தாழை (அ) கைதை

414 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 28, 2014, 8:35:20 AM10/28/14
to mint...@googlegroups.com, vallamai
பழைய திரைப்படங்கள் இழையை அதன் தலைப்புக்கே விட்டுவிடுவோம்.

தாழம் புதரும், மலரும் பற்றிய இலக்கியப் பாடல்களும், கைதகையும், கடவுளரும்
பற்றிய செய்திகளும் இவ்விழையில் தாருங்கள். நானும் சிலவற்றைச் சொல்கிறேன்.

On Monday, October 27, 2014 8:24:05 AM UTC-7, தேமொழி wrote:


On Monday, October 27, 2014 7:47:38 AM UTC-7, N. Ganesan wrote:


சிங்கை கிருஷ்ணன் ஐயா சொன்ன நாடோடிமன்னன் பாட்டு மாத்திரம் தனியாக
யுட்யூபில் இருக்கிறதா? எந்த மணி, நிமிஷம் முழுப்பட யுட்யூபில் வருகிறது? - என சொல்லமுடியுமா?
 


பாட்டு வரிகள்:
இதில் தவறாக, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் என்று போட்டுள்ளனர்.
தமிழின் பழைய இலக்கியச் செய்தியைச் நாடோடிமன்னன் படப்பாட்டில் சொல்லியவர் 
‘உவமைக் கவிஞர் சுரதா.

On Sunday, October 26, 2014 10:45:41 PM UTC-7, tsparu2001 wrote:
மின்னல் கண்டு தாழை மலர்வதாகச் சொல்வதை கவிமரபு, என்று சொல்வதும் உண்டு. வைரமுத்து, 'மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்' (பாடல்: வெள்ளி மலரே..படம்:ஜோடி), என்றும், விவேகா "மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட" (பாடல்: இப்பவே இப்பவே..படம்: ராமன் தேடிய சீதை (சேரன் நடித்தது)  என்றும் எழுதியிருக்கிறார்கள்.

 திருத்தொண்டர் திருவந்தாதியில், நம்பியாண்டார் நம்பி, " கொண்டல் கொண்டேறிய மின்னுக்குக் கோல மடல்கடொறும் கண்டல்வெண் சோறளிக்குங்கடற் காழி" என்று சீர்காழியைக் குறிக்கிறார். கவி காளிதாசனும் இந்த உவமையை மேகதூதத்தில் கையாண்டிருக்கிறார்.

சம்ஸ்கிருதத்தில் கேதகி என்பர் இதை.  கேது என்பது மின்னலையும் குறிப்பதாகச் சொல்வதாலேயே  தாழைக்கு இந்தப் பெயர் வந்தது என்னும் கூற்று உண்டு. மதுரை ஸ்பெஷல் தாழம்பூ குங்குமம் பிரசித்தி பெற்றது. அர்ச்சனைக்கு இதை உபயோகப்படுத்துவது வழக்கம்.

எஸ். ராமச்சந்திரன் சொல்கிறார்:
அபாம் நபாத் எனப்பட்ட மின்னல் கொடியின் ஒளியில் காட்டு மலர்கள் மலர்வது இயல்பு. குறிப்பாக, மின்னல் ஒளி பட்டுத்தான் தாழை மடல் விரியும். மின்னலைக் குறிக்கும் கேது என்ற சொல்லுடன் தொடர்புடையதே "கைதை" என்ற சொல்லாகும். சமஸ்கிருதத்தில் கேதகி என்றும், மராட்டி மொழியில் கேட்கி என்றும் இச்சொல் வழங்கும். ”

கேது என்றால் மின்னல் என்ற பொருள் வடமொழியில் இல்லை. கைதை சதுப்புநிலம். கைதகை (= தாழை)
கண்ணகம் தாமரைப் பொகுடு. அதிலிருந்து கண்ணகை கண்ணகி ஆதற்போல், கைதகை கைதகி (கேதகி).

நா. கணேசன்

மேகதூதத்தில் மின்னல் கண்டு தாழை மலரும் என்றுள்ளதா?? காளிதாசருக்கு பல தமிழ் மரபுகள் தெரியும்.
 

வரலக்ஷ்மி விரத பூஜையில் தாழை மலர் கண்டிப்பாக இடம் பெறும். பூஜை நிறைந்த பின், மறு நாள் மாலை, பூஜையில் வைத்த தாழை மலரைக் கொண்டு எங்களுக்கு ஜடை பின்னுவார்கள். பொட்டி ஜடை (தாழை மடல்களை உட்புறமாக மடக்கி வைத்து ஜடையில் தைப்பது), கத்தி ஜடை (மடல்கள் வெளிப்புறமாக நீட்டிக் கொண்டிருக்குமாறு வைத்துத் தைப்பது) என்று ஜடையில் இருவகைகள் உண்டு. அம்மன் அலங்காரத்தின் போதும் இம்மாதிரி சவுரி முடியில் தைத்து கலசத்தின் பின்புறம் வைத்து அலங்கரிப்பது வழக்கம்.


 

இந்தப் படத்தில் செயற்கை பூக்களால் செய்யப்பட்டிருப்பதைப் போல், தாழம்பூ ஜடையாலும் செய்யலாம்.

படம் உபயம் கூகுளார்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



On Sunday, October 26, 2014 11:15:40 PM UTC-7, தேமொழி wrote:


///
சம்ஸ்கிருதத்தில் கேதகி என்பர் இதை.  கேது என்பது மின்னலையும் குறிப்பதாகச் சொல்வதாலேயே  தாழைக்கு இந்தப் பெயர் வந்தது என்னும் கூற்று உண்டு. 
///

கைதை  என்பதற்கும் கேதகி என்பதற்கும் தொடர்பு இருக்கலாம் எனத் தோன்றுகிறது...

ஆம். கைதை என்பது அடிப்படையில் நீர்ப்பாங்கான சதுப்பு நிலம், வயல் (பிங்கலந்தை).
மணல் மேட்டுகளில் இன்னும் ஏராளமாக வளர்வது. பாலன், பாலகன் என்று
கப்பிரத்யம் பெறுவது போல, கைதை (சதுப்புநிலம்) வளரும் தாழை கைதகை என்று
அழைக்கப்படுகிறது. கைதை என்றால் சதுப்பில் வளரும் ஒரு மரத்துக்கும் பேருண்டு.
கைதகைக்கு என்ன மூலம் என்று பார்த்து கேதகை என்றும் ஒரு பெயர் ஏற்பட்டுள்ளது.
கேதகைமுனிவார் வெங்கைவாணர் (வெங்கைக் கோ. 319). தாழம்பூ
பற்றி லிங்கோற்பவ புராணத்தில் சைவக்கதை ஒன்றுண்டு. அதனால் தாழை மலர்
சிவனுக்கு ஆகாது என்ப. முதலில் - தேவார காலத்தில் - ஆத்தி சிவன் திருமேனியில் 
இல்லை (தீர்த்தங்கரருக்கு மலர் அது), பின்னால் சோழன் குலப்பூ ஆனதால் ஏறியிருக்கிறது
என ஓம்சக்தி 2014 தீபாவளி மலர், ஜெர்மனி ஹம்நகர தமிழ்மாநாடு கட்டுரையில் ஆராய்ந்துள்ளேன் -
அதுபோல, இன்றும் தாழை சிவனுக்கு இல்லை. இனி மாறலாம்.

நீண்ட கால நண்பர் சிங்கை கிருஷ்ணன் ஐயா இவ்விழையை வளர்த்தெடுக்க முன்வந்திருப்பது
மக்ழிச்சி. முன்பொருமுறை ஆண் பனை (ஏற்றை), பெண் பனை (பெண்ணை) பற்றி
எழுதியபோது பாரிஸ் தமிழறிஞர் ஃழான் தாழையிலும் பால்பாகுபாடு இருப்பது பற்றியும்,
அதைப் பற்றி எழுதுக என்றும் இங்கே கூறினார். அப்போதே எழுத நினைத்தேன். இன்னும் செய்யலை.
எப்போதும் பார்ப்பது: அனந்தராமையரின் அருமையான கலித்தொகைப் பதிப்பு.
தாழை பற்றி அங்கே பார்க்கவும். டிவிஏ-வில் உண்டு. யாராகிலும் தரலாம்.

தாழை இருக்கா-னு அரிசோனன் கேட்கிறார். நிறை இருக்கு. 
ஹுட்ஹுட் பறவை தமிழில் (1) கொண்டைலாத்தி (2) எழுத்தாணிக்குருவி என்றும்,
க்ரௌஞ்சம் (1) < கரிஞசம் (2) அன்றில் என்றும் அதன் வண்ணத்தால் இரு பெயர்கள்
பெற்று தமிழில் வழங்குவது போல,
ஸ்க்ருபைன் (1) தாழை (2) கைதை (> கேதகை) என்னும் பெயர்களால் தமிழில் 
வழங்கிவருகிறது.

சிங்கை கிருஷ்ணன் ஐயா சொன்ன நாடோடிமன்னன் பாட்டு மாத்திரம் தனியாக
யுட்யூபில் இருக்கிறதா? எந்த மணி, நிமிஷம் முழுப்பட யுட்யூபில் வருகிறது? - என சொல்லமுடியுமா?

மலையாளிகளுக்கு தாழை இன்றும் கைதை தான்.

பிற பின்!
நா. கணேசன்
- hide quoted text -

 
.............................................................................
கைதைப் பூ.
இந்தப் பூ வைத் தாழம் பூ என்றும் அழைப்பர் .
Posted Image
தாழை மலர் தற்காலத்தில் தாழம்பூ என அழைக்கப்படுகிறது. வழுவழுப்பான மரத்தை வாழை என்பது போன்று தாழந்து தொங்கும் மடல்பூவைத் தாழை என்றனர். நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும். தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர்.
கைதை என்னும் மலரும் இதன் இனம். கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும். கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ. கைதை என்பது நிழல் தரும் மரம்.
சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் தாழை , கைதை ஆகிய இரு மலர்களும் இடம்பெற்றுள்ளன.
............................................................................................

..... தேமொழி 

2014-10-27 8:24 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

N. Ganesan

unread,
Oct 28, 2014, 8:50:54 AM10/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
எஸ். ராமச்சந்திரன் சொல்கிறார்:
அபாம் நபாத் எனப்பட்ட மின்னல் கொடியின் ஒளியில் காட்டு மலர்கள் மலர்வது இயல்பு. குறிப்பாக, மின்னல் ஒளி பட்டுத்தான் தாழை மடல் விரியும். மின்னலைக் குறிக்கும் கேது என்ற சொல்லுடன் தொடர்புடையதே "கைதை" என்ற சொல்லாகும். சமஸ்கிருதத்தில் கேதகி என்றும், மராட்டி மொழியில் கேட்கி என்றும் இச்சொல் வழங்கும். ”

மராட்டி மொழியில் கேட்கி என்று கேதகியை (< கைதகை) அழைப்பதில்லை. மராட்டியில் இந்தியின் தாக்கமாக, கேத்கி என்பர். கேட்கி என்று எஸ். ராமச்சந்திரனார் எழுதுவது ஆங்கிலத்தில் Kedki என்றிருப்பதை கேட்கி என்று எழுதும் பிழையாகும். இப்பொழுது பாரதத்தின் பிரதமர் பெயரையே அவ்வாறு தவறாக எழுதியும் உச்சரித்தும் வருவதை டிவி, தமிழ் பேப்பர்களில் பார்க்கிறோம் அல்லவா? மோதியை மோடி என்பது போல், கேத்கி கேட்கி என்று எழுதப்பட்டுள்ளது. மோடி என்பது மஹாராஷ்ரம், தஞ்சை மன்னர் சரபோஜி போன்றோர் பயன்படுத்திய ஒரு எழுத்துலிபி! கேதகி மராட்டி, இந்தியில் கேத்கி என்பதுடன் (1) கருநாடகம் கர்நாடகம், (2) கலியாணம் கல்யாணம், (3) மலிஹோத்ரம் மல்ஹோத்ரா, (4) குமாரசம்பவம் குமார்சம்பவ், ... என்று ஆதலை ஒப்பிடுக.

இந்தியாவின் முதல் லிங்கம் என்று கருதப்படும் குடிமல்லம் லிங்கம் என்பது நெய்தல் திணையின் கடவுள் என்ற விளக்கம் இங்குவ கார்த்திகேயசர்மா போன்ற தொல்லியல் அறிஞர் நூல்களால் நன்கு வெளிச்சமடைகிறது. தாழம்பூ பற்றிய செய்தியைக் குறிப்பிடுகிறார் எஸ். ராமச்சந்திரன். பாருங்கள்.

வாளோடு வடக்கிருத்தல் நெய்தலின் இந்த தெய்வத்துக்காக என்று சில குறிப்புகள்:

நா. கணேசன்


N. Ganesan

unread,
Oct 28, 2014, 9:30:09 AM10/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, மு இளங்கோவன், thami...@googlegroups.com
12-ஆம் நூற்றாண்டின் கந்தபுராணமுடையார் கச்சியப்ப சிவாச்சாரியரும்,
அதன் பின்னே, தணிகைப் புராணத்தில் கச்சியப்ப முனிவரும் 
தாழை மின்னலால் பூக்கும் என்று பாடினர். அதற்கு முன்னுள்ள
பாடல்களும் நெய்தல் நிலத்தில் வானம் மின்னும்போழ்  கைதை மலரும்
என்கின்றன. தமிழ் அக மரபுகளை நன்கறிந்த காளிதாசர் மேகதூதத்தில்
இக் கருத்தைக் குறித்துள்ளார்.


தடித்தெ ழுந்தொறுந் தாழை பூப்பன
அடுத்த தண்கட லண்மி நீர்முகில்
எடுத்த செல்வமற் றிஃதெ னாவுளம்
மடுத்த காதலின் மகிழ்ச்சி கொண்டென.
                 
                                    

(இ - ள்.) தாழைமரங்கள் அண்மியிருக்கின்ற குளிர்ச்சிபொருந்திய கடலைப் பொருந்தி நீரையுட்கொள்ளு மேகங்கள் நீரோடு கைக்கொண்ட செல்வம் இஃதாமென்று உள்ளத்தின்கணிறைந்த அன்பினால் மகிழ்ச்சி கொண்டாற்போல மின்னலுண்டாகுந்தோறும் பூத்தலைச் செய்வன.

(வி - ம்.) தடித்து - மின்னல்; மின்னலைக் கண்டவுடன் தாழை பூப்பதியல்பு; இதனை, "மின்பொ ருட்டினாற் கேதகை மலர்ந்திடும் விளங்கும், என்பொ ருட்டினால் மாமழை சொரிந்திடு மீட்டும், பொன்பொ ருட்டினால் யாவுமுண் டாமது போல, உன்பொ ருட்டினாலவுணர்க்கு மேன்மைய துளதாம்" (மாயைப் - 7) என்னும் கந்தபுராணச் செய்யுளானறிக. செல்வமென்றது மின்னை. தாம் அண்ணிய விடத்திலுள்ள செல்வத்தைப் பிறர் கொள்ள உவத்தல் மேலோர்க் கியல்பாகலின் அதுபோல மேகங்கள் கடலையண்மி நீரோடு கொண்டு சென்ற செல்வமிஃதாமென எண்ணி மின்னலைக் கண்டவுடன் தாழைகள் பூத்தல் மகிழ்தலை யொத்திருந்தன என்க. கொண்டென - கொண்டாற்போல. தாழையாகிய தாமடுத்திருக்கும்படியான கடல். நீரை முகத்தலானிம் மின்னலுளதாய தென்க.

உவமைக் கவிஞர் சுரதா இந்தத் தமிழ் இலக்கிய மரபை நாடோடிமன்னனில் பாட்டு ஆக்க,
ஏராளமான சினிமாப் பாடல்களி இந்த உவமையோடு பாடிவருகின்றனர்.


காற்றில் ஒட்டிய முன்பனி நீ
பனியை ஒற்றிய ஒளிவிரல் நான்!
மேகம் கும்மிய மின்னல் நீ!
மின்னல் தூவிய தாழை நான்!

சங்கம் கொஞ்சிய செய்யுள் நீ
செய்யுள் சிந்திய சந்தம் நான்!
வெட்கம் கவ்விய வெப்பம் நீ!
வெப்பம் தணிகிற நுட்பம் நான்!


இன்னொரு பாட்டு:

N. Ganesan

unread,
Oct 29, 2014, 8:18:17 AM10/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, muela...@gmail.com, thami...@googlegroups.com
தாழை பற்றி அருஞ்செய்திகளை அளித்துள்ளார் ‘கலித்தொகை’ பதிப்பில் இ. வை. அனந்தராமையர். அதனைப் பார்ப்போம்.

 (அ) ‘‘தாழை வீழ்க் கயிற்றூச றூங்கி’’ அகம். 20 : 6. (ஆ) ‘‘கானலொருசிறை, மகிழ்பூ மாலையொடு மருதிணர் மிடைந்த விழ்பூங்கோதையோ டவிரிழை பொங்க வெக்கர்த் தாழை, நீர்த்துறைத் தாழ்ந்த, நெடுவீ ழூசன் முடிபிணி யேறித், தொடுவேன், முற்றத்துத் தோழியோ, டாடா’’ பெருங். (1) 40 : 109 - 114 எனப் பிற நூல்களுள்ளும் வருதல் காண்க. இது விழுதுடைமையால் (இ) ‘வீழ்த்தாழை’ என்றும் தாழையென்னும்பெயரைத் திரிசொல்லாகவுடைய தென்னை வீழின்மையால் (ஈ) ‘வீழி றாழை’ என்றும் கூறப்படும். இங்கே கூறப்படும் வீழ்த்தாழை (உ) புறக்காழுடையதாதலாற் புல்வகையுள் ஒன்றாக எண்ணத்தக்கது. இது கடலலை மோதுமிடத்துள்ள எக்கரிற் செழித்துவளர்வது, வளைந்தவடிவும் சருச்சரையான அரையு முடையது. தோல்திரைந்தாற்போன்ற திரையரையுடையதென்றும் கூறுவர். இதன் இலை மிக்க நீளமுடையதாயும் இருவிளிம்பிலும் புறத்திடையிலும் கூர்மையும் வளைவுமுள்ள சிறு முட்களையுடையதாயும் ஒவ்வொரு கிளையின் நுனியிலும் அடர்ந்திருக்கும். அதனால் இதற்குப் பேயை உவமையாகக் கூறுவர். இவ்விலையால், குடை செய்யப்படுகின்றது. இதன் முள்ளுக்குச் சுறாக்கோடும் வாளரமும் பாம்பின் எயிறு (பல்லு)ம் உவமையாக்கப் பட்டுள்ளன. இம்முள் எயிறுபோலுதலால் எயிறெனவும் படும். புறமடலிலும் இவ்வகை முள்ளுண்டு. இதில் ஆணென்றும் பெண்ணென்றும் உலக வழக்கில் இருபிரிவுள்ளது. ஆண்டாழை காய்க்கும். அது அக்காயை யடுத்துள்ள காய்மடலெனப்படும் புறமடல் சிலவற்றையேயுடையது; வேறுபூஇல்லாதது, பெண்டாழை காயாது. மேற்கூறிய இலையினடுவேயிருந்து பலமடல்களையுடைய அரும்பையீன்று பூக்கும். இப்பூவில் வெண்ணிறமுடையது வெண்டாழையென்றும் பொன்னிறமுடையது செந்தாழையென்றும் வழங்கப்படும். இவற்றுள் செய்யுளிற் பெண்டாழையும் வெண்டாழையுமே பயின்று வரும். ஆண்டாழையும் செந்தாழையும் அருகிவழங்கும். வெண்டாழைமுகிழுக்கு யானைத்தந்தமும் நகிலும் அதன்பூவுக்கு அன்னம் குருகு கொக்குமுதலியபறவைகளும் சங்கமும் உவமையாக உரைக்கப் படுகின்றன. செந்தாழம்பூவுக்குப் பொன் உவமையாக ஓதப்படுகிறது. இஃது உலகவழக்கில் மோத்தையென்று மொழியப்படும். (ஊ) இதன்முகிழ் கருவிலிருக்கும்போதே வண்டுகள் அதனை அறிந்து அதிற் செல்லுமென்பார். குருகுகள் இதனைத் தம்பார்ப்பென்றும் படையென்றும் மயங்கிப் புல்லுமென்பது கவிமரபு. இப்பூ, பறவைபோலத் தோன்றுதலால் இதனிழலைக் கயல் கெண்டை இறாமுதலிய மீன்கள் தம்மையுண்ணும் புட்களென்று அஞ்சி ஒளிக்குமென்றும் உரைப்பதுண்டு. இது காலையில் மலர்வதாகக் கூறுவர். இது மின்னல் மின்னுங்காலத்தும் பெருங் காற்று வீசுங்காலத்தும் மிகப் பூப்பது. இப்பூ. ஓலைப்பூவென்றும் கூறப்படும். இப்பூவின்மடல்களுக் கிடையே பூந்தாதையுடைய சோறெனப்படும் இழுதுபோன்ற உறுப்பு ஒன்றுண்டு. (எ) இப்பூவில் இத்தாதே உண்டென்றும் தேன் இன்றென்றும் சிலர் கூறுவர். இப்பூ, புலவு நாற்றத்தை நீக்கி நன்மணம் வீசுமென்ப. இதன் மடலைப் பண்டைக்காலத்தும் மகளிர் தலையிலணிந்துவந்தனர். ஆடவரும் மாலையாக அணிதலுண்டென்ப. இதனைக் காமவேளின் வாட்படையென்பதும் மரபு. தாழைவேறு கண்டல்வேறு. தாழைக்கும் கண்டலென்று ஒரு பெயருண்டு. இவற்றுட் பலவும் (1) ‘‘வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை, குருகுள ரிடத்தின் விரிபுதோ டவிழுங், கானல்’’ (2) ‘‘அல்கலுந், தயங்குதிரைபொருத தாழை வெண்பூக், குருகென மலரும் பெருந்துறை’’ (3) ‘‘முழங்குதிரை கொழிஇய மூரி யெக்கர்த், தடந்தாட் டாழை முள்ளுடை நெடுந்தோட், டகமடற் பொதுளிய முகைமுதிர் வான்பூங், கோடுவார்ந் தன்ன வெண்பூ’’ (4) ‘‘உரவுத்திரை பொருத பிணர்படு தடவுமுத, லரவுவாள் வாய முள்ளிலைத் தாழை’’ (5) ‘‘எக்கர்த் தாழை மடல்வயி னானும்’’ (6) ‘‘முடவுடற் கைதை மடன்முறித் திட்டும்’’ (7) ‘‘திரைமுதி ரரைய தடந்தாட் டாழைச், சுறவுமருப் பன்ன முட்டோ டொசிய, விறவா ரினக்குரு கிறைகொள விருக்கும்’’ (8) ‘‘நீடிலைத் தாழை’’ (9) ’’முடம்படு முள்ளிலை முடங்கன் மூரிசால், கடம்படு கரிமருப் பீன்று’’ (10) ‘‘முடமுட்டாழை’’ (11) ‘‘கொடுமுண் மடற்றாழைக் கூன்புற வான்பூ, விடையு ளிழுதொப்பத், தோன்றிப் - புடையெல்லாந், தெய்வங் கமழும்’’ (12) ‘‘பல்பூங்கானன் முள்ளிலைத் தாழை, சோறு சொரி குடவயிற் கூம்புமுகை யவிழ’’ (13) ‘‘அள்ளிலைத், தடவுநிலைத் தாழை’’ (14) ‘‘கழுதுருவின கஞலிலையென கழிமடலின கைதை’’ (15) ‘‘இறவுப்புறத்தன்ன பிணர்படுதடவுமுதற், சுறவுக்கோட்டன்ன முள்ளிலைத் தாழை, பெருங்களிற்று மருப்பி னன்ன வரும்புமுதிர்பு, நன்மானுழையின் வேறுபடத்தோன்றி’’ (16) ‘‘வாள்போல் வாய கொழுமடற் றாழை’’ (17) ‘‘அரவெயிற் றணிமுட் கைதை’’ (18) ‘‘மோட்டுமண லடைகரைப், பேஎய்த் தலைய பிணரரைத் தாழை, யெயிறுடை நெடுந்தோடுகாப்பப் பலவுடன், வயிறுடைப்போது வாலிதின் விரீஇப், புலவுப்பொரு தழித்த பூநாறு பாப்பின்’’ (19) ‘‘தாழை முகிழ்வேழமிகு தந்தமென வுந்துதகு சண்பை’’ (20) ‘‘யானைக் கூர்நுதி மருப்பிற் றோன்றி, வண்டொடு சுரும்பர் மூச மன்றலம் பொதிவாய் விண்டு, கண்ட னாண்மடற்றேன் சிந்துங் கண்டகி’’ (21) ‘‘மோடுடை நெட்டிலை முடவெண் டாழையந், தோடுடை நறுமலர் தோன்றல் கொய்வது, பாடுடை நெடுமடற் பனைக்கை வேழவெண், கோடடி பிடுங்கிய கோலம் போன்மரோ’’ (22) ‘‘பீடடைந் தவர்பிடர் புடைப்பவானையின், கோடுடைந்துதிர்ந்தன கொடுமுட்கேதகைத், தோடுடைர் தொருவழித் தொகுத லொத்தவே’’(23) ‘‘முட்டாழைக ளானை, வெள்ளைக் கொம்பீனும் விரிபொழில்’’ (24) ‘‘மாமன்றற் கைதையங் கன்னிதன் மொக்குள் வனமுலைமேல்’’ (25) ‘‘அலைநீர்த்தாழை யன்னம் பூப்பவும்’’ (26) ‘‘தாழை குருகீனுந் தண்ணந் துறைவனை’’ (27) ‘‘தோடவிழ் தாழை துறைகமழக் கோடுடையும்’’ (28) ‘‘பழந்தூங்கு முடத்தாழை’’ (29) ‘‘சோறுவாய் திறந்த செம்பொற் றொகுமடற்கைதை’’ (30) ‘‘முருகுவாய் முட்டாழை நீண்முகைபார்ப் பென்றே, குருகுவாய்ப் பெய்திரை கொள்ளா-துருகிமிக, வின்னா வெயில்சிற கான்மறைக்குஞ் சேர்ப்ப’’ (31) ‘‘நெய்தற் குருகுதன் பிள்ளையென்றெண்ணி நெருங்கிச்சென்று, கைதை மடல்புல்கு தென்கழிப் பாலை’’ (32) ‘‘ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித், தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடு’’ (33) ‘‘பிணர்முடத்தாழை விரிமலர் குருகென, நெடுங்கழிக் குறுங்கயல் நெய்தலுண் மறைந்தும்’’ (34) ‘‘புனற்கயல் கொக்கென்றஞ்சக், கண்டலங்காரமலரரங் கேசர்க்கு’’ (35) ‘‘மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று, தடமண்டு துறைக்கெண்டை, தாமரையின் பூமறைய’’ (36) ‘‘கருங்காற் குருகின்கோளுய்ந்து போகிய, முடங்குபுற விறவின் மோவா யேற்றை, யெறிதிரை தொகுத்த வெக்கர் நெடுங்கோட்டுத் துறுகடற் றலைய தோடுபொதி தாழை, வண்டுபடு வான்போது வெரூஉந், துறை’’ (37) ‘‘வேலை மடற்றாழை யுட்பொதிந்த வெண்டோட்டு, மாலைத் துயின்ற மணிவண்டு - காலைக், களிநறவந் தாதூதத் தோன்றிற்றே’’ (38) ‘‘தடித்தெழுந்தொறுந் தாழை பூப்பன’’ (39) ‘‘மாரனுக்கு வாளாமோ லைப்பூவு மால்’’ (40) ‘‘காற் றடித்தது தாழை பூத்தது’’ (41) ‘‘கைதை, சுரும்புந் தும்பி களுமருந்த மாறாதென்றுஞ் சோறிடுமால்’’ (42) ‘‘கண்ட லவிர்பூங் கதுப்பினாய்’’ (43) ‘‘இடைநிலத் தியாத்த, முதிர்பூந் தாழை முடங்கல்வெண்டோட்டு’’ (44) ‘‘சங்குடைந் தனைய தாழைத் தடமலர்த் தொடையலானே’’ (45) ‘‘அடும்பி னயலது நெடும்பூந் தாழை, தாழை யயலது வீழ்குலைக் கண்டல்’’ (46) ‘‘கண்டலங் கைதையொடு விண்ட முண்டகம்’’ என்று வருவனவற்றால் அறியலாகும். (1) சுறாவினது மருப்பு, சுறாவகையுள் ஒன்றாகிய வேளாவினது கொம்பென்பர். இம்மருப்பில் இரு விளிம்பிலும் வேல்போலக் கூரிய முனைகள் உண்டு.

N. Ganesan

unread,
Oct 29, 2014, 9:09:06 AM10/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
தாழை என்னும் கைதை நிலத்தில் வளரும் தாவரத்துக்கு,
சதம் (=100) செய்யுள் இருந்தால் சதகம் என்று பிரபந்தப் பெயராக,
கப்பிரத்தியம் பெறுதல் போல, கைதகம்/கைதகை என்று ஒரு பெயர். 
கண் என்ற சொல்லினின்றும் கண்ணகம் என்று தாமரைபொகுளுக்கு
ஒரு பெயர் த்ராவிடமொழிகளில் இருந்து வடமொழிக்குச் சென்றதுபோல
(cf. மஹால்க்ஷ்மி பேரால் கண்ணகி. கர்ணகை/கர்ணகி என்றும் தமிழர் வழங்குவர்),
கைதகை கேதகி எல்லாம் வடசொல் ஆகியுள்ளது. வட அமெரிக்க
ஆங்கிலத்தில் பல செவ்விந்திய பாஷைகளின் சொற்களைக் காண்கிறோம்.
உ-ம்: அரிசோனாவின் சவோராக் கள்ளி. பிரேசிலின் அரவாக் மக்களின்
கொய்யா என்னும் மரம்/பழப்பெயர் ....

கைதகை வடமொழியில் கேதகை, கேதகி என்றாகிறது. கேது என்றால்
கொடி. தாழை கொடிவகைத் தாவரம் இல்லை. கேது
என்றால் மின்னல் என்று எஸ். ராமச்சந்திரநாடார் சொல்லியிருக்கிறார்.
ஆனால், கேதுவுக்கு மின்னல் என்று வடமொழிப் பொருள்
ஏதுமில்லை என்பதுவும் குறிப்பிடத்த்தக்கது.

நா. கணேசன்

தாழை மலர் சிவனுக்கு ஒவ்வாமை:

E. Balfour,The Cyclopædia of India and of Eastern and Southern Asia, Commercial Industrial, and Scientific: Products of the Mineral, Vegetable, and Animal Kingdoms, Useful Arts and Manufactures, Volume 3, 1885

pg. 103
"The Hindus use the flowers in all the ceremonies made in honour of Pulliar, Subramaniar, Mariamma, and Vishnu, but never in those of Siva".

--------

தாழை மலரைச் சிவனுக்கு விலக்கக் காரணம் என்ன?

PLANT MYTHS & TRADITIONS IN INDIA 
Shakti M. Gupta 

"One day Siva was playing a game of dice with his wife Parvati. Parvati 
defeated him. He felt ashamed of himself at having been defeated by a 
woman and hid in the Ketaki woods. To forget his humiliation, he got 
absorbed in deep meditation. Parvati sensed his feelings and wanted to bring 
him around. She approached him in the form of a young beautiful woman 
and tried to entice him back to herself. But with his eyes closed and 
absorbed m deep meditation as he was. Mahadeva did not see her or feel her 
presence. Parvati then approached him wearing Ketaki flowers in her hair. 
The sweet scent of the Ketaki flowers attracted Siva’s attention and he was 
disturbed in his prayers. Getting annoyed at being thus disturbed, he cursed 
the Ketaki flowers. 

Another legend giving the reason for Siva to curse the plant says that from 
the primordial waters arose a fiery linga that kept on growing in size. Both 
Vishnu and Brahma were astonished to see such a fiery sight and not 
knowing what the linga signified, decided to investigate the matter. Vishnu 
dived into the primordial waters to find its lower end and Brahma flew high 
up the heavens to reach its tip. He flew higher and higher but the linga kept 
on rising higher than Brahma could fly. Vishnu could not find its depth and 
Brahma could not reach its summit.Ultimately both Brahma and Vishnu 
came back without having found the secret of the linga. The linga then burst 
open and Siva appeared before them standing within the linga. Seeing Siva 
in the linga, both Brahma and Vishnu bowed before him, accepting his 
supremacy. 

According to the story, Ketaki bore false witness to Brahma, saying that 
he had reached the summit of the linga and for rhis falsehood, Ketaki was 
rejected by Siva. According to Skanda Purana (1.1.6), Brahma was denied 
the worship for uttering this falsehood. 
The flowers of Ketaki are worn by girls in their hair to win lovers. But the 
Nair girls do not use its flowers for adorning their hair because the plant was 
cursed by Siva. "

N. Ganesan

unread,
Mar 30, 2015, 6:57:35 PM3/30/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages