--திருப்பட்டூர் அய்யனார் கோயில்
முன்னுரை
அண்மையில், திருச்சி அருகில் அமைந்துள்ள சிறுகனூரில் இருக்கும் ஸ்ரீஇராஜராஜேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் நடந்த கல்வெட்டியல் பயிற்சி நிகழ்வுக்காகச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி அமைப்பாளர் திரு. ச.பாபு. கல்லூரி உதவிப்பேராசிரியர். தஞ்சைப்பல்கலை வழி தொல்லியல்-கல்வெட்டியல் படித்தவர். முதல் நாள் கல்வெட்டு எழுத்துகள் கற்பித்தலும், அடுத்த நாள், கல்வெட்டு எழுத்துகளை நேரடியாகக் கண்டு படித்தல் முயற்சியும் நடந்தன. சிறுகனூருக்கு அருகிலுள்ள திருப்பட்டூர் அய்யனார் கோயில் கல்வெட்டு எழுத்துகளே நேரடிப் படித்தலுக்குக் களம் அமைத்தன. அவ்வமயம், திருப்பட்டூரில் உள்ள பிற கோயில்களையும் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. திருச்சிப்பகுதியில் அமைந்திருக்கும் தொல்லியல்-வரலாறு தொடர்பான இடங்களைப் பார்க்க இதுவே முதல் வாய்ப்பாகவும் இருந்தது. அதன் பகிர்வு இங்கே.
அய்யனார் கோயிலின் முன்புறத்தோற்றம்
திருப்பட்டூர்
சிறுகனூரிலிருந்து நான்கு கல் (கி.மீ.) தொலைவில் இருக்கும் ஊர் திருப்பட்டூர். இங்கு, பிரம்மபுரீசுவரர் கோயில், அரங்கேற்ற அய்யனார் கோயில், வரதராசப்பெருமாள் கோயில் என்னும் விண்ணகரம், காசி விசுவநாதர் கோயில் ஆகிய பல கோயில்கள் உள்ளன. அய்யனார் கோயிலில் கல்வெட்டுப்படித்தல் நடைபெற்றதெனினும், முதலில் சென்றுபார்த்தது பிரம்மபுரீசுவரர் கோயிலே. அன்று, கோயிலில் மக்களின் கூட்டமிகுதி காரணமாக வரிசையில் நின்று இறைவனைக் கண்டு வெளிவர மட்டுமே இயன்றது. கோயிலின் கட்டிடக்கலைக்கூறுகளையோ, சிற்பக்கலைக்கூறுகளையோ கண்டு ஒளிப்படம் எடுக்க இயலவில்லை. கோயிலில் கல்வெட்டுகளும் காணப்படவில்லை. பிரம்மனுக்குத் தனிச் சன்னதி என்னும் சிறப்பைக்கொண்டுள்ள ஒரு கோவில்.
திருப்பட்டூர்-அய்யனார் கோயில்
கல்வெட்டியல் பயிற்சி வகுப்பினை முடித்துக் கல்வெட்டுகளை நேரில் பார்த்துப் படித்தலுக்குத் தெரிந்தெடுத்த இடம் சிறுகனூருக்கு அருகிலேயே இருந்த திருப்பட்டூர் அய்யனார் கோயிலாக அமைந்தது. கோயிலைப் பார்த்ததும் ஒரு வியப்பு. அய்யனார் கோயில் என்னும் பெயரில் ஒரு பெரிய கற்றளியைப் பார்ப்பது இதுவே முதன்முறை. மூன்று நிலைக் கோபுரம். அதையொட்டிச் சுற்றுச் சுவரோடு கூடிய ஒரு தனிக்கோயில். உள்ளே நுழைந்ததும், சிவன் கோயில்களில் நந்தி மண்டபம் இருப்பதுபோல, ஒரு மண்டபம். அதில், ஒரு யானைச் சிற்பம். அழகான சிற்பம். நுண்மையான செதுக்கல் வேலைப்பாடுகள் காணப்படவில்லை. எனினும், உருண்டு திரண்டு மொழுக்கென்று வடிக்கப்பட்ட அழகான சிற்பம். முன்புறத்தோற்றத்தில், உருண்ட தலைப்பகுதி. அதில் மிகுந்த புடைப்பின்றி ஒரு நெற்றிப்பட்டம் காணப்பட்டது. கண்கள் இருக்கும் பகுதியில், கண்கள் நன்கு செதுக்கப்படவில்லை. யானையின் செவிகள் நன்கு தெளிவாயுள்ளன. வாய்ப்பகுதியில் தொங்கு சதையும், வாயிலிலிருந்து முன்புறமாக வெளிப்படும் தந்தங்களும் தெளிவாக வடிக்கப்பட்டுள்ளன. ஆனால், தந்தங்கள் சிறியவை. எனவே, பக்கவாட்டுத் தோற்றத்தில், தந்தங்கள் துதிக்கையின் வடிவப்பரப்பைத் தாண்டாதவாறு காணப்படுகின்றன. யானையின் துதிக்கை, தரையைத் தொடுமளவு உள்ளது. மற்ற கோயில்களின் அமைப்பைப் போல், வாகன மண்டபத்தின் நேர் எதிரே நுழைவாயில் இல்லை. மாறாக, அர்த்தமண்டபத்தின் சுவர்ப்பகுதியே காணப்பட்டது. அதில், கோட்டம் (கோஷ்டம்) என்னும் கோயிலின் கட்டிடக் கூறும், கோட்டத்தின் நடுவில் ஒரு பலகணியும் உள்ளன. இப்பலகணியின் வழியே மூலவரைக் காணுகின்ற வகையில் ஓர் அமைப்பு. யானையின் முகம் பலகணி வழியாக அய்யனாரைப் பார்த்துக்கொண்டிருக்கும் அமைப்பு. கோயிலின் அதிட்டானப் பகுதி எளிமையானதொன்று. சுற்றுப்பாதையின் தரைப்பகுதியில் சற்றே மறைந்து கீழிறங்கிய நிலையில் அதிட்டானத்தின் கண்டப்பகுதி தெரிந்தது. அடுத்து மேலே, முப்பட்டைக் குமுதமும், கண்டம், பட்டிகைப் பகுதிகளும் உள்ளன. ஜகதிப்பகுதி தரையின் கீழ் புதைந்துபோயுள்ளது. சுவர்ப்பகுதியில், ஆங்காங்கே, தூண்களும், கோட்டங்களும். கோட்டங்களில் சிற்பங்கள் இல்லை. எளிமையான வேலைப்பாடு. கூரைப்பகுதியில், கர்ண கூடுகளும் அவற்றுக்கு மேலே யாளி வரிசை போன்று சதுரக்கற்களின் வரிசையும் காணப்படுகின்றன.
கோயிலின் உள்புறத்தோற்றம்
யானை வாகனம்
பலகணி
கோட்டம்-அதிட்டானம்-எளிய அமைப்புடன்
கோயில் மூலவர் - அரங்கேற்ற அய்யனார்
கோயிலில் மூலவராக, அமர்ந்த நிலையில் அய்யனாரும் அவரது இரு புறங்களில் அவரது இரு மனைவியரான பூரணையும், புஷ்கலையும். கோயில் மூலவரான அய்யனார் “அரங்கேற்ற அய்யனார்” என்னும் பெயர் கொண்டு விளங்குகிறார். இப்பெயர்க் காரணம் பற்றி அறியவரும் செய்திகளாவன:
சுந்தரருடன் திருக்கயிலாயம் சென்ற சேரமான் பெருமாள் நாயனார், திருக்கயிலாய ஞான உலா என்னும் சிற்றிலக்கிய நூலை இயற்றினார். இந்த நூலை, ஈசன், மக்கள் அறியும்படி திருப்பட்டூரில் பிறந்த சாத்தன் அய்யனார் என்பவரைக்கொண்டு திருப்பட்டூரில் அரங்கேறச் செய்தார் என்று கருதப்படுகிறது. இந்த அய்யனாரே அரங்கேற்ற அய்யனார் என்னும் பெயரில் இவ்வூரில் எழுந்தருளியுள்ளார்.
ஆசீவகமும் அய்யனாரும்
“ஆசீவகமும் அய்யனார் வரலாறும்” என்னும் நூலில் அய்யனாரைப் பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள், ஆசிவகத்தைத் தோற்றுவித்த மூவர், அய்யனார் என்னும் பெயரில் தமிழகத்தில் வணங்கப்படுகின்றனர் என்றும், திருப்பட்டூரில் பிறந்த அய்யனார் அம்மூவருள் ஒருவர் என்றும், அவர் சிற்றண்ண(ல்)வாயிலில் (சித்தன்ன வாசல்) மறைந்தார் என்றும் ஆய்வுக்கருத்துகளை முன்வைக்கிறார். திருப்பட்டூரில் பிறந்த மாசாத்தன் என்பவரே மற்கலி என்று அறியப்படுகிறார்; அவர் முதல் தீர்த்தங்கரரான ஆதி நாதரின் வழி வந்த ஒரு தீர்த்தங்கரர் ஆவார்; மகாவீரரின் காலத்தவர்; இருபத்துநான்காவது தீர்த்தங்கரர் என்னும் நிலைக்கு இவரும் மகாவீரரும் போட்டியிட்டனர் எனவும் கருதப்படுகிறது. இவருக்கும் முக்குடை உண்டு; மகாவீரரோடு கருத்து மாறுபட்டு ஆசீவகத்தைத் தோற்றுவித்தவர். மற்கலி வட இந்தியாவைச் சேர்ந்த குஜராத் பகுதியில் பிறந்தவர் எனப் பரவலாக அறியப்படும் கருத்து தவறு; அவர் திருப்பட்டூரில் பிறந்தவர். சிற்றண்ணல் வாயில் குடைவரைக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஜைன முனிவர்கள் மூவரின் கற்சிற்பங்கள் ஆசீவக முனிவர்கள் மூவரைக் குறித்தன என்பதும், அவர்களுள் ஒருவர் வேளிர் மரபில் பிறந்து சிற்றரசராக வாழ்ந்து, துறவியான திருப்பட்டூர் மாசாத்தன்; இரண்டாமவர் பூரணம், பொற்கலை எனும் இரு மனைவியரோடு அருள்பாலிக்கிற பூரண அய்யனார்; மூன்றாவதாக இருப்பவர் அடைக்கலம் காத்த அய்யனார் (பாண்டிய மன்னரின் படைத்தளபதியாக இருந்து துறவியானவர்) என்பதும் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களின் ஆய்வுக் கூற்று. மூவரும், சங்காலத்துப் புலவர்கள் என்பதும் பேராசிரியரின் கருத்து. சித்தன்னவாசல், ஜைனக் குகைத்தளம் அல்ல; அது ஆசீவக இருப்பிடமே. ஜைனத்தைச் சமணம் என்னும் பெயரால் சுட்டுதல் பிழையானது. ஆசீவகம், பௌத்தம், ஜைனம் ஆகிய மூன்றுமே ”ச்0ரமண” என்னும் பொதுப்பெயர் கொண்டவை. ”ச்0ரமண” என்பது தமிழ் வடிவத்தில் “சமண” என்றாதல் இயல்பு. ஆசீவகத்தைத் தோற்றுவித்த மூவருள் ஒருவராகிய மற்கலி என்பவரே தமிழகத்தில் சாஸ்தா-அய்யனார் என வணங்கப்படுகிறார். அய்யனார் பிறந்த ஊர் திருப்பட்டூர் என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள், திருப்பட்டூர் அய்யனார் கோயிலில் உள்ளன என்று பேராசிரியர் கூறுகிறார். யானை, மற்கலி அய்யனாரின் வாகனத்தையும், குதிரை, படைத்தளபதியான அய்யனாரின் வாகனத்தையும் குறிப்பன.
கோயில் கல்வெட்டுகள்
கோயிலின் கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய இரு பகுதிகளிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரண்டாம் இராசேந்திரன், குலோத்துங்கன் ஆகியோரின் கல்வெட்டுகள் இங்குள்ளனவென்று குறிப்புகள் உள்ளன. வழக்கமாக நான் கையாளுகின்ற ஒரு வழியில், மைதா மாவைக் கல்வெட்டு எழுத்துகள் மீது பூசி, ஒரு சில பகுதிகளைப் பயிற்சி மாணவர்க்குப் படித்துக்காட்டினேன். ஒளிப்படங்களும் எடுத்துக்கொண்டேன். அவ்வாறு எடுத்த ஒளிப்படங்களைக் கொண்டு, கல்வெட்டுகளின் பகுதிகளைப் படித்ததில் தெரியவரும் செய்திகள் கீழே:
கல்வெட்டு- பாடம்-1
கல்வெட்டுப் பாடம்-1
1 ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள்
2 தேவற்கு யாண்டு 4-வது (தநு) நாயற்று
3 து தசமியும் செவ்வாக்கிழமையும் பெற்[ற]
4 ட கரை இரா[ச]ரா[ச] வளநாட்டுத் திருப்பிட[வூர்]
5 (கா)ன …… சபையும் திருப்பி[டவூர்] ……பிள்……
6 பந் தெற்றி உடைய நாயனார் கோயிற்
7 வரர் ஸ்ரீ மாகேச்0வ[ர] கங்காணி செய்வா
8 [கோ]யிற் கணக்கனுக்கு இந்த கோயிற்காணி
9 [பி]ராமணன் காச்0யபன் மூவாயிரத்தொரு
10 [ம]ணவாள பட்டனேன் வெட்டி
11 [நா]யனார் திருவிளக்கில் செலவிலி சு(ற்ற)……
12 டி விட்ட புறையோம்பியில் மன்றாடி
13 வெம்பனை நான்குடி விற்று போ…..னில் இவன் ஆட்டை
14 க்கு சூலநாழியா[ல்] நெய் நாழி உரியும் நான் கைக்கொண்டு
15 இவ்வாண்டு முதல் குன்றமெறிந்த பெருமாள் கோயிலிலே
கல்வெட்டுச் செய்திகள்
மேலே காட்டிய கல்வெட்டு வரிகளில் உள்ள ”திரிபுவனச் சக்கரவத்திகள்” என்னும் தொடரிலிருந்து, இக்கல்வெட்டு குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டு எனக் கருதலாம். ஆனால் மூன்று குலோத்துங்கர்கள் இருப்பதால் கல்வெட்டில் குறிக்கப்பெற்ற அரசன் எந்தக் குலோத்துங்கன் என்பது தெளிவில்லை. ”யாண்டு 4-வது” என்னும் தொடர் அரசனின் நான்காம் ஆட்சியாண்டைக் குறிப்பது. எனவே, கல்வெட்டின் காலம் கி.பி. 1074, 1137, 1182 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஒன்றாகலாம். எழுத்தமைதியும் 12-ஆம் நூற்றாண்டு எனக்கருதுமாறுள்ளது. தமிழில் உள்ள அறுபது ஆண்டுகளைக் கொண்ட வட்டத்தின் ஆண்டுப்பெயர் கல்வெட்டில் இடம் பெறவில்லை. ஆனால், தமிழ் மாதம், “தநு நா(ஞா)யறு” என்று குறிப்பிடப்பெற்றுள்ளது. தனு ஞாயிறு, மார்கழி மாதத்தைக் குறிக்கும். சோழர் காலக் கல்வெட்டுகளில், மேழம் தொடங்கி மீனம் வரையுள்ள பன்னிரண்டு இராசிப் பெயர்களே சித்திரை தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதங்களைக் குறித்தன. திருப்பட்டூர், சோழர் காலத்தில் இராசராசவளநாட்டில் இருந்துள்ளது என்றும், திருப்பட்டூரின் பழம்பெயர் திருப்பிடவூர் என்பதும் கல்வெட்டு வாயிலாக நாம் அறியலாகும். தெற்றி உடைய நாயனார் கோயில் என்பது இந்த அய்யனார் கோயிலைக் குறிப்பதாகலாம். கோயிலுக்கு விளக்கெரிக்கக் கொடை அளிக்கப்பட்டுள்ளது என்பதும், அந்த நிவந்தத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்ற மணவாள பட்டன் என்பான் மன்றாடி (இடையன்) ஒருவனிடமிருந்து நாள் ஒன்றுக்கு ஒன்றரை நாழி நெய் ஓர் ஆட்டைக்கு (ஆண்டுக்கு)ப் பெற்று விளக்கெரிக்கிறான். நெய்யை அளக்கச் சூல நாழி என்னும் அளவுக்கருவி பயன்பட்டது. இந்த மணவாள பட்டன் கோயிற் காணி (கோயிலில் பூசை உரிமை) உடையவன். இவனுடைய கோத்திரம் காச்0யப என்பதாகும். இவனுடைய பெயரில் முன்னொட்டாக வருகின்ற “மூவாயிரத்தொரு” என்பது பிராமணக் குடிக்குழுவினர் பெயர்களுள் ஒன்றைக்குறிக்கும். நாலாயிரவன், எண்ணாயிரவன் எனப் பிராமணப் குடிப்பெயர்கள் பல, கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இராசேந்திர சோழன் கங்கைக் கரையிலிருந்து சைவ ஆச்சாரியர்களைக் கொணர்ந்து தன் தலைநகரில் குடியேற்றினான். பல்லவர்களும் நர்மதைப் பகுதியிலிருந்து வேதம் வல்லாரைத் தமிழகத்தில் குடியேறச் செய்தனர். அஷ்ட ஸஹஸ்ர, பிருஹத் சரண, வடம ஆகிய பெயர்கள், இவ்வாறு இடம்பெயர்ந்து தமிழகத்தில் குடிபுகுந்த பிராமணரைக் குறிப்பனவே. இந்த இடத்தில், உ.வே.சா. அவர்களின் கூற்று நினைவுக்கு வருகிறது. ”என் சரித்திரம்” என்னும் தம் நூலில், “பிராமணர்களுக்குள் அஷ்ட ஸகஸ்ரம் என்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம். அந்தப்பிரிவைச் சேர்ந்தவன் நான். அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ’எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்கவேண்டும். பிறகு அவர்கள் பல இடங்களிற் பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாகப் பெருகிய காலத்திலும் அஷ்ட ஸகஸ்ரம் என்ற பெயரே அவர்களுக்கு நிலைத்துவிட்டது” என்று குறிப்பிடுகிறார். சோழர்கால எண்ணாயிரவர் கி.பி. 19-ஆம் நூற்றண்டில் உ.வே.சா. காலத்திலும் தொடர்ந்து குடிப்பெயரைக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விளக்கெரிக்கும் இந்நிவந்தத்தை நிறைவேற்றும் செய்தியை மணவாள பட்டன், கோயிலின் நிருவாகத்தாரான ஸ்ரீகார்யம், ஸ்ரீமாகேசுவர கங்காணி, கோயில் கணக்கை எழுதுகின்ற கோயிற்கணக்கன் ஆகியோருக்குத் தெரிவித்துப் பதிவு செய்வதைக் கல்வெட்டு குறிக்கிறது. கல்வெட்டில் வருகின்ற “குன்றமெறிந்த பெருமாள் கோயில்” எந்தக் கோயிலைக் குறிக்கிறது என்பது தெளிவாகவில்லை.
கல்வெட்டு- பாடம்-2
கல்வெட்டுப் பாடம்-2
1 ஸ்ரீராஜராஜதேவந் தலை உடை
2 பூர்வபக்ஷ …….. செம்பியதரை[யன்]
3 பெற்ற ரேவதி நாள் …… த்துணைப்பெரு[மாள்]
4 திருப்பிடவூர் நாட்டு தே….. டையான் திருச்சி..
5 பிள்ளையார் (திருவேம்)
6 ஸ்ரீகாரியம் செய்[வார்]
7 செய்வார் தேவகன்மி …
8 உடைய சிவப்பி[ராமணன்]
9 மூவாயிரத்தொருவன் நாயகனான ம..
10 வெட்டினபடியாவது இந்நாய[னார்]
11 சுற்றடை நெ(யி)ல் நான்கு
12 மன்றாடி பணகுடையான்
கல்வெட்டுச் செய்திகள்
இக்கல்வெட்டும் மேலே கண்ட முதற்கல்வெட்டுப் போன்றதொன்று எனலாம். கோயிலில் பணி செய்கின்ற தேவகன்மியரில் ஒருவனான, கோயிற் காணியுடைய சிவப்பிராமணன் மூவாயிரத்தொருவன் நாயகன், நிவந்தம் ஒன்றை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக் கல்வெட்டிக்கொடுக்கிறான். நிவந்தம் விளக்கெரிப்பதே ஆகலாம்; ஏனெனில், மன்றாடி பணகுடையான் என்பவன் குறிக்கப்பெறுகிறான். கல்வெட்டில் வருகின்ற ஸ்ரீராஜராஜ தேவந் என்னும் பெயர், இரண்டாம் இராசராசனை அல்லது மூன்றாம் இராசராசனைக் குறிக்கலாம். இவர்களின் ஆட்சியாண்டுகள் முறையே கி.பி. 1146-1173, 1178-1218. எனவே, கல்வெட்டின் காலம் கி.பி. 12-13 –ஆம் நூற்றாண்டாகலாம். திருப்பிடவூர், ஒரு நாட்டுப்பிரிவாகவும் இருந்துள்ளது. செம்பியதரையன் என்பவன் நிவந்தம் அளித்தவன் ஆகலாம். பெயரைக் கொண்டு, இவன் ஓர் உயர் அரசு அதிகாரி எனக்கொள்ளலாம்.
கல்வெட்டு- பாடம்-3
கல்வெட்டுப் பாடம்-3
1 தலை உடையான் பாமான தேவர் எழுத்து இவை ஆண்மகன் அரசூருடையான் சுந்தரபாண்(டியன் எழுத்து)
2 செம்பியதரையன் எழுத்து இவை மேலை சூருடையான் சேரமான் தோழன் எழுத்து இவை
3 துணைப்பெருமாள் எழுத்து இவை மேலை சூருடையான் சமைய மந்திரி எழுத்து இவை மேலை
4 திருச்சிற்றம்பல வேளான் எழுத்து இ[வை] மருத்தூருடையான் நம்புசெய்வான் எழுத்து
5 இவை எதிர்மலை உடையான் வன்னாவுடையான் இவை ஆண்ம[கன்]சூருடையான்
6 ப்பெருமாள் எழுத்து இவை வந்தலை உடையான் வீரராசேந்திர சோழ வேளான் எழுத்து
7 [இ]வை நல்லூருடையான் தென்னகோன் எழுத்து இவை (ச0டையான் ஆதன்ம ஆழகியான்
8 இவை சிறுவளைப்பூருடையான் ஆவத்துக்காத்தான் எழுத்து இவை குளகானத்துடையான்
9 வல்லவரையன் எழுத்து …உடையான் அஞ்சாதபெருமாள் எழுத்து
10 இவை சாத்தனுடையான் பிச்சாண்டான் [எழுத்து]
11 இவை சாத்தனுடையான் சம்பந்தப்பெருமாள் [எழுத்து]
12 விசையரையன் எழுத்து இவை உம்பளக்கானத்துடை[யான் எழுத்து]
13 இவை சாத்தனுடையான் தே(வ)ப்பெ[ருமாள்] எழுத்து இவை மருதத்[தூர்]
14 குளகானத்துடை[யான் எழுத்து]
15 பழனதியரையர் எழுத்து
16 நம்பு செய்வான் எழுத்து ஆதன்ம அழகியான்…
கல்வெட்டுச் செய்திகள்
கல்வெட்டுகளின் இறுதியில், நிவந்தங்களின் விளக்கமான குறிப்புகளுக்குப் பின்னர், சான்றொப்பம் இடுவோரின் பெயர்கள் பட்டியலாகத் தரப்படும். பட்டியலில் உள்ள பெயர்கள் மிகுதியாகக் காணப்படின் நிவந்தங்கள் பெரிய அளவினையுடையதாகவும், பெரிய அதிகாரிகளின் தொடர்பு கொண்டதாகவும் இருப்பது வழக்கம். அவ்வாறான ஒரு கல்வெட்டின் பகுதியே இது. பலரின் பெயர்களிலிருந்து பெரிய அதிகாரிகள் குறிக்கப்பெறுவதைக் காண்கிறோம். தவிர, பல ஊர்ப்பெயர்களையும் காண்கிறோம். அரசூருடையான், நல்லூருடையான், வந்தலை உடையான், சிறுவளைப்பூருடையான் என்பன ஊர்ப்பெயர் குறித்த ஆள்களின் பெயர்கள். சிறப்பான பகுதி என்னவெனில், ”சாத்தனுடையான்” என்னும் தொடர் மூன்று பெயர்களில் காணப்படுகிறது. இத்தொடர், ஊர்ப்பெயரைக் குறிப்பதாய்க் காணப்பெறவில்லை. சாத்தன் என்னும் அய்யனாருடன் உள்ள ஏதோவொரு தொடர்பைக் குறிக்கிறது எனலாம். இது ஆய்வுக்குரியது.
கல்வெட்டுப் பாடம்-4
1 செம்பாதியும் இந்த நிலம் அறுவேலியும் விற்றுக் குடுத்துக்கொள்வதான
எம்மிலிசைந்த விலைப்பொருள் ளன்றாடு நற்காசு நூறு இக்காசு நூறும்
ஆவணக்களியே கைச்செல(வ)றக்கொண்டு விடக்கடவோமாகவும்
2 லியுந் நீர்க்கோ(வை)யுட்பட இக்குளமிரண்டும் நத்தத்திற் செம்பாதியும்
விலைக்கற விற்றுப் பொருளறக்கொண்டு விற்று விலையாவணஞ் செய்து
குடுத்தோம் இப்போகழியுடையார்
கல்வெட்டு-4
கல்வெட்டுச் செய்திகள்
கோயிலுக்கு நிலம் கொடையாக அளிக்கப்படும் செய்தியைச் சொல்லும் ஒரு கல்வெட்டுப் பகுதி. ஊர்ச்சபையினர் நிலத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கோயிலுக்களிப்பதான ஒரு நடைமுறை இங்கு குறிப்பிடப்பெறுகிறது. விலைப் பொருள் நூறு காசுகள் என்னும் இசைவு ஏற்படுகிறது. இக்காசு, இந்நிகழ்வு நடைபெறும் காலத்தே புழக்கத்தில் இருக்கும் காசு என்பதைத் தெளிவுபடுத்தவேண்டி “அன்றாடு நற்காசு” என்னும் தொடர் பயன்படுத்தப்பெறுகிறது. ஆங்கிலத்தில் “IN VOGUE“ என்னும் தொடருக்கு இணையானதாகக் கொள்ளலாம். நிகழ்வின்போது ஆட்சியில் இருக்கும் அரசனைக் குறிக்கவும் இதுபோன்ற ஒரு தொடர் கல்வெட்டுகளில் பயில்வதைக் காணலாம். அத்தொடராவது : “அன்றாள் கோ”. அதாவது, ஆட்சியில் இருக்கும் அரசன். இது போன்ற நிலவிற்பனை பற்றிய கல்வெட்டுகளில் பயிலும் “ஆவணம்” என்னும் சொல் விலை என்னும் பொருளுடையது. ஆவணக்களி என்பது ஆவணக்களமாகும்; அதாவது ஊரறிய விற்பனை நடைபெறுமிடம். விலையாவணம் என்பது, விற்றதற்கும், விலைப்பொருள் செலுத்தப்பட்டதற்கும் கொடுத்த எழுத்துச் சான்றைக் குறிக்கும். விற்கப்படும் நிலம் ஆறு வேலி அளவுடையது. இரு குளங்களும் நத்தத்தில் பாதியும் இந்த நிலத்தில் அடங்கும். நத்தம் என்பது குடியிருப்புக்கான நிலம். செம்பாதி என்னும் சொல்லாட்சி கருதத்தக்கது. சரி பாதி என்னும் பொருளுடைய இச்சொல்லை மதுரைப்பகுதியில் ஆங்கில வாடை அறியாதோர் பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். கல்வெட்டில் காணப்பெறும் ‘போகழியுடையார்’ என்னும் தொடர் குறிப்பது யாரை எனப் புலப்படவில்லை.
கல்வெட்டு-5
கல்வெட்டுப் பாடம்-5
1 பிலவங்க வருஷம் மாசி …. வார்த்தறை புண்ணிய காலத்து கோட்டை
வங்கிஷத்து சிக்கண நாயக்கர் குமாரர் கெம்பமாயண நாயக்கர் திருப்பிட ஊர்
மஹாசெனங்களில்
2 நானாகோத்திரத்தில் பேர் விபரத்தில் குடுத்த பட்டையம் நாலுக்கு மேற்படி
ஊர் நஞ்செய் நிலத்தில் கீழை மதகுப் பாச்சலில் சேத்த இழுவைப்படியால் குழி
……. இதுவும் புஞ்செ[ய்] குழி……. இந்த
3 நஞ்செ[ய்] குழி ரெண்டாயிரமும் இயக்கு இட்டு அளந்து நிறுத்தின தாழை
ஓடைக்குக் கிழக்கு நாதத்தோணி களருக்கு வடக்குக் கீழை மேட்டு
வாய்க்காலுக்கு மேற்கு ஏரிகரைக்குத் தெற்கு நான்கு எல்லைக்கு உட்பட்ட
நஞ்செய்
4 குழி இரண்டாயிரமும் புஞ்செய் குழி இரண்டாயிரமும் முன் நடந்து வருகிற
தேவதானம் திருவிடை ஆட்டம் பட்டவிறுத்தி பூதானம் நஞ்செய் புஞ்செய்
இறையிலியும் அனுப்பித்துக் கொள்ளவும் இத்தன்மத்துக்கு அகிதம் பண்ணி
5 னவன் கெங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்திலே போகக்
கடவன்
6 நஞ்செய்க்கு அளவுகோல் அடி 27 புஞ்செய்க்கு அளவுகோல் அடி 30
கல்வெட்டுச் செய்திகள்
இக்கல்வெட்டு நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. கல்வெட்டின் எழுத்தமைதியும், சொல் நடையும் சோழர் காலக் கல்வெட்டுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளதைக் காணலாம். விசயநகரப் பேரரசின் ஆட்சியும், அதைத் தொடர்ந்த நாயக்கர் ஆட்சியும் தெலுங்கர்களால் நடத்தப்பெற்றதன் விளைவாகத் தமிழ்மொழி சீர்குலைவுற்றது என்பதை மறுக்கவியலாது. சோழர் காலக் கல்வெட்டில் பயின்ற சில சொற்கள் இக்கல்வெட்டில் (நாயக்கர் காலத்தில்) மாற்றம் பெற்றதைக் கீழே காண்க:
யாண்டு, ஆட்டை - வருஷம்
ஊரோம் – மஹாசெனங்கள்
கல்வெட்டு, நிலக்கொடையைக் குறிக்கிறது. நன்செய் நிலம் இரண்டாயிரம் குழி; புன்செய் நிலம் இரண்டாயிரம் குழி. நிலத்துக்கு எல்லைகள் குறிப்பிடப்படுகின்றன. திருப்பட்டுர், திருப்பிடவூர் என்றே நாயக்கர் காலத்திலும் வழங்கிற்று. கல்வெட்டின் காலம் கி.பி.16-17 நூற்றாண்டு எனலாம். தேவதானம், சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலத்தைக் குறிக்கும்; திருவிடையாட்டம், விண்ணகரத்துக்கு (பெருமாள் கோயிலுக்கு) அளிக்கப்பட்ட நிலத்தைக் குறிக்கும். இவ்விரண்டு வழக்குச் சொற்களும் சோழர் காலந்தொட்டு இருப்பவை. ஆனால், பட்ட விருத்தி என்பது விசயநகரர்/நாயக்கர் காலத்தில் புகுந்தது. வேதம் பயில்வோருக்குக் கொடுத்த கொடை நிலம். இந்த நிலக்கொடைக்குக் கெடுதி செய்வோர் கங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர் என்னும் கருத்து விசயநகரர்/நாயக்கர் காலக் கல்வெட்டுகளில் காணப்படுவது. கல்வெட்டின் இறுதியில், நிலத்தை அளக்கப் பயன்பட்ட அளவுகோலைப்பற்றிய குறிப்பு உள்ளது. நன்செய் நிலத்துக்கு 27 அடி அளவுகோலும், புன்செய் நிலத்துக்கு 30 அடி அளவுகோலும் பயன்பட்டன. சோழர் காலத்தில், 12, 16 அடிக் கோல்கள் பயன்பாட்டில் இருந்தன. வங்கிஷம் என்பது வம்சம் என்பதன் திரிபு. அகிதம் என்பது தீமையைக் குறிக்கும்.
கல்வெட்டு-6 - நிலைக்கால் -1
கல்வெட்டுப் பாடம்-6-1
(நுழைவாயில் கோபுர நிலைக்காலில் காணப்படுவது)
1 ஸ்வஸ்தி
2 ஸ்ரீ இந்த
3 திருக்கோ
4 புரம் எ(டு)
5 ப்பித்தா
6 ந் தெற்றி
7 ஆதித்த
8 னா ந
9 க
10 த்த
11 ப்பிச்ச
12 ன் இது
13 திரு (ஆம்)
14 பபாடி
15 நாட்டா
16 ன் இ
17 த்தந்ம
18 ம் ரக்ஷி
19 த்தாந் உ
20 டைய
21 ஸ்ரீபாத
22 ம் எந்த
23 லை மே
24 லது ||-
கல்வெட்டுச் செய்திகள்
கோயிலின் வாயிற்புறக்கோபுரத்தின் நிலைக்கால்கள் இரண்டிலும் இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றில் முதல் கல்வெட்டு மேலே குறித்தது. கோபுரத்தை எடுப்பித்தவன் தெற்றி ஆதித்தன் என்னும் …..பிச்சன் ஆவான். தெற்றி ஆதித்தன் என்பது அவனின் இயற்பெயர். ”தெற்றி” என்னும் பெயர் முதல் கல்வெட்டில் காணப்பெறும் இறைவர் பெயருடன் தொடர்புடையது எனலாம். அவனுடைய சிறப்புப் பெயர் தெளிவாகப் புலப்படவில்லை. பிச்சன் என்று முடிகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி, இதன் காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டாகலாம் எனக்கருதும் வண்ணம் உள்ளது. ஆம்பபாடி என்னும் ஒரு நாட்டுப்பிரிவும் குறிக்கப்படுகிறது.
கல்வெட்டு-6 - நிலைக்கால்-2
கல்வெட்டுப் பாடம்-6-2
(நுழைவாயில் கோபுர நிலைக்காலில் காணப்படுவது)
1 ஸ்வஸ்தி
2 ஸ்ரீ அரை
3 யன் ராஜ
4 ராஜனான
5 மதுராந்த
6 க இளங்
7 கோவே
8 ளான் |||-
கல்வெட்டுச் செய்திகள்
இரண்டாம் நிலைக்காலில் உள்ள இக்கல்வெட்டு, அரையன் ராஜராஜனான மதுராந்தக இளங்கோ வேளான் என்னும் பெயரை மட்டும் கொண்டுள்ளது. நுழைவாயிற் கோபுரம் எடுப்பித்ததில் இவன் பங்கு என்ன என்னும் குறிப்பு கல்வெட்டில் இல்லை. இப்பெயரில், அரையன் ராஜராஜன் என்பது அவனது இயற்பெயர். மதுராந்தக இளங்கோ வேளான் என்பது சிறப்புப் பெயர். தெற்றி ஆதித்தன், அரையன் ராஜராஜன் ஆகிய இருவருமே அரசு அதிகாரிகளாய் இருந்திருக்க வேண்டும்.
யனைவாகனச் சிற்பமண்டபத்தின் தூண்களிலும், எதிரில் உள்ள பலகணியின் இரு புறங்களிலும் கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் தெளிவாயில்லை.
முடிவுரை
கோயிலின் கல்வெட்டுகள் முழுவதையும் படம் எடுத்தோ, படியெடுத்தோ மீண்டும் படித்த பின்னரே, கோயிலைப்பற்றியும், இறைவராக எழுந்தருளியுள்ள அய்யனார் பற்றியும் மேலும் பல செய்திகள் புலப்படும். தற்போது படித்த கல்வெட்டுகளில் அய்யனார் பெயர் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டுகள் யாவும் மீளாய்வு செய்யப்படவேண்டும்.
கல்வெட்டுகளை மாணாக்கருக்குப் படித்துக்காட்டிய பின்னர், அவர்களுக்குப் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கி நிகழ்ச்சிகளை முடித்தோம். கல்வெட்டுகளின் எழுத்துகள், கல்வெட்டுப் பாடங்கள், அவற்றின் செய்திகள் ஆகியவற்றின் அறிமுகம் கிடைத்த நிலையில் கல்வியியல் கல்லூரியின் தாளாளர் திரு.சிவலிங்கம் அவர்கள் கல்வெட்டுகளின் அருமையை அறிந்து வியந்து மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சிகளின் போது முழுதும் இருந்து மாணாக்கருக்குச் சான்றிதழ் வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்வுகளில், புத்த பிக்கு மௌரியர் புத்தா அவர்கள் உடன் இருந்தார். இவர், தென் இந்தியாவில் பௌத்தம் பற்றிய தொல்லியல் ஆய்வினை மேற்கொண்டு வருபவர். தம் ஆய்வு குறித்த நூலொன்றினையும் வெளியிட்டுள்ளார்.
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஆம் ஐயா.மற்கலி கோசலரை ஐயனாரிடம் தொடர்புப்படுத்துவது மிகை. நேரிடையான சான்றுகள் இல்லை.தற்போதுள்ள ஐயனார் உருவத்திற்கும் ஆஜீவகத்திற்கும் சம்பந்தமில்லை. ஐயானார் அவரது தேவியர்கள் தொடர்புமிக பிற்காலத்தியது. புராணக்காலத்திற்கு பிறகு எழுந்தது. அப்போது ஆஜீவகம் தமிழ்நாட்டில் இல்லை.பேரா.க.நெடுஞ்செழியனாரிடன் நேரிடையாக பேசியவன் என்ற முறையில், அவரது கருத்துகள் நுனிப்புல்மேய்வோர்களை மயக்கும் கருத்துகள். அவர் வைக்கும் கருத்துகளை மிக எளிதில் மறுத்துவிட முடியும்.சிரமண சமயங்கள் தங்களுக்குள் சில கருத்துகள் பரிமாறிக்கொண்டன என்பது உண்மை. ஆயின், எல்லாம்ஆஜீவக சமயத்திலிருந்து கடன் பெற்றன என்பது உண்மைக்கு மாறானது. சிரமண தத்துவங்கள் தொடர்சங்கலிப்போல். ஒன்று விட்ட இடத்திலிருந்து மற்றோன்று தொடரும். இதில் ஒரு சின்ன சங்கலித்துண்டைவைத்துக்கொண்டு மொத்த சங்கிலித்தொடரும் ஆஜீவம சார்ந்தது என்ற சொலவது மிக முரணானது.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Sunday, July 8, 2018 at 6:31:17 PM UTC-7, நரசிங்கபுரத்தான் wrote:உயர்திரு கணேசன் ஐயாக. நெடுஞ்செழியன் போன்றோரின் எழுத்துகள் பல தமிழ் இளைஞர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.- நானும் குழப்பத்தில் தான் உள்ளேன் அவரின் நூல் தெளிவினை அளிக்கவில்லை . ஆனால் சரியான மறுப்பும் இல்லை.
சிலப்பதிகாரத்தில் தான் நமக்கு சாத்தன் வருகிறான். இது ஓர் இந்தோ-ஈரானியச் சொல்.சக வம்மிசத்தவர்கள் ஆண்டபோது உருவான சொல்.
- இல்லைசக வம்சத்தவர்கள் இந்தியா வருகை பெரிய மாற்றத்தை உண்டு செய்தது. பாண்டவர்கள் சக வம்சத்தவர்கள். மகாவீரர், புத்தர் சகர்களோடு தொடர்புண்டு.அதனைக் குறிப்பிட்டேன்.
நா. கணேசன்புறநானூறு 395
மென் புலத்து வயல் உழவர்வன் புலத்துப் பகடு விட்டு,குறு முயலின் குழைச் சூட்டொடுநெடு வாளைப் பல் உவியல்,பழஞ் சோற்றுப் புகவு அருந்தி, 5புதல் தளவின் பூச் சூடி,...........................................................................................அரியலாருந்து;ஆமனைக் கோழிப் பைம் பயிரின்னே,கானக் கோழிக் கவர் குரலொடு 10நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து;இவேய் அன்ன மென் தோளால்,மயில் அன்ன மென் சாயலார்,கிளி கடியின்னே,அகல் அள்ளல் புள் இரீஇயுந்து; 15ஈஆங்கு அப் பல நல்ல புலன் அணியும்சீர் சான்ற விழுச் சிறப்பின்,சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன்செல்லா நல் இசை உறந்தைக் குணாது,நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர் 20அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!உமுன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி,கதிர் நனி செ ...................................... மாலை,தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின்,தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு, 25ஊஆங்கு நின்ற எற்கண்டு,சிறிதும் நில்லான், பெரிதும் கூறான்,அருங் கலம் வரவே அருளினன் வேண்டி,...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப்பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை 30என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு,அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே;எஅகன் ஞாலம் பெரிது வெம்பினும்,மிக வானுள் எரி தோன்றினும்,குள மீனொடும் தாள் புகையினும், 35பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல்பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி,'விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!' என,உள்ளதும் இல்லதும் அறியாது,ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன் தாளே! 40மிகப் பெரிய பாடல்திணை பாடாண் திணை; துறை கடைநிலை.சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டுசுரேஷ்குமார்
சாத்தன் பற்றிய துளசி.இராமசாமி அவர்களின் முகநூல் பதிவு.இரா.பா
On Mon, Jul 9, 2018 at 2:54 PM Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:அன்பின் சுரேஷ்,ஆம். சங்க இலக்க்கியத்தில் சாத்தன் என்ற சொல் பயின்று வருகிறது. அதனால், சாத்தன் என்றால்மற்கலி ஆகிவிடுவாரா?தமிழ் இலக்கியங்களில் பார்த்தால், சாத்தன் என்ற சொல் புத்த சமயிகள் தங்கள் பெயராக வைத்திருப்பதுதெரியும். புத்தனுக்கே சாத்தன் என்ற பெயருண்டு. சாத்தய்யா, சாத்தையன் என்ற பெயர்கள் சில பத்தாண்டுகளுக்குமுன் எங்கள் சமய்த்தவரிடம் வைக்கும் வழக்கமுண்டு. (அகஸ்த்தியப்பன் என்ற பெயரில் சிலர் இன்றும் உண்டு.)பொதுவாக, சாத்தன் என்பது வாணிபம் செய்தவனுக்கு சிறப்பு பெயராக சொல்லப்பட்டது. சீத்தலை சாத்தனார்என்ற விளிக்கூட சாத்துவேலை செய்ததினால் சாத்தனார் என்று அழைக்கப்பட்டிருக்கவேண்டும். அவர் இயற்பெயர்வேறாகயிருக்கலாம். செட்டி, பண்டாரி போன்ற சொற்கள் உணர்த்தி நிற்பதும் இதற்கு சான்று.இப்படி நேரிடையான தரவுகள் இருக்கும்போது அவற்றை மறுக்க, மிக உறுதியான அக/புறத்தரவுகள் கொடுத்து, மறுக்கவேண்டும். எனக்கு தெரிந்து பேரா.க.நெ அவர்கள் நூலிலோ, மற்றவர் நூலிலோ யான் படிக்கவில்லை. தற்போதுஅப்படியாராவது எழுதியிருந்தால், இங்கு கொடுக்கவும்.நிற்க!அருகன் என்பதற்கு அருகிலிருப்பவன் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படி பொருள் கொள்ள முடியுமா?தெரியவில்லை. அருகன் என்பது வடமொழியான அர்ஹத் என்ற சொல்லினிடி பிறந்த சொல்லாகும். அருகன்தமிழ் எழுத்து என்பதை ஏற்கேன். அர்ஹத் என்றால் அருகதை உடையவன் என்று பொருள். அதனடியேதான்அருகன் என்ற பதத்திற்கும் பொருள் கொள்ளவேண்டும். அதைவிடுத்து, அருகன் என்ற சொல்லை தமிழாகபாவித்து தமிழில் பொருள் கொள்ளக்கூடாது.அதன்படியே, ஆசீவகம் என்பதற்கு முதலில் அது தமிழ் பெயரா அல்லது வடமொழி பெயரா என்று உறுதிப்படுத்திக்கொண்டு பிறகு ஆசீவகம் என்ற பதத்திற்கு பொருள் காண முனையவேண்டும்.ஆசிவகமா, ஆசீவகமா, ஆசு ஈவு அகமா, அற்றுவிகமா, ஆற்றுவிகமா, அஜிவகமா, ஆஜிவகமா, அஜீவகமா என்ற பெயர் குழப்பம் இருக்கும்போது, அடுக்கடுக்காக ஆசீவகம்பற்றி கண்டபடி உளறிக் கொட்டிக்கொண்டிருப்பது ஆராய்ச்சி ஆகிவிடுமா என்ன?இவ்வகை ஆராய்ச்சிகள் எதை ஒத்தது தெரியுமா?நாம் தமிழர் கட்சி இன்று தமிழரிடைய வைக்கும் குழப்ப அரசியலை ஒத்தது.ஆஜிவகம் என்ற சொல் வடசொல். ஆஜிவக கோட்பாடுகள் தமிழரிடையே ஒரு காலத்தில் புகுந்திருக்கலாம். சமயீணம்,புத்தம் கோட்பாடுகள் எப்படி தமிழரிடையே புகுந்தனவோ அவ்வாறு ஆஜிவகம் தமிழகத்தில் வெளியிருந்துபுகுந்த தத்துவந் தான். இதை மறுக்க மிக உறுதியான சான்றுகள் கொண்டு மறுத்தாலன்றி ஏற்கமுடியாது.ஆசிவகம் என்ற சொல்லாடல் தமிழிலக்கியத்தில் மொத்தமாக 10 இடங்களுக்கு மேல் இராது. தமிழர்கள் ஆசிவகம்சார்ந்தவர்கள் என்றால் எத்தனை எத்தனை சான்றாதாரங்கள் நமக்கு கிடைத்திருக்கவேண்டும். எல்லாவற்றையும்மற்ற சமயிகள் அழித்துவிட்டார்கள் என்று மறுக்க எண்ணினால் அது ஆராய்ச்சியின்கண் சாலாது. எல்லா சமயிகளும்அவ்வாறே சொல்லிசென்றால் யார்க்கூற்றை ஏற்பது என்றாகிவிடும்.ஆதலால், சாத்தன் என்ற பெயர் வருவதை வைத்து சாத்தன் என்றால் மற்கலி என்றும் ஆசீவகம் தான் தமிழர்கள் சமயம்என்பது ஆராய்ச்சியின் கண் அமையாது. என்னை?(அது சரி, மற்கலி கோசர் தமிழா அல்லது வடமொழி சொல்லா.... :-))இரா.பா
On Mon, Jul 9, 2018 at 7:01 AM நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com> wrote:
உயர்திரு கணேசன் ஐயா
க. நெடுஞ்செழியன் போன்றோரின் எழுத்துகள் பல தமிழ் இளைஞகளைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.
- நானும் குழப்பத்தில் தான் உள்ளேன் அவரின் நூல் தெளிவினை அளிக்கவில்லை . ஆனால் சரியான மறுப்பும் இல்லை.சிலப்பதிகாரத்தில் தான் நமக்கு சாத்தன் வருகிறான். இது ஓர் இந்தோ-ஈரானியச் சொல்.சக வம்மிசத்தவர்கள் ஆண்டபோது உருவான சொல்.
- இல்லை
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இரா.பா
On Mon, Jul 9, 2018 at 7:01 AM நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com> wrote:
உயர்திரு கணேசன் ஐயா
க. நெடுஞ்செழியன் போன்றோரின் எழுத்துகள் பல தமிழ் இளைஞர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.
--
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
உயர்திரு பானு குமார் அவர்களுக்கு .வணக்கம்தமிழ் சமணம் குறித்து அறிய தங்கள் வலைப்பூவும் . மின்தமிழ் மடல்களும் எனக்கு மிகுந்த பயனாக உள்ளது . நன்றிதற்சமயம் ஆசீவிகம் குறித்த தேடலில் உள்ளேன் .
அய்யனார் எனும் சாத்தன் குறித்த தேடலில் .சமண சாத்தன் எனும் பிரம்ம தேவன் குறித்து தேடியபோது .Brahmadeva seems to be a clear example of an originally non-Jain god who was absorbed into the Jain fold in the course of timeஎனும் வரிகள் குறித்த தங்களின் பார்வை என்ன ?
மேலும் இரு தேவியருடன் உள்ள இந்த சமண சிற்பம் குறித்தும் விளக்குமாறு வேண்டுகின்றேன் .
இரா.பா
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
// அங்கே கள ஆய்வுசெய்தபோது, அய்யனார் பிறந்த ஊர் என்பதற்கானகல்வெட்டு ஆதாரம் கிடைத்தது. //கே.கே.மகேஷ் அவர்கள் மூலமாகவே கல்வெட்டு ஆதாரத்தைப்பெற்றுத் தர இயலுமா?சுந்தரம்.
2018-07-26 13:31 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:ref: https://tamil.thehindu.com/general/literature/article21820117.ece
அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
Published : 16 Dec 2017கே.கே. மகேஷ்
த
மிழ்ப் பண்பாட்டின் மேன்மைகளை மீட்டெடுப்பதற்காகத் தன் வாழ்வின் பெரும் பகுதியை ஒப்படைத்துக்கொண்டவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன். 35 வயதில் தொடங்கிய பயணம் 74 வயதிலும் தொடர்கிறது. மொத்தம் 18 நூல்களை எழுதியிருக்கிறார். அதில் பெரும்பான்மையானவை ஆய்வு நூல்கள். ‘ஆசீவகமும் அய்யனார் வரலாறும்’ நூல் அவரது ஆய்வின் உச்சம். அவரை சித்தன்னவாசல் குகைக்கோயிலில் சந்தித்தோம். அங்கு சுற்றுலா வந்திருந்த ஐயப்ப பக்தர்களிடம், “இங்கே சிலையாக இருக்கிற மூவரும், நீங்க கும்பிடுற ஐயப்பன், அய்யனார்கள்தான்” என்று அறிமுகப்படுத்தி, விளக்கமளிக்கத் தொடங்கிவிட்டார். அவருடன் உரையாடியதிலிருந்து...
அடிப்படையில் நீங்கள் கடவுள் மறுப்பாளர். இந்த ஆய்வில் இறங்கியது எப்படி?
எனது முனைவர் பட்ட ஆய்வுக்காக (1980) நான் எடுத்துக்கொண்ட தலைப்பு ‘தமிழ் இலக்கியத்தில் உலகாயதம்’. பொருள்முதல்வாதம் எனப்படும் உலகாயதம் பற்றி ஏற்கெனவே தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா மிகப்பெரிய ஆய்வுசெய்திருந்தார். அதில் ஒரு பகுதியாக ஆசீவகம் பற்றியும் எழுதியிருந்தார். அதை வாசித்தபோது, அதில் சொல்லப்பட்ட பல செய்திகள் நாம் ஏற்கெனவே கேள்விப்பட்டவையாக இருந்தன. அதற்கு அவர் என்னென்ன நூல்களைப் பயன்படுத்தியிருந்தாரோ அதை எல்லாம் நானும் வாசித்துப் பார்த்தபோது இன்னும் ஆச்சரியம். ஆசீவகம் பற்றிய அடிப்படைத் தகவல்களையெல்லாம் அந்த நூலாசிரியர்கள் பாலி, பிராகிருத மொழி நூல்களிலிருந்துதான் பெற்றிருந்தனர். ஆனால், அவற்றின் மூலச்சான்று தமிழில் இருக்கிறது என்பதை ஒரு பேராசிரியராக என்னால் உணர முடிந்தது. எனவே, சட்டோபாத்தியாயாவை விட்டுவிட்டு, ஏ.எல்.பாஷம் எழுதிய புத்தகங்களை நாடினேன். அவர் 1950-களிலேயே, ‘ஆசீவகம்: இந்தியாவில் அழிக்கப்பட்ட ஒரு சமயம்’ என்ற பெயரில் முனைவர் பட்ட ஆய்வுசெய்தவர். நான் ஆசீவகம் பக்கம் போனது இப்படித்தான். “ஆசீவகம் வட நாட்டில் கி.மு.3-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே செல்வாக்கை இழந்துவிட்டது. ஆனால், தென்னகத்திலோ கி.பி.14-ம் நூற்றாண்டு வரை அது செல்வாக்கோடு இருந்துள்ளது. இப்போதும் அதன் வேர்களைத் தமிழகத்தில் காண முடிகிறது” எனக் கூறியிருந்தார் பாஷம்.
ஆசீவகத்தை நிறுவியவர்களும், தமிழகத்தில் தற்போது அய்யனாராக வணங்கப்படுகிறவர்களும் ஒரே நபர்களே என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?
ஆசீவகத்தை உருவாக்கியவர் மற்கலி என்பதை தமிழ் இலக்கியம், பௌத்தம், ஜைனம் ஆகிய மூன்று மரபுகளும் உறுதிசெய்துள்ளன. ஆனால், ஆசீவகம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் அனைவரும் பௌத்த, ஜைன மரபுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதால், அந்த ஆய்வு ஒருதலைச் சார்பாக அமைந்துவிட்டது. தமிழ் இலக்கிய, நாட்டார் மரபுகளையும் சேர்த்து ஆராய்ந்தபோது, மற்கலிதான் தமிழ் மக்கள் வணங்குகிற ‘தர்ம சாஸ்தா’ (அய்யனார்களில் ஒருவர்) என்று உறுதிசெய்ய முடிந்தது. மகாவீரரும் மற்கலிகோசாலரும் ஒன்றாகப் பணியாற்றி, பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர் என்று ஜைன இலக்கியத்தில் குறிப்பு உள்ளது. மற்கலியின் ஆயுதம் செண்டாயுதம். நம் அய்யனார் கையில் இருப்பதுவும் அதுவே. பெரிய புராணத்தின் ‘வெள்ளானைச் சருக்கம்’ வழியாக அய்யனார் பிறந்த இடம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள திருப்பட்டூர் என்று அறிய முடிந்தது. அங்கே கள ஆய்வுசெய்தபோது, அய்யனார் பிறந்த ஊர் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் கிடைத்தது. அவ்வூரில் சிவாலயமும், அய்யனார் கோயிலும் உள்ளன. சிவாலயத்தை நுட்பமாக ஆராய்ந்தபோது, அதுவும் ஆசீவக ஆலயமாக இருந்து பறிக்கப்பட்டதுதான் என்ற உண்மை விளங்கியது.
‘தர்ம சாஸ்தா’ மரணமடைந்த இடமான சித்தன்னவாசலில், குகைக்குள்ளாக மூன்று சிலைகள் இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தில் துறவியர் தொடங்கி போப் ஆண்டவர் வரையில் படிநிலைகள் இருப்பதுபோல, ஆசீவகத்திலும் வண்ணக் கோட்பாடு இருந்தது. கருப்பு, நீலம், பச்சை, செம்மை எல்லாவற்றையும் கடந்து கழிவெண் பிறப்பு (பரம சுக்ல) நிலையை அடைந்தவர்கள் இவர்கள் மூவரும். நடுவில் இருப்பவர் வேளிர் மரபில் பிறந்து சிற்றரசராக வாழ்ந்து, துறவியான அறப்பெயர் சாத்தன் (தர்ம சாஸ்தா). இரண்டாவது நபர் கிராமங்களில் பூரணம், பொற்கலை எனும் இரு மனைவியரோடு அருள்பாலிக்கிற பூரண அய்யனார். மூன்றாவதாக இருப்பவர் அடைக்கலம் காத்த அய்யனார் (பாண்டிய மன்னரின் படைத்தளபதியாக இருந்து துறவியானவர்).
ஆசீவகம் தாக்கப்பட்டபோது, ஓவியம் சிதைக்கப்பட்டது. இப்போது மலையடிவாரத்தில் மூன்று அய்யனாருக்கும் கோயில்கள் கட்டி வணங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆசீவகத்தின் வண்ணக்கோட்டுப் படிநிலை யின் குறியீடுதான் 18 படிகள். அந்த அடையாளத்தை முன்பு ஆசீவகத்தலமாக இருந்த திருச்சி திருவெள்ளறை, மதுரை அழகர்கோயில் முதலான இடங்களில் இப்போதும் பார்க்கலாம். சபரிமலை இப்போதும் சாஸ்தா கோயிலாகவே இருக்கிறது.
ஆசீவகத்தைக் கடவுள் மறுப்புக் கோட்பாடு
என்கிறீர்களே எப்படி?
வானத்தையும் பூமியையும் உயிரினங்களையும் படைத்தது இறைவன் என்று மத நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால், ஆசீவகம் அணுக்கோட்பாட்டின் அடிப்படையில், தற்செயலாகவே உலகம் தோன்றியதாகச் சொல்கிறது. இதுகுறித்து ‘ஆசீவகம் எனும் தமிழர் அணுவியம்’ என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளேன். இந்தப் பேரண்டத்தின் தோற்றம், பெருவெடிப்பு, கருந்துளை பற்றியெல்லாம் அறிவியல் உலகம் 40, 50 ஆண்டுகளாகத்தான் பேசத்தொடங்கியிருக்கிறது. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் இலக்கியமான பரிபாடலில் இதுபோன்றதொரு குறிப்பு உள்ளது. “பாழ்பட்டுப்போன வெட்டவெளியில், அணு கரு நிலையில் இருந்தபோது ஏற்பட்ட பெரிய வெடிப்பின் காரணமாக வெப்பம் தோன்றியது. பிறகு காற்றும் தோன்றியது. வெப்பத்தின் மீது காற்று மோத மோதத் தீயாகியது. தீ எரிந்து எரிந்து அணையத் தொடங்கியபோது ஆவிப்படலம் மேகமாகப் படிந்து, அது குளிர்ந்து மழையாகப் பெய்தது” என்கிறது பரிபாடல். இதுதான் ஆசீவகத்தின் பேரண்டம் பற்றிய கோட்பாடு.
‘பெரும்பான்மையான சிவன் கோயில்களும் பெருமாள் கோயில்களும் பெளத்த விகாரங்களையும் சமணக் கோயில்களையும் இடித்துக் கட்டப்பட்டவையே’ என்ற தொல்.திருமாவளவனின் கூற்றை ஏற்கிறீர்களா?
அவரது கூற்று சரியே. ஆனால், ஆசீவகம் பற்றிய ஆய்வு முடிவுகள் பரவலாவதற்கு முந்தைய கால நிலைப்பாட்டிலிருந்து அவர் கருத்து சொல்லியிருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் 90% கோயில்கள் ஆசீவக (ஆதிநாதர், ஸ்ரீ) கோயில்களாக இருந்து, பிற மதத் தலங்களாக மாற்றப்பட்டவையே. தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் எல்லாம் ஸ்ரீ என்ற திருநிலைக்கு (இன்றைய கஜலட்சுமி) தனி சன்னதி இருக்கிறதோ அவை அனைத்தும் ஆசீவக ஆலயங்கள்தான். அதேபோல எந்தெந்த சிவன்கோயில்களில் யானையை முதலை விழுங்குவது, சிங்கம் தாக்குவது போன்ற புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளனவோ அவை அனைத்துமே ஆசீவகத்திடமிருந்து பறிக்கப்பட்ட ஆலயங்களே.
- கே.கே.மகேஷ்,
தொடர்புக்கு: mage...@thehindutamil.co.in
படங்கள்: ஆர்.ராஜேஷ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.