காக்கையும் பிகமும் (Crows & Koels)

45 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 17, 2023, 5:32:31 PM3/17/23
to Santhavasantham
நிரஞ்சன் பாரதியின் வல்லினப் பலுக்கல்-உச்சரிப்புக் கேள்விக்கு, ரவி (கிளீவ்லாந்து) நல்ல பதில் அளித்தார். கேட்க,
https://groups.google.com/g/vallamai/c/1FsNt4JzUyM/m/JqNr8r9RBAAJ
அதில், காகம் (அ) காக்கை என்ற பெயர்ச்சொல் பற்றிச் சொல்லியுள்ளார். காகம் “கா, கா” என்று கரையும். எனவே, காக்கா என்ற பெயர் தமிழில் அமைந்துள்ளது. குழந்தை அம்மா என்றழைக்கும். அம்மை என்பது செம்மொழி ஆக்கம். அதேபோல், காக்கா என்பதன் செம்மொழி ஆக்கம் காக்கை. ஸம்ஸ்கிருதத்தில், காகம் என கா- என்ற ஒலியை வைத்து தமிழோடு உறவுடைய சொல் அமைத்தனர். இவை போன்றவற்றால், இந்தியாவை ஒரு மொழியியற் பிரதேசம் என்று குறிப்பிடுவர். M. B. Emeneau,  India as a Linguistic Area, Language, Vol. 32, No. 1 (Jan. - Mar., 1956), pp. 3-16.

காகம் என்பதும் சலம்/ஜலம் ஒத்த ஒரு போன்மவோசைச் சொல்லே. kAkkA, kAkam are words called Ideophones. போன்மவோசை/அநுகரணவோசைச் சொல்.

காகம் என்றதும் குயில் நினைவு வருகிறது. https://en.wikipedia.org/wiki/Koel . குயில் ஒரு brood parasite: https://en.wikipedia.org/wiki/Brood_parasite . இதனால், குயிலைப் பரபுஷ்டம் என்பர்.

வடமொழியில் குயில் “பிகம்” எனப்படுகிறது. பிகபந்து என்பது மாமரம். ஏன் பிகம் என்ற பெயர் எனப் புரிகிறது. அதைப் பின்னர் பார்ப்போம். தொ. மு. பாஸ்கரத் தொண்டமான், வேங்கடம் முதல் குமரிவரை நூலில், காக பிக நியாயம் என்பதை விளக்கும் வெண்பா உருவான வரலாற்றைச் சொல்லுகிறார்.
இதே போல, 3 நிகழ்ச்சிகள்: https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2017/oct/08/கேட்டவுடன்-கிடைத்த-பாடல்-2786643.html

காக பிக நியாயம்:
kākaḥ kr̥ṣṇaḥ pikaḥ kr̥ṣṇaḥ kō bhēda pikakākayōḥ
vasanta samayē prāptē kākaḥ kākaḥ pikaḥ pikaḥ

பொருள்: காகமும் குயிலும் பார்ப்பதற்கு கருப்பாகவே இருக்கும். அவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? வசந்த காலம் வந்தால் காக்கைக்கும் குயிலுக்கும் உள்ள வேறுபாடு புரித்து போகும்.

காக பிக  நியாயம்:
வெண்பா
-------------------------------
காகம் குயில்இரண்டும் கார்நிறத்தால் தம்முள்ஒப்பே
ஆகும் எனினும் அணிவசந்தம் மோகஞ்செய்
வேகமுறும் காலத்து வேறுவே றாம்அவைதாம்
காகம்கா கம்பிகம்பி கம்

தொ. மு. பாஸ்கரத் தொண்டமான், வேங்கடம் முதல் குமரிவரை, தொகுதி 3.

31. பவானி சங்கமேஸ்வரர்

எனது நண்பர் ஒருவர் நல்ல தமிழ்ப் புலமை உடையவர். கவி பாடுவதில் சமர்த்தர். எந்தப் பொருளைப் பற்றி, எப்போது என்ன கவி பாடவேண்டும் என்றாலும் பாடக் கூடியவர் அவர். ஒரு நாள் அவரை அழைத்துக்கொண்டு ஒரு பிரபல அறிஞரைக் காணச் சென்றேன் நான். அறிஞரிடம் நண்பரை அறிமுகப்படுத்தி அவர் கவிபாடும் திறமையைப் பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தேன். தம் புகழ் கேட்டு நண்பர் நாணிக் கோணித் தலை கவிழ்ந்தார். நான் சொன்னதையெல்லாம் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் கடைசியில் கவிஞரைப் பார்த்து, “காகம் கா -கம்பி கம்பி- கம்” என்பதைக் கடை யடியாக வைத்து ஒரு வெண்பாப் பாடும் பார்ப்போம்" என்றார். நண்பர் 'பர, பர' வென்று விழித்தார் கொஞ்சம் நேரம்.

அவரது சங்கடத்தை உணர்ந்த நான் அவர் காதில் மெதுவாக, “பயப்படாதீர்கள். கடையடியைச் சொல்வதில் தான் அத்தனை படாடோபம். பிரித்துச்சொன்னால் 'காகம் காகம், பிகம் பிகம்' அவ்வளவுதான், பிகம் என்றால் வடமொழியில் குயில் என்று அர்த்தம்' என்று சொன்னேன். இதைச் சொன்னதும் கவிஞர் உத்சாகமாகப் பாட ஆரம்பித்தார். அவர் அன்று பாடிய பாட்டு இதுதான்,

காகம் குயில் இரண்டும்
கார்நிறத்தால் தம்முள் ஒப்பே
ஆகும் எனினும்
அணிவசந்தம் - போகம் செய்
வேகமுறும் காலத்து
வேறு வேறாம் அவைதாம்
காகம் காகம், பிகம் பிகம்

இந்தப் பாட்டைக் கேட்ட அறிஞர் ‘சபாஷ்' போட்டு நண்பரை மிகவும் பாராட்டினார். அறிஞர் தமிழ் சமஸ்கிருதம் இரண்டிலும் பாண்டித்தியம் உடையவர். தமிழ்ப் புலமை மாத்திரமே உடைய கவிஞர், அருமையான சமஸ்கிருத சுலோகத்தின் பொருளையே நல்ல கவிதையில் கூறியதைக் கேட்டு அதிசயித்து நின்றார், அறிஞர் சொன்னார் : ‘வடமொழியும் தென்மொழியும் இரண்டு ஜீவ நதிகள். இரண்டும் தனித்தனியாகப் பாய்ந்து பரவும்போது அதில் அதிக வேகமோ, சாந்நித்யமோ இருப்பதில்லை. இரண்டும் இணைந்து கலந்துவிட்டால், அப்படிக் கலக்கும் இடத்துக்குத்தான் பெருமை. தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள், கங்கையும் யமுனையும் கலக்கும் அந்தப் பிரயாகையில் சென்று முழுகினால் எவ்வளவோ புண்ணியம் உண்டு என்று. இரண்டு கலாசாரங்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பதால் ஏற்படும் மொழி வளர்ச்சி, பெருமைகளைத்தான் அவர் குறிப்பிட்டார்.

நான் சொன்னேன்:'என்ன? உதாரணத்துக்கு அத்தனை தொலைதூரம் சென்று வீட்டீர்கள். நம் தமிழ் நாட்டிலேயே ஒரு பிரயாகை இருக்கிறதே. தக்ஷிணப் பிரயாகை என்ற பெயரோடு. காவிரியும் பவானியும் கலக்கும் அந்தப் பவானி முக்கூடலில். அந்தச் சங்கமத்தில் சென்று முங்கி எழுந்தால் எவ்வளவு புண்ணியம்? கங்கையும் யமுனையும் கலக்கும் இடத்திலே சரஸ்வதி நதி அந்தர் வாகினியாகக் கலப்பது போலவே, இங்கே காவிரியும் பவானியும் கூடுதுறையிலே அமுத நதியும் அந்தர்வாகினியாகக் கலந்து இதனையும் ஒரு நல்ல திரிவேணி சங்கமம் ஆக்கிவிடுகிறது. அந்தக் கூடுதுறையில்தானே சங்கமேசுவரராம் இறைவன் வேறே கோயில் கொண்டிருக்கிறான்' என்று, இதையெல்லாம் கேட்ட அறிஞர் கவிஞரோடு சேர்த்து என்னையுமே பாராட்டினார். இந்தப் பாராட்டுதல்களுக்கு எல்லாம் காரணமாயிருந்த பவானி முக்கூடலுக்கே, அங்குள்ள சங்கமேசுவரர் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

---------------

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Mar 18, 2023, 12:12:32 AM3/18/23
to வல்லமை

///நிரஞ்சன் பாரதியின் வல்லினப் பலுக்கல்-உச்சரிப்புக் கேள்விக்கு, ரவி (கிளீவ்லாந்து) நல்ல பதில் அளித்தார். கேட்க,

https://groups.google.com/g/vallamai/c/1FsNt4JzUyM/m/JqNr8r9RBAAJ
அதில், காகம் (அ) காக்கை என்ற பெயர்ச்சொல் பற்றிச் சொல்லியுள்ளார். காகம் “கா, கா” என்று கரையும். எனவே, காக்கா என்ற பெயர் தமிழில் அமைந்துள்ளது. குழந்தை அம்மா என்றழைக்கும். அம்மை என்பது செம்மொழி ஆக்கம். அதேபோல், காக்கா என்பதன் செம்மொழி ஆக்கம் காக்கை. ஸம்ஸ்கிருதத்தில், காகம் என கா- என்ற ஒலியை வைத்து தமிழோடு உறவுடைய சொல் அமைத்தனர். இவை போன்றவற்றால், இந்தியாவை ஒரு மொழியியற் பிரதேசம் என்று குறிப்பிடுவர். M. B. Emeneau,  India as a Linguistic Area, Language, Vol. 32, No. 1 (Jan. - Mar., 1956), pp. 3-16.

காகம் என்பதும் சலம்/ஜலம் ஒத்த ஒரு போன்மவோசைச் சொல்லே. kAkkA, kAkam are words called Ideophones. போன்மவோசை/அநுகரணவோசைச் சொல்.
.///

கல் > கால் - கருமை கருத்து. கால் + கு = காக்கு > காகம் > காக்கை. கா கா என்று கத்துவதால் காகம் அல்ல.கருமைக் கருத்தால் காக்கை. இந்தியில் கவ்வா என்றால் காக்கை. தமிழில் கவ்வை என்றால் கருத்த மிளகு.

குய் - ஒலிக் கருத்து குய் +இல் > குயில் - இனிய ஒலி எழுப்பும்  பறவை. உகர இகர திரிபில் குல் - கில் > கிள் ஆகும். கிள்ளை > கிளி - பேசும் பறவை. கிளவி > ஒலிக் கூட்டால்  பேசு, மொழி.   முய் - முல் - முர் = ஒலிக் கருத்து . முரலும் வண்டு  நோக்குக. முய் > மொய் > மொயி > மொழி - ஒலித்து பேசு. ஒலிக்கூட்டால் அமைந்த மொழி.

 image.pngimage.png

N. Ganesan

unread,
Mar 18, 2023, 12:54:05 AM3/18/23
to vall...@googlegroups.com
On Fri, Mar 17, 2023 at 11:12 PM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
>
> கல் > கால் - கருமை கருத்து. கால் + கு = காக்கு > காகம் > காக்கை. கா கா என்று கத்துவதால் காகம் அல்ல.கருமைக் கருத்தால் காக்கை. இந்தியில் கவ்வா என்றால் காக்கை. தமிழில் கவ்வை என்றால் கருத்த மிளகு.
>
> குய் - ஒலிக் கருத்து குய் +இல் > குயில் - இனிய ஒலி எழுப்பும்  பறவை. உகர இகர திரிபில் குல் - கில் > கிள் ஆகும். கிள்ளை > கிளி - பேசும் பறவை. கிளவி > ஒலிக் கூட்டால்  பேசு, மொழி.   முய் - முல் - முர் = ஒலிக் கருத்து . முரலும் வண்டு  நோக்குக. முய் > மொய் > மொயி > மொழி - ஒலித்து பேசு. ஒலிக்கூட்டால் அமைந்த மொழி.
>


Not really. Tamil words are not formed this way.

N. Ganesan


N. Ganesan

unread,
Mar 18, 2023, 2:15:06 AM3/18/23
to Santhavasantham
காக பிக நியாயம்:
kākaḥ kr̥ṣṇaḥ pikaḥ kr̥ṣṇaḥ kō bhēda pikakākayōḥ
vasanta samayē prāptē kākaḥ kākaḥ pikaḥ pikaḥ

பொருள்: காகமும் குயிலும் பார்ப்பதற்கு கருப்பாகவே இருக்கும். அவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? வசந்த காலம் வந்தால் காக்கைக்கும் குயிலுக்கும் உள்ள வேறுபாடு புரிந்து போகும்.

காக பிக  நியாயம்:
வெண்பா
-------------------------------
காகம் குயில்இரண்டும் கார்நிறத்தால் தம்முள்ஒப்பே
ஆகும் எனினும் அணிவசந்தம் மோகஞ்செய்
வேகமுறும் காலத்து வேறுவே றாம்அவைதாம்
காகம்கா கம்பிகம்பி கம்

நன்றி, செந்தில்குமார். ஒப்பீட்டு மொழியியல் என்பது மேலைநாட்டார் செய்த விஞ்ஞானம். எல்லிஸ், கால்ட்வெல், சுவெலெபில், ஹார்ட், பார்ப்போலா, எமனோ, பர்ரோ, ... இன்னும் பலர். மனோன்மணீயம் நாடகத்தில் அப்போதிருந்த பெ. சுந்தரனார் உள்வாங்கியனவற்றைப் பாடித் தந்தார். மறைமலையடிகள், வ. ஐ. சுப்பிரமணியன், ஆ. வேலுப்பிள்ளை, ... எனப் பல தமிழ்ப் பேராசிரியர்கள் அத்துறையில் ஈடுபடலாயினர். இந்தியாவின் செம்மொழிகள் இரண்டு. இணையத்தில் தமிழ் இந்தியாவின் செம்மொழி சம்வாதம் தொடங்கினபோது நானும் பங்கேற்றுள்ளேன். பின்னர் நண்பர் பேரா. ஜார்ஜ் ஹார்ட் கடிதம் எழுதினார். அதனை மேதகு கலாம் நாடாளுமன்றில் வாசித்தார். கவிஞர் சிற்பி, ஹார்ட் கடித மொழிபெயர்ப்பை டெல்லி தமிழ்ச்சங்க விழாவில் அன்று மாலை வாசித்தார். தமிழ் செம்மொழி ஆனது.

இன்று திராவிடம் என்னும் சொல் எல்லாரிடையேயும் வழங்குகிறது. தமிழரை 1967-ல் இருந்து ஆளும் 2 கட்சிகளும் தமிழ் என்பதற்கு நேரான வடசொல்லை வைத்துள்ளன. திராவிடம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் குமாரிலபட்டர் ஆவார். தமிழ்ச் சொற்கள் சில தந்துள்ளார். அதில், பிகம் என்ற சொல் பற்றியும் இருக்கிறது. இது பிற்காலத்தில் புகுந்த சொல் என்று வரும். பிகம் என்ற சொல் பற்றி ஆராய்ந்தேன். அதனைத் தருவதற்கான முன்னோட்டமாக எழுதிய மடலது. மொழியியல் அறிஞர்கள் இந்தியாவின் இரு செவ்வியல் மொழிகளையுமாராய்வதன் அவசியத்தை வலியுறுத்துகின்றனர். ஈழப் போராட்டத்தின் ஒரு விளைவு இம்மாதிரியான ஆய்வுகள் குறைவுபட்டன. பேரா. ஆ. வேலுப்பிள்ளை போன்றோர் இன்றில்லையே. எனக்குப் பேரா. கி. நாச்சிமுத்து அறிமுகப்படுத்தினார்கள்.

பிகம் என்ற சொல்லைப் பார்ப்போம். வற்புறுத்தி காக்கையைத் தன் குஞ்சைப் பொரிக்கச்செய்வது குயில். இதனால் வன்பிகமே என்று மனோன்மணீயத்தில் பெ. சுந்தரனார் பாடுகிறார். ஒட்டுண்ணியாய் இருப்பதால் பிகம் எனப் பெயர். சுகமும், பிகமும் - அழகர் கலம்பகம்.

நா. கணேசன்

“மானாவரை நிகர் சேனாவரையம்” என்னும் தொடரில், மானாவரை என்பது மானாமலை என்ற பொருள் என விளக்கி எழுதினேன். தமிழ் வல்லின எழுத்துக்களின் உச்சரிப்பு பற்றி 1960-களில் தனிநூல் செய்தவர் தூத்துக்குடி சு (சுப்பையா) நடராஜன் ஆவார். அவருக்கு முன்னரே, 1905-ஆம் ஆண்டு சிறப்பாக விளக்கினவர் பண்டிதர், புதுக்கோட்டை S. D. முத்துச்சாமிபிள்ளையவர்கள். இலக்கணப் பிரயோக விளக்கம் என்னும் 1905 ஆண்டு நூற்பாயிரத்தில், “மானாவரை நிகர் சேனாவரையம்” எனத் தொல்காப்பிய உரை புகழுகிறது:
https://groups.google.com/g/santhavasantham/c/D0yErcWtDsg/m/SnnbN0UFBwAJ

சங்க இலக்கியம், தொல்காப்பியம், நாலும் இரண்டும் என வழங்கும் நாலடி, குறள், சிலம்பு, மேகலை, சிந்தாமணி, திருமுறைகள், பாசுரங்கள், ... என இருப்பினும், தமிழை வளைத்து எல்லாச் செய்தியும் சொல்லுமாறு ஏற்படுத்தியவன் கவிச்சக்கிரவர்த்தி கம்பன் ஆவான். ஒப்புநோக்கினால், ஆங்கிலத்தில் முன்பு பல நூல்கள் இருப்பினும், சேக்ஸ்பியர் இன்றைய ஆங்கிலத்தின் தந்தை என்பர் (Harold Bloom, Columbia University). தமிழுக்குக் கம்பன், ஆங்கிலத்துக்குச் சேக்ஸ்பியர். கம்பன் தமிழைப் பலவாறு புகழ்ந்துள்ளான்: சிவபிரான் அளித்த அளக்கரிய கடல் (immeasurable Ocean) என்கிறான். அதன் இலக்கண உரையை மானாவரை (immeasurable Mountain) என்பது பார்த்தோம்.

கம்பன்:
தமிழ் எனும் அளப்ப அரும் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக உங்கரித்து
அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக என உரைத்தனன் அசனி எஞ்சவே

கம்பனும், கவி தாகூரும்:
கம்பன் சலதி என்பதை இந்திய தேசிய கீதத்தில், தாகூர் ஜலதி என்கிறார். இரண்டுக்கும் சலம், ஜலம்  (< சலசல/ஜலஜல) மூலம் ஒன்றுதான். போன்ம ஓசைச் சொற்கள் (Ideophones).

“விந்த்ய ஹிமாசல யமுனா கங்கா,
உச்சல ஜலதி தரங்க”

from
https://groups.google.com/g/santhavasantham/c/UQ_Cyn35eKU/m/DRJdGMHGAAAJ
ஜனகணமன அதிநாயக ஜயஹே,
பாரத பாக்ய விதாதா!
பஞ்ஜாப ஸிந்து குஜராத மராடா,
த்ரவிட உத்கல பங்கா
விந்த்ய ஹிமாசல யமுனா கங்கா,
உச்சல ஜலதி தரங்க
தப ஶுப நாமே ஜாகே,
தப ஶுப ஆஶிஷ மாங்கே
காஹே தப ஜய காதா.
ஜன கண மங்கலதாயக ஜய ஹே,
பாரத பாக்ய விதாதா!
ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே!
ஜய ஜய ஜய ஜய ஹே!

பேரா. கரு. ஆறுமுகத் தமிழன்:
> சலதி என்பது என்ன ஐயா? அசைவுத் தொடர்பா?

ஆம். சலசல என நீர் ஓடும். சலம்/ஜலம். சலதி = கடல். மரு. அஷ்ராஃப், தில்லி (< தில்லை. பாட்னா, பாடலிப் புதை போல) அவர்களுக்கும், திருமதி சித்ரா கணபதி, மதுரை அவர்களுக்கும் எழுதிய மடலின் பகுதியை இணைக்கிறேன்.

Two papers on the phenomenon of Ideophones in Tamil by Dr. Jean-Luc Chevillard:
https://twitter.com/JLC1956/status/1341299765762535426/retweets/with_comments

CG said:
Thanks for this explanation ஐயா. போன்மவோசை - இதுவரை அறிந்திராத சொல்.
சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் அப்பர் தேவாரம்.
இதில் சலம் என்று நீரைக் குறிக்கப் பயன்படும் சொல் 'சலசல' என ஓடும் நீரின் ஓசையினின்று பிறந்த தமிழ்ச் சொல்(சலம் ஜலம் ஆனது) என்பது மறைமலையடிகள் தந்த விளக்கம்.

NVKA said:
தமிழிலிருந்து சலம் ஜலமாக வடமொழிக்கு சென்றிருந்தால், சங்க இலக்கியத்தில் பரவலாக பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டுமே? நீர் என்ற பொருளில் ஓரிரு இடத்தில்தான் வருகிறதாகத் தெரிகிறது, அதுவும் பிற்காலத்தில் தோன்றிய பரிபாடலில்.

போகப்போக "சலம்" என்ற சொல் பிற்கால தமிழ் இலக்கியங்களில் பரவலாக வருவதை கவனிக்கலாம்.
(சலம் has multiple meanings in Tamil. It takes the meaning of "Deceit" in the Kural 956:

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.

It goes without saying that the "Tamil" ஜொல்லு comes from ஜலம் only).

NG said:
good question. I think in North India, Aryan languages picked up the pOnmavOcai (which I call)/anukaraNavOcai (Tamil nighaNTu-s)/ideophone from local speakers: salasala/jalajala and coin the word, jalam. As Indo-European have water, aqua etc., jalam is an Indian word coined from the ideophone, jalajala/salasala possibly from N. Dravidian speakers.  Tamil borrows jalam in 7th century, and makes it into calam to fit with its orthography.

N. Ganesan

kanmani tamil

unread,
Mar 18, 2023, 3:33:35 AM3/18/23
to vallamai
ஆங்காங்கு திசை மாறினாலும்; எல்லா விளக்கங்களும் அருமை. 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdVXTpO817xwdZCFuG0S5uJc%2Bc2XJxbGodbgY4%2B%3DhVKJQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Mar 19, 2023, 8:29:50 AM3/19/23
to vall...@googlegroups.com
Sanskrit word, *pika* "Asian Koel" - its etymology
-----------------------------------------------------------------

It has long been recognized that "pika" (koel) is an Indian language word that entered Sanskrit later. E.g., Forms of Knowledge in Early Modern Asia (Sheldon Pollock, Duke University Press, 2011) "Other old but still functioning components of Sanskrit language ideology persisted; these may have been bent in the early modern period, but they were not broken. Consider first the discussion of the well-known pikanemādhikaraṇa by Khaṇḍadeva in his remarkable comprehensive treatise on mīmāṃsā, the Mīmāṃsā kaustubha. [42] The larger context of this topic (the smṛti-pāda, or Section on the Authority of Tradition), to characterize it generally, is the grounds for the authority claimed by various Sanskrit knowledge systems per se. The specific question at issue in the topic concerns the words pika and nema, non-Sanskrit words present (or held to be present) in Vedic texts and yet having no currency among āryas themselves, but only among mlecchas: Are the latter competent to explain the meaning of their own language, or must the signification of such words be determined by the application of Sanskrit knowledge techniques, especially etymology? To be sure, Khaṇḍadeva accepts the mīmāṃsā tenet: the communicative practices of the mlecchas can be shown to be beginningless, for words such as pika and nema cannot be proven to be corrupted either phonologically or semantically."

pā- 'to spread' in Tamil and other Dravidian languages. From this root, pāku 'green color' is formed in Dravidian languages. pāku + al (suffix) = pākal, bitter gourd known for its entire green color. pāku > pācu > paccai. pācaval, mentioned in Sangam texts, means "green (fresh) flattened rice" the aval made without any frying of paddy. https://groups.google.com/g/santhavasantham/c/5Y2MdNZilDc/m/FF95h4MjAgAJ

Similarly, the Dravidian root, pī- gives birth to two sets of words: (1) Words based on yellow color and (2) Words based on ejection, excommunication.

pī- to eject, to excommunicate, to squirt etc., in Tamil and other Dravidian languages. From this Dravidian root word, pīka (Sanskrit, also piṅka) = spittle of chewed betel leaf. (1) Words based on yellow color: Because of pī- to eject etc., DEDR 4210, its color is yellow. So, due to the yellow colored flowers DEDR 4224 Ta. pīr, pīram, pīrai sponge gourd; pīrkku id., strainer vine, Luffa acutangula. Ma. pīra, pīram, pīrakam, pīccakam, pīcci sponge gourd. Ka. hīre, hīri, īre L. acutangula Roxb., Cucumis acutangulus Lin. Tu. pīrè L. acutangula. Te. bīra, bīra kāya snake gourd, Trichosanthes anguina; (B.) cēti bīra bitter cucumber. Kol. (SR.) bīrā gourd. Pa. bīra L. acutangula. Konḍa bīra, bīra-dolu Tricosanthes anguina. [L. acutangula Roxb. = C. acutangulus Wall.] DED(S) 3467.

Due to the light yellow color of elephant tusks imported from Indus civilization, the Indus (IVC) word is pīlu/pīru in Mesopotamia (Cf. Bahata Anshumali paper.) Note that I suggested DEDR 4224 rather than the word, pallu for teeth is the source of the elephant word from Indus civilization. pī- 'yellow color' give rise to the name, pikka/piṅga- yellow. Famous authors like Piṅgala's name. (1) https://en.wikipedia.org/wiki/Pingala (2) Tamil nighaṇṭu written by Piṅgalan. Due to this yellow color, piñja 'yellow turmeric' (Skt.) < piṅka- < pīku

(2) Words based on ejection, excommunication: From pī- 'to eject', DEDR 4215 Ta. pīccu (pīcci-), pīrccu (pīrcci-) to squirt, milk (as a cow); pīccal, pīrccal syringing; pīrccāṅ-kur̤al syringe. Ma. pīccuka to squirt, syringe. Ka. pīcu id.; n. squirting. DED 3462.

From this Dravidian root word, pīka (Sanskrit, also piṅka) = spittle of chewed betel leaf.  This was already mentioned. Also, pīk- > pikk- > picc- in:
CDIAL 8150 *piccikā 'mucus in the eyes'. [Cf. piccaṭa- m. 'ophthalmia', piñjaṭa- m. 'excretion from the eyes' lex. which are ← Drav. T. Burrow BSOAS xii 384]
S. picī f. 'mucus in the eyes', picyaru m. 'one from whose eyes mucus exudes'.
Addenda: *piccikā-: Ko. piċċaḍa 'secretion from eye'.

From this Dravidian root, pī-, DEDR 4226 Ta. pīli peacock's feather. Ma. pīli id. Ka. pīli id., peacock's tail, eye in a peacock's tail. Koḍ. pi·li peacock's tail feather. Tu. pīli id.; bīla tail. Te. pīli rudder, (K. also) peacock's feather. Nk. (Ch.) pika feather, peacock's tail. Ga. (S.2) pince tail of peacock. Kui pīseri, plieri tail feather of a peacock; pieli peacock. Malt. pice tail of a peacock; picale peacock in full plume. / Cf. Skt. piccha- peacock's tail; Turner, CDIAL, no. 8151. DED(S) 3469. Also, pīḷai , [M. pīḷa.] Rheum, secretion from the eye. The verb, pīḷu-/pēḷu- ( [K. pēlu-] from the root, pī-) To ease oneself in the toilet.

Take a look at the Kannada and Dravidian verb, pīku obviously from pī-:
DEDR 4212 Ka. pīku to pull out, pluck up, tear, excommunicate. Te. pī˜ku to pull out, root up, pluck out. Kol. (Pat., p. 147) pīkeng to uproot. Nk. pīk- to pull out. Ga. (S.3) pīkap- to pull, pluck. Go. (Ma.) pīhk- to pluck (Voc. 2279). ? Ta. pīr̤ (-v-, -nt-) to uproot. ? Ma. pir̤uka to root up, pluck off. DED(S) 3457. piccu/piñju 'young fruit' < pikku < pīku
Cf. Tamil mū- gives rise to mūkku 'nose', mūccu 'breath'. Also, DEDR 4896, mukku- 'to strain', muṅku- 'to submerge/immerse in water'. mūñci 'face', mūñcūṟu 'Ganapati vāhana'

Indian cuckoos are well-known brood parasites. https://en.wikipedia.org/wiki/Asian_koel ; https://en.wikipedia.org/wiki/Brood_parasite .
Indian cuckoo takes away eggs from nests of other birds, such a s bulbuls. Also, they lay their eggs in crows' nests, bulbuls' nests. This is sort of "ejection or excommunication" of their eggs to hatch by other species of birds. DEDR 4212 Ka. pīku to pull out, pluck up, tear, excommunicate. From this Dravidian verb, pīku- nouns like pika-/pikka- for cuckoo bird is formed. pikam means "brood parasite" described in ornithology. Cuckoos are "parapuṣṭa" = raised/fed in other birds' nests. puṣṭa < Pkt. poṭṭa-, puṭṭa- belly (Turner, CDIAL, no. 8376, DEDR 4494).  puṭṭa- >  puṣṭa  just like Tamil/Dravidian verb, iṭu- "to place, to put" gives birth to iṭiṭikai 'brick'. Millions of bricks both sun-dried and kiln-baked are used in 100s of Indus sites in the North. This Dravidian word for brick,  iṭṭi >  iṣṭi 'brick' in Sanskrit.Like 
puṭṭa- >  puṣṭa (to feed, belly), iṭṭi >  iṣṭi 'brick', many sets of words exist in Dravidian to Sanskrit.

Asian koels parasitize the nests of bulbuls, and lay their eggs. Just like the koels do with crow nests often
Also, koels steal the eggs from the bulbul nests
https://www.rocksea.org/red-whiskered-bulbul/
http://joezachs.blogspot.com/2014/06/the-bulbul-and-mrs-koel.html
https://youtu.be/j6ZxeJoLFDo bulbul attacks female koel.

That is the reason in Kannada, pikalakki is a name for the bulbul. pikalakki/pikkuḷike = pika 'koel' + alaikki 'that torments' (alaikkar̤ittal in tamil).
DEDR 4126 Ka. pikalakki Madras bulbul, Pycnonotus haemorhous; pikkuḷike n. of a bird. Te. pikili, pigili bulbul. / ? Cf. Skt. pika- Indian cuckoo, Cuculus indicus. DED 3395.

In sum, pika as the name for koel comes from its brood parasitism, due to laying/excommunicating its eggs in other birds (crows, bulbuls, ..) nests, DEDR 4212. And, many related words, originally Dravidian, from Indian linguistic area are given due to (1) pī- 'yellow color' and (2) pī- 'to eject, to excommunicate'.

N. Ganesan

மனோன்மணீயத்தில் வன்பிகம் எனப் பிகத்தை (குயிலை) வர்ணிப்பது எதனால்?
https://tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=164&pno=285
பிகம் - குயில், குயில் தன் முட்டையைக் காகத்தின் குடம்பையுள் இட்டுக் குஞ்சு பொரிக்கும் வரைக்கும் காத்துக் கொண்டிருந்து குஞ்சு வெளிப்பட்டவுடன் தன் தாயாகிய காகத்தைவிட்டுப் பிரித்துத் தான் அழைத்துக் கொண்டு செல்கின்றமையால், 'வன்பிகமே' என்றார்.

---------------------------------------
https://sarasvatam.in/ta/2015/06/19/தமிழ்-நூல்-விளக்கங்களில்/
இவ்விருமொழிகளிலும் கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்துள்ளது என்பது இருமொழியறிந்த நடுநிலையான அறிஞர்கள் ஒப்புக்கொள்ளும் செய்தி. வடமொழியில் வேதத்தின் பொருள்கூறும் கலை மயங்கியகாலை தமிழ்மொழியின் உதவி தேவைப்பட்டிருக்கிறது. இது உயர்வு நவிற்சியல்ல. மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் கரைகண்டு அதன் சூத்திரங்களுக்கு உரையெழுதிய சபரஸ்வாமியும் அதற்கு விவரணம் எழுதிய குமாரிலபட்டரும் கூறிய உண்மையிது.

            மீமாம்ஸா சூத்திரங்களின் தொகுப்பில் பிகநேமாத்யாதிகரணம் என்றொரு அத்தியாயம் உண்டு. இந்தத் தொகுப்பில் வேதத்தில் காணப்படும் பொருள் புரியாத சொற்களுக்குப் பொருள் கொள்ளுதல் எப்படி என்ற விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. பிகம், நேமம், தாமரஸம், சதம், பரிமண்டலம் என்பன போன்ற சொற்கள் அப்போது வைதிகமொழியில் வழக்கில் இல்லை. ஆனால் பிறமொழிகளில் இந்தச் சொற்கள் சில பொருட்களில் வழக்கில் இருந்தன. ஆகவே பிறமொழிகளில் கூறப்படும் பொருளை ஏற்பதா அல்லது வேதமொழியின் இலக்கண, நிகண்டுகளைக் கொண்டு புதிய பொருளைக் கற்பிப்பதா என்று விவாதித்து மற்றைய மொழிகளில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்ற முடிபு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே பிகம் என்றால் குயில், நேமம் என்றால் பாதி, தாமரஸம் என்றால் தாமரை என்பன போன்ற பொருட்களை எடுத்து கையாண்டுள்ளனர். இங்கு மற்றைய சொற்களை ஆய்வுக்கு விடுத்தாலும் தாமரஸம் என்றால் தாமரை என்னும் பொருள் தமிழிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் என்பதை ஒருதலையாகத் தீர்மானிக்க முடிகிறது.

            இதற்கு ஆதாரமாக இதற்கு விளக்கவுரை எழுதிய குமால பட்டர் பிறமொழிகள் என்பதற்கு தமிழ் முதலான மொழிக்ள் (த்ரவிடாதி பாஷாயாம்) என்று கூறுவதிலிருந்தும் சோறு, அதர், பாம்பு, மாலை, வயிறு என்று ஐந்து தமிழ்ச்சொற்களைப் பற்றி விவாதித்திருப்பதாலும் வேதத்தின் சொல்லை விளக்க, தமிழின் உதவி தேவைப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது. மேலும் தென்னாட்டார் தற்குறிப்பேற்ற அணியில் வல்லவர் என்று வடமொழிக்கவிகள் கொண்டாடுவதிலிருந்தும் தமிழ்மொழியில் தற்குறிப்பேற்றத்தின் தாக்கமே தென்னாட்டாரை வடமொழியிலும் அந்த அணியின் சிறப்பை ஏற்படுத்தத் தூண்டியது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

-------------------------------------

kanmani tamil

unread,
Mar 19, 2023, 9:01:58 AM3/19/23
to vallamai
///வேதத்தின் சொல்லை விளக்க, தமிழின் உதவி தேவைப்பட்டிருக்கிறது///

புதுச் செய்தி. நன்று. 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

seshadri sridharan

unread,
Mar 20, 2023, 4:19:33 AM3/20/23
to வல்லமை
புய் > துளைக் கருத்து, பிளவுக் கருத்து >  பிய் > பிய்லி > பீலி - விரிந்து காணப்படும் தோகை. பிறங்கு பிளந்த விரிந்த என்று பொருள் காட்டினேன். தென்னம் பூவை படம் இட்டேன்.    உமி உரித்த அரிசி  பிய்> பிய்யம் (தெலு) - அரிசி < அரி என்றால் உமியை பிளந்தெடுத்த அரிசி.


image.pngimage.png

On Sun, 19 Mar 2023 at 17:59, N. Ganesan <naa.g...@gmail.com> wrote: 

From this Dravidian root, pī-, DEDR 4226 Ta. pīli peacock's feather. Ma. pīli id. Ka. pīli id., peacock's tail, eye in a peacock's tail. Koḍ. pi·li peacock's tail feather. Tu. pīli id.; bīla tail. Te. pīli rudder, (K. also) peacock's feather. Nk. (Ch.) pika feather, peacock's tail. Ga. (S.2) pince tail of peacock. Kui pīseri, plieri tail feather of a peacock; pieli peacock. Malt. pice tail of a peacock; picale peacock in full plume. / Cf. Skt. piccha- peacock's tail; Turner, CDIAL, no. 8151. DED(S) 3469. Also, pīḷai , [M. pīḷa.] Rheum, secretion from the eye. The verb, pīḷu-/pēḷu- ( [K. pēlu-] from the root, pī-) To ease oneself in the toilet. 

Take a look at the Kannada and Dravidian verb, pīku obviously from pī-: பிளவு கருத்து நோக்குக 

N. Ganesan

unread,
Mar 20, 2023, 6:12:07 AM3/20/23
to vall...@googlegroups.com
On Mon, Mar 20, 2023 at 3:19 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
>
> புய் > துளைக் கருத்து, பிளவுக் கருத்து >  பிய் > பிய்லி > பீலி - விரிந்து காணப்படும் தோகை. பிறங்கு பிளந்த விரிந்த என்று பொருள் காட்டினேன். தென்னம் பூவை படம் இட்டேன்.    உமி உரித்த அரிசி  பிய்> பிய்யம் (தெலு) - அரிசி < அரி என்றால் உமியை பிளந்தெடுத்த அரிசி.
>
>

இல்லை. biyyam, biijam. அது வேறு.
தனியிழை.

NG
Reply all
Reply to author
Forward
0 new messages