மெய்கண்டாரியம்: உலக வாழ்க்கை
கட்டுரை 1. அறிமுகம் : தமிழர்களின் தனித்துவம்
தமிழர்களின் மெய்யறிவுச் சிந்தனை சங்க காலத் தமிழர்களின் பொருளாய்வின் தொடர்ச்சியாகும். இந்தப் பொருளாய்வும் தொல்காப்பிய மரபும் சுமேருத் தமிழ் காலத்திலிருந்து வரும் ஒன்று என்று பல கட்டுரைகளில் விளக்கியுள்ளேன். இங்கு நான் மீண்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வது மெய்கண்டாரின் உடம்போடு கூடிய உலக வாழ்வியல் ஆகும். இது சிவஞான போதம் மூன்றாம் சூத்திரத்தில் காணக்கிடக்கின்றது.
தமிழ் மெய்யறிவுச் சிந்தனை வரலாற்றில் அத்துவித வேதாந்த மாயாவாதத்தையும் இன்னும் இதுபோன்ற ஏனைய பாரத மண்ணில் தோன்றிய எல்லா தரிசனங்களையும் வீழ்த்தி முப்பொருள் உண்மையின் அநாதிப் பொருளியலை நிறுத்திய சிறப்பு மெய்கண்டாருக்கே உண்டு, அத்தோடு இதனை சுருதி உத்தி அனுபவம் என்ற முறையில் கூட பிரமாணங்களைக் கொள்ளாது நூலிய அறிவியல் முறையில் இந்த உலகத்தையே ஓர் நூலாகக்கொண்டு பதி பசு பாசம் எனும் முப்பொருளுண்மையின் அநாதிபொருளியலை நிறுத்தியவர் நம் மெய்கண்டாரே யாகும்.
போதம் தோன்றிய காலத்திலிருந்து அதற்குத் தோன்றிய உரைகளையும் எழுந்த வழிநூற்கள் சார்பு நூற்கள் ஆகியவற்றையும் காண, அந்நூல் இன்னும் முற்றாகவும் சரியாகவும் புரிந்துகொள்ளப்படவில்லை என்றே நினைக்கின்றேன். இந்நிலை விடாது தொடரவும் செய்யலாம். பல வகையான புரிந்துணர்வுகளைத் தூண்டும் ஞானவிசாரணைக்கு வித்திட்டுக் கொண்டே இருக்கும் சிறப்பு இதற்கு யாண்டும் தொடரலாம்.
இங்கு நான் மூன்றாம சூத்திரத்தில் ஓர் தனிச் சிறப்பினைக் காண, அதனை விளக்குவதற்கு இந்த தொடரை தொடங்கியுள்ளேன். முழு நூலுக்கும் முன்பே நூலிய அறிவியல் உரை எனும் ஓர் உரையை எழுதி இருந்தாலும், இந்த மூன்றாம சூத்திரதிற்கு ஓர் தனிச் சிறப்பு இருப்பதைக் கண்டு அதனை சிறிது விளக்கவே இந்த முயற்சி.
தமிழர்களின் சிறப்பினையும் தனித்துவத்தையும் மறைக்கும் வகையில் பல முயற்சிகள் கடந்த பல நூற்றாண்டுகளாக தமிழ் மண்ணிலும் பிற இடங்களிலும் நடந்து கொண்டே இருக்கின்றது. பல புனை கதைகளை எழுதியும் பரப்பியும் அடிப்படையான மூல நூற்கள் கூட மொழி பெயர்ப்பு நூற்களே என்று கூறி தமிழர்களின் தனித்துவமும் தனி சிறப்பும் மறைக்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்றே போதத்தின் மூன்றாம் சூத்திரத்தின் தனிச் சிறப்பும் பாராட்டப்படாது கிடப்பது என்று நினைக்கின்றேன். இதற்கு முக்கிய காரணம், வரலாற்றுப் போக்கில் போதத்தை அணுகாது, அநத வரலாறு இடத்தைப் பல புனை கதைகளால் நிரப்பி ஓர் பொய் அமைதி அடைந்ததுள்ளது தான். வழி நூலும் மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றாகிய சிவப்பிரகாசத்தில், சந்தான பரம்பரைப் பற்றி உமாபதியார் கூற வரும்போது,
தேவர் பிரான் வளர்கயிலைக் காவல் பூண்ட
திருநந்தி அவர்கணத்தோர் செல்வர் பாரில்
பாவிய சத்திய ஞான தரிசனிகள் அடிசேர்
பரஞ்சோதி மாமுனிகள் பதியாம் வெண்ணெய்
மேவிய சீர் மெய்கண்ட திறலான்..
என்றவாறு யாரோவோர் கையிலிருந்து வந்த சத்தியஞான தரிசனிகள் எனும் ஒருவரின் சீடராகிய ஓர் பரஞ்சோதி முனிவர் திருவெண்ணெய் நல்லூர் வந்து மெய்கண்டாருக்கும் போதிக்கத்தான் மெய்கண்டார் சிவஞானபோத்தை எழுதியதாக ஓர் கதை எழுந்துள்ளது.
இங்கு முற்றிலும் மறுக்க்ப்படுவது மெய்கண்டார் ஓர் சிறந்த தொல்காப்பியப் புலவர் என்பதும் அவர் தம் நூலுக்கு தாமே எழுதிய உரை தொல்காப்பிய மரபியலில் எழுந்த காண்டிகை உரை என்பதும் தொல்காப்பிய பொருளியல் ஆய்வினைச் சார்ந்தே போதத்தின் 3ஆம் சூத்திரத்டை எழுதியுள்ள உண்மைகளுமாகும்.
இது எப்படி?
சங்க இலக்கியங்கள் காதலின் அகவாழ்க்கை என்றும் வீரத்தின் புறவாழ்க்கை என்றும் மேலும் ஞானத்தின் உகவாழ்க்கை என்றும் வாழ்க்கையை மூவகையில் ஆய்ந்துள்ளதைக் காண்கின்றோம். தெய்வ நாட்டத்தின் உக வாழ்க்கை விரிவாக இல்லாது போய்விட்டாலும் இல்லாமல் இல்லை. ஆனால இதுவே பேரளவில் வளர்ந்து பத்தி இலக்கியத்திற்கே வித்திட்டுள்ளது. ஆனால் சங்க இலக்கியங்களிலும் பக்தி இலக்கியங்களிலும் ஆராயப் படாது ஆனால் உண்மையென மேற்கொள்ள்பட்டதாக( presupposed) இருப்பது ஆன்மாக்கள் பல என்றும் அவை உடம்பெடுத்து உலகில் ஆணாய் பெண்ணாய் உழல்கின்றன வென்றும், திருமணம் செய்கின்றன குழந்தைகளை ஈன்று மகிழ்கின்றன என்றும் அந்நியம் பாராட்டி எதிரிகளாக இருப்போரை போரிட்டு வெல்ல முயல்கின்றனர் என்றும் இதுபொலும் இன்னும் பல,
இவை எல்லாம் உடலெடுத்து ஆன்மாக்கள் உலகில் வாழ்கின்றன என்றவோர் உணமையை மெய்யெனக் கொண்டுதானே மேற்கொண்டு அவர்களின் மொழியாக்கங்கள் மெய்ப்பாடுகள் ஒழுக்கங்கள் போன்றவை விளக்க்ப்படுகின்றன?
இங்கு ஆராயபடாது இருப்பது ஆன்மாக்கள் பல உண்டு என்பது, அவை வெவ்வேறு உடல் எடுக்கின்றன என்பது. உடல் எடுப்பதே பிறத்தல் என்றும் , அந்த உடலை இழத்தலே மரித்தல் என்றுமாகிய உலகிய வாழ்க்கையாகும்.
சந்நியாசத்தையும் துறவினையும் வற்புறுத்திய புத்தம் சமணம் வேதாந்தம் போன்ற சமயங்கள் உலக வாழ்க்கையை பொய் என்றும் இறைவன் என்றும் ஆன்மா வென்றும் யாதும் இல்லை என்றும் அனைத்தும் கற்பிதமே பொய்யே என்றெல்லாம் வறுபுறுத்தி உலக வெறுப்பின் வழி தங்களது சந்நியாசத்திற்கு ஆக்கம் சேர்க்க முயன்றனர்.
அது இன்றும் தொடர்கின்றது.
சந்நியாசமும் துறவும் தப்பான ஒன்றல்ல. ஆனால அதனை வற்புறுத்த உலகம் பொய் என்பது தவறு. உலக வாழ்க்கையை தெற்றென புரிந்துகொண்டாலதான் மெய்யான துறவு தானே அமையும்
இதைத்தான் நம் மெய்கண்டார் போதத்தின் மூன்றாம் சூத்திரத்தில் மிகச் சிறப்பாக ஆய்ந்து ஆன்மா பொய்யல்ல உடம்பெடுத்து வாழும் உலக வாழ்க்கை பொய்யல்ல என்றெல்லாம ஏரணவியல் பிழையாது திறன்பட நிறுத்தி சங்க இலக்கிய மரபில் விடுபட்ட ஒன்றை நிறைவு செய்கின்றார்,
தொடரும்
உலகன்
கட்டுரை 2: மாயா இயந்திரத் தனுவில் ஆன்மா
மெய்கண்டார் தமது அற்புதமான சிவஞான போதத்தில் முதல் சூத்திரதிலேயே சுட்டுணர்வினை மையப் படுத்தி பதி பசு பாசம் என்று திருமூலரால் ஒருவாறு மொழியாக்கப்பட்ட அநாதிப்பொருளியலை நூலிய அறிவியல் முறையில் செவ்வே நிறுத்தியுள்ளார். இதனை அடுத்து வரும் இரண்டாவது சூத்திரத்தில் வாழ்க்கையை இறைவனோடு இசைந்த வாழ்க்கையை விளக்கும் வகையால் புண்ணிய பாவ உணர்வுகள் எவ்வாறு எழுகின்றன வென்றும் அவற்றின் அடிப்படையில் எவ்வாறு கன்ம ஈட்டமும் நீக்கமும் நடக்கின்றதென்றும் விளக்கி மூன்றாவது சூத்திரத்தில் அநாதிப் பொருட்களாகிய ஆன்மாக்கள் உடம்பெடுத்து ஆணாய் பெண்ணாய் அலியாய் பிறந்து உயிர்த்து இறைவனோடு இசைந்து வாழ்வதோடு மாயையோடும் இசைந்து வாழ்ந்து பிறகு காலம் வர மரித்து பின் மீண்டும் பிறப்பெடுக்கும் என்றெல்லாம் கூறும் வகையில் வாழ்வியலை விளக்குகின்றார்.
இதனால் சங்க இலக்கியத்து அகவாழ்க்கை புற வாழ்க்கை போன்றவை மாயையோடு இசைந்த வாழ்க்கை எனும் வகைஅயில் மெய்யாகின்றன என்று குறிப்பாய் உணர்த்துகின்றார்.
இங்கு மாயை என்பது வேதாந்த மாயம் அல்ல- எல்லாப் பொருளிற்கும் மூலமாக இருக்கின்ற ஓர் வகைய மூலப் பொருள். இதனை குடிலை என்றும் தூமாயை என்றும் பிறவாறும் கூறுவர்.
அநாதிப் பொருளாகிய ஆன்மா உடம்பெடுத்து உலகில் உயிர்க்கும் ஒன்றாக உழலாவிடில் காதல் ஏது? காமம் ஏது? திருமணம் ஏது? சக்களத்தி சண்டைகள் ஏது? வாணிபம் ஏது? அரசியல் ஏது? அதனால் வரும் போர்கள் ஏது?
இவை எல்லாம சங்க காலத்தோடு முடிந்தவை அல்ல. இன்றும் அதுதானே மக்களது வாழ்க்கையாக இருக்கின்றது?
அநாதியாகிய ஆன்மாக்கள் உடம்பெடுத்து உழலாவிட்டால் இல்லறம் ஏது ? அரசியல் ஏது? துறவறம் ஏது? சமய வாழ்க்கையுந்தான் ஏது?
இவ்வாறான வாழ்க்கையை வாழும் நமக்கு உடம்பில் ஆன்மா உண்டா ? இல்லையா? என்ற கேள்வி எழுவதில்லை. அதன் உண்மை கேள்விகட்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே விளங்கும். ஆனால தத்துவஞானிகள் வந்து இதனைக் கேள்வி குறியாக்குகின்றனர், பல மறுப்புக்களையும் தெரிவிக்கின்றனர்.
புத்தரில் ஒரு சாரார் ஆன்மா இல்லை என்கின்றனர். அத்துவித வேதாந்திகள் பரம்பிரம்மமே ஆன்மா அது உடம்பெடுக்காது, அது உடம்பெடுப்பதாக நீ தான் உனது அஞ்ஞானத்தினால் நினைத்துக் கொண்டு ஓர் பொய் வாழ்க்கை வாழ்கின்றாய், வேதங்களைக் கற்று ஓதி பிரமஞானம் கைவந்தால் இந்த மாயம் நீங்கும் நீயே பரப்பிரமம் என்று உணர்வாய் என்பர்.
உலகாயதரோ ஆன்மா என்ற ஒன்றில்லை வெற்றிலை சுண்ணாம்பு பாக்கு போன்றவை கலந்திட செவ்வண்ணம் தோன்றுவது போல, உடம்பில் பல நீர்கள் சுரந்து கலந்திட இவை கலக்க அப்போது தோன்றும் உணர்வின் ஓட்டங்களே உயிர், அது அநாதியான ஆன்மா அல்ல என்பர்.
வேறு சிலர் ஆன்மா உண்டு ஆனால் ஒரே ஓர் ஆன்மாதான் உண்டு; அதுதான் பரமான்மா , தனித்தனி ஆன்மாக்களாகத் தோன்றும் சிவான்மாக்கள் ஒரே சூரியனின் நீர் நிறைந்து கடங்களில் பிரதிபிம்பிப்பது போலத்தான் என்றும் கூறுவர்
இவ்வாறும் இன்னும் வேறு வகையிலும் இன்று ஐரோப்பிய தத்துவஞானிகள் ஒவ்வொரு உடம்பிலும் ஓர் ஆன்மா என்பதையும் ஆன்மா ஒர் அநாதிப் பொருள் என்பதையும் மறுப்பர்
இவற்றை எல்லாம் மறுத்து அநாதிப் பொருளாகிய ஆன்மாக்கள் உடலெடுத்து உயிர்க்கின்றன, பிறந்து வாழ்ந்து மரித்து உடலை விட்டு நீங்கி காலம் வரும்போது மீண்டும் பிறக்கின்றன சில மீண்டும் பிறவாமை எய்துகின்றன மெய்கண்டார் என்று திறம்பட நூலியல் அறிவியல் முறையில் விளக்கி அனைவருக்கும் ஞானத் தெளிவு தருகின்றார்.,
இதனை தெரிவிக்கும் மூன்றாம் சூத்திரம் கீழே வருமாறு
சூத்திரம் 3:
உளது இலது என்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின்
உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா
இச்சூத்தின் முடிவானக் கருத்து ‘மாயா இயந்திரத் தனுவாகிய இவ்வுடம்பினுள் ஆன்மா உளது’ என்பதே
இந்த சூத்திரத்தில் ஏழு வெவ்வேறு அதிகரணங்கள் அல்லது படிமெய்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் அநாதிப் பொருளாகிய ஆன்மா சுத்த அசுத்தமாயையால் உருவாக்கப்பட்ட இந்த உடம்பில் ஓர் விசித்திரமான எந்திரம்போல் விளங்கும் அவ்வுடம்பில் அதற்கு வேறாக ஆன்மா உயிர்க்கின்றது ஆகவே உலக வாழ்க்கை என்பது மாயையோடு இசைந்த வாழ்க்கையாக விளங்குகின்றது என்று விளக்குகின்றார் நம் மெய்கண்டார்
இங்கு சிக்கல்கள் இல்லாமல் இல்லை.
சிவஞான போதத்திற்கு பாண்டிப்பெருமால் உரையிலிருந்து இதுவரை எத்தனையோ உரைகள் எழுந்துள்ளன. இன்றும் எழுதப்பட்டும் வருகின்றன. இவற்றில் மாறுப்பட்ட கருத்துக்களும் உண்டு, முரண்பாடுகளும் உண்டு.
இந்த சூத்திரமும் விதிவிலக்கல்ல.
இந்த சூத்திரத்தை எப்படி பிரிப்பது, யாவை தான் இந்த ஏழு வெவ்வேறு படிமெய்கள்? ஏன் அவை? யாதை அவை மறுக்கின்றன? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
இவற்றையெல்லாம் இனி அடுத்தடுத்து விளக்குவம்
தொடரும்
உலகன்
இதனை தெரிவிக்கும் மூன்றாம் சூத்திரம் கீழே வருமாறு
சூத்திரம் 3:
உளது இலது என்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின்
உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா
இச்சூத்தின் முடிவானக் கருத்து ‘மாயா இயந்திரத் தனுவாகிய இவ்வுடம்பினுள் ஆன்மா உளது’ என்பதே
அழகான விளக்கம்.
இந்த சூத்திரத்தில் ஏழு வெவ்வேறு அதிகரணங்கள் அல்லது படிமெய்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் அநாதிப் பொருளாகிய ஆன்மா சுத்த அசுத்தமாயையால் உருவாக்கப்பட்ட இந்த உடம்பில் ஓர் விசித்திரமான எந்திரம்போல் விளங்கும் அவ்வுடம்பில் அதற்கு வேறாக ஆன்மா உயிர்க்கின்றது ஆகவே உலக வாழ்க்கை என்பது மாயையோடு இசைந்த வாழ்க்கையாக விளங்குகின்றது என்று விளக்குகின்றார் நம் மெய்கண்டார்
இங்கு சிக்கல்கள் இல்லாமல் இல்லை.
சிவஞான போதத்திற்கு பாண்டிப்பெருமால் உரையிலிருந்து இதுவரை எத்தனையோ உரைகள் எழுந்துள்ளன. இன்றும் எழுதப்பட்டும் வருகின்றன. இவற்றில் மாறுப்பட்ட கருத்துக்களும் உண்டு, முரண்பாடுகளும் உண்டு.
இந்த சூத்திரமும் விதிவிலக்கல்ல.
இந்த சூத்திரத்தை எப்படி பிரிப்பது, யாவை தான் இந்த ஏழு வெவ்வேறு படிமெய்கள்? ஏன் அவை? யாதை அவை மறுக்கின்றன? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
இவற்றையெல்லாம் இனி அடுத்தடுத்து விளக்குவம்
அழகாக அதே வேளை எளிமையாகச் செல்கின்றது தொடர். பயனுள்ள தொடர் இது.சுபா
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஆன்மா என்பது மனிதன் கற்பித்துக்கொண்டது. முன்னோர் ஆன்மா, மலம், நீக்கம், பிறவி என்ற சிந்தனையில் வீணடித்த காலம் அளவில்லாதது. ஆனால் நல்ஒழுக்கங்களை மேற்கொள்ள அந்தச் சிந்தனை வழிவகுத்தது என்ற எண்ணம் எனக்குள் உலகியல் சூழலில் பதிந்துள்ளது.
திரு. சொ.வி. அவர்களே,இதனை வாசித்தபோது, நாம் நேரில் சந்தித்த போது நீங்கள் குறிப்பிட்ட ஆசீவக தத்துவம் பற்றிய நினைவு தோன்றியது. சென்னைக்கு வந்திருந்த பிறகும் சில நாட்கள் ஏதாகினும் நூற்கள் கிடைக்குமா எனத் தேடினேன். கிடைக்கவில்லை. உங்களுக்கு ஆசீவகம் பற்றி தெளிவான நூல்கள் கிடைத்ததா என தெரிந்து கொள்ள ஆவல்.இது இழைக்குத் தொடர்பில்லாத கேள்வி தான் ஆனாலும் டாகடர் லோகா தவறாக நினைக்க மாட்டார் என்ற சிந்தனையில் கேட்கிறேன்.சுபா
தங்கள் சிறப்பான பதிவின் மூலம் அறிந்து தெளிவுகொள்ள விருப்பம்.தங்கள் பதிவுக்கு நன்றி.அன்புடன்சொ.வினைதீர்த்தான்
கட்டுரை 3: ஆன்மா சுத்தமாயை அல்ல-1
மீண்டும் கூறுகின்றோம் மூலத்தில் ‘அதிகரணம்’ என்றிருப்பதைத்தான் நாம் இங்கு ‘படிமெய்’ என்கின்றோம். ஒவ்வொரு சூத்திரமும் ஆழமான ஓர் உணமையை உணர்த்த படிப்படியாகச் செல்வதின் இடைப்பட்ட இந்த மெய்களை படிமெய்கள் என்கின்றோம்
இவ்வாறு மெய்கண்டாரே சூத்திரத்தின் உட்பொருளை விளக்குதற்கு ஏழு படிமெய்களை தேற்றி ஒவ்வொன்றிற்கும் ஓர் எடுத்துக்காட்டு வெண்பாவையும் தந்து சூத்திரத்தின் உட்பொருளை தொகுத்து அறியுமாறு செய்கின்றார்.
ஆனால் இங்கும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை, படிமெய்கள் ஏழு என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை, ஆயினும் யாவைதான் அவை என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு,
நான் இங்கு கொள்ளும் பாடம் மெய்கண்டாரின் எடுத்துக்காட்டு வெண்பாக்களையும் தழுவியது என்று கூறி எவ்வாறு பாடத்தைக் கொள்கின்றேன் என்பதையும் விளக்குகின்றேன்.
முதலாம் படிமெய்
மேற்கோள்: ஆன்மா(சுத்தமாயைக்கு வேறாக ) மாயா வியந்திரத் தனுவில் உளது என்றது
ஏது:
(ஈண்டு) இலது என்றலின்
பொழிப்புரை: எவற்றினையும் அன்று அன்று எனவிட்டு ஆன்மா இலதென்று நிற்பது உளதாகலின், அதுவே அவ்வான்மாவாம் என்றது.
இங்கு வலைக்கோடுகள்
உள்ளே புகுத்தப்பட்டுள்ள சொற்கள் எனது சொற்கள்- எழுதாது விட்டதை எழுதியுள்ளேன்
அவ்வளவுதான.
இந்த படிமெய்யை உணமை என நிறுத்த வரும் எடுத்துக்காட்டு வெண்பா கீழே வருவது:
எடுத்துக்காட்டு 3.1.1
அன்று அன்று என நின்று அனைத்தும் விட்டு அஞ்செழுத்தாய்
நின்று ஒன்று உளது, அதுவே நீ; அனைத்தும் -- நின்று இன்று
தர்ப்பணம் போல் காட்டலால் சார்மாயை நீயல்லை;
தற்பரமும் அல்லை, தனி
இங்கு ‘சார் மாயை நீ அல்லை” என்பதைக் கொண்டே ‘சுத்த மாயைக்கு வேறாக” என்ற சொற்களை கொண்டு வந்து மேற்கோளில் பூட்டியுள்ளேன் -- மேற்கோளின் பொருள் இன்னும் தெற்றென விளங்கிட உதவும் வகையில்
மேலும் எடுத்துக்காட்டில் ‘சார்மாயை நீ அல்லை’ என்பதொடு ‘தற்பரமும் அல்லை தனி’ என்றும் கூறுகின்றார். ‘தற்பரம்’ என்றால தான் அனைத்தையும் தோற்றுவிக்கும் நிமித்த காரணனாய் நிற்க( agentive cause) தனை யாரும் தோற்றுவிக்காது தானே தனக்குத் தலைவனாக நிற்கும் இறைவன் ஆகும். வேதாந்திகள் இந்த இறைவனை ‘பிரமம், பரப்பிரமம்’ என்றெல்லாம் கூறுவர். உடலெடுத்து உயிர்க்கும் இந்த ஆன்மா இந்த இறைவன் அல்ல என்று வேதாந்தத்தை மறுக்கும் வகையில் துணிந்து பிரமமும் அல்ல, அது தனி வேறொரு அநாதிப் பொருள் என்கின்றார் நம் மெய்கண்டார்.
ஆக இங்கு மீண்டும்
ஆன்மா பதிக்கும் பாசத்திற்கும் வேறாக பசு வெனும் இன்னொரு அநாதிப் பொருளாகின்றது.
ஆனால் மறுக்கப்படும் கூற்றுதான் என்ன?
ஆன்மா என்றவோர் தனித்த பொருள் இல்லை, எனவே அநாதிபொருளாக ஆன்மா இல்லை, அது சுத்த மாயையின் பல்வேறு விருத்திகளேயாம் எனும் பொருளிறக்கு வாதம்( reductionism) ஆகும்
தனித்த ஓர் பொருளை வேறொன்றிற்கு இறக்கி அது தனித்த ஒன்றல்ல என்று காட்டுவதே ‘இறக்குவாதம’ ஆகும். இது ஐரோப்பியர்களிடையே வெகுவாகப் பயிலும் ஓர் போக்காகும். ஆன்மா இறைவன் என்ற சமல அமல சித்துப் பொருட்களின் உண்மையை ஏற்க முடியாது பல இறக்குவாதங்கள் உருவாக்கி அவை இல்லை என்று சாதித்த வண்ணம் இருக்கின்றனர்.
இதனை பாரதத்தில் ‘விஞ்ஞானவான்மா வாதம்’ என்று கூறி புத்தரில் ஒரு சாராருக்கு உரித்தாக்குவர். ஆனால் இன்று இது ஐரோப்பிய அறிஞர்களிடையே வெகுவாகப் பயிலும் ஒன்றாகும். William James எனும் அமெரிக்கப் பேராசிரியர் “ ‘stream of consciousness’ என்பர்.
Husserl என்பார் தோற்றுவித்து பலவாறு வளர்த்துவிட்ட Phenomenology எனும் இயலியத் துறையில், தாறுமாறாக ஓடும் உணர்வின் ஓட்டத்தில் சுட்டுகளாக வருவனவற்றைக் கழித்து உணர்வினை தூய்மைப் படுத்தினால் வருவதே ஆன்மா என்றவாறும் கூறுவர்.
இப்படி இன்னும் பல.
இதனை மெய்கண்டார் ‘சார் மாயை நீ அல்லை” என்றவாறு எப்படித்தான் மறுக்கின்றார்?
முதலில் இந்த விஞ்ஞானங்களை, பல்வேறு உணர்வுகளைத் தரும் மாயை எனும் சுத்த மாயை, தர்ப்பணமாகிய கண்ணாடிபோல, ஓர் அசித்துப் பொருளாக நின்றும் அதன்மேல் விழுவதைதான் காட்டுமேத் தவிர ஓர் சித்துப்பொருள்போல தானே படைத்து ஒன்றினை உளதாக்காது என்கின்றார். இந்த சுத்த மாயைக்கு படைப்பாற்றல் திறன் இல்லை என்கின்றார்.
இரண்டாவதாக, அன்று அன்று நான் அது அல்ல என்றவாறு நெதிக்கும் முகத்தானே தான் ஓர் சித்துப்பொருள் எனக் காட்டுவதின் அது சார் மாயை அல்ல என்கின்றார்.
மேலும் ஆன்மாவே அஞ்செழுத்தாய் அதாவது சூக்குமபஞ்சாட்சரமாக, ஆகவே சூக்கும பஞ்சகிருத்தியங்களை செய்யும் ஓர் சித்துப் பொருளாக இருப்பதின் ஆகவே இறைவனது பஞ்ச கிருத்தியங்கள் வெளிப்படு நிலனாக இருப்பதின் என்றும் கூறுகின்றார்.
இவை எல்லாம் எவ்வாறு ஆன்மா பிரமம் அல்ல சூன்யம் அல்ல சார் மாயை அல்ல தனி ஓர் அநாதிப் பொருள் என நிறுத்தும்?
அடுத்தக் கட்டுரையில் நம் விசாரனைத் தொடரும்.
தொடரும்
உலகன்
கட்டுரை 4: ஆன்மா சுத்தமாயை அல்ல-2
காலத்துக்குக் காலம் தமிழர்கள் அற்புதமான புதுமைவாதிகளாக படைப்பாளிகளாக வீறுகொண்டு எழுந்துள்ளனர். சோழர் காலத் தமிழர்களும் அவ்வாறே. எப்படி தஞ்சை பெருங்கோயில் தலைசிறந்து நிற்கின்றதோ அதேப் போலத்தான் மெய்கண்டாரின் சிவஞானபோதமும். அதனை சிந்திக்க சிந்திக்க நமக்கு வியப்புத்தான் மேலிடுகின்றது. எப்படித்தான் இப்படிப்பட்ட நுட்பங்களை ஞான ஆழங்களை மொழியாக்கினர் அதுவும் தூய செந்தமிழில் எனும் போது எல்லாம் இறையருளாலதான் என்றே நாம் முடிக்க வேண்டி இருக்கின்றது.
ஆன்மா சார் மாவை அல்ல என்னும் கூற்றிலும் இன்றும் பழக்கத்தில் அதுவும் மேற்குலகில் பெரிதும் பாராட்டபடும் தத்துவக் கருத்துக்களை எல்லாம் புறந்தள்ளி அன்றே பல ஞான ஆழங்களைக் கண்ட அற்புதம் தமிழில் பல நூற்களில் உண்டு, அதில் ஒன்றே சிவஞான போதம்
இந்த முன்னுரையோடு மெய்கண்டாரின் முதல் படிமெய்யை தொடர்ந்து ஆய்வு செய்வோம்
இங்கு ‘மாயை’ என்றால் என்ன என்பதையும் ஏன் ‘சார் மாயை நீ அல்ல” என்றும் கூற வேண்டும் என்பதை சிறிது அலசுவோம்
‘மாயை’ என்பது தூமாயை என்றும் குடிலை என்றும் கூறி அதனை சுத்த மாயை என்றும் அசுத்த மாயை என்றும் பிரிப்பர். இந்த சொல்லின் வேர் எனக்குத் தெளிவாகப் புலப்படவில்லை. ஆனால நிச்சயாமாக வேதாந்த மாயை அல்லது மாயம் அல்ல. இது இருள் கருள் என்ற பொருள்படும் ‘மால்’ என்பதின் திரிபாக வந்திருக்கலாம் -- மாலன்> மாயன் போல. இங்கு மாயை ஓர் பொருள்(substance) அனைத்திற்கும் ஆதாரமாக நிற்பது. ஆக இது சுமேருத் தமிழ் மெய்> மொய் என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். ‘மெய்> மொய்’ என்றால ‘ஆற்றல். சத்தி’ என்றெல்லாம பொருள்படும் சோழர்களின் ‘மெய்கீர்த்தி’ எனும் சொல்லில் இப்பொருள் பயில்கின்றது. மாயை என்பது இதன் திரிபாக அனைத்துக்கும் ஆதார சத்தியாக( energy) இருக்கும் ஒன்று என்பதாகலாம.
இதனை ‘சுத்த மாயை’ என்றும் ‘அசுத்த மாயை’ என்றும் வகுப்பர். அசுத்த மாயையாவது கல் மண் எலும்பு மச்சை நரம்பு நாளங்கள் தசைநார்கள் போன்றவற்றின் மூலப்பொருள். சுத்த மாயை என்பது உனர்வுகள் அறிவுகள் போன்றவற்றை உருவப்படுத்த உதவும் சத்தி -- மின்காந்த அலைகள் போன்று.
இங்கு சார் மாயை’ என்று பகரப்படுவது சுத்தமாயையே யாகும்.
எப்படி?
‘தர்ப்பணம் போல’ காட்டலால் என்று மெய்கண்டார் கூறுவதால் இவ்வாறு புரிந்துகொள்கின்றோம்
நினைப்பு கற்பனை கிளவியாக்கல் நுதித்தல்( projections) சிந்தித்தல் உருவகித்தல் உவமித்தல் ஒப்பல் என்பன போன்ற அறிவின் எல்லா செயல்கட்கும் உதவுவது இதுதானே?
ஓர் கணினியின் வன்பொருள்போல அசுத்த மாயை, மென்பொருள் போல சுத்தமாயை. இரண்டு கலந்ததே உடலெடுத்து உயிர்த்துத் திரியும் ஓர் உயிர். தக்க வன்பொருளோடு மென்பொருள் இருந்தால் ஒளி ஒலி பதிவுகள் விளையாடும். அசுத்தமாயின் பல பொருட்களோடு சுத்த மாயையின் பலவற்றோடு இணைந்து செயல்பட்டால்தான் ஒலி ஒளி கூத்தாட்டங்கள், உணர்வின் பல ஓட்டங்கள்
உணர்வுகள் உணர்ச்சிகள் அறிவுகள் போன்றவைதான் நம்மை நாமே சிந்திக்கும்போத்து நமக்குக் கிட்டுபவை. நினைவில் இருக்கின்ற நமது கற்பனைகள் சிந்தனைகள் உருவகங்கள் அனுபவங்களின் பதிவுகள் போன்றவை எழுந்து ஓர் காணொளிபோல் அகத்தே ஓடும். நம் அகத்தே நம்மை நாம் தேடும்போது, இவைதான் நமக்கு கிட்டி ‘நான்’ என்பது இவற்றின் தொகுப்பு ஓர் ஓட்டம் என்று கூற வைக்கும். ‘நான்’ என்று சுட்டுப்படும் ஓர் தனிப்பொருள் இந்தத் தேடலில் கிட்டாதுபோக, ஆன்மா என்பது வேறொன்றும் இல்லை, இப்படிப்பட்ட அறிவுகளின் தொகுப்பே ஓட்டமே என்று கூறுவதே ‘விஞ்ஞான ஆன்மா வாதம்” போன்றவை.
ஆனால் நம் மெய்கண்டார் இதனை பிழை என்கின்றார். அதற்கு அவர் தரும் காரணம் ‘நான்’ எனும் பொருள் அன்று அன்று என இப்படிபட்ட அடையாளங்களை எல்லாம் நெதிக்கும் பண்பினது என்பதொடு அதனால் அது அஞ்செழுத்தாய் நிற்கும் ஒன்று என்றும் முடிக்கின்றார்.
எதற்காக நெதிப்பதையும் அஞ்செழுத்தாய் நிற்பதையும் மெய்கண்டார் இங்கு கொண்டு வந்து ஆன்மா என்பது இந்த சுத்தமாயையும் அல்ல தற்பரமும் அல்ல தனி என்று முடிக்க வேண்டும்?
உலகெல்லாம் பரவி கிடக்கும் புத்த சமயத்தையும் வேதாந்ததையும் மற்றும் பல புகழ்பெற்ற ஐரோப்பிய சிந்தனைகளையும் அற்பமென தூக்கிவீசும் துணிவு எப்படி மெய்கண்டாருக்கு வந்தது?
அஞ்செழுத்தைக் கொண்டு வரும் வகையில் சூக்கும பஞ்சாட்சரத்தைக் கொண்டு வருகின்றாரே? அது எப்படி உதவும்?
அடுத்த கட்டுரையில் இதன் தொடர்ச்சியைக் காண்போம்
தொடரும்
உலகன்
கட்டுரை 5: ஆன்மா சுத்தமாயை அல்ல-3
நம்முள் நாமே நம் ஆன்மாவைத் தேடித் திரியும் போது அங்கே சுத்தமாயையின் விருத்திகளாக அனுபவங்கள் பல்வேறு பதிவுகள் எண்ணங்கள் கற்பனைகள் கருத்துக்கள் போன்றவற்றையேக் கண்டு அவற்றின் தொகுப்பே அவற்றின் ஓட்டமே ஓர் ஓடைபோன்ற பிரவாகமே (stream of consciousness) இந்த ஆன்மா, அதனைத் தவிர்த்து வேறு யாதும் இல்லை என்று முடிக்க, மெய்கண்டார் அதனைத் தான் பிடித்துக்கொள்கிறார்.
இவ்வாறு இந்த உணர்வின் ஓட்டத்தைத் தவிர்த்து ஆன்மா என்ற வொன்று இல்லை என்று கூறி நிற்கின்றதே, நெதித்து நிற்கின்றதே அது யாது என்று மடக்கி அதுதான் நீ தேடித் திரியும் ஆன்மா என்று முடிக்கின்றார்.
இதுவே ‘இலது என்றலின் ஆன்மா உளது’ என்பதின் பொருள்.
இதனை எப்படி புரிந்து கொள்வது?
சிலருக்கு உடன் உபநிடதங்கள் நினைவிற்கு வரும். அங்கும் ‘அது அல்ல, அது அல்ல’ என்றவாறு நெதித்துத் தானே பிரமத்தின் உண்மை நிறுத்தப்படுகின்றது? இந்த உத்தியினால்தான் ஆனமாவும் இந்த பிரமந்தான் என்றும் முடித்துள்ளதாக இருக்கலாம்.
ஆனால் மெய்கண்டாரின் சிந்தனைப் போக்கு வேறு வகையானது. நெதிப்பது மறுப்பது ‘இலது’ என்பது ஓர் தொழில், மனத்தால் அல்லது மொழியால ஆகின்ற ஓர் தொழில், ஓர் வினை. இந்த நெதிக்கும் வினையை ஆற்ற ஓர் வினைமுதல் வேண்டும். மறுத்தல் ஓர் வினை என அதனோடு வரும் ஏனைய துணை வினைகளையும் சேர்த்தால் பஞ்ச கிருத்தியங்கள் வருகின்றன. ஆக, இவ்வாறு நெதிப்பது அஞ்செழுத்தாய் நிற்கின்ற ஒன்று என்றும் மேலும் இந்த பஞ்சகிருத்தியங்கள் சுட்டுணர்வைச் சார்ந்து வருவதின் அந்த வினைமுதல் தற்பரம் அல்ல, மாறாக அணுத்துவப்பட்டு நிற்கும் சுட்டுணர்வின் ஆன்மாவே என்று வேதாந்தப் போக்கிற்கு வேறாக சிந்தித்து அல்லது அதனை ஒட்டி இன்னும் ஆழஞ் சென்று ஓர் பெரும் புரட்சியை செய்கின்றார்.
ஆனால் இதனை எப்படி புரிந்து கொள்வது?
பழம் பெரும் தத்துவப் போக்காக விளங்கும் வேதாந்தத்திற்குப் புறம்பாக மாறாக அல்லது இன்னும் ஆழமாக எப்படி மெய்கண்டார் ஒன்றைக் கூற முடியும் என்று இந்த வேதாந்திகள் கடுஞ் சினத்தோடு எழவும் செய்யலாம். மெய்கண்டாரை கடுமையாகத் திட்டி மறுக்கவும் செய்யலாம் அல்லது புறக்கணிக்கலாம். அல்லது சிலர் செய்துள்ளதுபோல வேதாந்த மயமாக உரை எழுதி மெய்கண்டாரின் தனித் தன்மையை புரட்சியை மறுக்கலாம்
இங்கு பெரும் புலவரும் வேதாந்தியுமான வடிவேல் செட்டியார் அவர்கள் போதத்திற்கு எழுதிய உரை நினைவிற்கு வருகின்றது.
ஆயின் இங்குதான் மெய்கண்டாரின் இன்னொரு பெரும் சிந்தனைப் புரட்சியையும் மனங்கொள்ள வேண்டும்
மெய்கண்டார் ஓர் பிரமாணவாதி அல்ல-- அவருக்கு உண்மையைத் தவிர்த்து வேறொன்றும் பிரமாணம் அல்ல. அவர் சுருதி உக்தி அனுபவம் என்றவாறு சென்று சுருதிகளாக வேதங்களையும் ஆகமங்களையும் பிரமாணங்களாக கொண்டு தனது போதத்தை எழுதவில்லை.
இப்போக்கை கண்ணுடைய வள்ளலின் ‘ஒழிவில் ஒடுக்கம்’, அகோர சிவாச்சாரியாரின் அல்லது அவரது மாணவர் ஒருவரின் ‘சிவெநெறிப் பிரகாசம்’ பாம்பன் சுவாமிகளின் ‘பரிபூரணானந்த போதம்’ போன்ற நூற்களிலும் இன்னும் பல நூற்களிலும் காண்கின்றோம்
ஆனால் மெய்கண்டார் போற்றிய முறையியல் இதுவல்ல. அவர் போற்றிய முறையியல் ‘இயலிய நூன்னெறி’ யாகும். இதனை ஆங்கிலத்தில் ‘ Hermeneutic Science” என்கின்றேன்.
இந்த முறையியல் ஒன்றும் புதியதல்ல, தொல்காப்பியம் இந்த முறையியலை அகப்படுத்தியே இயங்குகின்றது.
வேதங்களிலும் இதனைக் கண்டுள்ளேன். இருக்கு வேத புருஷ சுக்தத்தில் இது இருப்பதாக எனக்குப் படுகின்றது
சொல்லதிகாரம் கடைச் சூத்திரத்தில் ‘நூனெறி’ என்று இம்முறையியல் குறிப்பிடப்படுகின்றது.
946
செய்யுள் மருங்கினும் வழக்கியம் மருங்கினும்
மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம்
பல்வேறு செய்தியின் நூனெறி பிழையாது
சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்
என்றவாறு ‘நூனெறியே’ மொழியியலின் பொருந்திய முறையியல் என்கின்றார். ஆயினும் இதுவரை ‘நூனெறி’ என்றால என்ன என்பதற்கு தக்க விளக்கம் கிடைக்கவில்லை,
எப்படி தொல்காப்பியக் காண்டிகை உரையை தமது சிவஞான போதத்தில் மீட்டெடுத்தாரோ அதேப் போல இன்னும் அடிப்படையான மெய்யறிவின் அடிப்படை முறையியலாகிய நூலிய அறிவியலை நூனெறியை மீட்டெடுக்கின்றார் மெய்கண்டார் அதே நூலில்
இது வேதத்தில் இருந்தாலும் வேதாந்த மரபில் இல்லை என்றே நினைக்கின்றேன் இருந்தாலும் அது புரிந்துகொள்ளப்படவில்லை போலும். நூனெறி வழி வேதாந்த மரபு சென்றிருந்தால் அங்கு எகாத்துவிதம் இருந்திருக்காது என்பதொடு வேதங்களைச் சார்ந்து வர்ணாசிரமும் தோன்றி இருக்காது.
இந்த முறையியலை சிறிது விளக்கப் புகுகையில் தொல்காப்பிய ‘மெய்பாட்டியல்’ போன்ற அதிகாரங்கள் உதவுகின்றன. முகத்தைக் கண்டு அகத்தின் நிலையை ஊகித்தல் போன்று ஆற்றப்படும் வினைகளையும் கிளவிகளையும் கண்டு அகத்தின் நிலையை, காதல் மயக்கம் பிரிவு அதனால் வரும் துயரம் துக்கம் ஆற்றாமை போன்றவற்றை ஊகித்து உண்மை அறியும் போது மெய்யாகும் முறையியல் தான் இந்த நூனெறி. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போன்ற இது நாம் வாழ்க்கையில் யாண்டும் பயன் படுத்தும் ஓர் முறையியல் தான்.
இவ்வாறான ஓர் முறையியல் வழியாகத்தான் மெய்கண்டார் ‘ஆன்மா இலது’ எனும் நெதிப்புக் கிளவியையே நூனெறி படுத்தி அதனை யாற்றுவது அந்த உணர்வின் ஓட்டங்களுக்கு வேறாக ஆனால் சூக்குமமாக ஆழத்தில் இருக்கும் ஓர் சித்துப் பொருள் உண்டு அதுவே ஆன்மா என்று முடிக்கின்றார்.
இந்த விளக்கம் முற்றிலும் மனநிறைவு தராது போகலாம். சற்று புதுமையாகவும் இருக்கலாம்.
வேதாந்த மரபிலும் தமிழர் தம் தொல்காப்பிய நெடிய உரை மரபிலும் குறை காணும் போது தக்க விளக்கமும் தேவை படுகின்றது. ஆக இந்த இயலிய நூனெறி பற்றியும் அது எவ்வாறு ஆன்மா அஞ்செழுத்தாய் நிற்கின்றது என்பதை உணர்ந்துகொள்ள உதவுகின்றது என்பதைப் பற்றியும் அடுத்து விளக்குவம்
தொடரும்
உலகன்
நின்னா சுபா மற்றும் திரு வினைதீர்த்தான் அவர்களே
தங்கள் கேள்விகட்கு மிக்க ந்னறி, வரவிருக்கும் கட்டுரைகளில் நிச்சயமாக ஆன்மாவைப் பற்றி பல விசாரனைகள் நடக்கும் தாங்கள் தாராளமாக பல கேள்விகளை எழுப்பலாம்
ஆன்மாவின் உணமைப் பற்றியும் இலக்கணம் பற்றியும் விரிவாக எனது அழிவில் உண்மை நூலிலும் எழுதியுள்ளேன்
நின்னா சுபா!
தாங்கள் தேடும் ஆசீவக மதம் சமண மதங்களில் ஒன்று. இதனை விளக்கியும் கண்டித்தும் அருணந்தியார் சித்தியாரில் பரபக்கத்தில் எழுதியுள்ளார்:
காண்க:
https://sites.google.com/site/meykandasastras/cittiyar-c0-jainism/c3-ajivakas
தகவலுக்கு நன்றி டாக்டர். லோகா.விளக்கியும் கண்டித்தும் சித்தியாரில் எழுதியிருந்தாலும் இம்மதத்தின் தத்துவத்தை விளக்கும் இதன் தத்துவ ஆசிரியர்களின் அல்லது தொடர்பவர்களின் ஒரிஜினல் படைப்புக்களை வாசிக்க ஆர்வமாக உள்ளேன். அது பற்றிய தகவல் அறிந்தால், பகிர்ந்து கொண்டால் உதவும்.நன்றிசுபா
கட்டுரை 6: நூலிய அறிவியல்
அறிவியல் என்றால் உடன் நம் நினைவிற்கு வருவது பல தொழில் நுட்ப வளங்களை உருவாக்க உதவும் ஐரோப்பியர்களால் போற்றப்படும் பொறிலிய அறிவியல்(positive sciences) தான். ஆனால் தொல்காப்பிய பாரம்பரியம் உணர்த்தும் நூனெறியாகிய நூலிய அறிவியலும் அது எவ்வாறு பொறிலிய அறிவியலையும் அகப்படுத்தி அறிவிற்கே விளக்கமாக நிற்பதையும் நாம் அறியாதே கிடக்கின்றோம். ஏன் தொல்காப்பியம் ஓர் அறிவியல் பனுவல் என்று ஆய்ந்தால் இதன் உண்மைப் புலப்படும். இதன் உண்மையை ஓர் எடுத்த்துக்காட்டின் வழி உணர்த்துவம்.
நற்றிணையின் முதற்பாடலாக வரும் கபிலரின் குறிஞ்சிப் பாட்டு இவ்வாறுத் தொடங்கும்:
நின்ற சொல்லர் நீடுதோறும் இனியர்
என்றும் எந்தோள் பிரிபு அறியலரே
.. . . .
எனும் இப்பாட்டு ‘தலவி கூற்று’ என்றும் குறிஞ்சித் திணையது என்றும் கற்புச் சான்றது என்றும் வெளிப்படும் மெய்ப்பாடு உவகை என்றும் உரையாசிரியர்களால் கூறப்படுகின்றது.
எவ்வாறு?
கற்பு என்றோ உவகை என்றோ எந்த வரிகளிலும் வெளிப்படையாகக் குறிக்கப்படவில்லை, பாட்டில்,வரும் கிளவிகளைக் கொண்டே அவை ஊகித்து அறியப்படுகின்றன. ஊகித்தல் இங்கேயோர் உத்தி யாகும். எப்படி?
இந்தப் பாடல் இரட்டுருவின் ஓர் நூலாக கொளப்பட்டு அதாவது வெளிப்பட்டு நிற்கும் புறவுரு என்றும் வெலீப்படாது ஆழத்தில் இருக்கும் புதையுரு என்றும் இரு உருக்களைக் கொண்ட ஓர் நூலாக கொளப்பட்டு புறவுருவின் உண்மையிலிருந்து புதையுருவின் உணமைக்குச் செல்வதே இங்கு ஊகம் எனப்படும் உத்தியாகும். ஆங்கிலத்தில் இதனை interpretation என்பர். இந்திய மரபில் ‘அனுமானம்’ என்பாரும் உளர்.
இதேப் போன்ற ஓர் முறையியலை அவாவியே மெய்கண்டார், அகத்தை ஓர் இரட்டுருவின் நூலாகக் கொண்டு அதன் புறவுருவாக ஞானசரவோட்டத்தை, உணர்வுகளின் பிரவாகத்தை சுத்த மாயா விருத்திகளை கண்டு அதன் ஆழத்தில் புதையுருவாகவும், ‘இலது’ என்று வற்புறுத்துவதாகவும் நிற்கும் பொருளே ஆன்மாவாம் என்று முடிக்கின்றார்.
இதனை என் அழிவிலுண்மை எனும் நூலில் இன்னும் திறம்பட விளக்கியுள்ளேன் அங்கு வரும் சூத்திரமே கீழே வருவது:
சூத்திரம் 25. இயலிய நூலியம்
அறிவிற் படுவதனைத்தும் ஆயவருந் நூல்
பொருளை இரட்டுருவிற் காட்டி யகத்தே
இலங்கிடு மறியாமை இருளைப் பாரிடும்
ஏதமில் லுத்திகள் எழுப்பிடு திறத்தன.
இதன் பொழிப்புரை:
இச்சூத்திரம் என் நுதலிற்றோவெனின் , அறிவுகளாக உணர்வுகளாக அனுபவிப்பதற்குக் காரணமாக நிற்கும் அனைத்தும், ஓர் நூலினைப் போல இருப்பதின், ஒற்றுமை நயத்தின் நூலெனவேப் படும் என்பதையும், அதனின் பொருளுணர்வினைப் பயப்பிக்கும் அது புறவுறு புதையுரு இருவகையுருவில் பயப்பிக்கும் என்பதையும் உணர்த்துதல் நுதலிற்று என்பதாம். மேலும் புறவுரு தெளிவாக இருக்க, புதையுருவாக நிற்பது , புதைநிலை போக்கிடுவகையில் அகத்து இருப்பதாகத் தெரியவரும் அறியாமை இருளைப் பாரிடும் வகையில் தகுந்த உத்திகள் பெய்யுமாறும் அது தூண்டியும் நிற்கும் என்பதையும் உணர்த்துதல் நுதலிற்று என்பதாம்.
இதனின் மெய்யறிவாய்வின் மூலவூக்கத்தின் தோற்றுவாயும் விளக்கப்பட்டவாறு. நூலென வொன்று வெளிப்பட்டு ஆன்மாவைக் கவ்வி நிற்க அது அறிவிலாகி அகத்துச் செறிந்திருக்கும் அறியாமைத் துன்னிருளை உணருமாறு படுத்த, அதனின் உண்மைதான் யாதென்று அறியப்புகும் ஞானவேட்கை எழும் என்பது.
விரிவான விளக்கம் கீழே வரும் முகவரியில் கிடைக்கும்:
https://sites.google.com/site/ulagansbooks/azivil-unmai-tamil-arum/e1-sutra-25
சரி ஒத்துக்கொள்கின்றோம் ஆனால ஏன் அதனை சித்துப்பொருள் என்று கூறுவதொழித்து பஞ்சகிருத்தியங்களைக் கொண்டு வரும் வகையில் அஞ்செழுத்தாய் சூக்கும பஞ்சாட்சரமாக நிற்கின்றது என்று கூறவேண்டும்?
இந்த உண்மையும் நெதிக்கும் வினையிலேயே அடங்கி கிடக்கின்றது. நெதிப்பது சங்கரித்தல் போன்றது, ஒன்று தோன்றி நிலப்பெற்று நினறால்தான் அதனை அழிக்க முடியும். இப்படி இங்கு மூவினைகள் வந்துவிட்டன. இவ்வாறு தான அல்லை என்றவாறு உலக மக்கள எண்ணத் தருவது மறைப்பு எனும் திரோதகம், அந்த மறைப்பினை நீக்கி பக்குவம் வந்தோருக்கு தானே அதனை செய்கின்றவன் என்று உணர்த்துவது அருளல்.
அதேப்போன்ற பஞ்சகிருத்தியங்கள் இங்கேயும் உண்டு.
‘இலது’ என்பது அழித்தல் போன்று ஓர் மறுத்தல்- ஒன்று தோன்றி அழியாது நின்றால்தான் அது உணர்வில் படும் பின் மறுக்கவும் படும். இங்கு மூவினைகள் வந்து விட்டன. இவ்வாறு நெதிப்பது ஆன்மா என்று அறியா வகை நிற்பது மறைப்பதாக, நெதித்து அந்த நெதிப்பின் வழி தான் உண்டு என உணர்த்துவது அருளல் ஆகின்றது. ஆக இங்கு பஞ்ச கிருத்தியங்கள் ஆகவே அஞ்செழுத்தாகிய ‘நமசிவாய’ வந்து விடுகின்றது.
ஆயினும் இன்னும் கேள்விகள் எழாமல் இல்லை,
பஞ்சகிருத்தியங்கள் இருக்க அங்கு சித்துப் பொருளாக சிவனே எல்லார் அகத்தும் இருக்கின்றான கட சூரியனைப் போல சுடர்கின்றான என்று கூறலாமே, சிவப்பரம் பொருளுக்கு வேறாக ஓர் ஆன்மா உண்டெனக் கொளவது மிகையே என்று மறுப்புக் கூறலாம.
ஆனால் இங்குள்ள பஞ்சகிருத்தியங்கள் அங்கிங்கு எனாதபடி எங்கும் நிரைந்திருக்கின்ற பரக்கிருத்தியங்களாகிய பஞ்ச கிருத்தியங்கள் அல்ல. இங்கு ஆன்மா சார்ந்திருக்கும் சுத்தமாயா விருத்தியின் பிரவாகத்திற்கு இறக்கி அதுவே ஆன்மா அதுவின்றி வேறில்லை என்பதை நெதிப்பது சுட்டுணர்வின் தொகுப்பொன்றை நெதிப்பதாகும். இங்கு உணர்வின் ஓட்டங்கள் எல்லாம் சுட்டுணர்வின் ஓட்டங்கள். ஆக அவை சுட்டுணர்வு இறந்து நிற்கின்ற பரம்பொருளாகிய சிவமாக இருக்க முடியாது.
சுட்டுணர்வுகளைத் தேற்றி அவற்றின் கோர்வையேத் தான் என்று கூறி அவற்றைத் தவிர்த்து ஆன்மா என்று வேறொன்று இலது என்று மறுத்து நிற்பது சுட்டுணர்வுகளையே தேற்றி நிற்கும் ஆகவே அணுத்துவப் பட்ட ஆனமவேத் தவிர, பரகிருத்தியங்களாகிய பஞ்சகிருத்தியங்களின் பரம்பொருள் அல்ல என்றாயிற்று.
இந்த விரிவான விளக்கத்திற்குப் பிறகு மெய்கண்டார் ஏன் ‘இலது என்றலின் சுத்த மாயைக்கு வேறாக ஆன்மா உளது’ என்று ஆன்மாவின் உண்மையை அது உடலில் இருந்து உயிர்ப்ப்தின் உண்மையை ஐயம் திரிபற தக்க நூலிய அறிவியல் முறையில் நிறுத்துகின்றார் என்பது நலமே புலனாகும் என்று நினைத்டு இதனை இத்தோடு முடித்துவிட்டு இதனை அடுத்து வரும் படிமெய்க்குச் செல்வோம்
தொடரும்
உலகன்
கட்டுரை 7: ஆன்மா உடல் அல்ல-1
இனி நாம் அடுத்த படிமெய்யுக்குச் செல்வோம். ஆன்மா சுத்த மாயையின் விருத்திகள் அல்ல, அவற்றின் தொகுப்போ சமுதாயமோ அல்ல, தற்பரமும்(பிரமமும்) அல்ல அணுத்துவப் பட்டு சுட்டுணர்வுகளாகத் தேற்றி ஆங்கு பஞ்சக்கிருத்தியங்களைச் செய்யும் வினைமுதல் ஆகவே சூக்கும பஞ்சாட்சரமாக அஞ்செழுத்தாக நிற்கின்றது என்றும் அற்புதமான ஆழ் நுழைவோடு பாரத கண்டத்திலும் பிற நாடுகளிலும் இதுவரை தோன்றாத நுட்பத்தோடு நிறுத்தியப் பிறகு இனி அடுத்து ‘இந்த பருவுடலே ஆன்மா’ எனும் தேகான்ம வாதத்திற்கு செல்கின்றார் நம் மெய்கண்டார்.
இந்த தேகம்மே ஆன்மா என்றால் ஆன்மா தனியான ஓர் அநாதிப்பொருள் உடலிற்கு வேறாயது என்பது பட்டுப்போகின்றது. இதனால் இதுவும் மறுக்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது.
மெய்கண்டார் எப்படித்தான் இதனை மறுக்கின்றார்?
இரண்டாம படிமெய்யை வேண்டிய சொற்களைப் பெய்து கீழே தருகின்றேன்
இரண்டாம் படிமெய்:
மேற்கோள்; இனி, ஆன்மா (உடலிற்கு வேறாய்) மாயா இயந்திரத் தனுவில் உளது என்றது
ஏது:
எனது
உடல்
என்றலின்
பொழிப்புரை: என்பதி என்மனை என்றாற்போல, என் கை என் காலென நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.
விளக்கம்:
ஆன்மா உலகில்
அபூர்ணமாய், அதனால்
பற்பல இச்சித்து நிற்கும் ஒன்றினதாய், அதனின்
ஒன்றினைப் பந்தித்து அதுவேத் தானாகி பற்பல
செய்யும் பண்பினதாய் வாழ, யாது யாது
தனது அல்லாது
அந்நியமாய் நிற்கின்றதோ அதனையெல்லாம் அந்த அந்நியத்தைப் போக்கும் வகையானே கிழமை
கொண்டாடி எனது
எனது என்று
தற்கிழமை உறவின்
தனை மறந்து
சார்ந்ததின் வண்ணமாய் நிற்கும். அது பொழுது
பிற உடமை
பொருட்களைப் போன்று
தன் உடம்பையும் ஒரு கிழமைப்பொருளாகவே தனதென்றும் பிறரது அல்லவென்றும் கூறுவதால், இக்கூற்றும் வேறொரு மொழியின் திரிபன்று என்பதால், உடலிற்கு வேறாக ஆன்மா உண்டென்கின்றார் மெய்கண்டார்.
ஊர் மனை போன்ற அந்ந்நியப் பொருட்களை கிழமை படுத்துவது போல, இந்த உடம்பும் அதன் உறுப்புக்களும் கிழமைப் படுத்தப்படுகின்றன.
ஆன்மா உடலாக இருந்தால் இவ்வாறு அதற்கு வேறாக அந்நியமாக நின்று கிழமைப் படுத்தாது, தனது என்று சொந்தங்கொண்டாடாது. “என் கை என் கால்’ என்றெல்லாம் சொந்தங்கங் கொண்டாடுவதால் யாது கிழமைப் படுத்தப்படுகின்றதோ அதற்கு வேறாக ஆன்மா உண்டு என்கின்றார் மெய்கண்டார்.
ஆனால் இதற்கு உடன் ஓர் மறுப்பும் வருகின்றது.
தற்கிழனைப் படுத்தும் சொற்களாக 'என் உயிர்' 'என் ஆன்மா' என்றெல்லாம் இதேப் போன்று கூறவருவதால், 'தான்' என்பது உயிரும் அல்ல, ஆன்மாவும் அல்ல என்று துணியவும் வருமென, ஆக மெய்கண்டாரின் இக்கூற்று பொருந்துவதல்ல என்றும் படும். ‘என் உடல்’ என்று வருதெல்லாம் தற்கிழமைப் போலிகள் அவை ஆன்மா வேறு என்று உணர்த்தாது என்றும் கூற வரும்
ஆனால இந்த மறுப்பில் உண்மை இருக்கின்றதா?
இல்லை என்றே படுகின்றது
இத்தகைய மொழிகள் இலக்கணத் திரிபுகளாம். "நான் நடுங்கினேன், அஞ்சினேன், வேதனைப் பட்டேன், மகிழ்ந்தேன்' என்பனபோன்ற மொழியாக்கங்களே, வேறொரு முறையில் திரிந்து "என் உயிர் நடுங்கிற்று, அஞ்சிற்று, வேதனைபட்டது, மகிழ்ந்தது' என்றெல்லாம் மொழிப்படுத்தப்படுகின்றது. இவற்றின் மூலம் மேற்கூறிய அனுபவங்களின் மொழியே; அவற்றின் திரிபே இவை, தற்கிழமைப் போலிகள்.
"என் உடல்" என்பது இப்படிப்பட்ட தற்கிழமைப் போலி அல்ல, இதுவே மூலம், வேறொரு மூலத்தைத் திரித்து இது பெறப்படுவதல்ல.
இதனால் இப்படிப்பட்ட கிளவியாக்கங்களை இன்னும் ஆழ அலசவேண்டியவர்களாக இருக்கின்றோம் மெய்கண்டாரும் இதனைத்தான் தனது எடுத்துக்காட்டில் செய்கின்றார். கிழ்மைப் படுத்துவது உணமைதான் என்றும் அத்னால அவ்வாறு தற்கிழமை படுத்தும் பொருள் அந்த கிழமையாக்கப்படும் படும் உடம்பிற்கு வேறாய் உண்டு என்றும் நிறுத்துகின்றார் நம் மெய்கண்டார்
அது எப்படி என்று நாம் அடுத்துக் காண்போம்
தொடரும்
உலகன்
கட்டுரை 8: ஆன்மா உடல் அல்ல-2
நாம் தொடர்வதற்கு முன்பு ஓர் விஷயத்தை விளக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்
ஆன்மா சுத்த மாயைக்கு வேறாக ஓர் வினைமுதலாக அணுத்துவப்பட்ட பஞ்சகிருத்தியனாக இருக்கின்றது எனும்போது, இந்த வினைமுதலாம் தன்மை மறுக்கப்பட்டால், ஆன்மா தனித்த ஒர் சித்துப் பொருள் இல்லாதாகின்றது. அதுதான் இங்கு செய்யப்படுகின்றது, தேகான்ம வாதம் தோன்றுவதற்கு காரணமாக இருக்கும் இக்கோட்பாடு இங்கு தெரித்து மொழியப்படாது ஊகித்தே அறியப்படுவதாக இருக்கின்றது.
ஆனால் எப்படி ஆன்மாவின் வினைமுதலாம் தன்மை மறுக்கப்படுகின்றது?
வினை எனும் கருத்தே மறுக்கப்பட்டு அவ்விடத்தில் வேறோர் கோட்பாடு புகுத்தப்படுவதால் ‘வினைமுதல்’ என்ற கருத்திற்கே இடம் இல்லாமல் போக உடலை வைத்தே “ அதுவேத் தான்’ என்றவாறு ஆக்கப்படும் “நான் உயரம் குட்டை, சிவப்பு கருப்பு” என்பவை துணையாக ஆன்மா இந்த உடல்தான் வேறல்ல என்ற முடிவிற்கு வருகின்றார்கள்
இங்கு உயிர் என்பது ஓர் தானியங்கியாக (automaton) கருதப்பட ஓர் நோக்கினைத் தேற்றி அதனை அடைவான் பொருட்டு ஓர் செயலைச் செய்யும் வகையில் வினைமுதலாக ஓர் உயிர் இல்லாது போகின்றது. ஆனால இது சமீப காலத்துக் கருத்தாயிற்றே மெய்கண்டார் காலத்தில் இருந்திருக்குமா என, இருந்துள்ளது உணமைதான் என்பதற்கு தக்கச் சசன்றுகள் உண்டு. நிரீச்வர சாங்கியர் இப்படிப்பட்ட ஓர் கோட்பாட்டை ஒருவாறு கொண்டிருக்கலாம. அவர்கள் பிரகிருதி மாயையை ஓர் தானியங்கியாக கொண்டிருந்தனர்
மேலும் சமீப காலத்தில் அமெரிக்காவில் பரவி வரும் ஒழுகலாற்றியல்( Behaviorism) இப்டிபட்ட ஓர் கோட்பாட்டைத் தான் வற்புறுத்துகின்றது,
ஆன்மா என்ற ஒன்றில்லை என்றும் வினை என்ற ஒன்றில்லை என்றும் தூண்டி-துளக்க பந்தங்களே உண்டு என்றும் இவையே பழக்க வழக்கங்கள் என்றும் கூறி எவ்வாறு இந்த பந்தங்கள் உருவாகின்றன என்றும் அழிக்கப்படுகின்றன என்றும் விளக்குவர். ஓர் தூண்டி(stimulus) தோன்ற அதனைக் காணும் உயிர் நெருங்கள் அகல்தல் ஓடல் நாடல் என்றவாறு பலவற்ரைச் செய்யும் நெருப்பைக் காணும்போது அகல்தல் மெய்யாகும். அதுபொழுது இவ்வாறு செய்வதால நலம் விளைய எங்கே நெருப்புக் காணப்படுகின்றதோ ஆங்கெலாம் அதனைவிட்டு அகல்தல் தானே மெய்யாகும். இதுவோர் வினை அல்ல மாறாக பழக்கத்தால் வரும் ஓர் துளக்கந்தான் (response)
இவ்வாறே அகத்தூண்டி-துளக்கங்களும். தாகம் என்பது ஓர் அகத்தூண்டி(internal stimulus), நீர் பருகl அதனை அடக்க அதுவே துளக்கமாகி மனநிறைவு தருவதின் வேண்டிய துளக்கமாக பந்தமாகின்றது.
இவ்வாறு தூண்டி-துளக்க பந்தங்களை உருவாக்கிக் கொண்டு செல்வதே கற்றல் என்றாகின்றது. ‘கற்பிதல்” அறியாமை நீக்கம் அல்ல, மாறாக இவ்வாறு பந்தப்படுத்தல் என்றே அவர்கள் கொள்கின்றனர்.
B.F. Skinner என்பாரும் இன்னும் பலரும் கிளவியாக்கத்தையும் இவ்வாறே விளக்க முற்படுவர்.
என்ன வியப்பென்றால் மெய்கண்டாருக்கு முன்பே இப்படிப்பட்ட கருத்துக்கள் தமிழ் நாட்டில் விளங்கி வந்துள்ளது என்பதை கீழ் வரும் 12-ஆம் நூற்றாண்டு ‘ஞானாமிர்தம்’ எனூம் நூல் நமக்குத் தெரிவிக்கின்றது. காண்க: வாகீசப் பண்டிதர்(12 நூற்றாண்டு) இந்நூலில் இவ்வாறு கூறுகின்றார்( அகவல் 23)
"வெருவரும் பூட்சி இருவினை வெறுப்ப
யாங்குப் பட்டதை எனினே வீங்கிய
இந்தியப் போகில் இரும்பறைத் தொழுதி
தன்மாத் திரைத்தாய்ப் பன்முறைக் கொழுத
முப்பொறி யாண்டுச் செப்புற நிறீத்
துன்பப் பண்ணை துயர்பிணி ஒரீஇ
இன்பப் பண்னை தங்கி யாங்கது
பொறியின் அல்லதைப் புணர்திரம் படாதென்
அறிவினர் ஆக்கத்து அறுதொழின் மரீஇ
முயற்சி தழீஇ இயற்றுங் காலை
............
இதன் பொழிப்பு பின்வருமாறு: துக்கவேது வாதலால் பயப்படதக்க சரீரம், புண்ணியம் பாவம் மிக உண்டாக அமைந்தது, எவ்வண்ணம் என்றுவினவின்;
இந்திரியம் என்னும் பெரிய இறகையுடைய பறவைக் கூட்டம், தன் மாத்திரைகள் என்கிற பால் பழம் போன்ற விடயங்களை தாவிப் பலமுறைசென்று கோத, அவ்வப்பொருளிலே மன வாக்குக் காயங்களைச் செப்பமாக நிறுத்தி, துன்பங்கள் மிக்கு வருவதினாலே ஆசை அறுத்து,இன்பம் கூடி வருவதினாலே ஆசை வளர்த்து, இப்படிப் பொறிகள் வழியால் அல்லது வேறு வகையில் பொருளுணர்வு உண்டாகாது என்னும்அறிவினராகி உலகியல் வாழ்க்கையே வாழ்க்கை என்றவாறு உழவே, தொழிலே, வரைவே, வாணிகமே, வித்தையே , சிற்பமென்று ஆறுகருமங்களில் பொருந்தி வாழ்வர் என்பதாம்.
இதேக் கருத்தைத்தான் "conditioning by positive and negative reinforcement" என்பார் B.F. Skinner-ம் அவரைச் சார்ந்தோரும்.
ந்நோக்கங்கள் தேறி அவற்றை அடைவான் பொருட்டு செய்யப்படும் செயல்கள் வினைகள் யாதுமில்லை,. எல்லாமே அபல்வகையான துளக்கங்கள் தான், ஆக வினைமுதல் ஒன்றில்லை என்றாக, ஆன்மா இந்த துளக்கங்கட்கெலாம் இடமாகி நிற்கின்ற இந்த தேகந்தான் வேறல்ல என்று மெய்கண்டார் காலத்திலேயே உலகாயதர்கள் சிலர் முடித்டுள்லனர் என்று தெரிகின்றது.
இதனை மறுக்கும்வகையில் ஏன் மெய்கண்டார் ‘எனது உடல் என்றலின்’ என்று கூறி ஆன்மா உடல் அல்ல என்று கூற வேண்டும்? இங்கு புதைந்து கிடக்கின்ற நுட்பங்கள் தாம யாவை?
இதனை அடுத்தக் கட்டுரையில் காண்பம்
தொடரும்
உலகன்
கட்டுரை 9: ஆன்மா உடல் அல்ல-3
நம் கேள்வி ; எனது உடல் என்பன போன்ற கிளவிகள் எவ்வாறு செயல்கள் என்பன தூண்டி-துளக்க பந்தங்கள்தாம் வேறல்ல என்பதின் மறுப்பாகின்றது?
B.F Skinner என்பார் தமது Verbal Behavior எனும் நூலில் மொழிவழிச் செய்திகள் அனைத்தும் தூண்டி-துளக்க பந்தங்களே என்று விரிவாக பல சான்றுகளோடு கூற Noam Chomsky (மொழிகட்கு மாற்றிலக்கணம் கண்டவர்) அதனை மறுத்து வாழ்க்கையில் பேசப்படும் கிளவிகளைக் காணும் போது அங்கு அளப்பரிய படைப்பாற்றல் இருக்கின்றது. ஓர் சில கிளவிகளைத் தவிற பெரும்பாலான கிளவிகள் புதுமையான ஆக்கங்களே என அங்கு தென்படும் படைப்பாற்றல் இந்த தூண்டி-துளக்க பந்தங்கட்கு எட்டாதவை என்று கூறி அந்த கூற்றினை மறுத்தார்,
ஆனால் நம் மெய்கண்டார் இந்த பந்தக் கோட்பாட்டை வேறொரு வகையில் திறம்பட மறுக்கின்றார். சைவ சித்தாந்தத்தின் மும்மல கோட்பாடு உதவுகின்றது
எப்படி?
‘எனது உடல்’ எனும் கிளவி இந்த தூண்டி-துளக்க பந்தம் என்பதற்கு அப்பாற்ப்பட்டது, அது வேறொரு வகையான கிளவி, அதன் ஆக்கம் வேறு என்று தெரித்து இந்த ஒழுகலாற்றியல் கோட்பாட்டை மறுக்கின்றார்.
இதற்கு காரணமே ‘எனது உடல்’ என்று கூறத் தருவதாக அகத்திலோ புறத்திலோ எந்த தூண்டியும் இல்லை, தாகம் எடுத்தால் நீரைத் தேடி செல்கின்றோம். பசி எடுத்தால் உணவைத் தேடிச் செல்கின்றோம், வெயிலாக இருந்தால் நிழலைத் தேடிச் செல்கின்றோம், காம வேட்கைத் தட்டினால் துணையைத் தேடிச் செல்கின்றோம். ஆனால எந்தத் தூண்டி தூண்ட ‘எனது உடல்’ என்கின்றோம்?
‘எனது உடல்’ என்று கூறி உடலை தற்கிழமைப் படுத்தும் முயறசி தூண்டி-துளக்க பந்தத்தில் விழாது. அது வேறு வகையான கிளவியாக்கம் என்கின்றார் மெய்கண்டார்.
இதன் விரிவான விளக்கம் கீழே வரும் எடுத்துக்காட்டில்:
எடுத்துகாட்டு 3.2.1
எனது
என்ற
மாட்டில் எனது அலாது என்னாது
உனது
அலாது உன் கை கால் யாக்கை -- எனதென்றும்
என்
அறிவதென்றும் உரைத்து நீ நிற்றிகான்
உன்னிலவை வேறாம் உணர்
இதன் பொருள்;
எனது
என்ற
மாட்டில்:
ஒரு பொருளை
தனது என
தற்கிழமை கொண்டாடி , தனதென
அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும், அது புதியதாக உண்டாக்கப் பட்ட கிழமை
நிலைமையென சுடுவான் பொருட்டு "எனது" என்று பொழிபடுத்தும்போது;
எனது அலாது என்னாது உனது அலாது (என்ன):
யாது இவ்வாறு
தற்கிழமைப் படுத்தப்படுகின்றதோ, அது
எனது அல்லை
என்று கூறப்படாது, "உனது
அலாது” -- உன்னுடையது அல்ல என்றே கூறப்பட்டு, பிறர் அதன்மேல் கிழமை
கொண்டாடும்
உரிமை மறுக்கப்படுகின்றது.
இதனை ஒப்பு
நோக்க, யாக்கை
யாண்டுமே கிழமை
நீக்கம் பெறக்கூடியது அல்ல என்பதின் தன்னுடலை 'என் உடல் ' என்று கூறவரும் அதேப் பொழுது, "உனது அலாது"
என்று கூறுவதில்லை.
உன்
கை கால் யாக்கை (எனதென்றும்):
இவ்வாறு உன்
கை கால்
உடம்பென்றும் என்
கை கால்
உடம்பென்றும் யாண்டும் பிரிப்பின்றிய தற்கிழமை பொருளாக
கொள்ளப்பட, ஊர்
மனை எனபன
போன்ற பிறிதின் கிழமை பொருளாக உடல்
நிற்கவில்லை. ஒவ்வொரு
ஆன்மாவின் தனி
உடமையாக , யாண்டும் பிறவோர்
ஆன்மாவின் உடமைப்
பொருளாகக் கூடியதன்றாக அது விளங்குகின்றது.
(இவ்வாறு) எனதென்றும் என் அறிவதென்றும் உரைத்து நீ நிற்றி காண்:
இவ்வாறு உடம்பொடு தற்கிழமை பாராட்டியும் பிறவற்றோடு பிறிதின் கிழமை பாராட்டியும் சார்ந்ததன் வண்ணமாய் திகழும்
ஓர் உயிராக
உடலெடுத்து வாழ்க்கையில் நீ நிற்கின்றாய், வாழ்கின்றாய் என்பதை அறிவாயாக.
அபூர்த்தியாக, நிறைவற்றக் குறைவாக நீ இருக்கவேதான், இப்படி அக்குறையையும் போக்கி
நிறைபெரும் வகையில்
பிறிதின் கிழமை
தற்கிழமை என்றவகையில் மாயாமல பந்தப்பட்டு நிற்கின்றாய் என்று தெளிக என்பதாம்.
உன்னிலவை வேறாம் உணர்:
இவ்வாறு கிழமை
பூண்டு நின்றே
அபூர்த்தியை போக்கும் பண்பிற்றாய் விளங்கும் நீ,
மாயாமல பந்தத்தால்தான் இவ்வாறு "உடலே நான்"
என்று நிற்கின்றாய்; அந்த பந்தம் நீங்க,
நீ தனித்தவோர் ஆன்மா, உடலிற்கு வேறாய்
ஆனால் மாய
யந்திரத் தனுவாகிய அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒன்று என்று உணர்வாய் என்றது.
"உன் நிலவை வேறு"
என்பது, ஆன்மாவினைப் பற்றிய மெய்யறிவு -- அது உடம்பல்ல என்று தெளிந்து உடம்பில் ஆனால் உடம்பிற்கு வேறாய்
நிற்பது என்று
அறிவதாம்.
இனி எது
எது கிழமைபாற் படுத்த முடியுமோ அதுவெல்லாம் அந்நியமாகவே இருக்கவேண்டும்; அந்நியமின்மையாயின் கிழமைப்
படுத்தி தனதாக்கிக் கொள்ளும் முனைப்பு எழாது,
உரையும் நடவாது.
' என் அறிவு ' என்ற உரைவழக்கு உண்டென, சுத்தமாயையின் திரிபாகிய அறிவும் ஆன்மா வன்று,
உடம்பினைப் போன்று
ஆன்மாவுடன் நீங்கா
நிற்பினும் அந்நியமே என்றது.
‘என் அறிவு” என்பதாலும் இவ்வாறு மொழிவதற்கு தக்க தூண்டிகள் இல்லாமற் போவதால் இதுவும் தூண்டி துளக்க பந்தத்தில் அடங்காது போய்விடுவதைக் காண்க
எல்லா உயிர்களும் எவ்வித புற அல்லது அகத் தூண்டியும் இன்றி அசித்துப் பொருட்களாகிய உடம்பையும் தன்னால் உருவாக்கப்படும் அறிவையும் கிழமை படுத்தும் திறத்தன என்பதால் “எனது உடல்’ ‘எனது அறிவு” உனது உடல்’ ‘உனது அறிவு’ என்பன போன்ற கிளவியாக்கங்கள் மெய்யாகின்றன.
இவை தூண்டி-துளக்க பந்தங்கட்கு அப்பாற்பட்டவை. ஆனால் ஏன் உயிர்கள் கிழமைப் படுத்த வேண்டும்? இவ்வியல்வு எங்கிருந்து வருகின்றது? யாதை அது உணர்த்துகின்றது?
இதனை நாம் அடுத்து விசாரிப்போம்.
தொடரும்
உலகன்
//இங்கு மாயை என்பது வேதாந்த மாயம் அல்ல- எல்லாப் பொருளிற்கும் மூலமாக இருக்கின்ற ஓர் வகைய மூலப் பொருள். இதனை குடிலை என்றும் தூமாயை என்றும் பிறவாறும் கூறுவர்.//இங்கே எனக்குப் புரியவில்லை. வேதாந்த மாயம் மற்றும் நீங்கள் சொல்லும் குடிலை என்னும் தூமாயை இரண்டையும் எவ்வாறு வேறுபடுத்துகிறீர்கள்? மாயை என்பது ஒன்றாகத் தானே இருத்தல் வேண்டும்?ஆன்மா பற்றிச் சொல்கையில் உயிரையும், ஆன்மாவையும் ஒன்றாகக் கருதுகிறீர்களோ? இதைத் தெளிவு செய்ய வேண்டுகிறேன். அத்வைதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பிரம்மம் என்பதும் பரம்பொருள் தானே?
2013/7/19 K. Loganathan <k.ula...@gmail.com>
கட்டுரை 2: மாயா இயந்திரத் தனுவில் ஆன்மா
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அன்று அன்று என நின்று அனைத்தும் விட்டு அஞ்செழுத்தாய்
நின்று ஒன்று உளது, அதுவே நீ; //இருக்கிறது எனச் சொல்வதால், சர்வமும் பிரம்மம் எனச் சொல்வதோடு இதுவும் ஒத்திருப்பதாய்த் தோன்றுகிறதே! உனக்குள் பிரம்மமும் அடக்கம் என்று தானே வேதாந்தமும் சொல்கிறது. அது தானே தனியாக ஒரு ஆன்மாவாக உடலெடுத்து வாழ்கிறது!
2013/7/20 K. Loganathan <k.ula...@gmail.com>
கட்டுரை 3: ஆன்மா சுத்தமாயை அல்ல-1
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கட்டுரை 10: வேதாந்தமா? சித்தாந்தமா? ஐரோப்பியமா?
கிளவியாக்கம் என்பதை B.F. Skinner போன்றோர் தூண்டி-துளக்க பந்தங்களே என்று கூற Noam Chomsky என்பார் அதனை கிளவியாக்கத்திற்கே உரிய படைப்பாற்றலைக் காட்டி மறுத்தார். ஆனால் நம் மெய்கண்டாரோ ‘எனது உடல்’ போன்ற உரிமை கொண்டாடும் கிளவிகளை எடுத்துக்கொண்டு இப்படிப்பட்ட கிளவிகள் தோன்றுதற்கு, ஓர் ஆன்மா இவ்வாறு மொழிவதற்கு தூண்டிகள் யாதும் இல்லை, அவற்றின் தோற்றலாறே வேறு என்று உணர்த்தி அந்தக் கூற்றை மறுக்கின்றார்.
இங்கு Pavlov எனும் உருஷிய அறிஞரின் Classical Conditioning என்படும் பந்தப் படுத்தலும் அடங்கும் ஏரக்குறைய உடன் நிகழ்வதால் பந்தப்படுதல் இங்கு- யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல.
இதுவும் மெய்கண்டாரால் இங்கு மறுக்கப்படுகின்றது
இங்கு மெய்கண்டாரின் இன்னொரு சிறப்பையும் நாம் கவனிக்க வேண்டும்
Chomsky காட்டும் படைப்பாற்றல் ஆன்மாவைப் பற்றி மேலான எந்த அறிவிற்கும் இட்டுச் செல்லவில்லை. ஆன்மா என்றொரு பொருள் அநாதியே உண்டோ இல்லையோ என்ற கேள்வி எழவே இல்லை( யான் அறிந்த வரையில்) ஓர் குழந்தையை Laguage Acquisistion Device என்று கூறி மொழித்திறனை இயற்கையாய் அமைந்த ஒன்று நரம்புகளோடி தொடர்புடையது என்றெல்லாம் கூறி, மாந்தர்களை ஓர் தானியங்கி ஆக்குவார்.
இது பொதுவாக அமெரிக்க ஐரோப்பியச் சிந்தனையாளர்களிடையே நிலவும் ஓர் போக்காகும். அசித்துப் பொருட்களாகிய மரபணுக்கள நரம்புகள் மூளையின் பலவேறு பகுப்புகள் செயற்பாடுகள உட்லைன் தானே இயங்கும் பலவகையான சுரப்பிகள் போன்றவற்றின் செயல்பாடுகட்கே இறக்குவர்.
அநாதியே சித்டுப் பொருட்களாக ஆன்மா உண்டு அதற்கு வேறாக இறைவன் உண்டு என்பதெல்லாம் அவர்கட்கு உடன்பாடு இல்லை.
இந்தப் பொதுவான போக்கைத்தான் ‘ஐரோப்பியம்’ என்கின்றோம்.
இது முப்பொருள் உண்மையின் அநாதிபொருளியலை பாராட்டும் சைவ சித்தாந்ததிற்கு முரணானது
இங்கு நம் மெய்கண்டாரின் இந்த கண்டிதம் ஆன்மாவை பற்றி பல ஆழமான உண்மைகட்கு இட்டுச் செல்கின்றது என்பதைஅயும் நாம் காணவேண்டும். ஆன்மா என்றோர் பொருள் அநாதியே உண்டென்பதொடு அது மாயா மலத்தால பந்திக்கப்பட்டும் தான் நிறைவற்ற குறையாக அபூர்த்தியாக இருக்க அந்தக் குறையைப் போக்க ஓர் பேய் போல சுத்த அசுத்த மாயைகளின் திரிபுகளாக இருக்கும் அனைத்தையும் ‘எனது , எனது’ என்று உரிமைகொண்டாடும் ஓர் சித்துப்பொருளாக திகழ்வதையும் காட்டுகின்றது.
இவ்வாறு தோன்றி நிற்கும் மாயையின் திரட்சிகளை எல்லாம் தனது தனது என்று தற்கிழமைப் படுத்திக் கொள்ள முயலவதால்தான் “எனது உடல், எனது அறிவு” என்பன போன்ற கிளவிகள் மெய்யாகின்றன.
ஆக இத்தகையக் கிளவிகள் யாதோ ஒன்றால தூண்டப்பட்டு மொழியப்படுவன அல்ல, மாறாக ஆன்மா என்றவொரு பொருளின் உரிமைகொண்டாடும் போக்கால் எழும் கிளவிகள் ஆகும்.
ஏன் இப்படி? ஏன் இந்த உரிமை கொண்டாடும் போக்கு?
முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இவ்வாறு உரிமை கொண்டாடும் சித்துப் பொருள் அனைத்தொடும் அவையேத் தானேயாய அந்நியமின்றி அத்துவிதமாய் நிற்கும் இறைவன் அல்ல. ஓர் கருப்பொருளையோ அறிவுப் பொருளையோ உரிமைகொண்டாடும் பொருள் அல்ல இறைவன். அவன் குறைவற்ற நிறைவு பரிபூரணன். அவன் பற்றற்றப் பற்றினன்
ஆக இறைவனுக்கு வேறாய் ஆனால் ஓர் சித்துப்பொருளாக தான் உயிர்க்க உதவும் உடலையும் தான் உருவாக்கும் அறிவையும் பிறவற்றையும் ‘எனது’ என்று உரிமை கொண்டாடி அதில் ஓர் நிறைவைக் காணும் ஓர் அபூர்த்திப் பொருளே ஆன்மா என்றாயிற்று
இவ்வாறு மாயா காரிய சேதன அசேதனப் பொருட்களை ‘எனது, எனது’ என்று உரிமைக் கொண்டாடி ஓர் பொய் நிறைவு காணும் ஆன்மா இதனால் மாயமலத்தால் பந்திக்கப்பட்டிருக்கின்றது என்றும் தனைக் காட்டி நிற்கின்றது
இறைவன் நிமலன் ஆனால் ஆன்மா சமலன் என்பர் சைவர்கள். ஆன்மாவைப் பற்றிய ஓர் ஆழுண்மை இங்கு இவ்வாறு வெளிப்படுகின்றது.
இந்த புரிந்துணர்வு வேதாந்த தரிசனங்கள் யாதிலும் இல்லை, அங்கு ‘மலம்’ என்ற கருத்தே இல்லை
‘மலம்’ என்ற கருத்து இல்லாத வேதாந்தத்தால் உலக வாழ்கையை ஆங்கெழும் பலவகையான உரிமைப் போராட்டங்களை விளக்க முடியாது. இப்படி நாம் வாழ்கின்ற வாழ்க்கையை விளக்க முடியாத வேதாந்ததிற்குத் தான் இன்று பிரச்சாரம் அதிகம். சைவசித்தாந்திகள் என்படுவோரும் வேதாந்திகளாகவே நடந்து கொள்வதாகத் தெரிகின்றது.
ஏன் இந்த மடமை?
மடமையா? இல்லவே இல்லை என்பர் பலர்
உலக வாழ்க்கையை விளங்கிக் கொள்ள முடியாவிட்டால பாதகம் என்ன? ஆதிசங்கரும் இராமாநுஜரும் பகவத் கீதை கிருஷ்ண பரமாத்தாமவும் குறைவான ஓர் தத்துவ விளக்கத்தையா சொல்லி இருப்பார்கள்? அவர்களை எப்படி குறை காண்பது?
இது இப்படி இருக்க ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலக் கோட்பாடு ஆங்கில்லையே? இவையின்றி வாழ்க்கையை விளக்க முடியுமா?
முடியாது என்றே நினைக்கின்றேன் ஆகவே மேலே கூறிப்போந்த வேதாந்திகளால் வாழ்க்கையை விளக்க முடியாது முப்பொருள் உண்மையைக் கூறும் சைவ சித்தாந்திகளாலதான் அது முடியும் என்று நினைக்கின்றேன்.
எப்படி?
உரிமை கொண்டாடுவதாலேயே உலகின் அடிப்படைப் போராட்டங்கள். ஓர் தரை உனது அல்ல எனது என்று கூறி உரிமைகொண்டாடும் போது சண்டை சச்சரவுகள் போர்கள் வெடிக்கின்றன.
கணவன் ஒருவன் மனைவியை அடிமை யாக்கும் போது அவள் உடம்பும் உயிரும் அவனது ஆக்கப்பட அங்கு அவளது சுயமும் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இவ்வாறு ஓர் பிரிவு மக்களை அந்நியப்படுத்தி அடிமைப்படுத்தி எல்லா உரிமைகளும் பரிக்கப்பட அவர்களும் அடக்குவோரின் உடமை ஆக்கபப்டுகின்றனர்.
இதுபோன்ற உரிமை கொண்டாட்டங்கள்தான் பலவகைய சமுதாய புரட்சிகட்கும் போர்கட்ககும் காரணமாக இருக்கின்றன.
மும்மலங்களைக் கண்ட சித்தாந்திகள் இதனை ஆன்மாக்களின் மாயா மல பந்தத்தால் வருவது, அதனை நீக்கி விட்டால் இப்படிப்பட்ட போராட்ட்ங்கள் இல்லாது போய்விடும் என்று அமைதியான வாழ்க்கைக்கு விளக்கம் தருவர்.
ஆனால் வேதாந்திகளும் ஐரோப்பியர்களும் இவ்வாறு விளக்கி தெளிவாக்க முடியாது நம்மை மடமையிலேயே வீழ்த்துகின்றனர்.
ஆனால் நாமோ நம்மை மடமையில் வீழ்த்துவோரையே பெரிதும் பாராட்டித் திரிகின்றோம்.
இது தேவையா? இந்த அவலம் தொடர வேண்டுமா? என்று இளஞர் சமுதாயத்தை கேட்டுகொண்டு இந்த இரண்டாம் படிமெய்யின் ஆய்வை ஓர் முடிவிற்குக் கொண்டு வருகின்றேன்
தொடரும்
உலகன்
கட்டுரை 11: பார்ப்பது ஆன்மாவே-1
மேலே முதல் இரண்டு படிமெய்களில், ஆன்மா என்பது சுத்தமாயையின் விருத்தியுமில்லை, அசுத்தமாயாகாரியப் பொருளாகிய இந்த சதை பிண்ட உடம்பும் அல்ல, அது தனி ஆனால மும்மலங்களால் பந்திக்கப்பட்ட ஓர் சித்துப் பொருள் என்று மெய்கண்டார் திறன்பட முடிப்பதை சற்று விளக்கினோம்
இவ்விரண்டு கூற்றுகளோடு எழக்கூடிய மறுப்புக்கள் தாம் முடிந்து விட்டனவே வேறு என்ன மறுப்பு எழக்கூடும் என்று கேட்டால், அவர்கள் தரும் இன்னொரு மறுப்பையும் கண்டு சோழர் காலத் தமிழர்களின் அறிவு நுட்பம் நம்மை திணர வைப்பதை உணர்வோம். இந்த மறுப்பையும் மறுக்கும் மெய்கண்டாரின் திறன் இன்னும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது என்பதொடு நமது மடமையால்தான் மெய்கண்டாரின் சிறப்புக்களை உணராதும் இருக்கின்றோம் என்று எண்ணவும் தருகின்றது.
மெய்கண்டாரின் சிந்தனை ஆழத்தை நம்மால் எட்ட முடியாது அவரை புறக்கணிக்கின்றோம் போலும்
வினைமுதலாக ஓர் சித்துப்பொருள் உடம்பில் இருக்கின்றது என்பதே அடிப்படையாக இருக்க இந்த வினைமுதலாம் தனமையை மறுத்துவிட்டால், அது பிழையான ஓர் கருத்து என்று சாதித்துவிட்டால் ஆன்மா என்றோ பொருள் வேதாந்திகள் கூறுவது போன்று ஓர் கற்பிதமாக ஓர் பொய் பொருளாக வீழ்ந்துவிடுமே?
மேலே வினை என்பது இல்லை, தூண்டி-துளக்க பந்தங்கள் தாம் உண்டு என்று ஓர் வகைய உலகாயதக் கூற்றை நம் மெய்கண்டார் திறம்பட மறுத்துள்ளதை மேலே கண்டோம்
இனி வினையாற்றுதற்கு மூலமாக இருப்பது ‘பார்த்தல்” எனும் செயல் தானே ? . ஒருவன் ஒன்றினைப் பார்க்கத்தானே அதனை அடைய வேண்டும் பரிக்க வேண்டும் துரத்த வேண்டும் அழிக்க வேண்டும் ஆய்ந்து அதன் நுட்பங்களை அறியவேண்டும் என்றெல்லாம் பலவகைய ஆர்வங்கள் ஆசைகள் நோக்கங்கள் நாட்டங்கள் எழுகின்றன?
இந்த ‘பார்த்தல்’ என்பதே ஓர் கற்பிதம் தான், உண்மையில் அது வேறு, ஐம்புலங்களைக் கொண்டு பொருள் விடயித்தல்தான், அறிய வருவது தன்மாத்திரைகள்( pure sense data) என்றாகிவிட்டால் ‘பார்த்தல்’ இல்லாது போக, வினைகளும் இல்லாது போக வினைமுதலும் இல்லாது போகின்றது.
இதனை மும்மொழிந்து தக்க முறையில் கண்டிப்பதே மூன்றாவது படிநிலை யாகும்
கீழே அது:
மூன்றாம் படிமெய்
மேற்கோள்: இனி, ஆன்மா (ஐம்புலன்களுக்கு வேறாய்) உளது என்றது.
ஏது: ஐம்புலன் அறிதலின்
பொழிப்பு: ஐம்புலனாகிய சத்த பரிச ரூப ரச கந்தங்களை இந்திரியங்கள் ஒன்றறிந்தது ஒன்று
அறியாமையின் இவ்வைந்தினாலும் ஐம்பயனும் அறிவது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.
இதன் பொருள்:
மொழிக்கு முதலாகிய காருகங்களை
(concepts) , அவற்றிற்கு மூலமாகிய காணுகங்களேத்
(percepts) தரும், ஐம்புலன்கள் தாமேத்
தராது; ஐம்பொறிகளின் வழி பெறப்படும் விடயங்களை
காருகங்களாக இவற்றிற்கு வேறாகிய ஓர் அறிவுப்
பொருளே உருவாக்கித் தரும் என்பதாம். ஒரு
புலன்
அறிந்ததை இன்னொரு
புலன் அறியாது.
செவியின் கேட்டு
ஓசை எனும்
காணுகத்தை அறியமுடியும், கண்
புலத்திற்குரிய காணுகங்களாகிய வண்ணத்தையும் உருவையும் அறிய
முடியாது. அண்மை
சேய்மை, மேலே
கீழே
என்பனபோன்ற தூரம்
திசை போன்ற
பண்புகளும் ஒன்றிற்கு மேற்பட்டதாகிய புலன்களுக்கு வித்தெனினும்,
ஒன்றிற்கு புலனாகிய வண்ணம் பிறிதொன்றிற்கு புலனாதல் இல்லை. ஒரேயொரு வகை
காணுகத்தை ஒரு
புலன்
தரும் , பிறவற்றைத் தரா.
ஆயினும் இவற்றையெல்லாம் தொகுத்து, ஒருங்கிணைத்து 'மரம்'
'பூனை'
'நாய்' என்றெல்லாம் மொழிபடுத்தும் வகையில் காருகவாக்கம் (concept development)
நிகழ்கின்றது. இந்த
ஐம்புலத்து விடயங்களைக் கொண்டு, வேண்டுவதைத் தேர்ந்து வேண்டாவற்றை ஒதுக்கி ஒரு
முழுசறிவினை( gestaltic perception) யாது உண்டாக்கி நிற்கின்றதோ, அதுவே இந்த
ஆன்மாவாம் என்றது.
இத்தகைய காருகங்களை தேற்றுவான் பொருட்டே ஐம்பொறிகளும் தொழிற்பட்டு தக்க
விடயங்களை ஆன்மாவிற்கு தந்து உதவு கின்றது.
இதுதாம் மெய்கண்டாரின் உட்கருத்து- கீழே எடுதுக்காட்டில் விளக்கப்படுவதுமாகும்
இங்கு சில விளக்கங்களை தந்துதான் ஆக வேண்டும்
காணுகங்கள்(concepts) என்பவைதான் ‘ஆடு மாடு மரம் மலை’ என்றெல்லாம் மொழியாக்கப்பட வரும்.
சத்தம் உருவம் உருசி நாற்றம் வண்ணம் போன்றவை தன்மாத்திரைகள் அதாவது sense data என்ப்படும் காணுகங்கள். இவை விடயங்கள், அனுபவிக்கப்படும் ஆனால் பெயர் கொடுத்து ஆடு மாடென அழைக்க முடியாது.
பெயரிட்டு அழைக்க உதவும் காருகங்கள் பார்வையால் வருவன.
இவ்வாறு செய்வதற்கு உதவாத காணுகங்களை தன்மாத்திரைகளைத் தருவது விடயித்தல் ( sensing) என்பதாகும்.
பார்த்தல் ஆகவே பார்வைகள் இல்லை விடயித்தில் ஆகவே விடயங்களாகிய தன்மாத்திரைகள் தாம் உண்டு என்றால் ஆன்மா இல்லை, மனிதன் என்பானும் பிற உயிர்களும் அகத்திலிருந்தும் புறத்திலிருந்தும் விழும் விடயங்களை பதிவு செய்யும் யந்திரங்கள் என்றவாறு யந்திரவாதம் வருகின்றது,
ஆன்மா என்றவொன்று உடம்பில் இல்லை, ஓர் உயிர்ப்பொருள் என்பது அகத்திலிருந்தும் புறத்திலிருந்தும் விழும் விடயங்களை தன்மாத்திரைகளை பதிவு செய்யும் ஓர் யந்திரம்தான் வேறல்ல என்றாகின்றது,
இதனை எப்படி அறிவியல் பூர்வமாக நம் மெய்கண்டார் மறுக்கின்றார் என்பதை அடுத்துக் காண்போம்
தொடரும்
உலகன்
கட்டுரை 12: பார்ப்பது ஆன்மாவே- 2
பார்ப்பது என்றவொன்று இல்லை, விடயித்தல் தான் இருக்கின்றது இதனை நாம் பிழையாக பார்த்தல் எனக் கொண்டு பார்க்கின்ற சித்துப் பொருளாக ஆன்மா என்றவொன்று இருப்பதாகப் பிழையாக உணர்கின்றோம் என்ற இந்த தன்மாத்திரை வாதம் எவ்வாறு தோன்றியது?
இந்திய மெய்யறிவு வரலாற்றில் இதற்கு மிகப் பழமையான ஓர் இடம் உண்டு.
ஏரணவியல் என்பது உலகிலேயே முதன் முதலில் தொல்காப்பிய மரபியலில்தான் தோன்றியுள்ளது. தொல்காப்பியத்தின் ஓர் பின்னிணைப்பாக வரும் இது தொல்காப்பியத்திற்கு முற்பட்ட அநேகமாக இடைச் சங்க நூலாக இருக்கலாம். இங்குதான் உலகிலேயே முதன் முதலில் Logic எனப்படும் ஏரணவியல் (அளவையியல்) விளக்கம் பெருகின்றது. அடிப்படையான கலைச்சொற்களாகிய ‘ஏது’ ‘எடுத்துக்காட்டு’ என்பவை இங்குதான் முதன் முதலில் தோன்றுகின்றன.
காண்க:
1602.
விட்டகல் வின்றி விரிவொடு பொருந்திச்
சுட்டிய சூத்திரம் முடித்தற் பொருட்டா
ஏது நடையினும் எடுத்துக்காட்டினும்
மேவாங்கு அமைந்த மெய்நெறித்து அதுவே
இதனைப் பற்றி எவ்வாறு இத்தகைய ஏரணவியல் சிந்தனை சுமேருத் தமிழோடு தொடர்புடையது என்பதையெல்லாம் விரிவாக பல கட்டுரைகளில் யான் விளக்கியுள்ளமையால் அதனை இங்கே விடுக்கின்றேன். ஆயினும் தமிழர்களிடையே இன்று நிலவும் தாழ்வு மனப்பான்மையைப் போக்க ஒன்றை இங்கு கூற வேண்டும்.
இந்த சூத்திரத்தை உலகளாவிய நிலையில் நோக்கினால ஐரோப்பாவில் பண்டைய கீரேக்கர்களும் காணா வகையில் உலகிலேயே முதன் முதலில் ஏரணவியல் முன்மொழியப்படுவதைக் காண்போம்.
இதே அற்புதமான மரபியலில் ‘பார்த்தல்’ என்பதைப் பற்றியும் அது எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைப் பற்றியும் எவ்வாறு சொல்லாக்கங்கள் நடைபெற வேண்டும் என்பதைப் பற்றியும் ஓர் அழகிய சூத்திரம் உண்டு. காண்க:
பல வகையான பெயர்களை விளக்கியப் பின் இச்சூத்திரம் வருகின்றது:
1589.
நிலந்தீ நீர்வளி விசும்போடு ஐந்துங்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்.
ஐம்பூத சேர்க்கையால் உருவாகி நிற்கும் சேதன அசேதன பொருட்களை உயர்திணையா அஃறினையா என்று தேர்ந்து, மேலும் ஒன்று பல என எண் வகையையும் ஆண் பெண் அலி எனும் பாலிய பேதத்தையும் தேர்ந்து மேலும் அவற்றில் இயற்கைப் பண்புகளை திரித்து பிழையாகக் காணாது உள்ளதை உள்ளவாறு கண்டு பெயர்களை உருவாக்கி அழைக்க வேண்டும் என்பதே தொல்காப்பியர் தரும் ஆணையாகும்
இங்கு குறிப்பாய் உணர்த்தப்படுவது ‘பார்த்தல்’ என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதே யாம். இருதிணை ஐம்பால பொருளியல்பு போன்றவற்றை எல்லாம் உள்ளடக்கியதாக ‘பார்வை’ இருக்க வேண்டும் என்றால் அது நிச்சயமாக ‘விடயித்தல்’ அல்ல. ஆனால் இவ்வாறான கருத்து எப்படி எங்கே தோன்றிற்று?
தொல்காப்பியர் கூறும் ஏரணவியலைத் திரித்து உண்டாக்கப்பட்ட நையாயிகம் எனும் அளவையியலில் இந்த திரிபு உண்டாகின்றது.
கௌதமரின் ‘நியாய சூத்திரம்’ எனும் வடமொழி நூலில் கீழ் வரும் சூத்திரம் வருகின்றது. இந்த நூலே அநேகமாக தமிழ் நாட்டில் எழுதப்பட்ட நூலாக இருக்கலாம. அநேகமாக சங்கம் மருவிய காலத்தில் எழுந்த நூலாகவும் இருக்கலாம்.
இங்கு அளவைகள் என்பன பிரதியட்சம் அனுமானம் உவமானம் ஆகமம் என்று கூறி பிரதியட்சத்தை இவ்வாறு விளக்குவார் கௌதமர்
4.
Indriyartha sannikarasho tappanam njaanam avyapadeshyam vyabichaar vyavasaatmakam pratyaksaM
Perception is knowledge which arises by the contact of a sense with the object/ This knowledge is indeterminate, unconnected with name and non-erratic
அதாவது ஐம்புலனகள் ஓர் பொருளோடு இணங்கும் போது உண்டாகின்ற நிருவிகற்ப உணர்வே பிரதியட்சம் என்பதாக இங்கு விளக்கப்படுவதைக் காண்க.
இப்படிப்பட்ட உணர்வினைத் தானே தன்மாத்திரை உணர்வு என்றும் அது விடயித்தலால்தான் வருவது பார்த்தலால் அல்ல என்று கூறப்படுகின்றது?
இவற்றைத் தான் மேலே மெய்கண்டார் சத்த பரிச ரூப ரச கந்தங்கள் எனும் தான்மாத்திரகள் என்கின்றார்? இங்கு ஓர் கேள்வியையும் கேட்கின்றார்.
சத்தம் எனும் தன்மாத்திரையை அறியும் செவிப்புலன் உருவம் எனும் கண்ணால அறியவரக்கூடிய தன்மாத்திரையை இது அறியுமா? இதேப் போன்றுதானே ஏனைய ஐம்பொறிகட்கும்? ஒரு பொறி அறிவதை இன்னொரு பொறி அறியாது.ஆனால் ‘ஆடு. மாடு, மலை. மரம்’ என்றெல்லாம் பெயரிடும் போது இப்படிப்பட்ட தன்மாதிரைகளையோ அல்லது அவற்றின் தொகுப்பையோ நாம் பெயரிடுவதில்லையே?
தன்மாத்திரைகளும் அவற்றின் தொகுப்பும் பெயரிடப்பட வரும் காருகங்களைத் (concepts) தராது போக, எச்செயல் இதனைத் தருகின்றது என்று வினாவ, அது இவ்வாறான ஐம்புலன்களையும் ஒருங்கே அறியும் ஒர் சித்துப் பொருளால் அமைவது என்றும் அதுவே ஆன்மா என்றும் அது பார்த்தல் எனும் தொழிலால் காருங்களைத் தேற்றி பெயரிட்டு அழைக்க உதவுகின்றது என்றாகின்றது.
இதுவே மெய்கண்டாரின் கண்டிதமும் ஆகின்றது.
ஆன்மா பார்த்தல் காணல் என்பன போன்ற தொழில்களைச் செய்யும் போது ஐம்புலன்களையும் கருவிகளாகக் கொண்டு பொருளை உற்று நோக்கி வேண்டிய தகவல்களைத் தேற்றி அவற்றில் காணப்படும் பொருளுக்கு விடாத முறையில் அதன் தற்பண்பாய் அதனின் இயல்பாய் யாவை நிற்கின்றதோ அவற்றையேத் தேர்ந்து காருகாங்களைத் தேற்ற அதன் பிறகே அதனைச் சுமந்து வரும் வகையில் ஓர் சொற்பிறக்கின்றது. ‘வாழை; எனும் போது அதன் படர்ந்த பச்சை இலைகள், மெருதுவானத் தண்டு, அதன் உள்ளே வைரமான அகம் இல்லாதிருத்தல் கீழே கிழங்கிலிருந்து அது வளர்தல் போன்றவையே அதன் அடையாளமாக திகழ்கின்றன. இப்படி அப்பொருளின் அறிவைத் தேற்றுவது ‘பார்த்தல்’ எனும் தொழில என்றும் அதனைச் செய்வது ஐம்புலன்கள் அல்ல மாறாக அவற்றினின்று வேறாகிய ஆன்மா என்றும் முடிக்கின்றார் நம் மெய்கண்டார்
இனி இவ்வாறு கூறுவதோடு எடுத்துக்காட்டில் ‘அன்றும் புலனாய அஞ்செழுத்தை’ என்று மீண்டும் சூக்கும பஞ்சாட்சரத்தையும் கொண்டு வருகின்றார்.
ஏன் என்பதை அடுத்துக் காண்போம்
தொடரும்
உலகன்
கட்டுரை 13 : பார்வையும் அஞ்செழுத்தும்-1
ஆன்மா சுத்தமாயையின் விருத்தியும அல்ல, அசுத்த மாயாகாரியமாகிய இந்த உடலும் அல்ல தற்பரமும் அல்ல ஓர் தனிப்பட்ட சித்துப்பொருள் எனும் உண்மையை நிறுத்த மெய்கண்டார் முதல் படிமெய்யின் முதல் எடுத்துக்காட்டிலேயே ஆன்மா அஞ்செழுத்தாய் நிற்கும் ஓர் அணுத்துவப்பட்ட வினைமுதல் என்று காட்டியுள்ளார்.
இப்பொழுது பார்த்தலை மையப்படுத்தி ஆன்ம உண்மையை நிறுத்தும் இந்த மூன்றாம படிமெய்யிலும் ஆன்மா அஞ்செழுத்தை அறியவருகின்றது என்று பேசுகின்றார். ஆயினும் எப்படி என்ற கேள்வி எழுகின்றது. அதனை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
கீழே வரும் எடுத்துக்காட்டில் இக்குறிப்பு மீண்டும் ஆனல் இன்னொரு வகையில் வருவதைக் காண்க
எடுத்துக்காட்டு 3.3.1
ஒன்று அறிந்தது ஒன்று அறியாதாகி உடல் மன்னி
அன்றும் புலனாய அஞ்செழுத்தை - ஒன்று அறிதல்
உள்ளதே யாகில் அது நீ; தனித் தனி கண்டு
உள்ளல் அவை ஒன்றல்லை ஓர்.
இதன் பொருள்:
ஒன்று அறிந்தது ஒன்று அறியாதாகி உடல் மன்னி:
இந்த ஐம்புலன்கள் வெளிப்பட்டு உடலில் தத்தமக்கேற்ற கருவிகளாய் -- கண் காது
மூக்கு நாக்கு
நரம்பு என்றவாறு-- உடற்கரணங்களாய் நின்று, ஒரு புலன்
வழி அறியவரும் காணுகத்தை அல்லது தன்மாத்திரையை பிறிதொரு புலன்வழி அறியாவகை பற்பல தனித்தனி காணுகங்களைத் தந்தவாறு இருக்கும்;
அன்றும் புலனாய அஞ்செழுத்தை:
இவ்வாறு காணுகங்களைத் தரும் வகையில் தொழிற்படும் அப்புலன்களை புதை நிலையிலிருந்து
தொழிற்படுத்துவது பஞ்சாக்கரங்களாகிய அஞ்செழுத்துக்களே யாம்
என்பது.
ஒரு புலனை
ஓர் விடயத்தில் அழுத்தலும், அதனோடு சிறிது
காலம் தொடக்குற்று கிடக்குமாறு
இருத்தலும், பிறகு
விட்டு நீக்கலும், அது பொழுது காணுகவறிவு உதித்தலும், அதே பொழுது
இந்த
அறிவினை தருவதும் ஆயினும் அதணை அறிவிக்காது மறைத்து நிற்பது இறைவனே
என்று உணர்த்தாது
உணர்த்துவதும் இந்த
பஞ்சகிருத்தியங்களே யாம்.
இத்தகைய தொழில்களைச் செய்யும் மந்திரங்களின்
திருநடம் ஆங்கே
நிலவவேதான் காணுகவறிவு ஐம்புலனகள் வழியாக உதிக்கின்றன.
ஒன்று அறிதல் உள்ளதே யாகில், அது நீ:
இவ்வாறு காணுகவறிவு உதிக்கும்போதே, அது உதிக்கின்ற திறத்தினை நுழைந்து ஆய்ந்து
தெளியும் ஒன்று,
ஒவ்வொவொரு காணுகம்
தோன்றும்பொழுதுங் கூட,
சூக்கும பஞ்சாக்கரத்தின்
தொழிற்பாடுகளினாலேயே அது
உதிக்கின்றது என்றும்
அறிகிறது. அது
யாதெனின், இந்த
ஐம்புலத்து
காணுகவறிவோடு உடனாயும் அதேபொழுது வேறாயும் நிற்கும் ஆன்மாவேயாம் , அந்த புலன்கள் அல்ல
என்பதாம்.
ஒரு புலத்தை
தொழிற்படுத்தி காணுகத்தை சனிப்பது சூக்கும பஞ்சகிருத்தியங்கள். காணுகங்களை
தனதாகப் பெற்று
மகிழும் ஆன்மாவே
அதுபொழுது ஆங்கு
விளையாடும் பஞ்சகிருத்தியஙகளையும் அறிகின்றது.
மேலும்,
தனித்தனி கண்டு உள்ளல் அவை, ஒன்றல்லை ஓர்:
இனி இவ்வாறு
தனித்தனியாக ஐம்புலன்கள் வழியாக உலகத்துப் பொருட்களைக் கண்டு
தனித்தனி காணுகங்கள் பலவற்றைப் பெற்று, அவற்றை
இணைத்து ஆழ
சிந்தித்து, வகுத்தும் தொகுத்தும்
காருகங்களை உருவாக்கி பெயரிட்டு மகிழ்வது, இந்த
ஐம்புலன்களில் யாதொன்றும் அல்லை;
காணுகங்களைப் பெறும்போதும், பிறகு காருகங்களாக அவற்றை
சமைக்கும் போதும்
ஐந்தொழில்களாலேயே
இவை அனைத்தும் என்று யாது அறிந்து
நிற்கின்றதோ அதுவே
இந்த ஐம்புலன்களோடுற்று அறியும்
அதே
பொழுது அவற்றிற்கு வேறாய் நிற்கும் ஆன்மாவாம் என்றது.
காணுகங்களும் காருகங்களும் தோன்றுதற்கு காரணமாய் இருப்பன
ஐந்தொழில்களாகிய திருநடமே
தவிர்த்து வேறொன்றல்ல. இந்த திருநடத்தை பொறிகள்
அறியா; யாது
அதனை அறிந்து
நிற்கின்றதோ
அதுவே அவ்வான்மா என்றது.
சிக்க்லான பல கருத்துக்கள் இங்கே விளங்க, அவற்றை சிறிது தெளிவுபடுத்த கடமைப் பட்டுள்ளோம்.
மேலே பொழிப்புரையில் மெய்கண்டாரே
பொழிப்பு: ஐம்புலனாகிய சத்த பரிச ரூப ரச கந்தங்களை இந்திரியங்கள் ஒன்றறிந்தது ஒன்று
அறியாமையின் இவ்வைந்தினாலும் ஐம்பயனும் அறிவது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.
என்று கூறியுள்ளார். ஓர் பொறி அறிந்ததை இன்னொரு பொறி அறியாது கிடக்கம். ஐந்தனையும் ஒக்க அறிந்து ஓர் பொருளை ஆடு என பூனை என அறிவது அந்த பொறிகள் அல்ல ஆனால் அதற்கு வேறாக அவற்றை தம் கருவிகளாக பயன்படுத்தும் வேறொரு சித்துப் பொருள் என்றும் அதுவே ஆன்மா என்றும் கூறுகின்றார் மெய்கண்டார் இங்கு,
இதேப் பொருள்தான் இங்கு விளங்கும் பஞ்சகிரித்தியங்களை ஆகவே ஐஞ்செழுத்தையும் உணர்வது என்றும் கூறுகின்றார்.
இதன் பொருள் என்ன? என்னதான் கூற வருகின்றார் நம் மெய்கண்டார்?
விடயிக்க அதன் வழி தன்மாத்திரைகளை சத்த பரிச ரூப ரச கந்தங்களை உணர உதுவுவன ஐம்பொறிகள் ஆனால இவை ஓர் பொருளை அதுவென சுட்டியறிய உதவாது. அதுவென் நிருவிகற்ப உணர்வாய் பின் விகற்பித்து சவிகற்ப்ப உணர்வாய் ஆடு மாடு என்றெல்லாம் அடையாளம் தெரியும் வகையில் பொருள் அறிவு தேற்றுவது இந்த புலன்கள் அல்ல ஆனால் அவற்றிற்கு வேறாக அவற்றை பயன்படுத்தும் ஆன்மாதான் என்கின்றார்.
இங்கு தான் ஆன்மா தான் காணும் பொருட்காட்சியில் பஞ்சகிரித்தியங்கள் விளையாடுகின்றன என்று உணர்கின்றது என்றும் கூறி ஆன்மாவின் இயல்பை இன்னும் தெளிவாக்குகின்றார்.
எப்படி என்பதை அடுத்துக் காண்போம். மிகவும் சிக்கலான நுட்பமான இவ் விஷயத்தை இயன்ற வரை எளிமை படுத்தி விளக்குவோம்
தொடரும்
உலகன்
கட்டுரை 14 : பார்வையும் அஞ்செழுத்தும்-2
இப்பொழுது மிகவும் சிக்கலான நுட்பமான சைவத்திற்கே உரிய சில கருத்துக்களை ஆனால் எல்லார் அகத்தும் இருப்பதை அலச விருகின்றோம். அடிப்படையில் நாம் விளக்க இருப்பது:
அன்றும் புலனாய அஞ்செழுத்தை - ஒன்று அறிதல்
உள்ளதே யாகில் அது நீ
இங்கு அஞ்செழுத்தை அதாவது பஞ்சகிருத்தியங்களை அங்கு உண்டு என்று அறிவது ஆன்மா என்பதற்கும், இங்கு முதல் படிமெய்யில் ‘இலது என்றலின், அணுத்துவப்பட்ட பஞ்சகிருத்தியனாக ஆன்மா இருக்கின்றது’ என்பதற்கும் ஓர் வேற்றுமை உண்டு.
இதனை எப்படி புரிந்துகொள்வது என்பதே எழும் கேள்வி.
விடயித்தில் அதாவது ஒவ்வொரு புலனும் காட்டும் தன்மாத்திரைகள் காணுகங்கள்( percepts, sense data) என்பவை வேறு, ‘அது’ என்றும் ‘ஆடு மாடு; என்றெல்லாம் ஓர் பொருளை அறிதலாகிய பார்த்தல் வேறு என்பதும் தெளிவு- இதில் குழப்பம் இல்லை/
இந்த பார்த்தலில் தான் உள்ளடங்கி இருப்பதாக அங்கு இறைவனின் பஞ்சகிருத்தியங்கள் இருக்கின்றன என்று உனர்வது அவ்வாறு உணர்வது புலன்களில் யாதும் அல்ல மாறாக அந்தப் புலங்களை செலுத்தும் ஆன்மா என்கின்றார் நம் மெய்கண்டார்.
பார்த்தல் வழியாக பார்வைகளை அனுபவிக்க அந்த அனுபவத்திலேயே அது இறைவனது பஞ்சகிருத்தியங்களால் ஆவது ஆகவே இறையருளால் ஆவது என்ற அறிவும் அடங்கி இருக்கின்றது அதனை அறிவதும் மகிழ்வதும் புலன்கள் அல்ல ஆன்மா என்கின்றார் நம் மெய்கண்டார்.
ஆன்மா அது அது என பொருட்களை சுட்டறிவுகளாய் பார்பப்து மாத்திரம் அல்ல, அவ்வாறு அனுபவிக்கவரும் பாரவையை இறைவனது பஞ்சகிருத்தியங்களே அருளுகின்றன என்று அறிவதும் ஆன்மாவே என்று விளக்கி அதன் வழி ஆனமாவின் உண்மையை நிறுத்துகின்றார் இங்கு நம் மெய்கண்டார்.
இது உடன் நமக்கு அப்பர் பெருமானின் “ காண்பார் ஆர் கொல் கண்ணுதல் காட்டாக்காலே’ என்ற சொல்லையும் மெய்கண்டாரின் ‘காட்டு ஒடுங்கக் காணாதே ‘என்ற சொல்லையும் இன்னும் இதுபோன்ற பல சிவஞானிகளின் சொல்லையும் நினைவிற்குக் கொண்டு வருகின்றது
காட்டு என்ற ஒன்று இருக்கத்தான் உயிர்கள் காண்கின்றன அதில் ஆன்மாக்கள் இறைவனையும் உணர்கின்றன என்பதே இங்கு வெளிப்படும் உண்மை. எப்படி இது என்று புரிந்துகொள்ள நாம் மீண்டும் மெய்கண்டார் தமது ஆய்வில் முதன்மைப்படுத்திய சுட்டறிவினை மீண்டும் கொண்டு வரவேண்டும்
விடயித்தல் தன்மாத்திரை உணர்வினைத் தேற்ற காண்டலே ‘அது’ எனும் பொருளறிவை சுட்டறிவினைத் தருகின்றது. இங்கு இதனை தொல்காப்பியர் கூறியவாறு ‘பொருளொடு புணராச் சுட்டு” அதாவது நிருவிகற்ப உணர்வு என்றும் ஆகவே எதிர்மறையாக பொருளொடு புணரும் சுட்டு அதாவது சவிகற்ப உணர்வு என்றும் பிரித்தறியலாம. ‘அது இது உது; என்று தூய சுட்டுப்பெயர் மாத்திரையானே அறியும் பொருளுணர்வு நிருவிகர்பவுணர்வு, ‘ஆடு மாடு மலை மரம்’ என்றெல்லாம் பொருளொடு புணர்ந்த முறையில் வரும் சுட்டுணர்வு சவிகற்ப உணர்வு ஆகும்.
இது எப்படி தோன்றுகின்றது, ஓர் பொருளின் இவ்வாறு இருவகைய சுட்டுணர்வுகளாய் அறிவில் எவ்வாறு உதிக்கின்றன என்ற கேள்வியை எழுப்பினால அங்கு இறைவனது பஞ்சகிருத்தியத்தால் என்ற அறிவு பிறக்கும் என்பதே மெய்கண்டார் கூற்று
எவ்வாரு?
விடயித்தல் என்பது ஐம்புலன்களில் விழுவதை எல்லாம பதிவு செய்தல் ஆகும், ஓர் காமிராப் போல. இன்றைய ஐரோப்பிய ஆய்வாளர்கள் இதனை ஒர் கணமே நிலைக்கட் கூடிய idetic memory என்பர். இவற்றில் ஒரு சிலவே தேர்ந்தெடுக்கப்பட்டு 20 நிமிடங்கள் வரை நிலைக்கும் குறுகிய நினைவு கிடங்கு ( Short Term Memory) செல்லும் என்றும் அவற்றில் இன்னும் சிலவே நீண்ட நினைவு கிடங்கு (Long Term Memory) செல்லும் என்றும் கூறுவர்.
யாது இந்த LTM செல்கின்றதோ அதுவே நிருவிகற்ப அல்லது சவிகற்ப உணர்வாகி செல்வதையும் நம்மால் உணர முடிகின்றது.
பதிவாகும் விடயங்கள் தன்மாத்திரைகள் அளவில்லாது இருக்க எப்படி அவற்றில் ஒரு சிலவே சுட்டுணர்விற்கு ஏதுவாய் அமைகின்றது? அது எனும் ஓர் பொருள் உணர்வு உண்டாகின்றது?
இந்த ஆக்கத்தில் ஓர் தேர்வு( selectional process) இருக்கின்றது என்பது தெளிவு. இது எப்படி அமைகின்றது என்பதேக் கேள்வி
‘இதைக் காண், வேறு காணாதே’ என்றவாறு அகத்தே ஓர் ஆணை இருக்கின்றது என்றும் அது ஓர் நுதிப்பு வழியாக( projection) செயல்படுகின்றது என்பதும் தெளிவு. தள்ள வேண்டியதைத் தள்ளி கொள்ள வேண்டியதைக் கொண்டு ‘அது’ என்றவோர் பொருளுணர்வினைத் தேற்றுவதே பார்த்தல் அல்லது காணல் ஆகும்
இங்கு உடன் தோற்றுவித்தல் நிலைப்பித்தல் அழித்தல் எனும் மூவினைகளும் வந்து விடுகின்றன. ஓர் பொருளை எடுத்து நிறுத்தி அது எனும் உணர்வினைத் தேறுறுவது தோற்றுவித்தல், அது உடன் அழியாது இருக்கவைத்தல் நிலைப்பித்தல், பிறகு பெயர்ந்து இன்னொரு பொருளை அது என அறியத் தருதல் அழித்தல் ஆகும்
இவ்வாறான மந்திரங்களின் செயல்பாடுகளில் அங்கு இறைவனைக் காணும் வகையில் மந்திரங்கள் விளையாடுவது மறைப்பும், அது வெளிப்பட்டு இறைவன காட்டத்தான் தான் கண்கின்றோம் என்ற உணர்வை எழுப்புவது அருளல் என்றும் ஆகின்றது.
இவ்வாறு இயல்பாக ஆங்கு நடக்கும் பஞ்சகிருத்தியங்களால், சூக்கும் பஞ்சாகரங்களின் செயல்பாட்டினால்தான் ‘அது’ என ஓர் பொருளை சுட்டியறிகின்றோம் என்ற தெளிவு பிறக்க அதுபொழுது தனது பார்த்தலில் பஞ்சகிருத்தியங்கள் உண்டென அறிவது பார்க்கின்ற ஆன்மாவே வேறல்ல என்று முடிக்கின்றார் நம் மெய்கண்டார்.
இவ்வாறு சிந்தித்து ஐம்புலன்களுக்கு வேறாக உடம்பில் ஆன்ம உண்டு என்றும் முடிக்கின்றார் அற்புதமான நுண்மாண் நுழைவின் நம் மெய்கண்டார்.
இத்தோடு மூன்றாம் படிமெய்யை இனிதே முடித்து அடுத்ததாகிய நான்காம் படிமெய்க்குச் செல்வோம்--- இன்னும் இன்னும் அற்புதமான ஞானவிருந்து அயர,
தொடரும்
உலகன்
மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்.2013/7/22 K. Loganathan <k.ula...@gmail.com>
கட்டுரை 6: நூலிய அறிவியல்
உலகன்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கட்டுரை 15 கனா மகிழும் சூக்கும தேகமே ஆன்மா ?
இதுவரை நாம் மெய்கண்டாரின் அற்புதமான மூன்றாம் சூத்திரத்தின் மூன்று படிமெய்களையே ஓரளவு அலசி அதன் அருமை பெருமைகளை உணர்ந்து வருகின்றோம். ஒன்று மட்டும் தெளிவு ---- சோழர்காலத் தமிழர்கள் இன்றையத் தமிழர்கள்போல ஏதோவோர் மயக்கத்தில் எப்படியோ வாழ்ந்தால் போதும் என்றில்லாது, ஓர் அகப்புற வீரத்தோடு வாழ்ந்தார்கள் என்று தெரிகின்றது. அவர்களது புறவீரம் பல நாடுகள் மேல் படையெடுத்துச் சென்று மாபெரும் சோழப் பேரரசை நிறுத்தியதில் விளங்கி நிற்க, அவர்களது அகவீரம் மாபெரும் மெய்யறிவுப் பனுவல்களில் வெளிப்பட்டு நிற்கின்றது. இதில் தலையாயது சிவஞானபோதமே யாகும்
யாண்டு இந்நூலிற்கு வீழ்ச்சியும் அழிவும் நெருங்கிற்றோ ஆண்டு ஓர் நல்ல சிவஞானி வந்து அதன் அருமை பெருமைகளை ஓரளவு நிறுத்தி அது அழிந்துபடாது காத்துள்ளதையும் காண்கின்றோம். இவ்வகையில் சிவஞான யோகிகளின் பணி பெரும்பணியாகும்--- சிற்றுரையும் பேருரையுமாக எழுதி பல சிவஞானிகளின் சிந்தயைக் கவர்ந்தவர் ஆவர். யான் சிவஞான போதத்தை அறிய வந்தது அன்னாரது சிவஞான பாடியத்தின் வழியே யாகும்.
இந்த பீடிகையோடு அடுத்த படிநிலைக்குச் செல்வோம்-- மெய்கண்டாரின் அற்புதமான சிந்தனை ஆழத்தை இன்னொருவகையில் கண்டு மகிழ்வோம்
ஆன்மா ஓர் தனிப் பொருள் தற்பரமும் அதாவது பிரமும் அல்ல என்பதை மறுக்க இன்னொரு வாதமும் அக்காலத்திலேயே தோன்றியுள்ளது, இது இக்காலத்தில் ஐரோப்பிய ஆழ்வுளவியல் துறையில் பெரிதும் பயில்கின்ற ஒன்றாகும்.
பாரதத்தில் உயிரின் பல்வேறு நிலைகளை அவத்தைகள் என்றும் கூறி அவற்றை சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் என்று பஞ்சாவத்தைகள் படும் என்பர். மெய்கண்டாரும் இவ்வாறு தமது நான்காம் சூத்திரத்தில் கூறுவர். காணக:
நாங்காம் சூத்திரம்:
அந்தக்கரணம் அவற்றின் ஒன்று அன்று அவை
சந்தித்தது ஆன்மாச் சகச மலத்து உணராது
அமைச்சு அரசு ஏய்ப்ப, நின்று அஞ்சு அவத்தைத்தே
விழிப்பு நிலையின் சாக்கிராவத்தைக்கு வேறாக கனவும் இன்னும் அதனைபோன்ற விஞ்ஞானகாட்சி சிவஞான காட்சி போன்றவறை அனுபவித்து பரலோக தரிசனம் செய்வதாக உடம்பில் ஓர் பொருள்- மந்திரங்களால் இயன்ற ஓர் சூக்கும தேகம் இருக்கின்றது. அதுதான் ஆன்மா என்படுவது என்றோர் வாதம எழ அதற்கு கண்டிதமும் தருகின்றார் நம் மெய்கண்டார்.
எப்படி?
சாக்கிரமாகிய விழிப்பு நிலைக்கு ஓர் தனிச் சிறப்புண்டு. வேதாந்திகள் போல கனவையும் நினைவையும் குழப்பி மயங்கித் திரிகின்றவர்கள் சித்தாந்திகள் அல்ல.
கனவின் போது நமது நினைவு அனுபவங்கள் நினைவெனத் தோன்றுவதில்லை, ஆனால நினைவு நிலையில் கனவு கண்டோம் என்றும் கண்டிலம் என்றும் நாம் நினைவுக் கூர்ந்து நிற்கின்றோம்.
இதனையே ‘ஒடுக்கம்’ அறிதல் என்கின்றார் மெய்கண்டார். கனவு அனுபவத்தையும் அது இல்லாத ஆழுறக்க அனுபவத்தையும் விழித்த பின் நினைவு கூறும் ஓர் சித்துப் பொருள் எவ்வாறு விழிப்பு தவிர்த்த பிற விஞ்ஞான அனுபவங்களளத் தரும் ஓர் மந்திரசொரூபியாக இருக்க முடியும்? என்று கேட்டு அக்கூற்றை கண்டிக்கின்றார்.
கீழே அவரது சொற்கள்:
நான்காம் படிமெய்:
மேற்கோள்; இனி ( விஞ்ஞானம் தரும் சூக்கும தேகத்திற்கு வேறாய்) மாயா யந்திரத் தனுவில் ஆன்மா உளது என்றது
ஏது: ஒடுக்கம் அறிதலின்
பொழிப்பு: நனவின்கண் கனவு கண்டாம் என்றும் கண்டிலம் என்றும் நிற்பது உளதாகலின், அதுவே அவ்வான்மாவாம் என்றது.
இங்கு ஒன்றை நாம் நினைவில் வைத்துக்கொள வேண்டும்.
சித்தர்கள் பலருக்கு விழிப்பு நிலையிலும் கனா போன்ற காட்சிகள் தோன்றும். இதனை சைவர்கள்
யோகக் காட்சிகள் என்பர். ஐம்புலன்களும்
விழிப்பு நிலையிலும் உறக்கதின் போதும் ஒடுங்கிடத்தான் கனவுகளும் அதேப் போன்று
விழிப்பு நிலையில் காட்சிகளும் தோன்றும். இவற்றை விழிக்கனவுகள் உறக்கனவுகள்
என்போம்
ஐம்புலன்களும் ஒடுங்கிக் கிடக்கும் உறக்கத்தின் போதும், இனி அதேபோன்ற சாக்கிர நிலையிலும் உளதாகுவதே உறக்கக்கனவு விழிப்புக்கனவு என்றவாறெல்லாம் பகுக்கவரும் விஞ்ஞானக்காட்சிகளாம். ஐம்புலன்களும் ஒடுங்கி செயலற்றுக் கிடக்கும் நிலையில் ஆன்மா உடலோடு இருக்க, அது பொழுது மறையாக நிற்கின்ற மந்திர சொரூபங்கள் இப்படிப்பட்ட கனவுகளாய் காட்சிகளாய் உதிக்கின்றன. இனி இவற்றை அனுபவித்து பிறகு அவ்வவத்தை நிலை போக்கி , மீட்டுணர்வு வழி(recall) கண்ட கனவுகளையும் காட்சிகளையும் மீக்கூர்வதும், அவை இல்லாது பொழுது காணவில்லை என்று துணிந்தறிவதும் நடக்கின்ற உண்மைகள் என, அத்தகைய விஞ்ஞானக் காட்சிகளையும் கண்டனுபவிப்பதாய் பிறகு நினைத்து மீக்கூர்வதாய் யாது உளதோ அதுவே ஆன்மாவாம் என்கின்றார் நம் ஆசிரியர். விஞ்ஞானக் காட்சிகளை ஐம்புலன்களும் அந்தகரணங்களும் தரவில்லை யாயினும் சிவகரணங்களாக அவை மலர்ந்து மேலான இவ்வனுபூதிகளைத் தரும் என்றவாறு.
இவ்விளக்கம் இத்தோடு நிற்கவில்லை, இன்னும் ஆழஞ் செல்கின்றது. எவ்வாறு என்பதை அடுத்துக் காண்போம்
தொடரும்
உலகன்
அப்படி எல்லாம் இல்லை ஐயா, மத்தவங்களை விடவும் என் புரிதல் கொஞ்சம் குறைவே. அதனால் சொன்னேன். ஆனாலும் விடாமல் படித்து வருகிறேன். ஐயங்கள் எழும்போது கட்டாயம் கேட்பேன். மிக்க நன்றி. வணக்கம்.
2013/8/4 K. Loganathan <k.ula...@gmail.com>
நின்னா கீதா அவர்களேமீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தங்களையும் இன்னும் பலரையும் தள்ளி விட்டேன் போலும். எவ்வளவுதான் எளிமையாக எழுத முயன்றாலும், அதற்கும் ஓர் எல்லை உண்டு போலும். ஆயினும் இந்த முயற்சி வெற்றி அடையும்போது கிடைததற் கரிய அற்புத ஞான நுழைவுகளை ஈட்டித் தரும். அது வாழ்க்கையையே விளக்கி பேரானந்தத்தைத் தரும்.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கட்டுரை 16: யான் என்பது கனா வுணர்வுதானா?
மெய்கண்டாரின் அற்புதமான கனா அலசல் போன்ற ஆழ்வுளவியல் ஆய்வுகளை தொடர்ந்து அலசும் முன், எப்படி ஆன்ம மறுப்புக் கொள்கையர் கனவு உணர்வின் அடிப்படையில் அதனை முன்வைக்க வந்தனர் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். யார் இந்த கோட்பாட்டை முன் வைத்தார்கள் என்று தெரியவில்லை, ஆயினும் யாண்டு யோகக் கலை தோன்றிற்றோ ஆண்டே சாக்கிரம் சொப்பனம் போன்ற அவத்தைகளின் ஆய்வும் தொடங்கிவிட்டது. சுமேரிய கோயில் வழிபாட்டு முறைகளைக் காண யோக பயிற்சிகளும் கோயில் வழிபாட்டின் ஓர் அங்கமாக இருந்திருப்பதைக் காண்கின்றோம். ஆகமங்களில் சரியை கிரியை யோகம் ஞானம் என்ற பகுப்பும் அநேகமாக எல்லா ஆகமங்களிலும் காணவரும் ஒன்றாகும். தமிழில் இன்று நமக்கு கிடைக்கும் நூல்களில் சிவயோகமும் இந்த பலவேறு அவத்தைகளும் மிக விரிவாக அலசப்படும் நூல் திருமூலரின் திருமந்திரமே யாகும். பலர் முயன்றாலும் ஆங்கு விளங்கும் பழம் பாடல்களை புரிந்து கொளவதில் இன்னும் பல சிக்கலகள் உண்டு.
எப்படி கனாவுணர்வினை வைத்து ஆன்ம மறுப்புத் தோன்றிற்று?
மேலே தன்மாத்திரைத் தரும் ஐம்புல நுகர்வே அவற்றின் ஓட்டமே ஆன்மா எனும் உணர்வைத் தருகின்றது என்று ஒரு சாரார் கூற அதனை மறுக்கும் வகையானே இவ்வாறு புலனுகர்வுகள் வேறு பார்த்தல் வேறு என்றும் ஓர் பொருளை நிருவிகற்ப சவிகற்ப உணர்விற்றாய் காண்பதே ஆன்மா, இவ்வாறு காண்பது தன்மாத்திரை நுகர்வு அல்ல என்று விளக்கப்பட்டது.
உடன் ஆன்ம மறுப்பாளர் அறிவில் இன்னொரு மறுப்பும் உதித்திருக்க வேண்டும்.
காண்பது பார்ப்பது நோக்குவது போன்றவை விழிப்பு நிலையாகிய சாக்கிரத்திற்கும் சொப்பன நிலையாகிய கனா அனுபவத்திற்கும் பொதுவாகிற்றே? கனா காணும் போது ‘யான்’ எனும் ஆன்ம வுணர்வு இல்லாது போக சாக்கிரத்தில்தான் அவ்வாறு இருக்க, இந்த ‘யான்’ எனும் ஆன்மவுணர்வு, விழிப்பு நிலையில் கனாபோன்ற உணர்வு உருவாக்கங்கள் வழியாக ஏன் எழக்கூடாது?
இன்னொரு வகையில் இதனை விளக்கலாம்.
கனா காணும் போது யாரும் கனவு கண்டுகொண்டிருக்கின்றேன் என்று அந்த கனவின் ஊடே கூறுவதில்லை. அப்படிக் கூறினால் அது விழிப்பு நிலையாகிவிடுகின்றது. விழிப்பு நிலையில்தான் ‘நான் காண்கின்றேன், கண்டேன், கண்டுகொண்டிருக்கின்றேனெ; என்றெல்லாம் காணும் அனுபவத்தோடு தான் காண்பதையும் உடன் தெரிவிக்க முடிகின்றது.
ஆயினும் இரண்டிற்கும் பொதுவாக இருப்பது காணுதல் என்பதின், இந்த காணுதலைத் தரும் கனவு தொழிற்சாலை ஒன்று எல்லா நேரத்திலும் செயல்பட்டு சொப்பன அவத்தையில் கனவுகளைத் தர, விழிப்பு நிலையில் காண்டலைத் தர, அதே பொழுது ‘யான்’ எனும் ஆன்மவுணர்வினையும் உறபவிக்கலாமே?
கனவு தொழற்சாலைகள் பல உடம்பில் உண்டு. உறக்கத்தின்போது கனவுகளை உற்பவித்து கனா அனுபவங்களைத் தர, விழித்திருக்கும் போது காண்பதை உற்பவிக்கும் அதே பொழுது ‘யான காண்கின்றேன்’ என்ற ஆன்மவுணர்வையும் உற்பவிக்கலாமே?
இது பொருந்துவதெனில், ‘யான்’ எனும் ஆன்மவுணர்வும் கனா அனுபவம் போல அகத்தே உற்பவிக்கப்படும் ஓர் உணர்வுதானேத் தவிர ஓர் மெய்ப்பொருள் உண்டெனும் உணர்வு அல்ல, ஆன்மா என்றொரு பொருள் இல்லை என்றாகின்றது.
எவ்வாறு சாக்கிரம் சொப்பனம் போன்றவை ஓர் கனாத் தொழிற்சாலை உறபவங்களோ அதேப் போன்றுதான் ‘யான்’ எனும் ஆன்ம வுணர்வும். அதுவோர் கனவு போன்று ஓர் உறபவ உணர்வு, பொருள் உணர்வு அல்ல.
இதனை மறுக்க எழுந்ததே மெய்கண்டாரின் ‘ஒடுக்கம் அறிதலின்’ என்ற கருத்துரை
உறக்கத்தின் போது கனவு இல்லாத நிலையும் உண்டு. எவ்வித பொருளுணர்வும் இன்றி காட்சியனுபவமும் இன்றி ஒடுங்கிய நிலையில் ஆழ் உறக்கமும் சம்பவிக்கின்றது. விழித்து எழுந்ததும் அந்த அனுபவத்தை மீட்டு, ‘கனவு கண்டிலம்’ என்று ஒடுக்கம் அறிதலின், இவ்வாறு கனவுத் தொழிற்சாலை மூடப்பட்ட நிலையில், கனவுகள் யாதும் இல்லாத நிலையில் யார் அதனையும் உணர்ந்து ‘கனவு கண்டிலம்’ என்று கூறுவது என்ற கேள்வியைக் கேட்டு நம் மெய்கண்டார் அதுதான் ஆன்மா எனும் தனிப்பொருள் என்று முடிக்கின்றார்.
கனா நிலையையும் அது இல்லாத நிலையையும் இரண்டு அவத்தைகளையும் உணர்வதாய் ‘யான்’ எனும் ஆன்மா இருக்க, அது எப்படி கனா தொழிற்சாலையின் உற்பவமாக இருக்க முடியும்?
முடியாது என்று தன் நுணமாண் நுழைபுல சிறப்பால் கண்டிக்கும் மெய்கண்டார் இதனை இன்னும் ஆழமாக ஓர் எடுதுக்காட்டின் வழியும் விளக்கி யருளுகின்றார்.
இதனை அடுத்து நாம் காண்போம்
‘
தொடரும்
உலகன்
கட்டுரை 17 கனாவும் மந்திரவுடலும்
இப்பொழுது கனவு போன்ற அவத்தைகளைப் பற்றிய ஆய்விற்கு வருகின்றோம். ஆன்மா பஞ்சாவவத்திதன் என்றே ஆன்மாவை உணர்கின்றார் மெய்கண்டார். யோகக் கலைப் பயிற்சியில் பண்டே (சுமேரிய சிந்து வெளி நாகரீக காலத்திலிருந்தே) ஈடுபட்டுள்ள தம்ழ் மக்கள் விழிப்பு நிலைக்கு அப்பாற்பட்ட அவத்தைகளை விரிவாக ஆராயாது விட்டிருக்க மாட்டார்கள். அவற்றை எல்லாம் தொகுத்து திருமூலர் நமக்கு தமது திருமந்திரத்தில் சிறப்பாக விளக்கியுள்ளார். நமக்குத்தான அவற்றை புரிந்துகொள்ள எளிதாக இல்லை,
மேலே விழிப்பு நிலையில் கற்பனை போன்ற பல கனா அனுபவத்திற்கு ஒப்ப பல அவத்தைகளை மந்திரங்களால் இயங்கும் கனா தொழிற்சாலை உற்பவிக்கலாம் ஆனால் கனா போன்ற எவ்வித பொருளுணர்வும் அற்ற ஒடுக்க நிலையையும் விழிப்பு நிலையில் ஒடுங்கி கிடந்தேன் என்று யாது அறிகின்றதோ அதுவே ஆன்மா என்று கூறி ‘யான்’ எனும் யான்மைவுணர்வு கனாத் தொழிற்சாலை உற்பவிக்கும் ஒன்றல்ல என்று நிறுத்தி அதனை இன்னும் விளக்கப் புகுகின்றார் நம் மெய்கண்டார் ஓர் எடுதுக்காட்டின் வழியாக
எடுத்துக்காட்டு 3.4.1
அவ்வுடலின் நின்று உயிர்ப்ப, வைம்பொறிகள் தாம் கிடப்பச்
செவ்விதின் அவ்வுடலில் சென்று அடங்கி -- அவ்வுடலில்
வேறொன்று கொண்டு விளையாடி மீண்டு அதனை
மாறல் உடல் நீ யல்லை மற்று
இதன் பொருள்:
அவ்வுடலின் நின்று உயிர்ப்ப:
இப்படிப்பட்ட பராவத்தைகள் போது ஆன்மா உடலைவிட்டு நிங்காதே, அவ்வுடலிலேயே நின்று உயிர்ப்பதாகிய உட்சுவாசம் நிட்சுவாசம் போன்றவற்றை செய்துகொண்டு உயிரியாய், இறந்து போகாத ஓர் சீவியாய் கிடக்க;
ஐம்பொறிகள் தாம் கிடப்ப:
சாக்கிர நிலையில் தொழிற்பட்டு பற்பல காணுகங்களையும் பிறகு அவற்றினின்று எழும் காருகங்களையும் தந்து மகிழ்ந்த ஐம்பொறிகள் இப்பொழுது கழன்று செயல் படாது வாளே கிடக்க;
(ஆன்மா) செவ்விதின் அவ்வுடலில் சென்று அடங்கி:
ஆன்மாவனது புறக்கரணங்கள் கொண்டு பற்பல மனோகிரியைகள் புரிவதும், பிறகு அவற்றை பலவாறு சிந்தித்து தெளிவு பெறுவதும் மேலும் கற்பனை செய்தல் போன்ற எல்லா வினைகளிலிருந்தும் கழன்று, காண்டலும் சிந்தித்தலும் நினைத்தலும் கருதலும் போன்று யாதொன்றும் செய்யாதே ஒடுங்கிக் கிடக்க;
அவ்வுடலில் வேறொன்று கொண்டு விளையாடி:
அப்படி ஒடுங்கிக் கிடக்கும் பொழுது தூலப்பொருட்களாகிய இவற்றோடு தொடர்பு அற்ற அதன் காரணத்தால், இதுவரை எட்டாது மறையாகவே அவ்வுடலில் நின்று அதனைப் பல்வகையில் ஆன்மாக்கள் அறியாதே தொழிற்படுத்தும் மந்திரவுலகம் புகுந்து, மந்திரவுடற் கொண்டு அவ்வுலகில் பலவகையில் திரிந்து காணாததைக் கண்டு;
மீண்டும் அதனை மாறல்:
பிறகு விழிக்கும்போது, மீண்டும் உடல் தொடக்கும் ஐம்புலத் தொடக்கும் வந்தடைய, எடுத்திருந்த மந்திரத் திருமேனி விட்டு, இப்பருவுடலோடு கூடி நின்று உலகத்து நிகழ்ச்சிகளைக் கண்டும் செயல்பட்டும் முன்புபோல் மாறுவதின் காரணமாக;
(அவ்) உடல் நீ யல்லை, மற்று
கனவும் மேலும் அதுபோன்ற அனுபவங்களும் பெறற்கு ஏதுவாய் எடுத்து நின்ற மந்திரவுடல், இவ்வாறு கழன்று மீண்டும் பருவுடலோடு ஒன்றித்து நிற்கும் காரணத்தால், அந்த சூக்கும தேகமும் நீயல்லை; அதனின்று வேறாகிய ஆன்மாவாம் என்று அறிதற் பாற்று.
ஒடுக்கம் அறியும் ஆன்மா மந்திரவுடல் மலைந்து கனா போன்ற அனுபவங்களைப் பெற்றாலும் ‘யான்’ எனும் ஆன்மவுணர்வு அந்த மந்திரவுடல் உறபவிக்கும் ஒன்றல்ல என்பதே இங்கு வற்புறுத்தப் படும் உண்மையாகும். ஆன்மா உடலோடு ஒட்டியும் இருக்கும், கழன்ற மந்திரவுடலோடு கூடி பல கனவுகளைக் கண்டு மகிழவும் செய்யும் பிறகு மீண்டும் உடம்போடு கூடி நின்று சாக்கிர அனுபவங்களை நுகாவும் செய்யும். ஆக கனாத் தொழிற்சாலையின் ஓர் உறபத்தி அல்ல ‘யான்’ எனும் உணர்வு என்றும் அது தனிப்பட்ட ஓர் பொருள் உணர்வு என்றும் முடிக்கின்றார் நம் மெய்கண்டார்.
இக்கருத்திற்கு இன்று ஐரோபிய உளவியல் அறிந்தோரிடையே ஓர் மறுப்பும் எழக்கூடும். அந்த மந்திரவுடல் ஓர் தெய்வமேயாக (archetype) ஆன்மாக திகழ்வது ஓர் தெய்வமே அல்லது இறைவனின் ஓர் மூர்த்தமே என்றும் கூற வருமே?
ஆன்மா என்ற ஓர் தனிப் பொருள் இல்லை என்றாகுமே? மீண்டும் பரப்பிரமமே அல்லது அதுபோன்ற ஓர் பரம்பொருள் மந்திரவுடல் எடுத்து ஆன்மாவாகத் திரிகின்றது என்றெல்லாம் கூற வருமே?
இக்கேள்விகள் நம்மை பல ஆழமான அலசலுக்கு இட்டுச் சென்று சோழர் காலத் தமிழர்களின் சிந்தனை ஆழத்தை நமக்கு அறியத் தரும். எப்படி என்பதை அடுத்டுக் காண்போம்
தொடரும்
உலகன்
கட்டுரை 18 இறைவனே ஆன்மாவா?
இந்தக் கருத்து பாரத ஞானிகளிடையே பல்வேறு வடிவங்களில் வந்துகொண்டே இருக்கும் ஒன்று, இன்று கூட பல தமிழ் சித்தர்கள் ‘யானே இறைவன்’ என்றவாறு சொல்லி பல சித்துவிளையாட்டுகளை விளையாடி அதனை வற்புறுத்துகின்றனர்.
இக்கருத்து மெய்கண்டார் வாக்கை ஒட்டி (பிழையாக) எழவும் செய்யலாம்.
மெய்கண்டார் மேலே ‘ஒடுக்கம் அறிதலின்’ ஆன்மா கனவுத் தொழிற்சாலையின் உற்பவமல்ல, கனவினைக் காண்பது விழிப்பு நிலையில் கனவு காணாதே கிடந்தோம் என்று உணர்வதும் தனியொரு ஆன்மா என்றும், கனவு அனுபவம் என்பது உடம்பில் வேறொன்றாக இருக்கும் மந்திரவுடல் மலைந்து கன்வு போன்ற அவத்தைகளை அனுபவிப்பதும் பிறகு கழன்று பருவுடலோடு ஒன்றித்து கனா காணாது விடுவதுமாக ஆன்ம அவத்தையுறும் என்று கூறியும் செல்கின்றார்.
இங்கு கனா அனுபவம் என்றால் என்ன என்பதற்கு ஓர் விளக்கம் கிடைக்கின்றது. நம் உடலில் மந்திரவுடலும் இருக்கின்றது, ஆழ் உறக்கத்தின் போது ஆன்மா பருவுடலை விட்டு நீங்கி இந்த மந்திரவுடலோடு ஒன்றித்து நிற்க கனா அனுபவம் மெய்யாகின்றது, அதனை விட்டு நீங்க அது இல்லாது போகின்றது என்பதே இங்கு தெளிவாகும் ஓர் கூற்று ஆகும்,
இது Freud என்பாரும் அவரைச் சார்ந்தோரும் கூறும் கனா தெரியத்தோடு( Dream Theory) முரண்படுகின்றது. ப்ராய்ட் அகத்தே பல அருவறுக்கத் தக்க தகா காம எண்ணங்கள் போன்றவை தோன்ற அவை நினைவிலிருந்து தள்ளப்பட்டு புதைக்கப்பட, அவை புதைவுற்று ஆழ்வுள்ளம் பதிய, உறக்கத்தின் போது எல்லா தடைகளையும் மீறி கனவுகளாக உணர்வில் படுகின்றன என்பார். இங்கு புதையுணர்வு அல்லது Unconscious எனும் கருத்துத் தோன்றி மனோ மருத்துவத்திற்கும் ஏற்புடைத்தாகி நிற்கின்றது. இத்தகைய புதையுணர்வுகளே மனோவியாதிகளின் மூலமாகத் திகழ்கின்றனவாம். அவற்றை அகற்றி விட்டால் மனோவியாகிகள் குணமாகிவிடுமாம்.
ஆயினும் பலரால் இது மறுக்கவும் படுகின்றது. பண்டைக் காலத்திலிருந்தே கனவுகள் பல எதிர்காலத்தை அறியத் தருவன, பின் நிகழவிருப்பதை முன்கூட்டியே அறியத் தருவனவாகும். இதனால் புதையுணர்வின் வெளிப்பாடே எல்லாக் கனவுகளும் என்பது பொருந்தாத ஒன்றாகின்றது,
மெய்கண்டாரும் கனவுகள் முன்னறிவிப்புத் தருவன என்றே கூறுவதாகத் தெரிகின்றது. முதல் சூத்திரம் இரண்டாம் படிமெய் எடுத்துக்காட்டு ஒன்றில்: ‘கண்ட நனவு உணர்வில் கண்ட கனவு உணர’ வரும் நிலை உண்டு எனும் போது, கனவில் கண்டவொன்று மெய்யாக விழிப்பு நிலையில் அனுபவிக்கவரும் இடம் உண்டு என்றுதானே கூறுகின்றார்?
இது Jung என்பார் Freud-இன் சீடர் என்றாலும் கனாக்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதற்கு வேறொரு விளக்கம் தர அது மெய்கண்டார் தரும் விளக்கத்தோடு ஒருவாறு ஒத்து வருவதைக் காண்கின்றோம்
எப்படி?
கனாக்களைத் தரும் மந்திரவுடல் என்பது உண்மையில் தெய்வ வடிவங்களே, மூர்த்திகளே ( archetypes, Imago Dei etc). இவற்றின் மூலம் இறைவன் என்று நாம் கூற Jung அவர்கள் Collective Uncoscious அதாவது மூலப் பொது புதையுரு என்பர். இறைவன் என்று கூறினாலும் தவறாகாது. ஆக இறைவனே பல மூர்த்தங்களை மந்திரத் திருமேனிகளாக சேடித்து இரவில் உறங்கும்போது ஆன்மாக்களை ஆட்கொண்டு கனா அனுபவங்களைத் தர அது பொழுது எதிர்காலத்தில் நடக்க இருப்பதையும் ஒருவாறு உணர்த்தியருளவும் செய்வன். விழிப்பு நிலையிலும் இதே மூர்த்தங்கள் நனவு அனுபவங்கலையும் ஆங்கு பல கற்பனா அவத்தைகளும் சேடித்து பல்வேறு காட்சிகளை மெய்யாக்குவன். அதுபொழுது ‘யான” எனும் ஆன்மவுணர்வினையும் சேடிக்க அதனால் ஆன்மா ஓர் தனிப்பொருள் என்று பிழையாக ஓர் உணர்வும் தோன்றலாம அல்லவா?
ஆன்மா என்று ஓர் தனிப் பொருள் இல்லை, இறைவனே ஓர் மூர்த்தமாக வெளிப்பட்டு இப்படிப்பட்ட ஓர் உணர்வினை எழுப்புகின்றான், உண்மையில் ஆன்மா என்றொரு பொருள் இல்லை, இறைவனே அவ்வாறு ஆடுகின்றான், உண்மையைல் ஆன்மா என்பது இறைவனே என்றும் முடிக்கலாம் அல்லவா?
இவ்வாறுதான் பல வேதாந்திகளும் சித்தர்களும் முடித்து “யான் இறைவன்’ என்பர்.
இது உண்மையாகுமா? இல்லை எனும் கண்டிதத்தை அடுத்து காண்போம்
தொடரும்
உலகன்
கட்டுரை 19: ஆன்மா இறைவன் அல்ல, தனி!
மேலே மந்திரவுடல் எடுத்து சிவன் திருமால் பிரம்மா உமை துர்க்கை என்றெல்லாம் பல மூர்த்தங்களாக வெளிப்பட்டு கனா அனுபவங்களையும் அதனோடு ஒப்பத் தகுந்த ஏனைய அவத்தைகளையும் விழிப்பு அனுபவங்களையும் அருளி அவற்றின் ‘யான்’ எனும் ஆன்மவுணர்வும் எழும்வகை விளையாடுகின்றான எனும் போது ஆன்மா என்பது இறைவனே அவ்வாறு தோன்றி விளையாடுவதாக ஆகின்றத. ஆக ‘யான்’ எனும் உணர்வு கனா அனுபவம் போல ஓர் சேடிப்பே தவிற ஓர் தனிப் பொருள் உணர்வு அன்றாகின்றது.
இது உண்மையா? அப்படி இல்லை ஆன்மா ஓர் தனிப் பொருள் என்பதுதான் உண்மை என்றால எப்படி இக்கூற்றைக் கண்டிப்பது?
இங்கு கனா அனுபவத்தையே அல்சி அதன் சில கூறுகளை வெளிப்படுத்தி இக்கூற்றை கண்டிக்கலாம்
இந்த கண்டிதத்தில் இரண்டு கூறுகள் அடங்கியுள்ளன.
ஒன்று இறைவனுக்குக் காலவுணர்வு இல்லாத நிலையில் கனா அனுபவிக்கும்போது ஆன்மா காலவுணர்வோடு திகழ்வது
இரண்டாவது மெய்கண்டார் பகரும் உண்டி வினை அதாவது பல்வேறு உணர்ச்சிகள், இவை இறைவனுக்கு இல்லை ஆனால் கனா அனுபவத்தில் பெரிதும் இருக்க, அங்கு ஆன்மாவே கனா காணும் சித்துப் பொருளாக இருக்கின்றது என்றாகும்.
இதனை சற்று விரிவாக விளக்க முயல்வோம்
மெய்கண்டாரின் கிழ்வரும் வெண்பாவை நினைவு கூர்தல் உதவும்.
எடுத்துக்காட்டு 1.4
நோக்காது நோக்கி நொடித்து அன்றே காலத்தில்
தாக்காது நின்று உளத்தில் கண்டு இறைவன் -- ஆக்காதே
கண்ட நனவு உணர்வில் கண்ட கனவு உணரக்
கண்டவனின் இற்று; இன்றாங் கட்டு
இங்கு இறைவனுக்கு நோக்காது நோக்கலே உண்டென சுட்டுப்பார்வை இல்லை என்றும் அதனால காலவுணர்வு இல்லை என்றும் ஆகின்றது. அனைத்தொடும் அந்நியமின்றி அவையே தானாய் நிற்கும் இறைவனுக்கு சுட்டுணர்வு இல்லை ஆகவே காலவுணர்வும் இல்லை,
இவ்வாறு இருக்கையில் எவ்வாறு ஆன்மா என்பது இறைவனால உற்பவிகப்பட்ட ஓர் உணர்வாக இருக்க முடியும், விழிப்பு நிலையில் ஒன்றினை எதிர்ப்பார்த்து அதனைக் கருதி நிற்கும் போதும் குறிப்புக்கால உணர்வு வர, அதனால் ‘இப்பொழுது, இதோ பிறகு, முன்னம், நடந்தது நடந்துகொண்டிருக்கின்றது’ என்றெல்லாம் சுட்டுக்கால வுணர்வு அனுபவப் பொருளாகின்றதே?
மேலும் கனவின் போது ‘யான்’ எனும் ஆன்மவுணர்வு ஒடுங்கி கிடந்தாலும் குறிப்புக் கால உணர்வு உண்டு. காட்டாக ஓர் கனவின் மாபெரும் மலைப்பாம்பு ஒன்று ஓர் இளம்பெண்ணை விரட்ட, கனவு காண்பான் அடுத்து என்னவாகும்? அதன் பின் என்னவாகும்? அந்தப் பெண் தப்பிப்பாளா? இல்லை பாம்பால் விழுங்கப்படுவாளா? என்றெல்லாம் நினைத்து கனவினைக் கண்டுகொண்டிருப்பான. இங்கு அடுத்து என்ன? அடுத்து என்ன ? என்பது எதிர்கால உணர்வினதாக அது குறிப்புக்காலவுணர்வு ஆகும்.
இங்கு குறிப்புக்கால உணர்வு ( Intentional Time) என்பது ஒன்றினைக் குறித்து அல்லது எதிர்ப்பார்த்து நிற்பதால் வரும் காலவுணர்வு ஆகும்
இறைவனுக்கு காலவுணர்வு இல்லாது போது, இவ்வாறு விழிப்பு நிலையிலும் யான் எனும் உணர்வு எழாத கனா நிலையிலும் குறிப்புக் கால உணர்வில் படுவது நிச்சயமாக இறைவனாக அல்லது இறைவன் எடுக்கும் எவ்வித மூர்த்தமாகவும் இருக்க முடியாது
மேலும் இப்படிப்பட்ட கனா அனுபவங்களில் உணர்ச்சிகள் எனும் உண்டி வினைகளும் உண்டு. மேலே சுட்டப்பட்ட பாம்பு கனவில் அச்சம் பீதி பரிதாபம் வியப்பு வேதனை கடுஞ்சினம் போன்ற பல பொதுமல்கள் தோன்றலாம். சில சமயங்களில் கனவிலிருந்து விழித்திட காரணமாக இத்தகைய உணர்ச்சிகள் இருக்கலாம்
இத்தகைய உணர்ச்சிகள்-- தொல்காப்பியரின் மெய்ப்பாடுகள் யாரால அனுபவிக்கப்படுகின்றது?
நிச்சயமாக இறைவனாலோ அல்லது அவன் எடுக்கும் மூர்த்தங்களாலோ அல்ல. தெய்வங்கட்கு சாதாரண உணர்ச்சிகள் இருக்கமுடியாது.
யாது மும்ம்லங்களால் பந்திக்கப் பட்டிருக்கின்றனவோ அவைதான் அஞ்சும் பீதியுறும் சினங்கொள்ளும் மகிழும் நோவும் வேதனை உழக்கும் மேலும் இவ்வாறான உண்டி வினைகளைப் படும் இறைவன் நிமலன் , இறைவடிவங்களும் நிமலமே. ஆகவே இவ்வாறான உணர்ச்சிகளை விழிப்பு நிலையிலும் கனா நிலையிலும் மற்றும் ஏனைய அவத்தை நிலைகளிலும் அனுபவிப்பது மும்மலங்களால் பந்திக்பட்ட ஆன்மாக்கள் தான் என, இவை இறைவனுக்கு வேறான தனி பொருட்டகள் ஆகின்றன.
இவ்வாறு இக்கண்டிதத்தை முடித்து அடுத்த படிமெய்க்குச் செல்வோம்.
தொடரும்
உலகன்
கட்டுரை 20 தானியங்கி பிரகிருதி மாயையே ஆன்மா?
மேலே அஞ்சுதல் சினத்தல் பீதியடைதல் மகிழ்தல் போன்ற உணர்ச்சிகளை அனுபவித்தல் தொல்காப்பியர் காலத்தில் ‘மெய்ப்பாடு’ எனப்பட்டாலும் மெய்கண்டார் காலத்தில் அவை ‘உண்டி வினை’ எனப்பட்டது என்று தெரிகின்றது. இப்படிப்பட்ட உணர்ச்சிகள் ‘காணுதல்’ எனும் வினையோடு தொடர்புடையதும் ஆகும் விழிப்பு நிலையிலும் கனா நிலையிலும் காணுதல் உண்டு. ஆயினும் மூர்ச்சை உற்று உயிர்ப்பு இருந்தாலும் உணர்வு இருந்தாலும் அச்சம் பீதி வியப்பு மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகள் இல்லாத ஆனால் இன்னும் உயிரோடு இருக்கின்ற நிலை ‘கண் பட்ட நிலை’ எனப்படுகின்றது. அதாவது எதனையும் காணாத நிலையாகும்
இங்கு தொல்காப்பிய மெய்ப்பாடுகளை காணுதலோடு பொதுவாக தொடர்பு படுத்தியுள்ள நிலையைக் காண்கின்றோம்
இப்படிப்பட்ட நிலையிலும் உடம்பில் உயிரோட்டம் இருக்க ஆன்மா உண்டு எனவும் பட, இதனை வைத்து இப்பொழுது ஆன்மா என்றவோர் தனிப் பொருள் இல்லை, அவ்வாறு அறியத் தருவது தானியங்கியாகிய பிரகிருதி மாயையே என மிகப் பழைய சாங்கிய மதம் பற்றி இன்னொரு ஆன்ம மறுப்பு கோட்பாடும் எழுகின்றது.
ஒரு சிலர் இத்னால் மரணம் சம்பவிக்கும் வரை உயிர் மூச்சு இருப்பதின் உட்சுவாசம் நிட்சுவாசம் போன்றவற்றிற்கு ஏதுவாகிய பிராணனே ஆன்மா என்றும் பிராணான்மா வாதம் கூறுவர்
இதனையும் மிக அழகாக கண்டிக்கின்றார் நம் மெய்கண்டார் கீழ் வருமாறு
ஐந்தாம் படிமெய்;
மேற்கோள்; இனி ( உண்டிவினையின் ) மாயா யெந்திரத் தனுவில் ஆன்மா உளதென்றது.
ஏது:
கண்படில் உண்டிவினை இன்மையின்
பொழிப்பு: ஒடுங்கினவிடத்து இன்பத் துன்ப சீவனம் பிரகிருதிக் கின்மையின் , ஒடுங்காவிடத்து இன்பந் துன்பஞ் சீவியா நிற்பது உளதாகலின், அதுவே அவ்வான்மாவாம் என்றது.
இங்கு கண்படல், ஒடுங்கல் போன்ற சொற்கள் யாதை உணர்த்தி நிற்கின்றன? என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்
இவற்றை எல்லாம் இப்பொழுது
neuropsychology என்பர், உணர்வு நிலைகளுக்கும்
நரம்பு மண்டலத்திற்கும் உள்ள தொடர்புகள் எனப்படும் இவை மருத்துவத் துறையில் மிக விரிவாகவும்
நுணுக்கமாகவும் ஆயப்படும் துறைகளும் ஆகும்
இங்கு ‘கண் படில்’ என்றால் என்ன?
மயக்கமுற்று கிடக்குங்கால், உயிர் உடலில் இருப்பது உண்மையெனினும், புறத்து விடயங்களைப் பற்றி கண்டும் நுகர்ந்தும், அகத்தே
சிந்தித்துத் தெளிந்தும், மேலும் கனவு போன்ற
அவத்தைகளில் பற்பல
மந்திர சொருபத்து விளையாடல்களைக் கண்டு மகிழ்வதும் வேதனை அடைவதும், துக்கிப்பதும் அஞ்சுவதுமாகிய இத்தகைய மெய்பாடுகளைப் பெறாதே உடல் கிடக்கும் என்பதாம். அங்கு உயிர்த்தலாகிய தொழில் இருந்தும் கண்டறிவதாகிய தொழில் இல்லாமற் போனாலும் ஆன்மா இல்லை என்று கூற முடியாது. இது மரணம்
அல்ல, உணர்வு இருப்பதின் ஆனால் மீண்டும்
விழிப்பது அத்னால காண்பது இல்லாத நிலையிலும் ஆன்மா உண்டு எனக்கூற வருவதின், இந்த உயிர்த்தலுக்குக்
காரணமாகிய பிரகிருதி மாயையே பிராணனே ஆன்மா என்றாகின்றது என்றவாறு ஆன்மா ஓர் வகையான
நரம்பியலுக்கு இறக்கப்படுகின்றது.
இங்கு மெய்கண்டாரின் கண்டிதம் எவ்வாறு செல்கின்றது?
காண்பதை யாது செய்கின்றதோ அதுவே ஆன்மாவென்று கூறுகின்றார் மிக உறுதியாக
ஆனால இத்தகைய மூர்ச்சை நிலைகளில் காண்பது இல்லாதுப் போய்விட பலவகையான மெய்ப்பாடுகளைத் தோற்றுவிக்கும் உண்டி வினைகள் இல்லாது போகின்றனவே?
மூர்ச்சையில் விழுந்து ஒடுங்கிவிடல் அதாவது எதனையும் காணாதொழிதல் என்றால என்ன?
மெய்கண்டார் இதனை மிக அழகாக ஓர் எடுத்துக்காட்டு வெண்பாவில் விளக்குகின்றார். இங்கு சைவத்தில் பண்டே விளங்கும் ‘இறைவன் காட்டத்தான் ஆன்மாக்கள் காண்கின்றன’ என்ற ஆழுண்மையும் பேருதவியாகின்றது.
எப்படி?
இதனை அடுத்தக் கட்டுரையில் கண்டு மகிழ்வோம்
தொடரும்
உலகன்
தொடர்கிறேன். இது வரை படித்ததை முதலில் புரிந்து கொள்ள முயல்கிறேன்.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
2013/8/10 K. Loganathan <k.ula...@gmail.com>
2013/8/9 K. Loganathan <k.ula...@gmail.com>
...ஐம்புலன்களும் ஒடுங்கிக் கிடக்கும் உறக்கத்தின் போதும், இனி அதேபோன்ற சாக்கிர நிலையிலும் உளதாகுவதே உறக்கக்கனவு விழிப்புக்கனவு என்றவாறெல்லாம்</
டாக்டர் உலகனின் அறிவுரை சிந்தனைக்குரியது.//’முயன்று வாருங்கள். நிச்சயமாக இறையருள் துணை நிற்கும் மெய்கண்டாரைப் புரிந்துகொண்டு அற்புதமான மன அமைதியைப் பெறுவீர்கள்,உடல் நலமும் கூடி வரும்’//சைவ சித்தாந்த ஈடுபாடும் பயிற்ச்சியும் படிப்பும் மன அமைதியைக் கொடுத்து உடல் நலத்துக்கும் துணை நிற்பதை நானும் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். திருவாவடு துறை ஆதீனப் பயிற்சி மையங்களில் சித்தாந்தம் படித்தவர்களும் இதனைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.மெய்கண்டாரை படித்துத் தெளிவதற்கு அடிப்படைச் சித்தாந்த அறிவு இருத்தல் வேண்டத்தக்கது. மற்றைய சில சித்தாந்த நூல்களை முதலில் படிப்பதும் பயனளிக்கும்.க. கணேசலிங்கம்
From: K. Loganathan <k.ula...@gmail.com>
To: vall...@googlegroups.com; mint...@googlegroups.com; meyk...@yahoogroups.com; tolkaa...@egroups.com
Sent: Tuesday, 27 August 2013 10:13 PM
Subject: [meykandar] Re: [MinTamil] Re: [வல்லமை] Re: மெய்கண்டாரியம்: உலக வாழ்க்கை
__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (29) ............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
...................................![]()
__,_._,___
கட்டுரை 21 காட்டுதலும் காணுதலும்-1
இறைவன் காட்டத்தான் உயிர்கள் காண்கின்றன. ஆனால் காட்டல் இருந்தும் ஒடுக்க நிலையில் காணுதல் இல்லாது போக மெய்ப்பாடுகள் உண்டி வினைகள் இல்லாதுபோகின்றன.
இதுதான் சைவத்தின் பிரபஞ்சவியல், இதைத்தான் அப்பர் பெருமான் “காண்பார் ஆர் கண்ணுதல் காட்டாக்காலே’ என்று கூறிச் சென்றார். இதனைத் தான் நம் திருமூலரும் உபதேசம் 30-இல் ‘களிம்பு அறுத்தான் கண் விழிப்பித்து’ என்றும் கூறிச் சென்றார்.
மெய்கண்டார் இவற்றை எல்லாம் அகப்படுத்தி மூர்ச்சை போன்ற ஓர் அவத்தை உற்று மரணத்திற்கும் உயிர்த்தலுக்கும் இடையில் ஊசலாடும் நிலையில் கண் பட்டுக் கிடக்கும் போது பிராணனே இயங்க, அதனைக் கொண்டு ஆன்மா பிராணன் தான், தானியங்கி பிரகிருதிதான் வேறு யாதுமில்லை எனும் வாத்தத்தை கண்டிக்கின்றார்.
எப்படி?
மூர்ச்சை போன்ற நிலைகளில் உடல் இயங்கிற்று எனினும் இன்பம் துன்பம் போன்ற உணர்ச்சிகள் ஆங்கு இல்லையாம். ஆயினும் இவ்வாறு ஆன்மா பிரக்ஞை யற்று கிடக்காத விடத்து, விழிப்பு நிலையில் அல்லது கனா நிலையில் யாதோ ஓர் வகையில் காணல் நடக்கும்போது இவை உண்டாம். ஆகவே உயிர்ப்பிற்கும் அதுபோன்ற பிற தானியக்கங்கட்கும் காரணமாக ஆன்மாவில்லை என்றும் , உயிர்ப்போடு யாது யாதொன்றைக் கண்டறிந்து இன்புறுவதாகவும் துன்புறுவதாகவும் இருக்கின்றதோ அதுவே ஆன்மாவென்று பிராணான்மா வாதத்தை பிழையென்று காட்டுகின்றார் மெய்கண்டார். இவ்வாறான மெய்ப்பாடுகள் (emotions and feelings) ஆன்மாக்களுக்குரிய உரிப்பொருட்களாகும், காண்பதோடு தொடர்புடையன; பிரகிருதி மாயாவுடம்பிற்கு இத்தகைய உரிப்பொருட்கள் உளதாகாது என்று தொல்காப்பியர் வழியில் செல்கின்றார் அவரை நங்குணர்ந்த நம் ஆசிரியர்.
மூர்ச்சை நிலையில் ஆன்மா காணபதில்லை அதனால் இன்ப துன்ப உணர்ச்சிகள் இல்லை,
ஏன்? எனின் அங்கு இறைவனது காட்டல் யாதொவோர் காரணம் பற்றி ஒடுங்கிட, உயிரும் காணாது கிடக்க உண்டி வினைகள் இல்லை. இதனால் ஆன்மா இல்லை பிராணன்தான் உண்டு பிரகிருதியின் இயக்கந்தான் உண்டு என்பதைல்லை, ஆன்மாவும் உண்டு ஆனால ஒடுங்கிக் கிடக்கின்றது. இறைவனது காட்டல் இருந்தும் உயிர் காண முடியாது ஒடுங்கிக் கிடக்கின்றது. இறைவன் தந்துகொண்டே இருக்கும் காட்டலை கண்டுவக்கும் நிலையில் மூர்ச்சை நிலையில் உடல் உதவுவது இல்லை, ஆங்குள்ள கருவிகள் ஒடுங்கிக் கிடத்தலின் என்பதே “காட்டு ஒடுங்கக் காணாதே’ என்ற மெய்கண்டார் கிளவியின் பொருள்.
இதன் விளக்கம் கீழே.
எடுத்துக்காட்டு 3.5.1
கண்டறியும் இவ்வுடலே, காட்டு ஒடுங்கக் காணாதே
உண்டிவினை யின்றி உயிர்த்தலால் -- கண்டறியும்
உள்ளம் வேறு உண்டாய், ஒடுங்காது உடல் நண்ணில்
உள்ளதாம் உண்டி வினை ஊன்
இதன் பொருள்;
கண்டறியும் இவ்வுடலே:
பற்பலவற்றை உற்று
பற்றி கண்டு
இஃது உண்டென்றும், இஃது இன்ன இயல்பிற்று என்றும் அறிவதற்கு ஏதுவாகிய பல கருவிகளைக் கொண்டுள்ள இவ் உடலில்;
காட்டு ஒடுங்கக் காணாதே:
நுதிப்புக்கள் உதித்து
நோக்கங்கள் தேற்றி
அதனைக் காண்
இதனைக் காண்
எனும் அகத்தெழு எழுச்சிகள், ஏதோவோர் காரணம்
பற்றி ஒடுங்கி அதற்குரிய கருவிகள் செயல்படாது கிடக்க , காணுதல்
எனும் தொழில்
நடவாது போகின்றது. இதன்வழி காட்சிகளும் இல்லாது
காணுகங்களும்(percepts) ஆகவே
காருகங்களும்(concepts) உதிக்காது போக, அறிவும் அதனைச்
சார்ந்தெழும் உணர்வுகளும் தோன்றுவதில்லையாம்.
(ஆயினும்)
உண்டிவினை இன்றி உயிர்த்தலால்:
ஆயினும் அதுபொழுது, உடல் சீவனற்ற பிணமாகாது, தானியங்கிபோன்று அடிப்படை உயிர்
வாழ்க்கைக்குத் தேவையான
காரியங்கள் நடக்கும் இடமாக, உயிர்த்துக்கொண்டும் ஆனால்
இன்பத் துன்ப
நுகர்ச்சிகட்கு ஏதுவாகிய உண்டிவினைகளின்றி கிடக்கின்றதால்;
கண்டறியும் உள்ளம் வேறு உண்டாய்:
யாது கண்டறிந்து இன்பத் துன்ப நுகர்ச்சியை அனுபவித்து மகிழ்கின்றதோ அதுவே
ஆன்மாவாம்; இந்த
தானியங்கி உயிர்ப்பு காரியங்கட்கு வேறதாய் இருக்கும் ஒன்று என்பதாம்;
ஒடுங்காது உடல் நண்ணில்:
இந்த ஆன்மா
உடலிற்கு வேறதாய்
அதனோடு உடங்கியைந்து நிற்பதுவும், மேலும் கழன்று
தொடக்குறாது அல்லது
ஒடுங்கி உடலோடு
ஒட்டி நிற்பதுவாகவும் திகழும். உடலைப் பற்றி
தான் அதுவாக
நிற்கும் பொழுதே,
அல்லது காணுதலைத் தரகூடிய கருவிகள் ஒடுங்காத நிலையின் உடலில் உயிர்த்தால்,
உள்ளதாம் உண்டிவினை ஊன்:
இன்பத் துன்ப
நுகர்ச்சிகட்கு ஏதுவாகிய கண்டறியுந் திறத்து உண்டிவினகளும், அதனோடு ஒட்டி எழுகின்ற விடயங்களாகிய -- ஊனாகிய -- காணுகம் காருகம்
போன்ற ஞானத்தெளிவுகளும், அதன்வழி
எழுகின்ற மெய்ப்பாடுகளுமாம்.
இதன்வழி ஆன்மா
என்பது நோக்கல்,
பார்த்தல், காணல்
போன்ற ஞானத்தொழில்களின் வினைமுதல் என்றாயிற்று.
உடலுற்று அதனொடு ஒட்டி இருக்கும் பொழுதே ஆன்மா பற்பலக் கண்டு சிந்தித்துத் தெளிந்து ஞானம் அடைந்து அகத்து அறியாமையை போக்குகின்றது. உடல் மரணமடையாது காக்கும் பிரகிருதித் தொழில்கள் ஆன்மா தொழிற்படற்கு துணைபோகும் ஓர் உடலைத் தருவதே யன்றி, பிரகிருதித் தொழில்களாய் ஆன்மா உடலெடுக்கின்றது என்ற கூற்று இதனால் பிழையுடைத்தாகின்றது.
இறைவன் காட்டிக் கொண்டே இருக்கின்றான. ஆனால் ஓர் ஆன்மா காணுதல் என்பது( கனா நிலையிலும்) தக்க கருவிகள் செயல்பட்டால்தான் முடியும். மூர்ச்சை நிலையைல் ஆன்மா உடம்பில் யாதோ ஓர் வகையில் இருந்தாலும், தக்க ஞானக் கருவிகள செயலபடாது போக காணுதல் மெய்யாகாத நிலையில் உண்டி வினைகளும் இல்லாது போகின்றன.
இதனால் மூர்ச்சை நிலையில் ஆன்மா தனிப் பொருளாக இல்லை என்பதல்ல, அது அங்கு இருந்தாலும் தக்கக் கருவிகள் செயல்படாது போக அதனால் காணுதல் மெய்யாகாது போக பலவகையான மெய்ப்பாடுகள் இல்லாது போகின்றன
ஆயினும் இது ஓர் அடிப்படை கேள்வியை எழுப்புகின்றது.
அதெப்படி சாதாரண இந்தக் காணுதல் இறைவன் காட்டத்தான் மெய்யாகின்றது என்று கூற முடியும்? உலகியல் அனுபவம் அப்படி இல்லையே? அனுபவத்திற்கு புறம்பாக அல்லவோ இருக்கின்றது என்றவாறு ஐயப்பாடுகள் எழலாம்.
இந்த ஐயப்பாடுகளைப் போக்கும் வகையில் அடுத்து பார்வைகளைப் பற்றி சில கூறுவோம், நம் அடுத்த கட்டுரையில்
தொடரும்
உலகன்
கட்டுரை 22 காட்டுதலும் காணுதலும்-2
இறைவன் காட்டத்தான் உயிர்கள் காண்கின்றன. இவ்வாறு காட்டி காட்டியே கண் விழிப்பித்து இதுவரைக் காணாததையெல்லாம் கண்டு ஞானம் பெற்று உயிர்கள் வளரந்திட இறைவன் சிவசத்தியாக எழுந்து அயராது ஞானக் கூத்து உதைக்கொண்டே ஆனந்ததாண்டவம் ஆடிக்கொண்டே இருக்கின்றான்
தமிழர்களின் மிகத் தொன்மையான சுமேரு காலத்திலிருந்தே வரும் இந்தக் கோட்பாட்டை எப்படி உண்மை என்று மெய்யறிவு விதிகள் பிழையாது காட்டுவது? என்பதே இப்பொழுது நமது தேவையாக இருக்கின்றது. ஆன்மாக்கள் மூர்ச்சை போன்ற நிலைகளில் இறைவனது காட்டு இருந்தும் உடம்பில் தக்கக் கருவிகள் செயல்படாது போக ஒடுங்கிக் கிடக்க அந்த உடம்பில் இன்னும் வாழும் ஆன்மாக்கள காணாது கிடக்கின்றன என்பதே மெய்கண்டாரின் விளக்கம்
இந்த காட்டுதல்-காணுதல் எனும் ஞானக் கூத்தாட்டம் உண்மையே பொய்யல என்பதை தத்துவார்த்த முறையில் நான் பல கட்டுரைகளில் பலவாறு விளக்கியுள்ள போதிலும் இங்கு கீழே வரும் ஓர் தத்துவக் கவிதைக்கு பொருள் தரும் வகையில் இதனை விளக்க முயல்கின்றேன்
இங்கு ‘ஒழிவிலாப் பார்வை’ என்பது யாண்டும் எங்கும் இருந்துகொண்டே ஒழியாது ஒடுங்காது உளதாகிக் கொண்டே இருக்கும் பார்வை, ஆகவே இறைவனது பார்வை. இறைவனை ஓர் கண்ணாகவே காணும் திறத்தோடு இது வருகின்றது. இதனைத் தான் மெய்கண்டார் ‘நோக்காது நோக்கல்” என்றும் கூறியுள்ளார்
571: ஒழிவிலாப் பார்வை
மாறி
மாறி
வரும் மாய விளையாட்டுகள்
நடுவே
மாறா
திருக்கின்றாய் மாயா நன்னாட்டில்
மாயம் யாதுமில்லா
மன்னும் பேருண்மையாய்!
இது பொதுவாகிய ஓர் உலக உணமை. எல்லா உயிர்களின் உலகியல் அனுபவங்கள் அனைத்தும் மாறி மாறியே வருபவை என்பதொடு, அவை உயிர்களின் ஆட்சிக்கு அப்பாற்ப்பட்டு நடப்பதுபோன்ற உணர்வினையும் தர, அவை எல்லாம் ஓர் மாய விளையாட்டாகவே காண வருகின்றன. இதனால் பரந்து விரிந்த இந்த பிரபஞ்சமே, பேரண்டமே ஓர் மாய நன்னாடாகவும் படுகின்றது. திருமூலர் இறைவனை ‘மாய நன்னாடன்’ என்று கூறுவதைக் காண்க
நிலைத்து நில்லாது யாண்டும்
எல்லாமே மாறிக்கொண்டே வர, அதனை எல்லாம் ஓர்ந்து இதன் காரணமாக ஆதிமுதலாக மூலமாக யாண்டும்
மாறாது மாயங்கள் யாதுமிலாது மன்னும் பேருணமையாய் ஓர் பொருள் இருக்க வேண்டுமே? என்ற
எண்ணம் எழ அது பொழுது மாறி மாறி வரும் இப்பேரண்டத்தில் மாறா வரும் பேருண்மையாய் இறைவன்
இருக்கின்றான என்ற உணர்வு எழ ஒருவாறு இறைவன் உண்டுபோலும் என்ற ஆஸ்த்திக எண்ணமும் எழுகின்றது
மாய
விளையாட்டில் மாட்டிக் கொண்டு
மகிழ்ந்த போதெல்லாம்
சிந்தித்து சிந்தித்துத் தெளிந்தேன்
செப்பரும் உண்மைகள் இந்த
செகச்சால வித்தைகள் ஊடே
சுடர்விடும் சோதியாய்!
இந்த மாய விளையாட்டுகளில் மாட்டிக்கொண்டு காண்பது மெய்யோ? பொய்யோ? என்றெல்லாம் கேட்டுக் கேட்டு இப்படியும் அப்படியுமாக பலவாறு சிந்தித்துச் சிந்தித்துச் செல்ல, திடுமென அகத்திருந்து உள்ளொளிப் பரவ உடன் ‘உணமைதான், பொய்யல” என்ற உணர்வு உதிக்க ஆன்மா பல செகச்சால வித்தைகள் ஊடே காண்பதெல்லாம் பொய்யல்ல, இந்த உலகம் ஓர் மித்தை அல்ல, அழியாத் உண்மைகளும் உண்டு அவை அகத்தே நின்று தூய சோதியாய் தெள்லிய ஞானமாய் சுடர்விட, மனதில் அசைக்கமுடியாத ஓர் உறுதியும் பிறக்கின்றது
Descartes என்ற பரங்கி ஞானி இந்த உணர்வை ‘ apodeitic certainty’ என்று கூறி இதுவே உன்மையின் இலக்கணம் என்றும் கூறுவார். உண்மைக்கு நையாயிகர் கூறுவதுபோல பிரதியட்சம் அனுமானம் ஆகமம் போன்ற அளவைகள் யாதுமில்லை. ஓர் உணமை தன்னுளிருந்து தானே தன்னை ஓர் உண்மை என உணர்த்திவிடும் ஒளிச்சுடர் ஒன்று தன்னை ஒளி என்று காட்டிக்கொள்ள வேறொரு ஒளிச்சுடரைக் கொண்டுவரத் தேவை இல்லை,
ஆயினும் அசைக முடியா உறுதியுடன் ‘இது உணமைதான் பொய்யல’ என்ற உணர்வு எப்படி உதிக்கின்றது? உயிரைக் கவ்வி ஞானசுடர் விளக்கேற்றி வைக்கின்றது?
தொடரும்
உலகன்
கட்டுரை 23 காட்டுதலும் காணுதலும்-3
உண்மை எனும் உணர்வு எப்படி உற்பவிக்கின்றது அதுவும் அசைக்கமுடியா உறுதியுடன் என்ற கேள்வி எழும்போது, அதன் விளக்கமாக எழுவதே இறைவன் காட்ட நாம் காண்கின்றோம் என்றும் எப்பொழுது இறைவன் காட்டுவது போல ஓர் ஆன்மாக் காண அதுபொழுது ஓர் பின்னூட்டமாக அமைவதே “உண்மை’ எனும் உணர்வு என்ற விளக்கமும் கிடைக்கின்றது.
ஓர் ஆசிரியர் ஓர் மாணவனுக்கு ஒன்றை போதிக்க, அந்த மாணவன் ஆசிரியர் போதித்தவாறு கண்டுகொள்ள, உடன் ஆசிரியர், சரியாகப் புரிந்துகொண்டாய் என்று பின்னூட்டம் தந்து அடுத்த படிக்குப் பெயர்கின்றார்.
அதுபோலத்தான் இறைவனும் போதிக்கின்றான் என்கின்றது இக்கவிதை கீழ் வரும் வரிகளில்
அப்பாலுக் கப்பால் நின்றவா
ஆடும் பெருந்தகையை
இப்பால் இருக்கும் நான்
எளிதில் அடைய இயற்றுகின்றான்
பற்பல படிகளாய் என் பார்வையில்
சுட்டு யாதுமில்லா
சுடர் ஞானம் விளங்க!
தனக்கென எவ்வுருவும் இல்லாத இறைவன், கூத்தப் பிரான் வடிவெடுத்து அப்பாலுக்கு அப்பால அனைதத்தையும் கடந்து நின்றவாறு இந்த உலகமே அசைந்து அசைந்து பல மாற்றங்கள் அடையுமாறு அம்மையோடு இணைந்து ஆடிக்கொண்டே இருக்கின்றான். ஏன் இவ்வாறு ? என, இவ்வுலகில் இப்பால் ஒர் உடலெடுத்து சாதரண முறையில் சுட்டுணர்வுடனேயே ஆகவே சுட்டுப்பார்வையுடனேயே இருக்கும் என்னைப் போன்ற ஆன்மாக்கள் சுட்டு யாதுமில்லா சுடர்ஞானமாகிய சிவஞானம் மகிழ என்றவாறு இறைவன் ஆடுகின்றான். அதுவும் எப்படி எனில் ஒரே முறையில் இல்லாது படிப்படியாக சோபான முறையில் உயரும் வகையில்
இதுதான் திருமூலர் போற்றும்” கண் விழிப்பித்தல்” ஆகும். யான் இதனை எனது அழிவிலுண்மை எனும் பெருநூலில் மிக விரிவாக விளக்கியுள்ளேன். பார்வைகள் பொறிலியப் பார்வை தொடங்கி நூலியப் பார்வை நுதலியப் பார்வை பரப்பார்வை சிவப்பார்வை அதீதப் பார்வை காலாதீதப் பார்வை என்றெல்லாம் உயர்ந்து ஞானம் மகிழ்ந்து முடிவில் பார்வையற்ற பார்வையாகிய சுட்டு யாதுமில்லா பார்வையை மகிழத் தருகின்றான் என்றவாறு
இறைவன் காட்ட உயிர்கள் காட்டியவாறே காண உண்மையெனும் உணர்வு தலைப்பட்டு மெய்ஞானம் தேற்றி இப்படி உயர்ந்து முடிவில் சிவஞானமே மகிழத் தரும் வீடு பேற்றையே மகிழத் தரும் சுட்டு யாதுமில்லா பார்வையற்ற பார்வையை மகிழ்வது கூடி வருகின்றது என்றவாறு
ஆய பல கலைகள் ஆழ ஆழ
அசத்தே அமைவதெல்லாம் என்றறிந்து
வீசி
எறிந்துவிட்டு விழைகின்றேன்
ஓசைகள் ஊடே ஒளிந்திருக்கும் இறைவனை
ஓங்காரக் கண் கொண்டு பார்க்க!
எங்கே அறிவு சுட்டறிவாகவே
இருக்கின்றதோ, அங்கு அறிவும் அசத்தாகவே இருக்கும். அசத்து என்றால் பொய் என்பதல்ல, மாறாது
என்றும் ஒரே படித்தாய் இருக்கும் ஒன்றல்ல என்றவாறு. பலவகையான கலைகள் வழியாக ஈட்டப்படும்
அறிவெல்லாம் சுட்டோடு வரும் அறிவுகளாகவே ஆகவே அசத்தவே இருக்க, சுட்டு இல்லாத சுடர்ஞானமாகிய
சிவஞானமே வேண்டப்படுவது என்றவாறு, கலைஞானங்கள் எல்லாம் ஞானம் கைவந்த ஒருவனால் வேண்டாவென
ஒதுக்கப்படும் என்றவாறு. இனி மந்திரங்களே அவற்றால் எழும் அக்கரசகக்ரங்களே எல்லாவகை
கலைஞானங்களை சுட்டறிவுகளை எழுப்புவதென்றுத் தெளிய அவற்றையும் விட்டுவிட்டு கடந்து எல்லா
மந்திரங்களுக்கும் மூலமாகிய ஓங்காரத்தையே ஆன்மா நாடும் என்றவாறு.
பாய்ந்தலையும் மனம் பட்டுவிழ
பரிதவிப்பு யாதுமின்றி பார்க்கின்றேன்
பக்கத்து நின்றவா எனைப்
பார்த்துப் பார்த்து ஆடியவா
ஒக்க
நின்றானை தன்னோடு
ஒத்துப் போமா என்னை
ஒடிவின்றி ஓச்சினாணை என்
உள்ளத்தில் உள்ளமாய் நின்றானை
ஒழிவிலா ஓர் பார்வையொடு
என்
பார்வையில்
ஒன்றி நின்றானை!
ஒங்காரதில் ஒடுங்கிட, அங்கு பல அற்புதங்கள் நிகழ்கின்றன. பரிதவிப்பு படபடப்பு போன்றவை இல்லாதுபோகின்றன. ஆன்மா ஒங்கார சொரூபமாக நிற்கும் இறைவனோடு தானும் ஒன்றித்து நிற்கின்றோம் என்ற உண்மை உணர்வாக இதுபோன்ற மனவுறுதிகள் பிறக்கின்றன. மேலும் பல பிரபஞ்ச சூக்குமங்கள் தெளிவாகின்றன. ஆன்மாக்களோடு அவையேத் தானாக நின்றும் ஆன்மாக்களின் கண்ணோடு கண்ணான நின்று, ஆன்மாக்கள் எதைக் காண்கின்ற்னவோ அதையேக் கண்டு எவ்வாறு காண்கின்றவோ அவ்வாறேக் கண்டு, அடுத்த பக்குவ நிலைக்கும் பெயர, அதுவரை காணாததைக் காணுமா புதியப் பார்வைகளை இறைவன் அருளுகின்றான. அதுபொழுது உண்மை என்றும் பொய் என்றும் பின்னூட்டங்களைத் தந்து தன்னோடு பிறழாது ஒத்துப் போமாறும் செய்கின்றான. இவ்வாறு செய்து செய்து ஆன்மாக்களை ஞான வாழ்க்கையில் உயர்ந்து உயர்ந்து செல்லுமா ஊக்கி முடிவான வீடுபேறு எனும் முத்தி நிலைக்கு அழைத்துச் செல்கின்றான்
இப்படிப்பட்ட இறைவனது பார்வை என்றும் அழியாத எவ்வித சுட்டும் இல்லாது ஆகவே ஒழிவில்லாப் பார்வையாகும். ஆன்மாக்களின் பார்வவையோடு பார்வையாக இப்பார்வயோடு உடன் நின்று ஆன்மாக்களை உள்லவாக் கண்டு அடுத்டு உயர்ந்துசெல்ல யாதைக் காட்டவேண்டுமோ அதனைக் காட்டி கண் விழிப்பித்து முடிவில் வீடுபேறு மகிழத் தரும் சுட்டு யாதுமில்லாத பார்வையற்ற பார்வை மகிழும் முடிவான நிலைக்கு அழைத்டுச் செல்கின்றான்
ஆக நாம் அனுபவிக்கும் ‘உண்மை’ எனும் மெய்யுணர்வில் அடங்கிக் கிடக்கின்றது இறைவன் காட்டத்தான் உயிர்கள் காண்கின்றன என்பது.
இதனை இன்னும் விரிவாக ஆழமாக அறிய விரும்புவோர் காண்க எனது ‘அழிவில் உண்மை; 27ஆம் சூத்திரம். கீழ் வரும் சுட்டியில் அது கிடைக்கும்:
https://sites.google.com/site/ulagansbooks/azivil-unmai-tamil-arum/e3-sutra-27
தொடரும்
உலகன்
...
[Message clipped]
கட்டுரை 24: ஒவ்வொரு உடம்பிலும் ஓரான்மா
ஆம் வெவ்வேறு உடம்பில் வெவ்வேறு ஆன்மா, ஒவ்வொரு உடம்பிலும் ஓரான்மா என்பதே அடுத்tha ஆறாவது படிமெய் ஆகும். இதைத்தான் பல விளக்கங்களோடு மெய்கண்டார் உன்மையென மிக அற்புதமாக நிறுத்துகின்றார்.
ஆயினும் இது சாதாரண யதார்ததடமான் ஓர் உணமைதானே, இதற்கு ஏன் இவ்வளவு விரிவான தத்துவ விசாரணையும் விளக்கமும்?
இதுதான் தத்துவ ஞானிகளால் வரும் குழப்பங்கள். புத்தரில் ஒருசாரார் ஆன்மாவே இல்லை என்கின்றனர். வேதாந்திகளில் ஒரு சாரார் பரப்பிரமம்மே ஆன்மா அது ஒன்றுதான் வெவ்வேறு உடம்பில் அந்த உடம்பிற்கு ஏற்றவாறு வெவ்வேறாக காணவருகின்றது குடத்டில் சூரியன் போல என்று சொல்லி குடாகாயம் ஆகாயம் கூத்தாட்டம் ஆடுவர். அதாவது உயிர் பிரிய உடல் அழிய உயிர் பிரமம் ஆகிவிடும் என்றெல்லாம்
இனி இவ்வாறெல்லாம் மறுப்புக்கள் வர அவற்றைக் கண்டித்து ஆன்மா யாதென்று உணர்ந்த பிறகு, --- உடலிற்கு வேறாய் ஆன்மா, இறைவன் காட்டவே காணுதல் தொழிலைச் செய்தவண்ணம் ஐம்புலன்கள் வழியும் பசுகரணங்கள், கடப்புரு காண் திறத்து சிவகரணங்கள் வழியும் பற்பல கண்டு கற்று அறியாமை போக்கி நிற்கின்றது என்று ஐயம் திரிபற தெளிந்த பிறகும்-- வேறுவகையான பல கேள்விகள் எழுகின்றன. ஒவ்வொரு உடலிலும் அவ்வுடலிற்கு வேறாய் ஆன்மா என்றவொன்று இருப்பது உண்மையெனினும், அநாதியே எண்ணிறந்த ஆன்மாக்கள் உண்டெனினும், ஒவ்வொரு உடலிலும் தனித்தனி ஆன்மாக்கள் இருக்கவேண்டியதில்லை.
இறைவனுக்கு வேறாக ஒரேவோர் ஆன்மா , ஒரே சூரியன் பல குடங்களில் வெவ்வேறாக பிரதிவிம்பித்து வெவ்வேறாகத் தோன்றுவதுபோல, வெவ்வேறான உடல்களில் வெவ்வேறாக பிரதிவிம்பித்து வெவ்வேறு என்ற உணர்வைத் தோற்றலாமே? ஒவ்வொரு உடம்பிற்கும் ஏற்றவாறு அறிவு குறைந்தும் மிக்கும் இருக்கலாமே? என்ன, அதனையும் மறுத்து ஒவ்வொரு உடம்பிலும் தனித்தனி ஓர் ஆன்மா இருக்கின்றது என்று விளம்புகின்றார் அஞ்ஞானத்தோடு போர் புரிந்து மெய்ஞானம் வென்ற நம் வித்தகர்.
எப்படி?
இறைவன் காட்ட ஆன்மாக்கள் காணுவது மாத்திரம் அல்ல, உலகில் உயிர்களிடையேயும் காட்டலும் காணலும் அதன் வழி போதித்தலும் கற்றலும் நடக்கத்தானே செய்கின்றது?
குமுகாய உறவில் மக்கள பொருதி பலவேறு உறவு நிலைகளில் இயங்கும்போது ஓர் ஆன்மா போதிக்க இன்னொரு ஆன்மா கற்பதும் நடக்கும் ஒன்றுதானே?. இங்கு இவ்வாறு கற்கும் ஆன்மா உபதேசியாய் நிற்கின்றது என்கின்றார் மெய்கண்டார்.
தாய் உபதேசிக்க குழந்தை உபதேசியாய் நின்று எதனை உண்பது எதனை உண்ணாது விடுவது என்று கற்றுக்கொள்ளவில்லையா? வளர்ந்த பிறகும் முதியவர்கள் முன்னோர்கள் உபதேசிக்க அவற்றை கற்று பக்குவத்தில் உயர்ந்து செல்லலும் நடக்கின்றதே?
இப்பட்ட பரிமாற்றங்ளைத் தான் மெய்கண்டார் ‘உணர்த்த உணர்தலின்’ என்று கூறி ஒவ்வொரு உடம்பிலும் ஓர் ஆன்மா குடிகொண்டு இருக்கின்றது என்கின்றார்.
ஆறாம் படிமெய்
மேற்கோள்: இனி (வெவ்வேறாய் உடல்களில்) ஆன்மா உளது என்றது
ஏது: உணர்த்த உணர்தலின்
பொழிப்புரை: அவன் அறிந்தாங்கு அறிவன் என்று அறிவிக்க அறிந்து உபதேசியாய் நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.
விளக்கம்:
உலகில் கற்றலாகிய அறியாமை நீக்கம் நடந்துகொண்டே இருக்கின்றது. இதனால் பல்வேறு
போதனைகளும் நடந்துகொண்டே இருக்கின்றது. ஒரேவோர் ஆன்மாதான் எல்லா உடல்களிலும் இருக்கின்றது, உடலால் எழும் உபாதிகளால்தான் ஆன்மா வெவ்வேறாகப் படுகின்றது எனில், ஓர் ஆன்மா
கற்று அறியாமை
போக்கி ஞானத்
தெளிவு உற,
அது எல்லா
ஆன்மாக்கள் மாட்டும் சென்றடையவேண்டும், ஆயினும் அப்படிக் காண்கிலோம். கற்று ஞானத்தெளிவடைவது ஓர்
ஆன்மாவின் முயற்சியை ஒட்டி அமைய, ஓர்
ஆன்மா இதன்வழி
அதிகத் தெளிவு
பெற்று ஞானவகையில் பிற ஆன்மாக்களோடு ஒப்ப
பக்குவத்தில் உயர்ந்து நிற்க, அதுபொழுது இவ்வாறு
உயர்ந்தோன் போதிக்க
இவ்வகையில் தாழ்ந்தோன் ஒருவன் அவனிடமிருந்து கற்கின்றான்.
அறிந்தவன் ஆசிரியனாகைப் போதிக்க அறியாதவன் மாண்வனாகை கற்கின்றான
மக்களிடையே அறிவித்து போதித்தலும், அறிவிக்க அறிந்து கற்று மலம் போக்கலும் நடந்துகொண்டே இருக்க, இது ஆறறிவு அற்ற உயிரினங்களிடையே கூட காணப்படுவதாக இருக்க, இவ்வாறு போதிப்பதாயும் பிறகு இன்னோரிடத்தில் இன்னொருவன் போதிக்க கற்பதாயும் அறிவு நிகழ்ச்சிகள் மெய்யாகி நிற்பதால், ஒவ்வொவொரு உடலிலும் தனித்தனி ஆன்மா உண்டென்கிறார் நம் ஆசிரியர்.
எல்லா ஆன்மாக்களும் சித்துப்பொருள் எனும் வகையில்
ஒத்திருப்பினும், அனுபவங்கள் பக்குவங்கள் போன்றவை வெவ்வேறு என்பதால், அவை அனைத்தும் வெவ்வேறு அளவில் ஞானப்பிரகாசம் கைவந்த வெவ்வேறு ஆன்மாக்களாம் என்றது.
இதனை சிந்திப்பார் அனைவரும் சிந்தை மகிழ
எப்படி இன்னும் விளக்குகின்றார் மெய்கண்டார் என்பதை அடுத்துக் காண்போம்
தொடரும்
உலகன்
அன்பார்ந்த ஐயா,உங்கள் தொடரை வரிசைக்கிரமமாகவே படித்து வருகிறேன். ஆனாலும் இந்த 24 ஆம் பதிவைப் படித்த போது, இந்தப் புத்தகம் நினைவில் வந்தது.http://www.amazon.com/Many-Lives-Masters-Prominent-Psychiatrist/dp/0671657860 இதிலும் வழிகாட்டும் ஆன்மாக்கள் அந்த மருத்துவருக்கு அவர் செய்ய வேண்டிய சேவைகள் குறித்து வழிகாட்டி ஆலோசனைகளைத் தருகின்றன. அநேகமாய் நீங்கள் படித்திருப்பீர்கள் என்றாலும் ஒரு நினைவூட்டல்.
கட்டுரை 24: ஒவ்வொரு உடம்பிலும் ஓரான்மா
குமுகாய உறவில் மக்கள பொருதி பலவேறு உறவு நிலைகளில் இயங்கும்போது ஓர் ஆன்மா போதிக்க இன்னொரு ஆன்மா கற்பதும் நடக்கும் ஒன்றுதானே?. இங்கு இவ்வாறு கற்கும் ஆன்மா உபதேசியாய் நிற்கின்றது என்கின்றார் மெய்கண்டார்.
தாய் உபதேசிக்க குழந்தை உபதேசியாய் நின்று எதனை உண்பது எதனை உண்ணாது விடுவது என்று கற்றுக்கொள்ளவில்லையா? வளர்ந்த பிறகும் முதியவர்கள் முன்னோர்கள் உபதேசிக்க அவற்றை கற்று பக்குவத்தில் உயர்ந்து செல்லலும் நடக்கின்றதே?
இப்பட்ட பரிமாற்றங்ளைத் தான் மெய்கண்டார் ‘உணர்த்த உணர்தலின்’ என்று கூறி ஒவ்வொரு உடம்பிலும் ஓர் ஆன்மா குடிகொண்டு இருக்கின்றது என்கின்றார்.
ஆறாம் படிமெய்
மேற்கோள்: இனி (வெவ்வேறாய் உடல்களில்) ஆன்மா உளது என்றது
எல்லா ஆன்மாக்களும் சித்துப்பொருள் எனும் வகையில் ஒத்திருப்பினும், அனுபவங்கள் பக்குவங்கள் போன்றவை வெவ்வேறு என்பதால், அவை அனைத்தும் வெவ்வேறு அளவில் ஞானப்பிரகாசம் கைவந்த வெவ்வேறு ஆன்மாக்களாம் என்றது.
இதனை சிந்திப்பார் அனைவரும் சிந்தை மகிழ எப்படி இன்னும் விளக்குகின்றார் மெய்கண்டார் என்பதை அடுத்துக் காண்போம்
தொடரும்
உலகன்
கட்டுரை 25: காணலும் கற்றலும்
சைவ சித்தாந்த சாத்திரங்கள் வேதாந்தம் எனப்படும் உபநிடதங்களிலும் இல்லாத ஓர் கற்றல் கோட்பாட்டை கொண்டிருக்கின்றன. வேதாந்த போக்கு இதனை மறக்கச் செய்கின்றது, நம் மடமை இதனைக் காணவொட்டாது செய்து ஆன்மா என்றவோர் தனிப் பொருளைக் காணாத ஐரோப்பியர்களின் மிகப் பிழையான கற்றல் கோட்பாட்டை ஒட்டியே நமது இளம்பாலர் கல்வியை போதனாமுறையை வளர்த்து வருகின்றோம். இங்கு சுயசிந்தனை இழந்து நம் பண்பாட்டிற்கும் உண்மைக்கும் முரணான கல்விக் கோட்பாட்டில் நம் மாணவர்கட்கு போதனை என்ற பெயரில் ஏதோ நடத்தி ஆனால்அவரகளது அறிவு வளர்ச்சிக்கு உதவாதே இருக்கின்றோம்
மெய்கண்டார் ஒவ்வொரு உடம்பிலும் ஓரான்மா என்ற உணமையை நிறுத்த காட்டும் எடுத்துக்காட்டில் சைவத்தின் கற்றல் கோட்பாடு ஓரளவு விளக்கம் காண்கின்றது
எப்படி?
இறைவன் காண்கின்றான். ஆனால் அவனது காணலில் கற்றல் இல்லை. அவன் கட்டு இல்லாதவன்
ஆன்மாக்களும் இறைவன் காட்ட காண்கின்றன. ஆனால் இங்கே கற்றல் இருக்கின்றது. எப்படி? ஆன்மாக்கள் மும்மலங்களால் கட்டுண்டவை
இக்கருத்து கீழ் வரும் வெண்பாவில் வருகின்றது.
எடுத்துக்காட்டு 1.4
நோக்காது நோக்கி நொடித்து அன்றே காலத்தில்
தாக்காது நின்று உளத்தில் கண்டு இறைவன் -- ஆக்காதே
கண்ட நனவு உணர்வில் கண்ட கனவு உணரக்
கண்டவனின் இற்று; இன்றாங் கட்டு
எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒன்றை இன்றே காட்டும் ஓர் கனவைக் காண்கின்றோம் பிறகு அது மெய்யாகும் போது ஏறகனவே கண்டதுதான் என்ற மீக்கூரும் உணர்வுதான் வருமேத் தவிர புதிது என்ற உணர்வு வராது. அதுபோலத்தான் இறைவன் காணகின்றான், அதனால் அவனுக்கு கட்டு இல்லை, காணும் அனைத்தையும் புதிது புதிது என்று கண்டு கற்றவாறே இருக்கும் ஆன்மாக்களுக்கு கட்டு உண்டு என்கின்றார் இங்கு
மெய்கண்டாரே மேலும் இதனை நன்றாக கீழ் வரும் வெண்பாவில் விளக்குகின்றார்.
எடுத்துக்காட்டு 3.6.1
அறிந்தும் அறிவதே யாயும், அறியாதது
அறிந்ததையும் விட்டு அங்கு அடங்கி -- அறிந்தது
எது?
அறியும் அன்றாகும்; மெய்கண்டான் ஒன்றின்
அது
அது
தான்
எனும் அகம்.
இதன் பொருள்:
அறிந்தும் அறிவதேயாயும் (இருப்பது எது?)
ஓருகால் ஒருவாறு
அறிந்ததை சடுதி
நினைவு (Short Term Memory) , நெடுதி நினைவு
(Long Term Memory) எனப்படும் பல்வேறு வகை நினைவுகளில் வைத்து, மீண்டும் வேண்டும் பொழுது மீக்கூர்ந்தறிதல் போன்ற
ஞானக்கிரியைகளை செய்வது
எது?;
அறியாதது (எது?)
கற்றறிந்து அறியாமை
போக்குதற்கு ஏன்ற
சூழ்னிலைகள் இருந்தும், கற்றலை வேண்டாமென வெறுத்தொதுக்கி உதாசீனம் செய்தலுமாகியா ஞானக்கிரியைகளை செய்வது எது?; மேலும்,
அறிந்ததையும் விட்டு அங்கு அடங்கி, அறிந்தது எது?:
ஒருவாறு கற்றுத்
தெளிந்து நினைவில் இருத்தியும், மறதி வாய்க்க
அதனையும் இழந்து
அதனால் அறிவில்லாது அடங்கி, மீண்டும் அறியப்புகுந்து உதவக்கூடிய ஞானக்கிரியைகளை செய்வது
எது?;
அறியும் அன்றாகும்:
ஆன்மாவானது கற்று
அறியவுஞ் செய்யும், விருப்பமில்லாது போக கற்காதும் விடும். இச்சை வயத்ததாய் விரூப்பங்கள் தேற்றி அதன்வழியே சிலவற்றைத் தேர்ந்து கற்றலும், வேறு சிலவற்றை வெறுத்து வேண்டாவென ஒதுக்கலும் என்றவாறு ஆன்மா அறிவு வளர்ச்சியில் செயல்படும்;
மெய்கண்டான் ஒன்றின்:
இனி தற்போதம் ஒழித்து உள்ளதை உள்ளவாக் காணுந் திறத்து மெய்கண்டானாகி நின்று, இதன் உண்மையைக் காண;
அது அது தான் எனும் அகம்:
ஒவ்வொரு உடம்பினும் 'அது தான் ' 'அது தான்'
என்றவாறு ஆன்மாக்கள் தனித்தனி தனைச் சுட்டி
பிறவற்றினின்று வேறுபடுத்தியே நிற்பதைக் காண்பம் என்றவாறு.
ஒவ்வொரு ஆன்மாவும் தான் தனி, பிறிதோர் உடம்பிலிருக்கும் ஆன்மா தான்
அல்ல; அதனோடு
போதகனாக, மாணவனாக,
அறிவு கொளுத்தும் கொள்ளும் முறையில் உறவுற்று நிற்கின்றோம் என்று உணர்ந்து நிற்கின்ற உண்மையை, நூலிய
அறிவியல் முறையியல் பிழையாது மெய்கண்டான் வழி
சென்றால் காண்பர்
என்பதாம்.
காணுதல் எப்படி கற்றல் ஆகின்றது? கற்றல் என்றால் என்ன? என்றெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன.
அடுத்த படிமெய்க்குப் பெயரா முன் இதனை விளக்கும் வகையில் சைவத்தின் அற்புதமான கற்றல் கோட்பாட்டை அடுத்து விளக்குவம்
தொடரும்
உலகன்
கட்டுரை 26: சித்தாந்தத்தின் கற்றல் கோட்பாடு-1
இன்றையத் தமிழர்கள் கற்றல் என்றால் என்ன? எனும் கேள்வி எழும்போது பெரும்பாலும் ஐரோப்பியர்கள் கூறும் கருத்துக்களையேத் தழுவி பிழையான வழியில் சிறார்களுக்கு பாடபோதனை நடத்துவதாகத் தெரிகின்றது, சைவ சித்தாந்தத்தில் ‘இறைவன் காட்ட ஆன்மாக்கள் கண்டு அதன் வழி கற்கின்றன” என்று ஓர் கற்றல் கோட்பாடு இருப்பது பெரும்பாலருகுத் தெரியாதே இருக்க, ஆன்மா பற்றிய மெய்கண்டார் விசாரணையில் அடுத்த படி நிலைக்குக் பெயரும் முன், இந்த அற்புதமான கற்றல் கோட்பாட்டை சிறிது விளக்குவோம் இங்கு
முதலில் நாம் காண வேண்டியது சித்தாந்தம் எல்லா ஞானத்தையும் பாசஞானம் பசுஞானம் பதிஞானம் என்று வகுத்திருப்பதைக் காண்கின்றோம்
எப்படி எல்லா மாந்தர்களின் மற்றும் ஏனைய உயிர்களின் ஞானமெல்லாம் இவ்வாறு எஞ்சாது முத்திறப் படும்?
இது சித்தாந்தம் நலமே நிறுத்தியுள்ள அநாதிப்பொருளியலாகிய பதி பசு பாசம் என்பதை அநாதி எனும் அழியா உணமையைச் சார்ந்தது. உலகில் உள்ள எல்லா பொருட்களும் பதி பசு பாசம் என்றால் எல்லா ஞானக்களும் பாச ஞானம் பசுஞானம் பதிஞானம் என்றுதானே எஞ்சாது படும்? உலகில் நிலவும் எந்த ஞானத்தை எடுத்துக்கொண்டாலும் அது இந்த மூவகையில் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
ஆயினும் இந்த முத்திற ஞானங்கள் அல்லது அறிவுகள் எவ்வாறு உளதாகின்றன? கற்றல் இல்லாது ஞானங்கள் அறிவுகள் வரமுடியுமா? முடியாதே! ஆக எல்லா ஞானங்களையும் அறிவுகளையும் அடக்கும் இந்த முத்திறப் பாகுபாடும், முத்திறக் கலவியைச் சார்ந்துதானே வரவேண்டும்?
ஆக கற்றல்களும் மூவகைப்படும் என்றாகிட, அவற்றை பொருட்கல்வி (பாசஞானம்) தற்கல்வி( பசுஞானம்) இறைக்கல்வி ( பதிஞானம்) என்று நாம் காணலாம
உடன் ஐரோப்பிய உளவியல் வல்லுநர்கள் ஓர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். முதல் இரண்டும் ஏற்புடைத்து ஆனால் மூன்றாவதாகிய இறைக்கலவி என்ற ஒன்றில்லை, அது வெறும் ஆதாரமற்ற நம்பிக்கையின் அடிப்ப்டையில் எழுவது என்று கூறி அதனை நிராகரிப்பர்.
வேதாந்திகளும் இப்படிப்பட்ட இறைவடிவங்கள் மித்தைகள் கற்பிதங்கள் ஆரோபிதங்கள் அத்தியாசங்கள், கயிற்றை பாம்பெனக் காண்பது போன்று என்றெல்லாம் கூறி அந்த மித்யா உணர்விலிருந்து விடுபட வேண்டும் என்று கூறி இறைகல்வி என்பதை மறுப்பர்
இதுதான் அவர்கள் செய்யும் பெரும் பிழை, ஆயினும் எப்படி இவற்றைக் கணித்து மூவகைக் கற்றலும் தேவையே என்று வாழ்கின்றோம்?
முதலில் ‘கற்றல்’ என்றால் என்ன என்பதை நாம் நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும்.
அத்துவித வேதாந்தத்தில் கற்றல் கோட்பாடு இல்லை. ஐரோப்பியர்கள் Behavirism எனப்படும் உளவியல் துறையில் தூண்டி-துள்ளக்க பந்தங்களே கற்றல் ( stimulus-response conditioning) என்பர்.
ஆனால் சித்தாந்திகள் என்ன சொல்கின்றார்கள்?
கற்றல் என்பது அகத்தே செறிந்திருக்கும் அறியாமையை நீக்குவது என்பர், ஆன்மாக்கள் அனைத்தும் அநாதியே ஆணவ மலத்தால் தாக்குண்டு எவ்வித அறிவும் உணர்வும் இல்லாத அந்தகாரத்தில் கிடக்க, அந்த ஞான அந்தகாரத்தை போக்குவதே கற்றல் என்பதாக அது பொருட்கல்வி என்றும் தற்கல்வி என்றும் முடிவில் இறைக்கல்வி என்றும் தொடரும் என்று முடிப்பர்
இக்கருத்துக்கள் எல்லாம் ஞானத்தை மேலே விளம்பியவாறு முத்திற ஞானமாக வகுப்பதில் அடங்கி இருக்கின்றது. ஆயினும் பல கேள்விகள் எழுகின்றன.
இந்த முத்திறக் கல்வியில் முறைமை அதாவது எது முதலில் எது அடுத்து எது முடிவானது என்றவாறு ஓர் முறைமை இருக்கின்றதா? அப்படி இருந்தால் அதன் அடிப்படைகள் என்ன என்றவாறு நியாயமான கேள்விகள் எழுகின்றன.
இவற்றை இனி அடுத்து வரும் கட்டுரைகளில் காண்போம்
தொடரும்
கட்டுரை 27: சித்தாந்தத்தின் கற்றல் கோட்பாடு-2
சித்தாந்தத்தின் கற்றல் கோட்பாடு பற்றி பல இடங்களில் மிகத் தெளிவாக எழுதியுள்ளேன். கீழே எனது சிவஞான கற்பம் எனும் நூலில் விளக்கியத்தைத் தழுவி இங்கே சுருக்கமாக
1.16
முப்பொருள் தெரிக்கும் முத்திறக் கல்வியின்
முடியாவறிவு மூவுலகிலு மில்.
(இ-ள்)
முத்திறக் கல்வியாவது பொறிலியக் காட்சியின் வழி அமையும் பொருட்கல்வியும், நூலிய நுதலியக் காட்சிகள் வழி பசுக்களின் இயல்புகளை அறியத்தரும் தற்கல்வியும், நுதலியப்பார்வை வளர
அதன்வழி வரும்
விஞ்ஞானக் காட்சி
சிவஞானக் காட்சி
போன்றவற்றின் வழி
பதி இயல்புகளை அறியத்தரும் இறைக்கல்வியுமாம். முப்பொருளாவது பதி
பசு பாசம்
என்பன; எல்லா
பொருள்களும் இவற்றின் ஒன்று என்பதின் எல்லாக்
கல்விகளும் முத்திறக்கல்வி என்றது.
எவ்வகையான கலைகளும் , காண்டல்
கருதல் ஆகமம்
என்று பகுத்துக் கண்டாலும் வேறுவகையிற் கொண்டாலும், அவை பாசவறிவினைத் தருகின்ற பொருட்கல்வியாக, பசுவறிவினைத் தருகின்ற தற்கல்வியாக, பதியறிவினைத் தருகின்ற இறைக்கல்வியாக இருக்கும் என்றது. எல்லாப் பொருள் வகைகளும் இந்த முப்பொருளில் அடங்கிவிடுவதால், எஞ்சி
நிற்பது யாதொன்றும் இல்லாததால், இந்த பொருள்
வகைக்குள் அடங்காவறிவு யாதுமில்லை என்றது.
இனி சற்று விரிவாக பொருட்கல்வி யாதென்று விளக்குவோம்
இங்கு பொருள் என்பது பாசங்களாகிய நமது உலகியல் பற்றுகட்குக் காரணாமான ஐம்புலன்களால் அறிய வருககின்ற, மரம் மலை நிலன் வீடு உணவு போன்றவையும் மற்றும் அண்டங்கள் கோள்கள் விண்மீன்கள் போன்றவற்றை அறிவதும் மற்றும் ஏனைய பொறிலிய அறிவியல் துறையில் அடங்கும் அத்தனையும் ஆகும். தாவரவியல் அறிஞர் ஒருவர் தாவரங்களைப் பற்றி மிக தீவிரமாகவும் ஆழமாகவும் விரிவாகவும் ஆய்வதெல்லாம் இந்த பொருட்கல்விபாற் படும்
இனி இவ்வாறு ஒருவர் செல்லும் போது, தன்னையே மறித்து நோக்கி, தான் ஏன் இவ்வாறெல்லாம் கற்க வேண்டும் எப்படி இந்த ஆர்வமெல்லாம் அகத்தே உதிக்கின்றது? நான் யார்? என்றெல்லாம் கேள்விகள் எழ, அது பொழுது சனிப்பதே தற்கல்வி யாகும். ஆன்ம விசாரணை என்னும் ஒன்றும் ஆன்மா ஓர் தனிப்பொருளா அல்லது பொய்பொருளா உடல் அழிய அது இருக்குமா, இல்லை அழிந்து போகுமா என்றெல்லாம் விசாரிப்பது இதனுள் அடங்கும்
இங்கு மெய்கண்டாரின் மூன்றாம் சூத்திரத்தை விசாரித்து இவ்வளவு விரிவாக ஆன்ம விசாரணை செய்வதும் தற்கல்வி யாகும்
இனி இவ்வாறு சென்றுகொண்டிருக்கும்போது ஆன்ம்மாவின் அகத்தே தானறியா வகை ஓர் சத்தி தன்னை மீறி தனக்குள் பலவற்றை இருத்துவதும் உணர்த்துவதுமாக விளையாடுவதைக் கண்டு, இதுதான் தெய்வம் என்றவாறு உணர்ந்து ஓர் பத்தனாய் எழுந்து தெய்வங்களைத் தொழுது அவை உணர்த்தும் ஆழுண்மைகளை அறிந்து தன்னுள் இருக்கும் அஞ்ஞானத்தையும் அணுத்துவத்தையும் போக்குவதே இறைக்கல்வியாகும்
இதில் மையமாக அமைவது திருவுருவச் சிந்தனை எனும் Icon Thinking ஆகும். இறைவன் தன்னை ஓர் ஆன்மாவின் அறிவின் எல்லைக்குத் தக ஓர் வடிவில் காட்டி அதனை வழிபடவும் ஆழச் சிந்திக்கவும் வைத்து இதுவரை இன்னும் போக்காதிருக்கும் அறியாமையை அஞ்ஞான இருளைக் கடிய உதவுதே இதுவாகும். ஞான வேல் மகிழும் திருமுருகன், பேழை வயிற்று விநாயகன் பாம்பணைமேல் அறிதுயில் மகிழும் திருமால், அம்மையோடிணைந்து ஆனந்த கூத்தாடும் சிவ நடராசப் பெருமான் என்றவாறு வரும் இறைவடிவங்கள் அனைத்தும் ஓர் ஆழமான ஞானத்தை தன்னுள் கொண்டிருக்க அதனை ஓர் நூலெனக் கண்டு, புதைந்திருக்கும் ஞானத்தை வெளிக்கொணர்ந்து அறிந்து மகிழ்வதே இறைக்கல்வி யாகும்.
காட்டாக சிவ நடராச மூர்த்தத்தால் உணர்த்தப்படும் ஆழ் ஞானம் யாதென்று அறிவதாகும் இந்த இறைவடிவம், பற்பல உண்மைகளை குறிப்பாக பஞ்சகிருத்தியங்களின் உண்மையைக் காட்டுவதாகும். புறவுரு வழி புதையுருவாக நிற்கும் பிரிதொன்றினைக் காட்டி நிற்பதின் இதுவோர் நூலாகும்.
இவ்வுருவின் மலர்க்கரம் அருளைக் காட்ட கீழ் நோக்கிய மறைக்கரம் திரோதகத்தைக் காட்டும். அருளின் வெளிப்பாடாக நாதவிந்துக்களை இணைப்பது புணரவைப்பதுமாக ஆடப்படும் திருவிளையாட்டினை ஆடும் தாளிணைகள் காட்டும். இடது கால் ஊன்றிட, நாதத்துவம் இருத்தப்பட விந்துத்துவம் குறைக்கப்பட , வலது கால் ஊன்றிட இதன் எதிர் என்பதாகும்.
இனி நான்கு கரங்களில் ஓர் கரம் ஏந்தி நிற்கும் அக்நி அழித்தலைக் காட்ட, இன்னொரு கரத்தில் விளங்கும் துடி தோற்றத்தைக் காட்டும். எல்லா தோற்றங்களும் மந்திரங்களால் ஆகுவதின், இந்த மந்திரங்களும் பல்வேறு வாக்குகளாக வெளிப்படுவதின் இவ்வாறு. ஊற்றமா ஊன்றி நிற்கும் வலது அல்லது இடது கால், திதியைக் காட்டும் இவை அனைத்தும் தனக்கோர் ஆனந்த விளையாட்டே, சுமையின் தொழிலல்ல என்பதை புன்சிரிப்பின் திருமுகம் காட்டும். விரிந்த சடை தான் பரவிருத்தனாக எங்கும் கரந்து பரந்தும் இருந்து அனைத்தையும் சலிப்பவனாக நிற்பதைக் காட்ட, வட்டத் திருவாசி அசபா மந்திரங்களை உணர்த்தி அதேபொழுது தான் அனைத்திற்கும் அப்பாலாய். அசலன சொரூபியாய் சிவசத்தாய் இருப்பதையும் காட்டும் என்றவாறு.
இவ்வாறே தொழுது வணக்குதற்குரிய தெய்வ வடிவங்களாக வெளிப்பட்டு நிற்கும் மூர்த்திகளின் பண்பு என்றறிக,
விரிப்பின் பெருகும் என்பதன், இதனோடு நிறுத்திக் கொண்டு ஆன்ம விசாரணைக்குத் திரும்புவோம்
தொடரும்
உலகன்
கட்டுரை 28 ஆன்மாவின் முத்தி முன்னறிவு-1
ஆதி சங்கரரின் அத்துவித வேதாந்தம், பிரமந்தான் பொருள். உலகெனத் தோன்றுவது ஓர் மித்தை விளக்கமுடியாத ஓர் மாயா சத்தியால்தான் பரப்பிரமமே இவ்வாறு பிழையாக உணரபப்டுகின்றது என்றும் கூறி, உலகினைப் பற்றி எழக்கூடிய எல்லா ஆய்வுகளையும் முடக்கிற்று. இன்று வேதாந்தச் சிந்தனையின் ஆதிக்கத்தால் சைவத்தின் கற்றல் கோட்பாடும் அது பொருட்கல்வி தற்கல்வி இறைக்கல்வி என்றவாறு செல்லும் என்பதும் எடுபடாது வீழ்ந்து கிடக்கின்றது.
இந்த உடம்பில் ஆன்மா உளது, மும்மலத் தாக்கத்தால் அது அறியாமை இருளில் கிடக்கின்றது, மேலே விளம்பியவாறு கற்றே அது மேம்பட வேண்டி இருக்கின்றது என்று மெய்கண்டார் கூற, அதனையும் எதிர்ப்பதாக இன்னொரு கருத்தும் வெடிக்க, அதனையும் கண்டிக்க எழுந்ததுவே ஏழாம் படிமெய் யாகும்
இதுவே
இச்சூத்திரத்தின் முடிவான படிமெய்யும் ஆகும்
அதுவே "அனைத்தும் சித்து", "அனைத்தும் அசித்து" என்றவாறு சித்து-அசித்து என்ற அடிப்படை பொருட்பேதத்திற்கு உடன்படாது, ஒன்றினை பிறிதொன்றிற்கு இறக்கும் இறக்குவாதங்களாகும்( Reductionism). ஓர் உடம்பொடு ஆன்மாவிருப்பது என்பது அசித்தாகிய மாயையே இவ்வாறு இரண்டுவகைப் பொருளாய் திரிந்து நிற்கின்றது என்று கூறுவது 'எல்லாம் அசித்தே" என்பது. இனி ஓர் சித்துபொருளே அறிவாயும் தநுவாயும், வெவ்வேறு திரட்சிபெற்று இவ்வாறு பகுத்தறிய இடமாகின்றது என்பது சித்துவாதமாகும் (Idealism). இவ்விரண்டு இறக்குவாதங்களையும் மறுத்து உடம்பெடுத்து நிற்கும் ஆன்மா அசித்தொடு இசைந்த சித்தே என்றும், சித்தும் அசித்தும் அடிப்படை பொருள் பாகுபாட்டில் ஒன்றினை பிறிதொன்றிற்கு இறக்கமுடியாது நிற்பவை என்றும் விளக்குகின்றார் மயக்க அறிவெல்லாங் கெடுத்து மாணறிவிற் சிறந்து நிற்கும் நம் அருட்செல்வராகிய மெய்கண்டார்.
ஏழாம் படிமெய்
மேற்கோள்: இனி, மாய வியந்திரத் தனுவினுள் (அதற்கு வேறாய்) ஆன்மா உளது என்றது.
ஏது:
அவைதாம் வெவ்வேறு பெயர் பெற்று நிற்றலான்.
விளக்கம்:
இங்கு சொற்றோற்றம் இரண்டுவகையின் எழும் என்பதை
உளங்கொள்ளவேண்டும். ஒன்றினைக் கண்டு காணுகங்கள்(percepts) பெற்று பிறகு
நிருவிகற்பாக அவ்வுணர்வு தெளிவற்று நிற்க, விகற்பித்து பற்பல காருகங்களைப்(concepts) படைத்து அப்பொருளின் பொதுவியல்பு யாதென்றும் சிறப்பியல்பு யாதென்றும் பிரித்தறிந்து பெயரிடுவதாகும். அதுபொழுது காருங்களை அறிவில்
இருத்தி, இஃதாக
இருக்கலாம் அஃதாக
இருக்கலாம் என்றவாறு தொடர்ந்து பொருளியல்புகட்கு ஏற்ப,
அதனை விடாதே
நின்று அப்பொருள் எவ்வாறு தன்னைக் காட்டுகின்றதோ அவ்வாறே அறிந்து அதற்கேற்ப மாற்று காருகங்களைப் படைத்து,
பிழையற்ற பொதுவியல்பினை ஓர் ஓசையோடு இணைக்க,
அதுபொழுது 'மரம்'
'கடல்' 'மலை' என்பன
போன்ற இயற்சொற்கள் பிறக்கும்.
இதற்கு வேறான
பிறிதொரு வகையாவது, விட்டகன்று நின்று பற்பலவாக தானே கற்பித்து அவற்றில் எக்கற்பிதம் எப்பொருட்கு இசையும்
அல்லது இசையாது
என்று சோதித்துத் தெளிவதாகும். இவ்வாறு ஒட்டாது
தூர நின்று
பொருளொடுப் புணராது
கற்பித்துக் காணமுயலும் போது உயர்திணையை அஃறினை
என்றலும், அஃறிணையை உயர்திணை என்றலுமாகவும், உயிரற்றதை உயிர் உடையதாக, உயிர்
உள்ளதை உயிரற்றதாக வெல்லாம் கொள்ள நேரிடும். இறக்குவாதங்கள் இப்படிப்பட்ட கற்பித
சொற்பிறப்பியலோடு வருவது;
முற்கூறிய இயலிய
சொற்பிறப்பியலோடு மாறாக
நிற்பது.
மெய்கண்டார் இவ்விருவகை சொற்பிறப்பியலுள், 'உடல்' என்றும்
'ஆன்மா'வென்றும் பெயரிடுதல், முதன்முறையில் பிறந்தனவென விளக்கி, ஆகவே இவை
கற்பிதங்கள் அல்ல,
பொருட்களை அவற்றின் பொதுவியல்பு சிறப்பியல்பு பிழையாது அறிந்ததின் காரணமாக சித்து
அசித்து எனப்படும் பேதங்கள் என்பதால், ஆன்மா
சித்துவென்றும், அது
குடிகொண்டிருக்கும் உடம்பு
மாயையைத் திரித்து மந்திர சத்திகளால் உருவாக்கப் பட்ட அசித்தாகிய ஓர்
யெந்திரத் தநு
என்றும் விளக்கி
, இவ்விரண்டும் பொருட்டன்மையில் தனித்தனி, ஒன்றினை பிறிதொன்றிற்கு இறக்கமுடியாது என முடிக்கின்றார். இரண்டும் இசைந்திருப்பினும் ஆன்மா சித்தே
தநு அசித்தே
என்று தெளிவாக்குகின்றார் தெள்ளறிவின் திருஞானச் செல்வர்.
இதனை இன்னும் ஆழமாக விசாரிக்கும் முன் கீழ்வரும் திருமூலர் பாடலையும் சிறிது சிந்திப்பது உதவும்
ஐந்தாம் தந்திரம்
1420
சத்தும் அசத்தும் சத்சத்துந் தான் கண்டு
சித்தும் அசித்துஞ் சேர்வுறாமே நீத்தும்
சுத்தம் அசுத்தமுந் தோய்வுறாமே நின்று
நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே
யாராகிலும் மெய்ஞானம் தேடுவோராகில் அவர் என்றும் அழியாது நிற்கும் சத்துப்பொருளையும், அழியாத நித்தியம் போல் தோன்றி பின் அழிந்திடும் இயல்பிற்றாகிய அசத்துப் பொருளையும் இவை இரண்டுமாகிய சதசத்தாகிய ஆன்மா போன்ற பொருளையும் பிறித்தறிந்து தெளிந்திருகவேண்டும். மேலும் உணர்வின் சித்துப்பொருள் என்றும் உணர்வில்லாத சடப்பொருள் என்றும் அறிந்து இரண்டையும் ஒன்றே என சேர்க்காது பிரித்தே அறிந்து அவற்றையும் கடந்தும் நிற்கவேண்டும். மேலும் மலபந்தங்களால் அசுத்தமாகவும் அவற்றை விட்டு நீங்கிய சிறப்பால் சுத்தம் எனவும் கண்டு அவற்றில் தாழ்வுறாது நிற்கவேண்டும். மேலும் என்றும் அழியாது அனைத்திற்கும் மூலமாக நிற்கும் நித்தியப் பொருளாகிய இறைவனையே சிந்திப்பது பரஞ்சுத்த சைவர்க்கு ஆகி வருவதாகும்
ஆன்மா இறைவன் அல்ல, பரப்பிரமமும் அல்ல, அது நித்தியப்பொருளாகிய இறைவனை அடைய வேட்டு நிற்கும் இன்னொரு நித்தியப் பொருள்!
இதனையே மெய்கண்டார் மிகச் சிறப்பாக அடுத்து வரும் எடுத்துக்காட்டில் விளக்கி அருளுகின்றார். எப்படி என்றும் அடுத்துக் காண்போம்
தொடரும்
உலகன்
கட்டுரை 29 ஆன்மாவின் முத்தி முன்னறிவு-2
ஆன்மாவும் உடம்பும் வெவ்வேறு ஏனெனில் வெவ்வேறு பெயர் பெற்று நிற்பதால் என்று மேலே விளம்பிய மெய்கண்டார், தொடர்ந்து வரும் எடுதுக்காட்டில் ஆன்மாவின் இலக்கணம் வேறு, அது தங்கி இருக்கும் உடம்பின் இலக்கணம் வேறு, அதனால் தான் நாம் இவற்றை வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கின்றோம் என்கின்றார்
அந்த இலக்கண வேறுபாடுகள்
தான் என்ன?
கீழே வரும் எடுத்துக்காட்டில் இதனை
நலமே விளக்கியருளுகின்றார்.
எடுத்துக்காட்டு 3.7.1
கலையாதி மண் அந்தம் காணில் அவை மாயை
நிலையாவாம் தீபமே போல் -- அலையாமல்
ஞானத்தை முன்னுணர்ந்து நாடில் , அத்தனுவாந்
தானத்தில் வேறாகும் தான்
இதன் பொருள்;
கலையாதி மண் அந்தம் காணில் அவை மாயை, நிலையாவாம் தீபமே போல்:
கலை என்பது
மூலமாயையின் பல்வேறு
திரிபுகளாம், பரிணாம
வடிவங்களாம். பிரதிட்டா கலை, நிவிர்த்தி கலை,
வித்தியாகலை, சாந்தி
கலை சந்தியாதீத கலை என்றவாறு மூலமாயை
விரிந்து நின்று
உலகத்து எல்லாப்
பொருட்களுமாய் நிற்கும்.
மேலும் இந்த ஐங்கலைகட்கு வேறாக விந்துவின் சந்திரகலை என்றும் நாதத்தின் சூரியகலை என்றும் இவை இரண்டும் கலந்து அக்நிகலை என்றும் கொள்ளலாம்
இப்படிப்பட்ட கலைகள் முதல், மண் ஈறாக கற்பனைபோக்கி உள்ளவாக் காணும்போது , இவை மூல மாயையின் திரிபுகளாகவும் மேலும் , தீபமேபோல் அறியாமை இருளைக் கிழித்து அறிவினை ஒருவாறு கண்டறிய உதவுமெனினும், மாறி மாறி அத்தீபமேபோல் தோன்றி நின்று அழியக்கூடிய நிலையற்ற பொருள்களாகும்.
காலவுணர்வுடனேயே இந்தக்
கலைகளால் வரும்
அறிவெலாம் என்பதால் இஃது. குறிப்பறிவாக குறிப்புக்காலவுணர்வோடும், சுட்டறிவாக சுட்டுக்காலவுணர்வோடும்
, இவற்றால் ஆகும் அறிவெலாம் என, அவை நிலயற்றதாயிற்று.
அலையாமல் ஞானத்தை முன்னுணர்ந்து நாடில்:
இவ்வாறு மாறி
மாறி தோன்றியவாறு மூவினைப்பட்டேச் செல்லும் இந்த
மாயாகாரியத் தொகுதியோடு பந்தப்பட்டு அவை அலையுமாபோல் அலையாது; மூன்னும் ஒருவாறு
அறிந்திருப்பதாய் ஆயினும்
வேண்டிய தெளிவின்றி கிடப்பதாகிய சிவஞானத்தை யாதென்று இன்னும் தெளிய ஆன்மா முயன்று கொண்டே இருப்பதின்,
அத்தனுவாந் தானத்தின் வேறாகும் தான்:
வாழ்வதற்கு ஓர்
இரூப்பிடமாகவும் அல்லது
தானமாகவும், அதுபொழுது அதனோடு ஒட்டிநின்று அறிய
பல்வேறு அசத்தறிவுகளையேத் தருவதாகவும் இரூக்கும் அத்தனுவினின்று , காலத் தொடக்கற்று யாண்டும் சலிப்பிலாது மாற்றமிலாது நிற்கும் சிவஞானம் யாதென்று விசாரித்தவாறு நிற்கும் தானாகிய
ஆன்மா அதனின்று வேறு என்பதை உணர்தல்
வேண்டும் என்பதாம்.
மாயையைத் திரித்து பல்வேறு மந்திரங்களால் அதனைக்
கட்டி, பற்பல
செயல்களை செய்வதற்கு உறுதுணையாக யந்திரங்கள் பலவற்றைக் கொண்டிருக்கும் தனுவாகிய இவ்வுடல், அசத்தறிவுகளை பெறுவதற்கே ஏதுவாய்
நிற்பது. மேலும்
மூவினைப்படுந் திறத்தால் அவற்றைப் பற்றி எழும்
அறிவெலாம் காலவுணர்வோடும் வரும் பேற்றில் அசத்தறிவுகளேயாம். தீபங்களைப் போல ஒளிர்ந்து பிறகு
மாறுவதும் இல்லாது
போவதும் செய்யும். ஆன்மாக்கள் அவற்றோடு உடங்கியைந்து நிற்க அப்படிப்பட்ட அசத்தறிவுகளையேப் பெற்று,
ஆகவே தானும்
அந்த மாயாகாரியங்களில் ஒன்றென
நினைக்கவும் செய்யும். ஆயினும் ஏற்கனவே தெளிவற்றவொன்றாய், இப்பொழுது அகத்தில் புதைக்கப்பட்டு கிடப்பதாய் இருக்கின்ற சத்துமின்றிய அசத்துமின்றிய சிவசத்தாக விளங்கும் சிவஞானத்தைத் தெளிவதே தன் ஆய்வின் வாழ்வின் நோக்கெல்லாம் என்று
ஒர் ஆன்மா
அறியும்போது, தான்
இதனை நோக்கிச் செல்லும் அச்சிறப்பால், அந்த
மாயாத் தனுவோடு
ஒட்டியவாறு இருந்தும் அதனின்று சித்தாகியத் தான்
வேறு என்று
உணரும் என்றவாறு.
முன்னுணர்வாக ஏற்கெனவே அகத்தேக் கிடக்கும் சிவஞானத்தை இன்னும் இன்னும் தெளிவதற்கு உழைக்கும் ஒரு சித்துபொருளே தான் என உணர,
தான் அறியாமையில் கிடக்கின்றோம் என்றும், அந்த
அறியாமையின் காரணமாக
இதுவரை மாயாமல
பந்தத்தில் கிடந்து,
சித்தாகியத் தன்னை
அசித்தாகக் கருதி
வாழ்ந்துள்ளோம் என்று
உணர்ந்து அந்த
மாயாமல பந்தத்தைத் துமிக்கும் என்றுமாம். மாயாகாரியப்பொருட்களோடு மயங்கிக் கிடந்து ஞானசொரூபனாகிய தன்னின்
சொரூபத்தை உணராது
மயங்கிக் கிடத்தலே மாயாமலபந்தம் என்று இதனால்
தெளிவாக்கப்படுகின்றது.
ஆம் ஆன்மா என்பது ஓர் சித்துப்பொருள் மாத்திரமல்ல, அது சிவஞானத்தை ஒருவாறு முன்னுணர்ந்து, முன்னறிவாகப் பெற்று அதனை இன்னும் இன்னும் தெளிவாக்கிட உழைக்கும் ஓர் சித்துப்பொருள் ஆகும்.
இதனால் அநாதி முத்த சித்துருவாகிய இறைவனும் அல்ல ஆகின்றது.
மீண்டும் கூறுகின்றோம்: ஆன்மா ஆன்மாதான், இறைவன் இறைவன் தான், இரண்டும் வெவ்வேறு பொருட்கள், இவை இரண்டும் ஒன்றே எனும் அத்துவித வேதாந்தம் பிழையான ஒன்று, அத்வைதம் என்றால் இதனால் அந்நியமின்மை என்றே ஆகின்றது. ஆன்மா இறைவனோடு ஒன்றித்து வேறற அந்நியமின்றி அவனேத் தானாக நிற்கும். ஆனல் இந்த முத்தி நிலலயிலும் ஆன்மா ஆன்மாதான் இறைவன் இறைவன தான்
இதுவே அத்துவித வேதாந்தம் பிழையென நிறுத்தும் சித்தாந்த முடிபு
தொடரும்
உலகன்
கட்டுரை 30 : ஒன்றே குலம் ஒருவனேத் தேவன் (கடைசி)
ஆன்மாவைப் பற்றிய ஆய்வு உலக மெய்ஞானிகள் பலரால் பண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்மா இல்லை என்பார் , அது அணு அளவினது என்பார் அது உணர்வின் ஓட்டமே என்பார் என்றவாறு பலதிறப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்டி யுள்ளனர்
இந்த முன்றாம் சூத்த்திரத்தின் தனிச் சிறப்பு இவற்றை எல்லாம் எஞ்சாது கண்டு, பிழையென ஏரணவியல் முறையில் காட்டி ஆன்மா பிரம்மமே எனும் அத்துவித வேதாந்தத்தையும் மறுத்து ஆன்மா உண்டு என்றும் அது இறைவன் அல்ல, பரப்பிரமம் அல்ல, இறைவன் எவ்வாறு அநாதியோ அவ்வாறே ஆன்மாவும் அநாதியே என்று நிறுத்திய அற்புதம் இங்கு தான் நிகழ்கின்றது
மேலும் சைவர்களாலும் முற்றும் உணரப்படாது இருக்கும் ஓர் உண்மையும் இச்சூத்திரத்தில் புதைந்து கிடக்கின்றது.
அதுதான் என்ன?
உலகில் வேதியம் மிகவும் கண்டிக்கத்த வர்ணாஸ்ரமத்தை வேதப் பிரமாணத்தின் அடிப்படையில் உண்மையென நிறுத்தி அதுவே இந்து மக்களிடையே சாதிச் சிந்தனை வலுவான ஓர் இடத்தை பிடித்துகொள்ள இடம் தந்துவிட்டது.
ஆனால இவற்றையெல்லாம் எதிர்த்து எல்லா மாந்தர்களும் ஆழத்தில் ஒன்றே , புறத்தில் எவ்வித வேறுபாடுகள் இருந்தாலும் என்ற உண்மையை உலகறியக் காட்டியவர் நம் மெய்கண்டார்தான்
எப்படி?
எல்லா ஆன்மாக்களும் ஒன்றே ஏனெனில் அவை அனைத்தும் வீடுபேறு நல்கக் கூடிய சிவஞானத்தை ஓரளவு முன்னுணர்ந்து, அதாவது முன்னறிவாகப் பெற்று. தெரிந்தோ தெரியாமலோ அந்த சிவஞானத்தை பெறுவான் பொருட்டு வாழ்நாள் நெடுக உழைக்கும் திறத்தவை என்ற உண்மையை மெய்கண்டாரே நிறுத்துகின்றார்.
இது கடைசி எழாம் படிமெய் எடுத்துக்காட்டு வெண்பாவில் விளக்கம் பெருகின்றது
ஞானத்தை முன்னுணர்ந்து நாடில் , அத்தனுவாந்
தானத்தில் வேறாகும் தான்
ஆன்மா, தான் வதியும் இந்த தானமாகிய உடம்பிலிருந்து வேறுபட்டது, ஏனெனில் அதற்கே உரிய இலக்கணம், ஞானமாகிய சிவஞானத்தை ஒருவாறு முன்னுணர்ந்து, முன்னறிவாகப் பெற்று அதனை முற்றாகப் பெறுவான் பொருட்டு அதனையே நாடித் திரியும் ஓர் பொருள் இந்த ஆன்மா என்றுங் குறிக்கப்படுவதைக் காண்க.
ஆம ஒருவன் ஆணாகப் பிறந்தால் என்ன, பெண்ணாகப் பிறந்தால் என்ன, கீழ் சாதியில் பிறந்தால் என்ன, மேற்சாதியில் பிறந்தால் என்ன, அறிவாளியாகப் பிறந்தால் என்ன, அறிவிலியாகப் பிறந்தால் என்ன, கூன் குருடு செவிடு போன்ற பல அங்கக் குறைபாடுகளோடு பிறந்தால் தான் என்ன, மூலத்தில் ஆழத்தில் அனைவரும் ஒன்றே--- அனைவரும் சிவஞானத்தை முன்னறிவாகப் பெற்று அதனை முற்றாக அடைவான் பொருட்டு நாடித் தேடும் திறத்தவை
இதுவே எல்லா மாந்தர்களையும் ஒன்று என உணர வைக்கின்றது
புறத்திலே தோன்றும் பேதங்களைக் கண்டு அகத்திலே ஆழத்திலே இருக்கும் இந்த ஒற்றுமையைக் காணாது போவதே மடமையாகும். இந்த மடமையினாலேயே பல சமுதாய பிணக்குகள் , சாதிச் சண்டைகள் சச்சரவுகள் கொலைவெறிகள், தன்மானத்தையே இழக்கச் செய்து கொல்லாமல் கொல்லுதல் போன்ற கொடூரங்கள்!
சைவ சமயத்தில் சாதி இல்லை, இருக்க முடியாது.
உள்ளபடியே எந்த சமயத்திலும் இருக்க முடியாது
ஒன்றே குலமும் ஒருவனேத் தேவனும் என்று திருமூலர் சொன்னார் என்றால அது காரணமற்ற ஓர் வெற்று உள்ளுணர்வு மாத்திரம் அல்ல, மெய்கண்டார் விளம்பும் அந்த முத்தி முன்னறிவு அனைவர் உள்ளத்திலும் இருக்க அனைவரும்ம் சிவஞானம் தேடித் திரியும் அல்லது திரியவல்ல ஒரே குலந்தான்!
முற்றும்
உலகன்
This series of articles could be made a general reading material for any philosophy, metaphysics students and for studies on religion, Hinduism and Dravidian culture
__._,_.___
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.![]()
__,_._,___