நிரஞ்சன், காற்று = கால்+து எனப் பிரிக்கலாமா எனக் கேட்டார். கால் என்பதுதான் வேர். அதெபோல, பதலை என்ற தாளக்கருவியைப் பார்க்கலாம். படபட/பறபற என்ற அதிர்வுகளால் ஒலி ஏற்படுத்துவது. எனவே, பறத்தல் என்ற வினைச்சொல் பிறந்தது. பறவை. பறை என்றால் பறவையின் இறகு, தாளக்கருவி. கடவு > கதவு, கடம்ப > கதம்ப ... போல, படலை > பதலை - வளைநா ஒலியை இழந்து ஏற்பட்டதா என்ற கேள்வி உண்டு. ஆனால், அதைவிட பத்- என்ற மூலமே பதலை என்னும் தாளக்கருவியின் பெயர் ஆகும்.
பதல்+து - பதறு. பதல்- > பதலை. மிக வலிமையான ஓசை எழுப்பாது, சற்றே மெலிந்து நடனத்திற்கு ஏற்ப ஒலியெழுப்பும், ஜோடியான ஒருமுகப்பறை. பதலை - தபலை : இடவல மாற்றம் (Metathesis). முதலில் இதனைச் சொல்லியவர், தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை (திருப்புகழ் பதிப்பில்). அடுத்து, நீண்ட கட்டுரை: மயிலை சீனி. வேங்கடசாமி.
பதலை - சங்க காலத் தாளக் கருவி. tabla.
The ancient name for tabla is *patalai* in Sangam Tamil texts, 2000 years ago. By metathesis, it becomes *tapalai* (pronounced as tabalai), may be as a catalyst Arabic (or Persian) word would have worked.
Terracotta monkey (mask on a man?) playing tabla (तबला). Kushana period from Sirsa, Haryana
https://twitter.com/chronicle_watch/status/1665330073476685824More later, N. Ganesan