ஸ்ரீவீரபாண்டியதேவர் ஆண்டு 14ஆவது துலுக்கர் பூசலில் பட்டார்

9 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jun 24, 2024, 6:01:34 AM (12 days ago) Jun 24
to வல்லமை, hiru thoazhamai
அலாவுதின் கில்ஜி மாலிக்காபூர் காலங்களில் எல்லாம் சிங்கள அரசர்களாக இன்று சுட்டப்படும் பரம்பரையினர் பெண்கள் தீப்பாய்ந்ததில்லை. ஆனால் குடிப்படைத்தலைவரான அடாதெல்லா ராகுத்தரின் தேவி மல்லணா தீப்பாய்ந்துள்ளார். தென்காசி நெல்லை குமரி கொற்கை மாவட்டங்களில் பல தீப்பாய்ந்த அம்மன் கோவில்கள் உண்டு. ஆனால் பாண்டியர் கால கல்வெட்டிலேயே இந்த செய்தி கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பு. கல்வெட்டில் உள்ளதை நான் கீழ்வருமாறு படிக்கிறேன்.
ஸ்ரீவீரபாண்டியதேவர் ஆண்டு 14ஆவது துலுக்கர் பூசலில் பட்டார் அடாதெல்லா ராகுத்தர் இவருடைய தேவியார் மல்லணா தேவியார் இவூரிலே தீய்ப்பாய்ஞ்சார்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள அவிரியூர் கிராமம் சிவன் கோயில் அருகே இக்கல்வெட்டு உள்ளது. மேலும் விழுப்புரம் கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியர் ரமேஷூம் இக்கல்வெட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார். எங்கள் இருவர் வாசிப்புல் சிற்சில வேறுபாடுகள் உள்ளன. இவை வழக்கமானதே.
குறிப்பா பத்மாவதி பற்றியும் குலசேகர பாண்டியன் கொலை செய்யப்படவில்லை என்ற எனது Youtube Twitter பக்கங்களில் பதிந்துள்ள செய்திகளுக்கும் இது வலு சேர்க்கிறது. இந்த கல்வெட்டில் பல வியக்க வைக்கும் தகவல்கள் உள்ளன. குலசேகர பாண்டியன் பற்றி நான் வெளியிடாத செய்திகளும் சில உள்ளன. அது போகப்போக தெரியும்.

வீரபாண்டியன் 1309 இல் முடி சூடினான் என்றால் இந்த நிகழ்வு 1323 இல் நடந்துள்ளது. அபிதெல்லா ராகுத்தர் என்று படிக்க வேண்டும். மல்லண தேவி அரச குலத்தவர் ஆகலாம். அபிதெல்ல மாலிக்கபூர் படையெடுப்பில் இசுலாமியராக மாற்றப்பட்டிருக்கலாம்.

image.png
Reply all
Reply to author
Forward
0 new messages