என் வீட்டில் சிறியா நங்கை, பெரிய நங்கை இரண்டும் உண்டு. பச்சை மிளகாய்ச் செடி இலை போல்தானிருக்கும். பெரிய நங்கை ச்ற்றுப் பெரியதாக இருக்கும். ஆனால் இரண்டுக்கும் பூ ஒன்று போல்தான் இருக்கும். வெள்ளை நிறம். ஓரிதழ்ப் பூ. கீழ் நோக்கி நீண்டிருக்கும். அதன் மத்தியில் நாகப் பாம்பின் நாக்கு போல் வயலட் நிறத்தில் கோடு இருக்கும். சிறிய நங்கையின் கசப்புக்கு ஈடு கிடையாது. அதன் வாசத்திற்கு நல்ல பாம்பு வீரியம் குறைந்து அடங்கிவிடும். இதைப் பயன்படுத்தி நல்ல பாம்பைப் பிடிப்பவருக்குத் தண்ணீர்ப் பாம்பின் கடி கொடிய விஷமாகும்.
சிறிய நங்கை இலை நான்கு அல்லது ஐந்து எடுத்து காலை மாலை இருவேளையும் மென்று தின்றால் வண்டு அல்லது பூச்சிக்கடியால் ஏற்பட்ட ஒவ்வாமை, நமைச்சல் - அவில், சிடிரிசன் இவற்றிற்கு அடங்காத ஒவ்வாமை -- ஒரிரு நாளில் தீருவது உறுதி. பெரிய நங்கையின் பயன்பாடு வேறு.
இவை இரண்டும் சிறிய செடியாகத்தான் இருக்கும். ஆனால் நில வேம்பு அடர்த்தியின்றிச் சற்று உயரமாகவும் விரிந்தும் வளரும்.
எம்.டி.ஜெயபாலன்


This name is a synonym of Polygala chinensis L..
The record derives from Tropicos (data supplied on 2012-04-18) which reports it as a synonym (record 50103435) with original publication details: Sp. Pl. 3: 876 1802.
Full publication details for this name can be found in IPNI: urn:lsid:ipni.org:names:692434-1.
This name was in version 1 of The Plant List, record tro-50103435.
On Monday, June 1, 2015 at 12:47:21 PM UTC+5:30, kalai wrote:
வணக்கம்.நிலவேம்பு என்ற சிறியாநங்கை:
சிறியா நங்கைத் தழையைச்
சேவித்த பேரைப் பிரியார்
மடந்தையர்கள் பின்னும் அறியதில்
டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்
திங்கள் முகமாதே தெளி.இணையத்தில் உள்ள சில பதிவுகள் நிலவேம்பும் சிறியாநங்கையும் ஒன்றே என்கின்றன.ஆனால், வீட்டுக்கு வந்த சாமியார், நிலவேம்பும் சிறியாநங்கையும் வேறுவேறு என்றும், நிலவேம்பின் பூ வெள்ளையாக இருக்கும் ஆனால் சிறியாநங்கையின் பூ மஞ்சள் நிறமாக இருக்கும் என்றார்.நான் தேடியவரை, நிலவேம்பு போன்று இருக்கும் ஆனால் மஞ்சள்நிறத்தில் பூப்பூக்கும் செடியைக் காண வில்லை. அப்படிக் கிடைத்தால் அதுதான் சிறியாநங்கையாக இருக்கும். மானாமதுரையில் பாம்புபிடிப்போர் கூட்டமாக வாழ்கின்றனர். அவர்களிடம் சிறியாநங்கை பற்றிய தகவல் ஏதும் கிடைக்கிறதா? என்று அறிய முயல்கிறேன்.அன்பன்கி.காளைராசன்2015-05-31 12:01 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:வணக்கம் .
'என் வீட்டுத் தோட்டத்தில் '
வளர்ந்துள்ள செடிகளில் இதுவும் ஒன்று .
படுகசப்பு. விசகடி, நீரிழிவு இவற்றிற்கு அருமருந்து.
இதைச் 'சிறியாநங்கை ' என்றே அனைவரும் கூறினர். ஆனால் வீட்டிற்கு வந்த சாமியார் ஒருவர் இதன் பெயர் ' நிலவேம்பு' என்று கூறினார் .
பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரிந்தாலும் , நிலவேம்பின் பூ வெள்ளையாக இருக்கும், காய் நீண்டு இருக்கும்.
ஆனால் சிறியாநங்கையின் பூ மஞ்சள் நிறம் என்றார்.நிலவேம்பு சிறியாநங்கை இரண்டின் மருத்துவ குணங்களும் ஒன்றே. ஆனால் சிறியாநங்கையின் வாடை பட்டாலும் நல்லது (பாம்பு ) மயங்கிவிடும் என்றார் .
படங்களை இணைத்துள்ளேன் .எனது வீட்டில் இருப்பதன் உண்மைப் பெயர்தான் என்ன ?
----
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.