உலக மாற்று திறனாளிகள் தினம் 

3 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Dec 3, 2025, 2:21:52 AMDec 3
to

உலக மாற்று திறனாளிகள் தினம் 


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை   சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச மாற்று திறனாளிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.


                               நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர்  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில்    மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தமிழக அரசின் ஒற்றுமையை வளர்ப்போம் என்கிற உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

                                  மாணவர்களிடையே மாற்று திறனாளிகளுக்கு உதவும் எண்ணங்களை ஏற்படுத்தி கொள்ளவும், அவர்களை சகோதர்களாக எண்ணி உதவவும் வகையிலும் கருத்துக்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர்  செய்து இருந்தார்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள்  நன்றி கூறினார்.மாணவர்களை மகிழ்விக்கும் வண்ணம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.மாற்று திறனாளி மாணவர்களுக்கு எவ்வாறு உதவலாம்,அவர்களுக்கு உள்ள சிரமங்கள் என்ன  என்பதை மாணவர்களின் மூலம் நாடகமாக நடித்து காண்பிக்கப்பட்டது.


 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக  மாற்று திறனாளிகள் தின நிகழ்ச்சி  நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில்    மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 
தமிழக அரசின் ஒற்றுமையை வளர்ப்போம் என்கிற உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.


IMG_3587.JPG
IMG_3591.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages