Re: [MinTamil] பஞ்சாரம்

224 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 9, 2014, 9:43:56 AM7/9/14
to mint...@googlegroups.com, vallamai

On Wednesday, July 9, 2014 2:24:07 AM UTC-7, dhivakar wrote:
ஷைலஜா!

பஞ்சரம் என்றால் கூண்டுதான்.. வடமொழிச் சொல்.
இத்தகைய கூடைகள்  இரவில் கோழி அடைத்து வைப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள்.

பஞ்சரம்லோ சிலக (கூண்டுக்கிளி), பங்காரு பஞ்சரம் (தங்கக் கூண்டு)என்றெல்லாம் சினிமாக்கள் பார்த்ததாக ஞாபகம். 

காளைராசன் இழையைப் பார்த்ததும், சோழப் பேரரசன் மீது பாடிய ஓசைநயமும், சொல்நயமும் மிகப் பெற்ற
பாடல் நினைவுக்கு வந்தது. தமிழ்.நெட் காலத்தில் இணையத்துக்கு அனுப்பினேன். மீண்டும் வாசிக்கலாம்.

வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து
..மற்றும் ஒருகால் வடித்தெடுத்து
...வாடைத் துருத்தி வைத்தூதி
....மறுகக் காய்ச்சிக் குழம்புசெய்து

புடவிக் கயவர் தமைப்பாடிப்
..பரிசுபெறாமல் திரும்பிவரும் 
...புலவர் மனம்போல் சுடுநெருப்பைப்
....புழுகென் றிறைத்தால் பொறுப்பாளோ?

அடவிக் கதலிப் பசுங்குருத்தை
..நச்சுக் குழலென் றஞ்சியஞ்சி
...அஞ்சொற் கிளிகள் பஞ்சரம்விட்
....டகலா நிற்கும் அகளங்கா

திடமுக் கடவா ரணமுகைத்த
..தேவே! சோழ சிங்கமே!
...திக்கு விசயம் செலுத்தியொரு
....செங்கோல் நடாத்தும் எங்கோவே!

நா. கணேசன்

அன்புடன்
திவாகர்

2014-07-09 12:34 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
பஞ்சாரம்  எல்லாமொழிகளிலும்  இருக்கு பாருங்க   கூண்டு என்பதான பொருளில்  கூடை தானே  அது ?கூண்டுமாதிரி இருப்பதால் அந்தப்பேரா திவாகர் மாதிரி  தெலுங்குதெரிஞ்சவங்க சொல்லலாம் 

On 8 July 2014 23:47, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:

ஆந்திரா பாமிடி என்ற ஊரில் பார்த்தது .

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்
ஷைலஜா.

நல்ல குணங்களே  நம்மிடை யமரர்  
பதங்களாம். கண்டீர்! பாரிடை மக்களே!
....பாரதி......

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Jul 9, 2014, 10:46:11 AM7/9/14
to vall...@googlegroups.com, mintamil
'பங்காரு பஞ்சரம்' என்ற தலைப்பில் 500 சொற்களில் ஒரு கட்டுரை அமைக்கவும். தேமொழி முதலில் எழுதுவார்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 9, 2014, 8:58:09 PM7/9/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Wednesday, July 9, 2014 2:24:07 AM UTC-7, dhivakar wrote:
ஷைலஜா!

பஞ்சரம் என்றால் கூண்டுதான்.. வடமொழிச் சொல்.
இத்தகைய கூடைகள்  இரவில் கோழி அடைத்து வைப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள்.

பஞ்சரம்லோ சிலக (கூண்டுக்கிளி), பங்காரு பஞ்சரம் (தங்கக் கூண்டு)என்றெல்லாம் சினிமாக்கள் பார்த்ததாக ஞாபகம். 

காளைராசன் இழையைப் பார்த்ததும், சோழப் பேரரசன் மீது பாடிய ஓசைநயமும், சொல்நயமும் மிகப் பெற்ற
பாடல் நினைவுக்கு வந்தது. தமிழ்.நெட் காலத்தில் இணையத்துக்கு அனுப்பினேன். மீண்டும் வாசிக்கலாம்.

வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து
..மற்றும் ஒருகால் வடித்தெடுத்து
...வாடைத் துருத்தி வைத்தூதி
....மறுகக் காய்ச்சிக் குழம்புசெய்து

புடவிக் கயவர் தமைப்பாடிப்
..பரிசுபெறாமல் திரும்பிவரும் 
...புலவர் மனம்போல் சுடுநெருப்பைப்
....புழுகென் றிறைத்தால் பொறுப்பாளோ?

அடவிக் கதலிப் பசுங்குருத்தை
..நச்சுக் குழலென் றஞ்சியஞ்சி
...அஞ்சொற் கிளிகள் பஞ்சரம்விட்
....டகலா நிற்கும் அகளங்கா

திடமுக் கடவா ரணமுகைத்த
..தேவே! சோழ சிங்கமே!
...திக்கு விசயம் செலுத்தியொரு
....செங்கோல் நடாத்தும் எங்கோவே!

இப்பாடலுக்கு ஒரு கதையை தினமணி வெளியிட்டுள்ளது. ஆனால், அந்தகக்கவி 17-ஆம் நூற்றாண்டினர்.
சோழ சாம்ராஜ்யம் அஸ்தமித்து 4 நூற்றாண்டுகள் அப்போதே சென்றுவிட்டன. இத் தனிப்பாடல்
பாடும் சோழ மகாராஜா யார்? - என்றறிய மு. அருணாசலத்தின் தமிழ் இலக்கிய வரலாறு காண்க. ~ நா. கணேசன்

கண்ட சுத்தியும் கவிவீரராகவரும்!

By முனைவர் ந.முருகேசன்

First Published : 11 March 2012 12:35 AM IST

கவிஞர்களில் சிலர், தங்கள் கவிதைகளால் அற்புதங்கள் நிகழ்த்தும் ஆற்றல் மிக்கவர்கள் என்றும், சொன்னது பலிக்கும் வாக்குப் பலிதம் உடையவர்கள் என்றும், ஒரு காலத்தில் மக்கள் நம்பினர். புலவர்கள், கவிஞர்களின் ஆற்றல்களில் ஒன்று "கண்டசுத்தி'.

 ÷கண்டசுத்தி என்பது, ஒருவர் மனதில் எண்ணியதை, மற்றவர் தம் மனதால் கண்டுணர்ந்துப் பாடுவதாகும். "கண்ட சுத்தி' என்பதை, "கண்ட சித்தி' என்றும் கூறுவர். தனிப்பாடல் திரட்டு, அபிதான சிந்தாமணி முதலியவற்றில் இதுபற்றி அறியமுடிகிறது.

 ÷அபிதான சிந்தாமணியில், (அந்தகக்) கவி வீரராகவ முதலியார், கண்ட சுத்தி பாடுவதில் வல்லவர் என்றும், ஈழ நாட்டில் பாடி, தம் திறமையைக் காட்டிப் பரிசு பெற்றார் என்றும் குறிப்பு உள்ளது. பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவராக இருந்தும், இறையருளால் கவிபாடும் ஆற்றல் பெற்றுத் திகழ்ந்தவர் அவர். கண்பார்வையற்ற கவிஞர் என்பதைக் குறிப்பால் உணர்த்த, "அந்தகக் கவி' (அந்தகன்-கண்ணில்லாதவன்) என்றனர். 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர், சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர் கலம்பகம், திருவாரூர் உலா முதலிய நூல்களைப் பாடியுள்ளார். சீட்டுக் கவி பாடுவதிலும், நகைச்சுவையோடு கவிதை புனைவதிலும் வல்லவர். ""ஏடாயிரம் கோடி எழுதாது தன் மனத்து எழுதிப் படித்த விரகன்'' என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட பெரும் புலவர் அவர்.

 ÷அவர் பாடிப் பரிசுபெறும் பொருட்டு ஈழ நாட்டுக்கு ஒருமுறை சென்றார். அப்போது அந்நாட்டை ஆண்ட மன்னன் ஒருநாள், சோலை சென்று உலாவியபோது கிளிகள் சில, ஒரு மரத்தில் இருந்த கூட்டில் இருந்து வெளியே வருவதும், பறந்து செல்லாமல் மீண்டும் கூட்டுக்குள் போவதுமாக இருப்பதைக்கண்டு காரணம் புரியாமல் மயங்கினான். கண்ட சுத்தியால், தன் மனதில் உள்ளதைப் புலப்படுத்துமாறு தன் அவைக்களப் புலவர்களிடம் கூறினான். அரசன் உள்ளத்தில் உள்ளதைக் கண்டுணர்ந்து பாடமுடியாத அவைக்களப் புலவர்கள், கண்டசுத்தி பாடுவதில் கவி வீரராகவ முதலியார் வல்லவர் என்று கூறி, அவரை மன்னனிடம் அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற கவி வீரராகவர், ""வடவைக் கனலை'' எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். அதில்,

""அடவிக் கதலிப் பசுங்குருத்தை

 நஞ்சுக் குழல்என்று அஞ்சியஞ்சி÷

 அஞ்சொற் கிளிகள் பஞ்சரம்விட்டு

 அகலா நிற்கும் அகளங்கா!''

 என்ற வரிகளால், அரசன் மனதிலுள்ள சந்தேகத்தைத் தெளிவுபடுத்தினார்.

 ÷கிளிகள் மரத்தில் கூடுகட்டி வாழ்கின்றன. அம் மரத்தின் அருகே வாழை மரம் ஒன்று உள்ளது. அவ் வாழை மரத்தின் பசுங்குருத்து, கிளிகள் இருந்த கூட்டின் பக்கத்தே அசைந்து கொண்டு இருந்தது. கூட்டில் இருந்த கிளிகளுக்கு, அப் பசுங்குருத்து பாம்பாகத் தெரிந்தது. அதனால் கூட்டை விட்டு வெளியே வந்த கிளிகள், அஞ்சிக் கூட்டுக்குள் சென்றன. பாம்பு போயிருக்கும் என்று நினைத்து, மீண்டும் கூட்டை விட்டு வெளியே வந்த கிளிகள், மறுபடியும் பசுங் குருத்தைப் பாம்பாக நினைத்து மயங்கி, அது (பாம்பு) போகவில்லை என்று எண்ணி மீண்டும் கூட்டுக்குள் சென்றன. அப்பாடலுக்கான பொருள் இதுதான். கவி வீரராகவரின் பாடலைக் கேட்டு மனம் மகிழ்ந்த மன்னன் ஏராளமான பரிசுகளைக் கவிஞருக்கு வழங்கி கெüரவப்படுத்தினான். இதனால் கவி வீரராகவரின் புகழ் திக்கெட்டும் பரவியது.

 ÷ஈழத்து அரசன் பரராசசிங்கம், பரராசசிங்கத்தின் துணைவியார், கச்சியப்பர், கயத்தாற்று மன்னன் முதலியோர் கவி வீரராகவரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். அவர்களின் பாடல்களைத் தனிப்பாடல் திரட்டில் காணலாம். ""கவி வீரராகவன் பாடிய நற் கவியே கவி'' என்ற பரராசசிங்கத்தின் பாராட்டும், ""போத வழகன் கவி வீரராகவன் போற்றுகவி ஓதையைக் கேட்டுக் கொண்டாடாத பேரில்லை'' என்ற பரராசசிங்கத்தின் துணைவியார் புகழுரையும் என்றும் நினைவுகூரத்தக்கவை.

http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article888288.ece

N. Ganesan

unread,
Jul 9, 2014, 9:35:08 PM7/9/14
to mint...@googlegroups.com, vallamai

On Wednesday, July 9, 2014 9:58:31 AM UTC-7, rathinam.chandramohan wrote:
very nice sharings

நன்றி, திரு. சந்திரமோகன், இ ஸார்.

முதலில் பஞ்சரம் என்ற சொல்லின் வரலாற்றைச் சற்றுப் பார்ப்போம். பருத்தி (cotton balls) பருமை காரணமாக 
பருமை > பன்னல் என்றழைக்கப்பட்டது. இதில் கொட்டை நீக்கி பஞ்சாக்குவதைப் பன்னுதல் (= பின்னுதல்) என்கிறோம்.
பருநலின் விதை நீக்கினால் பஞ்சு என்கிறோம். இந்தியா முழுதும் இப்பெயர்கள் உண்டு, தங்குவது தஞ்சம்,
மிகுவது/மிங்குவது மிஞ்சு, மங்கல் வெயில் மஞ்சள் (நிறப்பெயர்), வங்கு (வளைந்திருப்பது) வஞ்சி (கொடி), போல
பருத்தியும் விதையும் பங்கினால்(பிரித்தால்) விளைவு பஞ்சு. துணி நெய்யும் போது பாவும் ஊடுமாக நெய்கின்றனர்.
இது இந்தியாவில் 7000 வருஷமாய் நடக்கிறது. உலகில் பருநல் (பருத்தி) முதலில் பயிரிட்டோர் சிந்துவெளி மக்களே.
துணி பஞ்சில் நெய்வதுபோல, குறுக்கும் நெடுக்குமான மூங்கில் தப்பைகளால் முடையும் கூடு பஞ்சரம் எனப்படுகிறது.
இது தமிழ்ச்சொல் தான், இந்தியாவில் எல்லா மொழிகளிலும் உண்டு. பஞ்சர, உடும்பர, தம்புர (மீராபாய் வைத்திருக்கும் தம்பூரா),
நாரஹர் போல தும்புரு (முனி) - சொல்லின் இறுதியில் -ர சேர்வதைப் பார்க்கலாம்.

நா. கணேசன்

2014-07-09 20:15 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
'பங்காரு பஞ்சரம்' என்ற தலைப்பில் 500 சொற்களில் ஒரு கட்டுரை அமைக்கவும். தேமொழி முதலில் எழுதுவார்.

இன்னம்பூரான்

--
Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

தேமொழி

unread,
Jul 9, 2014, 11:30:06 PM7/9/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///இத் தனிப்பாடல்
பாடும் சோழ மகாராஜா யார்? - என்றறிய மு. அருணாசலத்தின் தமிழ் இலக்கிய வரலாறு காண்க///

"அகளங்கா" என்பவர் யார்? யாரிந்தக் களங்கமற்றவர்?

"அகளங்கர் என்னும் ஜைனர், காஞ்சீபுரத்தில் உள்ள காமக்கோட்டத்தில், பௌத்தருடன் சமயவாதம் செய்து அவரைத் தோற்பித்துச் சிங்கள நாட்டிற்குத் துரத்திவிட்டார் என்னும் செய்தி பலர் அறிந்ததொன்றே." <<< இவரா திரு. கணேசன்?

..... தேமொழி

N. Ganesan

unread,
Jul 10, 2014, 6:58:33 AM7/10/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Wednesday, July 9, 2014 8:23:52 PM UTC-7, Pandiyaraja wrote:
பஞ்சாய்க் கோரை எனப்படும் ஒருவகைப் புல் உண்டு. சங்க இலக்கியங்கள் இதைப்பற்றிக் கூறுகின்றன. இது இருஞ்சாய் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இது கெட்டியான தண்டுடையதாக இருந்திருக்கலாம். இதனைக் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிச் செய்தது பஞ்சாரம் எனப்பட்டது எனலாம். பின் நாட்களில் கோரைக்குப் பதிலாக சீவப்பட்ட மூங்கில் பயன்படுத்தப்பட்டிருக்க்லாம்.
ப.பாண்டியராஜா

இருக்கலாம். பஞ்சாய்க் கோரைக்கும் பெயர் பஞ்சு நெய்வதுபோல் இதையும் முடைந்து பொம்மைகள் போன்றன
செய்திருக்கிறார்கள். சங்க இலக்கியத்தில் தலைவி (சுமார் 10 வயசு) பஞ்சாய்க் கோரையால் செய்த பொம்மைகளை
வைத்து விளையாடிக்கொண்டிருப்பாள். பத்தமடைக் கோரைப்பாய் செய்வது இக் கோரைப் புல்லிலா? பல கோரைகள்
இருந்தாலும் பஞ்சாய் இருக்கும் கோரை என்பதால் ஏற்பட்ட பெயர் என நினைக்கிறேன். நன்றி ஐயா.

கோரை: s. Different kinds of grass of the genera cyperus and scirpus, பஞ்சாய். --Note. There are different species of கோரை; viz.: கம்பங்கோரை;களாப்பூக்கோரைகன்னிக்கோரைகாட்டுக்கோரைகிளைக்கோரைசந்தனக் கோரைசாயக்கோரைசிறுகோரை,சீரகக்கோரைசீப்பங்கோரைதண்டாமரைக்கோரைதாட்கோரைபசுங் கோரைபனைக்கோரைபிரப்பங்கோலை,புற்கோரைபூங்கோரைபெட்டிக்கோரைபொத்திக்கோரைபொ ந்துக்கோரைமட்டைக்கோரைமணிக்கோரைமிதி கோரைமுடிச்சுக்கோரைமூக்கொற்றைக்கோரைவரிக்கோரைவாட்கோரை

பருத்தி, அதன் கொட்டை பங்குவது பஞ்சு (cf. தங்குவது தஞ்சம்). பஞ்சால் துணி நெய்தல் போல மிடையும் செயலால் பஞ்சரம்.
தும்புரு/தம்புர, உடும்பர, ... போல பஞ்சு ரகர விகுதியேற்று பஞ்சர ஆகியிருக்கிறது.

N. Ganesan

unread,
Jul 10, 2014, 7:09:55 AM7/10/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
முதை என்ற சொல்லில் இருந்து பிறக்கும் மூதாய் (இந்திரகோபம். இதில் உள்ள இந்த்ர- மழைகொடுக்கும்
இந்திரனையும், gOpa - கோவை/கொவ்வையையும் சேர்த்து உருவாக்கிய சொல்: மூதாய்). பஞ்சாய்க் கோரைப் பொம்மையுடன்
மூதாய் பிடித்து விளையாடும் தலைவி பற்றிய அழகான சங்கப் பாடல்கள் மிக. இதுபற்றி நிறைய நீங்கள்
சொல்லியுள்ளீர்கள். நானும் பல குறிப்புகள் அப்போது எழுதினேன்.

முதை  > ஆ விகுதி ஏறி மூதாய் ஆதற்போலே,
பஞ்சு > ஆ விகுதி ஏறி பஞ்சாய் ஆகியுளது.

பஞ்சரம் அழகான த்ராவிட மொழிகளின் சொல்:
(1) உடும்பர (உதும்பர “அத்தி”. கடம்பு > கதம்பு. கடம்பர் - கதம்பர் குலம், மங்களூர் பகுதி ராசாக்கள், சேரர்களுடன்
போர் - பதிற்றுப்பத்து), 
(2) தும்புரு (cf. தும்பு ‘gourd', see 1926 reference
from Jean (1926) "Un ancien peuple du Penjab: Les Udumbura," Journal Asiatique 206: 25-36 
(3) தம்புரு < தும்புரு (cf. பல்லி < புல்லி)
etc. etc.,
அதுபோல, ரகர விகுதி ஏற்கையில்
பஞ்சு > பஞ்சர .

பிற பின்!
நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 10, 2014, 9:10:35 AM7/10/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Thursday, July 10, 2014 3:41:02 AM UTC-7, dr.ponmudi wrote:
ஐயா, அருமையானவிளக்கந்தந்தீர்கள்!

"போறாளே பொன்னுத்தாயி பொலபொலனென்று கண்ணீர்விட்ட'" என்றபாடலில்வரும் 'பஞ்சாரத்து கூட்டவிட்டு' என்றவரிகளிலேதான் இந்த சொல்லை முதன்முதலாக கேட்டிருக்கிறேன்.

பஞ்சரம் என்னும் சொல்லின் vulgate form பஞ்சாரம். கோவில் கட்டடத்தின் கலைச்சொல்லாகவும் இருக்கிறது: கோஷ்ட-பஞ்சரம்.

கம்பனில் இருந்து 3 பாடல்கள்:

(1) 
மஞ்சு என அகிற் புகை வழக்கு மாளிகை
எஞ்சல் இல் சாளரத்து, இரங்கும் இன் சொலார்
அஞ்சனக் கண்ணீன் நீர் அருவி சோர்தர,
பஞ்சரத்து இருந்து அழும் கிளியின் பன்னினார்.

பன்னுதல் - பருத்தி அரைக்கும் ராட்டையில் அங்குமிங்கும் இரு
இருதிசைகளிலும் ஓடி கொட்டையைப் பிரிக்கும். Repeated motion
of the ginning machine while separating the seeds from cotton balls is
பன்னுதல், verb formed from பன்னல் ‘cotton ball' (< பருநல் cf. nen2n2al < nerunal).
திரும்ப திரும்பப் பேசுதலுக்கு நெசவுத் தொழிலின் கலைச்சொல்
பன்னுதல் கவிச்சக்ரவர்த்தி கம்பன் கையாள்கிறான்.

பொருள் அறிய:

(2) வஞ்சகக் கொடிய பூசை நெடு
     வாயில் மறுகும்
பஞ்சரக் கிளி எனக் கதறு
     பாவையை விடா,
நெஞ்சு உளுக்கினன் என, சிறிது
     நின்று நினையா,
அஞ்சனக் கிரி அனான் எதிர்
     அரக்கன் அழலா

பொருள் அறிய:

(3) 
மஞ்சு அரங்கிய மார்பினும், தோளினும்,
நஞ்சு அரங்கிய கண்ணினும், நாவினும், 
வஞ்சன் மேனியை, வார் கணை அட்டிய 
பஞ்சரம் எனல் ஆம் படி பண்ணினான்.

பொருள் அறிய:

வில்லிபுத்தூரார் பாரதம்:

வெஞ்சரத்தினால்விசயன்வென்றபோர்மிகுகளத்தின்வாய்விசையொடற்றன
குஞ்சரத்தின்வீழ்கைகணாகமேகுருதிவட்டமும்பரிதிவட்டமே
பஞ்சரத்தொடுந்திரியுமானையின் பக்கமெங்கணும்பட்டுமூழ்கிய
செஞ்சரத்தின்மேற்சிறகர்பண்டுவச்சிரமரிந்திடுஞ்சிறகர்மானுமே

பஞ்சரம் - வடசொல்: கூடென்றுபொருள்; இது 
இங்கே இலக்கணையாய் அம்பாரிக்குக் கொள்ளப்பட்டது. 

(ஸ்ரீ வைமுகோ கூற்று: பஞ்சரம் வடசொல். அவ்வாறு தெரியவில்லை - நா. க.)
 
பட்டினத்தார்:

மாயா விகாரம்; மரணப் பஞ்சரம்; 
சோற்றுத் துருத்தி; தூற்றும் பத்தம்; 
காற்றில் பறக்கும் கானப் பட்டம்; 
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை; 
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை;

தெரிவு:
~நா.க.

On Thursday, July 10, 2014 7:05:06 AM UTC+5:30, N. Ganesan wrote:

On Wednesday, July 9, 2014 9:58:31 AM UTC-7, rathinam.chandramohan wrote:
very nice sharings

நன்றி, திரு. சந்திரமோகன், இ ஸார்.

முதலில் பஞ்சரம் என்ற சொல்லின் வரலாற்றைச் சற்றுப் பார்ப்போம். பருத்தி (cotton balls) பருமை காரணமாக 
பருமை > பன்னல் என்றழைக்கப்பட்டது. இதில் கொட்டை நீக்கி பஞ்சாக்குவதைப் பன்னுதல் (= பின்னுதல்) என்கிறோம்.
பருநலின் விதை நீக்கினால் பஞ்சு என்கிறோம். இந்தியா முழுதும் இப்பெயர்கள் உண்டு, தங்குவது தஞ்சம்,
மிகுவது/மிங்குவது மிஞ்சு, மங்கல் வெயில் மஞ்சள் (நிறப்பெயர்), வங்கு (வளைந்திருப்பது) வஞ்சி (கொடி), போல
பருத்தியும் விதையும் பங்கினால்(பிரித்தால்) விளைவு பஞ்சு. துணி நெய்யும் போது பாவும் ஊடுமாக நெய்கின்றனர்.
இது இந்தியாவில் 7000 வருஷமாய் நடக்கிறது. உலகில் பருநல் (பருத்தி) முதலில் பயிரிட்டோர் சிந்துவெளி மக்களே.
துணி பஞ்சில் நெய்வதுபோல, குறுக்கும் நெடுக்குமான மூங்கில் தப்பைகளால் முடையும் கூடு பஞ்சரம் எனப்படுகிறது.
இது தமிழ்ச்சொல் தான், இந்தியாவில் எல்லா மொழிகளிலும் உண்டு. பஞ்சர, உடும்பர, தம்புர (மீராபாய் வைத்திருக்கும் தம்பூரா),
நாரஹர் போல தும்புரு (முனி) - சொல்லின் இறுதியில் -ர சேர்வதைப் பார்க்கலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 10, 2014, 9:44:54 AM7/10/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Wednesday, July 9, 2014 8:30:05 PM UTC-7, தேமொழி wrote:
///இத் தனிப்பாடல்
பாடும் சோழ மகாராஜா யார்? - என்றறிய மு. அருணாசலத்தின் தமிழ் இலக்கிய வரலாறு காண்க///

"அகளங்கா" என்பவர் யார்? யாரிந்தக் களங்கமற்றவர்?

அகளங்கன் என்று அறியப்பெற்றவன் விக்கிரமசோழன் (1122-1135). அகளங்கா என புலவர் விளித்துப் பாடும் பாடலிது. 
தினமணியில் கொடுத்துள்ள கதை வரலாற்றுக்கு மாறானது. இன்னும் கொஞ்சம் ஆய்வுலகைப் பார்த்து செய்திகளை வெளியிடலாம்.

அகளங்கன் யார்? - என மு. அருணாசலம் ஐயா விரிவாக எழுதியிருக்கிறார் (பார்க்க அவரது தமிழ் இலக்கிய வரலாறு, 12-ஆம் நூற்றாண்டு)

கழக வித்வான் தி. சங்குப்புலவர் எழுதுகிறார்:

53

56
போற்றும் பெரியோ னிவன்பின்பு பூதலங்கள் 
ஆற்றுந் திருத்தோ ளகளங்கன் - வேற்றார் 
விரும்பரணில் வெங்களத்தீ வேட்டுக் கலிங்கப் 
பெரும்பரணி கொண்ட பெருமான் - தரும்புதல்வன்

வரிகள் 53 - 56 : பூதலங்கள் .............பெருமான் தரும் புதல்வன்

சொற்பொருள் : பூமிபாரத்தைச் சுமந்த சிறந்த புயங்களையுடைய அகளங்கன் என்ற பட்டம் பெற்றவன்; பகைவர் விரும்பிய கோட்டைகளிற் போர் புரிந்து களவேள்வி செய்து கலிங்கப் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று அவ் வெற்றி குறித்துப் பாடிய கலிங்கப் பெரும்பரணியாகிய நூலை யேற்றுக் கொண்ட வேந்தன் ஆகிய விக்கிரம சோழ தேவன் பெற்ற மைந்தன். 

விளக்கம் : அகளங்கன் என்பது விக்கிரம சோழன் பெயர், இவன் கலிங்கப் போரில் வெற்றி பெற்றுப் பரணி நூல் ஒட்டக்கூத்தராற் பாடப்பெற்றவன் என்று புகழப்படுகிறான். அப்பரணி நூல் இதுகாறும் கிடைத்திலது. வேற்றார் - பகைவர். விரும்பு + அரணில் எனப் பிரிக்க. வெங்களத்தீ வேட்டு - வென்று. "செருத்தந் தரித்துக் கலிங்கரோடத் தென்றமிழ்த் தெய்வப் பரணி கொண்டு வருத்தந் தவிர்த்துல காண்டபிரான் மைந்தற்கு மைந்தனை வாழ்த்தினவே" எனவும், "இப் பரணி பாடினார் ஒட்டக்கூத்தரான கவிச்சக்கரவர்த்திகள், பரணிபாட்டுண்டார் விக்கிரமசோழ தேவர்" எனவும், தக்கயாகப்பரணி 776 கவியும் உரையும் கூறுவது காண்க. "தரணியொரு கவிகை தங்கக் கலிங்கப், பரணி புனைந்த பருதி - முரணில், புரந்தர னேமி பொருவு மகில, துரந்தரன் விக்கிரமசோழன்" (இராசரா. உலா, 53 - 56) என வருவதும் இதனை வலியுறுத்தும். அகளங்கன் என்ற பெயர் பலவிடங்களில் அமைந்துள்ளது. திருவரங்கத்தில் ஒரு வீதி அகளங்கன் வீதி, பூவாளூருக்கு அருகில் உள்ள ஊர் அகளங்கநல்லூர், சிதம்பரம் ஆயிரக்கால் மண்டபத்திற்குக் கிழக்கே ஒரு தூணிலுள்ள கல்வெட்டு அகளங்கன் மண்டபம், விக்கிரம சோழ னுலாவில் 117, 303, 363, 417, 511, 567 வரிகளில் அகளங்கன் இறுதி வெண்பாவில் வையமளந்தா யகளங்கா, தனிப்பாடல் "அகளங்காவுன்ற னயிரா வதத்தின் நிகளங்கால் விட்ட நினைவு" என வந்திருப்பன காண்க. அகளங்கன் - களங்கமில்லாதவன் : உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன் என்பது பொருள். பெருமான் என்பது விக்கிரம சோழன் எனவும் தரும்புதல்வன் என்பது பாட்டுடைத் தலைவனாகிய குலோத்துங்கன் எனவும் கொள்க. இனிமேல் வருவனவெல்லாம் குலோத்துங்கன் செயலெனக் காண்க.

"அகளங்கர் என்னும் ஜைனர், காஞ்சீபுரத்தில் உள்ள காமக்கோட்டத்தில், பௌத்தருடன் சமயவாதம் செய்து அவரைத் தோற்பித்துச் சிங்கள நாட்டிற்குத் துரத்திவிட்டார் என்னும் செய்தி பலர் அறிந்ததொன்றே." <<< இவரா திரு. கணேசன்?

இல்லை.

N. Ganesan

unread,
Jul 10, 2014, 11:44:19 PM7/10/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Wednesday, July 9, 2014 8:23:52 PM UTC-7, Pandiyaraja wrote:
பஞ்சாய்க் கோரை எனப்படும் ஒருவகைப் புல் உண்டு. சங்க இலக்கியங்கள் இதைப்பற்றிக் கூறுகின்றன. இது இருஞ்சாய் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இது கெட்டியான தண்டுடையதாக இருந்திருக்கலாம். இதனைக் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிச் செய்தது பஞ்சாரம் எனப்பட்டது எனலாம். பின் நாட்களில் கோரைக்குப் பதிலாக சீவப்பட்ட மூங்கில் பயன்படுத்தப்பட்டிருக்க்லாம்.
ப.பாண்டியராஜா

பைஞ்சாய் என்பது பஞ்சாய் என மாறி இருக்கிறது. பசுமையான சாய்க்கோரை.
சாய்க்காடு (சாயாவனம்) - பூம்புகார் அருகே இந்த சாய்க் கோரை வளரும் காடுகள்.
உவேசா ஐங்குறுநூற்றுப் பதிப்பில் பைஞ்சாய் என்பது பஞ்சாய் என்றும் குறிக்கப்படுகிறது
என்கிறார். 

பஞ்சரம் (< பஞ்சு). இதற்கும் பைஞ்சாய் என்பதற்கும் தொடர்பு சொல்ல இயலவில்லை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 11, 2014, 9:27:29 AM7/11/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com
On Thursday, July 10, 2014 3:41:02 AM UTC-7, dr.ponmudi wrote:
ஐயா, அருமையானவிளக்கந்தந்தீர்கள்!

"போறாளே பொன்னுத்தாயி பொலபொலனென்று கண்ணீர்விட்ட'" என்றபாடலில்வரும் 'பஞ்சாரத்து கூட்டவிட்டு' என்றவரிகளிலேதான் இந்த சொல்லை முதன்முதலாக கேட்டிருக்கிறேன்.

அருமையான நாட்டுப்புறப் பாட்டு:

lyrics of these 2 songs:

On Wednesday, July 9, 2014 8:23:52 PM UTC-7, Pandiyaraja wrote:
பஞ்சாய்க் கோரை எனப்படும் ஒருவகைப் புல் உண்டு. சங்க இலக்கியங்கள் இதைப்பற்றிக் கூறுகின்றன. இது இருஞ்சாய் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இது கெட்டியான தண்டுடையதாக இருந்திருக்கலாம். இதனைக் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிச் செய்தது பஞ்சாரம் எனப்பட்டது எனலாம். பின் நாட்களில் கோரைக்குப் பதிலாக சீவப்பட்ட மூங்கில் பயன்படுத்தப்பட்டிருக்க்லாம்.
ப.பாண்டியராஜா

பைஞ்சாய் என்பது பஞ்சாய் என மாறி இருக்கிறது. பசுமையான சாய்க்கோரை.
சாய்க்காடு (சாயாவனம்) - பூம்புகார் அருகே இந்த சாய்க் கோரை வளரும் காடுகள்.
உவேசா ஐங்குறுநூற்றுப் பதிப்பில் பைஞ்சாய் என்பது பஞ்சாய் என்றும் குறிக்கப்படுகிறது
என்கிறார். 

பஞ்சரம் (< பஞ்சு). இதற்கும் பைஞ்சாய் என்பதற்கும் தொடர்பு சொல்ல இயலவில்லை.

கலித்தொகை உரையைப் பார்த்தேன். ”சாய்ப்பாவை - தண்டான் கோரையைக் கிழித்துச் செய்யும் பொய்ம்மை”
கிழித்தல் = அறுத்தல் (பொற்கிழி). தண்டாங்கோரை காயவைத்து அதனை நெடுக்காக கிழித்து அதனால்
வரும் நார்களினால் புல்லுரு (scarecrow) போல, சிறுமியர் விளையாடப் பொம்மை செய்திருக்கிறார்கள்
பழந்தமிழகத்தில். ஆனால், கூடை முடையும் அளவுக்கு அதன் வலிமை இல்லைப் போலும். 

பைஞ்சாய் > பய்ஞ்சாய் > பஞ்சாய் என சாய்க் கோரை வழங்குவதைப் பார்த்தால் பச்சை என்னும்
நிறப்பெயர் வெளிச்சமடைகிறது. தோ(ய்) தோய்/தோகு- பால் தோய்ந்தால்/துகைந்தால் தஹி (இந்தியிலே),
தோய்- தமிழில் தயிர். தஹி : தயிர் ஒற்றுமை பற்றி எஸ். வையாபுரிப்பிள்ளை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பை என்பது Proto-Dravidian word for Green color ஆக இருந்திருக்கணும்:
(1) பை+இர் :. பய்+இர் > பயிர்
(2) பை + கு > பாகல் காய் (பாகற்காய் = பாவக்காய்< பை + வ் என்னும் உடம்படுமெய் வரும்போது)
(3) மூக்கு : மூச்சு போல, pai + k > pai +c > பய்ச்சை (பைச்சை), பைச்சை, இன்று யகரம் மறைந்து பச்சை.

நா. கணேசன்
 
On Thursday, July 10, 2014 7:05:06 AM UTC+5:30, N. Ganesan wrote:

K. Loganathan

unread,
Jul 11, 2014, 8:40:10 PM7/11/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
திரு பாண்டியராஜா அவர்களே

இப்பொழுதுதான் எனக்கு நினைவிற்கு வருகின்றது, மலாய் மொழியில் 'penjara'  என்றோர் சொல் இருக்கின்றது, இது 'சிறை' என்ற பொருளது,   penjarakan"  என்றால் சிறையில் அடைத்தல் . இங்கு 'கான்' என்பது துணை வினை - 'செய்'  எனபதுபோல்.

தமிழிலிருந்து சென்றிருக்கலாம். பல தமிழ் சொற்கள் பழங்காலத்திலேயே மலாய் மொழியில் உண்டு. மேலும் இரவல் அல்லாத மூலமே தமிழைப் போன்ற பல சொற்கள் அங்கும் உண்டு.

உலகன்

2014-07-11 22:58 GMT+08:00 Pandiyaraja <pipi...@gmail.com>:

1940-களில் நகர்ப்புற நாகரிகம் எட்டிப்பார்க்காத, பேருந்து போக்குவரத்து இல்லாத, எப்போதாவது கரி அடுப்பில் ஓடும் லாரிகள் மட்டும் வந்துபோகும் ஒரு மிகச் சிறிய கிராமத்தில் மாலை ஆறு மணிவாக்கில் முற்றத்தில் பஞ்சாரத்தைக் கவிழ்த்து, ஒரு பக்கத்தை மட்டும் சிறிது உயர்த்தி "ba, ba, ba" என்று அழைத்தால் தாய்க்கோழி தயங்கித் தயங்கி முன்னே வர,குட்டிக்குஞ்சுகள் குடுகுடுவென்று பின்னே ஓடிவந்து கூடைக்குள் அடையப் பஞ்சாரத்தைக் கவிழ்த்து உச்சியில் சாக்கைப்போட்டு மூடிவைத்திருக்கிறேன். பஞ்சரம் என்பது இலக்கிய வழக்காக இருக்கலாம். நாம் இப்பொழுது சும்மாடு என்று சொலவது சங்க இலக்கியத்தில் சுமடு எனப்படுகிறது. இதைப் போன்று இதுவும் இருக்கலாம். வேறு தென்னிந்திய மொழிகளிலும் இது காணப்படுவதால் இது தமிழ்ச் சொல் என்பதற்கு வாய்ப்புகள் மிகுதி. எங்கள் ஊரில் அப்போது 'சாவி' கிடையாது - தொறக்குச்சி-தான் (திறவுக் குச்சி) 'மண்ணெண்ணெய்' கிடையாது - சீமத்தண்ணி-தான். 'தாழ்ப்பாள்' கூடக் கிடையாது - நாதாங்கி-தான்.  அந்த ஊரில் வடசொல் வந்திருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.
ப.பாண்டியராஜா

--

N. Ganesan

unread,
Jul 11, 2014, 8:42:16 PM7/11/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com

On Friday, July 11, 2014 5:40:12 PM UTC-7, K.Loganathan wrote:
திரு பாண்டியராஜா அவர்களே

இப்பொழுதுதான் எனக்கு நினைவிற்கு வருகின்றது, மலாய் மொழியில் 'penjara'  என்றோர் சொல் இருக்கின்றது, இது 'சிறை' என்ற பொருளது,   penjarakan"  என்றால் சிறையில் அடைத்தல் . இங்கு 'கான்' என்பது துணை வினை - 'செய்'  எனபதுபோல்.

தமிழிலிருந்து சென்றிருக்கலாம். பல தமிழ் சொற்கள் பழங்காலத்திலேயே மலாய் மொழியில் உண்டு. மேலும் இரவல் அல்லாத மூலமே தமிழைப் போன்ற பல சொற்கள் அங்கும் உண்டு.

உலகன்

கம்புகளால் கட்டப்படுவது கப்பல். பெரிய மரத்தில் தோண்டிச் செய்வது தோணி.
கப்பல் மலாய் மொழியிலும் உண்டு அல்லவா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 11, 2014, 8:53:12 PM7/11/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

2014-07-11 22:58 GMT+08:00 Pandiyaraja <pipi...@gmail.com>:

1940-களில் நகர்ப்புற நாகரிகம் எட்டிப்பார்க்காத, பேருந்து போக்குவரத்து இல்லாத, எப்போதாவது கரி அடுப்பில் ஓடும் லாரிகள் மட்டும் வந்துபோகும் ஒரு மிகச் சிறிய கிராமத்தில் மாலை ஆறு மணிவாக்கில் முற்றத்தில் பஞ்சாரத்தைக் கவிழ்த்து, ஒரு பக்கத்தை மட்டும் சிறிது உயர்த்தி "ba, ba, ba" என்று அழைத்தால் தாய்க்கோழி தயங்கித் தயங்கி முன்னே வர,குட்டிக்குஞ்சுகள் குடுகுடுவென்று பின்னே ஓடிவந்து கூடைக்குள் அடையப் பஞ்சாரத்தைக் கவிழ்த்து உச்சியில் சாக்கைப்போட்டு மூடிவைத்திருக்கிறேன். பஞ்சரம் என்பது இலக்கிய வழக்காக இருக்கலாம். நாம் இப்பொழுது சும்மாடு என்று சொலவது சங்க இலக்கியத்தில் சுமடு எனப்படுகிறது. இதைப் போன்று இதுவும் இருக்கலாம். வேறு தென்னிந்திய மொழிகளிலும் இது காணப்படுவதால் இது தமிழ்ச் சொல் என்பதற்கு வாய்ப்புகள் மிகுதி. எங்கள் ஊரில் அப்போது 'சாவி' கிடையாது - தொறக்குச்சி-தான் (திறவுக் குச்சி) 'மண்ணெண்ணெய்' கிடையாது - சீமத்தண்ணி-தான். 'தாழ்ப்பாள்' கூடக் கிடையாது - நாதாங்கி-தான்.  அந்த ஊரில் வடசொல் வந்திருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.
ப.பாண்டியராஜா

வலிமையும், பொருள் வளமும் குன்றிய கூடை மிடையும் குன்றக் குறவர்கள் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பஞ்சரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இது ஒன்று சமயம் சார்ந்த சொல்லும் அல்ல. எனவே சம்ஸ்கிருதத்தில் இருந்து இந்திய மொழிகள் பெற்ற சொல் பஞ்சரம் என்பது பொருந்துவதாயில்லை. பஞ்சரம் ஈரான், ஆப்கான் மொழிகளிலேயும் காணோம். எனவே, இது திராவிடச்சொல்.

பன்னல், பன்னுதல் (> பின்னுதல்), பஞ்சு என்ற சொற்கள் இந்தியா முழுமையும் இருப்பதும், பருத்தியை முதலில் வேளாண்மை செய்த வட த்ராவிட மக்களின் கொடை, துணி நெய்தலைப் பார்த்து இக் கூடை மிடைதலுக்கு பஞ்சரம் என்று பெயர் கொடுத்திருக்கும் பண்டை இந்தியர்களின் அழகியல் உணர்ச்சியும் அறிந்து இன்புறத்தக்கதாம். அத்திக்கு ஏன் வடக்கே உடும்பில் இருந்து பெயர், தம்புருவுக்கு தும்பு (gourd) ஏன் பெயர் வழங்கினர்? - என்றும் ஒப்பிடலாம்.

நா. கணேசன்

K. Loganathan

unread,
Jul 11, 2014, 8:54:47 PM7/11/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 டாகடர் கணேசன் 

 தென்கிழகாசியாவில் மிகவும் பரவலாகப்  பேசபப்டும் மலாய் மொழியில் 'கப்பல்' உண்டு 'படகும்(  perahu')  உண்டு. வடமொழி தமிழ் சொற்கள் என்று நூற்றுக்கணகக்கில் உண்டு. அத்தோடு இவ்வாறு இரவல் என்ற கருத முடியாத  வகையில் ஆனால் சுமேருத் தமிழோடு தொடர்புடைய சொற்களும் இலக்கணக் கூறுகளும் உண்டு. தொல்காலத்தில் அநேகமாக ஓர் 10 ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு சுமேருத் தமிழும் மலாய் மொழியும் ஒன்றாக இருந்திருக்கலாம்.

குறிப்பு: தங்களுக்கு சுமேருத் தமிழ் புரியாது என்பதால் இதனை  இதனோடு விட்டு விடுங்கள், இதனைப் பற்றி காலம் வரும்போது ஓர் தனி இழை தொடங்விருக்கின்றேன்

உலகன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 11, 2014, 9:09:33 PM7/11/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
நானும் பாரதிராஜா படத்தின் மூலம்தான் முதன்முதல் 'பஞ்சாரம்" என்ற சொல்லைக் கேள்விப்பட்டேன்...முதல் மரியாதையில்...மதுரைப் பக்கத்து வழக்கமாக இருக்கலாம்.

N. Ganesan

unread,
Jul 12, 2014, 1:30:09 AM7/12/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

On Friday, July 11, 2014 6:09:33 PM UTC-7, தேமொழி wrote:
நானும் பாரதிராஜா படத்தின் மூலம்தான் முதன்முதல் 'பஞ்சாரம்" என்ற சொல்லைக் கேள்விப்பட்டேன்...முதல் மரியாதையில்...மதுரைப் பக்கத்து வழக்கமாக இருக்கலாம்.

தஞ்சை பக்கத்து வழக்கமும்தான். யுகபாரதி தஞ்சையில் பிறந்துவளர்ந்த பூமிபுத்திரன்.
பஞ்சாரம் என்று கவிதைப் புத்தகம் எழுதியுள்ளார்.

நா. கணேசன்
 
N. Ganesan

unread,
Jul 12, 2014, 9:32:33 AM7/12/14
to mint...@googlegroups.com, vallamai
On Friday, 11 July 2014 07:58:12 UTC-7, Pandiyaraja wrote:
அப்போது 'சாவி' கிடையாது - தொறக்குச்சி-தான் (திறவுக் குச்சி) 
 'தாழ்ப்பாள்' கூடக் கிடையாது - நாதாங்கி-தான்.  

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் 
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

கணிச்சி khanitra என்று -த்ர விகுதி வடமொழியில் ஏற்கிறது.
புதர், புதல்வன்/புதல்வி - புத் என்பது ஒரு நரகம். மகன்
சிதைக்கு தீ மூட்டாவிட்டால் போகுமிடம். எனவே ‘புத்ர’
என்ற பெயர் என்று வடமொழியில் கதைகட்டப்பட்டது: புதர் (தமிழ்) > புத்ர (வடசொல்).
அதுபோல், கணிச்சி கணித்ர ஆகிவிட்டது. அணங்கன் அனங்கன் ஆனாற்போல்,
கணிச்சி ருக்வேதத்தில் கனித்ர என்கின்றனர். தமிழின் ரெட்ரோஃப்லெக்ஸ் முழுதும்
வேத ரிஷிகளால் உள்வாங்கப் படாத நிலை. காலப்போக்கில் வாய்ப்பாட்டாக
எல்லா ரெட்ரோஃப்லெக்ஷும் ஏற்றி வேதம் மாறியுள்ளது.

வெதிர் (வேய்:வேழம் > வேணு. ஆழ்தல் ஆணி என்றாதல் போல்) வேத்ர என்றாகியுள்ளது
வடமொழியில்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 12, 2014, 9:46:48 AM7/12/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, thami...@googlegroups.com

Dev wrote:
’ராணி’ எனும் சொல்கூடப் பெரும்பான்மை இந்திய மொழிகளில் உண்டு. அது தமிழ்ச் சொல்லா ?

From Hindustani रानी / رانی (rānī), from Sanskrit राज्ञी (rājñīqueen, princess).
ராணி என்பது ராஜ்ஞீ என்ற சொல்லின் இந்தியாக்கம். இது சரியே.

ஆனால், சென்னைப் பேரகராதி இந்த சம்ஸ்கிருத:ப்ராக்ருத சொல்லாக்கத்தை
“ஆணை” என்னும் சங்கத் தமிழ்ச்சொல்லுக்கும் போட்டிருக்கிறது. அது பிழை.
ஆணை என்னும் தொல்தமிழ்ச்சொல்லை ஆள்/ஆண் என்பதிலிருந்து நேரடியாகப்
பிறக்கும். ராணி ராஜ்ஞீ போல, ஆஜ்ஞா என்ற சொல் ஆணை என்ற சங்கத்தமிழ்
ஆவதும், தொல்காப்பியர் பன்முறை பயன்படுத்துவதும் தேவையே இல்லாத சொல்:ஆணை.

ஆஜ்ஞா என்னும் சொல் ஆஞா, ஆக்கினை என்று தமிழ் ஆகும். 
ஆணை தூய தமிழ்ச்சொல்.
Reply all
Reply to author
Forward
0 new messages