சினிமா, விவசாயி உலகம்

28 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 22, 2023, 8:05:52 AM10/22/23
to vallamai, housto...@googlegroups.com
Vijay-movie.jpeg
👆விவசாயி, நடிப்புலகு - வேறுபாட்டுக் கருத்துச் சித்திரம் புரட்சிக்கவியின் அகவலை நினைவூட்டுகிறது.

தமிழ்க் கனவு

தமிழ்நாடெங்கும் தடபுடல்! அமளி!!
பணமே எங்கணும் பறக்குது விரைவில்
குவியுது பணங்கள்! மலைபோல் குவியுது!!
தமிழின் தொண்டர் தடுக்கினும் நில்லார்,
ஓடினார், ஓடினார், ஓடினார் நடந்தே!
ஆயிரம் ஆயிரத்து ஐந்நூறு பெண்கள்
ஒளிகொள் விழியில் உறுதி காட்டி
இறக்கை கட்டிப் பறக்கின்றார்கள்!
ஐயோ, எத்தனை அதிர்ச்சி, உத்ஸாகம்!
சமுத்திரம் போல அமைந்த மைதானம்!
அங்கே கூடினார் அத்தனை பேரும்!

குவித்தனர் அங்கொரு கோடி ரூபாய்!
வீரத் தமிழன் வெறிகொண்டெழுந்தான்!
உரக்கக்கேட்டான்: 'உயிரோ நம் தமிழ்?'
அகிலம் கிழிய ஆம்! ஆம்! என்றனர்!!
ஒற்றுமை என்றான்; 'நற்றேன்' என்றனர்.
உள்ளன்பு ஊற்றி ஊற்றி ஊற்றித்
தமிழை வளர்க்கும் சங்கம் ஒன்று
சிங்கப் புலவரைச் சேர்த்தமைத்தார்கள்!
உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத்தையெலாம்
கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
சுடர்க்கவி தொடங்கினார்! பறந்தது தொழும்பு!
கற்கண்டு மொழியில் கற்கண்டுக் கவிதைகள்,
வாழ்க்கையை வானில், உயர்த்தும் நூற்கள்,

தொழில் நூல், அழகாய்த் தொகுத்தனர் விரைவில்!
காற்றிலெலாம் கலந்தது கீதம்!
சங்கீதமெலாம் தகத்தகாயத்தமிழ்!
காதலெலாம் தமிழ் கனிந்த சாறு!
கண்ணெதிர்தமிழ்க் கட்டுடல் வீரர்கள்!
காதல் ததும்பும் கண்ணாளன்தனைக்

கோதை ஒருத்தி கொச்சைத் தமிழால்
புகழ்ந்தாளென்று, பொறாமல் சோர்ந்து
வீழ்ந்தான்! உடனே திடுக்கென விழித்தேன்.
அந்தோ! அந்தோ! பழய
நைந்த தமிழரொடு நானிருந்தேனே!

Virus-free.www.avg.com

N. Ganesan

unread,
Oct 5, 2025, 12:22:35 AM (12 days ago) Oct 5
to Santhavasantham
தேவையே இல்லாமல், கரூரில் 41 உயிர்கள் சாவைச் சந்தித்துள்ளன. @DrGanesh_Japan ட்வீட் மூலமாக, "இரண்டு தமிழ்நாடு" காணொளி கண்டேன்.
https://www.youtube.com/watch?v=Fp5F2aKrLwk  

என்னத்தைச் சொல்ல? கரூர், நாமக்கல் போன்ற ரோட்ஷோ கூட்டங்கள் தடைசெய்யப்படல் வேண்டும் - எந்தக் கட்சி ஆயினும். பாரதிதாசன் சினிமா உலகால் மனமுடைந்தவர். இறந்ததும் அதனால் தான். மாரியப்பன் (2022) கட்டுரை, https://x.com/naa_ganesan/status/1918992384823525768

சங்க காலத்தில் இப்போதைய கேரளம் பெரிய வனாந்தரம், ஜனத்தொகை குறைவு. கரூர் என்ற பெயரே வஞ்சி மாநகரத்தின் downtown என்ற பொருளில் அமைந்ததுதான். சேர மன்னர்கள் பல புலவர்களை ஆதரித்தனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அரச ஆதரவால் உவப்பத் தலைக்கூடினர். எனவே, கருவூரில் வாழ்ந்த புலவர்கள் என்ற பெரிய பட்டியலே இருக்கிறது. தமிழின் பொற்காலம், அங்கே இருந்த அரண்மனையில் பிறந்து வளர்ந்தவர் இளங்கோ அடிகள். முத்தமிழ்க் காப்பியம் படைத்து தமிழ்த் தேசியத்துக்கு முதனூல் அளித்தவர். கொங்குநாட்டுப் புலவர், அடியார்க்குநல்லார் சிலம்பின் உரைதான் தமிழிசைக்கு ஆதாரமாக இன்றும் இருக்கிறது. கடைசியாகக் கரூரில் வாழ்ந்த சேர மன்னர் குலசேகர ஆழ்வார். பொற்காலம் அது. ஆனால், தற்காலம்??!!

பாரதிதாசன் கண்ட தமிழ்க்கனவும், கரூரில் தமிழர் நனவும் அவர் பாடலை நினைவூட்டுகிறது.

தமிழ்க் கனவு - பாரதிதாசன்
Reply all
Reply to author
Forward
0 new messages