தேவர் மாலை

143 views
Skip to first unread message

Thevan

unread,
Oct 6, 2012, 11:05:17 AM10/6/12
to panb...@googlegroups.com
நண்பர்களை வேண்டுதலை தொடர்ந்து தேவர் மாலை என்ற இந்த ஒற்றை இழையை தொடங்குகிறேன். இதில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தொடர்பான தகவல்களை வெளியிடுவேன். தேவர் குரு பூஜையை முன்னிட்டு இந்த இழை விசேஷமாக தொடங்கப்படுகிறது. அதற்குப் பின்னரும் தொடரும். 

இணைப்பில் தேவர் தனது வளர்ப்புத் தாயின் உடலை பார்க்க முஸ்லீம் பெரியவராக மாறுவேடத்தில் வந்து சென்ற தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 



பி.கு.- எனது பதிவுகளை விரும்பாவிட்டால் குழுமத்தினர் என்னை நீக்கிவிடலாம். 

நன்றி.

--

பேசாத பொருளில்லை அவனியிலே, அவ்வாறிருந்தால் அங்கே தேவனுக்கு இடமில்லை.

 


Regards,

Thevan, 
Mumbai.

 



198517_416945418369530_1403620745_n.jpg

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Oct 6, 2012, 12:07:26 PM10/6/12
to vall...@googlegroups.com
தயவு செய்து நிறையப் பேசுங்கள்.

தேவர் பற்றி நிறைய தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.  என்னுடைய நண்பர் ஒருவர் தேவர் பற்றிய ஆவணப்படம் எடுக்க டெல்லி வந்திருந்தார்.  சில வட இந்தியத் தலைவர்களின் பேட்டி காண அவர் முயன்ற போது அந்தக் கட்சி அலுவலகத்தில் வேலை செய்யும் தமிழர்கள் தேவர் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை அவரிடம் சொன்னதாக வேதனைப் பட்டார்.

தேவர் பற்றி தவறான தகவல்கள் பல வலிந்து புனையப்படுகின்றன.  அவற்றை எதிர்கொள்ள நேர்மையான பதிவுகள் தேவைப்படுகின்றன.

தேவர் குறித்து இந்தத் தலைமுறை நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும்.  அவருடைய மன உறுதியில் நூறில் ஒரு பங்கு நம்முடைய இன்றைய தலைவர்களுக்கு இருந்தால் நாம் எத்தனையோ சாதித்து இருக்கலாம்.

அன்புடன்

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/10/6 Thevan <apth...@gmail.com>

--
 
 

Thevan

unread,
Oct 6, 2012, 12:14:22 PM10/6/12
to vall...@googlegroups.com
நன்றி திரு பென்னேஸ்வரன் அவர்களே,

//தேவர் பற்றி தவறான தகவல்கள் பல வலிந்து புனையப்படுகின்றன.  அவற்றை எதிர்கொள்ள நேர்மையான பதிவுகள் தேவைப்படுகின்றன.//

உண்மையே. உண்மைக்கு முன்பாக பொய் எப்போதும் நிற்காது. 

தொடர்கிறேன். 

நன்றி.

Innamburan Innamburan

unread,
Oct 6, 2012, 12:18:14 PM10/6/12
to vall...@googlegroups.com
அன்பின் தேவன்.

நான் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களை பற்றி எழுதிய கட்டுரையை இணைக்கிறேன். விருப்பமிருந்தால், அதை உங்கள் தொகுப்பில் பதிப்பிக்கலாம்.
நன்றி வணக்கம்.
இன்னம்பூரான்


Gmail - அன்றொரு நாள்: அக்டோபர் 12:II.pdf

Thevan

unread,
Oct 6, 2012, 12:19:45 PM10/6/12
to vall...@googlegroups.com
நன்றி திரு இன்னம்பூரான் அவர்களே

Dhivakar

unread,
Oct 6, 2012, 12:22:12 PM10/6/12
to vall...@googlegroups.com
திரு தேவன்,

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய தகவல்கள் நிறைய எழுதுங்கள். 

தமிழகம் இருபதாம் நூற்றாண்டில் தந்த நல் மாணிக்கங்களில் அவரும் ஒன்று. 

ஆன்மீகத்துடன் தன் தேசச் சேவையைக் கலந்து ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தவர்.

இவரைப் பற்றிய தகவல்கள் இன்றைய இளைய தலைமுறைக்கு எந்த அளவில் தெரியும் என்று யோசிக்க வேண்டியதுள்ளது. 

உங்கள் எழுத்துக்கள் பலம் பெறுக!!






2012/10/6 Thevan <apth...@gmail.com>

Thevan

unread,
Oct 6, 2012, 12:26:24 PM10/6/12
to vall...@googlegroups.com
நன்றி திரு திவாகர் அவர்களே,

தங்களைப் போன்றோரின் ஆசிகள் நிச்சயம் எனக்கு அந்த பலத்தை தரும். 

செல்வன்

unread,
Oct 6, 2012, 12:54:45 PM10/6/12
to vall...@googlegroups.com
பசும்பொன் தேவரை பற்றி மோசமான சித்திரம் மட்டுமே இணையத்தில் பரப்பபடுவது வருந்ததக்கது. அப்பழுக்கற்ற தேசபக்தரும், ஆன்மிகவாதியுமான தேவர் வரும்கால தலைமுறைக்கு நல்லதொரு முன்னுதாரணமான மனிதர் ஆவார். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் சொந்தவாழ்வையே தியாகம் செய்த அந்த மகாத்மாவை அனைவருக்கும் கொன்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ள தேவன் ஜிக்கு எனது வாழ்த்துக்கள்

2012/10/6 Thevan <apth...@gmail.com>

--
செல்வன்


Thevan

unread,
Oct 6, 2012, 12:55:39 PM10/6/12
to vall...@googlegroups.com
நன்றி திரு செல்வன் அவர்களே

Hari Krishnan

unread,
Oct 6, 2012, 9:57:18 PM10/6/12
to vall...@googlegroups.com


2012/10/6 Thevan <apth...@gmail.com>

உண்மையே. உண்மைக்கு முன்பாக பொய் எப்போதும் நிற்காது. 

தொடர்கிறேன்
திரு தேவன்,

பணியின் பளுகாரணமாக தேவர் அவர்கள் சொற்பொழிவை தரவிறக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன்.  தொடக்கத்தில் அவர் சொல்லும் சந்தவிருத்தம் (என்றுதான் நினைக்கிறேன் அல்லது வண்ணவிருத்தமா கட்டளைக்கலியா தெரியாது) மரபில் அவருக்கிருந்த ஊற்றத்தை அடையாளங் காட்டுகின்றன. இப்படிப்பட்ட கவிதை கவிதைகளை இவ்வளவு சரளமாகவும் சாதாரணமாகவும் மேற்கோளோகவோ அல்லது தொடக்கமுத்திரையாகவோ பயன்படுத்த, பல வருடப் பயிற்சியால் மட்டுமே முடியும்.  

பல நுணுக்கமான விவரங்களைப் பேச்சினிடையே உதிர்த்துக்கொண்டே போவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஒருமுறை சின்னக்குத்தூசி (என்றுதான் நினைவு) அவரையும் மேடையில் வைத்துக்கொண்டே (அவர் பேசுவது போலவே) ‘இரண்டு லட்சத்து எழுபத்து ஏழாயிரத்து முன்னூற்று முப்பத்தாறு ஓலைகளையும், பதினைந்தாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து நான்கு சவுக்குமர பந்தல்கால்களையும் கொண்டு வேயப்பட்ட பந்தலில் கூடியிருக்கும் ஏழாயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றேழு ஆண்களே, ஆறாயிரத்து  எண்ணூற்று அறுபத்து மூன்று பெண்களே, மூவாயிரத்து ஐநூற்று நாற்பத்தொன்பது குழந்தைகளே’ என்று தொடங்கினாராம்.  கூட்டத்தில் பெரிய சலசலப்பு.  தேவர் அவர்களை, அவரையும் மேடையில் வைத்துக்கொண்டே பகடி செய்கிறார் என்று பலருக்குக் கோபம் வந்து, சின்னக்குத்தூசியை அடிப்பதற்கு ஏற்பாடு நடக்கத் தொடங்கிவிட்டதாம்.

இதை கவனித்த தேவர் அவர்கள், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக மேடைக்கு அழைத்து, ‘என்னப்பா, இதெல்லாம் நகைச்சுவைதானே?  ஒங்களுக்கு நகைச்சுவை உணர்வே இல்லையா?  சும்மா இருங்கப்பா.. சிரிக்கவேண்டியதுக்கெல்லாம் அடிக்கப் புறப்படறதா?’ என்று சமாதானப்படுத்தி அனுப்பினாராம்.

என் தமிழ்ப் பேராசிரியர் தி வேணுகோபாலன் அவர்கள் அந்தக் கூட்டத்திலிருந்திருக்கிறார்.  பேசுவதற்காகவா, கேட்பதற்காகவா என்று தெரியாது.  அவர் இதை பலமுறை சொல்லியிருக்கிறார்.

இப்போதுதான் என்போன்றவர்களுக்கெல்லாம் இப்படி ஓர் ஆளுமையை நேரடியாக அறிந்தகொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.  மிக்க நன்றி.

--
அன்புடன்,
ஹரிகி.

Thevan

unread,
Oct 6, 2012, 10:43:55 PM10/6/12
to vall...@googlegroups.com
நன்றி திரு ஹரிகிருஷ்ணன் அவர்களே,


தேவரின் சொற்பொழிவுகளை வாசிக்கும்போது அவரது தமிழ்ப் புலமை வெளிப்படுகிறது. திருக்குறள் அஷ்டாவதானம் என்ற தலைப்பில் அவர் பேசிய பேச்சில் திருக்குறளை அவர் பார்க்கும் விதமும், மற்ற ஆன்மீக நூல்களின் ஞானமும் வெளிப்படுகிறது. இந்த கட்டுரையை தேவர் தளத்தில் (http://www.thevarthalam.com/thevar/?p=1984) பதிந்திருக்கிறேன். 

இது பற்றி, தேவரைப் பற்றி சில நூல்களை வெளியிட்டுள்ள ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு காவ்யா சண்முகராசன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த நூல்களை தேவர் எப்போது, எங்கே கற்றார் என்பது தெரியவில்லை என்று சொன்னார். ஒருவேளை அவர் சிறையில் இருந்த காலங்களில் கற்றிருக்கலாம் என்று கருதுகிறேன். 

Dhivakar

unread,
Oct 7, 2012, 1:27:51 AM10/7/12
to vall...@googlegroups.com
>>தேவரின் சொற்பொழிவுகளை வாசிக்கும்போது அவரது தமிழ்ப் புலமை வெளிப்படுகிறது. திருக்குறள் அஷ்டாவதானம் என்ற தலைப்பில் அவர் பேசிய பேச்சில் திருக்குறளை அவர் பார்க்கும் விதமும், மற்ற ஆன்மீக நூல்களின் ஞானமும் வெளிப்படுகிறது. <<

திரு தேவன்,

உலகில் பல அதிசயங்கள் நம் கண் முன்னே நடந்தாலும் நமக்குப் புரியாது. அதன் வீச்சு புரியாது. அஷ்டாவதானிகள், சதாவதானிகள் என்றெல்லாம் நம் பாரத தேசத்தில் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை நான் கண்கூடாகப் பார்த்து வியந்ததுண்டு. எந்திரன் படத்தில் ரோபோட் ரஜினி மெடிகல் புத்தகத்தை தன் மார்பில் ‘ஸ்வைப்’ செய்து உடனடியாக ஒப்பிப்பது நினைவு இருக்கலாம். அதே போல ஒரு பார்வையிலேயே ஒரு புத்தகத்தைப் படித்து ஒப்பித்த ஒருவரை நான் பார்த்துள்ளேன். 

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் வாழ்க்கை வரலாறை சற்று கூர்ந்து கவனித்துப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தேவர் ஒரு மகா யோகி என்பதையும் சற்று கவனத்தில் கொள்ளவேண்டும்.  இப்படிப்பட்ட யோகிகளுக்கு கற்பதும் கற்றதை சிறந்த முறையில் வெளிப்படுத்துவதும் வெகு சுலபம். 

சீக்கிரம் எழுதத் துவங்குங்கள்!

2012/10/7 Thevan <apth...@gmail.com>
நன்றி திரு ஹரிகிருஷ்ணன் அவர்களே,


தேவரின் சொற்பொழிவுகளை வாசிக்கும்போது அவரது தமிழ்ப் புலமை வெளிப்படுகிறது. திருக்குறள் அஷ்டாவதானம் என்ற தலைப்பில் அவர் பேசிய பேச்சில் திருக்குறளை அவர் பார்க்கும் விதமும், மற்ற ஆன்மீக நூல்களின் ஞானமும் வெளிப்படுகிறது. இந்த கட்டுரையை தேவர் தளத்தில் (http://www.thevarthalam.com/thevar/?p=1984) பதிந்திருக்கிறேன். 

இது பற்றி, தேவரைப் பற்றி சில நூல்களை வெளியிட்டுள்ள ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு காவ்யா சண்முகராசன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த நூல்களை தேவர் எப்போது, எங்கே கற்றார் என்பது தெரியவில்லை என்று சொன்னார். ஒருவேளை அவர் சிறையில் இருந்த காலங்களில் கற்றிருக்கலாம் என்று கருதுகிறேன். 

Thevan

unread,
Oct 7, 2012, 1:40:06 AM10/7/12
to vall...@googlegroups.com
நீங்கள் சொல்வது உண்மையே,
திரு திவாகர் அவர்களே.

Thevan

unread,
Oct 7, 2012, 1:41:06 AM10/7/12
to vall...@googlegroups.com
விரைவிலேயே எழுத ஆரம்பிக்கிறேன், ஐயா.

Innamburan Innamburan

unread,
Oct 7, 2012, 2:24:23 AM10/7/12
to vall...@googlegroups.com
தேவர் பிரானை நான் சந்தித்து இருக்கிறேன். நான் சிறுவன். என்றாலும், ஒரு பெரிய மனிதரை சந்திக்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது \நினைவில் இருக்கிறது. அவரிடம் கூடியிருப்போரை கவரும் தன்மை இருந்தது. பல விஷயங்களில் அவருடைய தலைவர் சுபாஷ் சந்திர போஸ் மாதிரி தான்.
இன்னம்பூரான்

2012/10/7 Thevan <apth...@gmail.com>
விரைவிலேயே எழுத ஆரம்பிக்கிறேன், ஐயா.

--
 
 

Thevan

unread,
Oct 7, 2012, 2:36:16 AM10/7/12
to vall...@googlegroups.com
தங்களுடைய தகவலுக்கு நன்றி, ஐயா.

Tthamizth Tthenee

unread,
Oct 7, 2012, 2:56:59 AM10/7/12
to vall...@googlegroups.com
தேவர் மாலை  தொடரட்டும்
தேவர் அவர்களைப் பற்றிய உண்மைகளை  தெரிந்து கொள்வோம்
மன உறுதி என்றால் என்ன என்பதை இக்கால மக்கள் உணர  நிச்சயமான வரலறாக இருக்கும் திரு தேவர்மாலை 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


2012/10/7 Thevan <apth...@gmail.com>
தங்களுடைய தகவலுக்கு நன்றி, ஐயா.

--
 
 

Thevan

unread,
Oct 7, 2012, 3:00:40 AM10/7/12
to vall...@googlegroups.com
நிச்சயமாக, திரு தமிழ்த்தேனீ அவர்களே

Rishi Raveendran

unread,
Oct 7, 2012, 3:15:17 AM10/7/12
to vall...@googlegroups.com


>>>>>>>>>>
உலகில் பல அதிசயங்கள் நம் கண் முன்னே நடந்தாலும் நமக்குப் புரியாது. அதன் வீச்சு புரியாது. அஷ்டாவதானிகள், சதாவதானிகள் என்றெல்லாம் நம் பாரத தேசத்தில் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை நான் கண்கூடாகப் பார்த்து வியந்ததுண்டு. எந்திரன் படத்தில் ரோபோட் ரஜினி மெடிகல் புத்தகத்தை தன் மார்பில் ‘ஸ்வைப்’ செய்து உடனடியாக ஒப்பிப்பது நினைவு இருக்கலாம். அதே போல ஒரு பார்வையிலேயே ஒரு புத்தகத்தைப் படித்து ஒப்பித்த ஒருவரை நான் பார்த்துள்ளேன். 
<<<<<<<<<<<<<<<<<<<<

யோகத்தில் முறைப்படி தினமும் பிராணாயாமம், தாரணை, தியானம் செய்வோர்களுக்கு நினைவாற்றலும் மனக்கூர்மையும் கிடைக்கின்றது. இதன் மூலம் சில பயிற்சிகளின் உதவியினால் இறுதியில் புத்தகத்தை வேகமாக மனதினில் ஏற்றும் இந்த சக்தி கிடைப்பதை நாம் உணரலாம். தேவைப் படும் நேரத்தில் புத்தகத்திலுள்ள அதே உள்ளடக்கத்தை கமா, காற்புள்ளி, முற்றுப்புள்ளி உட்பட நினைவு கூறலாம். Photographic memory சாத்தியமே.

இதற்கு இடைவிடாத பயிற்சி அவசியம். ஒரே நாளில் சாத்தியமாவதில்லை.

Anna Kannan

unread,
Oct 7, 2012, 3:21:41 AM10/7/12
to vall...@googlegroups.com
தாரணை?

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Oct 7, 2012, 3:24:34 AM10/7/12
to vall...@googlegroups.com
பார்த்தீர்களா தேவன் -

ஏதோ பலத்த ஐயத்துடன் துவங்கினீர்களே.  நல்ல விஷயங்களுக்கு என்றுமே நல்ல வரவேற்பு எங்குமே கிடைக்கும்.

உங்கள் தொடருக்காக நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.


அன்புடன்

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/10/7 Anna Kannan <annak...@gmail.com>
தாரணை?

--
 
 

Thevan

unread,
Oct 7, 2012, 3:30:54 AM10/7/12
to vall...@googlegroups.com
//ஏதோ பலத்த ஐயத்துடன் துவங்கினீர்களே. //

இல்லை, திரு பென்னேஸ்வரன் அவர்களே,

இணையத்தில் உள்ள, பொதுவாக தங்களை முற்போக்குவாதிகள் என்று காட்டிக்கொள்பவர்கள் தேவரைப் பற்றி தவறான பிரச்சாரத்தை நம்பி வருகின்றனர். மற்றொரு பகுதியினர் அவரைப் பற்றி அவதூறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதனால்தான் இப்படி ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. 

கண்டிப்பாக ஆரம்பிக்கிறேன். இந்த மாத இறுதியில் குருபூஜைக்குச் செல்கிறேன். அங்கிருந்து திரும்பியதும் ஆரம்பிக்கிறேன். 
நன்றி

வேந்தன் அரசு

unread,
Oct 7, 2012, 10:56:05 AM10/7/12
to vall...@googlegroups.com
>இதை கவனித்த தேவர் அவர்கள், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக மேடைக்கு அழைத்து, ‘என்னப்பா, இதெல்லாம் நகைச்சுவைதானே?  ஒங்களுக்கு நகைச்சுவை உணர்வே இல்லையா?  சும்மா இருங்கப்பா.. சிரிக்கவேண்டியதுக்கெல்லாம் அடிக்கப் புறப்படறதா?’ என்று சமாதானப்படுத்தி அனுப்பினாராம்.

குழுமங்களில் ஓரளவு இந்த உணர்வு வளர்ந்து இருக்கு. இன்னும் வளரணும்


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Sampath Ramaswami

unread,
Oct 7, 2012, 12:31:02 PM10/7/12
to vall...@googlegroups.com
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவ்ர் பெருமான் தமிழகம் ஈன்றெடுத்த
நன்முத்துக்களில் ஒருவராவர். நாத்திகப்பேய் தலைவிரித்து ஆடிய
காலகட்டத்தில் ஆத்திகத்துக்கும் ஆன்மீகத்துக்கும் ஓர் அரண்போல் திகழ்ந்த
மஹாயோகி அவர். இறைப்பற்று நாட்டுப்பற்று ஆகிய இரண்டும் மக்களுக்குத் தேவை
என்பதனை வலிவுறுத்திய அன்னாரைப்பற்றி இன்றைய இளம் தலைமுறை தெரிந்து
கொள்வது மிகஅவசியம். தங்கள் முயற்சிக்கு எளியேனின் வாழ்த்துக்கள்.
ஸம்பத்

> --
>
>
>

Thevan

unread,
Oct 7, 2012, 12:32:47 PM10/7/12
to vall...@googlegroups.com
நன்றி திரு சம்பத் அவர்களே. 

Nagarajan Vadivel

unread,
Oct 7, 2012, 1:21:37 PM10/7/12
to vall...@googlegroups.com
நல்ல திட்டம் இன்னும் சிறப்பாக இப்போது மேலெடுத்துச் செல்லும் தேவர் மாலை
தேவர் சொற்பொழிவுகளை வைத்து இங்கே நீங்கள் மெய்நிகர் தேவர் மனிமண்டபம்
அமைக்கலாம்

நான் எனக்குத் தெரிந்த தகவலைத் தனியே எழுதுகிறேன்

என்னுடைய சமகாலப் பேராசிரியர் இம்மானுவேல் திவ்வியனும் முக்கையாத்
தேவரும் இணைந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற சிறு குறிப்பை
அளித்துள்ளனர்

முடிசூடா மன்னனாக எல்லையற்ற நிலபுலன்களுக்குச் சொந்தக்காரராக இருந்தவர்
எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் இல்லம் பசிப்பிணி போக்கும் நிலையமாக
இருந்தது. அவர் ஒரு தொழிற்சங்க வாதி மஹாலட்சுமில் மில்ஸ் போராட்டத்திலி
ஜீவா அவர்களுடன் இணைந்து போராடியவர் ஒரு ஆண்டு டி.வி.எஸ் தொழிற்சங்கத்
தலைவராக இருந்தார்

ஆங்கிலேயக் காலணி ஆதிக்கம் மறவர்களைப் பிறப்பால் குற்றம் புரிவோர் என்றூ
ஆங்கிலேயர்கள் அவர்கள் ஊரில் உள்ள குற்றப் பரம்பரையை மனதில் இருத்தி
அடையாளம் காட்டியதை அடியோடு எதிர்த்தார்

காங்கிரசில் உள்ள பல பிரிவிகளில் நேதாஜியுடன் இணைந்து அதனாலேயே தமீழகக்
காங்கிரசுக்கு வேண்டாதவராகப் போனார்

மரியாதை பழக்கம் என்ற மறவர்களின் பண்புக்கூறுகளின் அடிப்படையில்
அனைத்துத் தேவர்களையும் ஒரு குடைக்கீழ் கொண்டுவந்தார்

தேவரைப்பற்றி அறியாதவர்கள் தெவரின் பண்பு தேவரினத்தின் மாண்பு மகளை
எளிதில் சென்று அடையக்கூடிய ஊடகத்தில் பார்த்தது இங்கே

ஒரு பாடல். பாடல் வரிகள் தேவர் மாண்பைப் பறைசாற்றும்

http://www.youtube.com/watch?v=yRcKEebrz5M&feature=related

நம் உயிருக்குமேலே மனம் மரியாதை. மானம் இழந்தாலே வாழத் தெரியாதே.

பெரிசெல்லம் சொன்னாங்க சொன்னபடி நடந்தாங்க குணத்தால் மனதால் கலைமான் ஆனாங்க

ஒரு காட்சி. சிவாஜி கணேசன் முத்துராமலிங்கத் தேவரை மனதில் நிறுத்தி நடித்ததுபோல்

http://www.youtube.com/watch?v=ul9Xvjt83eI

நாகராசன்

2012/10/7 Thevan <apth...@gmail.com>:


> நன்றி திரு சம்பத் அவர்களே.
>

> --
>
>

Thevan

unread,
Oct 7, 2012, 1:41:54 PM10/7/12
to vall...@googlegroups.com
நன்றி, திரு நாகராஜன் வடிவேல் அவர்களே

Rishi Raveendran

unread,
Oct 7, 2012, 1:57:25 PM10/7/12
to vall...@googlegroups.com
பதஞ்சலி கூறும் அஷ்டாங்க யோகங்களில் தாரணையும் ஒன்று. த்யான விற்கு முதல் படி. இது மனதினைக் குவிக்கும் ஒரு பயிற்சி. இந்த அஷ்டாங்கங்களையுமே அனைவருமே இளமை முதல் கற்க வேண்டும். தெய்வாதீனமாக அந்த வாய்ப்பு எனக்கு என்னையறியாமலேயே பால்ய காலத்தில் அமைந்தது.

1. யம
2. ந்யமா
3.ஆசனா
4.ப்ராணாயாமா
5.ப்ரத்யாகரா
6. தாரணா
7. த்யானா
8. சமாதி




--
அன்புடன்
சக பயணி
இரவீந்திரன்


"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."



Thevan

unread,
Oct 8, 2012, 11:44:26 PM10/8/12
to panbudan
பாராளுமன்றத்தில் தேவரின் கன்னிப் பேச்சு...

1957ல் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெற்றி... 

FILE
அதன்பின் முதுகுளத்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தல்... இமானுவேல் கொலை... கீழத்தூவல் படுகொலை... 1957 ஜனவரி 28 நள்ளிரவு கைது... தொடர் சிறை வாழ்க்கை... 1959 ஜனவரி 7ல் விடுதலை... அதன்பின் தமிழகம் முழுவதும் தொடர் முழக்கம்... அதனால் நாடாளுமன்ற உறப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் இரண்டாண்டு கழித்துத்தான் நாடாளுமன்றத்தில் பசும்பொன் தேவரின் முழக்கம் ஒலித்தது....

1959 பிப்ரவரி 13... இன்றுதான் பசும்பொன் முத்துராமலிங் தேவர் நாடாளுமன்றத்தில் முழங்க நேரம் ஒதுக்கப்பட்டது... பின் 16 ஆம் தேதியாக அது மாற்றப்பட்டது... இறுதியில் 17ஆம் தேதியின் அந்த வாய்ப்பு பசும்பொன் தேவருக்கு கிடைத்தது. அதுவும் மாலை 4.45க்கு... மாலை 5 மணிக்கு நாடாளுமன்றம் முடிந்துவிடும்... இந்த இடைப்பட்ட கால் மணி நேரத்தில் தமது கருத்து முழுவதையும் பசும்பொன் தேவர் வெளியிட வேண்டும். எழுந்தார் பசும்பொன் தேவர்... ஆங்கிலத்தில் தொடர்ந்தார் முழக்கத்தை... அதுவரை கேட்டறியாத பசும்பொன் தேவரின் ஆங்கில முழக்கத்தை கேட்டு வடமாநிலத் தலைவர்கள் விழகள் மூட மறந்தன. 

மறுநாள் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸின் டெல்லிப் பதிப்பு. 

"Mr. Muthuramalinga Thevar the last speaker of the day, held the attention of the house with his fiery oratory" என்று தேவரின் நாடாளுமன்ற முழக்கம் பற்றி குறிப்பிட்டது. 

இனி, நாடாளுமன்றத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முழக்கம்... தமிழில் தந்திருப்பது ஏ.ஆர். பெருமாள். 

ஐயா, 

ஜனாதிபதியவர்களின் தலைமையுரை மீது பேச வேண்டிய இவ்வேளையில், நமது வெளிநாட்டுக் கொள்கை, காமன்வெல்த் தொடர்பு முதலியவை பற்றி இடையே கொஞ்சம் விவரிக்க விரும்புகிறேன் - விவரிக்க வேண்டியது அவசியமும் கூட. 

காமன்வெல்த் என்பதன் பெயரால் நாம் ஒரு கூட்டுறவில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், நாம் பிணைக்கப்பட்டுள்ள காமன்வெல்த் என்ற கூட்டுறவின் பங்காளிகள், நமது நாட்டையும், செல்வத்தையும் சேர்த்துப் பங்குரிமை கொள்ள ஆசைப்படுகிறார்கள். பொதுச் சொத்து என்றும் கருதுகிறார்கள். ஆனால் நமது சுயாதிக்கத்தை அவர்கள் மதிப்பதே இல்லை. நமது நாட்டையும் செல்வத்தையும் அவர்கள் நேசிக்கிற அளவுக்கு நமது சுயாட்சியை நேசிக்கவில்லை என்பதால் இது ஓர் அபாயகரமான கூட்டுறவு என்றே குறிப்பிடலாம். 

மேலும், நாம் சாதிக்கும் ஒவ்வொரு சாதனையையும் அஹிம்சா முறையில் சாதித்துவிட்டதாக ஒரு அபிப்பிராயத்தை உலகெங்கும் உண்டாக்கி விட்டிருக்கிறோம். ஆனால் அகிம்சை என்ற தத்துவம் சிந்திப்பதிலும், பேசுவதிலும் உள்ள எளிமை, அதை நடைமுறைப்படுத்துவதில் இல்லை என்பது அநேகமாக நம் எல்லோருக்கும் தெரியும். 

அகிம்சை என்பது அரசியல் ரீதியான செல்பாடுகளுக்கு ஒத்தியங்க அல்லது உடன்படுத்தி இயக்க இயலாத ஒரு தத்துவம்! அதைப் பேசலாம் - எழுதலாம், ஆனால் அரசியலில் அதைச் செய்ய முடியாது என்பது கண்கூடு. 

எல்லா நாடுகளிலும் - எல்லாப் பகுதிகளிலும், இரண்டு கட்சிகள் உண்டு. ஒன்று வலதுசாரிக் கட்சி - மற்றொன்று இடதுசாரிக் கட்சியாக இருக்கும் - இருந்து வருவதை நாமும் அறிஅவாம். இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று வேறுபடுமேயன்றி தேசியத்தை - தேச நலனைப் பற்றிய துறையில் வேறுபடாது. இரண்டு தேச பக்தக் கட்சிகள் தான். இரண்டுக்கும் மக்கள் ஆதரவு உண்டு, இரண்டு கட்சிகளுமே நாட்டுக்கான கடமையைச் செய்து வருகின்றன. அதேபோல இந்த நாட்டிலும் வலதுசாரி - இடதுசாரி என்ற முறையில் இயங்கினர் - இயங்குகின்றனர். 

தேச விடுதலைக்காகப் பல பயங்கரப் புரட்சிகளைச் செய்த நமது நாட்டு இடதுசாரிகளில், பகவத் கீதையைக் கையில் வைத்துக்கெண்டே அந்நியரின் தூக்கு மேடையில் பலியானோரும், அந்தமான் தீவுகளில் ஆவி துறந்தோரும் கொஞ்சமல்ல, அவர்கள் தேசத்திற்காகவே கடமையைச் செய்து உயிரை இழந்தவர்களாக இருந்தாலும், காந்தீயர்களாக இருக்கவில்லை என்றே கருதப்பட்டார்கள். இதனால் அவர்கள் அடியிட்ட சுதந்திர இந்தியாவில் அவர்களுக்குரிய சிறப்புக்கு இடமில்லாது போய்விட்டது. அதாவது, ஒருவன் தேசத் தியாகியாக மட்டும் இருந்தால் போதாது ? அவன் தேசபக்தன் - தியாகி - என்பதை விட காந்தீயன் - காந்தி பக்தக் கூட்டத்தில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள் : போகட்டும்! 

'அகிம்சை' என்ற கொள்கை நாம் அடிமைகளாக இருந்தபோது ஓரளவுக்குச்சரி, ஆனால் நாம் இப்பொழுது ஒரு குடியரசை நில்மாணித்திருக்கிறோம். நமது சர்க்கார் கோடானுகோடி ரூபாய்களைக் கொண்டும் ராணுவச் செலவைச் செய்கிறது. போர்ச்சுகலும், எல்லைப் புறங்களில் பாகிஸ்தானு புரிகிற கொடுமைகளைப் பற்றி, பேசும்போது கூட அகிம்சையைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளத் தவறுவதுமில்லை. 

கொள்கையோ அகிம்சை; வருமானத்தில் பெரும்பகுதி செலவிடுவதோ ராணுவத்துக்கு! அதே சமயம் அந்நியர்களின் அக்ரமத்திற்கு முனூனே அகிம்சைப் பேச்சு - ஆனால், அதே சமயம் நாகா மலை ஜாதியினர் மீது பாய ராணுவத்தை ஏவிவிடுகின்றோம் - நமது அரசியல் எதிர்ப்பாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகளைச் சாய்க்கத் துப்பாக்கிகளின் வாய்களைத் திறந்துவிட அனுமதிக்கிறோம்! இது எந்த ரக அகிம்சாவாதம் என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. 

எந்தக் கொள்கையும், எந்தச் சமயத்திலும் செயலோடு சம்பந்தப்பட வேண்டும். செயலோடு சம்பந்தப்படும் கொள்கையைத்தான் உருவாக்கவும் வேண்டும். பேசுவதற்குக் கொள்கை, செய்வதற்கு வேறு முறை என்றால் அக்கொள்கை வெறும் பிரச்சார அந்தஸ்தோடு நின்றுவிடும். அதற்குச் சாகாத்தன்மையும் ஏற்படாது என்பதைக் கூறிக்கொள்கிறேன். 

யுத்த முடிந்த ஆரம்பகாலத்தில் எல்லோருமே அமைதி - சமாதானம் பற்றிப் பேசினார்கள். அதற்காக ஐ.நா. சபையும் உண்டாக்கப்பட்டது. ஆனால், சமாதான சாத்தியத்திற்காக உண்டாக்கப்பட்ட உலகப் பொதுச் சபைக்கு ஐக்கிய நாடுகள் சபை என்று பெயர்தான் வைக்கப்பட்டதேயன்றி, அதன் நோக்கமெல்லாம் ஐக்கியத்தைப் பிளப்பதாகவே இருக்கிறது. அது பேசுகிற சமாதனாப் பேச்சு, செயலை நெருங்கவே அனுமதிக்கப்படவில்லை.

தொடர்ச்சியை கீழேகொடுத்துள்ள இணைப்பில் படிக்கலாம்.

Rishi Raveendran

unread,
Oct 9, 2012, 1:14:48 AM10/9/12
to vall...@googlegroups.com
அன்பு தேவன்,

உங்களது தொடர் முத்துராமலிங்கம் ஐயா அவர்களைப் பற்றி பல புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்துகின்றது.  தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.

அவரைப் பற்றி நான் அறிந்ததெல்லாம் அவர் ஒரு ஆன்மீக வாதி + சுதந்திரப் போராட்ட வீரர் என்றளவில் மட்டுமே.

ஆர்வத்துடன் உங்களது தொடரினை வாசிக்கக் காத்திருக்கின்றேன், பல புதிய பரிமாணங்களை அறியத் தாருங்கள்.

2012/10/8 Thevan <apth...@gmail.com>

--
 
 

Thevan

unread,
Oct 9, 2012, 1:24:17 AM10/9/12
to vall...@googlegroups.com
நன்றி ஐயா

Thevan

unread,
Oct 11, 2012, 5:48:19 AM10/11/12
to panb...@googlegroups.com
2008ம் ஆண்டு மதுரையில் தேவர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட மதிமுக தலைவர் வைகோ அவர்கள் தேவர் பற்றி ஆற்றிய உரையின் காணொளி

http://www.youtube.com/watch?v=Si---T7v6ww&feature=related



http://www.youtube.com/watch?v=fG6vuKEKdw4


http://www.youtube.com/watch?v=n-ai_ghWv5M


http://www.youtube.com/watch?v=aCEWsEbXmDw&feature=related


http://www.youtube.com/watch?v=lA8Y9TUVHqE&feature=related


http://www.youtube.com/watch?v=sYj8bQL0vG4&feature=related


http://www.youtube.com/watch?v=PoJZ7te_-XY&feature=related

Thevan

unread,
Oct 18, 2012, 12:04:09 AM10/18/12
to panb...@googlegroups.com
தலித் மக்கள் மீதான தேவரின் பரிவு

ஒருமுறை தேவர் அவர்கள் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஊரில் தன் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு விருந்துக்கு சென்றிருந்தார். அந்த நண்பர் அந்த பகுதியிலே பெரும் செல்வந்தர்.விருந்துக்கு முன்பு தேவரும் அந்த நண்பரும் அவர்களின் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டில் உள்ள குடிநீர் கிணற்றில் தண்ணீர் எடுக்க பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

அதில் ஒரு சிலபெண்கள் கிணற்றுக்கு அருகில் வராமல் தங்கள் குடங்களுடன் கொஞ்சம் தள்ளி தனியே நின்று கொண்டிருக்க அந்த செல்வந்தரின் மகனான சிறுவன்தான் இறைத்து அந்த பெண்களுக்கு நடந்து போய் ஊற்றிகொண்டிருந்தார். எதனால் இப்படி அந்த பெண்களையே எடுத்துகொள்ள சொல்லலாமே என்று தேவர் தன் நண்பரிடம் கேட்க அதற்கு அவர் இவர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைசேர்ந்த பெண்கள் எனவே அவர்கள் இந்தகிணற்றில் தண்ணீர் பிடித்தால் தீட்டாகிவிடும், மற்ற யாரும் தண்ணீர் பிடிக்கமாட்டார்கள், அதனால் தான் இந்த ஏற்பாடு என்றார்.


உடனே தேவர் கூறினார் சரி நான் கிளம்புகிறேன், இனிமேல் இங்கு வரவும் மாட்டேன், இப்போது இங்கே விருந்தும் உண்ணபோவதில்லை, தாழ்த்தப்பட்ட பெண்களும் மனிதர்கள்தானே அவர்களை இந்தநிலையில் வைத்திருக்கும் இடத்தில் என்னால் கைநனைக்க என் மனம் இடம் தரவில்லை என்று கூறினார்.

உடனே அந்த நண்பர் பதறிபோய், ஐயா மன்னித்துவிடுங்கள் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது, இப்பொழுதே அவர்களை எடுக்க சொல்கிறேன் என்று கூறி அந்தப்பெண்களை உடனே கிணற்றில் தாங்களாகவே தண்ணீர் பிடித்துக்கொள்ள அனுமதி அளித்தார்.

பின்பு தேவரும் விருந்தை முடித்துவிட்டு கிளம்பிவிட்டார். அன்றிலிருந்து அந்தவீட்டில் உயர்ஜாதி மக்களை போலவே தாழ்த்தப்பட்ட மக்களும் தண்ணீர் பிடிக்க அனுமதிக்கபட்டார்கள்.

குறிப்பு: இந்தசம்பவத்தில் வரும் தேவரின் நண்பர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு.தா.பாண்டியன் அவர்களுடைய தந்தை ஆவார். தண்ணீர் இறைத்துக் கொடுத்த அந்த சிறுவன்தான் திரு. தா.பாண்டியன் அவர்கள். இதை தா.பா அவர்கள் ஒரு பேட்டியின் போது சொன்னார்.

காமேஷ்

unread,
Oct 18, 2012, 1:54:07 AM10/18/12
to vall...@googlegroups.com, panb...@googlegroups.com
அருமை.. !

இந்த நிகழ்வை கொஞ்சம் மாற்றி  பல தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்பில்
இனி  சேர்த்து கொள்ளப் படலாம்.
.........................




2012/10/18 Thevan <apth...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Oct 19, 2012, 9:39:36 AM10/19/12
to vall...@googlegroups.com
காமேஷ்,
தேவன் தான் பின்னணியை கொடுத்திருக்கிறாரே. அப்படி யாராவது செய்தால், நாம் ஆக்ஷேபிக்கவேண்டும். தேவனின் ஒரு வேண்டுகோள். திரு. பாண்டியனுடன் தொடர்பு கொண்டு, இதை உறுதி படுத்தி விடுங்கள்.
இன்னம்பூரான்

2012/10/18 காமேஷ் <kame...@gmail.com>
--
 
 

Thevan

unread,
Oct 19, 2012, 9:56:19 AM10/19/12
to vall...@googlegroups.com
ஐயா,

உங்களுக்கு ஒரு தகவலை சொல்ல விரும்புகிறேன். 

தேவரைப் பற்றி சில புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர் ஜீவபாரதி. 

கம்யூனிஸ தளம் சார்ந்த இவர் தேவரைப் பற்றி எழுத ஆரம்பித்ததே ஒரு ஆச்சரியமான நிகழ்வே.

அதாவது இவர் தோழர் ஜீவாவைப் பற்றி புத்தகம் எழுதுவதற்காக பல குறிப்புகளை சேகரிக்கும்போது தேவரைப் பற்றிய பல தகவல்களை காண்கிறார். ஜீவாவைப் பற்றி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கே (அவரது குடும்பத்தினருக்கும்) தெரியாத பல தகவல்கள் தேவருக்கு தெரிந்திருக்கிறது. 

அதாவது ஒரு காலகட்டத்தில் ஜீவா எங்கே இருக்கிறார் என்ற தகவல் யாருக்குமே தெரியாதபோது அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் தேவருக்கு தெரிந்திருக்கிறது. இது போன்ற பல தகவல்களை பார்த்த பின்னரே ஜீவபாரதி தேவரைப் பற்றிய புத்தகங்களை எழுத ஆரம்பிக்கிறார். 

தற்போது அவர், தேவர் பாராளுமன்றத்தில் பேசியவற்றை தொகுத்து வெளியிட முயற்சித்து வருவதாக கேள்விப் பட்டேன். 

எனவே தேவரின் சமகால தலைவர்களுடன் அவரது தொடர்பு தவிர்க்க முடியாதது. ஏனோ பல காரணங்களால் அது திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. 

அது பற்றி நான் சிறிது சிறிதாக எழுதுகிறேன். 


Innamburan Innamburan

unread,
Oct 19, 2012, 10:10:54 AM10/19/12
to vall...@googlegroups.com
ஆஹா! நான் காத்திருந்து படிக்கிறேன். நான் தேவர்பிரானை பற்றி ஒரு கட்டுரை 'அன்றொரு நாள்' தொடரில் எழுதி இருக்கிறேன்.
நன்ரி,
இன்னம்பூரான்

2012/10/19 Thevan <apth...@gmail.com>


--
 
 

Thevan

unread,
Oct 19, 2012, 10:11:51 AM10/19/12
to vall...@googlegroups.com
நன்றி ஐயா.

Nagarajan Vadivel

unread,
Oct 19, 2012, 10:15:31 AM10/19/12
to vall...@googlegroups.com
மதுரை மகாலாட்சுமி தொழிலாளார் வேலை நிறுத்தத்தில் தோழர் ஜீவா அவர்களும்
தேவர் அவர்களும் இணைந்து செயல்பட்டனர்
என்வே ஜீவா பற்ற்ய தகவல் தேவர் அவர்களுக்குத் தெரிந்திருப்பதில் வியக்கத்
தேவையில்லை

நாகராசன்

2012/10/19 Innamburan Innamburan <innam...@gmail.com>:

> --
>
>

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Oct 19, 2012, 11:08:09 AM10/19/12
to vall...@googlegroups.com
ஜீவபாரதியின் நூல் ஒரு ஆவணக் களஞ்சியம்.  தவகல் பெட்டகம்.  ஜீவா பற்றிய தகவல்கள் மிகவும் பாங்குடன் தொகுக்கப்பட்டிருக்கும்.

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/10/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
--



Thevan

unread,
Oct 25, 2012, 11:06:10 PM10/25/12
to panbudan, anb...@googlegroups.com, beyo...@googlegroups.com, dinamo...@googlegroups.com, eelatami...@googlegroups.com, elanth...@googlegroups.com, ethi...@googlegroups.com, germa...@yahoogroups.com, housto...@googlegroups.com, il...@googlegroups.com, indonesia...@googlegroups.com, indray...@googlegroups.com, kee...@googlegroups.com, malaysianta...@googlegroups.com, musli...@googlegroups.com, mutht...@googlegroups.com, naalo...@googlegroups.com, naamt...@googlegroups.com, nallana...@googlegroups.com, namak...@googlegroups.com, namb...@googlegroups.com, namtho...@googlegroups.com, nanji...@googlegroups.com, oviyat...@gmail.com, paga...@googlegroups.com, periyarvizhippuna...@googlegroups.com, pira...@googlegroups.com, puduvai...@googlegroups.com, save-...@googlegroups.com, sira...@googlegroups.com, Tamil2...@googlegroups.com, tamila...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamilmusl...@googlegroups.com, tamiln...@googlegroups.com, thamil...@yahoogroups.com, thamiz...@googlegroups.com, thamizhe...@googlegroups.com, thami...@googlegroups.com, thamizh...@googlegroups.com, thami...@googlegroups.com, thantha...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, thiruma...@googlegroups.com, unita...@googlegroups.com, vijaymakk...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamilmanram, உலகத்தமிழ், தமிழாயம், lightacand...@googlegroups.com, may17members@googlegroups.com "vallamai", mintamil
பயண விவரம்

நண்பர்களே,

தேவர் குருபூஜை விழாவை ஆய்வு செய்வதற்காக அக்டோபர் 27 முதல் 30 வரை
பசும்பொன்னில் தங்கி இருக்கிறேன்.

31ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை மதுரையில் இருக்கிறேன். 1ம் தேதி
மதுரையில் நண்பர்களை சந்திக்கிறேன்.

3ம் தேதி காலை 11 மணி முதல் 4ம் தேதி மதியம் 1 மணி வரை தஞ்சையில் இருக்கிறேன்.

5ம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னையில் தங்குகிறேன். நவம்பர் 11ம் தேதி
சென்னையில் நண்பர்களை சந்திக்கிறேன்.

நவம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை எனது சொந்த ஊரான தேனி மாவட்டம்
தேவதானப்பட்டியில் தங்குகிறேன்.

சந்திக்க விருப்பமுள்ளவர்கள் முன்னதாக தொடர்பு கொள்ளவும்.

நன்றி

09833753808

Thevan

unread,
Oct 27, 2012, 1:53:40 PM10/27/12
to panbudan

பசும்பொன் தேவர் நினைவு மண்டபத்தின் முகப்புத் தோற்றம்.

 

உள்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள தேவர் சிலை மற்றும் சமாதி.

 

புதிதாக திறக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தின் வெளித்தோற்றம்.

 

தியான மண்டபத்தின் உட்புறத் தோற்றம்.

 

இரண்டு தினங்களில் வெளிநாடு செல்ல இருப்பதால் இன்றே தேவர் நினைவிடத்திற்கு வருகை தந்த பாமக தலைவர் ஜி.கே. மணி. நிருபர்களிடம் பேசிய அவர், தேவர்கள் இன்னமும் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் ஏட்டளவிலேயே இருக்கின்றன. எனவே அவர்களுக்கு விசேஷ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

 

முகநூல் நண்பர் திரு. மூர்த்தி மற்றும் எஸ். மரியூர் நகர தேவர் இளைஞர் அணியினர் விருப்பத்திற்கேற்ப நான் ஜோதியை திரு. பசும்பொன் அவர்களின் கையில் கொடுத்து தொடரோட்டத்தைத் துவக்கி வைத்தேன்.

Image1730.jpg
Image1732.jpg
Image1729.jpg
Image1728.jpg
Image1733.jpg
Image1734.jpg

வேந்தன் அரசு

unread,
Oct 27, 2012, 6:05:36 PM10/27/12
to vall...@googlegroups.com


7 அக்டோபர், 2012 9:31 am அன்று, Sampath Ramaswami <ramaswam...@gmail.com> எழுதியது:

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவ்ர் பெருமான் தமிழகம் ஈன்றெடுத்த
நன்முத்துக்களில் ஒருவராவர். நாத்திகப்பேய் தலைவிரித்து ஆடிய
காலகட்டத்தில் 

நாத்திக பேய்.

நாத்திகர்கள் என்னைக்காவது அவர்களுக்குள் அடிச்சிக்கிறது உண்டா?

ஆத்திகர்களுக்கு:ள் இன்னும் யார் கடவுள் என்ற முடிவே இல்லை.
ஒரு கடவுள் ஒத்துக்கொண்டவரும்  நோன்பு நாளில் குண்டு வச்சு உயிர்களை போக்கிறாங்க.

Thevan

unread,
Oct 27, 2012, 10:26:21 PM10/27/12
to vall...@googlegroups.com
//நாத்திகர்கள் என்னைக்காவது அவர்களுக்குள் அடிச்சிக்கிறது உண்டா?//

நிச்சயமாக அடித்துக் கொள்வதில்லை. ஆனால் அடித்துக் கொள்வதை வேடிக்கை பார்ப்பார்கள். அதைத்தானே செய்து வருகிறார்கள். அதேபோல நாத்திகர்கள் என்பவர்கள் இந்து மதத்திற்கு மட்டும்தான் நாத்திகம் பேசுகிறார்கள். ஆனால் இஸ்லாமிய - கிறித்தவர்களோடு உறவாடுகிறார்களே, ஏன்?

//ஆத்திகர்களுக்கு:ள் இன்னும் யார் கடவுள் என்ற முடிவே இல்லை.
ஒரு கடவுள் ஒத்துக்கொண்டவரும்  நோன்பு நாளில் குண்டு வச்சு உயிர்களை போக்கிறாங்க.//

ஆத்திகர்கள் என்று நீங்கள் சொல்பவர்கள் உண்மையில் தங்கள் மதம் என்ன சொல்கிறது என்பதை அறியாதவர்கள். அவர்களும் நாத்திகர்களுக்கு இணையானவர்களே. உண்மையிலேயே ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை கடைப்பிடிக்க ஆரம்பித்தால் எந்த சண்டையும் வராது. மதங்களை தங்கள் சுயலாபங்களுக்கு பயன்படுத்துபவர்களாலேயே சண்டை நடக்கிறது. இதற்கு காரணம் அறியாமையே.

Nagarajan Vadivel

unread,
Oct 27, 2012, 10:39:50 PM10/27/12
to vall...@googlegroups.com
நாத்திகம் என்பது இந்தைய இறை மறைக் கருத்துக்களுக்கு எதிர் வாதம் புரிவோர்கள்

நாத்திகத்தில் பலவகை உண்டு. இந்துக் கடவூளரை மட்டும் குறிவைத்துத்
தாக்கிய பெரியார் விவிலியக் கடவுள்களை மறுத்த இங்கர் சால்
குறிப்பிட்த்தக்கவர்கள்

நாத்திகமும் பகுத்தறிவு வாதமும் ஒன்றல்ல

ஆத்திகத்துக்குள் இருந்து இறை மறைக் கருத்துக்களுக்கு மாற்றுவழிச்
சிந்தனையை உருவாக்கியவர்களு பகுத்தறிவாளர்களே

புத்தர் ஆதி சங்கரர் குறிப்பிடத்தக்க பகுத்தறிவாளர்கள்

நாகராசன்

2012/10/28 Thevan <apth...@gmail.com>:

> --
>
>

Thevan

unread,
Oct 27, 2012, 10:41:23 PM10/27/12
to vall...@googlegroups.com
//ஆத்திகத்துக்குள் இருந்து இறை மறைக் கருத்துக்களுக்கு மாற்றுவழிச்

சிந்தனையை உருவாக்கியவர்களு பகுத்தறிவாளர்களே

புத்தர் ஆதி சங்கரர் குறிப்பிடத்தக்க பகுத்தறிவாளர்கள்//

இதில் மகாவீரரையும் சேர்க்கலாம்

Thevan

unread,
Oct 28, 2012, 7:28:10 AM10/28/12
to panbudan
புகைப்பட அடிக்குறிப்பு

தேவரின் திருக்கோவிலின் இடதுபுறம் அமைக்கப்பட்டுள்ளது புகைப்படக் கண்காட்சி அரங்கு. இதில் தேவர் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 

புகைப்படக் கண்காட்சி அரங்கின் உட்புறம்.
Image1737.jpg
Image1736.jpg
Image1735.jpg

Thevan

unread,
Oct 28, 2012, 7:54:41 AM10/28/12
to panbudan
புகைப்பட அடிக்குறிப்பு

தேவர் வாழ்ந்த இல்லம் திருக்கோவிலின் பின்புறம் அமைந்துள்ளது. 

வீட்டின் உள்ளே முற்றமும். இருபுறமும் மூன்று அமைந்துள்ளன. வலதுபுறம் அமைந்துள்ள முதல் அறைக்கு வல்லளார் இல்லம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தேவரின் தியான அறையாகும்.  


வீட்டின் இருபுறமும் தேவருக்கு பல்வேறு பொதுக்கூட்டங்களில் பல்வேறு சமுதாயத்தினரால் வழங்கப்பட்ட வாழ்த்ப்பாக்கள் வைக்கப்பட்டுள்ளன.

Image1743.jpg
Image1738.jpg
Image1741.jpg
Image1785.jpg

செல்வன்

unread,
Oct 28, 2012, 12:12:07 PM10/28/12
to vall...@googlegroups.com


2012/10/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

நாத்திக பேய்.

நாத்திகர்கள் என்னைக்காவது அவர்களுக்குள் அடிச்சிக்கிறது உண்டா?



ட்ராட்ஸ்கியை போட்டுதள்ளிய ஸ்டாலின், தன் கட்சிகாரர்களை ஆட்டொ அனுப்பி அடித்த ஸ்டாலின், மாவோ, போல்பாட் எல்லாம் நாத்திகர்கள் தானே?

 

--
செல்வன்


Thevan

unread,
Oct 28, 2012, 12:19:34 PM10/28/12
to panbudan
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருக்கோவில் திருவிழா


இதனை திருக்கோவில் திருவிழா என்று குறிப்பிடுவதற்கு காரணம் உள்ளது. 

இங்கு வரும் மக்களுக்கு தேவர், ஒரு சுதந்திரப்போராட்ட வீரரோ, அரசியல்வாதியோ, ஆன்மீகவாதியோ  கிடையாது. அவரை முருகப்பெருமானின் மறு அவதாரமாகத்தான் காண்கிறார்கள்.  

அதோடு ஒரு காளியம்மன், மாரியம்மன் கோவில்களில் நடைபெறும் திருவிழாவைப் போலவே இந்த திருவிழா நடைபெறுகிறது. மொட்டையடித்தல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், ஜோதி தொடரோட்டம், விளக்குப் பூஜை போன்றவை காப்புக் கட்டி எடுக்கப்படுகிறது.

அதற்காக இங்கு வருபவர்கள் முழுக்க யோக்கியர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இங்கு வரும் கிராம மக்களில் எந்தவித கள்ளங்கபடமற்ற தன்மையையே காண முடிகிறது. 

பொதுவாக தேவர் ஜெயந்தி விழாவைப் பற்றி பலர் தவறாக எழுதுகிறார்கள். இங்கு வரும் மக்களில் பலர் அடாவடித்தனம் செய்கின்றனர் என்பது உண்மையே. ஆனால் மும்பையில் கணபதி ஊர்வலங்களை நடத்துபவர்களுடன் ஒப்பிட்டால் இவர்களின் அடாவடிக்கும் அதற்கும் வித்தியாசம் இல்லை என்றே தோன்றுகிறது. சாதிச்சாயம் பூசப்படுவதால் இது பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகிறது. 
Image1782.jpg
Image1788.jpg
Image1800.jpg
Image1803.jpg

Sampath Ramaswami

unread,
Oct 29, 2012, 12:51:44 PM10/29/12
to vall...@googlegroups.com
அன்புள்ள வேந்தன் அரசு அவர்களே!
’நாத்திக வெறி’ என்று கூறியிருக்க வேண்டும். ‘பேய்’ என்று சொன்னது தவறு
என்றே உணர்கிறேன். மன்னிக்கவும்.
சாருவாக்கர் போன்ற உண்மை நாத்திகர்கள் உண்மையைத் தான் தேடுவார்கள்.
மாற்று கருத்து கொண்டவர்களை புண்படுத்த மாட்டார்கள். அவர்கள் போற்றும்
கடவுளையும் பக்தி இலக்கிய நூல்களையும் இகழமாட்டார்கள்.
தேவர் பெருமான் ஜீவித்திருந்த காலத்தில் அப்படி புண்பட்ட உள்ளங்களுக்கு
ஓர் ஆறுதலாகத் திகழ்ந்தார்.
ஸம்பத்

> --
>
>
>

Thevan

unread,
Oct 31, 2012, 11:05:56 AM10/31/12
to panbudan
நண்பர்களே,

சார்ஜர் பழுது, பயணம், நண்பர்கள் சந்திப்பு காரணமாக தேவர் குருபூஜை தகவல்களை போட இயலவில்லை. விரைவிலேயே விவரங்களை எழுதுகிறேன்.


நாளை மதியம் 3 மணி முதல் 6 மணிவரை மதுரை மஹாத்மாகாந்தி நகர் பேரூந்து அருகே நண்பர்கள் சந்திப்பு நடக்கிறது எனது எண் 9655155825.

தஞ்சை சந்திப்புக திருச்சியிலேயே நடைபெறும். சென்னைச் சந்திப்பு திட்டமிட்டபடியே நவம்பர் 11ம் தேதி நடைபெறும். 

நன்றி

Thevan

unread,
Nov 1, 2012, 1:30:14 PM11/1/12
to panbudan
திருவிழாவில் விற்கப்படும் தேவர் சிலைகள். 

தேவர் சிலைகளை எடுத்துச் செல்லும் சிறுவர்கள்.
Image1819.jpg
Image1851.jpg
Image2038.jpg

Thevan

unread,
Nov 3, 2012, 5:31:50 AM11/3/12
to panbudan
அமெரிக்கன் பள்ளியில் படிக்கும்போது முத்துராமலி்ங்கத் தேவர் சகமாணவர்களுடன் எடுத்துக்கொண்ட படம். படத்தில் வலமிருந்து மூன்றாவதாக அமர்ந்திருப்பவர் தேவர், நான்காவதாக அமர்ந்திருப்பவர் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் தந்தை சூரிய நாராயணா. படத்தை வழங்கியவர் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன்.
thevar.jpg

Thevan

unread,
Nov 4, 2012, 8:56:04 PM11/4/12
to panbudan
சிலா குத்துதல் என்ற வீர விளையாட்டு / நடனம்

பசும்பொன் திருவிழாவில் நான் கண்ட நிகழ்வுகளில் ஒன்று சிலா குத்துதல் அல்லது கம்பி குத்துதல்.

இதில் விலா எலும்புகளின் மேலே தோலில் ஒரு சிறு கத்தியின் உதவியுடன் கம்பிகளை சொருகுகின்றனர். பின்னர் எண்ணெய் விட்டு அந்த கம்பிகளை முன்னும் பின்னும் இழுத்து சரி செய்கின்றனர். பின்னர் முன்புறம் உள்ள கம்பிகளை ஒரு கயிற்றால் கட்டி அதனை கழுத்தைச் சுற்றி கட்டிக் கொள்கின்றனர். ஒவ்வொருக்கும் பல வருடங்கள் குத்திய அனுபவம் உள்ளது.

அதன் பின் மேளத்திற்கேற்ப நடனமாடுகின்றனர். இந்த வழக்கம் தஞ்சையைச் சுற்றியுள்ளவர்களுக்கு சாதாரணமானதே என்கின்றனர். பசும்பொன்னில் நடனமாடியவர்கள் இந்துக் கள்ளர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். 
Image1865.jpg
Image1900.jpg
Image1867.jpg
Image1868.jpg
Image1869.jpg
Image1870.jpg
Image1871.jpg
Image1873.jpg
Image1898.jpg
Image1899.jpg

Thevan

unread,
Nov 5, 2012, 9:40:02 PM11/5/12
to panbudan
தேவர் ஜெயந்தியின்போது மொட்டை அடித்துக் கொள்பவர்கள்
Image1920.jpg

Thevan

unread,
Dec 4, 2012, 11:42:30 AM12/4/12
to panb...@googlegroups.com
வருடம் தோறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையில் ஒரு இஸ்லாமிய பெரியவரைப் பார்க்கலாம். அவரின் பெயர் ஏ.ஓ. முகமது இப்ராஹிம். 86 வயதாகும் இவர் அருப்புக்கோட்டை நல்லூர் பள்ளிவாசல் ரோட்டில் வசிப்பவர் ஆவார். 

இவர் தேவருடன் 15 ஆண்டுகள் அரசியல் சமுதாயப்பணிகள் செய்தவர் ஆவார். இவர் பாரத தாயின் வீரத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற சிறு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் தேவர் மீசையை எடுத்ததற்கான காரணத்தை எழுதியுள்ளார். ஒருமுறை தேவரைப் பார்த்த ஒரு பெண் தேவரின் மீசை எவ்வளவு அழகாக இருகிறது என்று தேவரின் காதுபட பேசுகிறார். 

அதைக் கேட்ட தினமே தேவர் தன் தோற்றம் எந்த பெண்ணையும் கவரும்படி இருக்கக் கூடாது என்று கூறி மீசையை எடுத்து விட்டார் என்ற தகவலை இவர் பதிவு செய்திருக்கிறார். 


இவர், சாதி மத வேறுபாடு இல்லாமல் இருந்த மக்களை காங்கிரஸ் எவ்வாறு சாதி மதத்திற்குள் தள்ளியது என்று காங்கிரஸின் அரசியலை சாடுகிறார். 

இவரது பேட்டியை பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

-----------------------------------------------------------------
பசும்பொன்னில் அந்த பெரியவருடன் நான் எடுத்துகொண்ட படம்
Image1828.jpg

DEV RAJ

unread,
Dec 5, 2012, 11:48:59 AM12/5/12
to வல்லமை
On Dec 4, 9:42 pm, Thevan <apthe...@gmail.com> wrote:
வருடம் தோறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையில் ஒரு
இஸ்லாமிய
பெரியவரைப் பார்க்கலாம். அவரின் பெயர் ஏ.ஓ. முகமது இப்ராஹிம். 86
வயதாகும்
இவர் அருப்புக்கோட்டை நல்லூர் பள்ளிவாசல் ரோட்டில் வசிப்பவர் ஆவார் -

http://www.youtube.com/watch?v=NZam6K_swMw

>  Image1828.jpg
> 278KViewDownload

வேந்தன் அரசு

unread,
Dec 5, 2012, 9:36:35 PM12/5/12
to vall...@googlegroups.com


27 அக்டோபர், 2012 10:39 pm அன்று, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> எழுதியது:


நாத்திகமும் பகுத்தறிவு வாதமும் ஒன்றல்ல


ஒப்புக்கொள்கிறேன்

கடவுள் என்ற கொள்கையால் என்ன நன்மைகள் என ஆய்வதும் பகுத்தறிவே.
 

வேந்தன் அரசு

unread,
Dec 5, 2012, 9:37:50 PM12/5/12
to vall...@googlegroups.com


28 அக்டோபர், 2012 12:12 pm அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:



2012/10/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
நாத்திக பேய்.

நாத்திகர்கள் என்னைக்காவது அவர்களுக்குள் அடிச்சிக்கிறது உண்டா?



ட்ராட்ஸ்கியை போட்டுதள்ளிய ஸ்டாலின், தன் கட்சிகாரர்களை ஆட்டொ அனுப்பி அடித்த ஸ்டாலின், மாவோ, போல்பாட் எல்லாம் நாத்திகர்கள் தானே?

 

ஏன் அடித்து தள்ளினார்.  அவர்கள் நாத்திகம் சரியில்லை என்றா?

--
 
 

செல்வன்

unread,
Dec 5, 2012, 9:53:36 PM12/5/12
to vall...@googlegroups.com


2012/12/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

ஏன் அடித்து தள்ளினார்.  அவர்கள் நாத்திகம் சரியில்லை என்றா?


அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள் என சொல்லி.

ஷியாக்கள் போலி முஸ்லிம்கள் என சொல்லிதான் பின்லேடன் பாகிஸ்தானில் ஷியா மசூதிகளில் குண்டுவைத்து கொண்டிருந்தான்

வேந்தன் அரசு

unread,
Dec 6, 2012, 8:27:27 AM12/6/12
to vall...@googlegroups.com


5 டிசம்பர், 2012 9:53 pm அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:



2012/12/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஏன் அடித்து தள்ளினார்.  அவர்கள் நாத்திகம் சரியில்லை என்றா?


அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள் என சொல்லி.

அப்போ அவர்கள் நாத்திகர்கள் என்ற காரணத்தால் அடிச்சிகிடலைதானே.
 

Thevan

unread,
Jul 2, 2013, 9:49:25 AM7/2/13
to panbudan
thevar spritual march.JPG

Thevan

unread,
Jul 3, 2013, 6:29:18 AM7/3/13
to panbudan

தேவர் குருபூஜையை அமைதியாக நடத்தக் கோரும்

ஆன்மீக நடைபயணம்

பாசத்திற்குரிய உறவினர்களே, அன்புக்குரிய நண்பர்களே, மரியாதைக்குரிய பெரியோர்களே!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 30ம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு குருபூஜை நடத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. அண்மைக் காலமாக இந்த குருபூஜையின்போது விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

எனவே இந்த குருபூஜையை அமைதியாக நடத்த வேண்டுகோள் விடுத்து, அந்த தேவர் பெருமகனார் மற்றும் பெரியோர்களின் நல்லாசியுடன் ஆன்மீக நடைபயணம் நடத்த திட்டமிட்டுள்ளேன். ஆகஸ்டு 15ம் தேதி பசும்பொன்னில் ஆரம்பிக்கும் இந்த பயணம் தென் மாவட்டங்கள் வழியாக சென்று இறுதியில் பசும்பொன்னில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தென்காசி, சங்கரன் கோவில், ராஜபாளையம், சிவகாசி, வத்திராயிருப்பு, பேறையூர், திருமங்கலம், மதுரை, உசிலம்பட்டி, தேனி, பெரியகுளம், வத்தலக்குண்டு, திண்டுக்கல், பழனி, கரூர், திருச்சி, கும்பகோணம், நாகபட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களின் வழியே செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பயணத்திற்கான வழித்தடங்களை தீர்மானிக்க அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தோர் ஆலோசனை வழங்கி உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பயணத்தில் தேவர் குருபூஜைக்கு வருவோருக்கு தேவரைப் பற்றிய விழிப்புணர்வும், பூஜைக்கு அமைதியாக வந்து செல்ல வேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தப்படும். இந்த பயணத்திற்கு அனைவரும் நல்லாதரவு தருமாறு கோருகிறேன். இந்தப் பயணம் பற்றி அதிகம் அறிய விரும்புவோர் 9047440542 என்ற எண்ணில் என்னை தொடர்புகொள்ளலாம்.

இப்படிக்கு

உங்கள் அன்பன்

அ. பெருமாள் தேவன்

Thevan

unread,
Feb 22, 2014, 10:18:01 PM2/22/14
to panbudan
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் “தேவர் சேர்” சார்பில் 2014 மார்ச்
14, 15, 16 தேதிகளில் “இந்தியாவில் சீர் மரபினரின் (டிஎன்டிகள்) சமூக,
பொருளாதார மற்றும் அரசியல் நிலையின் கள ஆய்வு மற்றும் டிஎன்டிகளின்
உரிமைகள் மற்றும் நலனில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு” என்ற
தலைவில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது.

விருப்பமுள்ளவர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்று தங்களது ஆய்வுக்
கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். இணைக்கப்பட்டுள்ள படத்தில் தேவர் சேரின்
இயக்குனர், துணை இயக்குனரின் தொடர்பு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1902736_535434779902958_217836590_n.jpg

Thevan

unread,
Mar 9, 2014, 11:29:33 PM3/9/14
to panb...@googlegroups.com
இதை நம்புவதை உங்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்...

இன்று நான் நடை பயிற்சி சென்று திரும்பியதும், இங்கே வாருங்கள், ஒரு
விஷயம் சொல்கிறேன் என்று படுக்கையில் அமரச் சொன்னார். அதை உங்களால் நம்ப
முடியாது என்று சொன்னார்.

நானும் என்னவென்று கேட்டேன்.

இன்று என் கனவில் யானைக் குட்டி என் மடி மீது தலைவைத்துப் படுத்துக்
கொண்டது. எனக்கு ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் அதன் நட்பு எனக்கு அந்தப்
பயத்தை போக்கியது. இப்படி நான் நினைத்துக் கொண்டிருக்கும்போது அது
தலையைத் தூக்கி என்னைப் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டது.

என் மனைவியின் கனவில் அடிக்கடி யானை வருவது, அதைக் கண்டு அவர் பயந்து
ஓடுவது. சில நேரங்களில் யானை ஆசி வழங்குவது என்பது அவருக்கு தொடர்ச்சியாக
வரக் கூடியதுதான். அதனால் நான் இதை பெரிது படுத்தவில்லை.

மேலும் அவர் சொன்ன கனவுதான் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதாவது சிறிது நேரத்தில் என் உறவுக் காரப் பெண்கள் ஏதோ சச்சரவில்
ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். என் மனைவியும் தன் பங்கிற்கு சச்சரவில்
ஈடுபட்டுள்ளார்.

அப்போது திடீரென, “யாரோ வானத்திலிருந்து வந்திருப்பதாக“ பெண்கள் பேசிக்
கொள்ள ஆரம்பித்தனர். இவரும் சென்று பார்த்தார்.

தேவர் வெள்ளை நிற ஜிப்பா வேட்டியில் வந்துகொண்டிருந்தார். அவரது முகம்
ஒளிரக் கூடியதாக இருந்தது. அவரோடு நீல நிறச் சட்டையில் ஒருவர் வந்து
கொண்டிருந்தார். பெண்கள் அனைவரும் அவரை வணங்கினர்.

என் மனைவி எனது இரு குழந்தைகளுடன் அங்கே நின்று அவரை வணங்கினார். என்
இளைய மகனிடம், “ஐயா வணக்கம்” என்று சொல் என்று சொல்கிறார்.

அவனும், “ஐயா வணக்கம்” என்று சொல்கிறான்.

உடனே, தேவர் “நீ பெருமாள் தேவனின் மகன்தானே? நல்லா இருப்பீர்கள்” என்று
ஆசீர்வதித்து விட்டுச் சென்றார்.

இதுதான் என் மனைவிக்கு இன்று காலையில் தோன்றிய கனவு.

இதில் எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பு தேவர் எனக்கு கனவில் தோன்றினார் என்று நான் சொன்னபோது என்
மனைவியால் அதை நம்ப முடியவில்லை.
16.jpg

Thevan

unread,
May 10, 2014, 10:35:16 PM5/10/14
to panb...@googlegroups.com
தேவர் குருபூஜையை அமைதியாக நடத்த சமுதாயத் தலைவர்கள், காவல்துறை
அதிகாரிகள் அடங்கிய ஒரு விழாக் குழுவை அமைக்க வேண்டும் என்று
முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தேன்.

அந்த மனு மீது தக்க நடவடிக்கை எடுக்க கூறி முதலமைச்சரின் தனிப்பிரிவு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளது. அதனை தெரிவிக்கும்
கடிதம்தான் இது.
Graphic1.JPG
Graphic2.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages