மறதி - பொச்சாவாமை என்ற கருவி.

1,112 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 13, 2014, 1:16:28 AM3/13/14
to mintamil, vallamai editor, vallamai, maza...@googlegroups.com, தமிழ் மன்றம், muththamiz, housto...@googlegroups.com, A K Rajagopalan, Subashini Tremmel, Jothi Themozhi, Megala Ramamourty, Nagarajan Vadivel, rajam ramamurti, Geetha Sambasivam, பார்வதி இராமச்சந்திரன்., revathi narasimhan
மறதியைப் பற்றி நாம் வேடிக்க்கையாகப் பேசிக்கொண்டாலும் வள்ளுவம் அதனைச் சோம்பலின் இணை என்கிறது.
ஒருவன் கெட்டுப்போக வேண்டுமென்றால் தள்ளிப்போடுவதை,மறதியை,சோம்பலை, விரும்பிக் கைக்கொள்வானாம்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்  (திரு 604)

மேலும் மறதியைக் கடிவதற்காகவே “பொச்சாவாமை” என்ற அதிகாரமே எழுதியுள்ளார். பொச்சாவாமை என்ற சொல்லே இப்போது புழக்கத்தில் இல்லை. மகிழ்ச்சியால் காரியத்தை மறத்தல் (ஒரு வகை காம்பளசன்சி) அல்லது பொதுவாக ஆற்ற வேண்டிய செயலை மறத்தல் என்று பொருள்கொள்ளலாம்.  “பொச்சாவாமை” அதிகாரத்தில் உள்ள குறட்பாக்கள் பேச்சாளர்களால் அதிகம் சொல்லப்படாதவை. ஆனால் ஒவ்வொருவரும் படித்துணர்ந்து போற்ற வேண்டியவை.

பொச்சாப்பு கொல்லும் புகழை (532)
வெகுளியின் தீதே (531)
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு (533)
பொச்சாபு உடையார்க்கு அரண்(பாதுகாப்பு) இல்லை (534)
நினைவோடு முன்னே தடுக்காது மறந்தவன் தன் பிழைக்குப் பின்னே வருந்துவான். (535)
வழுக்காமை ஒப்பது இல். (அது போன்ற ஆற்றல் வேறில்லை.) (536)
(புகழ்தரும் வினைகளை மறந்துவிடாது) புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் (538)
மகிழ்ச்சியால் மறந்திருக்கும்போது அது போன்று இருந்து கெட்டுப்போனவர்களை எண்ணிப் பார். (539)
உள்ளியது எய்தல் எளிது! எப்பொழுது? எண்ணியைதை மறவாதே எண்ணிக்கொண்டிருந்தால்! (பல பேர் என்ன எண்ணினோமென்பதயே மறந்து நோக்கத்தைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள். (540)

இறுதியாக மறவாமை என்பது வள்ளுவர் தரும் கருவி. அக்கருவியைக் கைக்கொண்டால் ஆகாத காரியம் இல்லை.(537)

நம் மறதியைப் பற்றி நாமே வேடிக்கையாகப் பேசுவதும் நாம் மனதில் வெட்கம்கொண்டு அதனைக் கைவிட வேண்டுமென்ற உளவியல் எண்ணமே!
நண்பர்கள் தங்கள் கருத்துக்களை எழுதங்கள்.
நன்றி
சொ.வினைதீர்த்தான்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 13, 2014, 3:38:58 AM3/13/14
to mintamil, vallamai editor, vallamai, maza...@googlegroups.com, தமிழ் மன்றம், muththamiz, housto...@googlegroups.com, A K Rajagopalan, Subashini Tremmel, Jothi Themozhi, Megala Ramamourty, Nagarajan Vadivel, rajam ramamurti, Geetha Sambasivam, பார்வதி இராமச்சந்திரன்., revathi narasimhan
மதிப்பிற்குரிய நண்பரொருவர் தனி மடலில் இறப்பு, இறப்பினால் வருகிற துயரத்தை மறத்தல், நீரினில் மூழ்கி நினைப்பொழிதல் பற்றியும் ஒருவர் செய்த தீமையை மறத்தல் என்பது பற்றியும் பிறவும் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு என் பதிலில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நான் எண்ணுகிற பகுதியை நண்பர்கள் பார்வைக்கு மறதி பற்றிய விளக்கமாக கீழே கொடுத்துள்ளேன்.

1.மறதி என்பது ஒரு வகையில் காலம் தருகிற பெருங்கொடை. அசுவத்தாமன் உப பாண்டவர்களைக் கொன்ற பின் குற்ற உணர்வு வாட்ட நாடு,வனாந்தரமெல்லாம் சுற்றித் திரிந்ததாக வி.எஸ். காண்டேகர் ஒரு கதை எழுதியிருப்பார். அசுவத்தாமன் சிரஞ்சீவி வேறாயிற்றே. அவனுக்கு உய்வில்லை.

2.நான் சொல்ல வந்த மறதி என்பது குறிப்பது வேறு.வள்ளுவர் கூறுகிற பொச்சாவாமை என்பது ஆற்ற வேண்டிய பணியைச் சோம்பல் அல்லது complacency போன்றவற்றால் ஆற்ற மறத்தல் என்பது. 

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். (483)

அவர் சொல்கிற கருவி என்பது யாது? வள்ளுவர் சூத்திரங்களுக்கு வள்ளுவத்திலேயே விடைகளும் வைத்திருப்பார். பொச்சாவாமை ஒரு கருவி என்பதைகுறட்பா 537ல் விளக்குகிறார்.

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியான் போற்றிச் செய்யின். (537) 

என்னுடைய பயிற்சிகளில் பல காட்டுகளுடன், நற்கதைகளுடன் ஆற்ற வேண்டிய செயல்களை மறவாது செய்தால் நோக்கம் நிறைவேறுமென்ற செய்தியைப் பகிர்ந்துகொள்கிறேன்


அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Mar 13, 2014, 5:34:27 AM3/13/14
to tamilmanram kuzhu, mintamil, vallamai editor, vallamai, maza...@googlegroups.com, muththamiz, housto...@googlegroups.com, A K Rajagopalan, Subashini Tremmel, Jothi Themozhi, Megala Ramamourty, Nagarajan Vadivel, rajam ramamurti, Geetha Sambasivam, பார்வதி இராமச்சந்திரன்., revathi narasimhan
'பொச்சாப்பு' என்பது புகழ்/பதவி மயக்கத்தால் ஆற்ற  வேண்டிய பணிகளை மறந்து புறக்கணித்து ஆற்றாதிருத்தல் என்பதே சரியாகும்.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

வேந்தன் அரசு

unread,
Mar 13, 2014, 6:39:04 AM3/13/14
to vallamai, tamilmanram kuzhu, mintamil, vallamai editor, maza...@googlegroups.com, muththamiz, housto...@googlegroups.com, A K Rajagopalan, Subashini Tremmel, Jothi Themozhi, Megala Ramamourty, Nagarajan Vadivel, rajam ramamurti, Geetha Sambasivam, பார்வதி இராமச்சந்திரன்., revathi narasimhan

>> பொச்சாவாமை என்ற சொல்லே இப்போது புழக்கத்தில் இல்லை. மகிழ்ச்சியால் காரியத்தை மறத்தல் (ஒரு வகை காம்பளசன்சி) அல்லது பொதுவாக ஆற்ற வேண்டிய செயலை மறத்தல் என்று பொருள்கொள்ளலாம்.  “


ஐயா நீங்க எதிர்மறை சொல்லுக்கு நேர் மறை பொருளை  தந்துள்ளீர். பொச்சுதலுக்குதான் இவை பொருந்தும்

பொச்சினீரோ?

வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 13, 2014, 7:20:42 AM3/13/14
to vallamai, tamilmanram kuzhu, mintamil, vallamai editor, maza...@googlegroups.com, muththamiz, housto...@googlegroups.com, A K Rajagopalan, Subashini Tremmel, Jothi Themozhi, Megala Ramamourty, Nagarajan Vadivel, rajam ramamurti, Geetha Sambasivam, பார்வதி இராமச்சந்திரன்., revathi narasimhan
2014-03-13 15:04 GMT+05:30 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:
'பொச்சாப்பு' என்பது புகழ்/பதவி மயக்கத்தால் ஆற்ற  வேண்டிய பணிகளை மறந்து புறக்கணித்து ஆற்றாதிருத்தல் என்பதே சரியாகும்.

நன்றி ஐயா.
அன்புடன் 
சொ.வினைதீர்த்தான். 

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 13, 2014, 7:25:26 AM3/13/14
to vallamai, tamilmanram kuzhu, mintamil, vallamai editor, maza...@googlegroups.com, muththamiz, housto...@googlegroups.com, A K Rajagopalan, Subashini Tremmel, Jothi Themozhi, Megala Ramamourty, Nagarajan Vadivel, rajam ramamurti, Geetha Sambasivam, பார்வதி இராமச்சந்திரன்., revathi narasimhan
நன்றி திரு வேந்தன்.
நண்பர்களுடன் உரையாடும்போது தெளிவு ஏற்படுகிறது.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 13, 2014, 11:15:53 AM3/13/14
to mintamil, vallamai editor, vallamai, maza...@googlegroups.com, தமிழ் மன்றம், muththamiz, housto...@googlegroups.com, A K Rajagopalan, Subashini Tremmel, Jothi Themozhi, Megala Ramamourty, Nagarajan Vadivel, rajam ramamurti, Geetha Sambasivam, பார்வதி இராமச்சந்திரன்., revathi narasimhan

2014-03-13 17:56 GMT+05:30 Vanakkam Subbu <subb...@gmail.com>:

செயல்படவேண்டியவர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று, மறதியில்லாமை. சிறு சிறு விஷயங்களிலும் கவனத்தோடு செய்தால்தான் முயற்சிகள் கைகூடும். ஆனால் பல்வேறு காரணங்களால் மறதி என்பது ஏற்பட்டு விடுகிறது.

எனவே, அலட்சியமாக இல்லாமல் எதிலும் கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த அதிகார

தன்உருவம், கல்வி, அழகு, அதிகாரம், பதவிச் செருக்கு முதலிய காரணங்களால் ஒவ்வொரு மனிதனுக்கும் இறுமாப்பு வந்து விடுகிறது.

பெரும் மகிழ்ச்சியால் வரும் மறதி, கடுங்கோபத்தால் வரும் தீமையினும் அதிகமான கேடு செய்யும் என்பது குறள் கூறும் கருத்து.

கடுங்கோபத்தால் ஒருவன் மற்றொருவனுக்கு அழிவு செய்து விடுகிறான். ஆனால் மறதியினால் தனக்குத் தானே கேடு செய்து கொள்கிறான். அதனால், மறதி தனக்கே கேடு செய்வதாக முடிகிறது. எனவே, இதுதான் பெரும் தீமை என்கிறார் வள்ளுவர்.

பூஜய ஸ்ரீ ஓங்காரனந்தா அவர்களின் பதிவைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி திரு சுப்பு.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

i

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 13, 2014, 11:34:22 AM3/13/14
to தமிழ் மன்றம், mintamil, vallamai, iraa...@bsnl.in

2014-03-13 17:57 GMT+05:30 iraamaki <iraa...@bsnl.in>:
மறவு (அல்லது மறப்பு) என்பதன் எதிர்ச்சொல் மறவாமை.  இதுபோலத் திறவு (அல்லது திறப்பு) x திறவாமை.
 
அப்படித்தான் பொச்சாவு (அல்லது பொச்சாப்பு) என்பதன் எதிர்ச்சொல்லாக பொச்சாவாமை இருக்கமுடியும்.
 
பொச்சாப்பு என்ற சொல்லிற்கு என்ன பொருள்? 
 
 அந்தச் சொல்லின் சொற்பிறப்பு என்ன?
 
இதைத் தெளியவைத்தால் நன்றியுடையனாய் இருப்பேன்.
 
அன்புடன்,
இராம.கி.
 
தங்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் பொச்சாப்பு சொல்லின் சொற்பிறப்பு. பொருள் அறிய ஆவல்.
இலக்கியங்களில் பொச்சாப்பு, பொச்சாவாமை பயன்பாடு அறியவும் விருப்பம்.
நன்றியுடன்
சொ.வினைதீர்த்தான். 

N. Ganesan

unread,
Mar 16, 2014, 11:31:55 AM3/16/14
to mint...@googlegroups.com, vallamai, karuannam annam, thami...@googlegroups.com, Banukumar Rajendran
வினைதீர்த்தான் ஐயா,

பொச்சாப்பு என்றால் மறதி என்ற பொருள் முதன்மையில்லை.

இகழ்ச்சி, உள்ளீடற்ற இகழ்ச்சி என்ற பொருளைப் பொச்சாப்பு என்ற சொல்லின் வேரியல் காட்டுகிறது.
பொக்கு/பொச்சு என்றால் ஓட்டை, உள்ளீடு. பொக்கணம் - பை, சாமியார், சிவன் திருநீற்றுப்பை (தேவாரம்).
இதனைப் பிராகிருதமொழியில் புக்கா என்பர். புச்சா என்றால் வடமொழியில் வால் ‘tail'. திராவிடமொழி
வடமொழிகளுக்குத் தந்த சொல் புச்சை (=வால்) (pucchaa, near pokku/poccu). பொக்கு/பொச்சு - ககரம் சக்ரமாக
மெலிதல் த்ராவிடமொழிகளில் காணலாம்: உ-ம்: மூக்கு/மூச்சு, etc. etc., பொக்கு/பொச்சு என்றால் ஓட்டை, உள்ளீடு
பொக்கு/பொச்சு + ஆப்பு = பொச்சாப்பு. மயிலாப்பூரின் பழைய பெயர் மயிலாப்பு (தேவாரம் காண்க).
மயிலாப்பு = மயில் ஆர்ந்த இடம். அதுபோல், பொச்சாப்பு = இகழ்ச்சி.

கொங்குவேளிர் தன் பெருங்கதையில் குறிப்பிட்டதை சுப்பு தந்தார்:

பட்டாங் குணர்ந்து முட்டாங் கியற்றி
          உணரா தான்போல் ஒருமீக் கொற்றவன்
          புணரா தார்முற் பொச்சாப் பஞ்சி
          வணங்குகொடி மருங்குல் வாசவ தத்தையைப்
          பயந்தினி தெடுத்த பத்தினித் தெருட்டி    இலாவாண காண்டம்

இங்கேம் பொச்சாப்பு = இகழ்ச்சி. வாசவதத்தை என்னும்
தன் பத்தினியுடன் மன்னன் தோல்விக்கப்புறம்
பகைவரின் இகழ்ச்சிக்கு அஞ்சி அரண்மனையுள் ஒடுங்கினான்
என்று பாடுகிறார் கொங்குவேள்.

திருக்குறள், கொங்குவேள் மாக்கதை, வச்சணந்திமாலை, நன்னூல்,
தொல்காப்பியத்து முதல் உரைகாரர் இளம்பூரணர் போன்ற தமிழ்ச்
சமண இலக்கியங்களில் பொச்சாப்பு, பொச்சாவாமை பயில்தலைப்
பாருங்கள்.

வச்சணந்தி மாலையிலும், இளம்பூரணர் உரையிலும் 
பெரிய நூல் கற்கத் தகுதியில்லா எண்மரைக் குறிப்பிடும்
விருத்தம் உள்ளது:

மடிமானி பொச்சாப்பன் காமுகன் கள்வன்
அடுநோய்ப் பிணியாளன் ஆறாச் சினத்தன்
தடுமாறு நெஞ்சத் தவனுள்ளிட் டோரெண்மர்
நெடுநூலைக் கற்க லாகா தாரே

இதில் பொச்சாப்பன் என்றால் பிறரை இகழ்பவன் என்று பொருள்.
அதுவும் பொக்கணமான இகழ்ச்சி.  மானி என்ற சொல்லின்
பின்னர் பொச்சாப்பன் என்று சமணமுனிகள் சொல்வதன் காரணமும்
நோக்குக.

பொச்சாவாமை - உள்ளீடற்ற இகழ்ச்சி செய்யாதிருத்தல்.

பொச்சாவாமை - இகழாமை என்ற பொருளுடன் படித்தால்
திருக்குறள் பொச்சாவாமை விளங்கும்

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.


பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.


இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.


உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்



திராவிட வேர்ச்சொல் அகராதியுடனும், பொச்சாப்பு பயில்கிற செய்யுள்களையும் நோக்கலாம்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Mar 16, 2014, 7:13:09 PM3/16/14
to தமிழாயம், மின்தமிழ், vallamai, karuannam annam, Banukumar Rajendran
இறந்த வெகுளியின் தீதே சிறந்த 
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.


இதுக்கு எப்படி விளக்கம் சொல்லுவீங்க?


16 மார்ச், 2014 11:31 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

N. Ganesan

unread,
Mar 17, 2014, 8:20:09 AM3/17/14
to mint...@googlegroups.com, தமிழாயம், vallamai, karuannam annam, Banukumar Rajendran
On Sunday, March 16, 2014 4:13:09 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த 
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.


இதுக்கு எப்படி விளக்கம் சொல்லுவீங்க?



பொச்சாப்பு என்ற வார்த்தையே இதனில்  இல்லையே.

சோர்வு - negligent, being careless, to disregard, weary, tired, dull.

பெரிய சினம் தீயது. அதை விடத் தீது
மகிழ்ச்சியாய் இருக்கையில் முக்கியமானதைக்
கவனிக்காமல் (disregard) பராமுகமாய் (neglect) இருத்தல்.
இச் சோர்வு - மறதியால் மாத்திரம் நிகழ்தல் அன்று.

சோர்வு - to disregard, to neglect என்ற பொருளில்:
ஏழைசொல் அம்பலம் ஏறாது:

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்

--------------

பொச்சாப்பு என்ற வார்த்தை வரும் இடங்களைப் பார்த்தால்
இது மேலும் விளங்கும்:

சிலப்பதிகாரம்:
வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர
நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ


கோவலன் தன்னையே இரங்கும் கூற்று இது.

ஆழ்ந்த பொருளை உடைய அறிவுரைகளை
இகழ்ந்தேன் என்கிறான் கோவலன்.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்


இக் குறளில் பொக்கு/பொச்சு = ஓட்டை/புரை/உள்ளீடு அற்ற நிலை
பேசப்படுகிறது. பாண்மை பேசி, பாணே பேசி - என்றெல்லாம்
பண்டை இலக்கியங்களில் வருகிறதே. அதனைச் செய்யார் 
என்னும் குறள்.

மருட்சி நீங்கிய அறிவின் தரிசனங்கண்ட பெரியோர்கள்
உள்ளீடற்ற இகழ்ச்சியான சொற்களை ஒருக்காலும் சொல்லமாட்டார்கள்.

N. Ganesan

unread,
Mar 17, 2014, 8:51:02 AM3/17/14
to mint...@googlegroups.com, vallamai, karuannam annam, Banukumar Rajendran
வேந்தன் ஐயா,

ஈழத்திலும், கொங்குநாட்டிலும் உள்ள தமிழ் வழக்குகளை
ஆராய்ந்தால் பொக்கம்/பொச்சம் - (பொச்சாப்பு) பொச்ச + ஆர்ப்பு = பொச்சாத்தல்,
வள்ளுவர் பொச்சாவாமை - உள்ளீடற்ற புரையான/ஓட்டையான/பொய்மையான இகழ்ச்சிச் செயல்
செய்யாதிருத்தல் வேண்டும் என அறிவுறுத்துகிறார் என விளங்கும்.

”You are the rock. I will build my church on this rock.' (நீ பாறையாய் இருக்கிறாய். இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்? என மத்தேயு சுவிசேஷத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தேவ வாக்கியம், இதனை எழுதும் பொழுது எனது நினைவுக்கு வருகின்றது. கிழக்கிலங்கை எழுத்தாளர், குழந்தைத் தனமான பொச்சடிப்புகளிலே காலட்சேபம் செய்யாது, இந்தக் கதைக் கோவை என்று பாறையிலே, கிழக்கிலங்கையின் கதை வல்லபங்கள் என்கிற கோயிலை சரியாக நிர்மாணித்து, சர்வதேசக் கதை அரங்கிலே, நமக்குரிய பங்கினையும் கௌரவத்தினையும் தக்க வைக்க வாருங்கள் என்று, என் மகனின் பிறந்த மண் பற்றின் பெயராலே கேட்டுக் கொள்ளுகின்றேன். ”

கொங்குநாட்டில் ”வாயடி பொச்சடி” என்பர், ஈழத் தமிழர் 2009-ல் கொல்லப்பட்டபோது,
இலங்கை இறைமிக்க நாடு, நிறைவேற்று அதிகாரம் உள்ள நாடு என்பதை முன்நிறுத்தி சமூக நீதியை படுகுழியில் புதைக்கின்றது. தமிழர் பகுதிகளுக்கு ஆகாய வளர்ச்சி மட்டத்திற்கு தக்க திட்டங்கள் உருவாக்கப்படும் உருவாக்கியுள்ளோம் என்று வாய் பொச்சடிப்பு செய்து ஏமாற்றி பிழைப்பதே இலங்கை அரசின் கொள்கை. நீதி என்ற பெயரினால் கண்துடைப்பு சட்டங்களை இயற்றி காலத்தை அயோக்கியமான முறையில் வீணடிக்கின்றது.

”பொச்சாவாமையுடன் இரு” என்று மருதத்திணை ஊரனின் தலைவி பாணனிடம் சொல்கிறாள்.
தலைவனைத் திருத்த முடியலை, எனவே அவனுக்குப் பரத்தையைக் கூட்டுவிப்போனைக் கடியும் பாடலிது.
வாத்யார் சுஜாதா இப்பாடலுக்கு இன்றைய தமிழில் உரை சொல்லியுள்ளார்:
"விளக்கைப்  போலச் சுடர்விடும் தாமரை
யானைக்காதைப் போன்ற அதன் பச்சைஇலை
கொண்ட குளத்தில் வாளை மீன்கள் துள்ள
அதைக்கண்டு பயப்படும் பெண்கள் கொண்ட  ஊரனுக்கு
தினம் ஒரு பெண் கேட்கிறதோ? முட்டாள் பெண்ணே!
எப்போதும் பொய்பேசுமே உன் நாக்கு!
அந்தப் பரத்தையரின் தாய்களோடு பேசி மயக்கவில்லையோ!
ஆண்கன்றை அவசரமாக உரித்துத் தின்னும்
பாணன் கையில் உள்ள மத்தளம் போல
உள்ளே எதுவும் இல்லாத போர்வை  உன் பேச்சு!"

பரணர் பாடலில் சொல்லிய  பரத்தர் கூட்டுறவுடன் பொச்சாப்புடன் வாழ்ந்தேன் என்று கவலைப்படுகிறான்
கோவலன்:
வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர
நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ

இவ்வாறு உள்ளீடற்ற ஓட்டையான இகழ் வாழ்வு வாழாமல்
இருக்க பொச்சாவாமை அதிகாரம் செய்துள்ளார் வள்ளுவர்.

இன்றும் வழக்கில் உள்ள பொச்சம், பொச்சடி, என்ற சொற்களுடன்
ஆராய்ந்தால் பொச்சாப்பு/பொச்சாத்தல், பொச்சாவாமை புரியும்.
மறதி என்பது பொச்சாத்தலின் முதன்மைபொருள் இல்லை என்பதறியலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 17, 2014, 9:00:21 AM3/17/14
to mint...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com


On Wednesday, March 12, 2014 10:16:28 PM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
மறதியைப் பற்றி நாம் வேடிக்க்கையாகப் பேசிக்கொண்டாலும் வள்ளுவம் அதனைச் சோம்பலின் இணை என்கிறது.
ஒருவன் கெட்டுப்போக வேண்டுமென்றால் தள்ளிப்போடுவதை,மறதியை,சோம்பலை, விரும்பிக் கைக்கொள்வானாம்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்  (திரு 604)


மறவி என்பதும், மறதி என்பது வெவ்வேறான சொற்கள்.
இளம்பூரணரமும், நிகண்டுகளும் விளக்கியுள்ளன.
பொச்சாப்பு = மறவி 
பொச்சாப்பு மறதி அன்று. சொல்லாய்வாலும் சொல்லலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 17, 2014, 3:38:41 PM3/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Monday, March 17, 2014 12:16:32 PM UTC-7, Dev Raj wrote:
On Monday, 17 March 2014 06:00:21 UTC-7, N. Ganesan wrote:
மறவி என்பதும், மறதி என்பது வெவ்வேறான சொற்கள்.
 

தவறு.

சங்க இலக்கியம் மறவியை மறதி எனும்
பொருளில் கூறியுள்ளதைக் காணலாம் -


Not really. maRavi & maRati are not identical
in Tamil literature.

N. Ganesan

N. Ganesan

unread,
Mar 17, 2014, 9:50:07 PM3/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com

அறம்:அறவி & மறம்:மறவி

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 
கெடுநீரார் காமக் கலன் - குறள்

Long delay, Negligence, Laziness, Sleep 
- these four are Pleasure Boats of Loss

"பொச்சாப்பு எனினும் மறவி எனினும் இகழ்ச்சி எனினும் ஒக்கும்." - மணக்குடவர்.

“பொச்சாப்பாவது : காதற்காமச் சிறப்பிற்குரிய, சொற்செயல்களின்பால்
கடைப்பிடியின்றி   நெகிழ்ந்து  விடுதல். இது  நிறுத்த  காமவாயிற்கு ஊறு
செய்வதாகலின்   விலக்கப்பட்டது.  பொச்சாப்பு  எனினும் மறவி எனினும்
ஒக்கும்.” - ஆராய்ச்சிக் காண்டிகையுரை.

அச்ச முடையார்க் கரண்இல்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

"அரண் அச்சம் உடையார்க்கு இல்லை - காடு மலை முதலிய அரண்களுள்ளே 

நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை, ஆங்கு 

நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை - அதுபோலச் செல்வமெல்லாம் 

உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் 

இல்லை. (நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் 

அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் 

என்பதாயிற்று.)"
               - பரிமேலழகர்

நற்றிணை 70, வெள்ளி வீதியார்,  
மருதம் திணை – தலைவி சொன்னது
"எம் ஊர் வந்து எம் உண்துறைத் துழைஇ
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி
அனைய அன்பினையோ பெரு மறவியையோ"
அன்பினை - அன்பினை உடையாயோ! (with love for me)
மறவியை - மறவி உடையாயோ (neglecting my suffering).

பொச்சாப்பு, இகழ்ச்சி, சோர்வு, மறப்பு/மறதி - போன்றவற்றின் முதற்பொருள்கள்
வேறு. ஆனால், அவற்றுடன்  disregard, neglect, slight, disdain
போன்ற இரண்டாம்நிலைப் பொருள்களும் வரும். அப் பொருள் ஏற்கும்போது
மறவி என்னும் தமிழ்ச் சொல்லின் அர்த்தம் ஏற்பன அவை. கலத்தல்/கலப்பு என்பதற்கும், கலவி என்பதற்கும் வேறுபாடு உண்டு. அதேபால், உழத்தல் வேறு; உழவு (< உழு-)வேறு அல்லவா?  மறவி என்பதும், மறப்பு (மறதி) என்பதும்
வெவ்வேறான தாதுவேர்கள் கொண்டவை. எனவே, மறவி என்று தமிழ் இலக்கியத்தில் வரும் இடத்தில் எல்லாம் மறதி என்று போட்டால், 
தமிழ்ப் பாட்டின் சுவை அழியும்.

அறம் என்ற பெயர்ச்சொல் அறு- என்ற வினையில் பிறக்கும். 
அறத்திலிருந்து தோன்றுவது அறவி ‘dharmic' (அறஆழி - அருகனின் தர்மசக்கரம்)
அறவியங்கிழவோன் aṟavi-y-aṅ-kiḻa- vōṉ, n. 
< அறவி +. Buddha, as  wedded to virtue; புத்தன்

அறவிய மனத்தர் அன்றி (சூளா. தூது. 91).

அதேபோல், மறம் (< மறு-) என்ற சொல்லில் பிறப்பது மறவி (= disregard,
neglect, to show disdain, to be thoughtless, ...)
மறவிய மனிதன் = negligent person.

மறத்தல் (cf. மறை-) மறப்பு/மறதி என்றாகிறது.
மறவுதல் (cf. மறம் < மறு-) மறவி என்ற சொல்லைத் தருகிறது.
எனவே, மறவியும் (neglect, disregard. disdain, to be oblivous,
to be thoughtless), மறதியும் ஒன்றல்ல.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Mar 18, 2014, 8:29:40 AM3/18/14
to தமிழாயம், மின்தமிழ், vallamai
negligence = பொச்சாப்பு சாலப்பொருந்தும்


17 மார்ச், 2014 9:50 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

தேமொழி

unread,
Mar 18, 2014, 1:18:28 PM3/18/14
to mint...@googlegroups.com, vallamai

பொச்சாப்பு = கவனக்குறைவு

அறிந்திருந்தும், தெரிந்திருந்தும், செய்யவேண்டிய கடமை நினைவில் இருந்து மறைந்துவிடுதல்

பொச்சாவாமை = கவனக்குறைவு இல்லாமை

(நான் புரிந்து கொண்டது)

..... தேமொழி

வேந்தன் அரசு

unread,
Mar 18, 2014, 9:24:10 PM3/18/14
to vallamai, மின்தமிழ்



18 மார்ச், 2014 1:18 பிற்பகல் அன்று, தேமொழி <them...@yahoo.com> எழுதியது:
சரியாகவே.

மறதி என்பது நினைவை விட்டு அகன்றது
பொச்சாப்பு= அது கிடக்குது எனும் ஆணவம்

 

N. Ganesan

unread,
Mar 24, 2014, 12:59:38 AM3/24/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ஆம். மறத்தல் வேறு; மறவுதல் வேறு. மறத்தல்/மறைதல். ஆனால், மறவுதல் < மறு- “to neglect, to disregard, ..."
மறவி < மறவு-தல். கடைப்பிடியின்றி நெகிழவிடுதல் என்கிறார்கள் உரையாசிரியர்கள்.
அதாவது, கடைப்பிடிக்காமல் நெகிழ்ச்சியாய் விடுதல். இக்காலத் தமிழில் “கண்டுகொள்ளுதல்” என்பதன் எதிர்மறை.
(தருமபுரம் ஆதீன கேஸைக் “கண்டுகொள்ளே” என்று வேதநாயகரைக் கேட்கும்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் பாடலை இன்று படித்தேன்.) மறவி - ”கண்டுக்காம விடுதல்”,
மறவுதல் - அசட்டை/அசிரத்தை பண்ணுதல் என்பதன் நேர்முறையான பழந்தமிழ் வார்த்தை. நற்றிணை, குறளில் எல்லாம்
இருக்கிறது. மறவி = பொச்சாப்பு என எல்லோரும் (உ-ம்: பரிமேலழகர்) எழுதிச்சென்ரனர். நாம் தான் மறந்துவிட்டோம்.

மறத்தல் X மறவுதல் - வேறுபாட்டைக் காண 3 எடுத்துக்காட்டு தருகிறேன்.

உலத்தல் (அழிதல், உலர்தல், ...)   X  உலவுதல் (வெப் ப்ரவுசர் > உலவி’)
உளத்தல் (உளத்தில் இருத்தல்)    X  உளவுதல் (ஸ்கை ப்ரோப் > விண்ணுலவி, ஜெயபாரதன் கட்டுரைகள்)
உழத்தல் (கஷ்டப்படுதல், அழுந்துதல்   X  உழவுதல் (= உழுதல், ஈழநாட்டு வழக்கு) 

பிற பின்!
நா. கணேசன்

உழவுதல் < உழு-  அதுபோல், மறவுதல் < மறு- (கலத்தல், கலவி : இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.)


”பறவைகளை எண்ணிக் கணக்கெடுக்கும் ஆர்வத்தில் இருந்துவிட்டேன்
எனக்குத் தெரியாமல் எல்லாக் கிளிகளும்
நெற்காணிக்குள் இறங்கிவிட்டன.
காணிக்காரன் கண்டால் ஏசுவான் என்று பயந்து
கவிதையை இப்படி எழுதிவிட்டேன்.
வயலை உழவி நெல் விதைத்தேன்
கிளிகள் முளைத்துவிட்டன.”


”நிலம் வாங்கி அதை திருத்தி, உழவி, நிலப்பயளையிட்டு வித்திட்டு நீர்பாய்ச்சி உரமிட்டு வளப்படுத்தி யானைக்காவல், பன்றிக்காவல், குருவிக்காவல் பார்த்து பீடை நாசினிகள் தெளித்து, களையெடுத்து, வீடு மறந்து, குடும்பம் மறந்து ஆயுததாரிகளின் அடாவடித் தனத்துக்கும் கொலைகளுக்கும் மத்தியில் எம் உயிர்களையும் பணயம் வைத்து, ‘பொரைகளில்’ தூங்கி, தரைகளில் உண்டி, கரைகளில் குளித்து, ...”

N. Ganesan

unread,
Mar 24, 2014, 9:25:53 AM3/24/14
to vall...@googlegroups.com, மின்தமிழ், Banukumar Rajendran
மறவி “நெகிழ்வு,  பொச்சாப்பு, negligence, disregard,”, 
மறதி “மறத்தல்/மறப்பு, forgetfulness" - இரண்டும் வெவ்வேறு
முதற்பொருள் உடையன என்பதற்குச் சான்றுகள் பல தந்துள்ளேன்.
மேம்போக்கான 20-ஆம் நூற்றாண்டு உரைகளை விடுத்துப் பாடலைப் படித்துப்
பார்த்தால் நன்கு விளங்கும். ஆழ்ந்த உரையாசிரியர்களும்
சொல்லியுள்ளனர்: பரிமேலழகர், ஆராய்ச்சிக் காண்டிகையுரை (தொல்காப்பியம்
முழுமைக்கும் ஆன உரை).

நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும் 
கெடுநீரார் காமக் கலன் (குறள்)
Long delay, Negligence, Laziness, Sleep 
- these four are Pleasure Boats of Loss

Procrastination, neglect, sloth and slumber : these four
are the ship that is boarded lovingly by habitual losers. 605

மதுவுக்கு (டாஸ்மாக்) மறவி என்ற பெயர். ஆனால், மறதி என்ற
பெயர் மதுவுக்கு இல்லை. 

மறவி (Liquor) என்ன செய்யும்? மது மயக்கத்தையும், கலக்கத்தையும்,
சோர்வையும் (அனந்தர்), நெறி நெகிழ்ச்சியையும் உண்டுபண்ணும்.
”Alcohol interferes with the brain’s communication pathways, and can affect the way the brain looks and works. These disruptions can change mood and behavior, and make it harder to think clearly and move with coordination.”

மறவிப் பானம் செய்வதைக் கவிச்சக்ரவர்த்தி கம்பனைத் தவிர வேறு யாரே அழகாகச்
வருணிக்கவியலும்?
----------------------------------
தாங்கிய துகிலார், மெள்ளச் சரிந்து வீழ் குழலார், தாங்கி வீங்கிய உயிர்ப்பார், விண்ணை விழுங்கிய முலையார், மெல்லத் தூங்கிய விழியார், தள்ளித் துளங்கிய நடையார்,-வல்லி வாங்கிய மருங்குல் மாதர்,-அனந்தரால் மயங்கி வந்தார். 280

பானமும், துயிலும், கண்ட கனவும், பண் கனிந்த பாடல் கானமும், தள்ளத் தள்ள, களியொடும் கள்ளம் கற்ற, மீனினும் பெரிய, வாட் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக, வானவர் மகளிர் போனார், மழலை அம் சதங்கை மாழ்க. 281

மழையினை நீலம் ஊட்டி, வாசமும் புகையும் ஆட்டி, உழை உழை சுருட்டி, மென் பூக் குவித்து, இடைக்கு இடையூறு என்னா, பிழையுடை விதியார் செய்த பெருங் குழல், கருங் கண், செவ் வாய், இழை அணி, மகளிர் சூழ்ந்தார், அனந்தரால், இடங்கள்தோறும். 282

தேனிடை, கரும்பில், பாலில், அமுதினில், கிளவி தேடி, மானிடை, கயலில், வாளில், மலரிடை, நயனம் வாங்கி, மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி, வானுடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார். 283
------------------------------

மறவி - பொச்சாப்பு, சோர்வு, அனந்தர், இகழ்ச்சி, ...: இவையெல்லாம் உண்டுபண்ணுவதுதானே டாஸ்மாக்?
மதுவைப் போன்ற மயக்கம் தரும் நிலையைச் சமணர்கள் மோஹநீயம் என்பர். இதற்கான
தமிழ் வார்த்தை மறவி (மறதி அன்று). யசோதரகாவியப் பாடலும் வீடூரார் உரையும்:

இளைஞர் மன்னனை வாழ்த்துதல்

59. மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா
  தறவியன் மனத்தை யாகி யாருயிர்க் கருள் பரப்பிச்
  சிறையன பிறவி போக்குந் திருவற மருவிச் சென்று
  நிறைபுக முலகங் காத்து நீடுவாழ்க கென்று நின்றார்.

(இ-ள்.) மறவியின் மயங்கி-கள்ளிற்போல (மோஹநீயத்தால்)  மயங்கி,  வையத்து  உயிர்களை வருத்தஞ் செய்யாது - உலகிலுள்ள உயிர்களைத் துன்புறுத்தாமல், அறம் இயல் மனத்தைஆகி - அறம்  நிறைந்த மனமுடையவனாகி,  ஆர்உயிர்க்கு  அருள்பரப்பி - அரிய பல்லுயி்ர்க்கும் அருளைப் பரவச் செய்து, சிறை  அன பிறவிபோக்கும் - சிறைக்கூடம் போன்ற பிறவியினை நீக்கும், திருவறம் - (இறைவனருளிய)  திருவறத்தில், மருவிச்சென்று - பொருந்தி நடந்து,  புகழ்நிறை  உலகம் காத்து -புகழ்நிறையும் உலகத்தைக் காத்தளித்து, நீடுவாழ்க-நீடுழிகாலம் வாழ்க, என்று  நின்றார் - என்று  அரசனுக்கு  அவ்விளைஞர்   ஆசி கூறி நின்றார். (எ-று.)]

---------------

சூளாமணியும் சொல்கிறது:
அறவிய மனத்த ரன்றி யழுங்குத லியல்பி னார்க்குப்
பிறவியை யறுக்குங் காட்சிப் பெருநிலை யெய்த லாமோ
வெறிமயங் குருவக் கண்ணி விஞ்சையர் விளங்கு தானம்
மறவியின் மயங்கி வாழும் மனிதர்க்கு நிகழ்த்த லாமோ.

மறவி - பொச்சாப்பில் மயங்கி வாழும் சோர்வும், அனந்தரும், இகழ்ச்சியும்
உள்ள வாழ்க்கை வாழும் மனிதரைக் குறிப்பிடுகிறார் தோலாமொழித் தேவர்.


பிறவித் துயரற ஞானத்துள் நின்று,

துறவிச் சுடர்விளக் கம்தலைப் பெய்வார்,

அறவனை யாழிப் படையந் தணனை,

மறவியை யின்றி மனத்துவைப் பாரே.


சற்றும் நெகிழ்ச்சி, மயக்கம், சோர்வு இல்லாமல் ஆழிப் படை ஆயுதம்
கொண்டு விளங்கும் மஹாவிஷ்ணுவை மனத்தில் வைப்பார்கள் என்கிறார் நம்மாழ்வார்.

நா. கணேசன்



On Tuesday, March 18, 2014 6:24:10 PM UTC-7, வேந்தன் அரசு wrote:



18 மார்ச், 2014 1:18 பிற்பகல் அன்று, தேமொழி <them...@yahoo.com> எழுதியது:

பொச்சாப்பு = கவனக்குறைவு

அறிந்திருந்தும், தெரிந்திருந்தும், செய்யவேண்டிய கடமை நினைவில் இருந்து மறைந்துவிடுதல்

பொச்சாவாமை = கவனக்குறைவு இல்லாமை

(நான் புரிந்து கொண்டது)

சரியாகவே.

மறதி என்பது நினைவை விட்டு அகன்றது
பொச்சாப்பு= அது கிடக்குது எனும் ஆணவம்


ஆம். மறத்தல் வேறு; மறவுதல் வேறு. மறத்தல்/மறைதல். ஆனால், மறவுதல் < மறு- “to neglect, to disregard, ..."
மறவி < மறவு-தல். கடைப்பிடியின்றி நெகிழவிடுதல் என்கிறார்கள் உரையாசிரியர்கள்.
அதாவது, கடைப்பிடிக்காமல் நெகிழ்ச்சியாய் விடுதல். இக்காலத் தமிழில் “கண்டுகொள்ளுதல்” என்பதன் எதிர்மறை.
(தருமபுரம் ஆதீன கேஸைக் “கண்டுகொள்ளே” என்று வேதநாயகரைக் கேட்கும்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் பாடலை இன்று படித்தேன்.) மறவி - ”கண்டுக்காம விடுதல்”,
மறவுதல் - அசட்டை/அசிரத்தை பண்ணுதல் என்பதன் நேர்முறையான பழந்தமிழ் வார்த்தை. நற்றிணை, குறளில் எல்லாம்
இருக்கிறது. மறவி = பொச்சாப்பு என எல்லோரும் (உ-ம்: பரிமேலழகர்) எழுதிச்சென்ரனர். நாம் தான் மறந்துவிட்டோம்.

மறத்தல் X மறவுதல் - வேறுபாட்டைக் காண 3 எடுத்துக்காட்டு தருகிறேன்.

உலத்தல் (அழிதல், உலர்தல், ...)   X  உலவுதல் (வெப் ப்ரவுசர் > உலவி’)
உளத்தல் (உளத்தில் இருத்தல்)    X  உளவுதல் (ஸ்கை ப்ரோப் > விண்ணுளவி, ஜெயபாரதன் கட்டுரைகள்)

N. Ganesan

unread,
Mar 24, 2014, 10:15:30 AM3/24/14
to vall...@googlegroups.com, மின்தமிழ், Banukumar Rajendran
நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும் 
கெடுநீரார் காமக் கலன் (குறள்)
Long delay, Negligence, Laziness, Sleep 
- these four are Pleasure Boats of Loss

Procrastination, neglect, sloth and slumber : these four
are the ship that is boarded lovingly by habitual losers. 605

------

இக் குறளுக்கு சமண நூல் கோட்பாடுகளின்படி பார்க்கில்,
மறவி = மது எனினும் அமையும். பார்க்க: வள்ளுவரில்
கள்ளுண்ணாமை அதிகாரம்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Mar 24, 2014, 9:43:32 PM3/24/14
to vallamai, மின்தமிழ், Banukumar Rajendran
மறவியை வினைச்சொல்லாக எங்கனம் பயன்படுத்துவது?


24 மார்ச், 2014 10:15 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 25, 2014, 8:15:02 AM3/25/14
to mint...@googlegroups.com, vallamai, Banukumar Rajendran, மு இளங்கோவன், Karanthai Jayakumar, rathina pugazhendi, tiruva...@googlegroups.com
On Monday, March 24, 2014 6:43:32 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
மறவியை வினைச்சொல்லாக எங்கனம் பயன்படுத்துவது?


நம் பேரூர்ப்புராணம் செய்தருளிய (சந்ததியார்
கொடுமுடியில் வாழ்கிறார்கள்) கவிராட்சரர்
கச்சியப்ப முனிவர் தணிகைப் புராணத்தில்
யோகம் பற்றி விளக்குகையில் மறவுதல் (< மறு-)
வினைச்சொல்லாக ஆள்கிறார். உழுதல் என்பது
இன்றும் உழவுதல் என்னும் வினையாகி
“உழவி” என்று வருதல் ஈழநாட்டிலே இருக்கிறது
காட்டினம். அதுபோலே, மறவுதல் கவிராக்ஷசர்
“மறவி” எனப் பயனிக்கிறார். விண்ணுளவி
விண்ணை உளவுங் கருவி (உளவுதல் - வினை).

விடையம் பொறிவழி மறவிக் கனவினும் வெஃகா தவைவிய வித்தட்கும்
நடைவிஞ் சியவுள மகிழ்மிக் கெழுதர நந்திக் குரிசிற விர்ந்தியோகின்
இடையும் வளிநடு வழியூ டினிதெழ வெழுதோ வியமென வசைவற்றுள்
அடையுஞ் சுடர்விழி யிருமுந் நிலைகளி னடைவிற் படர்வன படர்வுற்றான்.

ஐம்பொறிகள் விடுக்கும் சைகைகளை அசட்டைசெய்து நெகிழவிட்டு, அவற்றைக்
கனவினும் விரும்பாது ... என்பது பொருள்.

தற்கால உரைகள் மறவி - negligence, to neglect, to disregard,
to disdain ... மறவுதல் என்னும் பழந்தமிழ்ச் சொற்பொருளை இழந்துநிற்கின்றன. இதனை லெக்ஸிகனில் காணலாம் (மறவி).

பெருமழைப்புலவர் சமணநெறி அறியாமல் உரை செய்தவர். நச்சினார்க்கினியரே
சிந்தாமணிக்கு 2 முறை உரை எழுதவேண்டியதாயிற்று. சக்கரன் என்றால்
வடமொழி தற்பவம் ஆகிய இந்திரன். சூளாமணி உரையில் 1000 தாமரைக் கண்ணுடை இந்திரன் அவனது உலகை விவரிக்கும் பாடல். சக்கரன் = இந்திரன்
என்பதோ, அதற்கான வடசொல்லோ பெருமழையார் அறியார் (அவரது மகன்கள்
கூலிவேலைக்குச் செல்லும் நிலைகண்டு வருந்தி அரசை உதவச் செய்தவர்
மு. இளங்கோ). அதே போல ஒரு பாடலுக்கு உரை தருகிறார்:

பிறவிச்சக் கரமிது பெரிது மஞ்சினான்
துறவிக்கட் டுணிகுவன் றுணிந்து தூயனாய்
உறவிக்க ணருளுடை யொழுக்க மோம்பினான்
மறவிக்க ணிலாததோர் மாட்சி யெய்துமே.

யசோதரகாவியம் வீடூரார் உரையும், பாடலும் பார்த்தால்
மறவிக்கண் இலாததோர் மாட்சி - மோஹநீயம் இல்லாத மாண்பு
என்பது விளங்கும். 20-ஆம் நூற்றாண்டு உரைகள் மறவியின்
பழைய நூற்பொருளை மறைத்திருக்கின்றன என்பது தெளிவு.

நா. கணேசன்


Reply all
Reply to author
Forward
0 new messages