தமிழ்நாட்டில் சூத்திரன் என்றால் என்ன பொருள் - எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி

139 views
Skip to first unread message

ஆராய்ச்சிக் குஞ்சு

unread,
Jul 1, 2013, 2:25:30 AM7/1/13
to mint...@googlegroups.com, vallamai
தமிழகத்தில் சூத்திரன் என்றொரு பிரிவு இருந்ததா அல்லது வடபுலத்தில் இருந்து வலிந்து புகுத்தப்பட்டதா என்பதை விவாதிப்பதைவிட சூட்டைக் கிளப்பும் இந்தச் சொல்லின் உண்மைப் பொருளை அறிவது அவசியம்

இந்தியக் குமுகப் பிரிவுகளைப் பற்றி ஆய்ந்த தாஸ் குப்தா போன்ற அறிஞர்கள் நால்வகைப் பிரிவு மெளரியப் பேரசின் அபரிதமான வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்ததாகக் கூறுகிறார்.

பின்னர் வந்த மேலைநாட்டு ஆய்வாளர்கள் இந்தப் பிரிவுகளை ஜாதி என்ற பெயரில் அழைக்க அதுவே ஜாதிய அடிப்படையிலானது இந்தியக் குமுகம் என்று நிலை பெற்றுவிட்டது

தென் இந்தியாவில் பழந்தமிழகத்தில் குமுகப் பிரிவுகள் செய்யும் தொழிலின் அடிப்படையில் அமைந்திருந்தது பிறப்பால் அமைந்ததல்ல

ஒரு குமுகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது மனித சேவையும் அது தொடர்பான சேவையுமே

குமுகத்தின் அன்றாட நடைமுறை வாழ்வைச் சீரமைக்கவும் செயல்படுத்தவும் மனித சேவையில் ஈடுபடும் பல பிரிவுகள் குமுகத்துக்குத் தேவை

வாழ்வியல் மரபில் பொருளாதாரத்தில் உயர்வுபெற்ற குமுகத்தில் மனித சேவை செய்பவர்கள் அதிகம் தேவைப்படுவர்

பொருளாதார மேம்பாட்டுக்கு அடிப்படையாகக் குடும்பம் இருந்ததால் சேவை பற்றிய அறிவும் திறனும் குடும்ப வழியில் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்குச் சென்றது.  இதுவே பின்னாளில் பிறப்பால் அமைவது தொழில் என்று திரிந்தது

ஆடவருக்கு நான்குவகை வர்ணங்கள் இருந்தபோது பெண்டிருக்கு இந்த நாலவகைக் குமுகப் பிரிவு இல்லையென்றும் சேவை புரிவதால் அவர்கள் அனைவரும் சூத்திரர்களே என்று சில அறிஞர்கள் அனுமானம் செய்வதுண்டு

சென்ற நூற்றாண்டில் ஸ்வாமி விவேகாநந்தர் இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒரு புதுயுகம் தோன்றி பல லட்சம் சூத்திரர்கள் அலைகடலென ஆர்த்தெழுவர் அவர்கள் மூலமே இந்தியா மேன்மை பெறும் என்று குறிப்பிட்டார்.  அதை விளக்கியவர்கள் சூத்திரர்கள் என்பது சேவை செய்பவர்களைக் குறிப்பிடும் சொல்  மனித சேவை செய்யும் அனைவரும் சூத்திரர்களென்று குறிப்பிட்டு 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்திய பொருளாதார வளர்ச்சியில் மேன்மை அடைய அடிப்படையாக அமைந்தது புதிய தலைமுறையின் மனித சேவைத் திறன் என்று குறிப்பிட்டனர்

தமிழகத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயர் சிந்தனை வளர்ந்திருந்த நிலையில் திரைகடலோடித் திரவியம் தேடி தமிழகத்தை சீரும் சிறப்புமிக்க நாடாக மாற்ற அடிநாதமாஅக் அமைந்தவர்கள் 100 விழுக்காடு பெண்களும் கல்வியிற் சிறந்த ஆண்களும் நிறைந்த சூத்திரர் என்ற குமுகப் பிரிவே என்ற கருத்தை ஏற்றுக் கொண்டால் சூத்திரர்கள் என்பவர்கள் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் இழிபிறப்பினர் என்ற கருத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்வது

அப்படியென்றால் சூத்திரர்கள் என்ற சொல்லுக்கு உண்மையான விளக்கம் என்ன?

எனக்கு உண்மை தெரிஞ்சாகனும் சாமி

ஆராய்ச்சிக் குஞ்சு

K. Loganathan

unread,
Jul 1, 2013, 4:27:43 AM7/1/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பர்களே

சுமேருத் தமிழ் ஆய்வு இன்னும் வேண்டிய அளவிற்கு பரவவில்லை. எனினும் அது பரவும் போது தமிழ் மொழியின் தோற்றத்தையும் அதன் வரளர்சியையும் செவ்வே காணமுடியும் என்று நம்புகின்றேன்

இங்கு 'சூத்திரன்' என்ற சொல்லைப் பற்றி ஓர் கருத்து. இச்சொல் sud-ra  என்று பயில்கின்றது.

காண்க

The NeRi of Suruppak ( c.3000 BC)


1. [u]ri-a u sud-ra ri-a ( In those distant days, in those far remote days)

ஊ எரிய ஊ சூத்திர எரிய

uu eriya uu cuuttira eriya

2. gi ri-a gi bad-du ri-a ( In those nights, in those far-away nights)

மை அரிய மை பண்டு அரிய

mai ariya mai paNdu ariya

3. mu ri-a mu sud-ra ri-a ( In those years, in those far remote years)

மூஉ அரிய மூஉ சூத்திர அரிய

mUu ariya mUu cuuttra ariya

>>

இங்கு சூத்திர என்ற சொல், தொன்மை தொலைவு தூரம் மிக

உயர்ந்த(உச்சியில்) என்றெல்லாம் பொருள்படுகின்றது.


ziu-sudra  என்ற சொல் அக்காடிய மொழியில் நாபிஷ்து என்று மொழி

பெயர்க்கப்பட்டு பிறகு அதுவே அரபி மொழியில் நூ நபி என்றாகி உள்ளது,

தேவாரத்தில் வரும் தோணி அப்பர் இவராக இருக்கலாம்

ஆனால இந்த சொல்லின் பொருள் இதனால நீண்ட் ஆயுள் உடையவர். நெடுங்காலம் வாழ்ந்தவர் என்றெல்லாம் பொருள்படும். தொன்மை என்ற கருத்தும் அடங்கும். ஆக சூத்திரர் என்றால தொன்மையானவர் பழங்குடி மக்கள் ஏற்கனவே வாழ்ந்தவர்கள் என்றெல்லாம் பொருள்பட இடனுண்டு என்று தெரிகின்றது

சுமேருத் தமிழர்களிடையே சாதி பிரிவுகள் இருந்ததாகத் தெரியவில்லை.

ஆயினும் இது உண்மையென்றால் 'சூத்திரன்' என்ற சொல் தமிழே என்றாகின்றது

உலகன்


2013/7/1 Geetha Sambasivam <geetha...@gmail.com>
அருமையான கருத்து ஐயா, தலை வணங்குகிறேன்.  


//பின்னர் வந்த மேலைநாட்டு ஆய்வாளர்கள் இந்தப் பிரிவுகளை ஜாதி என்ற பெயரில் அழைக்க அதுவே ஜாதிய அடிப்படையிலானது இந்தியக் குமுகம் என்று நிலை பெற்றுவிட்டது//

இதைத் தான் நானும் பல முறை சொல்லி இருக்கிறேன்.  இனியும் சொல்லி வருவேன்.

//தென் இந்தியாவில் பழந்தமிழகத்தில் குமுகப் பிரிவுகள் செய்யும் தொழிலின் அடிப்படையில் அமைந்திருந்தது பிறப்பால் அமைந்ததல்ல//

மிக மிக உண்மையானது.  இப்படித் தொழிலின் அடிப்படையில் அமைந்திருந்தவற்றை ஒழித்ததின் மூலம் அந்தத் தொழில்களே அடியோடு ஒழிக்கப்பட்டன என்பதும் கொடுமையானதொரு உண்மை.

//ஒரு குமுகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது மனித சேவையும் அது தொடர்பான சேவையுமே//

ஆம்,


//குமுகத்தின் அன்றாட நடைமுறை வாழ்வைச் சீரமைக்கவும் செயல்படுத்தவும் மனித சேவையில் ஈடுபடும் பல பிரிவுகள் குமுகத்துக்குத் தேவை//

உண்மை.

//வாழ்வியல் மரபில் பொருளாதாரத்தில் உயர்வுபெற்ற குமுகத்தில் மனித சேவை செய்பவர்கள் அதிகம் தேவைப்படுவர்//

இன்று அத்தகைய சேவை செய்பவர்களைத் தேடிப்பிடிக்க வேண்டும்.  எத்தகைய சேவையாக இருந்தாலும்! :(

//பொருளாதார மேம்பாட்டுக்கு அடிப்படையாகக் குடும்பம் இருந்ததால் சேவை பற்றிய அறிவும் திறனும் குடும்ப வழியில் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்குச் சென்றது.  இதுவே பின்னாளில் பிறப்பால் அமைவது தொழில் என்று திரிந்தது//

ஆஹா, எத்தனை எளிமையாக மிக உயர்ந்ததொரு கருத்தைச் சொல்லி விட்டீர்கள்! 

//ஆடவருக்கு நான்குவகை வர்ணங்கள் இருந்தபோது பெண்டிருக்கு இந்த நாலவகைக் குமுகப் பிரிவு இல்லையென்றும் சேவை புரிவதால் அவர்கள் அனைவரும் சூத்திரர்களே என்று சில அறிஞர்கள் அனுமானம் செய்வதுண்டு//

இதையும் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த இழையை ஆரம்பித்ததற்கு நன்றி.  நம் நண்பர்கள் கருத்தையும் தெரிந்து கொள்ள ஆவல்.


2013/7/1 ஆராய்ச்சிக் குஞ்சு <radius.co...@gmail.com>

ஆராய்ச்சிக் குஞ்சு

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Innamburan S.Soundararajan

unread,
Jul 1, 2013, 5:02:51 AM7/1/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
'நான் ஒரு சூத்திரன்' என்ற நூல் சட்டநாத கரையாளரால் எழுதப்பட்டது. அவருடைய பேத்தி உத்ரா அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அதை படித்த பின் பலர் கருத்துக்களை மாற்றிக்கொள்ளலாம். மஹாத்மா பூலே பற்றியும் படித்துத் தெளிவு பெறலாம்.

'//பின்னர் வந்த மேலைநாட்டு ஆய்வாளர்கள் இந்தப் பிரிவுகளை ஜாதி என்ற பெயரில் அழைக்க அதுவே ஜாதிய அடிப்படையிலானது இந்தியக் குமுகம் என்று நிலை பெற்றுவிட்டது//
கீதா:
இதைத் தான் நானும் பல முறை சொல்லி இருக்கிறேன்.  இனியும் சொல்லி வருவேன்.'

சொல்லுங்கோ.வேண்டாம் என்று சொல்லவில்லை. இருவரும் ஆதாரம் காட்ட வேண்டும். எனக்கு இது உடன்பாடு இல்லை.

//பொருளாதார மேம்பாட்டுக்கு அடிப்படையாகக் குடும்பம் இருந்ததால் சேவை பற்றிய அறிவும் திறனும் குடும்ப வழியில் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்குச் சென்றது.  இதுவே பின்னாளில் பிறப்பால் அமைவது தொழில் என்று திரிந்தது//

ஆஹா, எத்தனை எளிமையாக மிக உயர்ந்ததொரு கருத்தைச் சொல்லி விட்டீர்கள்! 
ஒத்துக்கிறேன். ஆனால் அன்றாட நடவடிக்கை வேறே.
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


2013/7/1 K. Loganathan <k.ula...@gmail.com>
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 1, 2013, 11:01:14 AM7/1/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
ஆராய்ச்சி நோக்கில் அமைந்த  சர்ச்சைக்குரிய தலைப்புகள் பேராசிரியருக்கு கை வந்த கலை.

சூத்திரதாரி என்றால் மற்றவர்களை ஆட்டுவிப்பவர்கள் என்ற பொருள் அல்லவா?
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே பேராசிரியரே?

இதனால் பெண்கள் அனைவரையும் சூத்திரர் என்று அழைப்பது அவர்கள் வாழ்வில் இன்றியமையாததைக் காட்டுகிறது என்பதைக் குறிக்கும்.

மற்றபடி வள்ளுவர் சொல்படி பொருள் கொண்டால், அன்றும் இன்றும் உழவுத் தொழில் செய்யும் உழவர்கள் அன்றி உலகம் இயங்காது. எனவே அவர்கள் சூத்திரர்கள். 

ஐரோப்பியர்கள் தாங்கள்  இழிவாகக் கருதியவர்களை  "காட்டுமிராண்டி" என்று அழைக்க ஆரம்பித்தது போல இருக்கிறது (http://en.wikipedia.org/wiki/Valladolid_debate#Debate) சூத்திரன் என்பதன் பொருள் காலப் போக்கில் மருவி வந்ததும்.

 இது ஒரு பக்கம் இருக்கட்டும் பேராசிரியரே...

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி

என்று நல்வழியில் பாட்டியம்மா (சிவகாமிப் பாட்டியல்ல, ஒளவைப் பாட்டி) சொன்னார்களே, அத்துடன் பெரியார்/ இழிகுலத்கார் என்ற பதங்களையும்  சாதியுடன் இணைத்தார்களே அதன் நோக்கம் என்னவாக இருக்கும்??? எனக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ.

இவ்வாறு சொன்ன ஒளவை மேலைநாட்டுத் தாக்கத்தில் கவி புனைந்த பிற்கால ஒளவையா?

அன்புடன் 
..... தேமொழி 

Innamburan S.Soundararajan

unread,
Jul 1, 2013, 11:07:28 AM7/1/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
'ஆராய்ச்சி நோக்கில் அமைந்த  சர்ச்சைக்குரிய தலைப்புகள் பேராசிரியருக்கு கை வந்த கலை.'
அதா அன்று
சர்ச்சை நோக்கில் அமைந்த ஆராய்ச்சிக்குரிய தலைப்புகள் பேராசிரியருக்கு கை வந்த கலை.

நல்ல போடு போட்டீங்க, அமுத மொழி. கரையாளர் நூலை பற்றி எல்லாரும் கம்! கம்!

Tthamizth Tthenee

unread,
Jul 1, 2013, 11:11:51 AM7/1/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
ஒருகாலத்தில் திட்டங்களை  திறம்படத் தீட்டி  அதற்குரிய சூத்திரங்களை வகுத்த அறிவாளிகள்  சூத்திரதாரிகள்  என்றும் சூத்திரர்கள்  என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம்

காலப்போக்கில்   எல்லா ஜாதிகளையும் பின்னுக்குத் தள்ளி அரசியல் ஆதாயம் தேட

சூத்திரன் என்றாலே இழிகுலத்தோன்  என்னும் பொருள் மருவும்படி அரசியல்வாதிகளால்  திரிக்கப்பட்டிருக்கலாம்


சூத்திரம் இல்லாமல் காற்றாடி கூடப் பறக்காது

அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/7/1 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

Innamburan S.Soundararajan

unread,
Jul 1, 2013, 11:16:51 AM7/1/13
to vall...@googlegroups.com
அவ்வாறு இல்லை, ஸ்வாமி. 
2013/7/1 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Jul 1, 2013, 11:31:09 AM7/1/13
to vallamai

2013/7/1 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

நல்ல போடு போட்டீங்க, அமுத மொழி. கரையாளர் நூலை பற்றி எல்லாரும் கம்! கம்!

​​அதெல்லாம் கம்முனு ஒன்னும் இல்லை ஜம்முனு விவாதிக்கலாம்.  கரையாளரின் தமிழகத்தின் பிற்பட்டோர் பற்றிய அறிக்கை ஒரு தகவல் களஞ்சியம்

கரையாளரின் மகள் லண்டனில் படித்துத் திரும்பியவர்.  என்னுடய பேரசிரியரின் ஆய்வு நிறுவனத்தில் என் மனைவியுடன் ஆய்வாளராகப் பணி புரிந்தவர்

கரையாளரின் பெயரில் ஒரு ட்ரஸ்ட் நடந்துகொண்டிருக்கிறது

இப்போது முழுமூச்சில் தமிழகத்தில் நடக்கும் பிற்பட்டோர் இயக்கம் ஆளுமைச் செயல்பாடுகள் எல்லாம் அல்வ ரகம்

உண்மையை வெளிப்படையாகச் சொன்னால் சட்னி செய்துவிடுவார்கள்

வவ

Innamburan S.Soundararajan

unread,
Jul 1, 2013, 11:35:19 AM7/1/13
to vall...@googlegroups.com
அல்வ ரகம்: விளக்குக. நம் நாடு போல சால்ஜாப்பு தேசம் புவியில் இல்லை!
2013/7/1 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Jul 1, 2013, 11:50:39 AM7/1/13
to vallamai

2013/7/1 தேமொழி <them...@yahoo.com>

பட்டாங்கில் உள்ள படி

​சூக்குமம் இங்கேதான் உள்ளது

சாதிகள் பட்டாங்கில் இருந்தது குலப்பிரிவுகள் பிறப்பால் அமைந்ததல்ல நீதி அடிப்படையில் வாழும் வாழ்க்கையின் அடிப்படையில் ஏற்றமும் தாழ்ச்சியும்

அமெரிக்காவில் உள்ள வகுப்பு அடிப்படைபோல் ஒருவன் வாழ்க்கை நடைமுறை அவனை மேலேயும் கீழேயும் கொண்டு செல்லும்

இதே குமுக அமைப்புதான் ஜப்பானிலும்.  அங்கு நால்வகைப் பிரிவுகள் 

பட்டாங்கில் இருந்த சாதி என்ற பிரிவுகளின்மீது அரசாளுமைக்காக நான்கு வர்ணங்களை உட்புகுத்தியபோது நடந்த குழப்பங்கள் பல  அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ள்ன

வடபுலத்தில் இருந்து பெரிய அளவில் அந்தணர்கள் புலம் பெயரவில்லை.  முதல் புலம் பெயர்தல் மேற்கில் கிளம்பி சேர நாட்டை அடைந்தது முன்குடுமிச் சோழியர்கள் தாங்கள் தனிப்பிரிவு என்ற அமைப்பை வலியுறுத்தாது பெண்வழிக் குமுகத்தில் இரண்டறக் கலந்தனர்

கிழக்குக் கரைவழியாக வந்தவர்கள் கங்கையின் கிழக்குப் பகுதியில் தழைத்தோங்கிய நால்வகைப் பிரிவுகளை அறிமுகப்படுத்தும்போது தங்களைத் தனிமைப் படுத்தி பிறப்பால் உயர்ந்தவர்கள் என்ற நிலையைப் புகுத்தியிருக்கவேண்டும்

புலம் பெயர்ந்தவர்களில் ஷத்ரியர்கள் இல்லை வணிகர்கள் இல்லை இருக்கும் பிரிவுகளைக் கட்டைப் பஞ்சாயத்தில் நால்வகைப் பிரிவுகளாகப் பிரித்தனர்

சேரநாட்டில் மன்னரின் கட்டுப்பாட்டில் குறுநில மன்னர்களாக இருந்த வேளிர்களை எவ்வாறு அழைப்பது என்ற குழப்பம் இருந்தது

சாதிகள் பிரிவின்நால்வகை வர்ணத்தின் தாக்கம் அதிகம் சோழ பல்லவ ஆட்சிப்பகுதிகளில் தீவிரமாக இருந்ததுபோல் சேர பாண்டிய பூமியில் இருந்ததில்லை

அவ்வைப் பாட்டியின் கருத்தைச் சிவகாமிப் பாட்டியிடம் கேட்டு எழுதுவேன்

வவ

Nagarajan Vadivel

unread,
Jul 1, 2013, 11:55:30 AM7/1/13
to vallamai

2013/7/1 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

அல்வ ரகம்: விளக்குக. நம் நாடு போல சால்ஜாப்பு தேசம் புவியில் இல்லை!

முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்


வவ​

Karuannam Annam

unread,
Jul 1, 2013, 1:27:46 PM7/1/13
to vallamai, mintamil
சாகித்திய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற மலர்வதியின் “தூப்புக்காரி” புதினம் அல்லது இணையத்தில் அந்த நூலின் மதிப்புரை படித்துப் பார்க்க நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். புதினத்தின் போக்கில் சாதியப் பாகுபாடுகள் ஏற்பட்டவிதம் அருமையாக விவரிக்கப்படுகிறது.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Innamburan S.Soundararajan

unread,
Jul 1, 2013, 1:39:00 PM7/1/13
to mint...@googlegroups.com, தமிழ் சிறகுகள், thamizhvaasal, Manram, vallamai
'நால் வகைச் சாதியும் நலம் பெற நோக்கி...'
~ இது சிலப்பதிகாரத்திலிருந்து, பராபரமே.

Nagarajan Vadivel

unread,
Jul 1, 2013, 1:51:45 PM7/1/13
to vallamai

2013/7/1 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

'நால் வகைச் சாதியும் நலம் பெற நோக்கி..

​சாதியா வர்ணமா​

கண்ணகியின் தோழி அந்தணர் சாதியைச் சார்ந்தவர்.  கண்ணகி வணிகர் சாதியைச் சார்ந்தவர் ஆனால் அவர் தந்தை பெளத்தர்.  சமணர்களும் பெளத்தர்களும் நிறந்த சங்கம் ம்மருவிய காலத்தில் இருந்த நால்வகச் சாதி நால்வகை வர்ணத்திலிருந்து வேறுபட்டிருக்கவேண்டும்

எனவே இந்து சமயக் கோட்பாட்டில் உருவான நால்வகை வர்ணம் நால்வகைச் சாதியாக ஏற்றுக்கொள்ள இயலாது

வவ

Innamburan S.Soundararajan

unread,
Jul 1, 2013, 4:06:34 PM7/1/13
to vall...@googlegroups.com
சரியாகத்தான் சொல்லியிருக்கேன். எப்படியோ சிவகாமிப்பாட்டியை - வெத்தலை பாக்கு நசுக்கிக் கொடுத்து, வினவினேன். பாட்டி காதோடு காதா, ரகசியம் சொன்னாள்

'ராஜூ! வவ நல்லவன் தான். ஆனால்

'சர்ச்சை நோக்கில் அமைந்த ஆராய்ச்சிக்குரிய தலைப்புகள் அவனுக்கு கை வந்த கலை. நீயும் ஜமாய்டா ராஜா என்றாள். உடனே மலை ஏறிவிட்டாள்


இன்னம்பூரான்




2013/7/1 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
>

Reply all
Reply to author
Forward
0 new messages