Fwd: இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..!

24 views
Skip to first unread message

துரை.ந.உ

unread,
Oct 11, 2014, 5:15:26 AM10/11/14
to Groups, வல்லமை, தமிழ் வாசல்

வாழ்க உறவுகள் .... 
இத்துடன் என்குறள் 400 என்னும் இலக்கைத் தொட்டிருக்கிறது  .
இந்த இழை மேலும் வளரத்  தங்களின் ஆதரவினை நாடித் தொடர்கிறேன்  


கவனித்துக் கணித்த சில....!




396)
கருவுற்ற வெண்மேகம் கார்வண்ணம் பெற்றபின்
பெய்யும் மழைவண்ணம் சொல்


397)
முன்தத்திச் செல்லும் தவளையைப் பின்பற்றிப்
போகிறது கண்கொத்திப் பாம்பு
 

398)
மோணம் திறந்து வழிகிடைக்கும் நாள்வரையில்
மோனம்தான் பாம்பின் மொழி

(மோணம் =பாம்புப் பெட்டி, மோனம் = மெளனம்)

399)
மழையழகாம் தூறும் பொழு(து)ஆம்; அதுவே
பிழையாகும் மீறும் பொழுது


400)
தலையின் மலருக்கு வீழாது வண்டு;
வளைதாண்டி வாழாது நண்டு
-

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Oct 14, 2014, 5:50:05 AM10/14/14
to Groups, வல்லமை, தமிழ் வாசல்

ஆணவம்



401)
சித்தர் இருப்பார்தன் உள்மறைந்து; பித்தர் 
பறப்பார்தன் ஆற்றல் வியந்து 


402)
வீழ்ந்தழிந்த சித்தாந்தம் வாழ்வதாய் எண்ணியே
வாழ்ந்திழிந்து போவோர் உளர்


403)
பகலில் விளக்கேற்றும் பித்தரைச் சுற்றி
இரவில் இருக்கும் இருட்டு


404)
தானென்னும் எண்ணம்தம் உள்கொண்டோர்; தானே
நகர்வதாய்ச் சொல்லும் நிழல்


405)
விட்டுக் கொடுப்பதால் கெட்டுவிட மாட்டாய்;
கெடவேண்டும் என்றால் மறு

துரை.ந.உ

unread,
Oct 20, 2014, 1:59:48 AM10/20/14
to Groups, வல்லமை, தமிழ் வாசல்

மடக்கு

(மடக்கு = ஒரு சொல், இரு பொருள்)
//சொற்சிலம்பம் / வார்த்தை விளையாட்டு//

மடக்குக்குறள்:
(ஒரு படம் = இரு உருவம் / வாத்து, முயல் )

406)
படியும் எனநினைத்து பண்பற்றுப் பாய்ந்தால்
படியும் உனைஎதிர்க்கும் பார்

407)
கொடுக்கும் மனத்தைக் கெடுக்கவரும் தேளின்
கொடுக்கும் மடிந்து விடும்

408)
விலங்கும் சிறையும் தவறைச்சீர் செய்யும்;
விலங்கும் அறியும் இது

409)
விழும்பொழுதோர் வித்தை விதைத்தெழும் வித்தை
அறிந்தோரே இவ்வுலகின் சொத்து

410)
ஓடு தரும்தருணம் பார்த்திருப்போர் தம்மோடு
கூடிப் பயனில்லை ஓடு

துரை.ந.உ

unread,
Nov 10, 2014, 8:39:07 AM11/10/14
to Groups, வல்லமை, தமிழ் வாசல்

இது அழகு


என்குறள் / பொருள் / 421 - 425

பார்வையே அழகு
_____________________


ஊனத்தை வென்றுஅதை உன்குறியீ(டு) என்றாக்கு;
கூன்தானே ஔவைக்(கு) அழகு

முத்துப்பல் காட்டிவரும் சிட்டுக்கள் கூட்டிவரும்
தெத்துப்பல் பாட்டி அழகு

நேர்த்தியாய் செய்யும் செயலுக்குள் நேரும் 
தவறுக்கும் சேரும் அழகு 

புதரோ பதரோ அழகருகே நின்றால்
அதற்கும் வருமாம் அழகு

இருக்கும் இடமே சிறப்பாம் ஒருவர்க்கு;
இரவே நிலவுக்(கு) அழகு

துரை.ந.உ

unread,
Jan 6, 2015, 8:28:05 AM1/6/15
to Groups, வல்லமை, தமிழ் வாசல்

துரை.ந.உ

unread,
Jan 6, 2015, 11:44:17 PM1/6/15
to Groups, வல்லமை, தமிழ் வாசல்

ற்பனைச் சிறகடித்தால்.....


அழகியல் - சும்மா சில வரிகள் :

446)
கரையும் அலையும் உரசும் பொழுது;
கரையும் அலையும் மனது


447)
கரையில் உறங்கும் படகு: கடலுள் 
இறங்க விரியும் சிறகு


448)
கடலின் மடியில் இரவின் முடிவில்
நொடியில் விடியும் பொழுது


449)
உதிர்ந்த பிறகே உதிக்கும் சிறகு;
பறக்கத் துவங்கும் சருகு


450)
தாகம் தணிக்க விழுமாம் மழைவிழுது;
மேகமது மோதும் பொழுது

படங்களுடன் பார்க்க சுட்டியில் சொடுக்கவும் ( படத்தின் அளவு பெரியதாக இருப்பதால் இங்கே பதிவிட இயலவில்லை ) .. மன்னிக்கவும் :)

shylaja

unread,
Jan 7, 2015, 9:50:40 AM1/7/15
to தமிழ் வாசல், Groups, வல்லமை
துரை  எல்லாமே  ரொம்ப சிறப்பாக இருக்கின்றன.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா
**
முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர்சுவையே!
பன்னலார் பயிலும் பரனே! பவித்திரனே!
கன்னலே! அமுதே! கார் முகிலே! என் கண்ணா!
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே!
திருவாய்மொழி

துரை.ந.உ

unread,
Jan 8, 2015, 6:07:40 AM1/8/15
to வல்லமை, தமிழ் வாசல், Groups
2015-01-07 20:20 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
துரை  எல்லாமே  ரொம்ப சிறப்பாக இருக்கின்றன.

​ நன்றி அக்கா​
 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 8, 2015, 11:20:33 AM1/8/15
to mintamil, thamizhvaasal, vallamai

வணக்கம் தலை,
திருக்கை பறப்பது ரெம்பப் பிரமாதம் . 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

துரை.ந.உ

unread,
Jan 13, 2015, 2:22:55 AM1/13/15
to வல்லமை, mintamil, thamizhvaasal
2015-01-08 21:50 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம் தலை,
திருக்கை பறப்பது ரெம்பப் பிரமாதம் . 

​மீன் மட்டும்தானா​ தலைவரே :)
 


துரை.ந.உ

unread,
Jan 13, 2015, 2:25:25 AM1/13/15
to Groups, வல்லமை, தமிழ் வாசல்

வாழ்வின் சுவை கூட்டச் சில துணுக்குகள் !


பொருள் - சுவைத்துத்தான் பாருங்களேன் !

456)
போகட்டும் விட்டொழி என்றுரைப்போர்; ஆகட்டும்
காத்திருப்போம் என்போர்க்கும் மேல்


457)
ஓர்வழியில் திட்டமிட்டுக் காத்திருப்போம்; வேறுவழி 
தேர்ந்தெடுத்துப் பாய்ந்திருக்கும் வாழ்வு


458)
எதிர்பார்த்து இருப்பது இழிவு;எதையும் முன்வந்து 
எதிர்கொண்டு வாழப் பழகு


459)
மாற்றத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள் உன்நிலையை;
தோற்றோடும் தோல்வி விரைந்து


460)
வெண்பனியைப் பார்க்க வழியில்லை என்றானால்
முன்பனியை ஏற்கப் பழகு

துரை.ந.உ

unread,
Mar 9, 2015, 1:51:15 AM3/9/15
to Groups, வல்லமை, தமிழ் வாசல்

இனிது...இனிது....காதல் இனிது ...!


காதலதிகாரம் :
அவனதிகாரம் :
461)
​​வெண்பாவை என்கண்முன் துள்ளும் பொழுதெல்லாம்
​​வெண்பாவைத் துப்பும் மனது 

462)
​​பாவாடை​க் கட்டியே பாவையவள் முன்வந்தால்
​​பாவாடைக் கூட்டும்என் பேச்சு
 

அவளுக்குச் செய்தி :
463)
கண்ணாடி யின்மேல் விழுந்ததடி போல்உன்சொல்
என்னுள் விழுந்த தடி 

464)
கன்னிவைக்கும் கண்ணியென்பது உண்மையெனில் நானுந்தன்
கண்ணிமைக்கும் முன்குதிப்பேன் காண் 

465)
குறும்பாட்டை*க் கேட்பாயென்று ஓடோடி வந்தேன்;
குறும்பாட்டை**க் கேட்கிறாய் நீ
 
(*சிறு பாட்டு **​இள ஆடு)


அவளதிகாரம்
466)
தானே நுழைந்தானே என்னுள்ளே; தந்தானே
'தானே'*யும் தந்த விளைவு
 
(* - புயல்)

467)
மாமனை* ஒன்றுகட்டி வைத்திருக்கும் மாமனை
வென்றுகட்ட மாதெனை வாழ்த்து 

(* - பெரிய வீடு) 

468)
அவரைக் கொடிபோல் அடர்ந்தும் படர்ந்தும்
அவரைப் பிடிப்பேன் விரைந்து 


அவனுக்குச் செய்தி :
469)
நீர்சூழ்ந்தால் மண்ணாகும் பாழ்த்தீவு; நீர்சூழ்ந்தால்
நானாவேன் சர்க்கரைக்கூழ்ப் பாகு 

470)
நீரில்லா ஊரைப்போல் நீரில்லா நானும்தான்
நாறித்தான் போவேனாம் இங்கு

துரை.ந.உ

unread,
Mar 31, 2015, 11:51:55 AM3/31/15
to வல்லமை, Groups

உனக்குள்ளும் ஒளிந்திருப்பார் இவர் :




471)
வேலையின்றி நின்றிருப்பார்; ஆனாலும் வெட்கமின்றி
நேரமில்லை என்றுரைப்பார் பார்

472)
இல்லாத ஒன்றை இருப்பதாய்ச் சொல்லியே
இல்லாதது செய்வார் இவர்

473)
ஆசை மலையளவு உள்ளிருந்தும் வீசை 
விலையென்ன என்பார் இவர்

474)
குறைவில் நிறைபொருள் சொல்வார்; நிறைய 
நிறைவின்றி பேசிடுவார் நின்று

475)
பூசணியைச் சோற்றில் மறைத்திடுவார் அன்(று);அதையே
காற்றில் கரைத்திடுவார் இன்று


Mohanarangan V Srirangam

unread,
Mar 31, 2015, 11:54:10 AM3/31/15
to vallamai
என் மேல உங்கலூக்கு என்ன இவ்வலவு கோவம்/ ;-)

துரை.ந.உ

unread,
Apr 1, 2015, 4:58:03 AM4/1/15
to வல்லமை
ஐயா :)))))

துரை.ந.உ

unread,
Apr 23, 2015, 12:10:03 AM4/23/15
to வல்லமை, Groups

http://marabukkanavukal.blogspot.in/2015/04/blog-post.html

இலவு காக்கும் உழவு ...!


476)
சாகுபடி வேண்டுமென்று சாயா(து) உழைத்திருப்பார்;
ஆகுமடி நல்விளைச்சல் அங்கு

477)
உழவுக்குப் பின்பும் களைவளர்ந்தால் உந்தன்
உழைப்பில் பிழையென்று கொள்

478)
வான்பொழிந்தும் மண்விளைந்தும் நல்லவிலை இல்லையெனில்
வீணாகும் ஏரின் உழைப்பு

479)
உழுவான் விழுவான் எழுவான்; அவனிங்கு 
அழுதால் நமக்கே இழுக்கு 

480)
விளைநிலம் எல்லாம் விலைநிலம் ஆனால்
நிலையென்ன ஆகும் இனி

தேமொழி

unread,
Apr 23, 2015, 12:27:04 AM4/23/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com
ஹாப்பி எர்த் டே சொல்ல மனம் வரவில்லை, துரை 

கவிதை வரிகள்  பேரணியின் பொது பலர் முன்னிலையில் 
தற்கொலை செய்து கொண்ட உழவரையும், 
அதில் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளையும் நினைவூட்டுகிறது.

உழுவான் விழுவான் எழுவான்; அவனிங்கு 
அழுதால் நமக்கே இழுக்கு 


சிறப்பான வரிகள்.

..... தேமொழி 

துரை.ந.உ

unread,
Apr 23, 2015, 9:47:30 AM4/23/15
to வல்லமை, Groups
2015-04-23 9:57 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ஹாப்பி எர்த் டே சொல்ல மனம் வரவில்லை, துரை 

கவிதை வரிகள்  பேரணியின் பொது பலர் முன்னிலையில் 
தற்கொலை செய்து கொண்ட உழவரையும், 
அதில் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளையும் நினைவூட்டுகிறது.

​அதன் விளைவுதான் இது 
 

உழுவான் விழுவான் எழுவான்; அவனிங்கு 
அழுதால் நமக்கே இழுக்கு 


சிறப்பான வரிகள்.

..... தேமொழி 

​ நன்றி அக்கா ​
 


துரை.ந.உ

unread,
Jun 13, 2015, 9:52:46 AM6/13/15
to வல்லமை, Groups

வாழ்க்கை ஒரு வட்டம் !


481)
எறும்பைப் புசிக்கும் எதுவும் இறந்தால்
அதனைப் புசிக்கும் எறும்பு


482)
மயிர்நீத்தால் வீழும் கவரிமான்; அந்த 
மயிர்சார்ந்து தான்வாழும் பேன்


483)
இளமைக்கு உணவாம் கனவு; கனவும்
வளரும் இளமையைத் தின்று


484)
ஆடால் அழியும் செடி;மரமாய் ஆனபின்பு 
ஓடியதன் கீழொதுங்கும் ஆடு


485)
புழுஉண்டு மீனாகும்; மீனுண்டு நாமாவோம்;
நாமாவோம் மீண்டும் புழு

துரை.ந.உ

unread,
Jun 15, 2015, 1:19:47 PM6/15/15
to வல்லமை, Groups

காதலின் கிர(க்)கத்தில் !


486)
சொல்லும் மொழியாலும் கொல்லும் விழியாலும்
வெல்லும் வழியறிவாள் பெண்


487)
பதுமையைப் போலிருப்பாள்; ஆற்றும் செயலால்
புதுமையின் எல்லை அவள்


488)
தூக்கத்தைத் தூவிவிட்டு ஏக்கத்தை ஏவுமவள்
நோக்கத்திற்கு ஊக்கம் கொடு


489)
மான்குட்டி தானிவள்; பூந்தொட்டித் தேனிவள்;
தேன்சிட்டென் வானவள் தான்


490)
வயலின்மேல் அஞ்சியவள் கால்வைக்கும் போது
வயலின்போல் கொஞ்சம் கொலுசு


துரை.ந.உ

unread,
Jun 15, 2015, 11:06:18 PM6/15/15
to வல்லமை, Groups
490ல் ’கொஞ்சம்’ திருத்தம் ...

வயலின்மேல் அஞ்சியவள் கால்வைக்கும் போது
வயலின்போல் கொஞ்சும் கொலுசு

துரை.ந.உ

unread,
Jun 19, 2015, 3:51:31 AM6/19/15
to வல்லமை, Groups

கற்றதும்...பெற்றதும்.... !


491)
பட்டம் அறிவைத் தருவதில்லை; பட்ட 
பிறகே வருமாம் அது


492)
கற்றடையும் கல்விக்கும்; வாழ்நாளில் பெற்றடையும்
கல்விக்கும் இல்லை தொடர்பு



493)
கற்றுவரும் பாடத்தைப் பற்றியிருந் தாலது 
பெற்றுத் தரும்நற் சிறப்பு

494)
வாக்கியம் நன்றாய் வருவதைக் காட்டிலும்
வாக்கின் நயமே சிறப்பு

495)
எழுத்தில் பிழையிருந்தால் தட்டி; கருத்தில்
களையிருந்தால் கொட்டித் திருத்து

துரை.ந.உ

unread,
Jun 22, 2015, 10:35:37 AM6/22/15
to Groups, வல்லமை
வாழ்க உறவுகள் .... 
தங்களின் ஆதரவு ஊக்கத்தின் பொருட்டு இதுவரையிலும் 500 குறள்கள் வரை வந்திருக்கிறது 

மிக நன்றி 

இறையே....இறையே....!


496)
இறைஇருப்பைப் பற்றி இருப்போரைச் சுற்றி
இருப்பது இறையின் முறை

497)
கோடியினுள் உன்னைத்தேர்ந் தானெனில் உள்மறைந்த
சேதியுண்டு என்பதை அறி

498)
தனியன்நான் என்று நினைப்பாய் எனில்நீ
இறைமறுப்போன் என்று பொருள்

499)
பரம்பொருளைப் போற்றி பெரும்பொருளைச் சாற்றி
பெறும்பொருளும் பாழாகும் நம்பு

500)
பெரும்பொருளைக் காட்டி வரம்பதிலாய்க் கேட்பாய்;
பரம்பொருளும் வைத்திருப்பார் ஆப்பு

துரை.ந.உ

unread,
Jun 24, 2015, 5:55:58 AM6/24/15
to Groups, வல்லமை

துரை.ந.உ

unread,
Jun 25, 2015, 1:49:28 PM6/25/15
to Groups, வல்லமை
படங்களின் அளவு பெரிதாக இருப்பதால்.... சுட்டியில் சென்று பார்த்தால் மகிழ்வேன் 

குழந்தை உலகும் .....வளர்ப்பு முறையும்....!

துரை.ந.உ

unread,
Jun 28, 2015, 11:44:22 PM6/28/15
to Groups, வல்லமை
படங்களின் அளவு பெரிதாக இருப்பதால் /.... சுட்டியில் சென்று பார்த்தால் மகிழ்வேன்

உதவு....!



511)
இல்லாரின் அல்லலினை நீக்கநினை; நல்லாரின்
சொல்உனை வாழ்த்தும் நனை

512)
இல்லாரைக் காக்கும் செயலிலுன் பாதி
இழந்தாலும் இல்லை தவறு



513)
குறையை அணைக்கும் குணம்கொண்டோர்; அந்த
இறையின் அணைப்பிலிருப் பார்

514)
குறையும் இடமெல்லாம் அள்ளிஇறை; தானே
குறைவை நிறைக்கும் இறை

515)
தினம்தானம் செய்துவரும் நல்லோர் கணக்கில்
தனம்தானே சேர்ந்து விடும்


தேமொழி

unread,
Jun 28, 2015, 11:57:22 PM6/28/15
to mint...@googlegroups.com, vce.pr...@gmail.com, vall...@googlegroups.com


On Sunday, June 28, 2015 at 8:44:23 PM UTC-7, துரை.ந.உ wrote:

512)
இல்லாரைக் காக்கும் செயலிலுன் பாதி
இழந்தாலும் இல்லை தவறு

யார் சொல்லிக் கொடுத்தார்கள் இந்த "​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ____________________"  பறவைகளுக்கு.
இவ்வாறு மீன்களுக்கு உதவும் எண்ணம் அவைகளுக்கு  ஏன்?
தனது உணவை பகிர்ந்துண்ணும் பண்பை எங்கே கற்றனவோ ?
குறளுக்கு ஏற்ற படம் அருமை.

..... தேமொழி 



துரை.ந.உ

unread,
Jun 30, 2015, 5:55:42 AM6/30/15
to Groups, வல்லமை
வாழ்க அக்கா .... ”------------------” பறவைகளை விடவும் எனக்கு அந்த நாயின் செயல் மிக அதிர்ச்சி/ஆனந்தத்தைத் தந்தது !

 நன்ற் அக்கா 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
Jul 1, 2015, 9:14:11 AM7/1/15
to Groups, வல்லமை

துரை.ந.உ

unread,
Jul 3, 2015, 4:15:40 AM7/3/15
to Groups, வல்லமை

துரை.ந.உ

unread,
Jul 7, 2015, 6:35:21 AM7/7/15
to Groups, வல்லமை
படங்களுடன் பார்க்க ,,http://marabukkanavukal.blogspot.in/2015/07/blog-post_7.html

முத்தம்...அதுவும் மொத்தம் !!


அவளதிகாரம் : முத்த தினம் 
526)

முன்வாயில் முற்றமதில் என்வாயில் வாய்வைத்தான்;
பின்சொன்னான் முத்தமது என்று



527)

இதழால் அவன்தீண்டும் அந்நொடியில் பெற்றேன் 
முதல்மழையைத் தொட்ட உணர்வு


528)

உன்மீசை குத்தும் பொழுது தொடர்கவென
என்ஆசை கத்தும் தொழுது


529)

தொப்பலாய்த் தான்நனைந்தேன்; என்னவனின் முத்தத்தால்
மொத்தம் உலர்ந்துவிட்டேன் நான்

துரை.ந.உ

unread,
Jul 8, 2015, 5:15:23 AM7/8/15
to Groups, வல்லமை


2015-07-07 16:46 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:



​ரசிக்க, ரசிக்க எழுதிய குறள்கள் போல் இருக்கின்றன.
அருமை.

​  நன்றி அக்கா :)​
 

சுபா​
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
Jul 11, 2015, 11:28:56 AM7/11/15
to Groups, வல்லமை
531 முதல் 535 வரை 
531) மாற்றமெது வந்தாலும் சற்றும் தடுமாற்றம் இன்றியதை ஏற்கப் பழகு 

Anna Kannan

unread,
Jul 11, 2015, 11:43:52 AM7/11/15
to Vallamai
இனிது

/உன்மீசை குத்தும் பொழுது தொடர்கவென
என்ஆசை கத்தும் தொழுது/

வித்யாசாகர்

unread,
Jul 11, 2015, 12:26:46 PM7/11/15
to வல்லமை, சந்தவசந்தம், தமிழ் அமுதம்

செம எல்லாமே தோழர்..

நீங்க எழுத எழுத வரலாறு உங்களைப் பற்றியும் எழுதிக் கொண்டுள்ளது..

வாழ்க..

வித்யாசாகர்

Theetharappan R

unread,
Apr 23, 2016, 9:31:21 PM4/23/16
to vall...@googlegroups.com
உழவனின் சிறப்பையும் அவனின் அவலத்தையும் ஒருங்கே சொன்னது அருமை 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

துரை.ந.உ

unread,
Apr 25, 2016, 4:10:12 AM4/25/16
to வல்லமை
2016-04-24 7:01 GMT+05:30 Theetharappan R <kam...@gmail.com>:
உழவனின் சிறப்பையும் அவனின் அவலத்தையும் ஒருங்கே சொன்னது அருமை 

​ நன்றி ஐயா 


Tthamizth Tthenee

unread,
Apr 25, 2016, 4:15:38 AM4/25/16
to vall...@googlegroups.com
எல்லாவற்றையும்​ மிகச்சரியாக சொல்பவர்  துரை

ரசிக்கிறது  

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





துரை.ந.உ

unread,
Apr 26, 2016, 12:33:13 PM4/26/16
to வல்லமை
2016-04-25 13:45 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
எல்லாவற்றையும்​ மிகச்சரியாக சொல்பவர்  துரை

ரசிக்கிறது  

​ நன்றி ஐயா 
Reply all
Reply to author
Forward
0 new messages