மகளிர் தினம்

28 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 8, 2023, 12:00:41 AM3/8/23
to Santhavasantham
மகளிர் நாள் வாழ்த்து.

மண்ணின் றமையாது மக்கள் உறைவிடம்
விண்ணின் றமையாது வீழ்மழை – எண்ணிடின்
கண்ணின் றமையாது காட்சி; உறுதியாய்ப்
பெண்ணின் றமையா துலகு.

வாழ்த்துகளுடன்,
கவிஞர் இனியன், கரூர்.

பெண்ணில் பெருந்தக்க யாவுள.

N. Ganesan

unread,
Mar 8, 2023, 12:13:09 AM3/8/23
to santhav...@googlegroups.com


On Tue, Mar 7, 2023 at 11:09 PM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:
மகளிர் தினம்
(இருசீரிரட்டைச் சமனிலைச் சிந்து)

ஆணவன் பெண்ணுக்குள் - என்றே
> . ஆதிசிவன் அறிந்தான் - மனத்தின்
> ஆணவம் குறைப்பவளாம் - பெண்ணே
> . அறிவினை விதைப்பவளாம். ... 3

Happy Women's Day!
India's Great Goddess:
Her 4500 years old history from Indus Civilization to Sangam Tamil Age.

தாய்த் தெய்வம் கொற்றவை/கொற்றி - Indian Great Goddess:
------------------------------------------------------------------------
   வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
   இழையணி சிறப்பிற் பழையோள் குழவி! - திருமுருகு.

கொற்றவையும், புலியும் - ஒரு 4500 ஆண்டு காலத் தொடர்பு:
http://nganesan.blogspot.com/2021/05/tiger-durga-indus-cilappatikaram.html

Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur:
Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

Gharial god and Tiger goddess in the Indus valley,
Some aspects of Bronze Age Indian Religion, my paper, 2007
https://archive.org/details/IVCReligionByNagaGanesan2007/page/n5/mode/2up

Paṭṭa-Mahiṣī: Proto-Koṟṟavai goddess in Indus civilization (Banawali and Mohenjadaro)
http://nganesan.blogspot.com/2021/01/banawali-mohenjadaro-proto-durga.html

Indus seal, M-312 - Proto-Koṟṟavai war with Mahiṣa
http://nganesan.blogspot.com/2021/01/m312-seal-is-not-jallikkattu.html

Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts: Dravidian word for Gauṛ bison and Tibetan yak  
http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html


 
ஆனதும் பெண்ணாலே - இந்திரன்
. அழிந்ததும் பெண்ணாலே - காடு
போனதும் பெண்ணாலே - ராமன்
. பொலிந்ததும் பெண்ணாலே. ... 1
காமமும் பெண்ணாலே - உள்ளம்
. கட்டுதல் பெண்ணாலே - வாழ்வில்
சேமமும் பெண்ணாலே - பிள்ளைச்
. செல்வமும் பெண்ணாலே. ... 2
ஆணவன் பெண்ணுக்குள் - என்றே
. ஆதிசிவன் அறிந்தான் - மனத்தின்
ஆணவம் குறைப்பவளாம் - பெண்ணே
. அறிவினை விதைப்பவளாம். ... 3
மகளிர் தினமின்று - அவளால்
. மகிழ்ந்தோம் நாமின்று
மகளிர் தினமொன்றி - வாழ்வின்
. வளங்களைப் பெறுவோமே. ... 4
--குருநாதன் ரமணி, 08/03/2017
*****
All reactions:
Vipranarayanan Tirumalai

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/a48b2d85-ea69-4bbd-82e1-6c7831e1f89dn%40googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 8, 2023, 7:45:29 AM3/8/23
to Santhavasantham
மகளிர் நாள் வாழ்த்து.

மண்ணின் றமையாது மக்கள் உறைவிடம்
விண்ணின் றமையாது வீழ்மழை – எண்ணிடின்
கண்ணின் றமையாது காட்சி; உறுதியாய்ப்
பெண்ணின் றமையா துலகு.

வீரம்மாளின் காளை - குபரா, 1936

வாழ்வில் எது வந்தாலும் எதிர்கொளும் திறன்.

N. Ganesan

unread,
Mar 13, 2023, 9:05:36 PM3/13/23
to santhav...@googlegroups.com
On Tue, Mar 7, 2023 at 11:09 PM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:
மகளிர் தினம்
(இருசீரிரட்டைச் சமனிலைச் சிந்து)


பெண்மையென நன்மைதரும்!

ஓங்கியுயர் விண்முகிலும் தண்மழையைப்  பொழியும்;
    உலவுகின்ற நறுந்தென்றல் மூச்சாகி நுழையும்;
தாங்கிநமை அன்புடனே வாழவைக்கும் மண்ணும்;
     தண்மதியும் காரிருளில் அமுதவொளி மின்னும்;
வீங்கிளைய வேனிலிலே எழில்மலர்கள் சிரிக்கும்;
    வேட்கையினத் தீர்ப்பதற்கு நதிபுனலை விரிக்கும்;
ஈங்குலகில் இவைநல்கும் பயனனைத்தும் கூடி,
      இறைபடைப்பில்  பெண்மையென நன்மைதரும் கோடி!

             -- தில்லைவேந்தன்.


--------------------------------

வேதத்தை ஒத்தவள் பெண்!

****

ஆதியவள் தானே - அட
  அகிலமவள் தானே - நற்
சோதியவள் தானே - இங்கு
  சொர்க்கமவள் தானே!

ஓதுமறை அறிவாள் - அதை
  ஓதி மகிழ்ந்திடுவாள் - வரும்
தோதும் அறிந்திட்டே - தமிழ்
  தொன்மை புகட்டிடுவாள்!

தேசம் பெரிதென்பாள் - அதன்
   தேவை உணர்த்திடுவாள் - உள
மாசை அகற்றிட்டு - வெண்
   மதியா யாக்கிடுவாள்!

பாசம் மிக்கவளாம் - நற்
  பண்பு வளர்ப்பவளாம்
வாச மலரைப்போல் - அவள்
  வாழ்வில் மலரச்செய்வாள்!

அன்னை, மகள்,மனையாள் - உடன்
  அக்கா தங்கைமற்றும் - நம்
அன்புத் தோழியாகி - உலகை
  ஆள்வாள் பெண்ணன்றோ!

பெண்ணைப் போற்றிடவே - இந்த
  புவனம் விளங்கிடுமே - தூய
வெண்ணைபோல் மனத்தாள் - அவள்
  வேதத்தை ஒத்தவளே!

~ சுரேஜமீ
08.03.2023 பிற்பகல் 12:22
இனிய மகளிர் தின வாழ்த்துகள்!

----------------------

உலக மகளிர் தினக்
         கவிதை.
********
தமிழால்
           மணப்போம்
தமிழால்
             உயர்வோம்!
 ********
(ஆறு கட்டளைக்
          கலித்தொகை கள்
               அந்தாதியாக)
  _________

கோல
   மயிலெனக்
      கோல
         மிடுதமிழ்க்
            கொற்றவையே
ஞாலம்
   உனதென
      நாளும்
         புகழ்தொடு
            நற்றமிழே!
சூழும்
   பகைமுடி
      சூடு
         மணிமுடி
            சொல்வனமே
ஆளும்
   தமிழென
      ஆன்று
         முரசொலி
            அன்பகமே!

அன்பகம்
   துள்ள
      அறிவெழில்
         கொள்ள
            அணியணியாய்
மண்ணகம்
   சீருற
      மாண்புகழ்
         மேலெழ
            ஓர் குரலாய்
கண்ணில்
   ஒளியொடு
      காலத்
         துணையொடு
            கட்டறுப்பாய்!

விண்ணை
   உடைத்தெடு
      வேற்றுமை
         சாய்த்திடு
            வேல் விழியே!

விழிதுயி
   லாமல்
      விடியலைத்
         தேடி
            விரைந்திடுவாய்
பழிகள்
   சுமந்திடப்
      பண்பா
         ளரைப்போல்
            பளபளத்தே
கழிசடைத்
   தேர்வலம்
      காமுகர்
         ஊர்வலக்
           காட்சிகளை
வழித்தெடுத்
   தோட்டிடு
      வாதமிழ்த்
         தோழியே
            வார்ப்படமே!

படமெடுத்
   தாடிடும்
      பாம்பின்
         அழகில்
            மயங்கிடுவாய்
உடன்பட்
   டொருவி
      உனதெழில்
         கூறி
           உயர்த்திடுவார்
மடம்பயிர்ப்
   பென்றே
      வருணனை
         யாலுனை
            வாழ்த்திடுவார்
குடத்துள்
   விளக்காய்க்
      குணநலன்
         போற்றியே
             வீழ்த்திடுவார்!

வீழ்ந்து
   கிடந்தது
      போதும்
         எழுந்திரு
              வீறுடனே
சூழ்ச்சிகள்
   ஆயிரம்
      தூக்கி
         எறிந்திடு
            தோகையென
வாழ்க்கையின்
   வாசல்
      வழித்தடம்
          வந்திடும்
             காலடியில்
ஊழ்வினை
   என்பதை
      ஓட்டி
        ஒழித்திடு
            ஒண்தமிழே!

தமிழாய்
   மலர்வாய்
      கிழக்காய்ப்
         புலர்வாய்
            கிளிமொழியே!
அமிழ்தமிழ்
   தென்னத்
      தமிழ்மொழி
         வந்திடும்
            தாரகையே
குமிழ்விட்
   டுணர்வுடன்
       கூடி
         எழுவாய்
            குறள் நெறியே
தமிழால்
   மணப்போம்
      தமிழால்
         உயர்வோம்
            தலைமைகளே!
*********
   பூவரசிமறைமலை.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


 
ஆனதும் பெண்ணாலே - இந்திரன்
. அழிந்ததும் பெண்ணாலே - காடு
போனதும் பெண்ணாலே - ராமன்
. பொலிந்ததும் பெண்ணாலே. ... 1
காமமும் பெண்ணாலே - உள்ளம்
. கட்டுதல் பெண்ணாலே - வாழ்வில்
சேமமும் பெண்ணாலே - பிள்ளைச்
. செல்வமும் பெண்ணாலே. ... 2
ஆணவன் பெண்ணுக்குள் - என்றே
. ஆதிசிவன் அறிந்தான் - மனத்தின்
ஆணவம் குறைப்பவளாம் - பெண்ணே
. அறிவினை விதைப்பவளாம். ... 3
மகளிர் தினமின்று - அவளால்
. மகிழ்ந்தோம் நாமின்று
மகளிர் தினமொன்றி - வாழ்வின்
. வளங்களைப் பெறுவோமே. ... 4
--குருநாதன் ரமணி, 08/03/2017
*****
All reactions:
Vipranarayanan Tirumalai


On Wednesday, March 8, 2023 at 10:30:42 AM UTC+5:30 N. Ganesan wrote:
--
Reply all
Reply to author
Forward
0 new messages