Re: [தமிழ் வாசல்] ராமனைப் போல..!

339 views
Skip to first unread message
Message has been deleted

Innamburan S.Soundararajan

unread,
Dec 28, 2013, 6:25:07 AM12/28/13
to thamizhvaasal, min tamil, vallamai
முக்கியமாகக் கால் ஆடக்கூடாது… 
~ அப்படித்தான் நானும் ஒரு தடவை மாட்டிக்கொண்டேன். சரி. திசை மாற்றியது போதும்.
இது இன்றைய சூழ்நிலையில் முக்கியமான பதிவு. இந்த வினா விடை யுக்தியை ஆசி'றி'ய பெ'று' மக்கள் கை விட்டதால் தான் தமிழ்நாடு மண்டுக்கள் மயம்.

அன்று ஒரு நாள். திருச்சிராப்பள்ளியில் சேஷாத்திரி ஐயங்கார் என்ற முன்கோபி அமைதியாக வாழ்ந்துவந்தார். அவருக்கு செளந்தரராஜன் என்ற ஒரு வாய் துடுக்குப்பையன். வாத்தியார் கேள்வி கேட்டதற்கு பிரப்பம்பழம் கொடுத்து விட்டார். பையர் வாத்தியாரை அறைந்து விட்டார். டிஸ்மிஸ்ட். சேஷாத்திரி ஐயங்கார் கிட்டங்கிடுகிடுவென்று பள்ளிக்கு விரைந்து, தலைமை ஆசிரியரிடன், 'நானாக இருந்தால் இரண்டு கன்னத்திலும் அறைந்திருப்பேன். அவன் சாது' என்றாராம். டிஸ்மிஸ் வாபஸ். பிற்காலம், அந்த பையர் ராஜாஜிக்கு வேண்டியவர் ஆனார்.
அன்புடன், புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,
இன்னம்பூரான்



2013/12/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஸ்ரீ ராமர் என்னும் இலக்கிய நாயகனை மானிட இலட்சியமாக முன்னிறுத்தப்ப்ட்டு வளர்க்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து வளர்ந்தவன் என்னும் போது எனக்கு ஸ்ரீ ராமரின் பாத்திரப்படைப்பைப் புரிந்து கொள்வதில் சில ஐயங்கள் எழுகின்றன. 

ராமனாக இரு. ராமனைப் பார். ராமனைப் போல் நட. ராமனின் குணங்கள் மானிடப் பொதுமையானவை. இப்படிச் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்டுப் போன சூழ்நிலைகளில் வளர்ந்தவனுக்குத் தன்னைப் போல் ராமன் என்றாலே ஓர் ஆண்மகன் குடும்பத்தில், தெருவில், நாட்டில் சமுதாயத்தில், பெண்களிடம், மனைவியிடம் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று போதிக்கப்படுகிறோமோ அங்கெல்லாம் ராமனைப் பற்றிய குறிப்பு சொல்லியோ, சொல்லாமலோ வந்துவிடும். 

ஸ்ரீ ராமனைப் பரம்பொருள் என்றும் அவதாரம் என்றும் பார்க்கும் பக்திப் பார்வைகளின் பாதை வேறு. துளஸிதாஸ், ஸ்ரீவைணவ ஆசாரியர்கள் என்று பக்தியின் நூலாக ராமாயணத்தை அணுகுவது வேறு. ஆனால் மனித வாழ்க்கைக்கு, மனிதனுக்கு முன்னால் நிறுத்தப்படும் இலட்சியம் என்று பார்த்தால் எப்படி ராமனைப் புரிந்து கொள்வது, புரிந்து கொண்டால் அந்த ஆதர்ச உருவத்தை விமரிசிக்காமல் இருக்க முடியுமா, விமரிசித்தால் அந்த இலட்சிய கருத்தாக்கம் மிஞ்சுமா, வாழ்க்கையோடு ஏதேனும் பொருந்துவதாக இருக்குமா, நாம் அறிவும் அன்பும் கொண்ட மனிதராக சக மனிதர்களோடு கலந்து பழக அது தகுந்த மூல படிவத்தை நமக்குத் தர இயலுமா? இந்த விஷயங்களைப் பற்றிய என் புரிதல்களை எழுதலாம் என்று எண்ணம். 

பக்திப் பார்வை கொண்டவர்களோடு எனக்குப் பிணக்கம் இல்லை. அது தனி பாதை. அதை நானும் ரசிக்கிறேன். ஆனால் மனித வாழ்க்கைக்கு இலட்சியம் என்று கொண்டு வந்து என் சிறுவயது முதல் கொடுக்கப்பட்டமையாலும், இன்றும் வளரும் சமுதாயத்திற்குக் கொடுக்கப்படுகின்றமையாலும் மானிட இலட்சியம் என்ற விதத்தில் அந்தப் பாத்திரப் படைப்பைப் புரிந்து கொள்ள முயலும் போது எனது சிக்கல்கள் என்ன என்பதைக் கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றுகிறது. 

ஸ்ரீ ராமாயணத்தைப் படிக்கும் போது, அதாவது அதை esoteric, mystic text ஆக அல்லாமல் நடைமுறை வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை போதிக்கும் அற வழிகாட்டியாக, practical ethics ஆகப் படிக்கும் போது ஸ்ரீ ராமன் தான் ஓர் ஆண்மகன் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டிய முன் மாதிரியாக நிறுத்தப்படுகிறார். 

சிறு வயதில், அதாவது எலிமெண்டரி ஸ்கூலில் 3ஆவது படிக்கும் பொழுது வரத வாத்யார் என்று ஓர் ஆசிரியர். அவர் ஒரு வகுப்பில் பாடம் நடத்தும் போது மாதாவே தெய்வம், மாத்ரு தேவோ பவ, பிதாவே தெய்வம், பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ, குருவே தெய்வம் என்றெல்லாம் சொல்லி வந்தார். கேட்டுக் கொண்டோம். இனிமேல் அப்பா அம்மா கிட்ட அடம் பண்ணக் கூடாது. சமத்தா இருக்கணும். வாத்யார் கிட்ட நல்ல பேர் வாங்கணும் என்றெல்லாம் தோன்றியது. மாலை மாரல் இன்ச்ட்ரக்ஷன் வகுப்பு. நன்னெறிக் கதைகள் சொல்கிறேன் என்று ஆரம்பித்தவர் பிரகலாதன் கதையைச் சொன்னார். ஆர்வமாக அனைவரும் கேட்டோம். ஆனால் என் போதாத காலம். மண்டையில் ஒரு குறுகுறுப்பு. வேறு என்ன? கேள்விதான். 

சார்! என்று கையைத் தூக்கினேன். போ போய்ட்டு சீக்கிரம் வா. என்றார். இல்லை சார் ஒரு கேள்வி என்று மென்று முழுங்கினேன். என்னது? என்றார். பக்கத்துப் பையன்கள் எல்லாம் ஒரே குரலில் கேள்வி கேட்கணுமான்சார் என்றார்கள். 

என்ன கேள்வி...என்றார். 

எனக்குக் குலை நடுக்கம். இருந்தாலும் ஒருவழியாகக் கேட்டு முடித்தேன். 

இல்ல சார். காத்தாலதானே சொன்னீங்க... மாதாவே தெய்வம் மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ ஆசார்ய தேவோ பவன்னு. அப்படீன்னா பிரகலாதனும் அவன் அப்பா அம்மா ஆசிரியர்கள் சொன்னதைக் கேட்டு நடந்துக்காம ஏன் சார்  முரண்டு பண்ணினான். அவனை தெய்வம் தண்டிக்காம ஏன் சார் காப்பாத்திச்சு? அப்ப அவன் வேதக் கட்டளையை மீறினான்னு தானே சார்..... 

பையன்கள் சிரிக்கத்.......தொடங்கவில்லை...அதற்குள் எனக்குக் கைமேல் பலன் கிடைத்தது.... ஆமாம் நன்கு பழுக்கக் காய்ச்சிவிட்டார். அன்று அவருடைய மழு மழு என்ற ஒல்லியான பிரம்பிற்கும் தான் பிறவி எடுத்த முழுப்பலனும் கிடைத்தது. எனக்கோ வெட்கம்...வலி...ஆத்திரம்...பயம்... கொன்று விடுவாரோ என்ற பீதி.... 

ஆனால் பையன்கள் சிலரைச் சுமம சொல்லக் கூடாது. கிலாஸ் விட்டதும் நேரே போய் தலைமை ஆசிரியரிடம் சொல்லிவிட்டார்கள். அவர் கூப்பிடுகிறார் என்றதும் எதற்கு என்று தெரியவில்லை... ஐயோ அவர் வேறு போட்டுத் தாக்கினால் என்ன பண்ணுவது என்று அப்படி போகிறா மாதிரி நழுவி வீட்டுக்கு ஓடிவிட்டேன். வீட்டில் அம்மா சுடச்சுடக் காப்பி குடுக்கும் போது மாட்டிக்கொள்ளத் தெரிந்தேன். சட்டென்று தொட்டதும் கை வலி ப்ராணன் போய்விட்டது. என்னடா கையைக் காட்டு என்றார். அது சும்மாம்மா கீழ விளையாட்டுல பட்டுது என்று ஓடிவிட்டேன். மனத்திற்குள் ஒரு உறுத்தல்... ஐயோ அப்பா வருவாரே ஆபீஸிலிருந்து.. அப்பொழுது எப்படிச் சமாளிப்பது...அவரோ ஸ்காட்லண்ட் யார்ட் தோற்றது... அப்படி ஒரு துப்பு துலக்கல்.... 

ஏதோ சமாளித்து விளையாடி வீட்டுக்கு லேட்டாகப் போய், கண்ணில் படாமல் நழுவி, அரைகுறையாக வாயில் போட்டுக்கொண்டு, படிக்கிறா மாதிரி பாவனை, கண்கள் குளமாக என்ன தப்பு செய்தோம்? ஏன் இந்த தண்டனை? சொன்னது அவர். அது ஏன்னு கேட்டது தப்பா? என்று குமுறி வரும் ஆத்தாமைகள்...அப்படியே அந்த வலி, அந்த துயரம் அதிலேயே தூங்கிவிட்டேன். நெடு நேரம் கழித்து சட்டென்று முழிப்பு...ஒன் பாத்ரூம் போய் வந்தால் தேவலை போல்... ஆனால் அப்பாவும் அம்மாவும் பேசும் குரல்.... என் பேர் அடிபட்டது... அவ்வளவுதான் இறுக்கக் கண்ணை மூடிக்கொண்டு நல்ல தூக்கம் போல்.. முக்கியமாகக் கால் ஆடக்கூடாது... 

காதில் விழுகிறது....அதானா ஏண்டான்னு கேட்டதுக்கு விளையாட்டுலன்னான்....அடப் பைத்தியமே சொலலாதோ.. போய் அந்தப் பாழும் மனுஷனை நாலு வார்த்தை....இல்லல்ல அதை விடு அப்படியே... வரும் போது அந்த வாத்யாரே கூப்பிட்டார்... தயங்கித் தயங்கி... நீங்க சொன்னா கோவிச்சுக்கக் கூடாதுன்னு ஆரம்பிச்சார்.....என்னான்னு கேட்டேன்... இல்லை கொழந்தையை நான் ஒரு மடையன் ரொம்ப அடிச்சுட்டேன்....ஏதோ மன வருத்தம் என் சொந்த விஷயம்... பாவம் அவன் மேல தப்பு இல்லை... சும்மாதான் கேட்டான்...பின்ன கேட்கலைன்னா எதுக்கு நடத்தறோம்...ஏன் என்ன நடந்தது... நீங்க வாத்யார்... நீங்க கண்டிக்கறதுஇக்கு உங்களுக்கு உரிமை இல்லையான்ன...இல்லை அது சரி.... ஆனால் எனக்கே மனசு கேட்கலை...உங்களைப் பார்த்து சொல்லலைன்னா தூக்கம் வராது பொல்ல இருந்தது... பையன் நன்னா வருவான்... புத்தி சூக்ஷுமம்... ஆனால் கொஞ்சம் அவனைச் சொல்லி வைங்கோ... அப்படி எல்லார் முன்னாடியும் கேட்க வேண்டாம்னு...ஏன்னா மத்த பையன்களும் இருக்கறச்ச.. 

என்னக் கேட்டு தொலைச்சான்னா அப்படி?...அதுக்குன்னு இப்படியா பேய் மாதிரி அடிக்கும் அசத்து...சிரிக்கிறார்...அப்பாடான்னு இருந்தது... பின்ன அவ்ருக்குக் கோபம் வராம இருக்குமா....பிரகலாதன் கதையைச் சொன்னா இவன் கேட்கறான்னான்... அம்மாவே தெய்வம் அப்பாவே தெய்வம் குருவெ தெய்வம்ன்னு வேதமே சொல்லறதே... பிரகலாதனும் நல்ல பிள்ளையா லட்சணமா கேட்க வேண்டியதுதானே... ஏன் அப்பாவுக்கு அடங்காம அம்மாவுக்கு அடங்காம வாத்யாருக்கு அடங்காம இருந்தான்...அது தப்[பில்லியான்னு....வரத வாத்யாருக்கு என்ன பண்றதுன்னு தெரியல்ல.. போட்டுப் பிச்சிபிட்டார்... இப்ப வரும் போது அழறார்... சார் அதெல்லாம் விடுங்கோ ஆசிரியர் அடிச்சு பையன்கள் வீணாப் போனது இல்ல...நீங்க அடிச்சது அவனுக்கு ஆசீர்வாதம்னு சொல்லித் தேத்திட்டு வந்தேன்..... 

இவன் எதுக்கு கேட்கிறான்... சொல்றார்னா பேசாம கேட்டுக்க வேண்டியது தானே...இது ஒரு பிஞ்சுல பழுத்தது...

அடுக்களைக்கு எழுந்து போய்விட்டால் போல... 

இன்றும் பிரம்படி பயம் இருக்கத்தான் செய்கிறது. 

ஆனால் கேள்விகளும் நிறைய என்று வைத்துக் கொள்ளுங்கள். 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

கி.காளைராசன்

unread,
Dec 28, 2013, 7:12:19 AM12/28/13
to mintamil, தமிழ் வாசல், vallamai
வணக்கம் ஐயா.

----------------------------------
மண்டையில் ஒரு குறுகுறுப்பு. வேறு
> என்ன? கேள்விதான்.
>
மாத்ரு தேவோ பவ,
பித்ரு தேவோ பவ
ஆசார்ய தேவோ பவ
அப்படீன்னா பிரகலாதனும் அவன் அப்பா அம்மா > ஆசிரியர்கள் சொன்னதைக் கேட்டு
நடந்துக்காம ஏன் சார் முரண்டு பண்ணினான். அவனை தெய்வம் தண்டிக்காம ஏன்
சார் காப்பாத்திச்சு? அப்ப அவன் வேதக் கட்டளையை
> மீறினான்னு தானே சார்.....
>
----------------------------------------

மாத்ரு, பித்ரு, ஆசார்ய, தேவர் என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளதால்,

மாத்ருவைவிட பித்ரு உயர்வு,
பித்ருவை விட ஆசார்யர் உயர்வு,
ஆசார்யரை விட தேவர் உயர்வு.

பித்ருவை நிந்தனை செய்யும் மாத்ரு தவறானவள்.
ஆசார்யரை நிந்தனை செய்யும் பித்ரு, மாத்ரு தவறானவர்.
தேவரை நிந்தனை செய்யும் ஆசார்யர், பித்ரு, மாத்ரு தவறானவர்.

“பித்ரு தேவோ பவ“ என்று கற்பிக்கப்பட்டாலும்,
தேவாதிதேவனான ஸ்ரீமன் நாராயணனை நிந்தனை செய்பவன் தந்தை என்ற தகுதியைத்
தானே இழந்தவனாகிவிடுவான்.

எனவே
“பிரகலாதன் செய்ததும் சரியே,
அச்சிறுவனை ஸ்ரீமன் நாராயணன் காப்பாற்றியதும் சரியே“ என்று அடியேன் கருதுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்
Message has been deleted

Innamburan S.Soundararajan

unread,
Dec 28, 2013, 4:11:42 PM12/28/13
to thamizhvaasal, Mohanarangan V Srirangam, min tamil, vallamai
நீவிர் பின்னூட்டம் போட்டால் Inline image 1 ஆடிடுவீர். அதான் மவுனம்.
அன்புடன் + புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சித்திரத்துக்கு நன்ரி: http://www.varalaaru.com/images/Apr12/Kudakkutthu_Thiruvaiyaru.jpg

செல்வன்

unread,
Dec 28, 2013, 8:51:49 PM12/28/13
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil

தாயை தெய்வமாக கருதினாலும் அந்த பக்திக்கு பலனை அளிக்கும் சக்தி தாய்க்கு இல்லை. தாயை வழிபடுவதன் பலனையும் அந்த பரந்தாமனே அளிக்கிறான். பிரகலாதன் இரணியனை தந்தை என்ற முறையில் தெய்வமாக வழிபட்டு இருந்தால் அதற்குரிய பலனையும் அந்த பரந்தாமன் அவனுக்கு அளித்திருப்பான். அந்த விரதத்தை பிரகலாதன் முறித்ததால் அவனுக்கு பாவம் வந்து சேராமல் அவனே காத்தான். கீதையில் "செய் தருமம் அனைத்தையும் விட்டு என்னை சரண்டை. அதன் விளைவுகளில் இருந்து உன்னை காக்கிறேன்" என அருச்சுனனுக்கு கூறிய அதே விதி இங்கே பிரகலாதனுக்கு பொருந்துகிறது.

தாயும், தந்தையும், குருவும் வழிபாட்டுக்கு உரியவர்கள்.ஆனால் உலகத்து உயிர்க்கு எல்லாம் தாயும், தந்தையும், குருவும் ஆனவன் யார்? அந்த ஸ்ரிமன் நாராயணன் தான். அவனை துறந்து பிரத்யக்ஷ தெய்வங்களை வழிபடுவது சிறுபிள்ளைதனம். ஆனால் அத்தகைய பக்திக்கும் பலனை அந்த பரந்தாமன் அளிக்கவே செய்கிறான்.
Message has been deleted

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 28, 2013, 11:15:26 PM12/28/13
to thamizhvaasal, Mohanarangan V Srirangam, min tamil, vallamai



2013/12/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
 அவரோடு கூட எத்தனை முறை அப்பாடா நானும் அந்த சஞ்சீவி மலைத் தொட்டுக்கொண்டு பறந்திருக்கிறேன். ராம காரியத்தில் அனுமாருக்கு நான் அஸிஸ்டெண்ட். லீவு நாட்களில் பையன்கள் சேர்ந்து ஏதாவது லூட்டி அடிக்கும் போது போடும் உடனடி நாடகத்தில் நான் எப்பவுமே அனுமார். பழைய கிரிக்கட் பேட்தான் கதை. வீட்டு வாசலில் வந்து கறக்கும் மாட்டு மூககணங்கயிறு பழையது ஒன்று இருந்தது. அதுதான் வால். 
:) 

இன்று யாகம் என்றால் என்ன என்று அறிந்த பின், அரக்கர், காடு, தவம், ரிஷி இவற்றை மூல நூல்களைப் படித்தபின் சிரிப்பு வருகிறது. என்ன கற்பனைகள் இவை! இதற்காக பள்ளிக்கூடம் படிக்கும் ஒரு பையனை யாரோ ஒரு காட்டுத்தாடி அங்கிருந்து வந்து, தன் பொழப்பத்த வேலைக்குக் காவலாக....கேட்டா யாகமாம் ஹவிஸாம் அப்படியே தேவர்கள் வந்து வாங்கிப்பாங்களாம்....ச குழந்தைக் கனவுகள் இவ்வளவு அபத்தமாக கட்டப்படுவதற்குப் பக்கபலமாக இதிஹாஸங்கள்... அவன் படிப்பையும் கெடுத்து, என் படிப்பையும் கெடுத்து, பெற்றவர் சுற்றம் எல்லார் துன்பத்தையும் உண்டாக்கி..அறியாமையைப் பாத்திகட்டி வளர்த்து.... எதிர்த்த வீட்டுக் குழந்தையை தூக்கியபடி அதன் தகப்பன் பால்கனியில் நின்றபடி கதை சொல்லிக்கொண்டு இருக்கிறான்.....ராஜாவொல்லியோ சமத்து பார் அப்பா உனக்கு ஒரு கதை சொல்வேன்னாம்... என்ன கத....ராமர் கதை....ராக்ஷஸாள் கதயா.. ஆமாம் விச்வாமித்ரர் ரிஷியோட போயி யாகத்துல ராமர் காவல் காத்துண்டு.... 

போச்சு..அந்தக் குழந்தை என்னிக்கு வளர்ந்து எல்லாத்தையும் படிச்சு.

இதுபோல எல்லாத்தையும் படித்த பாரதி கதைகள் பற்றியும், யாகம், தவம் பற்றியும் கீழ்க்கண்டவாறு எழுதினார்:

கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,

நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த-திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும்-அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.


காலத்திற் கேற்ற வகைகள்-அவ்வக்
காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய்.எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை

சூத்திர னுக்கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின்-அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

மேற்குலத்தார் எவர்?
வையகம் காப்பவ ரேனும்-சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்,
பொய்யக லத்தொழில் செய்தே-பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.

தவமும் யோகமும்
உற்றவர் நாட்டவர் ஊரார் -இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம்-இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை.
பக்கத் திருப்பவர் துன்பம்-தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி;
ஒக்கத் திருந்தி உலகோர்-நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி.

யோகம்,யாகம்,ஞானம்

ஊருக் குழைத்திடல் யோகம்;-நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும்-உளம்
பொங்கல் இல்லாத அமைதிமெய்ஞ் ஞானம்.

பதிவு என்னிப் பார்க்க வைக்கிறது.
நன்றி.
சொ.வினைதீர்த்தான்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 28, 2013, 11:21:10 PM12/28/13
to thamizhvaasal, Mohanarangan V Srirangam, min tamil, vallamai
பதிவு எண்ணிப் பார்க்கவைக்கிறது. (கவனமின்றி எழுத்துப் பிழையுடன் எழுதியமைக்கு நண்பர்கள் பொறுத்துக்கொள்ளவும்)

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/12/29 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>
Message has been deleted

செல்வன்

unread,
Dec 29, 2013, 11:02:27 AM12/29/13
to Mohanarangan V Srirangam, vallamai, min tamil
2013/12/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
உங்கள் குழந்தை திடீரென உங்களிடத்தில் ‘ஏசுதான் ஒரே கடவுள். அவர்தான் நமக்கு உண்மையில் தந்தையும் தாயுமாய் எல்லா உறவுமாய் இருக்கின்றார். நீங்கள் எல்லாம் அவரை ஏர்றுக் கொண்டு வாழ்க்கையில் உய்வு பெறுங்கள் வாழ்நாளை அவமே போக்காதீர்கள்’ என்று போதிக்கத் தொடங்கினால் உங்கள் நிலை என்ன? ஏசு என்று உதாரணத்துக்குச் சொல்கிறேன். உங்கள் பண்பாட்டுச் சூழலுக்கு முற்றிலும் வேறான ஒரு கடவுள் நெறியை உங்கள் குழந்தை யாரோ ஒரு பக்தர் வாயிலாகக் கேட்டு ஈடுபட்டு வந்து சொல்கிறது என்னும் போது? 


அரங்கரே..உங்களுக்கு தெரியாதது இல்லை. இரணியன் திருமாலை வழிபட்டவர்களை கொன்றான். கோயில்களை இடித்தான். தானே கடவுள் என்றான். சிவனே கடவுள், முருகனே கடவுள் என சொன்னவர்கள் குடும்பத்தில் பிரகலாதன் விஷ்ணுவே கடவுள் என சொல்லியிருந்து பிரச்சனை வந்திருந்தால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இரணியன் செய்தது அப்படிப்பட்ட விஷயம் அல்ல.

மற்ற மதங்களை நான் பின்பற்றாவிட்டாலும் அவர்கள் கோயிலை இடிப்பது, அம்மத கடவுள்கள் பெயரை சொல்பவர்களை கொல்வது மாதிரி செயல்களில் ஈடுபடுவதை கனவிலும் நினைக்கமாட்டேன். என் குழந்தையை கத்தோலிக்க பள்ளியில் சேர்த்துள்ளேன். தினம் வீட்டுக்கு வந்து "ஜீசஸ் ஈஸ் சூப்பர்ஸ்டார்" என பாட்டு பாடுகிறது. கேட்டு மகிழ்ச்சி தான் அடைகிறேன் :-). இரணியன் உதாரணம் அதனால் இங்கே பொருந்தி வரவில்லை. நாரதர் சிவபக்தர் வீட்டில் கலகம் மூட்டவில்லை. "தானே கடவுள்" என சொல்லி பிறகடவுளர் வழிபாட்டு ஆலயஙக்ளை இடித்த அசுரன் வீட்டிலேயே கலகம் மூட்டினார்


--
செல்வன்

http://selvan.wordpress.com/   (உடல்நலம் குறித்த தமிழ் பதிவு)

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

https://www.facebook.com/war.onsugar (சர்க்கரை மேல் போர்)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)

http://www.pinterest.com/holyox/pins/  (தொன்மையான உணவுகள்)

Mohanarangan V Srirangam

unread,
Dec 29, 2013, 11:08:08 AM12/29/13
to செல்வன், vallamai, min tamil
ஓ அதுனாலத்தான் போட்டு அந்த வாத்யார் அப்படி அடிச்சுட்டார் போல இருக்கு....:-) 


2013/12/29 செல்வன் <hol...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Dec 30, 2013, 10:14:10 AM12/30/13
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil



29 டிசம்பர், 2013 8:02 முற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2013/12/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
உங்கள் குழந்தை திடீரென உங்களிடத்தில் ‘ஏசுதான் ஒரே கடவுள். அவர்தான் நமக்கு உண்மையில் தந்தையும் தாயுமாய் எல்லா உறவுமாய் இருக்கின்றார். நீங்கள் எல்லாம் அவரை ஏர்றுக் கொண்டு வாழ்க்கையில் உய்வு பெறுங்கள் வாழ்நாளை அவமே போக்காதீர்கள்’ என்று போதிக்கத் தொடங்கினால் உங்கள் நிலை என்ன? ஏசு என்று உதாரணத்துக்குச் சொல்கிறேன். உங்கள் பண்பாட்டுச் சூழலுக்கு முற்றிலும் வேறான ஒரு கடவுள் நெறியை உங்கள் குழந்தை யாரோ ஒரு பக்தர் வாயிலாகக் கேட்டு ஈடுபட்டு வந்து சொல்கிறது என்னும் போது? 


அரங்கரே..உங்களுக்கு தெரியாதது இல்லை. இரணியன் திருமாலை வழிபட்டவர்களை கொன்றான். கோயில்களை இடித்தான். தானே கடவுள் என்றான். 


இரண்யன் காலத்தில் சிவன் கோவில்கள் இல்லையோ? இருந்தும் அவன் இடிக்கலையோ? 

வேந்தன் அரசு

unread,
Dec 30, 2013, 10:23:55 AM12/30/13
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil
வாத்தியார்களைப்பற்றி தீர அறியாமல் பிள்ளைகளை அவரிடம் சேர்க்கக்கூடாது என்பதே இரண்யன் பாடம்,


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Message has been deleted
Message has been deleted
Message has been deleted

செல்வன்

unread,
Jan 6, 2014, 2:23:25 AM1/6/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil
உத்தரகாண்டம் வால்மிகி எழுதினது தானா?

ராமாயணத்தில் இடைசெருகல்கள் இல்லையா? பல்லாயிரம் ஆண்டுகளில் பல ராமாயணங்கள், பல வெர்ஷன்கள். அதில் இருக்கும் ஒரு கதை இது. அவ்வளவுதான்.
Message has been deleted
Message has been deleted

செல்வன்

unread,
Jan 6, 2014, 11:44:39 AM1/6/14
to Mohanarangan V Srirangam, vallamai, min tamil

மோகனரங்கன் ஐயா


உத்தரகாண்டம் முழுவதும் பிற்சேர்க்கை என படித்துள்ளேன். சம்பூகன் கதை அதற்கும் பிந்தையது என பல அறிஞர்கள் கூறுகிறார்கள்


http://en.wikipedia.org/wiki/Shambuka

The killing of Shambuka appears in the Valmiki Ramayana, Book 7, the 'Uttarakanda' [Final Chapter], sargas 73-76, in the Adhyatma Ramayana version of Ramayana.

Scholars such as Purushottama Candra Jaina,[2] Bhagawan Singh[3] and John Brockington[4] writes that this story "is of late origin". The story is considered to be of dubious origin due to the following reasons:

  • The story does not find mention in summaries of Ramayana in puranas or the Mahabharata.
  • Hindu texts have never cited the episode of Shambukavadha to debar Sudras from tapasyaa.
  • The entire Uttarakanda itself is suspected to be a later addition due to:
    • Inferior poetic quality of the verses.
    • Occurrence of the phala-shruthi at the end of the sixth Kanda
  • The text of Ramayana, as reflected in the 70 or so existing commentaries varies highly. The story does not appear in any of the other 14 or so Sanskrit versions of Valmiki Ramayana. [5]

Message has been deleted

செல்வன்

unread,
Jan 6, 2014, 12:31:06 PM1/6/14
to Mohanarangan V Srirangam, vallamai, min tamil
ரங்கன் ஐயா

சம்பூகன் கதை வால்மிகி எழுதியது எனவும், எழுதியது இல்லை எனவும் இருவிதமான கருத்துருக்கள் அறிஞர்களிடயே நிலவுகின்றன.

அது வால்மிகி எழுதியதே தான், ராமன் கட்டாயம் சம்பூகனை கொன்றான், அதற்கு பரிசாக கடவுளாக்கபட்டான் என்பது உங்கள் நம்பிக்கை

அது இடை செருகல், ராமன் அப்படி செய்யகூடியவன் இல்லை என்பது என் நம்பிக்கை.

நம் நம்பிக்கை எதுவோ அதற்கு தகுந்த ஆதாரங்களை நாம் தேடிகண்டுபிடிக்கலாம்.

பல சமயங்களில் அப்படிதான் நடந்தும் வருகிறது.

என்னளவில் பட்டாபிஷேகம் வரை வால்மிகி ராமாயணத்தில் கானப்படும் ராமனின் குணாதிசயங்கள் வேறு, உத்தரகான்ட ராமனின் குணாதிசயங்கள் வேறு

முதல் அத்தியாயங்களில் வரும் இராமன் தந்தைக்காக நாட்டு மக்கள் அனைவரும் தன்னிடம் காட்டில் வந்து கெஞ்சியபோதும் முடிசூட மறுத்தவன்

உத்தரகாண்ட இராமன் ஒரே ஒரு குடிமகன் தன் மனைவியை அவதூறாக பேசினான் என்பதற்காக கர்ப்பிணியை காட்டில் விட்டவன்

அதுவும் மனைவியிடம் காட்டில் விடுகிறேன் என்பதை கூட சொல்லாமல் தம்பியிடம் சொல்லி காட்டில் விட சொன்னவன்

முதல் அத்தியாயங்களில் வரும் இராமன் நம்பியோரை கைவிடாதவன். குடும்பத்தின் மேல் அன்பு கொண்டவன், காட்டுக்கு துரத்திய சிற்றன்னையை கூட வெறுக்காதவன்

உத்தரகான்ட இராமன் தாலிகட்டின பெண்டாட்டியை கைவிட்டவன்.

மனைவியை வனவிலங்குகள் வாழும் காட்டில் விடுவது ஸ்திரிஹத்திக்கு ஒப்பானது. மிகப்பெரும் பாவம். தன்னை கொல்ல வந்த அசுரபெண்ணான சூர்ப்பனகையை கூட கொல்லாமல் மூக்கை அரிந்து அனுப்பியவன்

ஆக இந்த இரண்டு பாத்திரபடைப்புகளும் ஒரே எழுத்தாளர் எழுதியது என்பதை நம்ப எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது.

ஆழ்வார்கள் காலம் இராமாயணத்துக்கு மிக பிற்பட்டது. அவர்கள் காலத்தில் தமிழில் என்ன மாதிரியான இராமாயணங்கள் புழக்கத்தில் இருந்தன என்பது நமக்கு தெரியாது. துளசிதாசர் கூட வேதவதி எனும் பெண்ணை இராவணன் கடத்தியதாக எழுதினார். அவர் பக்தர் என்றாலும் அது மூல இராமாயணத்தில் இல்லை. அதுவே ஆழ்வார் பாடல்களிலும் நிகழ்ந்து இருக்கலாம்.


2014/1/6 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
  • The text of Ramayana, as reflected in the 70 or so existing commentaries varies highly. The story does not appear in any of the other 14 or so Sanskrit versions of Valmiki Ramayana. [5]
  • >>> 

அதற்குத்தான் ஸ்ரீ வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம், மூன்று வியாக்கியானங்கள் அடங்கிய நூலின் சுட்டியைக் கொடுத்தேன் செல்வன். 

வால்மீகியை மொழிபெயர்த்த ஒட்டக்கூத்தர் உத்தரகாண்டக் குறிப்பும் தந்தேன். 

ஆழ்வார்களின் பாடலிலும் குறிக்கப்படுகிறது. 

இனி நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும். 

If you believe that this story does not form part of Valmiki Ramayana, as an article of faith, then I am not one to argue with your faith. 

***
Message has been deleted

PRASATH

unread,
Jan 6, 2014, 1:25:31 PM1/6/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil
செல்வன் அண்ணே,

சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது இலக்குமனனா, இராமனா???

(தெரிந்து கொள்ள மட்டுமே...)


2014/1/6 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Jan 6, 2014, 1:25:44 PM1/6/14
to vallamai, min tamil, தமிழ் வாசல்
2014/1/6 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அதாவது ராமன் ஒரு செயலைச் செய்திருந்தால் அது நியாயமாகத்தான் இருந்திருக்கும். அவரால் ஒறுக்கப்பட்டவர் நிச்சயம் கெட்டவராக இருந்திருப்பார் என்று நாம் நினைப்பது இயல்பு. காரணம் சிறுவயசிலிருந்து கதை சொல்லிகள் நமக்கு மேலும் மேலும் கதையைச் சொல்லி அப்படி உருவாக்கி வைத்திருக்கும் எண்ணம் அது. ஆனால் அந்த எண்ணம் மூல நூல்களைப் போய்ப் படித்தால் அப்படியே இருக்கிறதா? பார்க்கப் போனால் ஏனய்யா மூல நூல்களைப் படித்துத் தொலைத்தோம் என்று சமயத்தில் சிறுவயதின் கனவுலகங்கள் எல்லாம் நொறுங்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கிறது. நானும் மிகவும் அவதிப் பாட்டேன். இல்லையென்று சொல்லவில்லை. எனவே உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. 



அப்படி எல்லாம் நான் நினைக்கவே இல்லை ஐயா. நான் என் 10 வயதில் இருந்து 2005ம் ஆண்டுவரை நாத்திகனாக தான் இருந்தேன். இணையத்தில் சேர்ந்த புதிதில் மார்க்சிஸ்ட் கட்டுரைகள் எல்லாம் எழுதி இருந்தேன். அதற்கு ஒரு காரணம் சிறுவயதில் சொல்லபட்ட கதைகள். ராமன் வாலியை கொன்றான், சீதையை தீகுளிக்க வைத்தான் என என் அம்மாவும், தாத்தாவும் சொன்னபோது மிகவும் வருத்தபட்டேன். அவர்களுக்கு அதற்கு மேல் விளக்க தெரியவில்லை. மூலநூல்களை படித்து தான் சிறுவயது சந்தேகங்கள் தெளிந்து இராமன் பரம்பொருளின் அவதாரமே என்பதை உணர்ந்தேன். அது இந்த கடந்த எட்டு ஆண்டுகளில் நான் பக்குவம் அடைந்தபின் வந்த மாற்றங்கள்.

அதனால் இது சிறுவயது முதல் இருக்கும் மூடநம்பிக்கை, பிம்பம் அல்ல. உத்தரராமாய்ணமே இடைசெருகல் என்கையில் அதில் வரும் விருத்திராசுரன் கதையை எப்படி உதாரணமாக கொள்வது? புராணம், இதிகாசங்களில் நிறைய இடைசெருகல் இருப்பதாக காஞ்சி பெரியவரே சொல்லியிருக்கிறார். ஆயிரமாயிரம் ஆண்டு பழமையான நூல்கள் அனைத்தும் நேர்வதே இது

செல்வன்

unread,
Jan 6, 2014, 1:27:14 PM1/6/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil

2014/1/6 PRASATH <pras...@gmail.com>

செல்வன் அண்ணே,

சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது இலக்குமனனா, இராமனா???


லக்ஷ்மணன் தான். அரிய சொன்னது இராமன்

PRASATH

unread,
Jan 6, 2014, 1:28:56 PM1/6/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil
நன்றி அண்ணே...


2014/1/6 செல்வன் <hol...@gmail.com>
Message has been deleted
Message has been deleted

Hari Krishnan

unread,
Jan 6, 2014, 11:12:38 PM1/6/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil
2014/1/6 செல்வன் <hol...@gmail.com>
லக்ஷ்மணன் தான். அரிய சொன்னது இராமன்

எந்த இராமயணத்தில், எதை அரியும்படி இலக்குவனிடத்தில் இராமன் சொல்கிறான்?  எந்த இடத்தில்?


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

செல்வன்

unread,
Jan 6, 2014, 11:43:32 PM1/6/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil

2014/1/6 Hari Krishnan <hari.har...@gmail.com>

எந்த இராமயணத்தில், எதை அரியும்படி இலக்குவனிடத்தில் இராமன் சொல்கிறான்?  எந்த இடத்தில்?

    Book III : Aranya Kanda - The Forest Trek

Chapter [Sarga] 18


imaam viruupaam asatiim atimattaam mahodariim |
raakSasiim puruSavyaaghra viruupayitum arhasi || 3-18-20

20. puruSa vyaaghra= oh, manly-tiger; vi ruupaam= freakish; a + satiim= knavish; ati mattaam= overtly, ruttish; mahaa udariim= big, bellied; imaam raakSasiim= this, demoness be; vi ruupayitum arhasi= without, shape [to deface,] apt of you.

"She is freakish, knavish and overtly ruttish, oh, tigerly man, it will be apt of you to deface this paunchy demoness…" Thus Rama said to Lakshmana. [3-18-20]

Verse Locator

iti uk{}to lakshmaNaH tasyaaH kruddho raamasya pashyataH |
uddhR^itya khaDgam cicCheda karNa naasam mahaabalaH || 3-18-21

21. iti uktaH mahaabalaH lakshmaNaH= thus, said, great-mighty, Lakshmana; kruddhaH= infuriated; raamasya pashyataH= while Rama, is seeing; uddhR^itya khaDgam= taking up [drawing,] sword; tasyaaH karNa naasam cicCheda= her, ears, nose, chopped off.

Thus said to that mighty Lakshmana he infuriately drew sword and chopped off her ears and nose before the very eyes of Rama. [3-18-21]

Hari Krishnan

unread,
Jan 6, 2014, 11:47:18 PM1/6/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil

On 7 January 2014 10:13, செல்வன் <hol...@gmail.com> wrote:

aam viruupaam asatiim atimattaam mahodariim |
raakSasiim puruSavyaaghra viruupayitum arhasi || 3-18-20

20. puruSa vyaaghra= oh, manly-tiger; vi ruupaam= freakish; a + satiim= knavish; ati mattaam= overtly, ruttish; mahaa udariim= big, bellied; imaam raakSasiim= this, demoness be; vi ruupayitum arhasi= without, shape [to deface,] apt of you.

"She is freakish, knavish and overtly ruttish, oh, tigerly man, it will be apt of you to deface this paunchy demoness…" Thus Rama said to Lakshmana. [3-18-20]


கம்பராமாயணத்தில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வதற்காகக் கேட்டேன்.

மேற்படி ஸ்லோகத்தில், இராமன் எந்த இடத்தில் சூர்ப்பணகையின் மூக்கையும் செவியையும் அரியும்படி சொல்கிறார்?

இலக்குவன் செய்தது சரியே.  அது வேறு திறக்கு.  ஆனால், சரியாக விளங்கிக் கொள்வதற்காக இதைக் கேட்கிறேன்.  (அது நீங்களாயினும் சரி, நானாயினும் சரி.)

செல்வன்

unread,
Jan 7, 2014, 12:00:40 AM1/7/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil

2014/1/6 Hari Krishnan <hari.har...@gmail.com>

மேற்படி ஸ்லோகத்தில், இராமன் எந்த இடத்தில் சூர்ப்பணகையின் மூக்கையும் செவியையும் அரியும்படி சொல்கிறார்?

"She is freakish, knavish and overtly ruttish, oh, tigerly man, it will be apt of you to deface this paunchy demoness…" Thus Rama said to Lakshmana. [3-18-20]

Deface means "destroy shape of face by disfigurement" aiya

Hari Krishnan

unread,
Jan 7, 2014, 12:01:46 AM1/7/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil

2014/1/7 செல்வன் <hol...@gmail.com>

Deface means "destroy shape of face by disfigurement" aiya

டீஃபேஸ் என்பதற்கான சமஸ்கிருதச் சொல் என்ன?
Message has been deleted

Nagarajan Vadivel

unread,
Jan 7, 2014, 11:45:12 AM1/7/14
to vallamai
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று நுகர நினைப்பதைத் தடுக்க வடபுலத்தில் வழக்கில் இருந்த மரபு அடுத்தவரின் மனைவி/கனவனை அடைய நினைப்போரின் மூக்க அரிதல்

தென்புலத்தில் ஆசைப்பட்டதை அடைய நினைப்பது ஒரு பெருங் குற்றமல்ல

இந்த நிகழ்வே இரு பண்புக்கூறுகளின் முட்டல் மோதல் தள்ளு முள்ளு. அது கதையின் திருப்பு முனைக்கு அவசியம்

எவ்வளவு நல்ல மனிதனாக இருந்தாலும் பெண்ணால் வரும் சோதனைகளை எதிர்நோக்க வேண்டும் என்று எச்சரிக்கும் கட்டம்

இம்சை


2014/1/7 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

செல்வன்

unread,
Jan 7, 2014, 12:32:47 PM1/7/14
to vallamai

2014/1/7 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று நுகர நினைப்பதைத் தடுக்க வடபுலத்தில் வழக்கில் இருந்த மரபு அடுத்தவரின் மனைவி/கனவனை அடைய நினைப்போரின் மூக்க அரிதல்

தென்புலத்தில் ஆசைப்பட்டதை அடைய நினைப்பது ஒரு பெருங் குற்றமல்ல


கண்ணகி பிறந்ததும் தென்புலம் தான் ஐயா. இப்படி அடுத்தவர் மனைவியை ஆசைபடுவது தென்புலத்தில் வழக்கம் அல்லவே?

சூர்ப்பனகை சீதையை கொல்ல முனைந்தாள். தன்னை கொல்லவருபவரை தற்காப்புக்கு கொல்லுதல் தவறு அல்ல. ஆனால் பெண் என்பதால் கொல்லாமல் மூக்கை அரிந்து அனுப்பினார்கள். ஆணாக இருந்தால் கொன்று இருப்பார்கள்.

செல்வன்

unread,
Jan 7, 2014, 12:48:27 PM1/7/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil, தமிழ் வாசல்

2014/1/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கணவன் மனைவி என்றால் ஸ்ரீராமர் சீதை மாதிரி என்னும் அளவிற்கு சீதாராமர் என்னும் படிவம் மனத்தில் பதியும்படி மரபு நம்மை உருவேற்றியிருக்கிறது. 

இயம் சீதா மா சுதா என்ற ச்லோகத்தைச் சொல்லி எந்தக் கல்யாணமும் நடக்கிறது. 

சீதை, இராமரிடம் தம்பதியினர் கற்றுகொள்ள வேண்டியது என்ன?

இராமன் தசரதன் மகன். தசரதன் பலதாரமணம் புரிந்தவன். இராமன் ஏகபத்தினி விரதன். மனைவியை தவிர சிந்தையாலும் பிற மாதரை தொடாதவன். இந்த 21ம் நூற்ராண்டில் கூட மனிதர்களால் ஒருவனுக்கு ஒருத்தி எனும் அறத்தை பின்பற்ற இயலாமல் வழுக்கி விழுகிறார்கள். அத்தகைய அறமே மன்னர்களிடத்தில் காணப்படாத காலகட்டத்தில் அத்தகையதொரு ஒழுக்கத்தை ஆண்களுக்கு கற்பித்தவர் ஸ்ரீ ராமர்.

பெண்கள் மேல் ஒருவன் கையை வைத்தால் அவனுக்கு என்ன பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்கும் ஸ்ரீ ராமரே உதாரணம். இது இன்றைய சூழலில் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அன்று மன்னர்கள் விரும்பிய பெண்களை அபகரித்து செல்லும் நிலை இருந்தது. அந்த சூழலில் அதற்கு விழுந்த தடை உத்தரவு இராமாயணம். இராவணன் என்ற பெயர் வரகூடாது என்பதற்காகவே பல மன்னர்களும் அடுத்தவன் மனைவியை அபகரிக்கும் வழக்கத்தை விட்டார்கள்.

"இராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி" என்ற சொற்றொடரை நமக்கு அளித்தவர் ஜானகி. கணவன் காட்டுக்கு சென்றபோது மகிழ்ச்சியுடன் அரண்மனையை விட்டுவிட்டு கணவனை பின் தொடர்ந்தார். கஷ்டமும், நச்டமும், அரசபோகமும் அனைத்தையும் இரு தம்பதியினரும் ஒன்றாக அனுபவித்தார்கள்.

இது மாதிரியான ஒரு வாழ்வை தான் அனைத்து தம்பதியினரும் அடையவேண்டும் என்பதற்காக சீதா- இராமர் உதாரணம் கூறப்படுகிறது.

அடுத்து தீக்குளிப்பு: சீதை தீக்குளிப்பு ஏன் நிகழ்ந்தது? அப்பாவியான ஒருவரது நடத்தை மேல் களங்கம் கற்பித்தால் அவரது மனம் என்ன பாடுபடும்? சீதை கானகத்தில் அதை இலக்குவனுக்கு செய்தார். மாயமானை தேடிசெல்ல மறுத்த இலக்குவனை "அண்ணன் இறந்ததும் எனை அடைய திட்டமா?" என சுடு சொல்லால் கேட்டார்.

இளையபெருமாள் மனம் அன்று தீகுளித்ததை விட வேதனையை அடைந்து இருக்கும். அதற்கான பரிகாரமே சீதையின் தீகுளிப்பு. 

முன்பு சொன்னதுபோல் உத்தரகாண்ட நிகழ்வுகளை பற்றி நான் கவலைபட போவது இல்லை. இடைசெருகல் இல்லாத தொன்மையான நூல் ஏதும் உலகில் இல்லை

Nagarajan Vadivel

unread,
Jan 7, 2014, 12:50:19 PM1/7/14
to vallamai
கோவலன் பிறந்தது எங்கே ஐயா?

முதலில் ராமனிடம் சூர்ப்பநகை தன் ஆசையைத் தெரிவிக்க ராமன் எனக்கு மனைவி இருக்கிறாள் இலக்குவனுக்குத் தற்போது துணையில்லை அவனை அணுகிப்பார் என்றே ராமன் சொல்லுவதாகத்தானே கதை சொல்லுகிறது

இம்சை



2014/1/7 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Jan 7, 2014, 12:53:19 PM1/7/14
to vallamai

2014/1/7 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

கோவலன் பிறந்தது எங்கே ஐயா?

கண்ணகி மாதிரி இரு என்றால் தமிழ்பெண்கள் மனம் மகிழ்வார்கள்.

கோவலன் மாதிரி இரு என்றால் தமிழ் ஆண்கள் டென்சன் ஆவார்கள்.

கோவலன் தவறு செய்து திருந்தியவன். உதாரணபுருஷன் அல்ல
 

முதலில் ராமனிடம் சூர்ப்பநகை தன் ஆசையைத் தெரிவிக்க ராமன் எனக்கு மனைவி இருக்கிறாள் இலக்குவனுக்குத் தற்போது துணையில்லை அவனை அணுகிப்பார் என்றே ராமன் சொல்லுவதாகத்தானே கதை சொல்லுகிறது

ஆமாம். ஆனால் சீதையை கொல்ல சொல்லி இராமன் சொல்லவில்லையே?

Nagarajan Vadivel

unread,
Jan 7, 2014, 12:59:51 PM1/7/14
to vallamai
தமிழ் நாட்டில் இதெல்லாம் தவறென்று கருத இடமில்லை. ராமனோ கோவலனோ இருவரும் பலமும் பலவீனமும் நிறைந்தவர்களே.  ஒருவரைப் புருஷர் என்றும் மற்றொருவரை அவதார புருஷர் என்றும் கருதினால் ஒப்புமை செய்ய இயலாது

இம்சை


2014/1/7 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Jan 7, 2014, 1:22:07 PM1/7/14
to vallamai

2014/1/7 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

தமிழ் நாட்டில் இதெல்லாம் தவறென்று கருத இடமில்லை.


தமிழ்நாட்டு பெண்களிடம் கேட்டால் தெரியும் :-)

Nagarajan Vadivel

unread,
Jan 7, 2014, 1:41:10 PM1/7/14
to vallamai
அவர்களைக் கேட்டால் அது ஊமை கண்ட,கனா என்பார்கள்

தமிழ்நாட்டுப் பெண்களுக்கு ராமனைவிடச் சீதையே அதிகம் பிடித்திருந்ததால் கம்பருக்குமுன் இங்கே அது சீதாயணம்

இம்சை


2014/1/7 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Jan 7, 2014, 1:49:55 PM1/7/14
to vallamai

2014/1/7 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

அவர்களைக் கேட்டால் அது ஊமை கண்ட,கனா என்பார்கள்

தமிழ்நாட்டுப் பெண்களுக்கு ராமனைவிடச் சீதையே அதிகம் பிடித்திருந்ததால் கம்பருக்குமுன் இங்கே அது சீதாயணம்


நம் நாட்டு பெண்களை ஊமையாக வைத்திருக்கலாமா ஐயா?

ஜனதொகையில் பாதி அவர்கள். தாய்க்குலத்தின் கருத்தே தமிழ்நாட்டின் கருத்தும்.

சீதையை பிடிக்காதவர்கள் யார்? இலக்குமியை பிடிக்காது என சொல்லும் தமிழரும் உண்டோ? திருமாலின் சிறப்பே அவர் இலக்குமியின் மணவாளன் என்பதில் தானே இருக்கிறது? :-)

DEV RAJ

unread,
Jan 7, 2014, 10:18:30 PM1/7/14
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் வாசல்
வான்மீகத்தில் தவறில்லை, செல்வன்.
எதையும் மூடி மறைக்கவும் அந்த 
மஹாகவிக்குத் தேவையிருக்கவில்லை.
ரிஷிகள் பதவிக்காகவும், புகழுக்காகவும்
நூல்கள் இயற்றவுமில்லை.

வால்மீகி 'ராம: ராஜ்யம் உபாஸித்வா...'
என எழுதுகிறார். ஶ்ரீராமன் அரசாளவில்லை;
அரசை ஒரு சாதகனைப் போல உபாசித்தவர்,
அவர். 

பிராட்டியின்மீது அவதூறு கூறியவன் 
ஒரு பண்பாடற்ற பாமரான இருக்கலாம். 
ஆனால் ஶ்ரீ ராமனுக்கு அவன் மரியாதைக்குரியவன்.

இக்ஷ்வாகு குலத்தவர் தந்தது குடியாட்சியை,
வெளிப்படையாக அது முடியாட்சிபோல்
தெரிந்தாலும்.ரகுவம்சம் முழுவதையும்
அலச இப்போது அவகாசம் இல்லை.

எல்லா ஊர்திகளும் சாலை விதிமுறைகளைக்
கட்டாயம் பின்பற்ற வேண்டும்.  ஆனால் தீயணைப்பு 
ஊர்திக்கு அக்கட்டுப்பாடுகள் பொருந்தா. 


தேவ்

DEV RAJ

unread,
Jan 8, 2014, 8:28:08 AM1/8/14
to mint...@googlegroups.com, Mohanarangan V Srirangam, தமிழ் வாசல், vallamai
On Tuesday, 7 January 2014 22:06:43 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
இயம் சீதா மா சுதா என்ற ச்லோகத்தைச் சொல்லி எந்தக் கல்யாணமும் நடக்கிறது. 

இயம் ஸீதா மம ஸுதா ஸஹத₄ர்மசரீ தவ||
வடபுல விவாஹங்களில் மட்டுமே

 
இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன். என்ன பாத்திரப்படைப்பு இது....தன் மேல் நம்பிக்கை இல்லை. தன் மனைவி மீது நம்பிக்கை இல்லை. தான் நம்புகிற தர்மம், தேவர்கள் அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. மிக உயர்ந்தவர்கள் என்று தானே கருதும் முனிவர்கள் மீதும் நம்பிக்கை இல்லை. ஏதோ யாரோ சில அறிவற்ற மூட ஜனங்கள்... இவர்கள்தான் ராமனின் வாழ்க்கை முடிவுகளுக்கு வழிகாட்டிகள் என்றால்... Oh God...what is this character, with no identity at all....? கட்சி எதிர்கட்சி ஆடாமல் கொஞ்சம் உங்கள் மனசாட்சியைப் பேச விடுங்கள். 



இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன், ஆயிரநாம உரைகளில் தோய்ந்த
அரங்கனார் விடை கூறவல்லவர் எனும் நம்பிக்கையோடு.
ஆயிர நாமங்களுள் ஒன்றான புருஜித் எனும் திருநாமத்துக்கு
ஶ்ரீ பட்டர் இந்த இராமாயண வசநத்தையே எடுத்துக்காட்டுகிறார் -

ஸத்யேந லோகாந் ஜயதி தீ₃நாந் தா₃நேந ராக₄வ​: | 
கு₃ரூந் ஶுஶ்ரூஷயா வீரோ த₄நுஷா யுதி₄ ஶாத்ரவாந் ||  2-12-29

ஒருகால் ஶ்ரீ பட்டரது இராமாயணப் பனுவல் வாசிப்பிலும் பிழை
இருக்கிறதோ ! 

[இந்த சுலோகம் ஈடு ஐதிஹ்யத்திலும் இருப்பதாக நினைவு]


||ஸத்யேந லோகாந் ஜயதி ||
||ராமோ ராஜ்யமுபாஸித்வா ப்³ரஹ்மலோகம் ப்ரயாஸ்யதி ||
அறநெறி மீறி மனையாளைக் கைவிடுவோனுக்கு
இவை கூடுமோ ?



தேவ் 

செல்வன்

unread,
Jan 8, 2014, 2:56:05 PM1/8/14
to vallamai, mintamil, தமிழ் வாசல்

2014/1/7 DEV RAJ <rde...@gmail.com>

பிராட்டியின்மீது அவதூறு கூறியவன் 
ஒரு பண்பாடற்ற பாமரான இருக்கலாம். 
ஆனால் ஶ்ரீ ராமனுக்கு அவன் மரியாதைக்குரியவன்.

இக்ஷ்வாகு குலத்தவர் தந்தது குடியாட்சியை,
வெளிப்படையாக அது முடியாட்சிபோல்
தெரிந்தாலும்.ரகுவம்சம் முழுவதையும்
அலச இப்போது அவகாசம் இல்லை.


தேவ் ஜி

முதற்கண் அந்தக்கால கால மனிதர்களை இந்தகால விதிகளைக் கொண்டு அளப்பது முறை அல்ல. இன்னும் ஆயிரம் ஆண்டு காலம் கழித்து இருக்கும் மனித சமூகத்துக்கு நாம் நியான்டர்தால்கள் மாதிரி தென்படுவோமோ என்னவோ?

அடுத்து இராமன் நடத்தியது குடியாட்சி அல்ல. நீதிநூல் மரபுப்படி நடந்த ஆட்சி. குடியாட்சி எனில் கானகத்துக்கு மக்கள் திரண்டுபோய் ஆட்சி செய்ய வா என அழைக்கையில் மறுத்திருக்க மாட்டார். அங்கே ஒட்டுமொத்த நாட்டின் விருப்பத்தையும் தந்தைக்கு அளித்த வாக்குறுதிப்படி நிராகரித்தவர், கல்யாண மேடையில் மனைவிக்கு அளித்த வாக்குறுதியை ஒரு குடிமகனின் பேச்சை கேட்டு நிராகரித்தார் என்பது பொருந்தவில்லை.

பட்டாபிஷேகத்துடன் இராமாயணம் முற்றுபெறுகிறது என்பது தான் என் கருத்து. இலவ குசர் வரலாறு எல்லாம் வாய்மொழியாக பின்னாளில் எழுந்து மூல இராமாயணத்துடன் பிற்சேர்க்கையாக் சேர்க்கபட்டு இருக்கலாம்
Message has been deleted
Message has been deleted
Message has been deleted

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 13, 2014, 2:47:27 AM1/13/14
to vallamai, min tamil



2014/1/13 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


அதைக் கேட்டு ஸீதை கோபத்தால் கண் சிவந்து உண்மையையே பேசும் லக்ஷ்மணனைக் கடுமையான வார்த்தைகளால் தூஷித்தாள். “துஷ்ட! இரக்கமற்றவனே! குரூர ஸ்வபாவமுள்ளவனே! இக்ஷ்வாகு குலத்தைக் கெடுக்க வந்த த்ரோஹி! கெட்ட மனத்துடன் ராமனுக்கு இந்த அபாயம் எப்பொழுது நேரப் போகிறதென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாய் போலும்? இலலவிட்டால் அவர் இப்படித் தவிக்கும் பொழுது இந்த வார்த்தைகளைச் சொல்வாயா?.. மஹாயோக்கியனைப் போல் எங்களுடன் வனத்திற்கு எதற்காக வந்தாய்? என்னைக் கைப்பற்ற எண்ணி வந்தாயோ? அல்லது பரதன் உன்னை அனுப்பினானோ? 
 
லட்சுமணனிடமோ அல்லது சத்துருக்கனிடமோ இரு என்று இராமன் கூறுவதாகத் திரு செல்வன் காட்டியுள்ள பகுதியில் இருப்பதுடன் ஒத்துப்போகிறது. ஒருவேளை அந்தக் கால வழக்கமாக இருக்கக் கூடும். ள்லலாம்.


Inline image 1


மானிட இலக்கியம், மானிட வாழ்வுக்கான அறநெறிக் கருத்துகளை நாம் பெறக் கூடிய இடம் என்று ராமாயணம் போன்ற இதிகாசங்களை அணுகினால் அங்கு நாம் காணக் கூடியது வர்ண தர்ம அபிமானிகள் வழிவழியாகத் தங்களிடம் வந்து சேர்ந்த பனுவலைக் கூடியமட்டும் தங்களுக்குப் பிடித்த வர்ண தர்மக் கருத்துகளை வலியுறுத்தும் சாத்திரமாக உருமாற்றி வைத்திருப்பதையும், ஆணாதிக்கச் சமுதாயம் பெண்ணைச் சுதந்திரம் அற்றவளாக அவளே உணரும்படி மன ரீதியான பயிற்சி பெறும் இடமாக உருவாக்கி வைத்திருப்பதையும்தான் பார்க்க முடிகிறது.

கியம், உண்மை, நன்னடத்தை, அன்பு, பண்பாடு ஆகியவை முக்கியமானவை, காமம் கோபம் லோபம் முதலிய தீய உணர்ச்சிகளை விலக்க வேண்டும் என்ற எண்ணங்களை ஏற்படுத்தாமல், இந்தக் கதைகளின் ஒரே நோக்கம், கடவுளாயிருந்தாலும் ரிஷியிடம் பகைத்துக் கொண்டால் சாபம்தான் என்ற வர்ண தர்ம அபிமானிகளின் நோக்கத்தை படிப்பவர் மனத்தில் பய உணர்ச்சி ரூபமாக ஏற்படுத்துவதுதான் என்று படிக்கும் பொழுது தோன்றுகிறது. 

இதனால் நமது பண்டைய மரபுகளில் சேமிக்கப்பட்ட உண்மையான ஆன்மிகக் கருத்துகள் மக்களிடையே பெரிதும் பரவாமல், ஆன்மிகம்தான் முக்கியம் என்ற உணர்வும் ஏற்பட வழியின்றி, இவ்வாறு வர்ண தர்ம ஆதிக்கக் கருத்துகளும், ஆண் ஆதிக்கக் கருத்துகளும்தான் வழிவழியாக வந்த சநாதனம் என்ற போர்வையில் ஆட்சி பெறுகின்றன. ஆன்மிக உணர்வும் , ஆன்மிக ஒற்றுமை உறவும்தான் மதங்களின் உன்னத லட்சியம் என்பது இந்த மாதிரியான புனைவுகளால் வெறும் ஏட்டளவில் பயனற்ற பேச்சாய்ப் போய் விடுகிறது. எது உண்மையான ஆன்மிகம், எது உள்நோக்கம் கொண்ட வர்ண தர்ம அபிமானிகளின் கைவரிசை என்பதே பிரித்தறிய மிகவும் குழப்பமாகி, உள்நோக்கங்களுக்காக் ஆன்மிகத்தை பலிகொடுக்க அஞ்சாத பேர்வழிகளின் திட்டம்தான் காலத்திற்கும் ஜயிக்கும் என்ற நிலை உருவாக்கப் பட்டிருக்கிறது. 


 சிந்தனைப் பதிவுக்கு நன்றி
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
1.jpg

Dev Raj

unread,
Jan 13, 2014, 2:51:14 AM1/13/14
to mint...@googlegroups.com, vallamai
On Monday, 13 January 2014 12:06:35 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
இங்கும் ரிஷிக் கதைகள் ஏன் உயர்ந்த ஆன்மிக இலட்சியங்களைச் சொல்லுவதாக அமையக் கூடாது.? ஏன் அல்பமான காசு, சாப்பாடு, பெண் இச்சைகளுக்கு என்று ரிஷிகள் இப்படி ஆக்ரோஷம் அடைவதும்,.......
 

முனிவர்கள் அனைவரும் பிரகிருதித் தொடர்பு நீங்கியவர்
என்று சொல்ல முடியாது. அவர்கள் காம கோபத்தால் தவ
ஆற்றலை இழக்கின்றனர் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
சாப அநுக்ரஹ சக்தி இருடியர்க்கே உரிய ஏகபோக
உரிமை இல்லை. மன்னர்கள் வரமருளியுள்ளனர்.
நினைத்தபோது உயிர் துறக்கலாம் என பீஷ்மருக்கு 
சந்தநு வரமளித்தார். தசரதருக்குப் புத்ர சோகம் ஏற்படும்
என்று சபித்தவர் அந்தணர் அல்லர். மங்கையர் துயருற்ற 
காலத்தில் சபித்துள்ளனர். மௌஸல பர்வம் காந்தாரியின்
சாபத்தைச் சொல்கிறது.மேலும் பல எடுத்துக் காட்டலாம்.

கவுந்தி அடிகளார் தரம் குறைந்த பேச்சுக்காக
முள்ளுடைக் காட்டில் முதுநரியாகுமாறு 
இருவரை சபித்தார்.

தம் பார்வை பறிபோகக் காரணமாக இருந்த
நாலூரானுக்கும் நற்கதி வேண்டிய கூரத்தாழ்வான்,
தலைமீது மீண்டும் மீண்டும் எச்சிலை உமிழ்ந்து
பலமுறை கோதாவரியில் நீராடச் செய்து
தம்மைச் சினம் கொள்ளுமாறு செய்யும் முயற்சியில் 
தோற்ற தூர்த்தன் ஒருவனையும் திருத்திப் பணிகொண்ட
மஹாத்மா ஏகநாதர் போன்ற அடியார்களின் வரலாற்றை
எளிய சங்கத நடையில் தொகுப்பாக ஸ்ரீஅண்ணா தந்துள்ளார்;
நிகழ்ச்சிகள் கிருத யுக, திரேதைகளில் நடந்தவையல்ல.


உயர்ந்த ஆன்மிக லக்ஷ்யத்திற்காக ஏங்கும் ஸாரக்ராஹியான 
அரங்கனார் அடியேனைச் சபிக்காமல் பகைவர்க்கருளிய பாகவத 
சரிதத்தொகுப்பான  ஸ்ரீ அண்ணாவின் வைஷ்ணவ ஸம்ஹிதையை 
வாசிக்கலாம். ஏற்கெனவே வாசித்திருந்தால் மன்னித்தருள்வாராக


தேவ்
  

செல்வன்

unread,
Jan 13, 2014, 2:55:25 AM1/13/14
to vallamai, min tamil
2014/1/13 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இங்கும் ரிஷிக் கதைகள் ஏன் உயர்ந்த ஆன்மிக இலட்சியங்களைச் சொல்லுவதாக அமையக் கூடாது.? ஏன் அல்பமான காசு, சாப்பாடு, பெண் இச்சைகளுக்கு என்று ரிஷிகள் இப்படி ஆக்ரோஷம் அடைவதும், வணங்கும் கடவுளுக்கே சாபம் தருவதும் அதை அந்தக் கடவுளும் ஆமோதிப்பதும் என்றபடி அமைக்கப் படுகின்றன?(குறிப்பு: ஸ்ரீமத் வான்மீகி முனிவர் அருளிச் செய்த அற்புத ராமாயணம், S ராஜா சாஸ்திரியார் தமிழ் மொழிபெயர்ப்பு, 1935) --


ரிஷிகள் சாபம் அல்லது வரம் கொடுத்தால் அவர்கள் தவப்பலன் குறைந்துவிடும். தவப்பலனை ரிஷிகள் பல வெட்டியான விதங்களில் ஈகோவுக்கு செலவு செய்யும் கதைகள் உண்டு. உதாரணம்: திரிசங்கு சொர்க்க நிகழ்வு.

விஷ்ணுவை துர்வாசர் எட்டி உதைத்து பதிலுக்கு அவர் காலை அமுக்குவது போல் காலில் உள்ள கண்ணை விஷ்ணு மூடி துர்வாசரின் சக்திகளை அழிப்பது போலவும் ஒரு கதை உண்டு.

இம்மாதிரி கதைகளை படித்தால் ரிஷிகளுக்கு தவப்பலனை விரயம் செய்யாதே என எச்சரிக்கை கொடுக்க எழுதப்பட்டவை போல் தோன்றுகிறது.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 13, 2014, 1:59:09 PM1/13/14
to mintamil, vallamai, thamizhvaasal
1.2014/1/10 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

ராமன் கோசலைஇன் இளவரசன்

ராமன் ஏக பத்தினி விரதன் என்ற பல நிலைகளில் பார்க்கப்படுவதில் ஒரு குழப்பம் ஏற்படுவது இயற்கை
 
2. 2014/1/11 N. Kannan <navan...@gmail.com>

ஆண் பெண்னிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதைக் காட்ட இராமன் படைப்பு. இதை முழுமையாக இராமன் செய்கிறான், ஆனால் அவனுக்கு சூர்பநகையிடம் சபலம் தட்டுவதையும் இயல்பாக ஒரு ஆணின் கோணத்தில் காட்டுகிறார்
 
3. 2014/1/13 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

அதைக் கேட்டு ஸீதை கோபத்தால் கண் சிவந்து உண்மையையே பேசும் லக்ஷ்மணனைக் கடுமையான வார்த்தைகளால் தூஷித்தாள். “துஷ்ட! இரக்கமற்றவனே! குரூர ஸ்வபாவமுள்ளவனே! இக்ஷ்வாகு குலத்தைக் கெடுக்க வந்த த்ரோஹி! கெட்ட மனத்துடன் ராமனுக்கு இந்த அபாயம் எப்பொழுது நேரப் போகிறதென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாய் போலும்? இலலவிட்டால் அவர் இப்படித் தவிக்கும் பொழுது இந்த வார்த்தைகளைச் சொல்வாயா?.. மஹாயோக்கியனைப் போல் எங்களுடன் வனத்திற்கு எதற்காக வந்தாய்? என்னைக் கைப்பற்ற எண்ணி வந்தாயோ? அல்லது பரதன் உன்னை அனுப்பினானோ? 

மேற்குறித்த நண்பர்கள் பதிவுகள் மனதிற்கு நெருடலாக இருந்தன.
நண்பர்கள் மேற்குறித்தவையெல்லாம் வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்புகளிலிருந்து பதிவிட்டுள்ளார்களென எண்ணுகிறேன்.

 இழையின் ஆர்வத்தில் தமிழ் இணையப் பல்கலைத் தளத்தில் சூர்ப்பனகை வரும் இடத்தையும், பிராட்டி இலக்குவனிடம் உரைத்ததையும் திரும்பவும் படித்துப் பார்த்தேன். 

1.சூர்ப்பனகை மேல் இராமன் சபலம் கொண்டான் என்பதும், பரதன் அனுப்பினானா, எதிர்பார்த்து இருந்தாயா என்று பிராட்டி சொன்ன சொற்களெல்லாம் கம்பனில் இல்லை. கம்பன் அன்றே ஒதுக்கிவிட்டான்.
2.கம்பன் காட்டிய “இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்” என்ற செவ்வறம் ஏற்கனவே எல்லோரும் படித்ததுதான்.
3.முடிசூட்டி இராம ராஜ்ஜியத்துடன் இராமாயணத்தை நிறைவுசெய்துவிட்டான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.


எனவே காலந்தோறும் காவியம் மீள்பார்வைக்கு உட்பட்டுச் செம்மையடைந்திருக்கிறது என்று கருதுகிறேன்.
Message has been deleted

Dev Raj

unread,
Jan 14, 2014, 12:27:44 AM1/14/14
to mint...@googlegroups.com, vallamai
On Sunday, 5 January 2014 11:44:14 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
.......அந்தணர்களிடம் நல்ல பெயர் வாங்க மும்முரமாய் இருக்கும் ராமன்....................... 

On Saturday, 11 January 2014 21:34:25 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
அப்ப ராமன் என்பவன் கடவுள் என்ற நினைவு இல்லை அல்லவா!...இல்லை ஒருவேளை கடவுளா இருந்தாலும் அந்தணர்கள்கிட்ட நடுங்கி ஆகணும்னு சொல்லி வச்சிருக்காங்களே..


அந்தணருக்கு நடுங்காத அவதாரம் :

கார்த்த வீர்ய அர்ஜுநன் - க்ருத வீர்ய மன்னரின் புதல்வன், சந்திர வம்சப் பிரிவான
ஹேஹய வம்சத் தோன்றல். யோகத்தில், போராற்றல் மிக்கவன்.
85,000 ஆண்டுகள் delayed justiceக்கு இடமளிக்காமல் அரசாண்டவன்.
அந்தணர்க்கு நடுங்கியவனாகவும் தெரியவில்லை. அந்தணரான ஜமதக்நி 
முனிவரின் மரணத்துக்குக் காரணமானவன். அம்ச அவதாரமான பரசுராமருடன்
எதிரம்பு கோத்தவன். 

மஹாபாரதம், வாயு புராணம், விஷ்ணு புராணம்,பாகவதம் போன்ற 
நூல்கள் கார்த்த வீர்யனின் புகழ் பாடுகின்றன. இவனையே ஸ்ரீ ஹரியின்
அவதாரமாகப்போற்றும் சுலோகம் ஒன்றும் உள்ளது -

க்ருதவீர்யஸுதோ ராஜா ஸஹஸ்ரபுஜ மண்டல:|
அவதார: ஹரே: ஸாக்ஷாத் பாலயேத் ஸகலம் மம ||

அனைத்தையும் பதிவு செய்திருப்பவை முனிவர்கள் 
செய்த இலக்கியங்களே. இவனைக் குல தெய்வமாக வழிபடும் 
பிராமணர்கள் நெல்லை மாவட்டத்தில் இன்றும் உள்ளனர்.

வடபுலத்தவர் கார்த்த வீர்யனை ஸஹஸ்ரார்ஜுநன் என்று
போற்றுவர். ஸஹஸ்ரார்ஜுந ஜயந்தி கொண்டாட்டம்-

தனி வழிபாட்டுமுறை இருந்துள்ளது;
தொலைந்துபோன விலையுயர்ந்த
பொருள்கள் கிடைப்பதற்கு கார்த்த
வீர்யனை வழிபடுமாறு சோதிடர்கள்
கூறுவர்.



தேவ்

Message has been deleted
Message has been deleted

Dev Raj

unread,
Jan 17, 2014, 4:44:59 AM1/17/14
to mint...@googlegroups.com, vallamai
On Thursday, 16 January 2014 23:33:52 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
எனவே மர்றவர்களைப் பற்றிக் கவலைப் படுவதைவிட நம் நூல்களில் இப்படி வேண்டுமென்றே அழுக்குகளைக் கலந்துவிட்ட பேர்வழிகளின் கைவரிசைகளை இனம் கண்டு நீக்கி, நமது நூல்களில் இருக்கும் உண்மையான ஆன்மிகத்தைத் துலங்கும்படியாகச் செய்தால் அன்றோ நமக்கு வலிமையாகும்.! ஆனால் என்ன செய்கிறார்கள்,.. 


ப⁴ஜேத் ஸாரதமம் ஶாஸ்த்ரம்
 
Message has been deleted

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 23, 2014, 1:47:13 PM1/23/14
to vallamai, min tamil
ஸ்பிலிட் பர்ஸ்னாலிடி இல்லை என்று அருமையாக நிரூபித்துள்ளீர்கள்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2014/1/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அறிவு பூர்வமாக மத நூல்களின் விஷயங்களில் கேள்வி கேட்பவர்களை அந்தக் காலத்திலிருந்தே திட்டியவண்ணம் உள்ளனர் நம்பிக்கைவாதிகள். அவர்கள் அதற்குச் சொல்லும் காரணம் நம்பிக்கைக்கு ஏதோ ஒன்று வேண்டும். அதைக் கேள்வி கேட்காதே என்பது. கேள்வி கேட்டால் என்ன? நான் பாட்டுக்கு என் நம்பிக்கையை விடாமல் போகிறேன் என்று அவரவர்கள் போய்விடலாமே என்றால் மனிதர் முற்றிலும் நம்பிக்கைவாதிகளும் அல்லர்; அதே சமயம் முற்றிலும் அறிவு சார்ந்த அணுகுமுறையினரும் அல்லர். ஏதோ ஒரு விதத்தில் நம்பிக்கை ஒன்று பெரும்பாலான மக்களுக்கு வேண்டியிருக்கிறது. அறிவு பேசும் நாத்திகவாதிகளிலும் கூட சமயத்தில் வாழ்வின் இக்கட்டான தருணங்களில் நம்பிக்கையில், நம்பிக்கை அடிப்படையிலான சடங்குகளில் புகல் தேடுவோர் உண்டு. எனவே மனிதர் பொதுவாகச் சொன்னால் அறிவும் நம்பிக்கையும் கலந்து,  மிஞ்சி, எஞ்சி, பலவித விகிதங்களில் அமையப்பெற்ற கலவை நபர்கள் என்று சொல்லலாம். 
:) 

அவ்வாறு உணர்ச்சிகளின் கேந்திரங்களாக தெய்வச் சித்திரங்களை முன்வைக்கும் போது அங்கு இருக்க வேண்டிய பண்புகள் தூய்மை, அன்பு, தியாகம், அருள், பேரறிவு, உலகளாவிய, பிரிவினைகளால் கட்டுண்ணாத பிரேமை, இந்தப் பண்புகளின் வாழ்க்கைச் சித்திரங்களைத்தாம் மக்களின் உணர்ச்சிகளுக்கு இலக்காக வைக்கக் கடமைப் பட்டிருப்பவர்கள் மரபுத் துறையின் அறிஞர்கள். 

பெரும் தீய சக்திகளைத் தனி ஒரு மனிதனாய் எதிர்த்து நின்று போராடும் ஒற்றை நன்மைச் சக்தியாய்ச் சிறுவன் கண்ணில் பட்டார் ஸ்ரீ ராமர். அந்தத் தீய சக்திகள் மனித குலத்தின் கைகளிலிருந்து பறிக்கத் துடிக்கும் நல்வாழ்வு என்றபடிதான் சீதா தேவி பட்டார். ஒவ்வொரு தடவை ஸ்ரீராமனின் வில்லிலிருந்து புறப்படும் அம்பு ஈரேழு பதினான்கு உலகத்திலும் ஊடுருவித் தீமையை மாய்க்கும் என்பது மகத்தான நிம்மதிக் காப்பாக இருந்தது. 
 
வளர்ந்தெழும் காலத்து நம்பிக்கைகள், வளர்ந்த பின் ஏற்படும் அறிவுகளால் பூரணம் அடைய வேண்டும். அப்படிப்பட்ட நம்பிக்கைகளை மட்டுமே நாம் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். 

பாலன் துருவனுக்கு கடவுளைப் பற்றிச் சொன்ன அந்த பக்தியே உருவான நாரத ரிஷி, யாரைக் காண கடவுள்களே கோடானுகோடி காலம் தவம் செய்தும் காண முடியவில்லையோ அந்த ஸ்ரீமந் நாராயணனை அநவரதம் கண்டு பேசி மகிழும் பாக்கியம் பெற்ற அந்த பக்தியின் திருவுருவை எனக்கு, இலட்சிய உருவாக்கத்தின் அழிப்பு என்ற படியாகக் கேலிச் சித்திரமாக, வெறும் காமச் சித்திரமாக அடித்துக் காட்டியது யார்? 

மீண்டும் மீண்டும் சொல்கிறேன் -- எனக்கு எவரையும் குற்றம் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் வளர்ந்தெழும் காலத்து நம்பிக்கைகள், வளர்ந்த பின் ஏற்படும் அறிவுகளால் பூரணம் அடைய வேண்டும். அப்படிப்பட்ட நம்பிக்கைகளை மட்டுமே நாம் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். அப்படிப்பட்ட நம்பிக்கைகளின் கதைகளை மக்களுக்குத் தருவதே மரபு சார்ந்த பேரறிவாளர்களின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். 
 
அருமை!
சொ.வி.
 
Message has been deleted

Tthamizth Tthenee

unread,
Jan 24, 2014, 11:37:22 PM1/24/14
to vall...@googlegroups.com, min tamil
​அருமையான  உட்பார்வை


அதுவும் குறிப்பாக


"  ஜீவன் இந்த ஸம்ஸாரத்தில் சிறை எடுக்கப் பட்டிருக்கிறான். அதுதான் அவனது அசோக வன வாழ்வு. அந்த ஜீவன் தான் சீதா தேவி. சிறையெடுத்த தசமுகன் தான் தச இந்திரியங்களால் ஆன தத்துவங்கள். தூங்கும் தமோ குணம், ஆர்பாட்ட கோப தாபம் என்னும் ராஜஸ குணம் ஆகியவற்றின் உடன் பிறந்து ஆனால் தன் இயல்பால் கடவுளிடம் சென்று சேர்க்கும் இயல்பு கொண்ட சத்துவ குணம்தான் விபீஷணன். 




புலன்கள் சிறையெடுத்தாலும் இந்த ஜீவனின் இயல்பு ஒரு நாளும் மாறவில்லையே? பின் ஏன் இந்த அக்னி ஸ்புடம்? 



ஆஹா    அருமையான  அலசல்


வேள்வி  என்றொரு கவிதை  எழுதினேன்

அந்தக் கவிதை  நியாபகம் வந்தது

உள்ளுக்குள்ளே எழுந்த  கேள்வித் தீ,

தீயில் எழுந்த  வேள்வித்  தீ,

என்னை உணர, என் உள்ளே தொடங்கினேன்

ஒரு உட்ப்ரயாணம், அதன்  ஆரம்பம்

ப்ராணாயாமம்!!  உன்னதமான  உணர்வின்

உள் சுற்றுலா,உணர்வுப் ப்ரயாணம்,

உணர உணர, உள்ளுக்குள்ளே ப்ரளயம்,

பூகம்பம், எரி மலை, உணர்வு வெள்ளம்,

உடைத்து வெளியேற இயலாத தடுப்புச் சுவர்,

உடைத்து  சீறீப் படமெடுத்த பாம்பு  ,

தொடங்கியது ப்ரயாணம்  பரவசமாய்,

உள்ளுக்குள்ளே மோதி மோதி ,

சீறீச் சீறீ, சுருண்டு, படமெடுத்து, விஷம் கக்கி,

அமுதம் கக்கி, மாணிக்கம் கக்கி,

சுருண்டு எழுந்து,  அமைதியுற்று ,

பின் மீண்டும் சீறீ எழுந்து,  அழிந்து, 

மீண்டும் இணைந்து, முடிவில் ஒரு ப்ரயோஜனம் ,

மூலாதாரம், விசுத்தி, மணிபூரகம், அதிட்டானம்,

அடைந்து, அதிஷ்டானச் சக்கரம் சுற்றி ,

ணிப்ரவாளமாய் மூலாதாரம்,

உள்ளுக்குள்ளே எழுந்த  கேள்வித் தீ,

தீயில் எழுந்த  வேள்வித்  தீ,

என்னைப் புடம் போட்டு எடுத்துப் பார்த்தேன்,

எடுக்க எடுக்க வெறும் சாம்பல்- திரு நீறா ,       

எரிந்து போன என்னின் மிச்சமா?

என் உயிரின் எச்சமா?

எரிதழல் அணைந்தால் சாம்பல்தான் மிஞ்சுமா?

மீண்டும் உயிர்த்து என்னில் இணையுமா?

எரிந்ததும் நானே- எரித்ததும்  நானே-

சாம்பலாய் உதிர்ந்ததும் நானே எனில்,

உணர்ந்தது என்ன?

சூனியமா-   ஞான சூனியமா?

மீண்டும் கேள்வித்  தீ,

வேள்வித் தீயில் புடம் போட்டு எடுத்த,

கேள்வித்  தீ"!

 

அன்புடன்

தமிழ்த்தேனீ

 

 








2014/1/24 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நம்பிக்கைகளின் மைய உருவங்கள் நொறுங்கும் போது அந்த வலியின் வேதனையே அலாதியானது. அதுவும் இளம் வயது என்றால் அது கொடுமை. 

ராமன் என்ற இலட்சிய உருவத்தை என் நம்பிக்கையின் கண்களின் முன்னால் இல்லையாக்கியது வால்மீகியின் நூல். அந்த அற்ற இடத்தில் வேறு எதையும் வைக்கும் துணிவும் இல்லை. காரணம் பட்ட காலிலே படும் என்ற பயம். சிறு வயதில் காமிக்ஸ் பெரிய சைஸ் புத்தகம் ராமாயணம், யாரோ வடக்கத்தி ஓவியர் போட்ட படங்களுடன், அதுவே போதும் போலத் தோன்றுகிறது, என் ராமாயணம் வளர்ந்த பிள்ளைக் கோயில் அது. காமிக்ஸ் புத்தகம் சாதிக்க முடிந்ததை காவியப் புத்தகம் நீக்கிய கதையாகி விட்டது. ஆனால் ஒரு சின்ன எண்ணம், இத்தனை நூற்றாண்டுகளாக மனிதர்கள் இந்த நூலை வைத்துக்கொண்டு என்னதான் செய்திருப்பார்கள்? ஏதேனும் அதில் சாரம் இல்லாமலா அத்தனை பேரும் ஈடுபட்டிருப்பார்கள்? 

அப்படி இருக்கும் நாள்களில்தான் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம் எப்படி ராமாயணத்தைப் பார்க்கிறது என்னும் ரகஸ்ய சித்தாந்தப் பார்வையைப் பற்றிப் படிக்க நேர்ந்தது. பார்த்தால் அது உலகத்திற்குள் ஒரு உலகம், யாரும் அறியாமலேயே, யாரும் கண்டு கொள்ளாமலேயே. ஆனால் அந்த மறைபொருள் பார்வையைச் சுமந்த படி நாத முனிகளுக்கும் முன்னிலிருந்து ஒரு சில ஆசிரியர்களின் குழு தமக்குள் அந்தப் பார்வையைப் பேணிக்காத்தபடி வந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. 

குருபரம்பரையைப் படிக்கும் போது ஒரு கேள்வி - ஏன் ஸ்ரீராமானுஜர் ராமாயணத்தைக் கற்க திருமலைக்கு மேல்  இருந்தவரிடம் போய் நடையாய் நடந்து தெரிந்து கொண்டார்? அப்படி என்ன மறைபொருள் ராமாயணத்தில்? எல்லாம் வெட்ட வெளிச்சமான க்தைதானே? வடமொழி தெரிந்தவருக்கு அதில் மேலும் ஒருவர் வாய் சென்று கேட்க என்ன இருக்கிறது? ஆனால் ஸ்ரீ ராமானுஜருக்கு அப்படி ஏதோ ஒன்று அதில் இருந்திருக்கிறது. அதனால்தான் அவ்வளவு பாடு. அது என்ன? 

பெயர் சொல்ல அருகதை அற்றவன் என்று பேராசிரியர்களால் ‘அவ்யபதேசியன்’ என்று அழைக்கப்பட்ட சோழனின் மகன் கூறினானாம் - ‘என் செய்தான் என் தகப்பன்? மதிலில் இருந்து இரண்டு கல்லை வாங்கும் காட்டில் ஒரு தர்சனம் குலைந்ததோ? ஸ்ரீ ராமாயணம், திருவாய்மொழி என்னும் இரண்டு வலிய அரண்கள் வைணவத்தைக் காத்துக்கொண்டிருக்கும் போது?’ என்று. அப்படி என்ன ஸ்ரீ ராமாயணத்திற்கு திருவாய்மொழியோடு சம அந்தஸ்து? திருவாய்மொழி என்பது ஒரு ஜீவன் முக்திக்காகப் பயணப்பட்டு செல்லும் மார்க்கத்திற்கான லாக் புக். It is a mystical record of the soul's journey to the Salavation. ஏன் ஸ்ரீ ராமாயணத்தை அதனோடு ஒப்பிட்டான் அந்த அரசன் மகன்? 

அந்த மறைபொருளைத் தேடி நான் போன போது அதனுள் ஓர் உலகமே விரிந்தது. நான் பார்த்த ராமாயணம் வேறு. இவர்கள் பார்த்து வந்திருக்கும் ராமாயணம், வைணவத்தில், வேறு. ஒரே நூலைப் பற்றி மறைவாக ஓர் உலகமும், அதைப் பற்றி எந்த அக்கறையும் கொள்ளாமல் வெளியில் வெளிச்சமாக ஓர் உலகமும் பக்கத்தில் பக்கம் காலத்திற்கும் இருக்க முடியும் என்று சொன்னால் நம்புவது கஷ்டம். ஆனால் அப்படித்தான் இருந்திருக்கிறது. 

ஆனால் அந்த  மறைபொருளைத் தெரிந்துகொண்ட பொழுது ராமாயணம் இதுவாக இருக்குமா என்ற நம்பிக்கையின்மைதான் எனக்கு ஏற்பட்டது. பொதுவாக ராமாயணம் அறிந்தவருக்கும் அது சீரியஸான விஷயமாக படவில்லை. ஆனால் அந்த மறைபொருள் உலகம்தான் என்னை ராமாயணத்தில் புதிய பிரவேசத்திற்குக் கதவுகளைத் திறந்துவிட்டது. பார்த்த பழைய நபர்களைக் காணவில்லை. அனைவருக்கும் ஏதோ மறைபொருளின் பின்னணி இருக்க, நிதய தத்துவங்களின் விளக்கங்களாய் அவர்களின் இயக்கங்கள் கண்முன் விரிந்தன. இதற்கான விளக்கக் குறிப்புகள் வைணவ வியாக்கியானங்களில் எங்கும் அங்கங்கே விரவித்தான்  கிடந்தன. ஆனால் நம் கண்களில் ஒரு வித மையைத் தடவிக் கொள்ளும் வரை அவை தம்மொளியைக் காட்டுவதில்லை போலும்! எனக்கு இயல்பான சந்தேகம் விட்ட பாடில்லை. என்ன இவர்கள் என்னுடன் கண்ணாம்பொத்தி விளையாடுகிறார்களோ என்ற ஐயம். ஆனாலும் அவர்கள் என்னைப் பற்றிப் பொருட்டே இன்றி எக்காலத்திலிருந்தோ அப்படிப்பட்ட ராமாயண உலகத்தை அருள் நூலின் விநியோகமாகத்தான் கண்டு வந்துள்ளனர். 

ராமாயணம் நடந்த கதையா அல்லது கற்பனையா என்றெல்லாம் பெரும் வாதம் பதில் வாதம் என்று இருந்த நாட்களில் இந்த வைணவ இலக்கியங்களில் கூறப்பட்ட ஒரு கருத்து என்னைப் பெரிதும் அதிர்ச்சியுறச் செய்தது. அதிலும் தூப்பில் பிள்ளை என்று அறியப்பட்ட ஸ்ரீ வேதாந்த தேசிகரின் நூல் ஒன்றில்தான் படித்த நினைவு. ஸ்ரீ ராமாயணம் என்பது முற்றிலும் மனித உள்ளத்தில் சதா நடை பெற்றுக் கொண்டிருக்கும் கதை, ஜீவனின் பிறவிப் பயணத்தில் நித்யமாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இதிகாசம். இது இப்படியாக இருந்து கொண்டே இருக்கிறது என்பதால்தான் இது இதிகாசம். 

ஜீவன் இந்த ஸம்ஸாரத்தில் சிறை எடுக்கப் பட்டிருக்கிறான். அதுதான் அவனது அசோக வன வாழ்வு. அந்த ஜீவன் தான் சீதா தேவி. சிறையெடுத்த தசமுகன் தான் தச இந்திரியங்களால் ஆன தத்துவங்கள். தூங்கும் தமோ குணம், ஆர்பாட்ட கோப தாபம் என்னும் ராஜஸ குணம் ஆகியவற்றின் உடன் பிறந்து ஆனால் தன் இயல்பால் கடவுளிடம் சென்று சேர்க்கும் இயல்பு கொண்ட சத்துவ குணம்தான் விபீஷணன். 

இந்த ஜீவன் கடவுளுடன் தான் இருந்தது. அவனுடைய நாயகியாக. காதலனுக்குக் காதலி போன்று அவ்வளவு நெருக்கமான ஸாயுஜ்யத்தில். ஆனாலும் விவரிக்க இயலா ஏதோ ஒரு காரணம், ஏதோ மாய மானின் கவர்ச்சி, இந்த ஜீவன் பரமாத்மாவிடம் இருந்து பிரிய ஒரு நிமித்தம் ஆகிவிட்டது. தானே தன் பிரிவைத் தேடிக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் பரமாத்மாவோடு ஒன்றிய நிலைதான் இந்த ஜீவனின் உண்மை இயல்பே என்னும் போது இந்த ஜீவனை யார் துரத்துவார்கள் எங்கிருந்து? ஆனாலும் ஏன் இது, தானே தன் பிரிவைத் தேடிக் கொள்ள வேண்டும்? அதுதான் அத்தனை உலக மதங்களிலுமே அவிழாப் புதிர். அந்தப் புதிரைத் தான் வால்மீகி மிக அழகாக பொன் மான் மாய மான் என்றார். 

புலன்கள் இந்த ஜீவனை சிறையெடுத்ததும் கடவுளுக்கும் ஜீவனுக்கும் இடையே ஒரு தேட்டம் ஏற்படுகிறது. யாரை யார் தேடுவது? ஜீவனின் நிலை உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்த படியே நொந்து போவதுதான். அவன் அத்தனை முயற்சிகளுமே அவனின் கையாலாகாத் தனத்திற்கான நிரூபணங்கள்தாம். தன் கையில் ஒன்றுமில்லை என்று அவன் உணரும் கணம்தான், பரம்பொருளைச் சென்று உலுப்பிப் பிரிந்த ஜீவனுக்காக ஏங்கி நடையாய் நடந்து இந்தப் புலன்களால் ஆய உலகிலிருந்து, ஜீவனின் அகங்கார சாம்ராஜ்யத்திலிருந்து அந்த ஜீவனை சிறை மீட்கும் யத்தனம் ஊரைக் கூட்டி வளைத்து நடை பெறுகிறது. 

தேடும் கடவுளுக்கு ஜீவனைப் பற்றிய உளவு அறிந்து வந்து சொல்லவும், கவலையில் சாகும் ஜீவனுக்குக் கடவுளைப் பற்றிய சேதி சுமந்து செல்லவும் ஓர் ஆசாரியன் தேவை. அவன் தான் மாருதி. அவனால் ஜீவனுக்குச் சொந்தமான திவ்ய நிலையைப் பற்றிய உத்திரவாதமாக, கடவுளின் இடையறாத அக்கறையின், ஏக்கத்தின் அத்தாட்சியாக அளிக்கப் படுவதுதான் கணையாழி. அந்த குரு தத்துவத்தின் காட்சியிலிருந்து மீட்புப் படலம் துவக்கம், ஜீவனின் நித்திய காவியத்தில். இந்த ராமாயணம் நடக்கும் இடம் வேறெங்கும் இல்லை. உன் உள்ளம் உன் வாழ்க்கைதான் என்கின்றனர் வைணவ ஆசாரியர்கள். 

மீட்கும் நிலையில் இந்த ஜீவன் எப்படியெல்லாம் புடம் போடப்படுகிறது! எப்படியெல்லாம் அக்னி பரிட்சைக்கு உள்ளாக்கப் படுகிறது! உயிர் போய் உயிர் மீளும் துயர வாட்டல்களுக்குப் பின் தான் ஜீவனின் அங்கீகரிப்பு நடக்கிறது. இது என்ன கொடுமை? ஏன் இப்படி மீட்கும் ஜீவனை வாட்ட வேண்டும்? இது என்ன சுத்திகரிப்பு? 

புலன்கள் சிறையெடுத்தாலும் இந்த ஜீவனின் இயல்பு ஒரு நாளும் மாறவில்லையே? பின் ஏன் இந்த அக்னி ஸ்புடம்? 

ஆம் ஜீவனின் அருள் மீட்பு என்னும் பெரும் திட்டத்தில் ஏன் என்ற கேள்விகள் உலகு எங்கும் அருள் வழிகளில் கேட்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன? ஆனாலும் ஜீவனுக்கும் பரம்பொருளுக்கும் இடையே உள்ள அந்த மர்ம பந்தம், ரகசிய பரிமாற்றம்.. அதற்கு விடை என்ன? 

‘இறைவா! ஏன் என்னை இறுதியில் கைவிட்டீர்? ‘ என்று அலறிய யேசுக் குரலுக்கு என்ன பதில்? 

அன்னை ஜானகியைத் தீக்குளிக்க வைத்தான் ராமன் என்னும் போது அது கதை, எனக்குப் படுகோபம் வருகிறது. ஆனால் என்னை ஜானகியாய் வைத்து நான் ஜீவனாய்ப் படும்பாட்டைப் பார்க்கும் போது, மீட்கும் தருவாயில் இந்தப் பரம்பொருள் ஏன் தான் இப்படி அக்கினியில் போட்டு என்னை வாட்டுகிறது? ஆற்றொணா வேதனை என்னும் தாபத் தீயில் போட்டு ஏன் தான் தடுத்தாட்கொண்ட ஜீவனையே பரம்பொருள் வாட்டித் தூய்மை படுத்த வேண்டும்? 

ராமாயணம் ஓர் அருளியல் நூல் என்னும் போது விஷயமே மாறிவிடுகிறது. ஜீவனின் நிதய் வாழ்க்கையின் குறிப்பேடுதான் சீதாவின் சரிதம் என்னும் போது உலகத்துள் உலகம் விரிந்துகொண்டே போகிறது. அதே அந்தப் பழைய காட்டு வால்மீகியின் சொற்கள் ஜகஜ்ஜால மந்திரக் கோலாய் ஆகிவிடுகின்றன வைணவ ஆசாரியர்களின் கைகளில்! ராமாயண கதா பாத்திரங்கள் நிகழ்வுகள் அனைத்தும் என்னுள் நடந்துகொண்டிருக்கும், உங்களுக்குள் நடந்துகொண்டிருக்கும் நித்தியமான அருளின் பரிபக்குவங்களுக்கும் பரிமாற்றங்களுக்கும் உருவகங்களாய் ஆகிவிடுகின்றன. 

இந்த மாற்றம் என் கண்களின் முன்னாலேயே நடைபெறும் பொழுது என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். எந்த ஸ்விட்சைத் தட்டித் தொலைத்தார்கள் இந்த வைணவ ஆசாரியர்கள்? நான் பார்த்த நூல் நான் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே மாறும் இந்த மாயாஜாலம் என்ன? அருளின் அற்புத விநியோகம் இது என்ன? இதை முழுவதுமாக ஓர் நூலாய் ஆக்கிவைத்துள்ளார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை. மொத்த வியாக்கியானங்களிலும் விரவி வைத்திருக்கிறார்கள் இந்தக் குறிப்புகளை. ஆனால் இந்த மர்ம தேசத்தின் சாவிகளை வைத்துத்தான் திருவாய்மொழி என்னும் உலகத்தையே திறக்க முடியும். அப்படி ஊறியிருக்கின்றார்கள் இந்த இரட்டை அருள் கிரந்தங்களில் அந்த அருளாளர்கள்! அதைத்தான் அந்த அரசன் மகன் சரியாகச் சொன்னான் - ஸ்ரீராமாயணம், திருவாய்மொழி என்னும் இரண்டு வலிய அரண்கள் வைணவத்தைக் காத்துக் கொண்டிருக்கின்றன’ என்று. 

இந்த மகானுபாவர்கள் ராமாயணத்தின் சொற்களில் காணும் பொருளை  மறைக்கும் திரைச் சீலையாகக் கையாண்டு, அந்தச் சொற்களின் பின்னால் மறைந்துள்ள மௌனங்களின் ஆழத்தில் தங்கள் புதையல்களைக் கண்டடைகின்றனர் என்பது வியப்பு. ஆனால் இந்த அருள் அனுபவப் பார்வைக்கான சூக்ஷும நூலாக ராமாயணத்தைக் கையாளும் இவர்கள் ஏன் இதைப் பிரசாரப்படுத்தாமல் 1500 வருடங்களுக்கும் மேலாக மறைபொருளாகவே கொண்டு வந்திருகின்றனர் என்று புரியவில்லை. சொன்னால் மட்டும் யாரும் இதை ஏற்றுக் கொண்டிருப்பார்களா என்பதும் ஒரு கேள்வி. முதலில் எனக்கும் புரியாமல்தான் இருந்தது. நான் பழைய வாதங்களை வைத்துக்கொண்டு பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு விஷயத்தில் என் கேள்விகள் இந்தப் பார்வையில், ராமாயணத்தைப் பற்றி என் அக உலகின் கிரந்தம், ஜீவனாகிய என்னுடைய ஆதி முதல் வந்த லாக் புக் என்பது புரிந்த போது, எல்லாக் கேள்விகளும் எனக்குள்ளேயே திரும்பிச் சென்றன. ரொமப்வும் படுத்திவிட்டார்கள் இந்த வைணவ ஆசாரியர்கள்! 

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*
Message has been deleted
Message has been deleted

DEV RAJ

unread,
Jan 28, 2014, 11:01:31 AM1/28/14
to vall...@googlegroups.com, min tamil
On Monday, 27 January 2014 09:52:53 UTC-8, Mohanarangan V Srirangam wrote:
’பனுவல் சிதைப்பெல்லாம் உன்னுடைய பிரமை. அப்படி எதுவும் நடக்கவில்லை. எல்லாம் அந்த மஹா ரிஷிகள் சொல்லிய வார்த்தைகள் அக்ஷரம் பிசகாமல் அப்படியே ஸ்ரீ வால்மீகி ராமாயணம் என்று அவர் அவருக்குச் சொல்ல, அவர் இன்னொருவருக்குச் சொல்ல, அவர் இருவருக்குச் சொல்ல, இருவர், பலருக்குச் சொல்ல பாரெங்கும் புகழும் ராமாயணம் வந்து சேர்ந்தது’ என்று சொல்கிறீர்களா?. 

கலியாணம் ஆயிடுத்துன்னா புருஷன்தான் கண்கண்ட தெய்வம்.............
 

அப்படித்தான் சீதையே வைஷ்ணவ பாஷையில் பிராட்டியே சொல்கிறாள் -

தீ₃நோ வா ராஜ்யஹீநோ வா யோ மே ப₄ர்தா ஸ மே கு₃ரு​: | 
தம் நித்யமநுரக்தாஸ்மி யதா₂ ஸூர்யம் ஸுவர்சலா ||  
யதா₂ ஶசீ மஹாபா₄கா₃ ஶக்ரம் ஸமுபதிஷ்ட₂தி | 
அருந்த₄தீ வஸிஷ்ட₂ம் ச ரோஹிணீ ஶஶிநம் யதா₂ ||  
லோபாமுத்₃ரா யதா₂க₃ஸ்த்யம் ஸுகந்யா ச்யவநம் யதா₂ | 
ஸாவித்ரீ ஸத்யவந்தம் ச கபிலம் ஶ்ரீமதீ யதா₂ ||  
ஸௌதா₃ஸம் மத₃யந்தீகேஶிநீ ஸக₃ரம் யதா₂ | 
நைஷத₄ம் த₃மயந்தீவ பை₄மீ பதிமநுவ்ரதா ||  
ததா₂ஹம் இக்ஷ்வாகுவரம் ராமம் பதிம் அநுவ்ரதா |

அவள் தனக்கு முன்னோடியான இந்திராணி, அருந்ததி,
ஸாவித்ரி, தமயந்தி போன்ற பதினோரு பத்தினியரின்
பெயர்ப் பட்டியலையும் தருகிறாள். ஒருகால் இதுவும்
பனுவல் சிதைப்பு முயற்சியோ ! இதற்கு கோவிந்த
ராஜர் என்ன உரை செய்துள்ளார் ?

 
தேவ்

செல்வன்

unread,
Jan 28, 2014, 6:11:37 PM1/28/14
to vallamai, min tamil

2014-01-23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பாலன் துருவனுக்கு கடவுளைப் பற்றிச் சொன்ன அந்த பக்தியே உருவான நாரத ரிஷி, யாரைக் காண கடவுள்களே கோடானுகோடி காலம் தவம் செய்தும் காண முடியவில்லையோ அந்த ஸ்ரீமந் நாராயணனை அநவரதம் கண்டு பேசி மகிழும் பாக்கியம் பெற்ற அந்த பக்தியின் திருவுருவை எனக்கு, இலட்சிய உருவாக்கத்தின் அழிப்பு என்ற படியாகக் கேலிச் சித்திரமாக, வெறும் காமச் சித்திரமாக அடித்துக் காட்டியது யார்? நிச்சயம் எந்தப் பகுத்தறிவு வாதியும் இல்லை; எந்த நாத்திகனும் இல்லை. சிறு வயதில் என் உள்ளத்தின் கொள்ளை அன்புக்குப் பாத்திரமான நாரத முனியை அவ்வாறு சித்திரித்தவர் யார்? வியாசரா? அல்லது வியாசரின் நூலில் காலத்தால் பின் வந்து கண்ட படி கைவரிசை காட்டிய அந்த முகமற்ற கபந்த உருவமா? 

மீண்டும் மீண்டும் சொல்கிறேன் -- எனக்கு எவரையும் குற்றம் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் வளர்ந்தெழும் காலத்து நம்பிக்கைகள், வளர்ந்த பின் ஏற்படும் அறிவுகளால் பூரணம் அடைய வேண்டும். அப்படிப்பட்ட நம்பிக்கைகளை மட்டுமே நாம் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். அப்படிப்பட்ட நம்பிக்கைகளின் கதைகளை மக்களுக்குத் தருவதே மரபு சார்ந்த பேரறிவாளர்களின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அப்படித்தான் இருக்கிறதோ? உங்கள் மனசாட்சி என்ன பதிலை உங்களுக்குச் சொல்கிறதோ அதுவே உங்களுக்கான் பதிலாய் இருக்கட்டும். என்றோ புதையுண்ட குழந்தைமைகள் உங்கள் உள்ளங்களில் உயிர்த்தெழுந்தால் அதுவே போதும். 


பொதுவாக பிள்ளைகளை நல்லகுணங்களுடன் வளர்க்க "இராமனை போல் தந்தைமேல் பாசமாக இரு, இலட்சுமணன் போல் அண்ணன் மேல் பாசமா இரு" என சொல்லுவது வழக்கம். உலகெங்கிலும் இப்படி பிள்ளைகளுக்கு உதாரணமாக காட்ட, பொதுமக்கள் பின்பற்ற முன்னுதாரணமான மனிதர்கள் தேவை. புராண மாந்தர்களை வைத்து அந்த இடத்தை நிரப்பாவிடில் சினிமா நடிகர்களும், நடிகைகளும் முன்னுதாரணமாகும் வாய்ப்பு உள்ளது. அஜீத்தை பார்த்து வேட்டி கட்ட ஆரம்பித்தவர்களும், எம்ஜிஆரை பார்த்து தாய்ப்பாசத்தை கற்றுக்கொன்டேன் (!!) என்பவர்களும் உலகில் ஏராளம்.

சரியோ, தவறோ, இராமன் நல்லவனோ, கெட்டவனோ இராமனை முன்னுதாரணமாக கொண்டு வளர்ந்த பிள்ளைகள் பாரதமண்ணில் ஏராளம். ஒரு உதாரணம் மகாத்மா காந்தி. புராணநூல்களை போஸ்ட்மாடர்னிச கண்ணோட்டத்தில் பார்த்து "இராமன் ஆணாதிக்கவாதி" என்பது மாதிரி முடிவெடுத்து அதை பிள்ளைகளுக்கு கற்பித்தால் நமக்கு இன்னொரு காந்தி கிடைக்க மாட்டார்.

புராணங்கள், இதிகாசங்களை உடைத்து எறிந்தால் அதன் இடத்தை நிரப்ப தயாராக இருப்பது சினிமாவும், அரசியலும் தான். இந்தியாவின் மரபும், தொன்மையும் நம் இதிகாசங்களில் தான் இருக்கிறது. உடைத்து எறிவது சுலபம். அதுபோன்ற இன்னொன்றை கட்டுவது மிக கடினம்.






--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted

Nagarajan Vadivel

unread,
Feb 9, 2014, 10:46:45 AM2/9/14
to vallamai

2014-02-09 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
(பேராசிரியர்களே! எனக்கு ஓர் உண்மை தெரியணும் சாமீ..!) 


பேராசிரியர்களை இம்சை செய்யலாமா ஐயா பாவம் அவர்கள்

வ.வே.சு அய்யர் கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபோது இறுதிப் பகுதியில் சீதை என்னும் கம்ப நாடகப் பாத்திரத்தைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதத் திட்டமிட்டிருந்தார்.  அவர் வாழ்நாளில் அது நடைபெறவில்லை.  எனினும் அவர் நினைவாக அவர் அடியொற்றி சீதை என்ற பாத்திரப் படைப்பை கம்பனின் நோக்கில் ஒரு ஆங்கிலக் கட்டுரையாக வெளியிட்டனர்

இந்நூலின்  பக்கம் 311 -ல் இருந்து கம்பனின் சீதை என்ற ஆய்வுக் கட்டுரை தொடங்குகிறது

பார்க்க படிக்க பகர்க

இம்சை

Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 10, 2014, 11:56:38 AM3/10/14
to vallamai, min tamil




2014-03-10 20:30 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:


நல்லதை மக்களுக்குச் சொன்னவன் கெட்ட கதியை அடைவான் என்று உலகில் எங்கும் கிடையாது. 

’நல்லதைச் செய்தவன் ஒரு நாளும் நாசத்தை அடையமாட்டான் அர்ஜுனா!’ என்று ஸ்ரீகீதையில் கிருஷ்ணன் தொடங்கி, ‘அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய்’ என்று சொன்ன பாரதியார் வரை எல்லோரும் நல்வழியைச் சொன்னவனுக்கு ஒரு நாளும் நாசம் இல்லை, கெடுதல் இல்லை, கீழ்மை இல்லை என்றுதான் சொல்லி வந்துள்ளார்கள். ஆனால் இதிகாசத்தில் ஒரு கதை இப்படி! 


நல்லதைச் செய்தவரும், நல்லதைச் சொன்னவரும் ஒரு கெடுதலும் இன்றி வாழ்வார்கள் என்று கதை சொல்லுங்கப்பா! 

:) 
நல்லதைச் சொல்லியுள்ளீர்கள்!
நன்றி.
சொ.வினைதீர்த்தான்.
Message has been deleted

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 18, 2014, 2:33:59 PM3/18/14
to vallamai, min tamil
சிறப்பான சமாதானம் நண்பரே.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2014-03-18 23:45 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ராமன் என்பவன் கடவுள், மனிதனுக்குக் காட்டப்பட்ட இலட்சியம் என்பதையெல்லாம் விட்டுவிடுவோம். அப்படிப் போனால் ஏகப்பட்ட கேள்வி வருகிறது. அது வேண்டாம். 

ராமன் செயதது சரியா என்று சீறலாம். ஆனால் சந்தேகத்தில், அதனால் விளையும் நிஷ்டூரத்தில், வெறுப்பில், அதற்குப் பிறகு தன்னைத்தானே நொந்து துயரில் ஆழ்ந்து மூழ்குவதில் நிச்சயம் அங்கு ராமனாக வேடம் கட்டுவது நாமேதான் என்று அல்லவோ காவியம், இதிகாசம் என்னும் கண்ணாடி மாளிகைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன! 

மனித வாழ்க்கையின் மர்மமான கணங்களைப் பூதக் கண்ணாடி போட்டுக் காட்டிக் கருத்திற்கு இலக்காக்கும் கற்பனையின் சாகசங்கள்தாம் காவியங்கள், இதிகாசங்கள். 


Message has been deleted
Message has been deleted
Message has been deleted

Arriane Abigail

unread,
Aug 26, 2017, 3:08:44 AM8/26/17
to வல்லமை, mint...@googlegroups.com
ஐயா, திரு மோகன் அவர்களது முழு பதிலை எனக்கு அனுப்பி வைக்கமுடியுமா? 

//தேடும் கடவுளுக்கு ஜீவனைப் பற்றிய உளவு அறிந்து வந்து சொல்லவும், கவலையில் சாகும் ஜீவனுக்குக் கடவுளைப் பற்றிய சேதி சுமந்து செல்லவும் ஓர் ஆசாரியன் தேவை. அவன் தான் மாருதி. அவனால் ஜீவனுக்குச் சொந்தமான திவ்ய நிலையைப் பற்றிய உத்திரவாதமாக, கடவுளின் இடையறாத அக்கறையின், ஏக்கத்தின் அத்தாட்சியாக அளிக்கப் படுவதுதான் கணையாழி. அந்த குரு தத்துவத்தின் காட்ச......?????// 

இவ்வளவுதான் என்னால் படிக்க முடிகிறது.

N. Ganesan

unread,
Aug 26, 2017, 3:46:55 AM8/26/17
to வல்லமை, mint...@googlegroups.com


On Saturday, August 26, 2017 at 12:08:44 AM UTC-7, Arriane Abigail wrote:
ஐயா, திரு மோகன் அவர்களது முழு பதிலை எனக்கு அனுப்பி வைக்கமுடியுமா? 

//தேடும் கடவுளுக்கு ஜீவனைப் பற்றிய உளவு அறிந்து வந்து சொல்லவும், கவலையில் சாகும் ஜீவனுக்குக் கடவுளைப் பற்றிய சேதி சுமந்து செல்லவும் ஓர் ஆசாரியன் தேவை. அவன் தான் மாருதி. அவனால் ஜீவனுக்குச் சொந்தமான திவ்ய நிலையைப் பற்றிய உத்திரவாதமாக, கடவுளின் இடையறாத அக்கறையின், ஏக்கத்தின் அத்தாட்சியாக அளிக்கப் படுவதுதான் கணையாழி. அந்த குரு தத்துவத்தின் காட்ச......?????// 

இவ்வளவுதான் என்னால் படிக்க முடிகிறது.

You can read the last lines of that mail by Rangan.  

Hope this helps,
~NG 

தேடும் கடவுளுக்கு ஜீவனைப் பற்றிய உளவு அறிந்து வந்து சொல்லவும், கவலையில் சாகும் ஜீவனுக்குக் கடவுளைப் பற்றிய சேதி சுமந்து செல்லவும் ஓர் ஆசாரியன் தேவை. அவன் தான் மாருதி. அவனால் ஜீவனுக்குச் சொந்தமான திவ்ய நிலையைப் பற்றிய உத்திரவாதமாக, கடவுளின் இடையறாத அக்கறையின், ஏக்கத்தின் அத்தாட்சியாக அளிக்கப் படுவதுதான் கணையாழி. அந்த குரு தத்துவத்தின் காட்சியிலிருந்து மீட்புப் படலம் துவக்கம், ஜீவனின் நித்திய காவியத்தில். இந்த ராமாயணம் நடக்கும் இடம் வேறெங்கும் இல்லை. உன் உள்ளம் உன் வாழ்க்கைதான் என்கின்றனர் வைணவ ஆசாரியர்கள். 

மீட்கும் நிலையில் இந்த ஜீவன் எப்படியெல்லாம் புடம் போடப்படுகிறது! எப்படியெல்லாம் அக்னி பரிட்சைக்கு உள்ளாக்கப் படுகிறது! உயிர் போய் உயிர் மீளும் துயர வாட்டல்களுக்குப் பின் தான் ஜீவனின் அங்கீகரிப்பு நடக்கிறது. இது என்ன கொடுமை? ஏன் இப்படி மீட்கும் ஜீவனை வாட்ட வேண்டும்? இது என்ன சுத்திகரிப்பு? 
புலன்கள் சிறையெடுத்தாலும் இந்த ஜீவனின் இயல்பு ஒரு நாளும் மாறவில்லையே? பின் ஏன் இந்த அக்னி ஸ்புடம்? 

ஆம் ஜீவனின் அருள் மீட்பு என்னும் பெரும் திட்டத்தில் ஏன் என்ற கேள்விகள் உலகு எங்கும் அருள் வழிகளில் கேட்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன? ஆனாலும் ஜீவனுக்கும் பரம்பொருளுக்கும் இடையே உள்ள அந்த மர்ம பந்தம், ரகசிய பரிமாற்றம்.. அதற்கு விடை என்ன? 

‘இறைவா! ஏன் என்னை இறுதியில் கைவிட்டீர்? ‘ என்று அலறிய யேசுக் குரலுக்கு என்ன பதில்? 



ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

Arriane Abigail

unread,
Aug 26, 2017, 6:44:33 AM8/26/17
to வல்லமை, mint...@googlegroups.com
Thank you very much Sir. It was an eye opening write up. 

Mohanarangan V Srirangam

unread,
Aug 26, 2017, 8:51:51 AM8/26/17
to வல்லமை
Friends, 

I have stopped this thread long back. Kindly don't make postings in this. 

I do not have proper net facilities or long time for internet and also I am not interested in these subjects. Neither I have time nor interest in any discussion on many subjects. 

So kindly don't mistake me and please cooperate. Sorry if I sound uncourteous. 

Thank you for understanding. 

***
Reply all
Reply to author
Forward
0 new messages