40 ஆவது திருமண நாள்

3,260 views
Skip to first unread message

தமிழ்த்தேனீ

unread,
Sep 3, 2014, 9:23:08 AM9/3/14
to vall...@googlegroups.com
அன்புள்ள நண்பர்களுக்கு   வணக்கம்

எனக்கும்  என்னுடைய  இல்லத்தரசிக்கும் திருமணம் நடைபெற்று இந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி  40 வருடங்கள்  நிறைகிறது

எங்களை விட  வயதிலும் அறிவிலும் மூத்தவர்கள்  எங்களை ஆசீர்வதிக்கலாம்
வயதில்   சிறியவர்கள்    வாழ்த்தலாம்

இந்த நன்நாளை ஒட்டி  எங்கள் குலதெய்வமான  ஶ்ரீவில்லிபுத்தூர்  திருவண்ணாமலையில் எழுந்தருளி இருக்கும்   ஆதி வினாயகரையும்  மஹாலக்‌ஷ்மி சமேத  ஶ்ரீனிவாசனையும் தரிசிக்க  நாளை 4 ஆம் தேதி சென்னையிலிருந்து கிளம்பி ஶ்ரீரங்கம் சென்று  அங்கிருந்து  ஶ்ரீவில்லி புத்தூர்  செல்கிறோம்

  மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார்கோயிலுக்கும்   சென்று வினாயகரை தரிசிக்க இருக்கிறோம் ,ஶ்ரீரங்கநாதனையும் தரிசித்துவிட்டு

ஆண்டாள் ரங்கமன்னாரையும்  ஶ்ரீவில்லி புத்தூரில் தரிக்க இருக்கிறோம்

அங்கிருந்து ராமநாதபுரம் சென்று   ரகுவீர்தயாள் அவர்களை சந்தித்து  திருப்புல்லாணி பெருமானையும்  சேவிக்கப் போகிறோம்.

இத்துணை வருடங்கள்  எனக்கு உற்ற துணைவியாய் இருந்து   என்னுடன்  இல்லறம் நடத்திய  என் மனைவி  ஆனந்தவல்லிக்கு  நன்றி சொல்லும் விதமாய்

இந்தக் கவிதையை வடிக்கிறேன்

                          “ இல்லறம் 

உன்னைக் கரம் பிடித்த நாள் முதலாய் ஆதரவாய் கைகொடுத்துஎன்னைக்

கைவிடாமல் எப்போதும் காக்கின்றாய் என் தாயாய்.மனமிறங்கி உன்சுற்ற

வயல்தனிலே நாற்றாய் நீ இருக்க கருணை கொண்டு சுற்றமெல்லாம்-

என் வயலில் நட்டார்கள்  வந்தாய்நீ  வயல்செழிக்க எம்குலம் தழைக்க

முன்னைச் செய்த பயன் முழுமையாய்க் கிடைத்தாற்போல் முன்னிருந்து

நடத்துகிறாய் முழுவாழ்வை செழிப்பாக்கி   பண்பால் ஆளுகிறாய் அன்பை

முன்னிறுத்தி அருங்குணங்கள் அத்தனையும் அணுக்கி உள்ளே தெம்பாய்

உள்ளடக்கி தெள்ளிய அமுதாய்  தேனடைத் தேனாய் ஆனாய் நீ

பொன் பொருளென்று சொத்துக்கள் யாதுமிலை எனக்கென்று சொந்தமென்று

வந்த பின்னே அத்தனையும் சேர்த்துவிட்டாய் என் வாழ்வில் தானாய்

சேர்ந்ததெல்லாம் சிக்கனமாய் முடிந்து வைத்து மொத்தமாய் என்னிடத்தே சோர்ந்த

போதெல்லாம் முன்கூட்டி அளிக்கின்றாய் தேவைதனையறிந்து

சேர்த்துவைக்கும் குணமறியேன் எனக்கும் சேர்த்து சேர்த்துவைத்து குணக்குன்றாய்

இணைந்தே வாழுகிறாய்  எனக்கும் சேர்த்து பொன் கொடுத்தாய் பொருள் கொடுத்தாய்

போதாது போதாது என்றே நீயும் இளந் தளிராய் என்குலம் தழைத்திடவே  வாரிசுகளும்

எமக்களித்தாய் கண்ணிமைக்கும் நேரத்திலே கடின்மிகு சுமைகளெல்லாம் காணாமல் ஆக்குகிறாய்

களிப்பே ஊட்டுகிறாய்  கலைகளெல்லாம் ஊட்டுகிறாய் கவிஞனாய் ஆக்குகிறாய் கலையெல்லாம்

எனை நோக்கி களிப்புடனே ஓடிவந்து  கருணைகொண்டு சேர்ந்திடவே வகை செய்து

எனைப்பட்டை தீட்டுகிறாய் சாணைக் கல்லாய் நீயிருந்து சாத்திரமாய் தீட்டி என்னை

கலைமகள் கைப்பொருளாய் மீட்டுகிறாய் கவின் மிகு சுவையூட்டி களிப்பாக மாற்றுகிறாய்

.கவலை போக்குகிறாய் சொக்கவைத்து சுழலவைத்து  எக்கட்டு ஆனாலும் இக்கட்டுதனைக்

களையும் இயந்திரமாய் ஆனவள்  நீ

அடகுவைத்த அத்தனையும் மீட்டுகிறாய் அன்பான வட்டி தந்து அருமையாய் கட்டுக்குள்ளே

கட்டியெனை ஆட்படுத்தி  ஆளுகின்றாய் பரிவுடனே பலநூல் கற்றேன் பல்கலைக் கழக பட்டங்கள்

நான் பெற்றேன்-பட்டையங்கள் பல பெற்றேன்  மதிப்பார் யாருமில்லை மறந்தே போகின்றார்.

ஒரு நூலெடுத்து உறுளி மஞ்சள் உரைத்தே தடவி உன் கழுத்தில் நாண் இட்டேன் மங்கலமாய்

முடிச்சிட்டேன்  அது முதலாய் , ஆண்மகனாய் ஆனேன் நான் மாப்பிள்ளையாய் ஆனேன் நான்

குடும்பஸ்தன், தந்தை,  பெரியப்பா, சித்தப்பா, அத்தான், என்றெல்லாம் பலபட்டம் பெற்றேன் நான்

எல்லோரும் துதிக்கின்றார் நினைவில் என்னை மதிக்கின்றார். வேறென்ன வேண்டுவது இத்தனையும்

உன்னாலே வந்ததென்று நானறிவேன் உனையன்றி வேறு துணை  வேண்ட மாட்டேன்

இல்லறத்தின் மாற்று வழி போகமாட்டேன் பிணைக் கைதிபோலாகி  பிணைப்பால் நான் மனிதனானேன்

எப்பிறவி எடுத்தாலும் உன்தனையே நாடிடுவேன்  உன் துணையாய் ஆகிடுவேன் உயிர் அளித்த என்தாயின்

உற்ற துணையானவளே -தாய்க்குப் பின்தாரமென்று பெரியோர்கள் சொல்லிவைத்தார் இன்றுணர்ந்தேன்

அதிசியத்தை நான் சேயான ரகசியத்தை ஒரு  கணமும் மறக்க மாட்டேன் இத்தனையும் செய்தாய்

இன்றளவும் என் நலமே நாடி நாடி-உருகாத வெண்ணையும் ஓரடையும் செய்து வைத்தே வேன்டுகின்றாய்

என் நலம் நாடுகின்றாய் உனக்கோர் நன்றி  சொல்ல நாவெடுத்தேன் ஆணென்ற கர்வமது அடக்கியே

ஆண்டதம்மா சொல்ல வேறு வழியில்லை- எழுத்தாணி ஏந்தியே நன்றியினை நானெழுத நானெழுத

நானெழுத  முடிப்பதற்கோர் வழியுமிலை முடித்திடவே  வழியுமிலை உன் பெருமை உணர்ந்ததனால்

இலக்கணங்கள் ஏதுமில்லா இக்கவிதை எம் தமிழால் நானெழுதி நன்றி உரையாய் உன்னிடத்தே அளிக்கின்றேன்

எம்போன்றோர் தலைக்கனமும் தானிறங்கி நன்றி சொல்ல ஒரு வாய்ப்பாய்  உன்னிடம் அளித்துவிட்டு

மறைந்து நின்று  பார்க்கின்றேன்  உன் முகவிகசிப்பை தானியங்கி கருவியான  தாய்மையது போற்றுகின்றேன்

-ஆட்பட்டேன் ஆட்பட்டேன் ஆட்கொண்டாய்  தாயாய் நீ-முத்தாய்ப்பாய் ஒரு முத்தம் அளித்தே மகிழ்கின்றேன்

வேறு வழி தெரியவில்லை ஓரடையும் வெண்ணையும் சுசிருசியாய் நெஞ்சினிலே சுவையாய்

இறங்குதம்மா  நோன்பெல்லாம் உன்னுடனே  இணைந்தே செய்திடுவேன்

உன்நலமும் வேண்டிநின்று நன்றியுடன் நானும் சேர்ந்து


 



 அன்புடன்
தமிழ்த்தேனீ

Ranjani Narayanan

unread,
Sep 3, 2014, 9:54:12 AM9/3/14
to vall...@googlegroups.com
மிக அழகான கவிதையை உங்கள் மனைவிக்கு எழுதியுள்ளீர்கள். இந்தக் கவிதையை அவர் ரசித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

50, 60 என்று இன்னும் பல பல வருடங்கள் இணைந்து இல்லறம் நடத்த வாழ்த்துக்கள். இனிய தம்பதிகளுக்கு நல்ல ஆரோக்கியமும் மன அமைதியும் தர ஸ்ரீரங்கத்து திவ்ய தம்பதிகளைப் பிரார்த்திக்கிறேன். 

அன்புடன்,
ரஞ்சனி 






--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

Innamburan S.Soundararajan

unread,
Sep 3, 2014, 10:39:54 AM9/3/14
to vall...@googlegroups.com
நற்செய்தி. தலவிஜயங்களை செய்து பல்லாண்டு, பல்லாண்டு இருவரும் நலமுடன்
வாழ்க என்று மனமார ஆசி கூறுகிறேன். என்னுடைய பிரார்த்தனைகளில் இருவரும்
தினந்தோறும் இடம் பெறுகிறீர்கள்.
அன்புடன், இன்னம்பூரான்.

--









இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tulsi Gopal

unread,
Sep 3, 2014, 8:10:36 PM9/3/14
to vall...@googlegroups.com
அருமையான பயணமாக அமையட்டும்.  ரங்கனைக் கேட்டதாகச் சொல்லுங்கள்.

உம்மை வாழ்த்தும் தகுதியும் வயசும் எங்களுக்கு இருக்கு:-)

என்றும் அன்புடன்,

மூன்று மாதங்களுக்கு முன் நாற்பதாண்டு மணவிழாவைக் கொண்டாடிய  துளசியும் கோபாலும் (நியூஸியில் இருந்து)  


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
என்றும் அன்புடன்,
துளசி

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 3, 2014, 8:22:39 PM9/3/14
to வல்லமை, மின்தமிழ்
மனமார்ந்த நல்வாழ்த்துக்களும் நமஸ்காரங்களும் ஐயா!.. தங்கள் மனைவிக்கு இதை விடச் சிறந்த மணநாள் பரிசு வேறொன்றுமிராது!.. அற்புதமான பாடல்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-09-04 5:40 GMT+05:30 Tulsi Gopal <gopal...@gmail.com>:
​   
​      
​                

coral shree

unread,
Sep 3, 2014, 8:54:52 PM9/3/14
to மின்தமிழ், vallamai
அன்பினிய தமிழ்த்தேனீ ஐயா,

மனமார்ந்த 40ம் ஆண்டு மணநாள் வாழ்த்துகள். அழகாகக் கவிதை பாடி தங்கள் துணைவியாரைக் கௌரவித்துள்ளீர்கள்! இதைவிட மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும். என்றும் அன்பும், ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் நிலைத்திருக்க மனமார பிரார்த்தனை செய்கிறோம்.

அன்புடன்
பவளா திருநாவுக்கரசு


2014-09-03 14:37 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

திருமணநாள் வாழ்த்துகள் தமிழ்த்தேனீ ஐயா.

உங்கள் ராணித்தேனீக்கும் அருமையான கவிதையைப் பரிசாக அளித்துள்ளீர்கள்...மிக நன்று.



அன்புடன்

.... தேமொழி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

துரை.ந.உ

unread,
Sep 4, 2014, 4:09:14 AM9/4/14
to வல்லமை

இனியவை நாற்பதுக்கும் 
இனிவரும் நாற்பதும் 
இன்னும் இனிதாய் 
அமைவதற்கும் வாழ்த்துகள் ஐயா 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Anna Kannan

unread,
Sep 4, 2014, 5:14:31 AM9/4/14
to Vallamai
உதாரணத் தம்பதியராய், 40ஆவது திருமண நாளைக் கொண்டாடும் தமிழ்த்தேனீ தம்பதியர், நீடூழி வாழ்க நிறைவுடன், நித்தியப் புன்னகை ஒளியுடன். 

Granny Visalam

unread,
Sep 4, 2014, 5:17:27 AM9/4/14
to vall...@googlegroups.com
அன்பு சகோதரர்  . உங்கள் 40 வது வருட  இனிய திருமண நாள் வாழ்த்துகள் .கவிதை பிரமாதம் உங்கள் மனைவிக்கு இதைவிட   வேறு  என்ன அன்பு பரிசு இருக்க முடியும்  ? உங்கள் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிகளைப் பிழிந்து காட்டியிருக்கிறீர்கள். உங்கள் இருவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். என் நல்லாசிகளுடன்  .ஆரோக்கியமான உடல் தான் நமக்கெல்லாம் இப்போது முக்கியம் .ஆரோக்கியம் இருந்தால் மனமும் மகிழ்ச்சியுடன் ஒத்துழைக்கும் .வாழ்க வளமுடன் 

PRASATH

unread,
Sep 4, 2014, 6:45:05 AM9/4/14
to மின்தமிழ், vallamai
முன்கூட்டிய திருமண நாள் நல்வாழ்த்துகள் ஐயா...


2014-09-03 18:51 GMT+05:30 தமிழ்த்தேனீ <rkc...@gmail.com>:

Kaviri Maindhan

unread,
Sep 4, 2014, 9:29:44 AM9/4/14
to Groups, vallamai

பெறுகை

உயர்திரு தமிழ்த்தேனி..

 

நல்லறம் காத்துநின்ற இல்லற வாழ்வில் இன்று 

நாற்பதைத் தொடுகின்றீர்..  உங்கள் இருவரின் 

உள்ளமும் கோவிலாய் ஒளியுடன் விளங்குவதால் 

வாழ்ந்திடும் வாழ்க்கை வண்ணங்கள் காட்டுகிறதே!!

 

சொல்லிலே சுந்தரம் சுகவாழ்வின் மந்திரம் 

என்றுமே அறிந்தததாலே - உங்களின் வாழ்க்கையே 

நல்லதோர் இலக்கணம் என்றே வணங்குகிறோம்

நலம்பல விளைந்திடும் இறையருள் வழியட்டுமே!!

 

தன்னிலே பாதியாய் இன்னொரு ஜீவனாய் 

தன்னுடல் நிழலும் ஆனாள் .. அவள் புகழை 

மன்னவன் நீருமே மெச்சிய வண்ணங்கள்..

உண்மையில் உயர்ந்தீர் இது வெறும் வார்த்தையல்ல!

 

அன்புடன்...

காவிரிமைந்தன்

நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)

சென்னை 600 075.

தற்போது - அபுதாபி  (அமீரகம்)

00971 50 2519693

kavir...@gmail.com

Website: thamizhnadhi.com



தமிழ்த்தேனீ

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Megala Ramamourty

unread,
Sep 4, 2014, 2:54:41 PM9/4/14
to மின்தமிழ், vallamai
நாற்பதாவது மணநாளைச் சிறப்பாய்க் கொண்டாடவிருக்கும் தமிழ்த்தேனீ ஐயாவிற்கும், அவர்தம் துணைவியாருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஐயா, உங்கள் வாழ்க்கை அனுபவங்களை - திருமணத்தின் வாயிலாய்ப் பெற்ற உயர்வுகளை உணர்ச்சிமயமான கவிதை வெள்ளமாய்ப் பாய்ந்தோடச் செய்திருக்கின்றீர்கள்; தங்கள் துணைவியாரை மனந்திறந்து பாராட்டியிருக்கிறீர்கள். (மற்ற கணவன்மார்களும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இது.) :-) 

’இல்லறம் நல்லறமாக - பிரச்சனைகள் ‘இல்’அறமாக இருக்க நல்லதோர் வழி... மனைவியின் பெருமையை அவள் மணவாளன் (அவளறியப்) போற்றுவதே!  :-)

தமிழ்த்தேனீயார் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு தம் துணைவியார் ஆனந்தவல்லி அம்மையாரோடு ஆனந்தமாய் வாழ்ந்திருக்க என் பிரார்த்தனைகள்!

அன்புடன்,
மேகலா


2014-09-04 14:27 GMT-04:00 mayakunar <gopal...@gmail.com>:
திரு தேனியாரும் ,அன்னார் துணைவியாரும் இன்று போல் என்றும் உடல் நலத்துடனும் ,மன நிறைவுடனும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டி .மண நாள் வாழ்த்துகள் .
கோபாலன் 

-- 
Gopalan

வேந்தன் அரசு

unread,
Sep 4, 2014, 8:15:35 PM9/4/14
to vallamai
வாழ்த்துகள் சொல்லி ஆசிகள் வேண்டினேன்.

கவிதை சூப்பர்.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

paramasivan esakki

unread,
Sep 6, 2014, 4:00:12 PM9/6/14
to vall...@googlegroups.com

திருநிறை தமிழ்த்தேனீ அவர்களின் 40வது திருமணநிறைவு விழாவுக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


விரிசிறைத் தும்பி மணிஅரும்பு ஊத‌
சடைக்கனற் செல்வன் ஒளிதூஉய்ப் பரவ‌
வள்ளி படர்ந்த ஒண்ணிலம் விழிப்ப‌
சினைதொறும் சில்பூ கலித்தொகை சிதற‌
தரை இனிக்கும்  தண்பூந் தமிழில்
நெஞ்சு விம்மிய அன்பின் உயர‌
நீள் சொல் தொடுத்து
வாழ்த்திடுகின்றேன் வாழ்த்திடுகின்றேன்.
வானம் கூட வரிசையில்  நிற்கும்
தங்கள் மணநாள் சிறக்க வாழ்த்துக்கள் சொல்ல.


என் 46 வது திருமண நிறைவை செப்.4.2014ல் கடந்துவந்த‌ மகிழ்ச்சியில் வாழ்த்துகிறேன்.அன்பு பொங்கி தமிழ் வழியும் உள்ளங்களுக்கு ஆசீர்வாதமும் வாழ்த்தும் ஒன்று தான்.

வெற்றிகரமான தங்கள் அன்பு இல்லறம் தொடரட்டும் .தொடரட்டும் நீடூழி தொடரட்டும்.

அன்புடன் ருத்ரா

coral shree

unread,
Sep 7, 2014, 12:24:29 PM9/7/14
to மின்தமிழ், vallamai, paramasivan esakki
தங்களுக்கு, மனமார்ந்த  இனிய மணநாள் வாழ்த்துகள் ஐயா. எங்களையும் ஆசிர்வதிக்க வேண்டுகிறோம். 

அன்புடன்
பவளா திருநாவுக்கரசு

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Aathira Mullai

unread,
Sep 8, 2014, 10:21:13 AM9/8/14
to vall...@googlegroups.com
நாற்பதாவது மணநாளைக் கொண்டாடும் தமிழ்த்தேனீ ஐயாவுக்கும் இன்சுவைத் தேன் அம்மா அவர்களுக்கும் மனம் நிறைந்த மணநாள் வாழ்த்துகள்! இந்நாளில் இருவரையும் வணங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்
முனைவர். ப. பானுமதி
 (ஆதிரா முல்லை)

Tthamizth Tthenee

unread,
Sep 8, 2014, 11:52:21 AM9/8/14
to vall...@googlegroups.com
46 ஆவது திருமண நாளைக் கொண்டாடிய உங்களுக்கு  எங்கள் நமஸ்காரம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


அன்புடன்
தமிழ்த்தேனீ

--
Reply all
Reply to author
Forward
0 new messages