியம்    ருதே   
45    Rhodium    ரோடி`யம்    ரோ   
46    Palladium    பல்லேடி`யம்    பல்   
47    Silver    சி`ல்வர்    சி`ல்   
48    Cadmium    காட்`மியம்    காட்`   
49    Indium    இன்டி`யம்    இன்   
50    Tin    டின்    டி   
51    Antimony    ஆன்டிமனி    ஆன்   
52    Tellurium    டெல்லூரியம்    டெல்   
53    Iodine    ஐயோடி`ன்    ஐ   
54    Xenon    க்செ`னான்    க்செ`   
55    Caesium    சீசி`யம்    சீசி`   
56    Barium    பே`ரியம்    பே`   
57    Lanthanum    லந்தானம்    ல   
58    Cerium    சீரியம்    சீரி   
59    Praseodymium    புரசோ`டை`மியம்    புசோ`   
60    Neodymium    நியோடை`மியம்    நிடை`   
61    Promethium    புரோமெதியம்    புமெ   
62    Samarium    ச`மரியம்    ச`ம   
63    Europium    யூரோபியம்    யூ   
64    Gadolinium    க~டோ`லினியம்    க~டோ`   
65    Terbium    டெர்பி`யம்    டெர்   
66    Dysprosium    டி`ச்`ப்ரோசி`யம்    டி`ச்`   
67    Holmium    கா`ல்மியம்    கா`ல்   
68    Erbium    எர்பி`யம்    எ   
69    Thulium    துலியம்    து   
70    Ytterbium    யிட்டர்பி`யம்    யிட   
71    Lutetium    லுடீசி`யம்    லு   
72    Hafnium    கா`ஃப்னியம்    கா`ஃப்   
73    Tantalum    டான்டாலம்    டான்   
74    Tungsten    டங்க்~ச்`டன்    ட   
75    Rhenium    ரேனியம்    ரேனி   
76    Osmium    ஆச்`மியம்    ஆச்`   
77    Iridium    இரிடி`யம்    இரி   
78    Platinum    ப்ளாடினம்    ப்ளா   
79    Gold    கோ~ல்ட்`    கோ~   
80    Mercury    மெர்குரி    மெர்   
81    Thallium    தேலியம்    தே   
82    Lead    லெட்`    லெ   
83    Bismuth    பி`ச்`மத்    பி`   
84    Polonium    போலோனியம்    போல்   
85    Astatine    அச்`டாடைன்    அச்`   
86    Radon    ரேடா`ன்    ரேடா`   
87    Francium    ஃபிரான்சி`யம்    பிர்   
88    Radium    ரேடி`யம்    ரேடி`   
89    Actinium    ஆக்டினியம்    ஆக்   
90    Thorium    தோரியம்    தோ   
91    Protactinium    புரோடாக்டினியம்    புடா   
92    Uranium    யுரேனியம்    யு   
93    Neptunium    நெப்டூனியம்    நெப்   
94    Plutonium    ப்ளூடோனியம்    ப்ளூ   
95    Americium    அமெரீசி`யம்    அம்   
96    Curium    க்யூரியம்    க்யூ   
97    Berkelium    பெ`ர்கெலியம்    பெ`ர்   
98    Californium    கலிஃபோர்னியம்    கலி   
99    Einsteinium    ஐன்ச்`டீனியம்    ஐன்   
100    Fermium    ஃபெர்மியம்    பெர்   
101    Mendelevium    மென்டெ`லீவியம்    மென்   
102    Nobelium    நோபெ`லியம்    நோ   
103    Lawrencium    லாரன்சி`யம்    லா   
104    Rutherfordium    ரூதர்ஃபோர்டி`யம்    ரூ   
105    Dubnium    ட`ப்`னியம்    ட`ப்`   
106    Seaborgium    சீ`போ`ர்சி^யம்    சீ`   
107    Bohrium    போ`ரியம்    போ`ரி   
108    Hassium    கா`சி`யம்    கா`சி`   
109    Meitnerium    மேட்னீரியம்    மேட்   
110    Darmstadtium    டா`ர்ம்ச்`டாட்`சி`யம்    டா`ர்   
111    Roentgenium    ரான்ட்செ^னியம்    ரான்   
112    Copernicium    கோபர்னீசி`யம்    கோப   
113    Nihonium    நிகோ`னியம்    நிகோ`   
114    Flerovium    ஃபிலெரோவியம்    பில்   
115    Moscovium    மாச்`கோவியம்    மாச்`   
116    Livermorium    லிவர்மோரியம்    லிவ   
117    Tennessine    டென்னச்`சி`ன்    டென்   
118    Oganesson    ஓக~னெசா`ன்    ஓக~   

குறியீடுகளும் விதிமுறைகளும்:

மேலே உள்ள அட்டவணையில் தனிமங்களின் தமிழ்ப்பெயர்கள் மட்டுமின்றி, தனிமங்களுக்கான குறியீடுகளும் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளன. இக்குறியீடுகள் ஆங்கிலக் குறியீடுகளைப் போலன்றி, தமிழ்ப்பெயர்களுடன் நேரடித் தொடர்புடையவாக அமைந்திருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. தனிமங்களுக்கான குறியீடுகளை அமைக்கும்போது கீழ்க்காணும் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளன.

1. பிற தனிமப் பெயர்களுடன் ஒத்துப்போகாதநிலையில், தனிமப்பெயர்களின் முதல் எழுத்து மட்டும் குறியீடாகக் கொள்ளப்பட்டுள்ளது.

சான்றாக, எர்பி`யம் என்ற தனிமத்தின் குறியீடு அப்பெயரின் முதல் எழுத்தைக்கொண்டு எ என்றும்
டைடானியம் என்ற தனிமத்தின் குறியீடு அப்பெயரின் முதல் எழுத்தைக்கொண்டு டை என்றும் அமைக்கப்பட்டுள்ளது.

2. தனிமங்களின் பெயர்களில் வரும் முதலெழுத்து ஒன்றிவரும்போது, முதல் இரண்டு எழுத்துக்களைக் கொண்டு குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

சான்றாக, அயர்ன் என்ற தனிமத்தின் குறியீடு அப்பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களைக் கொண்டு அய என்றும்
அலுமினியம் என்ற தனிமத்தின் குறியீடு அப்பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களைக் கொண்டு அலு என்றும் அமைக்கப்பட்டுள்ளன.

3. தனிமப்பெயர்களில் வரும் முதலிரண்டு எழுத்துக்களும் ஒன்றிவரும்போது, முதல் எழுத்தும் மூன்றாம் எழுத்தும் குறியீடு அமைக்கக் கொள்ளப்பட்டுள்ளன.

சான்றாக, ஆர்கா~ன், ஆர்செ`னிக் என்ற இரண்டு தனிமங்களிலும் முதல் இரண்டு எழுத்துக்கள் (ஆர்) ஒரேமாதிரி வருவதால்,
ஆர்கா~ன் என்பதற்கு முதல் எழுத்தையும் மூன்றாம் எழுத்தையும் சேர்த்து ஆகா~ என்றும்
ஆர்செ`னிக் என்பதற்கு முதல் எழுத்தையும் மூன்றாம் எழுத்தையும் சேர்த்து ஆசெ` என்றும் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கில முறையிலும் இதுபோல பயன்படுத்தி இருக்கின்றனர்.

4. மேற்காணும் தனிமங்களில் சில வினைபுரி அலோகங்களின் ( REACTIVE NONMETALS ) பெயர்கள் பிறபெயர்களின் முதலெழுத்துடன் ஒத்துவரும்நிலையிலும், வேதிச்சமன்பாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதால், இவற்றின் குறியீடுகள் மட்டும் பெயர்களின் முதல் எழுத்தைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன.

சான்றாக, கார்ப`ன் - கா, ஆக்சி`ச^ன் - ஆ, ச`ல்பர் - ச`, குளோரின் - கு, புளூரின் - பு, ஐயோடி`ன் - ஐ.

5. மேற்காணும் தனிமங்களில் சில பெயர்கள் பிறபெயர்களின் முதலெழுத்துடன் ஒத்துவரும்நிலையிலும், வேதிச்சமன்பாடுகளில் எந்தத் தனிமங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ அவற்றின் குறியீடுகள் மட்டும் பெயர்களின் முதல் எழுத்தைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன.

சான்றாக, போ`ரான், போ`ரியம் ஆகிய தனிமங்கள் ஒரே முதலெழுத்தைக் கொண்டிருந்தாலும், வேதிவினைகளில் போ`ரான் அதிகம் பயன்படுத்தப்படுவதால், போ`ரானின் குறியீடு போ` என்றும் போ`ரியத்தின் குறியீடு போ`ரி என்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதேமுறையில், பெ`ரிலியம் - பெ` என்றும் பெ`ர்கெலியம் - பெ`ர் என்றும் கோபா`ல்ட் - கோ என்றும் கோபர்னீசி`யம் - கோப என்றும் அமைக்கப்பட்டுள்ளன.

சமன்பாடுகளில் பயன்படுத்தும் முறைகள்:

குறியீடுகளின் உதவியுடன் வேதிவினைகளை விளக்குவதற்காக அமைக்கப்படுவதே வேதிச்சமன்பாடுகள் ஆகும். இதுவரையிலும் ஆங்கில எழுத்துக்களில் அமைந்த குறியீடுகளைக் கொண்டு சமன்பாடுகளை எழுதி வந்தோம். இனி, ஆங்கில எழுத்துக்களின் உதவியின்றி முழுக்க முழுக்கத் தமிழ் எழுத்துக்களைக் கொண்டே வேதிச்சமன்பாடுகளை எவ்வாறு எழுதுவது என்று கீழே காணலாம்.
\
சுண்ணாம்புக்கல் ஆகிய கால்சி`யம் கார்ப`நேட்டினை அதிக வெப்பத்தில் சூடேற்றும்போது அது உடைந்து கால்சி`யம் ஆக்சை`டு` எனும் பொருளாக மாறுவதுடன் கரிப்புகை ஆகிய கார்ப`ன்-டை`-ஆக்சை`டை` யும் வெளிவிடுகிறது. இந்த வேதிவினையைக் கீழ்க்காணும் சமன்பாட்டின் மூலம் ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். 

CaCO3 ® CaO + CO2

மேற்காணும் வேதிவினையினைத் தமிழ்க் குறியீடுகளின் உதவியுடன் கீழ்க்காணுமாறு எழுதலாம்.

கால்.கா.ஆ3 >>> கால்.ஆ + கா.ஆ2.

அவ்வளவுதான்!. எழுதுவதற்கு எவ்வளவு எளிதாக இருக்கிறது!. எளிமையாகப் புரிகிறது அல்லவா?. இதேபோல, இன்னும் சில வேதிவினைகளைக் காணலாம். தாவரங்கள் கதிரவனின் ஒளியில் கரிப்புகையை உட்கொண்டு நீரின் உதவியுடன் கு~ளுக்கோசை`த் தயார் செய்வதுடன் உயிர்வளியாகிய ஆக்சி`ச^னை வெளிவிடுவது அனைவரும் அறிந்ததே. இவ் வேதிவினையினைக் கீழ்க்காணும் சமன்பாட்டினைக் கொண்டு விளக்குவர்.

6 CO2 + 6 H2O → C6H12O6 + 6 O2

இதனைக் கீழ்க்காணுமாறு தமிழ்ப்படுத்தி எழுதலாம்.

6 கா.ஆ2 + 6 கை`2.ஆ >>> கா6.கை`12.ஆ6 + 6 ஆ2

இதேபோல சில வேதிவினைகளுக்கான சமன்பாடுகள் தமிழ்க்குறியீடுகளின் உதவியுடன் கீழே எழுதப்பட்டுள்ளன.

2 சி`ல்.ஐ + சோ`2.ச` >>> சி`ல்2.ச` + 2 சோ`.ஐ
பே`3.நை2 + 6 கை`2.ஆ >>> 3 பே`(கை`ஆ)2 + 2 நை.கை`3
3 கால்.கு2 + 2 சோ`3.பா.ஆ4 >>> கால்3(பா.ஆ4)2 + 6 சோ`.கு
4 அய.ச` + 7 ஆ2 >>> 2 அய2.ஆ3 + 4 ச`.ஆ2
2 ஆசெ` + 6 சோ`.கை`ஆ >>> 2 சோ`3.ஆசெ`.ஆ3 + 3 கை`2
3 மெர்(கை`ஆ)2 + 2 கை`3.பா.ஆ4 >>> மெர்3(பா.ஆ4)2 + 6 கை`2.ஆ
12 கை`.கு.ஆ4 + பா4.ஆ10 >>> 4 கை`3.பா.ஆ4 + 6 கு2.ஆ7
8 கா.ஆ + 17 கை`2 >>> கா8.கை`18 + 8 கை`2.ஆ
10 பொ.கு.ஆ3 + 3 பா4 >>> 3 பா4.ஆ10 + 10 பொ.கு
டி.ஆ2 + 2 கை`2 >>> டி + 2 கை`2.ஆ
3 பொ.கை`ஆ + கை`3.பா.ஆ4 >>> பொ3.பா.ஆ4 + 3 கை`2.ஆ
டை.கு4 + 2 கை`2.ஆ >>> டை.ஆ2 + 4 கை`.கு
2 போ`.பு`3 + 6 கை`.நை.ஆ3 >>> 2 போ`(நை.ஆ3)3 + 6 கை`.பு`

தமிழ்க்குறியீடுகளின் பயன்கள் / சிறப்புக்கள்:

1. வேதியியல் சமன்பாடுகளைப் பிறமொழி உதவியின்றித் தமிழ்எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்திருப்பதுதான் இந்தத் தமிழ்க்குறியீட்டு முறையின் தலையாய சிறப்பாகும்.

2.  தமிழ்க்குறியீடுகள் தனிமங்களின் பெயர்களுடன் நேரடித் தொடர்புடையதால் சமன்பாடுகளைப் புரிந்துகொள்வது எளிதாகிறது. சான்றாக,

2 சி`ல்.ஐ + சோ`2.ச` >>> சி`ல்2.ச` + 2 சோ`.ஐ

என்ற சமன்பாட்டினைப் பார்த்தவுடனே இதில் சி`ல்வர் ஐயோடை`டு`ம் சோ`டி`யம் ச`ல்பைடு`ம் வினைபுரிந்து சி`ல்வர் ச`ல்பைடு`ம் சோ`டி`யம் ஐயோடை`டு`ம் வினைப்பயன்களாகக் கிடைக்கின்றன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

3. தனிமங்களின் பெயர்களும் குறியீடுகளும் ஆறுரூபாய் முறைப்படி அமைக்கப்பட்டுள்ளதால், வேதிப்பொருட்களின் வாய்ப்பாடுகளை எவ்விதக் குழப்பமுமின்றித் தெளிவாகப் பலுக்கவும் எழுதவும் முடிகிறது. சான்றாக சில பொருட்களின் பெயர்களும் அவற்றின் வாய்ப்பாடுகளும் தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 போ`ரான் பு`ரோமைட்` = போ`.பு`3
 பொட்டாசி`யம் கை`ட்`ராக்சை`ட்` = பொ.கை`ஆ
 சோ`டி`யம் கை`ட்`ராக்சை`ட்` = சோ`.கை`ஆ
 சோ`டி`யம் குளோரைடு` = சோ`.கு
 சோ`டி`யம் அசிடேட் = சோ`.கா2.கை`3.ஆ2

4. கரிம வேதியியலில் மூலக்கூறுகளின் கட்டமைப்பினைக்கூட முழுவதும் தமிழ்க் குறியீடுகளைப் பயன்படுத்தி வடிவமைக்க முடியும். சான்றாக, மீத்தேனின் கட்டமைப்பு தமிழ்க்குறியீடுகளைப் பயன்படுத்திக் கீழே வடிவமைக்கப்பட்டுள்ளது.

              கை`                                  
                 |                                           
 கை` -- கா -- கை`           
                |                                            
             கை`                                                          

முடிவுரை:

தமிழ்மொழியில் எல்லா வளங்களும் உண்டு. அவற்றை எப்படிப் பயன்படுத்தினால் மொழி வளர்வதுடன் நாமும் வளரலாம் என்பது தமிழ் ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் இணைந்து செயல்பட வேண்டிய பெரும்பணி ஆகும். இதற்குத் தமிழக அரசின் உதவி அவசியம் தேவை. இறுதியாக இக்கட்டுரையின் முடிபாகக் கூறப்படுவது: தனித்தமிழில் அனைத்து அறிவியல் நூல்களையும் இயற்ற முடியும். 



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

S. Jayabarathan

unread,
Jun 13, 2018, 7:58:20 AM6/13/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Raju Rajendran, Asan Buhari, Anne Josephine, kanmani tamil, Anna Kannan, தேமொழி, Elangovan N, N. Ganesan
image.png

image.png


வேந்தன் அரசு

unread,
Jun 13, 2018, 9:05:56 AM6/13/18
to Jay Jayabarathan, மின்தமிழ், vallamai, தமிழ் மன்றம், vannan.1935, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Asan Buhari, Anne Josephine, kanmani tamil, Anna Kannan, தேமொழி, Elangovan N, N. Ganesan
<மேற்காணும் வேதிவினையினைத் தமிழ்க் குறியீடுகளின் உதவியுடன் கீழ்க்காணுமாறு எழுதலாம். 

கால்.கா.ஆ3 >>> கால்.ஆ + கா.ஆ2. >

அருமை !

புத., 13 ஜூன், 2018, முற்பகல் 4:58 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

S. Jayabarathan

unread,
Jun 13, 2018, 9:12:28 AM6/13/18
to Raju Rajendran, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Asan Buhari, Anne Josephine, kanmani tamil, Anna Kannan, தேமொழி, Elangovan N, N. Ganesan
இரசாயனப் பட்டதாரி வேந்தரே,

உமக்குப் புரிவது மாற்றவருக்குப் புரியவில்லையே.  பொன்னான பொழுதை வீணாக விரையம் செய்யத்
தூண்டுவது சரியா ?

அருமை என்றால் என்ன அர்த்தம் ???

சி. ஜெ. 

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jun 24, 2018, 8:44:50 AM6/24/18
to tamilmanram kuzhu, vallamai, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Raju Rajendran, Asan Buhari, Anne Josephine, kanmani tamil, Anna Kannan, தேமொழி, Elangovan N, N. Ganesan, thiru thoazhamai
தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா என அறிவியல் கட்டுரைகள் எழுதுபவர்களே கேட்காமல் முடியும் என்ற நம்பிக்கையில் எழுதினால் வெற்றி காணலாம். என் அறிவியல் தமிழ்க் கட்டுரைகள் பலவற்றுள் தனிமங்கள் குறித்த கட்டுரையை இணைத்துள்ளேன், என் அறிவயில் வலைப்பூ அல்லது படைப்புகள் வலைப்பூவில் மேலும பல கட்டுரைகளைக்காணலாம்.

தனிமங்கள்(Chemical Elements)

தனிமங்கள்(Chemical Elements)
- இலக்குவனார் திருவள்ளுவன்
 அணுக்கள் பல இணைந்தவையே பொருள்கள். இவற்றுள் ஒரே வகை அணுக்கள் பல சேர்ந்தது தனிமம்(element) எனப்படுகிறது. ஒரு தனிமத்தின் அணுவைப்போல் மற்றொரு தனிமத்தின் அணு இருக்காது. ஆதலின் ஒரே அணு எண் கொண்ட அணுக்களால் முழுவதுமான பொருளே தனிமம் ஆகும். சான்றாக இரும்பு ஒரு தனிமம். இதில் இரும்பு அணுக்களின் பொருளைத் தவிர வேறு எந்தப் பொருளின் அணுக்களும் இரா.  தனிமமானது மாழை(உலோகம்), அல்மாழை(அலோகம்) என இருவகைப்படும்.

 இயல்பான நிலையில் தனிமங்கள்  திண்பொருளாகவும்(எ.கா. பொன், செம்பு) நீர்ப்பொருளாகவும் [(எ.கா.  (அ.) மாழை: அதள்(பாதரசம்) ; (ஆ.) அல்மாழை: செந்நீர்மம் (புரோமின்)], சில வளிநிலையிலும் (எ.கா.  உயிர்வளி) உள்ளன.

 இயற்கையில் பல தனிமங்கள், வேறு சில தனிமங்களுடன் சேர்ந்தே கிடைக்கின்றன. இவ்வாறு இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட நிறை விகிதத்தில் இணைந்து சேர்ந்த கலவை சேர்மம் எனப்பெறும்.

 அதே போல் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட  தூய பொருள்கள் வீத அளவின்றிச் சேருவது கலவை.

 தனிமத்தின் மிக மிகச்சிறிய அலகுதான் அணு எனப்பெறுகிறது. அணுவானது முன்னணு(புரோட்டான்),  நள்ளணு(நியூட்ரான்),  மின்னணு( எலக்ட்ரான்) போன்ற நுண்ணிய அணுத்துகள்களாகப்பிரிக்கப்படக் கூடியது.

 இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை (molecules) உண்டாக்குகின்றன.
 அணுக்கள் சேர்ந்து மூலக்கூறுகளை உருவாக்காமல் தனித்த நிலையில் உள்ள அணுக்களை அடிப்படை அலகுகளாகக் கொண்ட  தனிமங்கள் உள்ளன. இவை  ஓரணுத் தனிமங்கள் ஆகும்.
 இவற்றுள் ஒரே வகை அணுக்கள் சேர்ந்த மூலக்கூறுகளை உடையது தனிமம்.

 வெவ்வேறு வகை அணுக்கள் சேர்ந்த மூலக்கூறுகளைக் கொண்டது சேர்மம்.

 ஒரு தனிமத்தின் அணுவின் உட்கருவில் உள்ள முன்னணுக்களின்(புரோட்டன்களின்) எண்ணிக்கையைக் குறிப்பது அணு எண் எனப்பெறும். தனிமங்களின் பெயர்கள் அணு எண்களின் வரிசைக்கு ஏற்பவும் அணுநிறைகளின் வரிசைக்கு ஏற்பவும் அகர வரிசைப்படியும் அட்டவணையாக உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு நாம், அணு எண் நிரல்படி அட்டவணையைப் பார்ப்போம்.

 தனிமத்தின் பெயர்களுள் பல இலத்தீன், கிரேக்கம் முதலிய மொழிச் சொற்களாகும்.  கண்டறிந்த வல்லுநர்களின் பெயர்கள், கண்டறிந்த இடங்களின் பெயர்கள், பிற அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் என்ற முறையில் பல பெயர்கள் அமைந்துள்ளன. இப் பெயர்களில் இருக்கும் ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளில் உருவாக்கப்பட்டதே வேதியல் குறியீடு ஆகும்.  நாம் ஏன் இவற்றைத் தமிழில் குறிப்பிட வேண்டும் எனச் சிலர் வினவலாம். தமிழில் படித்தால்தான் நன்கு புரிந்து கொள்ளவும் உள்ளத்தில் பதிந்து  கொள்ளவும்  இயலும். தொடக்க நிலையில் தமிழிலும் பின்னர் அடைப்பிற்குள் உள்ள பன்னாட்டு முறையையும் தெரிந்து கொள்வதே நலமாகும்.
தனிமங்களின் அட்டவணை
அணு  எண்
தனிமம்
குறியீடு
அணுநிறை
1நீர்வளி (Hydrogen)நீ (H)1.00797
2 கதிர்வளி (Helium) க (He)4.0026
3கல்லம் (Lithium)கல் (Li)6.94
4குருகம் (Beryllium)கு (Be)9.0122
5பழுப்பம் (Boron)ப (B)10.811
6கரிமம் (Carbon)கரி (C)12.011
7வெடிவளி (Nitrogen)வெ (N)14.0677
8உயிர்வளி (Oxygen) உ (O)15.994
9பைம்மஞ்சள்வளி (Fluorine)பை (F)18.9984
10புத்தொளிரி (Neon)பு (Ne) 20.1797
11வெடிமம் (Sodium)வெடி (Na)22.9898
12வெளிமம் (Magnesium)வெளி (Mg)24.312
13ஈயம் (Aluminium)ஈம் (Al)26.98
14கன்மம்  (Silicon )கன் (Si)28.086
15எரிமம் (Phosphorous)எ (P)30.974
16கந்தகம் (Sulfur)கக (S)32.064
17பாசிகம் (Chlorine)பா (Cl)35.453
18மடியன் (Argon )மடி (Ar )39.9
19சாம்பரம் (Potassium )சா (K )40.1
20சுதைமம் (Calcium)சு (Ca)45.0
21‘காண்டிமம்’ (Scandium )கா (Sc )44.956
22கரும்பொன்மம் (Titanium )கரு (Ti)47.9
23வெண்ணாகம் (Vanadium )வெக(V )50.942
24குருமம் (Chromium )குரு (Cr )51.996
25மங்கனம் (Manganese )மங் (Mn )54.938
26இரும்பு (iron)இரு (Fe )55.847
27வண்ணிமம் (Cobalt)வண் (  Co)58.933
28வெள்ளையம் (Nickel )வெய (Ni i )58.91
23செம்பு (Copper )செ (Cu )63.5
30துத்தநாகம் (Zinc )து (Z n)65.4
31நரைமம் (Gallium )ந (Ga) 69.72
32‘செருமம்’ (Rubidium )செரு (Rb)72.59
33சவ்வீரம் (Arsenic )ச (As)74.9
34மதிமம் (Selenium)நி (Se)78.96
35செந்நீர்மம் (Bromine)செநீ (Br)79.904
36மறைவளி (Krypton)மறை (Kr)83.80
37செவ்வரிமம்(Rubidium)செம் (Rb)85.47
38வெண்ணிமம்(Stronium)வெணி(Sr)87.62
39கருநரைமம்(Yttrium)கந (Y)88.905
40வண்மம்(Zirconium)வம(Zr)91.22
41அருமிமம்(Niobium)அரு (Nb)92.906
42முறிவெள்ளி(Molybdenum)மு(Mo)95.94
43செயற்கைத்தனிமம்(Technetium)செய(Te)97.9072
44சீர்பொன்(Ruthenium)சீர்(Ru)101.07
45திண்ணிமம்(Rhodium)திண்(Rh)102.90550
46பொன்னிமம்(Palladium)பொம்(Pd)106.42
47வெள்ளி(Silver)வெள்(Ag)107.8682
48வெண்ணீலிமம்(Cadmium)வெநீ(Cd)112.44
49நீலவரிமம்(Indium)நீவ(In)114.8182
50வெள்ளீயம்(Tin)வெஈ(Sn)118.710
51நொய்ம்மிமம்(Antimony)நொ(Sb)121.760
52ஒளிர்மம்(Tellurium)ஒ(Te)127.60
53கருமயிலம்(Iodine)கம(I)126.90447
54அயலிமம்(Xenon)அய (Xe)131.30
55நீலநீறிமம்(Cesium)நீநீ(Cs)132.90543
56மங்கிமம்(Barium)ம(Ba)137.327
57ஊக்கிமம்(Lanthanum)ஊ(La)138.9055
58நெகிழிமம்(Cerium)நெ(Ce)140.115
59வெண்மஞ்சை(Praseodymium)வெம(Pr)140.90765
60புதுமஞ்சை(Neodymium)புமNd)144.24
61கதிர்மம்(Promethium)கம்(Pm)144.9127
62வெண்நரைமம்(Samarium)வெந(Sm)150.35
63‘ஐரோப்பிமம்’ (Europium)ஐ(Eu)151.965
64காந்தனிமம்(Gadolinium)காம் (Gd)157.25
65விளர்மம்(Terbium)விள(Tb)158.92534
66உறிமம்(Dysprosium)உறி(Dy)162.50
67‘ஓல்மிமம்’(Holmium)ஓ(Ho)164.93032
68‘எர்பிமம்’ (Erbium)எர்(Er)167.26
69வடமம்(Thulium)வ(Tm168.93421
70எட்டர்பிமம்’(Ytterbium)எம் (Yb)173.04
71மஞ்சிமம்(Lutetium)மம் (Lu)174.967
72‘ஆஃப்னிமம்’(Hafnium)ஆஃப்(Hf)178.49
73வெம்மம்(Tantalum)வெம்(Ta)180.9479
74மின்னிழைமம்(Tungsten)மி(W)183.84
75அரிமம்(Rhenium)அரி(Re)186.207
76விஞ்சிமம்(Osmium)விம்(Os)190.2
77உறுதிமம்(Iridium)உறு(Ir)192.217
78வன்பொன்(Platinum)வ.பொ.(Pt)195.08
79தங்கம்(Gold)த(Au)196.95654
80இதள்(Mercury)இத(Hg)200.59
81சாம்பிமம்(Thallium)சாம்(Ti)204.3833
82காரீயம்(Lead)காரீ(Pb)207.2
83நிமிளை(Bismuth)நிமி(Bi)208.98037
84மஞ்சளம்(Polonium)மள்(Po)208.9824
85நொறுங்கிமம்(Astatine)நொறு(At)209.9871
86கதிரம்(Radon)கர(Rn)222.0176
87‘விரெஞ்சிமம்’(Francium)விரெ(Fr)223.0197
88கதிரிமம்(Radium)கதி(Ra)226.0254
89கதிர்வினைமம்(Actinium)கவி(Ac)227.0278
90சுடரிமம்(Thorium)சுட(Th)232.0381
91புறக்கதிரம்(Protactinium)புற(Pa)231.0388
92விண்ணிமம்(Uranium)விண்(U)238.0289
93சேண்மிமம்(Neptunium)சேண்(Np)237.0482
94சேணாமம்(Plutonium)சேய்(Pu)244.0642
95‘அமரிக்கம்’(Americium)அமெ(Am)243.0614
96‘கியூரிமம்’(Curium)கியூ(Cm)247.0703
97‘பெரிக்ளிமம்’(Berkelium)பெரி(Bk)247.0703
98‘கலிபோரிமம்’(Californium)கலி(Cf)251.0796
99‘ஐன்சுதீனம்’(Einsteinium)ஐன்(Es)252.083
100வெரிமம்’(Fermium)வெர்(Fm)257.0951
101‘மெந்தலீமம்’ (Mendelivium)மெம் (Md)258.10
102நோபிளம்’(Nobelium)நோ(No)259.1009
103‘இலாரன்சம்’(Lawrencium)இலா(Lr)262.11
104‘உருத்தரம்’(Rutherfordium)உரு(Rf)261

 தனிமங்களின் தன்மை, நிறம், கண்டறியப்பட்ட இடம்,   மிகுதியாய்க் கிடைக்கும் இடம், அறிஞர் பெயர் முதலியவற்றின் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டவாறே தமிழிலும் தரப்பட்டுள்ளன. எனினும் ஒற்றை மேற்கோளுக்குள் சாய்வெழுத்துகளில் அடங்கியவை பன்னாட்டு முறையிலேயே அளிக்கப்பட்டுள்ளன. இவை நம்நாட்டில் கிடைக்கக்கூடிய இடங்களில் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதி இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளன. பிற அறிவியல் தமிழ் அகராதிகளில் உள்ளவற்றை விடமிகுதியாகத் தமிழில் குறிக்கப்பெற்றுள்ளன. நண்பர் ஒருவர் புதுச்சேரியில் அறிஞர் ஒருவர் தனிமங்களைத் தமிழில் குறிப்பிட்டுள்ளாரே. பார்க்கவிலலையா?  புதியன ஏன்? என்றார். அக்கையேடு கிடைக்கவில்லை. எனினும் பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் களஞ்சியத்தில் உள்ள பட்டியலைப் பார்த்தேன். இப்பட்டியல்தான் தனி நூல் வடிவம் பெற்றிருக்கும் எனக் கருதுகிறேன். இவ்வட்டவணைக்கும் பல்கலைக்கழக அட்டவணைக்கும் ஒரு பகுதி ஒற்றுமை உள்ளது. ஆனால், தமிழில் குறிக்க இயலாதபொழுது அறிவியல் பெயர்களை அயல்மொழி என உணரும் வண்ணமே குறிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழ் எனத் தவறாக உணரும் வண்ணம் குறிக்கக் கூடாது. பல்கலைக்கழக அட்டவணை அவ்வாறுதான் உள்ளது. சான்றாக அலுமினியம் என்பது அளமியம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள் நல்ல தமிழ்ப்பெயர் என நம்பும் மாயை உள்ளது, உண்மையில் அலுமினியத்திலுள்ள முதல் நான்கு எழுத்துகள் (ALUM)அளம்; என ஒலிப்பிக்கப்பட்டு அளம் + இயம் =  அளமியம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதுபோல்தான் அப்பட்டியலில் நாற்பதுக்கும் மேற்பட்ட தனிமங்கள் பெயர்கள்  தமிழ் வடிவ ஒலி பெயர்ப்பில் குறிக்கப் பட்டுள்ளன. எனவே அவை செம்மையை எதிர்நோக்கிய இடைக்கால ஏற்பாடாகத்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனலாம்.  மேலும் கடோலின் என்னும் அறிஞர் பெயர் சுட்டப்பெற்ற ‘கடோலின்’ என்பதைக்  god - கடவுள் எனக் கொண்டு கடவுளியம் எனக் கூறியுள்ளதும் பொருந்தாது. எனவே பிற தமிழ் வடிவம் கண்டு குழம்ப வேண்டா.

இங்கே 104 தனிமங்கள்குறிக்கப்பெற்றுள்ளன. இப்பொழுது 118   தனிமங்களைக் கண்டறிந்துள்ளனர். எஞ்சியன  குறித்துப்பிறிதோர் சமயம் காணலாம்.


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

S. Jayabarathan

unread,
Jun 24, 2018, 12:59:25 PM6/24/18
to tamilmantram, vallamai, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Raju Rajendran, Asan Buhari, Anne Josephine, kanmani tamil, Anna Kannan, தேமொழி, Elangovan N, N. Ganesan, thiru-th...@googlegroups.com
இரசாயன மூலக்கூறுகளை எப்படி எழுதுவீர் ???

HCL,  NaCl, H2SO4, AgBr, C2H4O2, Acetic Acid, Chloroform, Acetelene, Ammonia, Ethylene,
Methyl Alcohol ....

சி. ஜெயபாரதன்


S. Jayabarathan

unread,
Jun 24, 2018, 1:02:49 PM6/24/18
to tamilmantram, vallamai, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Raju Rajendran, Asan Buhari, Anne Josephine, kanmani tamil, Anna Kannan, தேமொழி, Elangovan N, N. Ganesan, thiru-th...@googlegroups.com
மேல்படிப்புக்குப் போவோர் மீண்டும் மூலகப் பெயர்களை ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்.

சி. ஜெயபாரதன் 
<td style="border:1px solid rgb(0,0,0);padding:0px 7px"
Reply all
Reply to author
Forward
0 new messages