--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சிந்தனைக்கு விருந்தான பாடல்களை வழங்கிக்கொண்டிருக்கின்றீர்கள். ரசித்தேன்.பாரதிதாசன் கவிதைகளில் ஒன்று...கைம்மைக் கொடுமைகண்கள் நமக்கும் உண்டு -- நமக்குக்கருதும் வன்மை யுண்டுமண்ணிடைத் தேசமெல்லாம் -- தினமும்வாழ்ந்திடும் வாழ்க்கையிலேஎண்ண இயலாத -- புதுமைஎதிரில் காணுகின்றோம்கண்ணிருந்தென்ன பயன்? நமக்குக்காதிருந்தென்ன பயன்?வானிடை ஏறுகின்றார் -- கடலைவசப்படுத்துகின்றார்ஈனப் பொருள்களிலே -- உள்ளுறைஇனிமை காணுகின்றார்மேனிலை கொள்ளுகின்றார் -- நாமதைவேடிக்கை பார்ப்பதல்லால்ஊன்பதைத்தே அவைபோல் -- இயற்றஉணர்ச்சி கொள்வதில்லை.புழுதி, குப்பை, உமி -- இவற்றின்புன்மைதனைக் களைந்தேபழரசம் போலே -- அவற்றைப்பயன்படுத்துகின்றார்!எழுதவும் வேண்டாம் -- நம்நிலைஇயம்பவும் வேண்டா!அழகிய பெண்கள் -- நமக்கோஅழுகிய பழத்தோல்!கைம்மை எனக்கூறி -- அப்பெரும்கையினிற் கூர்வேலால்நம்மினப் பெண்குலத்தின் -- இதயநடுவிற் பாய்ச்சுகின்கிறோம்.செம்மை நிலையறியோம் -- பெண்களின்சிந்தையை வாட்டுகின்றோம்;இம்மை இன்பம் வேண்டல் -- உயிரின்இயற்கை என்றறியோம்.கூண்டிற் கிளிவளர்ப்பார் -- இல்லத்தில்குக்கல் வளர்த்திடுவார்,வேண்டியது தருவார்; -- அவற்றின்விருப்பத்தை அறிந்தே!மாண்டவன் மாண்டபின்னர் -- அவனின்மனைவியின் உளத்தைஆண்டையர் காண்பதில்லை -- ஐயகோ,அடிமைப் பெண்கதியே!சுபா
கைம்மைக் கொடுமை என்பதைக் குறிக்க இவர் சொல்லிய ...
"கோரிக்கையற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா" என்ற வரி புகழ் வாய்ந்தது.ஆனால் எந்தா நூலில் அல்லது பாடலில் பாரதிதாசன் இவ்வாறு குறிப்பிட்டார் என்று கண்டுபிடிக்க இயலவில்லை சுபா.
அது ஒரு தனிப்பாடல், கைம்மைப் பழி என்ற தலைப்பில் பாரதிதாசன் கவிதைகள், முதற் தொகுப்பில் இருக்கிறது. ஒளிவருடி இணைத்திருக்கிறேன்.
நீங்களே சொல்லுங்கள் |
சித்திரச் சோலைகளே! உமை நன்கு நித்தம் திருத்திய நேர்மையினால்மிகு |
//பாரதிதாசன் பிறந்தநாள் வரும் ஏப்ரல் 29 வரை அவரது சில திரையிசைப் பாடல்களை இந்த இழையில் பகிர்ந்து கொள்வோமா?//
தேமொழி! நீங்கள் பாவேந்தரின் திரையிசைப் பாடல்களைத்தான் இவ்விழையில் பகிர்ந்துகொள்வோமா என்று கேட்டிருக்கிறீர்கள். நான் இங்கே குறிப்பிட்டிருப்பது திரையிசையில் வராதது; ஆனாலும் ரசிக்கத்தக்க ஒரு பாடல்!
பாவேந்தரின் நகைச்சுவை!
தமிழகத்தின் அன்றைய நிலையை (ஏன் இன்றைய நிலையும் அப்படித்தான் இருக்கிறது!) மிக அழகாகத் தன் கவிதை வரிகளில் காட்சிப்படுத்துவதில் பாவேந்தரை விஞ்சிய ஓர் கவிஞனைத் தமிழகம் காணவில்லை இன்றுவரை! தமிழ் அவர் கரங்களில் பூனைக்குட்டிபோல் கொஞ்சி விளையாடியது; இழுத்த இழுப்பிற்கு வளைந்துகொடுத்தது!
நம் மக்களிடம் நெடுங்காலமாக மாற்றமுடியாமல் இருக்கும் ஒரு பழக்கம், வீட்டைவிட்டு வெளியே கிளம்பிவிட்டால் நகைகளை அள்ளிப் போட்டுக்கொள்வதும், விலையுயர்ந்த ஆடைகளை அணிந்துகொள்வதும்! எளிமை என்பதை ஏட்டில்கூட எழுதிப் பார்க்க பலர் விரும்புவதில்லை. (எளிமை விரும்பியான) இறைவனைத் தொழுவதற்கு ஆலயம் செல்லும்போதும் இதே நிலைதான்!
இதையெல்லாம் கண்ணுற்ற பாரதிதாசன் நகைச்சுவையாகவும்...அதே நேரம் மக்களுக்கு புத்தி புகட்டும் வகையிலும் ஓர் அழகிய பாடலை இயற்றியுள்ளார். எனக்கு மிகவும் பிடித்த பாவேந்தரின் பாடல்களில் இப்பாடலுக்கு எப்போதும் ஓர் முக்கிய இடமுண்டு!! :-)
’ஏசுநாதர் ஏன் வரவில்லை?’ என்பது அப்பாடலின் தலைப்பு. தலைப்பே வேடிக்கையாக இருக்கிறதல்லவா? பாடலிலும் ’பகடி’ கபடி விளையாடுகின்றது!
பாடலின் கருத்து: தேவாலயத்தில், எளிமையை விரும்பும் பாதிரியார் ஒருவர் ஒருநாள், “இனிமேல் யாரும் தலை, காது, மூக்கு, கழுத்து, கை, மார்பு, விரல், கால் போன்ற எட்டு உறுப்புக்களிலும் நகைகள் அணிந்துகொண்டு வந்து தேவகுமாரனைத் தரிசிக்கக் கூடாது!
அதுமட்டுமல்ல….ஆடம்பரமான ஆடைகளும் உதவாது; எளிமையான, விலைமலிவான ஆடைகளை அணிந்துவந்தால்தான் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுவீர்கள்! இல்லையென்றால் no entry” என்று (தெரியாத்தனமாக) ஓர் உத்தரவு போட்டுவிட்டார்!
உத்தரவு போட்டதுதான் தாமதம்…அதன்பிறகு தேவாலயத்தின் பக்கம் ஓர் ஈ, காக்காய் கூட எட்டிப் பார்க்கவில்லை. தேவாலயமே வெறிச்சோடிப் போனது; வெலவெலத்துப்போனார் பாதிரியார்.
நீண்ட நேரம் (குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி) ஆழ்ந்த யோசனை செய்துவிட்டுத் தேவாலய வாசலில் ஓர் அறிவிப்புப் பலகை வைத்தார். அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்…”இனிமேல் பக்தகோடிகள் அனைவரும் தலை, காது உள்ளிட்ட எட்டுறுப்புக்கள் மட்டுமின்றி இமைகள், உதடு, நாக்கு போன்ற உறுப்புக்களிலும் நகைகள் போடலாம்! அதுமட்டுமா? நீங்கள் உங்கள் அழகைப்(!) பார்த்து ரசிப்பதற்கு வசதியாகப் புதிதாக ரசம்பூசப்பட்ட பளபளப்பான ஆளுயரக் கண்ணாடி ஒன்றும் (உடனடியாகத்) தேவாலயத்தில் மாட்டப்படும்!” :-)
அறிவிப்பைப் படித்தனர் மக்கள்; மகிழ்ச்சியில் மலர்ந்தன அவர்தம் முகங்கள்! அலைகடலெனத் திரண்டுவந்தனர் தேவாலயத்திற்கு! ஆனால் ஒருவர்மட்டும் தேவாலயத்திற்கு வரமறுத்துவிட்டார்! அவர் யார் என்று அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறதா? அவர்தான் ’ஏசுநாதர்!’
கோயிலுக்குச் செல்லும்போதேனும் நம் மக்கள் எளிமையைக் கடைப்பிடிக்கக் கூடாதா என்ற பாவேந்தரின் ஏக்கமே இந்தப் பாடல்!
தலைகாது மூக்கு கழுத்துகை
மார்புவிரல்
தாள்என்ற
எட்டுறுப்பும்
தங்கநகை
வெள்ளிநகை ரத்தினமி ழைத்தநகை
தையலர்கள்
அணியாமலும்,
விலைகுறையும்
ஆடைகள் அணிந்துமே கோயில்வர
வேண்டுமென்
றேபாதிரி
விடுத்தஒரு
சேதியால் விஷமென்று கோயிலை
வெறுத்தார்கள்
பெண்கள்புருஷர்!
நிலைகண்ட பாதிரிபின் எட்டுறுப்
பேயன்றி
நீள்இமைகள்
உதடுநாக்கு
நிறையநகை
போடலாம் கோயிலில் முகம்பார்க்க
நிலைக்கண்ணா
டியும்உண்டென
இலைபோட்
டழைத்ததும் நகைபோட்ட பக்தர்கள்
எல்லாரும்
வந்துசேர்ந்தார்
ஏசுநா
தர்மட்டும் அங்குவர வில்லையே
இனியபா
ரததேசமே!
இதைத்தான் ”ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை” என்கிறார் கவியரசர்!
அன்புடன்,
மேகலா
வணக்கம் சகோதரிமிகவும் சிந்திக்கவைக்கூடிய ஒரு பதிவை பதித்திருக்கிறீர்கள்."//கோயிலுக்குச் செல்லும்போதேனும் நம் மக்கள் எளிமையைக் கடைப்பிடிக்கக் கூடாதா என்ற பாவேந்தரின் ஏக்கமே இந்தப் பாடல்!//"
அவரின் ஏக்கம் இன்னும் தீர்ந்தபாடில்லை.எத்தனைப் பேர் இந்த எளிமையை கடைப்பிடிக்கிறார்கள்???பாரதிதாசனின் பாடலையும் அதற்கான கருத்தையும் வெளியிட்டதற்கு நன்றி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
///தேமொழி! நீங்கள் பாவேந்தரின் திரையிசைப் பாடல்களைத்தான் இவ்விழையில் பகிர்ந்துகொள்வோமா என்று கேட்டிருக்கிறீர்கள். நான் இங்கே குறிப்பிட்டிருப்பது திரையிசையில் வராதது; ஆனாலும் ரசிக்கத்தக்க ஒரு பாடல்!////
என் தமிழர் படமெடுக்க ஆரம்பம் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர் நடை உடை பாவனைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!
ஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில்லை!
ஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதாயில்லை!வட நாட்டார் போன்ற உடை, வட நாட்டார் மெட்டு!
மாத்தமிழர் முன்னாள் தெலுங்கு கீர்த்தனங்கள்!
வட மொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில பிரசங்கம்!
வாய்க்கு வரா ஹிந்துஸ்தானி ஆபாச நடனம்!
அமையும் இவை அத்தனையும் கழித்துப் பார்க்குங்கால்
அத்திம்பேர் அம்மாமி எனும் தமிழ்தான் மீதம்!கடவுளர்கள், அட்டை முடி, காகிதப் பூஞ்சோலை,
கண்ணாடி முத்து வடம் கண் கொள்ளாக் காட்சி!
பரமசிவன் அருள் புரிந்து வந்து வந்து போவார்!
பதிவிரதைக்கின்னல் வரும் பழைய படி தீரும்!
சிரமமொடு தாளமெண்ணி போட்டியிலே பாட்டு
சில பாடி மிருதங்கம் ஆவர்த்தம் செய்து
வரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும், போகும்!
மகரிஷிகள் கோயில் குளம் – இவைகள் கதாசாரம்
இரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம் இதனால்ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!
Water (2005 film) https://en.wikipedia.org/wiki/Water_(2005_film) என்றொரு படம். அதைப் பார்த்த பொழுது என் பிள்ளைகளுக்கு அந்த கான்செப்டே விளங்கவில்லை.ஆனால் இப்படி ஒரு தலைமுறை உருவாகிவிட்டதைக் கண்டு எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.திராவிட கழகத்தார் மட்டுமின்றி ஆரிய சமாஜமும் கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தவர்கள் என்று படித்திருக்கிறேன் பேராசிரியரே.இன்றும் மிக முதியவர்களை கைம்பெண் சீருடையுடன் பார்க்கலாம்
On Wednesday, April 23, 2014 8:46:50 PM UTC-7, ஜில்ஜில் ரமாமணி wrote:துணைவி இறந்தபின் வேறு துணைவியைத்
தேடுமோர் ஆடவன் போல்-பெண்ணும்
துணைவன் இறந்தபின் வேறு துணைதேடச்
சொல்லிவிடுவோம் புவி மேல்.
'கணைவிடு பட்டதும் லட்சியம் தேடும்' நம்
காதலும் அவ்வாறே-அந்தக்
காதற் கணைதொடுக்காத உயிர்க்குலம்
எங்குண்டு சொல் வேறே?
காதல் இல்லாவிடம் சூனியமாம் புவி
காதலினால் நடக்கும்!-பெண்கள்
காதலுளத்தைத் தடுப்பது, வாழ்வைக்
கவிழ்க்கின்றதை நிகர்க்கும்.
காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே கெட்ட
கைம்மையைத் தூர்க்காதீர்!-ஓரு
கட்டழகன் திருத் தோளினைச் சேர்ந்திடச்
சாத்திரம் பார்க்காதீர்!நான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் உளவியல் துறையில் ஆய்வு மாணவனாக இருந்தபோது ஒரு ஆய்வுமாணவி தமிழகத்தின் இளம் விதவைகள் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தார். உலகத்திலேயே பெண் விதவைகள் என்ற ஒரு குமுகப்பிரிவு இந்தியாவில் மட்டுமே இருந்தது என்று குறிப்பிடுவார். இளம் விதவைகளுக்கு மறுமணம் செய்வதற்குக் கடுமையான் எதிர்ப்பு அந்தணர்களிடம் இருந்ததுபோல் அந்தணர்கள் அல்லாதவர்களிடம் இருந்ததில்லை என்றும் சங்கதமயமாதல் வய்ப்பட்ட சில அந்தணரல்லாத சாதிப்பிரிவுகளும் இளம் விதவைகள் மறுமணத்துக்குக் கடுமையான் எதிர்ப்பைத் தெரிவித்தன. சுயமரியாதை இயக்கம் மட்டுமே விதவா விவாக சபா மற்றும் மாதர் மறுமண சகாய சங்கம் (காரைக்குடி, 1933)என்ற அமைப்புகளைத் தோற்றுவித்து விதவைத் திருமணம் செய்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்குத் தளம் அமைத்துக்கொடுத்ததுபெண்களுக்கு மட்டுமே கற்பு என்று கூறும் ஆண்களில் விதவன் விபச்சாரன் என்று பெண்களைக் குறிப்பிடும் பிரிவுகளைப்போல் பிரிவுகளை அமைக்கவேண்டும் என்று சுயமரியாதையினர் வலியுறுத்தினர். பலாவை எடுத்துக்காட்டகக் காட்டியதற்குக் காரணம் பலாவின் அழகு வெளியே இல்லை உள்ளேதான் உள்ளது. தமிழ் இலக்கியப் பட்டைப்புகளி 90% பெண்ணின் புற அழகைப் பாடியதுபோல் அவளின் அறிவுத்திறத்தைப் பாராட்டிப்பட்டியதில்லை. பெரும் தமிழ்ப்புலவர்கள் வெறும் வார்த்தை ஜாலத்தைப் பயன்படுத்திப் பெண்ணை அங்கம் அங்கமாக வர்ணித்தவர்கள் அவளின் தலைமுடிக்கு உவமைமேல் உவமையாக்ச் சொன்னவர்கள் உள்ளே இருக்கும் மூளையைப் பற்றி ஏன் பாடாமல் விட்டார்கள் அந்த சிந்தனைத் திறனை வேரிற்பழுத்த பலாவை வீணடித்ததுபோல் வீணாக்கிவிடுவது இயற்கைக்கு முரணானது என்று குறிப்பிடலாம்
சவடால் வைத்தி
2014-04-24 6:21 GMT+05:30 'தேமொழி <them...@cs.com>' via மின்தமிழ் <mint...@googlegroups.com>:
வரிகளுக்கு நன்றி சுபா,"கோரிக்கையற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா" என்று தேடுவதற்கும்"கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா" என்று தேடுவதற்கும்கிடைக்கும் முடிவுகளில் என்ன ஒரு வேறுபாடு.நான் மதுரைத் திட்டத்தில் குடைந்து கொண்டிருந்தேன். தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் தேட மறந்தேன்..... தேமொழி
On Wednesday, April 23, 2014 12:25:27 PM UTC-7, Suba.T. wrote:முழு பாடலும்..கைம்மைப் பழிகோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்குவேரிற் பழுத்த பலா-மிகக்கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர்வடிகின்ற வட்ட நிலா!சீரற்று இருக்குதையோ குளிர் தென்றல்சிறந்திடும் பூஞ் சோலை-சீசீஎன்று இகழ்ந்திடப் பட்டதண்ணே நறுஞ்சீதளப் பூ மாலை.நாடப்படா தென்று நீக்கி வைத்தார்கள்நலஞ்செய் நறுங் கனியைக்-கெட்டநஞ்சென்று சொல்லிவைத் தார் எழில் வீணைநரம்புதரும் தொனியைசூடப் படாதென்று சொல்லிவைத்தார் தலைசூடத்தகும் க்ரீ டத்தை-நாம்தொடவும் தகாதென்று சொன்னார் நறுந்தேன்துவைந்திடும் பொற் குடத்தை!இன்ப வருக்கமெல் லாம்நிறை வாகிஇருக்கின்ற பெண்கள் நிலை-இங்கிவ்விதமாய் இருக்குதண்ணே! இதில்யாருக்கும் வெட்க மிலை!தன்கண வன்செத்து விட்டபின் மாதுதலையிற்கைம் மைஎன ஓர்-பெருந்துன்பச் சுமைதனைத் தூக்கிவைத் தார்; பின்புதுணைதேட வேண்டாம் என் றார்.துணைவி இறந்தபின் வேறு துணைவியைத்தேடுமோர் ஆடவன் போல்-பெண்ணும்துணைவன் இறந்தபின் வேறு துணைதேடச்சொல்லிவிடுவோம் புவி மேல்.'கணைவிடு பட்டதும் லட்சியம் தேடும்' நம்காதலும் அவ்வாறே-அந்தக்காதற் கணைதொடுக்காத உயிர்க்குலம்எங்குண்டு சொல் வேறே?காதல் இல்லாவிடம் சூனியமாம் புவிகாதலினால் நடக்கும்!-பெண்கள்காதலுளத்தைத் தடுப்பது, வாழ்வைக்கவிழ்க்கின்றதை நிகர்க்கும்.காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே கெட்டகைம்மையைத் தூர்க்காதீர்!-ஓருகட்டழகன் திருத் தோளினைச் சேர்ந்திடச்சாத்திரம் பார்க்காதீர்!2014-04-23 21:21 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:இங்குள்ளது முழு பாடலும் .. அதோடு நான் வழங்கிய அந்தப் பாடலும்.. பாருங்களேன்.சுபா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
பாவையர் முன்னேற்றத்தில் பாவேந்தரின் பங்கு!
முத்துலட்சுமி ரெட்டியார், மூவலூர் ராமாமிர்தத்தம்மையார் போன்று களப்பணியாற்றிப் பெண்ணுரிமைக்கு உழைத்தோர் சிலர்; அதுபோல் கவிப்பணியாற்றிப் பெண்டிர்தம் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டோர் வேறுசிலர். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர், இருபதாம் நூற்றாண்டு கண்ட இணையற்ற கவிஞரான புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவர். தீப்பொறி பறக்கும் தன் கவிதைகள் வாயிலாகப் பெண்ணுரிமைக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும் குரல் கொடுத்தவர் அவர்.
பெண்ணடிமை ஒழிப்பு, பெண்ணுரிமை, பெண்கள் முன்னேற்றம், பெண்டிர்தம் நல்வாழ்வு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, விதவைப் பெண்களின் மறுவாழ்வு, மணமுறிவு பெற்றவர்களின் மறுவாழ்வு என்று பல தளங்களில் தன் விரிந்த சிந்தனையைச் செலுத்தி இவையனைத்திற்கும் தம் புரட்சிப் பாக்கள் வாயிலாகத் தீர்வு(ம்) கண்டுள்ளார் பாவேந்தர்.
அகண்ட, விசாலப் பார்வையும், சமூகச் சீர்திருத்த எண்ணங்களும் இயல்பிலேயே அமையப்பெற்ற பாவேந்தர், சமுதாயத்தின் கண்களாய் விளங்கிடும் பெண்களின் அவலநிலை துடைத்திட ஆற்றிய கவிதைப் பங்களிப்பு மகத்தானது.
இந்தியத் திருநாட்டில் மண்ணடிமை ஒழிய வேண்டுமானால் முதலில் நம் வீடுகளில் பெண்ணடிமை ஒழியவேண்டும் என்ற கருத்தைக் கொண்ட பாரதிதாசன், தன் ’சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்ற காவியத்தில்,
”பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே
ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு”
என்று அக் காவிய நாயகியின் மூலம் ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்.
பெண்கல்வியின் அவசியத்தை மிகவும் வலியுறுத்துகின்ற கவிவேந்தர், ஒரு பெண் பெறுகின்ற கல்வியே அவள் சார்ந்த குடும்பத்தையும், அந்தச் சமுதாயத்தையும் மேம்படுத்தும், முன்னேற்றும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவராய்த் திகழ்கின்றார்.
”பெண்கட்குக் கல்வி வேண்டும்
குடித்தனம்
பேணு தற்கே!
பெண்கட்குக் கல்வி
வேண்டும்
மக்களைப்
பேணுதற்கே!
…………………………………
கல்வியில் லாத
பெண்கள்
களர்நிலம்;
அந் நிலத்தில்
புல்விளைந் திடலாம்;
நல்ல
புதல்வர்கள்
விளைதல் இல்லை!
கல்வியை உடைய
பெண்கள்
திருந்திய
கழனி; அங்கே
நல்லறி வுடைய
மக்கள்
விளைவது நவில
வோநான்?”
என்று பெண்கல்வியின் அவசியத்தைத் தன் ’குடும்ப விளக்கு’ என்ற நூலில் தெளிவாக விளக்குகின்றார்.
புரட்சிச் சிந்தனைகளையும், முற்போக்குக் கொள்கைகளையும் பாவேந்தரின் பாடல்கள்தோறும் காணமுடிவது ஓர் சிறப்பாகும். அதற்குப் ’பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரோடு பாவேந்தர் கொண்டிருந்த நட்பும் ஓர் முக்கியக் காரணம் என்று கூறலாம்.
பெண்கள் தங்கள் மணாளனைத் தாங்களே முடிவு செய்தல் வேண்டும் என்றும் பெற்றோரின்/மற்றோரின் கட்டாயத்திற்காக மணத்தல் தவறு எனவும் அறிவுரை கூறுகின்றார் இந்தப் புதுவைக் கவிஞர். இக்கருத்து எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடியதே அல்லவா?
’கல்யாணம் ஆகாத பெண்ணே! – உன்
கதிதன்னை நீநிச்ச யம்செய்க கண்ணே!
வல்லமை பேசியுன் வீட்டில் – பெண்
வாங்கவே வந்திடு வார்கள்சில பேர்கள்;
நல்ல விலை பேசுவார் – உன்னை
நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள்,
கல்லென உன்னை மதிப்பார் – கண்ணில்
கல்யாண மாப்பிள்ளை தன்னையுங் கண்டார்;
வல்லி உனக்கொரு நீதி – இந்த
வஞ்சத் தரகர்க்கு நீ அஞ்ச வேண்டாம்
…………………………………………………………………………………………………………..
கற்றவளே ஒன்று சொல்வேன் – உன்
கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்!’
பெண்ணை விலைபேசும் இத்தகைய வழக்கம் ’வரதட்சணை’ என்னும் பெயரில் இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரிய ஒன்றாகும்.
கைம்பெண்களின் நல்வாழ்விற்கும் அதிகம் குரல்கொடுத்தவர் புரட்சிக் கவிஞரே என உறுதியாகக் கூறலாம். இக்கைம்மைக் கொடுமைக்கு ஓர் முடிவு கட்டவேண்டும், முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்னும் ஆவேசம் கொண்டவராய்,
”ஆடவரின் காதலுக்கும், பெண்கள் கூட்டம்
அடைகின்ற காதலுக்கும், மாற்ற முண்டோ?
பேடகன்ற அன்றிலைப்போல், மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட் கின்றான்!
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ? என்று சீறுகின்றார்.
காதல் என்ற உணர்வு ஆண், பெண் இருவருக்குமே பொதுவான ஒன்றுதானே….அதிலென்ன பேதம்? ஆண்மகன் வயதுசென்ற கிழவனாக இருந்தாலும் தன் மனைவி செத்தால் மறுநாளே புதுமாப்பிள்ளை ஆகிவிடுகின்றான். அது சரியே என்று ஒத்துக் கொள்ளும் இச்சமூகம் ’வாடாத பூப்போன்ற ஓர் மங்கை நல்லாள்’ கைம்மை அடைந்துவிட்டால் அவளின் நல்வாழ்வு குறித்தோ, எதிர்காலப் பாதுகாப்பு குறித்தோ சற்றும் சிந்திக்காமல் அவள் மறுமணம் புரிவது தவறு என்றும் தீது என்றும் சொல்வது எவ்விதத்தில் நியாயம்? என்று வினவுகின்றார். அதனை விளக்குவதற்கு அவர் எடுத்தாண்டுள்ள உவமைகள் சிறப்பானவை; சிந்தனையைத் தூண்டுபவை.
”பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?”
என்று பெண்ணிற்குத் தீங்கிழைக்கும் இச்சமூகத்தை நோக்கி வினா எழுப்புகின்றார்.
அடுத்து, ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமானமாக நடத்தப்படும் நாள் தமிழ்நாட்டில் என்று வருமோ? என்ற தன் ஏக்கத்தை அழகாய்ப் பதிவுசெய்துள்ளார் ஒரு பாடலில்…
”கண்களும் ஒளியும் போலக்
கவின்மலர் வாசம் போலப்
பெண்களும் ஆண்கள் தாமும்
பெருந்தமிழ் நாடு தன்னில்
தண்கடல் நிகர்த்த அன்பால்
சமானத்தர் ஆனார் என்ற
பண்வந்து காதிற் பாயப்
பருகுநாள் எந்த நாளோ ?”
அதுமட்டுமன்று, திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே ஒன்றாய் இணைந்து வாழ்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்படும்போது, தகுந்த காரணங்களின் அடிப்படையில் அந்த ஆணோ அல்லது பெண்ணோ விலகி வாழ விரும்பினால் அஃது அனுமதிக்கப்படவேண்டும்; மேலும் (மணமுறிவு பெற்ற) அவர்கள் வேறு ஆடவனையோ, பெண்ணையோ மணந்து கொள்வதிலும் தவறில்லை என்ற கருத்துடைய பாவேந்தர், புரட்சிக் கவிஞராக மட்டுமின்றிப் புரட்சிச் சிந்தனையாளராகவும் தோன்றுகின்றார்.
”-------------------------------காதல்
உடையார்தம் வாழ்வில்
உளம்வேறு
பட்டால்
மடவார் பிறனை
மணக்க விடவேண்டும்
ஆடவனும் வேறோர்
அணங்கை மணக்கலாம்.” என்பது பாவேந்தரின் சித்தாந்தம்.
இவற்றோடு நில்லாமல், குழந்தைகள் திருமணத்தைத் தடை செய்யவேண்டும், குழந்தைகளை அளவோடு பெற்று வளமோடு வாழக் கருத்தடை முறையினைப் பின்பற்றவேண்டும் என்பன போன்ற சமூக நலத்திற்கானச் சீரிய கோட்பாடுகள் பலவற்றையும் தன் கவிதைகள் மூலம் பதிவுசெய்துள்ளார் பாவேந்தர்.
பெண்களின் முன்னேற்றத்திற்கும், அவர்தம் நல்வாழ்விற்கும் உழைத்தோர் வரிசையில் பாவேந்தருக்கும் ஓர் முக்கிய இடமுண்டு என்பதில் ஐயமில்லை.
On Wednesday, April 23, 2014 9:40:32 PM UTC-7, ஜில்ஜில் ரமாமணி wrote:2014-04-24 9:49 GMT+05:30 தேமொழி <them...@cs.com>:திராவிட கழகத்தார் மட்டுமின்றி ஆரிய சமாஜமும் கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தவர்கள் என்று படித்திருக்கிறேன் பேராசிரியரே.உண்மை. ஆயினும் சுயமரியாதை இயக்கம்போல் ஆரிய சமாஜம் செயல்படவில்லைநான்காம் அத்யாயம்:
Title: Middle class women in colonial Tamilnadu, 1920 - 1947 : Gender relation and the problum of consciouness Researcher: Anandhi, S Guide(s): Panikar, K N Keywords: Social Science
colonial consciouness
Gender relationIssue Date: 13-Jan-2014 University: Jawaharlal Nehru University Award Date: n.d. இன்னொரு முனைவர் பட்ட ஆய்வு:
Title: A new subject for feminism: print-media, Dravtdian movement and the reconstitution of readers Researcher: Srilata, K Guide(s): Tejasvini Keywords: English
Feminism
Print MediaIssue Date: 6-Apr-2011 University: University of Hyderabad Pagination: v, 242p. URI: http://hdl.handle.net/10603/1835 Appears in Departments: Department of English
http://shodhganga.inflibnet.ac.in/handle/10603/1835அன்புடன்,நா. கணேசன்At Karaikudi in Ramnad district, M. Maragadavalli, along with So. Murugappa (whom she marri~ed as a widow), started a Widow Remarriage Association (Madhar Marum.ana Sahaya Sangam) in 1933. This Sang am propagated the message of widow remarriage in remote villages and in small towns through lectures on the conditions of women, particularly widows. In 1934, the first meeting of the Sangam was organised in a small town called Kandavarayanpatti, and only 20 people attended this meeting. In the course of the year,· four similar meetings were organised in four different villages. In 1935 nine such propaganda meetings were organised and by 1937, the association covered 28 villages with 29 propaganda meetings. This was all carried out amidst strong opposition from the Chettiar community. Apart from collecting about 2,000 signatures in . support of widow remarriage, the Sangam also demonstrated the problems of widowhood through 'Magic Lantern' shows, and distributed 45,000 printed pamphlets on widow remarriage. For the benefit of literate widows, the Association printed four handbooks about the nature of widowhood, the essence of widow remarriage and about alternatives for widows.108The most important activity of the Association was the publication of a Tamil monthly called Madhar Marumanam (Women's Remarriage) under the editorship of Maragadavalli, in 1936.109 The magazine carried details about widow remarriages that were conducted all over India, photographs of such couples, their brief history etc. A major contribution of articles for the journal came from women activists such as R.S. Rajalakshmi, S.Neelavathi, T.S. Kunchidam, S. Rangammal, S. Sivagami, L. Parva thi Devi and P.N .S. Visalakshi Ammal. 110 As part of its widow remarriage campaign, the Association conducted the first widow remarriages among the Nattukotai Chettiars. For instance, remarriage of Valliammaiachi, a widow, with Palaniappa Chettiar was conducted by the Association at a small town, Amaravathipudur. Muthulakshmi Reddy presided over the marriage. Around 300 Chettiar women attended the wedding. The venue was decorated with slogans like "Only Widow Remarriage Brings Independence", "Women'sLiberation Is True Independence", etc. During this marriage 'Widow Remarriage Songs' prepared by the Sang am were sung along with Bharathi 's songs. M. Maragadavalli and Visalakshi Subbaiah were important speakers at the marriage.The Association had started a home for widows, Ma~alir Illam, at Aamaravathipudur. The widows at this home were taught handicrafts, spinning and tai oring.---------------------------------------------------------------------------------108 Madhar Marumanam, Vol. III, No. 1, SepLCmber-Octobcr 1938.109 Lokopakari, Vol. I, No.2, 13 September 1936.I 10 Madhar Marumanam, Vol.l, No.3, October- November 1937.Ill Madhar Marumanam, Vol. II, No.2, September-October 1937.சவடால்
(’முதியோர் காதல்’ பற்றி என்னை எழுதத் தூண்டிய அன்புத் தோழி தேமொழிக்கும், அதுகுறித்து நான் எழுதிய இக்கட்டுரையை இன்று வெளியிட்டுள்ள வல்லமை இதழுக்கும் என் நன்றிகள்!)
முதியோர் காதல்!

பாவேந்தர் பாரதிதாசன் படைத்த காவியங்களில் கலங்கரை விளக்காகத் திகழ்ந்துவருவது குடும்ப விளக்கு! இக்காவியத்தின் தலைவி தங்கம், பெயருக்கேற்றபடி குணமும் வாய்த்தவள்! அவளும் அவள் அன்புக் கணவன் மணவழகனும் இளமையில் நடத்தும் இல்லறத்தை மிகவும் ரசனையோடு விவரிக்கும் பாவேந்தர், பின்பு அவர்களுடைய பிள்ளைகளான வேடப்பனும், வெற்றிவேலும் வளர்ந்து வாலிபர்கள் ஆவது, அவர்களுடைய திருமணம் என ஒரு குடும்பம் சந்திக்கின்ற எல்லா வாழ்வியல் நிகழ்வுகளையும் இக்காவியத்தில் விரிவாகவே காட்சிப்படுத்தியுள்ளார்.
குடும்ப விளக்கின் எல்லாப் பகுதிகளும் ஒளிமிகுந்தவையே! எனினும் மிகச் சிறந்த பகுதியாக – பொதுவாக மற்ற கவிஞர்கள் புனையாத காதல் பகுதியாகச் சுடர்விட்டுப் பிரகாசிப்பது காவியத்தின் இறுதிப் பகுதியான ’முதியோர் காதலே!’
மணமான புதிதில் புதுமணத் தம்பதியர் எவ்வாறு ஒருவர்மீது மற்றொருவர் அன்பும், காதலும் கொண்டிருப்பரோ அதனினும் அதிகமான அளவு அன்பும் காதலும் கொள்வதென்பது நூறு வயதிலும் சாத்தியமே என்பதை விளக்கும் ஓர் அற்புதப் பகுதி இது!
மிகவும் தள்ளாத முதியவர்களாகிவிட்ட (குடும்ப விளக்கின் தலைமைப் பாத்திரங்களான) தங்கமும், மணவழகனாரும் தங்கள் மூத்த பிள்ளையான வேடப்பனோடு இன்பமாக வாழ்ந்து வருகின்றனர். மருமகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களை மிகவும் அன்போடும் பரிவோடும் பேணிவருகின்றனர்.
தங்கள் இல்லறக் கடமைகளைச் சரிவரச் செய்துவிட்ட மகிழ்ச்சியில் தங்கமும் மணவழகரும் பேசிக்கொள்வதை நாமும் சற்றுக் கவனிப்போம்…
”பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தோம்; சுற்றத்தார்க்குச் செய்ய வேண்டுவனவற்றைக் குறைவறச் செய்தோம்; நம் வாழ்க்கையில் ஒருநாளும் வாய்மை தவறியதில்லை; நாட்டின் நலத்திற்காக இயன்ற அறங்களைச் செய்தோம்; யாருக்கும் சிறிய தீங்கும் செய்தறியோம்; சின்னஞ்சிறு உதவியை யாரேனும் நமக்குச் செய்திருந்தாலும்கூட செய்ந்நன்றி மறந்தறியோம்!” என்பதாக நீள்கிறது அவர்களின் உரையாடல்…
”மைந்தர்க்குக் கல்வி சேர்த்தோம்
மகள்மார்க்கும் அவ்வா றேயாம்
எம்தக்க கடன்மு டித்தோம்
இனிதாக வாழு கின்றோம்
முந்துறச் சுற்றத் தார்க்கும்
செய்வன முழுதும் செய்தோம்
இந்தநாள் வரைக்கும் வாய்மை
இம்மியும் மறந்த தில்லை
இந்நாட்டின் நலனுக்காக
நல்லறம் இயற்றி வந்தோம்
எந்நாளும் பிறர்க்குத் தீமை
எங்களால் நடந்த தில்லை.
சின்னதோர் நன்று செய்தார்
திறம்மறந் தறியோம் என்றே
இன்னிசை பாடும் அன்னார்
இரண்டுள்ளம் இன்பம் கொள்ளும்.”
இவ்வாறு மகிழ்வோடு உரையாடிய சிறிது நேரத்திலேயே மூதாட்டி தங்கம் சோர்ந்துபோய் கண்ணயர்கின்றாள்; மணவழகனாருக்கோ உறக்கம் வரவில்லை. அயர்ந்து உறங்குகின்ற தன் அருமை மனைவியைப் பார்க்கிறார். அழகு கொலுவிருந்த அவளுடைய முந்தைய இளமைத் தோற்றமும், உடல் தளர்ந்த இப்போதைய முதிய தோற்றமும் அவருடைய மனக் கண்ணிலே மாறி மாறி வந்துபோகின்றன.
காலம் செய்த கோலத்தை வியந்தவராய்த் தனக்குள்ளே பேசிக்கொள்கிறார், “புத்தம் புதுமலர் மேனியள் அல்லள் இவள் இப்போது! காய்ந்த புற்கட்டைப் போல் ஆகிவிட்டது இவள் தேகம்! நடையா…இது நாட்டியமா என நான் வியந்த ஒய்யார நடையளுமல்லள்! நடக்கவே தடுமாறித் தள்ளாடிவிழும் மூதாட்டி! வதனமே சந்திர பிம்பமோ…என்று இவள் மதிமுகத்தைப் பார்த்து மதிமயங்கி ஒரு காலத்தில் நான் பாடியதுண்டு! ஆனால் இப்போது குழிவிழுந்த கண்களோடு வறண்ட நிலம்போலல்லவா அந்த எழில்முகம் உருமாறிவிட்டது?!” எனப் பெருமூச்செறிகிறார்!
“மேனி அழகு குலைந்துபோய்விட்ட இவளிடம் எதுதான் எனக்கு இன்பம் இப்போது?” என்ற கேள்வி பிறக்கின்றது அவருக்கு. ”இவள் இருக்கின்றாள் என்ற ஒன்றே!!” என்ற பதிலை அவர் ஆழ்மனம்….அன்பில் ஆழ்மனம் அவருக்குச் சொல்கின்றது. ”ஆமாம்…என் தங்கம் என்னோடு இருக்கின்றாள் என்றே ஒன்றே எனக்குப் போதும்!” என எண்ணியவராய், உறங்கும் அந்த மூதாட்டியைக் காதலோடு மீண்டும் பார்க்கிறார்; கண்கள் குளமாகின்றன அவருக்கு!
நெஞ்சை நெகிழச் செய்யும் அந்தப் பாடல்….
புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும்மூ தாட்டி!
மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம் குழிகள் கண்கள்
எதுஎனக் கின்பம் நல்கும்?
’இருக்கின்றாள்’ என்பது ஒன்றே!
எவ்வளவு ஆழமான வாழ்க்கைத் தத்துவம் இதில் புதைந்துகிடக்கிறது!
உண்மையான காதலைக் கணவனும் மனைவியும் உணருவதே முதுமைப் பருவத்தில்தானே! கவிஞர் வைரமுத்து சொல்வதுபோல் ’உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறுகின்ற காதல்’ மனப்பக்குவம் வரவரக் காமக் கடலை நீந்திக் கரையேறி உள்ளமெனும் கோயிலில் குடியேறிவிடுகின்றது அமர காதலாய்!
’முதியோர் காதல்’ எனும் இப்பகுதி முதியோரின் காதலைச் சொல்வதாயினும் இளையோரும் படித்துப் பயன்பெறவேண்டிய ஒன்று! முதிய தம்பதியினரின் அன்பான, பண்பான இல்லறத்தை இளையோர் அறிந்துகொள்ளுதல் அவர்தம் இல்லற வாழ்வைச் செம்மையாய் நடத்த உதவும்.
அன்றைய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையின் மிகப்பெரிய பலமே ‘வாழ்க்கைக் கல்வி’யை இளையோர், தம்முடனே ஒன்றாக இணைந்து வசித்துவந்த, பெற்றோரிடமும் ஏனைய பெரியோரிடமும் நேரடியாகக் கற்ற அனுபவமே! இன்றைய நவீன உலகில் அது சாத்தியப்படாமல் போனது இளைய தலைமுறையினருக்குப் பேரிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்!
’Nuclear Family’ என்று சொல்லப்படுகின்ற தனிக்குடும்ப அமைப்புமுறை கோலோச்சத் தொடங்கிவிட்ட இன்றைய சூழலில் முதிய தம்பதியர் இருவர் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைச் சுவையாகப் பகிர்ந்துகொள்ளும் இப்பகுதி ’இல்லறத்தை நல்லறமாக்கும்’ வெற்றி ரகசியத்தை நமக்குச் சொல்லித் தருகின்றது!
வாழ்க்கை எனும் அனுபவக் கல்வியை ஏட்டின் மூலமாக அறிந்துகொள்ள வழிவகுத்த பாவேந்தரின் எழுத்துப் பணி போற்றத்தக்கதுதானே?
அன்புடன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
மங்கையைப் பாடுவோருண்டு
மழலையைப் பாடுவோருண்டு
காதலைப் பாடுவோருண்டு
கருணையைப் பாடுவோருண்டு
அன்னையைப் பாடுவோருண்டு
அரசினைப் பாடுவோருண்டு
கைராட்டினத்தைப் பாடுவாருண்டோ?
கதரினைப் பாடுவாருண்டோ?
என வியக்கலாம். கவிஞர்களின் கற்பனையில் உதிக்கும் கவிதைகளின் பாடு பொருட்களுக்கும், பாட்டுடைத் தலைவர்களுக்கும் வரம்பில்லை என்பதைத் தெளிவாக்குகிறார் பாரதிதாசன்.
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில், இருபது பக்கமேயுள்ள கவிதை நூல் ஒன்றினை “கதர் இராட்டினப்பாட்டு” என்ற தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறார் பாரதிதாசன். அக்கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் போற்றுவது கதரையும் கைராட்டினத்தையும். புதுவை நகரின் கலாநிதி அச்சகம் 1930 இல் வெளியிட்ட இந்த நூலின் அன்றைய விலை ஒன்றேகால் அணா. இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சியால் மின்நூல் வடிவம் கொடுக்கப்பட்டு, தமிழர்கள் அனைவரும் பயன் பெரும் வகையில் அவர்களது மின்நூல்கள் சேகரிப்பில் இடம் பெற்றுள்ளது. தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த முயற்சி போற்றுதலுக்குரியது.
கவிதை நூல் பிறந்த வரலாறு:
இந்த நூலினை அறிமுகப் படுத்தும் மாலன் அவர்களின் முன்னுரையின் மூலம் கவிதை நூல் பிறந்த உணர்ச்சி பூர்வமான கதையும் நமக்குத் தெரிய வருகிறது.
1920ம் வருடம் ஆகஸ்ட் 2ம் தேதி, வாழ்நாள் முழுவதும் கதர் அணியப் போவதாக உறுதி எடுத்துக் கொண்ட அண்ணல் காந்தி, 1921 முதல் அது தொடர்பான பிரசாரத்தைத் துவக்கினார். பாரதத்தில் ஒத்துழையாமை இயக்கம் பிறந்து வளர்ந்தது. மக்களுக்குச் சுதந்திர தாகமும் வளர்ந்தது. ஒத்துழையாமைப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகும், அது வளர்த்துவிட்ட மக்கள் எழுச்சியை சுதந்திரப் போராட்டத்திற்கு வழியமைத்துக் கொடுக்க காந்தியால் கதர் இயக்கம் தொடங்கப் பட்டது. தமிழகத்தில் அந்த காதர் இயக்கத்தின் தாக்கத்தில் பாரதிதாசன் படைத்திட்ட நூல் இந்த கதர் ராட்டினப் பாட்டு கவிதை நூல். சுருங்கச் சொல்லின், இது அன்றைய தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட பிரச்சார பீரங்கிகளில் ஒன்று.
கவிதைகள் வடித்ததுடன் தானும் முற்றிலும் காதர் ஆடை அணியும் வழக்கத்திற்கு மாறினார் கவிஞர். தானே தனது கையினால் நூற்ற நூலில் கதர் சேலையை நெய்யச் செய்து தீபாவளிப் பரிசாகத் தனது மனைவிக்கு வழங்கியிருக்கிறார். அது போன்றே தன் கையால் நூற்ற நூலைத் திரித்து தனது குழந்தைக்கு அரைநாண் கயிறும் அணிவித்திருக்கிறார். அத்துடன் நில்லாது, கடன் கொடுக்கும் அடிப்படையில் கதர் துணி விற்பனையையும் செய்து மக்கள் கதராடை அணிய ஊக்கப் படுத்தியிருக்கிறார் கவிஞர். அவரிடம் கடனுக்குத் துணி வாங்கிய புதுவை ஜெகநாதம் என்பவரின் குறிப்புகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
பாரதிதாசன் அவர்கள் இந்த கதர் ராட்டினப் பாட்டு நூலை வெளியிட்டதும் தனது சொந்த செலவில்தான். தனது மனைவியின் பத்துச் சவரன் தங்கச் சங்கிலியை விற்று அந்தப் பணத்தில் அவர் கதர் ராட்டினப் பாட்டு நூலை வெளியிட்டதாகவும், அந்த நூலை குடும்பத்தினரே தைத்து ஒட்டி விற்பனைக்கு அனுப்பி வைத்ததாகவும் பாரதிதாசரின் மூத்த மகள் சரஸ்வதி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஃபிரெஞ்சு காவல் துறையினரால் இந்த நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் கைகளுக்கு கிடைக்கா வண்ணம் பதுக்கப் பட்ட பிரதிகள் சில பின்நாளில் நாடு சுதந்திரம் அடைந்த பின்பு வெளியாகின. அவற்றில் ஒரு பிரதி 1990களில் பாரதிதாசனின் மகன், கவிஞர் மன்னர் மன்னனால் மாலன் அவர்களுக்குப் பரிசளிக்கப் பட்டு அவர் மூலம், நூலும், நூலின் வரலாறும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்நூல் சேகரிப்பிற்குக் கிடைக்கப் பட்டுள்ளது.
கதர் இராட்டினப் பாட்டு:
(1) பாரததேவி, (2) ஜன்ம பூமியின் சிறப்பு, (3) காந்தியடிகளும் கதரும்/பறை முழக்கம், (4) சுதந்தரதேவியும் கதரும், (5) தேசத்தாரின் பிரதான வேலை, (6) இராட்டினச் சிறப்பு, (7) அன்னைக்கு ஆடை வளர்க, (8) பாரததேவி வாழ்த்து ஆகிய எட்டு சுவை மிகு நாட்டுப் பற்றினை மையமாகக் கொண்ட கவிதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
“பாரததேவி”
விண்கொள் இமயமா வெற்பே திருமுடியாய்ப்
பண்கொள் குமரி பணிதாளாய் – மண்கொள்
வளமேதன் மேனியாய் வாய்ந்ததாய் வீரர்
உளமேதன் மேனிக் குவப்பு
என்று பாரத தேவியை வாழ்த்தும் முதல் வெண்பாவுடன் வாழ்த்துப் பாடலுடன் கவிதைகள் தொடர்கின்றன. சிலபாடல்களுக்கு அவற்றைப் பாட வேண்டிய மெட்டுகளும் குறிப்பிடப் பட்டுள்ளது. தேசத்தாரின் பிரதான வேலை என்ற கவிதையை குறத்திப் பாட்டு மெட்டில் பாட பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. காந்தியடிகளும் கதரும் அல்லது பறை முழக்கம் என்ற பாடலுக்கு சுருதிபெட்டியின் ஸ்வரமும் கொடுக்கப் பட்டுள்ளது. அந்தப் பாடலும் அதைப் பட விரும்புவோருக்கு கவதை நூல் வழங்கிய ஸ்வரமும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
“பறை முழக்கம்”
அன்னியர் நூலைத் தொடோம் என்றசேதி
அறைந்திடடா புவி முற்றும் – எங்கள்
அறுபதுகோடித் தடக்கைகள் ராட்டினம்
சுற்றும்-சுற்றும்-சுற்றும்
இன்னும் செல்லாது பிறர்செய்யும் சூழ்ச்சிகள்
என்று சொல்லிப் புயம் தட்டு – அட
யானையின்மேல் வள்ளுவா சென்று நீபறை
கொட்டு-கொட்டு-கொட்டு
இதன்மெட்டு:
ஹார்மோனிய ஸ்வரம்
ஸரி க க / கா க க / கா க க / கா மா கா
அன்னியர் / நூலைத்தொ / டோமென்ற / சேதிய
ரீ கா ரீ / ரிக மா மா / மா மா ,, / கம பா
றைந்திட / டாஅபுவி / முற்றும்,, / எங்கள்
ஸ்ஸ் ஸ்¡ ஸா / ஸ்நி நீநீ / தா தா நீ* / பா மா கா
அறுபது / /கோஒடித / டக்கைகள் / ராட்டினம்
கா கா , / கா கா , / கா பம பா ,,
சுற்றும் / சுற்றும் / சுற்றும் ,,
ஸ்¡ ஸ்¡ நீ / ஸ்¡ ஸ் ஸ் ஸ்¡ ஸ் ஸ் / ஸ்¡ ஸ்¡ ரீ
இன்னும்சொல் / லாதுபி / றர்செய்யும் / சூழ்ச்சிகள்
ஸ்¡ ஸ்¡ நீ / தா தா தா / தா தா ,, / தப
என்றுசொல் / லிப்புயம் / தட்டு ,, / அட
பா ஸ்¡ ஸ்¡ / ஸ நி நீ நீ / தா தா நீ* / பா மா கா
யானையின் / மேல்வள்ளு / வாசென்று / நீபறை
கா கா / கா கா / காம மபா
கொட்டு / கொட்டு / கொட்டு
(* இக்குறி கருப்புக்கட்டை)
கருத்தைக் கவரும் மற்றொரு கவிதை சுதந்தரதேவியும் கதரும். பாடலின் தொடக்க வரிகள் ஒரு பெண்ணின் அழகை வர்ணிக்கிறது. அந்த அழகியை நீ யாரென கவிஞர் வினவ அவள் தன்னை ‘சுதந்திர மங்கை’ என அடையாளம் சொல்லுகிறாள். ஆளை மயக்கிடும் மாதொருத்தி எனத் துவங்கும் அப்பாடலில் அவள் யாரென அறியும் வரை அது ஒரு நாட்டுப் பற்றினைக் குறிக்கும் பாடல் என்ற எண்ணம் வராது. தொடர்ந்து வரும் வரிகளில் அந்த சுதந்திர மங்கை அவளை அடையும் வழியையும் உரைக்கிறாள். அந்நியர் துணிகளை வாங்காதே, நீயே நூல் நூற்று ஆடை நெய்து கதராடை உடுத்து. அந்நியர்களின் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் அவர்கள் வணிகம் வீழ்ச்சி அடையும். அந்நியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த காரணத்தை கேள்விக்குரியாக்குவதன் மூலம் அவர்களை வெளியேற்றி இந்தியா சுதந்திரம் அடையலாம். எனவே சுதந்திரம் அடைய இராட்டினம் சுழட்று என்று சுதந்திர மங்கை அறிவுரை கூறுவதாக பாரதிதாசன் அறிவுரை வழங்குகிறார். அப்பாடலின் சில வரிகளும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
“சுதந்தரதேவியும் கதரும்”
ஆளை மயக்கிடும் மாதொருத்தி – உடல்
அத்தனையும் பொன்னை ஒத்திருந்தாள் – அவள்
பாளை பிளந்த சிரிப்பினிலே – என்னைப்
பார்த்துரைத்தாள் எந்தநாளையிலே – உன்றன்
தோளைத் தழுவிடக் கூடும் என்றே – அடி!
சுந்தரி உன்பெயர் ஊர் எதேன்றேன் – அவள்
காளியனுப்பிய கன்னியென்றாள் – என்றன்
காதற் சுதந்தர மங்கையன்றோ அவள் (ஆளை)
.
.
.
கன்னியுரைத்தது கேட்டிடுவீர் – உள்ளக்
காதல் இருப்பது மெய் எனிலோ – அட
சின்ன இராட்டின நூலிழைப்பாய் – அதில்
தீட்டின்றி நெய்த உடை உடுப்பாய் – வரும்
அன்னியர் நூலைத் தலைகவிழ்ப்பாய் – அதற்
கப்புறம் என்னைக் கலந்திடுவாய் – என்று
கன்னியுரைத்து மறைந்துவிட்டாள் – அவள்
கட்டளைதன்னை மறப்பதுண்டோ – அந்த (ஆளை)
இந்தக் கவிதைத் தொகுப்பில் கருத்தைக் கவரும் மற்றொரு கவிதை சிறந்த உவமைக் கவிதையாக விளங்குகிறது. அடிமை இந்தியாவின் சூழ்நிலை இங்கே மகாபாரதத்துடன் ஒப்பிடப்படுகிறது. கெளரவர் சபையில் துகிலுரிந்து மானபங்கம் செய்யப்பட்ட பாஞ்சாலியாகக் கவிஞருக்குத் தென்படுகிறாள் அந்நியர் வசம் அல்லலுறும் பாரதத்தாய். கண்ணா என் மானத்தைக் காப்பாற்று என்று பாஞ்சாலி கதறியபோது கண்ணன் ஆடை வழங்கி அவளது துயர் தீர்த்தான். இதனைக் கவிஞர் சுதந்திரப் போராட்டத்துடன் ஒப்பிடும் பொழுது அவர் கற்பனையின் வளம் நம் கருத்தைக் கவர்வதாக உள்ளது. கதறும் பாஞ்சாலியின் துயர் தீர்க்க வந்த கண்ணனுடன் காந்தியை ஒப்பிடுகிறார் பாரதிதாசன். பாரதத் தாயின் துயர் தீர்க்க கதர் இயக்கம் மூலம் ஆடையை வளரச் செய்து அந்நியர்களின் எண்ணம் நிறைவேறா வண்ணம் பாரதத் தாயின் துயர் நீக்குகிறாராம் காந்தி. அப்பாடலின் இடம் பெற்ற வரிகளைக் கீழே காண்க.
“அன்னைக்கு ஆடை வளர்க”
“தீயார் துகிற் பறித்துத்
தீர்க்கின்றார் எனமானம்
மாயாமலர்க்கண்ணா
வந்துதுயர் தீர்த்திடுவாய்”
என்று பாஞ்சாலி
இசைக்க அது கேட்டுச்
சென்று மலர்க் கண்ணன்
சித்திரஞ் சேர் ஆடை
வளர்ந்திடுக என்றான்
அறம் வளர்க்க வந்தோன்
“தீயர் துகில் பறித்துத்
தீர்கின்றார் என்மானம்
மாயாமலர்க்கண்ணா
வந்து துயர் தீர்த்திடுவாய்”
என்று ரைத்திட்டாள்
இதனைச் செவியுற்றுச்
சென்று கண்ணக் காந்தி
சித்திரஞ் சேர் ஆடை
வளர்ந்திடுக என்றான்
அறம் வளர்க்க வந்தோன்
கைராட்டினத்தையும் போற்றிப்பாடும் ஒரு கவிதை நூலா என்று முதலில் எழுந்த எண்ணம்; கவிதைகள் பிறந்த காலப் பின்னணியையும், நாட்டுப்பற்றுடன் தனது சொந்த செலவில், மனைவியின் நகையை விற்று, கவிஞரின் குடும்பமே கவிதை நூலைத் தயாரித்த தகவல்களாலும், அதற்கு பிரெஞ்சு அரசாங்கம் ஏற்படுத்திய தடைகளை எண்ணும் பொழுதும், கவிஞரின் கவிதை வரிகளின் உவமை அழகிலும், கருத்துச் செறிவிலும் மனம் ஆழ்ந்து வந்தே மாதரம் என்று பாரதத் தாய்க்கும், சுதந்திர தாகம் கொண்ட அவளது அருமை மகனுக்கும் ஒருசேர தலை வணங்கும் வகையில் மாறிவிடுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூல் தருவது நாட்டுப் பற்றையும், கவிதை அழகையும் ஒருங்கே அளிக்கும் சுவை விருந்து.
நன்றி:
தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation): http://www.tamilheritage.org/old/text/ebook/b_dasan/intro.html
படங்கள்:
பாரதிதாசனின் ‘கதர் இராட்டினப்பாட்டு’, சுரதாவின் ‘பாரதிதாசன் பரம்பரை’ (பொதுவுடைமையா க்காப்பட்ட நூல்) நூல்களிலிருந்து
**********************************************
எங்கெங்குக் காணினும் சக்தியடா!எங்கெங்குக் காணினும் சக்தியடா! - தம்பிஏழுகடல் அவள் வண்ணமடா! - அங்குத்தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்தாயின் கைப்பந்தென ஓடுமடா - ஒருகங்குகளில் ஏழு முகிலினமும் - வந்துகர்ச்சனை செய்வது கண்டதுண்டோ ? - எனில்மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்மந்த நகையங்கு மின்னுதடா!காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரைகாண நினைத்த முழுநினைப்பில் - அன்னைதோளசைத்தங்கு நடம் புரிவாள் - அவன்தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒருவாளைச் சுழற்றும் விசையினிலே - இந்தவையமுழுவதும் துண்டு செய்வேன் - எனநீள இடையின்றி நீநினைத்தால் - அம்மைநேர்படுவாள் உன்றன் தோளினிலே!
மந்தையில் இருந்து பிரிந்த ஆட்டுக்குட்டி ஒன்று.....
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Excellent Megala. Great post. Hats off!!!!..
http://www.youtube.com/watch?v=ceLtI7itQz4&sns=em
(My favorite 'muthiyor kathal' song).
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்
--