சேசாத்திரி எழுதினார்
>>>>
அகல் > ஆல் > ஆலன் > ஆலப்பாக்கம், ஆலந்தூர்
இந்தியாவின் தேசிய மரம் : ஆல். அல்லது வட விருட்சம்.
ஆலமர்ந்தாள் என்றால் யால்/ஆல் மரத்தடியில் அமர்ந்த பெண் தெய்வம்.
கருக்கமர்ந்தாள் என்றால் பனைமரத்தையில் உள்ளவள். அது போல.
அரசு (போதி) போல ஆலமரமும் ஒரு fig tree.
ஆலமரத்தின் பழந்தமிழ்ப்பெயர் யால். இன்றும் ஸ்ரீலங்காவில்
யால நேஷனல் பார்க் என யால்/ஆல் மரத்தின் பெயரால் இருக்கிறது.
அரசு என்னும் fig tree-க்கு இல்லாமல், யால்/ஆல் மரத்துக்கு
ஏன் அப்பெயர்? - எனப் பார்க்கவேண்டும். இன்னொரு தமிழ்ப்
பெயர் வட விருட்சம். வடம் என்றால் விழுது (Aerial roots).
யால் (> ஆல்) மரத்தின் சிறப்பே அதன் விழுதுகள் தாம்.
பரிபாடலில் யால் வேதத்தில் இம்மரம் பற்றிச் சொல்லும் போது இருக்கிறது. நச்சினார்க்கினியர் யால் பற்றி எழுதுகிறார். நம்மாழ்வார் சங்கம் வென்ற அகவலில்
பெருமரம் என வர்ணிப்பது இந்த பிரபஞ்ச யால்/ஆல மரத்தைத்தான்.
யால் எல்லா இடத்திலும் ஆல் என்று தற்காலத்தில்
எழுதுதல் போல், மோய்தலை ஓய்தல் ஆக்கிவிடுகின்றனர்.
யாலுதல் - நாலுதல்/ஞாலுதல் என்றும் ஆகும். யானைக்கு
நால்வாய் என பெயர். யால்- என்னும் விழுது போன்ற தும்பிக்கையால்
யானை. யால்- > யானை, யால்/ஆல மர விழுது போன்றிருத்தலான்.
பூலித்தல் - முடி சிலிர்த்து, உடலை வளைத்து நிற்கும் பூலி- > பூனை
என வருதலும் ஒப்பு.
பலவகையான fig மரங்கள் இந்தியாவில் இருக்கின்றன.
அத்தி, அரைசு, இத்தி, இச்சி, இலந்தை/இரத்தி, யால்/ஆல், ....
ஆனால், யால (ஆல) மரம் போன்ற வட விருட்சத்தில் முக்கியமானது
அதன் விழுதுகள் தாம். எனவே, வடம் அல்லது யால் என்று
Aerial roots காரணமாகப் பெறும் பெயர். யால் > ஆல் மரம்
என்பதற்கு யானை (< யால்-) என்னும் சொல்லையும் ஆராய்க.
யானை/ஆனை என்னும் பெயரும் யால்/ஆல் என்னும் தொங்கும்
விழுது போன்ற கையால் தான்.
நா. கணேசன்
