பாஞ்சாலி சபதம் - என்னுரை

2,311 views
Skip to first unread message

Hari Krishnan

unread,
Sep 11, 2012, 8:13:48 AM9/11/12
to vall...@googlegroups.com

முன்னுரை
(குறிப்பு: எழுதப்பட்ட காலம் நினைவில்லை)
பாஞ்சாலி சபதம்
================

'பாரதிக்கு உரை எழுதும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது' என்று சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுதினேன். (பார்க்க: http://www.maraththadi.com/article.asp?id=465 )  அது இவ்வளவு விரைவில் என்னாலேயே செய்யப்படும் என்று நினைக்கவில்லை.  ஹரிஹரன் பிரசன்னாவும், பரிமேலழகரும் அவ்வப்போது பாரதி பாடல்களில் ஏதாவது - சொல்லின் பொருள் தொடர்பான - ஐயங்களை எழுப்பிக்கொண்டே இருப்பார்கள்.  பாரதிக்குச் செம்பதிப்பு ஒன்று வரவேண்டும் என்று என் ஆசிரியர் திரு. தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள் விரும்பினார்கள்.  ஒவ்வொரு கவிதைக்கும் எழுதப்பட்ட பின்புலம், சூழல், கவிதையில் காணப்படும் மாந்தர், நாடு, கருத்து போன்றவற்றுக்கான விளக்கக் குறிப்புகள் இருக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பங்களில் ஒன்று.  எடுத்துக்காட்டாக, மாஜினியின் சபதம் என்றால், யார் அந்த மாஜினி, எதற்காக ஒரு சபதத்தை மேற்கொண்டார், என்ன காரணத்தால் பாரதி அந்தச் சபதத்தைத் தமிழில் தந்தார் என்பன போன்ற அடிப்படையான குறிப்புகள் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்.  இதைச் செய்தால்தான் பாரதியின் வீச்சை இன்னும் அதிகமாக உணர முடியும்.   இதைப் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறார்.  பல அறிஞர்களிடம் வலியுறுத்தியிருக்கிறார்.  அவரே ஒரு கைப்பிரதி தயாரித்து வைத்திருந்தார்.  அவர் ஆஸ்திரேலியாவில் காலமான காரணத்தால் அதைப் பதிப்பிப்பது போன்ற கனவுகள் இன்னும் கனவு நிலையிலேயே இருக்கின்றன.  திரு. சீனி. விசுவநாதன் அவர்கள் 'கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' என்ற தொகுப்பில் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்.

'பாரதியின் பாடல்கள் மிக எளிமையானவை; பாமரருக்கும் புரியக் கூடியவை' என்று பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது.  உண்மைதான்.  அதை மறுக்க முடியாது.  மறுக்கக் கூடாது.  அரண்மனை மற்றும் ஜமீன்தாரர்களின் அந்தப்புரக் கனவுகளை அலங்கரித்துக்கொண்டிருந்த தமிழைப் பொது மக்களிடம் எடுத்து வந்தவன் பாரதிதான்.  'தெருவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்' என்று சேமமுற வேண்டுமெனில் என்ன செய்யவேண்டும் என்று சொன்னவன்தான்.  'ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கம் உள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்,' என்று பாஞ்சாலி சபதத்துக்கு எழுதிய முகவுரையில் சொன்னவன்தான்.   

அவன் சொன்னது 'ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கம்.'  நம் பெருமக்கள் புரிந்துகொள்வது 'ஓரிண்டு வருஷத்து தமிழ்ப் பழக்கம்.'  நம்முடைய சமகாலத்தில் 'ஓரிரண்டு வருஷத்துத் தமிழ்ப் பழக்கம்' உள்ளவர்கள் எழுத்துக் கூட்டி ஆனந்த விகடன், கல்கி, குமுதம் வாசித்தாலே அதிகம்.  அனா ஆவன்னா பயிற்சிதான் ஓரிரண்டு ஆண்டுகளில் இப்போதெல்லாம் சாத்தியம்.   நூற் பழக்கமே என்றால் கூட, என்ன நூற்பழக்கம் என்பதற்கும் ஒரு வரையறை இருக்கிறதில்லையா?  அவன் 'நூற்பழக்கம்' என்னும்போது குறிப்பிட்டிருக்கக் கூடிய நூல்களும், இப்போதைய 'ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமும்' ஒன்றாகி விடாதல்லவா?  அவன் காலத்துத் 'தமிழ் நூல் பழக்கம்' என்பதற்கான வரைவு வேறு, நம் காலத்தில் அது சுத்தமாக வேறல்லவா? 

ஆகவே, சுருக்கமாக, பாரதி பாடல்களுக்கு நிறைய விளக்கக் குறிப்புகளும், ஒரளவுக்குச் சொற் பொருளும் தேவைப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.  இன்றைய இளைஞர்கள் பலர் இதை உணர்ந்தே இருக்கின்றனர்.  பிரசன்னாவின் கடிதம் ஓர் உதாரணம்.  (http://groups.yahoo.com/group/marabilakkiyam/message/634

நான் மதுரைத் திட்டத்திற்காகத் தட்டித் தந்த 'பாஞ்சாலி சபதத்தில்' (http://www.tamil.net/projectmadurai/pub/pm0091/panchali.pdf) மிகச் சில இடங்களில் இந்த குறிப்புகளையும், சொற் பொருளையும் சேர்த்திருக்கிறேன்.  ஒவ்வொரு பாடலும் என்ன யாப்பு வகையைச் சேர்ந்தது என்றொரு பட்டியலும் கடைசியில் தந்திருக்கிறேன்.  பெரும்பாலும் சிந்து; விருத்தங்கள்; ஓரடிக்கு இத்தனை எழுத்து என்ற கணக்குடன் கூடிய கட்டளைக் கலிப்பா என்று வேறுபட்ட யாப்பு வகைகள் பாஞ்சாலி சபதத்தில் அடக்கம்.  நேர் இருபது; நிரை இருபத்தொன்று என்று ஒரு புதிய வகையை உருவாக்கியிருக்கிறான் பாரதி.  அதாவது நேரசையில் தொடங்கியிருந்தால் ஒற்றொழித்து இருபது எழுத்தும்; நிரையசையில் தொடங்கியிருந்தால் ஒற்றொழித்து இருபத்தோரு எழுத்தும் உள்ள வகை இது.  எழுத்துக் கணக்கெல்லாம் பார்த்து எழுதினால், சொல் கூட்டம்தான் வரும்; கவிதை வராது என்றெல்லாம் புதுப்புது நம்பிக்கைகள் தோற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  ஒன்று இரண்டல்ல; தொடர்ச்சியாக ஏழெட்டு பாக்களில், இரண்டு மூன்று இடங்களில், இந்த வகையைக் கையாண்டிருக்கிறான் பாரதி.  எவ்வளவு உணர்ச்சிகரமாக இந்த வகையைச் செய்ய முடிந்திருக்கிறது; எவ்வளவு செறிவாகச் சொல்ல முடிந்திருக்கிறது என்பதையெல்லாம் பார்ப்போம்.  இன்னொரு செய்தியும் உண்டு.  இப்படி எழுத்துக் கணக்குப் பொருந்தி வரும்படியாக எழுதியிருந்தாலும் (ஓரிடத்திலும் இந்தக் கணக்கு ஒரே ஓர் எழுத்தளவு கூட தப்பவில்லை) பாரதியே இதை கவனிக்கவில்லை.  கட்டளைக் கலிப்பா என்று தலைப்பில் குறிக்காமல், எண்சீர் விருத்தம் என்று குறித்திருக்கிறான்.  பாரதி எழுத்துக் கணக்கை கவனிக்காமல் இயற்றிய விருத்தங்கள், தானாகவே கட்டளைக் கலிப்பாவாகவும் அமைந்திருக்கின்றன என்பதை நிறுவ இது ஒன்றே போதும்.   தமிழ் இசை சார்ந்த மொழி.  இசைக்கும் தாளத்துக்கும் பொருந்தி வந்தால், தாளக் கணக்கு துல்லியமாக அமைந்தால், எழுத்துக் கணக்கு தானாகவே அமையும்.  எண்ணிப் பார்க்க வேண்டிய தேவையே இல்லை.  விளக்கங்களை உரிய இடத்தில் அளிக்கிறேன். 

இன்று தொடங்கி, தினம் ஒன்றாக - அவ்வப்போது இரண்டோ, மூன்றோ கூட ஆகலாம் - பாஞ்சாலி சபதத்துக்குக் குறிப்புகளும் சொற்பொருளும் தருகிறேன்.  அத்தனைப் பாடல்களுக்கும் சொற்பொருளும் குறிப்பும் தேவைப்படாது என்றாலும், அத்தனைக்கும் செய்வதே விரும்பத்தக்கது.  பாரதியே இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறான் - முதல் 203 பாடல்களில் ஒரு சிலவற்றுக்கு மட்டும்.  மொத்தம் 413 பாடல்களால் ஆனது பாஞ்சாலி சபதம்.  கம்ப இராமயணக் கட்டுரைத் தொடருக்கு நான்காண்டுகள் என்று எல்லை வகுத்துக்கொண்டிருக்கிறேன்.  இது ஓராண்டு பிடிக்கக் கூடிய இன்னொரு தொடர்.  மரபிலக்கியம், மரத்தடி, ராயர் காபி கிளப் ஆகிய குழுக்களில் இந்தத் தொடர் வரும்.  கூடவே மரபிலக்கிய வலைப்பதிவில் (http://marabilakkiyam.yarl.net) ஆவணப்படுத்தப்படும். 

வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.  வாசிப்பவர்களின் பின்னூட்டு; ஆதரவு; ஆசி.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன். 

--
அன்புடன்,
ஹரிகி.

Tn Elango

unread,
Sep 11, 2012, 8:17:58 AM9/11/12
to vall...@googlegroups.com
கடைசி பெஞ்ச்சில் நான்..காத்திருக்கிறேன்..

2012/9/11 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
 
--

Follow my blogs on  http://tnelango.blogspot.com/

Hari Krishnan

unread,
Sep 11, 2012, 8:27:28 AM9/11/12
to vall...@googlegroups.com

2012/9/11 Tn Elango <tnel...@gmail.com>

கடைசி பெஞ்ச்சில் நான்..காத்திருக்கிறேன்..

நான் கடைசி பெஞ்ச் கிட்ட நின்னுட்டுதான் பாடமே சொல்வேன்.  எப்டி வசதி?

Hari Krishnan

unread,
Sep 11, 2012, 8:30:32 AM9/11/12
to vall...@googlegroups.com

2012/9/11 Hari Krishnan <hari.har...@gmail.com>

வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.  வாசிப்பவர்களின் பின்னூட்டு; ஆதரவு; ஆசி.
 
ஓம் சக்தி
பாஞ்சாலி சபதம்
 
முதற் பாகம்
 
ஓமெனப் பெரியோர்கள் - என்றும்
 ஓதுவதாய் - வினை - மோதுவதாய்
தீமைகள் மாய்ப்பதுவாய் - துயர்
 தேய்ப்பதுவாய் - நலம் - வாய்ப்பதுவாய்
நாமமும் உருவுமற்றே - புந்தி
 நாடரிதாய் - மனம் - தேடரிதாய்
ஆமெனும் பொருள் அனைத்தாய் - வெறும்
 அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய் (1)
 
பதம் பிரித்து:
 
ஓம் எனப் பெரியோர்கள் - என்றும் 
 ஓதுவதாய் - வினை - மோதுவதாய்
தீமைகள் மாய்ப்பதுவாய் - துயர்
 தேய்ப்பதுவாய் - நலம் - வாய்ப்பதுவாய்
நாமமும் உருவும் அற்றே - புந்தி
 நாட அரிதாய் - மனம் தேட அரிதாய்
ஆம் எனும் பொருள் அனைத்தாய் - வெறும்
 அறிவுடன் ஆனந்த இயல்பு உடைத்தாய்
 
குறிப்புகள்:
 
அ: சொற் பொருள்: ஏதுமில்லை.
 
ஆ: இலக்கணம்
புந்தி - புத்தி என்பதன் மெலித்தல் விகாரம்
 
இ: யாப்பு:
 
இது சிந்துப் பா என்ற வகையில் நொண்டிச் சிந்து என்ற உட்பிரிவைச் சேர்ந்தது.  சிந்துப் பா பெரும்பாலும் நாட்டுப்புறப் பாடல்களில் பயில்வது என்றாலும், இதற்கும் இலக்கண வரையறைகள் உண்டு.  'படிக்காதவனுக்கு எப்படி யாப்பு தெரியும்,' என்று தோன்றலாம்.  இசைக் கணக்கு பிசகாத வரையில் யாப்பு பிசகவே பிசகாது.  இது உண்மை.  மேற்படிப் பாடலில் (இன்னும் தொடரப் போகும் பாடல்களிலும்) வெண்டளை மட்டுமே பயின்று வருவதைப் பார்க்கலாம். 
 
இந்தப் பாடல் குளகம் என்று அறியப்படும் தரவு வகை.  தரவு என்றால் ஆங்கிலத்தில் stanza என்று சொல்கிறோமே, அது.  சிலர் paragraph என்கிறார்கள்.  கவிதையில் ஒரு பத்தியைப் பத்தி என்று சொல்வதில்லை.  அதற்குத் தரவு என்று பெயர்.  ஆங்கிலத்திலும் paragraph என்று சொல்வதில்லை; stanza என்றே சொல்கிறார்கள்.
 
ஒரு பாடல் நான்கு அடிகளுக்குள் (மறுபடியும்: கவிதையில் பயில்வதை வரி என்று சொல்வதில்லை.  அடி என்று சொல்ல வேண்டும்.) பொருள் முடிந்துவிட்டால், வாக்கியம் முடிந்துவிட்டால் அதை 'முத்தகம்' என்று சொல்வோம்.  அப்படி முடிவடையாமல், அடுத்த பாட்டுக்குத் தொடர்ந்தால் அதைக் 'குளகம்' என்போம்.  இந்தப் பாடலில் பயிலும் வாக்கியம் இன்னும் முடிவடையவில்லை.  அடுத்த பாடலுக்குத் தொடர்கிறது.   ஆகவே இது குளகம்.  அடுத்த பாடலில் வரும் 'நின்றிடும் பிரமம் என்பார்' என்னும் இடத்தில் பாடலின் ஒரு பகுதி முடிவடைகிறது.  'பிரமம்' என்பதே இங்கே எழுவாய்.  அதாவது subject, predicate, object என்று சொல்வோமே, அவற்றில் subject. 
 
ஈ: பாடல் சொல்வது:
 
'ஆம் எனும் பொருள் அனைத்தாய்.'  எதுவெல்லாம் உள்ள பொருளோ, எதுவெல்லாம் 'இருக்கிறது' என்று அறியப்படுகிறதோ அதுவெல்லாம்.  இந்த, 'ஆம் என்னும் பொருளே' 'ஓம்' என்னும் சொல்லுக்குப் பொருள்.  இதனால்தான் வேதத்தில் பிரமத்துக்கு இந்தப் பெயர்.  இது பாரதியே சொல்லும் குறிப்பு.

Hari Krishnan

unread,
Sep 11, 2012, 8:35:28 AM9/11/12
to vall...@googlegroups.com

நின்றிடும் பிரமம் என்பார் - அந்த
 நிர்மலப் பொருளினை சிந்தை செய்வேன்
நன்றுசெய் தவம்யோகம் - சிவ
 ஞானமும் பக்தியும் நணுகிடவே
வென்றிகொள் சிவசக்தி - எனை
 மேவுறவே இருள் சாவுறவே
இன்றமிழ் நூலிதுதான் - புகழ்
 ஏய்ந்தினிதாய் என்றும் இலகிடவே. (2)

பதம் பிரித்து: இந்தப் பாடலுக்குத் தேவையில்லை.  இன்றமிழ் என்பதை இன் தமிழ் என்றும், ஏய்ந்தினிதாய் என்பதை ஏய்ந்து இனிதாய் என்றும் பிரித்துக்கொள்ள வேண்டும்.

அ: சொற் பொருள்:

நிர்மலப் பொருள்: மலம் என்றால் அழுக்கு; குற்றம்.  நிர்மலம் என்றால் அழுக்கற்றது; குற்றமற்றது. 

பிரமம்: பிரமம் அல்லது பிரம்மம் என்பது வேறு; பிரம்மன் எனப்படும் படைப்புத் தொழிலை மேற்கொண்ட இறைவன் வேறு. 

மேவுறவே: மேவுதல்: 1. அடைதல் (to reach); 2. விரும்புதல் 3. நேசித்தல், 4. ஓதுதல் (to learn) 5. உண்ணுதல் 6. நிரவி, சமம் ஆக்குதல் 7. மேலிட்டுக் கொள்ளுதல் (to manifest, to assume) 8. வேய்தல் (to thatch, to cover)

இந்த இடத்தில் 'வெற்றிகொள்ளும் சிவசக்தி என்னை வந்து அடையட்டும்,' என்று பொருள்.  'வீணையடி நீயெனக்கு மேவு விரல் நான் உனக்கு' என்ற இடத்தினைப் போல்.  'நான் அதை அடைந்தவனாகட்டும்' என்றிருந்தால், 'நான் அதற்குத் தகுதியானவனாகட்டும்' என்று பொருள் கொள்ளலாம்.  இங்கே அவ்வாறில்லை என்பது கவனிக்கத் தக்கது.

ஏய்ந்து: ஏய்தல் என்ற வினைச் சொல்லில் இருந்து பிறந்த சொல்.  பொருந்துதல் (to be suited), தகுதல் (to be fit) என்று இந்தச் சொல் transitive verb ஆகப் பயன்படும்போது பொருள் வரும்.  இந்த நூல் புகழ் பொருந்தியதாய், புகழுக்குத் தக்கதாய் விளங்கட்டும் என்ற வேண்டுதலுடன்

ஆ: இலக்கணம்: வென்றி: வெற்றி என்பதன் மெலித்தல் விகாரம்.

இ: யாப்பு: இதுவும் நொண்டிச் சிந்து

ஈ: பாடல் சொல்வது: நிர்மலப் பொருளாக விளங்கும் பிரமத்தை நான் என் மனத்தில் இருத்துகிறேன்.  தவமும், யோகமும், சிவஞானமும், பக்தியும் என்னால் நன்றாகச் செய்யப்படட்டும்.  சிவசக்தி என்னை அடையட்டும்.  இன் தமிழில் செய்யப்படும் இந்த நூல் புகழுள்ளதாக என்றும் விளங்கட்டும்.

வேந்தன் அரசு

unread,
Sep 11, 2012, 8:37:54 AM9/11/12
to vall...@googlegroups.com
ஹரிகி ஐயா

உங்க காலத்திலேயே நீங்க கண்ணதாசனுக்கும் பொருள் எழுத வேண்டிய நிலை வரலாம்.

அந்த நிலை வாராதிருக்கவே நான் பழம் சொற்களை நிறைய என் எழுத்துகளில் புழங்குகிறேன்.

உங்களை போன்று எங்கணும் இசைபோகிய எழுத்தாளர்கள் பெய்து எழுதினால் தமிழ் தன் முதுமையை இழக்காமல் இருக்கும். செய்வீரா?

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

DEV RAJ

unread,
Sep 11, 2012, 9:14:25 AM9/11/12
to வல்லமை
On Sep 11, 5:37 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> உங்க காலத்திலேயே நீங்க கண்ணதாசனுக்கும் பொருள் எழுத வேண்டிய நிலை வரலாம்.

:))
உண்மைதான்

shylaja

unread,
Sep 11, 2012, 9:57:05 AM9/11/12
to vall...@googlegroups.com
மரத்தடியில் எழுதும்போதே  படித்தேன் மறுபடி  படிக்கப்போறேன்...

2012/9/11 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
 
--
 
ஷைலஜா
 
''பைந்தமிழ் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ;  சிந்துக்குத் தந்தை;
குவிக்கும் கவிதைக் குயில்;  இந்நா
 கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;
 நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
 கற்பனை யூற்றாம் கவிதையின் புதையல்!
திறம்பாடி வந்த மறவன்; புதிய
அறம் பாடி வந்த அறிஞன்; நாட்டிற்
படரும் சாதிப் படை மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!
அயலார் எதிர்ப்பும் கணையா விளக்கவன்!
                                                                       -- புரட்சிக் கவிஞர்
 
பிரசாத் வேணுகோபால்

unread,
Sep 11, 2012, 2:21:56 PM9/11/12
to vall...@googlegroups.com
ஐயா,

குழுமங்களுக்கு புதிதான என்னைப் போன்றோருக்கு தங்களது இவ்வுரை புதியது...

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கண்டிப்பாக முழுவதையும் படிப்பேன்... தொடர்ந்து எங்களுக்கு இந்த உரையை தாருங்கள்...

2012/9/11 Hari Krishnan <hari.har...@gmail.com>

முன்னுரை

Hari Krishnan

unread,
Sep 11, 2012, 10:51:00 PM9/11/12
to vall...@googlegroups.com
 
சரஸ்வதி வணக்கம்

வெள்ளைக் கமலத்திலே - அவள்
 வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
கொள்ளைக் கனிஇசைதான் - நன்கு
 கொட்டுநல் யாழினைக் கொண்டிருப்பாள்.
கள்ளைக் கடலமுதை - நிகர்
 கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத்திலே - எனைப்
 பேணவந்தாள் அருள் பூணவந்தாள். (3)

பதம் பிரித்து: இந்தப் பாடலுக்குத் தேவையில்லை

அ. சொற் பொருள்: -

ஆ. இலக்கணம்:

கொட்டுநல்: கொட்டும் நல் என்று ஏன் சொல்லவில்லை?  வருமொழி முதலில் ந-கரம் வரின், நிலைமொழி ஈற்று மகரம் கெடும்.  அதாவது, இரண்டாவது சொல் 'ந' வர்க்கத்தில் தொடங்கியிருந்தால், அதே சமயத்தில் அந்த இரண்டாவது சொல்லுக்கு முன்னால் இருக்கும் சொல் 'ம்' என்ற எழுத்தில் முடிந்திருந்தால், அந்த முதற் சொல்லின் கடைசி எழுத்தான 'ம்' ஒலிக்கப்படாது; எழுதப்படாது.  'கொட்டும்' என்று முதற் சொல் 'ம்' என்ற எழுத்தில் முடிந்திருக்கிறது.  அடுத்த சொல் 'நல்' என்று ந-கரத்தில் தொடங்குகிறது.  எனவே கொட்டுநல். 

இந்த விதியைப் பின்பற்றுவது 'எளிமை நாடுவோருக்குச் சற்றுக் கடினம்' என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் ம. ரா. போ. குருசாமி அவர்கள்.  என்ற போதிலும் இந்த விதியை நெடுகிலும் போற்றியிருக்கிறான் பாரதி.  எல்லா இடங்களிலும் இந்த விதி பின்பற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.

கள்ளைக் கடலமுதை - கள்ளையும், கடல் அமுதையும் என்று 'உம்'மை தொக்கி நிற்பதால் உம்மைத் தொகை.

கண்டதொர்: கண்டதோர் என்பதன் குறுக்கல் விகாரம்.

இ. யாப்பு:

இதுவும் நொண்டிச் சிந்து. 

ஈ. பாடல் சொல்வது:

'சரஸ்வதி வணக்கம்' என்று வாணியைத் துதித்துத் தொடங்கிய சில கவிஞர்களுள் பாரதி ஒருவன்.  இங்கே மட்டுமின்றி, பாஞ்சாலி சபதத்தின் 'இரண்டாவது சூதாட்ட சருக்கம்' தொடங்கும் போதும் 'தெளிவுறவே அறிந்திடுதல்' என்று தொடங்கி 'ஒளி வளரும் தமிழ் வாணி' என்று வாணி வணக்கம் செய்திருப்பதைக் காணலாம்.  பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பாகம் பராசக்தி வணக்கத்தோடு தொடங்குகிறது.

'பிள்ளைப் பருவத்திலே எனைப் பேண வந்தாள் - அருள் - பூண வந்தாள்' என்ற இடம், 'சிறு வயதில் வாணியே தன்னை நேரில் ஆட்கொண்டாள்' என்று கவிஞன் சொல்வதாகக் கருதுவோர் உண்டு.  பிள்ளைப் பருவ நிகழ்ச்சிகளைச் சொல்லும் போதெல்லாம் பாரதி இப்படி ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறான் என்பது நோக்கத் தக்கது.

ஆதிரைத்திரு நாளொன்றில் சங்கரன்
 ஆலயத்தொரு மண்டபம் தன்னில்யான்
சோதி மானொடு தன்னந் தனியனாய்ச்
 சொற்களாடி யிருப்ப மற்று அங்கு அவள்
பாதி பேசி, மறைந்து பின் தோன்றினாள்
 பங்கயக் கையில் மை கொணரந்தே 'ஒரு
சேதி, நெற்றியில் பொட்டு வைப்பேன்' என்றாள்.
 திலதமிட்டனள்.  செய்கை அழிந்தனன்.

என்று 'கனவு' என்ற தலைப்பில் செய்யப்பட்ட தன் வரலாற்றில் சொல்வது, வாணியின் அருள் பெற்ற நிகழ்வையா அல்லது இளம்பருவத்தில் ஏற்பட்ட காதலையா என்ற ஐயத்தைத் தந்தாலும், இன்னோர் இடத்தில் மிகத் தெளிவாகவே சொல்கிறான்.

'மூன்று காதல்' என்று சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி தேவியரின் மீது கொண்ட காதலை விவரிக்கும் கவிதை சரஸ்வதியைக் குறித்துத் தொடங்குகிறது. 

'பிள்ளைப் பிராயத்திலே - அவள்
 பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேன் - அங்குப்
பள்ளிப் படிப்பினிலே - மதி
 பற்றிடவில்லை.....

'ஆற்றங் கரைதனிலே - தனி
 ஆன மண்டப மீதினிலே - தென்றல்
காற்றை நுகர்ந்திருந்தேன் - அங்குக்
 கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்....'

இது சிந்திக்கத் தக்கது. 

வேதத் திருவிழியாள் - அதில்
 மிக்கபல் லுரையெனும் கருமையிட்டாள்.
சீதக் கதிர்மதியா - நுதல்
 சிந்தனையே குழல் என்றுடையாள்.
வாதத் தருக்கமெனும் - செவி
 வாய்ந்த நற்றுணிவெனும் தோடணிந்தாள்.
போதமென் நாசியினாள் - நலம்
 பொங்குபல் சாத்திர வாயுடையாள். (4)

பதம் பிரித்து: இந்தப் பாடலுக்குத் தேவை இல்லை. நற்றுணிவு என்பதை நல் துணிவு என்று பிரித்துக் கொள்ளவும்.

அ. சொற் பொருள்

சீதக் கதிர்: குளிர்ச்சியான ஒளி.  சந்திரன் அல்லது மதியின் கிரணங்களுக்கு நிலா என்பது பெயர். (நிலா என்பது ஆகாயத்தில் வட்டமாக மிதக்கிறதே, அதைக் குறிக்கும் பெயராக இருந்ததில்லை.  சந்திரனின் ஒளிக்கு அந்தப் பெயர் வழங்கி வந்தது.)

கலவிக் களியின் மயக்கத்தால்
 கலைபோய் அகலக் *கலை மதியின்
நிலவைத்* துகில் என்று எடுத்து உடுப்பீர்!
 நீள்பொன் கபாடம் திறமினோ!
(கலிங்கத்துப் பரணி - கடைத் திறப்பு)

'ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்' என்று கண்ணதாசன்(?) எழுதிய திரைப்பாடலில் இந்தக் கருத்து இடம் பெற்றது. 

சுடர்ப் பரிதி ஒளிப்ப *நிலவு ஒழுக்கு மதி*
 ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப
  ஒளிர் ஒளிப் பிரபை வீசும்
(வேல் வகுப்பு - அருணகிரி நாதர்)
 
சூரியனின் கிரணங்களுக்குக் கதிர் என்று பெரும்பாலும் வழங்கும்.  ஆனால் சூரிய, சந்திரருக்கே கூட 'கதிர்' என்ற பெயர் உண்டு.  'சீத' என்ற அடைமொழியோடு சொன்னதற்கு இந்தக் காரணம் இருந்திருக்கலாம்.

போதம்: ஞானம் (wisdom); அறிவு (knowledge, intelligence).  அறிவின் மேல் நிலையே ஞானம்.  அறிவு என்பது ஒரு data bank போல.  தகவல் தளத்தைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் முடிபுகளை மனிதன் இன்னும் துல்லியமாகக் கணக்கிட்டுக் கொள்கிறான் அல்லவா, அது ஏறத்தாழ ஞானம் என்று சொல்லலாம். 

ஆ. இலக்கணம் -

இ. யாப்பு

இதுவும் நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

வாணிக்கு வேதமே விழி; வேதங்களுக்குக் காணப்பட்ட உரை, அந்த விழிகளுக்கு இடப்பட்ட மை.  ('மை கண்ணுக்கு நல்லது.  அழகுங் கூட.  ஆனால், அளவுக்கு மிஞ்சிப் பூசினால் விகாரமாகத் தோன்றுவதுடன் கண்ணே போனாலும் போய்விடும்' என்று பாரதி இந்த இடத்துக்குக் குறிப்பு எழுதியிருக்கிறான்.  உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பு.  {நான் எழுதுவது குறிப்பு.  உரையில்லை.  எனவே எனக்கு இது பொருந்தாதப்பா... :P}  குளிர்ச்சியான ஒளி விடும் சந்திரனே அவளுடைய நெற்றி.  சிந்தனையே அவளுடைய குழல்.)  வாதம், தருக்கம் என்பன அவளுடைய செவி.  அந்தச் செவிக்கு அலங்காரமான தோடு எதுவோ என்றால், துணிவு.  துணிவில்லாத வாதமோ, தருக்கமோ அழகில்லாமல், ஒளிவிடாமல் போகும் என்பது குறிப்பு.    ஞானமும், அறிவுமே சுவாசிக்கவும், உயிர் தரிக்கவும் தேவையான மூச்சைப் பெற்றுத் தரும் நாசி.  பல விதமான சாத்திரங்களே அவளுடைய வாய்.

'சாத்திரங்களென்றாலே அருவருப்புக் கொள்பவன்' பாரதி என்றொரு கருத்துண்டு.  'கோத்த பொய் வேதங்களும், மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துகளும்,' என்றும் 'சாத்திரங்கள் பல தேடினேன், அங்குச் சங்கையில்லாதன சங்கையாம்,' என்றும் சொல்வதால் இப்படியொரு கருத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.  பாரதி உண்மையில் சாத்திரங்கள் *எல்லாவற்றையும்* வெறுத்தவனல்லன்.  'சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்' என்று அவன் சொல்லும்போது, மிகுந்த பக்தி சிரத்தையுடன் 'சாத்திரம்' என்ற சொல்லை உச்சரிக்கிறான் என்பது என் கருத்து.  (வேதங்கள், பற்றிய பாரதியின் கருத்தில் ஒரு சிறிது, 'கண்ணன் - என் தந்தை'யில் வெளிப்படக் காணலாம்.)

சாத்திரங்களை முற்றிலும் வெறுத்தவனாக இருந்திருந்தால், அவனுடைய வாணியை 'நலம் பொங்கு பல் சாத்திர வாய் உடையாள்' என்று சொல்லியிருக்க மாட்டான்.

'சிந்தனையே குழல்' என்று சொல்லியிருப்பது சுவைக்கத் தக்கது.  'முடியுமா?' என்ற என் பழைய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:

------------
"சீதக்கதிர் மதியா நுதல் சிந்தனையே குழல் என்றுடையாள்" என்றல்லவா சரஸ்வதியைப் பாடுகிறான் பாரதி?  சிந்தனையே குழல் என்றால்?  இரண்டுக்கும் அடர்த்தி இருந்தால்தான் மதிப்பு.  தொடர்ந்த பராமா¢ப்பு இல்லாவிட்டால் குழல் கெட்டுப் போகும்.  தொடர்ந்த, முறையான பயிற்சி இல்லாவிட்டால் சிந்தனை கெட்டுப்போகும்.   பொடுகு, பேன் என்று அடர்ந்த கூந்தலைக் கெடுக்க ஆயிரம் வெளித்தாக்குதல்கள்.  அடர்ந்த சிந்தனையைக் கூட பல வெளித்தாக்குதல்கள் கெடுக்கும் - சா¢யான முறைகளைப் பின்பற்றாவிட்டால்.  வெட்டி, திருத்தி, வா¡¢, முடிந்துவைத்தால்தான் குழல் அழகாக விளங்கும்.  வெட்டி, திருத்தி, ஒழுங்குபடுத்தி, தகுந்த முடிவுகளுடன் இருந்தால்தான் சிந்தனை அழகுற விளங்கும். வயதானால் வண்ணம் மாறுவதைக்கூட சொல்லலாம்.  ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.  முப்பது வயதுக்குக் குறைந்தவன் கம்யூனிஸ்ட்டாக இல்லையென்றால் அவனுக்கு இதயமே கிடையாது.  முப்பது வயதுக்கு மேற்பட்டவன் இன்னும் கம்யூனிஸ்டாகவே இருந்தால் அவனுக்கு மூளையே கிடையாது.  (A person below thirty who is not a communist, has no heart.  A person above thirty and who is still a communist, has no head.)  சத்தியமாகக் கட்சித் தாக்குதல் இல்லை.  நமக்கு வேறெந்த சாயமும் கிடையாது.  வயதானால் வண்ணம் மாறுவதற்கு உதாரணம் காட்ட ஒரு பழமொழியை உபயோகித்துக் கொண்டேன்.  அவ்வளவுதான்.  முடிமீது கைவைத்து சத்தியம். சிந்தனையே குழலை இன்னும் வி¡¢த்தால் பாஞ்சாலியின் கூந்தலைப் போல வி¡¢யும்.  சொல்லப்போனால் பாஞ்சாலி சபதமும், பாரதப் போரும் கூந்தல் முடியத்தானே.  கம்பன் சொல்லியிருக்கும் இராமனின் குஞ்சி பற்றிய வர்ணனைகளில் பெரும்பான்மையும் சிந்தனைக்கும் பொருந்தும்.  கம்பனில் தோய்ந்த பாரதி இந்த இடத்திலிருந்தும் சிந்தனையே குழல் என்பதற்கான எண்ணத்தைப் பெற்றிருக்கலாம்.
--------------
(முழுக் கட்டுரையும் எந்த வலைத் தளத்தில் இருக்கிறது என்பது நினைவில்லை)

இந்த இடத்தில் பிரசன்னா எழுப்பியிருக்கும் கேள்விக்கும் விடை சொல்லிவிடுகிறேன். 

===========
"நீங்கள் தட்டச்சி இட்டதில் புந்தி நாடரிதாய் மனம் தேடரிதாய் என்று இருக்கின்றது.  என் புத்தகத்தில் மனம் நாடரிதாய்ப் புந்தி தேடரிதாய் என்று இருக்கிறது. மனமும் புந்தியும் இலக்கணப்படி எங்கிருந்தால் சரியாக இருக்கும்?"

"அந்த நிர்மலப்பொருளினை சிந்தை செய்வேன் என்பது அந்த நிர்மலப்பொருளினை நினைத்திடுவேன் என்று இருக்கிறது. எப்படி இப்படி மாறுபாடு வருகிறது?"
===========

பிரதி பேதம் அல்லது பாட பேதம் என்ற சாபக்கேடு நம் தமிழ் நூல்கள் அனைத்துக்கும் பொதுவானது.  முன்பெல்லாம் பிரதி செய்த (வேணாம்.  copy எடுத்த... சரியா?) பெரியவர்கள் கைத் தவறுதலாகச் செய்ததிலிருந்து, தவறாக உணர்ந்து செய்ததிலிருந்து, வேண்டுமென்றே நுழைத்ததிலிருந்து ஏராளமான காரணங்களால் பிரதி பேதங்கள் ஏற்பட்டன.  இப்போதெல்லாம் பதிப்பாசிரியர்களின் அலட்சியத்தால், கவனக் குறைவால் பெரும்பாலான பிரதி பேதங்கள் நிகழ்கின்றன.  வெறும் நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த பாரதியின் எழுத்தில் ஏராளமான பாட பேதம் (பிரசன்னா குறிப்பிட்டுள்ளதைப் போன்ற வேறுபாடுகள்) இருப்பது நம்முடைய பதிப்பாளர்களுடைய வருத்தத்துக்குரிய போக்கின் மீது வைக்கப்பட்டுள்ள  விமரிசனம். 

பிரசன்னா, மனத்துக்கும் புத்திக்கும் வேறுபாடு தேடுவது இப்போதைக்கு செய்யக் கூடிய காரியமில்லை.  அதையெல்லாம் தனிக் கட்டுரையில் பார்க்கலாம்.  (அதாவது எழுத நேரம் கிடைத்தால்.)   சிந்துப் பாவின் இலக்கணப்படி, 'மனம், புந்தி' இரண்டையும் எந்த இடத்திலும் மாற்றிப் போட்டுக் கொள்ளலாம்.  பொருள் பொருத்தம் எது என்பது சிந்தனைக்குரியது.

ஆனால் மனம் வேறு; புத்தி வேறுதான்.

'புத்தி மனம் சித்தம் புலன் ஒன்று அறியாமல்
வித்தை செயும் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மை என'
--குயில் பாட்டு.

மற்ற கேள்விகளுக்குப் பிறகு வருகிறேன் பிரசன்னா. 

பிரசன்னாவின் குள்ளச்சாமி யார் இழையில் கடைசிக் கேள்வி:
========
கொசுறு கேள்வி: நேரமில்லாத நேரத்துல இத்தனைக் கேள்வியான்னு என்னை யாரும்
திட்டலையே? :P
========

யார் திட்டினாலும், நான் திட்ட மாட்டேன்.  நிறைய கேள்.  நான் இல்லாவிட்டாலும் யாராவது விடை சொல்வார்கள்.  நான் சொல்வதை எனக்குப் பொழுது கிடைக்கும்போதெல்லாம் சொல்கிறேன்.

===============
நேற்றைக்கு இருந்த நெருக்கடியில் ஒரு முக்கியமான குறிப்பு விட்டுப் போயிற்று.  முக்கியமாக நான் செய்திருக்க வேண்டிய திருத்தமும் விட்டுப் போயிற்று.  பாரதி பாட்டை - பாரதி என்று இல்லை, யார் எழுதியது என்றாலும் - பாரதி எழுதிய விதத்தில்தான் பதிப்பிக்க வேண்டும்.  பிரதிபேதம் எப்படி நேருகிறது என்று சொல்ல நினைத்தேன்.  காலை வேளை; அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் எப்படியோ போய்விட்டது.

அண்மைக் காலத்தில் வெளிவந்த பல பதிப்புகளில் 'சீதக் கதிர்மதியே - நுதல்' என்று அச்சிடப்படுகிறது.  நான் படித்த பழைய சக்தி வை. கோவிந்தன் பதிப்பில் 'சீதக் கதிர்மதியா - நுதல்' என்று இருக்கும்.  பாரதி காலமான பிறகு பாரதி பிரசுராலயத்தார் அவனுடைய கவிதைகளைப் பதிப்பித்தார்கள்.  இந்த, 'சீதக் கதிர்மதியா' அச்சுப் பிழை என்றெண்ணி, 'சீதக் கதிர்மதியே' என்று பதிப்பித்தார்கள்.  ஆகவே அதைத் தொடர்ந்து வந்த பதிப்புகள் பெரும்பாலானவற்றில் இந்த 'யே'தான் இருக்கும்.  சக்தி கோவிந்தன் பதிப்பிற்குப் பிறகு சுமார் முப்பது-முப்பத்தைந்து பதிப்புகள் என்னிடம் இருந்தன.  இந்த 'யே' பழக்கம் என்னையும் தொற்றிக்கொண்டது.

பாரதி 'சீதக் கதிர்மதியா' என்றுதான் எழுதியிருக்கிறான்.  அவன் எழுதியிருக்கும் குறிப்புகளில் பின்வரும் விளக்கம் காணப்படுகிறது:

'சீதக் கதிர்மதியா(ம்) நுதல்,' குளிர்ந்த ஒளியையுடைய மதியே ஸரஸ்வதி தேவிக்கு நெற்றியாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.  'ஊகம்' என்பது அவளுடைய கூந்தல்.'

எனவே, 'சீதக் கதிர்மதியா' என்பதே சரியான பாடம்.  அது மட்டுமன்று.  முதல் பதிப்பு வெளிவரும் போது, 'ஊகம்' என்பதே குழல் என்று வர்ணித்திருக்கிறான்.  அச்சுப் புத்தகமாக வெளிவந்த பிறகு, 'ஊகம்' என்பதை விடவும், 'சிந்தனை' என்பதே குழலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியிருக்கிறது.  அச்சுப் படியில் 'ஊகம்' என்ற சொல்லை அடித்துவிட்டு, 'சிந்தனை' என்று திருத்தியிருக்கிறான்.  (தஞ்சைப் பல்கலைக் கழக ஆய்வுப் பதிப்பில் காணப்படும் குறிப்பு.)

எனவே நாம் கொள்ள வேண்டிய பாடம், 'சீதக் கதிர்மதியா'தான்.

amaithi cchaaral

unread,
Sep 12, 2012, 12:41:19 AM9/12/12
to vall...@googlegroups.com
அருமையான ஆரம்பம்.. தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறோம்.

அன்புடன்,
சாந்தி மாரியப்பன்

2012/9/12 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
 
coral shree

unread,
Sep 12, 2012, 5:16:45 AM9/12/12
to vall...@googlegroups.com
அன்பின் ஹரிகிஜி,

வணக்கம். முதல் பெஞ்சியில் என் சீட்டில் ஒழுக்கமாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஐயம் எழும்போது எழுந்து நிற்பேன். நன்றி ஜி.

அன்புடன்
பவள சங்கரி

2012/9/11 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
 
--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Tn Elango

unread,
Sep 12, 2012, 6:08:56 AM9/12/12
to vall...@googlegroups.com
அன்பின் ஹரியண்ணா,

எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. இவ்வளவு சிரத்தையாக, எந்தவித சந்தேகமும் வராமல், அனைத்தையும் தெளிவாக்கும் தங்களுக்கு.

தொடர்ந்து படிப்பதற்கு காத்திருக்கிறேன், மாணாக்கர் வரிசையில்.

அன்புடன்
இளங்கோ

2012/9/12 coral shree <cor...@gmail.com>

--
 
Tthamizth Tthenee

unread,
Sep 12, 2012, 6:40:46 AM9/12/12
to vall...@googlegroups.com
நண்பர் ஹரிகி அவர்களுக்கு  நமஸ்காரம்,  ஆழ்ந்து படிக்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
2012/9/12 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
 
Tn Elango

unread,
Sep 13, 2012, 10:36:20 AM9/13/12
to vall...@googlegroups.com
What happened Hari anna? Waiting for your postings..
Elango

2012/9/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
--
 
Hari Krishnan

unread,
Sep 13, 2012, 10:03:07 PM9/13/12
to vall...@googlegroups.com

2012/9/13 Tn Elango <tnel...@gmail.com>

What happened Hari anna? Waiting for your postings..
Elango

I am thankful for all the warm, welcoming words.  Criticisms/differing points of view are welcome too.
 
I was on a package tour of Mumbai yesterday and could not post anything.  There is somebody who really misses the posts!  Thanks all of you once again.

Hari Krishnan

unread,
Sep 13, 2012, 10:04:10 PM9/13/12
to vall...@googlegroups.com
 
கற்பனைத் தேனிதழாள் - சுவைக்
 காவிய மெனுமணிக் கொங்கையினாள்.
சிற்பமுதற் கலைகள் - பல
 தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பாள்.
சொற்படு நயமறிவார் - இசை
 தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார்
விற்பனத் தமிழ்ப்புலவோர் - அந்த
 மேலவர் நாவெனும் மலர்ப்பதத்தாள். (5)

பதம் பிரித்து:

இந்தப் பாடலுக்குத் தேவையில்லை.

அ. சொற் பொருள் -

'தேமலர்க் கரமென' தேனை உடைய மலர்களைப் போன்ற கரம் என.  சிற்பம் முதலான பல கலைகளே வாணியின் கரங்கள்.  மலர்க் கரங்கள்.  தேன் கொண்ட மலர்க்கரங்கள்.

ஆ. இலக்கணம் -

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

கவிதைக்கு இசை தேவையா இல்லையா?  இந்தப் பாடலில் பாரதியின் கருத்து என்ன என்பது தெளிவாக வெளிப்படுகிறது.  'சொற்படு நயம் அறிவார்.'  சொல்லுக்குள் உறைந்திருக்கும் நயத்தை அறிவார்.  'இசை தோய்ந்திடத் தொகுப்பதன் சுவை அறிவார்.'  அந்தச் சொல் இசையில் தோய்ந்திருக்குமாறு தொகுக்கின்ற வேலைப்பாட்டினால் விளைவதாகிய சுவையை அறிவார்.  யார்?  விற்பனத் தமிழ்ப் புலவோர்.  தமிழ்க் கவிதையை இசையோடு ஒத்துச் செய்வதன் சுவையை அறிந்தவர்கள் தமிழ்ப் புலவர்கள்.

கவிஞர்கள், பாவலர்கள், புலவர்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று சமமான பொருளுடைய சொற்களே.  'புலவர் என்பவர் scholar மட்டுமே.  அவர் கட்டுவது ஒன்றுக்கொண்டு ஒட்டாத செங்கல் அடுக்கு,' என்றொரு கருத்தும் நிலவுகிறது.  அப்படி இருக்கலாம்.  இல்லாமலும் இருக்கலாம்.  A lawyer is an advocate; but an advocate need not be a lawyer என்பதைப் போல்தான் 'கவிஞர் என்பவர் புலமை உள்ளவர்; புலவர் கவிஞராகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.'  தனிக் கட்டுரைக்கு உரிய ஒன்று.  இப்போதைக்கு இத்தோடு விட்டுவிடுகிறேன்.

வாணியைச் சரண்புகுந்தேன் - அருள்
 வாக்களிப்பாள் எனத்திடமிகுந்தேன்.
பேணிய பெருந்தவத்தாள் - நிலம்
 பெயரளவும் பெயர் பெயராதாள்.
பூணியல் மார்பகத்தாள் - ஐவர்
 பூவை திரௌபதி புகழ்க்கதையை
மாணியல் தமிழ்ப்பாட்டால் - நான்
 வகுத்திடக் கலைமகள் வாழ்த்துகவே! (6)

பதம் பிரித்து:

வாணியைச் சரண் புகுந்தேன் - அருள்
 வாக்கு அளிப்பாள் எனத் திட(ம்) மிகுந்தேன்.
பேணிய பெருந்தவத்தாள் - நிலம்
 பெயரளவும் பெயர் பெயராதாள்.
பூண் இயல் மார்பகத்தாள் - ஐவர்
 பூவை திரௌபதி புகழ்க்கதையை
மாண் இயல் தமிழ்ப்பாட்டால் - நான்
 வகுத்திடக் கலைமகள் வாழ்த்துகவே!

அ. சொற் பொருள்

பேணிய: பேணுதல் என்ற சொல்லுக்குப் பதினான்கு தனித் தனிப் பொருள் உண்டு.  இங்கே 'போற்றுதல்,' (to cherish, foster, nurture) 'மதித்தல்' (to regard), 'அலங்கரித்தல்' (to adorn) என்பன பொருந்தும். 'பேணிய பெருந் தவத்தாள்' என்றால் 'போற்றக் கூடிய அளவுக்குப் பெரிய தவத்தைச் செய்தவள்' என்று பொருள் காண்பது விபரீதமாக முடியும்.  கல்விக்கு இறைவியை அப்படிச் சொல்வது முறையில்லை.  'தன் அன்பர்களால் போற்றப்பட்ட பெரிய தவத்தை உடையவள்,' என்றே கொள்ள வேண்டும்.  'தனது அன்பர்கள்' என்பதை வருவித்துக்கொள்ள வேண்டும்.

மாண் இயல்: மாண் என்றால் மாண்பு; மாட்சிமை.  Splendour, excellence, glory, dignity. தமிழ்ப் பாட்டு - தான் இயற்றும் இந்தக் காவியம் - மாண் இயன்றது என்ற பெருமிதம் தோன்றச் சொல்வதைக் காணலாம். 

ஆ. இலக்கணம் -

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

நல்ல அணிகலன்களை (பூண்களை) மார்பின் மீது அணிந்தவளாகிய (இயல் - பூண் இயல்), ஐவர் தேவியான திரெளபதியின் புகழைச் சொல்லும் இந்தக் கதையை, நல்ல ஒளி நிறைந்த பாடல்களால் நான் சொல்ல வேண்டும் என்பதற்காக 'உலகம் உள்ளளவும் தன் பெயர் உள்ளவளான' வாணியைச் சரண் புகுந்தேன்.  அவள் எனக்கு அருள் நிறைந்த வாக்கினை அளிப்பாள் என்ற திடம் அதனால் எனக்கு உண்டாயிற்று. 

coral shree

unread,
Sep 13, 2012, 10:07:12 PM9/13/12
to vall...@googlegroups.com
அன்பின் ஹரிகிஜி,

அற்புதமான விளக்க்ங்கள். தொடர்ந்து கொண்டிருக்கிறோம். நனிநன்றி.

அன்புடன்
பவளா

--
 
Hari Krishnan

unread,
Sep 13, 2012, 10:15:44 PM9/13/12
to vall...@googlegroups.com
This is in compensation of yesterday's absence.  :)
 
நூல்
 
அத்தின புரமுண்டாம் - இவ்
 அவனியிலே அதற்கிணையிலையாம்.
பத்தியில் வீதிகளாம் - வெள்ளைப்
 பனிவரைபோற் பலமாளிகையாம்
முத்தொளிர் மாடங்களாம் - எங்கு
 மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைகளாம்.
நத்தியல் வாவிகளாம் - அங்கு
 நாடும் இரதிநிகர் தேவிகளாம். (7)
 
பதம் பிரித்து:
 
அத்தினபுரம் உண்டாம் - இவ்
 அவனியிலே அதற்கு இணையிலையாம்
பத்தியில் வீதிகளாம் - வெள்ளைப்
 பனிவரை போல் பல மாளிகையாம்
முத்துஒளிர் மாடங்களாம் - எங்கு
 மொய்த்து அளி சூழ் மலர்ச் சோலைகளாம்
நத்து இயல் வாவிகளாம் - அங்கு
 நாடும் இரதி நிகர் தேவிகளாம்.
 
அ. சொற் பொருள்
 
பத்தி: ஒன்பது வேறுபட்ட பொருள் உண்டு இந்தச் சொல்லுக்கு.  இந்த இடத்தில் வரிசை என்று பொருள். 
பனிவரை: பனி மலை. 
அளி: வண்டு
நத்து: நத்தை; சங்குப் பூச்சி
வாவி: நீர் நிலை
 
ஆ. இலக்கணம்
எங்கும் மொய்த்து என்னாமல் 'எங்கு மொய்த்து' என்றெழுதியிருப்பதைப் பார்க்கவும்.  முதல் சொல் 'ம்' என முடிந்து அடுத்த சொல் மகரத்தில் தொடங்கினால், முதல் சொல்லின் கடைசி எழுத்தான 'ம்' கெடும்.  ஒலிக்கப்படாது.  எழுதப்படாது.  இது நிலைமொழி ஈற்று மகரம் கெடுவது எப்போது என்னும் விதிகளில் இன்னொன்று.  இதையும் பாரதி நெடுகிலும் போற்றியிருக்கிறான்.  (பாடல் எண் ஐந்தில் 'சிற்பமுதற் கலைகள்' என்ற இடத்தில் 'சிற்பம்' என்ற சொல்லின் மகரம் கெட்டிருப்பதும், 'சொற்படு நயமறிவார்' என்ற இடத்தில் மகரம் கெட்டிருப்பதும் வேறு வேறு விதிகள்.)
 
இ. யாப்பு
 
நொண்டிச் சிந்து
 
ஈ. பாடல் சொல்வது
 
அத்தினபுரம் உலகத்திலே தனக்கு நிகரான வேறு நகரம் ஏதுமில்லாதது.  அங்கே வீதிகள் வரிசை வரிசையாக இருக்கும்; வெள்ளைப் பனி சூழ்ந்த மலை(யான இமய மலையைப்) போன்ற மாளிகைகள் எங்கும் நிறைந்திருக்கும்.  முத்துப் போல் ஒளிவிடும் மாடங்கள் அந்த மாளிகைகளில் உண்டு.  எந்தத் திசையில் பார்த்தாலும் வண்டுகள் சூழ்ந்த மலர்களைக் கொண்ட சோலைகளும், சங்கினங்கள் நிரம்பிய நீர் நிலைகளும், இரதியைப் போன்ற அழகு வாய்ந்த தேவியரும் நிறைந்திருக்கும் ஊர் அத்தினபுரம்.  (ஹஸ்தினாபுரம்)
 
குரு வம்சம் அரசாண்ட இடம் ஹஸ்தினாபுரம்.  (Kuru வம்சம்)  ஹஸ்தி என்ற குரு வம்ச அரசன் உருவாக்கிய நகரமானதாலே அவனுடைய பெயர் சூட்டப்பட்டு விளங்குகிறது. இது வியாச பாரதத்தில் காணப்படும் விளக்கம்.  இதனை அஸ்தி-ந-பூர் - அழிவற்ற ஊர் என்றும் விளக்குபவர்கள் உண்டு.  அஸ்தி (அழிவு) என்ற சொல்லும் ஹஸ்தி என்ற பெயரும் வேறு வேறு. 

அந்தணர் வீதிகளாம் - மறை
 ஆதிகளாம் கலைச் சோதிகளாம்
செந்தழல் வேள்விகளாம் - மிகச்
 சீர்பெறும் சாத்திரக் கேள்விகளாம்
மந்திர கீதங்களாம் - தர்க்க
 வாதங்களாம் தவ நீதங்களாம்
சிந்தையில் அறமுண்டாம் - எனில்
 சேர்ந்திடும் கலிசெயு மறமுமுண்டாம். (8)
 
பதம் பிரித்து:
 
இந்தப் பாடலுக்குத் தேவையில்லை.
 
அ. சொற் பொருள்
 
செந்தழல் வேள்வி.  முத்தீ வளர்த்து அன்றாட வழிபாடு செய்தல் அந்தணர் கடன்.  'அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கு' என்று புறநானூறு (இரண்டாம் பாடல்) சொல்கிறது.  ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி என்பன மூன்று தீக்களின் பெயர்கள்.
தவ நீதங்களாம்.  நீதம் - தகுதி, நீதி, தானியம் என்று இந்தச் சொல்லுக்கு மூன்று பொருள் உண்டு.  தவத்தினால் உண்டாகும் தகுதி என்பது இந்த இடத்தில் அமையும் பொருள்.
 
நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
 நாய்களோ - பன்றிச் - சேய்களோ
நீங்கள் மட்டும் மனிதர்க ளோவிது
 நீதமோ - பிடி - வாதமோ
 
(கலெக்டர் வின்சுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி)
 
இந்த இடத்தில் நீதம் என்பதற்கு நீதி என்பது பொருள்.  'நாங்களெல்லாம் நாய்களா, இல்லையென்றால் பன்றிக் குட்டிகளா?  நீங்கள் மட்டும்தான் மனிதர்களா?  இது என்ன நீதி?  இது வெறும் பிடிவாதமில்லையா?'
 
ஆ. இலக்கணம் -
 
இ. யாப்பு
 
நொண்டிச் சிந்து
 
ஈ. பாடல் சொல்வது
 
அத்தினபுரத்தில் உள்ள அந்தணர் வீதிகள், 'வேதங்களின் ஆதி' என்று சொல்லத் தக்க விதத்தில் இருந்தன.  அங்¦ல்லாம் விதிப்படியான முத்தீ விளங்கும்; புகழத் தக்க சாத்திரப் பயிற்சி - சொல்லுதல், கேட்டல், விவாதித்தல் என்று இவ்வண்ணமாக - எப்போதும் நடைபெறும்.  மந்திர கீதங்கள் முழங்கிக் கொண்டே இருக்கும்.  தர்க்க வாதங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.  தவத்தினால் ஏற்படும் தகுதியை உடையவர்கள் வசிக்கும் வீதிகள் அவை. 
 
அனைவர் சிந்தையிலும் அறம் இருந்தது.  ஆனாலும், கொஞ்சம் மதி மழுங்கிப் போனவர்களும் இல்லாமல் இல்லை.  கலி.  கலியின் விளைவால் அங்கே அறமில்லாததை எண்ணும் சிந்தை உடையவர்களும் இருந்தனர்.
கம்பன் கண்ட கோசல நாட்டிலிருந்து கொஞ்சம் போல விலகுகிறது, இல்லையா இந்த வருணனை?  இங்கேதானே பாஞ்சாலி துகிலுரியப்படப் போகிறாள். 
 
கெளரவ வேந்தர் சபைதன்னில் - அறங்
 கண்டவர் யாவரும் இல்லையோ? - மன்னர்
செளரியம் வீழ்ந்திடு முன்னரே - அங்குச்
 சாத்திரம் செத்துக் கிடக்குமோ?
 
என்று இந்த நகரத்தில் நின்றுதானே பாஞ்சாலி கேட்கப் போகிறாள்.  அந்தச் சூழலுக்குத் தன் வாசகனைத் தயார்ப்படுத்துகிறான் கவிஞன். 
 
amaithi cchaaral

unread,
Sep 14, 2012, 12:21:24 AM9/14/12
to vall...@googlegroups.com
அருமையான விளக்கங்கள்..

2012/9/14 Hari Krishnan <hari.har...@gmail.com>
 
--
 
amaithi cchaaral

unread,
Sep 14, 2012, 12:30:13 AM9/14/12
to vall...@googlegroups.com
Hope you are enjoying mumbai trip, and monsoon. It is the perfect time, because the famouse ganapathy festival is also approaching. enjoy

santhymariappan.

On Fri, Sep 14, 2012 at 7:33 AM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

--
 
343.gif

Tn Elango

unread,
Sep 14, 2012, 12:36:31 AM9/14/12
to vall...@googlegroups.com
அன்பின் ஹரியண்ணா,

/* என்று இந்த நகரத்தில் நின்றுதானே பாஞ்சாலி கேட்கப் போகிறாள்.  அந்தச் சூழலுக்குத் தன் வாசகனைத் தயார்ப்படுத்துகிறான் கவிஞன். 
*/
இலக்கு நோக்கி பாடல் வழி கவிஞன் அழைத்துப் போனதை, நீங்கள் எமக்குரைத்து அழைத்துப்  போகும் அழகே அழகு!

கலி செய்யும் அறம்- இங்கே கலி காலத்தை தொடர்பு படுத்துவதால், அறம் என்ற வார்த்தைக்கு, எதிர்மறைப் பொருள் கொள்ள வேண்டுமா?

இளங்கோ
2012/9/14 Hari Krishnan <hari.har...@gmail.com>

எனில்
 சேர்ந்திடும் கலிசெயு மறமுமுண்டாம்.

Hari Krishnan

unread,
Sep 14, 2012, 3:27:42 AM9/14/12
to vall...@googlegroups.com

On 14 September 2012 10:00, amaithi cchaaral <amaithi...@gmail.com> wrote:
Hope you are enjoying mumbai trip, and monsoon. It is the perfect time, because the famouse ganapathy festival is also approaching. enjoy

Yes.  I am enjoying.  :) Thank you.
However, I am returning to Bangalore on 17th, yaanai varum munne, mani osai varuvadharkkum munne.  :))

Hari Krishnan

unread,
Sep 14, 2012, 3:42:40 AM9/14/12
to vall...@googlegroups.com

2012/9/14 Tn Elango <tnel...@gmail.com>

கலி செய்யும் அறம்- இங்கே கலி காலத்தை தொடர்பு படுத்துவதால், அறம் என்ற வார்த்தைக்கு, எதிர்மறைப் பொருள் கொள்ள வேண்டுமா?

இளங்கோ

இப்படி கேளுங்க இளங்கோ! இதுதான் எனக்கு உண்மையான உற்சாகம் பிறக்கும் இடம்.
 
கலிசெயு   மறமு முண்டாம் - இதைப் பிரிப்பது எப்படி?  ஏழாம் பாடலுக்கான இலக்கணக் குறிப்பை மீண்டும் பாருங்கள்:
 
//எங்கும் மொய்த்து என்னாமல் 'எங்கு மொய்த்து' என்றெழுதியிருப்பதைப் பார்க்கவும்.  முதல் சொல் 'ம்' என முடிந்து அடுத்த சொல் மகரத்தில் தொடங்கினால், முதல் சொல்லின் கடைசி எழுத்தான 'ம்' கெடும்.   ஒலிக்கப்படாது.  எழுதப்படாது.  இது நிலைமொழி ஈற்று மகரம் கெடுவது எப்போது என்னும் விதிகளில் இன்னொன்று.  இதையும் பாரதி நெடுகிலும் போற்றியிருக்கிறான்.  (பாடல் எண் ஐந்தில் 'சிற்பமுதற் கலைகள்' என்ற இடத்தில் 'சிற்பம்' என்ற சொல்லின் மகரம் கெட்டிருப்பதும், 'சொற்படு நயமறிவார்' என்ற இடத்தில் மகரம் கெட்டிருப்பதும் வேறு வேறு விதிகள்.)//
 
இதே விதிதான் இங்கும்.  கலி செயும் மறம்.  கலி செயும் அறம் அன்று.  செயும் என்று கடைசி எழுத்து ம் என்று முடிந்து, அடுத்த சீர் மகரத்தில் தொடங்குவதால், செயும் என்பதில் உள்ள கடைசி எழுத்தான ம் கெட்டது.  ஆகவே, இது, கலி செயும் மறம்.  அறம் அல்லாதது மறம் என்ற பொருளில். கலியால் ஏற்படும் அறமற்ற செயல்கள், மறம் என்று குறிக்கப்பட்டன. 

Tn Elango

unread,
Sep 14, 2012, 3:46:01 AM9/14/12
to vall...@googlegroups.com
ஆஹா..மிக்க நன்றி ஹரியண்ணா..

2012/9/14 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
 
Hari Krishnan

unread,
Sep 15, 2012, 12:01:58 AM9/15/12
to vall...@googlegroups.com
 
மெய்த்தவர் பலருண்டாம் - வெறும்
 வேடங்கள் பூண்டவர் பலருமுண்டாம்.
உய்த்திடு சிவஞானம் - கனிந்
 தோர்ந்திடு மேலவர் பலருமுண்டாம்.
பொய்த்த இந்திரசாலம் - நிகர்
 பூசையும் கிரியையும் புலைநடையும்
கைத்திடு பொய்ம்மொழியும் - கொண்டு
 கண்மயக்கால் பிழைப்போர் பலராம். (9)

===========

பதம் பிரித்து:

இந்தப் பாடலுக்குத் தேவையில்லை.  'கனிந்தோர்ந்திடு' என்பதை, 'கனிந்து ஓர்ந்திடு' என்று பிரித்துக்கொள்ளவும்.

அ. சொற் பொருள்

மெய்த்தவர்: மெய்யான தவம் மேற்கொண்டவர்

ஓர்ந்திடு மேலவர்: ஓர்தல்: ஆராய்ந்து அறிதல் (to consider attentively, examine, investigate)

உய்த்திடு: உய்தல் என்ற சொல்லுக்கு 'வாழுதல் - ஜீவித்தல்' என்ற பொருள் உண்டு.  'அபாயங்களின்றும், துயரங்களின்றும் நீங்குதல்' என்பது இந்தச் சொல் தரும் பொருள்.  உய்தல் - செய்வினை - active voice.  உய்த்தல் - செயப்பாட்டுவினை (passive voice).

கிரியை: ஏழு வேறு வேறு பொருளுள்ள இந்தச் சொல்லுக்கு இங்கே பொருத்தமாவது: 1) செய்கை - act, action, deed.  2) சிவனை ஆகமங்களில் விதித்தவாறு அகத்தானும் புறத்தானும் வழிபடுவது

கைத்திடு: கைப்பதாகிய.  கசப்பான.

ஆ. இலக்கணம்
ஓர்ந்திடு மேலவர்: ஓர்ந்திடும் மேலவர்.  மகரம் கெட்டதன் விதியைப் பார்த்தோம்.

இ. யாப்பு
நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

துறவியரில் இரு வகை எந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது.  உண்மையான துறவு மேற்கொண்டு, உள்ளத்தால் உயர்ந்து நிற்போர் ஒரு புறமும், துறவு வேடம் புனைந்து மக்களை ஏமாற்றித் திரிபவர் இன்னொரு புறமும் இன்று நேற்றல்ல; திருவள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.  அதனால்தான் துறவிகளுக்கே பெரிதும் சொல்லப்பட்ட 'கூடா ஒழுக்கம்' என்ற அதிகாரத்தில் (அறத்துப் பால், துறவற இயலில் இந்த அதிகாரம் இடம் பெறுகிறது)

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

என்றார்.  'மனத்தைத் தன் வழிப் படுத்தும் வலி (வலிமை) இல்லாத நிலையை உடையவனுடைய (தவ வேடம் புனைந்த) வெளித் தோற்றம் எத்தகையது என்றால், பசு, புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு வயலில் இறங்கி மேய்வதைப் போன்றது.'  புலித்தோல் போர்த்திய பசுவைத்தான் நமக்குத் தெரியும்.  பசுத்தோல் போர்த்திய புலியைக் காட்டுகிறார் வள்ளுவர்.

பாரதி காட்டும் அத்தினபுரத்துத் துறவியருள்ளும் இரண்டு வகையும் இருந்திருக்கின்றனர்.  மெய்யான தவம் உடைய மெய்த்தவரும் அங்கே இருந்தனர்.  வேடங்கள் புனைந்தவரும் இருந்தனர்.  வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுவிப்பதான சிவஞானத்தை 'ஓர்ந்து,' ஆராய்ந்து அறிந்து, கனிந்திடும் ஞானியர் ஒருபுறம் இருந்தனர்.  பொய்யான இந்திரசாலமும் (கையை நீட்டினால் பொருள் கொட்டுகிறதே, அது போன்ற வித்தைகள்), அதற்கு நிகரான பூசைகளும், கிரியைகளும் (வெளித்தோற்றத்தால் சிவஞானம் பெற்றவர்போல் தோன்றி, உள்ளே நிகழ்வதால் நடிப்பதாகிய செயல் என இரண்டு பொருளையும் தரக் கூடிய சொல் என்பதை மேலே கண்டோம்), இழிவான நடத்தையும் (புலை நடை) கொண்டு, வாயைத் திறந்தாலே பொய் உதிரும்படியான கசப்பான செய்கையும் கொண்டு, கண்ணால் ஆளை மயக்கிப் பிழைப்பு நடத்தும் துறவியரும் அந்த ஊரில் இருந்தனர்.

பாரதி நிகழ்த்தும் சமூக விமரிசனம் இது. 

மாலைகள் புரண்டசையும் - பெரு
 வரையெனத் திரண்டவன் தோளுடையார்
வேலையும் வாளினையும் - நெடு
 வில்லையும் தண்டையும் விரும்பிடுவார்.
காலையும் மாலையிலும் - பகை
 காய்ந்திடு தொழில்பல பழகிவெம்போர்
நூலையும் தேர்ச்சி கொள்வார் - கரி
 நூறினைத் தனிநின்று நொறுக்கவல்லார். (10)

பதம் பிரித்து:

திரண்டவன் தோளுடையார்: திரண்ட வன்தோள் உடையார்

அ. சொற் பொருள்

வரை: மலை, கரி: யானை.

ஆ. இலக்கணம் -

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

அந்தணர் வீதிகளில் தொடங்கிய அத்தினபுர நகர வருணனை, இப்போது மறவர் வீதிகளைக் காட்டுகிறது.  மாலைகள் அணிந்த, மலைபோன்ற தோள்களை உடைய மறவர்கள் அவ்வீதிகளில் வேல், வாள், வில், தண்டு (கதை) போன்ற ஆயுதப் பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.  காலை தொடங்கி மாலை வரை, பகைவரைகளை எதிர்பதற்குத் தேவையான ஆயுதப் பயிற்சியையும், போர் நூல் பயிற்சியையும் செய்வார்கள்.  ஒவ்வொரு மறவனும் தனி ஒருவனாக நின்று நூறு யானைகளை வீழ்த்தக் கூடியவன்.

ஒரு போர் வீரனின் ஆற்றலை அளக்கும் அளவைகளில் ஒன்று, 'அவன் எத்தனை யானை வலுவுடையான்,' என்பதும், 'எத்தனை யானைகளை வீழ்த்த வல்லான்,' என்பதும்.  திருதிராட்டிரன் ஆயிரம் யானை வலுவுடையவன்.  'நெடுங்கை வளர் யானை பலவற்றின் வலி காட்டிடும் வெந்திறல் வீமனை, உங்கள் பொய் வளர் சூதினில் வைத்திட்டேன், வென்று போ!' என்று பின்னால் சூதாடும்போது தருமன் சொல்லப் போகிறான்.  வீமன், துரியோதனன் போன்றோரும் இப்படிப்பட்ட 'ஆயிரம் யானை பலம்' கொண்டவர்களாகச் சொல்லப்பட்டவர்கள்.

போர் வீரர்களில் முதல் - உயர் - பிரிவைச் சேர்ந்தவர்கள் தேர் வீரர்கள்.  அவர்களுடைய ஆற்றலை நான்கு வகையாகப் பிரித்திருந்தனர்.  அர்த்த ரதன், சமரதன் (அல்லது) ரதிகன், அதிரதன், மகாரதன் என்பன அவை.  மகாபாரதம், உத்தியோக பருவம், ரதாதிரத சங்கியான பருவத்தில் இதற்கான குறிப்பு காணப்படுகிறது.

அர்த்தரதன் என்பவன் தன்னை மட்டும் காத்துக்கொள்ளும் அளவுக்கு (நால்வகைப் படையில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்த ஏதாவது ஒரே ஒரு வீரனை எதிர்த்துப்) போரிடும் ஆற்றல் பெற்றவன்.  சமரதன் அல்லது ரதிகன் என்பவன் தன்னையும், தன்னுடைய தேர், சாரதி, குதிரைகளைக் காத்த வண்ணம் ஒரு வீரனை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் உடையவன்.  மகாரதன் என்பவன், தான், தன் தேர், சாரதி, குதிரைகள், தன் சேனை ஆகியவற்றைக் காத்தவண்ணம் ஒரு சில வீரர்களோடு போர் புரியும் ஆற்றல் பெற்றவன்.  (அதாவது, அதிரதனின் கீழ் ஒரு படைப்பிரிவு அடங்கும்.  அவன் ஒரு படைப்பிரிவின் தலைவனாகவும் இருப்பான்.)  மகாரதன் என்பவன், தான், தன் தேர், சாரதி, குதிரைகளையும், தன் சேனையையும் காத்துக் கொண்டு, பலரோடு ஒரே நேரத்தில் போரிட வல்லவன்.  Commander-in-Chief என்று சொல்லப்படும் பதவியைப் போன்ற பதவிக்குத் தகுந்தவன். 

அர்ஜுனனை மகாரதன் எனவும், கர்ணனை அர்த்தரதன் (தன்னை மட்டும் காத்துக் கொள்ள வல்லவன்; தன் தேர், சாரதி, குதிரைகளைக் கூட காத்துக்கொள்ளும் வன்மை அற்றவன்) எனவும் என்று பிதாமகர் தரம் பிரித்த காரணத்தால், 'இவர் வீழ்ந்த பிறகே போர்க்களத்தில் நுழைவேன்,' என்று சபதமிட்டான் கர்ணன்.  இவ்வாறு மூன்று தருணங்களில் சபதம் செய்கிறான்.  இது மூன்றாவது தருணம்.

Tn Elango

unread,
Sep 15, 2012, 12:24:24 AM9/15/12
to vall...@googlegroups.com
ஏதோ ஒரு குழப்பம் இருக்கிறதே இங்கே. புலித்தோல் போர்த்திய பசுவைப் பற்றித் தானே இந்தக் குறளில் சொல்லப்பட்டிருக்கிறது?

2012/9/15 Hari Krishnan <hari.har...@gmail.com>

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

என்றார்.  'மனத்தைத் தன் வழிப் படுத்தும் வலி (வலிமை) இல்லாத நிலையை உடையவனுடைய (தவ வேடம் புனைந்த) வெளித் தோற்றம் எத்தகையது என்றால், பசு, புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு வயலில் இறங்கி மேய்வதைப் போன்றது.'  புலித்தோல் போர்த்திய பசுவைத்தான் நமக்குத் தெரியும்.  பசுத்தோல் போர்த்திய புலியைக் காட்டுகிறார் வள்ளுவர்.

Rishi Raveendran

unread,
Sep 15, 2012, 12:28:49 AM9/15/12
to vall...@googlegroups.com
அன்புள்ள ஹரி ஐயா அவர்கட்கு,

>>>>>>>>>>>

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

என்றார்.  'மனத்தைத் தன் வழிப் படுத்தும் வலி (வலிமை) இல்லாத நிலையை உடையவனுடைய (தவ வேடம் புனைந்த) வெளித் தோற்றம் எத்தகையது என்றால், பசு, புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு வயலில் இறங்கி மேய்வதைப் போன்றது.'  புலித்தோல் போர்த்திய பசுவைத்தான் நமக்குத் தெரியும்.  பசுத்தோல் போர்த்திய புலியைக் காட்டுகிறார் வள்ளுவர்.

<<<<<<<<<<<<<<<<<<

இந்த இடத்தில் எனக்கும் குழப்பம் வருகின்றது.

பசுத்தோல் போர்த்திய புலி என்றுதானே வள்ளுவர் சொன்னதாய் பாடசாலையில் எங்கள் தமிழாசான் சொல்லிக்கொடுத்தார்.

எனக்கு இங்கே இடர்கின்றதே ஐயா.

ஐயம் தணிப்பீரா ஐயா ?

--
அன்புடன்
சக பயணி
இரவீந்திரன்

"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."

Hari Krishnan

unread,
Sep 15, 2012, 4:02:00 AM9/15/12
to vall...@googlegroups.com

2012/9/15 Rishi Raveendran <rishira...@gmail.com>

இந்த இடத்தில் எனக்கும் குழப்பம் வருகின்றது.

பசுத்தோல் போர்த்திய புலி என்றுதானே வள்ளுவர் சொன்னதாய் பாடசாலையில் எங்கள் தமிழாசான் சொல்லிக்கொடுத்தார்.

எனக்கு இங்கே இடர்கின்றதே ஐயா.

ஐயம் தணிப்பீரா ஐயா ?

சுட்டிக் காட்டிய உங்களுக்கும் இளங்கோவனுக்கும் நன்றி.  வாக்கியம் பிழையாக அமைந்திருக்கிறது.  கவனிக்கவில்லை.
பசுத்தோல் போர்த்திய புலியைத்தான் நாம் அறிவோம்.  புலித்தோல் போர்த்திய பசுவை வள்ளுவர் காட்டுகிறார் என்று இருந்திருக்க வேண்டும்.
 
கூர்ந்து படிக்கிறீர்கள் என்பதை அறிய மகிழ்ச்சி.  மீண்டும் நன்றி.

Rishi Raveendran

unread,
Sep 15, 2012, 4:36:12 AM9/15/12
to vall...@googlegroups.com
நன்றி ஹரி ஐயா.

தமிழ் வாத்தியார் இக்குறளுக்கு ஒரு கதை சொன்னது நினைவிற்கு வந்தது..

பசு , புலித்தோலை போர்த்திக்கொண்டு புல் மேய்ந்தால் அதனை புலி என எண்ணி விரட்ட பார்வையாளனுக்கு அச்சம் எனவும் மேலும் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என பார்வையாளன் தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொள்வான் என்றும் அன்று சொன்ன கதை அப்படியே படமாய் விரிகின்றது.

2012/9/15 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
 
வேந்தன் அரசு

unread,
Sep 15, 2012, 8:59:32 AM9/15/12
to vall...@googlegroups.com

11 செப்டம்பர், 2012 8:35 am அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:

நின்றிடும் பிரமம் என்பார் - அந்த
 நிர்மலப் பொருளினை சிந்தை செய்வேன்
நன்றுசெய் தவம்யோகம் - சிவ
 ஞானமும் பக்தியும் நணுகிடவே
வென்றிகொள் சிவசக்தி - எனை
 மேவுறவே இருள் சாவுறவே
இன்றமிழ் நூலிதுதான் - புகழ்
 ஏய்ந்தினிதாய் என்றும் இலகிடவே. (2)

பதம் பிரித்து: இந்தப் பாடலுக்குத் தேவையில்லை.  இன்றமிழ் என்பதை இன் தமிழ் என்றும், ஏய்ந்தினிதாய் என்பதை ஏய்ந்து இனிதாய் என்றும் பிரித்துக்கொள்ள வேண்டும்.

அ: சொற் பொருள்:

நிர்மலப் பொருள்: மலம் என்றால் அழுக்கு; குற்றம்.  நிர்மலம் என்றால் அழுக்கற்றது; குற்றமற்றது. 

பிரமம்: பிரமம் அல்லது பிரம்மம் என்பது வேறு; பிரம்மன் எனப்படும் படைப்புத் தொழிலை மேற்கொண்ட இறைவன் வேறு. 

மேவுறவே: மேவுதல்: 1. அடைதல் (to reach);

பொருந்துதல் என்பது இன்னும் சிறபபன பொருள்தரும் என கருதுவேன்

சாடிக்கு மூடி மேவும்.
 மேவுவோர் நண்பர்
மேவாதார் எதிரிகள்

வேந்தன் அரசு

unread,
Sep 15, 2012, 9:07:04 AM9/15/12
to vall...@googlegroups.com

11 செப்டம்பர், 2012 10:51 pm அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:

அ. சொற் பொருள்

சீதக் கதிர்: குளிர்ச்சியான ஒளி.  சந்திரன் அல்லது மதியின் கிரணங்களுக்கு நிலா என்பது பெயர். (நிலா என்பது ஆகாயத்தில் வட்டமாக மிதக்கிறதே, அதைக் குறிக்கும் பெயராக இருந்ததில்லை.  சந்திரனின் ஒளிக்கு அந்தப் பெயர் வழங்கி வந்தது.)

கலவிக் களியின் மயக்கத்தால்
 கலைபோய் அகலக் *கலை மதியின்
நிலவைத்* துகில் என்று எடுத்து உடுப்பீர்!
 நீள்பொன் கபாடம் திறமினோ!
(கலிங்கத்துப் பரணி - கடைத் திறப்பு)

'ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்' என்று கண்ணதாசன்(?) எழுதிய திரைப்பாடலில் இந்தக் கருத்து இடம் பெற்றது. 

சுடர்ப் பரிதி ஒளிப்ப *நிலவு ஒழுக்கு மதி*
 ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப
  ஒளிர் ஒளிப் பிரபை வீசும்
(வேல் வகுப்பு - அருணகிரி நாதர்)
 
சூரியனின் கிரணங்களுக்குக் கதிர் என்று பெரும்பாலும் வழங்கும்.  ஆனால் சூரிய, சந்திரருக்கே கூட 'கதிர்' என்ற பெயர் உண்டு.  'சீத' என்ற அடைமொழியோடு சொன்னதற்கு இந்தக் காரணம் இருந்திருக்கலாம்.

பாரதியே

"அவர் மங்கையராய் நிலவினில் ஆடி மகிழ்நது  இந்நாடே" என பாடி இருப்பார்
ஆம்ஸ்ட்ராங் போல் ஒரு சிலர்தானந்திங்களில் கால் பதிச்சாங்க

திங்கள் நிலவு உமிழும்
ஞாயிறு வெயில் உமிழும்

வேந்தன் அரசு

unread,
Sep 15, 2012, 9:13:02 AM9/15/12
to vall...@googlegroups.com

13 செப்டம்பர், 2012 10:15 pm அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:

This is in compensation of yesterday's absence.  :)
 
நூல்
 
அத்தின புரமுண்டாம் - இவ்
 அவனியிலே அதற்கிணையிலையாம்.
பத்தியில் வீதிகளாம் - வெள்ளைப்
 பனிவரைபோற் பலமாளிகையாம்
முத்தொளிர் மாடங்களாம் - எங்கு
 மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைகளாம்.
நத்தியல் வாவிகளாம் - அங்கு
 நாடும் இரதிநிகர் தேவிகளாம். (7)
 
அஸ்தினபுரம்,  ரதி  எழுதாது
அத்தினபுரம், இரதி என பாரதி எழுதிபோந்தான் காணீரோ?
 
பிரசாத் வேணுகோபால்

unread,
Sep 15, 2012, 4:43:05 PM9/15/12
to vall...@googlegroups.com
இந்த மூன்று தருணங்களைச் சொல்ல முடியுமா ஐயா...

இது மூன்றாவது தருணம் எனச் சொல்வதின் மூலமாக, குருக்ஷேத்திரப் போருக்கு  வீரரைப் பிரிக்கும் தருணம் இது என்றறிகிறேன்... குருக்ஷேத்திரப் போருக்கு வீரரைப் பிரிக்கும் தருணம் என்றால் எதிரிப் படையில் இருக்கும் அர்ஜுனனை பிதாமகர் பீஷ்மர் எங்கனம் மகாரதன் என தரம் பிரிக்க முடியும். தனது படையில்  இல்லாத ஒருவரை எப்படி தனது படைக்கான பிரிவில் தரம் பிரிக்க முடியும்.

வேண்டுமானால் பிதாமகர் அர்ஜுனனை மகாரதன் எனச் சொல்லியும் கர்ணனை அர்த்தரதன் எனச் சொல்லியும் ஒப்புமைப் படுத்தி கர்ணனை இழிவுபடுத்தி இருக்கலாம்... 

நம்மிடம் இருப்பதில் ஒப்புமைப்படுத்தும் பொழுது தரம் பிரிப்பது எனவும், நம்மிடம் இருப்பதையும் மற்றவருடன் இருப்பதையும் ஒப்பிடுகையில் அதை ஒப்புமை என்றும் சொல்வதுவுமே சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன்  ஐயா... தெளிவுபடுத்தவும்...

Hari Krishnan

unread,
Sep 15, 2012, 11:30:31 PM9/15/12
to vall...@googlegroups.com

2012/9/16 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>
இந்த மூன்று தருணங்களைச் சொல்ல முடியுமா ஐயா...
 
Yes.  I have them marked up.  But since the character study of Karna (or any other character for that matter) it is not to be taken up for a detailed discussion here.  We can have it on another occasion.  Or please wait till I return home tomorrow, when I will be able to deal with this point and substantiate my arguments with direct quotations from Vyasa. 
 
Please read this portion in context.  I hope you have read the original (or a faithful word for word translation of Vyasa.)  Bhishma is just answering Duryodhana, who wants to know the individual strengths and weaknesses of each warrior head of his side.  When doing this, it can be considered an insult, only if Bhishma confined his remarks with Karna.  Whereas, he assays the strengths and weaknesses of every, repeat, every King on the side of Duryodhana, including Acharya Drona and Aswaththaama.  If the unkindly remarks of Bhishma did not affect others, and affect only Karna, how would or should one look at the particular character in question.  The remarkable thing is Bhishma does not spare himself in the analysis. 
 
There are a few more things to consider in this respect:
 
  1. That Karna expects Bhishma to die.  Otherwise, the vow would not read as 'I will fight on your side only after the death of Bhishma'.  This in itself shows the position in which Karna had rated Bhishma.
  2. There is one point which is not at all mentioned in any version, or anyone's narration of this portion.  Karna's final reasoning for not participating in the war ends with the fuming remark: 'Here, he is the leader.  I would be shedding my blood and win the war.  Whereas the glory then belongs to Bhishma as he is the leader.  When I fight and win the war, why should the glory go to him?'  There were numberless kings assembled in the great hall, including Drona, who was also a Guru of Karna.  Why did any other warrior worth his salt, think in the lines of Karna and only Karna looked at it this way?
  3. The serious result of this clumsy decision was that, Karna who kept on pushing Duryodhana relentlessly into war, denied his services to the best of his friends, the helper in distress, the one who made him the king at a time of 'personal insult' (this portion also needs an elaborate discussion), DENIED HIS SERVICES TO HIS FRIEND DURYODHANA FOR TEN DAYS, IN OTHER WORDS, MORE THAN 50% OF THE TOTAL DURATION OF WAR, 18 DAYS.  This very same Karna, had no difficulty in accepting the leadership of Drona and fight under him for five days.  Then where is consistency or clarity of thought in Karna's decision?  Number one: I push my bosom friend into war.  Number two, I ditch him at a moment when my help is needed very badly, at a very critical moment.  How is this to be explained?

வேண்டுமானால் பிதாமகர் அர்ஜுனனை மகாரதன் எனச் சொல்லியும் கர்ணனை அர்த்தரதன் எனச் சொல்லியும் ஒப்புமைப் படுத்தி கர்ணனை இழிவுபடுத்தி இருக்கலாம்... 
 
You have also said "குருக்ஷேத்திரப் போருக்கு வீரரைப் பிரிக்கும் தருணம் என்றால் எதிரிப் படையில் இருக்கும் அர்ஜுனனை பிதாமகர் பீஷ்மர் எங்கனம் மகாரதன் என தரம் பிரிக்க முடியும். தனது படையில் இல்லாத ஒருவரை எப்படி தனது படைக்கான பிரிவில் தரம் பிரிக்க முடியும்." in your earlier paragraph.  Can you substantiate this particular point with a direct quotation from Vyasa?  What does Vyasa Bharata say?  When was this comparison between Arjuna and Karna made?  Was it in Ratha-Athi Raha-Nirnaya Parva or some other place?  If Bhishma made such a remark what action or speech of Karna led him to speak those words?  Please put forward your case so that I can understand your stance more clearly.
 
நம்மிடம் இருப்பதில் ஒப்புமைப்படுத்தும் பொழுது தரம் பிரிப்பது எனவும், நம்மிடம் இருப்பதையும் மற்றவருடன் இருப்பதையும் ஒப்பிடுகையில் அதை ஒப்புமை என்றும் சொல்வதுவுமே சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன்  ஐயா... தெளிவுபடுத்தவும்...
 
This does not gel with the general body of discussion now.  I am saying this not without reason.  From what I can see from your questions, I am not very sure if you have read the ORIGINAL VERSION or at least a faithful translation of it in toto.  Please confirm so that I can draw my explanation appropriately.  Or if this is going to be an argument, get ready with my part. 

Hari Krishnan

unread,
Sep 16, 2012, 12:13:43 AM9/16/12
to vall...@googlegroups.com

On 16 September 2012 09:00, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

The following is from Kisari Mohan Ganguli's word for word English Translation.  For the Tamil version, I need to have access to my bookshelf, which can be done only when I return home.  Let me assure you that I will quote from the Sanskrit version as well of this portion.
 
Karna's vow not to fight - Instance number 1
 
"Karna said, 'Without doubt, the chief of the Vrishnis is even so. Further, I admit, that that high-souled one is even more than that. Let, however, the Grandsire listen to the effect of the bit of harsh speech that he hath uttered. I lay down my weapons. The Grandsire will henceforth behold me in court only and not in battle. After thou hast become quiet, the rulers of the earth will behold my prowess in this world.'

(Mahabharata, Udyoga Parva, Chapter LXII in English)
 
Karna's vow not to fight - Instance number 2
 
There is another understanding on which I may willingly become the commander of thy forces. It behoveth thee to listen to that. O lord of earth, either Karna should fight first, or I will fight first. The Suta's son always boasts of his prowess in battle, comparing it with mine.'

"Karna said, 'As long as Ganga's son liveth, O king, I shall never fight. After Bhishma is slain, I shall fight with the wielder of Gandiva[1].

[1] 23        senāpatis tv aha rājan samayenāparea te
bhavi
yāmi yathākāma tan me śrotum ihārhasi

 24        karo vā yudhyatā pūrvam aha vā pthivīpate
spardhate hi sadātyartha
sūtaputro mayā rae

 25        nāha jīvati gāgeye yotsye rājan katha cana
hate bhī
me tu yotsyāmi saha gāṇḍīvadhanvanā (Mbh. Book 5, Ch. 153) Karna binds himself by this vow.  And his vow presupposes the death of Bhishma.  This means, he would not fight at all, if Bhishma was not killed at all.  That is a pretty unwarranted situation, in the light of Duryodhana’s dependance on him. 

Mahabharata, Udyoga Parva, Chapter CLVII)
 
(Footnotes are mine.)
 
Karna's vow not to fight - Instance number 3
 
Alone I will exterminate the army of the Pandavas! The fame, however, of such a feat will attach to Bhishma, O tiger among kings, for this Bhishma, O monarch, hath been made by thee the commander of thy forces, and the renown always attacheth to the leader and not to those that fight under him. I will not, therefore, O king, fight as long as Ganga's son liveth! After Bhishma, however, hath been laid low, I will fight with all the Maharathas of the enemy united together!'

Mahabharata, Udyoga Parva, Chapter CLXIX
 
Bhishma's opinion on Karna (Remember, this was spoken at the request of Duryodhana, who wants Bhishma's opinion on each and every warrior head on his, as well as Pandava's side)

"Bhishma said, 'Both the brothers Achala and Vrisha are Rathas. Invincible (in battle) they will slay thy foes. Endued with great strength, those tigers among men, those foremost of Gandharvas, are firm in wrath. Young and handsome, they are possessed of great strength. As regards this thy ever dear friend, this one who is always boastful of his skill in battle, this one who always urgeth thee, O king, to fight with the Pandavas, this vile braggart, Karna, the son of Surya, this one who is thy counsellor, guide, and friend, this vain wight who is destitute of sense, this Karna, is neither a Ratha nor an Atiratha. Without sense, this one hath been deprived of his natural coat of mail. Always kind, he hath also been deprived of his celestial ear-rings. In consequence of the curse of Rama (his preceptor in arms) as also of the words of a Brahmana (who cursed him on another occasion), owing also to his deprivation of the accoutrements of battle, he, in my judgment, is only half a Ratha. Having approached Falguni (in battle), he will not certainly escape with life!' Hearing this, Drona, that foremost of all wielders of weapons, said, 'It is even so as thou hast said. That is not untrue! He boasteth on the eve of every battle, but yet he is seen to retreat from every engagement. Kind (out of season) and blundering, it is for this that Karna, in my judgment, is only half a Ratha!' [1]

[1] 4        parua katthano nīca karo vaikartanas tava
mantrī netā ca bandhuś ca mānī cātyantam ucchrita

5      ea naiva ratha pūro nāpy evātiratho npa
viyukta
kavacenaia sahajena vicetana
ku
ṇḍalābhyā ca divyābhyā viyukta satata dhṛṇī

6      abhiśāpāc ca rāmasya brāhmaasya ca bhāaāt
kara
ānā viyogāc ca tena me 'rdharatho mata
nai
a phalgunam āsādya punar jīvan vimokyate

7      7 [s]
tato 'bravīn mahābāhur dro
a śastrabh vara
evam etad yathāttha tva
na mithyāstīti ki cana

8      rae rae 'timānī ca vimukhaś caiva dśyate
gh
ṛṇī kara pramādī ca tena me 'rdharatho mata (Mbh. Book 5, Ch. 165) That Karna was an Ardha Ratha was affirmed and acknowledged by Drona as well.

Mahabharata, Udyoga Parva, Chapter CLXIX
 
Therefore, it was just not the opinion of Bhishma.  It was acknowledged and affirmed by Drona as well, who was the first Guru of Karna.
 
Karna's reason for abstaining from war till Bhishma's death:
 
(the URL is the same as the above)
 
Read the marked text in green colour.
 
Bhishma's view on Aswathama:
 
6           krodhas tejaś ca tapasā sabhto ''śramavāsinā
dro
enānughītaś ca divyair astrair udāradhī

7          doas tv asya mahān eko yenaia bharatarabha
na me ratho nātiratho mata
pārthiva sattama

Mahabharata, Udyoga Parva, Chapter CLXVIII
 
In his opinion, Aswathama was alos not either a Ratha or Maharatha.  But that does not make Aswathama react in the way Karna did!  Why?  What is your opinon on this?
 
Since it is already too much, I am not for the present posting the views of Bhishma on Drona.  In case it is considered very essential, yes, I am game.

Hari Krishnan

unread,
Sep 16, 2012, 1:05:04 AM9/16/12
to vall...@googlegroups.com

2012/9/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

பொருந்துதல் என்பது இன்னும் சிறபபன பொருள்தரும் என கருதுவேன்

Hari Krishnan

unread,
Sep 16, 2012, 1:10:00 AM9/16/12
to vall...@googlegroups.com

2012/9/16 Hari Krishnan <hari.har...@gmail.com>

2012/9/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
பொருந்துதல் என்பது இன்னும் சிறபபன பொருள்தரும் என கருதுவேன்
 
இது உங்கள் அபிப்பிராயம்.  குறுக்கிட நான் யார்?  என் கருத்துப்படி, பொருத்தம் என்று எனக்குப் பட்டதைச்  சொல்லிவிட்டேன்.  உங்கள் அபிப்பிராயத்தில் இதுதான் சிறப்பு என்றால், அப்படியே கொள்ளவும்.

Hari Krishnan

unread,
Sep 16, 2012, 1:16:36 AM9/16/12
to vall...@googlegroups.com
2012/9/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
அஸ்தினபுரம்,  ரதி  எழுதாது

அத்தினபுரம், இரதி என பாரதி எழுதிபோந்தான் காணீரோ?
 
ஒ கண்டேனே!  பாரதியின் ராதைப் பாடலையும், ராமனைப் பற்றிய பாடலையும் தாங்கள் கண்டிருக்க்கிரீர்களோ? ராஜ்ஜியம், தியஜ்ஜ்யம் போன்ற சொற்களை லாலா லஜபதி ராயைப் பற்றிய பாடலில் பயன் படுத்தி இருப்பதை (ஓர் எடுத்துக்கட்டுக்க்காகவவது) கண்டீர்களோ?
 மாறாக, பாரதி ஒற்று எழுத்தைப் பெரிதும் போற்றியிருக்கிர்ரன் என்பது நீர் காணீரோ?
--

Hari Krishnan

unread,
Sep 16, 2012, 1:23:47 AM9/16/12
to vall...@googlegroups.com
 
ஆரிய வேன்மறவர் - புவி
 ஆளுமொர் கடுந்தொழில் இனிதுணர்ந்தோர்.
சீரியல் மதிமுகத்தார் - மணித்
 தேனிதழ் அமுதென நுகர்ந்திடுவார்.
வேரியங் கள்ளருந்தி - எங்கும்
 வெம்மத யானைகள் எனத்திரிவார்.
பாரினில் இந்திரர்போல் - வளர்
 பார்த்திவர் வீதிகள் பாடுவமே. (11)
 
பதம் பிரித்து: வேன்மறவர்: வேல் மறவர்.  சீரியல்: சீர் இயல். வேரியங் கள்: வேரி அம் கள்.
 
அ. சொற் பொருள்
 
ஆரிய வேல் மறவர்.  ஆரியர் என்ற சொல் 'வடவர்' என்ற பொருளில் பெரும்பாலும் வழங்கப்படுகிறது.  ஆரியவர்த்தத்தில் வாழ்பவர்கள் என்று அறியப்பட்டது.  இமயமலைக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட பகுதி ஆரியவர்த்தம் என்று வழங்கப்பட்டது.  ஆயினும், ஆரியர் என்ற சொல்லுக்கு ஏழு பொருள் உண்டு.  1) ஆரிய வகுப்பினன் 2) ஆரியவர்த்த வாசி 3) பெரியோன், உயர்ந்தவன் (worthy, respectable) 4) குரு, ஆசாரியன் 5) அறிவாளி 6) உபாத்தியாயன் 7) ஐயனார் சுவாமி.  இது சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி தரும் விளக்கம்.
 
பாரதி எங்கெல்லாம் 'ஆரியன்' என்று பயன்படுத்தியிருக்கிறானோ, அங்கெல்லாம் 'உயர்ந்தவன்' என்ற பொருளில்தான் பயன்படுத்தியிருக்கிறான்.   அவனுடைய உரைநடைகளில் இது வெளிப்படையாகவே காணப்படும்.  கம்ப இராமாயணத்திலும் 'உயர்ந்தோன்' என்ற பொருளில்தான் பெரும்பாலும் இந்தச் சொல் ஆளப்பட்டிருக்கிறது.
 
வேரி: தேன்
 
பார்த்திவர்: பார்த்திபர் - மன்னர்.  'பல் வளம் நிறை புவிக்கே - தருமன் பார்த்திவன் என்பதினிப் பழங்கதை காண்,' என்று பின்னால் சகுனி சொல்லப் போகிறான்.
 
ஆ. இலக்கணம்
 
வேரியங் கள்: வேரி அம் கள்.  'அம்' என்றால் அழகிய என்ற பொருள் இருந்தாலும், இங்கே அது பொருந்தாது.  அம் என்பது சாரியைகளுள் ஒன்று.  Euphonic augment என்று ஆங்கிலத்தில் குறிப்பார்கள்.  புளியங்காய் (புளி அம் காய்) என்பது போல்.
 
இ. யாப்பு
 
நொண்டிச் சிந்து
 
ஈ. பாடல் சொல்வது
 
புவியை ஆள்வதான கடினமான செயலை, இனிமையான ஒன்றாகக் கருதி ஏற்றவர்களான வேற்படையை உடைய சிறந்த மறவர்கள் அந்த வீதிகளில் இருந்தனர்.  போர்த்தொழில் படித்த, பழகிய நேரம் போக மற்ற நேரங்களில் அழகிய முகத்தை உடைய பெண்களின் இதழ்களை அனுபவித்தவாறும், கள்ளைக் குடித்தவாறும் வாழ்பவர்கள்.  சினங் கொண்ட மதயானைகளைப் போல் அந்த வீதிகளில் திரிந்துகொண்டிருப்பார்கள்.  இத்தகைய மன்னர்கள் வாழும் வீதிகளைப் பாடுகிறேன்.

நல்லிசை முழக்கங்களாம் - பல
 நாட்டிய மாதர்தம் பழக்கங்களாம்
தொல்லிசைக் காவியங்கள் - அருந்
 தொழிலுணர் சிற்பர்செய் ஓவியங்கள்
கொல்லிசை வாரணங்கள் - கடுங்
 குதிரைக ளொடுபெருந் தேர்களுண்டாம்.
மல்லிசை போர்களுண்டாம் - திரள்
 வாய்ந்திவை பார்த்திடு வோர்களுண்டாம். (12)
 
பதம் பிரித்து: தேவையில்லை

அ. சொற் பொருள்
 
இசை என்ற சொல்லை மாற்றி மாற்றி வேறு வேறு பொருளில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்.  பாரதிக்கு(ம் சரி, கம்பனுக்கும் சரி) இது மிகவும் பிடித்த விளையாட்டு.  'தொல்லை வினைதரு தொல்லையகன்று சுடர்க தமிழ்நாடே', 'சாத்திரங்கள் பல தேடினேன்; அங்குச் சங்கையில்லாதன சங்கையாம்' என்று ஒரே சொல்லைப் பல பொருளில் பயன்படுத்தும் ஆட்டத்துக்கு வள்ளுவரும் விலக்கல்லர்.
 
நல்லிசை: நல்ல இசை (பாடல்).  தொல்லிசை: தொன்மையான, புகழ்வாய்ந்த.  கொல்லிசை: கொல்லும் தொழிலுக்கு ஏற்ற, பொருத்தமான.  மல்லிசை: மல்யுத்த விதிமுறைகளுக்கு இசைவுடைய.
பாடல், புகழ், பொருந்தி வருதல், இசைவாக (in agreement with) என்ற நான்கு பொருளில் 'இசை' என்ற சொல் பயன்பட்டிருக்கிறது.
 
வாரணம்: யானை
 
மல்லிசை போர்: மல்யுத்தம், குத்துச் சண்டை.

ஆ. இலக்கணம் -

இ. யாப்பு
 
நொண்டிச் சிந்து.  ஒவ்வோரடியும் இடது பக்கத்தில் (அதாவது முதல் சீரில்) எதுகையுடனும் (நல்லிசை, தொல்லிசை, கொல்லிசை, மல்லிசை), ஒவ்வொரு அரையடியும் தமக்குள்ளே இயைபுடனும் (முழக்கங்களாம், பழக்கங்களாம், காவியங்கள், ஓவியங்கள், போர்களுண்டாம், வோர்களுண்டாம்) ஆக இரு பக்கங்களிலும் ஓசைச் சிறப்புடன் விளங்கும் பா.
 
ஈ. பாடல் சொல்வது
 
மறவர் வாழும் வீதிகளில் காணப்படும் காட்சிகள் தொடர்கின்றன.  'க்ஷத்திரியர்களுடைய தலைவன் ஒருவனுக்கு மாத்திரமன்றி, அக்குல முழுமைக்குமே தமிழில் மன்னர் முதலிய பெயர்கள் உண்டு.  நமது நாட்டடில் இப்போது 'மறவர்' என வழங்கும் கூட்டத்தார் க்ஷத்திரிய வமிசத்தவராத லுணர்க.' இது பாரதியின் குறிப்பு.
அந்த வீதிகளில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்.  நாட்டிய மாதர்கள் தாம் பழகிய கலைகளை வெளிப்படுத்திக்கொண்டிருப்பர்.  (நாட்டிய மாதர்தம் 'பழக்கங்களாம்' என்பதற்கு வேறு விதமான பொருள் கொள்ள ஏது உண்டு என்ற போதிலும் பெரிதும் பொருந்தும் பொருள் சொல்லப்பட்டது.)  பழைய புகழ் வாய்ந்த காவியங்கள் அவ்வீதிகளில் பேசப்படும்.  சிற்பம் முதலான ஓவியம் சார்ந்த கலைகள் வளரும்.  குத்துச் சண்டைகள் நிகழும்.  பலர் திரளாக நின்று கண்டு களிப்பர்.

Hari Krishnan

unread,
Sep 18, 2012, 12:09:14 AM9/18/12
to vall...@googlegroups.com
குறிப்பு: நேற்று மும்பையிலிருந்து திரும்பிய களைப்பால் நேற்றைய தவணையை அனுப்ப முடியவில்லை.  நாள்முழுதும் கும்பகர்ண சிஷ்யனாக இருந்தேன். :)

எண்ணரு மணிவகையும் - இவை
இலகிநல் லொளிதரும் பணிவகையும்
தண்ணறும் சாந்தங்களும் - மலர்த்
தார்களும் மலர்விழிக் காந்தங்களும்
சுண்ணமும் நறும்புகையும் - சுரர்
துய்ப்பதற் குரியபல் பண்டங்களும்
உண்ணநற் கனி வகையும் - களி
உவகையும் கேளியும் ஓங்கினவே (13)

பதம் பிரித்து: 

எண்ணரு: எண்ண அரு; எண்ண அரிய.  தண்ணறும்: தண் நறும்

அ. சொற் பொருள்

இவை இலகி நல் ஒளி தரும் பணிவகையும்: இலகு: (ஒளி தோன்றும்படி) விளங்குதல்.  To shine, glisten, glitter.  'இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம், திலக முனிக்கொத்த அடிமைக்காரன்.' (பாரதி).  'இலகிய பனியின் முத்தை இளங்கதிர்க் கையால் உண்பாய்.' (பாரதிதாசன்)

பணி: ஆபரணங்கள்; நகைகள்.  தலையில் நாகரத்தினத்தை உடைய காரணத்தால் பாம்புக்குப் 'பணாமுடி' என்று பெயர்.  

தண் நறும் சாந்தங்கள்: குளிர்ச்சியும் வாசனையும் பொருந்திய, சாந்துக் கலவைகள்.  சாந்தம்: சாந்து.

மலர்த் தார்: மலர் மாலை.

சுண்ணம்: வாசனைப் பொடி.  (டால்கம் பவுடரைப் போன்ற பூசுவதற்கான பொடி.  மேனியில் பூசுவதற்காக ஈரத்துடன் குழைத்திருப்பது சாந்துக் கலவை.  உலர்ந்த பொடி சுண்ணம்.)

சுரர்: தேவர்.  அ-சுரர்: தேவர் அல்லாதவர்

துய்த்தல்: அனுபவித்தல்; பயன்படுத்தல்.

ஆ. இலக்கணம்

இ. யாப்பு

நொண்டிச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

மன்னர் வீதிகளில் காணப்படும் செல்வ வளமும், செல்வ வளம் மிக்கவர்கள் பயன்படுத்தும் பொருள்களும் பேசப்படுகின்றன.

சிவனுடை நண்பனென்பார் - வட
திசைக்கதிபதி அளகேசனென்பார் 
அவனுடைப் பெருஞ்செல்வம் - இவர்
ஆவணந்தொறும் புகுந்திருப்பதுவாம்.
தவனுடை வணிகர்களும் - பல
தரனுடைத் தொழில்செயும் மாசனமும்
எவனுடைப் பயமுமிலா - தினி
திருந்திடும் தன்மைய தெழில்நகரே. (14)

பதம் பிரித்து: தவனுடை: தவன் உடை(ய); தரனுடை: தரன் உடை(ய); கடைசி அடியை 'எவனுடைப் பயமும் இலாது இனிது இருந்திடும் தன்மையது எழில் நகரே' எனப் பிரித்துக் கொள்ளவும்.

அ. சொற் பொருள்

அளகேசன்: குபேரன்.  அட்ட திக்கு பாலகர்களைப் பற்றி முன்னரே கண்டோம்.  வடக்கு திசையின் அதிபதி குபேரன்.  அளாகாபுரியை ஆள்பவன் என்பதனால் அளகேசன் என்பதும் அவனுடைய பெயரே.  

பல தரன் உடைத் தொழில் செய்யும் மாசனம்: பல தரப்பட்ட தொழில்களைச் செய்யும் பெருமக்கள்.  

ஆ. இலக்கணம்

தவன், தரன் ஆகியவை முறையே தவம், தரம் ஆகிய சொற்களின் வேறு வடிவங்கள்.  

எவன்செய இனிய இவ் அழகை எய்தினான்
அவம் செயத் திரு உடம்பு அலச நோற்கிறான்
நவம் செயத் தகைய இந் நளின நாட்டத்தான்
தவன் செயத் தவன்செய்த தவனென்.

சூர்ப்பனகை, இராமனைப் பார்த்த பார்வையில் அவன் மீது கொண்ட காதலில் தனக்குள் சொல்லிக் கொள்வது இது.  'என்ன காரியத்தைக் கருத்தில் கொண்டு, இந்த அழகு வீணாகும்படி, தன் உடலை வருத்திக் கொண்டு, தவ வடிவம் தாங்கி, தவம் மேற்கொண்டிருக்கிறான்?  புதிய தாமரை மலர்களைப் போன்ன அழகான கண்களை உடைய இவன் தவம் செய்ய வந்திருப்பது, 'தவம்' என்பதாகிய செயல் செய்திருக்கும் தவம்.'

இ. யாப்பு

நொண்டிச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

அந்தணர் வீதிகள் ஆயின.  அடுத்ததாக மறவர் வீதிகள்.  இப்போது வணிகர் வீதிகள்.  அத்தினபுரத்தில் இருக்கும் வணிகர்களிடம் புரளும் செல்வம் எப்படிப்பட்டதென்றால், குபேரனுடைய செல்வம் எவ்வளவோ, அவ்வளவு செல்வமும் இவர்களுடைய ஒவ்வொரு ஆவணத்திலும் சர்வ சகஜமாகப் புழங்குமாம்.  குபேர சம்பத்து எவ்வளவோ, அவ்வளவுதான் இவர்களுடைய ஆவணங்களில் புழங்கும் குறைந்தபட்சத் தொகையே.  ['ஐநூறு ரூபாய் நோட்டுக்குச் சில்லறை இருக்குமா,' என்று ஒருவன் - தன்னிடம் உள்ள பெரும் செல்வப் புழக்கத்தைக் காட்டிக் கொள்வதற்காகக் - கேட்டானாம்.  'ஐநூறு ரூபாய்தான் இங்க சில்லறையே' என்று பதில் வந்ததாம். :-)]

வணிகர் வீதிகளையும், நான்காவது வருணத்தவர் வீதிகளையும் இந்தப் பாடலில் பேசுகிறான் கவி.  'பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை,' என்று பெருமிதம் ததும்பப் பேசுதலன்றி, மற்ற தருணங்களில் அந்தச் சொல்லைப் பயன்படுத்தப் பெரிதும் தயங்கியவன் பாரதி.  'பல தரனுடைத் தொழில் செயும் மாசனமும்,' பல வகையான தொழில்களைச் செய்யும் பெருமக்களும் என்று நான்காவது வருணத்தைக் குறிக்கின்றான்.

வேத மறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலைதவ றாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.

பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்வன் செட்டி

என்று மூன்று வருணங்களையும் குறிப்பிட்டவன், நான்காவது வருணத்தைச் சொல்ல நேர்ந்த சமயத்தில்:

'தொண்டர் என்று ஒரு வகுப்பு இல்லை.  தொழில் சோம்பலைப் போல் இழிவு இல்லை' என்று ஒரே போடாகப் போடுவதைக் காணலாம்.

'பல தரனுடைத் தொழில் செயும் மாசனமும்' என்ற தொடருக்குக் குறிப்பெழுதும் போது, 'மஹா ஜனங்கள்.  பொதுப்படையான குடிகள்.  இவர்களே தேசத்திற்கு உயரிராவர்.  இவர்களைச் 'சூத்திரர்' என்பது தற்கால வழக்கு.  'சூத்திரர்' என்ற பெயரைச் சில மூடர் இழிவான பொருளில் வழங்குவது பற்றி நூலில் அப்பெயர் தரவில்லை.'

பாரதி வைத்திருந்த, திருத்தம் செய்த, முதற் பதிப்பின் அச்சுப்படியில், 'இவர்களைச் சூத்திரர்...... தரவில்லை,' என்ற வரி (பாரதியால்) நீக்கப்பட்டிருப்பதாகத் தஞ்சைப் பல்கலைக் கழக ஆய்வுப் பதிப்பு சொல்கிறது.  

Hari Krishnan

unread,
Sep 18, 2012, 12:12:44 AM9/18/12
to vall...@googlegroups.com

துரியோதனன் சபை*

கன்னங் கரியதுவாய் - அகல்
காட்சியதாய் மிகு மாட்சியதாய்
துன்னற் கினியதுவாய் - நல்ல 
சுவைதரு நீருடை யமுனையெனும் 
வன்னத் திருநதியின் - பொன்
மருங்கிடைத் திகழ்ந்தவம் மணிநகரில்
மன்னவர் தம்கோமான் - புகழ்
வாளரவக் கொடி உயர்த்துநின்றான். (15)

பதம் பிரித்து: 

துன்னற் கினியதுவாய்: துன்னற்கு இனியதுவாய்.  திகழ்ந்தவம் மணிநகர்: திகழ்ந்த அம் மணி நகர்

அ. சொற் பொருள்
துன்னல்: 1) நெருங்கி இருத்தல்; அருகில் இருத்தல்; அடைதல்.  2) சிறு துளி; திவலை.  

மருங்கு: பக்கத்தில், பக்கவாட்டில்.  இந்த இடத்தில் கரையில் என்று பொருள்படும்.

வாள்: ஒளி பொருந்திய, கொடிய.  வாள் அரவம் என்ற காரணத்தால், 'கொடிய' என்ற பொருளே பொருந்தும்.

ஆ. இலக்கணம் -

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

கருப்பு வண்ணமுடையது; அகன்றது; பெருமை உடையது; (கரையில்) அருகில் இருக்க இனியது; சுவையான நீரை உடையதான யமுனை நதியின் கரையில் மன்னவர்களுக்கெல்லாம் மன்னவனான துரியோதனன் கொடியதான பாம்பைக் கொடியாக உயர்த்தி நின்றான்.  

யமுனா நதிக்கு யமி என்றும் பெயர் உண்டு.  சூரியனுக்கும் சுவாகா தேவிக்கும் தோன்றியவள்.  சூரியன் யமனுக்குத் தந்தையானபடியால், யமுனை யமனுக்குத் தங்கை.  யமி என்றும், காளிந்தி என்றும் பெயர் கொண்ட நதி.  கரிய வண்ணத்தில் நீர் ஓடும் என்பர்.

துரியோதனனை மன்னவர் தம் கோமான் என்று கவிஞன் அறிமுகப்படுத்தினாலும், அவன் முழு அதிகாரமும் கொண்ட அரசனாய் இயங்கினவனில்லை.  பல விஷயங்களுக்குத் தந்தையையும், சில விஷயங்களுக்கு வீட்டுமரையும் சார்ந்தே நின்றிருந்தான்.  அவன் காலம் முழுவதும் சக்ரவர்த்தியாக திருதிராட்டிரன் வீற்றிருக்கையில், சக்ரவர்த்தியைச் சார்ந்தே இயங்க வேண்டிய இளவலாகப் பல இடங்களில் காட்சி தருகிறான்.  

*இக் கிளைத்தலைப்பு பாரதியால் தரப்பட்டதன்று. பாரதி பிரசுரம் பின்னாளில் தந்தது.

துரியோதனப் பெயரான் - நெஞ்சந்
துணிவுடையான் முடி பணிவறியான்
கரியோர் ஆயிரத்தின் - வலி
காட்டிடு வோன்என்றந்தக் கவிஞர்பிரான்
பெரியோன் வேதமுனி - அன்று
பேசிடும் படிதிகழ் தோள்வலியோன்
உரியோர் தாமெனினும் - பகைக்
குரியோர் தமக்குவெந் தீயனையான். (16)

பதம் பிரித்து: தேவையில்லை.  இறுதி அடியை, ‘பகைக்கு உரியோர் தமக்கு வெம் தீ அனையான்’ என்று பிரித்துக் கொள்ளவும்.

அ. சொற் பொருள் - 

ஆ. இலக்கணம் -

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

முதல் பாடல் யாரைச் சொல்கிறது என்பது விளக்கம் பெறுகிறது.  துரியோதனன் நெஞ்சத்தில் அசாத்தியத் துணிவும், வணங்குதற்கு உரியாரையும் வணங்காத அகங்காரமும் கொண்டவனாக இருந்தான்.  'ஆயிரம் யானைகளின் வலிமையைக் கொண்டவன்,' என்று வேதங்களைத் தொகுத்தவரும், பாரதத்தை இயற்றிய கவிஞருமான வியாசர் போற்றும்படியாகத் திகழ்ந்த வலிமையை உடையான்.  உறவினரே என்றாலும், பகைக்கு உரியவராய் நிற்கும்போது அவர்களுக்கெல்லாம் வெம்மையான தீயைப் போன்றவன்.

(இந்தப் பகுதி, பாரதி வியாச பாரதத்தின் பிழிவாகச் சொல்வது.  Essence from Vyasa.  இன்னும் நேரடி மொழிபெயர்ப்புப் பகுதி தொடங்கவில்லை.  தொடங்கும்போது, உரிய வியாச பாரதப் பகுதிகளைத் தருகிறேன்.)

Hari Krishnan

unread,
Sep 18, 2012, 12:16:47 AM9/18/12
to vall...@googlegroups.com
On 16 September 2012 09:00, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
2012/9/16 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>
இந்த மூன்று தருணங்களைச் சொல்ல முடியுமா ஐயா...
 
Yes.  I have them marked up.  But since the character study of Karna (or any other character for that matter) it is not to be taken up for a detailed discussion here.  We can have it on another occasion.  Or please wait till I return home tomorrow, when I will be able to deal with this point and substantiate my arguments with direct quotations from Vyasa. 

அன்புள்ள பிரசாத் வேணுகோபால்,

என்னிடம் நீங்கள் விளக்கம் கேட்கிறீர்களா அல்லது எனக்கு எதிர்வாதம் செய்கிறீர்களா என்ற உங்கள் நிலைப்பாடு எனக்குப் புரியாத காரணத்தால், விளக்கம் கேட்பவர்களுக்கு எழுதும் தொனியில் எழுதினேன்.  எந்த நிலை என்று தெளிவு படாததால், ‘ஒருவேளை வாதம் என்றால் அதற்கும் தயார்’ என்று எழுதியிருந்தேன்.  நீங்கள் விளக்கம் பெறுவதற்காகக் கேட்டிருந்து, ஒருவேளை நான் எழுதியது உங்களை அச்சுறுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்.  தொடர்ந்து கேட்கவும்.  வாதத்துக்குத்தான் என்றாலும் தொடரவும்.  காரண காரியங்களுக்கிசைந்த வாதங்களே நம்மை--குறிப்பாக என்னை--வளர்க்கின்றன.  

எனவே தொடர்ந்து கேட்கவும்.  தயக்கம் வேண்டாம்.

Tn Elango

unread,
Sep 18, 2012, 12:24:10 AM9/18/12
to vall...@googlegroups.com
ஹரியண்ணா,

/*குபேர சம்பத்து எவ்வளவோ, அவ்வளவுதான் இவர்களுடைய ஆவணங்களில் புழங்கும் குறைந்தபட்சத் தொகையே.*/

இது பாடலில் சொல்லப்பட்டிருக்கிறதா? அன்றி இது தங்கள் விளக்கவுரையில் வரும் கருத்து மட்டும்தானா?

இளங்கோ

2012/9/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

குபேர சம்பத்து எவ்வளவோ, அவ்வளவுதான் இவர்களுடைய ஆவணங்களில் புழங்கும் குறைந்தபட்சத் தொகையே.

Hari Krishnan

unread,
Sep 18, 2012, 12:52:23 AM9/18/12
to vall...@googlegroups.com

2012/9/18 Tn Elango <tnel...@gmail.com>

ஹரியண்ணா,

/*குபேர சம்பத்து எவ்வளவோ, அவ்வளவுதான் இவர்களுடைய ஆவணங்களில் புழங்கும் குறைந்தபட்சத் தொகையே.*/

இது பாடலில் சொல்லப்பட்டிருக்கிறதா? அன்றி இது தங்கள் விளக்கவுரையில் வரும் கருத்து மட்டும்தானா?

பாடலில் சொல்லப்பட்டிருப்பதுதான்.  பகுதி பகுதியாகப் பிரித்து மீண்டுமொருமுறை சொல்கிறேன்:

சிவனுடை நண்பனென்பார் - வட
திசைக்கதிபதி அளகேசனென்பார் 
அவனுடைப் பெருஞ்செல்வம் - இவர்
ஆவணந்தொறும் புகுந்திருப்பதுவாம்.
தவனுடை வணிகர்களும் - பல
தரனுடைத் தொழில்செயும் மாசனமும்
எவனுடைப் பயமுமிலா - தினி
திருந்திடும் தன்மைய தெழில்நகரே. (14)

சிவனுடை நண்பனென்பார் -  சிவனுக்கு நண்பன் என்பார்கள்.  (குபேரன் சிவனுக்கு நண்பன்.  தீபாராதனைகளின்போது சொல்லப்படும் ராஜாதி ராஜாய.... என்பது குபேரனுக்குரிய மந்திரம்.  குபேராய வைஸ்ரவணாய: மஹாராஜாய நம: என்று முடியும்.  எல்லா சிவாலயங்களிலும், கணபதி முருகன் ஆலயங்களிலும் தீபாரதனயைின்போது சொல்லப்படுவது இது.  மற்ற ஆலயங்களைப் பற்றி தெரியாது.)

வட  திசைக்கதிபதி அளகேசனென்பார்: வடக்கு திசையின் அதிபதியாகிய அளகேசன் என்று சொல்வார்கள்.  (அளகேசன் {அழகேசன் இல்லை.  அளகேசன்} என்பது குபேரனுடைய பெயர்.  அளாகாபுரியை ஆள்வதனால் அளகேசன்.  சோழ நாட்டை ஆள்பவன் சோழன்; சேர நாட்டை ஆள்பவன் சேரன்; பாண்டிய நாட்டை ஆள்பவன் பாண்டியன் என்பதைப்போல், அளகையை ஆள்பவன் அளகேசன்.)

அவனுடைப் பெருஞ்செல்வம் - அப்படிப்பட்ட குபேரனுடைய பெரும் செல்வமானது,

இவர் ஆவணந்தொறும் புகுந்திருப்பதுவாம்: இந்த அஸ்தினாபுரத்தில் உள்ளவர்கள் எழுதும் ஆவணங்கள் ஒவ்வொன்றிலும் சர்வ சாதாரணமாக பேசப்படுவதைக் காணலாம்.

லட்சம் என்ற தொகை அன்றாடப் பேச்சு வழக்கில் வந்தது எப்போது என்றால், தமிழ்நாட்டில் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த சமயத்தில் லாட்டரிச் சீட்டை அறிமுகப்படுத்தினார்.  அப்போதிருந்துதான் மக்கள், லட்சங்களில் பேசத் தொடங்கினர். அதற்குப் பிறகு ஊழல் வளர்ச்சி அடைய அடைய, கோடி என்ற தொகை மக்களுக்குப் பரிச்சயமானது.  அப்புறம் ஆயிரம் கோடி அன்றான வகாபுலரிக்கு வந்தது; இப்போதுதான் லட்சம் கோடி வந்திருக்கிறது.  இனிவரும் காலங்களில் இதற்கு மேற்பட்ட தொகை என்ன என்பதை இனிமேல்தான் அறியப் போகிறோம்.

ஆனால், அஸ்தினாபுரத்திலோ, குபேர சம்பத்து எனப்படும் பெருந்தொகை, எல்லா ஆவணங்களிலும் இடம்பெற்ற, குறைந்தபட்சத் தொகை என்று கவி பேசுகிறான்.  இது பாரதியின் சொந்தக் குறிப்பா அல்லது வியாச பாரதத்தில் எங்கேனும் இடம்பெறும் குறிப்பா என்பதை ஒருமுறை ஒப்பிட்டுப் பார்த்த பிறகு சொல்கிறேன்.

Hari Krishnan

unread,
Sep 18, 2012, 12:55:01 AM9/18/12
to vall...@googlegroups.com

2012/9/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

அப்புறம் ஆயிரம் கோடி அன்றான வகாபுலரிக்கு வந்தது; இப்போதுதான் லட்சம் கோடி வந்திருக்கிறது.  இனிவரும் காலங்களில் இதற்கு மேற்பட்ட தொகை என்ன என்பதை இனிமேல்தான் அறியப் போகிறோம்.

இதை இப்படிப் படிக்கவும்:

அப்புறம், ஆயிரம் கோடி அன்றாட vocabularyக்கு வந்தது..... இத்யாதி...

Tn Elango

unread,
Sep 18, 2012, 1:24:27 AM9/18/12
to vall...@googlegroups.com
ஹரியண்ணா,

நீங்கள் சொல்லித்தரவில்லையென்றால், இந்த வரிக்ளுக்கு இப்படியொரு பொருளை என்னால் புரிந்து கொள்ள எப்படி இயலும்?  I am able to enjoy this explanation..really.

மிக்க நன்றி, சிரத்தையெடுத்து விளக்கியமைக்கு.

இளங்கோ.

2012/9/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

அவனுடைப் பெருஞ்செல்வம் - இவர்
ஆவணந்தொறும் புகுந்திருப்பதுவாம்

Hari Krishnan

unread,
Sep 18, 2012, 10:19:01 PM9/18/12
to vall...@googlegroups.com

தந்தைசொல் நெறிப்படியே - இந்தத்
தடந்தோள் மன்னவன் அரசிருந்தான்
மந்திரம் உணர்பெரியோர் - பலர்
வாய்த்திருந் தாரவன் சபைதனிலே
அந்தமில் புகழுடையான் - அந்த
ஆரிய வீட்டுமன் அறமறிந்தோன் 
வந்தனை பெறுங்குரவோர் - பழ
மறைக்குல மறவர்கள் இருவரொடே, (17)

மறைக்குல மறவர் - கிருபர், துரோணர்

பதம் பிரித்து: 

அ. சொற் பொருள்: குரவோர்: தாய், தந்தை, தனயன், அரசன், குரு என்பவர் ஒருவனுக்கு ஐம்பெருங் குரவர்களாகின்றனர்.  இந்த இடத்தில் குரு என்று பொருள்படும்.

ஆ. இலக்கணம் -

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

துரியோதனன், தன் தந்தையின் சொல்லும் வழியில் ஆட்சி செலுத்திவந்தான்.  மந்திரம் (ஆலோசனை) வல்லவ பெரியவர்கள் அவன் சபையில் இருந்தனர்.  முடிவற்ற புகழை உடைய பெரியவனான வீட்டுமன் இருந்தான்.  வணக்கத்துக்கு உரிய ஆசிரியர்களான, மறை ஓதும் குலத்தில் பிறந்து வில் பிடிக்கும் தொழிலைச் செய்யும் மறவர்களான கிருபரும், துரோணரும் அங்கே இருந்தனர்.

சரத்வான் என்ற முனிவருக்குக் காட்டில் பிறந்தவர்கள் கிருபரும் அவருடைய தங்கை கிருபியும்.  பிறந்த சில தினங்களிலேயே சந்தனுவால் கண்டெடுக்கப்பட்டு அரண்மனைக்குக் கொண்டுவரப்பட்டு அங்கே வளர்ந்தவர்கள்.  கிருபர் ஆயுதப் பயிற்சி பெற்றது இவ்வாறுதான்.  பரத்துவாஜ முனிவரின் மகனான துரோணருக்கு கிருபியை மணமுடித்தனர்.  எனவே துரோணர், கிருபருக்கு மைத்துனர் முறை.  துரோணர் அத்தினபுரத்துக்கு வந்து சேரும் வரையில் கிருபரே கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆயுதப் பயிற்சி முதலானவற்றைக் கற்றுத் தந்தவர்.  ஆகவே இவர்கள் இருவருமே பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் ஆசிரியர்கள்.

மெய்ந்நெறி உணர்விதுரன் - இனி
வேறுபல் லமைச்சரும் விளங்கிநின்றார்
பொய்நெறித் தம்பியரும் - அந்தப்
புலைநடைச் சகுனியும் புறமிருந்தார்
மைந்நெறி வான்கொடையான் - உயர்
மானமும் வீரமு மதியுமுளோன்
உய்ந்நெறி யறியாதான் - இறைக்
குயிர்நிகர்க் கன்னனும் உடனிருந்தான். (18)

பதம் பிரித்து: தேவையில்லை

அ. சொற் பொருள்: புலை நடை: கீழான வழிகளை மேற்கொண்டு நடக்கும் இழிகுணம்.  
மைந்நெறி: மை: கருமேகம்.  சூல்கொண்ட மேகம் போன்ற கொ¨டைய உடையவன்.

ஆ. இலக்கணம் -

இ. யாப்பு

நொண்டிச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

மெய்வழியை உணர்ந்தவனான விதுரன் அங்கே இருந்தான்.  மற்ற அமைச்சர்கள் இருந்தார்கள்.  இவனுக்கு நேர் மாறாக, பொய் வழியே தம் வழி என்று நடக்கும் துச்சாதனன் முதலான தம்பியர்கள் அங்கே இருந்தார்கள்.  கருக் கொண்ட மேகம் போல் பொழியும் கொடையும், மானமும், வீரமும் அறிவும் நிறைந்தவனும்; இத்தனை இருந்த போதிலும் தீயவர்களின் வழியையும் நட்பையும் விட்டு விலகும் வழியை அறியாதவனுமான கர்ணன் அங்கே இருந்தான்.  துரியோதனனின் உயிரல்லவா அவன்.

மாண்டவ்யர் என்றொரு முனிவர் இருந்தார்.  மிகவும் போற்றப்பட்ட அவர் ஒரு நாள் நிஷ்டையில் இருக்கும் போது, அரசியின் நகைகளைத் திருடிக் கொண்டு வந்த திருடன் ஒருவன் அந்த வழியாக ஓடி வந்தான்.  வீரர்களால் துரத்தப்பட்ட அவன், மாண்டவ்யரின் பர்ணசாலைக்குள் நகைகளைப் போட்டுவிட்டு ஓடிப் போனான்.  நகைகளைப் பர்ண சாலையில் கண்டெடுத்த வீரர்கள், 'இவை எவ்வாறு இங்கே வந்தன,' என்று மாண்டவ்யரைத் திரும்பத் திரும்பக் கேட்டனர்.  நிஷ்டையில் இருந்த மாண்டவ்யரின் காதில் இந்தக் கேள்வி விழவில்லை.  'திருடன் நடிக்கிறான்,' என்றெண்ணி நகைகளை மீட்டுக்கொண்டு அரசனிடம் சென்று விவரத்தைக் கூறினர்.  

மாண்டவ்யரைக் கழுவேற்றச் சொல்லி உத்திரவிட்டான் அரசன்.  உலக்கையைத் திருப்பி வைத்து நட்டாற் போன்ற வடிவத்தில் இருக்கும் கழு மரத்தின் கூர் முனையில் தண்டனை பெற்றவனை அமர்த்தி விடுவார்கள்.  குதத்தின் வழியாக உள்ளே நுழையும் கழு மரத்தின் கூர் முனை, கழுத்தின் அருகே துளைத்துக் கொண்டு வெளி வரும்.  இது நடந்து முடிய இரண்டு நாளாகும்.  மெதுவானதும், வேதனை நிரம்பியதுமான சாவு.  மாண்டவ்யரைக் கழுவேற்றிய நெடு நேரம் கழித்து, மக்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டு கொண்டு, அரசனிடம் சென்று விவரம் சொல்லி, அரசன் ஓடி வந்து பார்ப்பதற்குள் பாதி உடலைத் துளைத்துக் கொண்டு வந்திருந்தது கழுமரம்.  கழுவிலிருந்து கீழே இறக்கி மன்னிப்புக் கேட்டான் மன்னன்.  அவ்வாறு இறக்கும் போது, கழு மரத்தின் ஒரு பகுதி (ஆணி) ஒடிந்து அவர் உடலிலேயே தங்கிவிட்டபடியால் அவருக்கு 'ஆணி மாண்டவ்யர்' என்ற பெயர் ஏற்பட்டது.

கழுமரத்திலிருந்து இறக்கப்பட்ட மாண்டவ்யர், மன்னனிடம் ஏதும் பேசவில்லை.  நேராக தரும தேவதையிடம் சென்றார்.  'எனக்கு இது ஏன் நேரிட்டது?' என்று கேட்டார்.  'சிறு வயதில் நீர் தும்பிகளைப் பிடித்து, அவற்றின் வால் நுனியை வெட்டி, சிறு குச்சிகளைச் செருகி, அதில் நூல் கொண்டு கட்டி அவற்றைப் பறக்கச் செய்து விளையாடினீர்.  ஆகவே, இந்தத் தண்டனை நேர்ந்தது,' என்றது தரும தேவதை.

'அறியாத வயதில் செய்த செயலுக்கு இவ்வளவு கடுமையான தண்டனை வழங்குவதா?  உனக்கு தரும நெறிமுறையின் அளவு தெரியவில்லை.  மண்ணுலகத்தில் என்னைப் போல் மனிதனாய்ப் பிறப்பாய்.  நான் எவ்வாறெல்லாம் கழுமரத்தில் துன்பப்பட்டேனோ, அவ்வாறெல்லாம் மனத்தளவில் துன்பப்பட்டு, புண்பட்டு வருந்துவாய்,' என்று சாபமிட்டார் மாண்டவ்யர். 

அந்தச் சாபத்தினால் பூமியில் வந்து பிறந்த தரும தேவதைதான் விதுரன்.  யுதிஷ்டிரனாவது தரும புத்திரன்.  கெளரவர்கள் பக்கம் தரும தேவதையே வந்து நின்றுகொண்டிருந்தது.  அதனால்தானோ என்னவோ அவர்கள் பக்கம் சற்று உயர்ந்தே கோலோச்சிக் கொண்டிருந்தது.  

Hari Krishnan

unread,
Sep 19, 2012, 11:20:23 PM9/19/12
to vall...@googlegroups.com
வேறு

எண்ணி லாத பொருளின் குவையும்
யாங்க ணுஞ்செலும் சக்கர மாண்பும்
மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர்
வார்க டற்பெருஞ் சேனையு மாங்கே
விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று
வேண்டு மின்பமும் பெற்றவ னேனும்
கண்ணி லாத்திரி தராட்டிரன் மைந்தன்
காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர். (19)

பதம் பிரித்து: 

எண் இலாத பொருளின் குவையும்
யாங்கணுஞ் செலும் சக்கர மாண்பும்
மண்ணில் ஆ(யா)ர்க்கும் பெறல் அரிதாம் ஓர்
வார்கடல் பெரும் சேனையும் ஆங்கே
விண்ணில் இந்திரன் துய்ப்பன போன்று
வேண்டும் இன்பமும் பெற்றவ னேனும்
கண் இலாத் திரிதராட்டிரன் மைந்தன்
காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர். 

அ. சொற் பொருள்

வார்கடல்: நெடுங் கடல்.  வார்: நீண்ட, நேரான, நெடும்.

ஆ. இலக்கணம் - 

இ. யாப்பு

எண்சீர் விருத்தம் என்று பாரதி குறித்திருக்கும் கட்டளைக் கலிப்பா.  கட்டளைக் கலிப்பாக்களுக்கு எழுத்துக் கணக்கு உண்டு.  (கட்டளை என்று தொடங்கும் எல்லா வகைப் பாவினமும் ஒவ்வொரு அடியிலும் ஒரே அளவான எழுத்துகளோடு இருக்கும்.)  எண்சீர் விருத்தத்துக்கும் கட்டளைக் கலிப்பாவுக்கும் உள்ள ஒரே வேற்றுமை, 'சந்தத்ததால் அளவொத்து வருவது விருத்தம்; எழுத்தால் அளவொத்து வருவது கட்டளைக் கலிப்பா.'  மற்றபடி இவை இரண்டும் ஒரே மாதிரியான அமைப்பை உடையவ¨தாம்.  மேற்படிப் பாவில் எழுத்தெண்ணிப் பார்க்கலாம்.  எண்ணும் போது, ஒற்று ஒழித்து எண்ண வேண்டும்.  அதாவது க், ச், ப், ந், ய், ல், போன்ற எல்லாப் புள்ளி எழுத்துகளையும் விட்டுவிட்டு எண்ண வேண்டும்.  'கடுகு' என்ற சொல்லில் இருப்பது மூன்றெழுத்துகள்.  'கண்ணுக்குள்' என்ற சொல்லில் இருப்பதும் மூன்றே எழுத்துகள்தாம்.  க ணு கு.  ண், க், ள் ஆகிய மூன்றையும் விட்டுவிட வேண்டும்.

இப்படி எண்ணினால், மேற்படிப் பாடலில் ஒவ்வோர் அடியிலும் இருபது எழுத்துகள் இருப்பதைக் காணலாம்.  ஒவ்வோர் அரை அடியிலும் பத்துப் பத்து எழுத்துகள் இருக்கின்றன.  (பதம் பிரிக்காத வடிவத்தில் எண்ணவும்.)  ஓர் அடி என்பது இரண்டு பாகங்களாகப் பிரிந்திருக்கிறது.  'எண்ணி லாத' என்று தொடங்கி, 'குவையும்' என்பது வரை அரை அடி.  அதற்கு அடுத்ததாக 'யாங்கணும்' என்று தொடங்குவதும் அதே முதல் அடிதான்; சற்றே உள்ளே மடக்கிப் போட்டிருப்பதால் இதனை 'மடக்கடி' என்று சொல்வார்கள்.  இது முதல் அடியின் இரண்டாவது அரை அடி.  ஒரே நீண்ட அடியாகவும் இந்தப் பாடலை எழுத முடியும்.  அதாவது இப்படி:

எண்ணி லாத பொருளின் குவையும் யாங்க ணுஞ்செலும் சக்கர மாண்பும்
மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர் வார்க டற்பெருஞ் சேனையு மாங்கே
விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று வேண்டு மின்பமும் பெற்றவ னேனும்
கண்ணி லாத்திரி தராட்டிரன் மைந்தன் காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர்.

ஐந்து சீர்களுக்கு மேல் போகும் எல்லா விருத்தங்களிலும், சிந்துப் பா வகைகளிலும் ஓரடியை இரண்டாகப் பிரித்து, இரண்டாவது அரை அடியை மடக்கி எழுதுவார்கள்.  பார்வைக்கு எடுப்பாக இருக்கும் என்பதுதான் இதன் பயன்.  வேறு எந்தவிதமான நோக்கமோ, அமைப்புக் கட்டுப்பாடோ கிடையாது.  இது ஒரு பதிப்புச் செளகரியம் (publishing convenience).  அவ்வளவுதான்.  

மேற்படி கட்டளைக் கலிப்பா 'எண்' என்று நேரசையில் தொடங்கியிருக்கிறது.  அடிக்கு இருபது எழுத்துகள் பயிலும்.  நிரையசையில் தொடங்கும்போது அடிக்கு இருபத்தோ ரெழுத்து இருக்கும்.  பேராசிரியர் ம. ரா. போ. குருசாமி அவர்கள் கொடுத்திருக்கும் குறிப்பிலிருந்து:

"எண்சீர் கொண்ட நாலடிப் பாடல்களில் இரண்டு வகை உண்டு.  ஒன்று எண்சீர்க் கழி நெடில் அடி ஆசிரிய விருத்தம்.  மற்றொன்று, கட்டளைக் கலிப்பாவாகும்.  இக் கட்டளைக் கலிப்பாவினை இனம் காணும் முறை: நேரசையில் தொடங்கும் அரையடியில் ஒற்று நீக்கி எண்ணுமிடத்துப் பதினோரெழுத்து இருக்கும்; நிரையசையில் தொடங்கும் அரையடியில் பன்னிரண்டு எழுத்து இருக்கும்.  காப்பியங்களில் இவ்வகையைக் காணலாம்.  பாரதியாரிலும் இப் பாடல்கள் பல. ... ... ... ... ... ... ... ... மரபு வழிப்பட்ட இவையேயன்றி நேரசையில் தொடங்கும் அரையடிக்குப் பத்தெழுத்தும், நிரையசையில் தொடங்கும் அரையடிக்குப் பதினோரெழுத்தும் கொண்ட புதுவகையான கட்டளைக் கலிப்பாக்களும் பாரதியாரில் உள்ளன."

எழுத்துக் கணக்கெல்லாம் பார்த்து எழுதினால் அந்தப் பாட்டில் உயிர் எப்படி இருக்கும், கவிதை எப்படி இருக்கும், உணர்ச்சி எப்படி இருக்கும் என்றெல்லாம் விமரிசிப்பவர்களும், கவலைப் படுபவர்களும் இதைப் பார்க்கவும்:

நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்;
பிரித்துப் பிரித்துநித மேகமளந்தே
பெற்றதுன் முகமன்றிப் பிரிதொன்றில்லை.
சிரித்த ஒலியினிலுன் கைவிலக்கியே
திருமித் தழுவியதில் நின்முகங்கண்டேன்.

(கண்ணம்மா என் காதலி - பின்னே வந்து கண் மறைத்தல்.)

ஒவ்வோர் அடியையும் எழுத்தெண்ணிப் பாருங்கள்.  'நெரித்த' என்று நிரையசையில் தொடங்கும் இந்தத் தரவில் ஒவ்வோர் அரையடிக்கும் பன்னிரண்டும், பதின்மூன்றுமாக எழுத்துகள் அமைந்திருப்பதைக் காணலாம்.  உங்கள் வசதிக்காக ஒற்று நீக்கிக் கணக்குப் போட்டும் காட்டுகிறேன்.  

நெரித திரைகடலி நிமுககடே 
 3               5                     5             = 13
நீல விசுபினிடை நிமுககடே
              2             5                   5    = 12
திரித நுரையினிடை நிமுககடே;
   3         5             5  = 13
சின குமிழிகளி நிமுககடே;
               2      5         5 = 12
பிரிது பிரிதுநித மேகமளதே
  3           5               5  = 13
பெறது முகமறி பிரிதொறிலை.
                 3     4          5 = 12

சிரித ஒலியினிலு கைவிலகியே
   3            5                  5 = 13
திருமி தழுவியதி நிமுககடே.
                 3      5          5 = 13.

இந்தக் கவிதையில் இருந்து கடைசித் தரவை மட்டும் தந்திருக்கிறேன்.  நான்கு தரவுகளை (stanza) கொண்ட இந்தக் கவிதை முழுவதிலும் இந்த அமைதி பொருந்தி வரும்.  இந்தப் பாடலில் உணர்ச்சி இல்லையா, அழகில்லையா, கவிதையில்லையா?  முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.  

ஈ. பாடல் சொல்வது

எண்ணில் அடங்காத பொருட்களின் குவியலும், எல்லா இடத்திலும் செல்லுபடியாகும் அரச அதிகாரத்தின் பெருமையும், உலகத்தில் வேறு யாருக்கும் கிடைப்பதற்கு அரிதான நீண்ட கடலை ஒத்த சேனையையும், இந்திர போகம் என்று சொல்லத் தக்க எல்லா வகையான இன்பங்களையும் அனுபவிப்பவனே ஆனாலும், கண் இல்லாதவனான திருதிராட்டிரனின் மகன் நெஞ்சில் ஈரம் இல்லை; பசை இல்லை.  வற்றிக் காய்ந்த நெஞ்சை உடையனாக இருந்தான் - பாண்டவரிடத்தில்.  அப்படிப் பட்ட காய்ந்த நெஞ்சோடு அவன் எண்ணுவதைக் கேளுங்கள்.  

Tn Elango

unread,
Sep 20, 2012, 12:43:10 AM9/20/12
to vall...@googlegroups.com
எனக்கும் எந்த உணர்வு இருக்கிறது. அதாவது இப்படிக் கடுமையான வரம்புக்குள் பொருந்தி வருமாறு, அதே சமயம் அழகியல் உணர்வோடு, பொருள் பொதிந்த, உணர்வுபூர்வமான பாடல்களை இவரால்( இவர்களால்) எப்படி எழுத முடிந்தது? என்ற ஆச்சரிய உணர்வு. அவையெல்லாம் எப்படி சாத்தியமாயின?

2012/9/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

எழுத்துக் கணக்கெல்லாம் பார்த்து எழுதினால் அந்தப் பாட்டில் உயிர் எப்படி இருக்கும், கவிதை எப்படி இருக்கும், உணர்ச்சி எப்படி இருக்கும் என்றெல்லாம் விமரிசிப்பவர்களும், கவலைப் படுபவர்களும் இதைப் பார்க்கவும்:

Hari Krishnan

unread,
Sep 20, 2012, 1:03:01 AM9/20/12
to vall...@googlegroups.com

2012/9/20 Tn Elango <tnel...@gmail.com>

எனக்கும் எந்த உணர்வு இருக்கிறது. அதாவது இப்படிக் கடுமையான வரம்புக்குள் பொருந்தி வருமாறு, அதே சமயம் அழகியல் உணர்வோடு, பொருள் பொதிந்த, உணர்வுபூர்வமான பாடல்களை இவரால்( இவர்களால்) எப்படி எழுத முடிந்தது? என்ற ஆச்சரிய உணர்வு. அவையெல்லாம் எப்படி சாத்தியமாயின?

அடியடி தோறும் ஐஞ்சீ ராகி
முதற்சீர் நான்கும் வெண்டளை பிறழா
கடையொரு சீரே விளங்கா யாகி
நேர்பதி னாறே நிரைபதி னேழே
ஓதினர் புலவர் ஓரடிக் கெழுத்தே....

இது கட்டளைக் கலித்துறையின் இலக்கணம்.  அபிராமி அந்தாதியைப் படித்துப் பாருங்கள்.  எழுத்தெண்ணியா பாடியிருப்பார்?  It was just a spontaneous outpouring என்பது அதில் ததும்பும் உணர்ச்சியிலும், படிப்பவன் கண்கள் நனைவதிலிருந்தும் தெரிகிறது அல்லவா?  நேர் பதினாறு, நிரை பதினேழு என்று எண்ணிப் பாருங்கள்.  சரியாக வராவிட்டால், மீண்டும் எண்ணிப் பாருங்கள்.  சரியாக எண்ணியிருக்க மாட்டோம்!

திருப்புகழில் எந்தப் பாடலை எடுத்துக் கொண்டாலும் எழுத்துக் கணக்கு பிசகாது. 

இதற்கெல்லாம் ஒரு எளிய மார்க்கம் இருக்கிறது.  பிறகு சொல்கிறேன். தற்போதைக்கு சிறிய க்ளூ.  உலகப் படத்தைக் கிழித்துப் போட்டு ஒட்ட வைக்கும்படி ஒரு குழந்தையிடம் சொன்னார்களாம்.  குழந்தை ஐந்து நிமிடத்தில் ஒட்டவைத்துத் திருப்பிக் கொடுத்துவிட்டது.  பூகோள இயலில் தேர்ச்சி பெற்றவர்களே திண்டாடிப் போகக்கூடிய காரியத்தை நீ எப்படி செய்தாய் என்று கேட்டபோது, குழந்தை சொன்ன விடை உங்களுக்கே தெரியும்.  ‘நான் அந்த உலகப்படத்தின் பின் பக்கத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த மனிதனுடைய படத்தைச் சரியாக ஒட்ட வைத்தேன்.  உலகம் தானாகச் சரியாகிவிட்டது.‘

அப்படித்தான் இந்த எழுத்துக் கணக்குகளும்.  பின்னால இருக்கும் மனுசன் படத்தைச் சரியாக ஒட்ட வைத்துவிட்டால், தானாகவே எழுத்துக் கணக்கு, பிசகில்லாமல் அமையும்.

தற்போது இருக்கும் நெருக்கடி சற்று ஓயட்டும்.  யாப்பிலக்கணத்துக்கு எளிய அறிமுகம் எழுதுகிறேன்.  (நீ என்ன அவ்ள பெரிய ஆளா என்று கேட்பவர்களுக்கு மட்டும்:  ஏதோ கொஞ்சம் தெரியுமுங்க.  நாகபந்தம் என்ற சித்திர கவி வகையை இருபது வயதில் இயற்றியிருக்கிறேன்.  வேணும்னா அந்த நாக பந்தத்தை இங்கே இடுகிறேன். )

Anna Kannan

unread,
Sep 20, 2012, 2:52:09 AM9/20/12
to vall...@googlegroups.com
20 வயதில் இரட்டை நாகபந்தம் இயற்றிய இன்னோருவர், இங்கிருக்கிறார். 
35D.gif

coral shree

unread,
Sep 20, 2012, 3:33:15 AM9/20/12
to vall...@googlegroups.com
அன்பின் ஹரிகிஜி,

மெய்சிலிர்க்க வைக்கும் விளக்கங்கள்.  அபிராமி அந்தாதியின் அனைத்துப் பாடல்களையும் படிக்கும் போதெல்லாம் இறுதியில் க்ண்ணீர் வராமல் இருந்ததே இல்லை...  திருப்புகழில் இருக்கும் எழுத்துக்கணக்கெல்லாம் அறியும் அளவிற்கு வல்லமை பெறாவிட்டாலும்,  அந்தக்கணக்குகளால் பாடலுக்கு ஒரு தனிப்பட்ட சக்தியிருப்பதை மட்டும் உணர முடிகிறது. அதைத்தான் தெவீகத்தன்மை என்கிறோமோ.

//நாகபந்தம் என்ற சித்திர கவி வகையை இருபது வயதில் இயற்றியிருக்கிறேன்.  வேணும்னா அந்த நாக பந்தத்தை இங்கே இடுகிறேன். ) //

தயவுசெய்து அதையும் போடுங்கள் ஜி. தாகூரின் மொழிபெயர்ப்பு கவிதைகள் கேட்டு களைத்துப்போனவர்கள் இதையாவது படித்துவிட்டுப் போகட்டுமே...

அன்புடன்
பவளா

2012/9/20 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
 
--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

coral shree

unread,
Sep 20, 2012, 3:35:28 AM9/20/12
to vall...@googlegroups.com
இரட்டை நாகபந்தம் இயற்றிய அந்த பொல்லாப்பிள்ளை யார்... வரச்சொல்லுங்கள் அவரையும். சந்திக்கக் காத்திருக்கிறோம்..

அன்புடன்
பவளா

2012/9/20 Anna Kannan <annak...@gmail.com>
20 வயதில் இரட்டை நாகபந்தம் இயற்றிய இன்னோருவர், இங்கிருக்கிறார். 

--
 
35D.gif

Hari Krishnan

unread,
Sep 20, 2012, 3:44:37 AM9/20/12
to vall...@googlegroups.com

2012/9/20 Anna Kannan <annak...@gmail.com>

20 வயதில் இரட்டை நாகபந்தம் இயற்றிய இன்னோருவர், இங்கிருக்கிறார். 

:))

பாம்பறியும் பாம்பினது கால்.  அறியேனா!
35D.gif

Hari Krishnan

unread,
Sep 20, 2012, 4:50:28 AM9/20/12
to vall...@googlegroups.com

2012/9/20 Anna Kannan <annak...@gmail.com>

20 வயதில் இரட்டை நாகபந்தம் இயற்றிய இன்னோருவர், இங்கிருக்கிறார்.

அப்போது தண்டியலங்காரம் படித்துக் கொண்டிருந்த சமயம்.  புத்தகத்தில், இரட்டை நாகபந்தத்தின் படம் இருக்கிறது; எழுதுவதற்கான விதி இல்லை.  அட்ட நாகபந்தத்துக்கு விதி இருக்கிறது; படம் இல்லை.  ‘குருமுகத்தான் அறிக’ என்று தண்டியலங்காரம் சொல்லி நிறுத்திக் கொள்கிறது.  அப்போதுதான், சித்திரகவிதைகளின்மேல் ஒருவித அசட்டையுடன் இருந்த எனக்கு இது பெரும் சவாலாகப் பட்டது.  ‘எனக்கு குரு நீதான்.  கற்றுக்கொடு’ என்று முருகனை வணங்கி எழுந்து அமர்ந்தேன்.  அப்ரோச் லேசாகப் பிடிபட்டது.  

இரண்டு பாம்புகள் தனக்குள்ளும் மடங்குகின்றன.  எதிர்ப்பாம்போடும் மறித்துப் போகின்றன.  எனவே, முதல் பாடலில், அந்தப் பாடலுக்குள்ளேயே மடங்கி வரும் எழுத்துகளும்; இரண்டாவது பாடலில், தனக்குள் மடங்குவதும் எதிர்ப்பாம்புடன் மறிப்பதுமான இன்டர்செக்ஷன் எழுத்துகள் எவை என்பதை முதலில் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும் என்று உட்கார்ந்து எண்ணத் தொடங்கினேன்.  அப்போது வகுத்துக்கொண்ட விதிமுறை இது:

===================================================================================================
ஹரி கிருஷ்ணன் (2000 ஆண்டு) மின்னஞ்சலிலிருந்து:

ஒவ்வொரு பாம்பும் தமக்குள் 5 இடங்களில் மடங்கும். எதிர்ப்பாம்புடன் 12 இடங்களில் வெட்டும். எழுத்துக்கணக்கு: (ஒற்றெழுத்துக்களையும் சேர்த்து எண்ண வேண்டும்)
நேரிசை வெண்பா: எழுத்தெண் 4-ம் 38-ம்; 8-ம் 49-ம்; 12-ம், 19-ம்; 21ம் 54-ம்; 40-ம் 46-ம் ஒன்றாக இருக்கவேண்டும்.

இன்னிசை வெண்பா: எழுத்தெண் 4-ம் 37-ம்; 8-ம் 49-ம்; 12-ம், 19-ம்; 21ம் 53-ம்; 39-ம் 45-ம் ஒன்றாக இருக்கவேண்டும்.**
இதுதவிர, இன்னிசை வெண்பாவின் எழுத்துக்கள் 12 இடங்களில் நேரிசை வெண்பாவின் எழுத்துக்களோடு ஒத்துப்போகவேண்டும்.

இன்னிசை நேரிசை
வெண்பா வெண்பா
எழுத்தெண் எழுத்தெண்

2 2
6 34
10 27
23 23
25 52
27 10
31 48
33 6
35 36
47 32
51 25
55 56
==================================================================================================

வசதிக்காக ஒரு சில இடங்களில், ஒரேயொரு கட்டமாக இல்லாமல், சற்றே நீண்டதாக நான்கைந்து எழுத்துகளை எழுதுவதற்குத் தோதாக இடம் விட்டிருப்பார்கள்.  ஆனால், அவசியத்தின் காரணமாக ஒன்றிரண்டு எழுத்துகளைக் கூட்டியோ குறைத்தோ எழுதினால், மொத்த ஸ்டர்க்சரையும், சேர்த்திருக்கும் அல்லது விட்டிருக்கு எழுத்துகளின் எண்ணிக்கையும் சேர்த்து, கூட்டவோ குறைக்கவோ வேண்டும்.

இப்படி, ஒரு ஆர்வத்தின் காரணமாக எழுதியது.  கடுமையான புலவர் நடையில் அமைந்திருக்கும் நேரிசை, இன்னிசை வெண்பாக்கள்.  தொடர்ந்து முயன்றிருந்தால், அன்றாடப் பேச்சுவழக்கிலேயேகூட இதைச் செய்ய முடியும்.  ஏனோ அதற்குப் பிறகு ஆர்வம் போய்விட்டது.

இப்படி இயற்றிய இரட்டை நாகபந்தத்தை சென்னைஆன்லைனின் தமிழ்ப்பிரிவான ஆறாம் திணை வெளியிட்டது.  இங்கே தருகிறேன்.

நேரிசை வெண்பா:

பந்த மழிந்திட பாம்பின் தழலெழத்தான்
பந்த மதனாலே பாடுகிறேன் - கந்தனே
யால மடங்கி வலியொடுங்கு மேமிடறோ
னேலும் தவமே துணை.

என்னுடைய பந்தங்கள் அழிவதற்கும், குண்டலினிப் பாம்பின் தழல் எழுவதற்காகவும்தான் இந்த பாம்பின் வடிவத்தில் உள்ள பந்தத்தினால் பாடுகிறேன்.  கந்தனே!  ஆலம் தன் வலிமை ஒடுங்கி, அடங்கி நிற்கும் பெருமைவாய்ந்த மிடற்றை உடையவன் பெருமைப்படும் தவமே!  (நீயே) துணை.

இன்னிசை வெண்பா:

கந்த னமுதமே! யென்பா! பதாம்புயம்
தந்தாய்! பதும சினேகம் வதனமே
காந்தியா யானவ! நின்பெயரில் நிற்கவையென்
னாவி பகவ வருள்.

கந்தனாகிய அமுதமே! என் அன்பா! எனக்குப் பதாம்புயங்களைத் தந்தவனே! சூரியனைப் போன்ற வதனம் கொண்டவனே!  உடல் முழுதும் ஒளிவீசும் தன்மை கொண்டவனே!  என் ஆவி, (எப்போதும்) உன் பெயரில் நிற்கட்டும் (உச்சரித்தபடி இருக்கட்டும்).  அப்படிப்பட்ட நிலையில் என்னை வை.  பகவானே! அருள்.

இதில் இரண்டாம் பாடலின் ஈற்றடியில் எதுகையை வைக்க முடியவில்லை.  ‘சரி போகட்டும்’ என்று விட்டுவிட்டேன்.  முயன்றிருந்தால் இதையும் சரி செய்திருக்கலாம்.  இன்னும் இதுபோன்ற பந்தங்களை (முரச பந்தம், சுழிகுளம், நான்காரை, ஆறாரை, எட்டாரைச் சக்கரங்கள்... இவைபோன்று) செய்திருக்க முடியும்.  எளிய நடையிலும் அமைத்திருக்க முடியும்.  ஒன்றையாவது செய்யவேண்டும் என்ற உந்துதலால் செய்தது.  பிறகு எனக்கு ஆர்வம் போய்விட்டது.  போறும்போ என்று விட்டுவிட்டேன்.
NagaBandham-aaraamthinnai.jpg

Hari Krishnan

unread,
Sep 20, 2012, 4:51:29 AM9/20/12
to vall...@googlegroups.com

2012/9/20 coral shree <cor...@gmail.com>

இரட்டை நாகபந்தம் இயற்றிய அந்த பொல்லாப்பிள்ளை யார்...

ஒங்க எடிட்டர்தான்.  குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும் குறையேதும் எனக்கேதடி!  நான் பேருக்கு அண்ணா.  அவர் பெயரில் அண்ணா. :))

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Sep 20, 2012, 4:59:01 AM9/20/12
to vall...@googlegroups.com
/
ஒங்க எடிட்டர்தான்.//

நான் எடிட்டர் எல்லாம் இல்லை. நிறுவியது மட்டுமே  என் வேலை. ஆகவே நிறுவனர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இப்படிக்கு
அண்ணா கண்ணன்.

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/9/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

Anna Kannan

unread,
Sep 20, 2012, 5:03:58 AM9/20/12
to vall...@googlegroups.com
ஐயப்பன், (இந்த இடத்தில் மட்டும்) என் மனசாட்சி. அவரது கூற்றை வழிமொழிகிறேன். நம் எடிட்டர் இப்போ, பவளாஜி.

coral shree

unread,
Sep 20, 2012, 5:21:58 AM9/20/12
to vall...@googlegroups.com
அடக்கடவுளே இப்ப இதுவா பிரச்சனை. இரண்டு தமிழ் கடல்கள் முன் நிற்கும் சிறு கூழாங்கல் நான்,  இதற்கு மேல் என்னை பேச வைக்காமல் தயைகூர்ந்து தங்களுடைய திறமைகளை போட்டி போட்டுக் கொண்டு வெளி கொணர்ந்தால் அதுவே எங்களுக்கு இனிமையான விருந்து..

அன்புடன்
பவளா

2012/9/20 Anna Kannan <annak...@gmail.com>
ஐயப்பன், (இந்த இடத்தில் மட்டும்) என் மனசாட்சி. அவரது கூற்றை வழிமொழிகிறேன். நம் எடிட்டர் இப்போ, பவளாஜி.

--
 
பிரசாத் வேணுகோபால்

unread,
Sep 20, 2012, 9:14:08 AM9/20/12
to vall...@googlegroups.com
ஐயா,

இங்கு எனது நிலையை நான் தெளிவாகவே உரைத்து விடுகிறேன்.

எனது மகாபாரத அறிவு என்பது சிறு வயது முதல் ஊரில் பாரதக் கோவிலில் செவிவழியாக கேட்ட பாகவதம் மூலமாகவும், ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் எழுதிய மகாபாரதம் மூலமாகவும், துக்ளக் இதழில் சோ அவர்கள் எழுதிய மகாபாரதம் பேசுகிறது தொடர் வாயிலாகவும் மட்டுமே கிடைத்ததாகும். நான் வியாசர் எழுதிய மூலக் கதையை படித்தவனும் கிடையாது.

முந்தைய மடலில் நான் கேட்ட கேள்விகள் ஆனது, தங்களுடைய செபடம்பர் பதினைந்தாம் தேதி வெளியான பதிவில் வந்த கீழ்கண்ட வரிகளால் என் மனதில் எழுந்த சந்தேகம் அவ்வளவே. உங்களது வாசகங்கள் உங்களுக்காக இதோ மீண்டும்...

// அர்ஜுனனை மகாரதன் எனவும், கர்ணனை அர்த்தரதன் (தன்னை மட்டும் காத்துக் கொள்ள வல்லவன்; தன் தேர், சாரதி, குதிரைகளைக் கூட காத்துக்கொள்ளும் வன்மை அற்றவன்) எனவும் என்று பிதாமகர் தரம் பிரித்த காரணத்தால்//

நீங்கள் ஆங்கிலத்தில் கீழே எனக்கு அளித்துள்ள பதிலிலும், துரியோதனனுக்கு பீஷ்மர் துரியோதனன் பக்கம் இருக்கும் அனைத்து வீரர்களின் வீர பராக்கிரமங்களை எடுத்துரைப்பதாகவே சொல்லி இருக்கிறீர்கள். அப்படி ஒவ்வொருவரைப் பற்றிச் சொல்லும் பொழுது கர்ணனை அதிரதனாகச் சொல்வதாகவும் சொல்கிறீர்கள். இதனை நான் சற்றும் மறுக்கவில்லை. ஏற்கிறேன்.

அடுத்த பதிலில் நான் ஏதோ அர்ஜுனனையும் கர்ணனையும் பீஷ்மர் ஒப்புமைப்படுத்தியிருக்கிறார் என எங்கோ படித்து சொல்வதைப் போலவும் அதைச் சுட்டிக் காட்டும்படியும் நீங்கள் கேட்டிருப்பதாக அறிகிறேன்.

நான் சொல்ல வருவது இதுவே, நீங்கள் உங்கள் செப்டம்பர் பதினைந்தாம் தாஏதி பதிவில் அர்ஜுனனையும் கர்ணனையும் ஒப்புமைப்படுத்திப் பேசுவதாகச் சொல்லி அதனால் கர்ணன் கோபப்பட்டு பீஷ்மர் இறந்த பின்னே களம்புகுவேன் என சபதம் செய்வதாகவும் சொல்லி இருந்தீர்கள். அதனாலேயே நான் துரியொதனனின் படையில் இல்லாத ஒருவனை(அர்ஜுனனை) எதற்காக பீஷ்மர் கர்ணனுடன் ஒப்புமைப்படுத்தி பேசினார் எனக் கேட்டேன். அதே கேள்வியை நீங்கள் மீண்டும் என்னிடம் கேட்டால் நான் எங்கு செல்வேன்.

எனக்கு எதுவும் தெரியாது ஐயா. அதனால் நான் ஏதும் தவறாக கேள்வி முன் வைத்திருந்தால் தயை கூர்ந்து பொறுத்தருளி எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்...

(ஒரு வேண்டுகோள். எத்தனை நாளானாலும் தமிழில் எனக்கு மறுமொழியைத் தாருங்கள். எனக்கு ஆங்கிலம் அர்த்தப்படுத்திக் கொள்வதில் நிறையச் சிக்கல்... அதனாலேயே இந்த வேண்டுகோள்...)

On Sun, Sep 16, 2012 at 9:00 AM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

2012/9/16 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>
இந்த மூன்று தருணங்களைச் சொல்ல முடியுமா ஐயா...
 
Yes.  I have them marked up.  But since the character study of Karna (or any other character for that matter) it is not to be taken up for a detailed discussion here.  We can have it on another occasion.  Or please wait till I return home tomorrow, when I will be able to deal with this point and substantiate my arguments with direct quotations from Vyasa. 
 
இது மூன்றாவது தருணம் எனச் சொல்வதின் மூலமாக, குருக்ஷேத்திரப் போருக்கு  வீரரைப் பிரிக்கும் தருணம் இது என்றறிகிறேன்... குருக்ஷேத்திரப் போருக்கு வீரரைப் பிரிக்கும் தருணம் என்றால் எதிரிப் படையில் இருக்கும் அர்ஜுனனை பிதாமகர் பீஷ்மர் எங்கனம் மகாரதன் என தரம் பிரிக்க முடியும். தனது படையில்  இல்லாத ஒருவரை எப்படி தனது படைக்கான பிரிவில் தரம் பிரிக்க முடியும்.

Please read this portion in context.  I hope you have read the original (or a faithful word for word translation of Vyasa.)  Bhishma is just answering Duryodhana, who wants to know the individual strengths and weaknesses of each warrior head of his side.  When doing this, it can be considered an insult, only if Bhishma confined his remarks with Karna.  Whereas, he assays the strengths and weaknesses of every, repeat, every King on the side of Duryodhana, including Acharya Drona and Aswaththaama.  If the unkindly remarks of Bhishma did not affect others, and affect only Karna, how would or should one look at the particular character in question.  The remarkable thing is Bhishma does not spare himself in the analysis. 
 
There are a few more things to consider in this respect:
 
  1. That Karna expects Bhishma to die.  Otherwise, the vow would not read as 'I will fight on your side only after the death of Bhishma'.  This in itself shows the position in which Karna had rated Bhishma.
  2. There is one point which is not at all mentioned in any version, or anyone's narration of this portion.  Karna's final reasoning for not participating in the war ends with the fuming remark: 'Here, he is the leader.  I would be shedding my blood and win the war.  Whereas the glory then belongs to Bhishma as he is the leader.  When I fight and win the war, why should the glory go to him?'  There were numberless kings assembled in the great hall, including Drona, who was also a Guru of Karna.  Why did any other warrior worth his salt, think in the lines of Karna and only Karna looked at it this way?
  3. The serious result of this clumsy decision was that, Karna who kept on pushing Duryodhana relentlessly into war, denied his services to the best of his friends, the helper in distress, the one who made him the king at a time of 'personal insult' (this portion also needs an elaborate discussion), DENIED HIS SERVICES TO HIS FRIEND DURYODHANA FOR TEN DAYS, IN OTHER WORDS, MORE THAN 50% OF THE TOTAL DURATION OF WAR, 18 DAYS.  This very same Karna, had no difficulty in accepting the leadership of Drona and fight under him for five days.  Then where is consistency or clarity of thought in Karna's decision?  Number one: I push my bosom friend into war.  Number two, I ditch him at a moment when my help is needed very badly, at a very critical moment.  How is this to be explained?

வேண்டுமானால் பிதாமகர் அர்ஜுனனை மகாரதன் எனச் சொல்லியும் கர்ணனை அர்த்தரதன் எனச் சொல்லியும் ஒப்புமைப் படுத்தி கர்ணனை இழிவுபடுத்தி இருக்கலாம்... 
 
You have also said "குருக்ஷேத்திரப் போருக்கு வீரரைப் பிரிக்கும் தருணம் என்றால் எதிரிப் படையில் இருக்கும் அர்ஜுனனை பிதாமகர் பீஷ்மர் எங்கனம் மகாரதன் என தரம் பிரிக்க முடியும். தனது படையில் இல்லாத ஒருவரை எப்படி தனது படைக்கான பிரிவில் தரம் பிரிக்க முடியும்." in your earlier paragraph.  Can you substantiate this particular point with a direct quotation from Vyasa?  What does Vyasa Bharata say?  When was this comparison between Arjuna and Karna made?  Was it in Ratha-Athi Raha-Nirnaya Parva or some other place?  If Bhishma made such a remark what action or speech of Karna led him to speak those words?  Please put forward your case so that I can understand your stance more clearly.
 
நம்மிடம் இருப்பதில் ஒப்புமைப்படுத்தும் பொழுது தரம் பிரிப்பது எனவும், நம்மிடம் இருப்பதையும் மற்றவருடன் இருப்பதையும் ஒப்பிடுகையில் அதை ஒப்புமை என்றும் சொல்வதுவுமே சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன்  ஐயா... தெளிவுபடுத்தவும்...
 
This does not gel with the general body of discussion now.  I am saying this not without reason.  From what I can see from your questions, I am not very sure if you have read the ORIGINAL VERSION or at least a faithful translation of it in toto.  Please confirm so that I can draw my explanation appropriately.  Or if this is going to be an argument, get ready with my part. 

பிரசாத் வேணுகோபால்

unread,
Sep 20, 2012, 9:15:50 AM9/20/12
to vall...@googlegroups.com
மன்னிக்கவும் அர்த்தரதன் அதிரதனாக பிழையாக தட்டச்சியிருக்கிறேன்... திருத்தி...

2012/9/20 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>
ஐயா,

இங்கு எனது நிலையை நான் தெளிவாகவே உரைத்து விடுகிறேன்.

எனது மகாபாரத அறிவு என்பது சிறு வயது முதல் ஊரில் பாரதக் கோவிலில் செவிவழியாக கேட்ட பாகவதம் மூலமாகவும், ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் எழுதிய மகாபாரதம் மூலமாகவும், துக்ளக் இதழில் சோ அவர்கள் எழுதிய மகாபாரதம் பேசுகிறது தொடர் வாயிலாகவும் மட்டுமே கிடைத்ததாகும். நான் வியாசர் எழுதிய மூலக் கதையை படித்தவனும் கிடையாது.

முந்தைய மடலில் நான் கேட்ட கேள்விகள் ஆனது, தங்களுடைய செபடம்பர் பதினைந்தாம் தேதி வெளியான பதிவில் வந்த கீழ்கண்ட வரிகளால் என் மனதில் எழுந்த சந்தேகம் அவ்வளவே. உங்களது வாசகங்கள் உங்களுக்காக இதோ மீண்டும்...

// அர்ஜுனனை மகாரதன் எனவும், கர்ணனை அர்த்தரதன் (தன்னை மட்டும் காத்துக் கொள்ள வல்லவன்; தன் தேர், சாரதி, குதிரைகளைக் கூட காத்துக்கொள்ளும் வன்மை அற்றவன்) எனவும் என்று பிதாமகர் தரம் பிரித்த காரணத்தால்//

நீங்கள் ஆங்கிலத்தில் கீழே எனக்கு அளித்துள்ள பதிலிலும், துரியோதனனுக்கு பீஷ்மர் துரியோதனன் பக்கம் இருக்கும் அனைத்து வீரர்களின் வீர பராக்கிரமங்களை எடுத்துரைப்பதாகவே சொல்லி இருக்கிறீர்கள். அப்படி ஒவ்வொருவரைப் பற்றிச் சொல்லும் பொழுது கர்ணனை அர்த்தரதனாகச் சொல்வதாகவும் சொல்கிறீர்கள். இதனை நான் சற்றும் மறுக்கவில்லை. ஏற்கிறேன்.

அடுத்த பதிலில் நான் ஏதோ அர்ஜுனனையும் கர்ணனையும் பீஷ்மர் ஒப்புமைப்படுத்தியிருக்கிறார் என எங்கோ படித்து சொல்வதைப் போலவும் அதைச் சுட்டிக் காட்டும்படியும் நீங்கள் கேட்டிருப்பதாக அறிகிறேன்.

நான் சொல்ல வருவது இதுவே, நீங்கள் உங்கள் செப்டம்பர் பதினைந்தாம் தாஏதி பதிவில் அர்ஜுனனையும் கர்ணனையும் ஒப்புமைப்படுத்திப் பேசுவதாகச் சொல்லி அதனால் கர்ணன் கோபப்பட்டு பீஷ்மர் இறந்த பின்னே களம்புகுவேன் என சபதம் செய்வதாகவும் சொல்லி இருந்தீர்கள். அதனாலேயே நான் துரியொதனனின் படையில் இல்லாத ஒருவனை(அர்ஜுனனை) எதற்காக பீஷ்மர் கர்ணனுடன் ஒப்புமைப்படுத்தி பேசினார் எனக் கேட்டேன். அதே கேள்வியை நீங்கள் மீண்டும் என்னிடம் கேட்டால் நான் எங்கு செல்வேன்.

எனக்கு எதுவும் தெரியாது ஐயா. அதனால் நான் ஏதும் தவறாக கேள்வி முன் வைத்திருந்தால் தயை கூர்ந்து பொறுத்தருளி எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்...

(ஒரு வேண்டுகோள். எத்தனை நாளானாலும் தமிழில் எனக்கு மறுமொழியைத் தாருங்கள். எனக்கு ஆங்கிலம் அர்த்தப்படுத்திக் கொள்வதில் நிறையச் சிக்கல்... அதனாலேயே இந்த வேண்டுகோள்...)

On Sun, Sep 16, 2012 at 9:00 AM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

2012/9/16 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>
இந்த மூன்று தருணங்களைச் சொல்ல முடியுமா ஐயா...
 
Yes.  I have them marked up.  But since the character study of Karna (or any other character for that matter) it is not to be taken up for a detailed discussion here.  We can have it on another occasion.  Or please wait till I return home tomorrow, when I will be able to deal with this point and substantiate my arguments with direct quotations from Vyasa. 
 
இது மூன்றாவது தருணம் எனச் சொல்வதின் மூலமாக, குருக்ஷேத்திரப் போருக்கு  வீரரைப் பிரிக்கும் தருணம் இது என்றறிகிறேன்... குருக்ஷேத்திரப் போருக்கு வீரரைப் பிரிக்கும் தருணம் என்றால் எதிரிப் படையில் இருக்கும் அர்ஜுனனை பிதாமகர் பீஷ்மர் எங்கனம் மகாரதன் என தரம் பிரிக்க முடியும். தனது படையில்  இல்லாத ஒருவரை எப்படி தனது படைக்கான பிரிவில் தரம் பிரிக்க முடியும்.

Please read this portion in context.  I hope you have read the original (or a faithful word for word translation of Vyasa.)  Bhishma is just answering Duryodhana, who wants to know the individual strengths and weaknesses of each warrior head of his side.  When doing this, it can be considered an insult, only if Bhishma confined his remarks with Karna.  Whereas, he assays the strengths and weaknesses of every, repeat, every King on the side of Duryodhana, including Acharya Drona and Aswaththaama.  If the unkindly remarks of Bhishma did not affect others, and affect only Karna, how would or should one look at the particular character in question.  The remarkable thing is Bhishma does not spare himself in the analysis. 
 
There are a few more things to consider in this respect:
 
  1. That Karna expects Bhishma to die.  Otherwise, the vow would not read as 'I will fight on your side only after the death of Bhishma'.  This in itself shows the position in which Karna had rated Bhishma.
  2. There is one point which is not at all mentioned in any version, or anyone's narration of this portion.  Karna's final reasoning for not participating in the war ends with the fuming remark: 'Here, he is the leader.  I would be shedding my blood and win the war.  Whereas the glory then belongs to Bhishma as he is the leader.  When I fight and win the war, why should the glory go to him?'  There were numberless kings assembled in the great hall, including Drona, who was also a Guru of Karna.  Why did any other warrior worth his salt, think in the lines of Karna and only Karna looked at it this way?
  3. The serious result of this clumsy decision was that, Karna who kept on pushing Duryodhana relentlessly into war, denied his services to the best of his friends, the helper in distress, the one who made him the king at a time of 'personal insult' (this portion also needs an elaborate discussion), DENIED HIS SERVICES TO HIS FRIEND DURYODHANA FOR TEN DAYS, IN OTHER WORDS, MORE THAN 50% OF THE TOTAL DURATION OF WAR, 18 DAYS.  This very same Karna, had no difficulty in accepting the leadership of Drona and fight under him for five days.  Then where is consistency or clarity of thought in Karna's decision?  Number one: I push my bosom friend into war.  Number two, I ditch him at a moment when my help is needed very badly, at a very critical moment.  How is this to be explained?

வேண்டுமானால் பிதாமகர் அர்ஜுனனை மகாரதன் எனச் சொல்லியும் கர்ணனை அர்த்தரதன் எனச் சொல்லியும் ஒப்புமைப் படுத்தி கர்ணனை இழிவுபடுத்தி இருக்கலாம்... 
 
You have also said "குருக்ஷேத்திரப் போருக்கு வீரரைப் பிரிக்கும் தருணம் என்றால் எதிரிப் படையில் இருக்கும் அர்ஜுனனை பிதாமகர் பீஷ்மர் எங்கனம் மகாரதன் என தரம் பிரிக்க முடியும். தனது படையில் இல்லாத ஒருவரை எப்படி தனது படைக்கான பிரிவில் தரம் பிரிக்க முடியும்." in your earlier paragraph.  Can you substantiate this particular point with a direct quotation from Vyasa?  What does Vyasa Bharata say?  When was this comparison between Arjuna and Karna made?  Was it in Ratha-Athi Raha-Nirnaya Parva or some other place?  If Bhishma made such a remark what action or speech of Karna led him to speak those words?  Please put forward your case so that I can understand your stance more clearly.
 
நம்மிடம் இருப்பதில் ஒப்புமைப்படுத்தும் பொழுது தரம் பிரிப்பது எனவும், நம்மிடம் இருப்பதையும் மற்றவருடன் இருப்பதையும் ஒப்பிடுகையில் அதை ஒப்புமை என்றும் சொல்வதுவுமே சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன்  ஐயா... தெளிவுபடுத்தவும்...
 
This does not gel with the general body of discussion now.  I am saying this not without reason.  From what I can see from your questions, I am not very sure if you have read the ORIGINAL VERSION or at least a faithful translation of it in toto.  Please confirm so that I can draw my explanation appropriately.  Or if this is going to be an argument, get ready with my part. 

--
பிரசாத் வேணுகோபால்

எண்ணம் போல் வாழ்வு

பிரசாத் வேணுகோபால்

unread,
Sep 20, 2012, 9:26:50 AM9/20/12
to vall...@googlegroups.com
ஐயாவுக்கு,

எனக்கு இணையத்தில் அதிகம் உலாவ நேரம் கிடைப்பதில்லை... உலாவ நேரம் கிடைக்கும் பொழுது நான் நடசத்திரக் குறியிட்டு சில பதிவுகளை படிப்பவன். அதே போலத்தான் உங்களது இம்மடலும். உடனுக்குடன் நான் மறுமொழி அளித்து எனது கேள்விகளை முன் வைக்காவிட்டாலும் என்னுள் சந்தேகக் கேள்விகள் என வரும் பொழுது யாருக்காகவும் எதற்காகவும் நான் அதனை விட்டுக் கொடூப்பவனும் கிடையாது. மேலும் எனக்கு ஆங்கிலம் என்றாலே சற்று அலர்ஜி, ஆங்கிலத்தில் எனக்கு மறுமொழி வந்திருந்தால் நான் நேரம் அதிகம் எடுத்துக் கொள்வேன் புரிந்து கொள்ள. ஒருமுறைக்கு பலமுறை படித்து பார்த்து எனக்கு மறுமொழி தருபவர் எனக்கு என்ன சொல்ல விழைகிறார் என புரிந்து கொள்ள நேரம் அதிகம் பிடிக்கும். பலமுறை முயற்சித்து பார்ப்பேன். முடியவில்லை என்றால் வெட்கத்தை விட்டு தமிழில் சொல்ல முடியுமா என கேட்டும் விடுவேன்.

அதனால் நான் அச்சப்பட்டிருப்பேனா அல்லது வருத்தப்பட்டிருப்பேனா என்ற கவலையற்க. 

விடாது தொடர்வேன் நான்... விளக்கத்தை வேண்டும் பொழுது கேட்டும் பெறுவேன் யான்...

தொடர்க உங்கள் விளக்கங்களை...

2012/9/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

பிரசாத் வேணுகோபால்

unread,
Sep 20, 2012, 9:34:37 AM9/20/12
to vall...@googlegroups.com
கர்ணன் சபதம் செய்த இந்த மூன்று நிகழ்வுகளையும் தமிழில் மொழிபெயர்த்ததை எனக்கு உங்களின் சேகரிப்பில் இருந்து சிரமம் பார்க்காமல் எடுத்து பகிர்ந்தால் மகிழ்வேன் ஐயா...

கர்ணனைக் குறித்து பேசுவதால் இழை தடம் மாறும் என நினைத்தீர்களானால் தனி இழையாக இதனைத் தந்தாலும் சரியே...

On Sun, Sep 16, 2012 at 9:43 AM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

The following is from Kisari Mohan Ganguli's word for word English Translation.  For the Tamil version, I need to have access to my bookshelf, which can be done only when I return home.  Let me assure you that I will quote from the Sanskrit version as well of this portion.
 
Karna's vow not to fight - Instance number 1
 
"Karna said, 'Without doubt, the chief of the Vrishnis is even so. Further, I admit, that that high-souled one is even more than that. Let, however, the Grandsire listen to the effect of the bit of harsh speech that he hath uttered. I lay down my weapons. The Grandsire will henceforth behold me in court only and not in battle. After thou hast become quiet, the rulers of the earth will behold my prowess in this world.'

(Mahabharata, Udyoga Parva, Chapter LXII in English)
 
Karna's vow not to fight - Instance number 2
 
There is another understanding on which I may willingly become the commander of thy forces. It behoveth thee to listen to that. O lord of earth, either Karna should fight first, or I will fight first. The Suta's son always boasts of his prowess in battle, comparing it with mine.'

"Karna said, 'As long as Ganga's son liveth, O king, I shall never fight. After Bhishma is slain, I shall fight with the wielder of Gandiva[1].

[1] 23        senāpatis tv aha rājan samayenāparea te
bhavi
yāmi yathākāma tan me śrotum ihārhasi

 24        karo vā yudhyatā pūrvam aha vā pthivīpate
spardhate hi sadātyartha
sūtaputro mayā rae

 25        nāha jīvati gāgeye yotsye rājan katha cana
hate bhī
me tu yotsyāmi saha gāṇḍīvadhanvanā (Mbh. Book 5, Ch. 153) Karna binds himself by this vow.  And his vow presupposes the death of Bhishma.  This means, he would not fight at all, if Bhishma was not killed at all.  That is a pretty unwarranted situation, in the light of Duryodhana’s dependance on him. 

Mahabharata, Udyoga Parva, Chapter CLVII)
 
(Footnotes are mine.)
 
Karna's vow not to fight - Instance number 3
 
Alone I will exterminate the army of the Pandavas! The fame, however, of such a feat will attach to Bhishma, O tiger among kings, for this Bhishma, O monarch, hath been made by thee the commander of thy forces, and the renown always attacheth to the leader and not to those that fight under him. I will not, therefore, O king, fight as long as Ganga's son liveth! After Bhishma, however, hath been laid low, I will fight with all the Maharathas of the enemy united together!'

Mahabharata, Udyoga Parva, Chapter CLXIX
 
Bhishma's opinion on Karna (Remember, this was spoken at the request of Duryodhana, who wants Bhishma's opinion on each and every warrior head on his, as well as Pandava's side)

"Bhishma said, 'Both the brothers Achala and Vrisha are Rathas. Invincible (in battle) they will slay thy foes. Endued with great strength, those tigers among men, those foremost of Gandharvas, are firm in wrath. Young and handsome, they are possessed of great strength. As regards this thy ever dear friend, this one who is always boastful of his skill in battle, this one who always urgeth thee, O king, to fight with the Pandavas, this vile braggart, Karna, the son of Surya, this one who is thy counsellor, guide, and friend, this vain wight who is destitute of sense, this Karna, is neither a Ratha nor an Atiratha. Without sense, this one hath been deprived of his natural coat of mail. Always kind, he hath also been deprived of his celestial ear-rings. In consequence of the curse of Rama (his preceptor in arms) as also of the words of a Brahmana (who cursed him on another occasion), owing also to his deprivation of the accoutrements of battle, he, in my judgment, is only half a Ratha. Having approached Falguni (in battle), he will not certainly escape with life!' Hearing this, Drona, that foremost of all wielders of weapons, said, 'It is even so as thou hast said. That is not untrue! He boasteth on the eve of every battle, but yet he is seen to retreat from every engagement. Kind (out of season) and blundering, it is for this that Karna, in my judgment, is only half a Ratha!' [1]

[1] 4        parua katthano nīca karo vaikartanas tava
mantrī netā ca bandhuś ca mānī cātyantam ucchrita

5      ea naiva ratha pūro nāpy evātiratho npa
viyukta
kavacenaia sahajena vicetana
ku
ṇḍalābhyā ca divyābhyā viyukta satata dhṛṇī

6      abhiśāpāc ca rāmasya brāhmaasya ca bhāaāt
kara
ānā viyogāc ca tena me 'rdharatho mata
nai
a phalgunam āsādya punar jīvan vimokyate

7      7 [s]
tato 'bravīn mahābāhur dro
a śastrabh vara
evam etad yathāttha tva
na mithyāstīti ki cana

8      rae rae 'timānī ca vimukhaś caiva dśyate
gh
ṛṇī kara pramādī ca tena me 'rdharatho mata (Mbh. Book 5, Ch. 165) That Karna was an Ardha Ratha was affirmed and acknowledged by Drona as well.

Mahabharata, Udyoga Parva, Chapter CLXIX
 
Therefore, it was just not the opinion of Bhishma.  It was acknowledged and affirmed by Drona as well, who was the first Guru of Karna.
 
Karna's reason for abstaining from war till Bhishma's death:
 
Alone I will exterminate the army of the Pandavas! The fame, however, of such a feat will attach to Bhishma, O tiger among kings, for this Bhishma, O monarch, hath been made by thee the commander of thy forces, and the renown always attacheth to the leader and not to those that fight under him. I will not, therefore, O king, fight as long as Ganga's son liveth! After Bhishma, however, hath been laid low, I will fight with all the Maharathas of the enemy united together!'

Mahabharata, Udyoga Parva, Chapter CLXIX
(the URL is the same as the above)
 
Read the marked text in green colour.
 
Bhishma's view on Aswathama:
 
6           krodhas tejaś ca tapasā sabhto ''śramavāsinā
dro
enānughītaś ca divyair astrair udāradhī

7          doas tv asya mahān eko yenaia bharatarabha
na me ratho nātiratho mata
pārthiva sattama

Mahabharata, Udyoga Parva, Chapter CLXVIII
 
In his opinion, Aswathama was alos not either a Ratha or Maharatha.  But that does not make Aswathama react in the way Karna did!  Why?  What is your opinon on this?
 
Since it is already too much, I am not for the present posting the views of Bhishma on Drona.  In case it is considered very essential, yes, I am game.

-- 

துரை.ந.உ

unread,
Sep 20, 2012, 9:45:43 AM9/20/12
to vall...@googlegroups.com
வாழ்க ஐயா ...

இலக்கணம் , யாப்பின் கீழ் வரும் அனைத்தும் எம்போன்ற மாணவர்கள் தம்கோப்பில் வைத்திருக்க வேண்டிய தேன்.

தொடர்கிறேன் ஐயா 

--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Sep 20, 2012, 11:30:15 AM9/20/12
to vall...@googlegroups.com
பிரசாத்,

நீ என் கிட்ட எப்படி சந்தேகம்  கேப்பியோ அதே உரிமையுடன், அதே மொழியில்  அண்ணனிடம் கேக்கலாம்.   பிரச்சினையே இல்லை. உன்னுடைய சந்தேகங்களை கோர்த்து வை. ஒரு நாள் நாம அண்ணன் வீட்டுக்கு போய்டுவோம். என்னமோ ஸ்கூல் டீச்சர் கிட்ட கேக்கற மாதிரி பயந்தெல்லாம் கேக்க வேண்டியதில்ல. சரியா. 

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/9/20 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--
 
பிரசாத் வேணுகோபால்

unread,
Sep 20, 2012, 11:35:50 AM9/20/12
to vall...@googlegroups.com
:)))

நானும் அதையேத்தான் சொல்லுறேன் அண்ணே... நான் சந்தேகம் கேட்க பயப்படறதில்லை...

எனக்கு நேரம் தான் இல்லை இணையத்தில் உட்கார... உங்களுக்குத்தான் தெரியுமே...

இந்த வார இறுதி பெங்களூருல தான் இருப்பேன்னு நினைக்கிறேன்... முடிந்தால் வீட்டுக்கு வர்ரேன்...

2012/9/20 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

Hari Krishnan

unread,
Sep 20, 2012, 11:15:09 PM9/20/12
to vall...@googlegroups.com
வேறு

பாண்டவர் முடியுயர்த்தே - இந்தப்
பார்மிசை உலவிடு நாள்வரைநான்
ஆண்டதொர் அரசாமோ - என
தாண்மையும் புகழுமொர் பொருளாமோ
காண்டகு வில்லுடையான் - அந்தக்
காளையருச்சுனன் கண்களிலும்
மாண்டகு திறல் வீமன் - தட
மார்பிலும் எனதிகழ் வரைந்துளதே. (20)

பதம் பிரித்து: காண்டகு: காண்தகு;   மாண்டகு: மாண் தகு

அ. சொற் பொருள்

காண்டகு: காணத் தகுந்த.  மாண்டகு: மாண்பினால் தகுதி வாய்ந்த.  

ஆ. இலக்கணம்

மாண்டகு: ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை தொக்கு நின்றதால் மூன்றாம் வேற்றுமைத் தொகை.

இ. யாப்பு

சந்தம் முந்தைய பாடலினின்று மாறுபடுவதைப் பார்க்கலாம்.  மறுபடியும் நொண்டிச் சிந்து வடிவத்துக்கு வந்திருக்கிறது.  இனி, பாடல் 37 வரை நொண்டிச் சிந்துதான்.

ஈ. பாடல் சொல்வது

அரசர்கள் என்ற தகுதியோடு பாண்டவர்கள் ஆட்சி செய்யும்வரையில், நான் ஆண்டது ஓர் அரசா?  என் ஆண்மை, புகழ் எல்லாம் ஒரு பொருளா?  காணத் தகுந்தவனும் வில்லாளுமான அருச்சுனம் கண்களிலும், பெருமை பொருந்திய திறலுடைய வீமனின் மார்பிலும் என் அவமானம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறதே!

எங்கேயோ காட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் பாண்டவர்கள்.  குரு வம்சத்தினரின் அரசு பாண்டுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது, அண்ணன் திருதிராட்டிரன் பார்வையற்றவன் என்ற ஒரே காரணத்தால்.  ஆகவே, பாண்டுவின் அரசு - ஒரு வகையில் பார்த்தால் - காபந்து அரசு (caretaker government).  ஆனால், குரு வம்சத்தின் ஆட்சி மிக விரிவாகப் பரவுவதற்குப் பாண்டு பெரிய காரணனாய் இருந்தான்.  குரு வம்சத்தின் சாம்ராஜ்ஜியத்தைத் தன் போராற்றலால் விரிவுபடுத்தினான்.  ஆகவே, இன்னொரு வகையில் பாண்டுவின் வம்சம் ஆட்சிக்கு உரிமையுடையதாக ஆகிறது.  ஆட்சிப் பொறுப்பை திருதிராட்டிரனிடத்தில் ஒப்படைத்துவிட்டு, பாண்டு வனவாசம் மேற்கொண்டிருந்தாலும், துரியோதனனுக்கு ஒரு வருடத்துக்கு முன்னால் பிறந்துவிட்டபடியால், தருமனுக்கு ஆட்சி உரிமை தானாகவே வந்து அமைகிறது.  இப்படிப்பட்ட பல சிக்கல்களுக்கு உரியதாக இருந்தது குரு வம்சத்தின் மகுடம்.

பாண்டவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் எங்கோ காட்டகத்தில்.  பாண்டு இறந்து, குந்தியும் பாண்டவர்களும் அத்தினபுரத்துக்குத் திரும்பியபோது தருமருக்குப் பதினாறு வயது.  வீமனுக்கும் துரியோதனனுக்கும் பதினைந்து வயது.  பிறந்தது முதல், 'இவர்கள் வரமாட்டார்கள்; ஆட்சி முழுவதும் தன்னுடையது மட்டுமே,' என்ற எண்ணத்தில் வளர்ந்தவனானபடியாலே துரியோதனனுக்கு, 'குரு வம்சத்தின் மகுடத்தை இவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்,' என்ற எண்ணம் தாங்க முடியாத சினத்தையும், பொறாமையையும் விளைத்தது.  

அவனுடைய எண்ணத்தில் தருமன் ஒரு கோழை.  எப்போது பார்த்தாலும், எடுத்ததற்கெல்லாம் அற வழியைப் பற்றிப் பேசுபவன் கோழையாகவும், கையாலாகதவனாகவும்தானே இருக்க முடியும்!  'இவனுக்குப் போய் ஆட்சியா,' என்று கொதித்துக்கொண்டிருந்தவன் திருப்தி அடையுமாறு காண்டவ வனத்தைப் பாண்டவர்களுக்குக் கொடுத்தான் திருதிராட்டிரன்.  குரு வம்சப் பேரரசின் அளவினால் பாதி அளவுக்கு விரிந்து கிடந்தது காண்டவ வனம்.  பாதி ராஜ்ஜியம் கொடுத்த கணக்கு.  கொடுத்தது என்னவோ, ஒன்றுக்கும் உதவாத, மக்கள் யாரும் வாழாத காடு.  அந்தக் காட்டைத் திருத்தி நாடாக்கி, இந்திரப் பிரஸ்தம் செய்து, திக்குவிஜயங்களால் தங்களுடைய ஆட்சியை விரிவுபடுத்திக் கொண்டனர் பாண்டவர்.  அதுவே பொறுக்க முடியவில்லை துரியோதனனுக்கு.  தருமன் செய்த ராஜசூய யாகத்துக்குச் சென்று திரும்பியிருக்கிறான் துரியோதனன்.  அங்கே தருமனுக்குச் செய்யப்பட்ட சிறப்புகளைக் காணக் காணப் பொறுக்க முடியாமல் வெதும்பிக்கொண்டிருந்தான்.  தன் மாளிகைக்குத் திரும்பியவுடன், தனிமையில் அந்த வெப்பம் வெளிப்படுகிறது.

அவனை வருத்தியதெல்லாம் தருமனின் உயர்வுமட்டுமல்ல.  தருமன் ஒரு கோழை.  அவனைப் பற்றி ஏதுமில்லை.  இருந்தாலும் இப்படிப்பட்ட, ஆற்றலில்லாத ஒருவனைப் போய் அத்தனை மன்னர்களும் விழுந்து விழுந்து வணங்கினர் என்பது சொல்லவொண்ணா சினத்தை ஏற்படுத்தியது.  'இவன் என்ன, தன்னுடைய தோள் வலியினாலா, தகுதியினாலா அத்தனைச் சிறப்புகளையும் பெற்றான்?  அங்கே இரண்டு பேர் இருக்கிறார்களே, அவர்களலல்லரா இத்தனைக்கும் காரணம்?  சிறப்பு வாய்ந்த வில்லை உடைய அருச்சுனனுடைய கண்களிலும், கதாயுதப் பிரயோகத்தில் ஆற்றல் மிகுந்தும் திகழ்ந்த வீமனின் மார்பிலுமல்லவா இவனுடைய அவமானம் வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது!

தருமன் ஒரு பொருட்டில்லை.  நகுல சகதேவர்கள் - துரியோதனனைப் பொருத்தமட்டில் - சிறுவர்கள்.  அவனுடைய கவலையெல்லாம் இந்த இருவரைச் சுற்றிதான்.  கதாயுதப் பயிற்சியில் சிறந்த வீமனுக்குத் தானே மாற்று என்றாலும், வில் பயிற்சியில் தேர்ச்சியுள்ள ஒருவன் அவனுக்குத் தேவைப்பட்டான்.  'அர்ச்சுனனுக்கு மாற்று இவனே,' என்று பார்த்த பார்வையில் கர்ணனைத் தன் நண்பனாக்கிக் கொண்டதற்குக் காரணம் இதுதான்.  (கர்ணன், ஆரம்ப காலத்தில் துரோணரிடம் பயிற்சி பெற்றவன்தான்.)

பாரத நாட்டிலுள்ள - முடிப்
பார்த்திவர் யார்க்குமொர் பதியென்றே
நாரதன் முதன்முனிவோர் - வந்து 
நாட்டிடத் தருமனவ் வேள்விசெய்தான்
சோரனவ் வெதுகுலத்தான் - சொலுஞ்
சூழ்ச்சியும் தம்பியர் தோள்வலியும்
வீரமிலாத் தருமன் - தனை
வேந்தர்தம் முதலென விதித்தனவே. (21)

பதம் பிரித்து: 

சோரனவ் வெது குலத்தான்: சோரன் அவ் எது (யது) குலத்தான். 

அ. சொற் பொருள் - 

ஆ. இலக்கணம் - 

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

'பாரத நாட்டில் உள்ள அத்தனை மன்னவருக்கும் மன்னன் இவனே,' என்று நாரதர் முதலான முனிவர்கள் வந்து சொல்லும்படியாக தருமன் இராஜசூய வேள்வியைச் செய்தான்.  இவனுக்கு என்ன தகுதியிருக்கிறது?  இவன் கொஞ்சமும் வீரமற்றவன்.  யது குலத்தைச் சேர்ந்த அந்தத் திருட்டுப் பயலின் சொல்லும், சூழ்ச்சித் திறனும், தம்பியருடைய தோள் வலிமையும் இந்தத் தகுதியற்றவனை வேந்தர்க்கெல்லாம் வேந்தன் என்று விதித்திருக்கின்றன.  (இவ்வளவு தகுதி எனக்கிருக்கிறதே, என்ன பயன்!)

யது குலம் என்பது யயாதியின் ஐந்து பிள்ளைகளில் ஒருவனான யதுவின் வம்சம்.  யதுவின் முதல் மனைவி, சுக்கிராசாரியாரின் மகளான தேவயானி.  இரண்டாவது மனைவி, சுக்கிராசாரியார் அரச குருவாக இருந்த விருஷபர்வா என்ற அசுர மன்னனின் பெண்ணான சர்மிஷ்டை.  யயாதிக்கும் தேவயானிக்கும் பிறந்தவர்கள் யது, துர்வசு என்ற இருவர்.  யயாதிக்கும் சர்மிஷ்டைக்கும் பிறந்தவர்கள் த்ருக்யு, அணு, பூரு என்ற மூவர்.  இவர்களில் யயாதிக்குத் தன் இளமையைத் தந்தவன் அணு என்ற சர்மிஷ்டை மைந்தன்.

யதுவின் குலமே யது குலம்.  துர்வசுவின் வம்சம் யவனர்கள்.  திருக்யுவின் பரம்பரை போஜர்கள் என்றறியப்பட்டது.  அணுவின் குலம் மிலேச்சர்கள்.  பூருவின் வம்சமே பெளரவ வம்சம்.  பெளரவ வம்சத்தில் வந்தவர்கள்தாம் துஷ்யந்தன், பரதன் போன்ற மாமன்னர்கள்.  இந்த வம்சத்தில்தான் பரதனுக்குப் பிள்ளையாக குரு (Kuru) தோன்றினான்.  குருவின் மகன் பிரதீபன்; பிரதீபனின் மகன் சந்தனு; சந்தனுவின் பிள்ளைகள் தேவ விரதன் (பீஷ்மர்) சித்திராங்கதன், விசித்திர வீரியன்.  'நீ எப்படி என் பெயரை வைத்துக் கொள்ளலாம்,' என்று சித்திராங்கதனை, அதே பெயருள்ள ஒரு கந்தர்வன் வம்புக்கிழுத்து, போர் புரிந்து கொன்றான்.  விசித்திர வீரியன் க்ஷயரோகத்தால் இறந்தான்.  பின்னரே திருதிராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோர் பிறந்தனர்.

குருவின் வம்சமானபடியால் இது கெளரவ (Kaurava) வம்சமானது.  பாண்டவர்களும் கெளரவ வம்சத்தினரே.  பாண்டுவுக்குப் பிறந்த கெளரவர்கள் அவர்கள்.  

Anna Kannan

unread,
Sep 21, 2012, 12:27:54 AM9/21/12
to vall...@googlegroups.com
மிக உதவிகரமான விளக்கங்கள். பாண்டவர்களும்  கெளரவர்களே என்பது, புதிய செய்தி. 

பாண்டுவின் பிள்ளைகள் பாண்டவர்கள் என அழைக்கப்பெற்ற போது, திருதராஷ்டிரன் பிள்ளைகள் மட்டும் ஏன் கெளரவர்கள் என அழைக்கப்பெற்றார்கள்? அவர்களைத் திருதராஷ்டிரர்கள் என அழைத்திருக்கலாமே.

Anna Kannan

unread,
Sep 21, 2012, 12:44:54 AM9/21/12
to vall...@googlegroups.com
இந்த வம்சம் தொடர்பாக இன்னொரு கேள்வி.

யது, துர்வசு, திருக்யு, பூரு, குரு... என இவர்களின் பெயரால் வம்சங்கள் அமைந்த விதத்தைச் சொன்னீர்கள். இதே வம்சங்களில் இந்த மன்னர்களுக்கு முன்னும் பலர் இருந்திருப்பார்கள். அவர்களின் பெயர்களை எல்லாம் விட்டுவிட்டு, இந்த மன்னர்களின் பெயரால் வம்சங்கள் அழைக்கப்பெறுவதன் காரணம் என்ன? இது, அந்தந்த மன்னர்களின் ஏற்பாடா? அல்லது, பின் வந்தவர்களின் ஏற்பாடா? மிக முக்கியமாக, பூருவின் வழியில் பரதன் வந்தான். பரதனின் மகன் குருவோ, தன் பெயரில் ஒரு வம்சத்தைக் கொண்டுள்ளான். இங்கே தந்தை ஒரு வம்சமாகவும் மகன் வேறு வம்சமாகவும் இருக்கிறான். இது, தன் பெயரில் ஆண்டுக் கணக்கைத் தொடங்குவது போல், செல்வாக்கைக் காட்டும் சமாச்சாரமா?

Hari Krishnan

unread,
Sep 21, 2012, 12:48:36 AM9/21/12
to vall...@googlegroups.com

2012/9/21 Anna Kannan <annak...@gmail.com>

மிக உதவிகரமான விளக்கங்கள். பாண்டவர்களும்  கெளரவர்களே என்பது, புதிய செய்தி. 

குரு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கௌரவர்கள்.  உச்சரிப்பு: Kaurava.  Gaurava இல்லை.  யயாதியின் ஐந்தாவது மகனான புருவுக்கு அரசு கிடைத்ததால் முதலில் பௌரவ வம்சம் என்றறியப்பட்டது.   யயாதிக்கும் சர்மிஷ்டைக்கும் பிறந்தவன் புரு.  சர்மிஷ்டை, யயாதியின் இரண்டாவது மனைவி. தேவயானி-சர்மிஷ்டை கதை தெரிந்திருக்கும்.

புரு அல்லது பௌரவ வம்சத்தில் துஷ்யந்தன் முதலான பெரிய மன்னர்கள் பலர் தோன்றினர்.  அவர்களில் ஒருவர் குரு (Kuru).  இக்ஷ்வாகு வம்சத்தில் தோன்றிய புரஞ்சயனுக்குப் பிறகு இக்ஷ்வாகு வம்சத்துக்கு, ககுஸ்த வம்சம் (காகுத்த வம்சம்) என்றும் ரகு தோன்றிய பிறகு ரகு வம்சம் என்றும் பெயர்கள் உண்டானதைப்போல், குரு தோன்றிய பிறகு பௌரவ வம்சம் கௌரவ வம்சம் என்றறியப்பட்டது.

பாண்டவர்களும் கௌரவ வம்சத்தினரே.  ஒரு வசதிக்காக அவர்களைப் பாண்டுவின் மக்கள் (அல்லது) பாண்டவர்கள் என்று அழைத்தனர்.  துரியோதனாதியருக்கும் இவர்களுக்கும் வேறுபடுத்திக் காட்டுவதாற்கான வசதி அது.

பாண்டுவின் பிள்ளைகள் பாண்டவர்கள் என அழைக்கப்பெற்ற போது, திருதராஷ்டிரன் பிள்ளைகள் மட்டும் ஏன் கெளரவர்கள் என அழைக்கப்பெற்றார்கள்? அவர்களைத் திருதராஷ்டிரர்கள் என அழைத்திருக்கலாமே.

தந்தையின் பெயரால் துரியோதனாதியரைச் சொல்லும்போது அவர்களை தார்த்தராஷ்ட்ரர்கள் என்று குறிப்பிடுவது வழக்கம்.  

Hari Krishnan

unread,
Sep 21, 2012, 12:52:01 AM9/21/12
to vall...@googlegroups.com

2012/9/21 Anna Kannan <annak...@gmail.com>

பூருவின் வழியில் பரதன் வந்தான். பரதனின் மகன் குருவோ, தன் பெயரில் ஒரு வம்சத்தைக் கொண்டுள்ளான். இங்கே தந்தை ஒரு வம்சமாகவும் மகன் வேறு வம்சமாகவும் இருக்கிறான். இது, தன் பெயரில் ஆண்டுக் கணக்கைத் தொடங்குவது போல், செல்வாக்கைக் காட்டும் சமாச்சாரமா?

பரதன் வந்தது இக்ஷ்வாகு வம்சத்திலல்லவா?

ஒரே வம்சத்துக்குப் பல பெயர்கள் உண்டு.  இக்ஷ்வாகு, ககுஸ்த, ரகு என்றெல்லாம் அழைக்கப்பட்ட வம்சம் ஒன்றேதானே?  அப்படியே குரு, புரு எல்லாருடைய பெயர்களிலும் அழைக்கப்பட்ட வம்சமும் ஒன்றேதான்.  மகன் ஒரு வம்சம், தந்தை வேறொரு வம்சம் என்று பொருளில்லை.  ஒரே வம்சத்துக்கு, அந்த வம்சத்துக்குப் பெருமை சேர்த்த பல மன்னர்களின் பெயர்களும் மாறி மாறி interchangeably வழங்கி வந்தது.

Anna Kannan

unread,
Sep 21, 2012, 12:54:24 AM9/21/12
to vall...@googlegroups.com
/பெளரவ வம்சத்தில் வந்தவர்கள்தாம் துஷ்யந்தன், பரதன் போன்ற மாமன்னர்கள்.  இந்த வம்சத்தில்தான் பரதனுக்குப் பிள்ளையாக குரு (Kuru) தோன்றினான். /

இந்த அடிப்படையிலேயே கேட்டேன்.

2012/9/21 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Sep 21, 2012, 12:56:54 AM9/21/12
to vall...@googlegroups.com

2012/9/21 Anna Kannan <annak...@gmail.com>

இது, தன் பெயரில் ஆண்டுக் கணக்கைத் தொடங்குவது போல், செல்வாக்கைக் காட்டும் சமாச்சாரமா?

அப்படி மன்னன் ஏற்பாடு செய்திருந்தால் அது செல்வாக்கைக் காட்டும் சமாசாரம்.  பத்தே மாதங்களால் அமைந்திருந்த கேலண்டரில் தன்பெயரால் ஜூலை மாதத்தை ஜூலியஸ் ஸீஸர் ஏற்படுத்தினார்; அவரைப் பின்பற்றி அவருடைய மகன் அகஸ்டஸ் ஸீஸர் தன் பெயரால் ஆகஸ்ட் மாதத்தை ஏற்படுத்தினார்.  தன் பெயரால் அமைந்த மாதத்துக்கு 31 நாட்கள் இருக்க வேண்டும் என்று ஜூலியஸ் ஸீஸர் அமைத்தார்.  ‘என் பெயரால் அமைந்த மாதத்துக்கும் 31 நாட்கள் இருக்க வேண்டும்‘ என்று அகஸ்டஸ் ஸீஸர் அமைத்தார்.  அப்படித்தான், ஜூலை, ஆகஸ்ட் இரண்டு அடுத்தடுத்த மாதங்களுக்கும் தலா 31 நாட்கள் அமைந்தன.

ஆனால், இப்படி வம்சத்தின் பெயரை பௌரவ வம்சம், கௌரவ வம்சம், இக்ஷ்வாகு வம்சம், ரகுவம்சம், ககுஸ்த வம்சம் என்றெல்லாம் மாற்றி மாற்றி அழைத்ததும்; அதே சமயத்தில் பழைய பெயரையும் விட்டுவிடாமல் இருந்ததும் மக்கள் அல்லரா?  மன்னன் இதில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லையே!

Hari Krishnan

unread,
Sep 21, 2012, 1:05:14 AM9/21/12
to vall...@googlegroups.com

2012/9/21 Anna Kannan <annak...@gmail.com>

/பெளரவ வம்சத்தில் வந்தவர்கள்தாம் துஷ்யந்தன், பரதன் போன்ற மாமன்னர்கள்.  இந்த வம்சத்தில்தான் பரதனுக்குப் பிள்ளையாக குரு (Kuru) தோன்றினான். /

இந்த அடிப்படையிலேயே கேட்டேன்.

சற்றே தடுமாறிவிட்டேன்.  காலை உணவு இன்னமும் ஆகவில்லை. சர்க்கரை படுத்துகிறது. :)

ஆமாம்.  பரதன் என்ற மன்னனும் பௌரவ வம்சத்தில் இருந்தான்.  துஷ்யந்தனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்தவன்.  பின்னாளில் ஜடாமுடி தாங்கி, துறவியாக இருந்ததால் ஜடபரதர் என்றும் அறியப்பட்டான்.  இந்த நாட்டுக்கு பாரத நாடு என்ற பெயர், இந்த பரதனால்தான் ஏற்பட்டது.  பாரதநாடு என்ற பெயர் ஏற்படுவதற்கு முன்னால் இதே நாட்டுக்கு அஜநாபம் என்ற பெயர் இருந்தது.  இதெல்லாம் பாகவதத்தில் சொல்லப்படும் செய்திகள்.

சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத்
தட்டி விளையாடி - நன்
றுகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளை

என்று பாரதி பாடுவதும் (முன்னை இலங்கை அரக்கரழிய முடித்த வில் யாருடை வில்) இந்த பரதனைத்தான்.

பரதனும் பௌரவ வம்சம்தான்.  பரதனுடைய பிள்ளை குரு.  குருவின் மகன் பிரதீபன். பிரதீபனுக்கு தேவாபுி, வாலிகன் (பாஹ்லீகன்) சந்தனு என்று மூன்று பிள்ளைகள்.  இவர்களில் மூன்றாவது மகனான சந்தனு அரசுரிமை அடைந்தான்.

சென்னை ஆன்லைனில் நீங்கள் ஆசிரியராக இருந்தபோதுதானே இதையெல்லாம் எழுதினேன். :)

பிரசாத் வேணுகோபால்

unread,
Sep 21, 2012, 10:01:46 AM9/21/12
to vall...@googlegroups.com
ஐயா,
 
சோரனவ் வெதுகுலத்தான் என இங்கு குறிப்பிடப்படுபவர் யார்... தருமரா...
 
சொல்லும் சூழ்ச்சியும் என தருமர் செய்த எச்செயலைக் குறிப்பிடுகிறார்... 
2012/9/21 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Sep 21, 2012, 11:25:24 AM9/21/12
to vall...@googlegroups.com

2012/9/21 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>

ஐயா,
 
சோரனவ் வெதுகுலத்தான் என இங்கு குறிப்பிடப்படுபவர் யார்... தருமரா...
 
சொல்லும் சூழ்ச்சியும் என தருமர் செய்த எச்செயலைக் குறிப்பிடுகிறார்... 

நம்பர் 1: இதைப் பேசுபவன் துரியோதனன்.  துரியோதனனுடைய பொறாமை வெளிப்படுவதைக் கவி, அவனுடைய first person accountஆகத் தருகிறான்.  வியாசரும் இப்படியே தந்திருக்கிறார்.  இணை வியாச பாரத இடத்தைத் தருகிறேன்.

நம்பர் 2: சோரன் என்றால் திருடன்.  யதுகுலத்தான்=கிருஷ்ணன்.  சொல்லும் சூழ்ச்சியும் தம்பியர் தோள்வலியும்.

திருட்டுப்பையன் கிருஷ்ணன் சொல்லிக்குடுக்கற ஐடியாவாலயும், தர்மனுடைய தம்பிங்க பெரிய பிஸ்தாங்களா இருக்கறதனாலயும் மட்டுமே தருமன் ராஜாவா இருக்கான்.  கிருஷ்ணன் இவனுக்கு புத்தி; தம்பிகளே இவனக்கு வலிமை.  சொந்தமா புத்தியோ, உடல் வலுவோ இல்லாத தர்மன், இப்படிப்பட்டவர்களுடைய துணையால் அரசாள்கிறான்; ராஜசூய யாகமும் செய்கிறான்.....என்பது துரியோதனன் உள்ளம் வெதும்பிச் சொல்லும் வார்த்தைகள்.

சொல்லும் சூழ்ச்சியும் என்பது கிருஷ்ணர் சொல்வதைக் குறிக்கும்.  சூழ்ச்சி என்றால் திட்டம், யோசனை, ஆலோசனை என்று பொருள். வில்லன் செய்வது மட்டும்தான் சூழ்ச்சி என்று பொருளன்று.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்

என்ற இடத்தில், சூழினும் என்பதற்கு, சூழ்ந்தாலும், சூழ்ச்சி மேற்கொண்டாலும் என்பது பொருள்.  என்னதான் பெரிய ஆலோசனைகளை மேற்கொண்டு சென்றாலும், அவற்றையெல்லாம் தாண்டிய ஒரு தடையை ஊழ் உண்டாக்கும் என்கிறார் வள்ளுவர்.  (சூழ்ச்சி என்பதன் பொருளை விளக்குவதற்காக இந்தக் குறளைச் சொன்னேன்.)

Hari Krishnan

unread,
Sep 21, 2012, 8:39:04 PM9/21/12
to vall...@googlegroups.com

2012/9/21 Karunakaran <ksk...@gmail.com>
யயாதிக்கு இளமையைத் தந்தது புரு அல்லவா?

ஆமாம்.  இதையே முன்னால், அண்ணா கண்ணனுக்கு எழுதியபோதும் சொல்லியிருக்கிறேன்.

2012/9/21 Anna Kannan <annak...@gmail.com>
குரு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கௌரவர்கள்.  உச்சரிப்பு: Kaurava.  Gaurava இல்லை.  யயாதியின் ஐந்தாவது மகனான புருவுக்கு அரசு கிடைத்ததால் முதலில் பௌரவ வம்சம் என்றறியப்பட்டது.   யயாதிக்கும் சர்மிஷ்டைக்கும் பிறந்தவன் புரு.  சர்மிஷ்டை, யயாதியின் இரண்டாவது மனைவி. தேவயானி-சர்மிஷ்டை கதை தெரிந்திருக்கும்.

யயாதிக்கு இளமையைத் தந்த காரணத்தால் அரசைப் பெற்றவன் புரு.

அணு என்று எப்படியோ தவறாக விழுந்திருக்கிறது.  I stand corrected.  நன்றி.

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Sep 21, 2012, 11:42:53 PM9/21/12
to vall...@googlegroups.com
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய யயாதி நாடகம் இணையம் வழியாகப் படிக்க
முடிந்தது. பிடிஎஃப் கோப்பை குழுவில் பகிர்ந்து கொள்ள வழி சொன்னால்
அனுப்பி வைக்கிறேன்.

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 99100318 # http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com

2012/9/22 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> --
>
>

Anna Kannan

unread,
Sep 22, 2012, 1:56:41 AM9/22/12
to vall...@googlegroups.com
பிடிஎஃப் கோப்புகளை மின்னஞ்சலில் இணைத்து, குழுமத்திற்கு அனுப்பிவிட முடியும்.

Hari Krishnan

unread,
Sep 22, 2012, 2:00:02 AM9/22/12
to vall...@googlegroups.com
துஷ்யந்தனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்த பரதனைப் பற்றிய குறிப்பில் தவறு இருக்கிறது.  இதை தேவ் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.  அவர் சொன்னதை அப்படியே தருகிறேன்.

DEV: அண்ணா
  பரதன் - தவறுள்ளது
  கொஞ்சம் சரி செய்யுங்கள்
11:33 ஸூர்ய வம்ச பரதனும் உண்டு
  பரதர் ரிஷப தேவருக்குப் பிறந்தவர்
11:34 யோகம் தவறியதால் மறு பிறவியில் ஜடபரதர்
  சகுந்தலையின் பிள்ளைக்கு ஸர்வதமநன்
  என்று பெயர்
11:35 பரதன் பின்னால் ஏற்பட்டது.

கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.  அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி.  தேவுக்கு என் தனிப்பட்ட நன்றி.

Hari Krishnan

unread,
Sep 22, 2012, 2:13:30 AM9/22/12
to vall...@googlegroups.com
பாரத நாட்டிலுள்ள - முடிப்
பார்த்திவர் யார்க்குமொர் பதியென்றே
நாரதன் முதன்முனிவோர் - வந்து 
நாட்டிடத் தருமனவ் வேள்விசெய்தான்
சோரனவ் வெதுகுலத்தான் - சொலுஞ்
சூழ்ச்சியும் தம்பியர் தோள்வலியும்
வீரமிலாத் தருமன் - தனை
வேந்தர்தம் முதலென விதித்தனவே. (21)

வியாச பாரதத்தில் சம இடம்:  தொடக்க கட்டத்தில், துரியோதனனுடைய பொறாமை மொழிகளில் பலவற்றையும், சகுனி, ‘பாண்டவர்களிடம் பொறாமை கொள்ளாதே’ என்று அவனுக்கு உபதேசித்ததையும் பாரதி விட்டுவிட்டான்.  துரியோதனுடைய பொறாமை மொழிகளை மட்டும் மிகச் சுருக்கமாக, தொடக்கத்தில் ஒன்றும் முடிவில் ஒன்றுமாக கோத்திருக்கிறான்.

ம வீ இராமானுஜாசாரியாரின் மொழிபெயர்ப்பிலிருந்து, ஒவ்வொரு பாடலிலும் இடம்பெறும் வியாச பாரதக் கருத்துகளைத் தருகிறேன்.  இந்தப் பாடலில் உள்ளது:

(சகுனியிடம் பாண்டவர்களுடைய வளர்ச்சியைக் குறித்து தன் உள்ளத்தில் பொங்கும் உணர்வலைகளை துரியோதனன் சொல்லத் தொடங்குகிறான்.  இது முதல் வாக்கியம்.)

‘மாமா! இந்தப் பூமி முழுமையும் மகாத்மாவான அர்ச்சுனனுடைய அஸ்திரப் பிரதாபத்தினால் ஜயிக்கப்பட்டு, யுதிஷ்டிரனுக்கு உட்பட்டுப் போனதையும்.....’ இந்தப் பகுதி ‘தம்பியர் தோள்வலியும்’ என்று சுருங்கியிருக்கிறது. 

பேச்சின் இறுதிப் பகுதியில், ‘கிருஷ்ணன் அவர்களிடம் அன்புகூர்ந்து அவர்களுக்குச் செல்வங்களை விருத்தி செய்கிறான்’ என்று வருகிறது.  இதுவே ‘சோரன் அவ்வெது குலத்தான்’ என்னும் செய்யுட் பகுதி.

Hari Krishnan

unread,
Sep 22, 2012, 2:41:19 AM9/22/12
to vall...@googlegroups.com
ஆயிர முடிவேந்தர் - பதி
னாயிரம் ஆயிரம் குறுநிலத்தார்
மாயிரும் திறை கொணர்ந்தே - அங்கு
வைத்ததொர் வரிசையை மறந்திடவோ
தூயிழை ஆடைகளும் - மணித்
தொடையலும் பொன்னுமோர் தொகைப்படுமோ
சேயிழை மடவாரும் - பரித்
தேர்களும் கொடுத்தவர் சிறுதொகையோ? (22)

பதம் பிரித்து: மாயிரும் - மாஇரும்; தூயிழை: தூஇழை

அ. சொற் பொருள்

இரு (மாயிரும்): பெரிய

திறை: கப்பம்

தொடையல்: மாலை.  மணிகளால் ஆன மாலை.  தொடை என்றால் மாலை.  தொடுக்கப்படுகின்ற காரணத்தால் தொடை.  இது மணிகளால் தொடுக்கப்பட்ட மாலை.

ஆ. இலக்கணம்

மாயிரு: மா என்றாலும், இரு என்றாலும் பெரிய என்று பொருள் வருவதால் இது ஒருபொருட் பன்மொழி.  (ஒரே பொருளில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்துதல்.)  இந்த 'மாயிரு' குறளில் பயில்கிறது.  (திருக்குறளில் எவ்வளவு ஆழ்ந்த பயிற்சி உடையவனாக இருந்தான் என்பதை பாரதியின் உரைநடையில் நெடுகிலும் காணலாம்.)

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
(குறள்)

சிரிக்கத் தெரியாதவனுக்கு இந்தப் பெரிய உலகம், பகல் வேளையிலும் இருட்டாகத்தான் இருக்கும்.

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

ஆயிரக்கணக்கான அரசர்களும், பத்தாயிரக் கணக்கான குறுநில மன்னர்களும் பெரிய பெரிய அளவில் தருமனுடைய வேள்விக்குக் கப்பமாகப் பொருள் கொண்டுவந்து கொட்டினார்கள்.  அந்த வரிசையை என்னால் என்றேனும் மறக்க முடியுமோ?  ஒரு பக்கத்தில் சிறந்த ஆடைகளின் குவியல்; இன்னொரு பக்கத்தில் வைர வைடூரியங்களால் ஆன மாலைகளின் குவியல்.  இன்னொரு பக்கத்தில் மன்னர்கள் கொண்டு வந்து அளித்த தாதிப் பெண்களின் வரிசை.  குதிரைகள், தேர்கள்... இப்படிக் கொண்டுவந்து கொடுத்தவர்கள் கொஞ்சமா?

நினைக்க ஆரம்பித்ததும், அங்கே இருந்த பரிசுப் பொருளெல்லாம் கண்முன்னால் தோன்றுகிறது துரியோதனனுக்கு.  தொடர்கிறான்.

வியாச பாரதத்தில் சம இடம்: ஸபா பர்வம், 74ம் அத்தியாயம், த்யூத பர்வம்:

‘அந்தத் தகாத பெருங்காரியம் கிருஷ்ணனால் செய்யப்பட்டது*. மகாத்மாவான பாண்டவர்களின் பராக்கிரமத்தினால் அது நிலைத்தது.  அதனாலேதான் அரசர்கள் பலவகை ரத்னங்களை எடுத்துக்கொண்டு வைசியர்களைப் போலக் கப்பங்கட்டி, குந்திபுத்திரனான தர்மராஜாவைச் சேவித்தனர்.  அவ்வாறு தர்மராஜனிடத்தில் ஜ்வலிப்பதுபோலப் பிரகாசித்த அந்த ராஜ்யலக்ஷ்மியைக் கண்டு நான் பொறாமைத் தீயினால் அகப்பட்டுக்கொண்டு தாபமுற்றிருக்கிறேன்.’ *தகாத காரியம்: சிசுபாலனைக் கொன்றது.

ஆணிப்பொன் கலசங்களும் - ரவி
அன்னநல் வயிரத்தின் மகுடங்களும்
மாணிக்கக் குவியல்களும் - பச்சை
மரகதத் திரளுநன் முத்துக்களும்
பூணிட்ட திருமணிதாம் - பல
புதுப்புது வகைகளில் பொலிவனவும்
காணிக்கையாக் கொணர்ந்தார் - அந்தக்
காட்சியை மறப்பது மெளிதாமோ? (23)

பதம் பிரித்து: 

அ. சொற் பொருள்

ஆணிப்பொன்: உயர்ந்த மாற்றுப் பொன்.  ஆங்கிலத்தில் தங்கத்தின் தரத்தை carat அளவில் குறிப்பதைப் போல், பொன்னின் உயர் தரத்தைக் குறிக்கப் பயன்படும் சொல்.  'ஆணி' என்ற சொல்லுக்கு 'உரைகல்' (touchstone) என்றும் ஒரு பொருள் உண்டு.  ஆகவே, ஆணிப்பொன், ஆணிமுத்து ஆகியவை உயர்ந்த தரத்தைக் குறிக்கின்றன.  'ஆணித்தரம்' என்று சொல்வார்கள்.  ஆணித்தரமாகப் பேசினார்.  முதல் தரமான பேச்சு என்று பொருள். சிறப்பான பேச்சு.  ஆணித்தரமாகப் பேசுதல் என்பதில் உள்ள ஆணி, hitting the nail on the head என்பதில் உள்ள ஆணியைப் போன்ற பொருளில் பயிலவில்லை.

பூணிட்ட திருமணி: திருமணி என்றால் முத்து என்பது பொருள்.  திருமணி குயிற்றுநர் என்றால் முத்துக் கோப்பவர்.

"திருமணி குயிற்றுநர், சிறந்த கொள்கையொடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்...."
(சிலப்பதிகாரம், இந்திர விழவூர் எடுத்த காதை)

'முத்துக் கோப்பவர்களும், (சங்குகளை) அறுத்து அழகான வளையல்களைச் செய்பவரும் நிறைந்த அகலமான வீதிகள்....'

மரகதத் திரளும் நன் முத்துக்களும் என்று சொல்லிவிட்ட பிறகு இன்னொரு முறை எதற்கு இதைச் சொன்னான் என்றால், அது முத்து மட்டும்.  இது பூண் இட்ட முத்து.  பொன்னால் பூண் பிடிக்கப்பட்ட முத்து.  

ஆ. இலக்கணம் -

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

மிகச் சிறந்த பொன்னால் செய்யப்பட்ட குடங்கள்; சூரியனைப் போல் ஒளிவிடும் வைரங்கள் பதித்த மகுடங்கள், மாணிக்கக் குவியல், மரகதத் திரள், நல் முத்து, பொன்னில் பதித்த முத்து என்று புதுப்புது வகைகளாகச் செய்யப்பட்டு ஒளிவிடும் ஆபரணங்கள் என்றிவற்றை எல்லாம் காணிக்கையாகக் கொண்டுவந்தார்.  அந்தக் காட்சி என் மனக்கண்ணை விட்டு அகலுமோ?

வியாச பாரதத்தில் சம இடம்: மேற்சொன்ன பகுதியில் விடுபட்டனவற்றின் சாரம் கவிவடிவம் பெற்றுள்ளது.  (பின்னால் வரும் பாக்களில் அப்படி அப்படியே மொழிபெயர்க்கப்படுவதைக் காணலாம்.)  இங்கே இடம்பெற்றுள்ளவற்றுள் சில பகுதிகள், பின்னால் திருதிராஷ்டிரனிடம் பேசும்போது இடம்பெறுகின்றன.  அவற்றை திருதிராஷ்டிரனுடன் சகுனியும் துரியோதனனும் பேசும் அந்தந்தப் பாக்கள் வரும் இடங்களில் காணலாம்.

Hari Krishnan

unread,
Sep 22, 2012, 3:32:13 AM9/22/12
to vall...@googlegroups.com

2012/9/20 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>

எனக்கு எதுவும் தெரியாது ஐயா. அதனால் நான் ஏதும் தவறாக கேள்வி முன் வைத்திருந்தால் தயை கூர்ந்து பொறுத்தருளி எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்...

(ஒரு வேண்டுகோள். எத்தனை நாளானாலும் தமிழில் எனக்கு மறுமொழியைத் தாருங்கள். எனக்கு ஆங்கிலம் அர்த்தப்படுத்திக் கொள்வதில் நிறையச் சிக்கல்... அதனாலேயே இந்த வேண்டுகோள்...)

குறிப்பிட்ட பகுதிகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளை தமிழில் ஸ்கேன் செய்து இணைத்திருக்கிறேன்.  டைப் செய்ய முடியவில்லை.  ஸ்கேன் செய்யப்பட்டுள்ளனவற்றில் 3A குறிப்பாகப் பார்க்கவும்.  ‘நான் யுத்தம் செய்து வென்றால், அந்தப் புகழ் பீஷ்மருக்கே போகும்.  எனவே, இவர் சாகும்வரை நான் யுத்தம் செய்யப்போவதில்லை’ என்ற கர்ணன் பேச்சை, பக்கவாட்டில் கோடுபோட்டுக் காட்டியிருக்கிறேன்.

பீஷ்மர் தன்னிடத்திலுள்ள குறையையும் சொல்வதையும் இணைத்திருக்கிறேன்.

தான் உள்ளிட்ட ஒவ்வொருவரின் பலம், பலவீனத்தை நிர்தாட்சண்யமாக பீஷ்மர் சொல்கிறார்.  கர்ணனுக்கு மட்டும்தான் கோபம் வருகிறது.
Karna's Vow Not to fight 1.jpg
Karna's Vow Not to fight 2.jpg
Karna's Vow Not to fight 3.jpg
Bhishma on Aswathama.jpg
Bhishma on Aswathama and Drona.jpg
Bhishma on himself.jpg

Hari Krishnan

unread,
Sep 22, 2012, 10:12:47 PM9/22/12
to vall...@googlegroups.com

நால்வகைப் பசும்பொன் னும் - ஒரு 
நாலா யிரவகைப் பணக்குவை யும் 
வேல்வகை வில்வகையும் - அம்பு
விதங்களும் தூணியும் வாள்வகை யும்
சூல்வகை தடிவகை யும் - பல
தொனிசெயும் பறைகளும் கொணர்ந்துவைத் தே
பால்வகை மன்னவர் தாம் - அங்குப்
பணிந்ததை என்னுளம் மறந்திடுமோ? (24)

பதம் பிரித்து: 

தேவை இல்லை.

அ. சொற் பொருள்

நால்வகைப் பசும்பொன்: தங்கத்தை நான்கு வகைகளாகப் பிரித்திருந்தனர்.  கோவலனும், கண்ணகியும் மதுரைக்குள் நுழைந்து வீதி வீதியாகப் பார்த்துக்கொண்டு வரும்போது, நகைக் கடைகள் நிறைந்த வீதிகளைக் கடக்கின்றனர்.  அப்போது சிலம்பு சொல்கிறது:

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம்
சாம்பூ நதம்என ஓங்கிய கொள்கையின்
பொலந்தெரி மாக்கள் கலங்கஞர் ஒழித்து ஆங்கு
இலங்குகொடி எடுக்கும் நலங்கிளர் வீதியும்...

(சிலம்பு, மதுரைக் காண்டம், ஊர்காண் காதை)

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்பவை தங்கத்தின் நான்கு வகை. 

பால்வகை: "பால் வகை மன்னவர்" - பால்=பகுதி.  பல பகுதிகளாக வகுக்கப்பட்ட அரசர் (க்ஷத்திரியர் கூட்டங்கள்."  இது பாரதியே தந்திருக்கும் குறிப்பு.  

'பால்வகை' என்பதைப் 'பால்வளர்' என்று பாரதியே திருத்தியுமிருப்பதால், பல பதிப்புகளில் இந்த இடத்தில் பால்வளர் என்றும் காணப்படும்.

ஆ. இலக்கணம் -

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

நான்கு வகையான பசும்பொன்னையும், நான்காயிரம் விதமான பணக் குவியல்களையும் (பாரத நாட்டுக்குள்ளேயே பல பேரரசர்கள் இருந்தபடியால், ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு வகையான பணம் புழக்கத்தில் இருந்திருக்குமில்லையா?) வேல், வில், அம்பு, சூலம், தடி (தண்டு அல்லது கதை), பலவிதமான ஒலிகளை எழுப்பக் கூடிய வேறுபட்ட பறைகளையும், மன்னர்கள் கொண்டுவந்து கொட்டி, தருமனுடைய பாதத்தில் பணிந்தார்கள்.  அதை என் உள்ளம் என்றேனும் மறக்க முடியுமா?

=================
பதம் பிரித்து: 
அ. சொற் பொருள்
ஆ. இலக்கணம்
இ. யாப்பு
ஈ. பாடல் சொல்வது

வியாச பாரதத்தில் சம இடம்: மேற்சொன்ன பகுதியில் விடுபட்டனவற்றின் சாரம் கவிவடிவம் பெற்றுள்ளது.  (பின்னால் வரும் பாக்களில் அப்படி அப்படியே மொழிபெயர்க்கப்படுவதைக் காணலாம்.)  இங்கே இடம்பெற்றுள்ளவற்றுள் சில பகுதிகள், பின்னால் திருதிராஷ்டிரனிடம் பேசும்போது இடம்பெறுகின்றன.  அவற்றை அந்தப் பாக்கள் வரும் இடங்களில் காணலாம்.

கிழவியர் தபசியர்போல் - பழங்
கிளிக்கதை படிப்பவன் பொறுமையென்றும்
பழவினை முடிவென்றும் - சொலிப்
பதுங்கிநிற் போன்மறத் தன்மையிலான்
வழவழத் தருமனுக்கோ - இந்த 
மாநில மன்னவர் தலைமை தந்தார்
முழவினைக் கொடிகொண்டான் - புவி
முழுதையும் தனியே குடிகொண்டான். (25)

பதம் பிரித்து: தேவையில்லை

அ. சொற் பொருள் - 

'வழவழத் தருமன்' (உலக வழக்கு).  உக்கிரத் தன்மை முதலிய மறவர் குணங்களில்லாத தருமன்.

இது பாரதி எழுதியிருக்கும் குறிப்பு.

ஆ. இலக்கணம் -

இ. யாப்பு 

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

இந்தத் தருமன், மறவர்களுக்கு உரிய குணங்கள் எதுவும் இல்லாதவன்.  (ஒரு காரியமும் செய்ய முடியாத) கிழவிகளைப் போலவும் (கிழவர்களைப் போல் கூட இல்லை!) (சும்மா அமர்ந்தபடி பேசிக்கொண்டிருக்கும்) தபசியர்களைப் போலவும் எப்போது பார்த்தாலும் (எப்படிப்பட்ட துன்பம் நேர்ந்தாலும்) 'பொறுமை, பொறு¨யைக் கைக்கொள்ள வேண்டும்,' என்றும், 'இவையெல்லாம் முன் வினையின் பயனால் விளைந்தது,' என்றும் திரும்பத் திரும்ப கிளிப்பிள்ளையைப் போல் சொன்ன பழங்கதையையே சொல்லிக்கொண்டிருப்பவன்.  எந்தக் காரியத்திலும் இறங்காமல் பதுங்கிக் கொள்பவன்.  மறவர்களுக்கு உரிய தன்மைகள் ஏதும் அற்றவன்.  

இப்படிப்பட்டவனுக்குப் போய் இந்த மாநில மன்னர்கள் எல்லோரும் சேர்ந்து தலைமையைத் தந்திருக்கின்றனர்!  (உலகத்தில் ஒருத்தனுக்குக் கூட அறிவில்லை பாருங்கள்!)  முரசினைத் தன் கொடியில் பறக்கும் சின்னமாகக் கொண்டவன், இந்த உலகம் முழுமையையும் தன் குடியாகவும் கொண்டுவிட்டான்.

தருமனின் கொடியில் இருந்த சின்னம் முரசு.  வீமனுக்கு, சிங்கத்தின் வால்.  பார்த்தனுக்கு, அனுமன்.  துரோணருக்கு, யாக வேதிகை.  இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு சின்னம் இருந்ததைப் போல், ஒவ்வொரு விதமான சங்கும் உண்டு.  அநந்தவிஜயம் என்பது தருமனுடைய சங்கின் பெயர்; பெளண்ட்ரம் என்பது பீமனுடையது; தேவதத்தம் அர்ஜுனனுக்குரியது; ஸுகோஷம் என்பது நகுலனுடையது; மணிபுஷ்பகம் என்பது சகதேவனுடையது.  கிருஷ்ணனுடையதுதான் எல்லோராலும் சொல்லப்படுவது - பாஞ்சஜன்யம்.

போர்க்களத்தில் தேரில் பறக்கின்ற கொடியாலும், கேட்கின்ற சங்கின் வேறுபட்ட, தனிப்பட்ட ஒலியினாலும், 'இன்னார் இந்தக் களத்தில் இருக்கிறார்கள்,' என்று உணர்த்துவதற்கான ஏற்பாடு.   மற்ற பயன்கள் ஒரு புறம்.

Hari Krishnan

unread,
Sep 23, 2012, 10:52:22 PM9/23/12
to vall...@googlegroups.com

தம்பியர் தோள்வலியால் - இவன்
சக்கர வர்த்தியென் றுயர்ந்ததுவும்
வெம்பிடு மதகரியான் - புகழ்
வேள்விசெய் தந்நிலை முழக்கியதும்
அம்புவி மன்னரெல்லாம் - இவன்
ஆணைதம் சிரத்தினில் அணிந்தவராய்
நம்பரும் பெருஞ்செல்வம் - இவன்
நலங்கிளர் சபையினில் பொழிந்ததுவும் (26)

பதம் பிரித்து: மதகரியான் - மத கரியாகிய யான்.  மத யானையைப் போன்ற நான்.

அ. சொற் பொருள் - 

ஆ. இலக்கணம் - 

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

இவன் என்ன தன் முயற்சியால், தன் வலிமையால் ஆட்சித் தலைமைக்கு வந்தவனா?  இவனுடைய இரண்டு தம்பிகள் கெட்டிக்காரர்களாய் இருக்கிறார்கள்; அந்தக் காரணத்தால் இவன் சிறந்திருக்கிறான்.  என்னால் இதைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.  இப்படி இவன் உயர்ந்து ஒரு பக்கம் என்யால், இவன் செய்தானே ஒரு புகழ் வாய்ந்த வேள்வி, அந்த வேள்வியின் சமயத்தில், இவன் வேள்வி செய்கின்ற (ஆமா, ரொம்ப பெரீய காரியம்!) செயலை அறிவித்து, முழக்கமிடும்படியான காரியத்தை, உள்ளுக்குள்ளே வெம்பிக் கொண்டிருக்கின்ற மதங்கொண்ட யானையைப் போன்ற நான் செய்ய நேர்ந்ததும், எல்லா மன்னர்களும் இவனுடைய ஆணை எல்லாவற்றையும் சிரமேற்று நின்றதும், நம்ப முடியாத அளவு பெரிய செல்வத்தை இவனுடைய சபையில் கொண்டுவந்து கொட்டியதும் எப்படிப் பொறுத்திடுவேன்?

தருமன் செய்தய ராஜசூய யாகத்தின் ('ராய சூழ வேள்வி' என்பது வில்லிபாரதம் தரும் பெயர்) போது, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.  சமைத்தல், பரிமாறுதல் போன்ற காரியங்களை துச்சாதனன் கவனித்தான்.  வருகின்ற அரசர்களுக்கு மரியாதை செய்வதை சஞ்சயன் கவனித்துக்கொண்டான்.  பொற்காசுகளைக் கணக்கு வைத்துக்கொள்வது, தட்சிணை தருவது போன்றவற்றை கிருபரும், விதுரரும் கவனித்தனர்.  வில்லி சொல்கிறார்:

தானமும் தியாகம் தானும்
தபனன்மா மதலை யான
மானவன் கொடுக்க என்றான்;
வரம்பிலா நிதிகள் யாவும்
கானலம் கடல்சூழ் வையம்
காவலன் காவல் என்றான்.
ஏனையோர் பலரும் வேந்தன்
ஏவலின் முறைநின் றாரே.

தானங்களையும், தியாகங்களையும் வழங்குவதற்கு உரியவனாக கர்ணன் நியமிக்கப்பட்டான்.  (தபனன்: சூரியன், தபனன் மா மதலை: கர்ணன்)  மன்னர்கள் கொண்டுவந்து தருகின்ற அளவில்லாத பெருஞ்செல்வத்தை வாங்கிக் கொள்வதும், கணக்கு வைத்துக்கொள்வதுமான காரியத்தைத் துரியோதனன் செய்தான்.  இதைப் போல் தருமபுத்திரன் (ஒவ்வொரு மன்னருக்குக் கொடுத்த ஒவ்வொரு) ஏவலின்படி மன்னர்கள் வினையாற்றினர்.

வருகின்ற திரைப் பொருளை (இந்த நாள் வழக்கில் சொல்வதென்றால், மொய்ப் பணம்) வாங்கிக் கணக்கு வைக்கும் காரியத்தைச் செய்தவன், ஆகையினாலே அவ்வப்போது தருமனின் வேள்விப் பெருமையை முழக்க வேண்டிய நிலைமையை மேற்கொண்டவன் துரியோதனன்.  எவ்வளவு வந்தது என்பது அவனுக்கு நேரடியாகத் தெரியும்.  அவனுடைய உள்ளக் கொதிப்பு அப்போதே தொடங்கிவிட்ட ஒன்று.

வியாச பாரததத்தில் இந்த விவரங்கள், சகுனியும் துரியோதனனும், திருதிராஷ்டிரனிடம் சென்று முறையிட்டு, சூதாட்டத்துக்குப் பாண்டவர்களை அழைக்குமாறு கோரிக்கை வைக்குமிடத்தில் வருகின்றன.  அந்தப் பகுதி வரும்போது, அங்கிருந்து வியாச பாரதத்துச் சம இடங்களைப் பார்க்கத் தொடங்கலாம்.

எப்படிப் பொறுத்திடுவேன் - இவன் 
இளமையின் வளமைகள் அறியேனோ?
குப்பைகொலோ முத்தும் - அந்தக்
குரைகடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார்
சிப்பியும் பவளங்களும் - ஒளி
திரண்டவெண் சங்கத்தின் குவியல்களும்
ஒப்பில் வைடூரியமும் - கொடுத்
தொதுங்கி நின்றார்இவன் ஒருவனுக்கே. (27)

பதம் பிரித்து: 

அ. சொற் பொருள்

குரைகடல்: குரை என்ற பெயர்ச் சொல்லுக்கு, ஒலித்தல் என்றும், பரந்த, விரிந்த, பெரிய என்றும் பொருள் உண்டு.  ஒலிக்கும் கடல் என்றும் சொல்லலாம்.  பெரிய கடல் என்றும் சொல்லலாம்.  

ஆ. இலக்கணம் - 

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

இப்படிப்பட்ட சிறப்புகள் எல்லாம் இவனுக்கு அமைந்ததை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே!  எப்படி பொறுப்பேன்!  இவன் சின்ன வயதில் எப்படி இருந்தான் என்பது எனக்குத் தெரியாதா! ('இவுரு அந்தக் காலத்துல திண்டாடித் தெருப்பொறுக்கிட்டு இருந்த கதையெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்!') என்னையா!  முத்தென்ன குப்பையா!  குப்பையைக் கொண்டு வந்து கொட்டுவதைப் போல் அந்தக் கடல் நாட்டுக்காரர்கள் முத்தையும், சிப்பியையும், பவளங்களையும், வெண்சங்குகளையும் கொண்டு வந்து கொட்டினார்களே!  ஒப்பில்லாத வைடூரியத்தையும் அதே மாதிரி வாரி இறைத்தார்களே!  அத்தனையையும் கொடுத்துவிட்டு, வணக்கமாக ஒதுங்க வேறு ஒதுங்கி நின்றார்களே!  இத்தனைப் பெருஞ்செல்வமும் இவன் ஒருத்தனுக்கேயா!  எப்படி என்னால் இதைப் பொறுக்க முடியும்!

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Sep 24, 2012, 4:26:01 AM9/24/12
to vall...@googlegroups.com
ஹரிகி சார்

ரங்கனுக்கும் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

உங்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

இந்த இழையில் மட்டும் இவற்றைத் தொக்கி விடாமல் தயவு செய்து இவற்றைத் தொகுத்து வைக்க வேண்டும் நீங்கள்.

இவ்வளவு அருமையான விஷயங்கள் எங்கே கிடைக்கின்றன இப்போது.  தயவு செய்து இவற்றுக்கு எப்படியாவது நூல் வடிவம் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

இறைவன் எனக்கு தேவையான பொருளாதார வசதி அளிததிருந்தால் எவ்விதத் தயக்கமும் இன்றி, மிகவும் பெருமையுடன் உங்கள் இழைகளை நூலாக்கி மகிழ்ந்திருப்பேன்.

நெகிழ்வுடன்

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com

2012/9/24 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
 
Hari Krishnan

unread,
Sep 24, 2012, 9:36:10 AM9/24/12
to vall...@googlegroups.com
அன்புமிக்க பென் சார்,

2012/9/24 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

இந்த இழையில் மட்டும் இவற்றைத் தொக்கி விடாமல் தயவு செய்து இவற்றைத் தொகுத்து வைக்க வேண்டும் நீங்கள்.

என்னுடைய ஹார்ட் டிஸ்க்கில் பத்தாண்டுகளாக இப்படிக் கிடக்கிறதே என்று ஒவ்வொரு படியாக ஏறி இறங்கி, அண்ணா கண்ணன் அனுமதியுடன் இங்கே மறுபதிப்பு செய்ய வாய்புக் கிடைத்ததே நல்லூழ்.  ‘பழசெல்லாம் வேணாம் போ‘ன்னு விரட்டியடிக்கலை பாருங்கள். :)
 
இவ்வளவு அருமையான விஷயங்கள் எங்கே கிடைக்கின்றன இப்போது.  தயவு செய்து இவற்றுக்கு எப்படியாவது நூல் வடிவம் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

பதிப்பாளர் கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது சார்.  பதிப்புலகத்தைப் பற்றி நான் சொல்லி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியதில்லை.  நானோ ஒரு அன்ப்ரான்டட் ஆசாமி.  Maverick என்று வேண்டுமானால் வீறாப்பாகச் சொல்லிக் கொள்ளலாம்.  இதே புத்தகம் ஒரு சுகி. சிவம் பெயரிலோ, அல்லது வேளுக்குடி பெயரிலோ வெளியானால், வெளியான நாளிலேயே விற்றுத் தீரும்.  என் பெயர் யாருக்குத் தெரியும்?  விற்குமா என்ற தயக்கம் ஏற்படுவது இயற்கைதானே.  நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று விட்டுவிட்டேன்.  முதுகும் வளையமாட்டேங்குது.

பதிப்பாளர் யாராவது கிடைக்கட்டும்.  மாட்டேன்னா சொல்றேன்!  இல்லாட்டி, வல்லமை தளத்தில் ஆவணப்படுத்த அண்ணா கண்ணன் முன்வந்திருக்கிறார்.  அது போதும்.

இறைவன் எனக்கு தேவையான பொருளாதார வசதி அளிததிருந்தால் எவ்விதத் தயக்கமும் இன்றி, மிகவும் பெருமையுடன் உங்கள் இழைகளை நூலாக்கி மகிழ்ந்திருப்பேன்.

நெகிழ்வுடன்

கலைமகள் ஆசியைப் பெற்றேன்.  உபசார வழக்காக அன்று; உளமாரச் சொல்கிறேன்.

N. Ganesan

unread,
Sep 24, 2012, 10:03:50 AM9/24/12
to vall...@googlegroups.com
 
On Monday, September 24, 2012 1:26:02 AM UTC-7, PENNESWARAN KRISHNA RAO wrote:
ஹரிகி சார்

ரங்கனுக்கும் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

உங்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

இந்த இழையில் மட்டும் இவற்றைத் தொக்கி விடாமல் தயவு செய்து இவற்றைத் தொகுத்து வைக்க வேண்டும் நீங்கள்.

இவ்வளவு அருமையான விஷயங்கள் எங்கே கிடைக்கின்றன இப்போது.  தயவு செய்து இவற்றுக்கு எப்படியாவது நூல் வடிவம் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

இறைவன் எனக்கு தேவையான பொருளாதார வசதி அளிததிருந்தால் எவ்விதத் தயக்கமும் இன்றி, மிகவும் பெருமையுடன் உங்கள் இழைகளை நூலாக்கி மகிழ்ந்திருப்பேன்.

நெகிழ்வுடன்

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com

அச்சுப் புத்தகம் ஆகும்வரை, வடக்குவாசல் இணைய இதழ், வல்லமை போன்றவற்றில்
தொகுக்கலாம். அச்சுப் புத்தகம் தமிழ்நாட்டில் சில ஆண்டுகளில் கிடைப்பது அரிதாகிவிடும்.
ஆனால் வல்லமை கூகுள்குழுவின் பதிவுகள் என்றும் இருக்கும். இனி எதிர்காலம்
தமிழுக்கு இணையம் தான். ஆனால், மின்வெட்டும், இணைய வசதியும்
தமிழ் போன்ற இந்திய மொழிகளுக்கு இந்தியாவில் பெருகவில்லை என்பதும்
உண்மையே.

நா. கணேசன்
 
Hari Krishnan

unread,
Sep 24, 2012, 11:08:19 PM9/24/12
to vall...@googlegroups.com

2012/9/24 N. Ganesan <naa.g...@gmail.com>

அச்சுப் புத்தகம் ஆகும்வரை, வடக்குவாசல் இணைய இதழ், வல்லமை போன்றவற்றில்
தொகுக்கலாம். அச்சுப் புத்தகம் தமிழ்நாட்டில் சில ஆண்டுகளில் கிடைப்பது அரிதாகிவிடும்.
ஆனால் வல்லமை கூகுள்குழுவின் பதிவுகள் என்றும் இருக்கும். இனி எதிர்காலம்
தமிழுக்கு இணையம் தான். ஆனால், மின்வெட்டும், இணைய வசதியும்
தமிழ் போன்ற இந்திய மொழிகளுக்கு இந்தியாவில் பெருகவில்லை என்பதும்
உண்மையே.

நா. கணேசன்

இதுவரையில் கேள்விப்பட்டிராத புதுமையான தகவல்களுக்கும் அறிவுரைக்கும் ஆலோசனைக்கும் நன்றி.

Hari Krishnan

unread,
Sep 24, 2012, 11:10:52 PM9/24/12
to vall...@googlegroups.com

மலைநா டுடையமன்னர் - பல
மான் கொணர்ந் தார்புதுத் தேன்கொணர்ந் தார்
கொலைநால் வாய்கொணர்ந்தார் - மலைக்
குதிரையும் பன்றியும் கொணர்ந்துதந் தார்
கலைமான் கொம்புகளும் - பெரும்
களிறுடைத் தந்தமும் கவரிகளும்
விலையார் தோல்வகையும் - கொண்டு
மேலும்பொன் வைத்தங்கு வணங்கிநின்றார். (28)

நால்வாய் - நாலுகின்ற வாய். நாலுதல் - தொங்குதல். அதாவது தொங்குகின்ற வாயை உடைய விலங்கு - யானை.

பதம் பிரித்து: 

அ. சொற் பொருள்: நால்வாய்: நாலுகின்ற வாய்.  நாலுதல் என்றால் தொங்குதல்.  தொங்கக் கூடிய வாயை உடைய விலங்கு - யானை.  விநாயகனுக்கு உள்ள தமிழ்ப் பெயர்களில் பெயர்களில் ஒன்று நால்வாயன்.  'நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று முக்கண்ணும் மும்மதச் சுவடும்,' என்று ஒளவையின் விநாயகர் அகவல் பாடுகிறது.

ஆ. இலக்கணம்

நால்வாய்: சினையாகு பெயர்.  உடல் உறுப்பில் ஒன்று ஒட்டு மொத்த விலங்குக்கும் ஆகி வந்தது.  

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

மலை நாடுகளிலிருந்த வந்திருந்த மன்னர்கள் மான்களைக் கொண்டு வந்தனர்; புதிய தேனைக் கொண்டு வந்தனர்; கொல்லக் கூடிய போர்க் குணம் கொண்ட யானைகளைக் கொண்டு வந்தனர்; மலைக் குதிரைகளையும், பன்றிகளையும் கொண்டு வந்தனர்; கலைமானின் கொம்புகள், யானைத் தந்தங்கள், விலைமதிப்பு மிக்க பலவகையான தோல் என்று இவையெல்லாம் கொண்டுவந்து, அவை போதாதென்று பொன்னும் வைத்துத் தந்தனர்.

வியாச பாரதத்தில் சம இடம்: கறுத்த வாலும் வெளுத்த வாலும் உடைய அநேகம் கவரிமான்களையும், இமயமலையின் மலர்களிலிருந்து உண்டான மிகுதியான தேனையும் வடகுருதேசத்திலிருந்தும் கைலாசத்துக்கு வடக்கிலிருந்தும் வந்த மிகச் சிறந்த சக்தியுள்ள மூலிகைகளையும் மகாத்மாக்ளான வ்யூடமால்யர்கள் என்னும் அரசர்களும், மலைநாட்டு அரசர்களும் அஜாதசத்ருவுக்குக் கொண்டுவந்து வணங்கி நின்றன.

ஸபா பர்வம், 78ம் அத்தியாயம், த்யூத பர்வ தொடர்ச்சி.  (சகுனியும், துரியோதனனும் திருதிராஷ்டிரனிடம் சென்று, பாண்டவர்களுக்கு வந்த பொருட்குவியலைப் பற்றி விவரிக்கும் பகுதியிலிருந்து.)

மிக நீண்டதும், ஏராளமான பொருள்களையும் அவற்றைக் கொண்டு வந்த அரசர்களின் பெயர்களை உடையதுமான பட்டியலிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகவும் முன்னும் பின்னுமாகவும் விவரங்களைத் தொகுத்து இந்தப் பகுதியில் வரும் விவரங்களை செய்யுளாக்கியிருக்கிறான்.  இந்தப் பாடலில் வரும் கலைமான் கொம்புகள், யானை, யானைத் தந்தம் தோல்வகை போன்றவை பிறிதோர் இடத்தில் சொல்லப்பட்டுள்ளன.

செந்நிறத்தோல் கருந்தோல் - அந்தத்
திருவளர் கதலியின் தோலுடனே
வெந்நிறப் புலித்தோல்கள் - பல
வேழங்கள் ஆடுகள் இவற்றுடைத்தோல்
பன்னிற மயிருடைகள் - விலை
பகரரும் பறவைகள் விலங்கினங்கள்
பொன்னிறப் பாஞ்சாலி - மகிழ்
பூத்திடும் சந்தனம் அகில் வகைகள் (29)

பதம் பிரித்து: தேவையில்லை.

அ. சொற் பொருள்

கதலி: இந்தச் சொல்லை பாரதி எங்கிருந்து பிடித்தான் என்பதே வியப்புக்குரிய ஒன்று.  தமிழ் இலக்கியத்தின் என்சைக்ளோபீடியா என்றறியப்படும் அபிதான சிந்தாமணியில் இந்த நுழைவே இல்லை.  அதுதான் போகட்டும் என்றால், சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி

1. வாழை, 2. கதலி வாழை (சிறிய வாழை வகை), 3. துகிற்கொடி (banner), 4. பறக்கவிடும் காற்றாடி

என்று மட்டும்தான் பொருள் சொல்கிறது.  வேறு பொருளே இல்லை.  'அகராதியை வைத்துக் கொண்டு பொருள் சொல்ல வேண்டும் என்றால், 'வாழைப் பழத் தோலைக் கொண்டு வந்தார்கள்,' என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்' என்று சொல்லிச் சிரிப்பார் என் ஆசிரியர் திரு. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள்.  பாரதியோ 'கதலி என்பது ஒரு வகை மான்,' என்று குறிப்பெழுதுகிறான்.  இந்தப் பொருள் எந்த அடிப்படையில், எப்படிச் சொல்லப்பட்டது என்று என் ஆசிரியர் பெரு முயற்சி செய்து கண்டறிந்தார்.  நாநார்த்த தீபிகை என்ற நூலில்  இதற்கான குறிப்பு கிடைத்தது.  'இருபது அங்குலமே வளர்வதும், சேற்றிலே வாழ்வதுமாகிய ஒரு வகை மான்,' என்று நாநார்த்த தீபிகை சொல்கிறது.  இதில் இன்னுமொரு வியப்பு என்னவென்றால், ஒட்டுமொத்த மஹாபாரதத்திலும் ‘கதலி’ என்ற பெயர் இடம் பெற்றிருப்பது ஒரே ஒரு இடத்தில்தான் (அதாவது இந்த இடத்தில் மட்டும்தான்) என்று Mahabharata Unique Noun List http://ancientvoice.wikidot.com/mbh-unique-noun-list-k (See: ID No.4054) சொல்கிறது.  பாரதி, மூலத்தையே நேரடியாகப் படித்து மொழிபெயர்த்திருக்கிறான், வடமொழியில் அவனுக்கு அந்த அளவுக்குப் புலமை இருந்திருக்கிறது என்பதற்கு இதைவிடவும் வேறென்ன சாட்சியம் வேண்டும்!  

என்ன வேடிக்கை என்றால், சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியே தவறவிட்ட குறிப்பு இது.  ஆறு தொகுதிகளாக வெளிவந்த பின்னர், ஏழாவது தொகுதியாக ஓர் அனுபந்தம் வெளியிட்டார்கள்.  அந்த அனுபந்தத்தில் 'கதலிவாணன்: நெல்வகை,' என்று சேர்த்திருக்கிறார்கள்.  'கதலி என்பது ஒரு வகை மான்,' என்ற குறிப்பு இல்லை.  அகராதியை வெளியிட்ட நேரத்த்தில் அவர்களுக்கு இப்படி ஒரு ஆட்சி கிடைக்கவில்லை என்பது வெளிப்படை.  குறைந்தது நாநார்த்த தீபிகையிலிருந்தாவது பொருள் கண்டு சேர்த்திருக்கலாம்.  இனியாவது, பாரதி ஆண்ட சொல் என்ற முறையில் அகராதியில் இந்தச் சொல் இடம் பெறவேண்டும்.  நம்மால் முடிந்ததெல்லாம் விழைவுதான்.  இந்த விழைவு, அகராதியுள் நுழைவாக மாற நம்மால் முடிந்த காரியம், இதோ இந்தப் பதிவு.  அவ்வளவுதான்.  

பன்னிற மயிருடைகள்: பல நிறங்களை உடைய மயிரால் ஆன உடைகள்.  கம்பள ஆடை.  பலவிதமான விலங்குகளின் உரோமத்திலிருந்து ஆடை நெய்வது மிகத் தொன்மையான பழக்கம்.

பட்டினும், மயிரினும், பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்.....

(சிலப்பதிகாரம், இந்திர விழவு ஊர் எடுத்த காதை)

பட்டாலும், மயிராலும், பருத்தி நூலாலும் அழகாகப் பின்னிக் கட்டுகிற நெசவுத் தொழிலர் வாழும் வீதிகளும்.....

நூலினும், மயிரினும், நுழைநூல் பட்டினும்
பாவகை தெரியாப் பலநூறு அடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்...

(சிலப்பதிகாரம், ஊர்காண் காதை)

துணிக் கடைத் தெருக்களில், பருத்தி நூலாலும், விலங்குகளின் மயிராலும், நெருக்கமாக நெய்யப்பட்ட பட்டாலும் ஆன ஆடைகள் பல நூற்றுக்கணக்கான அடுக்குகளாக வைக்கப்பட்டிருந்தன.

ஒரு வகை எலியின் மயிராலும் ஆடைகள் நெய்யப்பட்டன என்று அறிகிறோம்.

ஆ. இலக்கணம்

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

விலை மதிப்பிட முடியாத பல வகையான விலங்குகளின் தோல் கொண்டுவரப்பட்டதாகச் சென்ற பாடல் சொன்னது.  கருநிறத் தோல், சிவந்த நிறத் தோல், கதலி என்ற மானுடைய தோல், புலித் தோல், யானைத் தோல், ஆடுகளின் தோல், பலவிதமான மயிர்களால் ஆன உடைகள் (கம்பள ஆடைகள்), மிக அரிய வகையான பறவைகள், பாஞ்சாலி மகிழத்தக்க வகையிலான சந்தனம், அகில்....  (என்று இவற்றையும் கொண்டுவந்தார்.)

வியாச பாரதத்தில் சம இடம்: கறுப்பும் நீலமும் சிவப்மான வர்ணங்களோடு கூடிய மான்தோல்களையும் விலைபெற்ற சால்வைகளையும் காம்போஜ தேசத்தரசன் யுதிஷ்டிரனுக்கு அனுப்பினான்.  (ஸபா பர்வம், எழுபத்தாறாவது அத்தியாயம், த்யூத பர்வம் தொடர்ச்சி)

தமிழ் மொழிபெயர்ப்பில் இடம்பெறாத ‘கதலி’என்ற பெயர் கிஸாரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளது.  அவர் இதே இடத்தை இவ்வாறு மொழிபெயர்க்கிறார்:

The king of Kambhoja sent unto him (as tribute) innumerable skins, black, darkish, and red, of the deer Kadali, as also numberless blankets of excellent textures.  (Sabha Parva, Chapter XLVIII http://www.sacred-texts.com/hin/m02/m02048.htm)

இதற்கான ஸமஸ்கிருத மூலச் செய்யுளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.  இதுவரை சிக்கவில்லை.  பதிப்புக்குப் பதிப்பு அத்தியாய எண் மாறுபடுவதால், சரியான இடத்தைத் தொடுவது சிரமமாயிருக்கிறது.  இந்த ஸ்லோகத்தைக் கண்டுபிடிக்கும் வரை ஓயப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.  :))

இந்தப் பாடலின் முதலிரண்டு அடிகளும் இங்கிருந்து வந்தன.  (ஆங்கிலத்தில் 48ம் அத்தியாயம், தமிழில் 76ம் அத்தியாயம் என்பதை கவனிக்கவும்.)  இப்போது பின்னிரண்டு அடிகள் வந்த இடத்தைப் பார்ப்போம்:

ஆட்டு மயிர்களாற் செய்யப்பட்டனவும், எலி பெருச்சாளி முதலியவற்றின் தோல்களாற் செய்யப்பட்டவையும், பூனைத் தோல்களாற் செயயப்பட்டவையும், பொற் சரிகையினால் அங்கரிக்கப்படனவுமான சிறந்த போர்வைகளையும் தோல்களையும் மிகுதியாக காம்போஜ ராஜன் கொடுத்தான்.  (ஸபா பர்வம், அத்தியாயம் 78, த்யூத பர்வம் தொடர்ச்சி.)

இந்தப் பகுதியில் உள்ள பாக்கள் இப்படித்தான் முன்னும் பின்னுமான விவரங்களை ஒன்றுகூட்டிச் செய்யப்பட்டுள்ளன.  ஆனால், ஒவ்வொரு பாவும், ஒவ்வொரு பாவில் சொல்லப்பட்டுள்ள பொருளும், வியாச மூலத்திலிருந்துதான் எடுக்கப்பட்டுள்ளன.

DEV RAJ

unread,
Sep 24, 2012, 11:50:25 PM9/24/12
to வல்லமை

kadalii - a kind of deer (the hide of which is used as a seat) MBh.
Sus3r

University of Cologne Monier Williams Sanskrit-English Dictionary
(2008 revision) Brown University

(H1B) कदली [L=42878] f. the plantain tree
(H1B) कदली [L=42879] f. **a kind of deer** (the hide of which is used
as a seat) MBh. Sus3r.
(H1B) कदली [L=42880] f. a flag , banner , flag carried by an elephant
L.

http://www.sanskrit-lexicon.uni-koeln.de/monier/

dev

> Mahabharata Unique Noun Listhttp://ancientvoice.wikidot.com/mbh-unique-noun-list-k(See: ID No.4054)

> excellent textures.  (Sabha Parva, Chapter XLVIIIhttp://www.sacred-texts.com/hin/m02/m02048.htm)

Tn Elango

unread,
Sep 25, 2012, 5:09:56 AM9/25/12
to vall...@googlegroups.com
மன்னிக்கவும்.. மூன்று கண்ணும்...என்றிருந்திருக்க வேண்டுமோ? டைப்போ?

2012/9/25 Hari Krishnan <hari.har...@gmail.com>

'நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று முக்கண்ணும் மும்மதச் சுவடும்,' என்று ஒளவையின் விநாயகர் அகவல் பாடுகிறது.

--

Follow my blogs on  http://tnelango.blogspot.com/

Tn Elango

unread,
Sep 25, 2012, 5:17:22 AM9/25/12
to vall...@googlegroups.com
உண்மைதான். அவன் இந்த சொல்லை எடுத்தாண்ட விதமும், அதன் மூலம் தேடி நீங்கள் மூழ்கி எழுவதும், எல்லாமே வியப்புக்குரியவைதான். இவை அனைத்தும் எங்களுக்கு இப்படி இலவசமாய்க் கிடைப்பதும்கூட ஆச்சரிய்மதான்.

மிக்க நன்றி ஹரியண்ணா!

2012/9/25 Hari Krishnan <hari.har...@gmail.com>

கதலி: இந்தச் சொல்லை பாரதி எங்கிருந்து பிடித்தான் என்பதே வியப்புக்குரிய ஒன்று.

Hari Krishnan

unread,
Sep 25, 2012, 5:41:52 AM9/25/12
to vall...@googlegroups.com

2012/9/25 Tn Elango <tnel...@gmail.com>

மன்னிக்கவும்.. மூன்று கண்ணும்...என்றிருந்திருக்க வேண்டுமோ? டைப்போ?

இல்லை.  நினைவுப் பிழை.  இதை முதலில் எழுதிய காலத்தில் அலுவலகத்துக்குக் கிளம்புவதற்கு முன்னால் எழுதிப் போட்டுவிட்டுப் போவேன்.  எழுத எழுத அவ்வப்போது நினைவுக்கு வரும் மற்ற பேரலல் அடிகளையும் சேர்த்துக் கொள்வேன்.  சில சமயங்களில் நேரமிருந்தால், புத்தகத்தைப் புரட்டிச் சரிபார்த்துக் கொள்வேன்.  இதை எழுதும்போது அவ்வாறு பார்க்கவில்லை.  இப்போதாவது கவனித்துத் திருத்தியிருக்கலாம்.  இனிமேல் கவனமாக இருக்கிறேன்.  சுட்டியதற்கு நன்றி.  அங்கே இருந்திருக்க வேண்டிய அடிகள்:

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

எப்படியோ.  மேற்கோள் காட்ட எடுத்த நான்ற வாய் தப்பித்தது! :))

Tn Elango

unread,
Sep 25, 2012, 5:47:58 AM9/25/12
to vall...@googlegroups.com
நன்றி ஹரியண்ணா. அர்த்தம் முழுவதும் புரியாமல் இந்த விநாயகர் அகவலை தினமும் சொல்லிக் கொண்டிருக்கும் ஜீவன் நான்.

நேரம் கிடைக்கும் போது இதை கொஞ்சம் விவரியுங்கள் அண்ணா..

2012/9/25 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
 
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Sep 22, 2012, 12:47:19 PM9/22/12
to vall...@googlegroups.com
இந்த பிடிஎஃப் கோப்பினை இங்கு இணைப்பதற்குத் தகுதியாக்கிக் கொடுத்த ஜீவ்ஸ் க்கு நன்றியுடன் இணைப்பைத் தருகிறேன்.  பம்மல் சம்மந்த முதலியாரின் யயாதி நாடகப் படி இத்துடன்.

http://wp.me/p2BkFs-FN

பென்

--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com

2012/9/22 Hari Krishnan <hari.har...@gmail.com>:
> --
>  
>  

Hari Krishnan

unread,
Sep 25, 2012, 10:28:20 PM9/25/12
to vall...@googlegroups.com

ஏலம் கருப்பூரம் - நறும் 
இலவங்கம் பாக்கு நற்சாதிவகை
கோலம் பெறக்கொணர்ந்தே - அவர்
கொட்டி நின்றார் கரம் கட்டிநின்றார்.
மேலும் தலத்திலுள - பல 
வேந்தர் அப்பாண்டவர் விழைந்திடவே
ஓலந்தரக் கொணர்ந்தே - வைத்த
தொவ்வென்றும் என்மனத் துறைந்ததுவே. (30)

பதம் பிரித்து: தேவை இல்லை.

அ. சொற் பொருள் - 

ஆ. இலக்கணம் - 

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

தருமபுத்திரனுடைய வேள்விக்கு வேந்தர்கள் கொண்டு தந்த பொருள்களின் பட்டியல் நீள்கிறது.  ஏலக்காய், கர்ப்பூரம், இலவங்கம், பாக்கு, சாதிக்காய் போன்ற வாசனைப் பொருட்களை அவர்கள் கொண்டு வந்து கொட்டினார்கள்; கை கட்டி நின்றார்கள்.  உலகத்தின் பல பகுதிகளில் உள்ள மன்னவர்கள் அந்தப் பாண்டவர்கள் மனம் மகிழுமாறு பல பொருள்களைப் பொதிந்திருந்த பெட்டிகளைத் தரதரவென்று ஓசை உண்டாகுமாறு இழுத்துவந்து வைத்த வரிசை என் உள்ளத்தில் அப்படியே நிற்கிறது.

ஏலம், இலவங்கம், பாக்கு, சாதிக்காய் எல்லாம் விளைபொருள்கள்.  கற்பூரம் (அல்லது கர்ப்பூரம் அல்லது கருப்பூரம்) செய்பொருள்.  'சீனா, ஜப்பான் தேசங்களில் உண்டாகும் லாரல் மரத்தின் பால்.  இம் மரம் முதிர்ந்தவுடன், இதனை வெட்டித் துண்டுகளாக்கி, அவற்றை வளைந்த கழுத்துள்ள இருப்புப் பாத்திரத்திலிட்டுச் சல்லடைக் கண் போன்ற துவாரங்களை உடைய பலகையால் அதை மூடி அப்பலகை மீது பெரிய வாணா உரு அமைந்த மட்பாத்திரத்தைக் கவிழ்த்து விடுகின்றனர்.  பின் வாணலுக்கும் பலகைக்கும் இடையில் உள்ள உள்ளிடத்தை மலார், புல் முதலியவற்றால் மூடி இருப்புப் பாத்திரத்தை உஷ்ணப்படுத்தின் உள்ளிருக்கும் லாரல் துண்டிலிருந்து கற்பூரமானது ஆவியாய்க் கிளம்பி உஷ்ணமற்ற மலார் புல் முதலியவற்றில் உறைந்து போகிறது.  இது முத முதலில் அழுக்குடன் மஞ்சள் நிறமாக இருக்கிறது.  இதை மீண்டும் சுத்தப்படுத்த வெள்ளை நிறமான கற்பூரமாகிறது.' (அபிதான சிந்தாமணி)

மாலைகள் பொன்னும் முத்தும் - மணி 
வகைகளில் புனைந்தவும் கொணர்ந்துபெய்தார்
சேலைகள் நூறு வன்னம் - பல 
சித்திரத் தொழில்வகை சேர்ந்தனவாய்
சாலவும் பொன்னிழைத்தே - தெய்வத்
தையலர் விழைவன பலர்கொணர்ந்தார்
கோலநற் பட்டுக்களின் - வகை
கூறுவதோ? எண்ணில் ஏறுவதோ? (31)

பதம் பிரித்து: தேவையில்லை

அ. சொற் பொருள்: வன்னம்: வண்ணம்

ஆ. இலக்கணம்

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

பல வகையான வேலைப்பாடுகளும் வடிவங்களும் கொண்ட பொன்னாலும் முத்தாலும் ஆன மாலைகள்; சித்திர வேலைப்பாடுகளும், தங்கச் சரிகைக் கரையிட்டதுமாக, தேவமாதர் விரும்பக் கூடிய பல நூறு வண்ணச் சேலைகள்; எண்ணிறந்த வகையிலான பட்டுத் துணிகள்... இவற்றின் வகையைக் கணக்கிட முடியுமோ? 

Hari Krishnan

unread,
Sep 26, 2012, 10:41:27 PM9/26/12

Sep 27, 2012, 9:30:07 PM9/27/12
to vall...@googlegroups.com

கழல்களும் கடகங்களும் - மணிக் 
கலசமு மகுடமுங் கணக்கிலவாம்
நிழல்நிறப் பரிபலவும் - செந்
நிறத்தன பலவும்வெண் ணிறம்பலவும்
தழல்நிறம் மேகநிறம் - விண்ணில்
சாரும் இந்திர வில்லை நேருநிறம்
அழகிய கிளிவயிற்றின் - வண்ணம் 
ஆர்ந்தனவாய்ப் பணி சேர்ந்தனவாய். (32)

பதம் பிரித்து: 

அ. சொற் பொருள்: கழல் - காலில் அணியக் கூடிய வீரக் கழல். Anklet.  

கடகம்: கையில் அணியும் அணிகலன்.  Bracelet, armlet

இந்திரவில்: வானவில்

ஆ. இலக்கணம் - 

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

ஏராளமான வீரக் கழல்களும், கையணிகளும், மணிகள் நிரம்பிய குடங்களும், மகுடங்களும் வந்தன.  நிழலை ஒத்த நிறத்திலும், சிவந்த நிறத்திலும், வெள்ளை நிறத்திலும், நெருப்பு நிறத்திலும், மேகத்தை ஒத்த நிறத்திலும் , வானவில்லைப் போல் பல வண்ணங்களிலும், கிளிவயிற்றை ஒத்த நிறத்திலும் வகை வகையான குதிரைகள் வந்திறங்கின.  அவை அனைத்தும் இட்ட கட்டளையை ஏற்று நடக்கும் (பணி சேர்ந்தன) பயிற்சி பெற்றவை.

சூரியனின் தேர்க் குதிரைகள் பச்சை நிறமுடையவை என்பது மரபு.  

'உததியிடை கடவுமர கதவருண குலதுரக உபலளித கனகரத சதகோடி சூரியர்கள்' என்றார் அருணகிரி நாதர்.  கடலுக்கு நடுவிலே செலுத்தப்படுகின்ற, மரகதப் பச்சை வண்ணத்தையும், மிகுந்த அழகையும் உடைய சாதிக் குதிரைகள் இழுக்கும் பொன்னாலான தேரில் தோன்றும் நூறுகோடி சூரியர்கள் (ஒரே நேரத்தில் வந்ததைப் போன்றது முருகனின் திருவடி).

வியாச பாரதத்தில் சம இடம்: கிளி நிறமுள்ளவையும் வானவில் நிறமுள்ளவையும் செவ்வான நிறமுள்ளவையுமாகப் பல நிறங்களாயிருக்கும் மனோவேமான அநேகம் காட்டுக் குதிரைகளையும் விலையில்லாத பொன்னையும் ஏகபாதர்கள் யுதிஷ்டிரனுக்கு அளித்தனர். (ஸபா பர்வம், எழுபத்தெட்டாவது அத்தியாயம், த்யூத பர்வம் (தொடர்ச்சி)

கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு: The people that came there possessing only one leg gave unto Yudhishthira many wild horses, some of which were as red as the cochineal, and some white, and some possessing the hues of the rainbow and some looking like evening clouds, and some that were of variegated colour. And they were all endued with the speed of the mind. And they also gave unto the king enough gold of superior quality. (Sabha Parva, Section L) http://www.sacred-texts.com/hin/m02/m02050.htm

பாடலில் கிளிவயிற்றின் நிறமுள்ள, வானவில்லின் நிறமுள்ள, மேகங்களின் நிறமுள்ள குதிரைகள் என்று வர்ணித்திருப்பதன் ஒவ்வோர் அம்சமும் வியாச மூலத்தில் இருப்பதைக் காணலாம்.  

காற்றெனச் செல்வனவாய் - இவை
கடிதுகைத்திடும் திறல் மறவரொடே
போற்றிய கையினராய்ப் - பல
புரவலர் கொணர்ந்தவன் சபைபுகுந்தார்.
சீற்றவன் போர்யானை - மன்னர்
சேர்த்தவை பலபல மந்தையுண்டாம்
ஆற்றல் மிலேச்ச மன்னர் - தொலை
அரபியர் ஒட்டைகள் கொணர்ந்து தந்தார். (33)

பதம் பிரித்து: கடிதுகைத்திடும்: கடிது உகைத்திடும்.  சீற்றவன்: சீற்ற, வன்

அ. சொற் பொருள்

உகைத்தல்: செலுத்துதல்.

பூணொ ணாததொர் அன்பு பூண்டு
பொருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொ ணாததொர் நாணம் எய்தி
நடுக்கடலுள் அழுந்தி நான்
பேணொ ணாத பெருந்துறைப் பெரும்
தோணி பற்றி உகைத்தலும்
காணொணாத் திருக்கோலம் நீவந்து
காட்டினாய் கழுக் குன்றிலே!

(திருவாசகம், திருக்கழுக்குன்றப் பதிகம்.)

உன் அடியவர்களோ கட்ட முடியாத அன்பைக் காட்டிப் போற்றியபடி வந்தனர்.  நானோ, வெட்கப்பட்டுக்கொண்டு உன்னை அவ்வாறு போற்றத் தயங்கினேன்.  ஆகவே பிறவி என்ற கடலில் விழுந்தேன்.  துன்புற்றேன்.  அங்கே, பிறவிக் கடலைக் கடப்பதற்கு உதவும் தோணியாகிய உன் பாதத்தைப் பற்றினேன்.  அந்தத் தோணியால் *செலுத்தப்பட்டு* (உகைத்தலும்) வந்த எனக்கு உன் அழகுக் கோலத்தைத் திருக்கழுக்குன்றத்தில் காட்டி அருளினாய்.

மிலேச்சர்: அன்னியர்.  வெளிநாட்டவர்.  அரபியர், பாரசீகர் என்ற பொருள் இந்தக் குறிப்பிட்ட இடத்துக்குப் பொருந்தும்.  

'தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்....... இந்நாட் படை கொணர்ந்து இன்னல் செய்கின்றார்...' என்று சத்திரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது என்ற கவிதையிலும் பாரதி மேற்படிப் பொருளிலேயே இச்சொல்லை ஆண்டிருத்தலைக் காணலாம்.

ஒட்டைகள்: ஒட்டகங்கள்.  ஒட்டகம் என்ற பெயர்சொல்லின் இன்னொரு வடிவமே ஒட்டை எனப்படுவது.  சிங்கத்தைச் சீயம் என்பதுபோல்.  மாறாக, பன்றிக்குப் பன்றியென்றும் கேழ் என்றும் பெயர் இருப்பது வேறுவேறு பெயர்கள்.  ஒரு பெயர்ச்சொல்லின் மாறுபட்ட வடிவமன்று.  

ஆ. இலக்கணம் - 

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

காற்றென விரைந்து செல்லும் பல வகையான வண்ணங்களை உடைய குதிரைகள் மட்டுமில்லை; அவற்றை விரைவாகச் செலுத்தக் கூடிய திறமை உடைய வீரர்களையும் சேர்த்தே தந்தனர்.  போரிட வல்ல யானைகளைப் பல மன்னர்கள் தந்தனர்.  அரபிய, பாரசீக மன்னர்கள் ஒட்டகங்களைக் கொண்டுவந்தனர்.  

வியாச பாரதத்தில் சம இடம்: நூற்றுக் கணக்கும் ஆயிரக்கணக்குமாகப் பெண்யானைகளையும் பசுக்களையும் குதிரைகளையும் முந்நூறு ஒட்டகங்களையும் அநேக நூறு பெண்குதிரைகளையும் கப்பமாக எடுத்துக்கொண்டு ராஜகுமாரர்கள் யுதிஷ்டிரனுடைய கிருகத்தில் வந்து சேர்ந்தனர். (ஸபா பர்வம், எழுபத்தாறாவது அத்தியாயம், த்யூத பர்வம் தொடர்ச்சி)

கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு: And hundreds and thousands and thousands of she-elephants and thirty thousand she-camels wander within the palace, for the kings of the earth brought them all as tribute to the capital of the Pandavas. (Section XLVIII) http://www.sacred-texts.com/hin/m02/m02048.htm

இந்த இடத்துக்குக் குறிப்பு எழுதுகையில் பாரதி சொல்கிறான்: "வியாச முனிவர் அரபி தேசமென்று பெயர் குறிப்பிடாவிடினும், அவரது வர்ணனைகளைப் பார்க்குமிடத்துத் தரும புத்திரன் யாகத்துக்குக் காணிக்கையாக வந்த ஒட்டைகள் அரபி தேசத்தனவென்று தெளிவாகத் தோன்றுகிறது." -- பாரதியின் குறிப்பு

பாரதி சொல்லியிருப்பதைப் போலவே, அரேபியாவின் பெயர் வியாச பாரதத்தில் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கது.  

It is loading more messages.
0 new messages