244 views
Skip to first unread message

S NEELAKANTAN

unread,
Nov 27, 2014, 11:15:09 AM11/27/14
to mintamil, vall...@googlegroups.com
நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம் 

ஊமத்தை செடி - இதன் ஆங்கில மற்றும் ஹிந்தியில் பெயர் தெரிந்தால் சொல்லவும்,

ஒரு கை மருந்திற்கு வேண்டியிருக்கிறது 

அன்புடன் 

 செம்பூர்  நீலு 

--



 

தென்காசி சுப்பிரமணியன்

unread,
Nov 27, 2014, 11:16:47 AM11/27/14
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com

N D Logasundaram

unread,
Nov 27, 2014, 1:19:52 PM11/27/14
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, ara...@gmail.com, Banukumar Rajendran

அன்புள்ள நீலகண்டன்

ஊமத்தை ஆங்கிலத்தில்  THORN APPLE  என அழைக்கப்படும் 

கத்தரிக் குடும்பம் Solanaceae 

இஃது ஒர்  செடி 

கத்தரி, மிளகாய், தக்களி உருளைக்கிழங்கு, புகையிலை கண்டங்க்கத்திரி மணித்தக்காளி  சுண்டைக்காய் போன்ற ஒரு பெரிய தாவரக் குடும்பம் சாந்தது. மிக நஞ்சானது மயக்கம் உண்டாக்கும் போதை மருந்துபோல் மனம் தடுமாற்றம் செய்யும் 

விஷம் எல்லமே சிறிதளவு பயன்பாட்டில் மருந்துதானே 

இவற்றின் பூக்களைப் பார்த்தால் ஒற்றுமைப்புரியும் 

எப்போது ஒரு பழத்தில் பல விதைகள் தான் இருக்கும் 


      

விக்கி  இப்படி எழுதுகிறது 

Datura stramonium, known by the common names Jimson weedDevil's snare, or datura, is a plant in the Solanaceae (nightshade) family. It is believed to have originated in the Americas, but is now found around the world.[1] Other common names for D. stramoniuminclude thornapple and moon flower,[2] and it has the Spanish name Toloache.[3] Other names for the plant include hell's bellsdevil’s trumpetdevil’s weedtolguachaJamestown weedstinkweedlocoweedpricklyburr, and devil’s cucumber.[4]

For centuries, datura has been used as a herbal medicine to relieve asthma symptoms and as an analgesic during surgery or bonesetting. It is also a powerful hallucinogen and deliriant, which is used spiritually for the intense visions it produces. However, the tropane alkaloidsresponsible for both the medicinal and hallucinogenic properties are fatally toxic in only slightly higher amounts than the medicinal dosage, and careless use often results in hospitalizations and deaths.

பார்க்க 

http://en.wikipedia.org/wiki/Solanaceae

http://en.wikipedia.org/wiki/Datura_stramonium#


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Nov 30, 2014, 4:30:20 PM11/30/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, November 28, 2014 12:24:03 PM UTC-6, Jayabalan Mavanna wrote:
T.V.Sambasivam  அவர்கள் தொகுத்து1931-இல் வெளியிட்ட தமிழ் - ஆங்கில  சித்த மருத்துவ அகராதியில் ஊமத்தை பற்றித் தரும் 

விளக்கங்களிலிருந்து சில வரிகள்: thorn apple, datura genus .இதில் 11 வகைகளை அடையாளம் காண்கிறார். 1.மருளூமத்தை (burr weed xanthium Indicum ). 2.வெள்ளூமத்தை  (common thorn apple) . 3. ஊதா  ஊமத்தை ( see No. 9 below .;; insane plant)   4. சீமை ஊமத்தை (foreign datura) . 5. கொடி ஊமத்தை  .6.   அடுக்குஊமத்தை  7.  பேய் ஊமத்தை  ( datura creeper).  8 .பொன் ஊமத்தை  (Yellow datura )  9   நீல ஊமத்தைura) ( see No. 3. indian purple dat  10. கரு ஊமத்தை ( black datura)  11. மது  ஊமத்தை (Mad plant  datura fastuoso)

M D J

நன்றி, எம்.டி.ஜே.

பொன்னூமத்தை ‘கனகி’ என்றும் பெயர்பெறுகிறது. சிவன் திருமுடியில் இருப்பது.

நலமிகு திருவித ழியின்மலர்

நகுதலை யொடுகன கியின்முகை

பலசுர நதிபட வரவொடு

மதிபொதி சடைமுடி யினன்மிகு

தலநில வியமனி தர்களொடு

தவமுயல் தருமுனி வர்கடம்

மலமறு வகைமன நினைதரு

மறைவன மமர்தரு பரமனே.

http://www.tamilvu.org/slet/l4110/l4110uri.jsp?song_no=231&book_id=109&head_id=59&sub_id=1550


மது என்னும் சொல் இந்தோ-ஐரோப்பிய, த்ராவிட, இன்னும் பல மொழிக்குடும்பங்களிலும் உள்ள மிகப் பழைய சொல் என்பார்கள். மது என்பதுவே மதம்/மத்தம் என்று ஆகிறது. ஊ- (வடமொழியில் உந்-) முன்னொட்டுடன்  ஊமத்தம், உந்மாதம் (வடசொல்) மதம் என்ற சொல்லைக் கொண்டுள்ளது. குய்- என்றால் மென்மை என்பதைப் பிங்கலந்தை நிகண்டு பதிப்பிலிருந்து தேவநேயப் பாவாணர் காட்டியிருப்பதைத் தந்தேன்.
குய்- என்னும் தாது குயம்/குய்யம் என்றாவதுபோல், மது- ‘mead' => மதம்/மத்தம் என்று  தென், வட செம்மொழிகளில் ஆவதை நோக்கலாம்.

 மது- ‘mead' => மதம்/மத்தம்
செய்- > செயல்/செய்யல், செய்யுள்
வெய்- > வெயில், வெய்யில்
ஒய்- > ஒயில், ஒய்யல்(ஒய்யாரம்)
குய்- ’soft'  > குயம், குய்யம்

நல்- > நல-, நல்ல-
வல்- > வலம் (பலம்), வல்லம்

புயல், புய்யல் - கன்னடம்
நுயி,நுய்யி ‘கிணறு’ - தெலுங்கு
எய்- எயி, எய்யி (=முள்ளம்பன்றி). 

மத களிறு = மத்த யானை.
இந்த மதம்/மத்தம் ஹிந்தியில் மஸ்த்- என்றாகிறதும் பார்க்கிறோம் அல்லவா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 30, 2014, 6:29:58 PM11/30/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com
  
ஊமத்தையில் பிறந்த 
உன்மத்த ஆன்மீகம்

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee

                அந்த ஊமத்தை சர்பத் ஓர் உண்மைக்கதை. ஒரே ஒரு சிறு திருத்தம். ஊமத்தை விதை 
சர்பத்.
                 ஊமத்தைச் செடி யாரும் விரும்பாத செடி. அது நச்சுத்தன்மை பொருந்தியது. ஆனால் 
அதே சமயத்தில் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. Datura Stramonium என்று 
இதனை அழைப்பார்கள். மருத்துவக் கல்லூஊரியில் Forensic Medicine பாடத்தில் Toxicology பிரிவில் இதைப ்பற்றி படித்தது. 

                  ஊமத்தையின் பூவைத்தான் ஆஸ்துமாவுக்கு அந்தக் காலத்தில் பயன் படுத்தி இருக்கிறார்கள். முன்னொரு காலத்தில் ஆரம்பப்பள்ளிகளில் சிலேட்டுப் பலகையையும் பலப்பத்தையுமே(சிலேட்டுக்குச்சி) எழுதுவதற்குப் பயன்படுத்தினார்கள்.
                  மட்டித்தாளில் கடுக்காய் மையைத் தொட்டு, தக்கைப் பேனாவால் எழுதுவது மேல்வகுப்புகளில். அப்படியும் ஒரு காலம்.
                  சிலேட்டுப்பலகையைச் சுத்தமாகத் துடைப்பதற்கு, சிறார்கள் ஊமத்தம்பூவைப்  பயன
்படுத்துவ துண்டு.  ஊமத்தம்பூவின் மொட்டை அமுக்கி வெடிக்கவைப்பார்கள்.
      
                  ஊமத்தையின் காய் பசுமையாய் முள்போன்ற மயிர்களுடன் விளங்கும்.Thorn-apple என்றொரு பெயரும் அதனாலேயே அதற்கு உண்டு.

                  இதன் விதை நச்சுத்தன்மை பொருந்தியது. அதனை அரைத்து சாப்பிட்டால் சித்த பிரமை உண்டாகும். பழங்காலத்தில் இதை வைத்து சர்பத் செய்து வழிப்போக்கர்களுக்குக் கொடுத்து சித்தபிரமை ஏற்படுத்தி அவர்களைக் கடத்துவார்கள். தக்கிகள்(Thuggee) என்னும் ஒரு குழுவினர் இதைப் பயன் படுத்தி ஆட்களை மயக்கிக்கொண்டு சென்று காளிக்கு பலி கொடுத்ததுண்டு. இதுவும், accidental poisoning, தற்கொலை முயற்சி ஆகியவையுமே ஊமத்தைக்கு Forensic முக்கியத்துவத்தை ஏற்படுத்தித் தந்தன.

                  உன்மத்தத்தை ஏற்படுத்துவதால் இந்தச்செடிக்கு சமஸ்கிருதத்தில் 'உன்மத்தம்' என்று பெயர். பித்தனாகிய சிவன் அணிந்திருக்கும் சில சமாசாரங்களில் உன்மத்தமும் ஒன்று. 
                  அதான் படித்திருப்பீர்களே - 
                   திருப்புகழில் 
-'மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன், 
            மற்பொருள் திரள்புய மதயானை'? 
                  ஏன் தேவாரத்தை விட்டுவைக்கவேண்டும்?
                  'கோளறு திருப்பதிக'த்தின் இரண்டாவது பாடல்......

            'என்பொடு கொம்பொடு ஆமை, இவை மார்பிலங்க, 
                எருதேறி ஏழையுடனே,
            பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் 
                உளமே புகுந்த அதனால்.....'

                  ஊமத்தையைத்தான் 'மத்தம்' என்று சுருக்கி அழைக்கிறார்கள். எருக்கம்பூவையும் சிவன் அணிந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

                  Coming to think of it......
                  இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. ஈராண்டுகளுக்கு முன்னர் அகத்தியத்தில் 
எருக்கைப் பற்றியும் ஏதோ எழுதியிருக்கிறேன்.

                  இப்பேர்ப்பட்ட hallucinogen சரக்கை ஏதோ ஒரு வகையில் பக்குவப்படுத்தி, அந்தக 
்காலத்திய காபாலிகர்கள் பயன்படுத்திக்கொண்டு 'உன்மத்த தாண்டவம்' என்ற நடனத்தை ஆடியிருக்கிறார்கள். ஏதோ ஒரு பழங்காலக்கோயிலின் பக்கச்சுவரில் இந்தத் தாண்டவச் சிற்பம் இருந்தது. 

                  அப்பைய தீட்சிதர் என்றொரு சிவனடியார். அவர் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். அவர் ஒரு பெரும்பேரறிஞர். ஞானி.

                  அவர் எந்நேரமும் சிவ பஞ்சாட்சரத்தையே மனதில் ஓட விட்டுக்கொண்டிருப்பார். அவருக்குத் திடீரென்று ஒரு சந்தேகம். 

                  'நினைவு இருக்கும்போதெல்லாம் சிவநாமத்தை ஜபித்துக்கொண்டே இருக்கிறோம். சுயநினவு இல்லாத சமயத்திலும் சிவநாமம் மனதில் ஓடுமா? அப்படி ஓடவில்லையானால் சிவநாமம் மனதிலும் உள்ளத்திலும் ஆவியிலும் அழுந்திப் பதியவில்லை என்றுதான் 
பொருள். இதை எப்படி அறிந்துகொள்வது?
                நமக்கே சித்தபிரமை ஏற்படவேண்டும். நமக்குப் பித்துப்பிடித்தால் அல்லவா அதனை அறிந்துகொள்ளமுடியும்? நமக்கு எங்கே அதெல்லாம் பிடிக்கப் போகிறது? அப்படியே பிடித்தாலும்கூட என்னெவெல்லாம் புலம்புகிறோம் என்பதை நாம் என்னத்தைக் கண்டோம்? ஆகவே நாமே சித்தபிரமையை ஏற்படுத்திக்கொண்டு  அதைப் பரிசோதித்துப் பார்த்து விடவேண்டியதுதான்'.
            
                  ஊமத்தை விதையை நைத்து, நீருடன் சேர்த்துத் தயார் செய்து கொண்டார்.

                  'பித்தம் தெளிய மருந்து ஒன்றிருக்குது பேரின்பமன்றுள்ளே,
                  மற்ற மருந்துகள் உள்ளுக்குச் சாப்பிட்டும் 
                  வல்லேன் வல்லேன் 
                  ஐயே அடிமை',
என்று இருந்துவிடாமல் ஊமத்தைக்கு மாற்று மருந்தையும் தயார் செய்து கொண்டார்.

                  சீடர்களை அழைத்தார்.

                  'நான் இந்த ஊமத்தை வி¨தையை அருந்தப்போகிறேன். சற்று நேரத்தில் சித்தப்பிரமை ஏற்பட்டுவிடும். அந்த நிலையில் நான் என்னெவெல்லாம் சொல்கிறேன்  என்று ஒன்று விடாமல் ஏட்டில் எழுதி வைத்திருங்கள். ஒரு முகூர்த்தகாலம் கழித்து, ஊமத்தைக்கு முறிவு மருந்தைக்கொடுத்துவிடுங்கள்', என்றார்.

                  ஊமத்தையையும் அருந்தினார். சிறிதுநேரத்தில் பிரமை ஏற்பட்டு, அரற்ற ஆரம்பித்தார். ஓர் எழுத்து விடாமல் சீடர்கள் எழுதிக்கொண்டனர். பின்னர் மாற்று மருந்தையும் கொடுத்தனர்.
                  சுயநினவு வந்ததும் அப்பைய தீட்சிதர் ஏடுக¨ளை வாங்கிப் பார்த்தார். 

                  ஐம்பத்தோரு அழகிய சுலோகங்கள் அவற்றில் இருந்தன.அனைத்துமே சிவனைப் பற்றியவை.
                  தம் சுயநினவு இல்லாத நிலையிலும் அவர் சிவ சிந்தனையிலேயே இருந்திருக்கிறார்.
                  ஊமத்தையை உண்டு உன்மத்தநிலையிலிருந்துகொண்டு அந்தப் பாடல்களைப் பாடியதால் அந்த பாடல்களுக்கு 'உன்மத்த பஞ்சாசத்' என்ற  பெயரைக் கொடுத்தார்கள். 
                  சுந்தரர் பாடியிருக்கிறார் அல்லவா.......

                  'நற்றவா உனை நான் மறக்கினும்
                        சொல்லும் நா நமச்சிவாயவே'

                  அது இதுதான்.

அன்புடன்

ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU
Reply all
Reply to author
Forward
0 new messages