உறவுப்பெயர்கள் - சீர்திருத்தம்

7,582 views
Skip to first unread message

ekamsath

unread,
Jul 27, 2014, 1:20:54 AM7/27/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

ஆங்கிலத்தில் ப்ரதர் என்றால் அண்ணனா தம்பியா என்பது தெரிவதில்லை. அங்கிள் என்றால் சித்தப்பாவா, பெரியப்பாவா, மாமாவா என்பது தெரியவில்லை. கஸின் என்றாலோ அவர் ஆணா பெண்ணா என்பது கூடத் தெரிவதில்லை.

இதை விடத் தமிழ் மேலானது. இங்கே சித்தி, பெரியம்மா, அத்தை, மாமன் மகன், அத்தை மகள் என்று உறவுகளை நுட்பமாகக் குறிக்கும் சொற்கள் உள்ளன.

          ஆனாலும் தமிழிலும் சில குறைபாடுகள் உள்ளன. மாமா என்பது தாயின் அண்ணனையும் தம்பியையும் குறிக்கும். வாழ்க்கைத் துணையின் தந்தையை மாமா என்று அழைப்பது உண்டு. சில பகுதிகளில் கணவனையும் சகோதரியின் கணவனையும் மாமா என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. அண்ணாவின் மனைவியைக் குறிக்க ஒரு சொல் உள்ளது, ஆனால் தம்பியின் மனைவியைக் குறிக்கும் சொல் இல்லை. இரண்டாம் நிலை உறவுகளுக்கு மேல் சொல்வதானால் மாப்பிள்ளையின் தம்பியின் மனைவி என்பது போலச் சுற்றி வளைத்துச் சொல்ல வேண்டி இருக்கிறது.

உறவுகளைச் சுருக்கமாகவும் குறிப்பிட வேண்டும், தெளிவாகவும் சொல்ல வேண்டும். அதற்கான ஒரு வழி ஏற்படுத்தினால் என்ன?

அம்மா, அப்பா, மகன், மகள், அண்ணா, அக்கா, தம்பி, தங்கை, கணவன், மனைவி- இவை தாம் முதல் நிலை உறவுகள். இந்த உறவுப் பெயர்களைக் கொண்டு புதிய உறவுப் பெயர்களை உருவாக்குவோம். அதற்காக அவற்றின் கடைசி எழுத்தைக் குறியீடுகளாக ஏற்படுத்திக் கொள்வோம்.  

உறவுப் பெயர் -           குறியீடு

அம்மா                           மா                   

அப்பா                           பா                   

மகன்                            கன்

மகள்                             பெண் (ஒரு இடைஞ்சலைத் தவிர்ப்பதற்காக கள் என்று போடவில்லை)

அண்ணா                       னா/ நா

அக்கா                           கா

தம்பி                             பி

தங்கை                          கை

கணவன்                        வன்

மனைவி                        வி

இரண்டாம் நிலை உறவுப் பெயர்களை உருவாக்க, இந்தக் குறியீடுகளைச் சேர்த்தால் போதும். எடுத்துக்காட்டாக,

மனைவியின் தங்கை- விகை

கணவனின் அண்ணா- வன்னா

அம்மாவின் அண்ணா- மானா

அம்மாவின் தம்பி –மாபி

அண்ணாவின் மனைவி- நாவி

தம்பியின் மனைவி- பிவி

அப்பாவின் அண்ணா- பானா

மகளின் கணவன்- பெண்வன் (அது என்ன இடைஞ்சல் என்று இப்பொழுது புரிந்திருக்கும்)

***

மூன்றாம் நிலை உறவுப் பெயர்களுக்கு எடுத்துக்காட்டு.

கணவனின் தங்கையின் கணவன்- வன்கைவன்

அம்மாவின் தம்பியின் மனைவி-  மாபிவி

அம்மாவின் அக்காவின் கணவன்- மாகாவன்

தம்பியின் மனைவியின் தம்பி- பிவிபி

இவ்வாறு குறியீடுகளை அந்தந்த வரிசைப்படி சேர்த்து, நான்காம் நிலை, ஐந்தாம் நிலை, ஆறாம் நிலை உறவுப் பெயர்களைக் கூடச் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூற முடியும்.

Ravi Subramanian

unread,
Jul 27, 2014, 1:36:41 AM7/27/14
to vallamai

What a creative thought! super sir! Worth pursuing n refining.. Great..
Su.Ravi

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 27, 2014, 1:48:17 AM7/27/14
to vallamai, mintamil
அம்மாவின் அம்மா - மாமா?
அப்பாவின் அம்மா - பாமா?.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
Jul 27, 2014, 2:03:59 AM7/27/14
to வல்லமை, Groups


  நல்ல முயற்சி ... வாழ்த்துகள்



2014-07-27 10:50 GMT+05:30 ekamsath <ekam...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Jul 27, 2014, 2:04:46 AM7/27/14
to வல்லமை, mintamil
2014-07-27 11:18 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
அம்மாவின் அம்மா - மாமா?
அப்பாவின் அம்மா - பாமா?.

​ஆமா :))

seshadri sridharan

unread,
Jul 27, 2014, 10:34:32 AM7/27/14
to vall...@googlegroups.com

201

இரண்டாம் நிலை உறவுப் பெயர்களை உருவாக்க, இந்தக் குறியீடுகளைச் சேர்த்தால் போதும். எடுத்துக்காட்டாக,

மனைவியின் தங்கை- விகை

கணவனின் அண்ணா- வன்னா

அம்மாவின் அண்ணா- மானா

அம்மாவின் தம்பி –மாபி

அண்ணாவின் மனைவி- நாவி

தம்பியின் மனைவி- பிவி

அப்பாவின் அண்ணா- பானா

மகளின் கணவன்- பெண்வன் (அது என்ன இடைஞ்சல் என்று இப்பொழுது புரிந்திருக்கும்)

***

மூன்றாம் நிலை உறவுப் பெயர்களுக்கு எடுத்துக்காட்டு.

கணவனின் தங்கையின் கணவன்- வன்கைவன்

அம்மாவின் தம்பியின் மனைவி-  மாபிவி

அம்மாவின் அக்காவின் கணவன்- மாகாவன்

தம்பியின் மனைவியின் தம்பி- பிவிபி

இவ்வாறு குறியீடுகளை அந்தந்த வரிசைப்படி சேர்த்து, நான்காம் நிலை, ஐந்தாம் நிலை, ஆறாம் நிலை உறவுப் பெயர்களைக் கூடச் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூற முடியும்.

 

உங்கள் புதுச் சொல்லாக்கம் அத்தனையும் குப்பைக்கு போக வேண்டியவை. இத்தோடு தமிழில் உங்கள் தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். நல்லது செய்யவிட்டாலும் கெட்டது செய்யாமல் இருப்பதும் ஒரு நன்மை தான்.  

சேசாத்திரி

N. Ganesan

unread,
Jul 27, 2014, 10:53:25 AM7/27/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Sunday, July 27, 2014 7:34:32 AM UTC-7, seshadri sridharan wrote:

உங்கள் புதுச் சொல்லாக்கம் அத்தனையும் குப்பைக்கு போக வேண்டியவை. இத்தோடு தமிழில் உங்கள் தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். நல்லது செய்யவிட்டாலும் கெட்டது செய்யாமல் இருப்பதும் ஒரு நன்மை தான்.  

சேசாத்திரி


தமிழ் உறவுப்பெயர்கள் ஒரு சமூகம் ஒட்டுமொத்தமாய் தன் மொழியின் தாதுவேர்கள் கொண்டு பல ஆயிரம் காலங்களாய் அமைத்தவை.
தனியொருவர் எந்த மொழிவேரியல் அடிப்படை இல்லாமல் கொடுக்கும் பெயர்கள் இ-மெயிலில் நின்றுவிடும். தமிழர்கள் உறவுப்பெயர்களாய் அமையா.

நா. கணேசன்

crazy mohan

unread,
Jul 27, 2014, 11:14:37 AM7/27/14
to vallamai, mintamil
’’உறவுக்கு பெயர் கொடுக்கும்’’  உங்கள் ''Theory Of Relativity'' ஒஸ்தி....


2014-07-27 10:50 GMT+05:30 ekamsath <ekam...@gmail.com>:

--

Ravi Subramanian

unread,
Jul 27, 2014, 11:22:45 AM7/27/14
to vallamai, mintamil

Any out-of-the-box thought will be criticized. It may not be correct to thwart a new way of thinking. One may try to improve upon or suggest an alternate idea.
Hail creative thinking!
Su.Ravi

--

seshadri sridharan

unread,
Jul 27, 2014, 12:32:22 PM7/27/14
to vall...@googlegroups.com
2014-07-27 20:52 GMT+05:30 Ravi Subramanian <ravi...@gmail.com>:

Any out-of-the-box thought will be criticized. It may not be correct to thwart a new way of thinking. One may try to improve upon or suggest an alternate idea. Hail creative thinking!
Su.Ravi


படைப்பாக்கத்தை ஊக்குவித்தல் என்ற பெயரில் தமிழை அழித்தல் கூடாது. மொழி வல்லார் அதை செய்யட்டும் வாந்தி எடுப்பவர்கள் மொழி வளர்ப்பில் ஈடுபடக்கூடாது.

Ravi Subramanian

unread,
Jul 27, 2014, 12:58:36 PM7/27/14
to vall...@googlegroups.com, vall...@googlegroups.com
இனிமையாகப் பாடும் பறவைகள் மட்டுமே பாட வேண்டும் எனில் காடே நிசப்தமாக இருக்கும். சிந்திப்பதும்,புதிய சிந்தனைகளை உந்துதல் செய்வதும் எந்தத் தனிமனிதனுடைய / சிலருடைய ஏகபோக உரிமை எனச் சொல்வது ஏற்புடைத்தன்று. 
இந்த முயற்சியைத் தாக்கித் தூற்றுவதை விடுத்து மாற்று யோசனை வழங்குவதே  ஆக்க பூர்வமான வழி. எவராலும் தமிழுக்கு அழிவு நேராது. ஒரு புதிய கருத்து ஏற்கப்பட்டு நிலைக்குமா அன்றி நிராகரிக்கப்பட்டு மறையுமா என்பது காலத்தினால் தீர்மானிக்கப்படட்டும். கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் முதிர்ச்சி இன்மையின் வெளிப்பாடுகளாகக் கருதப்படும் அபாயம் உண்டு.

சு.ரவி 


Su.Ravi
0992244687
Sent from my I pad


--

செல்வன்

unread,
Jul 27, 2014, 8:10:08 PM7/27/14
to vallamai, mintamil
பழமைபேசி

தந்தை, அப்பன், தமப்பன், தகப்பன், அத்தன், அச்சன், ஆஞான், ஆஞி, இஅயன், தா, நாயன்

தாய், அம்மை, அவ்வை, அன்னை, அஞ்ஞை, அத்தி, ஆத்தி, ஆத்தை, அச்சி, ஆச்சி, ஐயை, ஆய், தள்ளை

மகன், புதல்வன்

மகள், புதல்வி

பொதுவானதாக, மகவு, பிள்ளை, சேய், மதலை, கான்முளை, மக்கள்

அண்ணன், தமையன், ஆயான், அண்ணாட்சி, அண்ணாத்தை, தம்முன், மூத்தோன், முன்னோன்

தம்பி, தம்பின், இளவல், இளையான், பின்னோன்

அக்கை, அக்கைச்சி, தமக்கை, மூத்தாள், அச்சி

தங்கை, தங்கை அச்சி, செள்ளை, இளையாள், பின்னை, பின்னி

அண்ணன் மனைவி, அண்ணி, ஆயந்தி, நங்கை, அத்தாச்சி

அக்கை கணவன், அத்தான், மச்சான், மாமன்

மருமகன், மருமான், மருகன், மணவாளன்

மருமகள், மருமாள், மருகி, மணாட்டுப் பெண்

பெண் கொடுத்தோன், மாமன், மாமி

கணவன், அகமுடையான், கண்ணாளன், கொழுநன், கொண்கன், கொண்டான், நாயகன், மணவாளன், மணாளன், வீட்டுக்காரன்

மனைவி, அகமுடையாள், இல்லாள், மனையாள், பெண்டு, பெண்டாட்டி, கண்ணாட்டி, மணவாட்டி, வீட்டுக்காரி (டமகெர்?!)

கணவனின் தம்பி - கொழுந்தன், கணவனுடைய அண்ணன் - அத்தான், மூத்தார், கணவனுடைய தங்கை - கொழுந்தி, கணவனுடைய அக்கை - நாத்தூண், நாத்துணாள்

மனைவியின் அண்ணன் - மூத்த அளியன், அத்தான், மனைவியின் தம்பி- இளைய அளியன், மனைவியின் அக்கை - மூத்தளியாள், கொழுந்தி, மனைவியின் தங்கை (மொச்ட் நன்டெட்?!) - இளையளியாள், கொழுந்தி

ஓரகத்தான் - ஓர் குடி மணாளன், ஓர் குடியோன் (சகலன்)

ஓரகத்தி - ஓர்ப்படி, ஓர்ப்படைச்சி (ஒரே வீட்டில் புகுந்தவர்கள்)

தந்தையண்ணன், பெரியப்பா, மூத்தப்பா, பெரியையா

தந்தை தம்பி - சின்னப்பன், சிறிய தகப்பன், குட்டப்பன், சின்னையா

தந்தை சகோதரி, அத்தை, சின்னத்தை, பெரியத்தை

தாயின் சகோதரன், பெரியம்மான், சின்னம்மான், அம்மாண்டார், அம்மான் (மாமன் அல்ல)

தாயின் அக்கை, பெரியம்மை, பெரிய தாய், பெரியம்மா

தாயின் தங்கை, சின்னம்மா, தொத்தா, சித்தி, பின்னி

தந்தையின் தந்தை, அப்பச்சன், தாதா, தாதை, தத்தா, அப்பார்

தந்தையின் அதாய் - அப்பாச்சி, அப்பாத்தை, அப்பத்தி, அப்பாய்

தாயின் தந்தை, அம்மாச்சன்

தாயின் தாய், அம்மாச்சி, அம்மாய், அமிஞை, அம்மத்தா

பெற்றோர் தந்தை, பாட்டன், போற்றி, போத்தி

பெற்றோர் தாய் - பாட்டி

பாட்டன் தந்தை - பூட்டன், அப்பாட்டன், கொள்ளுப்பாட்டன்

பாட்டன் தாய் - பூட்டி, கொள்ளுப் பாட்டி

பூட்டன் தந்தை - ஓட்டன், சீயான், சேயான்

பூட்டன் தாய் - ஓட்டி, சீயாள் (சேயாள்)

மச்சினன்/மச்சம்பி: தங்கை கணவன், அம்மான் மகன், அத்தை மகன், இல்லாளின் சகோதரன், வயதில் இளையவன், மூத்தவன் மச்சான்

மச்சினி: இல்லாளின் தங்கை, அம்மான் மகள், அத்தை மகள் (வயதில் இளையவள், மூத்தவள் மச்சாள்)

மச்சாண்டார்: கணவனின் மூத்த சகோதரன் 

மகன் மகன், மகள் மகன் - பெயரன், பேரன்

மகன் மகள், மகள் மகள் - பெயர்த்தி, பேத்தி

பேரன் மகன் - கொள்ளுப் பேரன், பொட்பேரன்

பேரன் மகள் - கொள்ளுப் பேர்த்தி, கொட்பேர்த்தி

சக நிலையில் களம் புகுந்தவள், சககளத்தி, சக்களத்தி, ஒக்களத்தி

Cousin என்பது போல பொதுச் சொல், அண்ணாழ்வி, மூத்தாழ்வி, இளச்சனாழ்வி

Cousin-In-Law? மருஆழ்வி

மேல கொடுத்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு அளித்துச் சென்ற மொழிஞாயிறு பாவாணர் ஐயா அவர்களுக்கும், போப் அடிகளாருக்கும் நம்ம நன்றிகளைச் சொல்லிட்டு, cousin in lawகுறித்த தகவலுக்கு போலாம் வாங்க.

Husband of one's cousin: ஒருத்தருடைய ஆழ்வியோட கணவன். உதாரணத்துக்கு சொல்லப் போனா, பெரியப்பா மகள், வயசுல மூத்தவர்ங்றதால அவர் மூத்தாழ்வி. அவரோட கணவர் மூத்த மருஆழ்வி, மூத்த மராழ்வி.

Wife of one's cousin: மேல சொன்னதோட பெண்பால், மருக்கையாழ்வி

Cousin of one's husband: மூத்த மராழ்வி, இளைய மராழ்வி

Cousin of one's wife: மரு தங்கையாழ்வி, மருதங்காழ்வி

Husband of the cousin of one's husband: உதாரணத்துக்கு, என் மனைவியின் பெரியப்பா மகளோட கணவன், என்னோட மனைவிக்கு மருஅண்ணாழ்வி, வயசுல மூத்தவரா இருக்கும்பட்சத்தில்

Husband of the cousin of one's wife: உதாரணத்துக்கு சொல்லப் போனா, என்னோட damagerக்கு, ச்சீ, என்னோட இல்லாளுடைய இளையாழ்வியின் கணவர் எனக்கு மரு இளையாழ்வி.

Wife of the cousin of one's husband; கணவரோட அக்கையாழ்வி அல்லது தங்காழ்வியின் கணவர், மரு அக்காழ்வி அல்லது மரு தங்காழ்வி.

Wife of the cousin of one's wife: மனைவியின் அண்ணாழ்வி, அல்லது இளையாழ்வியின் மனைவி, மரு அண்ணாழ்வி அல்லது மரு பின்னாழ்வி.

இந்த ஏழு தலைமுறை, ஏழு தலைமுறைன்னு சொல்லுறாங்களே? அது?? சேயோன்(ஓட்டன்), பூட்டன், பாட்டன், தந்தை, தான், மகன், பெயரன், கொள்ளுப் பெயரன், எள்ளுப் பெயரன் ஆகிய இதுகள்ல, முதலும் கடையும் போக மிஞ்சியதைச் சொல்றதுதாங்க அது.

செல்வன்

unread,
Jul 27, 2014, 8:11:18 PM7/27/14
to vallamai, mintamil

உறவுப்பெயர்கள் - தொ. பரமசிவன்

உறவுப் பெயர்கள் தமிழில் இடம், சாதி, சாதிக்குரிய மண உறவு முறைகள் ஆகியவை காரணமாகப் பல்வேறு வகைப்பட்டு விளங்குகின்றன. பொதுவாகத் திராவிட மொழி பேசும் மக்கள் மண உறவுக்குரிய மாற்று உறவுகளைக் கொண்டுள்ளனர். எனவே உறவுமுறைச் சொற்களின் வகையும் பெருக்கமும் தமிழில் மிகுதியாகவே உள்ளன.

உறவுப் பெயர்கள் பொதுவாக விளிப்பெயர்களாகவே விளங்குகின்றன. அம்மை, அப்பன், மாமன், அக்கன், தாத்தன், ஐயன் ஆகிய பெயர்கள் அம்மா, அப்பா, மாமா, அக்கா, தாத்தா, ஐயா, எனவே வழங்கி வருகின்றன. இவற்றுள் அக்காவைக் குறிக்கும் ''அக்கன்'' என்ற பெயர் வழக்கு முற்றிலுமாக மறைந்து போய்விட்டது கல்வெட்டுக்களில் மட்டும் காணப்படுகிறது. ''அண்ணாழ்வி'' என்ற பெயர் வழக்கு அண்ணன், அண்ணாவி என மாறி வழங்குகிறது. சிறுமை அல்லது இளமை என்னும் பொருள் தரும் ''நல்'' என்னும் முன்னொட்டு, சில இடங்களில் மட்டும் ''நல்லப்பன்'' என்ற பெயரில் வழங்கி வருகிறது. இதற்குச் ''சிற்றப்பன்'' என்று பொருள். இப்பெயர் நேரிடையாக வழங்காத இடங்களிலும் ''நடக்க மாட்டாதவன் நல்லப்பன் வீட்டில் பெண் எடுத்தானாம்!'' என்று சொல்லடையாக வழங்கி வருகிறது. அதுபோலவே தம்+அப்பன் = தமப்பன் என்ற சொல் ''தகப்பன்'' என்று புழக்கத்தில் உள்ளது. தமப்பன் என்ற சொல் ''தகப்பன்'' என்று புழக்கத்தில் உள்ளது. தமப்பன் என்ற சொல்லே பெரியாழ்வார் பாசுரத்திலும், கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது. தமக்கை என்ற சொல்லையும் தம் + அக்கை என்றே பிரித்துக் கொள்ள வேண்டும்.

அண்ணனைக் குறிக்க இலக்கியங்களில் வழங்கிவரும் ''தமையன்'' என்ற சொல்லையும் இவ்வாறே ''தம்+ஐயன்'' எனப் பிரிக்கலாம். மூத்தவனைக் குறிக்க ''முன்'' என்னும் சொல் இலக்கியங்களில் வழங்கி வருகிறது. அதுபோல பின் பிறந்த இளையவனைக் குறிக்க ''பின்'' என்னும் சொல் வழங்கியிருக்கலாம். ''தம் பின் '' என்ற சொல்லே ''தம்பி'' என மருவியிருத்தல் கூடும் என்பர். தங்கை என்னும் சொல் அக்கை என்னும் சொல்லின் எதிர்வடிவமாகப் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு பெயர்களும் ''அச்சி '' என்னும் விகுதி ஏற்று அக்கச்சி, தங்கச்சி என வழங்கப்பட்டியிருக்கின்றன. இப்பொழுது அக்கச்சி என்னும் வடிவம் கவிதைகளில் மட்டும் வழக்கத்திலிருக்கிறது.

அப்பனின் அப்பனைக் குறிக்க ''மூத்தப்பன்'' என்ற சொல் வழங்கி வந்திருக்கிறது. ''எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்'' என்பது பெரியாழ்வார் பாசுரம், இன்றும் மூத்தப்பன் என்னும் சொல் மலையாளத்தில் தாத்தாவைக் குறிக்கவே வழங்குகிறது. பந்தல்குடியில் கிடைத்த முதல் இராசராசன் காலத்து வட்டெழுத்துக் கல்வெட்டில் தாத்தாவையும் பாட்டியையும் குறிக்க ''முத்தப்பன்'' ''முத்தம்மை'' என்ற சொற்கள் ஆளப்பட்டுள்ளதைக் கல்வெட்டறிஞர் வெ. வேதாசலம் எடுத்துக்காட்டுகிறார். தமிழ் முசுலிம்களில் சிலர் ''மூத்தவாப்பா'' அல்லது ''முத்துவாப்பா'' என்று தாத்தாவை அழைக்கின்றனர். அத்தன் என்ற பழந்தமிழ்ச் சொல்லாலும் இவர்களில் சிலர் அப்பாவைக் குறிக்கின்றனர். அப்பா என்பதைப் போல விளியாக வரும் இன்னொரு சொல் அம்மா. இதன் மூல வடிவம் அம்மை என்பது தான். பிறந்த குழந்தையின் அழுகை விளியிலிருந்து இந்தச் சொல் பிறந்திருக்க வேண்டும். ''அம்மா'' என்ற சொல் ''கேட்பித்தல்'' என்னும் பொருளை உடையது. ''அம்ம கேட்பிக்கும்'' என்று தொல்காப்பியர் கூறுவதும் நோக்கத்தக்கது. தாங்கவியலாத வேதனை, வியப்பு, மகிழ்ச்சி, ஆகிய இடங்களில் தன்னை மறந்து ஒலிக்கும் அம்மா என்ற சொல், '' என்னைப் பாருங்கள், கேளுங்கள்'' என்ற பொருளில்தான் ஒலிக்கப்படுகிறது. குழந்தைகள் கேட்பதற்காகப் பாடப்படும் தாலாட்டிலும் மற்றையோர் கேட்பதற்காகப் பாடப்படும் ஒப்பாரி, கதைப் பாடல் ஆகியவற்றிலும் இந்தச் சொல், ''கேளுங்கள்'' என்ற பொருளில் தான் வழங்கி வருகிறது. பொதுவாகப் பெண்ணைப் பரிவோடு அழைக்கும் சொல்லாகவும் இது வழங்கி வருவதைக் காண்கிறோம்.

தாய் தந்தை என இப்பொழுது வழங்கிவரும் சொற்களின் மூல வடிவம் ஆய் அந்தை என்பதே. தாய் என்பதைத் தாயம் (உரிமை) என்னும் சொல்லோடு தொடர்புபடுத்தி உரிமையுடையவள் தாய் எனச் சிலர் விளக்கம் தருகின்றனர். ஆய் என்பதே மூலச் சொல். ஆயின் ஆய் (பாட்டி) ஆயா(ய்) என அழைக்கப்படுகின்றன. என் தாய், உன் தாய் என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் யாய், ஞாய் ஆகிய சொற்களைக் காண்கிறோம். தன் ஆய் தாய் ஆனது போலவே, தன் அந்தை தந்தையாகி இருக்கிறது. எந்தை, நுந்தை முதலிய இலக்கியச் சொற்களை என்+அந்தை, நும்+அந்தை என்றே பிரித்துக் காண வேண்டும். மரூஉ இலக்கணமாக ஆதன்+தந்தை-ஆந்தை எனக் கொள்ளுதும் தவறு. ஆதன் அந்தை எனக் குறிப்பதே சரி.

பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்ந்த எல். அனந்த கிருஷ்ண ஐயர் தமிழகத்தின் தென்னெல்லைப் பகுதியான பத்மநாபபுரம் பகுதியில் வாழும் மலைவேடன் எனப்படும் பழங்குடி மக்கள், தந்தையை ''அந்தை'' என்றும், பெரியப்பாவை ''வலியந்தை'' என்றும் அழைப்பதைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். மாமன், மாமி, நாத்தூண் நங்கை என வழங்கும் சொற்களின் மூலச் சொற்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை. அண்ணன் மனைவி அண்ணியானது போல மாமன் மனைவி மாமி ஆகியிருக்க வேண்டும். அம்மையுடன் பிறந்தவனைக் (தாய்மாமன்) குறிக்கும் சொல்லாக ''அம்மான்'' வழங்குகிறது. இச்சொல் இன்றும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களிடம் வழங்கிவருகிறது. ''அத்திம்பேர்'', ''அம்மாஞ்சி'' முதலியன பார்ப்பனர்கள் பயன்படுத்திவரும் சொற்களாகும். தந்தையுடன் பிறந்தவளான அத்தையின் மகனைக் குறிக்க ''அத்திம்பேர்'' என்ற சொல்லும், அம்மான் மகனைக் குறிக்க ''அம்மாஞ்சி'' என்ற சொல்லும், வழங்கிவருகின்றன. அம்மாஞ்சி என்ற சொல் அம்மான் சேய் என்பதன் திரிபு. அத்தையன்பர் என்பதே அத்திம்பேர் எனத் திரிந்ததாகச் சிலர் கருதுகின்றனர்.

மைத்துனன், மைத்துனி என வழங்கும் சொற்கள் மைதுன (பாலியல்) உறவின் அடிப்படையில் வந்ததாகும். ''மைதுன'' என்பது வடமொழி, இச்சொல் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இராசராசன் கல்வெட்டுக்களில் ''நன்மச்சுனன்'' என்றே வழக்குச் சொல்லாக வருகிறது. மைத்துனன் நம்பி ''மதுசூதனன்'' என்று பாலியல் உறவுக்குரிய காதலனைக் குறிக்கிறது கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ஆண்டாள் பாசுரம். மைத்துனி என்ற சொல்லே தென் மாவட்டங்களில் ''மதினி'', ''மயினி'' என வழங்கி வருகிறது. திருவாங்கூர்ப் பழங்குடி பழங்குடி மக்களில் சிலரும் இன்றைய மலையாளிகளும் ''மைத்துனன்'' என்பதற்கு மாற்றாக ''அளியன்'' என்ற சொல்லை வழங்கி வருகின்றனர். இதற்குக் ''கனிவுக்கும் அன்புக்கும் உரியவன்'' என்று தமிழ் இலக்கிய மரபினை உணர்ந்தவர்கள் பொருள் கூறுகின்றனர். மைத்துனன் என்பதனைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்லாக இதனையே கொள்ள முடிகிறது.


வித்யாசாகர்

unread,
Jul 27, 2014, 9:02:29 PM7/27/14
to vall...@googlegroups.com, mintamil
நன்றி திரு. செல்வன் மற்றும் திரு. சேசாத்திரி..

வித்யாசாகர்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
Sent from iPhone

தேமொழி

unread,
Jul 27, 2014, 9:52:09 PM7/27/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


மனைவிக்குரிய பிறபெயர்கள் பட்டியலில் "துணைவி" விடுபட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் :-|


..... தேமொழி

செல்வன்

unread,
Jul 27, 2014, 10:40:30 PM7/27/14
to vallamai, mintamil

2014-07-27 20:52 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மனைவிக்குரிய பிறபெயர்கள் பட்டியலில் "துணைவி" விடுபட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் :-|


துணைவி என்பது மனைவியை குறிக்காது :-)

"தயாளு அம்மாள் எனது மனைவி. ராசாத்தி அம்மாள் எனது துணைவி" என கலைஞர் இச்சொற்களுக்கு முன்பு ஒரு விளக்கம் அளித்திருந்தார் :-)


--


கண்டங்கள் கண்டுவியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும் !

N. Ganesan

unread,
Jul 28, 2014, 12:37:42 AM7/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Sunday, July 27, 2014 5:10:11 PM UTC-7, செல்வன் wrote:
பழமைபேசி

தந்தை, அப்பன், தமப்பன், தகப்பன், அத்தன், அச்சன், ஆஞான், ஆஞி, இஅயன், தா, நாயன்

தாய்/ஆய் (=மாதா) போல,  பிதாவுக்கு தை/ஐ என்ற பெயர்கள் முக்கியமானவை.

இளம்பூரணர் போல தொல்காப்பியம் முழுமைக்குமாய் உரை இயற்றியவர் பாவலரேறு பாலசுந்தரனார் (கரந்தை தமிழ்க் கல்லூரி).
எந்தை = எம் +தை, நுந்தை = நும் + தை, முந்தை = முன் +தை என்று பிரியும் என்று எழுதியுள்ளார்.


 தந்தை என்னும் படர்க்கைச் சொல் ஆசிரியர் நூல்
செய்த காலத்து மூவிடத்திற்கும் உரிய பெயராக வழங்கி வரலாயிற்று எனத்
தெரிகின்றது.   தன்மைப்பெயர்   எந்தை,    முன்னிலைப்பெயர்   நுந்தை
என்பனவாகும்.  இவற்றுள் தம்,  நும்,  எம்  என்பவை இடத்தைக் குறித்து
நின்று  ‘தை’  என்னும்  முறைப்பெயரொடு  புணர்ந்து   ஒரு  சொல்லாய்
அமைந்துள்ளமை புலனாகும். ஏனைப் பெயர்களும் இவ்வாறே; யாய், ஞாய்,
தாய் எனவும் எங்கை, நுங்கை, தங்கை எனவும் எம்பின்,  நும்பின், தம்பின்
எனவும்   அமைந்துள்ளமை  காணலாம்.   எனவே,   சாத்தன்   முதலாய
பெயர்களின் முன்வந்து  புணர்ந்த  முறைப்பெயர்   ‘தை’   என்பதேயாம்.
அதனான்  சாத்தன்  -  தை, என்பவை  நிலைமொழி ஈறு, வருமொழியின்
கிளையொற்றாக மாறிச்  சாத்தந்தை எனப்  புணர்ந்து நிற்பதை அறியலாம்.
தொல்லோர்     வகுத்தமரபு    நோக்கி   ஆசிரியர்   ‘தை’   என்பதை
வருமொழியாகக்  கூறாமல், தந்தை  என்பதையே  கொண்டு  கூறியுள்ளார்
என்க.


அடுத்த பக்கம் (பாவலரேறு பாலசுந்தரனார் காண்டிகையுரை)

ஆதன்,  பூதன்  என்பவற்றின்  முதனிலையாகிய  குறைஉரிச் சொற்கள்
ஆத்,  பூத் என்பவையாகலின்  அவை  மெலிந்து  தை என்பதனொடு கூடி
ஆந்தை, பூந்தை  என  நின்றமையறிக. இதுவும்  தொல்லோரது  வழக்காறு
நோக்கிக் கூறிய இலக்கணமே என்க.

 
நா. கணேசன்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 28, 2014, 12:39:52 AM7/28/14
to vallamai, mintamil
வாழ்க்கைத் துணை நலம் வள்ளுவர் தந்திருக்கிறார். (குடும்பம் பற்றிய கலைஞர் எண்ணப் போக்குத் தள்ளப்படவேண்டியது)

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

தேமொழி

unread,
Jul 28, 2014, 12:52:23 AM7/28/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
ஆம் உண்மை ஐயா, அது பழமை பேசியை வம்பிற்கிழுக்க எழுதியது.  

..... தேமொழி

N. Ganesan

unread,
Jul 28, 2014, 9:43:02 AM7/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Sunday, July 27, 2014 9:39:57 PM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
வாழ்க்கைத் துணை நலம் வள்ளுவர் தந்திருக்கிறார். (குடும்பம் பற்றிய கலைஞர் எண்ணப் போக்குத் தள்ளப்படவேண்டியது)

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்



துணைவி = மனைவி என்ற பொருளில் ஏராளமான பாடல்களில் பல நூற்றாண்டுகளாய் உள்ளன.

சி. ஜெயபாரதன்

unread,
Jul 28, 2014, 10:38:15 AM7/28/14
to vallamai, mintamil
நாடார்கள் வழக்கில் பயன்படுத்தும் சொற்கள்

அம்மாவின் அம்மா -   ஆய்ச்சி, அம்மம்மா
அப்பாவின் அம்மா -   ஐயாம்மா.

அம்மாவின் அப்பா - தாத்தா
அப்பாவின் அப்பா - பாட்டையா, பாட்டனார்

சி. ஜெயபாரதன்

N. Ganesan

unread,
Jul 28, 2014, 11:12:47 PM7/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Sunday, July 27, 2014 5:11:21 PM UTC-7, செல்வன் wrote:

உறவுப்பெயர்கள் - தொ. பரமசிவன்


நல்ல கட்டுரை அளித்தமைக்கு நன்றி. திரு. செல்வன்.

> உறவுப்பெயர்கள் - தொ. பரமசிவன்
> உறவுப் பெயர்கள் தமிழில் இடம், சாதி, சாதிக்குரிய மண உறவு முறைகள் 
> ஆகியவை காரணமாகப் பல்வேறு வகைப்பட்டு விளங்குகின்றன. பொதுவாகத் 
> திராவிட மொழி பேசும் மக்கள் மண உறவுக்குரிய மாற்று உறவுகளைக் 
> கொண்டுள்ளனர். எனவே உறவுமுறைச் சொற்களின் வகையும் பெருக்கமும் 
> தமிழில் மிகுதியாகவே உள்ளன.

[...]

> அப்பனின் அப்பனைக் குறிக்க ''மூத்தப்பன்'' என்ற சொல் வழங்கி வந்திருக்கிறது. 
> ''எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்'' என்பது பெரியாழ்வார் பாசுரம், 
> இன்றும் மூத்தப்பன் என்னும் சொல் மலையாளத்தில் தாத்தாவைக் குறிக்கவே 
> வழங்குகிறது. பந்தல்குடியில் கிடைத்த முதல் இராசராசன் காலத்து 
>வட்டெழுத்துக் கல்வெட்டில் தாத்தாவையும் பாட்டியையும் குறிக்க ''முத்தப்பன்''
> ''முத்தம்மை'' என்ற சொற்கள் ஆளப்பட்டுள்ளதைக் கல்வெட்டறிஞர் 
>வெ. வேதாசலம் எடுத்துக்காட்டுகிறார். தமிழ் முசுலிம்களில் சிலர் ''மூத்தவாப்பா'' 
> அல்லது ''முத்துவாப்பா'' என்று தாத்தாவை அழைக்கின்றனர். 
>அத்தன் என்ற பழந்தமிழ்ச் சொல்லாலும் இவர்களில் சிலர் அப்பாவைக் 
> குறிக்கின்றனர். அப்பா என்பதைப் போல விளியாக வரும் இன்னொரு சொல் 
> அம்மா. இதன் மூல வடிவம் அம்மை என்பது தான். பிறந்த குழந்தையின் 
> அழுகை விளியிலிருந்து இந்தச் சொல் பிறந்திருக்க வேண்டும். ''அம்மா'' 
> என்ற சொல் ''கேட்பித்தல்'' என்னும் பொருளை உடையது. ''அம்ம கேட்பிக்கும்'' 
>என்று தொல்காப்பியர் கூறுவதும் நோக்கத்தக்கது. தாங்கவியலாத வேதனை, 
> வியப்பு, மகிழ்ச்சி, ஆகிய இடங்களில் தன்னை மறந்து ஒலிக்கும் அம்மா 
>என்ற சொல், '' என்னைப் பாருங்கள், கேளுங்கள்'' என்ற பொருளில்தான் 
>ஒலிக்கப்படுகிறது. குழந்தைகள் கேட்பதற்காகப் பாடப்படும் தாலாட்டிலும் 
>மற்றையோர் கேட்பதற்காகப் பாடப்படும் ஒப்பாரி, கதைப் பாடல் 
>ஆகியவற்றிலும் இந்தச் சொல், ''கேளுங்கள்'' என்ற பொருளில் தான் வழங்கி 
>வருகிறது. பொதுவாகப் பெண்ணைப் பரிவோடு அழைக்கும் சொல்லாகவும் 
>இது வழங்கி வருவதைக் காண்கிறோம்.

பிறந்த குழந்தை பேசத் தொடங்கும்போது தாய், மாமன், தந்தை முகம்பார்த்துப் பேச ஆரம்பிக்கிறது. உதடுகள் ஒட்டும் எழுத்துக்கள் மா, பா எனவே தான் உலக மொழிகள் பலவற்றிலும் மா, பா என அப்பா, அம்மா பெயர்கள் உள்ளன. தமிழின் விசேஷம் அம்- என்னும் முன்னொட்டு. அதுபற்றி நிறையச் சொல்லலாம்.

>தாய் தந்தை என இப்பொழுது வழங்கிவரும் சொற்களின் மூல வடிவம் ஆய் 
>அந்தை என்பதே. தாய் என்பதைத் தாயம் (உரிமை) என்னும் சொல்லோடு 
>தொடர்புபடுத்தி உரிமையுடையவள் தாய் எனச் சிலர் விளக்கம் தருகின்றனர். 
> ஆய் என்பதே மூலச் சொல். ஆயின் ஆய் (பாட்டி) ஆயா(ய்) என
> அழைக்கப்படுகின்றன. என் தாய், உன் தாய் என்ற பொருளில் சங்க 
>இலக்கியத்தில் யாய், ஞாய் ஆகிய சொற்களைக் காண்கிறோம். 
>தன் ஆய் தாய் ஆனது போலவே, தன் அந்தை தந்தையாகி இருக்கிறது. 
>எந்தை, நுந்தை முதலிய இலக்கியச் சொற்களை என்+அந்தை, நும்+அந்தை 
>என்றே பிரித்துக் காண வேண்டும். மரூஉ இலக்கணமாக 
>ஆதன்+தந்தை-ஆந்தை எனக் கொள்ளுதும் தவறு. ஆதன் அந்தை 
>எனக் குறிப்பதே சரி.

எந்தை = என் + அந்தை, நுந்தை = நும் + அந்தை என்று பிரிக்கவேண்டியதில்லை.
என்+அந்தை என்னந்தை, நும்+அந்தை நும்மந்தை என்றாகும்.

சென்னைப் பல்கலை எந்தை = என் + தை என்று பிரித்துக்காட்டுகிறது.
எந்தை entai , n. < என் + தை suff. 1. My father, our father; also used courteously in addressing an elder;

தொல்காப்பியம் - காண்டிகையுரை:
”தொண்ணூறு   -   தொள்ளாயிரம்   முதலிய  புணர்
மொழிகளைப்  போலச்   சாத்தந்தை  முதலியவற்றிற்கும்   கூறியுள்ளவிதி
தொல்லோர் மரபென்க. தந்தை என்னும் படர்க்கைச் சொல் ஆசிரியர் நூல்
செய்த காலத்து மூவிடத்திற்கும் உரிய பெயராக வழங்கி வரலாயிற்று எனத்
தெரிகின்றது.   தன்மைப்பெயர்   எந்தை,    முன்னிலைப்பெயர்   நுந்தை
என்பனவாகும்.  இவற்றுள் தம்,  நும்,  எம்  என்பவை இடத்தைக் குறித்து
நின்று  ‘தை’  என்னும்  முறைப்பெயரொடு  புணர்ந்து   ஒரு  சொல்லாய்
அமைந்துள்ளமை புலனாகும். ஏனைப் பெயர்களும் இவ்வாறே; யாய், ஞாய்,
தாய் எனவும் எங்கை, நுங்கை, தங்கை எனவும் எம்பின்,  நும்பின், தம்பின்
எனவும்   அமைந்துள்ளமை  காணலாம்.   எனவே,   சாத்தன்   முதலாய
பெயர்களின் முன்வந்து  புணர்ந்த  முறைப்பெயர்   ‘தை’   என்பதேயாம்.
அதனான்  சாத்தன்  -  தை, என்பவை  நிலைமொழி ஈறு, வருமொழியின்
கிளையொற்றாக மாறிச்  சாத்தந்தை எனப்  புணர்ந்து நிற்பதை அறியலாம்.
தொல்லோர்     வகுத்தமரபு    நோக்கி   ஆசிரியர்   ‘தை’   என்பதை
வருமொழியாகக்  கூறாமல், தந்தை  என்பதையே  கொண்டு  கூறியுள்ளார்
என்க.”

ஆதன் + தை = ஆந்தை, பூதன் + தை = பூந்தை என்பதற்கான சூத்திரமும் தொல்காப்பியரில்
 உண்டு. அதற்கு காண்டிகை உரையாசிரியர் “தை” என்னும் முறைப்பெயருடன் விளக்கியிருக்கிறார்.

ஆதன்,  பூதன்  என்பவற்றின்  முதனிலையாகிய  குறைஉரிச் சொற்கள்
ஆத்,  பூத் என்பவையாகலின்  அவை  மெலிந்து  தை என்பதனொடு கூடி
ஆந்தை, பூந்தை  என  நின்றமையறிக. இதுவும்  தொல்லோரது  வழக்காறு
நோக்கிக் கூறிய இலக்கணமே என்க.”

அம்- என்ற முன்னொட்டு அழகு, மரியாதை நிமித்தமாகத் தமிழில் வரும். சில காட்டுகள் தருகிறேன். (1) அம்மணி (2) அம்மங்கை (அம்மங்காதேவி, அம்மங்கையார் (அம்மங்கார்) (3) அம்+தணன் = அந்தணன் (4) அம்+பட்டன் =அம்பட்டன் (5) அந்தலை (மேடு, கூரை) (6) அம்பணம் (பணை - முரசு), அம்பணவன் (7) அம்புலி (முரசு புலவுண்ணும் காலம் அது. தாளக்கருவி போலிருப்பதால் நிலாவுக்கு ஆகுபெயர்) (8) அங்காளி (அங்காளம்மன்) (9) அங்கணாளன் - தயாநோக்கு உடையவன்; அங்கணி - உமை (அங்கயற்கண்ணி), அங்கணன் - சிவன். etc., 

இதுபோல், மா, பா என்னும் முதற்சொற்கள் அம்மா, அப்பா என்றாயின. 

தை:தா என்பன தந்தைக்கு முறைச்சொற்கள். அம் முன்னொட்டு சேர்ந்து
அம்+தை = அந்தை என்றாகியுள்ளது. எனவே எந்தை = எம் + தை என்று பிரித்துப்
 பொருள்கொள்ளலே முறையாகும். அந்தை என்ற சொல் முதன்மைச் சொல்லன்று 
- அந்தை = அம் + தை எனப் பிரிபடும்.

நா. கணேசன்
 
குறிப்பு: எப்பொழுது பேரா. கு. ஞானசம்பந்தன் (ஜெயா டிவி) வீட்டுக்கு வந்தாலும் தொ.ப. பற்றிச் சொல்வார். வலைப்பதிவுலகம் பிறந்தபோது தமிழ்மணம் திரட்டியை காசி உருவாக்கினார். தமிழின் Blogosphere அறிமுகத்தை நெல்லையில் சிறப்பாகச் செய்தோம். அப்போது தொ.ப. ஐயாவுடன் நானும் நண்பர்களும்:
தொ.ப. இன்டெர்னெட் பக்கம் வருவதில்லை. எனவே ஃபோனில் என் மறுமொழியைச் சொல்வேன். ~NG

பழமைபேசி

unread,
Jul 28, 2014, 11:24:07 PM7/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இஃகிஃகி, 2012ஆம் ஆண்டு இப்படியும் நாங்க பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னமே? சொன்னமே??

அகத்தாள், இல்லாள், மனையாள்
அடுப்பி, அகவாட்டி , அறத்துணைவி
ஆட்டி. சகசரி, சமுசாரம்
சானி, சேர்த்தி, தலைமகள்
எசமானி, தலைவி, துணைவி 
தேவி, நப்பின்னை , நாயகி 
பத்தினி , பாரியை, பிரியை 
பெண்சாதி, பெண்டாட்டி , பொருளாள் 
மகடூஉ , மனைக்கிழத்தி , மனையாள் 
மனைவி, வதுவராளி, வல்லவை 
வனிதை, விருந்தனை, வீட்டாள் 
வீட்டுக்காரி , வீரை, வேட்டாள் 
கண்வாட்டி, சாயி
எனத் தமிழாலே எனக்கு ஆனாய் நீ
நின் பூவிரு விழிகள் விழித்த நாளதில் 
தமிழால் வாழ்த்துகிறேன் நன்றியுடனே!!

-பழமைபேசி

தேமொழி

unread,
Jul 28, 2014, 11:38:43 PM7/28/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
இப்போ இந்த வரிசையில் புதுசா 'தாபப்பூ' என்ற ஒரு வார்த்தையும் உண்டாமே, அப்படியா? :)))

..... தேமொழி

பழமைபேசி

unread,
Jul 28, 2014, 11:42:29 PM7/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ஆகா.... எல்லாமே வரலாற்றுப் பதிவுகளாகுது போல இருக்கே? டேய் பழம, நெம்பக் கவனமா இருக்கணும்டா!!

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 29, 2014, 12:40:44 AM7/29/14
to mintamil, vallamai
2014-07-29 8:54 GMT+05:30 பழமைபேசி <pazam...@gmail.com>:
இஃகிஃகி, 2012ஆம் ஆண்டு இப்படியும் நாங்க பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னமே? சொன்னமே??

அகத்தாள், இல்லாள், மனையாள்
அடுப்பி, அகவாட்டி , அறத்துணைவி
ஆட்டி. சகசரி, சமுசாரம்
சானி, சேர்த்தி, தலைமகள்
எசமானி, தலைவி, துணைவி 
தேவி, நப்பின்னை , நாயகி 
பத்தினி , பாரியை, பிரியை 
பெண்சாதி, பெண்டாட்டி , பொருளாள் 
மகடூஉ , மனைக்கிழத்தி , மனையாள் 
மனைவி, வதுவராளி, வல்லவை 
வனிதை, விருந்தனை, வீட்டாள் 
வீட்டுக்காரி , வீரை, வேட்டாள் 
கண்வாட்டி, சாயி
எனத் தமிழாலே எனக்கு ஆனாய் நீ
நின் பூவிரு விழிகள் விழித்த நாளதில் 
தமிழால் வாழ்த்துகிறேன் நன்றியுடனே!!

ஒன்றைச் சொல்லி ஒழுங்கா கூப்பிட்டாலே உச்சி குளிர்ந்துபோய்விடுவார்கள். இத்தனை சொல்லி இளக வைத்த பழமைபேசி மடந்தையொடு நட்பின் பெருமைபேசி! 

வாழ்க.

பழமைபேசி

unread,
Jul 29, 2014, 2:19:19 AM7/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
நன்றி நன்றி!! நன்றிங்க ஐயா!!

துரை.ந.உ

unread,
Jul 29, 2014, 2:21:07 AM7/29/14
to வல்லமை, Groups
பபே அவர்கள் அவுக வூட்ல இருப்பதாக அறிகிறேன் :))


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

N D Logasundaram

unread,
Jul 29, 2014, 9:29:49 AM7/29/14
to வல்லமை
நன்றி செல்வன் அவர்களுக்கு 

நல்லதொரு பயனுள்ளதும் கருத்துள்ளதுமான  நீண்ட தொகுப்பு 

நூ தா லோ சு 
மயிலை 


N D Logasundaram

unread,
Jul 29, 2014, 10:11:32 AM7/29/14
to mintamil, வல்லமை, thamizayam, தமிழ் மன்றம், Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan
வடக்கில்   ஹிந்துஸ்தானியில் (ஹிந்தியில்) 

தாய்வழி     தந்தை வழி      பாட்டன்    பாபட்டி   களுக்கு 

தனித்தனியாக முறையே 

தாதா    தாதி    நானா    நானி என உள்ளது 

[ வடமொழிகளில் இரண்டுசுழி னகரம் கிடையாதெனினும்
நான் தமிழில் எழுதும்போது ஸ்ரீ நிவாசன்  என்பதை சீனிவாசன்
 என எழுத்துப் போலியாக எழுதுவதுபோல்]

 னா, னி என னகரம் பயன் கொண்டேன்  

இவற்றிற்கு இணையாக முறையே 

அப்பப்பா (அப்பம்மா) (அம்மப்பா) அம்மம்மா

என்பதில் அப்பப்பா அம்மம்மா [சிவப்பு நிறத்தில்] என  உள்ளவை மட்டும் 

ஈழத்தி னர் மற்றும் ,/ ராயவேலூர் (ஆற்காடு) முதலியார்கள் மரபிலும்  வழங்கி வருவதைக்  கேட்ட நினைவு

இதனை நாட்டார்கள் வழக்கு  என திருவாளர் ஜெயபாரதன் குறித்துள்ளதை கவனிக்க  
(அறிந்தவர்கள் உறுதி செய்யலாம் )


இருந்தும்

 பேரன் (பெயரன் )  பேத்திகளுக்கு (பெயர்த்திகளுக்கு)

கொள்ளுப் பேரன் /கொள்ளுப்  பேத்திகளுக்கு 

எள்ளுப் பேரன் எள்ளுப்  பேத்திகளுக்கு

 தனித்தனியாக

மகன் வழி   / மகள்வழி என வேறுபாடு காட்ட சொற்கள் பிறக்கவில்லை

நுணுக்கத் தேவை  இல்லை போலும் இருந்திருந்தால் பிறந்திருக்கும் 


அன்புடன் 
நூ த லோ சு 
மயிலை 



2014-07-29 13:41 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:



2014-07-29 5:24 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:


2014-07-28 11:02 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:

எதற்காக வாழ்க்கைத் துனைவி.. வெறுமனே துணை என பிரயோகம்?
ஒரு வகையில் இது பெண்களை அவமானப் படுத்துவதற்குச் சமமாக நான் காண்கின்றேன்.


அத்தகைய உறவுகள் சமூகத்தில் இருக்கையில் அவர்களை குறிக்க ஒரு சொல் இருப்பது அவசியம் அல்லவா?

ஆங்கிலத்தில் அதிகாரபூர்வமற்ற துணைவியை concubine என்பார்கள். அப்புறம் தமிழில் அவர்களை குறிக்க ஒரு சொல் வேண்டுமல்லவா?

​concubine  என்ற சொல் இப்போது நடைமுறை வழக்கில் உண்டா ?

சரி இரண்டு பெண் துணைகளை வைத்திருக்கும் ஆணுக்கு ஏதும் பெயர் இருக்கின்றதா? அது என்ன? அல்லது 2க்கும் மேல் பெண் துணைகளை வைத்திருக்கும் ஆண்களுக்கு ஏதும் பெயர்கள் உண்டா? 
மனைவியை இழந்த கணவனுக்கு என்ன பெயர்? 

ஆய்வுகளை இந்த வகையிலும் செலுத்துவோமே!

சுபா

கண்டங்கள் கண்டுவியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும் !

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Jul 29, 2014, 11:14:38 AM7/29/14
to tamilmantram, vallamai, mintamil
////இதனை நாட்டார்கள் வழக்கு  என திருவாளர் ஜெயபாரதன் குறித்துள்ளதை கவனிக்க  

(அறிந்தவர்கள் உறுதி செய்யலாம் )///

தமிழகத்தின் தென்பகுதியில் வாழும் நாடார் [நாட்டார் அல்லர்] குல வழக்கியல் அவை:

ஆய்ச்சி, அம்மா, அம்மாமா, ஐயா, அப்பா, அம்மையார், ஐயாம்மா, பாட்டையா, பெரியப்பா, தாத்தா, சித்தப்பா, சித்தி, அக்காள், தங்கை, தங்கச்சி, அண்ணி, மதினி, அத்தாச்சி, அத்தை, மாமியார், மாமனார், கொழுந்தன், மைத்துனன், [மச்சினன்], மைத்துனி, மைந்தன், மாப்பிள்ளை, மாப்பிள்ளைத் தோழன், மூதாட்டி போன்றவை.
 
சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

N D Logasundaram

unread,
Jul 29, 2014, 11:18:43 AM7/29/14
to வல்லமை
சொற்பிழையை திருத்தியமைக்கு
 நன்றி திரு ஜெயபாரதன் அவர்களே 

அன்புடன் 
நூதலோசு 
மயிலை 



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Jul 29, 2014, 12:28:10 PM7/29/14
to vallamai

2014-07-29 8:29 GMT-05:00 N D Logasundaram <selvi...@gmail.com>:
நன்றி செல்வன் அவர்களுக்கு 

நல்லதொரு பயனுள்ளதும் கருத்துள்ளதுமான  நீண்ட தொகுப்பு 

நன்றி ஐயா. நன்றி பழமைபேசி அண்னாச்சிக்கு


--


சி. ஜெயபாரதன்

unread,
Jul 29, 2014, 4:36:37 PM7/29/14
to mintamil, vallamai
///நம் குழுமத்தில் உள்ள ஏனையோரும் ஏன அத்தகைய ஆண்களுக்கென்று  ஒரு தனிப்பெயர் நம் சமூகத்தில் கொடுக்கப்படவில்லை என்ற காரணத்தைச் சொல்லலாமே..////


சுமார் 3000 ஆண்டுகட்கு முன் அரசாண்டு, மனைவியை நாடு கடத்திய, அவதாரத் தேவனாக வணங்கபடும், இராமன் முதல், [தமிழ்த் தத்துவஞானி வள்ளுவர் உட்பட,] தற்காலம் ஆளும் பகுத்தறிவு வாதிகள் வரை ஏறக் குறைய அனைவரும் ஆணாதிக்க நெறியில் ஓரளவு கொடுங்கோல் ஆட்சி செய்தவரே !  பெண்டிர் இனத்தார் இரண்டாம் வகுப்பு மனிதப் பிறவிகளாக நடத்தப்பட்டு வருகிறார்..

தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை !

இதற்கு என் தனிப்பட்ட பொருள் :

பதியைக் காலையில் தொழுதெழும் உத்தம மாது பெய்யென்றால் உடனே மழை பெய்யாது என்று தத்துவ மேதை வள்ளுவருக்குத் தெரியாதா ?  வள்ளுவர் தன் குறளில் என்ன சொல்லாமல் சொல்கிறார் ?

அதாவது அவரது காலத்திலும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று பேணாதவள் மனைவி. பெண் பதி சொல்லைக் கேளாதவள், மீறியவள் என்பது வள்ளுவர் கூற்று.  அவரது மனைவி வாசுகி அம்மையும் காலையில் வள்ளுவரைத் தொழுது எழவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.  

இந்தக் குறள் வள்ளுவர் வாசுகி அம்மையாருக்கு எழுதியது என்பது என் ஆழ்ந்த யூகம்.  

வள்ளுவர் சொல்வதுபோல், கணவன் மனைவியின் வணக்கத்துக்கு உரிய தெய்வமா ?  இது 21 ஆம் நூற்றாண்டின் நகைச்சுவைப் பாவென்று ஒதுக்கப்படும் !!! 

சி. ஜெயபாரதன். 

   


2014-07-29 13:59 GMT-04:00 Suba.T. <ksuba...@gmail.com>:



2014-07-29 19:51 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:


கேள்வியை மாற்றிக் கேட்டுப் பாருங்கள் சுபா.

நீங்கள் சிறந்த பெண் என்று (புராணம், இலக்கியம், வரலாற்று, தற்காலம் அனைத்தும் உட்பட)  கருதும் பெண் யார் என்று கேட்டுப் பாருங்கள்.

வரும் பதில்கள் எவ்வாறு மக்கள் மூளைச்சலவை (ஆண் பெண் உட்பட) செய்யப்பட்டவர்கள், பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்று வரையறைக்குள் அடைக்க நினைக்கிறார்கள் என்பது புரியும்.
​இது தெரிந்தது தானே தேமொழி. :-)

செல்வன் மட்டுமல்ல - நம் குழுமத்தில் உள்ள ஏனையோரும் ஏன அத்தகைய ஆண்களுக்கென்று  ஒரு தனிப்பெயர் நம் சமூகத்தில் கொடுக்கப்படவில்லை என்ற காரணத்தைச் சொல்லலாமே..
சொல் இருக்கின்றதா என தெரிந்தவர் யாரும் குறிபிடட்டும்
அப்படி இல்லை என்று உறுதியாகும் போது ஏன் இல்லை என்ற காரணத்தை ஆராயத் தொடங்கலாமே.. 

சுபா



..... தேமொழி





On Tuesday, July 29, 2014 10:42:49 AM UTC-7, Suba.T. wrote:



2014-07-29 18:29 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:

2014-07-29 8:56 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:

​தமிழ் துணைவியில் தானே நமது உரையாடல் ஆரம்பித்தது. இந்த ஆண்களின் பெயர்களுக்கு தமிழ் பெயர்களைத் தாருங்கள். தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.


தமிழில் இவர்களை குறிக்கும் பெயர்கள் எதுவும் கிடையாது.

​அது ஏன் ?

​பெண்களுக்கு மட்டும் பெயர் வைத்து சில வேளைகளில் அப்பெயருக்கு அசிங்கமாகப் பொருளும் கொடுத்து முகம் சுளிக்க வைத்து பெண்களை மனம் வருந்தச் செய்யும் நம் சமூகத்தில் இப்படி சில உறவுப் பெயர்கள் உலாவரும் போது இப்படி 2 மனைவியர் உள்ள கணவர், 2க்கு மேல்பட்ட எண்ணிக்கையில் துணைவிகளைக் கொண்ட ஆண்மக்கள், மனைவியை இழந்த ஆண்மகன் ஆகியோருக்கு பெயர் ஏன் நம் சமூகம் கொடுக்கவில்லை?


சுபா



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

சி. ஜெயபாரதன்

unread,
Jul 29, 2014, 6:22:47 PM7/29/14
to mintamil, vallamai
தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை !

இது ஒருவித வஞ்சப் புகழ்ச்சி அணி.

வாசுகியை வள்ளுவர் விளிக்க ஏறிய கிணற்று நீர்வாளியை அந்தரத்தில் தொங்க வைத்து விரைந்தாள் வாசுகி என்பது கதை.  

கணவன் விளிக்க கடிது விரைந்தாள்
கிணற்றுநீர் வாளிநிற்கும் மேல் !

இப்படி ஒரு குறள் வள்ளுவர் எழுதாது விட்டது.

சி. ஜெயபாரதன். 

N. Ganesan

unread,
Jul 29, 2014, 8:57:25 PM7/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Monday, July 28, 2014 8:24:05 PM UTC-7, பழமைபேசி wrote:
இஃகிஃகி, 2012ஆம் ஆண்டு இப்படியும் நாங்க பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னமே? சொன்னமே??

அகத்தாள், இல்லாள், மனையாள்
அடுப்பி, அகவாட்டி , அறத்துணைவி
ஆட்டி. சகசரி, சமுசாரம்
சானி, சேர்த்தி, தலைமகள்
எசமானி, தலைவி, துணைவி 
தேவி, நப்பின்னை , நாயகி 
பத்தினி , பாரியை, பிரியை 
பெண்சாதி, பெண்டாட்டி , பொருளாள் 
மகடூஉ , மனைக்கிழத்தி , மனையாள் 
மனைவி, வதுவராளி, வல்லவை 
வனிதை, விருந்தனை, வீட்டாள் 
வீட்டுக்காரி , வீரை, வேட்டாள் 
கண்வாட்டி, சாயி


மனைவி கண்ணை வாட்டமாட்டாள்.

கணவாளன் > கண்வாளன், கணவாட்டி > கண்வாட்டி (cf. கணவன்)
- யாழ் வழக்கு போலும்.

நா. கணேசன்
 
எனத் தமிழாலே எனக்கு ஆனாய் நீ

நின் பூவிரு விழிகள் விழித்த நாளதில் 
தமிழால் வாழ்த்துகிறேன் நன்றியுடனே!!

பழமைபேசி

unread,
Jul 29, 2014, 11:03:01 PM7/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கண்ணுக்குள்ளயே வெச்சிப் போற்றுபவளா இருக்கலாமுங்ணா... கொஞ்சம் நல்லாப் பாருங்க. :-))

தேமொழி

unread,
Jul 29, 2014, 11:12:43 PM7/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

http://youtu.be/_q3jnFCVI6c  <<< செய்பவர்களாக இருக்கலாமோ ? 
:))

N. Ganesan

unread,
Jul 29, 2014, 11:31:20 PM7/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Tuesday, July 29, 2014 8:12:40 PM UTC-7, தேமொழி wrote:

http://youtu.be/_q3jnFCVI6c  <<< செய்பவர்களாக இருக்கலாமோ ? 
:))



கள்- என்பதே கணவன் என்ற சொல்லுக்கு வேர் என தெரிகிறது.
களம் = மனைவி (பிங்கலந்தை நிகண்டு). களவன் > கணவன்.
களிறு, காளை, களவன் - peak of adolescence. 
இதனால், கள- களபம்/களகம் - கூடுதல்/கலத்தல்.
கள், களி(ப்பு), களவன் > கணவன்.

கள்விரியும் மலர் களவிரி கணவிரி கரவீரம் எனப்படுகிறது.
-ள்-/-ண்-/-ர்- சொற்களில் ஒன்று. நாளணன் > நாரணன் ஆதற்போல்
களவிரி > கணவிரி/கரவீரம் (தேவார ஸ்தலம்).
இதை நாகசாமி ஐயாவுக்கு விளக்கியபோது காஞ்சி
மகாபெரியவர் அவருக்குச் சொன்ன விளக்கம் சொன்னார்.
சுப்பளம் (உப்பளம்) > சொப்பர என்று கிரேக்கர்கள் கேட்டு
அவ்வூரை எழுதியுள்ளனர்:
விளக்கம் இங்கே:

நா. கணேசன்

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jul 30, 2014, 7:14:39 AM7/30/14
to tamilmanram kuzhu, vallamai, mintamil
​concubine - காமக்கிழத்தி
--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jul 30, 2014, 7:26:45 AM7/30/14
to tamilmanram kuzhu, vallamai, mintamil
அப்பாவின் அப்பாவை ஐயா என்றும் அப்பாவின் அம்மாவை அப்பத்தா என்று சொல்லும் பழக்கம் இன்றும்  உள்ளது.
சில பகுதிகளில் ஆச்சி என்பது அப்பாவின் அம்மாவைக் குறிக்கவும்  பாட்டி என்பது அம்மாவின் அம்மாவைக் குறிக்கவும் பயன்பாட்டில் உள்ளன. ஆயி என்றும் பாட்டியைக் குறிக்கின்றனர்.

யாய் - என் தாய்
 ஞாய் - உன் தாய்
 எந்தை - என் தந்தை
 நுந்தை - உன் தந்தை

என்னும் வே று பாட்டை ச் செ ம்புலப் பெ யல் நீர்ப்பாடல் மூலம் உணரலாம்.

சகலை என்பதன் தமிழ்ச்சொல் உடன் மருகர் என்பது பலர் அறியாதது.

மனை வி யை வாழ்க்கை த் துணை எனக் குறிப்பதன் சிற ப்பை உணரா மல் கிண்டல் செ ய்வது தவறு.

N. Ganesan

unread,
Jul 30, 2014, 9:07:43 AM7/30/14
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com, மு இளங்கோவன்
On Wednesday, July 30, 2014 4:14:39 AM UTC-7, இலக்குவனார் திருவள்ளுவன் wrote:
​concubine - காமக்கிழத்தி



concubine - தமிழர் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு எப்பொழுதும் வகித்துள்ளனர்.

கழகக் கட்சிகள் தலைவர்கள் கருணாநிதி, எம்ஜிஆர் துணைவியர் தம் பங்குகளை
தமிழ் மக்களுக்கு அரசியலில் எப்பொழுதும் உண்டு. கூத்தியாள் என்பது concubine 
என்பதன் ஒரு பெயர் என்கிறது சென்னைப் பல்கலைப் பேரகராதி. மன்னர்கள்
பலருக்கும் கூத்தியாள்கள் பலர் வரலாற்றில் இருந்துள்ளனர் என்பது கல்வெட்டுச் சேதி.
பிரதமர் மோதியின் துணைவி பற்றிய செய்தியும் அண்மையில் பிபிசியில் பார்த்தோம்.

concubine - இதற்கான 25 நல்ல தமிழ்ச் சொற்களை சென்னைப் பல்கலைப் பேரகராதி
வழங்குகிறது:

ஆசைக்கிழத்தி, இற்பரத்தை, வரைவின்மகள், காமக்கிழத்தி, கூத்தி, கையிணக்கம், கொண்டி, சிறுதாலி, தாசி, தாட்டி, தொடுப்பு, தொத்து, பரிக்கிரகம், வைப்பு, வங்கணத்தி, ஆசைநாயகி, சோரநாயகி, ... இன்ன பல.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 30, 2014, 9:25:06 AM7/30/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
On Tuesday, July 29, 2014 3:22:47 PM UTC-7, ஜெயபாரதன் wrote:

தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை !

இது ஒருவித வஞ்சப் புகழ்ச்சி அணி.

வாசுகியை வள்ளுவர் விளிக்க ஏறிய கிணற்று நீர்வாளியை அந்தரத்தில் தொங்க வைத்து விரைந்தாள் வாசுகி என்பது கதை.  

கணவன் விளிக்க கடிது விரைந்தாள்
கிணற்றுநீர் வாளிநிற்கும் மேல் !

இப்படி ஒரு குறள் வள்ளுவர் எழுதாது விட்டது.


மிகவும் பிற்காலக் கதை. பின் தூங்கி முன் எழும் பேதை என்றெல்லாம் வரும் வெண்பாவில் உள்ள காலப்பிழைகளை
காட்டியவர் பேரா. ச. வையாபுரிப்பிள்ளையவர்கள். வ-வா என்பதற்காக வாசுகி என்று பெயர் கொடுத்துள்ளனர்.

இக்குறளைச் சிலம்பிலும் (கண்ணகி கணவனுக்காக அனைத்தையும் கொடுத்தவள் ஆயிற்றே), மேகலையிலும்
மேற்கோள் காட்டியுள்ளனர்.

பெண்ணின் மார் என்பதும், மாரி என்பதும் ஒப்பிடத்தக்க சொற்கள். பழைய நம்பிக்கை.

நா. கணேசன்

 
சி. ஜெயபாரதன். 

N. Ganesan

unread,
Jul 30, 2014, 9:57:46 AM7/30/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Monday, July 28, 2014 8:38:43 PM UTC-7, தேமொழி wrote:
இப்போ இந்த வரிசையில் புதுசா 'தாபப்பூ' என்ற ஒரு வார்த்தையும் உண்டாமே, அப்படியா? :)))

..... தேமொழி



தாபப்பூ - நல்ல வடசொல். பாடல் கேட்டேன்:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 30, 2014, 10:41:31 AM7/30/14
to mint...@googlegroups.com, vallamai


On Tuesday, July 29, 2014 11:00:34 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:


2014-07-29 18:29 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:

2014-07-29 8:56 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:

​தமிழ் துணைவியில் தானே நமது உரையாடல் ஆரம்பித்தது. இந்த ஆண்களின் பெயர்களுக்கு தமிழ் பெயர்களைத் தாருங்கள். தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.

தமிழில் இவர்களை குறிக்கும் பெயர்கள் எதுவும் கிடையாது.

​அது ஏன் ?

​பெண்களுக்கு மட்டும் பெயர் வைத்து சில வேளைகளில் அப்பெயருக்கு அசிங்கமாகப் பொருளும் கொடுத்து முகம் சுளிக்க வைத்து பெண்களை மனம் வருந்தச் செய்யும் நம் சமூகத்தில் இப்படி சில உறவுப் பெயர்கள் உலாவரும் போது இப்படி 2 மனைவியர் உள்ள கணவர், 2க்கு மேல்பட்ட எண்ணிக்கையில் துணைவிகளைக் கொண்ட ஆண்மக்கள், மனைவியை இழந்த ஆண்மகன் ஆகியோருக்கு பெயர் ஏன் நம் சமூகம் கொடுக்கவில்லை?

இரண்டு பெண்டாட்டிக்காரனை முருகன் மாதிரி என்றும் 2க்கு மேலென்றால் கிருஷ்ணன் மாதிரி என்றும் கேலியாகச் சொல்வதுண்டு. 
கடவுள் பெயரைக் கூறுவதால் இது போற்றுதல் இல்லை. எள்ளலே. 
சொற்கள் சமூகம் கொடுக்காததால் ஒழுக்கம் தவறியவர்களைச் சமுதாயம் கண்டுகொள்ளவில்லை என்பதில்லை. மக்கள் மனதில் இவர்களை நேரடியாகவோ அல்லது மனதளவிலோ ஒரு படி இறக்கியே பார்க்கப்பட்டுள்ளனர். என்றும் பீடு இல்லை.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

 ஆம் ஐயா. பல துணைவியர் கொள்கையை விரிவாகக் கடைப்பிடித்தவர்கள் சங்ககாலத்தில் கிழார்கள். ஊரன் என்று மருதத்திணையில் ஏராளமான பாடல்கள் உள்ளன. Go-betweens என்று குறிப்பிடும் பாங்கன் தொழிலை பாணன், விறலி, ... என்று செய்தனர். இதனைக் குலமகள் ஆகிய தலைவி கடிவாள் - சங்க இலக்கியத்தில். சங்கத்தின் அற்புதமே வாழ்க்கையை அசலாகப் படம்பிடிக்கும் மருதத்திணைப் பாடல்கள் என்று சொல்லலாம். பிற்காலத்தில் இவ்வகையிலான அகப்பாடல்கள் சம்ஸ்கிருத இலக்கியத்திற்குச் செல்கின்றன. 

திரு. செல்வன் இல்லையென்று சொன்னாலும் தமிழ் இலக்கியத்தில் இதற்கெல்லாம் நல்ல பெயர்கள் இருக்கின்றன. அன்றாட வாழ்க்கையிலும் பலவகையான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல தமிழ்ச் சொற்களோடு ஆங்கிலச் சொற்களும் சேர்கின்றன:
உதாரணம் - Concubine என்பதற்கு கொங்குநாட்டில் நூறாண்டுகளாக ப்லெஸர் கார் போன்றவை அறிமுகம் ஆகிவிட்டபடியால் ஸ்டெப்பினி என்ற சொல்லும் பரவலாகப் பயன்படுத்துவதும் சிறார்ப்பருவத்திலிருந்தே கேட்டுள்ளேன். ஸ்டெப்பினி திசைச்சொல்.

சங்க கால வாழ்க்கையை மாற்ற சமணர்கள் சங்கம் மருவிய காலத்தைத் தோற்றுவித்தார்கள். பள்ளிக் கல்வியும், அதில் சிறார்களுக்குக் கற்பிக்க நூல்களும் உருவாக்கினர். சமணக் குரத்தியார் ஔவையார் ஆத்திசூடி எழுதியருளினார். அதை 1500 ஆண்டுகளாக கற்றுக்கொடுத்து தமிழ்க்கல்வி வித்யாரம்பம் ஆகிறது. ஆத்திசூடி அமர்ந்த தேவன் பார்சுவநாதர் என்பதை அவர் வரலாறும், கலைவரலாறும் காட்டுவதை சில கலைப்படைப்புகள் உதாரணமாகக் கொடுத்தேன், இன்னும் பல உள. திருவள்ளுவர்தான் முதன்முதலில் ஆண்களை குலமகளிர் போல ஒருதுணையுடன் இருக்க வலியுறுத்தியவர் ஆவார்:

         ஒருமை மகளிரே போலப் பெருமையும் 
         தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும் (மு.வ.).
சமணர்கள் பரத்தமை உடைய ஆண்களைப் புறக்கணித்தனர். ஒருமை விரதராய் ஆண்களை வாழச் செய்ய வழிவகுத்தது தமிழில் சமண சமயம்தான். முதலில் செய்தவர் திருவள்ளுவர். அடுத்ததாக, இளங்கோ அடிகள் எழுதிய நாவலின் மூலம் வலியுறுத்துகிறார்.
இதிகாசங்களில் ஏகபத்னி விரதனாகிய இராமனை விட்டுவிடுகிறார், மகாபாரதத்தில் கோபாலனை எடுத்துக்கொள்கிறார். கண்ணனுக்குப் 16000 துணைவியர்கள். எனவே, கிருஷ்ணன் என்று கோவலனை (இது தமிழ்ப்பெயர், காவலன், நாவலன், பாவலன் போல) ஹீரோ ஆக்குகிறார். பலதார மணம் கொண்டவன் க்ருஷ்ணன் ஆதலால் சமணக் காப்பியங்களில் பெரிதாகக் கிருஷ்ணன் கொண்டாடப்பெறுவதில்லை - வடக்கே. அதேபோல, இளங்கோ அடிகளும் தன் நாவலில் ஹீரோவை பொற்கொல்லன் சாட்சியத்தால் கொல்லப்படுகிறான். முல்லை என்பது கற்புக்கு அடையாளம். இலக்குமியின் பெயர்களில் ஒன்றாகிய கர்ணகி/கண்ணகி. முல்லைக்கு ஸப்ஸ்டிட்யூட் எப்பொழுதும் குருக்கத்தி. இதன் வடமொழிப்பெயர் மாதவி. எனவே, கணிகைக்கு மாதவி என்ற பெயர் அளிக்கிறார் சிலம்பு நாவலில். கண்ணகி லக்குமி அவதாரம் என்று சங்கப் புலவரும் பாடியுள்ளார். அம் என்ற முன்னொட்டுடன் அம் மா என்று பேகனின் மனைவி கண்ணகியைச் சங்கம் பாடுகிறது. மாலோலன் விஷ்ணுவின் பெயர். அம் மா = இலக்குமியாகிய கண்ணகி. இந்த வரலாறையெல்லாம் கிருஷ்ணனின் அவதாரம் கோவலன் என்பதை மதுராபதித்த்ய்வம் பாடுவதாக இளங்கோ அடிகள் அமைத்து உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று முத்தமிழ்க் காப்பியத்தில் தந்துள்ளார். கோவலனை நாட்டுப்புற நாடகங்களில் இன்றும் கோபாலஞ்செட்டி என்பதும், கண்ணகியை கரணகை (< கர்ணகீ) என்பதும் இன்றும் உண்டு. தாமரைப் பொகுட்டுக்கு கண்ணகி, கர்ணகி என்று பெயர். தாமரைமாதாகிய இலக்குமி முல்லைக்கற்பினள். மாதவி (குருக்கத்தி) கணிகைக் குலமரபினள். கோவலன் மாள்வதாக சமணசமய அடிகள் பாடுவதன் சூட்சுமம் இதுவே. குறளின் ஒருமை மகளிரே போல வாழ்க்கை வாழாத கோவலன் சிறுபாத்திரமே, இறந்தும்விடுகிறான். உண்மையில் சிலம்பின் ஹீரோ கர்ணகையாளே.

நா. கணேசன்


Reply all
Reply to author
Forward
0 new messages