'பரிசம்’ என்ற வார்த்தையின் பொருள் சொல்லுங்களேன்!

1,449 views
Skip to first unread message

coral shree

unread,
Dec 25, 2013, 7:16:16 PM12/25/13
to மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல்
அன்பு நண்பர்களே,

‘பரிசம்’ என்ற வார்த்தையை ‘ஸ்பரிசம்’ என்ற பொருள்படும்படியாக அதற்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்கிறார், ஒரு நண்பர். பொதுவாகப்,’பரிசம்’ என்றால் நிச்சயதார்த்தம், நம் தமிழர்  திருமணத்தில் ஒரு, சடங்காக ‘பரிசம் போடுதல்’ என்று உண்டு. அவருடைய விளக்கம்,

பஞ்சவிடயம் pañca-viṭayam
n. < pañcan +. The objects of the five senses, viz., iracam, uruvam, kantam, cattam, paricam; இரசம், உரு வம், கந்தம், சத்தம், பரிசம் என்ற ஐம்புலன். (சங். அக.)

இதில் எது சரி என்று விளங்க வைக்க வாருங்களேன், தயவுசெய்து. நன்றி.

அன்புடன்
பவளா

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Megala Ramamourty

unread,
Dec 25, 2013, 7:42:24 PM12/25/13
to vall...@googlegroups.com
அன்பிற்கினிய பவளா,

தங்கள் நண்பர் சொல்வதுபோல்,
ஸ்பரிசம் என்ற வடமொழிச் சொல்லை ‘பரிசம்’ என்று தமிழ்ப்படுத்தி எழுதுதல் சரியே. இவ்வாறு எழுதுவது வடமொழியின் திரிபாகும்.

ஸ்பரிசம் = பரிசம் (தமிழில்)
ஸ்தானம் = தானம் (தமிழில்)
ஸ்தலம் = தலம் (தமிழில்)

அதுபோல, மணமகன் பரிசம் (அ) பரியம் தந்து மணமகளின் பெற்றோர் ஒப்புதலுடன் மணத்தல் ’பரிசம் கொடுத்தல்’ எனப்படும். இப்பரிசம் அணிகலன், பணம், நிலம் போன்ற சொத்துக்களாக வழங்கப்பெறும்.

ஆகவே ’பரிசம்’ என்ற சொல் இருவேறுபட்ட பொருள்களில் வழக்கத்திலுள்ளது. இரண்டும் சரியே.

அன்புடன்,
மேகலா

2013/12/25 coral shree <cor...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

coral shree

unread,
Dec 25, 2013, 7:57:13 PM12/25/13
to vallamai
மிக்க நன்றி மேகலா. அழகான விளக்கம். மற்ற நண்பர்களின் விளக்கங்களையும் அறியக் காத்திருப்போம். 

அன்புடன்
பவளா

2013/12/26 Megala Ramamourty <megala.r...@gmail.com>

seshadri sridharan

unread,
Dec 25, 2013, 9:20:58 PM12/25/13
to vall...@googlegroups.com

2013/12/26 coral shree <cor...@gmail.com>
‘பரிசம்’ என்ற வார்த்தையை ‘ஸ்பரிசம்’ என்ற பொருள்படும்படியாக அதற்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்கிறார், ஒரு நண்பர். பொதுவாகப்,’பரிசம்’ என்றால் நிச்சயதார்த்தம், நம் தமிழர்  திருமணத்தில் ஒரு, சடங்காக ‘பரிசம் போடுதல்’ என்று உண்டு. அவருடைய விளக்கம்,
பஞ்சவிடயம் pañca-viayam
n. < pañcan +. The objects of the five senses, viz., iracam, uruvam, kantam, cattam, paricam; இரசம், உரு வம், கந்தம், சத்தம், பரிசம் என்ற ஐம்புலன். (சங். அக.) - பவளா

பரி என்பது வட்டக் கருத்தைக் குறிப்பது. பரிசல் வட்டமான தோணி. பரிவட்டம் - தலையில் வளைவாக கட்டப்படும் துணி. பரிக்கல் - வட்டக்கல்.  எனவே பரிசம் என்ற சொல் வட்டக் கருத்தோடு தொடர்புடையது. 

புரி - பரி. பரிதல் = 1. (வளைந்து) முறிதல், “வெண்குடை கால்பரிந் துலறவும்” (புறம். 229). 2. அறுதல். “பரிந்த மாலை” (சீவக. 1349). 3. அழிதல். “பழவினை பரியுமன்றே” (சீவக. 1429). 4. பிரிதல் (W.).

பரித்தல் = சூழ்தல். “குருதி பரிப்ப” (அகம். 31). 2. அறுத்தல் (அக. நி.).

. பரி. பரி - . பரி.

பரிகலம் = 1. வட்டில், வட்டமான உண்கலம். “மலரயன் கொடுத்த பரிகல மிசையவே” (குற்றா. குற. 13). 2. தெய்வமும் உயர்ந்தோரும் உண்டெஞ்சிய மிச்சில். “வேதியச் சிறுவற்குப் பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி” (பதினொ. கோயினான். 40).

பரிகை = 1. மதிலைச் சூழ்ந்த அகழி (திவா.). 2. மதிலுண் மேடை (பிங்.). தோன்றுமிப் பரிகை” (மேருமந். 1054).

பரிகை - . பரிகா.

பரிகம் = 1. மதில் (சூடா.). 2. அகழி. 3. மதிலுண் மேடை.

பரிசு = வட்டமான கூடையோடம் (coracle).

பரிசு - பரிசல் (coracle).

பரி - பரிசை = 1. வட்டமான கேடகம் (புறம். 16, உரை). 2. வட்டமான விருது (W.). 3. கூடையோடம்.

பரி - பரிதி = 1. வட்ட வடிவு (திவா.). “பரிதி ஞாலத்து” (புறம். 174). 2. கதிரவன். “பரிதியஞ் செல்வன்” (மணிமே. 4 3. கதிரவனை அல்லது திங்களைச் சூழ்ந்த கோட்டை (பரிவேடம்) (பிங்.). “வளைந்து கொள்ளும் பரிதியை” (இரகு.இந்து.7). 4. தேருருளை. “அத்தேர்ப் பரிதி” (களவழி. 4). 5. சக்கரப் படைக்கலம். “பரிதியிற் றோட்டிய வேலைக் குண்டகழ்” (கல்லா. 80 23). 6. சகோடப்புள். “தண்கோட்டகம் பரிதியங் குடிங்கு கூடுமே” (இரகு. நாட்டுப். 40). 7. கோளின் தொலைக்கோண வளவு (epicycle).

பரிதி காந்தம் = ஒருவகைக் கன்மணி (jasper), “பரிதி காந்தமென் றுரைத்திடு பன்னொரு சிகரத்து” (உபதேசகா. கைலை. 24)

பரிதிபாகை = வானநூ லளவைவகை (W.).

பரிதி வட்டம் = கதிரவன் மண்டலம்.

“வெங்கதிர்ப் பரிதி வட்டத் தூடுபோல் விளங்கு வாரே” (திவ். பெரியதி. 4 5 10).

http://www.tamilvu.org/slet/lA110/lA110pd1.jsp?bookid=253&pno=97

சேசாத்திரி

DEV RAJ

unread,
Dec 26, 2013, 1:31:57 AM12/26/13
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல்
On Thursday, 26 December 2013 05:46:16 UTC+5:30, coralshree wrote:
‘பரிசம்’ என்ற வார்த்தையை ‘ஸ்பரிசம்’ என்ற பொருள்படும்படியாக அதற்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்கிறார், ஒரு நண்பர். பொதுவாகப்,’பரிசம்’ என்றால் நிச்சயதார்த்தம், நம் தமிழர்  திருமணத்தில் ஒரு, சடங்காக ‘பரிசம் போடுதல்’ என்று உண்டு. 

கலிச்சும்மைய கரைகலக்குறுந்து
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியாற் கரைசேர்க்குந்து
மலைத்தாரமுங் கடற்றாரமும்
தலைப்பெய்து வருநர்க்கீயும்
புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்....
                                                - புறநானூறு 343 

பரிசு - பரிசம் , ஒரே பொருள் என நினைக்கிறேன்

தேவ்

Iyappan Krishnan

unread,
Dec 26, 2013, 1:41:17 AM12/26/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்

1. உறல் uṟal : (page 481)
அடைகை. உறற்பால வூட்டா கழியு மெனின் (குறள், 378). 2. Relationship; உறவு. உறன்முறையா னுட்பகை தோன்றின் (குறள், 885). 3. Tactile sense, a property of the skin; பரிசம். நாற்றத் தோற்றச் சுவையொலி யுறலாகி நின்ற (திவ். திருவாய். 3, 6, 6). உறவன் uṟavaṉ

2. ஊறு ūṟu : (page 505)
66). ஊறு² ūṟu

, n. < உறு-. 1. Joining, approaching; உறுகை. பருந்தூ றளப்ப (பதிற்றுப். 51, 32). 2. Sense of touch; பரிசம். சுவையொளி யூறோசை (குறள், 27). 3. Obstacle, hindrance, obstruction; இடையூறு. (திவா.) 4. Evil, blight; துன் பம். ஊறுசெய் நெஞ்சம் (நாலடி, 379). 5. Killing, murder;

3. சுத்தாட்டகம் cuttāṭṭkam : (page 1512)
cuvai, uruvam, paricam; நிலம் நீர் நெருப்பு காற்று என்னும் நாaன்கு மூர்த்தமான பூதங்களும் அவற்றிற்குரிய கந்தம் சுவை உருவம் பரிசம் என்னும் நான்கு உபாதானங்களும் கூடிய எட்டன் கூட்டம். (பிரபோத. 32, 47.)

4. சுல்கம் culkam : (page 1534)
பார்ப்பனன். சுல்கம் culkam

, n. < šulka. Loc. 1. Bride- price; மகட்கொள்ள அளிக்கும் பரிசம். 2. Prize of a contest; பந்தயப்பொருள்.

சுல்தான் cultāṉ

, n. < Arab. sultān. Sultan; துருக்க

5. சுற்கம் cuṟkam : (page 1549)
சுற்கம் cuṟkam

, n. < šulka. 1. Marriage-fee paid to the father of a maid by her suitor; பெண்கொள்வோன் பெண்ணின் தந்தைக்குக் கொடுக் கும் பரிசம். (விவகார. சங். சிறப். 89.) 2. Dowry; பெண்ணுக்குக் கொடுக்குஞ் சீதனம். 3. Tax, duty; வரி. சுற்கத்தில் வரு செம்பொன்னும்

6. தீட்சி-த்தல் tīṭci- : (page 1937)
அந்தக் காரியத்தில் தீட்சித்திருக் கிறான்.--tr. To impart spiritual illumination to a disciple by look, touch or teaching, as in a religious initiation by a guru; நோக்கம், பரிசம், உபதேசமுதலியவற்றால் அருள்புரிந்து குருதீட்சைசெய் வித்தல். (W.)

7. பஞ்சவிடயம் pañca-viṭayam : (page 2412)
பஞ்சவிடயம் pañca-viṭayam

, n. < pañcan +. The objects of the five senses, viz., iracam, uruvam, kantam, cattam, paricam; இரசம், உரு வம், கந்தம், சத்தம், பரிசம் என்ற ஐம்புலன். (சங். அக.)

பஞ்சவிருத்தி pañca-virutti

, n. < id. + vṛddhi. The

8. பரிசப்பணம் parica-p-paṇam : (page 2511)
parica-nāṭi

, n. < id. +. See பரிசகாலம். (W.)

பரிசப்பணம் parica-p-paṇam

, n. < பரிசம் +. See பரிசம், 4, 5. (G. Tj. D. I, 73.)

பரிசம் paricam

, n. < sparša. 1. Touch; contact, as with

9. பரிசப்பணம் parica-p-paṇam : (page 2511)

, n. < id. +. See பரிசகாலம். (W.)

பரிசப்பணம் parica-p-paṇam

, n. < பரிசம் +. See பரிசம், 4, 5. (G. Tj. D. I, 73.)

பரிசம் paricam

, n. < sparša. 1. Touch; contact, as with objects of sense;

10. பரிசம் paricam : (page 2511)
பரிசப்பணம் parica-p-paṇam

, n. < பரிசம் +. See பரிசம், 4, 5. (G. Tj. D. I, 73.)

பரிசம் paricam

, n. < sparša. 1. Touch; contact, as with objects of sense; தொடுகை. 2. Sense of touch; ஊற்றறிவு. புறத்துள பரிசங்க ணீத்தனன் (ஞானவா. வீதக. 47). 3.

11. பரிசம்போடு-தல் paricam-pōṭu- : (page 2511)
(சி. சி. 8, 3.) 8. See பரிசாக்கரம். (பி. வி. 5.) பரிசம்போடு-தல் paricam-pōṭu-

, v. intr. < பரிசம் +. To perform the ceremony of betrothal; கலியாணம் நிச்சயித்தல். Colloq.

பரிசமணி parica-maṇi

, n. <

12. பரிசு paricu : (page 2512)
to cross rivers; சிற்றோடம். Colloq. 6. cf. sparša. Gift, donation, present, boon; கொடை. பாதகத்துக் குப் பரிசுவைத்தானுக்கே (திருவிசைப். திருப்பல். 10). 7. See பரிசம், 4. Loc. பரிசுகெடு-தல் paricu-keṭu-

, v. intr. < பரிசு +. To be bereft of all sense of honour;

13. பரியம் pariyam : (page 2517)
space; எல்லை. (பிங்.) பூதமுத லாகவே நாதபரியந்தமும் (தாயு. மலைவளர். 3). பரியம் pariyam

, n. cf. பரிசம். 1. [M. pari- yam.] Bride-price; மணப்பரிசம். பல்வளை பரிய மாக (சீவக. 1047). 2. Hire of a prostitute; பரத்தையர் பெறுங் கூலி. ஒரு நாளைக்குப்

14. ஸ்பர்ம் sparšam : (page 3898)
sparttai

, n. < spardhā. 1. Rivalry; போட்டி. 2. See ஸ்ப்ருக், 2.

ஸ்பர்ம் sparšam

, n. < sparša. 1. See பரிசம், 1, 2, 3, 7, 8. 2. The first twenty-five consonants of the Sanskrit alphabet, from km; வடமொழியில் 'க்' முதல் 'ம்' வரையிலுமுள்ள 25 மெய்யெழுத்துக்கள்.

15. பரிசம் paricam : (page s351)
மணத்தற்குரிய அருவிலை யைத் தோழி தலைவனுக்கு உரைத்தலாகிய அகத் துறை. (களவியற். 115.) பரிசம்¹ paricam

, n. < šparša. Hard consonant; வல்லெழுத்து. பரிசம் வல்லினப்பெயர் (பேரகத். 31).

16. பரிசம் paricam : (page s351)
அகத் துறை. (களவியற். 115.) பரிசம்¹ paricam

, n. < šparša. Hard consonant; வல்லெழுத்து. பரிசம் வல்லினப்பெயர் (பேரகத். 31).

பரிசம்² paricam

, n. cf. புருஷம். Depth; ஆழம். நாலாள்

17. பரிசம் paricam : (page s351)
paricam

, n. < šparša. Hard consonant; வல்லெழுத்து. பரிசம் வல்லினப்பெயர் (பேரகத். 31).

பரிசம்² paricam

, n. cf. புருஷம். Depth; ஆழம். நாலாள் பரிசம்.

பரிசவேதி parica-vēti

,

18. பரிசம் paricam : (page s351)
பரிசம் வல்லினப்பெயர் (பேரகத். 31). பரிசம்² paricam

, n. cf. புருஷம். Depth; ஆழம். நாலாள் பரிசம்.

பரிசவேதி parica-vēti

, n. < sparšavedhin. Transmuter; பரிசனவேதி. நீர் நம் முடைய

19. விசுவாசம் vicuvācam : (page s412)
யேவுகிற தேவதை. (வேதாந்தசா. 43.) விசுவாசம் vicuvācam

, n. < višvāsa. Gift in token of affection or regard; பரிசம். அந்த ராசா... விசுவாசங் கொடுத்தால் வாங்கிவாருங்கள் (தமிழறி. 26).

Nagarajan Vadivel

unread,
Dec 26, 2013, 3:02:19 AM12/26/13
to vallamai

• பரிசம் போடுதல்

திருமணத்திற்கு முதல்நாள் மாலை அல்லது முன்இரவில் பரிசம் என்ற சடங்கு இன்றளவும் கிராமப்புறங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று மணமகன் வீட்டார், வரதட்சணை என்ற பெயரில் பணமும் பொருளும் பெறுவது போல, முன்னர் மணமகள் வீட்டார் முலை விலை, சிறுவளை விலை, பாசிழை விலை என்ற பெயரில் பணமும் பொருளும் பெற்றனர். இதைப் பரிசம் போடுதல், பரியம் போடுதல் என்ற சடங்காகவே நடத்தினர். இப்பாசிழை விலை குறித்த சான்று அகநானூற்றில் உள்ளது.

கருங்கண் கோசர் நியமம் ஆயினும் 
உறும்எனக் கொள்குநர் அல்லர். 
நறுநுதல் அரிவை பாசிழை விலையே!
(90)

கோசர்களின் (ஓர் அரச பரம்பரையினர்) வளப்பம் மிக்க, புது வருவாயை உடைய நியமம் என்ற ஊரையே பாசிழை விலையாகக் கொடுத்தாலும் இவள் வீட்டார் ஏற்பார் அல்லர் என்ற செய்தி பாடலில் இடம்பெற்றுள்ளது.

தெருப் பாடகன்

2013/12/26 Iyappan Krishnan <jee...@gmail.com>

--

Hari Krishnan

unread,
Dec 26, 2013, 6:04:21 AM12/26/13
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள், தென்றல்

2013/12/26 DEV RAJ <rde...@gmail.com>

                                                - புறநானூறு 343 

பரிசு - பரிசம் , ஒரே பொருள் என நினைக்கிறேன்

வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!

இது எல்லாவற்றுக்குமே பொருள் ஒன்றுதான்.  வரிசை, பரிசு, பரிசில், பரிசிலர் (பரசிலைப் பெற்றுக் கொள்பவர்கள்) எல்லாம் ஒரே பொருள்ள சொற்களே.

பரிசம் என்பதற்கு, ஸ்பரிசம் என்பதன் தமிழ் வடிவமாக ஒரு பொருளும்; பரிசம் போடுதல் என்ற வாய்மொழி வழக்கில் சுத்தமாக வே சம்பந்தமில்லாத இன்னொரு பொருளும் உள்ளன.  ஸ்பரிசத்துக்குக்கும், பரிசம் போடுவதற்காகக் கொடுக்கும் பணத்துக்கும் சம்பந்தமே இல்லை.  இந்தப் பரிசத்துக்கு இரண்டு பொருள் உண்டு.  இரண்டும் வெவ்வேறு பொருள்.  

சம்பந்தப் படுத்தினால், ‘பொருள்‘ விபரீதமாகிப் போகும்!

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Swathi Swamy

unread,
Dec 26, 2013, 6:39:48 AM12/26/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்
ஈழத்தில் திருமணத்தின் முதல் நாள் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு பலவிதமான மங்கலப் பொருட்களுடன் தங்கள் தங்கள் அந்தஸ்தை உயர்வாகக் காட்டும் வகையில் எடுத்துச் செல்லும் பொருட்கள் உட்பட்டதை பரிசம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெரிய பெரிய தாம்பாளங்களில் பொருட்களை அடுக்கி சுமங்கலிப் பெண்கள் கையில் கொடுத்து அழைத்துச் செல்வார்கள். மாப்பிள்ளை வீட்டுக்கும் பெண் வீட்டுக்கும் இடையில் வேலியிருக்கும் பொந்துகளினூடாக குறுக்கு வழியில் அதுவரை போய் வந்தவர்கள் இந்த பரிசம் கொண்டு போகும் பொது மட்டும் ஊரையே சுற்றி வளைத்து ஊர்வலமாக போவதை பார்த்திருக்கிறேன்.. அதெல்லாம் 70களோடு முடிந்துவிட்டது. அதன்பின் வந்த இனக்கலவரங்கள் ஊரின் பழைய சம்பிரதாய சடங்குகளை தான் முதலில் ஏப்பம் விட்டிருந்தது.

2013/12/26 Iyappan Krishnan <jee...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

seshadri sridharan

unread,
Dec 26, 2013, 8:23:52 AM12/26/13
to vall...@googlegroups.com

2013/12/26 Hari Krishnan <hari.har...@gmail.com>

பரிசம் என்பதற்கு, ஸ்பரிசம் என்பதன் தமிழ் வடிவமாக ஒரு பொருளும்; பரிசம் போடுதல் என்ற வாய்மொழி வழக்கில் சுத்தமாக வே சம்பந்தமில்லாத இன்னொரு பொருளும் உள்ளன.  ஸ்பரிசத்துக்குக்கும், பரிசம் போடுவதற்காகக் கொடுக்கும் பணத்துக்கும் சம்பந்தமே இல்லை.  இந்தப் பரிசத்துக்கு இரண்டு பொருள் உண்டு.  இரண்டும் வெவ்வேறு பொருள்.  

சம்பந்தப் படுத்தினால், ‘பொருள்‘ விபரீதமாகிப் போகும்!

சரியான கருத்தாகவே படுகின்றது. மணவினைத் தொட்ர்பான பரிசம் வேறு, தீண்டல் பொருளுள்ள வழமொழிப் பரிசம் வேறு என்பது.

seshadri sridharan

unread,
Dec 26, 2013, 8:24:32 AM12/26/13
to vall...@googlegroups.com
வடமொழிப் பரிசம் என்று திருத்துகிறேன்.

2013/12/26 seshadri sridharan <ssesh...@gmail.com>

coral shree

unread,
Dec 26, 2013, 11:54:58 AM12/26/13
to vallamai
தங்களுடைய தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி, திரு சேசாத்திரி அவர்களே. 

அன்புடன்
பவளா

2013/12/26 seshadri sridharan <ssesh...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

coral shree

unread,
Dec 26, 2013, 11:56:39 AM12/26/13
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்
தங்களுடைய தெளிவான, நேரிடையான விளக்கத்திற்கு மனமார்ந்த நன்றி திரு மதுரபாரதி சார். 

அன்புடன்
பவளா

2013/12/26 Madhurabharati <madhura...@gmail.com>
இரண்டும் சரியே. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி (Cologne Tamil Lexicon) இப்படிச் சொல்கிறது:

paricam 1. touch; contact, as with objects of sense; 2. sense of touch; 3. eclipsing, beginning of an eclipse; 4. jewels, etc., presented by a bridegroom to his bride; bride-price; 5. dowry; 6. a concubine's fee

வடமொழிச் சொல்லான ‘ஸ்பர்சம்’ என்பதை பரிசம் என்று தமிழில் பயன்படுத்தினார்கள்.

நீங்கள் சொல்லும் பரிசம் தமிழ்ச்சொல்லேதான்.

அன்புடன்
மதுரபாரதி

2013/12/26 coral shree <cor...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

coral shree

unread,
Dec 26, 2013, 11:57:53 AM12/26/13
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்
மிக்க நன்றி திரு தேவ், சார்.

அன்புடன்
பவளா

2013/12/26 DEV RAJ <rde...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

coral shree

unread,
Dec 26, 2013, 11:59:57 AM12/26/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்
அன்புச் சகோ. ஜீவ்ஸ்,

தெளிவான, நீண்ட விளக்கத்திற்கு மிக்க நன்றி. 

பரிசம். அந்த ராசா... விசுவாசங் கொடுத்தால் வாங்கிவாருங்கள் 

ஓ தாராளமாக அன்புத் தம்பியே..

அன்புடன்
பவளா

2013/12/26 Iyappan Krishnan <jee...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Mohanarangan V Srirangam

unread,
Dec 26, 2013, 12:02:01 PM12/26/13
to vallamai
ஆனால் சாதனா வெளியிட்ட வரலாற்று முறை இலக்கிய அகராதி இந்தப் பாட்டின் இந்தச் சொல்லுக்கு திருமணப் பரிசம் என்றபடிப் பொருள் சொல்லுகிறது. 

2013/12/26 coral shree <cor...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

coral shree

unread,
Dec 26, 2013, 12:02:28 PM12/26/13
to vallamai
அன்பின் பேரா. ஐயா,

நம்ம ஊரும் கிராமம் போலத்தானுங்க ஐயா.. இன்றும் நாங்கள்ளாம், பரிசம் போட்டுத்தான் கல்யாணம் பன்றோமுங்க.. நன்றி.. நன்றி.

அன்புடன்
பவளா

2013/12/26 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

coral shree

unread,
Dec 26, 2013, 12:08:57 PM12/26/13
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள், தென்றல்
அன்பின் திரு ஹரிகிஜி,

உண்மைதான் நீங்கள் சொல்வதும். இத்தனை நாட்கள் நான் அறிந்திருந்த பரிசத்திற்கும், இன்று தெளிவாக தங்களைப் போன்ற சிறந்த நண்பர்கள் மூலம் தெளிவாகப் புரிந்துகொண்டேன். நன்றி சார்.

அன்புடன்
பவளா

2013/12/26 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

coral shree

unread,
Dec 26, 2013, 12:21:59 PM12/26/13
to vallamai, தமிழ் வாசல், mintamil, தமிழ் சிறகுகள், தென்றல்
அன்பினிய சகோதரி சுவாதி,

ஈழத்தில் திருமணத்தில் மற்றும் பெண்கள் பருவமடையும் விழா - பூப்பு நன்னீராட்டு விழா  (திரட்டி என்று என்று நம் தமிழ்நாட்டில் சொல்வது வழமை) போன்றவற்றில் செய்யும் சடங்குகளில் பல ஒற்றுமை இருக்கிறது. இந்த இனக்கலவரங்கள் மூலமாக நாசமாய்ப்போன எத்தனையோ நல்ல விசயங்களில் இதுவும் ஒன்று அல்லவா.. எல்லாம் காலக் கொடுமை! வேதனைகளின் உச்சம்!! மறக்க முடியாத சோகம், உள்ளம் பதறச் செய்யும் நினைவுகள்.. என்றாவது விடியும்.. விடிய வேண்டும் விரைவாக.. பழைய மகிழ்ச்சி திரும்ப வேண்டும். இழந்தது இழந்ததாக இருக்கட்டும்.. வருவதாவது நல்லதாக இருக்கட்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.. 

நம் கவிதாயினி மதுமிதா அவர்கள் ‘பருவம்’ என்றொரு அருமையான கட்டுரைத் தொகுப்பு சந்தியா பதிப்பகம் மூலமாக வெளியிட்டிருக்கிறார்கள். அதில் என்னுடைய கட்டுரையும் ஒன்று.  ‘பதின்மப் பருவத்தின் வாசலிலே’ என்ற தலைப்பில்.. புத்தகம் கூடிய விரைவில் வெளியாகும் என்றார்கள். அந்தக் கட்டுரையில் சில விளக்கங்கள் கொடுத்திருக்கிறேன்.. நூல் வெளிவந்தவுடன், கட்டுரையை பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.. நன்றி சுவாதி.

அன்புடன்
பவளா

2013/12/26 Swathi Swamy <mswat...@gmail.com>
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

coral shree

unread,
Dec 26, 2013, 12:27:18 PM12/26/13
to vallamai
அன்பின் திரு ரங்கன் ஜி,

பரிசு - பரிசம் - இது திருமணத்தில் மாப்பிள்ளைக்கு பரிசம் போடுதல் என்றால் சுவாதி சொல்வது போல சில பரிசுப் பொருட்களை சீராக - சீர் வைத்து நிச்சயதார்த்தம் செய்வது என்ற பொருளில் தேவ் சார் சொல்லியிருப்பார் போல.. 

அன்புடன்
பவளா

2013/12/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Dec 26, 2013, 6:02:47 PM12/26/13
to vallamai
ஸ்பரிசம் என்பதன் இணையான தமிழ்ச்சொல் தைவரல்

குறுந்தொகை 30, கச்சிப்பேட்டு நன்னாகையார், பாலைத் திணை- தலைவி சொன்னது 
கேட்டிசின் வாழி தோழி அல்கல்
பொய்வலாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க் கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந்தனனே குவளை
வண்டு படு மலரில் சாஅய்த்
தமியேன் மன்ற அளியேன் யானே.

Kurunthokai 30, Kachipēttu Nannākaiyār, Pālai Thinai – What the heroine said to her friend, when the hero was away
May you live long, my friend!
Listen!  Last night I thought
my lover, who is a liar,
was hugging me tightly in a
false dream that seemed so real.

I woke up suddenly from my
confusing sleep and found
myself still caressing my bed.

I have become lean and lonely,
suffering like a blue waterlily
attacked by bees.   I am pathetic.

Notes:     This female poet wrote Kurunthokai poems 30, 172, 180, 192, 197, and 287.  There is another female poet, Nannākaiyār, who wrote Kurunthokai 118 and 325.  The heroine feels that her lover has enjoyed her very much like the bees that have enjoyed honey from the waterlily flower.  She is worried that he might not keep his promise, now that he is gone.  The waterlily and the bees are the karu elements in this poem.  Uri is the heroine’s feeling.

Meanings:  கேட்டிசின் – listen, வாழி தோழி – greetings friend, may you live long, அல்கல் – at night, பொய்வலாளன் – the liar, மெய்யுறல் மரீஇய – hugging my body, வாய் தகை – seemed like truth, பொய்க்கனா – false dream, மருட்ட – confused, ஏற்றெழுந்து – woke up suddenly, அமளி – mattress, தைவந் தனனே – I still caressed, குவளை – blue waterlily,  Blue Nelumbo, Nymphae odorata, வண்டு படு மலரில் – like a beetle/bees attacked flower, சாஅய்த் – growing lean, தமியேன் – lonely me, மன்ற – expletive or for sure, அளியேன் யானே – I am pitiful

26 டிசம்பர், 2013 9:27 முற்பகல் அன்று, coral shree <cor...@gmail.com> எழுதியது:

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

coral shree

unread,
Dec 26, 2013, 8:20:51 PM12/26/13
to vallamai
வேந்தன் ஐயா..... அருமையோ  அருமை!! இப்படி வித்தியாசமாக உங்களிடமிருந்து ஒரு விளக்கம் துள்ளி வரும் என்று எதிர்பார்த்தேன்.. LAST BUT NOT LEAST!!!! 

அன்புடன்
பவளா  

2013/12/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

Megala Ramamourty

unread,
Dec 26, 2013, 9:06:15 PM12/26/13
to vall...@googlegroups.com
அன்பிற்கினிய பவளா,

வேந்தரின் விடையோடு நான் மாறுபடுகிறேன். தைவரல் என்பது தடவுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல். ‘தைவா’ என்பது வினைப்பகுதி. அதற்கு rub, massage என்றெல்லாம் ஆங்கிலத்தில் பொருள் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் (ஸ்)பரிசம் என்பது தொடுதலே அன்றித் தடவுதல் இல்லை. இதற்கு இணையாக ‘ஊறு’ என்ற தமிழ்ச்சொல்லைக் கூறலாம் என நினைக்கிறேன்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. (குறள்:27)
இதில் ’ஊறு’ என்பது தொடு உணர்ச்சியைக் குறிக்கும் எனப் பொருள் சொல்லப்படுகிறது.

ஆகவே ’தைவரல்’ என்பது ‘பரிசத்திற்கு’ இணையான தமிழ்ச்சொல் என்று கொள்ளவியலாது.

அன்புடன்,
மேகலா

2013/12/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

coral shree

unread,
Dec 26, 2013, 9:44:37 PM12/26/13
to vallamai
வாருங்கள் மேகலா, இதுதான் வேந்தன் ஐயாவின் தனி பாணி.. தொடருங்கள் உங்கள் விளக்கங்களை, இதற்காகத்தான் காத்திருக்கிறேன்.. வேந்தன் ஐயா வந்து இதற்கான பதிலும் அளிப்பார்!

அன்புடன்
பவளா

2013/12/27 Megala Ramamourty <megala.r...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Dec 26, 2013, 10:42:25 PM12/26/13
to vallamai

26 டிசம்பர், 2013 6:06 பிற்பகல் அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:

அன்பிற்கினிய பவளா,

வேந்தரின் விடையோடு நான் மாறுபடுகிறேன். தைவரல் என்பது தடவுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல். ‘தைவா’ என்பது வினைப்பகுதி. அதற்கு rub, massage என்றெல்லாம் ஆங்கிலத்தில் பொருள் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் (ஸ்)பரிசம் என்பது தொடுதலே அன்றித் தடவுதல் இல்லை. இதற்கு இணையாக ‘ஊறு’ என்ற தமிழ்ச்சொல்லைக் கூறலாம் என நினைக்கிறேன்.

ஆமாம்,

தைவரல் என்றால் தடவுதல்தான். மயில் இறகைவிட மென்மையாக.

தொடல், தீண்டல் என்ற சொற்களும் ஸ்பரிசத்துக்கு பொருந்தலாமே

”மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம்”

” புலையர்போலப் புன்கண் நோக்கித் தொழிலும் தொழுதான் தொடலும் தொட்டான் காழ்வரை நில்லாக் கடுங்களிறு அன்னோன்''

>(ஸ்)பரிசம் என்பது தொடுதலே அன்றித் தடவுதல் இல்லை

நான் மின்சாரத்தை ஸ்பரிசித்தேன் என்று சொல்லலாமா?

PRASATH

unread,
Dec 26, 2013, 10:58:52 PM12/26/13
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்
நிறைய விவாதம் போய் இருக்கு...
 
மனதிற்கு நிறைவா பதில் எனக்கு எதுவுமே இல்லை...
 
ஸ்பரிசம் என்பதை பரிசம்னு எழுதினால் தமிழ்... ஸ்பரிசம் என எழுதினால் வடமொழிச் சொல் அப்படின்னு சொல்றதை கண்டிப்பா ஏத்துக்க முடியலை... வடமொழி திரிபு அப்படின்னு சொல்லலாம்...
 
விடம், விடயம், பசுபம் இந்த மாதிரி...
 
ஸ்பரிசம் என்பது தொடுவுணர்வு, தீண்டுதல் என்னும் பொருளில் வழங்கி வரும் சொல். அதை அப்படியே எழுதி பயன்படுத்துவதால் என்ன தீமை வந்து விடப் போகிறது...
 
பரிசம் என்பதை நிச்சயதார்த்தம் என்னும் பொருளில் வாய்மொழி வழக்காக வழங்கப்பட்டு வருவதற்கு காரணமாக நான் புரிந்து வைத்துள்ளது யாதெனின்...
 
பரிச்சயம் என்னும் சொல்லின் திரிபாக இருக்கலாம் என்பதாம். முன் பின் தெரியாத மணமகன் மணமகள் இருவரும் முதன் முதலாக பரிச்சயப்படுத்திக் கொள்ளப்படும் நிகழ்வு என்பதைக் குறிக்கும் வகையில் துவங்கி இன்று பரிசத்தில் நின்றிருக்கலாம் என்பது எனது ஐயப்பாடு...

2013/12/26 coral shree <cor...@gmail.com>

--

Megala Ramamourty

unread,
Dec 26, 2013, 11:02:01 PM12/26/13
to vall...@googlegroups.com
வேந்தரே,

மின்சாரத்தைப் பரிசிக்கவும் முடியாது; தடவவும் முடியாது. ஆனால் இங்கே கேள்வி அது இல்லையே!

பரிசத்திற்கு இணையான தமிழ்ச்சொலாக நீங்கள் ‘தைவரலை’க் குறிப்பிட்டதாலேயே நான் இல்லை என்று மறுத்தேன்.

தைவரல் அல்லது தைவருதல் என்பது தடவுதலையே குறிக்கும்; அது மென்மையாகவோ சற்று அழுத்தமாகவோ :-)
ஆனால் பரிசம் என்பது simply touch; தொட்டவுடன் எடுத்துவிடுவதே பரிசம். ஆனால் தடவுதல் என்பது தொடர்ந்த செய்கை அல்லவா?

தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் நூற்பாக்கள் தைவரல் என்பதனைத் தைவருதல் (அ) தடவுதல் என்றே குறிப்பிடுகின்றன.

கூழை விரித்தல் காதொன்று களைதல்
ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலொடு
கெழீஇய நான்கே இரண்டென மொழிப. (தொல்:மெய்ப்பாட்டியல் - 258)

ஊழணி தைவரல்: முறைமுறையாக அணிந்த அணியைத் தடவுதல் (தைவருதல்) - இளம்பூரணர் உரை.

“என்னறி யளவையி னொண்ணுதல் கொண்ட

தைவரற் கியைந்த தான்பயில் வீணையை…” (பெருங்கதை: உஞ்சைக்காண்டம் - சாங்கியத்தாய் உரை)

விளக்கம்: யான் அறிந்த அளவினாலே யான் பயிற்றுவிக்க வாசவதத்தை கற்றுக்கொண்ட தடவுதற்குப் பொருந்திய அவள் பயின்ற யாழினை…….

அன்புடன்,

மேகலா

2013/12/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

--

coral shree

unread,
Dec 26, 2013, 11:05:36 PM12/26/13
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்
வாவ்.. வாங்க பிரசாத் தம்பி.. காணோமேன்னு பார்த்தேன், அழகான பதிலோட வந்திருக்கீக.. ஆனால், இந்தப் பரிச்சயம் கொஞ்சம் உதைக்குதே.. ஏத்துக்க முடியலையே?

அன்புடன்
பவளா

2013/12/27 PRASATH <pras...@gmail.com>

coral shree

unread,
Dec 26, 2013, 11:06:42 PM12/26/13
to vallamai
அருமை மேகலா.. நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது என் இனிய தோழி, தொடருங்கள்.

அன்புடன்
பவளா

2013/12/27 Megala Ramamourty <megala.r...@gmail.com>

PRASATH

unread,
Dec 26, 2013, 11:10:25 PM12/26/13
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்
நான் இதுதான் சரின்னு சொல்லலை அக்கா...
 
இப்படி இருந்து மருவி இருக்கலாம் என்பது எனது ஐயம்னு தான் சொல்லி இருக்கேன்...
 
இன்னும் சரியாக ஏற்றுக் கொள்ளும்படியான விளக்கம் வந்தால் கண்டிப்பாக நான் ஏற்றுக் கொள்வேன்...
 
(உதைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது...கிடைக்கும் உதை பெற்ற மகவுடையதானால்...)

2013/12/27 coral shree <cor...@gmail.com>
வாவ்.. வாங்க பிரசாத் தம்பி.. காணோமேன்னு பார்த்தேன், அழகான பதிலோட வந்திருக்கீக.. ஆனால், இந்தப் பரிச்சயம் கொஞ்சம் உதைக்குதே.. ஏத்துக்க முடியலையே?

அன்புடன்
பவளா

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--

coral shree

unread,
Dec 26, 2013, 11:16:05 PM12/26/13
to vallamai, தமிழ் வாசல், மின்தமிழ், தமிழ் சிறகுகள், தென்றல்
//(உதைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது...கிடைக்கும் உதை பெற்ற மகவுடையதானால்...)//

இதான் பிரசாத் டச்!! அடடா.. நிரம்பி வழியும் பாசம்!! அருமை..

அன்புடன்
பவளா

2013/12/27 PRASATH <pras...@gmail.com>
நான் இதுதான் சரின்னு சொல்லலை அக்கா...

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

PRASATH

unread,
Dec 26, 2013, 11:35:04 PM12/26/13
to தமிழ் வாசல், vallamai, மின்தமிழ், தமிழ் சிறகுகள், தென்றல்
அதாவது உட்கருத்தாக அக்காவுக்கு சொன்னது,
 
நமது பிள்ளை உதைத்தாலும் பாசத்தோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் போல, நமது கருத்துகள் சரியானதாக இல்லை என்று மனதிற்கு பட்டாலும் (உதைத்தாலும்) அதனை சரி என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் தானே நாம் இருக்கிறோம் என்பதாகும்...:)))

2013/12/27 coral shree <cor...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Dec 27, 2013, 10:44:37 AM12/27/13
to vallamai

26 டிசம்பர், 2013 8:02 பிற்பகல் அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:

வேந்தரே,

மின்சாரத்தைப் பரிசிக்கவும் முடியாது; தடவவும் முடியாது. ஆனால் இங்கே கேள்வி அது இல்லையே!

பரிசத்திற்கு இணையான தமிழ்ச்சொலாக நீங்கள் ‘தைவரலை’க் குறிப்பிட்டதாலேயே நான் இல்லை என்று மறுத்தேன்.

நான் ஸ்பரிசம் எனும் சொல்லின் பொருளை உணரவிழைகிறேன். பொதுவாக காமத்துபாலில் ஸ்பரிசம் பயன்படுகிறது. அதன் பொருளை எப்படி வேணுமென்றாலும் கற்பனை செய்யலாம்.

ஆயின் தொடுதல் என்ற பொருள்மட்டுமே எனில்,

”தீக்குள் விரலை வைத்தால் நின்னை ஸ்பரி(ச)சிக்கும் இன்பம் தோன்றுதையா” என சொல்லலாமா?

பாம்பு ஸ்பரிசி(ச)த்தது???? 

ஸ்பரிசி(ச)த்தால் பூ மலரும்
ஸ்பரி(ச)சிக்காமலே நான் மலர்வேன்??

--

Uma Mohan

unread,
Dec 27, 2013, 12:00:45 PM12/27/13
to vall...@googlegroups.com

'பரிசம்’இந்தச் சொல் எங்கள்(தஞ்சை)பகுதித் திருமணங்களில் உண்டு.மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைத் திருமணத்துக்கு முன் பரிசம் போட்டு அழைப்பார்கள்.அதாவது சேலை உள்ளிட்ட மங்கலப் 

பொருட்களோடும் பழத் தட்டு சீர்வரிசையோடும் பெண்ணை அழைப்பது ....
இங்கே புதுவை பக்கம் நிச்சய தாம்பூலம் பரியம் என்று குறிக்கப் படுகிறது 
உமாமோகன் 

2013/12/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
regards,

Uma Mohan

coral shree

unread,
Dec 27, 2013, 12:16:14 PM12/27/13
to vallamai
வாருங்கள் அன்புத் தோழி உமா மோகன்.நல்லதொரு விளக்கத்திற்கு மிக்க நன்றி. 

அன்புடன்
பவளா

2013/12/27 Uma Mohan <uma.mo...@gmail.com>

--

Take life as it comes.

தேமொழி

unread,
Dec 27, 2013, 12:22:30 PM12/27/13
to vall...@googlegroups.com
///ஸ்பரிசி(ச)த்தால் பூ மலரும்
ஸ்பரி(ச)சிக்காமலே நான் மலர்வேன்??///

:-((((

ஸ்பரிசம் என்பதை தமிழில் பரிசம் என்றும் எழுதலாம்.   சரி...
ஆனால் படிப்பவர்/கேட்பவர்  தொடு உணர்வைக் குறிக்கிறது என்று சரியாகப் புரிந்து கொள்வார்களா? இதுதான் முக்கியம்.
அப்படியானால் சரி. பயன்படுத்துவதில் சொல்வோருக்கும் படிப்போருக்கும் உள்ள புரிந்துணர்வு ஒரே அலைவரிசை என்று விட்டுவிடலாம்

பரிசம் என்பதற்கு தமிழில் பணம் என்ற பொருள் இருக்கிறது இருக்கும் பொழுது அதை தேவையின்றி மற்றொரு பொருளை ஏன் ஏற்கச் செய்ய வேண்டும் ?
ஸ்பரிசம் என்பதற்கு இணையான பொருளுள்ள தொடுஉணர்வு என்பதுதான் நல்ல புழக்கத்தில் உள்ளதே!!!!

காட்டாக 
(மின்சாரம் இல்லாத பொழுது) எங்கள் வீட்டில் அவன் (oven) இல்லை சமையல் செய்ய என்று சொல்லலாம்.  
கேட்பவரும் அதே நிலையில் இருந்தால் சரியாகப் புரிந்து கொள்வார்.

மாறாக, எங்கள் வீட்டில் அவன் இல்லை சமையல் செய்ய என்று நான் சொன்னால் கேட்பவர் தமிழில் உள்ள 'அவன்' என்று நினைத்தால் வம்பாகி விடாதா?

அந்த இடத்தில் அடுப்பு என்பது குழப்பத்தைத் தவிர்க்குமே.

தமிழில் சரியான பதம் இருக்க மற்றொரு மொழி பதத்துடன் ஏன் மல்லுக்கட்ட வேண்டும்.

..... தேமொழி

(சீக்கிரம் முடிவேடுத்தால் நல்லது, இல்லாவிட்டால் வேந்தர் எனக்குப் பிடித்த எத்தனைப் பாடல்களைப் ஸ்பரிசிக்கப் போகிறாரோ.  

என்னுரிமை  என்றே நானிருக்கும் போது தென்றல் வந்து உன்னை தீண்டியது என்ன

உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது  

தொட்டு தொட்டு சென்றன கைகள் ...

எத்தனையோ பாடல்கள் ...

பயமா இருக்கே எனக்கு)

Uma Mohan

unread,
Dec 27, 2013, 12:30:51 PM12/27/13
to vall...@googlegroups.com
மிக்க நன்றி தோழியே ....வரதட்சணைக்கு முந்தைய காலத்துப் பரிசப் பணம் பெண் வீட்டுக்குக் கொடுத்து கல்யாணம் முடிப்பது இன்று வெற்றுச் சம்பிரதாயமாகி விட்டது...இந்த ஸ்பரிச இழையையும்ஸ்பரிசித்து விட்டது....
உமாமோகன் 

2013/12/27 தேமொழி <them...@yahoo.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
regards,

Uma Mohan
360.gif

Nagarajan Vadivel

unread,
Dec 27, 2013, 8:48:16 PM12/27/13
to vallamai
இது தான் தமிழனின் இரட்டை நிலை ஆளுமை நிலை என்பது.  மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்று ஆசைப்பட்டுப் பொறி தட்டி நிற்பது

கிரந்த எழுத்து ஸ் முதலில் இருக்க எழுதினால் இவ்வளவு குழப்பம் ஏற்படாது என்றாலும் தனித் தமிழை வளர்க்க இப்படித்தான் எழுதவேண்டும் என்ற இரட்டை நிலையால் வரும் குழப்பம்

தனித் தமிழர்களே ஸ்டாலின் என்று ஏற்றுக்கொண்டபின் ஸ்பரிசம் இருப்பது தவறா

தெபா

2013/12/27 Uma Mohan <uma.mo...@gmail.com>
360.gif

தேமொழி

unread,
Dec 31, 2013, 5:14:43 PM12/31/13
to vall...@googlegroups.com

வேந்தர் மற்றும் மேகலா,
இது தகவலுக்காக ....

சுபா மின்னாக்கம் செய்து வெளியிட்டுள்ள  கீழ் கண்ட நூலில்......

நூல் பெயர்: திருவாதவூரர் புராணம் மூலம் அருஞ்சொற் பொருளகராதியுடன்
நூல் ஆசிரியர்: கடவுண் மாமுனிவர்
வெளியீடு: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி
ஆண்டு: 1923

௪௫௧ வது பாடலில் (451 வது  பாடல்)
REF:
http://www.subaonline.net/thfebooks/THF_Thiruvathavurarpuranam_moolam.pdf

'தைவரல்' பற்றி குறிப்பிடப்பட்டு, அதற்கு 'பூசுதல்' என்ற பொருளும் கூறப்பட்டுள்ளது.

..... தேமொழி

Megala Ramamourty

unread,
Dec 31, 2013, 5:46:34 PM12/31/13
to vall...@googlegroups.com
தடவுதலும், பூசுதலும் தொழிலடிப்படையில் ஒன்றே. ஆகவே இவ்வாறு பொருள்கொள்வதில் தவறேதும் இல்லை. (ஸ்)பரிசிப்பதுதான் தைவருதலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

தகவலுக்கு மிக்க நன்றி தேமொழி!

அன்புடன்,
மேகலா

2013/12/31 தேமொழி <them...@yahoo.com>

--
Reply all
Reply to author
Forward
0 new messages