தமிழில் தமிழ் ஆண்டுகள்

1,591 views
Skip to first unread message

வேந்தன் அரசு

unread,
Jan 16, 2014, 10:05:20 PM1/16/14
to தமிழமுதம், தமிழ் சிறகுகள், vallamai
யாரோ புண்ணியன் விக்கிபிடியாவில் ஏற்றி உள்ளார்.
ண்.பெயர் பெயர் (தமிழில்)பெயர் (ஆங்கிலத்தில்)கிரெகொரியின்ஆண்டு எண். பெயர்பெயர் (தமிழில்)பெயர் (ஆங்கிலத்தில்) கிரெகொரியின் ஆண்டு
01.பிரபவநற்றோன்றல்Prabhava 1987–198831. ஹேவிளம்பிபொற்றடைHevilambi 2017–2018
02.விபவஉயர்தோன்றல் Vibhava1988–1989 32.விளம்பிஅட்டிVilambi 2018–2019
03.சுக்ல வெள்ளொளிSukla1989–1990 33.விகாரி எழில்மாறல்Vikari2019–2020
04.பிரமோதூதபேருவகைPramodoota 1990–199134. சார்வரிவீறியெழல்Sarvari 2020–2021
05.பிரசோற்பத்தி மக்கட்செல்வம்Prachorpaththi1991–1992 35.பிலவகீழறை Plava2021–2022
06. ஆங்கீரசஅயல்முனிAangirasa 1992–199336.சுபகிருது நற்செய்கைSubakrith2022–2023
07.ஸ்ரீமுகதிருமுகம் Srimukha1993–1994 37.சோபகிருதுமங்கலம்Sobakrith 2023–2024
08.பவ தோற்றம்Bhava1994–1995 38.குரோதிபகைக்கேடு Krodhi2024–2025
09. யுவஇளமைYuva1995–1996 39.விசுவாசுவ உலகநிறைவுVisuvaasuva2025–2026
10.தாதுமாழைDhaatu 1996–199740. பரபாவஅருட்டோற்றம்Parabhaava 2026–2027
11.ஈஸ்வர ஈச்சுரம்Eesvara1997–1998 41.பிலவங்கநச்சுப்புழை Plavanga2027–2028
12.வெகுதானியகூலவளம்Bahudhanya 1998–199942. கீலகபிணைவிரகுKeelaka 2028–2029
13.பிரமாதி முன்மைPramathi1999–2000 43.சௌமியஅழகு Saumya2029–2030
14. விக்கிரமநேர்நிரல்Vikrama 2000–200144.சாதாரண பொதுநிலைSadharana2030–2031
15.விஷுவிளைபயன்Vishu 2001–200245. விரோதகிருதுஇகல்வீறுVirodhikrithu 2031–2032
16.சித்திரபானு ஓவியக்கதிர்Chitrabaanu2002–2003 46.பரிதாபிகழிவிரக்கம் Paridhaabi2032–2033
17.சுபானுநற்கதிர்Subhaanu 2003–200447. பிரமாதீசநற்றலைமைPramaadhisa 2033–2034
18.தாரணதாங்கெழில் Dhaarana2004–2005 48.ஆனந்தபெருமகிழ்ச்சிAanandha 2034–2035
19.பார்த்திப நிலவரையன்Paarthiba2005–2006 49.ராட்சச பெருமறம்Rakshasa2035–2036
20.வியவிரிமாண்புViya 2006–200750. நளதாமரைNala2036–2037
21.சர்வசித்துமுற்றறிவு Sarvajith2007–2008 51.பிங்களபொன்மைPingala 2037–2038
22.சர்வதாரி முழுநிறைவுSarvadhari2008–2009 52.காளயுக்தி கருமைவீச்சுKalayukthi2038–2039
23.விரோதிதீர்பகைVirodhi 2009–201053. சித்தார்த்திமுன்னியமுடிதல்Siddharthi 2039–2040
24.விக்ருதி வளமாற்றம்Vikruthi2010–2011 54.ரௌத்திரிஅழலி Raudhri2040–2041
25. கரசெய்நேர்த்திKara2011–2012 55.துன்மதி கொடுமதிDunmathi2041–2042
26.நந்தனநற்குழவிNandhana 2012–201356. துந்துபிபேரிகைDhundubhi 2042–2043
27.விஜயஉயர்வாகை Vijaya2013–2014 57.ருத்ரோத்காரிஒடுங்கிRudhrodhgaari 2043–2044
28.ஜய வாகைJaya2014–2015 58.ரக்தாட்சிசெம்மை Raktakshi2044–2045
29. மன்மதகாதன்மைManmatha 2015–201659.குரோதன எதிரேற்றம்Krodhana2045–2046
30.துன்முகிவெம்முகம்Dhunmuki 2016–201760. அட்சயவளங்கலன்Akshaya2046–2047

தேமொழி

unread,
Jan 16, 2014, 11:32:29 PM1/16/14
to vall...@googlegroups.com
வேந்தே, 

Mksamy என்பவர் அந்தப்  புண்ணியன்.

ஆனால் எனக்கு இந்தத் தமிழ்ப் படுத்திய பட்டியல் மட்டுமல்ல, சமஸ்கிரத 60 ஆண்டுகளின் பட்டியலாலும் தினசரி வாழ்க்கைக்கு எந்த உபயோகமும் இருப்பதாகத் தெரியவில்லை.

நாள், வாரம், மாதம், ஆண்டு என்பது வரை பயன்பாடு எனக்குப் புரிகிறது, பிறகு 12, 14, 60 என எப்படி அடுக்கினாலும் அதனால் என்ன பயன் என்று புரிவதில்லை.
மறு கோணத்தில் பார்க்கும் பொழுது இவற்றை நான் பயன்படுத்தியதே இல்லை, அதனால் இந்நாள்வரை எனக்கு இந்த இழப்பும் இல்லை.  வேலை மெனக்கெட்டு, நாம் பயன் படுத்தப்  போகாத ஒன்றை வேற்று மொழியில் இருந்து மொழி பெயர்த்து, மனனம் செய்து.... தேவையா இந்த நேர விரைய முயற்சி என்றே தோன்றுகிறது. 

இக்கட்டுரையின் பேச்சுப் பகுதியில் கிடைத்த தகவல் ஒன்று....


தமிழ் ஆண்டுகள் தோன்றிய கதையாகக் கூறப்படுவது

நாரதர் ஒருமுறை ,'கடவுள்' கிருஷ்ணனிடம் "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டார். அதற்குக் கிருஷ்ணன், "என்னை மனத்தில் நினைக்காமல் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றானாம். இதற்கு நாரதன் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதன் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர்மீதே மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதன் "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதன் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். . பின் 'கடவுள்' கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது பிள்ளைகளைப் பெற்றனர். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். (ஆதாரம்: அபிதான சிந்தாமணி - 1392ஆம் பக்கம்)


அன்புடன்
..... தேமொழி

தேமொழி

unread,
Jan 16, 2014, 11:46:58 PM1/16/14
to vall...@googlegroups.com


இதில் அழலி என்ற பெயர் அழகாக இருக்கிறது, அழலி என்பது  சிவனுக்குப் பெயர் என்று தெரிகிறது.


அழல...: (p.161); சிவபிரான். (திவா.) அழலி aḻali, n. < அழல்-. Fire

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 17, 2014, 12:19:52 AM1/17/14
to tamizhamutham, vallamai
நான் பிறந்த ஆண்டு விரோதி. வயது 5!
இவ்வளவு காலம்  ‘எதிரி’ என்று நினைத்திருந்தேன். ‘எதிர் பகை’ பகையை எதிர் என்ற அருமையான பொருளைப் பட்டியலில் கண்டேன். இதுபோலவே பல சொற்கள் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2014/1/17 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

--
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழமுதம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhamutha...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

வேந்தன் அரசு

unread,
Jan 17, 2014, 7:44:18 AM1/17/14
to vallamai



16 ஜனவரி, 2014 11:32 பிற்பகல் அன்று, தேமொழி <them...@yahoo.com> எழுதியது:

வேந்தே, 

Mksamy என்பவர் அந்தப்  புண்ணியன்.

நன்றி எம்கேசாமி. 

ஆனால் எனக்கு இந்தத் தமிழ்ப் படுத்திய பட்டியல் மட்டுமல்ல, சமஸ்கிரத 60 ஆண்டுகளின் பட்டியலாலும் தினசரி வாழ்க்கைக்கு எந்த உபயோகமும் இருப்பதாகத் தெரியவில்லை.

எனக்கு தமிழே எந்த பயனும் கொடுக்கலை. இணையங்களில் உங்களைபோன்ற சான்றோர் தொடர்புக்கு மட்டுமே. 

நாள், வாரம், மாதம், ஆண்டு என்பது வரை பயன்பாடு எனக்குப் புரிகிறது, பிறகு 12, 14, 60 என எப்படி அடுக்கினாலும் அதனால் என்ன பயன் என்று புரிவதில்லை.

உலகம் என்பது நீடுநிற்பது. அதனால் ஆண்டுகளின் எண்ணிக்கையில் தமிழ்மக்களுக்கு உடன்பாடு இல்லை. ஒரு வசதிகாக  மட்டும் அறுபது ஆண்டுகளை வைத்துக்கொண்டார்கள்.  கிபி மூனு கோடி என ஒரு ஆண்டு வரலாம்.

 
மறு கோணத்தில் பார்க்கும் பொழுது இவற்றை நான் பயன்படுத்தியதே இல்லை, அதனால் இந்நாள்வரை எனக்கு இந்த இழப்பும் இல்லை.  வேலை மெனக்கெட்டு, நாம் பயன் படுத்தப்  போகாத ஒன்றை வேற்று மொழியில் இருந்து மொழி பெயர்த்து, மனனம் செய்து.... தேவையா இந்த நேர விரைய முயற்சி என்றே தோன்றுகிறது. 

ஆண்டுக்கு ஒரு முறை நினைக்கலாமே. பிறந்தநாள் போல
 

இக்கட்டுரையின் பேச்சுப் பகுதியில் கிடைத்த தகவல் ஒன்று....




இந்த புராணக்கதைகளை கட்டியவர் என் கையில் சிக்கட்டும். அடுத்த நாள் நான் சிறையில் இருப்பேன்


 என் அப்பா ராச்சஸ  ஆண்டில் பிறந்தவர் என சொல்லுவார். இன்று அவருக்கு என்ன அகவை இருக்கும் என காணவே இந்த பட்டியலை தேடினேன். வரும் சித்திரைக்கு அவர் 100ஐ எட்டுகிறார்.  எம்ஜியாருக்கு இரண்டு வருடை மூத்தவர். இவர் அம்மாவை விட்டு சென்றார். அவர் என்னை தண்டத்துக்கு விட்டுசென்றார்.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Reply all
Reply to author
Forward
0 new messages