ஈழத் தீவிலே இந்து சமயம் இல்லாமல் போயிருக்கும். அச்சூழலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் அவதரித்தார்கள். திருநீறு அணிந்து பள்ளிகளுக்கு இந்து சமயத்தார் குழந்தைககள் செல்ல இயலாத நிலையில் காலனிய அரசாங்கம், சர்ச்சுகள், மிஷனரிகள் பள்ளிகள் நடாத்திவந்த சூழல் இலங்கையிலும், இந்தியாவிலும் பரவிப் பெருகிவந்தது. அதை எதிர்த்து, ஹிந்து சமயத்தார்களின் வீட்டுப் பிள்ளைகள் பள்ளிகளுக்குச் சென்று நவீன முறையில் கல்வி கற்க அடிக்கல் நாட்டும் பள்ளிகளை 1840களில் தொடங்கினார். நான்கு தொகுதிகளாக பாலபாடம் வெளியிட்டார். 1864-ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நாவலர் அவர்கள் அதே முறையில் பள்ளியைத் தொடங்கி நடத்தினார். அது என்றும் நடைபெற்றுவர நிலபுலங்களை வாங்கி அறக்கட்டளை வைத்தார். 150 ஆண்டுகளுக்கு மேலாக, சிறப்புடன் அப் பள்ளி தில்லையில் நடைபெற்றுவருகிறது.
ஆறுமுக நாவலர் பள்ளியின் 150-ஆம் ஆண்டு விழா மலர்:
நாவலர், நாவலர் தொடங்கிய தில்லைப்பள்ளியின் வரலாறு குறித்த அரிய கட்டுரைகளை இதில் காணலாம். படித்தருளுக.
விளம்பரங்களே இன்றி 256 பக்கங்களில் பள்ளிப் பழைய மாணவர்கள் மலர் வெளியிட்டுள்ளமை அரிதான செயல்.
பக்கம் 139-ல் ஒரு கவிதை. அதில் இறைவணக்கமாக நாவலர் பள்ளிகளில் பாடும் வெண்பா சிதைந்த நிலையில் உள்ளது:
அதற்கான மூல வடிவம் பாலபாடம் போன்ற நூல்களிலோ, இலங்கைத் தமிழர்கள் அச்சிட்ட நூல்களில் இருக்கும்.
தெரிந்தோர் இங்கே அளிக்க வேண்டுகிறேன். செப்பமிட என் முயற்சி இது:
அகத்தியர் மாத்த மிழ்அரிச் சுவடி
செகத்தலப்ர காசமுடன் செப்பமாய் நான்படிக்க
வாரா எழுத்தெல்லாம் வந்தருள நல்வரம்தா
காரார் கணபதியே காப்பு
அகத்தியர் வரலாற்றுக்கு நாவலரவர்களின் பங்களிப்புப் பற்றிப் பின்னர் இவ்விழையில் சொல்கிறேன்.
நனிநன்றி,
நா. கணேசன்