Fwd: நாஞ்சில் நாடனின் “கம்பனின் அம்பறாத்தூணி”

92 views
Skip to first unread message

Anna Kannan

unread,
Dec 2, 2013, 11:57:41 AM12/2/13
to Vallamai


---------- Forwarded message ----------
From: Thamaraikkannan B <b.thamar...@gmail.com>
Date: 2013/12/2
Subject: Fwd: நாஞ்சில் நாடனின் “கம்பனின் அம்பறாத்தூணி”


---------- முன் அனுப்பப்பட்டத் தகவல் ----------
அனுப்புநர்: professer k. kumar <varunan...@gmail.com>
தேதி: 30 நவம்பர், 2013 9:43 PM
தலைப்பு: நாஞ்சில் நாடனின் “கம்பனின் அம்பறாத்தூணி”


நாஞ்சில் நாடனின்  “கம்பனின் அம்பறாத்தூணி”
 வளவ.துரையன்
Nanjil Nadanநவீன எழுத்தாளர்களில் மரபிலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் குறிபிடத்தகுந்தவர் நாஞ்சில் நாடன். அவருடைய நூல்களுக்கு அவர் வைத்திருக்கும் சில தலைப்புகளே அதற்கு சாட்சிகளாய் நிற்கின்றன.
சாலப் பரிந்து, என்பிலதனை வெயில் போலக் காயும், எட்டுத் திக்கும் மத யானை, நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, காவலன் காவான் எனின், தீதும் நன்றும் என்பன போன்றவற்றைக் கூறிக் கொண்டே போகலாம்.
5-1-2013—ஆம் நாள் காரைக் குடியில் பழனியப்பா—மீனாட்சி அறக் கட்டளை சார்பாக அவர் நடத்திய ஆய்வுச் சொற்பொழிவே ”கம்பனின் அம்பறாத்தூணி” எனும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. முதலில் இந்நூல் கம்பராமாயண நயங்களை வியந்தோதும் நூல் அன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கம்பனின் நயங்களைப் பலவகைகளில் எடுத்துக் கூறியும் அவனது நூலைப் பல வழிகளில் ஆய்ந்தும் எண்ணற்ற புத்தகங்கள் நம் தமிழில் வெளிவந்துள்ளன.
ஆனால் நாஞ்சில் நாடனின் இந்நூல் அவற்றினின்று முற்றிலும் மாறுபட்டதாகும். கம்பராமாயணத்தில் கம்பன் எடுத்தாண்டுள்ள சொற்களை ஆய்ந்து அவை எங்கெங்கே என்னென்ன பொருள்களில் வருகின்றன,அவற்றின் வேர்ச் சொற்கள் எவை, அவை பிற மொழிச் சொல்லா, ஒரே சொல் எத்தனை இடங்களில் வருகிறது, அவை இப்போது என்ன பொருளில் வழங்கப் படுகின்றன போன்றவற்றையெல்லாம் ஆராய்ந்து நாஞ்சில் நாடனின் கடும் உழைப்பால் வெளி வந்துள்ள நூல்தான் “கம்பனின் அம்பறாத்தூணி”  ஆகும்.
மொத்தம் 15 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல் ஒரு
சொற் களஞ்சியமாக விளங்குகிறது எனலாம். முதலில் கம்பனில் தான் எப்படி ஈடுபட்டேன் என்பதை அவர் விளக்கமாகவே கூறுகிறார்.
தொடக்கத்தில் சிறுவயதில் ராமாயண தோல்பாவைக் கூத்து பார்த்தது, பிறகு இளம்பருவத்தில் பட்டி மன்றங்கள் பேசியது என்பதையெல்லாம் விரிவாகவே அவர் எழுதி உள்ளார். ஆனால் ரா.ப என அழைக்கப்படும் ரா. பத்மநாபனிடம் அவர் இல்லத்திற்கே சென்று சுமார் இரண்டரை ஆண்டுகள் வாரத்திற்கு மூன்று நாள்கள் மும்பையில் கம்பராமாயணம் பாடம் கேட்ட்துதான் அவரைக் கம்பனில் இழுத்ததற்கு அடிப்படை என்கிறார். அதனால்தான் நன்றி காட்டும் முகத்தான் இந்நூலையே நாஞ்சில் நாடன் ரா. பத்மநாபன் அவர்களுக்குக்  காணிக்கையாக்கி உள்ளார்.
நவீன எழுத்தில் குறிப்பிட்த்தக்க எழுத்தாளாராய் ஆன பின்பு ஜெயமோகன் நடத்திய இலக்கிய முகாம்களில் கம்பன் பற்றிய அமர்வுகள் நடத்தியது மீண்டும் நாஞ்சிலைக் கம்பனில் கொண்டுபோய்த் தள்ளிவிட்டது எனலாம்.
அம்புகளைச் சேர்த்து வைத்திருக்கும் ஒரு பாத்திரமே அம்பறாத்தூணி ஆகும். அக்கால வில் வீர்ர்கள் தங்கள் முதுகில் அதைக் கட்டி வைத்திருப்பார்கள். அந்தத் தூணியைப் புட்டில் வட்டில்,ஆவம் எனும் சொற்களாலும் கம்பன் குறிப்பதை எடுத்துக்காட்டும் நாஞ்சில்  தூணி எனும் சொல் சங்க இலக்கியங்களான அகநானூறு, சிறுபாணாற்றுப்படை, நற்றிணை, முல்லைப்பாட்டு, ஆகிய நூல்களிலும் புழங்கி இருப்பதைச் சான்றுகளின் மூலம் எடுத்துக் காட்டுகிறார்.
இந்த நூலூக்கு இப்பெயர் வைத்ததற்குக் காரணம் கூறும் போது,
’இராமனின் அம்பறத்தூணியில் அம்பு அற்றுப் போகாது; கம்பனின் அம்பறாத்தூணியில் சொல் அற்றுப் போகாது. எனவே ‘கம்பனின் அம்பறத்தூணி’ எனப் பெயரிட்டேன் நூலுக்கு” என்று கூறுகிறார். அவர் கூற்று. மிகவும் உண்மை என்பதை நாம் நூலில் போகப் போகப் புரிந்து கொள்கிறோம்.
இந்த நூலுக்கு விமர்சனம் எழுத வேண்டுமாயின் சிறந்த சொல் ஆய்வுத்திறன் பெற்றிருக்க வேண்டும். எனவே கம்பனின் அம்பறாத்தூணியை அறிமுகம் செய்வதோடு நான் நிறுத்திக் கொள்கிறேன்.
கம்பராமயண சொல்லாய்வில் மூழ்கிப் போகும் நாஞ்சில் எச்சொல்லையும் விடமுடியாமல் தவிக்கிறார். எல்லாமே அவருக்கு இன்றியமைதாதாகத் தோன்றுகிறது.எனவே அவர் எழுதுகிறார்.
’ பலமரம் கண்ட தச்சன், ஒரு மரமும் வெட்டான் என்பார்கள். இந்த மரத்தை வெட்டவா? அந்த மரத்தை வெட்டவா? தூரத்தில் இருக்கும் இன்னொரு மரத்தை வெட்டவா? எனும் தட்டழிவு., எதைத் தேர்வது எனும் அலைபாய்வு. அந்தத் தச்சன் போலவே உணர்கிறேன் நான். எந்தச் சொல்லை எடுக்க எந்தச் சொல்லை விடுக்க?” {பக்-268]
ஏனெனில் ஒரு படைப்பிலக்கியவாதியாகக் கம்பனை அணுகும் அவர் கம்பனின் சொல்லாழம் காண்பது எவ்வாறு என்று திகைக்கிறார்.
எடுத்துக் காட்டாக ‘ஊழி’ எனும் சொல்லைக் கம்பன் தனிச் சொல்லாக, சொற்றொடராக 43 இடங்களில் ஆள்கிறான் என்று ஒரு பட்டியல் தருகிறார். [பக்-152]
அவ்வப்போது நாஞ்சில் நாடன் வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம்  தன் கருத்துகளை ஆங்காங்கே விதைக்கவும் தவறவில்லை.
’ஒளவியம்’ எனும் சொல்லைக் கம்பன் ’அவ்வியம்’ என்று எதுகை அமைதியும், ஓசைப் பொருத்தமும், இலக்கண அமைதியும் கருதிப் பயன்படுத்துகிறான்.
வள்ளுவர் ”அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்” என்கிறார்.
கம்பனும் விசுவாமித்திரனைக் காட்ட ‘அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை’ என்கிறார்.ஒளவையார் ‘ஒளவியம் பேசேல்’ என்கிறார். ஆனால் இச்சொல் ’ஒளவியம்’ என்றோ அல்லது ’அவ்வியம்’ என்றோ சங்க இலக்கியத்தில்ஓரிடத்தில் கூடப் பயின்றுவரவில்லை என்று கூறும் நாஞ்சில் ஒளவையும் கம்பனும் வள்ளுவரும் இச்சொல்லைக் காப்பாற்றித் தந்துள்ளனர் என்கிறார். இருந்தாலும் மொழிச் சீர்திருத்தம் எனும் பெயரில் ஒள எனும் எழுத்திற்கு மாற்றாக ”அவ்’ என்று எழுதுவதை நாஞ்சில் ஏற்கவில்லை. அதனால்தான் ”
”ஒளடதமும் அவுடதமும் ஒன்றா?, ஒளகாரக்குறுக்கம் என்பது அவுகாராக்குறுக்கமா? எழுத்துச் சீர்திருத்தம் என்பது ஒலிக் குறிப்பைச் சீர்திருத்துவல்ல என்பதை நாம் யோசிக்க வேண்டும்’
என்கிறார் அவர்
கம்பன் பயன்படுத்தும் வழக்குச் சொற்களை நூல் மிகச் சிறப்பாகக் காட்டுகிறது. கம்பன் ஐந்து என்பதை வழக்குச் சொல்லாக அஞ்சு என்று கையாள்கிறான். சுந்தர காண்டத்தில் பாடல் 4913-இல் இலங்காதேவியைக் கண்ட அனுமன் ‘ஐந்து நிறங்களைப் பெற்ற ஆடை உடுத்தவள்’ எனும் பொருளில் ’அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள்’ என்பான்.
”எனவே பேராசிரியப் பெருமக்களே, எந்தச் சொல்லையும் இது மக்கள் வழக்கு, இது வட்டார வழக்கு என்று உதாசீனப் படுத்தி விடாதீர்கள்” என்கிறார் நாஞ்சில்.
பொருள் ஏதும் இன்றி செய்யுளில் ஓசைக்காகவும் உணர்ச்சிக்காகவும் இலக்கண அமைதிக்காகவும் பயன்படுத்தும் சொற்கள் அசைச்சொற்கள் என்பார்கள். கம்பனைப் போல இத்தனை பாடல்களில் அசைச் சொற்களை யாரும் கையாண்டிருக்கிறார்களா என வியப்புறும் நாஞ்சில் அடா, அன்றே, ஆல், அன்னோ, கொல், எல்லே, அம்மா, மன்னோ, ஐய்யோ, அரோ, மாதோ என்று 11 அசைச் சொற்களைக் கம்பன் பயன்படுத்தியதாகப்  பட்டியலிடுகிறார். இன்னும் கூட இருக்கலாம். “மிச்சம் நீங்கள் தேடுங்கள்; தேடுவது சுகம்; ஏசுபிரான், தேடுங்கள் கிடைக்கும் என்று சொன்னார்தானே’ என்கிறார்.
கம்பராமாயணத்தில், மொத்தம் 64 ஆயுதங்களின் பெயர்கள் கூறப்படுவதாக பட்டியலிடும் நாஞ்சில் நாடன், தனக்கே உரிய கிண்டல் மொழியில்
”இந்தக் காலத்து உருட்டுக் கட்டை, சைக்கிள் செயின், சோடா பாட்டில், ஆசிட் பாட்டில், மொலட்டாவ் காக்டெயில் போன்றவை அன்று இருந்திருக்காது” என்கிறார்.
முழுக்க முழுக்க சொல் ஆய்விலேயே நம்மைநகர்த்திச் செல்லும் இந்நூல் படிக்கக் களைப்பில்லாமல் இருக்கிறன்தென்றால் அதற்குக் காரணம் நாஞ்சிலின் நடைதான். அதுவும் ஆங்காங்கே சமூக சிந்தனையோடு தனக்கே உரிய எள்ளல் பாணியில் அவர் காட்டும் இடங்கள் நகைச் சுவை என்று      தோன்றினாலும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.
நூலின் இறுதி அத்தியாயம் ‘எம்மனோர்’ எனும் சொல்லை ஆராய்கிறது. எம்மனோர் என்பதற்குப் பொருள் எம்மைப் போன்றவர் என்பதாகும். நாஞ்சில் கேட்கிறார்: கம்பன் எம்மனோர் என்பது யாரை? அவரேபதில் சொல்கிறார்:
”மடக்கி எழுதி 120 பக்கம் நிறைத்து, நீட்டி அடித்தால் 20 பக்கம் வரும் கவிதைத் தொகுப்பு போட்டவர்களையா? கவிஞர் விக்ரமாதித்தன் பாடியதுபோல் ஓய்ந்த நேரத்தில் கவிதை எழுதுபவர்களையா? இல்லை, 10000 பாடல்கள்எனும் பெருங்கனவு கொண்டவர்களையா?”நாஞ்சிலின் இந்தக் கூற்று இக்காலத்திய ஒரு சில கவிஞர்களைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறது.
பக்கம் 185- இல் தம்பி எனும் சொல் பற்றிக் கூறும்போது அவருக்கு அண்ணாவின் நினைவு வருகிறது. இன்றைய அரசியல் சூழலும் கண்ணில் படுகிறது.
உடனே துணிவுடன் எழுதுகிறார்.”தம்பி வா! தலைமை ஏற்க வா, என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக்கு அழைத்த அண்ணனும் உண்டு. தம்பியும் உண்டு. தம்பி அன்ணனாத போது மகன்களையும் மகளையும் பேரன்களையும் அழைத்தது வேறு கதை.
இது புரிபவர்க்குப் புரியும். கம்பனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள தொடர்பைக் கூற வரும்போது யார் யாருக்கு என்ன தொடர்பு என்று நாஞ்சில் கூறுகிறார்:
”வாசகனுக்கு ரசனை சார்ந்த தொடர்பு என்றால், படைப்பாளிக்கு கம்பன் காப்பியம் என்பது சொற்சுரங்கம். அரசியல்வாதிகளுக்கு சத்தீஸ்கர் நிலக்கரிச் சுரங்கம் போல’
எதைக் கொண்டுவந்து எதனுடன் தொடர்புபடுத்துகிறார் பாருங்கள். அதுதான் நாஞ்சில் நாடன்.
பக்கம் 43 –இல் இலக்கியத்தின் நயம் கூறி அதை உணர வேண்டும் என்பதை வலியுறுத்தும்போது,
“இதுதான் ஐயா, இதுதான் ஐயா, இலக்கியத்தினுள் என்றும் வாழும் நுட்பம் என்பது. சும்மா கோடிகள் அடித்து மாற்ற, இராமன் எந்தப் பல்கலையில் பி.டெக் பயின்றான் என நையாண்டி செய்து என்ன பயன்?’
எனும் அவரின் ஆதங்கம் புரிகிறது. கவிதை என்பது எது என்பதில் நாஞ்சில் நாடன் மிகவும் கறாராக இருக்கிறார். அதனால்தான் இப்படி எழுதுகிறார்.
’நவ கவிஞர் பலரும் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக உரைநடையை ஒடித்தும் மடக்கியும் எழுதிக் கவிதை என்று சாதிக்கிறார்கள். கவிதை என்பது சாதனை என்னும் காலம் போய் கவிதையைச் சாதிப்பது என்று ஆகிவிட்டது’
தமிழில் வழக்கொழிந்துபோய் ஆனால் மலையாளத்தில் இன்றும் புழக்கத்திலிருக்கும் சில சொற்களை ஓர் அத்தியாயத்தில் காட்டுகிறார். எடுத்துக்காட்டாக அத்துச் சாரியை பற்றிக் கூறும்போது அச்சாரியை இப்போது தமிழில் வழங்குவது இல்லை. ஆனால் மலையாள மொழியில் உண்டு. ‘வெயிலத்துப் போகருதே’ ’மழையத்துப் போகருதே’ என்பனவற்றை நாஞ்சில் சான்றாக்க் காட்டுகிறார். மேலும் நாம் தேன்மாவின் கொம்பில் என்பதை அவர்கள் தேன்மாவின் கொம்பத்து என்கிறார்கள் என்று எழுதுகிறார்.
இச்சமயத்தில் புதுவை முனைவர் அறிவுநம்பி சொன்னது நினைவுக்கு வருகிறது.
’வாழ்க வளமுடன்’ எனும் சொற்றொடரே பிழையானது. அது அத்துச் சாரியை பயன்பாட்டுடன் ‘வாழ்க வளத்துடன்’ என்றிருக்க வேண்டும் என்கிறார் அவர்.
சரிதான். குடமுடன் வந்தாள், மரத்துடன் வந்தான் என்றா சொல்கிறோம், இல்லையே, குடத்துடன் வந்தாள், மரத்துடன் வந்தான் என்றுதானே சொல்கிறோம்.
இந்த அறிமுகக் கட்டுரையை முடிக்கும்போது முக்கியமான ஒன்றைச் சொல்லவேண்டும். உறக்கம் எனும் சொல் இருந்த இடத்தில் இப்போது தூக்கம் எனும் சொல் வந்து ஆண்டுகொண்டிருக்கிறது என்கிறார் நாஞ்சில் நாடன்.
தூங்குதல் என்றால் மலையாளத்தில் தொங்குதல் நான்று கொண்டு நின்று சாதல் என்பது பொருளாகும். இன்று நாஞ்சில் நாட்டிலும் தெந்தமிழ் நாட்டிலும் உறக்கம், உறக்கு, உறக்காட்டு, உறங்குதல் என்பவை வழக்கத்தில் உள்ளன.
சங்க காலத்திலும்  தூக்கம் எனும் சொல் உறக்கம் எனும் பொருளில் இல்லை. ஆனால் திருக்குறளில் 668—ஆம் குறளில் தூக்கம் உண்டு. அங்கு கூட தூக்கம் என்பதர்கு காலநீட்டிப்பு என்று பொருள்.
கடைசியில் நாஞ்சில் நாடன் கூறுகிறார்.
”இதை எழுதி வரும்போது எனக்குத் தோன்றியது. இலட்சக்கணக்கில் அண்டை வீட்டுத் தமிழன் ஈவும் இரக்கமும் இன்றிக் கயமையினால், வஞ்சனையினால் கொன்று குவிக்கப் பட்டும் வாளாவிருக்கும் தமிழன் உறங்கினால் என்ன? தூங்கினால் என்ன?”
இறுதியில் கம்பன் தனது இராமகாதையில் 6 காண்டங்களில், 118 படலங்களில், 10368 பாடல்களில் 3 இலட்சத்துக்கும் அதிகமான சொற்களைப் பயன்படுத்தி உள்ளான் எனும் நாஞ்சில் நாடன்,
கம்பன் பயன்படுத்தி உள்ள மொத்தச் சொற்கள் எத்தனை எனும் ஆய்வும் கம்பனின் சொல் அடைவு தயாரிப்பும் நடக்க வேண்டும்
என்று விரும்புகிறார். இந்த நூல் அவருடைய கடும் உழைப்பில் வெளியாகி உள்ளது என்பதைக் கூறித்தானாக வேண்டும். ஒரு நூலின் நயங்களைப் பாராட்டுவதே இலக்கியப்பணி என்று நம்பிக் கொண்டு இருக்கும் இலக்கிய உலகில் இதுபோன்ற சொல்லாய்வுகள் அதிகம் நடப்பதில்லை. எனவே “கம்பனின் அம்பறாத்தூணி” எனும் அற்புதமான சொல்சுரங்கத்தைக் கொடுத்த நான்ப்ஜ்சில் நாடனுக்குக் தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் கடமைப் பட்டிருக்கிறது எனலாம்.

--


சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 3, 2013, 12:10:38 AM12/3/13
to vallamai, b.thamar...@gmail.com, varunan...@gmail.com
மிகச் சிறப்பான நூல் அறிமுகப் பதிவு. நூல் நயம் பாராட்டல் என்ற துறைக்குக் காட்டாக அமையக் கூடிய மதிப்புரை.
நண்பர் அண்ணா கண்ணன் அவர்களுக்கும், எழுதியவருக்கும், பகிர்ந்தவர்களுக்க்கும் நன்றி.

வாழ்க வளத்துடன்!

சொ.வினைதீர்த்தான்

Hari Krishnan

unread,
Dec 3, 2013, 12:17:42 AM12/3/13
to vallamai, b.thamar...@gmail.com, varunan...@gmail.com

2013/12/3 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

மிகச் சிறப்பான நூல் அறிமுகப் பதிவு. நூல் நயம் பாராட்டல் என்ற துறைக்குக் காட்டாக அமையக் கூடிய மதிப்புரை.
நண்பர் அண்ணா கண்ணன் அவர்களுக்கும், எழுதியவருக்கும், பகிர்ந்தவர்களுக்க்கும் நன்றி.

தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டுள்ள ‘அத்துச்’ சாரியை, தமிழில் பயன்படுத்தவே படவில்லை; மலையாளத்தில் தேன்மாவின் கொம்பத்து போன்ற இடங்களில் பயன்படுகிறது என்று அம்பறாத் தூணியாளர் சொல்றாரே, அது உண்மையா?

என்ன கேக்கறேன்னா அவர் சொல்றது ஆரம்பத்துலேந்தே உண்மைதானான்னு கேக்கறேன்.  மிக்க ஆர்வமாக என்னிடம் படிக்கக் கொடுத்த நண்பருக்கு என்னால் ஏமாற்றத்தை மட்டுந்தான் திரும்பத் தர முடிந்தது.  

படிப்பில்லாதவர்களுக்கு அவ்வளவுதான் முடியும். :)


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Chokkan

unread,
Dec 3, 2013, 12:23:23 AM12/3/13
to vallamai, b.thamar...@gmail.com, varunan...@gmail.com
”அத்து” தமிழ்ல இல்லையா? எந்த “மரத்தில்” சென்று முட்டிக்கொள்வது என்று என் “மனத்துக்குத்” தெரியவில்லை :)


2013/12/3 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

PRASATH

unread,
Dec 4, 2013, 12:12:32 AM12/4/13
to vallamai
ஐயா,
 
தலைப்பைப் பார்த்ததும், நான் தங்கள் வீட்டிற்கு வந்திருந்த போது இந்த புத்தகத்தைப் பார்த்ததும் தலைப்புக்கான எனது காரணமும் தான் நினைவுக்கு வந்தது... 


2013/12/3 Hari Krishnan <hari.har...@gmail.com>

 

Nagarajan Vadivel

unread,
Dec 6, 2013, 8:47:55 AM12/6/13
to vallamai

2013/12/2 Anna Kannan <annak...@gmail.com>

பக்கம் 185- இல் தம்பி எனும் சொல் பற்றிக் கூறும்போது அவருக்கு அண்ணாவின் நினைவு வருகிறது. இன்றைய அரசியல் சூழலும் கண்ணில் படுகிறது.
உடனே துணிவுடன் எழுதுகிறார்.”தம்பி வா! தலைமை ஏற்க வா, என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக்கு அழைத்த அண்ணனும் உண்டு. தம்பியும் உண்டு. தம்பி அன்ணனாத போது மகன்களையும் மகளையும் பேரன்களையும் அழைத்தது வேறு கதை.

​இராமனின் தம்பிகளையும் அண்ணாவின் தம்பிகளையும் ஒப்ப்பீடு செய்வது ஆய்வுலகில் ஆப்பிளையும் ஆரஞ்சுவையும் ஒப்பிடுவதற்கு நிகரானதாகும்.  கம்பனின் பார்வையில் ராமனைப் பார்ப்பவர் அண்ணாவைப் பார்க்கும் பார்வை கோளாறு உள்ளதாகத் தெரிகிறதே

ராமன் மனிதனால் பெறமுடியாத ஆனால் பெற முயலக்கூடிய பண்புக்கூறுகளை வலியுறுத்தும் காப்பியம். பிறர்மனை நோக்காப் பேராண்மை மட்டும் கொண்டு மற்ற பண்பு நலன்களில் குறை இருந்தவர்களத் தம்பிகளாக ஏற்றுக்கொண்ட ராமனுக்கு வீட்டிலும் நாட்டிலுக் காட்டிலும் எதிரிகள் இருந்தனர். எனவே மனித வாழ்வு நல்லவர்களையும் கெட்டவர்களையும் அங்கமாகக் கொண்ட குமுகத்தில் கெட்டதை விலக்கி நல்லதையே போற்றும் நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்லும் செயலாகும் என்று எடுத்துக்காடிய நாடகப் பாத்திரம்

அண்ணாவோ 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த (அவ்வப்போது அரிதாரம் பூசி) அறிவுத் தூண்டலில் ஈடுபட்ட சாதாரண மனிதர்.  அவருடைய இயற்பெயர் அண்ணாதுரை எனபதை அவர் எழுதிய நடித்த நாடகங்களில் காவல்துறையின் தணிக்கையைத் திசை திருப்பப் புனைவாக வைத்துக்கொண்ட பெயர் அண்ணா.  அவரைவிட மூத்தவர்களும் அவரை அண்ணா என்றும் அண்ணாத்துரை என்றும் அழைத்ததில் அண்ணன் தம்பி உறவுமுறை என்றெல்லாம் எதுவும் இல்லை

19 -ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத்தில் உருவான அரசியல் கட்சிகளில் தலைமைக்கும் தொண்டர்களுக்கு இடையே உள்ள தொடர்பைச் சுட்ட பல பெயர்கள் பயன்பட்டன.  பொதுவுடைமைக் கட்சியினர் தலைவர் தொண்டர் என்ற பாகுபாடில்லாமல் அனைவரையும் தோழர் என்றே அழைத்தனர். நீதிவழங்கும் நீதியரசர்கள் தங்களுக்குள் சகோதர்த்துவத்தைக் காட்ட பிரதஎஸ் என்றே அழைத்துக்கொள்வது மரபு.  ஆய்வளர்கள் பீர்ஸ் என சமநிலையில் உள்ள அறிஞர்கள் என்றே அழைத்துக் கொண்டனர்.  ரோட்டரி போன்ற சங்கங்கள் ஃபெல்லோ என்று சமத்துவத்தை வலியுறுத்தினர்.  அந்த அடிப்படையில் தி.மு.கவின் தலைமை நாற்காலியைத் தங்களைக் கண்ணீர்த்துளிகள் என்று ஏசிய பெரியாருக்காகக் காலியாக வைத்துவிட்டு மற்ற தலைவர்களும் தொண்டர்களும் தம்பிகள் என்றே அழைக்கப்பட்டனர். எனவே அண்ணா தம்பி வா தலைனை ஏற்கவா என்றழைத்ததும் இன்றைய அண்ணனணவர் மகனையும்பேரனையும் பொதுமேடையில் தம்பி என்றழைப்பது ​எப்படித் தவறாகும்

அண்ணாவைப்பற்றி எழுதுபவர்களில் பெரும்பாலோர் அண்ணவைப்பற்றி முழுப்புரிதலும் இல்லாமல் அண்ணாவே தமிழக ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக வழிகாட்டியவர் என்று கூறுவது உண்மைக்கு மாறானதாகும்.  1967-ல் நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர் கனவிலும் கருதியதில்லை.  தி.மு.க ஆட்சியைப் பிடித்தபோது அவர் பாராளுமன்றத்தில் மேலவை உறுப்பினர்.  அவருக்குத் தமிழகத்தின் முதலமைச்சராவதற்கு எண்ணம் இல்லாதவராக இருந்தார்.  திரு. ஈ.வெ.கி. சம்பத் இருந்திருந்தால அவரே முதலமைச்சராகியிருப்பார். 

 அவருடைய தம்பிகள் எதிர்க்கட்ட்சியாகவே இருந்து திடீரென்று எந்தவிதமான முன்னேற்பாடுமில்லாம அதிகாரத்துக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதை நன்கு புரிந்தவைத்திருந்தவர்.  அவருடைய ஆட்சியில் முதலாண்டில் அரசு நிவாகத்தில் இருந்தவர்கள் அவரைக் கூத்தாடி என்று பார்க்கும் பார்வையை விலக்கிக் கொள்ளாமல் அவருக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் அவருடைய திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டனர்.  அவருடைய தம்பிகளோ மாண்புமிக்கவர்களாக மாறி அந்த மாயையில் சொக்கிப்போய் சொகுசாக வாழ ஆரம்பித்தனர்.  தன்னுடைய உடல்நலத்தைக் கெடுத்துக்கொண்டு தனிமனிதனாகவே அவர் ஆட்சியை நடத்த வேண்டியிருந்தது.  அவருடைய ஆட்சியில் முடிந்த அளவுக்கு ஊழலைக் கட்டுப்படுத்த அவர் மேற்கொண்ட செயல்களில் அவர் வெற்றிபெறவில்லை என்றாலும் அவர் தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளாமல் ஊழல் கரைபடியாமலே வாழ்ந்து மறைந்தவர்.  இந்ய உண்மை அவருக்குப் பின்னால் இருந்து அவரைப் பார்த்தவர்களுக்கும் அவருக்கு எதிரே அமர்ந்திருந்த எதிக்கட்ட்சியிருக்கு மட்டுமே தெரிந்த செய்தியாகும்

-------------------------------------------------------------------------------------------------------

சாகத் தீர்மானித்த அண்ணாதுரை.  கழகத்தில் லஞ்சம் ஊழல் சகஜம்

அண்ணாதுரை, புற்றுநோய்க்கு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பி நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது அவரைச் சந்தித்தேன்.  ஓய்வெடுத்துக்கொள்ளும்படி சொன்னேன்.  ஓய்வெடுத்துக்கொள்ளும் யோசனையைக் கைவிட்டுவிட்டதாகச் சொன்னார்.  அதற்கு அவர் சொன்ன காரணம் என்னைத் திடுக்கிட வைத்தது.

"என்னுடைய கட்சி நான் விரும்பியதற்குமுன்பே ஆட்சிக்கு வந்து விட்டது. நான் சிலகாலத்துக்குப் பின் தான் ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்த்தேன்.  கட்சியில் லஞ்ச ஊழல் பரவிவிட்டது.  நோய்வாய்ப்பட்டிருக்கும் இந்நிலையில் இதை சீர்படுத்தும் நிலையில் நான் இல்லை. எனவே பணியாற்றிக்கொண்டே உயிர் நீத்து விடுவேன்" என்று ஆங்கிலத்தில் அவர் கூறியதை வேதனையோடு கேட்டேன்.

மாற்றுக்கட்சியினராகிய என்னிடத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் தோழமை உணர்வுடன் அவர் தன் வேதனையைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் அவருக்கு ஆறுதல் கிடைத்திருக்கலாம்.

                                                       நன்றி: பி.ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் அவர்கள்                                                                              எழுதிய " ஆரிய மாயையா?  திராவிட மாயையா?

--------------------------------------------------------------------------------------------------------


படிக்காப் புலவன் கருநாகன்

Reply all
Reply to author
Forward
0 new messages