நுணுக்கங்கள்

111 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jul 14, 2025, 10:04:15 AMJul 14
to vallamai
அன்றாடம் தயிர் உறை ஊற்றுகிறோம். ஆனால் இத்தனை நுணுக்கங்களை இன்று தான் நான் வாசித்து அறிந்தேன். பேச்சுத் தமிழில்...

/// இவ்வளவு இருக்கா? ஒரு தயிர் உரை ஊற்ற... நம்ம சாப்பிட சொன்னா செய்வோம்... இதெல்லாம் எங்க தெரிய... சரி இன்னைக்கு நான் கத்துக்கிட்டேன். தெரியாதவர்கள் என்னைப் போல யாரும் இருந்தா;  நீங்களும் படித்து பயன் பெறுங்கள். 

படித்ததில் பிடித்தது-
தயிர் சமைக்கும் கலை:

தயிர் உறை ஊத்துறது பெரிய சமையல் கலையா? 
அப்படின்றீங்களா?

ஆமாங்க. தயிர் சமைத்தல் கலைதான்.

நான் அடுத்த வீடுகளில் அசைவம் கூட சாப்பிட்டு விடுவேன்; தயிர் சாப்பிட மாட்டேன்.

அம்மா வீட்ல உறை ஊத்தும் பால் காய்ச்சவே சில பக்குவங்கள் இருக்கு.

தயிருக்கான பால் தளதளன்னு கொதிக்கக் கூடாது.(கொதிச்சா தயிர் திரண்டுபோய் திரிதிரியா இருக்கும்)

காச்சப் பத்தாட்டி வழவழன்னு மொச்ச வாடை அடிக்கும்.

ஓவரா மஞ்சள் கலரில ஒருபடி பால் காப்படியா ஆகும்வரை காச்சினா ஆடையெல்லாம் ரப்பர்போல ஆயிடும்.
வெண்ணெயும் வராது.மோருக்குள்ளே நெய்யா மாறி மினுக் மினுக்கெனும்.

திடுதிடுன்னு எரியுற அடுப்பில காச்சக்கூடாது. பொங்கி ஊத்தி ஆடையெல்லாம் கீழையும் பாத்திரத்திலயும் ஒட்டி ருசிக்காது.

அடியே..!
எப்படித்தான்டி காச்சனும்?

நாகரீக வீடுகளில் சிறுதணலில்...
கிராமத்து வீடுகளில் கரியடுப்பில் சமைத்து முடித்தபின் தனலில்...

வறட்டி, நுங்குக் கோம்பை, தென்னங் குரும்பை, மட்டை,
காய்ந்த அப்படியே முழு சாணி (வறட்டி முட்ட)என்பார்கள்....
இவைகளைப் போட்டு புகையும் தணலுமாய் யாகம் வளர்த்தால்...

ஐஸ்கிரீம் போல தயிர் கிடைக்கும்.

தயிரைவிட மோர் எல்லாவிதத்திலும் சிறந்தது.

வெண்ணெய் இல்லாததால் என்றில்லை; கடையும்போது ஒரு வாசம் வந்து ஒட்டிக் கொள்ளும்.

மண்பானையும் மரமத்தும் இதற்கு இணை.

என்ன செய்ய?... ஆலையில்லா ஊருக்கு இலுபப்பூ சக்கரை😊

குழந்தை இருக்கும் வீடுகளில் வெண்ணெய் எடுக்கலன்னாலும்....
ஆடையுடன் அன்றே குழந்தைக்கு கொடுத்திட்டு...
கடைந்து வைத்தால் புளிப்பு ஏறாது.

குறையக் குறைய பாத்திரம் மாத்தணும்; இல்லன்னா ஊழையடிக்கும்.

காய்ச்சும் பாத்திரமும் நல்லாக் கழுவி வெயில்ல போடணும்.

எருமைப்பால் தயிர் கட்டியா இருக்கும்னு நிறைய பயன்படுத்தாதிங்க...

அது மந்தம்... வாதம்...
குளிர்ச்சி... சளிப்பிடிக்கும்.

மூலத்துக்கு நல்லது. கொழுப்பு அதிகம். கவுச்சியும் அதிகம்.

அடப்போங்க....! பாக்கெட் பாலுல... என்பவர்கள்...

பாக்கெட் தயிரை விட பாலையாவது வாங்கி காய்ச்சி உறை ஊத்துங்க.

ஏன்னா...
காய்ச்சாத பால உறை ஊத்தலாம்னு சில பக்கிகள் டீவியில சமையல் குறிப்பு சொல்லுது.

முதல் முதல் உறை ஊத்த தயிர் இல்லையா?

சிறு புளி உருண்டையும் ரெண்டு வறமிளகாயும் போடுங்க உறைஞ்சிடும்.

உப்பு எலுமிச்சை கலந்த மோரை உறை ஊத்தக் கூடாது. பழசானா நாறும்.

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கொண்டு.....
உண்ணுதல் முகனை நுண்ணுதின் மகிழ்ந்த சங்கத்தமிழ் பெண்களல்லவா
நாம்!!!

https://www.facebook.com/share/p/1CUKmEFvtZ/

எல்லாம் சரி... சங்கத் தொகைப் பாடல் கொலையுண்டு விட்டது. 

"... இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே"

'முகனை' என்ற சொல்லே பாடலில் கிடையாது.

சக 

kanmani tamil

unread,
Jul 15, 2025, 1:22:47 PMJul 15
to vallamai
/// கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் இந்த அமைப்புக்கு "#கமலை" என்று பெயர். இது மாடுகள் மூலம் ஆழமான கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒரு பாரம்பரிய முறையாகும். 

இதற்கு தேவையான உபகரணங்கள்: 
1. வடம்:
மாடுகளைக் கொண்டு இழுக்க உதவும் கயிறு.
2. வால் கயிறு:
கமலைக்குக் கீழே தொங்கும் கயிறு.
3. உருளை:
நீர் இறைக்கும்போது வடம் சுற்ற உதவும்.
4. கூனை:
கமலைக் கல்லில் நீர் நிரப்பப் பயன்படும் கூம்பு வடிவ கருவி.
5. கூனைக் கயிறு:
கூனையை மேலே இழுக்க உதவும் கயிறு.
6. வால் (தோல்வால்):
நீர் நிரப்பப் பயன்படும் தோல் பையுடைய கூனை.
7. கமலைக்கல்:
கமலை அமைப்பின் முக்கியப் பகுதி, நீர் நிரப்பப் பயன்படும் கல் அல்லது உலோகப் பொருள்.
8. கல் சட்டம்:
கமலை அமைப்பை தாங்கும் கல் சட்டம்.
9. பட்டரை சட்டம்:
கமலை அமைப்பை தாங்கும் மரச்சட்டம்.
10. வட்டு:
கமலை அமைப்பை சுழற்ற உதவும் கருவி.

கமலை இறைப்பதை எவரேனும் பார்த்திருக்கிறீர்களா???///


எழுபதுகள் வரை எங்கள் ஊரின் பழைய தோட்டங்களில் இக் கமலைக்கு உரிய இரண்டு மரத்துண்டுகள் (பட்டரைச் சட்டம்) உருளையோ வட்டோ இன்றி மொட்டையாக நிற்பதைக் காண முடிந்தது. இப்போது எல்லாம் கிணற்றை மெத்தி விடத் தேவைக்கேற்ப வேறு வேறு  மாற்றம் பெற்று விட்டன.

சக 

seshadri sridharan

unread,
Jul 16, 2025, 6:04:22 AMJul 16
to vall...@googlegroups.com
On Tue, 15 Jul 2025 at 22:52, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
/// கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் இந்த அமைப்புக்கு "#கமலை" என்று பெயர். இது மாடுகள் மூலம் ஆழமான கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒரு பாரம்பரிய முறையாகும். 

இதற்கு தேவையான உபகரணங்கள்: 
1. வடம்:
மாடுகளைக் கொண்டு இழுக்க உதவும் கயிறு.
2. வால் கயிறு:
கமலைக்குக் கீழே தொங்கும் கயிறு.
3. உருளை:
நீர் இறைக்கும்போது வடம் சுற்ற உதவும்.
4. கூனை:
கமலைக் கல்லில் நீர் நிரப்பப் பயன்படும் கூம்பு வடிவ கருவி.
5. கூனைக் கயிறு:
கூனையை மேலே இழுக்க உதவும் கயிறு.
6. வால் (தோல்வால்):
நீர் நிரப்பப் பயன்படும் தோல் பையுடைய கூனை.
7. கமலைக்கல்:
கமலை அமைப்பின் முக்கியப் பகுதி, நீர் நிரப்பப் பயன்படும் கல் அல்லது உலோகப் பொருள்.
8. கல் சட்டம்:
கமலை அமைப்பை தாங்கும் கல் சட்டம்.
9. பட்டரை சட்டம்:
கமலை அமைப்பை தாங்கும் மரச்சட்டம்.
10. வட்டு:
கமலை அமைப்பை சுழற்ற உதவும் கருவி.

கமலை இறைப்பதை எவரேனும் பார்த்திருக்கிறீர்களா???///



நான் 1984 வரை  சென்னை திருவொற்றியூரில் கமலை இறைப்பதை தென்னத் தோப்பில் பார்த்துள்ளேன். பின்பு தோப்பு வீட்டுமனையாகி விட்டது 

kanmani tamil

unread,
Jul 16, 2025, 6:29:47 AMJul 16
to vallamai
😄 ஒரு வருத்தத்துடன் தான் சிரிக்க வேண்டி உள்ளது. 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPRrXQ2Fak151%2BcZwP%3DhWPAns7W_Mtf-uRFZhaBNu9jpUA%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Jul 18, 2025, 1:47:04 PMJul 18
to vallamai
/// இலங்கைக்குச் சொந்தமான 91 தீவுகள்.!!

இலங்கை ஒரு தீவு என்றாலும், நம் நாட்டைச் சுற்றி பல சிறிய தீவுகள் உள்ளன. 

குறைந்த எண்ணிக்கையிலான குடியிருப்புகள் கூட உள்ளன. 

அவற்றில் சிலவற்றை நீங்கள் பார்வையிடலாம்.

இன்று நாம் இலங்கையைச் சேர்ந்த தீவுகளைப் பற்றி உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.

இதில், உங்களுக்கு தீவின் பெயர் மற்றும் தீவு எந்த மாவட்டத்தைச் சேர்ந்தது என்பது கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையின் மிகப்பெரிய தீவு மன்னார் தீவு, மற்றும் மிகச்சிறிய தீவு கக்குதீவு ஆகும். 

மன்னார் தீவு 130 கிமீ பெரியது, அதே சமயம் கக்குதீவு 0.01 கிமீ அளவுடையது.

1) அம்பாந்ததீவு - புத்தளம்

2) அனலைதீவு - யாழ்ப்பாணம்

3) ஆவாரம்பட்டித்தீவு - கிளிநொச்சி

4) பார்பெரின் தீவு - காலி

5) எலும்பு தீவு - மட்டக்களப்பு

6) எருமை தீவு - மட்டக்களப்பு

7) சேப்பல் தீவு - திருகோணமலை

 8)சிறுதீவு - யாழ்ப்பாணம்

9) கிளப்பன்பர்க் தீவு - திருகோணமலை

10) டெல்ஃப்ட் தீவு - யாழ்ப்பாணம் 

11) யானைத்தீவு - திருகோணமலை

12) எலிசபெத் தீவு - திருகோணமலை

13) எழுவைதீவு - யாழ்ப்பாணம்

14) டச்சு விரிகுடாவில் உள்ள எருமைதீவு (எரமுதீவு / எரமதிவு) - புத்தளம்

15) எருமத்தீவு (1) - கிளிநொச்சி

16) கல்கொடியன தீவு - மாத்தறை

17) கன் துவா தீவு - மாத்தறை

18) கிரேட் பாஸ்ஸ் ரீஃப் - ஹம்பாந்தோட்டை

19) ஹேனாதீவு (ஹவடிவு)- புத்தளம்

20) இப்பந்தீவு (டச்சு விரிகுடாவில்) - புத்தளம்

21) இரணைதீவு (வடக்கு தீவு) - கிளிநொச்சி

22) இரணைதீவு (தெற்கு தீவு) - கிளிநொச்சி

23) கச்சத்தீவு - யாழ்ப்பாணம்

24) காகதீவு தீவு - புத்தளம்

25) காக்கரதீவு - யாழ்ப்பாணம்

26) காக்கத்தீவு - கிளிநொச்சி

27) கல்லியடித்தீவு - மன்னார்

28) கனந்திதீவு - யாழ்ப்பாணம்

29) கன்னத்தீவு - யாழ்ப்பாணம்

30) கரடித்தீவு - புத்தளம்

31) காரைதீவு (கல்பிட்டி வடக்கு முனை) - புத்தளம்

32) காரைதீவு (காரைநகர்) - யாழ்

33) காரைதீவு (புங்குடுதீவு) - யாழ்

34) காரைதீவு மற்றும்
  பட்டலங்குண்டுவ - புத்தளம்

35) ஊர்காவற்துறை தீவு - யாழ்ப்பாணம்

36) கிளாச்சித்தீவு - மன்னார்

37) குறிகட்டுவான் தீவு - யாழ்ப்பாணம்

38) குருசடித்தீவு - யாழ்ப்பாணம்

39) லிட்டில் பாஸ்ஸ் ரீஃப் - ஹம்பாந்தோட்டை

40) லிட்டில் சோபர் தீவு - திருகோணமலை

41) மண்டைதீவு - யாழ்ப்பாணம்

42) சதுப்புநில தீவு - திருகோணமலை

43) மன்னார் - மன்னார்

44) மந்தீவு - மட்டக்களப்பு

45) மந்தீவு - யாழ்ப்பாணம்

46) மந்தீவு (புத்தளம்) - புத்தளம்

47) மரிப்புடுதீவு தீவு - புத்தளம்

48) மட்டுத்தீவு - புத்தளம்

49) நதித்தீவு - திருகோணமலை

50) நடுதுரிட்டி தீவு - யாழ்ப்பாணம்

51) நயினாதீவு (நாகதீபா)- யாழ்ப்பாணம்

52) நசுவன்தீவு- மட்டக்களப்பு

53) நெடுந்தீவு (புத்தளம் தடாகம்) - புத்தளம்

54) நெகியான்பிட்டிதீவு- யாழ்ப்பாணம்

55) நில்வெல்ல தீவு - மாத்தறை

56) நோர்வே தீவு - திருகோணமலை

57) ஒட்டகரென்தீவு- புத்தளம்

58) பாலைதீவு தீவு - யாழ்ப்பாணம்

59) பாலதீவு தீவு - கிளிநொச்சி

60) பரேவி துவா - மாத்தறை

61) பரிதித்தீவு - யாழ்ப்பாணம்

62) பெரிய அரிச்சல் தீவு - புத்தளம்

63) பெரியதீவு தீவு - மட்டக்களப்பு

64) பெரியதீவு- புத்தளம்

65) புறா தீவு - திருகோணமலை

66) தூள் தீவு (காக்கை தீவு) - திருகோணமலை

67) புளியந்தீவு- மட்டக்களப்பு

68) புளியந்தீவு- யாழ்ப்பாணம்

69) புளியந்தீவு- மன்னார்

70) புல்லுப்பிட்டி தீவு - புத்தளம்

71) புங்குடுதீவு- யாழ்ப்பாணம்

72) பூவரசந்தீவு - யாழ்ப்பாணம்

73) சுற்று தீவு - திருகோணமலை

74) சல்லித்தீவு - மட்டக்களப்பு

75) சல்லியம்பிடி தீவு - புத்தளம்

76) சீனிகம தேவாலய தீவு - காலி

77) சேரைத்தீவு தீவு - மட்டக்களப்பு

78) சின்ன அரிச்சல் தீவு- புத்தளம்

79) டச்சு விரிகுடாவில் உள்ள சின்ன எருமைதீவு- புத்தளம்

80) சிறியதீவு- மட்டக்களப்பு

81) மென்மையான தீவு - திருகோணமலை

82) சோபர் தீவு - திருகோணமலை

83) சோமதிதீவு - புத்தளம்

84) தப்ரோபேன் தீவு - மாத்தறை

85) துருத்துப்பிட்டி தீவு - யாழ்ப்பாணம்

86) உடையூர்புதி தீவு - புத்தளம்

87) உறைதீவு - யாழ்ப்பாணம்

88) வெல்ல தீவு - புத்தளம்

89) யாக்கினிகே துவா - மாத்தறை

90) யோர்க் தீவு - திருகோணமலை

91) பர்பரியன் தீவு-பேறுவலை///


தெரிவு: சக 

kanmani tamil

unread,
Jul 26, 2025, 10:14:55 PMJul 26
to vallamai
மனிதரில் எத்தனை எத்தனை உயர்ந்த ரகத்தோர்!!!...

/// ♻️

         பேருந்தில் நிற்க முடியாமல்
சிரமப்படும் நமக்கு எழுந்து,
தன் இடம் கொடுக்கும்
அந்த யாரோ ஒரு
*இருக்கை மனிதர்!*

          ரயிலில் மேலேற முடியாத 
நமக்கு தன் கீழ் இருக்கையை
கொடுக்கும் அந்த யாரோ ஒரு
*உயர்ந்த மனிதர்!*

        சாலை விபத்தில் நமக்கு 
முதல் ஆளாய் ஓடோடி வந்து 
உதவும் அந்த யாரோ ஒரு
*சகாய மனிதர்!*

          தூக்கிவிட மறந்த நம் 
வண்டி சைட்ஸ்டாண்டை 
தன் சைகையிலேயே 
தூக்கிவிடச் சொல்லும் 
அந்த யாரோ ஒரு
*சைகை மனிதர்!*

        வண்டிச் சக்கரத்தில் 
மாட்ட இருக்கும் துப்பட்டாவை சொருவிக்கொள்ளச் சொல்லி
எச்சரிக்கும் அந்த யாரோ ஒரு 
*எச்சரிக்கை மனிதர்!*

       செல்லும் வழி தெரியாமல் 
முழிக்கும் நமக்கு சரியான 
வழி சொல்லி உதவும்
அந்த யாரோ ஒரு
*முகவரி மனிதர்!*

         திடீரென்று நின்று விட்ட 
நம் வண்டியை உதைத்து 
ஓட வைத்துக் கொடுக்கும்
அந்த யாரோ ஒரு 
*உதை மனிதர்!*

         சில்லறை இல்லாமல் நாம் 
தவிக்கும்போது, சரியான
சில்லறை கொடுத்து உதவும் 
அந்த யாரோ ஒரு 
*நாணய மனிதர்!*

          தவறவிட்ட நம் பணப்பையை
நம்மைத் தேடிவந்து 
கொடுத்துச் செல்லும் 
அந்த யாரோ ஒரு 
*நேர்மை மனிதர்!*

        ATM இயந்திரத்தில்
பணம் எடுக்கத் தெரியாமல்
தவிக்கும் போது, எடுத்துதவும்
அந்த யாரோ ஒரு 
*நல்ல மனிதர்!*

         உயிருக்கு போராடும்
ஆபத்தான நிலையில்,
யாருக்கென்றே தெரியாமல்
இரத்தம் கொடுக்க முன்வரும்
அந்த யாரோ ஒரு
*குருதி மனிதர்!*

      இன்னும் இன்னும் இப்படி,
நம்மைச் சுற்றியே,
எத்தனையோ அந்த 
*"யாரோ மனிதர்கள்!"* 
எப்போதும் இருக்கிறார்கள்.

        தேவையானச் சூழலில்
தங்களுக்குள் இருக்கும் 
மனிதர்களை அவர்கள்
வெளிப்படுத்தி விடுகிறார்கள்.

      நாமும் இருப்போம் முடிந்தவரை
யாரோ அந்த சில மனிதர்களாய்!

 *வாழ்க வளமுடன்*///


அன்றாட வாழ்வில் நாம் நடைமுறையில் சந்தித்த மனிதர்கள்... 
அவர்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்க இந்தப் பதிவு வாய்ப்பு அளித்து உள்ளது. 

சக 

kanmani tamil

unread,
Jul 27, 2025, 9:45:51 AMJul 27
to vallamai
நம் முன்னோர்கள் 
எதை செய்தாலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ:

மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர்.

சரி நீரூற்று இருக்கும்; ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றைச் சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டு சென்று சேர்த்த
அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .

சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . .கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்று கிடைக்குமாம்.

படித்ததில் பிடித்தது

kanmani tamil

unread,
Aug 2, 2025, 7:06:05 AMAug 2
to vallamai
/// #உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு இந்தத் #தமிழ்_மண்தான், இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன? 

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.*

அப்போது வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.

*#தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால்_போர்த்ப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.*

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

*எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.*

உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

*வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.*

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 

*ஏன் கோவிலை கட்டினார்கள்?*

*தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ?

தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.

*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ?

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ?

*உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ?

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.

இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன.

*கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.*

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

*கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.*

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

*நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.*

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை.

*நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.*

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 

*தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.*

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

*கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.*

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.*

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

*12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.*

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் கோயில்கள்.

*ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,* 

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

*மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.* 

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது.

வாழிய பைந்தமிழ் நாடு...///


ஒரு கோயில் கட்டுமானத்தை அடியொட்டிய பொருளாதார நுட்பங்களும் சமூக வாழ்வும்...

சக 

seshadri sridharan

unread,
Aug 3, 2025, 8:10:58 AMAug 3
to வல்லமை
இதை தான் நான் முன்னம் ஒரு கல்வெட்டு பதிவில் சொல்லியுள்ளேன். இந்த கோவில் இயக்கம் பல்லவர் காலத்தில் தொடங்கியது. கோவில்கள் ஆற்று பாசனத்தை நம்பி ஆறுகள் இருக்கும் இடத்தை அண்டி அமைத்தனர். ஏனென்றால் கோவில் ஊழியருக்கு சம்பளம் கிடையாது. காடு கொன்று வயல் உண்டாக்கி கோவில் ஊழியருக்கு இறையிலி ஆக வழங்கப்பட்டன. இதனால் புதுப் புது ஊர்கள் தோன்றின. அரசனுக்கு வரி வருவாய் பெருகியது. சோழர் காலம் செங்கல் கோவில்களை கற்கோவில்களாக மாற்றியது. இன்னும் அதிக கோவில் ஊழியர்கள் பாட்டுப்பாடிகளாக அமர்த்தப்பட்டனர்.

kanmani tamil

unread,
Aug 3, 2025, 10:38:41 AMAug 3
to vallamai
///கோவில் இயக்கம் பல்லவர் காலத்தில் தொடங்கியது. கோவில்கள் ஆற்று பாசனத்தை நம்பி ஆறுகள் இருக்கும் இடத்தை அண்டி அமைத்தனர். ஏனென்றால் கோவில் ஊழியருக்கு சம்பளம் கிடையாது. காடு கொன்று வயல் உண்டாக்கி கோவில் ஊழியருக்கு இறையிலி ஆக வழங்கப்பட்டன. இதனால் புதுப் புது ஊர்கள் தோன்றின. அரசனுக்கு வரி வருவாய் பெருகியது. சோழர் காலம் செங்கல் கோவில்களை கற்கோவில்களாக மாற்றியது. இன்னும் அதிக கோவில் ஊழியர்கள் பாட்டுப்பாடிகளாக அமர்த்தப்பட்டனர்./// சேஷாத்ரி ஐயா 5.40க்கு எழுதியது...

ஆம் ஐயா; இப்போது தெளிவாகப் புரிகிறது. 
சக 

kanmani tamil

unread,
Aug 4, 2025, 1:07:54 AMAug 4
to vallamai
/// பரட்டை ஆசாரி என்பவர் 1930ம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு ஒன்றினை தயார் செய்தார். அது மாங்காய் வடிவத்தில் இருந்தது. அந்தப் பூட்டுடனே இன்னொரு பூட்டினையும் தயார் செய்தார். அது மேஜைக்களுக்கு பொருத்தக்கூடிய சதுர வடிவமான பூட்டு. இப்படி இரு வகையான பூட்டுகளைத் தயார் செய்த பரட்டை ஆசாரி. அதனை கடைகளில் விற்பனைக்காகக் கொடுத்தார். கொஞ்ச நாட்கள் கழித்து கடைக்காரர்கள் அனைவரும் ஆசாரியைத் தேடி ஓடி வந்தனர். ஆசாரிக்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரையும் வரவேற்று என்ன விஷயம் என்று விசாரித்தார். வந்திருந்த அனைவரும் ஆசாரியைப் பாராட்டியதோடு நில்லாமல், இதுபோல் இன்னும் அதிக அளவில் பூட்டுகளைத் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆசாரியும் மகிழ்ந்து அதிக அளவில் பூட்டுகளைச் செய்ய தயாரானார். தனக்கு உதவுவதற்காக ஆட்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டார். பூட்டு வியாபாரம் அங்கிருந்துதான் சூடுபிடிக்கத் தொடங்கியது.

பரட்டை ஆசாரி மிகுந்த ஈடுபாட்டுடன் வழக்கமான ஒன்றாக இல்லாமல் அழகிய கற்பனைத் திறனோடும், நீண்ட நாள்கள் உழைக்கும் வலிமையோடும் எளிதில் உடைத்துத் திறக்க முடியாத அமைப்போடும் சிரத்தையுடன் பூட்டுகளைத் தயாரித்தார். பரட்டை ஆசாரியின் பூட்டுகளுக்கு நிகரில்லை என எல்லோரும் பாராட்டினார்கள். நிறைய ஆர்டர்கள் தேடி வந்தன.
நாளுக்குநாள் பூட்டின் வியாபாரம் அதிகமாக அதிகமாக பரட்டை ஆசாரியிடம் தொழிலைக் கற்றுக்கொண்டவர்கள் அவரிடமிருந்து பிரிந்து, தனித்தனியாக பூட்டுத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டனர். பூட்டுக்குத் தேவையான இரும்புகள் திண்டுக்கல்லில் அதிகமாக கிடைப்பதால் திண்டுக்கல் பூட்டு மிக மிக வளர்ச்சியடைந்து பிரபலமானது. இப்படியாக வளர்ச்சியடைந்த பூட்டுத் தொழில். 1945ம் ஆண்டு திண்டுக்கல்லில் மட்டுமல்லாது வெளியூர்களிலும் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட பரவலான வரவேற்பைப் பெற்றது.

 திண்டுக்கல் என்றால் உயர்ந்த ரகப் பூட்டுகள் என்று புகழானது. இதனை ஒழுங்கு படுத்துவதற்காக 1957ம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது, 1972-ல் பூட்டு விற்பனை உச்சத்தில் இருந்த சமயம். திண்டுக்கல்லில் இருநூறுக்கும் மேற்பட்ட பூட்டு தொழிற்சாலைகள் உருவாகியிருந்தன. அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பூட்டு செய்யும் வேலையில் ஈடுபட்டனர். ஓர் இரும்பு தகட்டின்மேல் ஒர் அடையாளம் செய்து முதலில் துளை செய்கின்றார்கள். அதன்பின்னர் பேஸ் ராட், லீவர் போன்றவைகளைத் தனித்தனியாக தயாரித்து, ஆர்க் வெல்டிங் மூலம் பேஸ்ராட், லீவர் இரண்டையும் இரும்பு தகட்டின் மீது இணைக்கின்றனர். பூட்டு தயார். தயாரான பூட்டுக்கு நிக்கல் பாலிஷ் போட்டு பூட்டை பளபளப்பாக்கின்றனர். புது பூட்டு ரெடி. கையால் மட்டுமே செய்யப்படுகின்றன பூட்டுகள்.

#டிலோ பூட்டு:
திண்டுக்கல் கூட்டுறவு சங்கம் தயாரிக்கின்ற இந்தப் பூட்டு உலகப் புகழ் பெற்றது என்றே சொல்லலாம். இந்தப் பூட்டுக்கு ஒரே ஒரு சாவிதான். அது தொலைந்துவிட்டால் பூட்டை உடைப்பது ஒன்றுதான் சிறந்த வழி. வேறு வழியே கிடையாது. ஏனென்றால் கள்ள சாவியோ, வேறு சாவியோ போட்டு இந்த பூட்டைத் திறக்க முடியாது.

#பெல் லாக்:
இந்தப் பூட்டு சற்று வித்தியாசமானது. பூட்டும் போதும், திறக்கும் போதும் மணி அடிப்பதால் இதற்கு ‘பெல் லாக்’ என்று பெயர்.

#லண்டன் லாக்:
ஆங்கிலேயர் காலத்தில் லண்டனிலிருந்து வந்த பழுது பார்ப்பதற்கு வந்த பூட்டைப் பார்த்து தயார் செய்யப்பட்டது. பூட்டினுள் ஷட்டர் போன்ற மெல்லிய காகிதம் இருக்கும். வேறு சாவி போட்டு பூட்டைத் திறக்க முயன்றால் அந்த காகிதம் கிழிந்துவிடும். அப்புறம் பூட்டைத் திறக்கவே முடியாது.
இதனை மாடலாகக் கொண்டு திண்டுக்கல் பூட்டுத் தயாரிப்பவர்களும் இதேபோன்ற பூட்டினைத் தயார் செய்தனர். இந்தப் பூட்டுகளை பெரிய பெரிய நிறுவனங்கள் விரும்பி வாங்கினார்கள். ஒரு நிறுவனத்திற்கு 25 பூட்டுகள் தேவைப்பட்டால் 25 பூட்டுக்கும் தனித்தனி சாவிகள் கொடுக்கப்படும். அத்துடன் மாஸ்டர் கீ ஒன்றும் கொடுப்பார்கள். மாஸ்டர் கீயைக் கொண்டு 25 பூட்டுகளையும் திறக்கவும் பூட்டவும் முடியும்.
பூட்டின் விலை ரூ.100 -முதல் அதிகபட்சமாக கோயில் பூட்டின் விலை 5000 வரை இருக்கும். கோயில்களுக்காக செய்யப்படுகின்ற ஒரு பூட்டின் எடை 22 கிலோ.///

https://www.facebook.com/share/p/164PNfkpUK/

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Aug 16, 2025, 12:15:40 AMAug 16
to vallamai
/// கோயில்களில் இது போன்ற நீளமான கோடு காணப்பட்டால் இதை சாதாரணமாக கடந்து சென்று விடாதீர்கள்.

அதற்கு பின் இவ்வளவு விசயம் உள்ளது. (எல்லா கோடுகளையும் கணக்கில் கொள்ள வேண்டாம் சில நேரங்களில் அது அழகுக்காகவும் போடப்பட்டிருக்கலாம்) தொடங்கும் இடத்திலும் முடியும் இடத்திலும் குறுக்கே படத்தில் இருப்பதைப் போல் ஒரு கோடு இருக்கும்.

இது நில அளவைக்காக ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சோழர்களால் பயன்படுத்தப்பட்ட அளவைக் கோல். அதாவது ஒவ்வொரு கோயிலுக்கும் நிலங்கள் தானமாக அன்றைக்கு அளிக்கப்பட்டது. அப்படி தானமளிக்கப்பட்டது எத்தனை குழி, அந்த நிலம் ஊரில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதும் தெளிவாக கல்வெட்டில் குறிக்கப்படும்.

வடக்கு,தெற்கு என நான்கு திசைகளும் குறிக்கப்பட்டு இந்த திசையில் இந்த இடத்தோடு முடிவடைகிறது என்று அருகில் இருக்கும் ஒரு அடையாளமும் தெரிவிக்கப்பட்டிருக்கும். கோயில் சுவற்றில் இருக்கும் இந்த கோலின் அளவைக் கொண்டு தான் நிலத்தை அளந்தோம் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்கும், நாளை கோயில் நிலத்தில் ஏதேனும் சிக்கல் வந்தால்

மீண்டும் இந்த பொறிக்கப்பட்டுள்ள.

கோலின் அளவைக் கொண்டு கணக்கிடலாம் என்பதற்கும் அதை கோயில் சுவற்றில் நிரந்தரமாக பதித்தனர். இந்த கோல் ஒவ்வொரு மன்னர் காலத்திலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்பட்டது. இது முன்னரே பழக்கத்தில் இருந்தாலும். இராஜராஜன் தான் முதல் முதலாக சோழ நாடு முழுவதையும் நஞ்சையும், புஞ்சையும் தனித்தனியாக அளந்தார்.

சோழ நாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவர் தலைமையில் இராசராச சோழன் ஒரு குழு அமைத்தார். இக்குழு தனது பணியைக் சிறப்பாக செய்து முடித்துள்ளது. இதனால் இராஜராஜன் "உலகளந்தான்" என்ற பட்டமும் பெற்றார்.

அப்படி அவர் காலத்தில் அளக்கப்பட்ட கோலிற்கு பெயர் "உலகளந்தான் கோல்" என்பதாகும். அது பதினாறு சாண் நீளமுடையதாக இருந்துள்ளது. எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு மாபெரும் பணி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு அரசு எப்படியெல்லாம் சிறப்பாக இயங்கியுள்ளது என்பதற்கு இதுவெல்லாம் நமக்கு கிடைக்கும் சாட்சி.///

https://www.facebook.com/share/p/1BAsB7vUm2/

நாம் மறந்து போன நுட்பங்களை எல்லாம் தொகுத்துத் தமிழ் மாணவர்களுக்கு ஒரு பாடத்திட்டம் வகுக்க வேண்டும். ஆனால் நாமே ஒவ்வொன்றாக இப்போது தானே தோண்டித் தோண்டித் தேடித் தேடித் திரிகிறோம். தடயங்கள் மறையும் முன்னர் தெரிந்து கொள்ள இறைஅருள் வேண்டும். 

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Aug 23, 2025, 9:18:24 PMAug 23
to vallamai
பனைமரம் இடிதாங்கும் நுட்பம்...

/// மின்னல் ஏன் எப்போதும் பனை மரம் மீதே விழுகிறது தெரியுமா? அதுக்கு ஒரு ஸ்பெஷல் காரணம் இருக்காம்...!

நாம் சிறுவயது முதலே பனை மரங்களில் இடி விழுவதை பார்த்திருப்போம். பனை மரங்கள் மின்னல் தாக்குதல்களைத் தணிக்கும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளன, இது விஞ்ஞானிகளை பல நூற்றாண்டுகளாக சிந்திக்கத் தூண்டும் செயலாகும். இந்த இயற்கை பாதுகாப்பு பொறிமுறையானது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகள் போன்ற அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் பாதுகாப்பு அரணாக உள்ளது.

உதாரணமாக, இந்தியாவின் ஒடிசா மாநிலம், மின்னல் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதில் பனை மரங்களின் நன்மைகளை சார்ந்துள்ளது மற்றும் இறப்புகளைக் குறைக்க பெரிய அளவில் இந்த மரத்தை பயிரிடத் தொடங்கியுள்ளது.

மின்னல் தாக்குதல்களைத் தணிப்பதில் பனை மரங்கள் திறம்பட செயல்பட முதன்மையான காரணங்களில் ஒன்று அவற்றின் அதிக ஈரப்பதம் ஆகும். பனை மரங்களின் தண்டுகளில் நீர் மற்றும் சாறு நிரம்பியுள்ளது, இது மின்னல் தாக்கத்திலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி வெளியேற்றும். இந்த அதிக ஈரப்பதம் இயற்கையான கடத்தியாக செயல்படுகிறது, இதனால் மின்னல் மரத்தின் வழியாகவும் தரையிலும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தாது. மின்னல் தாக்குதல் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையை எதிர்த்துப் போராட 1.9 மில்லியன் பனை மரங்களை நடுவதற்கு அரசாங்கம் ஒடிசா அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

பனைமரத்தின் உயரம் பனை மரங்களின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் அவற்றின் உயரம். பனை மரங்கள் பெரும்பாலும் சுற்றியுள்ள தாவரங்களை விட உயரமானவை, இதனால் அவை மின்னலால் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது ஒரு பாதகமாகத் தோன்றினாலும், இது உண்மையில் அருகிலுள்ள மற்ற தாவரங்கள் மற்றும் கட்டமைப்புகளைப் பாதுகாக்க உதவுகிறது.

மின்னல் தாக்குதல்களை ஈர்ப்பதன் மூலம், பனை மரங்கள் இயற்கை மின்னல் கம்பிகளாகச் செயல்படுகின்றன, மேலும் பாதிக்கப்படக்கூடிய இலக்குகளிலிருந்து மின்சார ஆற்றலைத் திசைதிருப்புகின்றன. மற்ற மின்னல் பாதுகாப்பு கிடைக்காத கிராமப்புறங்களில் இந்த பாதுகாப்புப் பங்கு மிகவும் முக்கியமானது.

மின்னல் தாக்குதல்களைத் தணிப்பதில் பனை மரங்களின் செயல்திறன் பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ...
இந்த முன்முயற்சியானது காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக அதிகரித்து வரும் மின்னல் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். மாநிலத்தின் புவியியல் இருப்பிடம் மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவை குறிப்பாக மின்னல் தாக்கங்களுக்கு ஆளாகின்றன, கடந்த 11 ஆண்டுகளில் 3,790 இறப்புகள் பதிவாகியுள்ளன.

பனை மரங்கள் மின்னல் தாக்குதல்களைத் தாங்கும் திறன், அவற்றின் செயல்திறனுக்கு பங்களிக்கும் மற்றொரு காரணியாகும். பெரும்பாலான பனை மரங்கள் மின்னல் தாக்கத்தை கடுமையான சேதம் இல்லாமல் தாங்கும். அவற்றின் அடர்த்தியான பட்டை மற்றும் கடினமான இலைகள் தாக்குதலின் வெப்பம் மற்றும் சக்தியிலிருந்து அவற்றைப் பாதுகாக்க உதவுகின்றன, அவை தொடர்ந்து வளரவும் பாதுகாப்பை வழங்கவும் அனுமதிக்கிறது. இந்த பின்னடைவு, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மின்னல் தாக்குதலைத் தணிக்க பனை மரங்களை ஒரு நிலையான மற்றும் நீண்ட காலத் தீர்வாக மாற்றுகிறது.

மின்னல் தாக்குதல்களைத் தணிப்பதில் பனை மரங்களின் பங்கு, சுற்றுச்சூழல் சவால்களுக்கு இயற்கை எவ்வாறு தீர்வுகளை வழங்குகிறது என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான உதாரணம். இந்த இயற்கையான பாதுகாப்புகளைப் புரிந்துகொள்வதன் மூலம், மின்னலின் ஆபத்துக்களில் இருந்து மனித உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்கான உத்திகளை நாம் உருவாக்கலாம்.

நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்///


தெரிவு:சக

kanmani tamil

unread,
Aug 27, 2025, 12:11:43 AMAug 27
to vallamai
மறந்து போன காதணிகளின் பெயர்கள்:

/// ஒத்தரூபா தாரேன்.. ஒனப்பு தட்டு தாரேன்னு குஷ்பு அக்கா ஒரு படத்துல கரகத்தை வச்சிக்கிட்டு பாடும். 

அதே போல சின்ன ஜமீன் படத்துல ஒனப்பு தட்டு புல்லாக்கு வாங்கி தாரேன் ராசையான்னு சுகன்யா கார்த்திக்கை பார்த்து பாடும். 

வெள்ளித்தட்டு, சில்வர் தட்டு, பீங்கான் தட்டு, பிளாஸ்டிக் தட்டு தெரியும். அதென்ன ஒனப்பு தட்டு?

அது ஒனப்பு தட்டு இல்லீங்க வனப்பு தட்டு... 30 வயசுக்கு மேற்பட்ட ஆளுங்களோட பாட்டிங்க, காதுல வரிசையா கம்மல் போட்டு பார்த்திருப்பீங்க. அந்த மொத்த கம்மலையும் சேர்த்தாலே 5 பவுன் தேறும். அப்படி காது குத்து ஒன்னொன்னுத்துக்கும் ஒவ்வொரு பேரு. இப்ப அது சுருங்கி கம்மலுக்கு மேல் ஒரு குட்டி கம்மலை நம்ம பிள்ளைக போட்டுக்கிட்டு இருக்கு. அந்த குட்டி கம்மலுக்கு பேருதான் வனப்பு தட்டு. இந்த கம்மலுக்கும், மூக்குத்திக்கும் இடையில் ஒரு செயின் இருக்குற மாதிரி விசேஷங்களில் பெண்கள் அணிவாங்க. அது பெண்களுக்கு வனப்பு கொடுக்கும். வனப்பு தட்டுதான் ஒனப்பு தட்டாகிட்டு...///

https://www.facebook.com/share/p/1C4q5DYi16/

நல்ல விளக்கம்! ஆனால் மொத்தத்தில் 5பவுன் கூடத் தேறாது. உள்ளே பூரா அரக்கு தான் இருக்கும் (weightless)

வட்டாரத்திற்கு வட்டாரம் பெயர்கள் மாறுபடும். எங்கள் வட்டாரத்தில் 'கொப்பு' என்ற அணிகலனை அடுத்து 'குலுக்கு' என்று ஒன்றைச் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். 

நம்ம பிள்ளைகள் காதில் இரண்டாவதாகக் குத்திக் கொண்டு போடும் கம்மலுக்கு (செகன்ட்ஸ்) 'seconds' எனப் பெயர் வைத்து இருக்கிறார்கள். 

சக 

seshadri sridharan

unread,
Aug 29, 2025, 3:08:25 AMAug 29
to vall...@googlegroups.com
On Wed, 27 Aug 2025 at 09:41, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
மறந்து போன காதணிகளின் பெயர்கள்:

/// ஒத்தரூபா தாரேன்.. ஒனப்பு தட்டு தாரேன்னு குஷ்பு அக்கா ஒரு படத்துல கரகத்தை வச்சிக்கிட்டு பாடும். 

அதே போல சின்ன ஜமீன் படத்துல ஒனப்பு தட்டு புல்லாக்கு வாங்கி தாரேன் ராசையான்னு சுகன்யா கார்த்திக்கை பார்த்து பாடும். 

வெள்ளித்தட்டு, சில்வர் தட்டு, பீங்கான் தட்டு, பிளாஸ்டிக் தட்டு தெரியும். அதென்ன ஒனப்பு தட்டு?

அது ஒனப்பு தட்டு இல்லீங்க வனப்பு தட்டு... 30 வயசுக்கு மேற்பட்ட ஆளுங்களோட பாட்டிங்க, காதுல வரிசையா கம்மல் போட்டு பார்த்திருப்பீங்க. அந்த மொத்த கம்மலையும் சேர்த்தாலே 5 பவுன் தேறும். அப்படி காது குத்து ஒன்னொன்னுத்துக்கும் ஒவ்வொரு பேரு. இப்ப அது சுருங்கி கம்மலுக்கு மேல் ஒரு குட்டி கம்மலை நம்ம பிள்ளைக போட்டுக்கிட்டு இருக்கு. அந்த குட்டி கம்மலுக்கு பேருதான் வனப்பு தட்டு. இந்த கம்மலுக்கும், மூக்குத்திக்கும் இடையில் ஒரு செயின் இருக்குற மாதிரி விசேஷங்களில் பெண்கள் அணிவாங்க. அது பெண்களுக்கு வனப்பு கொடுக்கும். வனப்பு தட்டுதான் ஒனப்பு தட்டாகிட்டு...///

https://www.facebook.com/share/p/1C4q5DYi16/

நல்ல விளக்கம்! ஆனால் மொத்தத்தில் 5பவுன் கூடத் தேறாது. உள்ளே பூரா அரக்கு தான் இருக்கும் (weightless)

வட்டாரத்திற்கு வட்டாரம் பெயர்கள் மாறுபடும். எங்கள் வட்டாரத்தில் 'கொப்பு' என்ற அணிகலனை அடுத்து 'குலுக்கு' என்று ஒன்றைச் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். 

நம்ம பிள்ளைகள் காதில் இரண்டாவதாகக் குத்திக் கொண்டு போடும் கம்மலுக்கு (செகன்ட்ஸ்) 'seconds' எனப் பெயர் வைத்து இருக்கிறார்கள். 

நான்  கூட இப்படி காதெல்லாம் தட்டு போட்ட பெண்களை பார்த்துள்ளேன். இப்போது அரிதாகிவிட்டது. 
 

kanmani tamil

unread,
Oct 25, 2025, 12:53:29 AMOct 25
to vallamai
சமீபத்தில் மின்னல் தாக்கி நான்கு சகோதரிகள் மரணமடைந்த செய்தி 
நம் அனைவரையும் துக்கமடையச் செய்தது. 
அவர்களை இழந்து வாடும் 
அவர்தம் சொந்தங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக.

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர், 
சிவகங்கை கூறும் முதலுதவியும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் இடி&மின்னல் தோன்றும் முறையும்:


மின்னல் என்பது ஒரு இயல்பான வானியல் நிகழ்வு. 
தினசரி நாம் வாழும் பூமி 80 லட்சம் மின்னல்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றது. இதன் வழியாக நமது வளி மண்டலமும் பூமியும் பேட்டரியைப் போல் தங்களைத் தாங்களே சார்ஜ் செய்து கொள்கின்றன. மின்னல் ஏற்படும் போது கணப்பொழுதில் மிக மிக அதிகமான அளவு மின்சாரம் உண்டாகி, அது தான் செல்லும் வழியைத் தேடி பூமியிலோ அல்லது மேகங்களுக்குள்ளோ அடைந்து கொள்கிறது. 
இடிமின்னலுடன் கூடிய வானிலை நிலவும் போது உண்டாகும் க்யூமுலோ நிம்பஸ் மேகங்கள் மெல்ல மெல்ல மேலே எழத் துவங்குகின்றன. 
அந்த மேகக்கூட்டங்களின் மேல் பக்கம் காளிபிளவர் போல இருக்கும். இந்த மேகங்கள் 30000 அடியை நெருங்கும் போது, மின்னல்கள் ஏற்படும் நிலையை அடைகின்றன. 
இத்தகைய மேகங்களுக்குள்,
பளு அதிகமான நீர்த் துளிகள் மேகத்திற்கு கீழே நெகடிவ் சார்ஜுடன் இருக்கும். பளு குறைவான ஐஸ் துகள்கள் மேகத்திற்கு மேலே பாசிடிவ் சார்ஜை அதிகரித்துக் கொண்டே இருக்கும். 
இவ்வாறு மேகத்திரளின் எடை கூடக்கூட இந்த இரு பகுதிகளுக்கு இடையேயான 
மின்னேற்ற வித்தியாசம் அதிகமாகிக் கொண்டே செல்ல... மின்னல்கள் உள்ளேயே தோன்ற ஆரம்பிக்கும். இந்த மேகத் திரள் கீழே இறங்கி வர 
தரைக்கு சில நூறு மீட்டர்கள் உயரத்தில் மேகம் வரும் போது, 
தரையில் உயரமான பகுதியில் இருக்கும் கட்டிடங்கள், மரங்கள், செல்போன் கோபுரங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து பாசிடிவ் சார்ஜ், நிலை மின் தூண்டல் (Electro static induction) மூலம் தூண்டப்படும். 
நாம் தலை கோதும் சீப்பை வைத்து பட்டாடையில் இரண்டு மூன்று தடவை தடவி விட்டு நமது கைகளில் வைத்தால் ரோமங்கள் எழுந்து நிற்பதும் இந்த நிலை மின் தூண்டலால் தான் என்பது குறிப்பிடத் தக்கது.

கீழிருந்து நிலத்தில் இருந்து மேல்நோக்கி ஈர்க்கப்படும் இந்த பாசிடிவ் சார்ஜ் ஒருபக்கம். (upward leader) 
மேலிருந்து மேகத்தில் இருந்து கீழ்நோக்கி இறங்கத் துடிக்கும் நெகடிவ் சார்ஜ் மறுபக்கம். 
(stepped leader) இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று
தொடர்பு கொள்ளும் போது 
இணைப்பு ஏற்படுகிறது. 
அந்த இணைப்பு வழியாக 
ஒட்டுமொத்த மின்சாரமும் நிலத்தில் கீழிறங்குகிறது. 
மின்சாரம் என்றால் உங்கள் வீட்டு... என் வீட்டு அளவில்லை (240 வோல்ட்) நூறு மில்லியன் முதல் 1 பில்லியன் வோல்ட் எனும் அசாதாரண அளவில்
மின்சாரம் கீழிறங்குகிறது.
மின்னல் உருவாவது புரிகிறது. 
இடி எப்படி தோன்றுகிறது? 
மின்னல் உருவாகும் போது ஏற்படும் இத்தனை அதிக மின்சாரம் அதனைச் சுற்றியுள்ள காற்றை ஒரே நேரத்தில் பல ஆயிரம் செல்சியஸ் அளவுக்கு சூடாக்கிக் காற்றை விரிவடையச் செய்கிறது. இதன் விளைவாக, 
வெடிப்பு உருவாகி பலத்த சத்தம் எழுகிறது. அது தான் நாம் கேட்கும் 'இடி'. 
மின்னல் முதலில் தோன்றுகிறது. 
அதன் விளைவாக இடி உருவாகிறது. 
மின்னல் - ஒளி என்பதால் வேகமாகப் பயணம் செய்து நம்மை முதலில் அடைகிறது. ஒளியின் வேகம் ஒரு நொடியில் மூன்று லட்சம் கிலோமீட்டர். 
இடி - ஒலி என்பதால் மெதுவாகப் பயணம் செய்து நம்மை சற்று நேரத்திற்குப் பிறகு அடைகிறது. ஒலியின் வேகம் என்பது ஒரு நொடிக்கு கால் கிலோமீட்டருக்கு சற்று அதிகம். 

நிகழ்கால / வருங்கால வானிலை நிலவரங்களைக் கவனித்து வர வேண்டும். அதன் வழியாக, இடி மின்னலுடன் கூடிய வானிலை நிலவுமா என்பதை அறிந்து இயன்றவரை வெளிப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக மலையேற்றங்கள், ட்ரெக்கிங்கை மின்னல் நிலவக்கூடும் வானிலை அபாயம் உள்ள நாட்களில் கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். 

இடி மின்னல் வெளியே அடித்தால், கட்டாயம் வெளியே செல்லுதல் கூடாது. தவிர்க்க வேண்டும். "இடி அடித்தால் 
வீட்டுக்குள் இரு"- இதுவே காலங்காலமாக நாம் கடைபிடித்து வரும் பழக்கம். அதைத் தொடர்ந்து கடைபிடிப்போம். 

ஒருவேளை, நீங்கள் வெளியே இருக்கும் போது இடி மின்னல் தாக்கத் துவங்கினால், 
உடனடியாக வீட்டுக்குள்/ காண்க்ரீட் மோட்டார் அறை ஆகியவற்றுக்குள் செல்ல வேண்டும். அல்லது மேல் பக்கம் கூரையுள்ள காருக்குள் சென்று ஜன்னல்களை முழுவதுமாக மூடிக்கொண்டு உள்ளேயே இருக்க வேண்டும். 
ஒளிந்து கொள்ள வீடு இல்லாத பட்சத்தில் இருக்கும் இடத்தில் அப்படியே குத்தவைத்து 
(SQUATTING POSITION) அமர்ந்து கால்களை ஒன்றாக வைத்துக் கொண்டு தலையை உள்பக்கமாக சுருட்டி வைத்து காதுகளை கைகளைக் கொண்டு மூடி வைத்து உட்கார்ந்திருக்க வேண்டும். 

தரையில் படுக்கக் கூடாது. 

கட்டாயம் தனியாக இருக்கும் மரங்கள், செல்போன் கோபுரங்கள், மலை முகடுகள் ஆகியவற்றைத் தவிர்த்து விட வேண்டும். உயரமான இடங்களில் மின்னல் அடிக்க வாய்ப்பு அதிகம். 

கட்டாயம் மின்சார கம்பிகள், இரும்பு வேலிகள், காற்றலைகளைத் தவிர்த்து விட வேண்டும். 

குளம், குட்டை, ஏரி, நீச்சல் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் அருகில் இருக்கக் கூடாது. 

கூட்டமாக மலைப் பகுதிகளுக்குச் சென்றிருக்கும் போது மின்னல் தாக்குவது தெரிந்தால், கூட்டத்தினர் ஒன்றாக இருக்கக் கூடாது. பிரிந்து பல தாழ்வான இடங்களுக்குச் சென்று விட வேண்டும். ஒரே இடத்தில் பலரும் இருக்கும் போது மின்னல் வெட்டினால் அனைவருக்கும் உயிராபத்து ஏற்படும். அதனால் உதவிக்கு ஆள் இல்லாமல் போய் விடும். 

மின்னல் / இடி இடிக்கும் போது 
வீட்டுக்குள் இருக்கும் போது, 
கட்டாயம் வயர்களுடன் தொடர்பு கொண்ட 
லேண்ட் லைன் தொலைப்பேசிகள், 
தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட எதையும் தொடக்கூடாது. ரேடியோ உபயோகிக்கக் கூடாது. செல்போன்கள் உபயோகிக்கலாம் 

இடி மின்னல் அடிக்கும் போது மொட்டை மாடிக்குப் போவதை தவிர்த்து விட வேண்டும். 

மின்னல் அடிக்கும் போது வீட்டில் உள்ள தண்ணீர்க் குழாய்களைப் பயன்படுத்தக் கூடாது. பாத்திரம் கழுவுவது, ஷவரில் குளிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஒருவேளை மின்னல், கட்டடத்தைத் தாக்கினால், குழாய்கள் வழியாக மின்சாரம் பாய்ந்து நீர் வழியாக வருவதற்கு வாய்ப்பு அதிகம். 

கட்டாயம் ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு அருகில் உட்காரக் கூடாது. 

கான்க்ரீட் தரைகளில் நேரடியாக படுக்கவும் கூடாது. 

வெளியே இடி சத்தம் கேட்பது நின்று முப்பது நிமிடங்கள் கழித்தே வெளியே செல்ல வேண்டும். 

மேற்கூறிய அனைத்தையும் கடைபிடித்து மின்னல் தாக்குதல் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது மின்னல் தாக்கிய நபர்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி  
இதோ...

மின்னல் தாக்கிய நபரிடம் எந்த மின்சார பாய்ச்சலும் இருக்காது. எனவே அச்சம் 
இல்லாமல் முதலுதவி செய்யலாம். 
மின்னல் தாக்கிய நபரின் பாதுகாப்புக்காகவும் உங்களின் பாதுகாப்புக்காகவும், மின்னல் தாக்க வாய்ப்பு குறைவான இடத்திற்கு அந்த நபரை மாற்றி விட வேண்டும். 
மின்னல் தாக்குதல்களால், மின்சார தாக்குதல்கள் போல 
"இதய செயலிழப்பு" ஏற்படும் வாய்ப்பு அதிகம். 
பாதிக்கப்பட்ட நபருக்கு இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். 
சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு இல்லாத சூழ்நிலையில், 
உடனே சிபிஆர் (கார்டியோ பல்மொனரி ரிசசிடேசன்) செய்யப்பட வேண்டும். 
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேண்டும். 
தங்களது அலைப்பேசியில் "டாமினி (Damini lightening app) டவுன்லோடு செய்து தங்கள் பகுதியில் மின்னல் ஆபத்து குறித்து முன்கூட்டிய தகவல்களைப் பெறலாம். 
இக்கட்டுரை வழியாக 
மின்னல் தோன்றுவது எப்படி? 
மின்னல் தாக்குதல்களில் இருந்து பாதிப்பு ஏற்படாமல் தவிர்ப்பது குறித்தும் 
முதலுதவி குறித்தும் அறிந்தோம் 
நன்றி 
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை
@followers @topfans Tamil News Plus

தெரிவு: சக



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

seshadri sridharan

unread,
Oct 25, 2025, 10:20:44 AM (14 days ago) Oct 25
to வல்லமை
ஒரு மாதமாக எங்கே உமது பதிவை காணோம்

kanmani tamil

unread,
Oct 25, 2025, 11:27:19 PM (13 days ago) Oct 25
to vallamai
இப்படி யாராவது சொன்னால் தான் நமக்கு இதெல்லாம் தெரிய வருகிறது 

#இந்திய_ராணுவமும் அதன் உணவு முறையும்...


சமீபத்தில் ஒரு ராணுவ வீரரை சந்தித்தேன்
வருட விடுமுறையில் என்னை சந்திப்பார்
அவரிடம் ராணுவம் குறித்த செய்திகளை ஆர்வத்துடன் அறிந்து கொள்வது வழக்கம்.

இந்த முறை பேச்சு அவர் உண்ணும் உணவு பக்கம் திரும்பியது
சாதாரணமாக எந்த பிரச்சனையும் போரும் இல்லாத போது அவர்களது முகாமில் இருக்கும் போது வழக்கம் போல சோறு / சப்பாத்தி / பிரியாணி என்று உணவு கிடைக்கும் என்று கூறினார்.

அவர் சட்டிஸ்கர் நக்சல் அதிகம் உள்ள கானகப்பகுதிகளில் பணியாற்றும் வீரர்.
பல சமயங்களில் அவருக்கு கானகத்திற்குள் சென்று ரோந்து செய்யும் பணி வழங்கப்படுமாம்.

எனக்கு உடனே ஆவல் அதிகமாகிவிட்டது.
"அப்ப என்ன சாப்பிட எடுத்துட்டுப்போவீங்க?"
( நாம் அந்த காலத்தில் டூர் சென்றால் புளியோதரை , லெமன் சாதம் கட்டிக்கொண்டு செல்வோமே அதை நியாபகப்படுத்தி நான் கேட்ட சில்லி கொஸ்டீன் தான்)
இருப்பினும் பொறுப்பான ராணுவ வீரர் பதில் தந்தார்
ராணுவ வீரர்கள் பதட்டம் அதிகம் உள்ள பகுதிகள் அல்லது கானகங்கள் அல்லது போர் உக்கிரமாக நடக்கும் பகுதிகளுக்கு செல்லும் போது எடுத்துச்செல்லும் உணவுக்கு "Ration" என்று பெயர்.

நான் சந்தித்த ராணுவ வீரர் ஒருமுறை கானகங்களுக்குள் சென்றால் நடந்து போய்க்கோண்டே இருப்பார்களாம்
ஒருநாளில் பல மைல் தூரம் நடக்க வேண்டியிருக்கும்
கையில் துப்பாக்கி ஏந்திக்கொண்டு அதிக எடையுள்ள உணவுகளை எடுத்துச்செல்ல முடியாது.

ராணுவ வீரர்களுக்கு குறைந்த எடையில் அதிக எனர்ஜி மற்றும் தேவையான கலோரிகளை உடனே வழங்குமாறும் பசியை அடக்குமாறும் உணவு தயாரிக்கப்படுகிறது. அதன் பெயர் "Ration" என்று அழைக்கிறார்கள்

இவர் பணிபுரியும் பகுதியில் காடுகள் அதிகம் இருப்பதால் ஒரு முறை அவரது முகாமை விட்டு வெளியேறினால் சில நாட்களுக்கு ரோந்து முடித்த பிறகு தான் திரும்ப முடியும் ஆதலால் இவருக்கு
1. நட்ஸ் வகைகள்
( பாதாம் , முந்திரி)
2. சன்னா என்றழைக்கப்படும் கொண்டை கடலை
3. முளை கட்டிய பாசிப்பயறு
4.அந்த மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சத்து மாவு கலவை
5. தண்ணீர்
6. அவசரத்திற்கு மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள்
7. சூடுசெய்வதற்கு கற்பூரம் மற்றும் தீப்பெட்டி
இவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பிப்பார்களாம்.

ஒரு நாள் முழுவதும் கூட நடந்து கொண்டே இருக்குமாறு சூழ்நிலைகள் இருக்கும் என்று கூறியது எனக்கு மரியாதை கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
ராணுவ வீரர்களுக்கு இந்திய அரசால் அரசுப்படும் Ration பற்றி இன்னும் படிக்க வேண்டும் என்று தோன்றியது.
இந்திய ராணுவ Ration இல் பல வகை உண்டு
1. ஆர்மி MRE ration
2. one day compo ration
3. mini compo pack
4. survival ration
5. main battle tank ( MBT) ration
ஒவ்வொன்றைப்பற்றியும் சிறிது விளக்கமாக பார்க்கலாம் .

1.ஆர்மி MRE ration
MRE என்றால் Meal Ready to Eat என்று பொருள்
அலுமினிய ஃபாயில் பேப்பரில் ஏற்கனவே சமைத்த உணவை சிறிதளவு பார்சல் கட்டி தரும் முறை தான்.

இதில் உள்ள உணவுகளை மீண்டும் சமைக்க வேண்டியதில்லை.
லேசாக சூடு செய்து அப்படியே உண்ணலாம்.

பொதுவாக இந்திய MRE இல் சப்பாத்திகள், ரவை கேசரி (300g), காய்கறி புலாவ் (300g), உருளை மற்றும் பீன்ஸ் குழம்பு (300g), ஒரு சாக்லேட்,
3 கிண்ணம் தேனீர் போடும் அளவு தேனீர் பொடி இவற்றுடன் ஒரு ப்ளாஸ்டிக் ஸ்பூன், டிஸ்யூ பேப்பர் , தீப்பெட்டி, எளிதில் தீப்பற்றும் எரிபொருள் வில்லை .

இந்த ரேசன் தான் அனைவருக்கும் பொதுவான உணவாக வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது.
பிறகு செய்யப்பட்ட கள ஆய்வில் ஒவ்வொரு படை வீரருக்கும் அவர் வேலை செய்யும் இடம் பொறுத்து உணவும் மாறுபட வேண்டும் என்ற வழிமுறை கடைபிடிக்கப்படுகிறது
சைவம் மற்றும் அசைவம் என இரு சாராருக்கும் உணவு வழங்கப்படுகிறது.

2.One-man Compo Ration (Dehydrated)
இதில் ஒருவருக்கு ஒருநாளைக்கு தேவையான உணவுகள் வைக்கப்பட்டிருக்கும்
ஒரு நாள் மட்டும் வெளியே ரோந்து சென்று திரும்பும் நிலையில் இந்த உணவு கொடுக்கப்படுகிறது
1. அதிகாலை தேனீர்
2.காலை சிற்றுண்டி
3. நண்பகல் தேனீர்
4. மதிய உணவு
5.மாலை நேர தேனீர்
6. இரவு உணவு
இவை அத்தனையும் நீர்ச்சத்து எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு அலுமினிய ஃபாயிலில் அடைக்கப்பட்டிருக்கும்.
மொத்த எடை 880 கிராமும்
4100 கிலோ கலோரி சக்தி தரும் உணவாக அந்த முழு பொட்டலம் இருக்கும் .

3.Mini Compo Pack இது முன்னர் சொன்ன one man compo packஇன் சுருங்கிய வடிவம். அந்த வீரருக்கு 1520 கலோரிகளைக் கொடுக்கும்.
இந்த பொட்டலத்தில்
100 கிராம் இனிப்பு ரவை கேசரியும்
125 கிராம் நீர்ச்சத்து எடுக்கப்பட்ட காய்கறி புலாவும் இருக்கும்.
கூட தேனீர் , தீப்பெட்டி எல்லாம் சேர்த்து மொத்த எடையே 400 கிராம் தான்.

4.Survival Ration உயிர்பிழைக்க வைத்திருக்கும் உணவு
இதில் கடலை மிட்டாய் சீனியில் செய்தது 50 கிராம் × 3 எண்ணிக்கை
வெல்லத்தில் செய்தது 50 கிராம் × 3 எண்ணிக்கை
சாக்லேட் 100 கிராம் × 3 எண்ணிக்கை
இந்த சர்வைவல் ரேசன் ஒருவருக்கு 2400 கிலோ கலோரியை வழங்கும்.
போர் சமயத்தில் இந்த சர்வைவல் பேக்கில் தான் பல நாட்கள் வண்டி ஓடும்.

5.Main Battle Tank (MBT) Ration முக்கிய போர் பீரங்கிப்படை உணவு
பீரங்கிப்படையை இயக்கும் வீரர்களுக்கென பிரத்யேகமான உணவு ரேசனை இந்திய ராணுவம் வடிவமைத்துள்ளது.
இதில் ஒரு பீரங்கிக்குள் இருக்கும் நான்கு வீரர்களுக்கும் சேர்த்து மூன்று நாட்களுக்கு தேவையான உணவு வைக்கப்படிருக்கும்.
முதல் இரண்டு நாட்களுக்கு ஒரு வீரருக்கு 4000 கலோரி வீதம் 2 கிலோ எடையுடன் இருக்கும் கடைசி நாள் வீரர் ஒருவருக்கு 3000 கலோரி கிடைக்குமாறு 1.5 கிலோ இருக்குமாறு பொட்டலம் இருக்கும்.
உக்கிரமாக நடக்கும் போர் சூழலில் மூன்று நாட்கள் நான்கு வீரர்கள் உயிருடன் வைத்திருக்க இந்த உணவுப்பொட்டலம் உதவும்.

ராணுவ வீரர்களின் போர்க்கால உணவு முறை குறித்த சிறிய ஆய்வில் கிட்டிய தகவல்கள் இவை.

தெரிவு: சக

kanmani tamil

unread,
Oct 26, 2025, 10:31:07 PM (12 days ago) Oct 26
to vallamai
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் என் பள்ளிப் பருவத்தில் CTவகுப்பு (Citizenship Training class) ஒன்று மாதம் ஒருமுறை நடக்கும். அதில் பலவிதமான முடிச்சுகள் போடுவது பற்றிய செய்முறைப் பயிற்சியும் அடங்கும். 

இப்போது தமிழகத்தில் அப்படி ஒரு வகுப்பைப் பள்ளிகள் நடத்துவதாகத் தெரியவில்லை. எல்லாம் தேர்வுமுடிவின் தரம் அடிப்படையிலான (result oriented) நடவடிக்கைகள் தாம். பின்வரும் காணொலி அன்றாட வாழ்விற்குத் தேவையான பயனுள்ள முடிச்சுகளைச் செய்து காட்டுகிறது. 
 

நாம் கண்டுகொள்ளாமல் விட்ட கைவினை நுட்பங்களை நினைவூட்டுவதாக அமைகிறது. 

தெரிவு: சக 



On Sat, 25 Oct 2025, 7:50 pm seshadri sridharan, <ssesh...@gmail.com> wrote:
ஒரு மாதமாக எங்கே உமது பதிவை காணோம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Nov 7, 2025, 11:29:46 PM (7 hours ago) Nov 7
to vallamai
 ///#சேமித்து_வைக்க_வேண்டிய_பதிவு..

இன்னும் எத்தனை ஆயிரம் நோய்கள் வந்தாலும் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , 
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும். 

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது
 
#மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்குக்  கரிசாலை
  காமாலைக்குக் கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய் 
  மூட்டுக்கு முடக்கறுத்தான் 
அகத்திற்கு மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு நிலவேம்பு             விக்கலுக்கு மயிலிறகு  வாய்ப் புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்குப் பனைநுங்கு நீவெட்டைக்கு சிறுசெருப்படையே 

தீப்புண்ணா குங்கிலிய வெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு நாப் புண்ணிற்கு திரிபலா வேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி 

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்தி நாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை 
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை 
புண்படைக்குப் புங்கன் சீமையகத்தி புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணி கிளிஞ்சல்
கரும்படை வெட்பாலை சிரட்டை
கால்சொறிக்கு வெங்கார பனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனி உப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!


தெரிவு:சக
Reply all
Reply to author
Forward
0 new messages