சும்மா இருக்கும் சாமியார்

78 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 16, 2022, 9:40:37 AM11/16/22
to Santhavasantham
*சும்மா இருக்கும் சாமியார்*
---------------------------------------------

கும்மு-தல் :: நிறைதல். குமி-தல்/குவி-தல். கோமணம்/கோவணம் போல.
கோமணாண்டி பாடல், கொடுமுடிக் கோகிலம் பாடுகிறார்:
https://groups.google.com/g/vallamai/c/HtuXHgZKr5Y/m/f7yMmHyYFAAJ

கும்மு- என்பதன் Metathesis ~ இடவல மாற்றம் ~ முக்கு- என்றானதோ?
தாய் குழைந்தையை முக்கிப் பெற்றாள். நீரில் முக்குதல்/முங்கு-தல்.
முக்கு- எனும் வினை நீண்டு மூக்கு என உடலின் அங்கப் பேர் ஆனது.
மூக்கு >> மூச்சு (க்- > ச்- உருமாற்றம்).

கும்மு- >> சும்மு-. மூச்சுவிடுதல். கிவி-/கெவி- (cf. கெவுள்) >> செவி, கெவுள் > செவுடு/செவிடு, கெம்பு > செம்பு ... போல.

-------------------------------------

Niranjan Bharati asked:
> அடாது மழை பெய்தாலும் விடாது பணி செய்தார்கள் என்னும் தொடரில் "அடாது" என்பதற்கு என்ன பொருள், uncle?

அடுக்கு = Layers. ’அடுக்கடுக்காய் வீடுகள்’ என்கிறோம் அல்லவா. இதில் இருந்து, “அடாது பெய்யும் மழை”
உருவாகிறது. அடாது = without gaps, incessantly. அடாது பெய்யும் மழை = நில்லாமல் பெய்யும் மழை.
அடுக்கிப் பெய்யும் மழை = நின்றுநின்று/விட்டுவிட்டுப் பெய்யும் மழை = அடைமழை.

Madhuran: *அருமையான விளக்கம் 🙏
*> அடாது (தீங்கு) செய்தவன் படாதது படுவான்  என்றவாறான பொருள் எப்படி வந்ததென்று விளக்கம் உண்டா? இடைவிடாமல் தீங்கு செய்தல் /
*> குழப்படி எனும் பொருளிலா?

அடைமழை :: அடுக்கடுக்காய் நின்றுநின்று பெய்யும் கனமழை. அடாது பெய்யும் மழை = இடைவெளியே இல்லாமல் பெய்யும் மழை.

அடாது, விடாது, ... இவற்றில் எதிர்மறை -ஆ உள்ளது. சும்மு-தல் ‘மூச்சு விடுதல். திணறுதல்’. சும்மாது இருத்தல் : யோகத்தில் ஆழ்தல், தியானித்தல். ‘சும்மா இரு, சொல்லற’ யோக சாஸ்திரத்தின் மஹாவாக்கியம். சும்மாது சும்மா எனப் பேச்சில் உள்ளது. சுமை, சுமடு/சும்மாடு. சுமைதாங்கிக் கல்.... அடைமழை = அடுக்கிப்பெய்தல் (raining for days with intermittent gaps). இதற்கு எதிர்மறை: அடாது பெய்யும் மழை = incessant rains.

NG

N. Ganesan

unread,
Nov 16, 2022, 1:51:46 PM11/16/22
to santhav...@googlegroups.com, Thiruppur Krishnan, thiruppug...@gmail.com
On Wed, Nov 16, 2022 at 11:48 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
“சும்மாது” (மூச்சு விடாமல்) என்னும் சொல்லே “சும்மா” என்று ஆனது என்று அறிந்து வியந்தேன்!
நன்றி! - இரா. ஆனந்த்

ஆழ்வார்/ஆண்டி/ஆண்டாள் எல்லாம் தியானசொரூபிகள். ‘சும்மா இருப்பதே சுகம்’ என்ற கலையில் தேர்ந்தவர்கள். ஆழ்- என்ற வினைச்சொல் தரும் ஆணி எனுந் தமிழ்ச்சொல் தேர்/வண்டிப் பாகமாக இருக்கு வேதத்திலேயே உண்டு. இதுபற்றி விரிவாக எழுதியுள்ளேன். வேதவியல் விற்பன்னர்கட்கும் உரைத்துள்ளேன். ஆழ்வார்/ஆண்டி/ஆண்டாள் எல்லாம் ஆழ்-தல் என்னும் வினையடிப் பிறக்கும் பெயர்கள் தாம். தனித்திருந்து ... என்னும் ச. சுவாமிகளின் பாடலைக் கேபிஎஸ் பாடல் கேட்டிருப்பீர். தீர்த்தங்கரர்கள், புத்தர் எல்லாம் இவ்வாறு ஆழ்வாராகக் காட்சி கொடுப்போர் தாம். பழனியாண்டி கண்களை மூடித் தியானம் செய்பவர். அவர் சித்தன். அதனால் சித்தன்வாழ்வு என்பது பழனியின் ஒரு பெயர். நான்மறை நன்கறிந்த பிராமணர்கள் இடைவிடாது எரியோம்பி வேள்விகளை நடத்திக்கொண்டிருக்கும் பதி பழனி ஆகும் என்கிறார் ஔவை. சேர மன்னர்களின் குலதெய்வம் அயிரை (கொற்றவை) அங்கே தான் உள்ளாள் (சேரர் நூல் ஆன பதிற்றூப்பத்து). சங்க காலத்திலே வேளிர்களில் சிலர் சேர அரசர்கள் ஆயினர். சேரர் தலைநகர் (1) வஞ்சி மாநகர் (கரூர்). ஆனால், சேரரின் சமயத் தலைநகர் என்றால் (2) பழனி தான். இன்றும் தமிழ்நாட்டில் முதல் வருவாய் பழனியிலே தான். கொங்குநாட்டின் இண்டஸ்ரி தலைநகர் (3) கோயம்புத்தூர். அண்மையில் தான் அவ்வாறு ஆனது. ஆனால், பழனி, வஞ்சி எல்லாம் 2500 ஆண்டுகளாய் கொங்குநாட்டிலே உள்ளன. பிரிட்டிஷார் வருகையால் உயர்ந்த கிராமம் கோயம்புத்தூர்.  ~NG

      ஔவை சொன்ன வெண்பா
      -------------------------------------------------

      நல்லம்பர் நல்ல குடியுடைத்து; சித்தன்வாழ்வு
      இல்லம் தொறும்மூன்று எரியுடைத்து; - நல்லரவப்
      பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டிய!நின்
      நாட்டுடைத்து நல்ல தமிழ்

சும்மா என்ற இழை, செல்வாவின் குழுவில் சும்மா படித்தேன். சும்மா இருக்கும் சாமியார் என்னும் கிவாஜவின் அருமையான கதை நினைவுக்கு வந்தது.
https://groups.google.com/g/tamilmanram/c/da1qkaRgwcI/m/ejBehA87BgAJ


*சும்மா இருக்கும் சாமியார்*
---------------------------------------------
            வாகீச கலாநிதி கிவாஜ

ஒரு கோவிலில் ஒரு புதிய தர்மகர்த்தா வந்து சேர்ந்தார். பழம் பெருச்சாளிகளைப் போக்கி விட்டு ஆற்றல் உள்ள புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணத்தோடு அவர் வேலையை ஒப்புக் கொண்டார். பழைய கணக்குகளை வருவித்துப் பார்த்தார். கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதங்களை எப்படி எப்படி விநியோகம் செய்கிறார்கள் என்பதை அறிய, அதற்குரிய கணக்குப் புத்தகத்தை எடுத்துக் கவனித்துப் பார்த்தார். கண்ணை ஓட்டி வருகையில் ஒரு வரியிலே அவருடைய பார்வை நின்று விட்டது. “இது என்ன அக்கிரமம்” என்று அவர் வாய் முணுமுணுத்தது, “சும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை” என்று அங்கே இருந்தது. “வேலை செய்கிறவர்களுக்குக் கொடுப்பதுதான் நியாயம், சும்மா இருக்கிற சோம்பேறிகளுக்குக் கொடுப்பது பைத்தியக்காரத்தனம்?” என்று எண்ணி, அதை ஆத்திரத்தோடு அடித்தார். “சும்மா இருக்கிற சாமியாருக்குச் சோறு இல்லை” என்று சொல்லிவிட்டார்.

புதிய தர்மகர்த்தாவிடம் பழைய வழக்கத்தை வற்புறுத்தும் தைரியம் ஒருவருக்கும் வரவில்லை. “சாமியார் மிகவும் பெரிய மகான். மௌனமாக இருக்கிறார். அவருக்குப் பிரசாதம் அளிக்காவிட்டால் பாவம்” என்று எல்லோரும் கிசுகிசு என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் ஒருவரும் தர்மகர்த்தாவை அணுகிச் சொல்லவில்லை. கடைசியில் யாரோ ஒருவர் பெயர் இல்லாமல் மொட்டை சீட்டு ஒன்றில், “சும்மா இருப்பது என்பது நீங்கள் நினைப்பது போல இழிவான காரியம் அல்ல. நீங்கள் ஒரு நாள் சும்மா இருந்து பாருங்கள், அப்போது அதன் அருமை தெரியும்” என்று எழுதித் தர்மகர்த்தா கையில் கிடைக்கும்படிச் செய்தார்.

அதைப் பார்த்த தர்மகர்த்தாவிற்கு முதலில் கோபம் வந்தாலும், உண்மையாகவே சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் உடையவர் ஆகையால் கோபத்தை விலக்கி, ஆலோசித்துப் பார்த்தார். ‘அப்படியா சங்கதி? சும்மா இருக்கிறது அவ்வளவு பெரிய காரியமா? எங்கே, நான் பார்க்கிறேன்’ என்று எண்ணி மறு நாள் சும்மா இருக்கும் விரதத்தை மேற்கொண்டார்.

பேசாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டார். யாரோ வராத நண்பர் வந்தார். அவரை அறியாமலே “வாருங்கள்” என்று கூற வாய் முந்தியது. அடக்கிக் கொண்டார். எப்படியோ சைகை செய்து பேசாமல் அவரை அனுப்பி விட்டார். அவர் மனைவி எப்போதும் போல் அடிக்கொரு முறை என்ன என்னவோ பேச வந்தாள். அவருக்குக் கோபம் கோபமாக வந்தது. பேசவோ வழி இல்லை. குழந்தைகள் அன்றைக்கென்று அதிக விஷமம் செய்தன. ஒரு குழந்தை அவருடைய விபூதிப் பையை அவிழ்த்து விபூதியை வாரி இறைத்தது. கோபத்தோடு பளார் என்று அதன் முதுகில் ஓர் அறை அறைந்தார். அது வீல் என்று கத்திக் கொண்டு ஓடியது. “ஐயோ பாவம்!” என்று அவர் மனம் இறங்கியது. குழந்தைக்கு நல்ல வார்த்தை சொல்லிச் சமாதானம் செய்ய வேண்டும் என்ற ஆவல் பொங்கி வந்தது. அவர் தாம் பேசக்கூடாதே!

இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக அவர் வாயைக் கிண்டச் சந்தர்ப்பங்கள் வந்தன. காலையில் இரண்டு மணி நேரம் பேசாமல் இருப்பதற்குள் அவர் பொறுமையை இழந்தார். கடைசியில் பேசியே விட்டார். தம் வீட்டின் அருகில் நின்ற கழுதையின் மேல் ஒருவன் ஒரு பெரிய கல்லை வீசி எறிந்தான். அந்த வாயில்லாப் பிராணிக்குக் காயம் உண்டாக்கி இரத்தம் ஒழுகியது. தர்மகர்த்தா அதைக் கண்டு கொந்தளித்து. “அட பாவி!” என்று வாய்விட்டுச் சொல்லி விட்டார். அவர் மௌன விரதம் குலைந்தது.

அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த வாக்கை ஒரு கழுதை வந்து வெளிப்படுத்தி விட்டது. அப்பொழுதுதான் அவர் உண்மையை அறிந்தார். தாம் செய்த பிழையை உணர்ந்து, “சும்மா இருக்கிற சாமியாருக்கு இரண்டு பட்டைச் சாதம்” என்று நிறுத்தி எழுதி விட்டு அந்தச் சாமியாரின் காலில் விழுந்தார்.

பேசுவதை விடப் பேசாமல் இருப்பதுதான் மிகவும் சிரமமானது என்பதற்கு இந்தக் கதை உதாரணம். “மோனம் என்பது ஞான வரம்பு” என்று ஒளவை பாட்டி. இதைத்தான் கூறுகிறார்.
  - கிவாஜ, கிழவியின் தந்திரம் நூலில் இருந்து.
-----

கிவாஜவின் இந்தக் கதையை எளிமையாக்கி வானொலியில் தென்கச்சி சுவாமிநாதன் கூறியுள்ளார். If anyone know the Youtube or FB link, let me know. thx.

https://tamilsirukatai.blogspot.com/2014/02/blog-post_10.html

சும்மா இருக்கும் சாமியார்

ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது. அரசாங்கம் அந்த கோயிலைப் பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளைச் சரி பார்ப்பது வழக்கம் .

அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்குப் புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்

வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்குப் பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே , அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார். வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உட்காந்து யோசிக்க ஆரம்பித்தார்.

" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முயன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடித் தியானம் செய்து பார்க்கலாம் , முயன்றார்.  ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார். கவனத்தை அதில் செலுத்தினார். காகம் ஒன்று எங்கோ கத்துகிற சத்தம் அவர் காதில் விழுந்தது. கண்களையும் காதுகளையும் கட்டுப்படுத்த முன்றார். மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும், மகனுக்கு வேலை தேட வேண்டும். மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்.

திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்துப் பார்க்கிறார். மனைவி கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது. அதை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்

" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல. மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது.

எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் ஆரம்பமவதில்லை."

அதிகாரி திணறிப் போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டப்படுகிறார்கள். உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது.

அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று, அது முடியாமல் சோர்ந்து போனார். சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது

உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வரச் சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !"

தெரிவு: நா. கணேசன்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUeVMc8tGedxA0NYXYKd4YszL0Ltkuf%2BkXx-yxPqdhoU%3Dg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNk_rrXbLWNPLF5JSCr%3DXpKH1zz-6istuqFHp3J-wgUPFScGg%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Nov 17, 2022, 6:56:41 PM11/17/22
to Santhavasantham
(1) குமி-/குவி-, (2) கோமணம்/கோவணம். ...
(3) சமட்டு- / சவட்டு-
சம்மட்டி, சவட்டை ==> சாட்டை
இரண்டாம் எழுத்தில் ம/வ வேறுபாடு காட்டுகள் இன்னும் இருந்தால் தருக.

N. Ganesan

unread,
Nov 17, 2022, 7:21:37 PM11/17/22
to Santhavasantham
நேமி felloe of the wheel, நேமிநாதன், அரிஷ்டநேமி, நேம்புதல் இவற்றை விளக்கினபோது,
ம/வ ரெண்டாம் எழுத்து மாற்றத்தைச் சொல்லியுள்ளேன்.

குமி/குவி, சவரி/சமரி(=கவரி/கமரி, சாமரை), கோமணம்/கோவணம், உமணர்/உவளம், கமலை/கவலை (ஏற்றத்தின் சால்) ... போல நேம்பு-/நேமு- > நேவு- > நாவுதல் (அ) நாம்புதல் என்றும் வழங்குகிறது.

kanmani tamil

unread,
Nov 17, 2022, 7:54:56 PM11/17/22
to vallamai
///இரண்டாம் எழுத்தில் ம/வ வேறுபாடு காட்டுகள் /// Dr.Ganesan wrote...

இரண்டாம் எழுத்து/ மூன்றாம் எழுத்து என எண்ணிட்டுப் பார்க்க வேண்டிய தேவை இல்லையே. 
மொழி முதல்/ இடை/ கடை எனப் பார்த்தால் போதுமானது. 
மேற்சுட்டிய மாற்றங்கள் மொழியிடை மாற்றங்கள். 
நன்றி. 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUemfUeeV%2BvOjLQONx0z%3DLMmagmXX9m26%2BsqY7zMvkd0%3Dg%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Nov 21, 2022, 6:00:14 AM11/21/22
to santhav...@googlegroups.com, Thiruppur Krishnan, thiruppug...@gmail.com
On Wed, Nov 16, 2022 at 11:48 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
“சும்மாது” (மூச்சு விடாமல்) என்னும் சொல்லே “சும்மா” என்று ஆனது என்று அறிந்து வியந்தேன்!
நன்றி! - இரா. ஆனந்த்

“சும்மாது” என்னும் வினைச்சொல் “சும்மா” என வழங்குதல் போல, “அடாது” என்ற வினைச்சொல் “அடா” என்று வழங்குகிறது.

அடுக்கு- X  அடாது :: நேர்முறை X எதிர்மறை.
அடாது என்ற வினைச்சொல்லுக்கு இருபொருள்களைத் தமிழில் காண்கிறோம். அகராதிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(1) அடாது = without gaps, incessantly.
அடாது பெய்மழை = அடாதுமழை/அடாதமழை = அடாமழை.
விரிவாக அறிய, ஆராய: https://groups.google.com/g/vallamai/c/AUTNv1T31WQ/m/3dpQyLx3FgAJ

(2) அடுக்கும் = தகும், அடாது = தகாது.
(a) இதனைக் கம்பன் பாடலில் காணலாம்.
  “கடிக்கும் வல் அரவும் கேட்கும், மந்திரம்; களிக்கின்றோயை,
   "*அடுக்கும்*, ஈது *அடாது*" என்று, ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி,”

(b) அடாத மார்க்கம் = தவறான வழி. அடாமார்க்கம் எனத் திருப்புகழில் வரும்:
https://kaumaram.com/thiru/nnt0811_u.html
“இன்னணம் எய்த்து அடா மார்க்கம் இன்புறாது என்று” ...
இவ்வாறாக இளைப்புற்றுச் செல்லும் தகாத வழிகள் இன்பத்தைத் தராது
என்று உணர்ந்து,

படாத வாழ்க்கை ==> படா வாழ்க்கை
“இன்னது எனப்படா வாழ்க்கை தந்திடாதோ” ... இத் தன்மையது
என்று விளக்க முடியாத பேரின்ப வாழ்க்கையை உனது திருவருள்
தராதோ?

(c) எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாய் அடா!

பொருள்: ஈற்றுச்சீர் = அடா! (= அடேய்). இது விளி.
அடேய் ! அவலட்சணம் பிடித்தவனே ! எருமைக் கடாவே ! கழுதையே !; குட்டிச் சுவரே !; குரங்கே !; யாரை *அடாது* சொன்னாய்?
அடாது அடா எனத் தொக்கு நின்றது.

(d) http://kuganarul.blogspot.com/2018/07/blog-post_57.html
மா மசக்கில் ஆசை உளோம் உளோம் என --- பெரிய மயக்கினால் ஆசைகொண்டிருக்கின்றோம் என்று கூற,
நினைவு ஓடி ---- அவர்களிடம் எனது எண்ணம் விரைந்து செல்ல,
வாடை பற்றும் வேளை --- அம்மகளிரினது மயல் காற்று என்னைப் பற்றுகின்ற காலத்து,

*அடா அடா* என --- *அடாது அடாது* என்றும்,
நீ மயக்கம் ஏது சொல்வாய் சொல்வாய் என --- “உனக்கு ஏன் மயக்கம்? சொல்வாய் சொல்வாய்” என்றும்,
வாரம் வைத்த பாதம் இதோ இதோ என --- நீ அன்பு வைத்த திருவடி இதோ இருக்கின்றது‘ என்றும்,
அருள்வாயே --- திருவருள் புரிவீர்.

NG

kanmani tamil

unread,
Nov 21, 2022, 7:25:42 AM11/21/22
to vallamai
ஒரு ஐயம். தெரிந்தோர் தீர்த்து வையுங்கள். 

சும்மாது > சும்மா எனப் புதிய செய்தி ஒன்று தெரிந்து கொண்டேன்... தொடர்ந்து

'சும்மாடு' எப்படி உருவானது என்று அறிய ஆவல். 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUc%2BDw_wD9SVcTLYOkoUE9zSpd6pAj7FrT_DXZhxVZErSA%40mail.gmail.com.

seshadri sridharan

unread,
Nov 22, 2022, 12:56:31 AM11/22/22
to vall...@googlegroups.com
image.png

kanmani tamil

unread,
Nov 22, 2022, 9:38:17 AM11/22/22
to vallamai
'சும்மாடு' பொருள் என்ன என்பதில் ஐயம் இல்லை சேஷாத்ரி ஐயா. 

'சும்மாது' > சும்மா என்ற சொற்களோடு சும்மாடு தொடர்பு உடையதா என்று அறியத் தான் கேட்டேன். 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 22, 2022, 10:55:26 AM11/22/22
to vall...@googlegroups.com
On Tue, Nov 22, 2022 at 8:38 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>> 'சும்மாது' > சும்மா என்ற சொற்களோடு சும்மாடு தொடர்பு உடையதா என்று அறியத் தான் கேட்டேன்.

ஆம்.


kanmani tamil

unread,
Nov 22, 2022, 11:12:50 AM11/22/22
to vallamai
எப்படி?
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 22, 2022, 12:11:19 PM11/22/22
to vall...@googlegroups.com
busy. will write. getting ready to leave for India trip.

N. Ganesan

unread,
Nov 26, 2022, 2:24:03 PM11/26/22
to Santhavasantham

திராவிட மொழி ஒப்பீட்டு மொழியியலில், முதல் மூன்று எழுத்துகள் முக்கியமானவை என்பர் மொழியியலார். இதனை, CVC or ØVC (C= மெய்,  = உயிர்).  இவ்வகையில், -ம்- :: -வ்- மாறுபாடு மூன்றாம் எழுத்தில் உள்ளன சில பார்த்தேன். மூன்றாம் எழுத்தாக, ம்/வ் வேறுபடல் இருந்தால் காட்டுகளைத் தெரிவிக்கவும். நன்றி.

இன்னொன்று: தமிழின் தாதுவேர் ஆய்வுகள் புதியவை. சுமார் 150+ ஆண்டுகளே ஆனவை. தொல்காப்பியர் போல் ஒரு இலக்கணி மகாராஷ்டிரம், குஜராத் போன்ற இடங்களில் நுண்ணிதின் ஆராய்ந்து எழுதியிருந்தால், இந்திய துணைக்கண்டத்தில் திராவிட மொழிகள் பேசுவோர் எண்ணிக்கை மிக்கிருக்கும்.

-----------------

https://www.facebook.com/groups/668086197365111/permalink/1261071078066617/
அமர்ந்தவாழ் அம்மன் ஆலயம், பூட்டுத்தாக்கு கல்வெட்டு , இராணிப்பேட்டை, வேலூர்:

மாவட்டம்: இராணிப்பேட்டை
ஊர் : பூட்டுத்தாக்கு,
மொழி: தமிழ்
அரசன் : பார்த்திவேந்திரன்,
ஆட்சியாண்டு: 10ம் நூற்றாண்டு.
வரலாற்றாண்டு: பொ.ஆ.பி.966-967.

கல்வெட்டு வரிகள்:
1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோப் பார்த்திவேந்திர
2.பன்ம(ற்)கு ப(த்)தாவது வட
3. வல்லன்  தா(ள்) கோயில் க(ல்)லு நிரைப்பித்
4. தென் ஈழச் த(சு)ன்றன் பண்டார்க்கு
5.ட்டி பெரி...யாநேன்
இது ழிசு
6.னலறன் இவன் மகன் திருவனா
7.கில்(ய) கொங் க வா(ள்)...காமுண்டநேன்
8. இது ரக்ஷி...(சி)ரசு யென்
9.....ன்றலை மேல்(லன)

---------------------------------

நன்று. -ம்- > -வ்- சொற்களுக்கு நல்ல உதாரணம் காமிண்டன் >> காமுண்டன் >> காவுண்டன்:

(1) காமிண்டன் > காமுண்டன் > கவுண்டன். கவுடன் என ஒக்கிலியர்களுக்கு வரும். உ-ம்: தென்னிந்தியாவில் இருந்து இந்திய பிரதமர் ஆன தேவெ கவுடரு (Cf. 2 =இரண்டு, இரடு (Ka.)). கோவையில் புகழ்பெற்று விளங்குவோர். ரங்கே கவுடர் வீதி, சண்முக கவுடர் வீதி. இக் குடும்பத்தார் ஆரம்பித்தது ஆனந்தகுமார் டெக்ஸ்டைல்ஸ். இதில் என் தந்தை நிறுவிய காலத்தில் இருந்து டைரக்டர். பொதுவாக, ஏராளமான மில்களை கோவையில் நடத்தினோர் ஆந்திராவில் இருந்து வந்த கம்மவார் நாயுடுமார். கவுண்டர் மில்கள் குறைவாக இருந்தன. இப்போது நிலைமை மாறிவிட்டது. எல்லாம் ரியல் எஸ்டேட். கொங்குநாடெங்கும் மில்களின் வளர்ச்சி.

காமிண்டன் என்பது காடுகளை வெட்டி, நாடாகத் திருத்துவோர் என்னும் பொருளில் அமைந்த சொல். அமெரிக்காவில் மிஸ்ஸிசிப்பி நதிக்கு மேற்கே இது மாதிரி குடியேற்றம் நிகழ்ந்தது. Westerns, Cowboy movies எல்லாம் சினிமாவில் பார்க்கலாம். அதுபோல், Frontiersmen ( https://en.wikipedia.org/wiki/Frontier )  என்பது தான் காமிண்டன். காமிண்டன் பேச்சுவழக்கில் காவுண்டன் என்றாகும். இச்சொல்லைக் கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் சொல்லியுள்ளார்.
    காவுண்டார் போர்க்களத்தில்! களங்கண்டார் சரித்திரத்தில் !
    பாவுண்டார் இலக்கியத்தில்! பழியுண்டதில்லையவர் !
    மாவுண்டு பரியுண்டுன்மானுண்டு தேனுண்டு
   கோவுண்டு குடியுண்டு குடிகாக்கும் கொடியுண்டு !
   பாலுண்ட போதே பகிர்ந்துண்ட தமிழுண்டு !
   போர்வந்த காலத்தே புறம்போய்ப் பதுங்காது
   காவுண்டதாலே கவுண்டரென்னும் பெயருண்டு!
       கொங்கு மக்கள் உள்ளம் கோயிலிலே பிறந்த உள்ளம் !  - கவியரசு கண்ணதாசன்

(2) பா- என்னும் தாதுவேர் பா(ய்)- பாய்தல். நீர் பாய்ச்சல். நீர்ப் பாசனம்.
பா- மெதுவாகப் பரவுதல். பா(ய்)ம்பு >> பாம்பு என்கிறோம்.
பாம்பு தெலுங்கில் பாமு, பழங் கன்னடத்தில் பாவு என வருகிறது.
துளு மொழியில் பாவு > ஹாவு என்கின்றனர்.

கொங்கு மலை வாழ் தொதுவர் (தோடர்) பொப்பு என்கின்றனர். இப் பழம்பெயர் சமவெளியிலும் கொங்குநாட்டில் விளங்கிற்று என்பது சிலப்பதிகாரத்தால் அறிகிறோம். சமவெளியில் பாம்பணன் என்ற பெயர் ஈசுவரனுக்கு வழங்குகிறது. திருச்செங்கோடு மலையடிவாரத்தில் பாம்பணன் (பாம்பலங்காரர், பன்னகாபரணர்) - பங்கயவல்லி அம்பிகை கோவில் மோரூரில் இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளாய் இலக்கியப் புரவலர்களாய் இருக்கும் கண்ணர் குலத்தார் குலதெய்வம். எனவே, பாம்பணன் என்ற பெயர் வைப்பது வழக்கம். தமிழிசை பற்றிய அறிவு சிலம்பின் உரையால் தான் நாம் அறியமுடிகிறது. எழுதியவர் அடியார்க்கு நல்லார் என்னும் கொங்குச் சமணர் ஆவார். அவரது புரவலனாக விளங்கினோன் இந்த மோரூர்க் குடும்பத்தான். பொப்பண காங்கேயன் அளித்த சோற்றுச் செருக்கால் அல்லவோ தமிழ் மூன்றுக்கு உரை சொன்னேன் என்று வாழ்ந்த்தினார் அடியார்க்கு நல்லார். அதேபோல, கட்டளைக் கலித்துறை பாடி, திருவருட்பா முழுமைக்கும் உரை சொல்வித்தவர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் என உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளையவர்கள் வாழ்த்தும் உண்டு. அவர் மகன் ஔவை நடராசன் அவர்கள் இவ்வாரம் இயற்கையொடு ஒன்றினார்.

pāmpu pāmpu (p. 362)
 DEDR 4085 Ta. pāmpu snake; pāppu, in: pāppuppakai Garuḍa, the enemy of serpents (cf. 3808); (lex.) pā snake. Ma. pāmpu id. Ko. pa·b id. To. po·b id.; o·f id. (in songs; < Badaga ha·vu). Ka. pāvu id. Koḍ. pa·mbï id. Tu. hāvu id. (< Ka.); pāmbolů a kind of flat, long fish; pāmbolů-kērè rat-snake (cf. 2011). Te. pāmu snake. Kol. pa·m id. Nk. pām id. Nk. (Ch.) pām id. Pa. bām id. Ga. (Oll.) bām, (S.) bāmu, (P.) bāmb id. / Cf. Pkt. (DNM) pāva- snake. DED(S) 3361.

(3) தமிழரின் தனிப்பெரும் தெய்வம் சிவன் என்னும் பெயரும் -ம்- > -வ்- மாறுபாடு கொண்ட சொல் ஆகும். கெம்- என்பது தொல்திராவிட மொழியில் உள்ள தாதுவேர் ஆகும். கெம்- =>> செம்- என ஆகிறது. செம்மை, செந்தமிழ், செம்- செவப்பு/சிவப்பு எனத் தமிழில் மாறுகிறது. சிவன் என்னும் சொல் இவ்வாறே பிறக்கிறது. பவழம் போல் மேனியன் சிவபிரான். சிவன் செம்மை, மங்கலம் என்னும் பொருள் உள்ள சொல்லும் கூட.

ஸம்ஸ்கிருத மொழி உருவாக்கத்தில் ஶிவ முக்கியம் வாய்ந்தது. கெம்- எனுந் திராவிடத் தாதுவேர்ச் சொல் ஶிவ (>  ஶைவம், பாரதப் பெருஞ் சமையம்) என்ற சொல்லாக வடமொழியில் உருவாதலும், இதனை ஒத்த சொற்களும் பற்றி ஆராயும் கட்டுரை:
https://archive.org/details/NGanesan_IJDL_2018/mode/2up
Some K-initial Dravidian Loan Words in Sanskrit: Preliminary Observations on the Indus Language. Int. J. Drav. Ling., 2018.
ககர மெய்யின் உயிர்மெய் வரிசை எழுத்துக்களில் தொடங்கும் திராவிட மொழிச் சொற்கள், சம்ஸ்கிருதத்தில் ஶ் ஶ ஶா ஶி ஶீ ஶு ஶூ ஶெ ஶே ஶை ஶொ ஶோ ஶௌ உயிர்மெய் கொண்ட சொற்களாக மாறுவதை ஆராயும் கட்டுரை. பேரா. வ. ஐ. சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கிப் பல்லாண்டாய் இயங்கிவரும் மொழியியல் ஆய்வேட்டில் எழுதியுள்ளேன்.

வெண்பாவில் விளாங்காய்ச் சீர்கள் வாரா. https://madhuramoli.com/விளாங்காய்ச்சீர்-விளங்/
ஒரே ஒரு விதிவிலக்கு. மகாமந்திரம் ஆக விளங்கும் நமச்சிவாய < நமஶ்ஶிவாய தான். திருவாசகம் சிவபுராணத்தில் காண்க. துணைவினை என 40+ வினைச்சொற்கள் தமிழில் இயங்குவது 17-ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கணிகள் எழுதியுள்ளனர். அதுபோல், 20-ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கணிகள் கண்டது, இந்த வெண்பாவில் ஓசை குன்றாமல் இருக்க இயங்கும் விதி/நுட்பம். 100 (அ) 1000+ வெண்பாக்கள் எழுதத் தொடங்குவோருக்குப் பயனுடையதாக இருக்கும்.

குமி/குவி, சவரி/சமரி(=கவரி/கமரி, சாமரை), கோமணம்/கோவணம், உமணர்/உவளம், கமலை/கவலை (ஏற்றத்தின் சால்) ... போல நேம்பு-/நேமு- > நேவு- > நாவுதல் (அ) நாம்புதல் என்றும் வழங்குகிறது. கௌரி < கவரி: http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

நேமி, நேம்பு-தல் பற்றிய என் கட்டுரை: http://mymintamil.blogspot.com/2017/10/Etymology-of-the-word-NEMI-by-N-Ganesan.html

NG
Reply all
Reply to author
Forward
0 new messages