இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் திரு ருத்ரா.

1,649 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 1, 2015, 12:09:09 AM6/1/15
to mintamil, vallamai
நெடுநாளைய நண்பர், உணர்ச்சிக்கவிஞர், தணியாத தமிழ் ஆர்வலர், ருத்ரா என்ற
புனைப்பெயராளர், இனிய தோழர் திரு இ.பரமசிவம் அவர்களுக்கு மனமார்ந்த
பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சுற்றமும் நட்பும் மகிழ வாழ்க வளத்துடன்!

குழுமங்களில் தொடர்ந்த சிறப்பான பங்களிப்பை எதிர்நோக்குகிறேன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Innamburan S.Soundararajan

unread,
Jun 1, 2015, 12:15:20 AM6/1/15
to vall...@googlegroups.com, mintamil
ருத்ர தாரி திரு இ.பரமசிவம் அவர்களுக்கு மனமார்ந்த
பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாடுக! பாடுக! பாடுகவே!










இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com
> --
> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.

Anna Kannan

unread,
Jun 1, 2015, 12:18:09 AM6/1/15
to Vallamai
வெள்ளம் போல் கற்பனை ஊற்றெடுக்க, செவ்வியல் வேர்களில் விஞ்ஞானக் கிளை விரிக்கும் இனிய கவிஞர் ருத்ரா, நீடூழி வாழ்க நிறைவுடன், நித்தியப் புன்னகை ஒளியுடன்.

coral shree

unread,
Jun 1, 2015, 1:45:28 AM6/1/15
to மின்தமிழ், vallamai
அன்பினிய கவிஞர் ருத்ரா ஐயா அவர்களுக்கு,

மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

அன்புடன்
பவளா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

shylaja

unread,
Jun 1, 2015, 1:56:58 AM6/1/15
to mintamil, vallamai
தமிழ் உங்களுக்கு  ஒரு சர்க்கரை சமுத்திரம்
அமிழ்தாய்க் கவிதைதரும் அட்சய பாத்திரம்!
தமிழ்போல் வளர்க,தரணியில் மேலும் புகழ் பெறுக!
இனிய வாழ்த்துகள் கவிஞருக்கு!


 
அன்புடன்
ஷைலஜா

//காற்றினைப் புனலைத் தீயைக் கடி மதிள் இலங்கை செற்ற
ஏற்றினை இமயமேய எழில் மணித்திரளை இன்ப
ஆற்றினை அமுதம் தன்னை அவுணர் ஆருயிரை உண்ட
கூற்றினை குணங்கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே/
திருமங்கை ஆழ்வார்


துரை.ந.உ

unread,
Jun 1, 2015, 2:19:45 AM6/1/15
to வல்லமை, mintamil
ருத்ராவின் கைபட்டால் காற்புள்ளி யும்ஆடும்
உக்கிரத் தாண்டவம் ஒன்று

விஞ்ஞானம் மெய்ஞானம் கோர்த்துத் தருவாராம்
அஞ்ஞானம் கொல்லும் கவி

வாழ்க ஐயா 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

KAVIRI MAINDHAN

unread,
Jun 1, 2015, 2:57:14 AM6/1/15
to vallamai
ஒன்றிரண்டு கண்கள் .. என்றபடி இறைவன் 
உவந்தளித்த உயிர்கள்..உலவுகின்ற உலகம்..
ஒன்றிரண்டு கரங்கள் .. என்றபடி கடவுள் 
கருணைசெய்த வகையில் வாழுகின்ற மனிதன்..
சிந்தனையின் எல்லை மட்டும் அவரவர் இஷ்டம் 
என்றவனின் உள்நோக்கம் இதுவரை புரியவில்லை..
ருத்ராவின் கவிதைகளில் தாண்டவங்கள் பார்த்தபோதே..
அக்டோபஸ் கரங்கள்.. அலைபாயும் நெஞ்சம் ஒருசேரும் நிலையில் 
இதுபோல எழுத இவராலே முடியும் என்பதைக் காணுகிறோம்!
விஞ்ஞான வேர்கள் தொட்டு விளைகின்ற கருத்துக்களும் 
மெய்ஞானம் கண்டவராய் வரைகின்ற வரிகளுமே..
மனிதவடிவில் ஒரு அக்டோபஸ் என்று சொல்லத் தோன்றுதே..
இவர் பிறந்த நாளின்று .. இதயம் நிறைய வாழ்த்துவோம்..

காவிரிமைந்தன் 

On Mon, Jun 1, 2015 at 8:17 AM, Anna Kannan <annak...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (annak...@gmail.com) Add cleanup rule | More info

வெள்ளம் போல் கற்பனை ஊற்றெடுக்க, செவ்வியல் வேர்களில் விஞ்ஞானக் கிளை விரிக்கும் இனிய கவிஞர் ருத்ரா, நீடூழி வாழ்க நிறைவுடன், நித்தியப் புன்னகை ஒளியுடன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.




--
கவிஞர் காவிரிமைந்தன் 
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் 
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் 
பம்மல்,  சென்னை 600 075
தற்போது - அபுதாபி - அமீரகம் 
00971 50 2519693
00971 50 4497052

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 1, 2015, 8:45:12 AM6/1/15
to mintamil, vallamai

வணக்கம் ஐயா.
பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
காலமெல்லாம் கவிதைகள் எழுதி கவலையில்லாமல் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Jun 1, 2015, 10:02:32 AM6/1/15
to vallamai
விஞ்ஞானக் கவிஞர் ருத்ராவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வித்தகக் கவிஞர் ருத்ரா பிறந்தார்
விஞ்ஞானக் கவிஞர் ருத்ரா பிறந்தார்
சித்தாந்தம் பொழியும் ருத்ரா பிறந்தார்
கவிமழை பொழிந்து இடிமின்ன லாய்
புவியில் பிறந்தார், போற்றுவோம் புலவரை.

சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

rajam

unread,
Jun 1, 2015, 10:15:48 AM6/1/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com
கவிஞர் திரு ருத்ரா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து.

அன்புடன்,
ராஜம்

[கொசுறு: உங்களூர் என் பாட்டிக்கும் ஊர் என்று நினைக்கிறேன்.]

Megala Ramamourty

unread,
Jun 1, 2015, 11:18:21 PM6/1/15
to vallamai, மின்தமிழ்
முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் (பரம்பொருள்) சிவனாரைப் போல, நம் ருத்திர சிவனாரின் கவிதைகளும் பழமைக்கும் புதுமைக்கும் பாலம் கட்டி ஜாலம் புரிபவை!

ஒருபுறம் குறும்பாவில் குறும்பாய்க் கண்சிமிட்டுவார்; மறுபுறம் நெடுந்தொகைக்கு (அகநானூறு) இணையாய் நெடிய கவிதைகள் தீட்டுவார்.

சவ்வூடு பரவலைச் சரிபார்த்துக்கொண்டே காப்பியாற்றுக் காப்பியனாரோடு கைகுலுக்குவதும்; குவாண்டம் மெக்கானிக்ஸை சிந்தித்தபடிப் பாலைவழியில் தலைவனோடு பயணம் செய்வதும் நம் சிவனாருக்கு மட்டுமே சாத்தியப்படுபவை!  :-)

சிந்தனைக்கு விதை தூவும் கவிதைகள்; வந்தனைக்குகந்த புதிய சிந்தனைகள்...இவையே கவிஞர் ருத்ரா!

பிறந்தநாள் காணும் எங்கள் அன்புக் கவிஞருக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்!
வாழிய தமிழ்போல்!


அன்புடன்,
மேகலா

Tthamizth Tthenee

unread,
Jun 1, 2015, 11:31:02 PM6/1/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ஆழமான சிந்தனை உடைய  கவிஞர்  ருத்ரா அவர்களுக்கு   இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




paramasivan esakki

unread,
Jun 2, 2015, 3:36:42 AM6/2/15
to vall...@googlegroups.com

எனது பிறந்தநாளை முன்னிட்டு என்னை வாழ்த்திய‌
எல்லா அன்பு நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி


============================================================


திரு.சொ.வினைதீர்த்தான் அவர்களே

சிறு சொல் ஒன்று நீங்கள் உதிர்த்தாலும் 
தமிழ்க்கடல் அதிலே ததும்பி நிற்கும்.
ராமாயணத்தை கம்பன் எழுதினான்..ஆனால்
கம்பரை காரைக்குடி அன்பர்கள் அல்லவா
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
கோவில் படிக்கட்டுகளையே
"படி"க்கட்டுகளின் பல்கலைக்கழகம் 
ஆக்குகின்றீர்கள்.



திரு.விஞ்ஞானத்தமிழ் வித்தகர் அவர்களே

ஜெயபாரதனார் எனும் நாஸா விண்கலம்
அண்டச் சுற்றுலா அற்புதம் காட்டும்.
உங்களது விண்ணுலவி காலவெளியின்
"நெய்தல்" தமிழை விரித்துக்காட்டும்.
எதிர் அடுக்கில் ப்ளாங்க் மாறிலி
முப்பத்தஞ்சு பவர் தாண்டிய போதும்
தெரியும் "நுரைக்குவாண்டம்"பற்றியும்
பக்கம் பக்கமாய் பந்தி விரிப்பீர்களே.

திரு.இன்னன்பூரான் அவர்களே

சரித்திரத்தின் சந்து பொந்துகளில்
நாங்கள் தடுக்கி விழுவது 
நீங்கள் நட்டுவைத்த மைல்கற்களே.
சம்பவங்களின் நாக்கைப்பிடித்து பல்லைபிடித்து
நீங்கள் நாடி பார்க்காத விஷயமே இல்லை.
கோஹினூர் வைரம் பட்டை தீட்டும்போது
பக்கத்தில் இருந்து கதிரியக்கம் காட்டுவீர்கள்.

திரு.அண்ணாகண்ணன் அவர்களே

குறுக தரித்த உங்கள்அகமொழிகளே
அகிலம் திறந்து "வாய்"(மை)காட்டும்.
இணையவழிப் பின்னல் ஆடையில்
உங்கள் இதயநட்பின் நுண்மைஒலியை
உற்று நாங்கள் கேட்கின்றோம்.


திருமிகு.பவளசங்கரி அவர்களே

பயணம் போகும் படைப்பாளிகளுக்கு
தமிழ்ப்பவளத்தீவின் 
கலங்கரை விளக்கம் நீங்கள்.
"வல்லமை"யின் சாதனை வியப்பில் ஆழ்த்தும்.
அந்த "ஆறு" என்பது எண்ணிக்கை அல்ல.
அது ஒரு "கடல்" அதன் அலைகளுக்கும்
எண்ணிக்கை இல்லை.



திருமிகு சைலஜா அவர்களே

வளையல் ஒலிக்கும் உங்கள் எழுத்துக்களில்
புதுயுகத்து வாசல்கள் கோலம் போட்டன.
குங்குமச் செப்பு என்பது
சீறும் பெண்ணியத்தின் "திகார்"அல்ல‌
என்று உங்கள் சூடுமிகுந்த 
கவிதைவரிகள் எல்லாம் சூடுபோட்டதை
யாரும் மறக்க இயலாது.


திருமிகு ராஜம் அவர்களே

கல்லிடைக்குறிச்சியின் "மவுண்ட் ரோடே"
அந்த வீரப்புரம் தானே!
நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள் என‌
நினைக்கிறேன்.
தாமிரபரணியா அது? 
பளிங்குத்தொப்பூள் கொடி அல்லவா?
உலகமே அதில் சுற்றிக்கிடக்கும்
ஒரு அகத்தியத் தமிழின் வாசனையை
உணர்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

திரு.காவிரிமைந்தன் அவர்களே

ஒரு சினிமாப்பாட்டை 
தோண்டிக்காட்டினாலும்
இனிய‌"கிம்பர்லியின்"
வைரங்கள் காட்டுகின்றீர்.
உங்கள் "தமிழ்த்தேர்" வடத்தின் நீளம்
தமிழ் எழுத்துக்களால் முறுக்கப்பட்ட‌
பல்லாயிரம் மைல்கள் அல்லவா?


திரு.துரை ந.உ அவர்களே

ஒலி கொடுத்தால் வழிகிடைக்கும்
என்பார்களே
அந்த "ஒளியையும்" மறித்து ஓடும்
"ஒளி படைத்த (விழி லென்சின்) 
கண்ணினாய்" அல்லவா நீங்கள்!


திருமிகு.மேகலா ராமமூர்த்தி அவர்களே

எனக்கு சங்கத்தமிழ் ஊற்றுக்கண்ணின் 
அடி ஊற்றாக அடியெடுத்துக்கொடுத்தவர் 
நீங்கள்.
அந்தக்காப்பியாற்றுக்காப்பியனாரை
மறக்க இயலாது


திரு காளைராஜன் அவர்களே

கல் தொன்றி மண் தோன்றா
அந்த நெடுங்காலத்தின்
தமிழ் ஒலிப்பு நாடி நரம்புகளை
யாழ் மீட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
சிவன் தமிழை ஒலித்தபோது
சமஸ்கிருதம் கேட்டது.
சிவன் சமஸ்கிருதம் என்றபோது
தமிழே நமக்கு கேட்கிறது.
உங்கள் காலடிகள் காசிவரை
அதிர்ந்தது கேட்டோம்.
ஆத்மீக தமிழில் உங்கள் ஆராய்ச்சி
ஆதித் தமிழின் வேர் ஊடிச்செல்லும்.

திரு.தமிழ்த்தேனீ அவர்களே

இணையத்தில் 
உங்கள் சிறகு விரிக்காத பக்கம் இல்லை.
இனிமை "கொட்டாத" எழுத்துக்கள் இல்லை.
ஆய்வுத்தமிழில் உங்கள் தொண்டு
அருந்தொண்டு அறிவார் யாரும்.
அங்கிங்கெனாதபடி எங்கும் ரீங்கரித்து
"காமம் செப்பாது கண்டது மொழியும்
அஞ்சிறைத்தும்பி" அல்லவா நீங்கள்.

=======================================================

அன்பு நண்பர்கள் யாவருக்கும்
தனித்தனியே 
என் நன்றி உரித்தாகட்டும்.

அன்புடன் ருத்ரா

Innamburan S.Soundararajan

unread,
Jun 2, 2015, 5:07:33 AM6/2/15
to vall...@googlegroups.com
பரமசிவம் இசக்கி அவர்களின் சொல்லாக்கத்துக்குக் காப்புரிமை எனக்கு வாங்கிக்கொள்ள ஆசை. அதற்கு அவர் மனதில் உள்ளாட்சி செய்யவேண்டுமே. செஞ்சால் போச்சு. எல்லாரை பற்றியும் வக்கணையாக எழுதியிருக்கிறார். எனக்கு வந்தது படி இயங்க முயல்வேன்.
நன்றி பல,
இன்னம்பூரான்

--

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 2, 2015, 5:43:36 AM6/2/15
to mintamil, vallamai
நண்பரின் நன்றிக்கவிதை பெற வாழ்த்திக்கொண்டேஏஏஏ இருக்கலாம் :))

நன்றி.

Sk Natarajan

unread,
Jun 2, 2015, 10:10:11 AM6/2/15
to mintamil, vallamai
இனிய பிறந்த நாள் நல்  வாழ்த்துகள் ஐயா 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்


ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jun 2, 2015, 11:06:02 AM6/2/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com
மிக்க நன்றி அன்புள்ள திரு.சா.கி.நடராஜன் அவர்களே

இணையத்தில் 
தமிழுக்கும் ஒரு பறவைக்கண்ணோட்டம் (பேர்ட்ஸ் ஐ வியூ) கிடைத்தது 
தங்கள் இலக்கிய உந்துதலால்.
அந்த தமிழ்ச்சிறகுகள்
எத்தனை பேனாக்களின் வானம் சுமந்தது.
உங்கள் தொண்டு தொடரட்டும்.

அன்புடன் ருத்ரா

வித்யாசாகர் (Vidhyasagar)

unread,
Jun 3, 2015, 12:26:01 AM6/3/15
to vall...@googlegroups.com, mintamil
அவருக்கு பேசுவதே கவிதையாக கைவரப்பட்டுவிட்டது ஐயா.. இனி வாழ்த்தைச் சொன்னால் கவிதைக்காகச் சொன்னதாக இருக்குமோ என்று விட்டுவிட்டேன்; மனதென்னவோ நம்ம விஞ்ஞானி ஐயா போட்டபோதே மகிழ்ச்சியோடு வாழ்த்தியும் அந்த நாளுக்கு நன்றியறிவித்தும் கொண்டது.. 

ஆனாலும் எல்லோரையுமளக்கும் ருத்ரா ஐயாவை எப்படி அளப்பது. என்னைக் கேட்டால் அது எல்லையற்று பரந்து விரிந்த வானம்போல, சட்டென இசையோடு தாளத்தோடு சோவெனப் பெய்யும் மழைபோல வந்துவிழும் அற்புதக் கவிதையின் லயம் அவர்..

மென்மையின்
வீரியத்தின்
ஆழத்தின்
ஞானத்தின் 
பொன்னெழுத்தால் எதிர்காலம் பொறித்துவைத்துக்கொள்ள வேண்டிய பொக்கிசமது; அந்த ருத்ரா எனும் சூரியக் கவிஞனின் பெயர்.. 

வாழ்க..

வித்யாசாகர்

குறிப்பு. இத்தனை எல்லாவற்றையும் நான் படித்துவிடுவதில்லை. என்றாலும் ஒருசிலதைப் படிக்கையிலே அவருடைய எழுத்துமணக்கும் வாசனையை உணரமுடிகிறது.. வாழ்க..


Sent on the go with Vodafone


-------- Original message --------
From: "சொ. வினைதீர்த்தான்"
Date:02/06/2015 12:43 (GMT+03:00)
To: mintamil ,vallamai
Subject: [வல்லமை] Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் திரு ருத்ரா.

நண்பரின் நன்றிக்கவிதை பெற வாழ்த்திக்கொண்டேஏஏஏ இருக்கலாம் :))

நன்றி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான

--

paramasivan esakki

unread,
Jun 3, 2015, 1:13:51 AM6/3/15
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com
அன்புள்ள திரு.வித்யாசாகர் அவர்களே

உங்கள் வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

ஏதோ அது
ஒரு சுடுமணல் தேசம்.
பாறை எண்ணெயின் படர் நாற்றம் கூட‌
பன்னீர் வாசமாகி
டாலர்கள் குவிக்கும் தேசம்.
ஒட்டகங்களுக்கு கூட‌
தங்கக்கொலுசு மாட்டி அழகு பார்க்கும்
வளமான தேசம்.
அந்த மண்ணில் 
நம் தமிழை ஆயிரம் மடங்கு
மணங்கமிழச்செய்யும்
வலிமையுடன்
உங்கள் தொழில் நேர்த்தியும்
வெற்றியின் பெருங்காவியத்தை
நம் தமிழுக்கு எழுதிக்கொண்டிருக்கிறது.
எண்ணெய்ப்பீப்பாய்களின் நடுவிலும்
மின்னலடிக்கும் தமிழ் 
எண்ணப்பாய்ச்சல்களை பரவ விட்டுக்கொண்டிருக்கும்
உங்களுக்கு 
எப்போதுமே என் பாராட்டுகள் தான்.
மீண்டும் என் நன்றி.

அன்புடன் ருத்ரா


N. Ganesan

unread,
Jun 3, 2015, 1:16:13 AM6/3/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Monday, June 1, 2015 at 7:02:32 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
விஞ்ஞானக் கவிஞர் ருத்ராவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கவிஞர் ருத்ரா பல தமிழ்ச் சொற்களைப் பற்றி என்னை எண்ண வைப்பவர்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நா. கணேசன்

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Jun 4, 2015, 10:52:11 PM6/4/15
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி முனவர் திரு.நா.கணேசன் அவர்களே

சங்கத்தமிழ்ச் சொல் ஒவ்வொன்றையும் உங்கள் "வேர்ச்சொல்" ஆராய்ச்சி முறையில் ணங் ணங் என்று தட்டிப்பார்த்தபோது புரிந்தது
அது சிந்து வெளித் "திரை"(கடல்) அதிர்வுகளை உள்ளே வைத்திருப்பது.உங்கள் ஆராய்ச்சி முன்னூற்று அறுபது டிகிரியையும் 
தாண்டிய "ரேய்மான்" வடிவ கணிதத்தைப் போன்றது.

அன்புடன் ருத்ரா

Reply all
Reply to author
Forward
0 new messages