பொறுப்புத் துறப்பு - நான் அரசியல், சமூகம்சார்ந்த பதிவுகளை அதிகம்
பதிவேன்.
எனவே, என்னுடைய பதிவுகளை விரும்பாத குழும நிர்வாகிகள் என்னை
குழுமத்திலிருந்து நீக்கிவிடலாம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ சுமார் 60 வருடங்களுக்கு முன் நடந்தவற்றை திறந்த மனதுடன் அறிவுபூர்வமாக விவாதிக்க முடியாத நிலையில் தமிழ்நாடு இல்லை என நினைக்கிறேன்.கதிர் நிலவன் ஆதாரபூர்வமாக முன் வைத்துள்ளவற்றை தவறு என்று கருதுவோர் ஆதாரபூர்வமாக அதை மறுக்கவும் தடை இல்லை.காமராசரைப் பற்றிய ஆழ்ந்த ஆய்வு நான் செய்யாததால், அது பற்றிய மாற்று கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
" இந்த உண்மையை பெரியாரிய இயக்கங்கள் தமிழர்களிடம் ஒருபோதும்கூறியதில்லை. எல்லை மீட்பில் பெரியார் கலந்து கொள்ளாததோடு அதற்கு எதிராகவும் வேலை
செய்ததால் குட்டு வெளிப்பட்டு விடும் என்று அஞ்சுகிறார்கள். " என்பது சரியல்ல என்பது என் கருத்து.நான் பெரியார் இயக்கத்தில் இருந்த காலத்தில் (1980கள் வரை) பயிற்சி வகுப்புகளிலும், கருத்தரங்கங்களிலும் இப்பிரச்சினைகள் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கின்றன." தஞ்சை மாவட்டம் அளவுக்குக் கூட எனக்கு தனித் தமிழ்நாடு கிடைத்தாலும், அதை நான் விரும்பும் பொது உரிமையுள்ள பொதுவுடமை நாடாக ஆக்குவேன்" என்ற வகையில் அவர் பலமுறை பேசியுள்ளார்.எனவே தமிழ்நாட்டின் எல்லைப் பிரச்சினை சம்பந்தப்பட்ட போராட்டத்தை அவர் பெரிதாகக் கருதவில்லை. தாய்மொழி, பாரம்பரியம், அவற்றுடன் தொடர்புடைய நிலப்பகுதி ஆகியவற்றைப் பற்றிய பெரியாரின் நிலைப்பாடு தவறு என்பதை பழந்தமிழ் இலக்கியங்களில் இசை இயற்பியல் (Physics of Music) பற்றிய எனது ஆய்வுகள் மூலமே நான் தெரிந்து கொண்டேன்.. ஆனால் தமது கொள்கையில், இலக்கில் அவர் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தார். புதிய தடயங்கள் அடிப்படையில் தவறு என்று தெரிந்தவுடன், அதைப் பகிரங்கமாக அவர் அறிவித்து திருத்திக் கொண்டதற்கு பல சான்றுகள் உள்ளன.ஆனால் ம.பொ.சி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எதிர் நிலைப்பாடு எடுத்து,தார் பூசி அழித்த இந்தி எழுத்துக்களை மண்ணெண்ணெய் கொண்டு அழித்ததற்கு அவர் 'எனது போராட்டம்' நூலில் தந்த விளக்கம் எனக்கு சரியாகப் படவில்லை.அதிலும் 1965 இந்தி எதிர்ப்பு போராட்ட நாயகர்கள் அண்ணா - ராஜாஜி கூட்டணியில் 1967 சட்டமன்ற தேர்தலில் ம.பொ.சி சேர்ந்து, பின் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் பலன்களை அனுபவித்ததும் எனக்கு சரியாகப் படவில்லை.
கறுப்பு வெள்ளையாக எந்த தலைவரையும் வெறுப்பு/வழிபாட்டு போக்கில் அணுகுவது தவறு என்பதும், அறிவுபூர்வமாக உரிய சான்றுகளின் அடிப்படையில் அவர்களடைய வண்ணங்களை (அதில் கறுப்பும் இருக்கலாம்;வெள்ளையும் இருக்கலாம்) அணுகுவதே சரி என்பதும் என் கருத்து.உதாரணமாக பாரதி பற்றிய கீழ்வரும் தகவல் அடிப்படையில் மட்டும் அவரை 'கறுப்பாக'ப் பார்க்க முடியுமா?1918 நவம்பரில் பிரஞ்சுக் கட்டுப்பாட்டிலிருந்த பாண்டிச்சேரியிலிருந்து, பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்த கடலூர் நுழைந்தபோது பாரதி கைது செய்யப்பட்டார். பின் வெள்ளையரை எதிர்ப்பதில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டு, விடுதலைப் பெற்றார். ரவுலட் சட்டம் 1919 மார்ச்சில் அமுலுக்கு வந்தது. அதன்பின் ஜாலையன்வாலாபாத் படுகொலை நடந்தது. அவர் ரவுலட் சட்டத்தை எதிர்க்கவில்லை; ஜாலியன்வாலாபாத் படுகொலையைக் கண்டிக்கவில்லை. அவர் ஆன்மிக வாழ்வில் வாழ்ந்ததே அதற்குக் காரணம் என்று சொல்லும் வாதமும் எனக்குச் சரியாகப்படவில்லை. சரி என்று திருப்தி அடைபவர்களையும் நான் குறை சொல்லவில்லை.
செ. அ. வீரபாண்டியன்
On Tuesday, July 15, 2014 8:24:33 AM UTC-7, pannpandi wrote:சுமார் 60 வருடங்களுக்கு முன் நடந்தவற்றை திறந்த மனதுடன் அறிவுபூர்வமாக விவாதிக்க முடியாத நிலையில் தமிழ்நாடு இல்லை என நினைக்கிறேன்.கதிர் நிலவன் ஆதாரபூர்வமாக முன் வைத்துள்ளவற்றை தவறு என்று கருதுவோர் ஆதாரபூர்வமாக அதை மறுக்கவும் தடை இல்லை.காமராசரைப் பற்றிய ஆழ்ந்த ஆய்வு நான் செய்யாததால், அது பற்றிய மாற்று கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்." இந்த உண்மையை பெரியாரிய இயக்கங்கள் தமிழர்களிடம் ஒருபோதும்கூறியதில்லை. எல்லை மீட்பில் பெரியார் கலந்து கொள்ளாததோடு அதற்கு எதிராகவும் வேலைசெய்ததால் குட்டு வெளிப்பட்டு விடும் என்று அஞ்சுகிறார்கள். " என்பது சரியல்ல என்பது என் கருத்து.நான் பெரியார் இயக்கத்தில் இருந்த காலத்தில் (1980கள் வரை) பயிற்சி வகுப்புகளிலும், கருத்தரங்கங்களிலும் இப்பிரச்சினைகள் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கின்றன." தஞ்சை மாவட்டம் அளவுக்குக் கூட எனக்கு தனித் தமிழ்நாடு கிடைத்தாலும், அதை நான் விரும்பும் பொது உரிமையுள்ள பொதுவுடமை நாடாக ஆக்குவேன்" என்ற வகையில் அவர் பலமுறை பேசியுள்ளார்.எனவே தமிழ்நாட்டின் எல்லைப் பிரச்சினை சம்பந்தப்பட்ட போராட்டத்தை அவர் பெரிதாகக் கருதவில்லை. தாய்மொழி, பாரம்பரியம், அவற்றுடன் தொடர்புடைய நிலப்பகுதி ஆகியவற்றைப் பற்றிய பெரியாரின் நிலைப்பாடு தவறு என்பதை பழந்தமிழ் இலக்கியங்களில் இசை இயற்பியல் (Physics of Music) பற்றிய எனது ஆய்வுகள் மூலமே நான் தெரிந்து கொண்டேன்.. ஆனால் தமது கொள்கையில், இலக்கில் அவர் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தார். புதிய தடயங்கள் அடிப்படையில் தவறு என்று தெரிந்தவுடன், அதைப் பகிரங்கமாக அவர் அறிவித்து திருத்திக் கொண்டதற்கு பல சான்றுகள் உள்ளன.ஆனால் ம.பொ.சி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எதிர் நிலைப்பாடு எடுத்து,தார் பூசி அழித்த இந்தி எழுத்துக்களை மண்ணெண்ணெய் கொண்டு அழித்ததற்கு அவர் 'எனது போராட்டம்' நூலில் தந்த விளக்கம் எனக்கு சரியாகப் படவில்லை.அதிலும் 1965 இந்தி எதிர்ப்பு போராட்ட நாயகர்கள் அண்ணா - ராஜாஜி கூட்டணியில் 1967 சட்டமன்ற தேர்தலில் ம.பொ.சி சேர்ந்து, பின் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் பலன்களை அனுபவித்ததும் எனக்கு சரியாகப் படவில்லை.நுள்ளிவிளை சாமிதாஸ் எழுதியிருப்பதைப் படிக்கவும்:
தேவிகுளம் பீர்மேடு போன்றவற்றில் அரசுயரதிகாரிகளும் பங்கும் குறிப்பிடத்தக்க வினையாற்றியுள்ளது:
பாரதி கைதுக்குப் பின் காலனிய ஆட்சியாளர்களிடம் மன்னிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு விடுதலையானதற்கான சான்றுகள் குறிப்பில் கீழே உள்ளன.அதே போல, பாரதி பற்றிய இன்னொரு தகவலும் விவாதம் மூலம் தெளிவு பெற வேண்டிய ஒன்றாகும்.பாண்டிச்சேரியில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவருக்கு பூணூல் அணிவித்த பாரதி, கடலூர் கைதுக்குப் பின் தன் ஊருக்குத் திரும்பியபின், தன் மகளின் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் பொழுது, தம்மை 'பிராமணராக' வெளிப்படுத்திக்கொண்டது தொடர்பான சான்றுகளும் வெளிவந்துள்ளதாக அறிகிறேன். அது உண்மையென்றலும், மேற்குறிப்பிட்ட பூணூல் நிகழ்ச்சியை 'ஏமாற்று வேலையாக'க் நான் கருதவில்லை.கால இடைவெளியில், மாறிவரும் சூழலில், மனிதர்கள் தமக்குள்ள சிக்கல்களில், அந்தந்த சூழலுக்கேற்றவாறு செயல்படுவது மனித இயல்பாகும்.பாரதி போன்று சமுக மேல்மட்ட குழுவில்(பிராமணராக) பிறந்த ஒருவர், கீழ்மட்ட சிக்கல்கள் பற்றி கவலை கொண்டு, எத்தகைய மனநிலையில் செயல்படுவார்கள் என்பதை நான் விளங்கிக் கொள்ள துணை புரிந்த நூல் ‘ Pedagogy of the oppressed’ by Paulo Freire ஆகும்.செ . அ . வீரபாண்டியன்
புதுவையில் இருந்த அறிஞர் அப்பாத்துரையைப் பார்க்கப் போயிருந்தேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பாவேந்தர் வந்துவிட்டார். அவர் என்னைப் பார்த்து எங்கேயோ பார்த்தி ருக்கிறோமே என்று கேட்டார். நான் அவரிடம் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தது குறித்து நினைவுபடுத்தினேன். அவர், “உனக்கு டீ வேணுமா..காபி வேண்டுமா” என்று உரத்துக் கேட்டார். எனக்கு டீதான் வேண்டும் என்றேன். “எங்க ஐயருக்கும் டீதான் பிடிக்கும். அவர் என்னை ஒரு இக்கட்டில் மாட்டிவிட்டார்” என்றார். பாரதியாரை அவர் ஐயர் என்றுதான் குறிப்பிடுவார். அது என்ன இக்கட்டு என்று அவரே விளக்கினார்.
புதுச்சேரியில் பாரதிதாசன் தினசரி மாலையில் பள்ளிக்கூட வேலை முடிந்து பாரதியார் வீட்டிற்குச் செல்வது வழக்கம். ஒரு நாள் அப்படிப் போயிருந்தபோது பாரதியார் வீட்டில் இல்லை. செல்லம்மாவிடம், ஐயர் எங்கே என்று இவர் கேட்டுள்ளார். பாரதியார் காப்பித்தண்ணி கேட்க, வீட்டில் ஒன்றும் இல்லை என்று செல்லம்மா சொல்ல பாரதியார் கோபத்தில் வெளியே போய்விட்டிருக்கிறார். பாரதிதாசன் தெருவில் இறங்கிப் பாரதியைத் தேடிப் போய் சாலைத் திருப்பத்தில் பிடித்துவிட்டார். பாரதியார் அவரை அழைத்துக் கொண்டு ஒரு இஸ்லாமியர் நடத்தும் தேநீர் கடைக்குப் போய் “இரண்டு சாயா கொடு” என்று கூறியிருக்கிறார். பாரதிதாசனுக்கு சாக்கடை ஓரத்தில் உள்ள டீக்கடையில் குடிக்க விருப்பமில்லை. என்ன இருந்தாலும் அவர் பள்ளி வாத்தியார் இல்லையா. அவர் பாரதிக்குத் தெரியாமல் அதை கீழே கொட்டியிருக்கிறார்.
இங்கெல்லாம் நாம் டீ சாப்பிடக் கூடாது என்று பாரதியாரிடம் பாரதிதாசன் சொல்லியுள்ளார். “நாம் இங்கே சாப்பிட்டால்தான் சாதி பேதம் ஒழியும். ஐயரே சாப்பிடுறான்னு சொல்லி எல்லாரும் சாப்பிடுவாங்க” என்று பாரதி அவரிடம் சொல்லியுள்ளார்.
அப்போது பாரதி தனது ஆசை என்று ஒன்றை பாரதிதாசனிடம் சொல்லியிருக்கிறார். “எனக்கு ஒரு ஆசை. எனது பெண் வளர்ந்து பெரியவளான பிறகு, வீட்டை விட்டு ஓடிப் போயிடணும். நாங்கள் அவளை எல்லா இடத்திலும் தேடணும். ரங்கூன், சிங்கப்பூர் மாதிரி ஏதாவது இடத்திலிருந்து அவளிடம் இருந்து கடிதம் வரணும். அப்பா, நான் ஆசைப்பட்டவனோடு திருமணம் முடித்து இங்கே வந்துட்டேன்னு அவள் அதில் எழுதியிருக்கணும். அப்போதுதான் எனக்கு சந்தோஷம்” என்று சொல்லியிருக்கிறார் பாரதி.
(வெள்ளையாம்பட்டு சுந்தரம், பதிப்பாளர், சேகர் பதிப்பகம்)
கேட்டு எழுதியவர்: ஷங்கர்
குறிப்பு :After the end of World War I, Bharathi entered British India near Cuddalore in November 1918. He was arrested and imprisoned in the Central prison in Cuddalore in custody for three weeks – from 20 November to 14 December.He was released after he was prevailed upon to give an undertaking to the British India government that he would eschew all political activities. To those who had heard Bharathi’s song Acham Illai, Acham Enbathu Illaiye, Bharathi’s letter of apology to Lord Pentland, Governor of Madras will surface Bharathi’s all too human frailty -In November 1918, in an act of final desperation, he broke exile and entered British India at Cuddalore. He was promptly arrested and lodged in Cuddalore jail from where he wrote to Lord Pentland, the Governor of Madras, seeking his release: “I once again assure your Excellency that I have renounced every form of politics and I shall ever be loyal to British Government and law abiding.” He was imprisoned in the Central prison in Cuddalore in custody for three weeks from 20 November to 14 December.
It is at this juncture that CP Ramaswamy Iyer intervened together with A Rangaswamy Iyer and Annie Besant and got Bharatiyar released from jail on 14th December. He had spent less than a month in custody, but the collective events of the previous decade had impacted the poet. He returned to Tirunelveli and spent his next years in Kadayam. From a letter that he wrote to Iyengar soon after his arrival, it is clear that Mrs. Annie Besant, Dr. Subramania Iyer, and CP Ramaswamy Iyer had helped to secure Bharati's release. It was a few days after the end of the First World War.And indeed, immediately upon his re-entry into British territory, Bharati was caught and imprisoned. This was how the poet of Freedom ended up in Cuddalore jail.After twenty days, with the help of his friends, Bharati was released; he had signed an agreement with the British that “in the future, he would not publish any of his works, without showing them to the Police Deputy Inspector General.By Bharathy’s granddaughterhttp://subramaniabharati.com/
On Wednesday, 16 July 2014 8:44 AM, "veera pandian pann...@yahoo.co.in [MEYKANDAR]" <MEYK...@yahoogroups.com> wrote:
நுள்ளிவிளை சாமிதாஸ் எழுதியிருப்பதைப் படிக்கவும்:தேவிகுளம் பீர்மேடு போன்றவற்றில் அரசுயரதிகாளும் பங்கும் குறிப்பிடத்தக்க வினையாற்றியுள்ளது:
http://tamil.oneindia.in/news/2012/01/13/tamilnadu-devikulam-peermedu-what-history-tells-aid0174.html
அரிய ஆதாரபூர்வமான தகவல்கள் மிக்க நன்றி.
செ. அ . வீரபாண்டியன்
After his release & return to his place, what Bharathy did? An interesting evidence follows.Bharati became restless: the creative products of those ten years of labour– the gems of his writings – were sitting in a trunk; they were going to waste without reaching the public. Bharati sorted out all of his works into 40 parts, and he thought that the solution might be to publish them in the form of small books. But, how could he publish them without money? He decided to write a letter to his friends, seeking their support in this important endeavour.On June 28, 1920, almost exactly 94 years ago, Bharati sent a letter in the form of a circular to all his friends. It was written in English, and read as follows:“All my manuscripts – the accumulated labour of my 12 years’ exile – have arrived here from Pondicherry. They are to be divided into 40 separate books; of each book I print 10,000 copies for the first edition. This work will cost me an initial outlay of Rs. 20,000. And, within one year, or at the most, two years from the date of publication, I shall certainly be able to get a net profit of a lac and a half rupees.“Most of the works which I have now selected for publication are prose-stories, sensational and, at the same time, classical: very easy, lucid, clear, luminous and all but too popular in style and diction and, at the same time, chaste, pure, correct, epic and time-defying. The fact and (2) the ever-growing increase of Tamil-reading men, women and children in the Tamil land and the Tamil world overseas; (3) the historic necessity of my works for the uplift of the Tamil land which, again, is a sheer necessity of the inevitable, imminent and Heaven-ordained Revival of the East; (4) the novel and American-like improvements which I propose to make in the printing, binding and get-up of my editions-which, aided by the beautiful and suitable pictures illustrating the interesting events occurring in the stories, will make them a tremendous attraction to our public and such a wondrous surprise; (5) the comparatively low prices of my books; for I am going to sell my prose-works uniformly at eight annas a copy and my poems at, so far as possible, four annas a copy; and (6) my high reputation and unrivalled popularity in the Tamil-reading world due to my past publications – all these are bound, most evidently, to make my sales a prodigious success.“Please send whatever you can, send as loan towards the printing expenses. I expect from you at least Rs. 100. Kindly induce at least twenty more of your friends to lend me similar and much larger sums, if possible.“I shall give stamped ‘Pro’ notes for the sums I receive from you and your friends, paying the generous interest of 2% per month, in view of my large profits. Expecting very eagerly, your kind reply and scores of money orders from your side and praying to God to grant you a long and joyous life.“I remain,“Yours faithfully,“C. Subramania Bharati”A wise business planning indeed, well thought through from start to end; an honest, intelligent way to get his work done.And yet, no one replied!
[ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியின் புதிய நூல்கள்]
அன்பர்களே,
ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியின் தமிழ் புதுமை, தெளிவு, முதலிய பல குணங்களுடையதாய்த் தமிழ்நாட்டில் எல்லா ஜனங்களாலும் மிகவும் அன்புடனும் ஆதரவுடனும் போற்றப்பட்டு வருகிறதென்ற விஷயம் உங்களுக்குத் தெரியாததன்று.
இவர் இயற்றிய “ஞானரதம்” என்ற கதையைப் பற்றி எழுதுகையில், மிகவும் கீர்த்திபெற்ற ஆசிரியராகிய மஹேச குமார சர்மா, இதைப்போல் அற்புதமான கதை தமிழ் பாஷையில் வேறு கிடையாதென்று சொல்லுகிறார். அங்ஙனமே ஸ்ரீமான் பாரதி இயற்றிய “கண்ணன் பாட்டு” முதலிய நூல்களை அச்சிட்டு வெளிப்படுத்தியிருக் கும் “தேசபக்தன்” உதவிப் பத்திராதிபராகிய ஸ்ரீமான் நெல்லையப்பபிள்ளை நமது பாரதியாரைத் தெய்வீகப் புலவரென்றும், தமிழ்நாட்டின் தவப்பயனென்றும், ஜீவன் முக்தரென்றும் கொண்டாடுகிறார். இவர் நூல்களில் ஏற்கெனவே வெளிப்பட்டிருக்கும் பகுதிகளைப் படித்தவர்களனைவரும் மேலே காட்டிய வியப்புரைகளை எளிதில் அங்கீகாரம் செய்வார்கள்.
பூமண்டல நிறைந்த கீர்த்தி
ஆனால் இவருடைய கீர்த்தி தமிழ்நாட்டில் மாத்திரமே பரவியிருப்பதாக நினைத்துவிடக் கூடாது. இவருடைய பாட்டுக்கள் பல தெலுங்கு பாஷையில் மொழிபெயர்க்கப்பட்டு ஆந்திர தேசத்தா ரால் கொண்டாடப்படுகின்றன. ஐர்லாந்து தேசத்து மஹா கவிகளில் ஒருவரும், ஜப்பான் தேசத்தின் ராஜதானியாகிய டோக்யோ நகரத்திலுள்ள Imperial University (இம்பீரியல் யூனிவர்ஸிடி) என்ற ஸாம்ராஜ்ய ஸர்வ கலா ஸங்கத்தில் இங்கிலீஷ் ஆசிரிய ராக விளங்கியவருமாகிய ஜேம்ஸ்-எச்- கஸின்ஸ் (James H. Cousins) என்பவர் இவருடைய தமிழ் பாட்டுக்கள் சிலவற்றை இங்கிலீஷில் மொழிபெயர்த்து மேல்நாட் டார் வியப்புறும்படி செய்திருக்கிறார். மேலும், மேற்படி கஸின்ஸ் என்ற வித்வான் 1916 டிஸம்பர் 8-ஆம் தேதியன்று பிரசுரமான “காமன்வீல்” பத்திரிகையில் வெர்ஹேரன் (Verhaeren) என்ற பெல்ஜியம் தேசத்துக் கவிச் சக்ரவர்த்தியைப் பற்றி எழுதியிருக்கும் நீண்ட வ்யாஸத்தினிடையே மேற்படி வெர்ஹேரனையும் நம் இந்தியா தேசத்துப் புலவர் சிலரையும் சீர் தூக்கிப் பார்க்குமிடத்தே பின்வருமாறு சொல்லுகிறார்:-
[“The Seeing eye apprehends Beauty not only in the thing seen but through it; and the more faithfully the thing is seen as channel and symbol, the more certainly will both it and the seer be dignified, not degraded. Verhaeren came within sight of imaginative freedom; but it is in the poetry of Tagore and Naidu, Ghose and Bharati, and their spiritual comrades of the Irish School that the purest and truest expression of realized Beauty can be found”:-]
இதன் பொருள் பின்வருமாறு:
“ஒரு வஸ்துவின் புறத்தே காணப்படும் ஸௌந்தர்யத்தை மட்டுமன்றி அதனை ஊடுருவிப் பார்த்து (அதில் மறைந்துகிடக் கும்) உள்ளழகையும் உணரும் சக்தி ஞான திருஷ்டிக்குரியதாகும். புறத்தோற்றம் வெறுமே வாய்க்கால் போன்றது; வெறும் அடையாளமென்பதை ஒரு புலவன் எத்தனைக்கெத்தனை தெளிவாகக் காண்கிறானோ, அத்தனைக்கத்தனை அந்த வஸ்துவுக்கும் அந்தப் புலவனுக்கும் அதிக மஹிமையேற்படும். இங்ஙனம் விமோசனம் படைத்த ஞானதிருஷ்டி யெய்தும் பருவத்தை வெஹ்ஹெரன் கவி மிகவும் நெருங்கிவந்தார். ஆனால் ரவீந்த்ரநாத் டாகுர், ஸரோஜினி நாயுடு, அரவிந்த கோஷ், சுப்பிரமணிய பாரதி, இவர்களுடைய கவிதையிலும், இவர்களைப் போன்ற ஞானத் தெளிவு கொண்ட ஐரிஷ் கவிஞர் சிலரின் கவிதையிலேயுந் தான் ஸௌந்தர்ய தெய்வத்தைப் ப்ரத்தியக்ஷமாகக் கண்டு, அதை உண்மையாகவும் சுத்தமாகவும் உணர்த்தும் சக்தி காணப்படுகிறது” என்கிறார்.
இங்கனம் கீர்த்தி வாய்ந்த கவியரசர் ஒருவர் தமிழ் நாட்டில் இருப்பது நமக்கெல்லாம் சால மிகப் பெருமையன்றோ? இவர் தமிழ் நாட்டையும் தமிழ் பாஷையையும் மேம்படுத்தியதற்கு நாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்? எனினும், இவருக்கு நாம் செலுத்த வேண்டிய கடமையில் ஒரு சிறிதளவு செலுத்துவதற்குரிய சந்தர்ப்பம் இப்போது வாய்த்திருக்கிறது. அது யாதெனில் சொல்லுகிறேன்.
ஸ்ரீமான் பாரதியார் பன்னிரண்டு வருஷம் ப்ரிட்டிஷ் இந்தியாவை விட்டுப் புதுச்சேரி யில் வன வாஸம் செய்துகொண்டிருந்தார். அந்தக் காலத்தையெல்லாம், அவர் அங்கு வீணே கழிக்கவில்லை. ஏராளமான நூல்க ளெழுதிக் குவித்துக்கொண்டிருந்தார்.
பாரதியார் நூல்களை அச்சடிக்கிற மாதிரி அவற்றையெல்லாம் இப்போது அச்சிடப் போகிறார். அவற்றை 40 புஸ்தகங்களாகப் பிரித்து ஒவ்வொரு புஸ்தகத்திலும் 10000 பிரதிகள் அச்சிட உத்தேசித்திருக்கிறார். 40X10000 (நாற்பதைப் பத்தாயிரத்தால் பெருக்கும் போது) 4 லக்ஷம் சுவடிகளாகின்றன. இந் நான்கு லக்ஷம் புஸ்தகங்களும் தமிழ்நாட்டில் மண்ணெண்ணெய் தீப்பெட்டிகளைக் காட்டிலும் அதிக ஸாதாரணமாகவும், அதிக விரைவாகவும், விலைப்பட்டுப் போகுமென்பதில் சிறிதேனும் ஸந்தேகத்துக்கிடமில்லை. இங்ஙனம் நிச்சயமாக அறிந்துகொள்ள எத்தனையோ காரணங்களிருக்கின்றன. இவற்றுள் முக்யமான சில காரணங்களை இங்கு குறிப்பிடுகிறேன்.
முதலாவது:- இந் நூல்களிலே பெரும் பகுதி வசன நூல்கள்; நேர்த்தியான, ஆச்சர்யமான, ரஸமான, வாசிக்க வாசிக்கத் தெவிட்டாத கதைகளடங்கிய வசன கிரந்தங்கள்; மிகவும் தெளிவான, இனிய, எளிய, தமிழ் நடையில் குழந்தைகளுக்குக் கூட நன்றாக விளங்கும்படி எழுதப்பட்டன. எனவே இந் நூல்கள் லக்ஷக் கணக்காக விலையாகுமென்பதில் ஸந்தேஹமில்லை.
இரண்டாவது:- தமிழ் நாட்டிலும் தமிழர் சென்று குடியேறியிருக்கும் வெளித் தீவுகளி லும், தமிழ் வாசிப்பவரின் ஜனத்தொகை நாளுக்கு நாள் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமாகப் பெருகிக்கொண்டு வருகிறது.
மூன்றாவது:- இந்த நூல்கள் அச்சிடப்படும் மாதிரியே இவை ஏராளமாக விலைப்படுவதற்கொரு ஸாதனமாகும். அமெரிக்கா, ஐரோப்பா கண்டத்துப் பதிப்புகளைப் போல் நேர்த்தியாகவும் மனோரம்யமாகவும் நல்ல காயிதத்தில், தெளிவான எழுத்துக்களில், தெளிவாகப் பதம் பிரித்து ஆச்சர்யமான தகுந்த சித்திரங்கள் பதிப்பித்து வெளியிடுவதால், இந் நூல்கள், ஜனங்களுக்குள்ளே மிகுந்த வியப்பையும், பிரியத்தையும், விளைவித்து லக்ஷக் கணக்காக விலையாகுமென்பதில் ஸந்தேஹமில்லை.
நான்காவது:- ஏழை, எளியவர், உட்பட, ஸகல ஜனங்களும் வாங்கும்படி இவற்றின் விலை மிகவும் குறைவாக ஏற்படுத்தப்படும். சராசரி ஒரு புஸ்தகத்தின் விலை அரை ரூபாய்.
ஐந்தாவது:- “கீழ்த்திசை முன்னேற்றம் பெறக்கடவது. புனர் ஜன்மம் எய்தக் கடவது” என்று கால சக்தி விதித்திருக்கிறது. “தமிழ்நாடும் ஆசியாவின் பகுதியாதலால், இதற்கும் அந்தப் புனர் ஜன்மம் உண்டு. இப் புனர்ஜன்மத்தை ஏற்படுத்துவதற்கு ஸ்ரீமான்-சுப்பிரமணிய பாரதியின் நூல்களே தகுந்த கருவிகளாவன. ஆதலால், தெய்வ பலத்தைக் கருதுமிடத்தேயும் இந் நூல்கள் லக்ஷக் கணக்காக விலையாகுமென்பது தெளிவாக விளங்குகிறது.
ஆறாவது:- -ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியாருக்குத் தமிழ் நாட்டில் நிகரற்றுயர்ந்த கீர்த்தி ஏற்பட்டிருக்கிறது. இவர் நூல்களை வாங்காமல் ஜனங்கள் யாருடைய நூல்களை வாங்கப் போகிறார்கள்? இந்த நூல்கள் மிகவும் நீண்ட பக்ஷம் 2 வருஷங்களில் விலையாகிவிடும். அதற்குள்ளேயே இரண்டாம் பதிப்புக்களுக் கும் புதிய நூல்களுக்கும் வேண்டுதல் ஏற்படுமென்பது மிகவும் நிச்சயம்.
வரவு செலவு கணக்கு
இவற்றை இவர் விரும்புகிறபடி அச்சிட 20000 ரூபாய் பிடிக்கும். விளம்பரச் செலவு 10000 ரூபாய். மேற்படி 30000 ரூபாய்க்கு மாஸம் 1-க்கு 2 ரூபாய் வீதம் இரண்டு வருஷத்து வட்டி ரூபாய் 14,400. ஆக மொத்தம் செலவு ரூபாய் 44,000.
புஸ்தகம் ஒன்றுக்கு அரை ரூபாய் வீதம் மொத்தப் புஸ்தகத்துக்கு வரவு ரூபாய் 2-லக்ஷம். ஆகவே, மிச்ச லாபம் ரூபாய் 156000. ஒன்றரை லக்ஷத்தாறாயிர ரூபாய் ஸித்தமாகக் கிடைக்கிறது. இத்தனை நல்ல லாபம் கிடைப்பதை உத்தேசித்தே ஸ்ரீமான்-பாரதியார் மாஸம் 1-க்கு ரூபாய் 2-வீதம் வட்டி கொடுக்கத் துணிந்தார்.
பிரார்த்தனை
இதற்குத் தாங்களும் தங்கள் நண்பர்களும் தலைக்குக் குறைந்தபக்ஷம் ரூ.100-வீதம் இயன்ற தொகை கடனாகவேனும் இனாமாகவேனும் கொடுத்துதவும்படி பிரார்த்திக்கிறேன். இனாமாகக் கொடுப்போர் ஸ்ரீமான் பாரதியாரால் மேன்மேலும் நடத்தப்படும் தமிழ் வளர்த்தலாகிய மஹா புண்ணிய கர்மத்திற்குப் பொருள்கொடுத்து, எக்காலத்திலும் அழியாத புண்ணியமடைவார்கள். கடனாகக் கொடுப்போர்க்கு அங்ஙனமே உயர்ந்த புண்ணியம் கிடைப்பதுடன் மிகவும் லாபகரமான வட்டியும் கிடைக்கிறது. கடன் கொடுப்போர்க்கு ஆறு மாஸங்கழித்தவுடன் மாஸந்தோறும் வட்டி கொடுக்கப்படும். முதலும் வட்டியும் இரண்டு வருஷ காலத்தில் முழுதும் கொடுத்துக் கணக்குத் தீர்த்து விடப்படும். கீர்த்தியை விரும்புவோருக்கு இதில் கீர்த்தியும் கிடைக்கும். உத்தம கார்யம். எந்த வகையில் யோசித்தாலும் செய்யத் தக்கது.
தாங்களும் தங்கள் நண்பர்களும் அனுப்பக்கூடிய தொகையை உடனே மணியார்டர் செய்தனுப்புங்கள். கீழே ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியின் விலாஸம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவருடைய விலாஸத்திற்குப் பணம் அனுப்பினால் அவர் கடனாகக் கிடைக்குந் தொகைகளுக்கு ஒரணா ஸ்டாம்பு ஒட்டிக்கடன் பத்திர மெழுதிக் கையெழுத்துச் சார்த்தி உங்களுக்கனுப்புவார். தகுந்த லாபம் கிடைக்கும். ஸமயத்தை மதி மயக்கத்தாலே தவற விட்டுவிடாதீர்கள்!
அன்பர்களே, உடனே, உடனே, உடனே, தத் தம்மால் இயன்ற தொகைகளை அடியிற் கண்ட ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியாரின் விலாசத்துக் கனுப்புங்கள். உங்களுக்கு மஹாசக்தி அமர வாழ்க்கை தருக.
உங்களன்பு மிக்க
காரியதரிசி,
தமிழ் வளர்ப்புப் பண்ணை, சென்னை.
(ரா. அ. பத்மநாபன் பதிப்பித்து, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ‘சித்திர பாரதி’ நூலிலிருந்து.)