Re: [MinTamil] Fwd: அரிட்டர் - தமிழகத்தில் பெளத்த / சமணம்

23 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 10, 2015, 11:29:41 PM9/10/15
to மின்தமிழ், vallamai


On Thursday, September 10, 2015 at 7:37:04 PM UTC-7, BALASUBRAMANIAN ZEN wrote:

It is just a forwarded message. I have not inserted anything. Really I don't know, it may hurt others feelings and I didn't intend to do so.
 
I wish to get the facts clarified given in the message among us. Reg. the height of the hill, we have to clarify& know the fact.


அன்பின் திரு. பாலு,

அரிட்டநேமி என்பது தீர்த்தங்கரரைக் குறிக்கும் ஒரு பெயர்.
சென்னைப் பல்கலைப் பேரகராதி:
அரிட்டநேமி ariṭṭa-nēmi

n. < Ariṣṭa- nēmi. The tīrttaṅkarar


நமக்குத் தெரிந்த நூற்றுக்கணக்கான தமிழ் பிராமி கல்வெட்டுக்களில்

பௌத்த சமயத்தை தெளிவாகக் காட்டும் கல்வெட்டு ஒன்றுமே இல்லை என்பர்.

ஐராவதம் முதலில் ஒரு கல்வெட்டை பௌத்தம் என்றார். நாகசாமி விளக்கத்தால்

அதை சமணம் என மாற்றினார். தமிழ் மன்னர்கள் சமணத்தை ஆதரிக்க

ஒரு முக்கியக் காரணம் உண்டு: அவர்களது எதிர்மன்னர்கள் ஆந்திரம், சிங்களம்

பௌத்தர்கள். எனவே இவர்கள் கன்னட நாடு போல சமணத்தை மிகப் பெரிய

அளவில் ஆதரித்தனர்,


தேரூர் பற்றிய ஒரு தமிழ் ப்ராமிக் கல்வெட்டு அண்மையில் கிடைத்தது.

அது தேரரூர் பௌத்தர்கள் கல்வெட்டு ஆகலாம். 

எழுத ஆரம்பித்தேன், பூர்த்தி செய்யலை.


சங்ககாலத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் பௌத்தக் குறிப்புகள்

http://nganesan.blogspot.com/2013/01/tamil-brahmi-inscriptions-and-buddhism.html



On Jan 22, 2013 10:41 pm, Thevan <apthe...@gmail.com> wrote:
> //இச்சொல்லின் 'ஞ’ என்பதே ஜ்ஞ [ज्ञ  -அறிந்தவன்]
> என்பதைச் சொல்வதுதான்; கலைஞன் என்றால்
> கலை அறிந்தவன் என்று பொருள்.
> தைவஜ்ஞ - दैवज्ञ [சோதிடமறிந்தவன்]//
>
> (ज्ञ) இந்த எழுத்தை க்ய என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
>
> दैवज्ञ - தைவக்ய

திரு. தேவரே,

ஞ என்பது தமிழுக்கே சிறப்பான எழுத்து. வடமொழி எழுத்துமாலையில்
இத் தமிழ் எழுத்து கோக்கப்பட்டுள்ளது. ஆனால், வடக்கே இத் தமிழ் எழுத்தை
(ஞ)  உச்சரிக்க யாருக்கும் தெரியாது. ஆந்திரம், கன்னடம் இவற்றிலும்கூட
இந்நிலை அனேகமாக உள்ளது.

அறிஞர், கலைஞர், வலைஞர், எளிஞர், கிளைஞர், இளைஞர், முனைஞர் (தொல்.) ...
தமிழ்ச் சொற்கள். கலை என்னும் தமிழ்ச்சொல் வடமொழியில் கலா என
வழங்குகிறது.

ந- வர்க்கத்து எழுத்து ஞ- என்பது. வலைநர்:வலைஞர்.
வித்யாதானா என்னும் வடசொல் வித்யாதானை எனத் தமிழ் ஆகலாம்.
அண்மையில் மதுரை அருகே பௌத்தம் காட்டும் ஒரு கல்வெட்டு
கண்டறியப்பட்டுள்ளது. அதில் தானா (தானம் ‘charity), தாஞை என
எழுதப்பட்டுள்ளது.  கி.மு. 3 அல்லது 2 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்
ஞகர எழுத்தை விரும்பிப் போற்றினர் என்பதற்கு ஆதாரம் இஃது. பெருந்தேரூர்
மக்கள்
வழங்கிய தாஞை (தானம் என்னும் வடசொல்லைத் தமிழில் எழுதியுள்ளனர்):
http://nganesan.blogspot.com/2013/01/tamil-brahmi-inscriptions-and-buddhism.html
சங்க காலத்தில் 100கணக்கான சமணர் கல்வெட்டுகள் உள்ளன.
ஆனால் பௌத்தம் பற்றிய கல்வெட்டுக்கள் குறைவு. பௌத்தம் பற்றிய
குறிப்புகள் பொதிகை மலைக் கல்வெட்டுகளிலும் (2 கிடைத்துள்ளன
2000-ல். தென்காசி சுப்பிரமணியன் கேட்டார். விரிவாகப் பதில் எழுதணும்.)
தேரூர் பற்றிக் குறிப்பிடும் சமணர்மலைக் கல்வெட்டிலும் பௌத்தம்
இருக்கிறது. விரிவாக செந்தமிழ் (CTamil, CNRS) பாரிஸ் பல்கலைக்
குழுவில் எழுதியுள்ளேன். அங்குக் காணலாம். ஆங்கிலத்திலும்
பதில் இடலாம்.

ஞகர எழுத்து தமிழ், இதை நீங்கள் குறிப்பிடுவது போல வட இந்தியர்களால்
பலுக்கவியலாது. சம்ஸ்க்ருத அட்சரமாலையில் உள்ள தமிழ்
எழுத்து ஞ ஆகும்.

அன்புடன்,
நா. கணேசன்



 

ThankQ
Balu
Madurai.

On 11 Sep 2015 05:54, "Oru Arizonan" <oruar...@gmail.com> wrote:
2015-09-10 14:30 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

//Kill the messenger, attitude is not appropriate//

It is not killing the messenger, it is trying to clarify a genuine doubt because of the nature of conclusion.  Even the ending note was in small letters, //விரிவாக அறியமயிலைசீனிவேங்கடசாமி எழுதிய 'பௌத்தமும் தமிழும்'நூலை படிக்கவும்//

Therefore, my question was whethrer the insertion was by Parry Chezian or Mr. Zen.  I do not understand why you are getting so worked up over nothing.

Once Mr. Zen clarifies, the matter will be closed.  

Oru Arizonan

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

seshadri sridharan

unread,
Sep 11, 2015, 1:33:35 AM9/11/15
to vall...@googlegroups.com
அரட்டன் என்பது தமிழ்ப்  பெயர். துருக்கி மிட்டான் அரசர் பெயரில்  அரட்டஸ் குமர என்பது ஒரு பெயர் 

ஆதன்  

N. Ganesan

unread,
Sep 12, 2015, 8:16:07 AM9/12/15
to மின்தமிழ், vedacha...@yahoo.co.in, உதயன் மு, Dr. Krishnaswamy Nachimuthu, vallamai


On Friday, September 11, 2015 at 10:42:50 PM UTC-7, malarmangay64 wrote:

நான் அழைத்துப் போகிறேன் உங்களை.உடன்
தொல் பொருள் அருங்காட்சியகம் _திரு.
வேதாச்சலத்தையும் அழைத்துக்கொள்ளலாம்.
என் தந்தையின் நண்பர்.அவர் துணையுடன்
மதுரையில் உள்ள அனைத்துப் புராதானச்சின்னங்கள் உள்ள இடங்களைக்
காட்டுவார்.திருமலை நாயக்கர் மகால்
பார்த்திருப்பீர்கள்! அதன் மேல்விதானம்
மொட்டைமாடி பார்த்திருக்கிறீர்களா?
அங்கிருந்து மதுரையை நீங்கள் எடுக்கும்
ஒவ்வொருபுகைப்படமும் ஒருகட்டுரையை
எழுதவைத்துவிடும்.நான் கூட்டிட்டுப்போறேன்.சுபா.


முனைவர் வெ. வேதாச்சலம் எனக்கும் நல்ல நண்பர்.
அவரது மகளார் முனைவர் பட்ட ஆய்வேடு ஜ்யேஷ்டை
பற்றிச் செய்தார். தவ்வை - இளையவள் வழிபாடு
தமிழ்நாட்டிலே தான் மிகுந்து இருந்திருக்கிறது.
இது சுமேரியா நாட்டுக்கும் இந்தியாவுக்கும் உள்ள
மிகப் பழைய தொடர்பு. இளையவள் கொற்றவை.
அவளது அமிசங்கள் கலைமகள், திருமகள்.
பாண்டியர் துறைமுகமான குலசையில்
முப்புராதி அம்மன், முப்புடாதி அம்மன் என்பதெல்லாம் இதுவே.

நண்பர் வேதாசலத்தின் மகள் பிஎச்டி ஆய்வேடு கேட்டுப்
பெற்று தமிழ்மரபு அறக்கட்டளையில் வைக்கலாம்.
அவருக்கும் இம்மடற் பிரதி அனுப்புகிறேன். போனிலும்
சொல்கிறேன்.

ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரங்கராஜனின் மனைவி
ஹரிப்பிரியா சேட்டை பற்றிச் சில கட்டுரைகள் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் சேட்டை வழிபாடு தனி நூலாக விரிவாக
எழுதப்பட வேண்டும். எழுத முன்வருவோருக்கு சில
ஆய்வுக்குறிப்புகள், படிக்கவேண்டிய பிப்லியோக்ராபி, ...
என உதவ இயலும்.

அரிட்டாபட்டிக் கல்வெட்டு சமணரினது. பௌத்தர்களது இல்லை.

வெ. வேதாசலம் தந்த ஒளிப்படங்கள்.  அண்மையில் கிடைத்த தமிழ் ப்ராமிக் கல்வெட்டு,
தேரூர் - தேரரூர் என்பது குமரிமுனையில் உள்ள கவிமணியின் ஊர்.
இலங்கை தேரர்கள் இந்தியா வந்து பொதியிலை (அவலோகிதன்
வாழிடம்) வணங்க வந்த ஊர் ஆகலாம். தேரூரில்
அழகான சோழர் கால அவலோகிதன் (இளையநயினார்) - தாராதேவி
பௌத்த சிற்பங்கள் உண்டு. உதயன் போன்ற நல்ல புகைப்படக் கலைஞர்கள்
hi resolution படங்கஊடன் வெளியிடவேண்டிய மிக முக்கியமான
பௌத்த சிற்பங்கள் அவை..

நா. கணேசன்
 
On 12-Sep-2015 2:11 am, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
எனது  2 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக பயணத்தின் போது களப்பணிக்காக கீழ்க்குயில்குடி மட்டுமே செல்ல முடிந்தது.  சென்ற ஆண்டு ஆனைமலை சென்று பதிவை செய்து வந்தேன். அது விரைவில் வெளியிடப்படும்.
நம் உதயன் அரிட்டாபட்டி சென்றிருந்த போது மிக அருமையான சமணத் தடயங்களைப்  புகைப்படமாக பதிவு செய்து வந்திருந்தார். இதனை கட்டுரையாளர் பாரி அவர்கள் பௌத்த சமயத்துடன்   தொடர்பு செய்து காண்பது எனக்குப் புதிய செய்தி.

இம்முறை  எனது பயணத்தில் அரிட்டாபட்டி சென்று வர ஆவல் உள்ளது. 

சுபா



2015-09-10 18:04 GMT+02:00 Balasubramanian Zen <zen...@gmail.com>:

ஓரிழையில் சேகரம் வேண்டி, இம்மடலை இணைத்துள்ளேன.

பாலு
மதுரை.

---------- Forwarded message ----------
From: "paari chezhian" <a.aa.n...@gmail.com>
Date: 10 Sep 2015 20:06
Subject: அரிட்டர்
To: <zen...@gmail.com>
Cc:

















கி மு
நூற்றண்டு பாறைக்குகைகள்

மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்கோவில் அருகில் கி மு நூற்றண்டுகளில் உருவாகப்ப்ட்ட பாறைக்குகைகள் இரண்டை நேற்று பார்த்து வந்தேன்.

பௌத்த துறவிகள் ஊருக்குள் வசிக்கமாட்டார்கள்
அதனால் ஊருக்கு வெளியே மலை பாறைக் குகைகள் அமைத்து வசிப்பது வழக்கமாம்இலங்கையை ஆண்ட மன்னன் தேவனாம்பரியதிஸ்ஸன் உடைய தாய்மாமன் 'அரிட்டர்என்ற பௌத்த பிக்குஅசோக மன்னருடைய உறவினர் மகேந்திரருடன் சேர்ந்து பாண்டிய நாட்டில் பௌத்தத்தை பரவச்செய்தார்களாம்இந்த ஊருக்கு அருகில் மலைக்குகையில் அரிட்டர் தன் சீடர்களுடன் வசித்துவந்திருகிறார்அவர் பெயராலே இந்த ஊருக்கு அரிட்டாபட்டி என அழைக்கபடுகிறதாம்அரிட்டாமலை என்றும் பெருமாள் மலை என்றும் அழைக்கபடும் இந்த மலையில் தரையிலிருந்து மையில் உயரத்தில் உள்ளது அரிட்டர் வாழ்ந்த கற்குகைபெரிய திருமண மண்டபம் போல மிக பிரமாண்ட கற்குகைஇன்றும் அதே கம்பீரத்தோடு சிதலமடைந்து நினைவுச்சின்னமாக இருக்கிறது.







இன்னொன்று பஞ்ச பாண்டவ படுக்கை குகை என்ற பௌத்த துறவிகளின்

படுக்கை குகையைப்பார்த்தேன்இந்த பெயர் எப்படி வந்தது என அறிய முடியவில்லைஅழகர்கோவிலிருந்து மையில் தூரத்தில் உள்ள உப்போடைப்பட்டி என்ற் கிராமதிலிருந்து மையில் தொலைவில் உள்ளது பஞ்ச பாண்டவ படுக்கைகுகைஇதுவும் பெரிய மிரமிப்பை






ஏற்படுத்தியது

. 50 அடி அகலம் 150 அடி நீளம் தெற்கு பார்த்த திரந்த வெளி.அருகில் எப்போதும் வற்றாத தண்ணீர்குளம். 5 பௌத்த துறவி வசிப்பதற்கு தனித்தனியே சிறுசிறு குகைகள்தனித்தனியே கற்பாறையில் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளதுஉச்சிவெயில் உக்கிரத்திலும் அங்கே மிக குளுர்ச்சியான தென்றல் வீசியது வியப்பாக இருந்தது.


மேற்கண்ட வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச்சின்னங்கள்மாமன்னர் அசோக சக்ரவர்த்தியின் மகன் அல்லது தம்பி மகேந்திரன் தங்கி உலாவிய இடம் இன்று பாழடைந்துசிதலமாகி தன் சுயம்பை இழந்து நிற்கிறதுசில சமூக விரோதிகளுக்கு அதுவே கூடாரமாகவும் அமைந்துவிடுகிறதுஅவற்றை பாதுகாகிற எண்ணம் அரசுக்கு இல்லைவேத மத மறுப்புக் கருத்துகளை பரப்பிய திராவிட கட்சி ஆட்சியில் இதுபோல இந்த்துவ பாசிச சக்திகளுக்கு எதிராக சமத்துவத்தை கற்பிக்கும் பௌத்தசமணஆசீவக நெறிமுறைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.






விரிவாக அறிய

மயிலைசீனிவேங்கடசாமி எழுதிய 'பௌத்தமும் தமிழும்'நூலை படிக்கவும்






 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Reply all
Reply to author
Forward
0 new messages